என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 27 மார்ச், 2011

உணவே வா ..... உயிரே போ .....


சாப்பாட்டிற்கான தொடர்பதிவு இது!!

 

என்ற தலைப்பில் என் அன்பிற்குரிய திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்   [http://muthusidharal.blogspot.com/2011/03/blog-post_07.html] தனது “முத்துச்சிதறல்” என்ற வலைப்பூவில் பல நல்ல விஷயங்களை பகிர்ந்திருந்தார்கள். இதைப்படித்து முடித்த நான், இதில் சொல்லியிருப்பதெல்லாம் நமக்கு நடைமுறைக்கு ஒத்துவராத சமாசாரங்கள் என்று ஒதுங்க நினைத்தபோது, அவர்கள் கடைசியாக குறிப்பிட்டிருந்த விஷயம் என் கண்களில் பட்டு, எனக்குக் கண்ணீரை வரவழைத்தது.  நீங்களே படியுங்களேன்:

இந்தத் தொடர்பதிவிற்கு அன்புச் சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ண‌ன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி‍, சகோதரிகள் லக்ஷ்மி, ராஜி இவர்களை அன்புடன் அழைக்கிறேன்.  

நீண்ட நாட்களாக மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் நீடித்து, நட்புடன் பழகி வந்த நானும் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களும் ஒருவரையொருவர் நேரிடையாக சந்தித்துப்பேச எங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்துகொண்டோம். சமீபத்தில் 20.02.2011 அன்று திருச்சியில் அந்த சந்திப்பும் இனிதே நிகழ்ந்தது.  

என்னை நேரில் சந்தித்த பிறகும் கூட, அவர்கள் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருப்பது என் போதாத காலமோ அல்லது அவர்கள் என் எழுத்துக்களின் மீது வைத்திருக்கும் ஏதோவொரு நம்பிக்கையோ எனக்கே ஒன்றும் புரியாத நிலையில், தாங்கள் இதுபோல செய்வது நியாயமா, மேடம்? என்றும் அவர்களையே கேட்டிருந்தேன். 

இது பற்றி எழுத என்னை அன்புடன் அழைத்துள்ளது (என்னை நேரில் நீங்கள் பார்த்தும் கூட) நியாயமா?

நான் எழுதினால் என்னைப் போல எப்படி ஒருவர் கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது என்று [எதிர்மறையாகத் தான்] மட்டுமே எழுதமுடியும் மேடம்.   பரவாயில்லையா ?

அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்:
அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
உருவத்தைப் பார்த்து எதையுமே மதிப்பிடக்கூடாது என்பது நிச்சயம் உங்களுக்கே தெரியும். அவரவர் அனுபவங்களும் சிறப்புக்களும்தான் முக்கியமானவை.

நிச்சயம் உங்கள் அனுபவங்கள் இந்த தொடர்பதிவு எழுதும்போது எங்களுக்கும் பலன் கொடுப்பவையாக அமையலாம்.. அவசியம் எழுதுங்கள்!
11 March 2011 08:21










163 கருத்துகள்:

 1. அடேங்கப்பா .. எவ்வளவு நீளமான பதிவு..? டைப்பவே ஒரு மணீ நேரம் ஆகுமே?

  பதிலளிநீக்கு
 2. So sweet and Tasty post. Thank you for sharing.

  சொர்ரென்ற சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க அந்த அடை, என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தது. இவ்வளவு நிறைய நெய்யை நான் அதன் மேல் ஸ்வாகா செய்து விட்டேன் என்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். //
  Romba romba nalla irruku.

  பதிலளிநீக்கு
 3. கோபால் சார்...

  அசத்தல் ரக பதிவு... செந்தில்குமார் கேட்கிறார், டைப்பவே ஒரு மணி நேரம் ஆகுமே என்று.. நான் கேட்கிறேன், இதை படிக்கவே ஒரு மணி நேரம் ஆகுமே என்று...

  எவ்வளவு விஷயங்களை எவ்வளவு கோர்வையாய் கோர்த்து நேர்த்தியாய் எழுதி இருக்கிறீர்கள்...

  ஆனாலும், இவ்ளோ கூட ருசித்து சாப்பிட முடியும் என்று உங்களின் பதிவு சொல்கிறது...

  பதிலளிநீக்கு
 4. என் அத்திம்பேர் வந்து சொல்வது போலவே இருந்தது! அவருக்கும் இதே மாதிரி டேஸ்ட், தவிர நன்றாகவும் சமைப்பார்!

  நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! படிச்ச்தே எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்த்த மாதிரி இருக்கு! நீங்கள் இதே ரசனையுடன் நூறாண்டுகள் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள். அதுவே இன்றுவரை தொடர்கிறது.
  உங்கள் எழுத்துத் திறனுக்கு இதோ மற்றும் ஒரு அடையாளம். சமையல் பற்றி இவ்வளவு தகவல்களுடன் அதுவும் சுவாரசியமாக எழுத முடியுமா.. பிரமிப்புதான் வருகிறது. சபாஷ்

  பதிலளிநீக்கு
 6. தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு,ஈயச்சொம்பு, பருப்புகுண்டு, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள் என ஆரம்பித்து எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், பிரஷர் குக்கர், பால் குக்கர் என அனைத்தையும் தன் வாழ்நாளில் கையாண்டு பார்த்தவர்கள்.


  ......இந்த உபகரணங்களின் படங்கள் இருந்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக போடுங்கள். நாங்களும் என்னவென்று தெரிந்து கொள்வோமே.

  பதிலளிநீக்கு
 7. நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.


  ......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்க!

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் அந்த காலத்தில் ராமர் பட்டாபிஷேக வைபவத்தில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பீர்கள் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை .

  வாழ்க வளமுடன்..

  பசியினால் ரொம்ப எழுத முடியவில்லை .

  தோசை வெத்தக் குழம்பு + தேங்கா துவையல் காத்திருக்கிறது .

  பதிலளிநீக்கு
 9. //இருப்பினும், மாதம் பூராவும், வாய்க்கு ருசியாக சுடச்சுட நமக்கு அன்னமிட்டவளுக்கு, நாம் ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று, ஒரு வேகம் ஏற்பட்டது எனக்கு. அதனால் ஒரு வேளையாவது வீட்டில் சமைக்க வேண்டும் என்று நினைத்து நான் கோதாவில் இறங்கியதுண்டு.//
  மனைவியை நேசிக்கும் ஒரு நல்ல கணவர் தன் நேசத்தை வெளிப்படுத்தும்
  விதங்களில் இதுவும் ஒன்று.பொன்னாலும் பொருளாலும் கொடுக்க கூட
  இயலாத ஒரு சந்தோஷத்தை கணவரின் அக்கறை கொடுத்துவிடும்.

  அதன் பின் அந்த சாப்பாடு கூட எப்படி இருந்தாலும் மனைவிக்கு அது அமுதமே.

  ஆனால் நீங்களோ உங்கள் அக்கறையால் மட்டுமின்றி செயலாலும் அமுதம்
  போன்ற உணவை படைத்திருக்கிறீர்கள்.

  அம்மையும் அப்பனும் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதுமா?அகில உலகமான
  உங்களின் பிள்ளைகள் நாங்களும் அந்த அமுதத்தை பெற வேண்டும் என நினைப்பது போல்
  பதிவிலேயே சுவையான உணவு வகைகளையும் அவற்றை தயாரித்த விதங்களையும் குறிப்பிட்டு
  தங்களின் உணவு திருவிளையாடலை எங்களுடன் பகிந்திருக்கிறீர்கள்.

  அமுதம் போன்ற உணவு பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. கட்டை வடாம்,துமுட்டிவற்றல் - இது இரண்டும் இப்போதுதான் கேள்விப்படுறேன்.

  உங்கள் சமையல் அனுபவத்தை படித்து மிக சிரித்தேன்,உங்களுக்கு பிடித்த/பிடிக்காத அத்தனையும் சொல்லி அதில் சில எனக்கும் சாப்பிட வேண்டுமென ஆவலைத் தூண்டி விட்டுவிட்டது.

  கடைசி மூச்சு பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்.

  //நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.//

  சூப்பர் idea sir.

  பதிலளிநீக்கு
 11. பிரமாதம். பிரம்மாண்டம். ஒரு மிகப் பெரிய விருந்து சாப்பிட்ட திருப்தி. பாத்திரங்கள் பெயரும், பதார்த்தங்கள் பெயரும் ஒரு பயங்கர சொந்த உணர்வை ஏற்படுத்தி விட்டன. தஞ்சையில் வசித்த போது கம்மாக் கத்தரிக்க மிகப் பிரபலம். சுவை. அது போல சென்னையில் கிடைப்பதில்லை. எண்ணெய் ஊற்றிய மோர்க்களி, மிளகாய்ப் பொடி, பொரிச்ச கூட்டு, வத்தக் குழம்பு (மினுக்க வற்றல் - மிதுக்க வற்றல் இல்லை?) மாவடு, தஞ்சாவூர் குடை மிளகாய் மோர் மிளகாய்...ஒரொரு விஷயத்தையும் என்னையும் அசை போட வைத்து விட்டீர்கள். ரசிகர் சார் நீங்கள்!

  பதிலளிநீக்கு
 12. வை.கோ சார்! உங்கள் பிரம்மாண்டமான பதிவை அனுபவித்து படிக்கும் போது உங்களை "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்" என்று பாடும் ரங்காராவாய்க் கற்பனை செய்து கொண்டேன்.அசத்தி விட்டீர்கள். சித்ரா சொன்ன பைபாசை யாராவது கண்டு பிடியுங்களேன். எனக்கு சாப்பிடுவதை விடவும் அருகிருந்து பரிமாறுதல் பிடித்த விஷயம். ஒரு சமையகாரரைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 13. தோசைமிளகாய்ப்பொடி Resipy Post paanna Mathirkala

  பதிலளிநீக்கு
 14. //எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.//

  புண்ணியம் செய்தவர்கள் நீங்கள்! அம்மாவின் அன்பும் பாசமும் கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்!

  பதிலளிநீக்கு
 15. //அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள்.//

  சூப்பர் பன்ச்! :-))

  பதிலளிநீக்கு
 16. ஐயா, இன்னொருவாட்டி மீ கமிங்! :-))

  பதிலளிநீக்கு
 17. பார்த்தீர்களா? நான் சொன்னது போல, மிக மிக சுவாரஸ்யமான, தகவல்கள் நிறைந்த பதிவு எங்களுக்கு கிடைத்திருக்கிறது!!

  ருசியறியாதவர்களுக்குக்கூட பசி வரும் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை நீங்கள் அருமையாய் விவரித்திருக்கும் பாங்கினைக் கண்டால்!
  அடுப்பு வகைகள் எத்தனை வகைகள்! எரி பொருட்கள் எத்தனை வகைகள்! பாத்திர வகைகளும் சமையல் வகைகளுக்கான உபகரணங்களும்தான் எத்தனை எத்தனை!!
  ஜோடுதலை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்தது கிடையாது.

  உங்களுக்குப் பிடித்த சமையலை, அன்போடு அன்னையும், பின்னாளில் அக்கறையுடன் மனைவியும் இந்நாளில் அருமையாய் மருமகளும் சமைத்துப்போடும்போது, பூவுலகில் வேறென்ன சொர்க்கம் வேண்டும்?

  இதனால்தான் என் வீட்டிற்கு அழைத்த போது மறுத்து விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 18. சி.பி.செந்தில்குமார் said...
  //அடேங்கப்பா .. எவ்வளவு நீளமான பதிவு..? டைப்பவே ஒரு மணீ நேரம் ஆகுமே?//

  என் தாய் அன்று கண்ணளவாகவும், கையளவாகவும் மளிகைப்பொருட்களை எடுத்துப்போட்டு சமைத்து விடுவார்கள் என்று எழுதியிருந்தேன்.

  அதுபோலவே நீங்களும் என் பதிவைப்பார்த்த உடனேயே அதன் அகல நீளத்தை மட்டும் கண்ணால் அளந்து, உடனே கருத்து கூறிவிட்டீர்களே! நன்றி.

  பதிலளிநீக்கு
 19. இராஜராஜேஸ்வரி said...
  //So sweet and Tasty post. Thank you for sharing.//

  Thank you very much, Madam. Your reply (sharing your feeling with me) is also so sweet & tasty to me.

  //சொர்ரென்ற சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க அந்த அடை, என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தது. இவ்வளவு நிறைய நெய்யை நான் அதன் மேல் ஸ்வாகா செய்து விட்டேன் என்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.
  Romba romba nalla irruku.//

  நீங்கள் மட்டுமாவது, நகைச்சுவைப்பகுதியில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு பாராட்டியதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 20. R.Gopi said...
  கோபால் சார்...
  //அசத்தல் ரக பதிவு...

  எவ்வளவு விஷயங்களை எவ்வளவு கோர்வையாய் கோர்த்து நேர்த்தியாய் எழுதி இருக்கிறீர்கள்...

  ஆனாலும், இவ்ளோ கூட ருசித்து சாப்பிட முடியும் என்று உங்களின் பதிவு சொல்கிறது...//

  மிக்க நன்றி, கோபி சார்.

  பதிலளிநீக்கு
 21. middleclassmadhavi said...
  //என் அத்திம்பேர் வந்து சொல்வது போலவே இருந்தது! அவருக்கும் இதே மாதிரி டேஸ்ட், தவிர நன்றாகவும் சமைப்பார்!//

  என்னைப்போல இன்னொருவர், [அதுவும் உங்கள் குடும்பத்திலேயே அத்திம்பேராக, இருப்பதாகச் சொல்வது, மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அக்காவுக்கு அப்போ ஒரு பக்கம் ஜாலி தான், ஆனால் மறுபக்கம் கஷ்டமாகவும் இருக்கும். அதாவது மிகவும் வக்கணையாக சமையல் செய்து போடவேண்டுமே இத்தகைய சமையல் பிரியர்களுக்கு.

  //நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! படிச்ச்தே எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்த்த மாதிரி இருக்கு! நீங்கள் இதே ரசனையுடன் நூறாண்டுகள் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.//

  மிகவும் சந்தோஷம். தங்கள் பிரார்த்தனைக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 22. ரிஷபன் said...
  அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள். அதுவே இன்றுவரை தொடர்கிறது.

  //உங்கள் எழுத்துத் திறனுக்கு இதோ மற்றும் ஒரு அடையாளம். சமையல் பற்றி இவ்வளவு தகவல்களுடன் அதுவும் சுவாரசியமாக எழுத முடியுமா.. பிரமிப்புதான் வருகிறது. சபாஷ்//

  தங்கள் பாராட்டுக்கு நன்றிகள். உங்களைப்போல தந்தி அடிப்பது போல சுருக்கமாக வார்த்தை+வாக்கியங்களை அமைக்கணும் என்று தான் நினைக்கிறேன். அது ஏதோ அனுமார்வால் போல நீண்டு அமைந்து விடுகிறது. (படிப்பவர்களில் ஒரு சிலர் என்னைப்போலவே ட்யூப் லைட் ஆக இருந்து விட்டால் என்ன செய்வது, அவர்களுக்கும் அதை நன்கு விளக்கவைக்கணுமே என்று நினைத்து விலாவரியாக எழுதி விடுகிறேன்) அது என் பலமா அல்லது பலகீனமா என்றும் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 23. Chitra said...
  //......இந்த உபகரணங்களின் படங்கள் இருந்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக போடுங்கள். நாங்களும் என்னவென்று தெரிந்து கொள்வோமே.//

  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள். என் கண்முன் இவைகள் யாவும் நிற்கின்றன. படங்கள் ஓரளவுக்கு வரையவும் என்னால் முடியும். தற்சமயம் நேரமின்மையால் பிறகு ஒரு நாள் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்/நிறைவேற்றப்படும்.

  பதிலளிநீக்கு
 24. Chitra said...
  நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.


  /......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்க!/

  நீங்களும் நம்ம ஆளு தானா, அப்போ Petition போட்டுட வேண்டியது தான். போட்டுருவோம். கவலையை விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 25. கணேஷ் said...
  /நீங்கள் அந்த காலத்தில் ராமர் பட்டாபிஷேக வைபவத்தில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பீர்கள் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை./

  நீ சொல்லுவது நன்றாகப்புரிகிறது. நானும் அந்த ஸ்ரீராமர் பட்டபிஷேக வைபவத்தை பல உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். நினைவு படுத்தியதற்கு நன்றிகள்.

  /வாழ்க வளமுடன்../ நன்றிகள்

  /பசியினால் ரொம்ப எழுத முடியவில்லை.
  தோசை வெத்தக் குழம்பு + தேங்கா துவையல் காத்திருக்கிறது./

  குரங்குப்பேட்டை ப்ரும்மஸ்ரீ. வெங்குட்டு தீக்ஷதர் ஞாபகம் தான் வருகிறது. எனக்கும் இஷ்டம் தான். நல்லாவே சாப்பிடு.

  பதிலளிநீக்கு
 26. raji said...
  //இருப்பினும், மாதம் பூராவும், வாய்க்கு ருசியாக சுடச்சுட நமக்கு அன்னமிட்டவளுக்கு, நாம் ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று, ஒரு வேகம் ஏற்பட்டது எனக்கு. அதனால் ஒரு வேளையாவது வீட்டில் சமைக்க வேண்டும் என்று நினைத்து நான் கோதாவில் இறங்கியதுண்டு.//

  /மனைவியை நேசிக்கும் ஒரு நல்ல கணவர் தன் நேசத்தை வெளிப்படுத்தும்
  விதங்களில் இதுவும் ஒன்று.பொன்னாலும் பொருளாலும் கொடுக்க கூட
  இயலாத ஒரு சந்தோஷத்தை கணவரின் அக்கறை கொடுத்துவிடும்./

  வாழ்வியல் உண்மையை அழகாகவே சொல்லி விட்டீர்கள். சந்தோஷம்.

  /அதன் பின் அந்த சாப்பாடு கூட எப்படி இருந்தாலும் மனைவிக்கு அது அமுதமே./

  ஆம். ரொம்பவும் சரியாகவே சொல்லுகிறீர்கள்.

  /ஆனால் நீங்களோ உங்கள் அக்கறையால் மட்டுமின்றி செயலாலும் அமுதம் போன்ற உணவை படைத்திருக்கிறீர்கள்./

  ஆம். நான் லேஸில் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் எதையுமே செய்ய ஆரம்பித்து விட்டால் Perfect ஆக முடித்து விடுவேன். எனக்கே அதில் முழுத்திருப்தி ஏற்படும் வரை, தொடர்ந்து கவனம் செலுத்திடுவேன்.

  /அம்மையும் அப்பனும் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதுமா?அகில உலகமான
  உங்களின் பிள்ளைகள் நாங்களும் அந்த அமுதத்தை பெற வேண்டும் என நினைப்பது போல்
  பதிவிலேயே சுவையான உணவு வகைகளையும் அவற்றை தயாரித்த விதங்களையும் குறிப்பிட்டு
  தங்களின் உணவு திருவிளையாடலை எங்களுடன் பகிந்திருக்கிறீர்கள்./

  ஆஹா, அப்படியா! மிகவும் சந்தோஷம். இவ்வளவு ஒரு நீண்ட கருத்துக்கள் பிள்ளைகளாகிய தங்களிடமிருந்து இதுவரை நான் பெற்றதே இல்லை.
  இதுவும் ஒரு திருவிளையாடலாகவே உள்ளது எனக்கு.

  /அமுதம் போன்ற உணவு பகிர்விற்கு நன்றி/

  தங்களின் இத்தகைய நீணடதொரு பின்னூட்டமே எனக்கு இன்று கிடைத்த ’அமுதம்’ என்பேன்.

  (என் ”அமுதைப்பொழியும் நிலவே” கனவுக் கதையும் ஞாபகம் வந்துவிட்டது)

  மிகவும் நன்றிகள். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 27. thirumathi bs sridhar said...
  /கட்டை வடாம்,துமுட்டிவற்றல் - இது இரண்டும் இப்போதுதான் கேள்விப்படுறேன்./

  கட்டையாக நீளமாக இருக்கும் வடாம் தான். கடிக்க சேவை வடாம் போல எளிதாக இல்லாமல் கொஞ்சம் ஹார்ட் ஆக இருக்கும். சற்றே பெரிய ஸ்டார் வடிவ சேவை நாழித்தட்டில் வடாம் பிழிந்தால் வருமே அது தான், கட்டை வடாம்.

  துமுட்டி வற்றம் என்பது மினுக்கு வற்றல் என்றும் அழைக்கப்படும். பெண்கள் காதில் அணியும் ஜிமிக்கி போல இருக்கும். வறுத்து சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். விலாசம் கொடுத்தால் நாளைக்கே வாங்கி கொரியரில் அனுப்பி வைப்பேன்.

  /உங்கள் சமையல் அனுபவத்தை படித்து மிக சிரித்தேன்,உங்களுக்கு பிடித்த/பிடிக்காத அத்தனையும் சொல்லி அதில் சில எனக்கும் சாப்பிட வேண்டுமென ஆவலைத் தூண்டி விட்டுவிட்டது./

  எப்படியோ நீங்கள் சிரிக்க வேண்டும் என்றே, நடந்த விஷயங்களை, சுவைபட சற்று மிகைப்படுத்தியே எழுதினேன். ஆவலாக அனைத்தையும் சாப்பிடுங்கள்.
  வாழ்த்துக்கள்.

  /கடைசி மூச்சு பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்./

  தாங்கள் என் மீது கொண்டுள்ள அக்கரைக்கு என் மனமார்ந்த நன்றிகள். யோசித்து தான் என்ன பயன்? என்கிறீர்கள். புரிகிறது. நடப்பது என்றோ நடக்கத்தான் போகிறது. ஒருசில சமயங்களில் யோசிக்காமலும் இருக்க முடிவதில்லை. அது தான் மனித இயல்பு.
  நெருப்பென்று சொன்னால் வாய் சுட்டுவிடுமா என்ன?
  OK Sister, இனி யோசிக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.

  //நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.//

  சூப்பர் idea sir.

  ஆமாங்க, நமக்கு வாய்க்கு ருசியானவற்றை எல்லாம் சாப்பிடாதே என்று மிரட்டுகிறார்கள் இந்த டாக்டர்கள்.
  பின்ன என்னதாங்க பண்ணுவது? அதனால் தான் இதுபோல ஒரு Suggestion/Idea கொடுத்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 28. ஸ்ரீராம். said...
  //பிரமாதம். பிரம்மாண்டம். ஒரு மிகப் பெரிய விருந்து சாப்பிட்ட திருப்தி. பாத்திரங்கள் பெயரும், பதார்த்தங்கள் பெயரும் ஒரு பயங்கர சொந்த உணர்வை ஏற்படுத்தி விட்டன. தஞ்சையில் வசித்த போது கம்மாக் கத்தரிக்க மிகப் பிரபலம். சுவை. அது போல சென்னையில் கிடைப்பதில்லை. எண்ணெய் ஊற்றிய மோர்க்களி, மிளகாய்ப் பொடி, பொரிச்ச கூட்டு, வத்தக் குழம்பு (மினுக்க வற்றல் - மிதுக்க வற்றல் இல்லை?) மாவடு, தஞ்சாவூர் குடை மிளகாய் மோர் மிளகாய்...ஒரொரு விஷயத்தையும் என்னையும் அசை போட வைத்து விட்டீர்கள். ரசிகர் சார் நீங்கள்!//

  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம், வாங்க. நீங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு. சாப்பாடு என்றதும், ’பந்திக்கு முந்தி’க்கொண்டு வந்து விட்டீர்கள். திருச்சி, தஞ்சாவூர் பகுதி ஆட்களுக்குத்தான் இதுபோல விதரணையாக சாப்பிடவே தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள். நல்லா சாப்பிடுங்க!
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. மோகன்ஜி said...
  //வை.கோ சார்! உங்கள் பிரம்மாண்டமான பதிவை அனுபவித்து படிக்கும் போது உங்களை "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்" என்று பாடும் ரங்காராவாய்க் கற்பனை செய்து கொண்டேன்.அசத்தி விட்டீர்கள். சித்ரா சொன்ன பைபாசை யாராவது கண்டு பிடியுங்களேன். எனக்கு சாப்பிடுவதை விடவும் அருகிருந்து பரிமாறுதல் பிடித்த விஷயம். ஒரு சமையகாரரைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பாருங்கள்.//

  நீண்ட இடைவெளிக்குப்பின் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. தங்களின் சமீபத்திய பதிவையும் படித்தேன். ரசித்தேன். பின்னூட்டம் அளித்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 30. padma hari nandan said...
  //தோசைமிளகாய்ப்பொடி Resipy Post panna Maatteerkala//

  I will discuss with the authorities concerned of my house and let you know, in detail, by e-mail, separately.

  பதிலளிநீக்கு
 31. சேட்டைக்காரன் said...
  //எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.//

  /புண்ணியம் செய்தவர்கள் நீங்கள்! அம்மாவின் அன்பும் பாசமும் கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்!/

  ஆமாம் சார், நான் மிகவும் புண்ணியம் செய்த பாக்யசாலியாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டல் என் அம்மாவின் அன்பும், பாசமும் கிடைத்திருக்காது.

  //அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள்.//

  சூப்பர் பன்ச்! :-))

  கல்யாணம் ஆன புதிதில் (சூடான புதுக்கொழக்கட்டை கிடைத்ததும்) எல்லோருக்குமே ஏற்படும் ஒரு மாதிரியான ’சூடு-சுரணை’ தானோ! என்னவோ. தாங்களே சூப்பர் பஞ்ச்! என்று சொல்லிவிட்டால் சரிதான். நன்றிகள். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 32. மனோ சாமிநாதன் said...
  //பார்த்தீர்களா? நான் சொன்னது போல, மிக மிக சுவாரஸ்யமான, தகவல்கள் நிறைந்த பதிவு எங்களுக்கு கிடைத்திருக்கிறது!!//

  எல்லாப்புகழும் தங்களுக்கே மேடம்.

  //ருசியறியாதவர்களுக்குக்கூட பசி வரும் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை நீங்கள் அருமையாய் விவரித்திருக்கும் பாங்கினைக் கண்டால்!
  அடுப்பு வகைகள் எத்தனை வகைகள்! எரி பொருட்கள் எத்தனை வகைகள்! பாத்திர வகைகளும் சமையல் வகைகளுக்கான உபகரணங்களும்தான் எத்தனை எத்தனை!!//

  அம்மாவைப்பற்றியும், அவர்கள் அன்பைப்பற்றியும், அலட்சியமாக அலட்டிக்கொள்ளாமல் ஒரு 10 பேர்கள் வரை தினமும் சாப்பிட அவர்கள் செய்யும் ருசியான சமையல், பொறுமையான குணம், பட்ட சிரமங்கள் எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும் என்று தான்
  சற்றே நீண்ட பதிவாக எழுதிவிட்டேன். எனக்கு என் அம்மா பேரில் இன்றும் உள்ள பாசம் மறக்காமல், நன்றிகூற இந்தப்பதிவையே பயன்படுத்திக் கொண்டேன். இந்தப்பதிவை எழுதத்தூண்டிய தங்களுக்குத்தான் நான் முதலில் நன்றி கூற வேண்டும்.

  //ஜோடுதலை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்தது கிடையாது.//

  பெரிய கொள்ளளவு உள்ள பாத்திரம் தான் மேடம் அது. இப்போது அந்த பெயர் மட்டும் யாரும் உபயோகிப்பது இல்லை. சிறிய ஜோடுதலை, நடுத்தர ஜோடுதலை, மிகப்பெரிய ஜோடுதலை என்று உண்டு. சிலவற்றில் இருபக்கமும் (காது) தூக்க எளிதாக பிடிபோட்டிருக்கும். வெந்நீர் அண்டா போலத்தான்.
  நீங்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பது தான் வேறு அண்டா, அடுக்கு போன்ற பெயர்களில்.

  வெந்நீர் சருவம் (தவளை) என்றும் ஒன்று உண்டு அந்த நாட்களில். அடி பூராவும் கரி பிடித்து ஒரே கருப்பாக இருக்கும்.

  கல்யாணங்களில் சாதம் வடிக்கக்கூட அது போல மிகப்பெரிய தவளைகள், வாய்ப்புறத்தை ஒரு சாக்கு, அல்லது வெள்ளைக்காடாத்துணியால் கட்டி கஞ்சியை வடியவைத்து பயன் படுத்துவார்கள்.

  //உங்களுக்குப் பிடித்த சமையலை, அன்போடு அன்னையும், பின்னாளில் அக்கறையுடன் மனைவியும் இந்நாளில் அருமையாய் மருமகளும் சமைத்துப்போடும்போது, பூவுலகில் வேறென்ன சொர்க்கம் வேண்டும்? //

  உண்மையில் எல்லாமே எனக்கு இந்த பூவுலகில் இன்று வரை, அதுவும் சாப்பாடு விஷயத்தில், சொர்க்கம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

  //இதனால்தான் என் வீட்டிற்கு அழைத்த போது மறுத்து விட்டீர்களா?//

  அதெல்லாம் இல்லை. தப்பாக நினைக்காதீங்கோ.
  கட்டாயம் நானே தங்களின் (சார்ஜா to துபாய் இடையில் அமைந்துள்ள) புதிய உணவகத்திற்கு, ஒரு நாள், சர்ப்ரைஸ் விசிட் செய்வேன். அப்போது ஒரே ஒரு ஐஸ்கிரீம் அல்லது கூல்டிரிங் மட்டும் நானே தங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவேன். வறுத்த முந்திரி இருந்தாலும் நிறைய பார்சலாக வாங்கிக்கொள்வேன். கவலையே பட வேண்டாம்.

  தங்கள் அன்புள்ள vgk

  பதிலளிநீக்கு
 33. அடா..அடா...என்ன ஒரு ரஸமான பதிவு இது!
  திருவிளையாடல் பரஞ்ஜோதி முனிவர் எழுதியது போல் என்ன ஒரு சுவை எழுத்தில்!

  பதிலளிநீக்கு
 34. அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

  ஷார்ஜா வரும்போது எங்களின் உண‌வகம் வ‌ருவது பற்றி சந்தோஷம்!
  முதலில் எங்கள் வீட்டில் தங்களுக்குப் பிடித்த வெங்காயக் குழம்புடன் கூடிய விருந்தை சாப்பிட்டு விட்டு அதற்கப்புறம் எங்கள் உணவகத்தில் ஐஸ்க்ரீம் வைத்துக்கொள்ளலாம்!

  பதிலளிநீக்கு
 35. உணவு விஷயத்தில் தாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா. உங்கள் எண்ணம் போலவே நோய்களில்லாமல் வாழ வாழ்த்துகிறேன். நானும் ருசியான உணவுக்கு அடிமை. ஆனால் உங்களுடைய காம்பினேஷன்கள் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 36. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //அடா..அடா...என்ன ஒரு ரஸமான பதிவு இது!
  திருவிளையாடல் பரஞ்ஜோதி முனிவர் எழுதியது போல் என்ன ஒரு சுவை எழுத்தில்!//

  நன்றி, ராமமூர்த்தி, சார். அந்தத்திருவிளையாடல் பரஞ்ஜோதி முனிவர் என்ன எழுதினார் என்று தங்களின் அடுத்த பதிவில் போட்டு அசத்தவும். எனக்கு அதுபற்றி ஒன்றும் இதுவரை தெரியாது.

  [திருவிளையாடல் என்ற சினிமா பலமுறை பார்த்துள்ளேன் அதில் இது போல எதுவும் வரவில்லை. எதுவுமே சினிமா வாயிலாகச் சொல்லப்பட்டால் தான் மனதிலே நிற்கிறது]

  பதிலளிநீக்கு
 37. மனோ சாமிநாதன் said...
  //அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

  ஷார்ஜா வரும்போது எங்களின் உண‌வகம் வ‌ருவது பற்றி சந்தோஷம்!
  முதலில் எங்கள் வீட்டில் தங்களுக்குப் பிடித்த வெங்காயக் குழம்புடன் கூடிய விருந்தை சாப்பிட்டு விட்டு அதற்கப்புறம் எங்கள் உணவகத்தில் ஐஸ்க்ரீம் வைத்துக்கொள்ளலாம்!//


  அன்புடையீர்,
  தங்களின் அழைப்புக்கு மிகவும் சந்தோஷம்.
  அவசியம் வர முயற்சிக்கிறேன்.
  உங்கள் பகுதிக்கு வந்துவிட்டால் பிறகு உங்கள் இஷ்டப்படி தான் எல்லாமே! அந்தசமயம் நமக்குள் பேசிக்கொள்ளலாம். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 38. அமர பாரதி said...
  //உணவு விஷயத்தில் தாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா. உங்கள் எண்ணம் போலவே நோய்களில்லாமல் வாழ வாழ்த்துகிறேன். நானும் ருசியான உணவுக்கு அடிமை. ஆனால் உங்களுடைய காம்பினேஷன்கள் பிரமாதம்.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள். கருத்துக்கள் தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 39. @மனோ சாமிநாதன்

  மனோ மேடம், இது உங்களுக்கே நியாயமா?
  நாங்க எல்லாரும் ஐஸ்க்ரீம் சாப்பிடறதில்லைன்னு
  உங்க கிட்ட எப்பவாவது சொல்லிருக்கோமா?

  அப்படி இருக்கும்போது கோபாலகிருஷ்ணன் சாருக்கு
  வெங்காய வத்த குழம்போட விருந்துன்னா நாங்க
  அவரோட துணைக்கு வர மாட்டோமா?

  சீனியர் சிட்டிசனை தனியா அனுப்ப மாட்டோம்.
  துணைக்கு நாங்க எல்லாரும் உண்டு :-)

  பதிலளிநீக்கு
 40. raji said...
  //@மனோ சாமிநாதன்

  மனோ மேடம், இது உங்களுக்கே நியாயமா?
  நாங்க எல்லாரும் ஐஸ்க்ரீம் சாப்பிடறதில்லைன்னு
  உங்க கிட்ட எப்பவாவது சொல்லிருக்கோமா?

  அப்படி இருக்கும்போது கோபாலகிருஷ்ணன் சாருக்கு
  வெங்காய வத்த குழம்போட விருந்துன்னா நாங்க
  அவரோட துணைக்கு வர மாட்டோமா?

  சீனியர் சிட்டிசனை தனியா அனுப்ப மாட்டோம்.
  துணைக்கு நாங்க எல்லாரும் உண்டு :-)//

  எவ்வளவோ வாய்ப்புகள் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தும், விமானப்பயண முன்பதிவு டிக்கெட் விசா முதலியன வீட்டுவாசலில் கதவைத்தட்டி அழைத்தும், உலக மஹா சோம்பேரியான நான் அவற்றையெல்லாம் நிகாரித்து விட்டு, ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று சொல்லி வந்து கொண்டிருந்தும், என் அன்பு மகள் ராஜி, என்னுடன் துணைக்கு வருவதாகச் சொன்னவுடன், பேரெழுச்சி ஏற்படுகிறது, இன்றே, இப்போதே புறப்பட்டால் என்னவென்று.

  நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்............?

  பதிலளிநீக்கு
 41. எனக்குக் கல்யாண சமையல் சாதம் பாடும் ரெங்காராவ் ஞாபகம்தான் வருது:-)

  பதிலளிநீக்கு
 42. Gopi Ramamoorthy said...
  //எனக்குக் கல்யாண சமையல் சாதம் பாடும் ரெங்காராவ் ஞாபகம்தான் வருது:-)//

  இதுவே எனக்குப்போதும் ...............

  அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா ....

  அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா ....

  அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா ....

  அஹஹ் ஹஹஹ் ஹஹஹ்ஹா ....

  பதிலளிநீக்கு
 43. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண வைபவத்திற்கு பாடும் பாடலான “போஜனம் செய்ய வாருங்கோ” பாடலில் இப்படி ஒரு பெரிய லிஸ்டே வரும். இந்த காலை நேரத்தில் படித்தவுடன், பசி எடுத்து விட்டது. இன்று கோதாவில் இறங்கி விட வேண்டியது தான். நீண்ட சுவையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 44. வெங்கட் நாகராஜ் said...
  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண வைபவத்திற்கு பாடும் பாடலான “போஜனம் செய்ய வாருங்கோ” பாடலில் இப்படி ஒரு பெரிய லிஸ்டே வரும். இந்த காலை நேரத்தில் படித்தவுடன், பசி எடுத்து விட்டது. இன்று கோதாவில் இறங்கி விட வேண்டியது தான். நீண்ட சுவையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

  [தாங்கள் இருவரும் வந்த பிறகே அடுத்த வெளியீடு போட வேண்டும் என்று நினைத்து 3 நாட்கள் காத்துப்பார்த்தேன். பிறகுதான், தாங்கள் வருவதற்குள் தொந்தி பாரத்தையாவது இறக்கி வைத்து, ஒப்பேத்துவோம் என்று, குட்டியூண்டு வெளியீடு செய்தேன்.]

  பதிலளிநீக்கு
 45. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், நீண்ட சுவையான பகிர்வு என்ற பாராட்டுதல்களுக்கும், மிக்க நன்றி, வெங்கட்.

  பதிலளிநீக்கு
 46. தங்கள் நீண்ட பதிவை படித்து பதார்த்தங்களை காம்பினேஷனுடன் விவரித்திருந்ததில் எனக்கு இப்பவே இவைகளை செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. சூப்பர் சார்.
  எல்லோருக்கும் அவரவர் அம்மாவின் கையால் மோர் சாதம் சாப்பிட்டாலும் அது தேவாமிர்தம் தான்.
  இப்போ எனக்கு எம் மாமியாரின் கையால் ( அவர் இங்கு வரும் போது / நாங்கள் திருச்சி போகும் போது ) அரிசி உப்புமா, தவலை அடை, மிளகு குழம்பு சாப்பிடுவது பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 47. கோவை2தில்லி said...
  //தங்கள் நீண்ட பதிவை படித்து பதார்த்தங்களை காம்பினேஷனுடன் விவரித்திருந்ததில் எனக்கு இப்பவே இவைகளை செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. சூப்பர் சார்.
  எல்லோருக்கும் அவரவர் அம்மாவின் கையால் மோர் சாதம் சாப்பிட்டாலும் அது தேவாமிர்தம் தான்.
  இப்போ எனக்கு எம் மாமியாரின் கையால் ( அவர் இங்கு வரும் போது / நாங்கள் திருச்சி போகும் போது ) அரிசி உப்புமா, தவலை அடை, மிளகு குழம்பு சாப்பிடுவது பிடித்திருக்கிறது.//

  தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், ரசித்து எழுதியுள்ள பாராட்டுதல்களுக்கும் மிகவும் நன்றி, மேடம். ஆமாம், அவரவர்களுக்கு, அவரவர் அம்மா கையால் எது சாப்பிட்டாலும் தேவாமிர்தம் தான்.தங்கள் மாமியாரும் எங்கள் திருச்சியிலேயே இருக்கிறார்கள் என்பது கேட்க மிகவும் ஸந்தோஷமாகவே உள்ளது. நீங்கள் கோவையும் அல்ல தில்லியும் அல்ல. எங்க ஊர் நாட்டுப்பெண்ணாக்கும்! அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 48. எனக்கெல்லாம், ப‌ருப்புக் குழ‌ம்புக்கும், சாம்பாருக்குமே வித்தியாம் தெரியாது.
  எதுனாலும் ஒகே தான். கையேந்திப‌வ‌ன்ல‌ இருந்து ஸ்டார் ஹோட்ட‌ல் வ‌ரை
  ப‌சிக்கும் போது கூட‌ யாராவ‌து இருந்தால் சாப்பாடு, இல்லையின்னா, டீ இரு சிக‌ரெட்.
  உங்க‌ள் ப‌திவைப் ப‌டித்த‌பின்பு தான் சாப்பாட்டுல‌ இவ்வ‌ளவி விச‌ய‌ம் இருக்கா?
  ரெம்ப‌ மிஸ் ப‌ண்ணீட்ட‌மோன்னு இருக்கு. 'A1 Quality' ப‌திவு வைகோ சார்.

  திருமதி மனோசுவாமிநாதன்,
  ச‌ரியான மிகப் பொறுத்த‌மான நப‌ரைத்தான் ப‌ரிந்துரைத்திருக்கிறார்க‌ள்.

  பதிலளிநீக்கு
 49. vasan said...
  //எனக்கெல்லாம், ப‌ருப்புக் குழ‌ம்புக்கும், சாம்பாருக்குமே வித்தியாம் தெரியாது.
  எதுனாலும் ஒகே தான். கையேந்திப‌வ‌ன்ல‌ இருந்து ஸ்டார் ஹோட்ட‌ல் வ‌ரை
  ப‌சிக்கும் போது கூட‌ யாராவ‌து இருந்தால் சாப்பாடு, இல்லையின்னா, டீ இரு சிக‌ரெட்.
  உங்க‌ள் ப‌திவைப் ப‌டித்த‌பின்பு தான் சாப்பாட்டுல‌ இவ்வ‌ளவி விச‌ய‌ம் இருக்கா?
  ரொம்ப‌ மிஸ் ப‌ண்ணீட்ட‌மோன்னு இருக்கு. //

  நானும் உங்களை மாதிரி அப்பாவியாக ஒன்றும் தெரியாமல் இருந்தவன் தான் சார். தாயார், மனைவி, மருமகள்கள் ரூபத்தில் வந்தவர்கள், என் நாக்கை நீட்டி வளர்த்து விட்டனர். ருசிகண்ட நாக்கு இப்போது அடம் பிடிக்குது.

  //'A1 Quality' ப‌திவு வைகோ சார். //
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

  /திருமதி மனோசுவாமிநாதன்,
  ச‌ரியான மிகப் பொறுத்த‌மான நப‌ரைத்தான் ப‌ரிந்துரைத்திருக்கிறார்க‌ள்.//

  நீங்களாவது புரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே.

  என்னைவிட 2 வயதே சிறியவர்களாக இருப்பினும், அவர்கள் உணவுக்கட்டுப்பாடு, இயற்கை உணவுகள் என்று மிகவும் உஷாராக இருந்து, உடம்பை மிகவும் Slim ஆக்வே வைத்துக்கொண்டுள்ளார்கள்.

  சிறிய பச்சைக்கொத்துமல்லிக்கட்டுபோல, மிகவும் weightless ஆக இருக்கிறார்கள். என்னால் இதுபோன்றவர்களைப்பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. வேற் என்ன செய்ய? அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 50. அப்பா ஸ்ஸ்ஸ்ஸ் இப்ப வே இதெல்லாம் செய்யனும் முன்னு தோண்ரது, இதில் பாதி இல்லை75% என் பாட்டிம், அப்பாவுக்கும் பொருந்தும், ஏன் எனக்குமே காம்பினேஷனுடன் தான் பிடிக்கும்.
  அடிக்கடி சொல்லிப்ப்பது கொஞ்சம் நாக்கு நீளம் தான் என்று.
  இப்ப தான் இப்ப உள்ள நோய்களை கண்டு கொஞ்சம் எண்ணை அளவு குறைத்து செய்ய ஆரம்பித்து இருக்கேன். பலகாரங்கள் அதுவும் அப்ப அப்ப உள்லே தள்ளூவது தான்.
  பஜ்ஜி செய்தா அதுக்கு பொட்டு கடலை துவையல் இல்லாமல் முடியாது. அதுவும் சுட சுட..அடுப்பிலுருந்தே நேராஅ வாயிக்கு போய் விடும்.

  நீங்கள் பயன் படுத்திய சாமான்கல் நாங்களும் சின்ன வயதில் பயன் படுத்தி இருக்கோ,ம் பித்தல குண்டான், ஜோட்தலை, வெஙக்ல ஆப்பை, அம்மி ஆட்டு உரல் எல்லாம் பயன் படுத்தி இருக்கோம்.

  உங்கள் சமையல் விபத்து, கேட்டு பயந்துட்டேன், அந்த நேரம் எப்படி இருந்திருக்கும்
  என் பையன்களும் டீ டம்ளர் கூட கழுவ விடமாதான் வளர்த்து இருக்கு, இப்ப தோனுது ஏதாவது வேலை செய்ய சொல்லீருக்கனும் என்று செய்ய சொல்வேன் ஆனால் அது ஒரு நாளோடு சரி.
  உஙக்ள் எண்ணம் போல் எல்லாம் அமைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 51. Jaleela Kamal said...
  //அப்பா ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே இதெல்லாம் செய்யனும் முன்னு தோன்றது, இதில் பாதி இல்லை75% என் பாட்டிக்கும், அப்பாவுக்கும் பொருந்தும், ஏன் எனக்குமே காம்பினேஷனுடன் தான் பிடிக்கும்.
  அடிக்கடி சொல்லிப்பது கொஞ்சம் நாக்கு நீளம் தான் என்று.
  இப்ப தான் இப்ப உள்ள நோய்களை கண்டு கொஞ்சம் எண்ணெய் அளவு குறைத்து செய்ய ஆரம்பித்து இருக்கேன். பலகாரங்கள் அதுவும் அப்ப அப்ப உள்ளே தள்ளுவது தான்.
  பஜ்ஜி செய்தா அதுக்கு பொட்டு கடலை துவையல் இல்லாமல் முடியாது. அதுவும் சுட சுட..அடுப்பிலுருந்தே நேராக வாயிக்கு போய் விடும்.

  நீங்கள் பயன் படுத்திய சாமான்கள் நாங்களும் சின்ன வயதில் பயன் படுத்தி இருக்கோம் பித்தளை குண்டான், ஜோட்தலை, வெங்கல ஆப்பை, அம்மி ஆட்டு உரல் எல்லாம் பயன் படுத்தி இருக்கோம்.

  உங்கள் சமையல் விபத்து, கேட்டு பயந்துட்டேன், அந்த நேரம் எப்படி இருந்திருக்கும்.
  என் பையன்களும் டீ டம்ளர் கூட கழுவ விடமாதான் வளர்த்து இருக்கு, இப்ப தோனுது ஏதாவது வேலை செய்ய சொல்லீருக்கனும் என்று செய்ய சொல்வேன் ஆனால் அது ஒரு நாளோடு சரி.
  உங்கள் எண்ணம் போல் எல்லாம் அமைய வாழ்த்துக்கள்//

  தங்களின் அன்பான வருகைக்கும், அரிய பெரிய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஆன கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  [இன்று 17.4.2011 அன்று தான் தங்களின் பின்னூட்டத்தைப்படிதேன். அதனால் பதில் அளிக்கவும் சற்று தாமதம் ஆகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.]

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 52. எப்படி இருந்தாலும் அடுத்த ரவுண்டு நேரம் கிடைக்கும் போது வருவேன். அஞ்சலை 6 பதிவு முடிந்து விட்டது மெதுவா வந்து படிக்கிறேன்.
  //ஹா அங்கு இங்குள்ள கமெண்ட் அங்கு எல்லோரும் குழ்ம்பிட போற்ங்க//

  பதிலளிநீக்கு
 53. மிகவும் ருசியான பசியை தூண்டும் பதிவு ,
  அம்மாக்கள் அம்மக்களுக்காக சமைக்கும் போது உப்பு புளியுடன் பாசமும் அன்பும் அக்கறையும் சேர்த்து சமைப்பதால் அதன் ருசியே தானே ...............

  எல்லாவற்றையும் விட விஸ்வரூப விளக்கம் அடை.........
  நாக்கில் ஒரு டன் எச்சில் , பேச்சில்லாமல் செய்கிறது . என் அம்மா இடும் அடை ஒன்றை முழுதாக சாப்பிட முடியாது , அத்தனை பெரிதாக, மொத்தமாக இருக்கும், ஆனாலும் மொருமொருப்பு குறையாது, மாவை கல்லில் இட்டு கையால் அதை எங்கும் பரப்பும் விதமே தனி அழகு.

  இன்று என் மனைவியை இதை படிக்க சொல்லலாம் , ஆனால் செய்ய வைக்க முடியுமா ???????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. A.R.RAJAGOPALAN May 3, 2011 4:08 AM

   அன்பு நண்பர் Mr. A.R.Rajagopalan Sir, வாங்க, வணக்கம்.
   தங்கள் கருத்துக்கு சுமார் 19 மாதங்கள் கழித்து இன்று பதில் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கணும்.

   //மிகவும் ருசியான பசியை தூண்டும் பதிவு//

   மிக்க நன்றி, சார்.

   //அம்மாக்கள் அம்மக்களுக்காக சமைக்கும் போது உப்பு புளியுடன் பாசமும் அன்பும் அக்கறையும் சேர்த்து சமைப்பதால் அதன் ருசியே தனி ருசி தானே ...............//

   ஆமாம். மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

   //எல்லாவற்றையும் விட விஸ்வரூப விளக்கம் அடை ...
   நாக்கில் ஒரு டன் எச்சில், பேச்சில்லாமல் செய்கிறது.//

   அடடா! அது அடை அல்லவா! அதனால் தானோ?

   //என் அம்மா இடும் அடை ஒன்றை முழுதாக சாப்பிட முடியாது, அத்தனை பெரிதாக, மொத்தமாக இருக்கும், ஆனாலும் மொருமொருப்பு குறையாது, மாவை கல்லில் இட்டு கையால் அதை எங்கும் பரப்பும் விதமே தனி அழகு.//

   ஆஹா, அதைத்தனி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

   //இன்று என் மனைவியை இதை படிக்க சொல்லலாம், ஆனால் செய்ய வைக்க முடியுமா ???????//

   உங்களுக்கு மிகவும் தைர்யம் ஜாஸ்தி தான். ;)

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன்
   VGK

   நீக்கு
 54. அன்பின் வை.கோ - முடியல - படிக்க முடியல - நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு - நுனிப்புல் மேயறது எனக்குப் பிடிக்காது - வரிக்கு வரி சொல்லுக்கு சொல படிச்சு, ரசிச்சு மகிழணும். பொறுமை அதிகம் தேவை - அதி காலைலே ஒரு மணி நேரம் இங்கேயே இருந்திருக்கேன். கமெண்ட் போடலாம்னா ஏற்கனவே 53 பேர் - நான் நினைக்கறதெல்லாம் போட்டுருக்காங்க

  கல்யாண சமையல் சாதம் - நடிச்சது வைகோவா ரங்காராவா ?

  நூறாண்டு இதே போல் நல்ல -வாய்க்கு ருசியான சாப்பாட்டோடு - ந்ல்ல மனைவி - பிள்ளைகள் - மருமகள்கள் - பேரன் பேத்திகளோடு - நகைச்சுவையோடு - வலைப்பூவோடு - வாழ எல்லாம் வல்ல இறைவனின் கருணை உடனிருக்கப் பிரார்த்திக்கிறேன்.

  47 வயது வரை உடனிருந்த தாயின் பாசம் - வளர்ப்பு - சாப்பாடு இவை எல்லாம் தான் உங்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

  " எச்சில் இட்டு " - இதைப்பற்றித் தெரியாதவர்கள் படிக்கும் போது புரியாமல் ஒரு மாதிரியாகச் சிந்திப்பார்களோ ?? பரமபரை வழக்கம் எனினும் - இச்சொற்களை - எழுதும் போது தவிர்க்கலாமே ! நீண்ட வர்ணனை கொடுத்தே எழுதி பழகி விட்டீர்கள் போலும் . சிறு சிறு செய்திகளைக் கூட சிந்தித்து - நீண்ட வர்ணனையுடன் எழுதி - படித்து - ரசித்து - தட்டச்சுப் பிழைகள் திருத்தி - மீண்டும் படித்து ரசித்து - திருப்தி அடைந்த உடன் தான் வெளியிடுவீர்கள் என நினைக்கிறேன் . இது முதற் பகுதி - தொடரும் ...........நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா)August 30, 2011 3:18 PM

   என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு சீனா ஐயா அவர்களே!

   வாருங்கள், வணக்கம். தங்களின் கருத்துக்களுக்கு சுமார் 15 மாதங்கள் கழித்து நான் இன்று பதில் எழுதுகிறேன்,

   அதற்காக என்னை தாங்கள் முதலில் மன்னிக்க வேண்டும்.

   அதற்கான காரணங்களை என் மற்றொரு பதிலில் கீழே தெரிவித்துள்ளேன்.

   //அன்பின் வை.கோ - முடியல - படிக்க முடியல - நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு - //

   நான் வலைப்பதிவினில் எழுத ஆரம்பித்த மூன்றே மாதங்களில் இந்தப்பதிவினை வெளியிட நேர்ந்ததால்
   என்னால் இதனை சுருக்கி வரையவோ, 2-3 தொடர் பதிவுகளாக பிரித்து வெளியிடவோ எனக்குத்
   தோன்றவில்லை.

   அதனால் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவாக இது அமைந்து விட்டது.

   //நுனிப்புல் மேயறது எனக்குப் பிடிக்காது - வரிக்கு வரி சொல்லுக்கு சொல படிச்சு, ரசிச்சு மகிழணும். பொறுமை
   அதிகம் தேவை - //

   ஆஹா, என்னைப்போலவே தாங்களும் ஒருவர் என்பதனை அறிந்து மனம் மகிழ்ந்து போகிறேன்.

   அவ்வாறு ரஸித்துப்படித்து மகிழ்வதே நம் ஸ்பெஷாலிடி. அதில் தவறேதும் இல்லை. அதுவே மிகச்சரியானதொரு செயலாகும், ஐயா. ;))))).

   //அதி காலைலே ஒரு மணி நேரம் இங்கேயே இருந்திருக்கேன். கமெண்ட் போடலாம்னா ஏற்கனவே 53 பேர்
   நான் நினைக்கறதெல்லாம் போட்டுருக்காங்க//

   அடடா, பதிவு வெளியிட்டபின் சுமார் ஐந்து மாதங்கள் கழித்து தாங்கள் வருகை தர நேர்ந்துள்ளது. அதனால் மட்டுமே அதுவும் JUST ஒரு 53 பேர்கள் மட்டுமே குறுக்கே புகுந்துள்ளனர். தங்களின் எழுத்து வேலையை அவர்கள் சற்றே குறைத்துள்ளனர்.

   இருப்பினும் சீனா ஐயா அவர்களின் கருத்துக்கள், எனக்கு எப்போதுமே சீனியாக அல்லவா இனிக்கும்!;)

   இந்தப்பதிவினில் ஏனோ அதற்கு எனக்கு முழுப் ப்ராப்தம் இல்லாமல் போய் உள்ளது.

   //கல்யாண சமையல் சாதம் - நடிச்சது வைகோவா ரங்காராவா ?//

   சாக்ஷாத் S V ரங்காராவ் அவர்களே தான்.
   சந்தேகம் வேண்டாம்.

   // நூறாண்டு இதே போல் நல்ல -வாய்க்கு ருசியான சாப்பாட்டோடு - ந்ல்ல மனைவி - பிள்ளைகள் - மருமகள்கள் - பேரன் பேத்திகளோடு - நகைச்சுவையோடு - வலைப்பூவோடு - வாழ எல்லாம் வல்ல இறைவனின் கருணை உடனிருக்கப் பிரார்த்திக்கிறேன்.//

   அழகான அருமையான சந்தோஷமளிக்கும் பிரார்த்தனைகளுக்கு நன்றிகள், ஐயா.

   //47 வயது வரை உடனிருந்த தாயின் பாசம் - வளர்ப்பு - சாப்பாடு இவை எல்லாம் தான் உங்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது//

   ஆமாம் ஐயா. நிச்சயமாக. தாயின் பாசம் + வளர்ப்பு + சாப்பாடு இவைகளுக்கு ஈடு இணை என்று இந்த உலகினில் எதையுமே நாம் சொல்ல முடியாது என்பதே உண்மை.

   //" எச்சில் இட்டு " - இதைப்பற்றித் தெரியாதவர்கள் படிக்கும் போது புரியாமல் ஒரு மாதிரியாகச் சிந்திப்பார்களோ ?? பரமபரை வழக்கம் எனினும் - இச்சொற்களை - எழுதும் போது தவிர்க்கலாமே ! //

   மனதில் ஏற்றிக்கொண்டேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள், ஐயா.

   //நீண்ட வர்ணனை கொடுத்தே எழுதி பழகி விட்டீர்கள் போலும் . சிறு சிறு செய்திகளைக் கூட சிந்தித்து - நீண்ட
   வர்ணனையுடன் எழுதி - படித்து - ரசித்து - தட்டச்சுப் பிழைகள் திருத்தி - மீண்டும் படித்து ரசித்து - திருப்தி
   அடைந்த உடன் தான் வெளியிடுவீர்கள் என நினைக்கிறேன் //.

   ஆமாம், ஐயா. அதுபோலவே பழகிவிட்டேன். அப்படியும் என்னை அறியாமல் சில தவறுகள் [எழுத்துப்பிழைகள்] ஏற்பட்டு விடுவதும் உண்டு. அதற்காக மிகவும் வருந்துவேன். யாராவது அவற்றை எனக்குச் சுட்டிக்காட்டினால், நன்றி கூறிவிட்டு, உடனடியாக அவற்றைத் திருத்திக்கொள்வதும் உண்டு.

   // இது முதற் பகுதி - தொடரும். .......நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   மிகவும் சந்தோஷம் ஐயா. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   பிரியமுள்ள,
   VGK

   நீக்கு
 55. மிக அருமையான பகிர்வு.முதலில் மனோ அக்காவிற்கு நன்றி சொல்லவேண்டும்.
  உணவில் நான் ருசிக்க சமைக்க வேண்டியது எவ்வளவோ உள்ளதுன்னு உங்க பதிவு மூலம் தெரிஞ்சிகிட்டேன்,அவசரப்பட்டு என் வலைப்பூவிற்கு சமைத்து அசத்தலாம்னு பெயர் வைத்துவிட்டேனோ?சமைக்க ஆரம்பிக்கலாம்னு வைத்திருக்கனும்.
  நீடித்த ஆயுளுடன்,ஆரோக்கியமாக உங்கள் மனம் போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
  சார் ஒரு சிறிய வேண்டுகோள்,அப்ப அப்ப உங்களைக்கவர்ந்த உங்க வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போட்டால் அது பெரிய பொக்கிஷமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 56. asiya omar said...
  //மிக அருமையான பகிர்வு.முதலில் மனோ அக்காவிற்கு நன்றி சொல்லவேண்டும்.//

  மிக்க நன்றி. நானும் அவர்களுக்குத் தான், நன்றி சொல்ல வேண்டியவன். தொடர்பதிவாக எழுத என்னை வற்புருத்தி அழைத்ததே அவர்கள் தான்.

  //உணவில் நான் ருசிக்க சமைக்க வேண்டியது எவ்வளவோ உள்ளதுன்னு உங்க பதிவு மூலம் தெரிஞ்சிகிட்டேன்,அவசரப்பட்டு என் வலைப்பூவிற்கு சமைத்து அசத்தலாம்னு பெயர் வைத்துவிட்டேனோ?சமைக்க ஆரம்பிக்கலாம்னு வைத்திருக்கனும்.//

  அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாதுங்க. நீங்க எழுதும் புதுப்புது சமாசாரங்கள் தான் இந்த நவீன காலத்திற்கு ஒத்துவரும்.

  நான் சொன்னதெல்லாம் பொதுவாக தமிழ்நாட்டு ஐயர் வீடுகளில் செய்யும் உணவுப் பதார்த்தங்களேயாகும். அவற்றில் புதுமை ஏதும் கிடையாது.


  //நீடித்த ஆயுளுடன்,ஆரோக்கியமாக உங்கள் மனம் போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  //சார் ஒரு சிறிய வேண்டுகோள்,அப்ப அப்ப உங்களைக்கவர்ந்த உங்க வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போட்டால் அது பெரிய பொக்கிஷமாக இருக்கும்.//

  என்னைக்கவந்த எங்கள் வீட்டு ரெசிப்பிக்களை வலைப்பூவில் போடலாம் தான். ஆனால் அதில் ஒருசில சிக்கல்கள் உள்ளனவே!

  நன்றாக ருசியாக சமைக்கத் தெரிந்த என் வீட்டு நபர்களுக்கு, எப்படி சமைத்தோம், என்னென்ன பொருட்கள் எவ்வளவு அளவு போட்டோம், எப்படி இவ்வளவு ருசியாகச் செய்தோம், என Sequence-wise ஆக அழகாக ஒன்றுவிடாமல் எடுத்துச்சொல்ல வராது.

  நானே அருகில் நின்று கவனித்தால் அவர்களுக்கு வேலையும் ஓடாது, சமையலும் சரிவர ருசியாக அமையாமல் போய்விடும்.

  தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிப்பதும் நான் இன்றுள்ள நிலைமையில் சரிப்பட்டு வராத காரியம்.

  எனவே எனக்கு நீங்கள் சொல்வது போல பதிவிட மிகவும் ஆசையிருந்தும், அதிர்ஷ்டம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

  ருசியாக சாப்பிடவாவது தொடர்ந்து அதிர்ஷ்டம் இருந்தால் சரியே, என நினைக்கிறேன்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 57. வெகு காலம் முன்பாகவே படித்து ரசித்த இடுகை. கருத்துச் சொல்லாமல் போயிருக்கிறேன். நீளமான இடுகை. ரசித்து ருசித்து எழுதி இருக்கிறீர்கள். :)

  //வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை// பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 58. இமா said...
  /வெகு காலம் முன்பாகவே படித்து ரசித்த இடுகை. கருத்துச் சொல்லாமல் போயிருக்கிறேன். நீளமான இடுகை. ரசித்து ருசித்து எழுதி இருக்கிறீர்கள். :)

  //வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை// பிடித்திருந்தது./

  மிக்க நன்றி, இமா. இந்தத்தங்களின் பின்னூட்டத்தை இன்று தான் அகஸ்மாத்தாகப் பார்த்தேன். Sorry for my delayed reply to you. vgk

  பதிலளிநீக்கு
 59. எத்தனை வகை பாத்திரங்கள் உணவு வகைகள் !!!!!!!!!! எல்லாவற்றையும் ரசித்து வர்ணித்து எழுதியிருக்கீங்க .
  ஊறுகாய் வெரைடில நெல்லிக்காய் ஊறுகாய் உங்களுக்கு பிடிக்காதா
  ?சாம்பார் சாதத்துடன் செம காம்பினேஷன் ,
  அதுவும் நேந்திரங்கா சிப்ஸ்:P எனக்கு சாப்பாடே வேணாம் சிப்சும் ஃபில்டர் காபியும் போதும் .எனக்கு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது அறவே பிடிக்காது .நான் தினமும் சமைப்பது வழக்கம் .கடுகு வெடிக்கும் விஷயத்தில் நானும் அவதிப்பட்டு இருக்கேன் .:))))))))

  பதிலளிநீக்கு
 60. angelin said...
  //எத்தனை வகை பாத்திரங்கள் உணவு வகைகள் !!!!!!!!!! எல்லாவற்றையும் ரசித்து வர்ணித்து எழுதியிருக்கீங்க.//

  மிக்க மகிழ்ச்சி, நிர்மலா.

  //ஊறுகாய் வெரைடில நெல்லிக்காய் ஊறுகாய் உங்களுக்கு பிடிக்காதா?//

  பிடிக்கும் பிடிக்கும்.. எழுத மறந்து விட்டேன். ஞாபகப்ப்டுத்தியதில் நாக்கில் நீர் ஊறுகிறது.

  //சாம்பார் சாதத்துடன் செம காம்பினேஷன்//

  ஆமாம். நல்லாயிருக்கும்.

  //அதுவும் நேந்திரங்கா சிப்ஸ்:P எனக்கு சாப்பாடே வேணாம் சிப்சும் ஃபில்டர் காபியும் போதும்.//

  நீங்களும் என்னை மாதிரியேவா
  ;)))))

  //எனக்கு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது அறவே பிடிக்காது.//

  அது தான் நல்ல வழக்கம்.
  எதையும் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சூடாக்குவது வேஸ்ட் - ருசிப்படாது.

  //நான் தினமும் சமைப்பது வழக்கம். கடுகு வெடிக்கும் விஷயத்தில் நானும் அவதிப்பட்டு இருக்கேன். :))))))))//

  அனுபவப்பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.
  ரொம்ப சந்தோஷம் .. நிர்மலா.

  அன்புட்ன் vgk

  பதிலளிநீக்கு
 61. எனக்கு என் வீடு தவிர மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடப்பிடிப்பதில்லை.ஹோட்டலுக்குப் போனாலும், எவ்வளவு பசியாக இருந்தாலும், சாப்பாடு பக்கம் தலை வைத்துப்படுக்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
 62. என்னைவிட உடல் எடை அதிகமாகவே இருந்து கடைசிவரை ஒரு வியாதி என்று படுக்காமல், நீண்ட நாட்கள் வாழ்ந்து, இயற்கையாகவே தங்களின் இறுதிப்பயணத்தை இன்பப்பயணமாகவே ஆக்கிக்கொண்டவர்கள்.

  முன்னோர்கள் கொடுத்துவைத்திருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 63. இராஜராஜேஸ்வரி said...
  //எனக்கு என் வீடு தவிர மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடப் பிடிப்பதில்லை.

  ஹோட்டலுக்குப் போனாலும், எவ்வளவு பசியாக இருந்தாலும், சாப்பாடு பக்கம் தலை வைத்துப்படுக்க மாட்டேன்.//
  May 25, 2012 3:25 AM

  தங்கள் அன்பான வருகைக்கும், நான் எழுதியுள்ள ஏதோ ஒரு பகுதியை, சுட்டிக்காட்டியுள்ளதற்கும் நன்றிகள்.

  இராஜராஜேஸ்வரி said...
  என்னைவிட உடல் எடை அதிகமாகவே இருந்து கடைசிவரை ஒரு வியாதி என்று படுக்காமல், நீண்ட நாட்கள் வாழ்ந்து, இயற்கையாகவே தங்களின் இறுதிப்பயணத்தை இன்பப்பயணமாகவே ஆக்கிக்கொண்டவர்கள்.

  //முன்னோர்கள் கொடுத்துவைத்திருக்கிறார்கள்//

  ஆமாம், மேடம். மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.

  பதிலளிநீக்கு
 64. //சொர்ரென்ற சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க அந்த அடை, என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தது. இவ்வளவு நிறைய நெய்யை நான் அதன் மேல் ஸ்வாகா செய்து விட்டேன் என்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

  பிறகு ஒரு 5 நிமிடம் கழித்து, வலது கையில் வைத்திருந்த தோசைத்திருப்பியால் லேசாக ஆங்காங்கே சுற்றுவட்டாரத்தில் சற்றே நெம்பிவிட்டு, இடது கையால் கெட்டியாக, உறுதியாக கிடுக்கியால் அடைக்கல்லையும் பிடித்துக்கொண்டு, அடையை அப்படியே அலாக்காகத் தூக்கி, குப்புறப்படுக்க வைத்தேன். //

  மிகவும் அழகான எழுத்துவடிவில் தாங்கள் கூறியது அனைத்தும் அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகையும், அழகாகத் தாங்கள் சுட்டிக் காட்டியுள்ளதோர் நகைச்சுவைப் பகுதியும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 65. எப்படி இந்த பதிவு என் கண்களில் படாமல் போயிற்று.அப்பப்பா..மிக நீண்ட பதிவாகினும்,வரி விடாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.படிக்க படீக சுவாரஸ்யம்,நெகிழ்ச்சி மகிழ்ச்சி ஆச்சரியம்,இப்படு பற்பல உணர்வுகள் கலந்து கட்டிவிட்டன.இதை படிக்கையில் எத்தனை எத்தனை வித சமையல் உபகரணங்கள்,பதார்த்தங்கள்,அனுபவங்கள்,அறிவுரைகள் எல்லாம் அறிந்து கொள்ள முடிந்தன!!மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் ஐயா.வாழ்த்துக்கள்.


  // கடைசியாக ஒரே ஒரு ஆசை எனக்கு, அதாவது நானும் கஷ்டப்படாமல், பிறரையும் கஷ்டப்படுத்தாமல், இறுதி மூச்சு பிரியும் வரை எனக்குப்பிடித்த ஐட்டங்களாக சாப்பிட்டு விட வேண்டும்.வலைப்பூவில் மிகவும் நகைச்சுவையான, ஏதாவது ஒரு விஷய்த்தைப் படித்தவாறே அல்லது டி.வி. ஆதித்யா சானலில் ஏதாவது எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவைக்காட்சியை ரசித்தவாறே, நான் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டு இருக்கும் போதே, டக்கென்று என் உயிர் பிரிய வேண்டும்.

  நான் நினைப்பது எல்லாமே இதுவரை நடந்துள்ளதால் இதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.//நெகிழ வைத்த வரிகள்.எங்களது பிரார்த்தனைனையும் அங்ஙனமே.


  //இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.// ரசித்து சிரிக்க வைத்த வரிகள்.அப்படியே மாமியிடம் சொல்லி பஜ்ஜி மாவில் வெறெதாவது காயை தோய்த்து மொறுகலா பஜ்ஜி போட்டு கெட்டி சட்னியுடன் சுடச்சுட பார்ஸல் ப்ளீஸ்(நான் வெங்காய பஜ்ஜியை பார்த்தாலே காத தூரம் ஓடி விடுவேன்.அதுதான் வேறு காய் )-:

  பதிலளிநீக்கு
 66. நீங்கள் சமைக்க ஆரம்பித்த அனுபவம் நல்ல நகைசுவையா எழுதி இருக்கீங்க அண்ணா..ரசித்து சிரித்தேன்.கடைசி வரை நம்ம கூட வரப் போறது நாம செஞ்ச புண்ணியமும் நல்லா சந்தோசமா சாப்பிட்டு நம்ம உடம்பில போடுற சதையும்தான்...இதை என் மாமியார் அடிக்கடி கூறுவார்கள்.உங்க பதிவை படித்ததில் மாமியார் சொன்னது நியாபகத்திற்கு வருது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் மாமியார் சொன்னது 100க்கு 100 உண்மை தான்.

   மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது. ந்ன்றி.

   அன்புடன் vgk

   நீக்கு
 67. அன்புள்ள ஸாதிகா மேடம்,

  இந்த என் பதிவினை மிகவும் ரஸித்து, ருஸித்து, அனுபவித்த வாசித்துள்ளீர்கள் என்பதை நினைக்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  இதுபோல நீங்கள் இதுவரை எவ்வளவு நல்ல பதிவுகளை வாசிக்கத் தவறியுள்ளீர்களோ! உங்களைப்போலவே ரசனையுள்ள எவ்வளவு பேர்கள் என் எவ்வளவு பதிவுகளை வாசிக்கத் தவறியுள்ளார்களோ!!

  நல்ல நமக்குப் பிடித்தமான பதிவுகள், நம் கண்களில் படவும், நமக்கு அதை அப்போதே வாசிக்க சமய சந்தர்ப்பங்கள் அமையவும் கூட, நமக்கு ஓர் கொடுப்பிணை வேண்டும் தான் போலிருக்கு.

  //நெகிழ வைத்த வரிகள்..... எங்களது பிரார்த்தனைனையும் அங்ஙனமே//

  ஆம். நாம் எல்லோரும் எதிர்பார்ப்பது இதுபோலவே தான். அதற்கும் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கொடுப்பிணை வேண்டும்.

  //ரசித்து சிரிக்க வைத்த வரிகள். அப்படியே மாமியிடம் சொல்லி பஜ்ஜி மாவில் வெறெதாவது காயை தோய்த்து மொறுகலா பஜ்ஜி போட்டு கெட்டி சட்னியுடன் சுடச்சுட பார்ஸல் ப்ளீஸ்//

  NO PROBLEM. என்ன காய் பிடிக்குமோ சொல்லுங்கள். உடனே ஏற்பாடு செய்கிறேன்.

  அப்புறம் இந்த பஜ்ஜியைப்பற்றியே “பஜ்ஜின்னா... பஜ்ஜி தான்”
  என ஒரு பதிவு வெளியிட்டிருந்தேனே!

  நீங்கள் அதைப் படித்தீர்களோ இல்லையோ தெரியவில்லை. எதற்கும் இதோ இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html பகுதி-1
  http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html பகுதி-2


  அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 68. its pity i can understand nothing..no pics at all..i will have to learn tamil..ha haa..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. YES LEELA, THIS IS WHAT I EXPECTED. YOU MAY NOT BE ABLE TO UNDERSTAND ANYTHING, AS IT IS WRITTEN IN TAMIL THAT TOO WITHOUT ANY PICTURES.

   FROM JANUARY TO JUNE 2011, I WAS NOT AWARE HOW TO ATTACH PICTURES IN MY POST.

   SO THERE IS NO PICTURE AT ALL IN FIRST 1 TO 100 POSTS OF MINE.

   HOWEVER I THANK YOU VERY MUCH LEELA, FOR YOUR KIND VISIT & FOR YOUR SINCERE ATTEMPT TO READ / WATCH PICTURES Etc.,

   WITH BEST WISHES .....

   GOPU

   நீக்கு
 69. சமையலறையை அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க:))

  நீங்கள் சொன்னவற்றில் சில பல;) பாத்திரங்கள், உபகரணங்கள், காய்வகை, கீரைவகை, வத்தல் வடாம்வகைகள் எனக்கு தெரியவில்லை. இப்படியெல்லாம் இருக்கிறதென உங்கள் மூலம்தான் அறிகிறேன்.

  சமையல் என்று மட்டும் சொல்லாமல் சமையல் கலைன்னு சொல்லியுள்ளார்களே நம் மூத்தோர் அதன் அர்த்தம்: எப்படிப் பக்குவமா, பதமா, ருசியா சமைக்க கற்றுக்கொள்வதுதானோ என்பதை நீங்கள் ஒவ்வொன்றையும் ரசிச்சு ருசிச்சு சொன்னவிதம் மூலம் புரிந்துகொண்டேன்.

  எழுத்துத்துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் எனக்கு அத்துபடி என்று இங்கு சமையலைப் பற்றியும் பொழிந்து தள்ளியுள்ளீர்கள். மஹா ரசிகன்தான் நீங்கள்.

  சமையல் கட்டில் உங்கள் சமையல் அனுபவம் வாசித்து வயிறு வலிக்க சிரித்தேன். இனி நம் வீட்டில் அடை சுடும்போது நீங்கள் உங்கள் வயிற்றில் கொதி நெய்யினால் தைலாப்பியங்கம்:) செய்தது நினைவுக்கு வரும்;)))))))

  பயன்தரும் நல்ல நல்ல குறிப்புகள். யாவுக்கும் மிக்க நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இளமதி October 1, 2012 11:32 AM
   சமையலறையை அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க:))//

   அன்பின் இளமதியே, வாருங்கள், காலை வணக்கங்கள்.

   ஆம். சமையலறை மட்டுமல்ல. நான் புதிதாக முதன்முதலாகக் பழக நினைக்கும், பார்க்க நினைக்கும், அனுபவிக்க நினைக்கும் எல்லாவற்றையுமே மிகுந்த ஆசையுடன், ஆவலுடன், முழு ஈடுபாட்டுடன், அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய நினைப்பதே என் வழக்கம்.

   தொடரும்....

   நீக்கு
  2. 2]

   VGK to இளமதி .....

   //நீங்கள் சொன்னவற்றில் சில பல;) பாத்திரங்கள், உபகரணங்கள், காய்வகை, கீரைவகை, வத்தல் வடாம்வகைகள் எனக்கு தெரியவில்லை.//

   நீங்கள் எந்த நாட்டில் பிறந்தவர்களோ? எந்த நாட்டில் எந்த ஊரில் இப்போது வாழ்கிறீர்களோ? உங்கள் வயது என்னவோ? எனக்குத் தெரியவில்லை.

   இந்தப் பகுதியில் கூறியுள்ள பாத்திரங்கள், உபகரணங்கள் சிலவற்றை நானே என் சிறு வயதில் பார்த்துள்ளேன். பலவற்றை என் அன்புத் தாயார் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.

   மற்றபடி காய்கறிகள், வடாம், வத்தல்கள் போன்ற இன்றும் எங்கள் ஊரில் மிகச்சுலபமாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.

   தமிழ்நாட்டில் திருச்சி மாநகரில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இவையெல்லாம் பற்றி மிக நன்றாக்த் தெரியும் வாய்ப்பு உண்டு. இருப்பினும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரியணும் என்று நாம் எதுவும் எதிர்பார்க்க முடியாது தான்.

   சமீபத்தில் என் அன்புத்தங்கை ’அஞ்சு’ என அனைவராலும் அழைக்கப்படும், ‘எஞ்சலின்’ நிர்மலா அவர்களின் ‘வற்றல் குழம்பு’ என்ற பகுதியில் வெளியிட்டுள்ள ’மினுக்கு வற்றல்’ பற்றிய பதிவினையும் அதற்கு நான் கொடுத்துள்ள பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படித்துப் பாருங்கோ.

   // இப்படியெல்லாம் இருக்கிறதென உங்கள் மூலம்தான் அறிகிறேன்.//

   என் மூலம் இதுபோன்ற பல புதிய விஷயங்களை தாங்கள் அறியத்தான் போகிறீர்கள். ;)

   என் பதிவுகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் தெரிந்து போகுமே.

   தொடரும் ....

   நீக்கு
  3. 3]

   VGK to இளமதி....

   //சமையல் என்று மட்டும் சொல்லாமல் சமையல் கலைன்னு சொல்லியுள்ளார்களே நம் மூத்தோர் அதன் அர்த்தம்: எப்படிப் பக்குவமா, பதமா, ருசியா சமைக்க கற்றுக்கொள்வதுதானோ என்பதை நீங்கள் ஒவ்வொன்றையும் ரசிச்சு ருசிச்சு சொன்னவிதம் மூலம் புரிந்துகொண்டேன். //

   வாழ்க்கையை, அதுவும் சாப்பாட்டு விஷயத்தில்
   [நாக்கு விஷயத்தில் ;))))) ] மிகவும் ரசித்து ருசித்து அனுபவிப்பவன் தான் நான் ..... இன்றுவரையிலும்.


   //எழுத்துத்துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் எனக்கு அத்துபடி என்று இங்கு சமையலைப் பற்றியும் பொழிந்து தள்ளியுள்ளீர்கள்.//

   நன்கு புரிந்து கொண்டு எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி, இளமதி.

   //மஹா ரசிகன்தான் நீங்கள்.//

   ஆஹா, என்னை மஹா ரசிகன்தான் என்று சொன்னத் தாங்கள் என் மஹா ரசிகையாக இருப்பீர்கள் போலிருக்கே!

   என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசியுங்கள். அவ்வப்போது மறக்காமல் கருத்து அளியுங்கள்.

   தொடரும் .....

   நீக்கு
  4. 4]

   VGK to இளமதி...

   //சமையல் கட்டில் உங்கள் சமையல் அனுபவம் வாசித்து வயிறு வலிக்க சிரித்தேன்.//

   பார்த்து ஜாக்கிரதையாக மெதுவாகவே சிரியுங்கள் அல்லது புன்னகை புரியுங்கள். ஒரேயடியாக வயிறு வலிக்கச் சிரித்தால் என்ன ஆவது? பிறகு அதற்குவேறு சிகித்சை அளிக்கவும் செலவழிக்கவும் நேரிடுமே ... ;)

   //இனி நம் வீட்டில் அடை சுடும்போது நீங்கள் உங்கள் வயிற்றில் கொதி நெய்யினால் தைலாப்பியங்கம்:) செய்தது நினைவுக்கு வரும்;)))))))//

   அச்சா, பஹூத் அச்சா! அடிக்கடி எனக்கு மிகவும் பிடித்தமான அடையை தாங்கள் தங்கள் வீட்டில் செய்யவும், அப்போது என் நினைவுகள் உங்களுக்கு வரவும் கடவது. ததாஸ்து!

   //பயன்தரும் நல்ல நல்ல குறிப்புகள். யாவுக்கும் மிக்க நன்றி!!!//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 70. உங்கள் இடுகையைப் படித்தேன். கனவாநினைவா தெறியலே.
  அப்படி ஒரு தத்ரூபம்.ஒரு தரம் பெறிய பின்னூட்டம் எழுதி அனுப்பி
  போஸ்ட் ஆகலே.இப்போ ஊரிலிருந்து பிள்ளை வந்திருக்கான்.திரும்பவும் வரேன். அன்புடன் மாமி

  பதிலளிநீக்கு
 71. //Kamatchi October 11, 2012 3:46 AM
  உங்கள் இடுகையைப் படித்தேன். கனவாநினைவா தெரியலே.
  அப்படி ஒரு தத்ரூபம். ஒரு தரம் பெறிய பின்னூட்டம் எழுதி அனுப்பி போஸ்ட் ஆகலே.இப்போ ஊரிலிருந்து பிள்ளை வந்திருக்கான். திரும்பவும் வரேன். அன்புடன் மாமி//

  அன்புள்ள காமாக்ஷி மாமி, வாங்கோ மாமி.

  உங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

  உங்களை என் அன்புத்தங்கை அஞ்சூ என்கிற ஏஞ்சலின் என்கிற நிர்மலா மூலம் அறிந்துகொண்டேன். உங்களைப்பற்றி மிகவும் உயர்வாகச் சொன்னார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது.

  நீங்கள் எல்லாம் அந்தக்கால மனுஷ்யாள். என் அம்மா போலவே நல்ல அனுபவம் தங்களுக்கும். நிர்மலா சொல்லி தங்கள் பதிவுக்கு வந்து பார்த்தேன். ஒருசில கருத்துக்களும் எழுதினேன்.

  தொடரும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK to காமாக்ஷி மாமி....

   //உங்கள் இடுகையைப் படித்தேன். கனவாநினைவா தெரியலே. அப்படி ஒரு தத்ரூபம்.//

   மிகவும் சந்தோஷம் மாமி. மகிழ்ச்சியாக உள்ளது.

   //ஒரு தரம் பெரிய பின்னூட்டம் எழுதி அனுப்பி போஸ்ட் ஆகலே.//

   அடடா, ரொம்பவும் சிரமப்படாதீங்கோ மாமி.

   சின்னச்சின்னதாகவே எழுதி அனுப்புங்கோ.

   எனக்கும் இதுபோல சமயத்தில் ஆகி இடுகிறது. இங்கு மின்தடைகள், கம்ப்யூட்டர் நெட் கிடைக்காமல் சில பிரச்சனைகள் என மாற்றி மாற்றி ஏதாவது தொல்லைகள் அடிக்கடி ஏற்படுகிறது.

   அதனால் நான் சின்னச்சின்னதாக ‘தொடரும்’ எனப்போட்டுத் தான் எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

   //இப்போ ஊரிலிருந்து பிள்ளை வந்திருக்கான். திரும்பவும் வரேன். அன்புடன் மாமி//

   ரொம்ப சந்தோஷம் மாமி. இந்த வயதிலும் இதுபோல அன்போடு வருகை தந்து அழகாகக் கருத்துக்கூறியிருப்பது, எனது பாக்யம் தான் என்று நினைத்து மகிழ்கிறேன்.

   அநேக நமஸ்காரங்களுடன்,
   கோபாலகிருஷ்ணன்

   நீக்கு
 72. இன்னமும் கழித்து கட்டாமல் இருக்கும் , வெண்கலப் பானைகளை (பருப்பு உருளி, பாயச உருளி, வெண்கல உருளி..), எடுத்து பார்க்கவேண்டும் என்று தோணிற்று.

  உணவு வகைகளை ருசித்து சாப்பிட முடிவதே ஓர் வரம்.அப்படி சாப்பிடுபவர்களுக்கு , ருசியாக சமைத்து பறிமாற விரும்பும் குடும்பத்து பெண்கள் அமைந்த இல்லம் , சொர்ரக்கமே.


  நீங்கள் விவரித்தாற் போல், எல்லா விதமான அடுப்புகளிலும், நிதானமாக , செய்த சமையல் பண்டங்களின் சுவை பற்றி , அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. ஒரே குக்கரில் எல்லாவற்றையும் , சேர்த்து வேக வைத்து, பர பரவென்று, முடித்து,சமயலறையிலிருந்து, மீள வேண்டும், என்ற அவசரத்தில் செய்யும் பண்டங்கள், சுவை ...மட்டமே.

  இப்போதெல்லாம், சமையல் அறைகளை நவீனமாக கட்டி விட்டு, அது அழுக்காகக் கூடாது என்று, சொற்ப சமையல் செய்வது , பேஷன் ஆகி விட்டது.

  எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில்,நான்கு நாட்கள் நங்கவேண்டிய கட்டாயம். மிக பணக்கார குடும்பம், இருவரும் டாப் ப்ரொபெஷனல்ஸ், பள பள. ஆனால், தங்கி இருந்த எங்களுக்கு , என்ன உணவு கொடுப்பது என்பதே அவர்களுக்கு டென்ஷன். என்னையே , ஏதாவது தயார் செய்யுங்கள் என்று வேண்டினார்கள். அந்த பள பள , அல்ட்ரா மாடர்ன் , உபகரணங்களை ,பயன்படுத்தி , நான் செய்ய வேண்டிய கட்டாயம். அந்த பெண்மணி, என் கூடவே இருந்து , ஏதாவது சிந்தி விடக்கூடாது என்று, கவலைப்பட்டார்கள்.! அந்த டென்ஷனில், இனிமேல் செய்ய கூடாது என்று, மறுவேளையில் இருந்து , ஓட்டல் சாப்பாடு வாங்கி , சமாளித்தோம்.


  பதிவில் குறிப்பிட்டுள்ள, காய்கறிகள், வடாம் வகைகளை , சுவைத்த நினைவுகள்,அவைகளை நானே தயாரித்த காலம், எல்லாம் 'Nostalgic" Sir!
  இப்போதெல்லாம் செய்தாலும் சாப்பிட , யாருக்கும் தைரியமில்லை. ;-).

  சமையலை ஒரு கலை என்ற கண்ணோட்டத்தோடு, செய்தால் , சுவை கூடுகிறது.

  உங்கள் பதிவுகளில், நான் மிகவும் ரசித்தவைகளில், இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த டாபிக்.

  பின்னூட்டம் நீளுகிறது, நிற்க!.

  நமஸ்காரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள பட்டு,

   வாங்கோ வாங்கோ, நமஸ்காரம், வணக்கம். செளக்யமா?

   Pattu Raj October 30, 2012 6:28 AM
   //இன்னமும் கழித்து கட்டாமல் இருக்கும் , வெண்கலப் பானைகளை (பருப்பு உருளி, பாயச உருளி, வெண்கல உருளி..), எடுத்து பார்க்கவேண்டும் என்று தோணிற்று.//

   ஆஹா இன்னும் பரணையில் பத்திரமாக வைத்துள்ளீர்களா? சபாஷ். அவற்றையெல்லாம் படம் பிடித்து ஒரு பதிவாகப் போடுங்கோ, ப்ளீஸ்.

   //உணவு வகைகளை ருசித்து சாப்பிட முடிவதே ஓர் வரம். அப்படி சாப்பிடுபவர்களுக்கு , ருசியாக சமைத்து பறிமாற விரும்பும் குடும்பத்து பெண்கள் அமைந்த இல்லம் , சொர்ரக்கமே. //

   ஆம் ... அதுவே சுவர்க்கம் தான்.

   >>>>>> தொடரும் >>>>>>>

   நீக்கு
  2. கோபு ... பட்டு [2]

   //நீங்கள் விவரித்தாற் போல், எல்லா விதமான அடுப்புகளிலும், நிதானமாக, செய்த சமையல் பண்டங்களின் சுவை பற்றி, அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை.

   ஒரே குக்கரில் எல்லாவற்றையும், சேர்த்து வேக வைத்து, பர பரவென்று, முடித்து, சமயலறையிலிருந்து, மீள வேண்டும், என்ற அவசரத்தில் செய்யும் பண்டங்கள், சுவை ...மட்டமே.//

   அதெல்லாம் அந்தக்காலம். இது நவீன அவசர உலகம்.
   யாருக்கும் எதற்கும் நேரமோ பொறுமையோ இல்லை.
   கணவன் மனைவி இருவருமே அலுவலகம் / வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளதே!

   எதையும் ரசிக்கவோ, தயாரிக்கவோ, சுவைக்கவோ கூட நேரம் இருப்பதில்லை என்பதே உண்மை.

   >>>>>>>

   நீக்கு
  3. கோபு ... பட்டு [3]

   //இப்போதெல்லாம், சமையல் அறைகளை நவீனமாக கட்டி விட்டு, அது அழுக்காகக் கூடாது என்று, சொற்ப சமையல் செய்வது , பேஷன் ஆகி விட்டது.//

   அழகாகச் சொன்னீர்கள். அதே ! அதே !!

   //எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில்,நான்கு நாட்கள் நங்கவேண்டிய கட்டாயம். மிக பணக்கார குடும்பம், இருவரும் டாப் ப்ரொபெஷனல்ஸ், பள பள. ஆனால், தங்கி இருந்த எங்களுக்கு, என்ன உணவு கொடுப்பது என்பதே அவர்களுக்கு டென்ஷன். என்னையே, ஏதாவது தயார் செய்யுங்கள் என்று வேண்டினார்கள். அந்த பள பள, அல்ட்ரா மாடர்ன், உபகரணங்களைப்பயன்படுத்தி, நான் செய்ய வேண்டிய கட்டாயம்.//

   விருந்தினராகப் போன தங்களுக்கு விருந்துபசாரம் செய்யாமல் போனாலும், தங்களையே வேலை ஏவி விட்டனர். நல்ல புத்திசாலிகள் தான்.

   //அந்த பெண்மணி, என் கூடவே இருந்து , ஏதாவது சிந்தி விடக்கூடாது என்று, கவலைப்பட்டார்கள்.! //

   என்ன ஒரு கொடுமை பாருங்கோ. பாத்ரூம் + டாய்லெட் கூட அழுக்காகிப்போகும். அதனால் உபயோகிக்கக்கூடாது என்று சொல்லாமல் விட்டார்களே!

   //அந்த டென்ஷனில், இனிமேல் செய்ய கூடாது என்று, மறுவேளையில் இருந்து, ஓட்டல் சாப்பாடு வாங்கி, சமாளித்தோம். //

   எனக்கும் இதே நிலை காசியில் ஒரு வீட்டில் நடைபெற்றது. எனக்குப்பிடிக்காத கோவைக்காய்கறியையே தினமும் செய்து போட்டார்கள். நான் எழுந்துகொண்டு ஹோட்டலைப் பார்க்கப்போய் விட்டேன். மஸால் தோசை + புளியஞ்சாதம் + தயிர்சாதம் என ஏதேதோ சாப்பிட்டு, 4 நாளில் ரயிலைப் பிடித்து தப்பித்து வந்துவிட்டேன்.

   >>>>>>>

   நீக்கு
  4. கோபு ... பட்டு [4]

   //பதிவில் குறிப்பிட்டுள்ள, காய்கறிகள், வடாம் வகைகளை , சுவைத்த நினைவுகள்,அவைகளை நானே தயாரித்த காலம், எல்லாம் 'Nostalgic" Sir!

   இப்போதெல்லாம் செய்தாலும் சாப்பிட , யாருக்கும் தைரியமில்லை. ;-).//

   ஆமாம். அது ஒரு பொற்காலம். இப்போது சுகர், BP, கொலஸ்ட்ரால் என ஏதேதோ சொல்லி. எண்ணெய் பதார்த்தங்களே கூடாது என பயமுறுத்துகிறார்கள்.

   வாய்க்குப்பிடித்ததை சாப்பிட விட மாட்டேன் என்கிறார்கள். மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது.

   இதைப்பற்றி நான் “நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்” என்ற என் பதிவிலும் எழுதியுள்ளேன்.

   முடிந்தால் படித்துப்பாருங்கோ. சுவையாக இருக்கும்.

   இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2011/10/15.html

   நீ முன்னாலே போனா ... நா ..
   பின்னாலே வாரேன் பகுதி 1 / 5

   >>>>>>>>>

   நீக்கு
  5. கோபு ..... பட்டு [5]

   //சமையலை ஒரு கலை என்ற கண்ணோட்டத்தோடு, செய்தால், சுவை கூடுகிறது.//

   நிச்சயமாக சமையல் ஒரு கலையே தான். சுவை கூட்டுவது சமையல் செய்பவரின் கையில் தான் உள்ளது.

   //உங்கள் பதிவுகளில், நான் மிகவும் ரசித்தவைகளில், இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த டாபிக்.//

   ரொம்ப ரொம்ப சந்தோஷம். பட்டுவின் பட்டு போன்ற மென்மையான + ரசிப்புடன் கூடிய கருத்துக்கள் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்றே.

   //பின்னூட்டம் நீளுகிறது, நிற்க!.//

   எழுந்து நின்று விட்டேன். ;)))))

   சின்னச்சின்னதாக நிறைய முறை எழுதுங்கோ. அது சற்று சுலபமாகவும் மேலும் சுவையூட்டுவதாகவும் இருக்கும்.
   உதாரணமாக இந்த என் பதில்கள் போல.

   //நமஸ்காரம்.//

   ஆசீர்வாதம்

   அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பட்டூஊஊஊஊஊ.

   என்றும் பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 73. ஒர் உதவி வேண்டும் சார், தோசை மிளகாய் பொடி, உங்கள் வீட்டு ஸ்பெஷல் ரெசிபி, எப்போது பதிவிட உத்தேசம். ?

  நன்றி.

  பதிலளிநீக்கு
 74. Pattu Raj October 30, 2012 6:43 AM
  //ஒர் உதவி வேண்டும் சார், தோசை மிளகாய் பொடி, உங்கள் வீட்டு ஸ்பெஷல் ரெசிபி, எப்போது பதிவிட உத்தேசம். ?//

  என் மேலிடம் சந்தோஷமாக ஜாலி மூடில் இருக்கும் நேரமாகப்பார்த்து. இதுபற்றிக்கேட்டு, நான் அதைப்பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொண்டு, பிறகு பதிவிட முயற்சிக்கிறேன். [இது கொஞ்சம் கஷ்டமான ரிஸ்க்கான வேலை தான் ! ;))))) ]

  //நன்றி.//

  நன்றியோ நன்றிகள்.

  பிரியமுள்ள கோபு

  பதிலளிநீக்கு
 75. ஹப்பா! முதலில் உங்கள் பதிவு, பிறகு 87 கருத்துரைகள். எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.

  அந்தக் காலப் பாத்திரங்களில் ஆரம்பித்து, எதை வைத்து அடுப்பு மூட்டுவார்கள் என்று விவரித்து, அம்மா கை சமையல், பிறகு மனைவியின் கையால் சுடசுட சாப்பாடு....பிரமாதம்!


  கடைசியில் ஒரு யோசனை சொல்லி இருக்கிறீர்களே!
  அடடா! 'மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அருமை அருமை!

  பதிலளிநீக்கு
 76. Ranjani Narayanan November 10, 2012 7:46 AM
  //ஹப்பா! முதலில் உங்கள் பதிவு, பிறகு 87 கருத்துரைகள். எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.//

  ரொம்பவும் பொறுமைசாலிதான் நீங்க ! ;))))) சந்தோஷம்.

  //அந்தக் காலப் பாத்திரங்களில் ஆரம்பித்து, எதை வைத்து அடுப்பு மூட்டுவார்கள் என்று விவரித்து, அம்மா கை சமையல், பிறகு மனைவியின் கையால் சுடசுட சாப்பாடு....பிரமாதம்!//

  நிஜமாகவே பிரமாதமாக சுவையோ சுவையாகவே இருக்கும் மேடம்.

  //கடைசியில் ஒரு யோசனை சொல்லி இருக்கிறீர்களே!
  அடடா! 'மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அருமை அருமை!//

  அதையும் படிச்சுட்டேளா, பேஷ் பேஷ் !

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ரஞ்சு மேடம்.

  [தாங்கள் லிங்க் அனுப்பிப் படித்துக்கருத்துக்கூறச்சொன்ன ஓர் பதிவு தங்களின் அக்கா பற்றியது, ஏதோ ஓர் பின்னூட்டம் மட்டும் கொடுத்தேன். தொடரும் போட்டேன். நாளை தொடர்கிறேன். இன்று கடுமையான மின் தடை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறது. அதுவும் நீண்ட நேரங்கள் + அடிக்கடி. ;((((((]

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 77. உங்கள் பதிவு படிக்கும் போது கூடவே பின்னூட்டங்களும் படித்துக்கொண்டே எதற்கு வந்தோம் என்பதே ஞாபகம் வரும்போது
  கூடவே எழுந்து போகும்படி ஏதாவது அவசியம். இப்படியே கண்ணாமூச்சி விளையாட்டுதான். இப்படி ஒரு பதிவை எப்படி இவ்வளவு கோர்வையாக, ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்
  என்று மலைப்பு தட்டுகிறது.
  இரண்டாவது திருச்சி,மாயவரம்,கும்பகோணம் என்ற காவிரிக்கரை
  வாசிகளுக்குத்தான் இவ்வளவு, பக்குவமும்,பாங்கும், பழையன இருத்தலும்.முடியும்.
  இப்போ எதுவும் சாப்பிட முடியாவிட்டாலும், நினைத்தாலே
  ருசிக்கிரது,கூடவே மணக்கிறது. சாப்பிட்ட திருப்தியும் உண்டாகிரது.
  சாப்பிடும்போது பக்கத்தில்,கிண்ணத்தில் உருக்கின நெய் கரண்டி-
  -முட்டையுடன் இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
  எங்கப்பா இப்படித்தான் இருந்தார். காவேரி வாஸராக இருந்தவர்.
  எனக்கு நீங்கள் லிங்க் கொடுத்ததால் இவ்வளவாவது எழுத முடிந்தது. அருமையிலும் அருமையான பதிவு. யாராவது கூப்பிட்டால் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்போலுள்ளது.
  மானஸீகமாகத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kamatchi December 7, 2012 6:32 AM
   //உங்கள் பதிவு படிக்கும் போது கூடவே பின்னூட்டங்களும் படித்துக்கொண்டே எதற்கு வந்தோம் என்பதே ஞாபகம் வரும்போது கூடவே எழுந்து போகும்படி ஏதாவது அவசியம். இப்படியே கண்ணாமூச்சி விளையாட்டுதான்.//

   வாங்கோ, காமாக்ஷி மாமி, நமஸ்காரம். என்னுடைய இந்த மிக நீண்ட பதிவினை மிகவும் சிரத்தையாகப் படித்துள்ளதும் கருத்துக்கூறியுள்ளதும், எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆச்சர்யமாகவும் உள்ளது.

   //இப்படி ஒரு பதிவை எப்படி இவ்வளவு கோர்வையாக, ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் என்று மலைப்பு தட்டுகிறது.//

   பிரித்து 2-3 பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம் தான். எனக்கு அப்போது ஏனோ அதுபோலத் தோன்றவில்லை. வலைப்பதிவுக்கு நான் வந்து 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் எழுதியது இது. வலையில் அதிக அனுபவம் இல்லாத நேரம் அது.

   >>>>>>>

   நீக்கு
  2. VGK To காமாக்ஷி மாமி.... [2]

   //இரண்டாவது திருச்சி,மாயவரம்,கும்பகோணம் என்ற காவிரிக்கரை வாசிகளுக்குத்தான் இவ்வளவு, பக்குவமும், பாங்கும், பழையன இருத்தலும் முடியும்.//

   மிகவும் அழகாக சரியாக எடை போட்டு வைத்துள்ளீர்கள். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷமாக உள்ளது.

   //இப்போ எதுவும் சாப்பிட முடியாவிட்டாலும், நினைத்தாலே ருசிக்கிறது, கூடவே மணக்கிறது.
   சாப்பிட்ட திருப்தியும் உண்டாகிறது.//

   தங்களின் அழகான இந்த வார்த்தைகளைப் படிப்பதே எனக்கு ருசிக்கிறது. மணக்கிறது. முழுத்திருப்தியாக உள்ளது.

   //சாப்பிடும்போது பக்கத்தில்,கிண்ணத்தில் உருக்கின நெய் கரண்டி- -முட்டையுடன் இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.//

   ஆமாம். ஆமாம். நான் எழுத மறந்துட்டேன்.

   எனக்குத் தெரிந்த ஒரு சம்சாரிப் பெரியவர் சொல்லுவார் :-
   “நெய்யை உருக்கணும், மோரைப்பெருக்கணும்” என்று.

   >>>>>>>>

   நீக்கு
  3. VGK To காமாக்ஷி மாமி.... [3]

   //எங்கப்பா இப்படித்தான் இருந்தார். காவேரி வாஸராக இருந்தவர்.//

   உங்கள் பதிவினில் அவரைப்பற்றியும் அவரின் நித்யப்படி பஞ்சாயதன சிவபூஜை பற்றியும் எழுதியிருந்தீர்கள். படித்து மகிழ்ந்தேன்.

   என் அப்பாவும் அதே போலவே தினமும் சிவபூஜை [பஞ்சாயதன பூஜை] வெகு சிரத்தையாகச் செய்தவர் தான். எவ்வளவோ நாட்கள் நான் ஸ்நானம் செய்து விட்டு, மடியாக சந்தனக்கல் + கட்டையில் சந்தனம் அரைத்துக்கொடுத்துள்ளேன்.

   //எனக்கு நீங்கள் லிங்க் கொடுத்ததால் இவ்வளவாவது எழுத முடிந்தது. அருமையிலும் அருமையான பதிவு. யாராவது கூப்பிட்டால் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்போலுள்ளது.
   மானஸீகமாகத்தான்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், சிரத்தையாக அழகாக ஓர் ஈடுபாட்டுடன் முழுவதும் படித்து ரஸித்துக் கூறியுள்ள கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள,
   கோபாலகிருஷ்ணன்


   நீக்கு
 78. அன்பின் வைகோ- அழுகுணி ஆட்டமா ஆடுறீங்க - எல்லோருடைய மறுமொழிகளுக்கும் பதில் சொல்லி இருக்கீங்க - ஏன் என்னோடதுக்கு மட்டும் பதில் சொல்லல - ஓர வஞ்சனை - நான் ஒங்களோட டூ வுடறேன் - இனிமே பேச மாட்டேன் சரியா ........என்க்கு எனக்கு என் மறுமொழிக்குப் பதில் வேணும் - ஆமா சொல்லிப் புட்டேன் - அவ்ளோ தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 79. cheena (சீனா)December 8, 2012 4:39 PM

  அன்புள்ள சீனா ஐயா அவர்களே,

  வாருங்கள், வணக்கம். வணக்கம், வணக்கம்.

  மீண்டும் வருகைக்கு என் நன்றிகள்.

  //அன்பின் வைகோ- அழுகுணி ஆட்டமா ஆடுறீங்க - எல்லோருடைய மறுமொழிகளுக்கும் பதில் சொல்லி இருக்கீங்க - ஏன் என்னோடதுக்கு மட்டும் பதில் சொல்லல - ஓர வஞ்சனை - நான் ஒங்களோட டூ வுடறேன் - இனிமே பேச மாட்டேன் சரியா ........//

  ”அவரா சொன்னார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?

  இ ரு க் கா து !

  அப்படி எதுவும் நடக்காது.

  நடக்கவும் கூடாதூஊஊஊ !!

  நம்ப முடியவில்லைஐஐஐஐஐஐஐஐ

  இல்லை ..... இல்லை .... இல்லை!!!!!!”


  தொடரும்>>>>>>>>

  பதிலளிநீக்கு
 80. VGK to சீனா ஐயா [2]

  ஐயா, 2011 ஆண்டு நான் மொத்தம் 200 பதிவுகள் கொடுத்திருந்தேன்.

  அந்த ஆண்டு [2011] கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் ஏதும் எனக்குத்தெரியாது, ஐயா.

  பதிவினை தட்டச்சு செய்வேன். வெளியிடுவேன். அத்தோடு சரி.

  என் பழைய பதிவுகளுக்கு யார் யார் வருகை தந்து புதிதாக கருத்து எழுதியுள்ளார்கள் என குறுக்கு வழியில் பார்க்க எனக்குத் தெரியாது.

  ப்ளாக்கர் டேஷ் போர்டில் கருத்துரைகள் என்பதை க்ளிக் செய்து பார்க்கவும் எனக்குத் தெரியாது.

  எனக்கு நேரம் கிடைக்கும் போது, என் ஒவ்வொரு பழைய பதிவுகளுக்காகச் சென்று, புதிய கருத்துரைகள் ஏதும் வந்துள்ளனவா என அடிக்கடி பார்த்து மகிழ்வேன்.

  இதெல்லாம் எவ்வளவு முட்டாள் தனம் என்பதை சமீபத்தில் தான் நான் 2012 மே மாதக்கடைசியில் தான் தெரிந்துகொண்டேன்.

  என்னுடைய எந்த பழைய பதிவுகளுக்கு யார் பின்னூட்டம் எழுதினாலும் அது எனக்கு மெயில் மூலம் தகவலாக வருமாறு, சமீபத்தில் என் வீட்டுக்கு வருகை தந்த, நம் வெங்கட் நாகராஜ் ஜி அவர்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்து உதவினார்.

  அதுபோல நான் பிறர் பதிவுகளுக்கு எழுதும் பின்னூட்டங்களுக்கு அவர்கள் ஏதாவது பதில் எழுதியுள்ளார்களா என 31.05.2012 வரை எனக்குப் பார்க்கத் தெரியாமலேயே இருந்து வந்தது.

  ஒவ்வொரு முறையும் அவர்களின் பதிவுகளுக்கு நான் மீண்டும் மீண்டும் சென்று, என் பின்னூட்டம் வெளியிடப்பட்டுள்ளதா? அதற்கு ஏதேனும் மறுமொழி கூறியுள்ளார்களா? என நான் போய் பார்த்துவிட்டு வருவேன்.

  பிறகு “இது இமாவின் உலகம்” என்ற வளைத்தளத்தில் எழுதிவரும் என் அன்புச்சகோதரி “இமா” தான், நான் பிறருக்கு பின்னூட்டம் இட்டு அனுப்புவதற்கு முன்பாக, பின்னூட்டப்பெட்டி அருகே உள்ள SUBSCRIBE என்ற எழுத்துக்களை க்ளிக் செய்து விட்டு அனுப்ப வேண்டும், என எனக்கு மெயில் மூலம் பாடமாக நடத்தி சொல்லிக்கொடுத்தார்கள்.
  [அன்புள்ள அந்த இமா டீச்சர் வாழ்க! ;))))) ]

  அவர்கள் [இமா] சொன்னபடி 01 06 2012 முதல் நான் அப்படியே செய்து வருவதால் பிரச்சனை ஏதும் இல்லாமல், பிறர் என் பின்னூட்டங்களுக்குத் தந்துவரும் பதில்களும் தினமும் எனக்கு மெயில் மூலம் தகவலாக வந்து விடுகின்றன.

  இவ்வளவு சுலபமான வேலைகளைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் 18 மாதங்களை வீணாக்கி, தினமும் கஷ்டப்பட்டுள்ளோமே, என்பதை இப்போது நினைத்தாலும் எனக்கு வெட்கத்தில் அழுகையாக வருகிறது, ஐயா.

  நான் இமாவிடம் கற்றுக்கொண்ட இந்த புதிய விஷயங்களை திருமதி ரஞ்ஜினி நாராயணன் + மஞ்சுபாஷிணி ஆகியோருக்கு நான் மெயில் மூலம் கற்றுக்கொடுத்ததில் அவர்களும் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.

  தொடரும்>>>>>>

  பதிலளிநீக்கு
 81. VGK to சீனா ஐயா [3]

  //எனக்கு .. எனக்கு என் மறுமொழிக்குப் பதில் வேணும் - ஆமா சொல்லிப் புட்டேன் - அவ்ளோ தான்.//

  இதுபோன்ற கணினி பற்றிய முழு தொழில்நுட்பங்களும் அறியாதவனாக நீண்ட நாட்கள் இருந்து விட்டதால் உங்களுக்கும், திரு. A R ராஜகோபாலன் அவர்களுக்கும் மட்டும், இந்தப்பதிவுக்கு, நான் பதிலளிக்க தவறியுள்ளதை இப்போது தான் கண்டுபிடித்தேன் ஐயா.

  உங்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும் இன்று தான் பதில் அளித்துள்ளேன், ஐயா.

  தாங்கள் உரிமையுடன் என்னிடம் இந்த பதிலைக் கேட்டு வாங்கியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தான், ஐயா.

  //நான் ஒங்களோட டூ வுடறேன் - இனிமே பேச மாட்டேன் சரியா ........//

  நீங்கள் என்னுடன் ”டூ - காய்” விட்டாலும் நான் உங்களுடன் எப்போதுமே “சேத்தி - பழம்” தான் ஐயா.

  நீங்கள் என்னுடன் அவசியம் பேசத்தான் வேண்டும் ஐயா.

  இதன் மூலம் உங்களைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன் ஐயா,

  மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள் .. ஐயா.

  மிகவும் பழகியவர்களும் பரஸ்பர நலம் விரும்பிகளும் ஏதோ ஒருசில தேவையில்லாத காரணங்களால் பாராமுகமாக இருந்தால் என்னால் அதைத் தாங்கவே முடிவதில்லை, ஐயா.

  அப்புறம் நான் நிச்சயமாக அழுதுவிடுவேன், ஐயா.

  எனக்கு எப்போதும் குழந்தை மனது ஐயா.

  மற்றவர்கள் இப்போது புரிந்துகொள்ளாவிட்டாலும் நீங்களாவது தயவுசெய்து இதை இப்போது புரிந்துகொள்ளுங்கள், ஐயா.

  பாசம், பிரியம், அன்பு, ஆதரவு, நல்லெண்ணம் போன்றவை ஒருவர் விஷயத்தில் நம் மனதில் ஆழமாக வேறூன்றி பதிந்து இருக்கும்போது தான்,

  நாம் உரிமை எடுத்துக்கொள்வோம்,
  நாம் கோபப்படுவோம்,
  நாம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம்,
  நாம் திட்டுவோம்,
  நாம் திருத்த முயற்சிப்போம்.

  தவறுசெய்யும் ஒரு குழந்தையை அதன் தாய் தந்தை கண்டித்து நல்வழிப்படுத்துவதுபோலத்தான் இதுவும்.

  இவற்றின் அடிப்படையில் நல்லெண்ணங்களும், நட்பும், பாசமும், அன்பும் பிரியமும் ஆதரவும் மட்டுமே இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டால் என்றும் நல்லது.

  அதனால் தங்களின் உரிமையுடன் கூடிய இந்தக்கோபத்தினை நான் மனதார வரவேற்று மகிழ்கிறேன், ஐயா.

  //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  நல் வாழ்த்துகளுக்கும் நட்புக்கும் என் நன்றிகள், ஐயா.

  என்றும் பிரியமுள்ள
  VGK

  பதிலளிநீக்கு
 82. அன்பின் வை.கோ

  நம்க்குள் இல்லாத புரிதலுணர்வா ? ஒருவரை ஒருவர் நாம் புரிந்து கொண்ட மாதிரி வேறு யாரும் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். உரிமை உரிமையில் எழுதப்பட்ட விளையாட்டுக் கோபத்துடன் எழுதப்பட்ட மறு மொழி அது. மனதில் களிப்புடன் - முகத்தில் சிரிப்புடன் எழுதப்பட்ட மறுமொழி அது - ஏறத்தாழ நமது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் ஒரே ஆண்டில் - சில மாத வித்தியாசங்களில் நடந்திருக்கிறது. நம்க்குள் பல ஒற்றுமைகள் உண்டு. அன்புடன் பாசத்துடன் செல்லக் கோபத்தின்னைக் காட்டினேன் அவ்வளவு தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா)December 9, 2012 5:23 PM

   //அன்பின் வை.கோ

   நமக்குள் இல்லாத புரிதலுணர்வா ? ஒருவரை ஒருவர் நாம் புரிந்து கொண்ட மாதிரி வேறு யாரும் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். உரிமை உரிமையில் எழுதப்பட்ட விளையாட்டுக் கோபத்துடன் எழுதப்பட்ட மறு மொழி அது.

   மனதில் களிப்புடன் - முகத்தில் சிரிப்புடன் எழுதப்பட்ட மறுமொழி அது - ஏறத்தாழ நமது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் ஒரே ஆண்டில் - சில மாத வித்தியாசங்களில் நடந்திருக்கிறது. நம்க்குள் பல ஒற்றுமைகள் உண்டு.

   அன்புடன் பாசத்துடன் செல்லக் கோபத்தின்னைக் காட்டினேன் அவ்வளவு தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   மிகவும் சந்தோஷம் ஐயா.

   என்னுடன் இன்று பாராமுகமாக இருக்கும் வேறு ஒருசிலரும் என்னைப்பற்றியும், எனக்கு அவர்கள் மேல் உள்ள,என் ஆழ்ந்த அன்பைப்பற்றியும் புரிந்துகொண்டு, இதுபோல அவர்களாகவே என்னிடம் பேச வருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன், ஐயா.

   தங்களின் புரிதலுக்கும் என்னுடன் பாசத்துடன் தாங்கள் கொஞ்சம் விளையாடியதற்கும் மிக்க நன்றி ஐயா.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 83. அன்பின் வைகோ - எனது மறுமொழி நூறாவது மறுமொழி என நினைக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா)December 9, 2012 5:25 PM
   //அன்பின் வைகோ - எனது மறுமொழி நூறாவது மறுமொழி என நினைக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   ஆம் ஐயா ! ;)))))

   இந்த என் பதிவினில் தங்களின் மறுமொழி நூறாவதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பாகவும், எனக்கு மன மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளது.

   தாங்களும் நூறாண்டு காலத்திற்கு மேல் நோய் நொடி ஏதும் இன்றி சந்தோஷமாக வாழப் பிரார்த்திக்கிறேன்.

   என்றும் பிரியமுள்ள தங்கள்,
   VGK

   நீக்கு
 84. இந்த இரண்டாவது மருமகளுக்கு என் தாயாரின் பெயரே அமைந்துள்ளது. அவள் பொறுமையில் பூமா தேவி. என் தாயார் போன்றும், என் மனைவி போன்றும் மிகவும் ருசியாக சமைப்பதில் மிகச்சிறந்து விளங்குகிறாள். எங்களின் பசியறிந்து, ருசியறிந்து வேளாவேளைக்கு சமைத்து பரிமாறும் அவளே எங்களுக்கு இன்றைய அன்னபூரணி. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டதும் அவளை எங்களின் வாய் பாராட்டும்!; வயிறு வாழ்த்தும்!!//

  இப்படி அன்பாய் பாராட்டு கிடைக்க உங்கள் மருமகள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

  நன்றாக வாழ்த்துங்கள்.

  உங்கள் விருப்பு, வெறுப்புகளை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

  சமையல் பாத்திரங்கள் பேர் அழகாய் சொல்கிறீர்கள்.
  உங்கள் சமையல் அனுபவங்கள் ரசித்து சிரிக்கும் படி இருந்தாலும் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு!
  என் கணவரும் சொல்வார்கள், சமைப்பதை விட பாத்திரம் கழுவுவதுமிக கடினம் என்று. சமையல் பாத்திரங்களை ஒழித்துப் போடுவது என்று.

  உங்கள் பதிவு அருமை.
  அடிக்கடி எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 85. கோமதி அரசுJanuary 19, 2013 at 3:37 AM

  *****இந்த இரண்டாவது மருமகளுக்கு என் தாயாரின் பெயரே அமைந்துள்ளது. அவள் பொறுமையில் பூமா தேவி. என் தாயார் போன்றும், என் மனைவி போன்றும் மிகவும் ருசியாக சமைப்பதில் மிகச்சிறந்து விளங்குகிறாள். எங்களின் பசியறிந்து, ருசியறிந்து வேளாவேளைக்கு சமைத்து பரிமாறும் அவளே எங்களுக்கு இன்றைய அன்னபூரணி. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டதும் அவளை எங்களின் வாய் பாராட்டும்!; வயிறு வாழ்த்தும்!!*****

  //இப்படி அன்பாய் பாராட்டு கிடைக்க உங்கள் மருமகள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

  நன்றாக வாழ்த்துங்கள்.//

  ஆமாம். ஏதோ நாங்கள் செய்துள்ள ஓர் புண்ணியம், வயதான காலத்தில் இன்றுவரை ஏதோ வயிற்றுக்கு பசிக்கும், ருசிக்கும் சேர்ந்தே கிடைத்து வருகிறது. நிச்சயமாக வாழ்த்தித்தான் வருகிறோம்.

  மருமகளாக நினைக்காமல் மகளாகவே நினைத்து அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து நிறைய செல்லமும், சுதந்திரமும் கொடுத்துள்ளோம்.

  //உங்கள் விருப்பு, வெறுப்புகளை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.//

  நன்றி.

  //சமையல் பாத்திரங்கள் பேர் அழகாய் சொல்கிறீர்கள். //

  இவற்றில் பல பாத்திரங்கள் பலநாட்கள் எங்கள் வீட்டுப் பரணையிலேயே இருந்தன.

  சமீபத்தில் தான் வேறு வழிதெரியாமல் அப்புறப்படுத்த வேண்டியதாகி விட்டது.

  //உங்கள் சமையல் அனுபவங்கள் ரசித்து சிரிக்கும் படி இருந்தாலும் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு!//

  கஷ்டப்படும் போது தான் அனுபவங்களே கிடைக்கின்றன. சுகமான சுமைகள் தானே அவையும்.

  //என் கணவரும் சொல்வார்கள், சமைப்பதை விட பாத்திரம் கழுவுவதுமிக கடினம் என்று. சமையல் பாத்திரங்களை ஒழித்துப் போடுவது என்று.//

  ஆமாம். பெரிய தொல்லை இது. இப்போது எல்லாவற்றிற்கும் தனித்தனியே ஆள் போட்டாச்சு.

  //உங்கள் பதிவு அருமை.//

  மிக்க நன்றி.

  //அடிக்கடி எழுதுங்கள்.//

  முயற்சிக்கிறேன் மேடம்.

  பிரியமுள்ள
  கோபு

  பதிலளிநீக்கு
 86. மிக அருமையான பதிவு. உங்கள் மருமகளும் உங்கள் இருவரையும் தாயைப் போல் கவனித்துக் கொள்வதில் மனம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்று போல் என்றும் உண்டு மகிழ்ந்து உங்கள் மூதாதையரைப் போல் நூறாண்டுக்கும் மேல் மகிழ்வோடு வாழ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam January 19, 2015 at 4:54 PM

   வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //மிக அருமையான பதிவு.//

   சந்தோஷம்.

   //உங்கள் மருமகளும் உங்கள் இருவரையும் தாயைப் போல் கவனித்துக் கொள்வதில் மனம் மகிழ்ச்சியாய் இருக்கிறது.//

   ஏதோ அவள் கையால் அருமையாகப் பொறுமையாகச் சமைப்பதை சாப்பிட எங்களுக்கும், எங்களை மாமனார் மாமியாராக அடைய [பெற்ற அப்பா+அம்மா இருவருமே இல்லாத அவளுக்கும்] கடவுள் அனுக்கிரஹம் செய்துள்ளார் என நினைத்து மகிழ்கிறோம். ஏதோ இன்றுவரை இன்பமாகவே எங்கள் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை எப்படியோ நாம் அறியோம்.

   //இன்று போல் என்றும் உண்டு மகிழ்ந்து உங்கள் மூதாதையரைப் போல் நூறாண்டுக்கும் மேல் மகிழ்வோடு வாழ வாழ்த்துகள்.//

   ஏதோ இருக்கும்வரை வாய்க்கு ருசியாக சாப்பிடணும் என்று ஓர் சபலம் உள்ளது. ஆனால் டாக்டர்கள் OVER WEIGHT, SUGAR, BP எனச் சொல்லிச்சொல்லி மிகவும் பயமுறுத்தி வருகிறார்கள். அதிலேயே எனக்கு TENSION ஆகி BP + SUGAR LEVEL ஏறிப்போய் விடுகிறது. :) என்ன செய்ய?

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 87. ஆஹா!! அந்தக் காலத்துப் பாத்திரங்கள்! ஆமாம் சார் எங்கள் வீட்டிலும் நானே கூட கரி அடுப்பு, கும்முட்டி அடுப்பு, கும்மிட்டி அடுப்பில் சப்பாத்தி சுட்டு, அப்பளம் சுட்டு..பழகம் உண்டு. மண் அடுப்பைச் சாணம் இட்டு, மண் அடுப்பு மட்டுமில்லை, தரையிலேயே கூட குழி வெட்டி மூன்று குமிழ் இருக்கும் அடுப்பு கூட வீட்டில் உண்டு.விறகு, கரி என்றும்,அம்மி, உரல், அரிசி பொடிக்கும் இயந்திரம், சுளகு, இரவுமுழுவந்து நெல் புழுக்கி, காய வைத்து மில்லில் கொடுத்து உமி நீக்கி அரிசியாக்கி...பின்னர், வயலில் வேலை செய்து, உளுந்து பறித்து, அப்புறம் குளத்தங் கரையில், ஆற்றங்கரையில் துணி துவைத்து, பாத்திரம் தேய்த்து...இப்படி நிறைய சிறு வயதில் செய்ததுண்டு. கிராமத்தில். அரைப்பது எல்லாம் அம்மி, உரல்...பின்னர் கொத்தமல்லித் தொக்கு கூட உரலில் இட்டு தண்ணீர் சேர்க்காமல் உலக்கையால் இடிப்பதுண்டு. கிராமாத்தில் டச் இருந்த வரை, அம்மா இருந்த வரை ஊருக்குச் சென்று அங்கு நானும் அம்மாவும் இடித்து இங்கு எடுத்துக் கொண்டு வருவேன். இங்கு ஃப்ளாட் கல்சர். அதனால் இதெல்லாம் சாத்தியப்படவில்லை. உங்கள் பல விஷயங்கள் அதை நினைவூட்டின. அடுப்பூதினாலும், எங்களை எங்கள் பாட்டி நன்றாகப் படித்துத் தன் காலில் நிற்க வேண்டும் என்று எங்க்ளை எல்லாம் படிக்க வைத்தார். பெரிய குடும்பம்...இப்படி நல்ல நினைவுகள் மீண்டும் சிலிர்த்தென்ழுந்தது....

  உங்கள் பதிவுகள் என்னையும் இப்போது பல வற்றை எழுதலாமே என்று தோன்றுகின்றது. எங்கள் தளத்தில் கூட நாங்கள் கிராமத்தில் இருந்த போது சேவை பிழிவது பற்றி அது ஒரு வைபவமாக இருக்கும் என்று சொல்லி சிறிது நகைச் சுவையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி இருக்கின்றேன் சார்....

  எனக்கும் சாப்பாடு விஷயத்தில் எல்லாம் மிகவும் ரசித்துச் சாப்பிடுவேன். இப்போது எல்லாம் குறைந்து விட்டது சில தொந்தரவுகளினால். இறுதியில் மருத்துவ உலகிற்கு நீங்கள் ஒரு வேண்டு கோள் வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள்...ஆஹா அப்படி இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது....நகைச்சுவை என்றாலும் மிகவும் சிந்திக்க வைத்த ஒன்று சார்.....மிகவும் ரசித்தோம் பதிவை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu April 3, 2015 at 12:07 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆஹா!! அந்தக் காலத்துப் பாத்திரங்கள்! ......................
   ...................... நகைச்சுவை என்றாலும் மிகவும் சிந்திக்க வைத்த ஒன்று சார்.....மிகவும் ரசித்தோம் பதிவை...//

   பதிவினை முழுவதுமாக ரஸித்துப்படித்து விரிவான கருத்துக்களும் கூறி, தங்களின் இதுபோன்ற அனுபவங்களையும் எடுத்துச்சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 88. அன்பின் வை.கோ

  நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களீன் பதிவினைப் படித்து இரசித்து நூற்றுக்கும் பேற்பட்ட மறுமொழிகளையும் அவற்றிக்கான தங்களீன் பதில்மொழிகளையும் படித்து மகிழ்ந்தேன்.

  இனி மேல் தங்களீன் பதிவுகளைப் படிக்கத் துவங்குகிறேன். இரசித்து நீண்ட மறு மொழிகள் இடுகிறேன். நட்பு தொடரட்டும்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) April 5, 2015 at 6:56 AM

   வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம்.

   //அன்பின் வை.கோ, நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களீன் பதிவினைப் படித்து இரசித்து நூற்றுக்கும் பேற்பட்ட மறுமொழிகளையும் அவற்றிக்கான தங்களீன் பதில்மொழிகளையும் படித்து மகிழ்ந்தேன். //

   மிக்க மகிழ்ச்சி ஐயா, இந்தப்பதிவுக்குத் தங்களின் மீண்டும் மீண்டும் வருகை மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //இனி மேல் தங்களீன் பதிவுகளைப் படிக்கத் துவங்குகிறேன். இரசித்து நீண்ட மறு மொழிகள் இடுகிறேன். நட்பு தொடரட்டும். நல்வாழ்த்துகள்
   நட்புடன் சீனா//

   தங்களின் அன்பான வருகைக்கும், நட்பு தொடர நல்வாழ்த்துகளுக்கும், மேற்கொண்டு பல பதிவுகளைப் படித்து நீண்ட கருத்துகள் கொடுக்கப்போவதாகச் சொல்வதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

   http://gopu1949.blogspot.in/2015/03/120404.html சமீபத்திய இந்த என் பதிவினில், தங்களைப் போன்றோருக்காகவே ஓர் மிகச்சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஐயா. தயவுசெய்து கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 89. //குமுட்டி அடுப்பு, கரி அடுப்பு, கோட்டை அடுப்பு, மண் அடுப்பு, வெறும் செங்கல்கள் மட்டும் அடுக்கிய தற்காலிக அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், தற்போதய கேஸ் அடுப்பு என அனைத்திலும், தன் வாழ்நாளில் சமையல் செய்தவர்கள். //

  இத்தனை அடுப்புகளையும் பார்தவர்கள் இன்று யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக அந்த மரத்தூள் அடுப்பைப் பற்றி கேள்விப்பட்டுக் கூட இருக்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 90. எவ்வலவு விதமான பெயர் கூட தெரியாத பாத்திரங்களின் லிஸ்ட், எங்க வீட்டுப் பரணில் ஒரு சாக்கு மூட்டை நிறைய பித்தளை, வெங்கல, செம்பு, ஈயப்பாத்திரங்கள்கட்டி வச்சிருக்கோம். பெரியவங்க யூஸ் பண்ணினதை விலைக்குப் போட மனசு வரலை.

  பதிலளிநீக்கு
 91. //நான் என் தாயின் கருவில் உருவானது முதல், என் தாய்க்கு 87 வயதாகி, அவர்கள் காலமானது வரை [1949-1997], நான் என் அம்மாவை விட்டு என்றும் பிரிந்தது இல்லை. //

  என்ன ஒரு குடுப்பினை, அம்மாவுக்கும், பிள்ளைக்கும்.

  அட ராமா! படிக்கப் படிக்க கண்ண கட்டுதே.

  உங்களுக்கும், எனக்கும் நிறைய ஒற்றுமை. (எனக்கு மட்டும் இல்ல, எங்காத்துக்காரருக்கும், உங்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு).

  //காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை. //

  இந்த PARA வை படிச்சதும் ஆடி, அசந்து போயிட்டேன். அப்படியே எழுத்துக்கு எழுத்து அவருக்கும் இதே கொள்கை.

  கொஞ்சமா சாப்பிடணும், ஆனா ருசியா சாப்பிடணும். நிறைய விஷயங்கள் எங்காத்துல நடக்கற மாதிரியே இருக்கு.

  நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட சம காலத்துல பிறந்து வளர்ந்ததால நிறைய விஷயங்கள் ஒத்துப் போறது. ஆனா நான் முழுக்க, முழுக்க சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் சில விஷயங்கள் மிஸ்ஸிங்.

  கூடவே படிச்ச என் மருமகள் ,’ அம்மா, படிக்கும் போதே பசி வந்துடுத்து’ன்னு சொல்லிட்டுப் போறா’. அதான் நீங்க உங்களுக்கு பிடிச்சதெல்லாம் போட்டிருந்தேளே அதைப் படிச்சுட்டுத்தான்.

  இன்னும் எழுதிண்டே போகலாம். ஆனா இந்தப் பின்னூட்டம் உங்க பதிவை விட நீளமாகிடும். அதனால அடக்கி வாசிக்கறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya May 17, 2015 at 10:12 PM

   //உங்களுக்கும், எனக்கும் நிறைய ஒற்றுமை. (எனக்கு மட்டும் இல்ல, எங்காத்துக்காரருக்கும், உங்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு).//

   கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   //இந்த PARA வை படிச்சதும் ஆடி, அசந்து போயிட்டேன். அப்படியே எழுத்துக்கு எழுத்து அவருக்கும் இதே கொள்கை. கொஞ்சமா சாப்பிடணும், ஆனா ருசியா சாப்பிடணும். நிறைய விஷயங்கள் எங்காத்துல நடக்கற மாதிரியே இருக்கு. //

   மிக்க மகிழ்ச்சி, ஜயா.

   //நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட சம காலத்துல பிறந்து வளர்ந்ததால நிறைய விஷயங்கள் ஒத்துப் போறது. //

   அதே அதே .... சபாபதே !

   //கூடவே படிச்ச என் மருமகள் ,’ அம்மா, படிக்கும் போதே பசி வந்துடுத்து’ன்னு சொல்லிட்டுப் போறா’. அதான் நீங்க உங்களுக்கு பிடிச்சதெல்லாம் போட்டிருந்தேளே அதைப் படிச்சுட்டுத்தான்.//

   :)))) நல்ல மாமியாரை அடையக் கொடுத்து வெச்ச மருமகள். உரிமையுடன் கேட்கிறாள். :))))

   //இன்னும் எழுதிண்டே போகலாம். ஆனா இந்தப் பின்னூட்டம் உங்க பதிவை விட நீளமாகிடும். அதனால அடக்கி வாசிக்கறேன்.//

   ஓக்கே, ஓக்கே ..... புரிந்துகொண்டேன். மிக்க நன்றி. :)

   நீக்கு
 92. குமுட்டி அடுப்பு, கரி அடுப்பு, கோட்டை அடுப்பு, மண் அடுப்பு, வெறும் செங்கல்கள் மட்டும் அடுக்கிய தற்காலிக அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், தற்போதய கேஸ் அடுப்பு என அனைத்திலும், தன் வாழ்நாளில் சமையல் செய்தவர்கள்.

  ...அஹா எத்தனை வித அடுப்புகள். என் அம்மாவும் இதை எல்லாம் உபயோகித்திருக்கிறார்கள். !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM

   வாங்கோ அன்புக்குரிய ஹனி மேடம், வணக்கம்

   **குமுட்டி அடுப்பு, கரி அடுப்பு, கோட்டை அடுப்பு, மண் அடுப்பு, வெறும் செங்கல்கள் மட்டும் அடுக்கிய தற்காலிக அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு, திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், தற்போதய கேஸ் அடுப்பு என அனைத்திலும், தன் வாழ்நாளில் சமையல் செய்தவர்கள். **

   //...அஹா எத்தனை வித அடுப்புகள். என் அம்மாவும் இதை எல்லாம் உபயோகித்திருக்கிறார்கள். !!!//

   :) சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி ஒரு 50-60 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் செய்தவர்கள் எல்லோருமே இதனையெல்லாம் உபயோகித்திருப்பார்கள்தான். :)

   நீக்கு
 93. [என் பள்ளிப்படிப்பு முடியும் வரை, என் வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது. சிம்னி, அரிக்கேன் லைட் (லாந்தர் விளக்கு), அகல் விளக்கு முதலியன மட்டும் தான். நான் படித்ததெல்லாம் பெரும்பாலும் தெருவிளக்கில் தான்.]

  ...காடா விளக்கை விட்டுட்டீங்களே சார் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM

   **[என் பள்ளிப்படிப்பு முடியும் வரை, என் வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது. சிம்னி, அரிக்கேன் லைட் (லாந்தர் விளக்கு), அகல் விளக்கு முதலியன மட்டும் தான். நான் படித்ததெல்லாம் பெரும்பாலும் தெருவிளக்கில் தான்.]**

   // ...காடா விளக்கை விட்டுட்டீங்களே சார் :) //

   ஆமாம். இப்போதுதான் அந்த விளக்கு மிகவும் மங்கலாக என் நினைவுக்கு வருகிறது :)

   நீக்கு
 94. தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு,ஈயச்சொம்பு, பருப்புகுண்டு, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள் என ஆரம்பித்து எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், பிரஷர் குக்கர், பால் குக்கர் என அனைத்தையும் தன் வாழ்நாளில் கையாண்டு பார்த்தவர்கள்.

  உண்மைதான். அப்போது உள்ளவர்கள் விதம் விதமா பாத்திரங்களைக் கையாளத் தெரிந்தவர்கள் அவர்கள். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:09 PM

   **தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு,ஈயச்சொம்பு, பருப்புகுண்டு, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள் என ஆரம்பித்து எவர்சில்வர் பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், பிரஷர் குக்கர், பால் குக்கர் என அனைத்தையும் தன் வாழ்நாளில் கையாண்டு பார்த்தவர்கள்.**

   //உண்மைதான். அப்போது உள்ளவர்கள் விதம் விதமா பாத்திரங்களைக் கையாளத் தெரிந்தவர்கள் அவர்கள். :)//

   மிகவும் சந்தோஷம், மேடம். :)

   நீக்கு
 95. இந்த மாக்கல் கெட்டிச் சட்டி காரைக்குடியிலும் உண்டு. அதில் வத்தக்குழமை சுண்ட வைப்பார்கள் பாருங்கள் செம டேஸ்ட். :)

  குளுமையான தண்ணீர் வைக்க குளுதாடி என்று ஒன்று உண்டு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM

   //இந்த மாக்கல் கெட்டிச் சட்டி காரைக்குடியிலும் உண்டு. அதில் வத்தக்குழம்பைச் சுண்ட வைப்பார்கள் பாருங்கள் செம டேஸ்ட். :)//

   ஆமாம் ..... கச்சட்டியில் வற்றல்குழம்பு என்றால் டேஸ்டோ டேஸ்ட் தான். நானும் கச்சட்டி நிறைய பழைய சோற்றில் தயிர் விட்டு, நன்கு பிசைந்து, அதில் வேறொரு கச்சட்டியில் சுண்டக்காய்ச்சிய வற்றல்குழம்பைத் தொட்டுக்கொண்டு, சாப்பிட்டுள்ளேன். தேவாமிர்தமாக இருந்தன ..... அந்த நாட்களில் :)

   //குளுமையான தண்ணீர் வைக்க குளுதாடி என்று ஒன்று உண்டு :)//

   கேள்விப்பட்டுள்ளேன். பார்த்த ஞாபகம் இல்லை. :)

   நீக்கு

 96. மிளகாய் மல்லி ஊறுகாய்கள் உப்புப் புளி வைக்க பீங்கான் ஜாடிகள் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM

   //மிளகாய் மல்லி ஊறுகாய்கள் உப்புப் புளி வைக்க பீங்கான் ஜாடிகள் உண்டு.//

   ஆமாம். என் வீட்டில் அவை பலநாட்கள், பல வடிவங்களில் பல பொருட்களுடன் இருந்து வந்தன. பீங்கான் ஜாடிகளில் நாம் வைக்கும் பொருட்கள் உடனடியாகக் கெடாமல் கொஞ்சநாட்கள் நீடிக்கும். அப்போதெல்லாம் குளிர் சாதனப்பெட்டிகள் ஏதும் கிடையாதே ! :)

   நீக்கு

 97. அம்மிக்குழவி, ஆட்டுக்கல்குழவி, அரிசி பொடியாக்கும் இயந்திரம், உரல் உலக்கை என ஆரம்பித்த அவள் வாழ்க்கை, நான் என் 20 வயதில் உத்யோகத்திற்குப்போன பின்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வீட்டிலேயே டெலிபோன் தொடர்பு வரை அனைத்தையும் ஆசைதீர என் தாய் உபயோகிக்க, ஏதுவானது.

  அஹா அம்மாவுக்கு அனைத்தும் வாங்கிகொடுத்த நல்ல பிள்ளை நீங்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM

   **அம்மிக்குழவி, ஆட்டுக்கல்குழவி, அரிசி பொடியாக்கும் இயந்திரம், உரல் உலக்கை என ஆரம்பித்த அவள் வாழ்க்கை, நான் என் 20 வயதில் உத்யோகத்திற்குப்போன பின்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வீட்டிலேயே டெலிபோன் தொடர்பு வரை அனைத்தையும் ஆசைதீர என் தாய் உபயோகிக்க, ஏதுவானது.**

   //அஹா அம்மாவுக்கு அனைத்தும் வாங்கிகொடுத்த நல்ல பிள்ளை நீங்கள் :)//

   :) மிக்க நன்றி. என் அம்மாவே நேரில் வந்து என்னிடம் இப்போது சொன்னதுபோல எனக்கு மிக்க மகிழ்ச்சி :)

   நீக்கு

 98. அம்மிக்குழவி, ஆட்டுக்கல்குழவி, அரிசி பொடியாக்கும் இயந்திரம், உரல் உலக்கை என ஆரம்பித்த அவள் வாழ்க்கை, நான் என் 20 வயதில் உத்யோகத்திற்குப்போன பின்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வீட்டிலேயே டெலிபோன் தொடர்பு வரை அனைத்தையும் ஆசைதீர என் தாய் உபயோகிக்க, ஏதுவானது.

  அஹா அம்மாவுக்கு அனைத்தும் வாங்கிகொடுத்த நல்ல பிள்ளை நீங்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) இன்பத்’தேன்’ வந்து பாயுது என் காதினிலே ..... மீண்டும் என் நன்றிகள் :)

   நீக்கு

 99. இந்த ஈ.குக், எலெக்ட்ரிக் அடுப்பு, மைக்ரோ ஓவன், செல்போன், எல்லா ரூமுக்கும் ஏ.ஸி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட், லாப்டாப் போன்ற மிக நவீன வசதிகளைத்தான் என்னால் அவர்களுக்கு அன்று செய்துதர முடியாமல் போனது. இப்போதும் நினைத்தாலும், அது ஒரு குறையாகவே உள்ளது.

  பரவாயில்லை அது அவர்களுக்குத் தேவையுமில்லை விடுங்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:10 PM

   **இந்த ஈ.குக், எலெக்ட்ரிக் அடுப்பு, மைக்ரோ ஓவன், செல்போன், எல்லா ரூமுக்கும் ஏ.ஸி, கம்ப்யூட்டர், இண்டெர்நெட், லாப்டாப் போன்ற மிக நவீன வசதிகளைத்தான் என்னால் அவர்களுக்கு அன்று செய்துதர முடியாமல் போனது. இப்போதும் நினைத்தாலும், அது ஒரு குறையாகவே உள்ளது.**

   //பரவாயில்லை அது அவர்களுக்குத் தேவையுமில்லை விடுங்கள் :)//

   சரி. ஓக்கே. மிக்க நன்றிகள்.

   இப்போது நாம் அடிக்கும் வெயிலுக்கு ஏ.ஸி. ரூமில் அமர்ந்து ஜில்லுன்னு ஆனந்தமாக இருக்கும்போது, அன்று வெயிலிலும் வேர்வையிலும் கஷ்டப்பட்ட நம் அப்பா அம்மாவை ஏனோ நினைக்காமல் இருக்க முடியவில்லை, என்னால்.

   நீக்கு

 100. பிறகு 22 வயதில் எனக்குத்திருமணம் ஆகி 18 வயதே ஆன மனைவி வந்து சேர்ந்தாள். வரும்போது சமையல் செய்வது பற்றி அதிக அனுபவம் இல்லாதவளாகவே இருந்தும், என் அம்மாவிடமிருந்து ஆசைஆசையாக அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டு, மிகவும் ருசியாக சமையல் செய்து, சுடச்சுட பரிமாறி என்னையும், என் பெற்றோர்களையும் தனது அன்பு வலையில் சிக்க வைத்து, அசத்தி விட்டாள்.

  அருமை அருமை !!! :) :) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM

   **பிறகு 22 வயதில் எனக்குத்திருமணம் ஆகி 18 வயதே ஆன மனைவி வந்து சேர்ந்தாள். வரும்போது சமையல் செய்வது பற்றி அதிக அனுபவம் இல்லாதவளாகவே இருந்தும், என் அம்மாவிடமிருந்து ஆசைஆசையாக அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டு, மிகவும் ருசியாக சமையல் செய்து, சுடச்சுட பரிமாறி என்னையும், என் பெற்றோர்களையும் தனது அன்பு வலையில் சிக்க வைத்து, அசத்தி விட்டாள். **

   //அருமை அருமை !!! :) :) :) //

   தங்களின் அபூர்வமான வருகைக்கும், அருமை அருமையான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

   So Sweet Days ! :) :) :) :) :)

   நீக்கு
 101. அதனால் கொஞ்சமாக சாம்பாருடன் கூடிய கரண்டியை நன்கு உயரமாக பிடித்துக்கொண்டு,வாயை நோக்கி நாலுசொட்டு விழுவது போல தலையை பின்புறமாக சாய்த்தபடி, கரண்டியை நான் கவிழ்க்க, சற்றே குறி தவறி, வாய்க்குள் போக வேண்டிய சுடச்சுட காரசாரமாக இருந்த அந்த சாம்பார், மூக்குத்துவாரத்தில் நுழைந்து விட, ஒரே கமறல், மூக்கெரிச்சல், கண்களில் ஜலம் வந்து, திக்கித்திணறிப்போய் விட்டேன் நான். அது அடங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எனக்கு.

  அய்யோ ஏன் இந்தக் கொடுமை ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM

   **அதனால் கொஞ்சமாக சாம்பாருடன் கூடிய கரண்டியை நன்கு உயரமாக பிடித்துக்கொண்டு,வாயை நோக்கி நாலுசொட்டு விழுவது போல தலையை பின்புறமாக சாய்த்தபடி, கரண்டியை நான் கவிழ்க்க, சற்றே குறி தவறி, வாய்க்குள் போக வேண்டிய சுடச்சுட காரசாரமாக இருந்த அந்த சாம்பார், மூக்குத்துவாரத்தில் நுழைந்து விட, ஒரே கமறல், மூக்கெரிச்சல், கண்களில் ஜலம் வந்து, திக்கித்திணறிப்போய் விட்டேன் நான். அது அடங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எனக்கு.**

   //அய்யோ ஏன் இந்தக் கொடுமை ..//

   (1) அனுபவம் புதுமை

   (2) பதிவினைப் படிப்போருக்கு நான் ஏதாவது கொஞ்சம் நகைச்சுவையைக் கூட்டித் தர வேண்டாமா !!!!! :)))))

   நீக்கு
 102. அதுபோலவே பால் காய்ச்சி உறைஊற்றி தயிராக்கி, பால் பாத்திரம், தயிர் பாத்திரம், மோர் பாத்திரம், பழைய பால், புதுப்பால், புளிக்காத தயிர்/மோர், புளித்ததயிர்/மோர் என பார்த்துப்பார்த்து நிர்வகிப்பது போன்றவைகளுக்கும் ரொம்பவும் பொறுமையும் ஞாபகசக்தியும் வேண்டும். வீட்டில் வேறுயாரும் பெண்குழந்தைகள் இல்லாததால், பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல், எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. பையன்கள் காஃபி குடித்த டவரா, டம்ளர்களைக்கூட, சமையல் ரூம் சிங்கில் கொண்டுபோய் கழுவப்போட மாட்டார்கள். அவ்வளவு செல்லமாக அவர்களின் அம்மாவின் வளர்ப்பு.

  ஹாஹா படித்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். உங்கள் பரிதவிப்பான முன் இரண்டு ஸ்டேடஸும் படித்து இரக்கம் மேலிட்டாலும் முதலில் சிரிப்பு வந்ததுக்கு மன்னிக்கவும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM

   **அதுபோலவே பால் காய்ச்சி உறைஊற்றி தயிராக்கி, பால் பாத்திரம், தயிர் பாத்திரம், மோர் பாத்திரம், பழைய பால், புதுப்பால், புளிக்காத தயிர்/மோர், புளித்ததயிர்/மோர் என பார்த்துப்பார்த்து நிர்வகிப்பது போன்றவைகளுக்கும் ரொம்பவும் பொறுமையும் ஞாபகசக்தியும் வேண்டும். வீட்டில் வேறுயாரும் பெண்குழந்தைகள் இல்லாததால், பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல், எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. பையன்கள் காஃபி குடித்த டவரா, டம்ளர்களைக்கூட, சமையல் ரூம் சிங்கில் கொண்டுபோய் கழுவப்போட மாட்டார்கள். அவ்வளவு செல்லமாக அவர்களின் அம்மாவின் வளர்ப்பு. **

   //ஹாஹா படித்துச் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.//

   சிரிக்கவும் தான் இந்தப்பதிவு சற்றே நகைச்சுவைகளை ஆங்காங்கே தாளித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, என்னால். தாங்கள் இதனைப்படித்து சிரித்துக்கொண்டே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

   //உங்கள் பரிதவிப்பான முன் இரண்டு ஸ்டேடஸும் படித்து இரக்கம் மேலிட்டாலும் முதலில் சிரிப்பு வந்ததுக்கு மன்னிக்கவும் :) //

   மன்னிக்க என்ன இருக்கிறது?. சிரிக்கவும் பிறகு சிந்திக்கவும் மட்டுமே என் இதுபோன்ற பதிவுகள். :)))))

   நீக்கு
 103. காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை.

  அட்டகாசம் வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று சும்மாவா சொன்னாங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM

   **காய்கறிகளோ, மளிகை சாமான்களோ, பாலோ, தயிரோ, எண்ணெய் வகைகளோ, வெண்ணெயோ, நெய்யோ எதுவாகினும், விலை அதிகமாயினும், A1 Quality யாகத்தான் வாங்க ஆர்டர் கொடுத்து விடுவோம். வீடு தேடி அழகாக அமர்க்களமாக எல்லாம் அவ்வப்போது வந்து இறங்கிவிடும். சாப்பாடோ, காஃபியோ, டிபனோ மிகவும் RICH ஆக TASTE ஆக இருக்க வேண்டும். மிகவும் நியாயமாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி நல்ல ருசியான வாய்க்குப்பிடித்தமான உணவுப்பொருட்களுக்கு செலவழிக்கவே FIRST PRIORITY தரப்படும். அதுவே என் கொள்கை.**

   //அட்டகாசம் வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று சும்மாவா சொன்னாங்க :)//

   மிக்க மகிழ்ச்சி. ’சும்மா’வின் புரிதலுக்கு நன்றிகள். :)

   நீக்கு
 104. தொட்டுக்கொள்ள டிஸ்கோ இல்லாத, விதை இல்லாத, பூச்சி இல்லாத, திருச்சி ஐயம்பாளயம் கிராமத்தில் விளையும், கத்தரிக்காயில் செய்த பொரிச்ச கூட்டு (பொரித்த கூட்டு).

  எனக்குக் கூட காரைக்குடியில் வாங்கி வரும் பெட்டிக்கத்திரிக்காய்தான் மிகவும் பிடிக்கும். உரம் போடாமல் வளர்த்தது மேலும் அதன் ருசி எங்குமே வராது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:11 PM


   **தொட்டுக்கொள்ள டிஸ்கோ இல்லாத, விதை இல்லாத, பூச்சி இல்லாத, திருச்சி ஐயம்பாளயம் கிராமத்தில் விளையும், கத்தரிக்காயில் செய்த பொரிச்ச கூட்டு (பொரித்த கூட்டு).**

   //எனக்குக் கூட காரைக்குடியில் வாங்கி வரும் பெட்டிக்கத்திரிக்காய்தான் மிகவும் பிடிக்கும். உரம் போடாமல் வளர்த்தது மேலும் அதன் ருசி எங்குமே வராது :) //

   அது என்னவோ சில குறிப்பிட்ட கத்திரிக்காய்களில் செய்யும் பொரித்த கூட்டு மட்டுமே இவ்வளவு ருசியாக அமைகிறது. தாங்கள் சொல்வது போல செயற்கை உரங்கள் ஏதும் போடாமல் வளர்ந்தவைகளாக இருக்கலாம். தங்களின் அரிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு

 105. இது தவிர நல்ல A1 Quality தோசைமிளகாய்ப்பொடி (என் வீட்டில் அதற்கென தனி செய்முறை உண்டு) காரசாரமாக எள் வாசனையுடன் ஜோராக இருக்கணும். இட்லி தோசைக்கு அதை எண்ணெயில் குழைத்து அடிக்கணும். கெட்டி சட்னி, சாம்பார் எல்லாம் அடுத்த பக்ஷம் தான். இந்த காரசாரமான தோசை மிளகாய்ப்பொடி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும்.

  அஹா நானும் பசங்களும் பொடிப்பிரியர்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM

   **இது தவிர நல்ல A1 Quality தோசைமிளகாய்ப்பொடி (என் வீட்டில் அதற்கென தனி செய்முறை உண்டு) காரசாரமாக எள் வாசனையுடன் ஜோராக இருக்கணும். இட்லி தோசைக்கு அதை எண்ணெயில் குழைத்து அடிக்கணும். கெட்டி சட்னி, சாம்பார் எல்லாம் அடுத்த பக்ஷம் தான். இந்த காரசாரமான தோசை மிளகாய்ப்பொடி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும்.**

   //அஹா நானும் பசங்களும் பொடிப்பிரியர்கள் :)//

   மிக்க மகிழ்ச்சி மேடம். பொடியர்கள் முதல் பெரியவர்கள் வரை பொடிப்பிரியர்களாகவே தான் உள்ளோம் என்பதே உண்மை.

   மிளகாய்ப்பொடி பற்றிய மேலும் விபரங்கள் இதோ என் இந்தப்பதிவினில் ......

   தலைப்பு:

   ’வெண்ணிலவைத் தொட்டு ............. முத்தமிட ஆசை
   மிளகாய்ப்பொடி கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை’ :)

   இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html

   நேரமிருக்கும் போது படித்துப்பாருங்கோ. அதில் இதுவரை 171 பின்னூட்டங்கள் மட்டுமே உள்ளன. :)))))

   நீக்கு
 106. இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்

  அஹா வாழ்க்கை வாழ்வதற்கே இதே போல் உண்டு சந்தோஷமாய் என்ஜாய் செய்ங்க கோபால் சார் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM

   **இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.**

   //அஹா, வாழ்க்கை வாழ்வதற்கே ! இதே போல் உண்டு சந்தோஷமாய் என்ஜாய் செய்ங்க கோபால் சார் :) //

   அதுவும் ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே, பதிவின் முடிவுரையாக அன்று எழுதியுள்ளேன். :)

   உடல்நிலையை உத்தேசித்து இப்போ எல்லாவற்றிற்குமே மேலிடத்தினால் பயங்கர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் எங்கே நான் முன்புபோலெல்லாம் எஞ்ஜாய் செய்ய? :)))))

   நீக்கு

 107. ChitraMarch 27, 2011 at 10:51 AM

  நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.


  ......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்

  ஹாஹா சூப்பர் சித்து :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan May 24, 2015 at 7:12 PM

   **நாம் சுவைத்திடும் உணவுகள் வாய், நாக்கு, தொண்டை முதலியனவற்றை கடந்த பிறகு, நேராக உணவுக்குழல் வழியே வயிற்றை நோக்கிச் சென்று தீங்கு ஏதும் விளைவிக்காமல், நம் பின்கழுத்துப்பகுதியில் ஒரு பைபாஸ் லைன் குழாய் கொடுத்து, உடலுக்கு தீங்கு செய்யும் அவற்றை உடனடியாக வெளியேற்றிடும் வண்ணம் ஏதாவது ஒரு பைபாஸ் OUTLET LINE கொடுக்கப்பட வேண்டும்.**

   Chitra March 27, 2011 at 10:51 AM

   //......கோபு மாமா, petition கையெழுத்து போட, என்கிட்டே முதலில் கொடுங்க. என்னை மாதிரி ஆட்களுக்கு இது சூப்பர் ஐடியா, போங்// - Chitra

   //ஹாஹா சூப்பர் சித்து :)//

   :)))))

   அன்புக்குரிய ஹனி மேடம்,

   நான் இந்தப் பதிவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் இதனை இன்று ஆழமாக ரசித்துப்படித்து, வரிசையாக ஏராளமான பின்னூட்டங்கள் இட்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   என்றும் நட்புடனும் நன்றியுடனும்,
   கோபு

   நீக்கு
 108. குருஜி நீங்க சாம்பார் டேஸ்ட் பாத்தத் கேட்டு சிரிப்பாணி பொத்துகிச்சி. அட சுட்டது அதவிட சூப்பரு.. நீங்க சரியான ஜோக்காலியேதா. அதாவது காமெடியா எளுதுரீங்கல்ல அதா
  நானு கூட பெரிய கமண்டு போடோனும்னு தான் நெனச்சேன். பொரவால விட்டுப்போட்டேன்

  பதிலளிநீக்கு
 109. எனக்கு இதுவரை மறந்து போயிருந் சாப்பாட்டு காம்பினேஷன்ஸ் உபயோகித்த பாத்திர பண்டங்கள் எல்லாவற்றயும் மறுபடி நினைவில் கொண்டு வந்த பத்வு. நீங்க அடை பண்ணிய அமர்க்களம் படு எதார்ந்நம். எங்காத்துலயும் நாங்க ஆண்குழந்தைகளும் அம்மாவுக்கு ஒத்தாசை பண்றோம்னு உபத்திரவங்கள நிறயவே பண்ணியிருக்கோம். இன்றய கால கட்டத்தில் எல்லாமே ஒன்ஸ் அப்பான் எ டைம் என்று மலரும் நினைவுகளாகவே ஆகிவிட்டது.

  பதிலளிநீக்கு
 110. //இதோ இப்போது சூடான சுவையான வெங்காய பஜ்ஜிகள், கெட்டிச்ச்ட்னி முதலியன என்முன் வைக்கப்பட்டு,சூடு ஆறும்முன் சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ! என்று அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டதாலும், அடுத்த LOT பஜ்ஜிகளும், அதை அடுத்து ஸ்ட்ராங்கான சூடான டிகிடி காஃபியும் துரத்திக்கொண்டு வந்துவிடும் என்ற அறிகுறிகள் தெரிவதாலும், இத்துடன் இந்தப்பகுதியை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.// அப்புடியே எனக்கும் பார்சல்...அன்லிமிடெட் மீல்ஸ் அஞ்சு அப்புடியே அடி பின்னுன மாதிரி இருக்கு...என் சமயலெல்லாம் சுடுதண்ணியோட சரி...

  பதிலளிநீக்கு
 111. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? மிகவும் இரசித்த பதிவு!

  பதிலளிநீக்கு
 112. சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு காலைதான்....... நீங்க ஸாம்பார் ருசிபார்த்த அமர்க்களம்.. அடை உங்களை ருசி பார்த்த கலாட்டா....இதுவரை தெரிந்திராத அடுப்பு பாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே தூள் தூள்..சாப்பாடு விஷயத்துல மட்டுமில்லாமல் பல விஷயங்களிலும் எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க....
  இந்த இடத்துலதான் ஒரு சின்ன ஜோக்.. இதுபோல எல்லா விஷயத்திலும் திறமைசாலியாக இருக்கும் தன் நண்பரை ஒருவர் பாராட்ட எண்ணினார். ஆனா அவருக்கு இங்க்லீஷ் சரியா வராது.. நண்பரிடம் எல்லா விஷயத்துலயும் எப்படி ""எக்ஸ்பைர்டா ""இருக்கேன்னு கேட்டுட்டார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... June 9, 2016 at 4:12 PM

   //சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு காலைதான்.......//

   ”சமையல் மட்டும் கலை இல்லை. சாப்பிடுவதும் ஒரு கலைதான்.......” என மேற்படி வரிகள் இருக்க வேண்டும்.

   அநாவஸ்யமாக கலையில் ஒரு காலைப்போட்டு விட்டீர்கள்.

   விசு படத்தில் அன்புள்ள பனுமதி, பனுமாதி என ஒருவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுத ஆரம்பிக்கும்போது விசு அதனை கரெக்ட் செய்ய நினைத்து ” ’ப’க்கு அருகில் மட்டும் ஒரு காலைப் போட்டு ’பானுமதி’ என்று அழகா எழுதுப்பா” என்பார்.

   “யோவ் ... அது பெண்டாட்டியின் கால். அதனை நான் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்வேன். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்யா” என்பான். :)

   ஏனோ எனக்கு இப்போ அந்த ஞாபகம் வந்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

   //நீங்க ஸாம்பார் ருசிபார்த்த அமர்க்களம்.. அடை உங்களை ருசி பார்த்த கலாட்டா....இதுவரை தெரிந்திராத அடுப்பு பாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே தூள் தூள்..சாப்பாடு விஷயத்துல மட்டுமில்லாமல் பல விஷயங்களிலும் எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க....//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //இந்த இடத்துலதான் ஒரு சின்ன ஜோக்.. இதுபோல எல்லா விஷயத்திலும் திறமைசாலியாக இருக்கும் தன் நண்பரை ஒருவர் பாராட்ட எண்ணினார். ஆனா அவருக்கு இங்க்லீஷ் சரியா வராது.. நண்பரிடம் எல்லா விஷயத்துலயும் எப்படி ""எக்ஸ்பைர்டா ""இருக்கேன்னு கேட்டுட்டார்//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   Expert / Expired சூப்பர் ஜோக். ரஸித்தேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 113. சமையல் அனுபவங்களும், சாப்பிடும் அனுபவங்களும் யார் உண்மையாகவே அனுபவித்துச் செய்வார்களோ, அவர்கள்தான் பதிவு எழுதவேண்டும். ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

  பாத்திரங்கள், அடுப்பு வகைகள் எல்லாம் ரொம்ப நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  ஆரம்பத்தில் சமையல் சொதப்பின அனுபவங்களை எழுதினபோது என்னை நினைத்துக்கொண்டேன். எனக்கு அடுப்பைக் கண்டாலே 28 வயதுவரை ரொம்ப பயம். அடுப்புப் பக்கத்திலேயே போனதில்லை. இப்போதும், முள்ளுமுருக்கோ அல்லது எண்ணையில் பொரிக்கும் பகோடா போன்றவை செய்துபார்க்கும்போது அடுப்பைவிட்டுக் கொஞ்சம் தூர இருப்பேன். சாம்பார், கூட்டு போன்றவற்றிற்கு உப்பு காரம் போதுமா என்று கரண்டியால், இடதுகையில் விட்டுப் பார்த்து பின் அலம்பிக்கொள்வேன். நேரடியாக கரண்டியினால் வாயில் விட்டுக்கொள்வதில்லை. (சூட்டை அனுமானிக்க முடியாது என்பதால்). I could relate your experience. ஒரு கேள்வி.. பகவானுக்குப் படைப்பதற்கு முன் டேஸ்ட் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமா (உப்பு உரைப்பு போன்றவை)? நான், அது தவறில்லை என்று நினைக்கிறேன். (அவனுக்கு மட்டும் நம்ம சரி பார்க்காமல் படைப்பதா என்று). உங்கள் எண்ணம் என்ன?

  அது மிதுக்கு வற்றல் இல்லையா? (மினுக்கு என்று எழுதியிருக்கிறீர்களே அது).

  உங்கள் காம்பினேஷன் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் ஒரே ஒரு மாற்றம்தான். பருப்பு சாம்பாரில் ஏற்கனவே பருப்பு இருப்பதால், உசிலி அதற்குச் சரிப்பட்டு வராது. உசிலி சாப்பிட, தக்காளி சாத்துமது (பூண்டெல்லாம் வரவே கூடாது) அல்லது மோர் வரிசையில் வரும் குழம்பு (மோர்க்குழம்பு, புளிசேரி, மோர்ச்சாத்துமது இன்னபிற) போன்றவைதான் சரிப்பட்டுவரும் என்பது என் அபிப்ராயம்.

  கம்ப்யூட்டரில் நாங்கள் WYSIWYG என்று சொல்வதுபோல் (What you see is what you get), தரமான பொருட்களை உபயோகித்தால்தான், பண்ணும் பொருளும் தரமாக வரும்.

  "ஓணான் போன்ற பாகற்காய்" - ரசித்தேன். நான் சாப்பிட்டுப் பழகியது மிதுக்குப் பாகல் அல்லது இயற்கையான பாகல்காய். இப்போ வெள்ளையாவும், பெரிய அளவிலும் வரும் பாகல் (பெரும்பாலும் கேரளா டைப்) ஏதோ மாற்றம் செய்தது என்று தோன்றும்.

  மோர்க்குழம்பு சாதத்துக்கு கத்தரி புளிவிட்ட கூட்டும் (பட்டாணியோ நிலக்கடைலையோ போட்டிருந்தால் இன்னும் சூப்பர்) நன்றாக இருக்கும். என்ன, எல்லாமே ரொம்ப சூடாக இருந்தால்தான் நல்லா இருக்கும். அதுவும் கத்தரிக்காயை ரொம்ப வேகவைத்து அது மாவாகிவிட்டால் நல்லாவே இருக்காது.

  "சேமியா அல்லது ஜவ்வரிசி பால் பாயஸம்" - இதுதான் அவ்வளவாகப் பிடிக்காது. பருப்புப் பாயசமோ, வெல்லப் பாயசமோதான் நன்றாக இருக்கும். போனால் போகிறது என்று சேமியாப் பாயசத்தை எப்போவாவது சேர்த்துக்கொள்ளலாம். ஜவ்வரிசிப் பாயசம் கஞ்சியில சேர்த்தியில்லையோ?

  "கொத்தமல்லித் தொகையல் நல்ல காரசாரமாக இருக்கணும் (இல்லாவிட்டால் வழுவட்டையாக மருதாணி போல மக்குபோல இருக்கும்" - சாப்பிடுவதில் ஆர்வம் இருந்தால்தான் இவ்வாறு எழுதமுடியும். கொத்தமல்லித் தொகையலை வழுமூன அரைத்தால், மருதாணிக்கும் அதுக்கும் வித்தியாசமே இருக்காது. அரைத்த கீரைக் குழம்பை தச்சிமம்முக்குத் தொட்டுக்கொண்டதுபோல் இருக்கும்.

  "பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் .... அடடா அதன் டேஸ்ட்டுக்கு ஈடு இணை கிடையாது)" -இது என்ன என்று புரியவில்லை. அரிசிமா உப்புமாவா? அந்த ஹோட்டலையாவது கோடி காண்பிக்கக் கூடாதா? மறக்காமல் குறித்துக்கொள்வேன்.

  "மனோரக்கா உருண்டை" - மனோகரத்தைத் தான் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்களா? திருனெல்வேலி மனோகரம் எனக்கு ரொம்பப் பிடித்தது.

  உங்களைப் பார்க்கவந்தால், கண்டதையும் வாங்காமல், எனக்கு இவைதான் பிடிக்கும் என்று தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நல்லதுதான்.

  "நாக்கை அடக்க என்னால் எப்போதுமே முடிவதில்லை." - எனக்குப் பல சமயங்களில் தோன்றும். எதுக்கு நாக்கை அடக்கி சாப்பிடாமல் இருக்கணும்? நல்லா ரசிச்சு, அருமையான சாப்பாடைச் சாப்பிட்டு நல்ல தூக்கம் போடாமல், டயட் டயட் என்று ஏன் இருக்கணும்னு தோணும்.

  ஃப்ரெஞ்ச் நாட்டவர், நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, வெயிட் போடக்கூடாது என்று விரலைவிட்டு வாமிட் பண்ணுவார்கள் என்று படித்திருக்கிறேன். ரொம்ப வெயிட் போட்டவர்கள் (அளவுக்கு அதிகமாக, அபாயகரமாக), வாயிலிருந்து வயிற்றுக்குச் செல்லும் குழாயை, நேராக சிறுகுடலுக்குள் செலுத்துவதன்மூலம், சிறு குழந்தைகள் சாப்பிடும் அளவு சாப்பிட்டாலே பசி அடங்கிவிடுமாம் (ஜூனியர் விகடனில் முன்பு-இப்போதும்? எழுதும் பிரகாஷ் எம். சுவாமி இப்படிப்பட்ட ஆபரேஷன் செய்துகொண்டார் என்று படித்திருக்கிறேன்). என்னிடம் இப்போது கடவுள் பிரத்யட்சமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், எனக்கு உடனடியாக மனதில் தோன்றுவது, பரமபதம், செல்வம் என்றவைகள் அல்ல. என்ன சாப்பிட்டாலும் அது என் எடையை அதிகரிக்கக்கூடாது, நோயையும் கொண்டுவரக் கூடாது என்ற ஒரே வரம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒரு கேள்வி.. பகவானுக்குப் படைப்பதற்கு முன் டேஸ்ட் சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமா (உப்பு உரைப்பு போன்றவை)? நான், அது தவறில்லை என்று நினைக்கிறேன். (அவனுக்கு மட்டும் நம்ம சரி பார்க்காமல் படைப்பதா என்று). உங்கள் எண்ணம் என்ன?//

   நாம் டேஸ்ட் செய்யாமல்தான் பகவானுக்குப் படைக்க வேண்டும் என்பதே நியாயம் + சாஸ்திரம் சொல்வது.

   பகவானுக்குப் படைப்பவைகளை, ஆக்சுவலாக பகவான் சாப்பிடுவது இல்லை. அதில் உள்ள சிற்சில தோஷங்கள் + விஷங்கள் மட்டும் நீங்கி விடுவதாக ஐதீகம்.

   பகவானும் சாப்பிட ஆரம்பித்தால், யாருமே நைவேத்யமே செய்ய முன்வர மாட்டார்கள், என்பதே என் எண்ணம். :)

   >>>>>

   நீக்கு
  2. //அது மிதுக்கு வற்றல் இல்லையா? (மினுக்கு என்று எழுதியிருக்கிறீர்களே அது).//

   ஒருவேளை மிதுக்கு வற்றலாகவும் இருக்கலாம். நாங்கள் மினுக்கு வற்றல் என்றே சொல்லிப் பழக்கம்.

   பருப்பு உசிலிக்கு சாம்பாரைவிட மோர்க்குழம்பு இன்னும் பெஸ்ட் ஆக இருக்கும் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.

   வெல்லப்பாயஸத்தில், பருப்புகளைவிட தேங்காய் மட்டும் துருவி அரைத்துவிட்டு செய்தது என்றால் எனக்குப் பிடிக்கும். அதாவது வெல்லம் போட்ட தேங்காய் பாயஸம்.

   >>>>>

   நீக்கு
  3. "பச்சமாப்பொடி உப்புமா (அதிலும் அந்த ஒட்டல் .... அடடா அதன் டேஸ்ட்டுக்கு ஈடு இணை கிடையாது)"

   அதாவது ஹோட்டல் அல்ல.

   பச்சரிசி மாவுப் பவுடரில் செய்யப்படும் உப்புமா செய்து முடித்தபின், நிறைய எண்ணெயை ஊற்றி மேலும் ஐந்து நிமிடங்கள் ஸ்டவ் அடுப்பினை சிம்மில் வைத்து விட்டால் அடி ஒட்டிக்கொண்டு, அதிகம் கருகாமல் ஒட்டலாக வரும். இரும்பு சட்டியில் அடியில் எண்ணெயுடன் கூடிய உப்புமா அப்படியே ஆங்காங்கே ப்ளாஸ்திரி போல ஒட்டிக்கொண்டு வருமே அது. இதனை நீங்கள் காந்தல் அல்லது கருகல் எனச் சொல்லக்கூடும். நாங்கள் அதனை ஒட்டல் எனச் சொல்லுவோம்.

   >>>>>

   நீக்கு
  4. //"மனோரக்கா உருண்டை" - மனோகரத்தைத் தான் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்களா? திருனெல்வேலி மனோகரம் எனக்கு ரொம்பப் பிடித்தது.//

   அதே ... அதே ... தேன்குழலில் இனிப்பு வெல்லம் + தேங்காய் + ஏலக்காய் முதலியன கலந்து செய்யப்படும் உருண்டைகள் அல்லது கூம்பு வடிவக் கூட்டினில் அடைத்து ஐயர் வீட்டுக் கல்யாணங்களில் பருப்புத்தேங்காய் என்று பெயரில் சீராக வைக்கும் ஓர் இனிப்பு ஐட்டமே இந்த மனோரக்கா என்பதாகும்.

   >>>>>

   நீக்கு
  5. 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 7:15 PM

   இந்தப்பதிவு நான் வலையுலகத்திற்கு வந்த புதிதில் எழுதப்பட்டது. மிகப்பெரிய பதிவாக எழுதிவிட்டேன். இதையே பிரித்துப்பிரித்து 4-5 பகுதிகளாகக் கொடுக்கணும் என அன்று எனக்குத் தெரியாமல் போய் விட்டது.

   மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களும் எனக்குத் தெரியாமல் இருந்த காலக் கட்டம் அது. ஏதோ என் மனதுக்கு தோன்றியவற்றை + எனக்கு ஞாபகம் இருந்தவற்றையெல்லாம் சொல்லி விட்டேன்.

   இதிலும் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் என்னால் சொல்ல விடுபட்டும் போயிருக்கலாம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 114. இன்றைக்கு மீண்டும் எல்லோருடைய பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் வாசித்தேன். உணவு காம்பினேஷன்களைக் குறித்துவைத்துக்கொண்டேன். கிருஷ்ணனை, குசேலருக்கு அளவுக்கு அதிகமாகச் செல்வம் கொடுத்துவிடாதபடி ருக்மணி தடுத்ததுபோல உணவு விஷயத்தில் மேலிடம் கண்ட்ரோல் செய்யலைனா நமக்குத்தான் உணவை ரொம்பநாள் அனுபவிக்கும் அதிருஷ்டம் குறைந்துவிடும்.

  தலைப்பே இடுகையின் உள்ளடக்கத்தைச் சரியாகச் சொல்லிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் October 28, 2016 at 8:25 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் சந்தோஷங்கள்.

   //இன்றைக்கு மீண்டும் எல்லோருடைய பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் வாசித்தேன். உணவு காம்பினேஷன்களைக் குறித்துவைத்துக்கொண்டேன்.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு சிரத்தையாக இதனைச் செய்துள்ளீர்கள். மிகவும் ஆச்சர்யமாக உள்ளது!

   //கிருஷ்ணனை, குசேலருக்கு அளவுக்கு அதிகமாகச் செல்வம் கொடுத்துவிடாதபடி ருக்மணி தடுத்ததுபோல உணவு விஷயத்தில் மேலிடம் கண்ட்ரோல் செய்யலைனா நமக்குத்தான் உணவை ரொம்பநாள் அனுபவிக்கும் அதிருஷ்டம் குறைந்துவிடும்.//

   கரெக்ட் ஸார். இப்போதெல்லாம் நானே கொஞ்சம் குறைத்துக்கொண்டுள்ளேன்.

   ஆனால் நாளைக்கு தீபாவளியாக இருப்பதால், இப்போது இரவு வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் என்று முடிவெடுத்து, சுடச்சுட ஒரு ஆறு வெங்காய பஜ்ஜி, ஒரு ஆறு வாழைக்காய் பஜ்ஜி, ஒரு ஆறு கத்தரிக்காய் பஜ்ஜி, ஒரு ஆறு உருளைக்கிழங்கு பஜ்ஜி இத்துடன் இன்றைய இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டுள்ளேன். ஓரளவு சிறிய சைஸ் பஜ்ஜிகளாகவே கொடுத்தார்கள்.

   இதே போல இன்னொரு லாட் கேட்டாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.

   இருப்பினும் ஒருவித கட்டுப்பாட்டுடன், பிரஸவ வைராக்யமாக நானாகவே கேட்காமல் பொறுமையைக் கடைபிடித்து வருகிறேன். அவர்களாகவே கொடுத்தால், அந்த அன்புக்காக நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். :)))))

   //தலைப்பே இடுகையின் உள்ளடக்கத்தைச் சரியாகச் சொல்லிவிட்டது.//

   ஆமாம். புரிகிறது. :)

   தங்களின் மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. மேற்படி பின்னூட்டத்தை நான் அனுப்பி முடித்ததும் கொட-மிளகாய் பஜ்ஜி வெந்து கொண்டிருப்பதாகவும், அடுத்து வந்து கொண்டிருப்பதாகவும் சொல்லியுள்ளார்கள்.

   எனக்கு அதில் இஷ்டம் இல்லை ... அது வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அதற்கு பதிலாக வெங்காய பஜ்ஜியும், உருளைக்கிழங்கு பஜ்ஜியும் மட்டும் இன்னொரு லாட் கேட்டுள்ளேன்.

   அத்துடன் முடித்துக்கொண்டு, ஒரு ஸ்ட்ராங்க் டிகிரி காஃபி வாங்கி சாப்பிட்டுவிட்டு, இன்றைய இரவு ஆகாரக் கடையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்ற உத்தேசத்தில் உள்ளேன்.

   சுடச்சுட பஜ்ஜிகள் வந்தாச்சு. அதனால் நான் இத்துடன் எஸ்கேப். :)

   நீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு