என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 23 ஜனவரி, 2013

புத்தாண்டில் சில மகிழ்ச்சிகள் !

அன்புடையீர்!



அனைவருக்கும் வணக்கம். 




என் சென்ற பதிவினில் 

“அடடா ... என்ன அழகு!
‘அடை’யைத் தின்னு பழகு” 




என்ற தலைப்பில் ஓர் சமையல் குறிப்பு கொடுத்திருந்தேன்.




இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html



வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!



”சமையல் குறிப்பு” என்ற தலைப்பின் கீழ் நான் எழுதியுள்ள இந்த என் முதல் முயற்சிக்கு பெருந்திரளான வரவேற்பு கிடைத்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாராட்டி பேசி பின்னூட்டக் கருத்தளித்துள்ளனர். அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

இதுவரை என் பதில்கள் உள்பட பின்னூட்டங்களின் எண்ணிக்கை 257 எனக் காட்டுகிறது. 

1 முதல் 200 வரை உள்ள பின்னூட்டங்களை மட்டுமே சுலபமாக என்னால் என் வலைத்தளத்தில் படிக்க முடிகிறது. 

அதன் பிறகு வந்துள்ள பின்னூட்டங்களை வேறொரு முறையில் போய்த்தான் என்னால் சற்றே கஷ்டப்பட்டு படிக்க முடிகிறது. பதில் அளிக்கவும் முடிகிறது.   

வேறு சில பதிவர்களால், அதுபோலும் படிக்க முடியாமல் உள்ளதாக எனக்குத்தெரிவித்துள்ளனர்.  அதாவது ”பின்னூட்ட எண் 1 முதல் 200 வரை மட்டுமே தெரிகிறது / படிக்க முடிகிறது; கடைசியாக “பூந்தளிர்” என்பவரின் பின்னூட்டத்திற்கு  நீங்கள் பதில் [Comment No. 200] கொடுத்துள்ளீர்கள். அதன்பிறகு 201 முதல் 257 வரை தெரியவே இல்லை” என்று சொல்லியுள்ளனர்..

மேலும் சிலர் உங்கள் பின்னூட்டப்பெட்டியையே காணவில்லை, அதைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனச்சொல்லி, மின்னஞ்சல் மூலமாகப் பாராட்டி எழுதியுள்ளனர். 

இந்த என் “சமையல் குறிப்பு” பற்றியே சமீபத்திய வலைச்சரங்களில் மூன்றுமுறை [18.12.2012  + 08.01.2013 + 19.01.2013 ஆகிய தேதிகளில்] பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. இணைப்புகள் இதோ:

2] http://blogintamil.blogspot.in/2013/01/2516.html
3] http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_19.html

அந்த வாரங்களின் வலைச்சர ஆசிரியர்களாக இருந்த மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நகைச்சுவையான இந்த என் பதிவுக்கு வருகை தந்துள்ள ஒரு சிலரின் நகைச்சுவையான பின்னூட்டங்களும், அவற்றிற்கு நான் எழுதியுள்ள பதில்களும் இந்தப்பதிவினை மேலும் மெருகூட்டி ஜொலிக்கச் செய்துள்ளன.

இந்த என் பதிவு “சமையல் அட்டகாசங்கள்” என்ற வலைத்தளத்தில் சமீபத்தில் நடத்திய ”பேச்சுலர் சமையல் போட்டி” யில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசினை” வென்றுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன், உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.




சிறப்பான முறையில் இந்தப் போட்டியை 
வெற்றிகரமாக நடத்திய பதிவர்: 
திருமதி ஜலீலா கமால் அவர்கள்.



பரிசு முடிவுகள் பற்றிய அறிவிப்புக்கான
அவர்களின் இணைப்பு இதோ 


http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html




1] Emergency Rechargeable  Light 33 Led PF 733 
இரண்டாவது பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


2] "BEST BREAKFAST RECIPE"
என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 


3] "WELL EXPLAINED RECIPE"
என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 




4] CERIFICATE OF PARTICIPATION
என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 




5] KITCHEN'S KING 
என்ற சிறப்புச் சான்றிதழும் 
வழங்கப்பட்டுள்ளது. 



To 
Mrs. JALEELA KAMAL Madam 
and 
Her Selection Team Members.




”சமைத்து அசத்தலாம்” என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் பிரபலமான பதிவர் Mrs. ASIYA OMAR  அவர்களும் இந்த என் பதிவினை மிகவும் பாராட்டி, அதே முறையில், தான் தன் வீட்டில் “அடைகள் + குணுக்குகள்” செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்ததாகச் சொல்லி ஓர் தனிப்பதிவே கொடுத்து, கெளரவித்துள்ளார்கள்.

அதன் இணைப்பு இதோ:   
http://asiyaomar.blogspot.in/2013/01/healthy-adai-awads.html


இந்தப்பதிவினில் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ள 
அனைத்து அன்புள்ளங்களுக்கும் 
என் மனமார்ந்த நன்றிகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன். 

னைவருக்கும் என் [2013] இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.













என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்.

-oOo-