என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 24 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 24ம் திருநாள்

2நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 


24ம் திருநாள்

24.06.2015
133. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

ஆடிப்பூர நாயகி ஆண்டாள்-67


 பூப்பூவாய்ப் பூத்த புதுப்பூக்கள்-68


ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!-69

134. திருமதி. சாகம்பரி அவர்கள்

எனக்கு மிகவும் பிடித்த மிக அருமையான, 
திறமையான, பொறுமையான எழுத்தாளர் இவர்கள்.

வலைத்தளம்:  
மகிழம்பூச்சரம்
இம்மையில் நன்மை
அன்னைபூமி

நம்மை நாம் அறியோம் ... பகுதி 1 to 4

உயிரினும் இனிதான பெண்மை ... பகுதி 1 of 4


135. திருமதி.  நிலாமகள் அவர்கள்
வலைத்தளம்: பறத்தல் - பறத்தல் நிமித்தம்

நான் சந்திக்காத ஆனால் என்னை
{வேறொருவரின் நூல் வெளியீட்டு விழாவினில்}
நேரில் பார்த்துள்ள பதிவர் இவர் :)


http://nilaamagal.blogspot.in/2015/04/blog-post_22.html
’இலகுவானதெல்லாம் இலேசானதல்ல’


{இவர்களின் இரண்டாம் கவிதைத்தொகுப்பு நூல்}

ஆறுதலாய் ஓர் அழுகை
குதிகாலில் வலி நீங்க என்ன வழி?
பல் வலியா ?
இருக்கிற சிக்கல்களில் ‘முடி’யுமா?


 


136. திருமதி.  உஷா ஸ்ரீகுமார் அவர்கள்


வலைத்தளங்கள்:
உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள் 
USHASRIKUMAR'S COOKSPACE AND MORE...
USHASRIKUMAR'S MUSINGS
Usha Srikumar's Blogshelf ...

 


இவர்கள் எழுத்து, கைவேலைகள், 
தஞ்சாவூர் ஓவியம் உள்பட பல்வேறு 
தனித்திறமைகள் வாய்ந்தவர்கள்.

இவர்களுடைய படைப்புகள், 
மங்கையர் மலர், சினேகிதி போன்ற 
பிரபல தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 

2012ம் ஆண்டு எனக்கு அளிக்கப்பட்ட 12 விருதுகளில்
முதல் விருதினை இவர்களின் திருக்கரங்களால் பெற்றிடும்
பாக்யம் எனக்குக் கிடைத்தது.
அதற்கான இணைப்பு இதோ:

இவர்களின் பதிவுகளில் ஒருசில....

வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு137.  திருமதி.  பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்
வலைத்தளங்கள்: 

AALOSANAI
கிராம தேவதைகள்
தொகுப்பு

மங்கையர்மலர், தீபம், சினேகிதி போன்ற 
பிரபல பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் 
அடிக்கடி வெளியாகி வருகின்றன.
-oOo-

http://aalosanai.blogspot.com/2014/11/kannanai-ninai-maname.html
கண்ணனை நினை மனமே 
ஸ்ரீமந்நாராயணீயம் தொடர் - பகுதி-1
http://aalosanai.blogspot.com/2012/03/4.html
தாம்பூலம் தரும் முறை
http://aalosanai.blogspot.com/2012/07/blog-post_20.html
மா விளக்கு போடும் முறை
http://aalosanai.blogspot.com/2012/02/blog-post_24.html
பூஜையறை கோலங்கள்
http://aalosanai.blogspot.com/2013/06/rudraksha-mahimai.html
ருத்ராக்ஷ மஹிமை138. சுய அறிமுகத்தில் சில ....

[ஒவ்வொன்றையும் க்ளிக்கிப்படிக்கவும் ]

-oOo-

  -oOo-


  மீண்டும் நாளை சந்திப்போம் !  என்றும் அன்புடன் தங்கள்

   

  [வை. கோபாலகிருஷ்ணன்]

  48 கருத்துகள்:

  1. நிலாமகள் - மனங்கவரும் எழுத்துக்கு உரிமையாளர். புத்தகம் வெளியிட்டிருப்பது தெரியாமல் போனதே? செய்திக்கு நன்றி சார்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @அப்பாதுரை

    :) வாங்கோ சார், வணக்கம்.

    தங்களின் அபூர்வ வருகை அதுவும் இன்று முதல் வருகை மிகவும் ஆனந்தமாக உள்ளது.

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    நீக்கு
  2. 24ம் திருநாள்..வண்ணத்துப்பூச்சி வண்ணமான
   வலைச்சோலையில் திருமதிகள் சாகம்பரி,
   நிலாமகள், உஷா சிறீகுமார், பார்வதி .இராமச்சந்திரன்
   தாங்கள், மணிராஜ் ஆகியோருக்கு மகிழ்வான வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @kovaikkavi

    :) வாங்கோ வணக்கம். வண்ணத்துப்பூச்சியாய் இங்கு தாங்கள் பறந்து, வருகை தந்து, தங்களின் எண்ணத்தின் வண்ணங்களை எடுத்து இயம்பி, வாழ்த்தியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

    நீக்கு
  3. அறிமுகப்படுத்திய பதிவர்களுக்குப் பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @பழனி. கந்தசாமி

    :) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    நீக்கு
  4. அனைவரும் புதியவர்கள்! வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @ஸ்ரீராம்.

    வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

    அனைவரும் தங்களுக்கே புதியவர்களா?

    மிகவும் ஆச்சர்யமாக உள்ளது ஸ்ரீராம் !!!!!

    தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

    நீக்கு
  5. இன்றைக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @வெங்கட் நாகராஜ்

    :) வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    நீக்கு
  6. பதில்கள்
   1. @கரந்தை ஜெயக்குமார்

    :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    நீக்கு
  7. அனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @திண்டுக்கல் தனபாலன்

    :) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    நீக்கு
  8. மணிராஜ் தவிர அனைவருமே புதியவர்கள். அவர்களுடைய தளங்களுக்குச் சென்றேன். கண்டேன். சுய அறிமுகத்தில் புள்ளி விவரங்களைக் கண்டு அசந்துபோனேன். நாளை சந்திப்போம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @Dr B Jambulingam

    வாங்கோ, முனைவர் சார். வணக்கம். அசத்திடும் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர் வருகைக்கு மிக்க நன்றி. நாளைக்கும் அவசியம் வாங்கோ, ப்ளீஸ் :)

    நீக்கு
  9. இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளோர் அனைவருமே எனக்கு புதியவர்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! அவசியம் அவர்களது வலைப்பக்கத்திற்கு சென்று படிப்பேன். தங்களது பதிவுகளையும் நிச்சயம் படிப்பேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @வே.நடனசபாபதி

    :) வாங்கோ, சார், வணக்கம் சார். தங்களின் தொடர் வருகையும் ஊக்கமூட்டிடும் கருத்துக்களும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாளைக்கும் அவசியம் வாங்கோ, ப்ளீஸ் :) மிக்க நன்றி, சார்.

    நீக்கு
  10. திருமதி.பார்வதி ராமச்சந்திரன், திருமதி.சாகம்பரி, திருமதி. உஷா ஸ்ரீகுமார், திருமதி.நிலாமகள் அனைவருக்கும் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @மனோ சாமிநாதன்

    :) வாங்கோ, மேடம். வணக்கம். நாடு விட்டு நாடு விமானப்பயணங்களுக்கு இடையேயும் தங்களின் தொடர் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

    நீக்கு
  11. தங்கள் நினைவில் நின்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
   தங்களுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @mageswari balachandran

    :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    நீக்கு
  12. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைக்கு நீஙகள் அறிமுகம் செய்தவர்களில் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள் ( அதுவும் உங்கள் வலைத்தளத்தினால்) மட்டுமே எனக்கு தெரியும்.
   இப்போது பரபரப்பான எழுத்தாளர்.

   மற்றவர்களில் சாகம்பரி, நிலாமகள் பதிவுகளில் ஒன்றிரண்டை படித்துள்ளதாக நினைவு. உங்கள் புண்ணியத்தில் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களது பதிவுகளைப் பார்த்தேன்: நிறைய பயனுள்ள தகவல்கள்; இனிமேல் இவர்களது பதிவுகளையும் தொடர்வேன்.

   இன்று அறிமுகமான வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @தி.தமிழ் இளங்கோ

    வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் தொடர் வருகைக்கும், அழகான ஆதரவான ஆரோக்யமான விரிவான கருத்துக்களுக்கும், அனைவருக்குமான தங்களின் உளங்கனிந்த நல்வாழ்த்துகளுக்கும், மற்ற அனைத்து உதவிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி. மீண்டும் நன்றிகள், சார்.

    அன்புடன் VGK

    நீக்கு
  13. பார்வதி ராமச்சந்திரன் தளம் சென்றதில்லை! மற்றவர்களை அறிவேன்! சிறப்பான தொகுப்பு. இவர்கள் இப்பொழுது தொடர்ந்து எழுதாமல் இருப்பது வருத்தமான ஒன்று! நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @‘தளிர்’ சுரேஷ்

    :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    அவர்களில் சிலருக்கு, தற்சமயம் எழுத சூழ்நிலை சரியில்லாமல் இருக்கலாம். மீண்டும் என்றாவது ஒருநாள் தொடர்ந்து எழுத ஆரம்பிப்பார்கள் என நம்புவோம்.

    நீக்கு
  14. பார்வதி ராமச்சந்திரன் தளம் சென்றதில்லை! மற்றவர்களை அறிவேன்! சிறப்பான தொகுப்பு. இவர்கள் இப்பொழுது தொடர்ந்து எழுதாமல் இருப்பது வருத்தமான ஒன்று! நன்றி!

   பதிலளிநீக்கு
  15. சாகம்பரி அவர்களின் வலைத்தளத்தில் வாசித்து இருக்கிறேன். மற்றவர்கள் புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @R.Umayal Gayathri

    :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    நீக்கு
  16. என் வலைத்தளங்கள் அனைத்தையும் அறிமுகப்படுதியதர்க்கும்,எனக்கு பின்னூட்டங்களால் தொடர்ந்து உற்சாகம் தருவதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்,சார்....
   திருமதி.பார்வதி ராமச்சந்திரன், திருமதி.சாகம்பரி, திருமதி.நிலாமகள் அனைவருக்கும் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @Usha Srikumar

    வாங்கோ, மேடம். வணக்கம். சந்தோஷம்.

    தங்களின் வலைத்தளங்கள் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    தங்களின் அன்பான வருகைக்கும், மற்றசில குறிப்பிட்ட கருத்துக்களுக்கும், மற்ற அனைவருக்கும் தங்களின் மனங்கனிந்த நல்வாழ்த்துகளைச் சொல்லியுள்ளதற்கும், அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நீக்கு
  17. இன்றைய பதிவர்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

   தங்களைப் பார்த்து நான் வியக்கும் இன்னொரு அம்சம், தங்களின் மறுமொழிதான்.
   பின்னூட்டத்தின் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் கொடுத்து விரிவாக பின்னூட்டம் இடுவது, பெரிதினும் பெரிது.

   நான் பல பதிவுகளை படித்து விட்டாலும் பின்னூட்டம் இடுவதற்கு நேரமில்லாமல் போய்விடுகிறேன். (இதற்கே தேவகோட்டை மீசைக்காரர் கோவித்துக் கொள்ள்கிறார்). அதனால்தான் சில சமயம் வந்ததற்கு சாட்சியாக அருமை. அற்புதம் என்று போட்டு விடுகிறேன். இனிமேலாவது தங்களைப் போல் பின்னூட்டம் இட முயற்சி செய்ய வேண்டும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @S.P. Senthil Kumar

    :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    //தங்களைப் பார்த்து நான் வியக்கும் இன்னொரு அம்சம், தங்களின் மறுமொழிதான். பின்னூட்டத்தின் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் கொடுத்து விரிவாக பின்னூட்டம் இடுவது, பெரிதினும் பெரிது.//

    என்னுடைய வாசகர் வட்டமும், பின்னூட்ட எண்ணிக்கைகளும் இந்த அளவுக்குப் பெருகியதற்கு அடிப்படைக் காரணமே, நான் இதுபோல அவரவர்களுக்கு ஏற்புடையதாக பதில் தருவது மட்டுமே என நம்புகிறேன்.

    என்னுடைய மாறுபட்ட பதில்களுக்காகவே பின்னூட்டம் கொடுக்க ஆசைப்பட்டவர்களும் ஒருகாலக்கட்டத்தில் ஏராளமானவர்கள் உண்டு.

    என் பேரன்புக்குரிய சகோதரி திருமதி. மஞ்சுபாஷிணி என்றொரு பதிவர் ’குவைத்’ நாட்டில் தற்சமயம் உள்ளார்கள். தங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

    நானே வியந்து மயங்கி விழும்படி என் ஒவ்வொரு பதிவுக்கும், எனக்குப் பின்னூட்டம் அளிப்பார்கள். என் பதிவுகளை மிகவும் ரஸித்து, முழுவதுமாக மனதில் வாங்கிக்கொண்டு வாசித்து அதன் பிறகே, மனம் திறந்து ஒவ்வொன்றையும் பாராட்டி, மிக விரிவான பின்னூட்டம் அளிப்பார்கள்.

    அவற்றில் உதாரணமாக ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

    2011இல் நான் என் சிறுகதை ஒன்றினை ஐந்து பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருந்தேன்.

    கதையின் தலைப்பு:
    ‘நீ .... முன்னாலே போனா .... நா .... பின்னாலே வாரேன்’

    இணைப்புகள்:
    http://gopu1949.blogspot.in/2011/10/15.html
    http://gopu1949.blogspot.in/2011/10/2-5.html
    http://gopu1949.blogspot.in/2011/10/3-5.html
    http://gopu1949.blogspot.in/2011/11/4-5.html
    http://gopu1949.blogspot.in/2011/11/4-5.html

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்தப்பதிவுகளில் திருமதி. மஞ்சுபாஷிணி அவர்களின் பின்னூட்டங்களை மட்டுமாவது படித்துப்பாருங்கள்.

    இதுபோன்ற ஒரு வாசகரின் மனம் திறந்த கருத்துக்களைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? சொல்லுங்கள்.

    >>>>>

    நீக்கு
   2. VGK >>>>> S.P. Senthil Kumar [2]

    இதுபோன்று குறை/நிறைகளை அழகாக எடுத்துச் சொல்லி, என் மனதுக்குப் பிடித்தபடி பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தவர்களில் பலர் [மொத்தம் ஒரு 15-20 நபர்களே தேறுவார்கள்] தங்களின் உடல்நலக்குறைவினாலும், மற்ற குடும்ப சூழ்நிலைகள் காரணமாகவும், இப்போது எந்தப்பதிவர்களின் பதிவுகளுக்கும் வருகை தராமலும், தங்களின் சொந்த வலைத்தளத்திலும் புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமலும் இருந்து வருகிறார்கள்.

    இருப்பினும் இவர்கள் இதுவரை ஏற்கனவே எனக்குத் தந்துள்ள ஊக்கமான, உற்சாகமான பின்னூட்டங்களை என்னால் என்றென்றும் மறக்கவே இயலாது. அவர்களின் அருமையான பின்னூட்டங்களையெல்லாம் நான் அடிக்கடி என் பழைய பதிவுகளில் போய், இப்போதும் படித்து மகிழ்வதும் உண்டு.

    இவர்களைப்போன்ற மிகச்சிறந்த வாசகர்கள் இப்போது மிகவும் குறைந்து போய்விட்டதால், புதிய பதிவுகள் ஏதும் தருவதற்கு எனக்கும் விருப்பமில்லாமல் உள்ளது.

    -=-=-=-=-

    //இனிமேலாவது தங்களைப் போல் பின்னூட்டம் இட முயற்சி செய்ய வேண்டும்.//

    தங்களின் தொடர் வருகைக்கும், ஆர்வத்துடன் கூடிய வித்யாசமான கருத்துக்களுக்கும், தாங்கள் செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    நீக்கு
  18. 'ஆலோசனை' வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு உளமார்ந்த நன்றி!.. சிறப்பிக்கப்பட்ட சக‌ வலைப்பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்கள்...எனக்கு வாழ்த்துக்கள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நன்றி!...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பார்வதி இராமச்சந்திரன். June 24, 2015 at 8:11 PM

    :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    //'ஆலோசனை' வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு உளமார்ந்த நன்றி!..//

    தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    //சிறப்பிக்கப்பட்ட சக‌ வலைப்பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்கள்... எனக்கு வாழ்த்துக்கள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நன்றி!...//

    அவர்கள் அனைவரின் சார்பிலும் தங்களின் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நீக்கு
  19. பதில்கள்
   1. @Chitra

    :) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    நீக்கு
  20. இன்றைய அறிமுகங்களில் பார்வதி ராமச்சந்திரன் அவர்களைத் தவிர மற்றவர்களை எனக்குத் தெரியும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு
  21. @Kalayarassy G

   :) வாங்கோ மேடம். வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   பதிலளிநீக்கு
  22. அறியாதவர்கள்! அறிந்து கொள்கின்றோம்....னீங்கள் அழகாக பின்னூட்டமும் இடுகின்றீர்கள்.....தெரிந்தெடுத்து.....நாங்களும் அப்படிச் செய்து கொண்டிருந்தோம். சார் ஆனால் இப்போது பல வலைத்தளங்கள்.....எங்கள் லிஸ்டில் வந்து விட்டன.....எல்லோருமே நன்றாக எழுதுகின்றார்கள்...இன்னும் பல ஜாம்பவான் கள் அவர்களை எல்லாம் நாங்கள் இன்னும் சென்று பார்க்கவில்லை.....வேலைப்பளு, நேரமின்மை...என்று சொன்னாலும் ஆர்வம் இருக்கின்றது.....இப்போது பின்னூட்டமும் நாங்கள் சுருக்கி விட்டோம்....தாங்கள் ஒரு முன்னோடியாக இருக்கின்றீர்கள்...முடிந்த அளவு வாசிக்க வேண்டும் என்ற ஆவலும் இருக்கின்றது....

   தங்கள் உடல் நலம் இப்போது தேவலமா சார்?

   பிரார்த்தனைகளுடன்

   அடையாளப்படுத்த்ப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. @Thulasidharan V Thillaiakathu

    வாங்கோ, வணக்கம்.

    நீங்கள் அழகாக பின்னூட்டமும் இடுகின்றீர்கள்..... தேர்ந்தெடுத்து..... நாங்களும் அப்படிச் செய்து கொண்டிருந்தோம்.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    //சார், ஆனால் இப்போது பல வலைத்தளங்கள்..... எங்கள் லிஸ்டில் வந்து விட்டன..... எல்லோருமே நன்றாக எழுதுகின்றார்கள்... இன்னும் பல ஜாம்பவான்கள் அவர்களை எல்லாம் நாங்கள் இன்னும் சென்று பார்க்கவில்லை.....//

    எல்லோராலும், எல்லாப் பதிவர்களின் பதிவுகளுக்கும், எல்லா நேரங்களிலும், சென்று பார்த்து, படித்து, பின்னூட்டமிட முடியாது என்பதை நானும் நன்கு அறிவேன். என்னாலும் அதுபோலெல்லாம் செய்ய முடிவது இல்லை. அதனால் நானும் தினமும் சென்று பார்க்கும் பதிவர்களின் எண்ணிக்கைகளை மிகவும் சுருக்கிக்கொண்டுள்ளேன்.

    //வேலைப்பளு, நேரமின்மை... என்று சொன்னாலும் ஆர்வம் இருக்கின்றது.....//

    வாசிக்கும் ஆர்வம் இருப்பது கேட்க மகிழ்ச்சியே. :)

    //இப்போது பின்னூட்டமும் நாங்கள் சுருக்கி விட்டோம்.... //

    என்னால் சுருக்கமாக எழுத முடிவது இல்லை. முழுவதும் மனதில் ஏற்றிக்கொண்டு, ஆர்வத்துடன் படித்து, என் மனதுக்கும் அவை பிடித்தமானதாக இருந்தால் மட்டுமே, சற்றே விரிவாகப் பின்னூட்டமிடுவது என் வழக்கம் / பழக்கம்.

    தாங்கள் ஒரு முன்னோடியாக இருக்கின்றீர்கள்... முடிந்த அளவு வாசிக்க வேண்டும் என்ற ஆவலும் இருக்கின்றது....//

    மிகவும் சந்தோஷம்.

    //தங்கள் உடல் நலம் இப்போது தேவலமா சார்? பிரார்த்தனைகளுடன்//

    கொஞ்சம் தேவலாம். தங்கள் பிரார்த்தனைகளுக்கும் அக்கறைக்கும் என் நன்றிகள்.

    //அடையாளப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!!//

    :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார். :)

    நீக்கு
  23. மிக்க மகிழ்வும் நன்றியும் வை. கோ. சார்...!!
   நீண்ட வெளியூர் பயணம் கழிந்து இன்று தான் வலைத்தளம் வந்தேன்.
   தகவல் தந்த திரு தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் நன்றி!
   வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நெகிழ்வான நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நிலாமகள் July 6, 2015 at 5:20 PM

    :) வாங்கோ மேடம், வணக்கம்.//

    //மிக்க மகிழ்வும் நன்றியும் வை. கோ. சார்...!!//

    தங்களின் வலைத்தளம் இங்கு இந்தப்பதிவினில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    //நீண்ட வெளியூர் பயணம் கழிந்து இன்று தான் வலைத்தளம் வந்தேன். //

    அதனால் என்ன, பரவாயில்லை மேடம். நல்லபடியாக வந்தது கேட்க சந்தோஷம்.

    //தகவல் தந்த திரு தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் நன்றி!//

    திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு தங்களுடன் சேர்ந்து மீண்டும் நானும் ஒருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

    //வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நெகிழ்வான நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். //

    மிக்க மகிழ்ச்சி. தங்களின் மனமார்ந்த நெகிழ்வான நன்றிகளுக்கு, தங்களை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்கள் சார்பிலும், தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை நானும் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

    தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

    அன்புடன் VGK

    நீக்கு
  24. திறமையான பதிவர்களின் அரிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:48 PM

    வாங்கோ, வணக்கம்.

    //திறமையான பதிவர்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    நீக்கு
  25. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு