About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, December 10, 2013

93 ] உயர்ந்த மனிதன் !

2
ஸ்ரீராமஜயம்


 

மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். 

”படைக்கப்பட்ட வர்க்கங்களிலேயே இவன்தான் உயர்ந்தவன் என்பதால் இப்படி இவனைப் படைத்திருப்பது” என்று பெருமையாகச் சொல்வதுண்டு. 

ஆனால் இந்த உயர்வு, அஹம்பாவத்திலேயும் தற்பெருமையிலும் கொண்டுபோய் விட்டால் இவன் விலங்கினங்களுக்கும் கீழே போக வேண்டியதுதான். 

போட்டிகள் இருக்கிற வரையில் மன நிறைவு யாருக்கும் உண்டாகாது. 

பொருளாதார ’வசதி’ மட்டுமே உண்டாவதால், இந்தப் போட்டிபோட  இன்னொரு பொருளே இல்லை என்ற ஞானம் வரவேண்டும்.

அப்போதுதான் மனச்சாந்தியோடு நிறைவாக வாழலாம்.


காயத்ரி மந்திரத்தினுடைய பலன் சித்தசுத்திதான். மனமாசு அகலுவதுதான். 

oooooOooooo

[ 1 ]
ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அம்மாளின் 

ஸ்ரீ மஹா பெரியவாள் தரிஸன அனுபவங்கள்


மஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது. 

நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது.

நான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்டங்கள். 

திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன். 

அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம் செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். 

அவரிடம் சென்று என் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி பரிஹாரம் கேட்டேன்.

ஒரு வெள்ளிக் குத்துவிளக்கில் லட்சுமி-சரஸ்வதி-பார்வதி ஆகிய மூன்று அம்பிகைகளை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார். அப்படியே செய்து வந்தேன்.

ஒருநாள், ஒரு பரதேசி என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். 

ஏதோ சில்லரைக் காசு கொடுத்தேன். 

அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, குறி சொல்பவன் போல், “குத்துவிளக்குப் பூஜையெல்லாம் உபயோகப்படாது… காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

தெருவில் வேறு எந்த வீட்டிலும் சென்று யாசிக்காமல் தெருவைக் கடந்து போய்விட்டான்.

இது என்ன தெய்வ வாக்கா? இல்லை, வெறும் பிதற்றலா? அல்லது, இத்தனை நாட்களாகச் செய்த விளக்கு பூஜையின் பலனா?
மனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.


‘காஞ்சிப் பெரியவாளை சேவித்துக் கேட்கலாமே’ என்று ஒரு யோசனை பளீரிட்டது. 

பெரியவாளை தரிசித்து, சேவித்து, என் கஷ்டங்களை திருச்செவி சாற்றினேன்.

”கருந்துளசிச் செடி பூஜை செய்’” என்று அனுக்ரஹம் ஆயிற்று.

என் மனத்துக்குள் ஒரு சங்கல்பம். 

அந்தப் பரதேசி சொன்னபோது நான் தயங்கியதற்கும் காரணம் இருந்தது. 

துளசி மாடத்தில் துளசியை வைத்து நான் பூஜை செய்தால், அந்தச் செடி சில நாள்களிலேயே பட்டுப் போய்விடும். 

பெரியவாளிடம் என் சங்கடத்தை விண்ணப்பித்தேன்.

நான் கூறி முடித்தபிறகும், “நீ, கருந்துளசி பூஜையே செய்” என்றார்கள்.

 

கருந்துளசிச் செடி நட்டு, பூஜை செய்யத் தொடங்கினேன்.

ஆச்சரியம்! செடி கப்பும் கிளையுமாக, சிறு ஆலமரம் போல் செழித்து வளரத் தொடங்கியது.

துளசிச்செடி வளர வளர என் துன்பங்கள் குறைந்து கொண்டே வந்தன.

இன்றைக்கும் எங்கள் வீட்டில் கருந்துளசி நிறைய வளர்கிறது.


கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.

பெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று வருகிறார்கள்.


ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார். 

தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?” என்று கேட்டார்கள்.
பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.


“இதன் பேர் – பேத்தி இலை. 

இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். 

இது தங்கத்துக்கு சமானம். 

தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். 

அவ்வளவு ஒஸத்தி ! அபூர்வம் ! 

எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். 

ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”



இதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன். 

கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.





பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.

உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள். 

எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன் !

அன்று முதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு?

[ Thanks to Sage of kanchi 27.10.2013 ]

oooooOooooo


[ 2 ]


பிரகஸ்பதி கொடுத்த வரம் 



[மஹா பெரியவா..... சொன்னது]







“இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது. 



அரிசி மூட்டை என்ன விலை?”



“நம்ப நிலத்துல வெளஞ்சது ஸ்வாமி! 


ரொம்ப உயர்ந்த ரகம்.. 

உங்களைப் போல் மஹான்கள் சாப்பிடற விஷயத்துல 

நான் மத்தவாளை 


நம்பறதில்லே.. 

காய்கறிகளும் அப்படித்தான். ஒரு சொத்தை, 

அழுகல் இல்லாம நானே

பார்த்து வாங்கினேன். 

மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம்!”

மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மஹான்.

அவன் பேசி முடித்ததும் 

“அது போலத்தான் அர்ச்சனை பூக்களும்.

 வில்வத்திலேயும், துளசியிலேயும், எத்தனை ஓட்டை தெரியுமா! 

நெறைய அழுகல் பூ இருந்தது. 


இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான் இருக்கும் என்று

பகவான் நினைக்க மாட்டாரா? 


தேவதைகள் நம்ப வேண்டாமா? 


பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் 

கவனமா இருக்கணும்” என்றார்.


வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா..

அவாளுக்கு கிரஹங்களும் நிறைய உபசரணை பண்றா.


ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும், நித்திய கர்மாக்களுக்கு 

மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாமப் 

போயிடறது. 



சிரமம் வந்தாத்தான் பகவானை நினைக்கறதுங்கிறதை மாத்திக்கணும்.


“வீட்டுலே யாருமே இல்லே…பொழுது போகலே..”ன்னு

தவிக்கற 


நேரங்கள்லே, பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு 

இனிமையா நாலு


ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன்.



மனசு எத்தனை விஷ்ராந்தியாறதுன்னு புரியும்.


தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன்,

வேளா வேளைக்கு அன்னமும், 

கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது

மட்டும் ரட்சணை இல்லை. 



அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை

தினமும் ஒரு 

அரைமணி சம்பாஷிக்கணும். 



அப்படிப்பட்டவனை பிரம்மா 


ஆசிர்வாதம் பண்றார்.



தாயார், குடி இருந்த கோவிலில்லையா?

இதேபோல அன்பாய் 

இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியில் பூமி சொந்தமாய்

அனுபவிக்கும் யோகம் கிடைக்கும்.



ஏன்னா,  பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.

குருவை மரியாதையா நடத்தறவனுக்கு, 

மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை 

பண்றவாளுக்கு, அடுத்த பிறவியில் படிப்பு நன்றாக வரும்.  


பிரகஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார்.



[Thanks to Amritha Vahini 20.11.2013]



oooooOooooo

[ 3 ]

இந்த மாதிரி ஒரு மோட்சம் நமக்கு கிடைக்க 
நிச்சயம் வாய்ப்பில்லை. 

இருந்தாலும் இந்த மாதிரி மோட்சம் கிடைப்பதற்கு 
நாம் பிரார்த்தனை செய்வோம்.



-oOo-


முதுமை, உடல் தளர்ச்சி, துணை இல்லாமல் வெளியே போக முடியாது. ஆட்டோ, டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.

நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது.

அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும். ஒரே ஒரு தடவை.

வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது. 

ஆனால், நாள் ஆக, ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே போயிற்று.



வாசற்படியில், காலடிச் சத்தம் கேட்டாலே, அவன் தானோ? என்ற திகில் போகவேண்டியிருக்கிறதே? என்ற அச்சம் இல்லை; தரிசிக்காமல் போகிறோமே! என்ற ஏக்கம்.

ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.

ஆமாம், காலடிச் சத்தம்.

”உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்தரவு” என்றார் வந்தவர்.

வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது. 

நான் எனக்குள் தானே பேசிக் கொண்டேன்? 

அதெப்படி பெரியவாளுக்குக் கேட்டிருக்கும்?
நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா? இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவரா? எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த திருவுருவம், காலத்தால் மறைந்துவிடவில்லை.


மடத்துப் பணியாளர், என் தோளைப் புடிச்சிண்டு நடந்து வந்து கார்லே ஏறிக்கிறேளா? என்றார்.

”காரா ? விமானத்தையல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!”

இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த சமயத்தில், பெரியவாள் அன்னை காமாக்ஷி கோயிலில் இருந்தார்கள்.

அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா? என்றார் சிப்பந்தி.

முதல்லே, பெரியவா தரிசனம் அப்புறமா.......

பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார். 

பேச்சு வரவில்லை. 

கண்கள் பேசிக் கொண்டன. 

ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.


ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.


பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து, அந்தச் சரீரத்தின் மேல் போர்த்தச் சொன்னார்கள். 

மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளைச் செய்யும்படி உத்தரவாயிற்று.



முதல்லே பெரியவா தரிசனம்; அப்புறமா ....... அப்புறமா அம்பாளைத் தரிசித்துக் கொள்ளலாம் என்று சொல்லத்தானே விரும்பினார். 

அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.

அரைமணி கழித்து, அவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அம்பாளை தரிசிக்க. 

இனி, எந்த ஒரு தாயின் கர்ப்பமும் அவருக்குக் கிருஹம் ஆகமுடியாது!



யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.
அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை.



நினைவு கூர்ந்தவர்:  ராயபுரம் பாலு அண்ணா அவர்கள்
[Thanks to Amritha Vahini 09.12.2013]

oooooOooooo

[ 4 ]

தலைவலி எங்கே போனது?

திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத் தவிப்பில் இருந்தார். 
1969 ஜனவரி 24-ல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி இவரை வாட்டியது. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பது வழக்கமாகி விட்டது. ஒரு வேளை மூளையில் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தலைவலியின் வேகம் இருந்தது. ஒரு மாத காலம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இவர் டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் நாள் வந்து சேர்ந்தார்.
விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் ஸ்ரீபெரியவாளை தரிசித்தார். 
மாலை சுமார் நாலு மணிக்கு ஸ்ரீபெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்தபோது இவர் ஸ்ரீபெரியவா முன்பாக நின்றார்.
‘உனக்கு பிரஹசரணம்னா தெரியுமா?’ என்று ஸ்ரீபெரியவா கேட்டார். சம்பந்தமில்லாத கேள்வியாக இது இவருக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இவர் வடமாள் பிரிவைச் சார்ந்தவராயிருந்தாலும் இவரது மனைவி பிரஹசரணம் பிரிவைச் சார்ந்தவள். அதை சுட்டுக்காட்டவே ஸ்ரீபெரியவா இப்படிக் கேட்பதாக இவருக்குப் புரிந்தது.
ஸ்ரீபெரியவாளிடம் தான் இப்படி மணந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பின் இவர் தன்னுடைய தலைவலி உபாதை பற்றிக் கூறி அதற்காகவே பிரத்யேகமாக ஆபீஸில் விடுப்பு எடுத்து ஸ்ரீபெரியவாளிடம் வந்திருப்பதாகவும் அதற்காக பிரபு தயவு செய்து உபாயம் கூறவேண்டுமென்றும் வேண்டி வணங்கினார்.
‘உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?’ என்று ஸ்ரீபெரியவா கேட்க இவர் வெட்கத்துடன் ஸம்ஸ்க்ருதம் படிக்காததைக் கூறினார்.
‘நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தஸகம் படிச்சுண்டு வா’ என்று அனுக்ரஹித்து அனுப்பினார். [தஸகம் = 10 ஸ்லோகங்கள்]
இவர் உத்தரவு வாங்கிக் கொண்டு தன் காரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.
‘பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்’ என்று சொல்ல இவரும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து இரவு உணவு உட்கொண்டுதான் போக வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் இவருக்கோ ஒரே பயம். அங்கிருந்து ஐதராபாத்துக்கு விரைவாகச் சென்றாலும் இரவு பத்து மணியாகிவிடும் – இரவு பத்து மணிக்கு தினமும் வரும் தலைவலி வந்துவிடுமே என்பதுதான் அந்தப் பயம்.
‘ரொம்ப நேரமாகாது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அந்த மாது அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.
பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஐதராபாத்துக்கு இரவு 10 மணிக்கு பயத்துடன் போய் சேர்ந்து தலைவலியை எதிர்பார்த்தார்.
ஆனால் தலைவலி எங்கு போனதோ? வருமோ வருமோ என்று பயந்து சென்ற மாதங்களில் தவித்த அந்தத் தலைவலி அன்று வரவேயில்லை. 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு.
சரி ஏதோ இன்று மட்டும் வராமல் விட்டு விட்டு நாளை வரலாமென்ற பயமும் சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனால் அன்றென்ன என்றென்றும் அதன்பின் தினமும் இரவு 10 முதல் ஒரு மணி நேரம் வரை உயிரை எடுத்த தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.
ஸ்ரீபெரியவாளின் திருவாக்கின்படி இவர் அவ்வருடம் மார்ச் மாதம் 7ஆம் தேதிஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை ஆரம்பித்தார்
நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு திருமணங்கள் 
மங்களகரமாக நிச்சயித்து நடக்கப்பட்டதென்றும்,  அவர்கள் யாவரும் 
இப்போது சஷ்டி அப்தபூர்த்தி செய்து வாழ்வது ஸ்ரீபெரியவாளின் 
அருளால்தான் என்கிறார்  இந்த பக்தர்.

[இதே திரு. சுந்தர்ராஜன் அவர்களுக்கு ஏற்பட்ட மேலும் சில அதிசய அனுபவங்கள் இந்தத்தொடரின் அடுத்த பகுதியான பகுதி-94ல்  இடம்பெறும்.]



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

59 comments:

  1. இந்த உயர்வு, அஹம்பாவத்திலேயும் தற்பெருமையிலும் கொண்டுபோய் விட்டால் இவன் விலங்கினங்களுக்கும் கீழே போக வேண்டியதுதான்.

    அடக்கம் அமரருள் உய்க்கும் ...
    அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் ...!

    ReplyDelete
  2. பொருளாதார ’வசதி’ மட்டுமே உண்டாவதால், இந்தப் போட்டிபோட இன்னொரு பொருளே இல்லை என்ற ஞானம் வரவேண்டும்.

    அப்போதுதான் மனச்சாந்தியோடு நிறைவாக வாழலாம்.


    காயத்ரி மந்திரத்தினுடைய பலன் சித்தசுத்திதான். மனமாசு அகலுவதுதான்.

    மனமாசு அகற்றும் காயத்ரி மந்திரத்தின் அற்புத பெருமையினை சிறப்பாக உணர்த்திய பகிர்வுகள்..!

    ReplyDelete
  3. காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…”

    கருந்துளசி பூஜையின் மகிமையை சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு இனிய நன்றிகள்..!

    ReplyDelete
  4. ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும், நித்திய கர்மாக்களுக்கு

    மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாமப் போயிடறது.

    நிதர்சனமான உண்மை..!

    ReplyDelete
  5. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை
    தினமும் ஒரு அரைமணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா ஆசிர்வாதம் பண்றார்.

    பிரகஸ்பதி கொடுத்திருக்கும் அற்புத வரம் நினைவில் கொள்லத்தக்கது..!

    ReplyDelete
  6. முதல்லே பெரியவா தரிசனம்; அப்புறமா ....... அப்புறமா அம்பாளைத் தரிசித்துக் கொள்ளலாம் என்று சொல்லத்தானே விரும்பினார்.

    அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.

    அரைமணி கழித்து, அவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அம்பாளை தரிசிக்க.

    இனி, எந்த ஒரு தாயின் கர்ப்பமும் அவருக்குக் கிருஹம் ஆகமுடியாது!

    யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.
    அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை.

    காலடிச்சத்தமும் , விமானப்பயணமும் பிராப்தியாகிவிட்டதே..!

    ReplyDelete
  7. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு.

    விரைவான நிவாரணம் கிடைத்தது ஆச்சரியம் ..!

    ReplyDelete
  8. கிடைத்தற்கரிய மானிடப் பிறப்பின் தத்துவம் ..
    கிடைத்ததை ஏற்று போதுமென்ற மனத்துடன்
    போட்டி பொறாமை அற்று சித்தசுத்தியுடன் வாழ்வது...
    அழகாக சொன்னீர்கள் ஐயா..
    படிக்க படிக்க பெரியவரின் அருள் எனக்கும் கிடைத்தது
    போல ஓர் உணர்வு ஐயா...

    ReplyDelete
  9. வணக்கம்!

    நல்ல நெறிகளை நாளும் படைக்கின்ற
    வல்ல மனத்துக்கென் வாழ்த்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. மிக அருமையான பகிர்வு!!...ஸ்ரீ மஹா பெரியவரின் அனுக்கிரஹம் நம் மேல் மழையெனப் பொழிய வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா!!

    ReplyDelete
  11. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
    அதனினும் கூன் குருடு செவிடன்றி பிறத்தல் அதனினும் அரிது//
    கிடைத்தற்கரிய பேற்றினைப் பெற்றுள்ள நாம் போதுமென்ற மனத்துடன் வாழ்வது நன்று என்னும் உயரிய சிந்தனையினை அழகாய் விளக்கியுள்ளீர்கள் ஐயா நன்றி

    ReplyDelete
  12. கருந்துளசியின் மகிமையை அறியும்படிக்கு சிறப்பாக இருந்தது பதிவு!..

    ஜய ஜய சங்கர!.. ஹர ஹர சங்கர!..

    ReplyDelete
  13. சிறப்பான கருத்துகள் உட்பட அனைத்து சம்பவங்களும் அருமை ஐயா... தொகுத்து அருமையாக பரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. கருந்துளசி ஏற்கெனவே படிச்சேன். கடைசி இரண்டு நாள் முன்னே தான் படிச்சேன். :)))

    ReplyDelete
  15. //போட்டிகள் இருக்கிற வரையில் மன நிறைவு யாருக்கும் உண்டாகாது.

    பொருளாதார ’வசதி’ மட்டுமே உண்டாவதால், இந்தப் போட்டிபோட இன்னொரு பொருளே இல்லை என்ற ஞானம் வரவேண்டும்.

    அப்போதுதான் மனச்சாந்தியோடு நிறைவாக வாழலாம்.//

    எப்போவோ போட்டி போடறதை விட்டுட்டேன். எதுக்கும், யாரோடயும் போட்டி போடறதே இல்லை. போட்டிகளில் கலந்துக்கறதும் இல்லை. :)))

    ReplyDelete
  16. பேத்தி இலையைப்பற்றி நான் எங்கள் பாட்டி இருக்கும் போது அறிந்தது. பாட்டி தட்டில் சாப்பிடமாட்டாள். சாப்பிடும் தட்டிற்கு எச்சதட்டு என்ற பெயர் உண்டு.அது தனியாகத்தான் வைக்கப்படும்.
    சில நாட்கள் பாட்டிக்கு ச்சாப்பிட இலை இல்லை என்றால்,
    அக்கம்பக்கத்தில் இடிந்த வீடுகளின் மேல் வாளிப்பாக வளர்ந்திருக்கும் பேத்தி இலைகளைக் கொண்டு வருவார்.
    பேத்தி இல்லையது. பேய் அத்தி. துவாதசியன்று அதில்தான்
    சாப்பாடு பாட்டிக்கு. மரத்தில் சடைசடையாக காய்களும் இருக்கும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi December 10, 2013 at 2:12 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //பேத்தி இல்லையது. பேய் அத்தி. மரத்தில் சடைசடையாக காய்களும் இருக்கும். //

      நான் இதைப்பார்த்திருக்கிறேன். பிக்ஷாண்டார் கோயிலில் என் மாமியார் வீட்டுக் கொல்லைப்புறம் இந்த மரம் ஒன்று இருந்தது. அவர்கள் டிபன் பலகாரம் சாப்பிட பெரும்பாலும் இதைத்தான் பறித்து உபயோகிப்பார்கள். எனக்குக் கல்யாணம் ஆன புதிதில் இதைப்பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். ;)

      அன்புடன் கோபு

      Delete
  17. வடக்கேயிருந்து கும்பல் கும்பலாக வந்துதான் தெற்கே குடியேறினோம். அப்படி வந்து குடியேறும்போது நீங்கள் யார்?எவ்வளவு பேர்கள் என்று கேட்டபோது நாங்கள் அஷ்ட
    ஸஹஸ்ரம் என்று ஒரு குழுவினர் தெறிவித்தனர்.
    அவர்கள் அஷ்ட ஸஹஸ்ரம் எனவும், அவர்களின் வாரிசுகளே
    இந்தப்பெயர் கொண்டவர்கள். 8000 பேர்கள் கொண்ட குழு.
    ஒரு குழுவினர் வாத்தியம் வாசித்துக் கொண்டே வந்தனர்.
    அவர்கள் வாத்திமர்கள்
    நடந்து வந்ததில் கால்கள் பூரவும் மண்ணாக இருந்த ஒரு குழுவினர் பிருஹத் சரணம் .
    ஒரு குழுவினர் வடக்கே இருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டனர்.
    அவர்களின் வாரிசுகளே வடமர்.
    இப்படி,வடமா,வாத்திமா,தொடர்ந்து பிரிவுகளுக்கு அர்த்தம் சொல்லுவார். எல்லோரும் கூட்டம்,கூட்டமாக வந்து குடியேறியவர்கள்.எல்லோரும் ஒன்றுதான். இது ஞாபகம் வந்தது.
    அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi December 10, 2013 at 2:27 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      பிரஹசரணம், வடமாள், வாத்திமா, அஷ்டசாஸ்திரம் போன்றவற்றிற்கு அழகாகக் காரணம் சொல்லியுள்ளது மிகவும் அருமையாக ரஸிக்கும்படியாக உள்ளது.

      நாங்கள் பிரஹசரணம் தான்; அதுவும் மழநாட்டு பிரஹசரணம் [நன்னா வக்கனையா வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் ருசி பார்த்து சாப்பிடும் ஆசாமிகள் ;) ]

      என் நாட்டுப்பெண்களில் ஒருத்தி மட்டும் வடமாள் ;)

      தங்கள் அன்பான வருகைக்கும் அழகான சில புதிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். பிரியமுள்ள கோபு.

      Delete
    2. Kamatchi December 10, 2013 at 2:27 PM

      வடமச்செட்டும், வாத்திமா கட்டும் என்று இங்கு எங்கள் பக்கம் வியப்பாக பழமொழி சொல்லுவார்கள்.

      அதாவது வடமாள் செட்டாக - சிக்கனமாக இருப்பார்களாம். ஆனால் என் மருமகள் அப்படி இல்லை. சமையல் சாப்பாடு எதுவும் தாராளமாக இருக்க வேண்டும் அவளுக்கு. எதையும் தாராளமாகச் செய்து ஏராளமாக பரிமாறுபவள் தான்.

      வாத்திமாக்கட்டு என்றால் அவர்கள் கட்டிக்கொள்ளும் புடவையைச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதாவது ஜவுளிக்கடையில் உள்ள பொம்மைகளுக்கு புடவை கட்டினால், அது அசங்காமல், கசங்காமல், அப்படி புதுசாவே எப்போதும் இருக்குமோல்யோ !

      அதுபோல இவர்கள் [வாத்திமா] புடவை கட்டிக்கொண்டாலும், நாள் முழுவதும் அது அப்படியே கசங்காமல், அசங்காமல், அவிழாமல், நழுவாமல் இருக்கும் போலிருக்கு. ;)

      Delete
  18. எனக்குத் தெரிந்த நண்பர் அவர் பிள்ளைக்கு வடமாள் பெண்ணே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவர் எண்ணப்படி வடமா பிரிவைச் சேர்ந்தவர்கள் நம்பக்க கூடியவர்கள் அல்ல. எத்தனை பிரிவுகள் குணாதிசயங்கள்...!

    ReplyDelete
  19. //காயத்ரி மந்திரத்தினுடைய பலன் சித்தசுத்திதான். மனமாசு அகலுவதுதான். // எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள்.
    உங்கள் பதிவின் மூலம் பெரியவாளின் பன்முகங்களை அறியமுடிகிறது. காமாக்ஷிமாவின் பதிலில் நிறைய செய்திகள்.

    ReplyDelete
  20. ஐயாவிற்கு வணக்கம்
    அனைத்து நிகழ்வுகளையும் மிக அழகாக தொகுத்து அளித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். மனிதன் பெரியவன் படிப்பால் பொருளாதாரத்தால் அல்ல எனும் தங்களது கருத்தும் அழகு ஐயா. அருமையான ஆன்மீகப் பகிர்வுக்கு அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  21. அமுத மொழிகள் அனைத்தும் பல நல்ல விஷயங்கள் அடங்கிய தொகுப்பு . ஸ்ரீ வைஷ்ணவா என்று சொல்லப்படும் திருமதி ஜெயலக்ஷ்மி அம்மாளின் சந்தோஷம், பிரமா, பூமா தேவி, பிரஹஸ்பதி அருள் கிடைக்க சொல்லும் உபாயம் எல்லோரும் அறிய சொன்னமைக்கு நன்றி.
    அருமையான தொகுத்து நல்லதொரு சரமாக்கியிருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  22. மனிதன் உயர்ந்த தத்துவம் அருமை கருந்துளஸி மஹிமை .இனிஒரு பிறப்பில்லாதவருக்கு தரிஸனம் அளித்த கருணை தலைவலி போக்கிய மருந்தீஸ்வரர் மஹாபெரியவாளுக்கு நமஸ்காரங்கள் அருமையான பகிர்வு நன்றி

    ReplyDelete
  23. மெய் சிலிர்க்கச் செய்யும் நிகழ்வுகள்

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. அன்பின் வை.கோ - உயர்ந்த மனிதன் பதிவு வழக்கம் போல் அருமை -உயர வாக்கில் வளர்ப்வன் மனிதன் மட்டும் தான் - அதனால் தன மனிதனை உயர்ந்தவன் எனக் கூறுகிறோம். - அகங்காரமும் தற்பெருமையும் வந்து விட்டல் அந்த உயர்ந்தவன் விலங்கினங்களுக்கும் கீிழே போய் விடுவான்.

    போட்டிகள் உள்ளவரை யாருக்கும் நிறைவென்பதே வராது -

    அருமையான சிந்தனையில் விளைந்த அற்புதமான அறிவுரை

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    -

    ReplyDelete
  25. அன்பின் வை.கோ - ஜெயலக்‌ஷ்மியின் அனுபவம் நன்று - கருந்துளசிச் செடியினை வளர்க்கச் சொன்ன ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் தீர்க்க தரிசனத்தினால் ஜெயலக்‌ஷ்மிக்கு கஷ்டங்கள் விலகியது - இவர் மற்றவர்களுக்கும் கருந்துளசி வளர்க்க அறிவுறுத்தினார். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. அன்பின் வை.கோ

    தங்கத்துக்குச் சமமான - சந்நியாசிகள் பிஷை செய்யும் பேத்தி இலைதான் ஒஸ்தி - அபூர்வம்.

    பேத்தி இலையைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா அந்த நிமிடம் முதல் இவரை ஸ்ரீவைஷ்ணவா என அழைக்க வேண்டும் என அனைவரையும் அறிவுறுத்தியது இவருக்குக் கிடைத்த அரிய பட்டம். வாழ்க்கையில் எதிரபாராத கிடைப்பதற்கு அரிய பட்டம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  27. அன்பின் வை.கோ

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கூறிய பிரகஸ்பதி கொடுத்த வரம் நன்று .

    அரிசியும் காய்கறிகளும் மளிகை சாமன்களும் உயர் ரகமாகப் பார்த்துப் பார்த்து கொண்டு வந்த பக்தரிடம் - அர்ச்சனைப் பூக்களின் ஓட்டைகளூம் அழுகலும் பகதரின் கவனக் குறைவென எடுத்துக் காட்டிய பெரியவா மகாப் பெரியவாதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. சிறப்பான கருத்துகள் உட்பட அனைத்து சம்பவங்களும் அருமை ஐயா

    ReplyDelete
  29. அன்பின் வை.கோ

    சிரமம் வரும்போது மட்டும் இறைவனை நினைத்தல் போதாது - பொழுது போகாத சமயத்தில் கூட இறைவனை நினைத்து ஸ்லோகங்கள் கூற வேண்டும். அப்பொழுது தான் அமைதி கிட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  30. பயனுள்ள பதிவு. ஸ்ரீகாஞ்சிப் பெரியவாள் கலியுகத் தெய்வம் என்பதை ஒவ்வொருவரின் அனுபவங்களும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
    காமாட்சி அம்மாவின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.பேய் அத்தி இலை பற்றி இப்போதுதான் அறிந்தேன்.பயனுள்ள பதிவுக்கு நன்றி.--

    ReplyDelete
  31. மன நிறைவு தந்த சிறப்பான பகிர்வுக்கு என் வாழ்த்துக்களும்
    பாராட்டுக்களும் ஐயா .

    ReplyDelete
  32. ஆஹா கருந்துளசி செடியின் மகிமை இவ்வளவா
    போதி இலை என்றால் என்ன இலை
    ஆஹா நாராயணீய பாராயணம் எவ்வளவோ உசத்தி பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. viji December 11, 2013 at 3:29 PM

      வாங்கோ விஜி, வணக்கம்.

      //ஆஹா கருந்துளசி செடியின் மகிமை இவ்வளவா?!!!//

      இருக்கும் போலிருக்கு. தாங்களும் முடிந்தால் இந்தக் கருந்துளஸிச்செடியை வளர்த்துப் பாருங்கோ, ப்ளீஸ்

      //போதி இலை என்றால் என்ன இலை//

      போதி இலை அல்ல. பேத்தி இலை என்று பெயர். சிலர் இதை மந்தார இலை என்றும் சொல்வதாகத்தெரிகிறது.

      பேய்+அத்தி = பேத்தி, என மேலே திருமதி காமாக்ஷி மாமி எழுதி இருக்கா, படித்துப் பாருங்கோ.

      //ஆஹா நாராயணீய பாராயணம் எவ்வளவோ உசத்தி பாருங்கள்.//

      ஆமாம். அது உசத்தி தான். உங்களுக்கே தெரியுமே !

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      Delete
  33. படிக்க படிக்க மகிழ்ச்சியா இருக்கு..துளசி செடியின் மகிமையை அழகா சொல்லியிருக்கார் பெரியவர்..

    ReplyDelete
  34. ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் கவலைகள். தன்னை நம்பி வந்த எல்லோரையும் கைவிடாத பெரியவர் வார்த்தைகள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  35. கருந்துளசி பற்றியும் இன்னும் பல அறிய முடிந்தது.
    மிக்க நன்றி.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  36. அற்புதமான நிகழ்வுகள்.

    ReplyDelete
  37. ஜெயலக்ஷ்மி அம்மாளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மனதை நெகிழ வைக்கின்றன...கருந்துளசியின் மகிமையை புரிந்து கொள்ள முடிந்தது...

    ReplyDelete
  38. கருந்துளசி மகிமைகள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    நல்ல பல தகவல்களைத் தரும் உங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  39. தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன்,
    வேளா வேளைக்கு அன்னமும்,
    கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது
    மட்டும் ரட்சணை இல்லை.
    அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை
    தினமும் ஒரு அரைமணி சம்பாஷிக்கணும்.
    அப்படிப்பட்டவனை பிரம்மாஆசிர்வாதம் பண்றார்./இது வீட்டில் தம்மைவிட பெரியவர்கள் உள்ள அனைவருக்கும் பொருந்தும்! கருந்துளசியின் மகிமை அறிந்தேன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!





    ReplyDelete
  40. கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.

    பெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று வருகிறார்கள்.//

    பெரியவாள் நல்ல வாழ்க்கை வழி காட்டி.

    //தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.//

    அற்புத மகிமை.
    பகிர்வு அற்புதம்.
    வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  41. காயத்ரி மந்திரத்தினுடைய பலன் சித்தசுத்திதான். மனமாசு அகலுவதுதான்.

    மனமாசு அகன்றால்தான் அங்கு தெய்வம் குடிகொள்ளும் அதைதான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையில் இறைவனை"மாசற்றார் மனத்துள்ளானை" என்று போற்றி பாடுகிறார்

    நன்று VGK

    ReplyDelete
  42. பெரியவாளின் அமுத மொழிகளும் அனுபவங்களின் கலவையும் வேறு உலகிற்கே கூட்டிச் செல்கின்றன!!

    ReplyDelete
  43. பக்தி பரவசமூட்டும் பகிர்வுகள்! அற்புதம்! நன்றி!

    ReplyDelete
  44. "ஸ்ரீவைஷ்ணவா" நல்ல பெயர்.

    ReplyDelete
  45. கருந்துளசி மகிமல திரிந்து கொள்ள முடிந்தது

    ReplyDelete
  46. // ஆனால் இந்த உயர்வு, அஹம்பாவத்திலேயும் தற்பெருமையிலும் கொண்டுபோய் விட்டால் இவன் விலங்கினங்களுக்கும் கீழே போக வேண்டியதுதான். //

    சத்தியமான வார்த்தை. கண்ணெதிரே எத்தனை பேரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    // கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.//

    அடடா! இது தெரியாம போச்சே. மொட்டை மாடியில் கருந்துளசி வைத்திருக்கிறோம். இனி தினமும் ஒரு நமஸ்காரத்தையாவது செய்ய வேண்டும்.

    ReplyDelete
  47. //பிரம்மா ஆசிர்வாதம் பண்றார். பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.பிரகஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார்.//

    இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல. அடுத்த ஜென்மாவிலயும் கடைத்தேற வழி சொல்லி இருக்கா மகா பெரியவா.

    ReplyDelete
  48. வயோதிகருக்கு காட்சி அளித்தது, மோட்சம் அளித்ததும், திரு சுந்தரராஜனின் தலை வலியைப் போக்கியதும் அப்பப்பா மெய் சிலிர்த்து விட்டது.

    பேய் அத்தி இலையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 21, 2015 at 4:39 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //சத்தியமான வார்த்தை. கண்ணெதிரே எத்தனை பேரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//

      //அடடா! இது தெரியாம போச்சே. மொட்டை மாடியில் கருந்துளசி வைத்திருக்கிறோம். இனி தினமும் ஒரு நமஸ்காரத்தையாவது செய்ய வேண்டும்.//

      //இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல. அடுத்த ஜென்மாவிலயும் கடைத்தேற வழி சொல்லி இருக்கா மகா பெரியவா.//

      //வயோதிகருக்கு காட்சி அளித்தது, மோட்சம் அளித்ததும், திரு சுந்தரராஜனின் தலை வலியைப் போக்கியதும் அப்பப்பா மெய் சிலிர்த்து விட்டது.//

      //பேய் அத்தி இலையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.//

      தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  49. ஐயாமாருங்களுக்குள்ளாரவே இன்னாலாமோ பிரிவுகள் இருக்குதே. நாங்க அந்த எலய பொதுவில தைல் எலன்னுவோம்

    ReplyDelete
  50. கருந்துளசி பேத்தி இலைனு பல புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  51. இந்த மாதிரி ஒரு மோட்சம் நமக்கு கிடைக்க
    நிச்சயம் வாய்ப்பில்லை.

    இருந்தாலும் இந்த மாதிரி மோட்சம் கிடைப்பதற்கு
    நாம் பிரார்த்தனை செய்வோம்.// இ(உ)றுதி ஆசை...மோட்சம் கிட்டிட காரணம்!!!

    ReplyDelete
  52. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.10.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/509768566192509/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  53. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (11.11.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=524331791402853

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  54. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (22.11.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-
    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=529919787510720

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete