About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, December 4, 2013

90] சுற்றிச்சுற்றி வந்ததினால் ....

2
ஸ்ரீராமஜயம்



தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான் என்பதை இராமாயணம் நிரூபிக்கிறது. 

ஸ்ரீராமனை வானரங்களும் ஆதரித்தன. இராவணனையோ சகோதரன் விபிஷணனே விட்டு விலகினான். 

எத்தனைச் சுற்று சுற்றினோமோ, அத்தனையும் திரும்பிச் சுற்றினால்தான் கட்டு சுழலும். 

பாப வாசனை அவ்வளவும் தீர, அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். நடுவே அவசரமும் ஆத்திரமும் வேண்டாம். அப்படிச் செய்தால் சிக்கலாகி முடிச்சு விழுந்து விடும். 

பொறுமையாக பகவானை நம்பி, நம் தர்மத்தைச் செய்தால், நிச்சயம் கை கொடுப்பான். 

புண்ணியம் வேண்டுமானால் பாப காரியம் பண்ணாதே.

பாவத்தைத்தான் நான் மூட்டை கட்டிக்கொள்வேனாக்கும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தால் மற்ற ஜீவன்களுக்கு கஷ்டத்தைக்கொடு.



oooooOooooo

[ 1 ]


1968 ல் பெரியவாளை செகந்தராபாத் அருகே உள்ளே ஒரு மலைக்குன்று மேல் உள்ள மஹா கணபதி கோவிலில் தர்சனம் பண்ணினார் ஒரு பக்தர். 

அப்போது பெரியவா அவருக்கு தன் படமும், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படமும் குடுத்தார். பக்தருக்கோ பரம ஆனந்தம்! 

மெட்ராஸில் ஒரு ஸ்டூடியோவில் குடுத்து அப்படங்களைப் என்லார்ஜ் பண்ணி, அழகாக frame பண்ணித்தரச் சொன்னார். 

இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிபோல் செய்தி வந்தது …. அந்த ஸ்டூடியோவில் தீப்பிடித்து ஏறக்குறைய எல்லாமே எரிந்துவிட்டது! என்று. 

அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடினார்……. ஸ்டூடியோ நிர்வாகி இவரைப் பார்த்ததும், “ஸார்… நீங்க கவலைப்படாதீங்க…. நீங்க குடுத்த பெரியவா படமும், வெங்கடாசலபதி படமும் பத்ரமா இருக்கு. நெருப்பு அதை கொஞ்சங்கூட தீண்டலைங்க ஸார்…” என்றார். இது ஒரு ஆச்சர்யம்!

சந்தோஷமாக அந்த படங்களை எடுத்துக் கொண்டு அவரும் ஒரு நண்பரும் காரில் பெரியவா முகாமிட்டிருந்த கார்டேர் நகருக்குச் சென்றனர். 



போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தபோது அடுத்த ஆச்சர்யம்…….. மடத்து பாரிஷதர் ஒருத்தர் இவர்களை அங்கே தேடிக் கொண்டு வந்து, “மெட்ராஸ்லேர்ந்து கார்ல படம் கொண்டு வந்தவாளை பெரியவா ஒடனே அழைச்சிண்டு வரச்சொல்லி சொன்னார்……..” 



இது என்ன! எதிர்கொண்டழைப்பது என்பது இதுதானா? அல்ப ஜீவன்களான நம்மை அந்த மஹாப் ப்ரபு எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாரா! ஆடித்தான் போனார் பக்தர். 



இரண்டு கரங்களாலும் புஷ்பங்களை அள்ளித் தூவினார் அப்படங்கள் மேல், சாக்ஷாத் பெரியவா!



அதே பக்தர் ஒருமுறை திருக்கடையூர் சென்றார் தன் நண்பருடன். அப்போது அமிர்தகடேசனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஆனந்தமாக கண்டு களித்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு ஒரு அரிய ஆனந்தமான ஒரு காக்ஷி !……… கருவறை லிங்கத்தின் மேல் பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்! இவரோ, தனக்கு பெரியவா மேல் உள்ள பக்தியால் ஏற்பட்ட மனப்ரமை என்று எண்ணினார். 


அதே சமயம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நண்பர் இவர் தோளைத் தட்டினார்…….. ”ஸ்வாமி…. உள்ள பாரும் ஒய்!…. பெரியவா தெரியறாளா? என்ன பாக்யம் ! என்ன பாக்யம்! சங்கரா.சங்கரா..” கண்கள் பனிக்க கன்னத்தில் போட்டுக் கொண்டார். 

பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!

[Thanks to Amirtha Vahini 31.07.2013]

oooooOooooo

[ 2 ]


பெண்கள் ஏன் அடக்கமாக 

இருக்க வேண்டும்?


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்கிறார்:-

பராசக்தி என்று அத்தனை ஆற்றல்களுக்கும் பிறப்பிடமாக ஒருத்தியைச் சொல்கிறோமே! அவளுக்கே “ஹ்ரீமதி” – “வெட்க குணம் படைத்தவள்” – என்று சஹஸ்ரநாமத்தில் பெயர் இருக்கிறது!

இதிலே ஒரு பெரியவ தத்துவமே உள்ளடங்கியிருக்கிறது. “பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும்” என்று நாங்கள் சொல்கிறபோது சில பேர் எங்களை ஆக்ஷேபித்து கேட்பார்கள். “நீங்கள் சொல்வது உங்கள் சாஸ்திரதுக்கே விரோதமாக இருக்கிறது. சக்தி என்ற வார்த்தையே பெண்பாலாக இருக்கிறது, ஜகத் வியாபாரம் செய்கிற மஹாசக்தியையும் நீங்கள் ஸ்த்ரீ தெய்வமாகத்தான் சொல்கிறீர்கள். ஸ்திரீகள் எல்லாரும் அவளுடைய ஸ்வரூபங்களேதான். தவ தேவீ பேதா: ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகல ஜகத்ஸு என்கிறீர்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவர்களை அடங்கி இருக்கச் சொன்னால் எப்படி?” என்று கேட்பார்கள்.

பதில் என்னவென்றால்: பராசக்தியிடம் அத்தனைசக்தி இருந்தாலும் அணுவுக்குள் உள்ள சக்தியிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றின் சக்தியையும் வெளியில் தெரியாமல் உள்ளே அடைத்து அடக்கிதானே வைத்திருக்கிறாள்? 

அது மாத்ரமில்லை. இத்தனை ஜகத் வியாபாரமும் பண்ணுகிற தன்னையும் வெளியே காட்டிக் கொள்ளமால் ஒளிந்துகொண்டுதானே இருக்கிறாள்? 

அதோடு, அவள் மஹாசக்தியாயிருந்த போதிலும், தன் சக்தி அத்தனையும் அடக்கி ஒடுக்கிக்கொண்டு, ‘ஸதி’ என்றே பெயர் பெற்ற மஹாபதிவிரதையாகவே பரமேஸ்வரனின் சாந்ததில்தான் தன்னுடைய நிறைவைக் கண்டு அப்படியே ‘சிவசத்யைக்ய ரூபிணியாக’ ஒன்றிக் கிடக்கிறாள். 

தான் செய்யும் ஜகத்-வியாபாரம் முழுவதையும் ‘பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம்’ என்ற பெயரில் ஈஸ்வரனே நடராஜனாகி ஆடிக்காட்டுவதைத்தான் அவள் சிதம்பரத்தில் காட்டி, தான் வெறுமனே பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிற ‘சிவ நடன சாக்ஷி’ யாக இருக்கிறாள். 

அதே மாதிரி ஸ்த்ரீகளும் தங்களுடைய சக்தியைத் தாங்களே வெளிக்காட்டாமல், வெளியிலே கொட்டாமல் அதை அடக்கி கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் இன்னும் சோபிதமாக ‘ரேடியட்’ ஆகும். அதில் சந்தேஹமில்லை. 

நான் ஏதோ அர்த்தமில்லாமல் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

வைஷ்ணவத்தில் ஜகத்வியாபாரம் முழுவதும் செய்கிற சக்தியாக மகாவிஷ்ணுவைச் சொல்லியிருக்கிறது. 

சாக்தத்தில் ‘சக்தி’ என்று ஸ்த்ரீயாகச் சொல்லியிருக்கிறதென்றால் வைஷ்ணவத்தில் மகாவிஷ்ணுவை ‘புருஷன்’ என்றே சொல்லியிருக்கிறது. ‘புருஷ ஸூக்தம்’ என்றே சொல்கிறது அவரை குறித்துதானே? 

அதிலே இரண்டாவது அநுவாகதிலே அவருடைய சக்தியை இரண்டு விதமாகப் பிரித்து, இரண்டும் அவருடைய இரண்டு பத்னிகள் என்று சொல்லியிருக்கிறது. 

ஒரு பத்னி நமக்கெல்லாம் தெரிந்த மஹாலக்ஷ்மி. சாதாராணமாக ஸ்ரீதேவி-பூதேவி என்று சொல்வதில் “ஸ்ரீ” அவள்தான். வெளியிலே பொங்கிக்கொண்டு தெரிகிற அழகும் அன்புமே “ஸ்ரீ” அல்லது “லக்ஷ்மி”. அவளை புருஷ ஸூக்தத்தில் இரண்டாவதாகச் சொல்லியிருக்கிறது. 

அப்படியானால் முதல் பத்னி என்ற பிரதம ஸ்தானம் அந்த ஸுக்தத்தில் – நமது மத மூலமான வேதத்திலேயே வருகிற ‘அதாரிட்டி’ வாய்ந்த ஸூக்தத்தில் – எவளுக்குக் கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், “ஹ்ரீ” என்ற லஜ்ஜா ஸ்வரூபிணிக்கே (”வெட்க உருவினளுக்கே”) கொடுத்திருக்கிறது! 

வெளியிலே தெரிவதைவிட சக்தி வாய்ந்ததான உள்ளடங்கிய அழகையும், அன்பையும்தான் அந்த உள்ளடக்கத்தாலேயே இங்கே “ஹ்ரீ” என்ற வெட்கமாகச் சொல்லியிருக்கிறது! 

சக்தி இருக்கிறது என்பதற்காக அதை ஸ்த்ரீ தெய்வமான ஹ்ரீ, தானே வெளியிலே அவிழ்த்துக் கொட்டவில்லை. ‘புருஷன்’ என்றே சொல்லப்படும் தன புருஷ தெய்வத்துக்கு அடங்கிய பத்னியாகத் தான் இருந்து கொண்டு  அவரே ஜகத் வியாபாரம் செய்யும்படி விட்டிருக்கிறாள்.

பரப்பிரமத்துக்கு வாசகமாக ஒரு மந்த்ரம் இருக்கிறது. “சக்தி பீஜம்” என்றே அதைச் சொல்வார்கள். ஆனால் அதுவே “வெட்கம்” என்பதன் அடியாகப் பிறந்ததாகத்தான் இருக்கிறது! ஹ்ரீ என்றால் “வெட்கம்” என்று சொன்னேனல்லவா? அந்த அக்ஷரதைக் கொண்டேதான் பராசக்தியின் மந்த்ர ஸ்வரூபம் இருக்கிறது. இதை ஸ்பஷ்டமாகத் தெரிவிற்கிராற்போல் சஹஸ்ரநாமத்தில் அந்த சக்தி பீஜாக்ஷரதைச் சொல்கிற நாமாவுக்கு அடுத்ததாகவே அவளுக்கு “ஹ்ரீமதி” என்ற நாமாவைக் கொடுத்திருக்கிறது.

ஆகையினால் ஸ்திரீகளிடம் சக்தி இருப்பது வாஸ்தவந்தான் என்றாலும் அதை அவர்கள் தாங்களே வெளிக்காட்ட வெட்கப்பட்டு, அடங்கி உள்ளே வைத்துக்கொண்டு, அதுவாக புருஷஜாதி மூலம் ரேடியேட் ஆக விடவேண்டும் என்பதுதான் தாத்பர்யம்.

பெண்களுக்கு வெட்கம் முதலான மேன்மைக் குணங்கள் ஜாஸ்தியாக இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தேன். 

அவர்கள் புருஷர்களைவிட சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள். பயப்பட்டு விலவிலத்துப் போவது, துக்க உணர்ச்சியில் குபுகுபுவென்று அழுவது இப்படியெல்லாம் அவர்களுடைய “நேச்சர்” இருக்கிறது.

இதெல்லாம் சின்ன அம்சங்கள். பெரிய அம்சங்கள் பரமோத்தமானவை.


[ Thanks to Sage of Kanchi 31.10.2013 ]




மகிழ்ச்சியானதோர் செய்தி






CHERUB CRAFTS ’அஞ்சு’ என்றும் ’ஏஞ்ஜலின்’ என்றும் 'GOLD 

FISH தங்க மீன்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படும்  

என் அன்புச் சகோதரி நிர்மலா அவர்களுக்கு இன்று


 4th DECEMBER பிறந்த நாள்.  








எல்லா வளங்களும் நலங்களும் பெற்று 

நீடூழி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

 

[நிர்மலாவுக்கு மிகவும் பிடித்த நேந்தரங்காய் சிப்ஸ்]

 


வலைப்பூவின் முகவரி  

PAPER CRAFTS
காகிதப் பூக்கள்




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்



60 comments:

  1. பொறுமையாக பகவானை நம்பி, நம் தர்மத்தைச் செய்தால், நிச்சயம் கை கொடுப்பான். (பெரியவா)

    இல்லையேல் கை கழுவி விடுவான்

    பெண்கள் ஏன் அடக்கமாக
    இருக்க வேண்டும்?(பெரியவா)

    அடக்கம் அமரருள் உய்க்கும்
    அதனால்தான் (திருவள்ளுவர்)

    நல்லதோர் செய்திகளை தரும் பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
  2. ///தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான் ///
    உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம்
    உள்ளம் சுருங்கினால் உறவும் பகையே
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. வெளியிலே தெரிவதைவிட சக்தி வாய்ந்ததான உள்ளடங்கிய அழகையும், அன்பையும்தான் அந்த உள்ளடக்கத்தாலேயே இங்கே “ஹ்ரீ” என்ற வெட்கமாகச் சொல்லியிருக்கிறது! //

    அறிய இருப்பவை எத்தனை எத்தனை !

    ReplyDelete
  4. பொறுமையாக பகவானை நம்பி, நம் தர்மத்தைச் செய்தால், நிச்சயம் கை கொடுப்பான்.
    அசிரிரி போல் உள்ளது. ததாஸ்து.
    ஆஹா கொடுத்து வைத்தவர்கள்.
    பெரியவா தரிசனம் கோவிலில் கிடைக்க

    ஸ்திரீகளிடம் சக்தி இருப்பது வாஸ்தவந்தான் என்றாலும் அதை அவர்கள் தாங்களே வெளிக்காட்ட வெட்கப்பட்டு, அடங்கி உள்ளே வைத்துக்கொண்டு, அதுவாக புருஷஜாதி மூலம் ரேடியேட் ஆக விடவேண்டும் என்பதுதான் தாத்பர்யம்
    ஆம் அதுதான் உண்மை. அனாதி காலமாக அதுதான் நடைபெற்று வருகிறது,
    லலிதா சஹாஸ்ரநாமத்தில் சுவாதின வல்லபா என்பதும் இதுதான்.

    ReplyDelete
  5. நல்லதொரு விளக்கம். புதுமையாகவும் இருக்கிறது. ஹ்ரீ அர்த்தம் இது வரை படிக்கலை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. "பொறுமையாக பகவானை நம்பி, நம் தர்மத்தைச் செய்தால், நிச்சயம் கை கொடுப்பான்" நல்ல அறிவுரை ..

    ReplyDelete
  7. எத்தனை அருமையான உபதேசம்?. 'ஹ்ரீ' என்பதன் பொருள் இது வரை தெரியவில்லை. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
  8. // பொறுமையாக பகவானை நம்பி... //

    மனம் தளராத அசாத்திய பொறுமை வேண்டும்...


    // வெளியிலே தெரிவதைவிட சக்தி வாய்ந்ததான உள்ளடங்கிய அழகையும், அன்பையும்தான் அந்த உள்ளடக்கத்தாலேயே இங்கே “ஹ்ரீ” என்ற வெட்கமாகச் சொல்லியிருக்கிறது... //

    உண்மை... உண்மை...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. ஆஹா என்னொரு அருமையான அருளுறை.பூஜைசமயங்களில்ப்ராணப்ரதிஷ்டையில் அஙன்யாஸ கரன்யாஸங்களில் ஓம் ஸ்ரீம் ஆம் பீஜம் ஹ்ரீம் சக்தி:என்று வரும் சிவசக்திசொரூபமாகவே பார்க்கனும் என்பதாகவே உபதேசித்திருக்கிறார்கள் நமக்காக விலாவரியாக மஹாபெரியவா நல்லபதிவு நன்றி

    ReplyDelete
  10. //எத்தனைச் சுற்று சுற்றினோமோ, அத்தனையும் திரும்பிச் சுற்றினால்தான் கட்டு சுழலும்.

    பாப வாசனை அவ்வளவும் தீர, அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். நடுவே அவசரமும் ஆத்திரமும் வேண்டாம். அப்படிச் செய்தால் சிக்கலாகி முடிச்சு விழுந்து விடும்.

    பொறுமையாக பகவானை நம்பி, நம் தர்மத்தைச் செய்தால், நிச்சயம் கை கொடுப்பான்.//

    எவ்வளவு அர்த்தமுள்ள உபதேசம்!..

    நல்ல விஷயங்களைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!..

    ReplyDelete
  11. படித்தேன் ரசித்தேன்.

    ReplyDelete
  12. அருமையான அமுத மொழிகள்......

    ReplyDelete
  13. அன்பின் வை.கோ

    சுற்றிச் சுற்றி வந்ததனால் ... - பதிவு அருமை அருமை.

    //தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான் என்பதை இராமாயணம் நிரூபிக்கிறது.

    ஸ்ரீராமனை வானரங்களும் ஆதரித்தன. இராவணனையோ சகோதரன் விபிஷணனே விட்டு விலகினான். //

    அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் செயல்கள் அருமை.

    //சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!
    //

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. எத்தனைச் சுற்று சுற்றினோமோ, அத்தனையும் திரும்பிச் சுற்றினால்தான் கட்டு சுழலும்.

    கர்மக்கட்டுகள் கழல சுற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்திய அருமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
  16. பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!

    திவ்ய தரிசனம் கிடைத்த பாக்கியவான்கள்..!

    ReplyDelete
  17. Periyavaalaip paatri yevvalavu padiththaalum thigattalai. Nandri.

    ReplyDelete
  18. ஸ்டூடியோ நிர்வாகி இவரைப் பார்த்ததும், “ஸார்… நீங்க கவலைப்படாதீங்க…. நீங்க குடுத்த பெரியவா படமும், வெங்கடாசலபதி படமும் பத்ரமா இருக்கு. நெருப்பு அதை கொஞ்சங்கூட தீண்டலைங்க ஸார்…” என்றார். இது ஒரு ஆச்சர்யம்!

    தீயும் தீண்டமுடியாத ஆச்சரியம் ..!

    ReplyDelete
  19. பாவத்தைத்தான் நான் மூட்டை கட்டிக்கொள்வேனாக்கும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தால் மற்ற ஜீவன்களுக்கு கஷ்டத்தைக்கொடு..

    கங்கணம் கட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்க
    இஷ்டப்படாமல் இனிமையாக இருக்கட்டும் ..!

    ReplyDelete
    Replies
    1. //கங்கணம் கட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்க
      இஷ்டப்படாமல் இனிமையாக இருக்கட்டும் ..!//

      திருப்பதிக்கே லட்டு
      திருநெல்வேலிக்கே அல்வா
      பழநிக்கே பஞ்சாமிர்தம்
      பன்ருட்டிக்கே பலாச்சுளை

      போல இனிமையாகவே தான் இதுவரை தொடர்கிறது.
      இனியும் இனிமையாகவே தான் இருக்கும் ...... திகட்டும்வரை.

      Delete
  20. சாக்தத்தில் ‘சக்தி’ என்று ஸ்த்ரீயாகச் சொல்லியிருக்கிறதென்றால் வைஷ்ணவத்தில் மகாவிஷ்ணுவை ‘புருஷன்’ என்றே சொல்லியிருக்கிறது. ‘புருஷ ஸூக்தம்’ என்றே சொல்கிறது அவரை குறித்துதானே?

    சிவ சக்தி ஐக்ய ஸ்வரூபிண்யை நம:

    ReplyDelete
  21. யாதேவி சர்வ பூதேஷு லஜ்ஜா ரூபேண சம்ஸ்திதா:
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    ReplyDelete
    Replies
    1. சர்வ வல்லமைகள் பொருந்தியவர்களாக இருப்பினும், லஜ்ஜா ரூபம் மட்டுமே, ஸ்திரிகளின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

      அத்தகைய உத்தம ஸ்திரீகள் அனைவருக்கும் நம் நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். ;)

      Delete
  22. //

    தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான் என்பதை இராமாயணம் நிரூபிக்கிறது. //ராமாயணம் பற்றி மிக அழகாக ஒரு வாக்கியம் படைத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  23. அருமையான பகிர்வு! சிலிர்க்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
  24. Thanks A Bunch :) for your blessings wishes and for the yummy munchs

    ReplyDelete
  25. Such a divine post and very nice explanation about the strength of women.Thx for sharing

    ReplyDelete
  26. //பாப வாசனை அவ்வளவும் தீர, அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். நடுவே அவசரமும் ஆத்திரமும் வேண்டாம். அப்படிச் செய்தால் சிக்கலாகி முடிச்சு விழுந்து விடும்.// arumayana unmai.

    Adakkam irupaalarukkume nalladhu. "Adakkam amararul uikum adangaamai aarirul uithuvidum"

    I tried your keyboard shortcut and i could read the small letter post too. Thanks Gopu Sir.

    ReplyDelete
  27. 4th DECEMBER பிறந்த நாள் கொண்டாடிய
    CHERUB CRAFTS ’அஞ்சு’ என்றும் ’ஏஞ்ஜலின்’ என்றும்
    GOLD FISH தங்க மீன்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படும்
    அன்புச் சகோதரி நிர்மலா அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...!

    ReplyDelete
  28. அருமையான பகிர்வு ஐயா...

    ReplyDelete
  29. புண்ணியம் வேண்டுமென்றால் பாப காரியங்கள் பண்ணாதே.
    போட்டோ விஷயங்கள் மிகவும் அருமை.கருவரை லிங்கத்தின் மீது பெரியவாள் தெரிந்தது மனப்ரமையோ?
    பக்கத்திலுள்ளவருக்கும் தெரிந்தது.
    செய்த புண்ணிய பலன்கள்தான் இவைகள். ஸாக்ஷாத் பரமேசுவரனே அவர்.
    ஹ்ரீம் அர்த்தம் கேட்க புதிய விளக்கமாகத் தோன்றியது. அன்புடன்

    ReplyDelete
  30. ஹ்ரீமதி அர்த்த விளக்கம் அருமை. பல முறையாக எழுதியும் ஏனோ போஸ்டாகவில்லை. ஒவ்வொரு விஷயமும் அருமையாக எழுதப் பட்டுள்ளது.. அன்புடன்

    ReplyDelete
  31. Really rice post.. thank you very much..
    Belated Birthday Wishes to Mrs. Nirmala Madam..

    ReplyDelete
  32. பெண்களின் நிலைமையைப் பற்றி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் சித்தரிக்கும் விதம் அச்சத்தைத் தருகிராத். இந்த சமயத்தில் நம்பிக்கை தரும் விதமாக அமைந்திருக்கிறது உங்கள் பதிவு. அதற்காக உங்களுக்கு நன்றி சார்.
    திருமதி நிர்மலாவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

  33. //தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான் என்பதை இராமாயணம் நிரூபிக்கிறது.

    ஸ்ரீராமனை வானரங்களும் ஆதரித்தன. இராவணனையோ சகோதரன் விபிஷணனே விட்டு விலகினான். //அருமையான அமுத மொழி! நெஞ்சில் நிற்கும்! நினைவை விட்டு அகலாது! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  34. ////பெண்கள் ஏன் அடக்கமாக
    இருக்க வேண்டும்?/// ஹா..ஹா..ஹா.. இதைச் சொன்னவர் ஆர்ர்?:))

    ஞ்சுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு “கட்”பெரியோடும்:), கொஞ்சம் நேத்திரம் சிப்ஸ்ஸோடும் முடிச்சிட்டார் கோபு அண்ணன்:).. பதிவிலே வாழ்த்தியமைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. சக்தியின் பல அம்சங்கள் குறித்த பகிர்வுக்கு நன்றி! சகோதரி நிர்மலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. அமுத மொழிகளும், மற்ற விஷயங்களும் அருமை...

    ஏஞ்சலின் அவர்களுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  37. வணக்கம்
    ஐயா

    பதிவின் மூலம் பல விடங்கள் அறியக்கிடைத்துள்ளது.. அருமை வாழ்த்துக்கள் ஐயா..

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  38. தன்னை நம்பும் பக்தருக்கு தன்னை காட்டிக் கொடுக்கிறார், மஹா பெரியவா.
    பெண்களை பற்றி எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறார்! ஹ்ரமதி விளக்கம் அருமை.

    ReplyDelete
  39. சிலிர்க்க வைத்த சம்பவங்கள்!!

    ReplyDelete
  40. ஐயாவிற்கு வணக்கம்..
    பதிவில் மிக ஆழமான விடயங்கள் ஐயா. அனைத்தும் மனதில் உள்வாங்கி வாழ்க்கையில் கடைபிடித்தால் (கடைபிடிக்க முயற்சி செய்தாலே) வாழ்க்கைக்கான மோட்சம் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. சிறப்பான தகவல்களைத் தொடர்ந்து காண தரும் தங்களுக்கு அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  41. நல்லதொரு சம்பவம்....அஞ்சுவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  42. பொறுமையாக பகவானை நம்பி, நம் தர்மத்தைச் செய்தால், நிச்சயம் கை கொடுப்பான். //

    அருமையான அமுத மொழி.
    சம்பவங்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்.
    நல்ல பகிர்வுகளை தேடி தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
    அஞ்சுவுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    ஊரிலிருந்து இப்போது தான் வந்தேன்.
    மற்ற எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  43. படங்கள் இரண்டும் அக்னி பகவான் தீண்டாதது ஒரு அதிசயமே.

    ReplyDelete
  44. பகவானிடம் பரிபூர்ண நம்பிக்கை வைத்து நம் தர்மத்தை நாம் செய்வோம்

    ReplyDelete
  45. // பொறுமையாக பகவானை நம்பி, நம் தர்மத்தைச் செய்தால், நிச்சயம் கை கொடுப்பான். //

    கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அந்த பகவான் நிறைய நல்லவற்றை கொடுத்திருக்கிறான். மேன் மேலும் நல்லதைச் செய்ய மேன்மேலும் நல்லதையே கொடுப்பான். அதை நம் காலம் முடிவதற்குள்ளாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    // பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!//


    கொடுத்து வைத்தவர்கள். சின்ன வயதில் மைலாப்பூரில் வசித்த போது மகா பெரியவாளின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 21, 2015 at 3:12 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அந்த பகவான் நிறைய நல்லவற்றை கொடுத்திருக்கிறான். மேன் மேலும் நல்லதைச் செய்ய மேன்மேலும் நல்லதையே கொடுப்பான். அதை நம் காலம் முடிவதற்குள்ளாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும். //

      வெரி குட் .... வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ஆம் நமக்கு அனைத்தையும் எதேஷ்டமாகத்தான் கொடுத்திருக்கிறார்.

      //கொடுத்து வைத்தவர்கள். சின்ன வயதில் மைலாப்பூரில் வசித்த போது மகா பெரியவாளின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம் ஜெயா. அதனால் தான் நம் ஜெயாவுக்கு இன்று எதிலும் ஒரே ஜெயமாகவே உள்ளது. :)))))

      >>>>>

      Delete
  46. // அதே மாதிரி ஸ்த்ரீகளும் தங்களுடைய சக்தியைத் தாங்களே வெளிக்காட்டாமல், வெளியிலே கொட்டாமல் அதை அடக்கி கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் இன்னும் சோபிதமாக ‘ரேடியட்’ ஆகும். அதில் சந்தேஹமில்லை. //

    அடங்கி இருப்பதில் ஒன்றும் தவறே இல்லை. அடக்கம் அமரருள் உய்க்கும்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 21, 2015 at 3:13 PM


      **அதே மாதிரி ஸ்த்ரீகளும் தங்களுடைய சக்தியைத் தாங்களே வெளிக்காட்டாமல், வெளியிலே கொட்டாமல் அதை அடக்கி கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் இன்னும் சோபிதமாக ‘ரேடியட்’ ஆகும். அதில் சந்தேஹமில்லை.**

      //அடங்கி இருப்பதில் ஒன்றும் தவறே இல்லை. அடக்கம் அமரருள் உய்க்கும்.//

      ஆஹா, புரிகிறது. ம்ம்ம்ம் ..... அதனால்தான் நாங்களும் அடிக்கடி மேலிடத்திடம் அடங்கியே இருக்கோமாக்கும் :)))))

      Delete
  47. பொம்புள ஆளுகல்லா சகதியோ.

    ReplyDelete
    Replies
    1. mru October 27, 2015 at 1:00 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //பொம்புள ஆளுகல்லா சகதியோ.//

      ஹைய்யோ, ’சகதியோ’ என்பது ...... தப்பு .... தப்பு.

      தலையில் நறுக்குன்னு குட்டுப் போட்டுக்கோங்கோ. :)

      பெண்கள் எல்லோரும் ‘சக்தி’ மட்டுமே

      சக்தி வேறு ..... சகதி வேறு ..... எனக்கு ஒரே சிரிப்பாணி பொத்துக்கிச்சு ..... உங்களின் இந்தக்கமெண்டைப் படித்ததும்.

      Delete
  48. பகவானே கதியென்று நம் தர்மத்தை நாம் செய்வோம். நம்க்கு என்ன கிடைக்கணும் என்று அவர் நினைக்கிறாரோ அது கண்டிப்பாக நமக்கு கிடைத்துவிடும்.

    ReplyDelete
  49. //தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்// இன்றைய அமுதத்துளி கூடுதல் சுவை..

    ReplyDelete
  50. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (25.09.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=500623517107014

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  51. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.09.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=501999400302759

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete