2
நினைவில் நிற்கும்
பதிவர்களும், பதிவுகளும்
30ம் திருநாள்
30.06.2015
181. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
மாங்கனித்திருவிழா வைபவம்-89
நவநீத கிருஷ்ணன் நவநீத நாட்டியம்-90
பெயர் சொல்லிப் பாடிப்பறக்கும் கிளிப்பிள்ளைகள்-91
அழகு மலர்களில் ஆரோக்ய பானம்-92
182. கோவைக் கவி
திருமதி. வேதா. இலங்காதிலகம் அவர்கள்
வலைத்தளம்: வேதாவின் வலை
’உணர்வுப் பூக்கள் ...’
உள்பட இவர்கள் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்.
அவற்றை மின்னூலாகக் காண இதோ இணைப்பு:
இவரின் வலைத்தளத்தினில்
ஆயிரக்கணக்கான கவிதைகளும்,
வேறு பல ஆக்கங்களும் நிறைந்து உள்ளன.
எதை நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்வது?
எதை நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்வது?
வலைத்தள முகவரி இதோ:
183. திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள்
இவர்கள் ‘அடை மழை’ என்ற தலைப்பினில்
ஓர் சிறுகதைத்தொகுப்பு நூலும்,
‘இலைகள் பழுக்காத உலகம்’ என்ற தலைப்பினில்
ஓர் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிட்டுள்ளார்கள்.
இதுவரை, தினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II and III, தென்றல் I and II , தினமலர் I and II, தேவதை, வடக்கு வாசல் I and II, புன்னகை, வளரி- ’கவிப்பேராசான் மீரா’, ரியாத் தமிழ்ச்சங்கம்-’கல்யாண் நினைவு’, தமிழ்மணம் I and II, Four Ladies Forum போன்றவற்றில் பல்வேறு பரிசுகளும், விருதுகளும், அங்கீகாரங்களும் பெற்றுள்ளார்கள்.
தமிழில் வெளிவரும் அனைத்துப் பிரபல வார/மாத இதழ்களிலும், தீபாவளி மலர்களிலும், மின்நூல்கள் அனைத்திலும் இவர் எழுதியுள்ள கவிதை / கதை / கட்டுரை மட்டுமல்லாது இவரால் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் ஏராளமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
பல்வேறு தனித்திறமைகளுடன் புகழ்பெற்றுள்ள
இவர்களின் வலைத்தள முகவரி:
184. திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்கள்
1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் இவர்கள் எழுத்துலகத்திற்கு பிரவேசித்துள்ளார்கள். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள் என எழுதி பிரபல எழுத்தாளராகியுள்ளார்கள். 30 வருட எழுத்துலக பயணத்தில் இவருக்குக் கிடைத்துள்ள விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது என எவ்வளவோ விருதுகள் பெற்றுள்ளார்கள். இவரின் பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாகவே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வலைத்தள முகவரி:
அன்பென்ற மழையிலே (சிறுகதை)
தற்சமயம் 14.06.2015 முதல்
தினமலர் வாரமலரில்
புதியதொரு குறுந்தொடரை
மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளார்கள்.
இதுவரை வெளியாகியுள்ள முதல்
மூன்று வாரக் கதையின் சுருக்கம்:
oooooOooooo
அது ஒரு பட்டிக்காடு. போக்கு வரத்து வசதிகள் இல்லாததோர் குக்கிராமம். குடிசையில் வாழும் ஏழையான மிகச் சிறிய இளம் பெண் ஒருத்தி, நடுத்தர வயதானவன் ஒருவனால் சீரழிக்கப்படுகிறாள். மிகப்பெரிய வயது வித்யாசம் இருப்பினும், பெற்றோர்கள் அவனுக்கே அவளைக்கட்டி வைக்க வேண்டிய நிர்பந்தமாகி விடுகிறது.
அவன் குடிப்பழக்கமும் உள்ளவன். பொறுப்பற்றவன். மிக மிகக்கேவலமான குணங்களும் கொண்டவன். திருமணம் ஆன மறுநாளே இவற்றை நன்கு அறிந்த அவள், அவன் இனி தன்னைப்போலவே, வேறு எந்தப்பெண்ணையும் சீரழிக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில், அவன் குடிபோதையில் படுத்திருக்கும்போது, மிகக் கடுமையான முறையில் துணிந்து அவனை தண்டித்தும் விடுகிறாள்.
இருப்பினும் அவனின் மனைவி என்ற சமூக அந்தஸ்துடன், அவனிடம் தினமும் அடி உதை படுவதுடன், தான் கூலிவேலைக்குச் சென்று மாடாக உழைத்து கொண்டுவரும் சில்லறைக் காசுகளையும், அவன் குடிப்பதற்கு மட்டுமே அவள் கொடுக்கும்படி நேரிடுகிறது.
குடிக்கப்பணம் வேண்டியதால், ஒருநாள், மிகக்கேவலமான குணம் கொண்ட அவளின் புருஷனாலேயே அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, மீண்டும் வேறொருவனால் சீரழிக்கப்பட்டு, சிறிய வயதில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயும் ஆக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறாள்.
தன் வயிற்றில் பிறந்துவிட்ட அந்தப்பெண் குழந்தையாவது தன்னைப்போல வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்கவேண்டி, பள்ளி சென்று அவள் படிக்க வேண்டும் என அந்த இளம்தாய் மிகவும் விரும்புகிறாள். அதற்காகவே தன்னை மிகவும் வருத்திக்கொள்கிறாள். மதிய உணவும் குழந்தைக்கு அந்தப் பள்ளியிலேயே இலவசமாக வழங்கப்பட்டுவிடுவதால் பிரச்சனை ஏதும் இல்லைதான்.
இருப்பினும், தினமும் பல மணி நேரங்கள் முட்கள் நிறைந்த, ஒற்றையடிக் காட்டுப்பாதையொன்றில், காலுக்கு அணியச் செருப்புகள்கூட இல்லாமல், நடந்தே நகரப்பள்ளிக்குச் சென்று திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது அந்தச்சின்னப்பெண் குழந்தைக்கு.
இவ்வாறான ஏழ்மை + வறுமையின் உச்சக்கட்டத்தில் அந்தப்பெண் காட்டுப்பாதையில் தன்னந்தனியே பள்ளிக்குச் செல்லும் போதே, ஒருநாள் பெரிய மனுஷி ஆகிவிடுகிறாள். அதைப்பற்றி எதுவுமே அறியாததோர் குழந்தைப்பருவம், பாவம் அந்தச் சின்னப்பெண்ணுக்கு! அப்படியே பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து சோர்வாக அமர்கிறாள்.
அப்புறம் என்ன ஆச்சு? ஏதேதோ ஆச்சு.
அப்புறம் என்ன ஆச்சு? ஏதேதோ ஆச்சு.
இனி அவர்கள் வாழ்க்கையில் மேலும் என்னென்ன சோகங்கள் நடக்க இருக்கிறதோ ?
திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்களின், குறுநாவல் கதையினை ஞாயிறுதோறும் ‘தினமலர்-வாரமலர்’ இல் தொடர்ந்து படித்தால் மட்டுமே, நமக்குத் தெரியவரும்.
எந்தவித பாதுகாப்போ, ஆதரவோ இன்றி குக்கிராமத்துக் குடிசை ஒன்றில் தினமும் போராடிவரும் ஏழைத்தாய் + மகளின் பிரத்யேகப் பிரச்சனைகள் பற்றிய, எழுச்சிமிக்க கதையை, தன் தனித்திறமையான எழுத்துக்களால் தொடர்ந்து எழுதி, வாசகர்களைக் கண்கலங்கச் செய்து வருகிறார், திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்கள்.
185. Mrs. LEELA GOVIND
BLOG: LEELAS HOBBIES
The 11th award of 2012 was given to me by this Leela
BROKEN SWEET APPAM
HOMEMADE BUTTER and GHEE MAKING PROCESS
REVERSE GLASS PAINTINGS
MERA-NAAM-JOKER
HAND EMBROIDERY SAREE
DOVE ARCHID
DWARAKADEESH
AKSHAYA THRITHIYA
186. திருமதி. வி. கிரேஸ் பிரதீபா அவர்கள்
வலைத்தளம்: தேன் மதுரத் தமிழ்
உடல் உட்புறம் பார்ப்போமா ?
தற்கால தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
இவர்களின் நூல் வெளியீடு
'துளிர்விடும் விதைகள்'
187. திருமதி. கோவை மு. சரளா அவர்கள்
வலைத்தளம்: பெண் என்னும் புதுமை
தினமலரில் என் நேர்காணல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் என்னுடைய நேர்காணல்
கோவை பதிவர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி படத்துடன்
இவர்கள்
‘மெளனத்தின் இரைச்சல்’
’காதலின் சாரல்’
ஆகிய இரு நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்
188. திருமதி விஜி சத்யா அவர்கள்
வலைத்தளங்கள்:
CREATIONS
VIJI'S VEG KITCHEN
'CREATIONS '
VIJI'S VEG KITCHEN
189. திருமதி அனுராதா ப்ரேம் அவர்கள்
வலைத்தளம்: அனுவின் தமிழ் துளிகள்
முக்கொம்பு சுற்றுலா - படங்களுடன்
தக்காளி
நெய் பிஸ்கட்
சுற்றுலா - கர்நாடகா - கொல்லூர்
பெங்களூர் பன்னேர்கட்டா தேசியப்பூங்கா - 3
190. சுய அறிமுகத்தில் சில ....
பதிவர் சந்திப்புகள்
[படங்களுடன்]
ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்