2
ஸ்ரீராமஜயம்
[ 29.12.2013 ஞாயிறு
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
20வது ஆராதனை. ]
பஞ்சாக்ஷரம்:
நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம்.
அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது.
நாலு வேதங்களில் இரண்டாவது ’யஜுஸ்’. அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ்.
இந்த யஜுர் வேதம், சுக்ல யஜுர், கிருஷ்ண யஜுர் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும், ரிக், சுக்ல யஜுஸ், கிருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வனம் என்கிற ஐந்து பகுதிகளின் மத்தியில் வருவது ‘கிருஷ்ண யஜுஸ்’
இந்த கிருஷ்ண யஜுர் வேதத்தின் மத்ய பாகம் என்பது, அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம். இங்கே தான் வருகிறது ஸ்ரீருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வய அக்ஷரமான ‘சிவ’.
உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்பொருள் என்கிறர்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை, திருவள்ளுவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார்.
வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக மெய்யாக வைத்துக்கொண்டால், அதில் உயிராக மெய்ப்பொருளாக இருப்பது, சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்:
”வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத[ன்] நாமம் நமசிவாயவே ”
அவ்வைப்பாட்டி செய்த ‘நல்வழி’ என்னும் நூலில், ’சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்[கு] அவாயம் [அபாயம்] ஒரு நாளும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.
சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயிணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயிணி தான் பிராணத்தியாகம் செய்யும் சந்தவேசத்தில் ‘த்வயக்ஷரம் நாம கிரா’ என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, ‘சிவ’ என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும், என்கிறாள்.
‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்’ என்று திருமூலரும் திருமந்திரத்தில் சொல்வதும் இதைத்தான்.
oooooOooooo
[ 1 ]
மிட்னாப்பூர் சிறையிலிருந்த
சுதந்திரப் போராட்டத்
தியாகிகளுக்கு அருளியது
1935 அக்டோபர் 27 ஆம் தேதி அமாவசை, கல்கத்தாவுக்கு தென்மேற்கில் சுமார் அறுபது மைல் தூரத்தில் உள்ள மிட்னாபூருக்கு விஜயமானார்கள்.
அப்போது அவ்வூரில் பயங்கர இயக்கங்கள் தோன்றி வந்தன.
மிட்னாபூர் மக்கள் எவ்வகையிலும் தங்கள் ஊருக்கும் ஸ்வாமிகளை அழைத்து வர வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்கப்பட்டது.
அப்போது அவ்வூரில் கடும் ஊரடங்கு உத்தரவு. இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் எவரும் நடமாடக்கூடாது என்பது சர்க்கார் உத்தரவு.
ஸ்வாமிகள் அவ்வூர் சென்று மக்களை ஆசீர்வதிக்க, அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
ஸ்வாமிகள் அவ்வூருக்கு விஜயம் செய்த அன்றைய தினம் மட்டும் ஊரடங்கு சட்டத்தின் சில ஷரத்துகளை ஜில்லா அதிகாரிகள் தளர்த்தி மக்களை மகிழ்விக்க செய்தனர்.
பல நாட்களாய் கிடைக்காத சுதந்திரம், ஒரு சுதந்திர திருநாளாகவே கொண்டாடினர், அவ்வூர் மக்கள்.
ஊரெங்கும் ஒரே தோரணம், பந்தல் மயம், புஷ்பாலங்காரம்.
1935 அக்டோபர் 27 காலை, ஸ்வாமிகள் அவ்வூர் விஜயம்.
முக்கிய வீதிகளில் பட்டண பிரவேஸ.
பன்னிரண்டு இடங்களில் கோலாஹலமான வரவேற்பு.
சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் பதிலளித்து ஸ்வாமிகள் தர்மம், பக்தி பற்றி உபதேசம் செய்தார்கள். அதன் பின், பூஜை, தீர்த்த பிரஸாத விநியோகம்.
அவ்வூரிலுள்ள சிறைக்கும் செய்தி பரவியது. நாட்டின் சுதந்திரத்திற்கு தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்த தேச பக்தர்கள் பலர் அச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது. கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், இப்படி பற்பல தொழில் புரிவோர். அவர்கள் அனைவரும் தேச விடுதலைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். அவர்களில் சிலருக்கு ஸ்வாமிகளை தரிஸிக்க வேண்டும் என்னும் பேரவா.
சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவரிடம் தங்கள் எண்ணத்தை விண்ணப்பித்தனர். அவருக்கும் தெரிந்திருந்தது, மதத்தலைவர் ஒருவர் அவ்வூர் விஜயம் செய்திருந்தது.
அக்கைதிகளின் மத உணர்ச்சியை மதித்து சில நிபந்தனைகள் பேரில், அவர்களை அவ்வதிகாரி வெளியில் சென்று வர அனுமதித்தார்.
கூட்டு கிளிகள் வெளியேறியவுடன் பறந்து விடாமால் இருக்க, அவர்களை கண்காணிக்க கையில் துப்பாக்கி ஏந்திய காவல் வீரர்கள் அவர்களை தொடர்ந்து வந்தனர்.
மாலை ஆறு மணிக்குள் சிறைக்குள் திரும்ப வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள் ஸ்வாமிகள் முகாம் வந்து சேர்ந்தனர்.
மாலை மணி ஐந்தரை, சிறிது போதுக்கு முன் தான், ஸ்வாமிகள் ஒரு தனிமையான இடத்துக்கு நித்திய பூஜை முடிந்து சற்றே ஓய்வெடுக்க சென்றிந்தார்கள்.
அச்சமயம் ஸ்வாமிகளுக்கு சிரமம் கொடுக்க மடத்தின் அதிகாரிகள் விரும்பவில்லை. ஆயினும் எதிர்பார்த்திருந்தனர்.
அதுவரை காத்திருக்கும் படி, கைதிகளிடம் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறுமணிக்குள் சிறை திரும்ப வேண்டும், இல்லையெனில் பிரத்யேக தண்டனை கிடைக்கும் என்று கூறி, மிகுந்த ஏமாற்றத்துடன் சிறை நோக்கி திரும்பினர்.
சில நிமிடங்களில் ஸ்வாமிகள் தாமாகவே, வெளியில் வந்தார். மடத்தின் அதிகாரி, சற்று முன் கைதிகள் தரிஸசனத்துக்கு வந்த விஷயமும், சற்று முன் தான் திரும்பினர் என்றும், சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஸ்வாமிகள் உடனே அவர்களை திரும்ப அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்.
அவர்கள் வந்தவுடன், ஸ்வாமிகளை வணங்கி, நாடு சுதந்திரம் அடைந்து மக்கள் யாவரும் துன்பம் நீங்கியவர்களாகி இன்பமுற வாழ வேண்டும் என ஸ்வாமிகள் அனுக்கிரகம் புரிய வேண்டும் எனவும் அதுவே அவர்கள் கோரிக்கை என்று கூறி ஸ்வாமிகளை வணங்கி விரைவில் சிறை திரும்பினர், ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்ற மகிழ்ச்சியுடன்.
ஸ்வாமிகள் அந்த கைதிகளின் தேச பக்தியை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள்.
இப்போது சொல்லுங்கள் பக்த அன்பர்களே ......
நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?
oooooOooooo
[ 2 ]
நீ கைங்கர்யம் பண்றது
அந்த பரமேஸ்வரனுக்கே தான்
இன்னொரு சம்பவம். சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் அருளிய உரை…
மிட்னாப்பூர் பெரியவா
மிட்னாப்பூரில் ஒரு துறவி பெரியவாளை தரிஸிசித்தார்.
”மறு தரிஸனம் எப்போது?” என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, ”தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் ” என்றது அந்த பரம்பொருள்.
அந்த துறவியும் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருந்தார்…எப்பொழுது பதினைந்து வருஷங்கள் முடியும் என்று…
அந்த நாளும் வந்தது…
விழுப்புரம் அருகில், முகாம். அன்று ஐயன் வடவாம்பலம் சென்றிருந்தார்.
இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, ”என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…” என்று குதி குதி என்று குதித்தார்.
ஐயனுக்கு பணிவிடை செய்யும் அன்பர் ஒருவர், ”நீங்கள் துறவி, சற்று காத்திருங்கள். இதோ, இப்போது வந்து விடுவார். நீங்கள் கோபம் காட்டலாமா என்று கூறி இருக்கிறார். நீங்கள் என்ன கொக்கா?” என்றும் விசனப் பட்டிருக்கிறார்.
இதற்கு இடையே, ஐயன் வெகு வேகமாக வேகு வேகு என்று வயல் வரப்புகள், கரும்புக் காடுகள் வழியாக மிக வேகமாக நடந்து வந்து முகாம் அடைந்தார்.
அந்த துறவிக்கு அத்தனை சந்தோஷம். எங்கேயோ, எப்போதோ, கொடுத்த வாக்கை காப்பாற்ற இன்று இத்தனை சிரமப்பட்டுக் கொண்டு வந்து தனக்கு தரிசனம் கொடுக்கும் மஹா பிரபுவிடம் தர்சனம் பெற்று திரும்பப் போகிறார்.
எந்த அடியார் சற்று முன் இந்த மிட்னாப்பூர் துறவியிடம் கோபம் கொண்டாரோ, அவரையே அழைத்து, ஐயன், ”நீ இவருக்கு வழியிலே ஏதாவது வயித்துக்கு வாங்கிக் கொடுத்து, சேந்தனூர் ரயிலடியிலே வண்டி ஏத்தி விட்டுடு” என்று கூறி அனுப்பி வைத்தார்.
வழியில் அந்த மிட்னாப்பூர் துறவி கேட்டார், நம் அடியாரிடம்…
”நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.”
[Thanks to Mr. MAHESH - Sage of Kanchi 27.10.2013]
oooooOooooo
[ 3 ]
மஹாபெரியவாளின் தபஸ் மஹிமை
எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா.
குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ’ஹகரி’ என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது.
கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது. கரையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமா இருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா.
அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்தக் கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது.
அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்சாவூர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.
“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.
ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்”
உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று.
வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.
ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை.
சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.
அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.
அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது.
நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது.
ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.
அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.
Thanks to Varagooran Narayanan and
Mr M J Raman [Manakkal]
for sharing this on 22.12.2013
ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்கப்பட்டது.
அப்போது அவ்வூரில் கடும் ஊரடங்கு உத்தரவு. இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் எவரும் நடமாடக்கூடாது என்பது சர்க்கார் உத்தரவு.
ஸ்வாமிகள் அவ்வூருக்கு விஜயம் செய்த அன்றைய தினம் மட்டும் ஊரடங்கு சட்டத்தின் சில ஷரத்துகளை ஜில்லா அதிகாரிகள் தளர்த்தி மக்களை மகிழ்விக்க செய்தனர்.
பல நாட்களாய் கிடைக்காத சுதந்திரம், ஒரு சுதந்திர திருநாளாகவே கொண்டாடினர், அவ்வூர் மக்கள்.
முக்கிய வீதிகளில் பட்டண பிரவேஸ.
பன்னிரண்டு இடங்களில் கோலாஹலமான வரவேற்பு.
சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் பதிலளித்து ஸ்வாமிகள் தர்மம், பக்தி பற்றி உபதேசம் செய்தார்கள். அதன் பின், பூஜை, தீர்த்த பிரஸாத விநியோகம்.
அக்கைதிகளின் மத உணர்ச்சியை மதித்து சில நிபந்தனைகள் பேரில், அவர்களை அவ்வதிகாரி வெளியில் சென்று வர அனுமதித்தார்.
மாலை ஆறு மணிக்குள் சிறைக்குள் திரும்ப வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள் ஸ்வாமிகள் முகாம் வந்து சேர்ந்தனர்.
அச்சமயம் ஸ்வாமிகளுக்கு சிரமம் கொடுக்க மடத்தின் அதிகாரிகள் விரும்பவில்லை. ஆயினும் எதிர்பார்த்திருந்தனர்.
அதுவரை காத்திருக்கும் படி, கைதிகளிடம் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நிமிடங்களில் ஸ்வாமிகள் தாமாகவே, வெளியில் வந்தார். மடத்தின் அதிகாரி, சற்று முன் கைதிகள் தரிஸசனத்துக்கு வந்த விஷயமும், சற்று முன் தான் திரும்பினர் என்றும், சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஸ்வாமிகள் உடனே அவர்களை திரும்ப அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்.
நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?
oooooOooooo
[ 2 ]
நீ கைங்கர்யம் பண்றது
அந்த பரமேஸ்வரனுக்கே தான்
”மறு தரிஸனம் எப்போது?” என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, ”தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் ” என்றது அந்த பரம்பொருள்.
இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, ”என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…” என்று குதி குதி என்று குதித்தார்.
”நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
oooooOooooo
[ 3 ]
மஹாபெரியவாளின் தபஸ் மஹிமை
எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா.
குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ’ஹகரி’ என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது.
கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது. கரையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமா இருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா.
அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்தக் கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது.
அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்சாவூர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.
“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.
ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்”
உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று.
வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.
ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை.
சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.
அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.
அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது.
நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது.
ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.
அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.
Thanks to Varagooran Narayanan and
Mr M J Raman [Manakkal]
for sharing this on 22.12.2013
|
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
மிகச்சிறிய இடைவேளைக்குப்பின்
03.01.2014 வெள்ளிக்கிழமை வெளியாகும்.
01.01.2014 ஆங்கிலப் புத்தாண்டுக்காக
வேறொரு பதிவு வெளியாக உள்ளது
காணத்தவறாதீர்கள்.
03.01.2014 வெள்ளிக்கிழமை வெளியாகும்.
01.01.2014 ஆங்கிலப் புத்தாண்டுக்காக
வேறொரு பதிவு வெளியாக உள்ளது
காணத்தவறாதீர்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்