About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, June 15, 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-6 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-7 க்கான இணைப்பு:நூலாசிரியர் மோகன் ஜி அவர்கள்
http://vanavilmanithan.blogspot.in/

 
 
நூல் மதிப்புரையின் 

நிறைவுப் பகுதி

சிறுகதைகள் பற்றிய மோகன்ஜி யின் ‘என்னுரை’ என்ற முன்னுரை சிந்திக்க வைப்பதாக உள்ளது. அதிலிருந்து சில வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ......

சிறுகதை என்பது இலக்கியத்தின் முக்கிய வகையா? அல்லது 
சிறுகதை, இலக்கியத்தின் ஆறாம் விரலா? 
வடிவக்குறுக்கத்தால்தான் ஒரு படைப்பு சிறுகதை ஆகிறதா?
இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

படைப்பாளியின் மனம் உள்வாங்கிய ஒரு கணத்தின் நிகழ்வை, தன் புனைவின் மூலம் காட்சிப்படுத்து, சிறுகதையாய் வாசகனுக்கு படைத்தளிக்கிறான். அவன் சொன்னதை விடவும் சொல்லாமல் விட்டவை தன் புரிதலுக்கு ஏற்ப சிறுகதையாய் வாசகன் மனதில் எழுதிக்கொள்கிறான். 

ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் வாசகர்கள் மனத்துள் பற்பல சிறுகதைகளாய் எழுதிக்கொள்ளப்படுகிறது என்பதே என் துணிபு. ஆக சிறுகதை நிகழ்வது வாசகன் மனமுற்றத்தில்தான்.

மிகச்சிறந்த சிறுகதையோ, ஒரு வாசகனுக்குள்ளேயே படிக்குந்தோறும் பலவாறாய் உருக்கொள்கிறது. புதிய வாசல்கள் திறக்கின்றன. தேடல் மிக்க வாசகர் ரசனை, எதிலும் எளிதில் திருப்தியுறாமல் அந்த உச்ச படைப்புக்காய் தேடியபடியே இருக்கிறது. அவனுக்கான அந்த சிறுகதை இனிமேல்தான் எழுதப்பட வேண்டும்.

இன்றைய வாசகனுக்கு நேரமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் கொறிப்பும் நேரத்தைத் தின்றபின், வாசிப்புக்கு மிச்சம் ஏது? வரும் நாட்களில் தொழில்நுட்ப தாக்கம் இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடக் கூடும். இன்று இயல், இசை, நாடகம் என்பது சினிமாவாகி, குறும்படமாகி,  யூடியூபின் இரு நிமிடச் சலனமாய் மாறியபடி .... எல்லாமும் மாற்றத்துக்கு உட்பட்டவையே என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இலக்கிய வாசிப்பின் அதிகபக்ஷ இருப்பாய் சிறுகதை வடிவம் உருப்பெறுமோ? (இன்றைய நாவலின் இடம் போல) காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எப்படியோ ... சிறுகதை தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். 

சிறுகதையை ‘ஒரு பக்கக்கதை’ என்று மூளி செய்வோமோ? நாலுவரி ’நச்’ கதை என்று நறுக்கி வைப்போமோ? நான் அறியேன்...

ஐந்து நாள் கிரிக்கெட் அரை நாளில் ‘காட்டடி மாட்டடி’ என்று மாறியதைப்போல ரசனைகள் மாறலாம். அதிலும்கூட சிறந்த படைப்புகள் சாத்தியமாகலாம். 
19) ஒரு ஊதாப்பூ நிறம் மாறுகிறது

அதீதம் இணைய இதழின் 2011 தீபாவளிச் சிறப்பிதழில் வெளியான கதை இது.

அண்ணாச்சியின் டீக்கடையில் கூடும் நான்கு ஐந்து சிநேகிதர்கள். அவர்களில் ஒருத்தனைத்தவிர எல்லோருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உண்டு. கையில் சில்லறை இருந்தால் சேர்ந்து சினிமாவுக்கும் செல்வார்கள். 

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போக்கு. ஒவ்வொருவரின் குடும்ப சூழலும் ஒவ்வொரு விதம். திடீரென்று ஒருநாள் ஒருவனின் பருவ வயது தங்கச்சியைக் காணோம். நண்பர்களிலும் ஒருசிலரைக்காணோம். 

பெண்ணைப் பெற்றவர்கள் வயிறு பற்றி எரிகிறது. பாசமுள்ள அண்ணனின் இரத்தம் கொதிக்கிறது. அந்தப்பெண் என்ன ஆனாள்? எங்கே போனாள்? 

சுவாரஸ்யமான இந்தக் கதைத் தொகுப்பினில் அந்த முடிவினைத் தெரிந்துகொள்ளுங்கள்.


20) காமச்சேறு

பெண்ணாசை + காமம் என்ற சேற்றினில் சிக்கிய ஒருவனை எப்படி அவனின் சொந்த சகோதரியே திருந்தச்செய்தாள் என்பதையும், பிறகு எப்படி அவனை இறைவன் தடுத்தாட்கொண்டான் என்பதையும் தனக்கே உரிய தனி நடையினில் அழகாகச் சொல்லியிருக்கிறார், இந்த நூலாசிரியர்.


21) என்னைக் காட்டிக்கொடுத்து விட்டாயே??

இன்று வங்கிகளில் திருட எத்தனித்தால் அடிக்கிறதே அபாய மணி [Burglar Alarm] இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்? என்பதைப்பற்றியதோர் அருமையான ஆராய்ச்சிக் கதை. 

மிகவும் நூதனமான முறையில் ஒரு திருட்டு ஒரு வீட்டினில் நடக்கிறது. மெயின் திருடர்களும், திருட்டுக்கூட்டத் தலைவனும் தப்பினார்களா அல்லது பிடிபட்டார்களா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக துப்பறியும் கதை போலச் சொல்லப்பட்டுள்ளது. 

கதையின் முடிவினில், திருடர்களை காட்டிக்கொடுத்துவிட்ட கூட்டாளிகளில் அப்ரூவரான ஒருவன் சொல்லும் விஷயம், கொள்ளைக்கூட்டத் தலைவனாலேயே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதுதான் இதிலுள்ள சுவாரஸ்யமே. 

அவன் சொல்வதில் ஒரு தர்ம, நியாயமும் இருப்பதாக வாசிக்கும் நமக்கும் தெரிவதால்,  இந்தக் கதை மிகவும் அருமைதான். 

’பொன் வீதி’
நூல் மதிப்புரை இத்துடன் 
இனிதே நிறைவுற்றது
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன்
இந்த நூல் ஆசிரியர் மோகன்ஜி 
2016-ம் ஆண்டு மும்பையில்பதிவர்கள்: 
மோகன்ஜி / அப்பாதுரை / சுந்தர்ஜிதன்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூலின் 
ஒரு பிரதியினை அன்புடன் அடியேனுக்கு 
அன்பளிப்பாக அனுப்பி வைத்து
நான் அதனைப் படித்து நூல் மதிப்புரை செய்ய
வாய்ப்பளித்துள்ள இனிய நண்பர் 
திரு. மோகன்ஜி அவர்களுக்கு 
என் மனமார்ந்த இனிய அன்பு 
நன்றிகளைக் கூறிக்கொண்டு
விடைபெறுகிறேன்.இந்த நூலினை வாங்கி முழுமையாக 
வாசிக்க விரும்புவோர்
நூல் ஆசிரியர் அவர்களை மின்னஞ்சல் மூலம் 
நேரிடையாகத் தொடர்பு கொள்ளலாம்
இந்தத் தொடரின் 
பகுதி-7 இல் பின்னூட்டமிடுவதில் 
முதலிடம் பெற்றுள்ள 
திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு 
 பூங்கொத்து  + மேங்கோ ஷேக்  இதோ:

 


முதல் வருகைக்கும், பெறவிருக்கும் பரிசுகளுக்கும் வாழ்த்துகள் மனோ மேடம். அடுக்கடுக்காய் புத்தகங்களையும், மலை மேல் ஒரு வீட்டையும் பரிசாக பரிந்துரை செய்கிறேன்.

[தங்களின் மேற்படி பரிந்துரை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது]

 
இந்தத்தொடரின்  
பகுதி-1 முதல் பகுதி-7 வரை
அதிரடியாக
மிக அதிகமான 
எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் இட்டு 
சிறப்பித்துள்ள நம் 
‘அதிரா’வுக்கு 
மேலும் சில பரிசுகள்
அளித்து கெளரவிக்கப்படுகிறது.1) மேலும் மூன்று நெக்லஸ்


அதனால கோபு அண்ணன்.. 
நீங்க எனக்கு விதம் விதமா டயமண்ட் நெக்லெஸ் ல 
ஒரு டஜனோ கூடவோ குறையவோ தாங்கோ:).. அது போதும்.
(இத்துடன் 3+3+4+3=13 நெக்லஸ் ஆச்சோ)


2) கீழ்க்கண்ட ஆறு மாடல்களில் 
வெள்ளி கொலுசுகள்
இதுவரை தான் பெற்றுள்ள 
ஏராளமான பரிசுகளையெல்லாம்
கணக்குப்போட்டுப் பார்க்கும் பூனையார் !

பூனையாருக்குத் தங்கத்தில் 
கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. **^மிகவும் அகலமான இந்த ஒட்டியாணமே^
நம் அதிராவின் இடுப்புக்குப் பத்துமோ பத்தாதோ!** - கோபு

நீங்க அதைப்பற்றிக் கவலைப்படாதீங்கோ:) நான் இதுக்கெல்லாம் கூச்சப்பட மாட்டேன்ன்:) பத்தாட்டி இன்னும் ஒரு 5 பவுன் எக்ஸ்ட்ராவாக் கேட்பேன், தரமாட்டேன் எனச் சொல்லவா போறீங்க:).. எப்படியாவது என் லாக்கர் முட்டினால் சரிதான்:). -- அதிரா


அன்புள்ள
......அதிஸய
.........அதிரஸ
............அல்டாப்
...............அழும்பு
..................அழுத்த
.....................அயோக்ய
........................அந்தர்பல்டி
...........................அ தி ர டி
..............................அ தி ரா ! 

நீங்க எக்ஸ்ட்ராவாக என்னிடம் கேட்டதோ
வெறும் 5 பவுன் அதாவது 5*8=40 கிராம் மட்டுமே !

இந்தாங்கோ 40 கிலோ தங்கம்
*GOLD BISCUITS and GOLD BAR*
சாப்பிடுங்கோ !

சந்தோஷமா இருங்கோ!!

இனிய நல்வாழ்த்துகள் அதிரா!!!

இந்தத்தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

அனைத்துப் பகுதிகளுக்கும் 
அன்புடன் வருகை தந்து
பின்னூட்டம் அளித்துள்ளவர்கள் பற்றிய 
புள்ளி விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


153 comments:

 1. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ...
  மீ மோகன் ஜி இன் எழுத்துக்கு ரசிகை ஆகிட்டேன்ன்ன்ன்ன்:)... கோபு அண்ணன்.. மசமச எனப் பார்த்துக்கொண்டிருக்காமல் மோகன் ஜி கேட்டபடி சேர்டிபிகேட் ஐ எழுதித் தாங்கோ.. மறக்காமல் சுவீட் 16 எனப் போடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதில உங்களுக்கு மறதி அதிகம்:)..நில்லுங்கோ போஸ்ட்டைப் படிக்கப்போறேன்:).

  ReplyDelete
  Replies
  1. மோகன்ஜி June 13, 2017 at 3:56 PM https://gopu1949.blogspot.in/2017/06/7-of-8.html
   அதிரா ! எனக்கு ரசிகை ஆகணும்னா கோபு சார் கிட்ட ஒரு சர்டிபிகேட்டும், கடைசி பதிவிலாவது முதல் பரிசும் வாங்கி வரணும். சரியா?

   -=-=-=-

   asha bhosle athiraJune 13, 2017 at 11:03 PM https://gopu1949.blogspot.in/2017/06/7-of-8.html
   ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் இப்பூடி வச்சிட்டீங்களே மோகன் ஜி ஆப்பு:).. சேர்டிபிகேட் கோபு அண்ணனை மிரட்டி வாங்கிடுவேன்:) ஆனா அந்த முதல் கொமெண்ட் தான் எங்கயோ இடிக்குது.. இருங்கோ எதுக்கும் என் ஆயுதத்தை இப்பவே தூக்கிடுறேன்:).. அப்போத்தான் என் கொமெண்ட்டை எப்பூடி எடிட் பண்ணியாவது கோபு அண்ணன் முதலாவதாப் போடுவார்:) எங்கிட்டயேவா.. நான் ரசிகை ஆகோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:)..

   https://i.ytimg.com/vi/LOkunGb9kU4/maxresdefault.jpg

   -=-=-=-

   asha bhosle athira June 15, 2017 at 12:06 AM
   மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ... மீ மோகன் ஜி இன் எழுத்துக்கு ரசிகை ஆகிட்டேன்ன்ன்ன்ன்:)... கோபு அண்ணன்.. மசமச எனப் பார்த்துக்கொண்டிருக்காமல் மோகன் ஜி கேட்டபடி சேர்டிபிகேட் ஐ எழுதித் தாங்கோ.. மறக்காமல் சுவீட் 16 எனப் போடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதில உங்களுக்கு மறதி அதிகம்:)..நில்லுங்கோ போஸ்ட்டைப் படிக்கப்போறேன்:).//

   அதிரா ..... தங்கள் விருப்பப்படி, [மசமச எனப் பார்த்துக்கொண்டிருக்காமல்] மோகன்ஜி கேட்டுக்கொண்டபடியும், அதைவிட தாங்கள் இப்போது என்னிடம் கேட்டுக்கொண்ட படியும், விரிவான சர்டிஃபிகேட் ஒன்றை சுருக்கமாக இங்கு தனியாகக் கொடுக்க உள்ளேன். கவலைப் படாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

   Delete
  2. V.GOPALAKRISHNAN,
   M.A., B.Com., PGD PM&IR etc., etc.,

   [Retired Accounts Officer/Cash,
   BHEL., Tiruchirappalli]

   பிரபல பத்திரிகை எழுத்தாளர் + பதிவர்
   etc., etc., etc.,

   சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

   CERTIFICATE
   =============

   அதிரா என்ற பெயருடைய இந்த அம்மா .... ஸாரி .... இந்தப்பொண்ணு மிகவும் நல்லவங்க.

   சூதுவாது ஏதும் தெரியாத மிகவும் வெகுளிப்பொண்ணு எனவும் நாம் வைத்துக் கொள்ளலாம்.

   உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாதவங்க.

   மஹா மஹா கெட்டிக்காரி.

   தன்னைத்தானே தற்புகழ்ச்சி ஏதும் செய்துகொள்ள இவர்களுக்குப் பிடிப்பதே இல்லை.

   மிகவும் ‘ஷை’ டைப்பு.

   கடந்த 48 வருடங்களாக தன்னைத் தானே ’ஸ்வீட் 16’ வயது உடையவள் மட்டுமே எனச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

   பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே வாரிசுப் பேத்தி நான் எனப்பேத்திக்கொண்டு இருப்பார்கள் என நினைக்கக் கூடாது. அது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்.

   அமெரிக்க அதிபரின் அந்தரங்க ஆலோசகர் நான் எனவும் அவ்வப்போது அள்ளித் தெளிப்பதுண்டு.

   ”அமெரிக்க அதிபருடன் அந்தரங்க ஆலோசனைகளுக்காகவும், ஒரு சில ஆராய்ச்சிகளுக்காகவும் அண்டார்டிக்கா போகப் போறேன், என்னை இனி யாரும் தேட வேண்டாம்” எனவும் சொல்லுவார்கள்.

   கோபம் வரும்போதெல்லாம் அடிக்கடி ”தீக்குளிக்கப் போகிறேன், தேம்ஸில் குதிக்கப்போகிறேன், புளிய மரத்தின் உச்சிக்கு ஏறப்போகிறேன், கட்டிலுக்குக் கீழேயுள்ள பதுங்குக்குழியில் ஒளியப்போகிறேன்” என்றெல்லாம் சபதம் செய்வார்கள்.

   ஆனால் பிறகு அது போலெல்லாம் செய்ய மனசு வராமலும், துணிச்சல் இல்லாமலும், மறந்துபோனதுபோல பேசாமலேயே இருந்து விடுவார்கள். :)

   அதனால் அதையெல்லாம் நாம் பெரிசாக எடுத்துக்கொண்டு பயப்பட வேண்டியது இல்லை.

   நான் துப்புத்துலக்கிய வகையில், இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்சமயம் லண்டனில் வசித்து வருவதாகவும், இவரின் கணவர் ஒரு டாக்டர் என்றும், இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு பொறுப்பான பணியில் [ஆயா வேலையோ என்னவோ:)] இருப்பதாகவும், இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அறிகிறேன்.

   அதன் பிறகு, சமீபத்தில் ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இரட்டைக்குழந்தை பிறந்ததாகக் கேள்விப்பட்டு நானே ஒரு பதிவினில் மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு:

   https://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

   இவர்களின் தமிழ்ப்புலமை உலகறிந்த (வலையுலகம் அறிந்த) உண்மையாகும்.

   ‘டீ’ குடிப்பதை ‘ரீ’ குடிப்பது எனச் சொல்லுவார்கள். அதுபோல ‘ல’ ’ள’ ‘ழ’ போன்றவற்றை புதுமாதிரியாக எழுதி உச்சரிப்பார்கள்.

   இவர்களால் நான் படித்த தமிழே எனக்கு சுத்தமாக மறந்து போய் விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

   மோகன்ஜியாகிய தங்களுக்கு இப்போது இந்த அதிரா ரசிகையாக விரும்புவதால், தாங்கள் கேட்டுக்கொண்ட படியும், அதிரா கேட்டுக்கொண்டபடியும் இந்த சர்டிஃபிகேட் என்னால் இப்போது இங்கு வழங்கப்பட்டுள்ளது.

   E. & O.E.,

   [அதாவது இதில் Errors & Omissions Expected.]

   இப்படிக்கு அன்புடன்
   வை. கோபாலகிருஷ்ணன் [கோபு]

   Delete
  3. பொருள்: தேர்வு அறிவித்தல் கடிதம்.

   விமரிசக வித்தகர் வை. கோபால கிருஷ்ணன் அவர்களின் பரிந்துரை சான்றிதழை ஏற்று, அதிரா வயது: 16 அவர்களை 'வானவில் மனிதன் ' வாசகியாக ஏற்றுக் கொள்ளபடுகிறார் என்று அறிவிக்கறோம்.

   சான்றிதழில் குறிப்பிட்ட எழுத்துப் பிழைகளை இனி செய்யும் பட்சத்தில், கம்பெனியாரே இலண்டனுக்கும் வந்து தேம்ஸ் நதியில் தள்ளிவிடுவார்கள் என்றும், இலண்டன் போகவர ஆகும் செலவை, விண்ணப்பித்தவரே ஏற்க வேண்டியதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும்.
   ஷரத்துகளை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், Big Ben கிளாக் டவரின் சுவற்றில் ஒப்புக் கொள்வதாய் கரிக்கட்டியால் எழுதி, அதன் புகைப்படத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
   வாழ்த்துகள்
   (....)
   ஒப்பம்

   நகல்: கோபு சாருக்கு.
   P.S : இன்னமேயும் அதிரா வருவாங்கன்னா சொல்றீங்க!!

   Delete
  4. என்ர வயலூர் முருகாஆஆஆ என்ன நடக்குது இங்கின:).. கோபு அண்ணன் 8 அடி பாய்ஞ்சால்ல் மோகன் ஜி 16 அடிக்கும் மேல எல்லோ பாய்கிறார்ர்ர்ர்... என்னை ஆராவது காப்பாத்துங்ங்ங்ங்ங்.. 6 மாதத்துக்கு ஒருக்கால் புதுப்பிக்கவும் வேணுமாமே.. பிக் பென் சுவரில கரியால.... ஹையோ கரிக்கு இங்கு எங்கு போவேன்ன்ன்ன்:).. இந்த றூல்ஸ் தெரியாமல் அவதிப்பட்டு ரசிகையா இணைஞ்சிட்டனே... வைரவாஆஆ என்னைக் காப்ப்ப்ப்ப்ப்பாத்துங்ங்ங்ங்ங்ன்....

   https://www.youtube.com/watch?v=XVO9CS8D4hQ

   Delete
  5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கோபு அண்ணன்....:).. மோகன் ஜி சேர்டிபிகேட்தானே கேட்டார்.. நீங்க எதுக்கு வாழ்க்கை வரலாறே எழுதுறீங்க கர்ர்ர்ர்ர்:)...

   சேர்டிபிகேட் எனில் இப்பூடித்தான் இருங்கோணும்..

   பெயர்: அதிரா
   வயது : சுவீட் 16
   நிறம்: அஞ்சுவை விட வெள்ளை:)[இருங்கோ சிரிச்சிட்டு வாறேன்ன்ன் ஹா ஹா ஹா].
   உயரம்: அஞ்சுவை விட 2 அங்குலம் அதிகம்:)

   இப்படிப்பட்ட அதிரா.. இங்கே பத்தாயிரத்துக்கும் அதிகமாகவும்:), மிகவும் அறிவு பூர்வமாகவும்:), அழகாகவும்:) பின்னூட்டங்கள் போட்டு முதலிடத்தில் இருப்பமையால்:).. இவருக்கு மோகன் ஜி யின் கதைகள் படிக்க தகுதியான ரசிகை எனும் சேர்டிபிகேட்டை வழங்குவதோடு... மோகன் ஜி எழுதிய மற்றும் எழுதப்போகும் அத்தனை புத்தகங்களையும்.. புத்தகமாக போஸ்ட்டில் அனுப்பி வைக்கும் முழுச் செலவையும் நானே ஏற்றுக்கொள்வேன் எனவும்.. இந்த மாபெரும் சபையில்...:) மோகன் ஜி சாட்சியாகவும்.. அதிரா சார்பில் அஞ்சு சாட்சியாகவும் கையொப்பம் இடுகிறேன்ன்ன்ன்.... :) இப்படி எழுதி சைன் போட்டு மோகன் ஜி க்கு கொடுக்கோணும் அதுதான் சேர்டிபிகேட்ட்ட் சொல்லிட்டேன்ன்ன்:).

   Delete
  6. ஹாஹா @)கர்ர்ர்ர் மியாவுக்கு :) நான் வெள்ளைஇல்லியே @:)பிங்க் ஆச்சே
   கோபு அண்ணா ..அதிரா நிறம் ..பாண்டுவின் நிறம்னு போடுங்க :)
   உயரம் ..below sea /see லெவல் :)
   எப்பப்பாரு 2 அடி ஸ்டூல் போட்டு திரியும் இந்த பூனைக்கு அட்டகாசத்தை பாருங்க :)

   Delete
  7. மோகன்ஜி கரித்துண்டு இங்கே ஈஸியா கிடைக்கும் :) அதனால் விடாதீங்க :)

   Delete
  8. https://www.youtube.com/watch?v=XVO9CS8D4hQ

   Running cat - slow motion 100fps

   மிகவும் ஸூப்பர் அதிரா :)

   என்னா ஓட்டம் ஓடுறீங்க !

   சபாஷ். வெரி குட் டெஸிஷன். :)

   Delete
  9. @ அதிரா

   //எழுதிய மற்றும் எழுதப்போகும் அத்தனை புத்தகங்களையும்.. புத்தகமாக போஸ்ட்டில் அனுப்பி வைக்கும் முழுச் செலவையும் நானே ஏற்றுக்கொள்வேன் எனவும்..//

   என் அடிமடியிலேயே கை வைத்தால் எப்பூடீஈஈஈஈஈ?

   https://www.youtube.com/watch?v=99l-h_1uqb0
   https://www.youtube.com/watch?v=AmrZ0yPf9qw

   அந்தப் பூனை ஓட்டம் போல் இதோ இந்த என் யானை ஓட்டம். :)

   Delete
  10. அம்மாடி கோபு அண்ணன் யானை வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து உடல் விறைச்சிட்டேன்ன்ன்:).. கனவு கனவா வரப்போகுது:).. யானை உலாவும் பகுதி எனத் தெரிஞ்சும் மோட்டபைக்கில் போகிறார்களே.. நினைக்கவே நடுங்குது.

   Delete
  11. ///AngelinJune 15, 2017 at 10:40 PM
   மோகன்ஜி கரித்துண்டு இங்கே ஈஸியா கிடைக்கும் :) அதனால் விடாதீங்க :)//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் சொன்னனே எனக்கு எடிரி வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்ன்ன்:).

   Delete
  12. asha bhosle athira June 15, 2017 at 9:11 PM

   //நிறம்: அஞ்சுவை விட வெள்ளை:) [இருங்கோ சிரிச்சிட்டு வாறேன்ன்ன் ஹா ஹா ஹா].//

   சிரிச்சு முடிச்சாச்சா ..... நான் இதுவரை இன்னும் சிரித்துக் கொண்டே உள்ளேன்.

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   அஞ்சுவைவிட வெள்ளையாக எப்படி இருக்க முடியும்?
   அஞ்சுதான் கோல்ட் ஃபிஷ் கலர் ஆச்சே !

   [நீங்க தான் முன்பே என்னிடம் ஒரு பின்னூட்டத்தில்
   மிகப்பெருமையாகச் சொல்லி இருக்கீங்கோ :) ]

   //உயரம்: அஞ்சுவை விட 2 அங்குலம் அதிகம்:)//

   இரண்டு-மூன்று அடி உயரமுள்ள ஸ்டூல் ஒன்றைப் போட்டுக் கொண்டு அதில் நீங்க ஏறி நின்ற பிறகா?

   [இதை நான் சொல்லவில்லை.... மேலே அவங்களே சொல்லியிருக்காங்கோ :) எங்கட அஞ்சு எப்போதும் பொய்யே பேச மாட்டாங்கோ. ]

   Delete
  13. @ அதிரா

   தங்களின் தோற்றத்தை கற்பனை செய்து நான் எங்கட ஜெயா மாமிக்கு (Jayanthi Jaya) ஓர் பின்னூட்டத்தில் பதில் அளித்துள்ளேன்.

   அது இந்தத்தொடரின் பகுதி ஐந்தில் இடம் பெற்றுள்ளது.

   அதற்கு ஓர் இணைப்பும் https://www.youtube.com/watch?v=8xp6bA0r3aw கொடுத்து விரிவாக எழுதியுள்ளேன். பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.

   Delete
  14. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 23456778899:)

   Delete
  15. //* 23456778899:)//

   ???????????????????????????????????????

   புரியலையே !

   Delete
  16. ஹா ஹா ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பதை அத்தனைதரம் பெருக்கி எடுத்துக்கோங்க:).. அது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்2.... என வருமாக்கும்:)

   Delete
  17. ஹைய்யோ ..... அப்போ

   இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடியே, அறுபத்தி ஏழு லக்ஷத்து, எழுபத்தெட்டாயிரத்து, என்னூற்று தொன்னூத்தொன்பது

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆ !

   மயக்கமே வருது. இது ஏதோ 3G / 4G ஊழல் கணக்கு போல உள்ளதே எங்கட சரிதா .. ஸாரி .. அதிரா. :)

   Delete
  18. ///இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடியே, அறுபத்தி ஏழு லக்ஷத்து, எழுபத்தெட்டாயிரத்து, என்னூற்று தொன்னூத்தொன்பது ///

   வெரி சோரி:) உங்கள் கணக்கில் தவறு இருக்கிறது:) கரீட்டா எண்ணிச் சொல்லுங்கோ:)

   Delete
  19. asha bhosle athira June 23, 2017 at 2:45 AM

   **இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடியே, அறுபத்தி ஏழு லக்ஷத்து, எழுபத்தெட்டாயிரத்து, என்னூற்று தொன்னூத்தொன்பது**

   2345,67,78,899

   //வெரி சோரி:) உங்கள் கணக்கில் தவறு இருக்கிறது:) கரீட்டா எண்ணிச் சொல்லுங்கோ:)//

   அடாடா, கணக்கில் வெரி வீக்கான இந்த எங்கட சரிதாவின் (அதிராவின்) படுத்தல் தாங்க முடியலையே ....

   2345,67,78,899 means

   Two Thousand Three Hundred Forty Five CRORES
   Sixty Seven LAKHS,
   Seventy Eight THOUSANDS,
   Eight HUNDRED &
   Ninety Nine ONLY!

   எங்கிட்டயேவா ?????? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   இன்னும் சந்தேகம் இருப்பின் உங்கள் அக்கவுண்டண்ட் அஞ்சுவைக் கேட்டுப்பாருங்கோ, சரிதா (அதிரா).

   கன்ஸல்டிங் ஃபீஸ் ஆக, நீங்க ஓரிரு வைர நெக்லஸ் கொடுக்கும்படியாகவும் இருக்கலாம். ஜாக்கிரதை!

   Delete
 2. சந்தோசம் பொயிங்குதே.... சந்தோசம் பொயிங்குதே.... சந்தோசம் கிட்னியில் பொயிங்குதேஏஏஏஏ:)....

  https://media.giphy.com/media/UZzuqeBeRcD3W/giphy.gif

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 15, 2017 at 12:11 AM

   //சந்தோசம் பொயிங்குதே.... சந்தோசம் பொயிங்குதே.... சந்தோசம் கிட்னியில் பொயிங்குதேஏஏஏஏ:)....//

   நல்லா பொயிங்குச்சு போங்கோ .... அதுவும்
   புதுமையாகக் கிட்னியில் .... பொயுங்குவதைச் சுலபமாக கண்ணால் பார்க்க முடியாத இடம் ஆச்சே என்று வருத்தமாக உள்ளதூஊஊஊஊ.

   //https://media.giphy.com/media/UZzuqeBeRcD3W/giphy.gif //

   பூனையார் சோஃபாவின் மீது ஏறி களிப்புடன் நடனமாடுவது ஜோராக்கீதூஊஊஊஊஊஊ. :)

   Delete
 3. You do a great job in promoting other bloggers and in encouraging them in their endeavors. Hats off to you , Gopu maamaa !

  ReplyDelete
  Replies
  1. Chitra June 15, 2017 at 12:20 AM

   வாங்கோ சித்ரா, வணக்கம்.

   //You do a great job in promoting other bloggers and in encouraging them in their endeavors. Hats off to you , Gopu maamaa ! மற்ற வலைப்பதிவாளர்களை ஊக்குவிப்பதில் மற்றும் அவர்களது முயற்சிகளில் அவர்களை உற்சாகப்படுத்துவதில் நீங்கள் ஒரு மிகச்சிறந்த வேலை செய்து வருகிறீர்கள். தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும், கோபு மாமா!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சித்ரா.

   அன்புடன் கோபு மாமா

   Delete
  2. சித்ரா, உங்கள் பாராட்டில் நானும் சேர்ந்து கொண்டு கோபு சாருக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 4. //நிறைவுப் பகுதி/// ஏனோ தெரியவில்லை.. இதையும்.. கீழே போடப்பட்டிருக்கும்.. குட்பாய் ஐயும் பார்க்க மனதில் என்னமோ செய்கிறது... ஒரு கோயில் கொடியேறி கூத்தும் கும்மாளமுமாகி.. பூங்காவனம் வந்த பீலிங்காக இருக்கு:(.

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 15, 2017 at 12:24 AM

   **நிறைவுப் பகுதி** ஏனோ தெரியவில்லை.. இதையும்.. கீழே போடப்பட்டிருக்கும்.. குட்பாய் ஐயும் பார்க்க மனதில் என்னமோ செய்கிறது... ஒரு கோயில் கொடியேறி கூத்தும் கும்மாளமுமாகி.. பூங்காவனம் வந்த பீலிங்காக இருக்கு:(.//

   எனக்கும் அப்படியேதான். என்ன செய்வது? ஒரு ஆரம்பம் என்று இருந்தால் அதற்கு ஒரு நிறைவும்
   (முடிவும்) நிறைவாக இருக்கத்தானே வேண்டும்.

   Delete
  2. அழகாகச் சொன்னீர்கள் அதிரா! என் கதைகள் விவாதிக்கப்பட்டது என்பதை விட, கோபு சாரின் கலை உள்ளம், வண்ணமயமான எட்டு பதிவுகளாய் ஓவியமாக்கியது என்பதில் மகிழ்கிறேன். என் உணர்வுகளும் உங்கள் அனையதே. இனிய நினைவுகளை மட்டும் சுமந்து செல்வதால் மட்டுமே இந்த மனவலியைக் கடக்க இயலும். Gopu Sir, Thank you for everything. Had a great time with you.

   Delete
 5. ஏனோ தெரியவில்லை கோபு அண்ணன்... இன்று போஸ்ட் பார்த்ததும் காரணமில்லாமல் கண்கள் கலங்கி விட்டது.. ஒன்று போஸ்ட் இன் நிறைவுப்பகுதி.. இன்னொன்று நானும் இடைவேளை எடுக்கப்போகிறேன் தானே...

  சரி அது போகட்டும்..
  மோகன் ஜி இன் முன்னுறை படிக்க நன்றாக இருக்கிறது.

  ஒரு ஊதாப்பூ நிறம் மாறுகிறது... படிக்க மனம் பதை பதைக்கிறது.. நண்பர்களில் ஒருவரைக் காணவில்லை எனில் பறவாயில்லை.. இது சில நண்பர்களையும் காணவில்லை என்றதும் நெஞ்சு பதறுது.... ஏதோ நல்ல முடிவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 15, 2017 at 12:32 AM

   //ஏனோ தெரியவில்லை கோபு அண்ணன்... இன்று போஸ்ட் பார்த்ததும் காரணமில்லாமல் கண்கள் கலங்கி விட்டது..//

   கண் கலங்காதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். நீங்கள் அங்கு கண் கலங்கினால் எனக்கும் இங்கு கண் கலங்கி விடுகிறதூஊஊஊ. அதனால் உங்கட அஞ்சுவிடம் கேட்டு ‘அந்தப்’ பிங்க் கலர் டிஷ்யூ பேப்பர்கள் (மிளகாய்ப்பொடி+சாம்பார்பொடி துடைத்தவைகளாகப் பார்த்து) நிறைய வாங்கிக்கொண்டு, கண்களை அடிக்கடி துடைச்சுக்கோங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)

   //ஒன்று போஸ்ட் இன் நிறைவுப்பகுதி.. இன்னொன்று நானும் இடைவேளை எடுக்கப்போகிறேன் தானே...//

   இருவருக்கும் இதனால் மிகப்பெரிய நிம்மதியாப் போச்சு பாருங்கோ. :)

   எல்லாம் எங்கட உச்சிப்பிள்ளையாரின் அருள் மட்டுமே.

   Delete
  2. //சரி அது போகட்டும்..//

   எது போகட்டும்? எங்கே போகட்டும்?

   //மோகன்ஜி இன் முன்னுறை படிக்க நன்றாக இருக்கிறது.//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ’முன்னுறை’ அல்ல முன்னுரையாக்கும்.

   உறை என்பது வேறு. கத்தியை அதற்கான உறையில் போடுவது. தங்குமிடத்தை ‘உறைவிடம்’ என்பது போன்றவைகள்.

   உரை: உரையாற்றுதல். முன்னுரை, பின்னுரை, பின்குறிப்பு முதலியன. உங்கள் ஊசிக்குறிப்பு போல என வைத்துக்கொள்ளலாம்.

   Delete
  3. பிரிவின் கனத்தை மென்மையான உள்ளங்கள் தாங்குவதில்லை அதிரா!

   Delete
 6. Replies
  1. asha bhosle athiraJune 15, 2017 at 12:40 AM
   ///அருமையான ஆராய்ச்சிக் கதை. //
   கரப்பான் ஆராய்ச்சி செய்தார்.. ஏன் எனக் கேட்டபோது காரணமும் சொன்னார்:)..

   இப்போ அபாயமணி ஆராய்ச்சியா?:) எதுக்கு இதனை ஆராய்ச்சி செய்தார் மோகன் ஜி எனக் கேட்டுச் சொல்லுங்கோ கோபு அண்ணன்:).

   //’பொன் வீதி’
   நூல் மதிப்புரை இத்துடன்
   இனிதே நிறைவுற்றது//

   சந்தோசமான நிறைவு. மோகன் ஜிக்கும் கோபு அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.. சண்டைப்பிடிக்காமல் இந்தாங்கோ பங்கிட்டு எடுங்கோ:).[எழுத்துப் பிழை ஆகிவிட்டது.. திருத்தி விட்டேன் இப்போ]

   http://assets.teleflora.com/images/misc/cat_tulips.jpg

   Delete
  2. asha bhosle athiraJune 15, 2017 at 12:51 AM

   ///அருமையான ஆராய்ச்சிக் கதை. //
   கரப்பான் ஆராய்ச்சி செய்தார்.. ஏன் எனக் கேட்டபோது காரணமும் சொன்னார்:)..

   இப்போ அபாயமணி ஆராய்ச்சியா?:) எதுக்கு இதனை ஆராய்ச்சி செய்தார் மோகன் ஜி எனக் கேட்டுச் சொல்லுங்கோ கோபு அண்ணன்:).//

   அவருக்கு நீங்களும் கேட்ட அந்த மதிப்புக்குரிய சர்டிஃபிகேட் கொடுத்துட்டேன். இதனால் நீங்க இப்போ
   மோகன்ஜியின் எழுத்துக்களுக்கு ரசிகை ஆயிட்டீங்கோ. இனி அவருக்கு ஆச்சு, உங்களுக்கு ஆச்சு. நான் எஸ்கேப்.

   அதனால் அந்த ஆராய்ச்சி பற்றி நீங்களே நேரிடையாகக் கேட்டுக்கொள்ளுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.

   Delete
  3. **’பொன் வீதி’ நூல் மதிப்புரை இத்துடன் இனிதே நிறைவுற்றது**

   //சந்தோசமான நிறைவு. மோகன் ஜிக்கும் கோபு அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்..//

   தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

   //சண்டைப்பிடிக்காமல் இந்தாங்கோ பங்கிட்டு எடுங்கோ:). http://assets.teleflora.com/images/misc/cat_tulips.jpg
   //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கருப்புப் பூனையார் தரும் அந்த மூன்று சிகப்புப் பூக்களை எப்படி நாங்கள் இருவரும் சமமாகப் பங்கு போட்டுக்கொள்ள முடியும்?

   அதில் அழகான ஒரு பூவினை டார்..ர்ராஆஆஆ ஆக இரண்டாக கிழிக்கும்படியாகும்.

   மென்மையான, மேன்மையான, பூவினையும், பூவையரையும் என்னால் ஒருபோதும் கிழிக்கவே முடியாதூஊஊஊஊஊஊஊ.

   அதற்காக அவருக்கு இரண்டும் எனக்கு ஒன்றும் எனப் பிரித்துக்கொள்ளவும் முடியாது. மூன்றுமே எனக்கே எனக்கு எடுத்துக்கொள்வேன்.

   ஒன்றுக்கு இரண்டு உபத்ரவத்திற்கு மூன்று எனச் சொல்லுவினம். :)

   [எழுத்துப் பிழை ஆகிவிட்டது.. திருத்தி விட்டேன் இப்போ]

   புரிகிறது. உடனே கவனித்து விட்டேன். ‘ன்’ என்பதை ‘ர்’ ஆக்கிட்டீங்கோ.

   குட் .. குட் .. வெரி குட்.

   Delete
 7. ஹா ஹா ஹா மனோ அக்காவுக்கு மலியில் வீடு கொடுக்கச்சொன்னார் மோகன் ஜி, நீங்க மாடி வீடே கொடுத்திட்டீங்க:).. உறுதி எல்லாம் சரியா இருக்கோ வீட்டுக்கு?:)

  //(இத்துடன் 3+3+4+3=13 நெக்லஸ் ஆச்சோ)//
  கணக்கில கரெக்ட்டாத்தான் இருக்கிறீங்க:).. நான் எங்கே எண்ணினேன்ன்.. எடுத்து எடுத்து ஓடிப்போய் லொக்கரில் வச்சிட்டேன்ன்ன்:)).. கொஞ்சம் கெயாலெஸ்சாக இருந்தாலே களவு போயிடுதே:).. ஆசைக்கு பார்க்கக்கூட முடியல்ல கர்ர்:).

  ///2) கீழ்க்கண்ட ஆறு மாடல்களில்
  வெள்ளி கொலுசுகள்//

  சூப்பர். கால்களில் தங்கம், வைரம் அணிவதை நான் வரவேற்பதில்லை:(.

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 15, 2017 at 12:45 AM

   //ஹா ஹா ஹா மனோ அக்காவுக்கு ’மலியில்’ வீடு கொடுக்கச்சொன்னார் மோகன் ஜி,//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அது ’மலியில்’ இல்லை.

   ’மலையில்’ என்று எழுதணுமாக்கும்.

   //நீங்க மாடி வீடே கொடுத்திட்டீங்க:).. //

   கொடுப்பது கொடுக்கிறோம். அது மாடி வீடாகவே இருக்கட்டுமே என்றுதான். இதற்கு என்ன காசா பணமா செலவு? :)

   //உறுதி எல்லாம் சரியா இருக்கோ வீட்டுக்கு?:)//

   உறுதியாகச் சொல்கிறேன் .... அதில் உறுதி எல்லாம் சரியாக இருக்கும் என்று. :)

   **(இத்துடன் 3+3+4+3=13 நெக்லஸ் ஆச்சோ)** //கணக்கில கரெக்ட்டாத்தான் இருக்கிறீங்க:).. நான் எங்கே எண்ணினேன்ன்.. எடுத்து எடுத்து ஓடிப்போய் லொக்கரில் வச்சிட்டேன்ன்ன்:))..//

   லொக்கரில் = லாக்கரில்.

   லாக்கரில் கொண்டுபோய் வைப்பதும், அதற்கு வாடகை தருவதும் வெட்டி வேலைகளாகும். அதற்கு பதிலாக அவற்றை பணம் போட்டு வாங்காமல், கடையிலேயே இருக்க வைத்து, அவ்வப்போது போய் கண்குளிர புத்தம் புது மாடல்களில் பார்த்து வருவதே மேல்.

   //கொஞ்சம் கெயாலெஸ்சாக இருந்தாலே களவு போயிடுதே:).. ஆசைக்கு பார்க்கக்கூட முடியல்ல கர்ர்:).//

   ’கெயாலெஸ்சாக’ = கேர் லெஸ் ஆக [கேர் ஃப்ரீ யாக எனவும் சொல்லலாமோ என்னவோ]

   **2) கீழ்க்கண்ட ஆறு மாடல்களில் வெள்ளி கொலுசுகள்**

   சூப்பர். கால்களில் தங்கம், வைரம் அணிவதை நான் வரவேற்பதில்லை:(.

   கர்ர்ர்ர்ர் .... சாஸ்திரப்படியே கால்களில் கொலுசு, மெட்டி முதலியன வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும். தங்கத்திலோ, வைரத்திலோ அணியவே கூடாது.

   Delete
 8. தலையில் விழும் பூவைக் கொட்டும் பூஸார்ர், கண்ணாடி மாட்டும் பூஜார்:).. கிரீடம் போட்டவர் எல்லோரும் இன்று.. தேருக்கு மேல் ஐயர் ஆட்கள் அலங்காரத்தோடு ஜொலிப்பதைப்போல் ஜொலிக்கின்றனர்:).

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 15, 2017 at 12:47 AM

   //தலையில் விழும் பூவைக் கொட்டும் பூஸார்ர், கண்ணாடி மாட்டும் பூஜார்:).. கிரீடம் போட்டவர் எல்லோரும் இன்று.. தேருக்கு மேல் ஐயர் ஆட்கள் அலங்காரத்தோடு ஜொலிப்பதைப்போல் ஜொலிக்கின்றனர்:).//

   தாங்கள் இங்கு சொல்லியுள்ள உதாரணம் மிகவும் கரெக்டூஊஊஊஊ. தேருக்கு மேல் உள்ள ஜொலிக்கும் ஸ்வாமி விக்ரஹங்களை, நாம் கண் குளிரப் பார்க்க முடியாமல் பருமனான ஐயர்கள் சிலர் மறைத்து விடுவார்கள்.

   இதைப்பற்றி நான் ஒரு கட்டுரை எழுதி, அதற்கான ஒரு மிக நல்ல சூப்பரான தீர்வும் சொல்லியிருந்தேன். அது 4-5 வருடங்கள் முன்பு, சித்திரை மாதத்தில், தினமலர் நாளிதழில் ‘இது உங்கள் இடம் பகுதி’யில் பிரசுரம் ஆகியிருந்தது.

   ஆனால் யாரும், எந்தக்கோயிலிலும், இன்றுவரை அந்த என் ஆலோசனையை ஏற்று செயல்படவில்லை .... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

   சரி அ(த்)தை விடுங்கோ.

   ’தலையில் விழும் பூவைக் கொட்டும் பூஸார், கண்ணாடி மாட்டும் பூஜார்:).. கிரீடம் போட்டவர் எல்லோரும்’ ஜொலிக்க வேண்டுமே என்பதற்காக மட்டுமே, பரிசளித்த ஐயராகிய நான் அதில் காட்சி தராமல் ஒளிந்துகொண்டு விட்டேன்.

   Delete
  2. கோபு சார்! அந்த பதிவின்சுட்டியைக் கொடுங்களேன்

   Delete
  3. மோகன்ஜி June 15, 2017 at 6:52 PM

   //கோபு சார்! அந்த பதிவின்சுட்டியைக் கொடுங்களேன்//

   நான் அதை என் பதிவினில் ஏற்றவில்லை. அந்த ஒரிஜினல் தினமலர் நாளிதழ் என் வீட்டுப்பரணையில் ஏதேனும் ஒரு பெட்டியில் பொக்கிஷமாக இன்றும் இருக்கும். இப்போது தேடி எடுக்கும் நிலையில் நான் இல்லை.

   நாளை முதல் ஒரு 15-20 நாட்களுக்கு நான் மிகவும் பிஸி. வெளிநாட்டிலிருந்து என் பெரிய மகன், மருமகள், பேத்தி + பேரன் வர உள்ளார்கள். :)

   Delete
  4. அப்படியெனில் சரி! வரும் நாட்கள் குடும்பத்தினருடன் கோலாகலமாய் இருங்கள்!

   Delete
 9. ///இந்தாங்கோ 40 கிலோ தங்கம்
  *GOLD BISCUITS and GOLD BAR*
  சாப்பிடுங்கோ !///
  ஹா ஹா ஹா கோல்ட் எனில் பூச்சி பிடிச்சாலும் பறவாயில்லை சாப்பிடாமல் லொக்கரில் வைச்சிடுவேன்:)

  //சந்தோஷமா இருங்கோ!!

  இனிய நல்வாழ்த்துகள் அதிரா!!!///

  அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன்...

  http://www.ripleys.com/wp-content/uploads/2014/08/HEader-CatRoyalty-1140x641.jpg

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 15, 2017 at 12:50 AM

   **இந்தாங்கோ 40 கிலோ தங்கம் *GOLD BISCUITS and GOLD BAR* சாப்பிடுங்கோ !**

   //ஹா ஹா ஹா கோல்ட் எனில் பூச்சி பிடிச்சாலும் பறவாயில்லை சாப்பிடாமல் லொக்கரில் வைச்சிடுவேன்:)//

   ’பறவாயில்லை’ = ’பரவாயில்லை’

   [ஏதோ எங்கட அதிரா எப்படி எழுதினாலும் எனக்குப் பரவாயில்லை. இருப்பினும் பிறர் இங்கு வந்து ஏதேனும் எழுத்துப்பிழை எனக் கண்டு பிடித்து குறை சொல்லுவினம்]

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   **சந்தோஷமா இருங்கோ!! இனிய நல்வாழ்த்துகள் அதிரா!!!**

   //அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன்...//

   மிகவும் சந்தோஷம் .... அதிரா.

   //http://www.ripleys.com/wp-content/uploads/2014/08/HEader-CatRoyalty-1140x641.jpg//

   முத்துமாலை அணிந்திருக்கும் பூனையார் கையில் உள்ள லாக்கர், வாயைப்பிளந்துகொண்டு நிரம்பி, நகையெல்லாம் வெளியே வழிகிறது. ஜாக்கிரதையாக மூடி வைக்கச்சொல்லுங்கோ. இல்லை இன்னொரு பெரிய லாக்கர் வாங்கிக்கொள்ளுங்கோ. :)

   Delete
 10. அஆவ் !!! மீ அரைவ்ட் :)

  உண்மையில் 8 பகுதிக்கும் அடிச்சிபிடிச்சி ஓடி வருவதில் ஒரு சந்தோசம் இருந்தது ..இத்துடன் நிறைவா !!
  விதவிதமான படங்களை பதிவில் இணைத்து மோகன்ஜி அவர்களை பற்றி அறிய தந்தீர்கள்
  ரெண்டு ஜிக்களுக்கு நடுவில் அப்பாதுரை அவர்கள் மிக அருமையான படம் ..
  எந்த விஷயத்தை செய்தாலும் பொறுமை உழைப்புடன் செய்வீர்கள் அதை இந்த எட்டு பகுதியிலும் பார்த்தேன் ..

  ReplyDelete
  Replies
  1. ///ரெண்டு ஜிக்களுக்கு நடுவில் அப்பாதுரை அவர்கள் மிக அருமையான படம் .//

   ஓ எங்கள்புளொக் கில் வந்து பேசிப்போகும் அப்பாதுரை அவர்களோ இது?

   Delete
  2. ஆமாம் அவரேதான் :)

   Delete
  3. நீங்க 1500 மீட்டர் ஓட்டத்தில் ரெண்டாவது வந்ததா புளுகு மூட்டை கொட்டினீங்களே அதையும் நம்பிய அந்த அப்பாவி அப்பாதுரை இவர்தான்

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஉ:)..

   http://www.cutecatcoverage.com/news/wp-content/uploads/2011/05/004.jpg

   Delete
  5. மிக்க நன்றி ஏஞ்சலின். எல்லாப்புகழும் கோபு சாருக்குதான் சேர வேண்டும்.
   அப்பாதுரையின் பதிவுகளை ' மூன்றாம்சுழி' வலைதளத்தில் பாருங்கள். நல்ல வாசிப்புக்கு நான் கேரண்டி. சுந்தரஜியின் 'கைகள் அள்ளிய நீர்' வலைப்பூவும் ஒரு தகவல் களஞ்சியம். இருவரும் மீண்டும் எழுத வேண்டும் என்பதே என் விண்ணப்பம்.

   Delete
  6. Angelin June 15, 2017 at 12:50 AM

   அஆவ் !!! மீ அரைவ்ட் :)

   வாங்கோ, வாங்கோ அஞ்சு..... வாங்கோ. நீங்க வந்தால்தான் ஓரளவு மனசுக்கு நிம்மதி ஆகுது எனக்கு. ஏனென்றால் உங்கள் மூலமாக மட்டுமே,
   அந்த உங்களின் அதிரஸப்பதிவின் மூலமாக மட்டுமே இந்த அதிரா எனக்குப் பழக்கமானாங்கோ.

   அதற்கு முன் இவங்க கருப்பா / சிவப்பா / மாநிறமா / குட்டையா / நெட்டையா / குண்டா / ஒல்லியா / வயசு எத்தனை இருக்கும் / கல்யாணம் ஆச்சா / கன்னிப்பெண்ணா .... என ஒன்றுமே தெரியாது. இப்போதும் தெரியாது என்பது வேறு தனி விஷயம். :)

   //உண்மையில் 8 பகுதிக்கும் அடிச்சிபிடிச்சி ஓடி வருவதில் ஒரு சந்தோசம் இருந்தது .. இத்துடன் நிறைவா !!//

   ஓம் ...... ஸாரி (இந்த அதிராவுடன் பழகி ’ஆம்’ ... ’ஓம்’ என்று ஆகிவிட்டது) ஆம். அந்த ஒரு சந்தோஷம் இத்துடன் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது.

   //விதவிதமான படங்களை பதிவில் இணைத்து மோகன்ஜி அவர்களை பற்றி அறிய தந்தீர்கள்.//

   ஏதோ என்னால் முடிந்தது ..... அம்புட்டுத்தான்.

   //ரெண்டு ஜிக்களுக்கு நடுவில் அப்பாதுரை அவர்கள் மிக அருமையான படம் ..//

   அப்பப்பா ..... அவர் ’துரை’யானவர் ஆச்சே! அதனால் தலையில் கிரீடத்துடன் நடுவில் நடுநாயகமாக காட்சியளித்துள்ளார்.

   2 and 3G க்களை நான் நேரில் சந்தித்துள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html

   http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html

   http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

   http://gopu1949.blogspot.in/2013/06/9.html

   //எந்த விஷயத்தை செய்தாலும் பொறுமை உழைப்புடன் செய்வீர்கள். அதை இந்த எட்டு பகுதியிலும் பார்த்தேன் ..//

   மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   அந்த நாள் முதல் இந்தநாள் வரை என் தொடர்பு எல்லைக்குள் உள்ளவர்களில் உங்களுக்கும் ஓர் தனி இடம் உண்டு. :) வாழ்க !

   Delete
  7. தாங்க்யூ தாங்க்யூ அண்ணா ..

   Delete
 11. கணக்குபோட்டுக்கு பார்க்கும் பூஸாரும் கிரீடம் அணிந்த பூஸாரும் கியூட் :)
  அதிரா அந்த பிஸ்கட்டை எப்போ சாப்பிடப்போறீங்க :)

  ReplyDelete
  Replies
  1. நீங்க அந்த ஜேர்மன் சொக்கலேட்ஸ் ஐ சாப்பிட்டீங்களா?:) சாப்பிட்டீங்களா?:) இல்ல இல்ல?:).. அப்போ இது பவுனூஊஊஊ.. இதை நான் சாப்பிடுவேனோ?:).. ஸ்ரெயிட்டா லொக்கர்தேன்ன்ன்ன்:)..

   தேம்ஸ்க்கு நடக்க வரும்போது உங்களுக்கு ஒண்டு..கொண்டு வந்து தாறேன்ன்ன் ச்ச்ச்சும்மா மணந்திட்டுத் திருப்பித் தரோணும் ஓகே?:)

   Delete
  2. Angelin June 15, 2017 at 12:52 AM

   //கணக்குபோட்டுக்கு பார்க்கும் பூஸாரும் கிரீடம் அணிந்த பூஸாரும் கியூட் :)//

   மிக்க மகிழ்ச்சி :)

   Delete
 12. சிறப்பான தொகுப்பு..

  >>> இன்றைய வாசகனுக்கு நேரமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் கொறிப்பும் நேரத்தைத் தின்றபின்,வாசிப்புக்கு மிச்சம் ஏது?..<<<

  வைர வரிகள்..

  நிறைவாக
  சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.. - என, தெய்வீக அழகு..

  காலத்திற்கும் மனதில் நின்றிருக்கும்..

  வாழ்க தங்கள் பணி..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி துரை சார். வானவில் மனிதன் வலைப்பூவுக்கு அடிக்கடி வாருங்கள்.

   Delete
  2. துரை செல்வராஜூ June 15, 2017 at 12:54 AM

   வாங்கோ பிரதர். வணக்கம்

   //சிறப்பான தொகுப்பு..//

   மிக்க மகிழ்ச்சி.

   //நிறைவாக சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.. - என, தெய்வீக அழகு.. காலத்திற்கும் மனதில் நின்றிருக்கும்.. வாழ்க தங்கள் பணி..//

   இந்த நூலை முழுவதுமாகப் படித்துள்ள தாங்கள் இதனை இங்கு சூசகமாகச் சொல்லியுள்ளது, ஸ்ரீ கிருஷ்ணன் போன்றே அழகோ அழகு ! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 13. /படைப்பாளியின் மனம் உள்வாங்கிய ஒரு கணத்தின் நிகழ்வை, தன் புனைவின் மூலம் காட்சிப்படுத்த//

  மிகவும் உண்மையான வரிகள் மோகன்ஜி ..அனைவருமே ஒரு கணத்தின் நிகழ்வை உள்வாங்கறோம் அதை புனைவாக்கி அழகுற எழுதுவதும் ஒரு கலை

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஏஞ்சலின் !

   Delete
  2. Congrats Mohan'ji. Didn't knew abt ur book, adhigam valaipakkam varradhilla, so not updated. Enga oor July bookfair'la thedi pudikkaren unga book'ai. Congrats once again

   Delete
 14. //இன்றைய வாசகனுக்கு நேரமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் கொறிப்பும் நேரத்தைத் தின்றபின், வாசிப்புக்கு மிச்சம் ஏது? //

  நமது வாசிப்பனுபவத்தை மேற்கூறிய FB ட்விட்டர் களவாடிக்கொண்டன என்பது உண்மையே அப்படியும் இன்னும் வாசிப்பை சுவாசிப்பவர்கள் இருக்கின்றனர்

  ReplyDelete
  Replies
  1. வலைப்பூவில் வாசிக்கும் அனுபவம் வேறு. அது தலைவாழை இலைப்போட்டு பரிமாறிய விருந்து. ஏனையவை 'கொறிப்பு' மட்டுமே. பசியாற்றாது.

   Delete
  2. அதே அதே :) அதனால்தான் ஒரு நொடியில் முகப்புத்தகத்தை விட்டு இங்கே வலையுலகம் வந்துவிட்டேன் .

   Delete
 15. நூல் மதிப்புரை மிகவும் அமர்க்களமாக இருந்தது அந்த கதைகளை மிக அழகாக சுவாரஸ்யம் குன்றாமல் எதிர்பார்ப்பை வளர்க்கும் விதத்தில் மதிப்புரை செய்த கோபு அண்ணாவுக்கும் மற்றும் நூல்ஆசிரியர் மோகன்ஜி அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் நன்றி ஏஞ்சலின். எட்டு பதிவிலும் தவறாமல் கருத்துகள் இட்டு பெருமை செய்ததற்கு என் பாராட்டுகள். அதிரா பாவம். ரொம்ப சீண்டாதீர்கள்.

   Delete
  2. Angelin June 15, 2017 at 1:06 AM

   //நூல் மதிப்புரை மிகவும் அமர்க்களமாக இருந்தது அந்த கதைகளை மிக அழகாக சுவாரஸ்யம் குன்றாமல் எதிர்பார்ப்பை வளர்க்கும் விதத்தில் மதிப்புரை செய்த கோபு அண்ணாவுக்கும் மற்றும் நூல்ஆசிரியர் மோகன்ஜி அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான
   அமர்க்களமான சுவாரஸ்யம் குன்றாத, எதிர்பார்ப்பை வளர்க்கும் கருத்துக்களுக்கும், என் மதிப்புரையை மதித்து வாழ்த்திப் பாராட்டியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 16. Replies
  1. நன்றி முகமது நிஜாமுதீன் சார்!

   Delete
  2. Mohamed Nizamudeen June 15, 2017 at 2:53 AM

   //சிறப்பாய் ஒரு மதிப்புரை!!!//

   வாங்கோ நண்பரே ! வணக்கம். நலம் தானே? உங்களை என் பதிவுகள் பக்கம் பார்த்து பல வருஷங்கள் ஆனது போல ஓர் எண்ணம் ஏற்படுகிறது. இறை நாட்டம் இன்று நம்மை சந்திக்க வைத்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

   மிக்க நன்றி, நண்பா.

   நீர் எங்கிருந்தாலும் வாழ்க !

   Delete
 17. இந்தப் பதிவின் கதைகளுக்கு
  பின்னூட்டம் இடும் முன்னால்
  ஒரு இன்னூட்டமாய் ஒரு என்னூட்டம்

  மிக மிக வேகமாய் இயங்கி வந்த
  ஒரு இயக்கமோ,ஒரு ஸ்தாபனமோ
  எதன் காரணத்தாலோ தேக்கமுறும்போது
  யாரும் எதிர்பாராத விதமாக ஒரு தலைவர்
  சட்டென பொறுப்பெடுத்து முன் வருவார்

  தொய்ந்தது தேங்கியது அறுந்து விடாது
  அழிந்துவிடாது முன்னைவிட அதிக
  வேகம் கொள்ளும்படியாய் தன் பங்களித்தை
  அளித்து வியப்பில் ஆழ்த்துவார்

  அந்த வகையில் சற்றே எதன் காரணமாகவோ
  சுணக்கமாய் இருக்கும் பதிவுலகு
  வேகம் கொள்ளும்படி பதிவர்களின்
  புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதியதன் மூலம்
  அவர்களைப் பெருமைப்படுத்தியதோடு
  மிக மிக அதிகமான பின்னூட்டங்களும்
  அதற்கு அர்த்தபுஷ்டியான சுவாரஸ்யமான
  விரிவான பதிலுரைகளும் அளித்து
  பதிவுலகை கிளுகிளுக்கச் செய்த
  பதிவுலகப்பிதாமகர் வை.கோ அவர்களுக்கு
  பதிவர்கள் சார்பாக எனது மனமார்ந்த
  நன்றியினையும் வாழ்த்துக்களையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்

  பதிவில் பொன்னும் பொருளும்
  பரிசாகப் பெற்றவர்கள் நிச்சயமாக
  நிஜமாகவே அதனை வருங்காலத்தில்
  பெறுவார்கள்

  அவருடைய ஆசியின் ராசி அப்படி

  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார். கோபு சார் உழைப்புக்கு உங்கள் பாராட்டு பத்திரமாக இருக்கிறது உங்கள் கருத்து.

   Delete
  2. Ramani S June 15, 2017 at 3:44 AM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //இந்தப் பதிவின் கதைகளுக்கு பின்னூட்டம் இடும் முன்னால் ஒரு இன்னூட்டமாய் ஒரு என்னூட்டம்//

   ஆஹா, அடடா, அது எந்தன் பாக்யம்.

   //மிக மிக வேகமாய் இயங்கி வந்த ஒரு இயக்கமோ, ஒரு ஸ்தாபனமோ எதன் காரணத்தாலோ தேக்கமுறும்போது, யாரும் எதிர்பாராத விதமாக ஒரு தலைவர் சட்டென பொறுப்பெடுத்து முன் வருவார். தொய்ந்தது தேங்கியது அறுந்து விடாது அழிந்துவிடாது முன்னைவிட அதிக வேகம் கொள்ளும்படியாய் தன் பங்களிப்பை அளித்து வியப்பில் ஆழ்த்துவார். அந்த வகையில் சற்றே எதன் காரணமாகவோ சுணக்கமாய் இருக்கும் பதிவுலகு வேகம் கொள்ளும்படி பதிவர்களின் புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதியதன் மூலம் அவர்களைப் பெருமைப்படுத்தியதோடு, மிக மிக அதிகமான பின்னூட்டங்களும், அதற்கு அர்த்தபுஷ்டியான சுவாரஸ்யமான விரிவான பதிலுரைகளும் அளித்து பதிவுலகை கிளுகிளுக்கச் செய்த பதிவுலகப்பிதாமகர் வை.கோ அவர்களுக்கு பதிவர்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

   ஆஹா, இதனை *விமர்சனச் சக்கிரவர்த்தியும்*, என் மனதுக்கு மிகவும் பிடித்த பதிவருமான தங்கள் வாயிலாகக் கேட்பதில் நான் இன்று தன்யனானேன். :)

   * http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html

   * http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html


   //பதிவில் பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்றவர்கள் நிச்சயமாக நிஜமாகவே அதனை வருங்காலத்தில் பெறுவார்கள். அவருடைய ஆசியின் ராசி அப்படி. //

   இது மிகவும் உண்மைதான் ஸார். சொல்லிக்கொள்ள எனக்கே கொஞ்சம் கூச்சமாக உள்ளது.

   என்னுடைய வலையுலக நெருங்கிய நட்பு வட்டத்தில் பலரும் (More than 10 People) தங்களின் பலவிதமான சொந்தப் பிரச்சனைகளை என்னிடம் சொல்லி என்னை ஸ்பெஷலாக பிரார்த்தித்துக்கொள்ளச் சொல்லுவார்கள். இதுவரை நான் அவர்களுக்காக மனதாரச் செய்துள்ள பிரார்த்தனைகள் எதுவே பலன் அளிக்காமல் இல்லை. உடனுக்குடன் பலன் அளித்துள்ளன.

   அத்தனை பேர்கள் பெயரையும் இங்கு நான் குறிப்பிட்டுச்சொல்ல விரும்பவில்லை.

   நல்லவேளையாக அவர்களில் யாருமே இந்தப்பதிவின் பக்கம் இதுவரை வருகை தரவும் இல்லை.

   நான் எனக்காக தன்னலமாக வேண்டிக்கொள்வது எதுவுமே நடக்காது. அதுபோல நான் எனக்காக எதுவும் வேண்டிக்கொள்வதும் இல்லை.

   ஆனால் நான் பிறருக்காக வேண்டிக்கொள்வது உடனுக்குடன் நிறைவேறி விடும்.

   இதுவரை நம் பதிவர்கள் வீடுகளிலேயே, கடந்த ஓர் ஆண்டுக்குள் என் விசேஷப் பிரார்த்தனைகளால் 5-6 கல்யாணங்களுக்கு மேல் நடந்து முடிந்துள்ளன. அதுவும் கல்யாணம் நடக்கவே வழியில்லை என தடங்கல் ஏற்பட்டக் கல்யாணங்கள் என் காதில் போட்ட மூன்று அல்லது ஆறே மாதங்களுக்கும் நடைபெற்றுள்ளது. எல்லோருக்கும் மிகவும் அமோகமான வாழ்க்கை கிடைத்துள்ளன. அதில் சிலர் இன்று மிகப் பெரிய கோடீஸ்வரியாகவும் உள்ளனர்.

   வேறு சிலருக்கு அவர்கள் விரும்பியபடியே வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும் சிலருக்கு அவர்களின் பணப்பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளன.

   தொடர்ந்து மேலும் சிலருக்கான கோரிக்கைகள் சமீபத்தில் என்னிடம் வந்துள்ளன. அவர்களுக்கும் கூடிய சீக்கரமாக நல்லதே நடக்கும்.

   இவையெல்லாம் என்னால் நடப்பவை அல்ல. நான் தினமும் வணங்கிடும், இன்றும் என் இல்லத்திலும், உள்ளத்திலும் நடமாடும் தெய்வமாக விளங்கிடும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் திருவிளையாடல்கள் மட்டுமே ..... என்னை ஒரு சின்ன கருவியாக்கிக்கொண்டு உதவி வருகிறார்.

   //வாழ்த்துக்களுடன்....//

   தங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 18. சிறந்த வாசகனுக்கான சிறுகதை இனிமேல்தான் ழுதப்படவேண்டும் என்னும் வரிகள் வைரவரிகள். நல்ல சிறுகதைகளை வாசகர்கள் தேடித்தேடிப் படித்து இனம் கண்டுக் கொள்ள வேண்டும்.

  மோகன்ஜியின் கதைகள் அவ்வப்போது எடுத்து மீள் வாசிப்பு செய்து மகிழக்கூடிய தரம் வாய்ந்தவை. குறிப்பாக பொன்வீதி போன்ற அடலசண்ட் காதல் கதைகளும், அதீத உணர்வுக்காரர்களை சொல்லும் பச்ச மொழகா, கடமை காதலாய் மாறும் பியார் கி புல்புல் (பொருளடக்கத்தில் பியர் என்று இருக்கும்!) போன்ற கதைகளும்.

  உணர்வுபூர்வமான,எழுத்துகளால் அந்த கதாபாத்திரங்களை மனதில் இடம்பெறச்செய்தார் மோகன்ஜி.

  நீங்கள் வழக்கம்போல விமர்சனத்திருவிழா நடத்திச் சிறப்பித்து விட்டீர்கள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! விமரிசனங்கள் எழுதும் முறைமையில் ஒரு தனிவழியை கண்டிருக்கிறார் கோபு சார். நீங்கள் சொன்னது மிகச்சரி. இது 'விமரிசன திருவிழா' தான்.
   மற்றபடி, எனக்கான உங்கள் பாராட்டுகள் என்றும் உள்ளது தானே?! நன்றி ஶ்ரீராம்.

   Delete
  2. ஸ்ரீராம். June 15, 2017 at 6:22 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //நீங்கள் வழக்கம்போல விமர்சனத்திருவிழா நடத்திச் சிறப்பித்து விட்டீர்கள். அருமை.//

   தாங்கள் ஏனோ வழக்கத்திற்கு மாறாக திருவிழாவின் முதல் நாளும், நிறைவு நாளும் மட்டும் வருகை தந்து சிறப்பித்து விட்டீர்கள்.

   எனினும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   Delete
 19. //ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் வாசகர்கள் மனத்துள் பற்பல சிறுகதைகளாய் எழுதிக்கொள்ளப்படுகிறது என்பதே என் துணிபு. ஆக சிறுகதை நிகழ்வது வாசகன் மனமுற்றத்தில்தான்.//

  அருமை.

  முற்றம் வீடுகளில் இப்போது இல்லை. வாசகர் மனத்திலாவது இருக்கட்டும், இருக்கும் . காலத்தால் அழிந்தவை எல்லாம் மனதில் இருக்கே!


  //இன்றைய வாசகனுக்கு நேரமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் கொறிப்பும் நேரத்தைத் தின்றபின், வாசிப்புக்கு மிச்சம் ஏது? வரும் நாட்களில் தொழில்நுட்ப தாக்கம் இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடக் கூடும். இன்று இயல், இசை, நாடகம் என்பது சினிமாவாகி, குறும்படமாகி, யூடியூபின் இரு நிமிடச் சலனமாய் மாறியபடி .... எல்லாமும் மாற்றத்துக்கு உட்பட்டவையே என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.//

  எப்படியோ கிடைக்கும் நேரத்தில் எல்லாம் வாசகன் மனது பிடித்ததை செய்கிறானே ! என்று மகிழ்ச்சியடையவேண்டிய காலமாய் இருக்கிறது. மாற்றங்க்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் தானே!

  முன்பு உள்ளவர்களைவிட இப்போது உள்ளவர்களுக்கு
  இப்படி எல்லாம் வசதி இருக்கே! எழுத்தாளருடன் நேரில் பேசுவது போல் பேசமுடிகிறது . பார்க்க முடிகிறது. விஞ்ஞான
  முன்னேற்றத்தில் நன்மைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மகிழ்வோம்.

  அருமையான என்னுரை மோகன்ஜி.  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். பதிவுகளில் அழகான கருத்துரைகள் இட்டு கௌரவித்தீர்கள்.

   Delete
  2. வலைப்பூவில் வாசிக்கும் அனுபவம் வேறு. அது தலைவாழை இலைப்போட்டு பரிமாறிய விருந்து. ஏனையவை 'கொறிப்பு' மட்டுமே. பசியாற்றாது.//

   உண்மைதான் சார். முகநூலில் கருத்துக்களை சொல்ல முடிவது இல்லை, வலைப்பூவில் எழுதுவது போல் சகஜமாய் எழுத முடிவது இல்லை.

   வலைப்பூ வலைப்பூதான்.

   //மோகன்ஜியின் கதைகள் அவ்வப்போது எடுத்து மீள் வாசிப்பு செய்து மகிழக்கூடிய தரம் வாய்ந்தவை.//

   ஸ்ரீராம் சொன்னது போல் மீண்டும் படித்தேன் வீட்டைதுறந்தேன் கதையை.

   எல்லா கதைகளையும் நேரம் கிடைக்கும் போது படிப்பேன்.

   Delete
 20. Replies
  1. சார் , வணக்கம் நலமா?

   Delete
  2. Durai A June 15, 2017 at 7:37 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //promoter par excellence!//

   ’விளம்பரதாரர் உன்னத அனுபவம் வாய்ந்தவர்’ எனச் சொல்லுகிறீர்களோ? :)

   தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கு மிக்க நன்றி ஸார். :)

   Delete

 21. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், எட்டு பகுதிகளாய்

  மோகன்ஜியின் சிறுகதை மதிப்புரையை மிகவும் சிறப்பாய் செய்துவிட்டீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  எழுத்தாளர்களுக்கு இந்த விமர்சனங்கள் ஒரு வரப்பிரசாதம்.
  ஊக்க போனஸ்.
  பரிசுகளும் கொடுத்து பின்னூட்டம் கொடுத்தவர்களை மகிழ்ச்சி
  ப்படுத்தி சிறப்பாய் நிறைவு செய்து விட்டீர்கள் .
  தாயுமானவர் பக்கம் இருப்பதால் அவரை போலவே

  //எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
  அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே //

  என்று உங்கள் வலைத்தளத்திற்கு வந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறீர்கள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு June 15, 2017 at 7:46 AM

   //வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார்,//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //எட்டு பகுதிகளாய், மோகன்ஜியின் சிறுகதை மதிப்புரையை மிகவும் சிறப்பாய் செய்துவிட்டீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம். எட்டு (அஷ்டமி) ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த நாள். எனக்கும் எட்டாம் நம்பர் மிகவும் ராசி மேடம். நான் பிறந்த ஆங்கிலத் தேதியும் எட்டு மட்டுமே. :) அதனால் எட்டுப் பகுதியாக வெளியிட்டுள்ளது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது போலிருக்குது.

   //எழுத்தாளர்களுக்கு இந்த விமர்சனங்கள் ஒரு வரப்பிரசாதம். ஊக்க போனஸ்.//

   ஏதோ இன்று என்னால் முடிந்தது + எனக்குத் தெரிந்தது இவ்வளவு மட்டுமே, மேடம். இதனால் எழுத்தாளருக்கு ஒருவித மகிழ்ச்சி ஏற்படுமானால் எனக்கும் மகிழ்ச்சியே. வரப்பிரசாதம் + ஊக்க போனஸ் என ஏதேதோ தாங்கள் சொல்லியுள்ளது எனக்கும் என் எழுத்துக்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் + ஊக்க போனஸாக நினைத்து நானும் சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். :)

   //பரிசுகளும் கொடுத்து பின்னூட்டம் கொடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தி சிறப்பாய் நிறைவு செய்து விட்டீர்கள். தாயுமானவர் பக்கம் இருப்பதால் அவரை போலவே.//

   அதெல்லாம் ஒரு ஜாலிக்காக மட்டுமே மேடம். இப்படியெல்லாம் செய்யணும் என எனக்கு அகஸ்மாத்தாகத் தோன்றியது. அதுவே கொஞ்சம் கலர்ஃபுல்லாக அமைந்தும் போனது. இல்லாவிட்டால் DRY SUBJECT போல ஆகியிருக்கும். எழுத்துக்களை மட்டும் படிக்க ஆசைப்படும் சிரத்தையுள்ள உங்களைப்போன்ற ஒருசிலரைத் தவிர, யாரும் இங்கு வந்து எட்டிப்பார்த்தே இருக்க மாட்டார்கள்.

   //’எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’ என்று உங்கள் வலைத்தளத்திற்கு வந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறீர்கள். நன்றி.//

   நடப்பதெல்லாம் பகவான் செயல் மட்டுமே .... மேடம். அதனைத் தாங்களும் மிக அழகாக இங்கு எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 22. நன்றி வைகோ சார்! இவ்வளவு பொறுமையுடனும் ரசனையுடனும் அளித்த விமர்சனங்கள் அடடா! நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மி.கி.மாதவி மேடம்!

   Delete
  2. middleclassmadhavi June 15, 2017 at 10:12 AM

   வாங்கோ Mrs. MCM Madam வணக்கம்.

   //நன்றி வைகோ சார்! இவ்வளவு பொறுமையுடனும் ரசனையுடனும் அளித்த விமர்சனங்கள் அடடா!//

   ஆஹா, பொறுமையுடன் + ரசனையுடன் நான் அளித்துள்ள விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் .....

   ’ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை’ என்பதுபோல, எட்டுக்கு மூன்று தாங்கள் வருகை தந்து கருத்தளித்துள்ளது தான் என்னை ‘அடடா’ போட வைத்துள்ளது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 23. அப்பாதுரை சாரை அவர் வலைத்தளத்தில் பார்க்க முடியவில்லை இங்கு பார்த்து விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. மேலே அவர் புகைப்படமும் உள்ளதே !

   Delete
  2. அவர் கருத்தையும், அவரையும் பார்த்ததால் தான் சொன்னேன் மோகன்ஜி. அவரும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் எல்லோர் ஆசையும்.

   உங்களை தொடர்ந்து வலைப்பக்கம் வரவழைத்து விட்டார் வை.கோ சார்.
   உங்கள் சிறுகதை தொகுப்பு விமர்சனம் செய்து .
   அதற்கு வலைப்பக்கம் வரவே இல்லாத அப்பதுரை சாரையும் வரவழைத்து விட்டார்.

   தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி ,

   Delete
  3. கோமதி அரசு June 15, 2017 at 9:23 PM

   //உங்களை தொடர்ந்து வலைப்பக்கம் வரவழைத்து விட்டார் வை.கோ சார். உங்கள் சிறுகதை தொகுப்பு விமர்சனம் செய்து. அதற்கு வலைப்பக்கம் வரவே இல்லாத அப்பதுரை சாரையும் வரவழைத்து விட்டார். //

   ஆஹா .... இந்த மோகன்ஜி, வானவில் போல எப்போதாவது தோன்றுபவர்.

   அப்பாதுரை ஸார் .... அதற்கும் மேலே ....

   அவர் எப்போது வருவார்?
   அவர் எங்கு வருவார்?
   அவர் ஏன் வருவார்?
   அவர் என்ன சொல்லுவார்?

   என்பதெல்லாம் மிகவும் சிதம்பர இரகசியமான (மர்மமான) விஷயங்களாகும்.

   அவரை நான் வரவழைக்கவில்லை. அவரை யாராலும் வரவழைக்கவும் இயலாது. அவராகவே வந்தால்தான் உண்டு.

   இங்கு இன்று அவராகவேதான் வருகை தந்துள்ளார்.

   மிகப் பிரபலங்களை நம்மால் அவ்வளவு சுலபத்தில் வரவழைத்துவிடவும் முடியாது.

   ஏதோ இவரும்கூட இங்கு வந்துள்ளது நம் பாக்யமே என நினைத்து, மிகவும் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். :)

   Delete
 24. புத்தகத்தின் ஒவ்வொரு கதையையும் படித்து சிறப்பாக விமரிசனம் செய்துள்ளீர்கள். சிறந்த பகுதிகளையும் காண்பித்துள்ளீர்கள்.

  பதிவில் குறிப்பிட்டதுபோல், இப்போது வேகமான காலமாக மாறியிருக்கிறது. நாவல் படிக்கவெல்லாம் நேரமும் பொறுமையும் இருக்குமா என்று தெரியவில்லை. எனக்கு 'தொடரும்' போட்டாலே, அந்தக் கதைகள் பக்கமே எட்டிப்பார்க்கமாட்டேன், "முடிந்தது" போடும் வரையிலும். சமயத்தில் சிறு கதைகளையே, முதல் சில வரிகள், பிறகு கடைசி சில வரிகள் என்று படிக்கும் நிலையாகிவிட்டது. இருந்தும் பொறுமையாக முழுப் புத்தகத்தையும் ஆழ்ந்து படித்து, நேரம் செலவழித்து மற்றவர்களிடம் உங்கள் விமரிசனத்தைப் பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுகள்.

  இத்தனை நாள் நீங்கள், பரிசு கொடுப்பதற்குத்தான் படங்கள் தேடுகிறீர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். இப்போது நகையோடு கூடிய கவர்ச்சிப்படங்களைப் போடுவதற்குத்தானோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் 'காமச்சேறு' கதைக்குப் படங்கள் போடாததனால், 'கோபு சார். அப்படியெல்லாம் இல்லை' என்று மனதுக்குத் தோன்றியது.

  மோகன்ஜிக்குப் பாராட்டுகள். இந்தக் கதைகளை எப்போது படிக்க சந்தர்ப்பம் வாய்க்கும் என்று தெரியவில்லை. சமயம் கிடைக்கும்போது படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழன் சார். என் மின்னஞ்சலுக்கு முகவரி அனுப்புங்கள்.
   உங்கள் கருத்துகளுக்கு என் நன்றி ஜி

   Delete
  2. நெல்லைத் தமிழன் June 15, 2017 at 10:45 AM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //புத்தகத்தின் ஒவ்வொரு கதையையும் படித்து சிறப்பாக விமரிசனம் செய்துள்ளீர்கள். சிறந்த பகுதிகளையும் காண்பித்துள்ளீர்கள்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //பதிவில் குறிப்பிட்டதுபோல், இப்போது வேகமான காலமாக மாறியிருக்கிறது. நாவல் படிக்கவெல்லாம் நேரமும் பொறுமையும் இருக்குமா என்று தெரியவில்லை. எனக்கு 'தொடரும்' போட்டாலே, அந்தக் கதைகள் பக்கமே எட்டிப்பார்க்கமாட்டேன், "முடிந்தது" போடும் வரையிலும். சமயத்தில் சிறு கதைகளையே, முதல் சில வரிகள், பிறகு கடைசி சில வரிகள் என்று படிக்கும் நிலையாகிவிட்டது.//

   பெரும்பாலும் பலரின் நிலையும் இதுவேதான்.

   //இருந்தும் பொறுமையாக முழுப் புத்தகத்தையும் ஆழ்ந்து படித்து, நேரம் செலவழித்து மற்றவர்களிடம் உங்கள் விமரிசனத்தைப் பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுகள்.//

   என்னையும் மதித்து, தான் எழுதிய ஓர் நூலை அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளார். பொதுவாகவே சிறுகதைகள் என்றால், நான் கொஞ்சம் விரும்பிப்படிப்பது உண்டு. அதிலும் இவருடையது, வளவள வென்று இல்லாமல் மிகச்சிறு சிறு கதைகள் மட்டுமே. ஒவ்வொன்றும் சுமார் 4 பக்கத்திலிருந்து 8 பக்கங்களுக்குள் மட்டுமே இருந்தன. படிக்கும் போதே, கொட்டாவியும் தூக்கமும் வராமல் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் இருந்தது. அதனால் மட்டுமே பொறுமையாக, முழுப் புத்தகத்தையும் ஆழ்ந்து படித்து, நேரம் செலவழித்து உங்களைப்போன்ற நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. தங்களின் இந்தப் பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

   //இத்தனை நாள் நீங்கள், பரிசு கொடுப்பதற்குத்தான் படங்கள் தேடுகிறீர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன்.//

   ஆமாம். அதற்காகவேதான் தேடினேன். தங்கள் நம்பிக்கை மிகவும் சரியே.

   //இப்போது நகையோடு கூடிய கவர்ச்சிப்படங்களைப் போடுவதற்குத்தானோ என்று சந்தேகம் வருகிறது.//

   நகைகள் என்றாலே, கவர்ச்சியாக உள்ளோரை மேலும் கவர்ச்சியாகக் காட்டவும், கவர்ச்சியாக இல்லாதோரையும்கூட கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பதுபோல மாற்றவும் தானே. நான் போட நினைக்கும் எதிலும் எனக்கு ஒரு தனி கவர்ச்சி வேண்டும் ஸ்வாமீ. :)

   //இருந்தாலும் 'காமச்சேறு' கதைக்குப் படங்கள் போடாததனால், 'கோபு சார். அப்படியெல்லாம் இல்லை' என்று மனதுக்குத் தோன்றியது.//

   இதுபோன்ற கதைகளுக்கெல்லாம் இங்கு ஓபனாக வெட்ட வெளியில், தகுந்த படங்களைப் போட்டால் என் இமேஜ் என்ன ஆவது? அப்படியெல்லாம் போடக்கூடாது, ஸ்வாமீ.

   //மோகன்ஜிக்குப் பாராட்டுகள். இந்தக் கதைகளை எப்போது படிக்க சந்தர்ப்பம் வாய்க்கும் என்று தெரியவில்லை. சமயம் கிடைக்கும்போது படிக்கிறேன்.//

   வெரி குட். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், பெரும்பாலான பதிவுகளுக்கு (பகுதி-2 மற்றும் பகுதி-3 தவிர) விரிவான, ஆத்மார்த்தமான, அழகான கருத்துக்களுக்கும், ஊக்குவித்தலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

   Delete
 25. புத்தக ஷெல்ஃப்,[ என் வீட்டிலிருப்பது போலவே உள்ள‌து!] வீடு, பூங்கொத்து, மாம்பழ ரசம் இவை எல்லாமே உங்களுடைய, திரு. மோகன்ஜி அவர்களுடைய அன்பிற்கு ஈடாகுமா என்ன? அதனால் இவை எல்லாவற்றையுமே நன்றியுடன் திருப்பிக்கொடுத்து விட்டு, உங்களுடைய அன்பையும் சினேகிதத்தையும் மட்டும் என்னுடன் வைத்துக்கொள்ளுகிறேன்!

  சகோதரர் மோகன்ஜியின் படைப்பிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! உங்களின் அருமையான நூல் மதிப்புரைக்கு இனிய பாராட்டுக்கள்!

  //படைப்பாளியின் மனம் உள்வாங்கிய ஒரு கணத்தின் நிகழ்வை, தன் புனைவின் மூலம் காட்சிப்படுத்து, சிறுகதையாய் வாசகனுக்கு படைத்தளிக்கிறான். அவன் சொன்னதை விடவும் சொல்லாமல் விட்டவை தன் புரிதலுக்கு ஏற்ப சிறுகதையாய் வாசகன் மனதில் எழுதிக்கொள்கிறான்.

  ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் வாசகர்கள் மனத்துள் பற்பல சிறுகதைகளாய் எழுதிக்கொள்ளப்படுகிறது என்பதே என் துணிபு. //

  மிகவும் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! உண்மையிலேயே ஒரு நல்ல சிறுகதை எவ்வளவு நாட்களானாலும் மனதின் ஆழத்திலேயே தங்கி எப்போது நினைத்தாலும் ஒரு நிமிடம் மனதென்னும் மகா சமுத்திரத்திலிருந்து மேலெழும்பி நம்மைப் பாதிக்க வேண்டும்.

  //இன்றைய வாசகனுக்கு நேரமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் கொறிப்பும் நேரத்தைத் தின்றபின், வாசிப்புக்கு மிச்சம் ஏது? வரும் நாட்களில் தொழில்நுட்ப தாக்கம் இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடக் கூடும்.//

  மிகவும் சரியாக எழுதியிருக்கிறீர்கள்! முன்பெல்லாம் வலிமையான கதை, அதற்குப்போட்டியாய் அசத்தும் அழகுடன் ஓவியம் என்று கதைகளை விழுந்து விழுந்து படித்த காலங்கள் இருந்தன. அந்த ஓவியங்களைப்பார்த்துப்பார்த்து வரைந்தே நான் சுயம்புவாய் ஓவியரானேன். கல்கியும் விகடனும் ஒன்றுக்கொன்றுடன் போட்டியாய் காதாசிரியர்களையும் ஓவியர்களையும் படைத்துக்கொண்டிருந்தார்கள். ஏன் 'கல்கி' போன்ற வரலாற்றுக்கதாசிரியரை அதற்குப்பின் எழுத்துலகம் பார்க்க முடியவில்லை? ' ஜெயகாந்தனின் ' யாருக்காக அழுதான்' போன்ற மனசைத்தாக்கும் படைப்பு அதற்குப்பின் ஏன் வரவில்லை?

  ReplyDelete
  Replies
  1. மனோ மேடம்.
   உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!
   உங்கள் கேள்விகள் நியாயமானவை.
   வானவில் மனிதனுக்கு வந்தபடி இருங்கள்.

   Delete
  2. மனோ சாமிநாதன் June 15, 2017 at 11:55 AM

   வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

   //புத்தக ஷெல்ஃப், [என் வீட்டிலிருப்பது போலவே உள்ள‌து!] வீடு, பூங்கொத்து, மாம்பழ ரசம் இவை எல்லாமே உங்களுடைய, திரு. மோகன்ஜி அவர்களுடைய அன்பிற்கு ஈடாகுமா என்ன? அதனால் இவை எல்லாவற்றையுமே நன்றியுடன் திருப்பிக்கொடுத்து விட்டு, உங்களுடைய அன்பையும் சினேகிதத்தையும் மட்டும் என்னுடன் வைத்துக்கொள்ளுகிறேன்!

   சகோதரர் மோகன்ஜியின் படைப்பிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! உங்களின் அருமையான நூல் மதிப்புரைக்கு இனிய பாராட்டுக்கள்!//

   தங்களின் பேரன்புக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை மேடம். நமது இனிய நேரடி சந்திப்புகள் ஏராளமான படங்களுடன் ..... :)

   http://gopu1949.blogspot.in/2016/09/blog-post.html

   http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

   Delete
 26. சிறுகதை பற்றிய திரு மோகன்ஜி அவர்களின் என்னுரை சிந்திக்க வைக்கிறது.
  “ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் வாசகர்கள் மனத்துள் பற்பல சிறுகதைகளாய் எழுதிக்கொள்ளப்படுகிறது என்பதே என் துணிபு. ஆக சிறுகதை நிகழ்வது வாசகன் மனமுற்றத்தில்தான்.”
  என்ற அவரின் கருத்து ஏற்புடையதே.

  தொலைக்காட்சி வந்தபோது திரைப்படம் இருக்காது என்றார்கள். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. எனவே வலைப்பதிவு, முகநூல் ட்விட்டர் போன்றவைகள் வந்தாலும் அச்சுவடிவில் வரும் சிறுகதைகளுக்கு மவுசு குறையாமல் இருக்கும் என்பது எனது கருத்து. மாற்றம் வந்தாலும் சில இரசனைகள் மாறாது.


  ஒரு ஊதாப்பு நிறம் மாறுகிறது கதை கூடா நட்பு பற்றி சொல்கிறதோ?
  பெண்ணைப் பெற்றவர்கள் வயிறு பற்றி எரிகிறது. பாசமுள்ள அண்ணனின் இரத்தம் கொதிக்கிறது. அந்தப்பெண் என்ன ஆனாள்? எங்கே போனாள்? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொள்ள கதையைப் படிக்க சொல்லிவிட்டீர்கள். அவசியம் படிப்பேன்.  காமச்சேறு கதை பற்றி தாங்கள் விவரமாக தராததால் அது அருணகிரி நாதர் கதையைப் போன்றது என நினைக்கிறேன்.

  என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே? என்ற கதையில், திருடர்களில் கூட்டாளிகளில் ஒருவன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் சான்றுரைஞராக மாறிய பிறகு சொல்லும் காரணம் அந்த திருடர்கள் தலைவனாலேயே ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதால் நிச்சயம் அது சுவாரஸ்யமானதாக இருக்கவேண்டும்.

  இந்த கதைகளை எழுதிய திரு மோகன்ஜி அவர்களுக்கும் அவரது கதைகளை திறம்பட திறனாய்வு செய்த தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நடன சபாபதி சார் ! சிறுகதைகள் பற்றிய உங்கள் கருத்து நம்பிக்கை தருவது. எட்டு பதிவுகளிலும் உங்கள் கருத்துகள் நல்ல சிந்தனைத் தூண்டலாய் அமைந்தன. தொடர்பில் இருப்போம். நன்றி சார்!

   Delete
  2. வே.நடனசபாபதி June 15, 2017 at 12:31 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //சிறுகதை பற்றிய திரு மோகன்ஜி அவர்களின் என்னுரை சிந்திக்க வைக்கிறது. “ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் வாசகர்கள் மனத்துள் பற்பல சிறுகதைகளாய் எழுதிக்கொள்ளப்படுகிறது என்பதே என் துணிபு. ஆக சிறுகதை நிகழ்வது வாசகன் மனமுற்றத்தில்தான்.” என்ற அவரின் கருத்து ஏற்புடையதே. //

   ஆமாம் ஸார், அவரின் அந்தக் கருத்துகள் எனக்கும் ஏற்புடையதே.

   //தொலைக்காட்சி வந்தபோது திரைப்படம் இருக்காது என்றார்கள். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. எனவே வலைப்பதிவு, முகநூல் ட்விட்டர் போன்றவைகள் வந்தாலும் அச்சுவடிவில் வரும் சிறுகதைகளுக்கு மவுசு குறையாமல் இருக்கும் என்பது எனது கருத்து. மாற்றம் வந்தாலும் சில இரசனைகள் மாறாது. //

   மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள், ஸார். என்னதான் மாற்றம் வந்தாலும் சில இரசனைகள் மாறவே மாறாது என்றே நானும் தங்களைப்போலவே நினைக்கிறேன்.

   //ஒரு ஊதாப்பு நிறம் மாறுகிறது கதை கூடா நட்பு பற்றி சொல்கிறதோ? பெண்ணைப் பெற்றவர்கள் வயிறு பற்றி எரிகிறது. பாசமுள்ள அண்ணனின் இரத்தம் கொதிக்கிறது. அந்தப்பெண் என்ன ஆனாள்? எங்கே போனாள்? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொள்ள கதையைப் படிக்க சொல்லிவிட்டீர்கள். அவசியம் படிப்பேன். //

   நல்லது ஸார்.

   //காமச்சேறு கதை பற்றி தாங்கள் விவரமாக தராததால் அது அருணகிரி நாதர் கதையைப் போன்றது என நினைக்கிறேன். //

   இதில் தங்கள் யூகம் 100% க்கும் மேல் மிகச்சரியாக உள்ளது என நான் நினைக்கிறேன். :)

   //என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே? என்ற கதையில், திருடர்களில் கூட்டாளிகளில் ஒருவன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் சான்றுரைஞராக மாறிய பிறகு சொல்லும் காரணம் அந்த திருடர்கள் தலைவனாலேயே ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதால் நிச்சயம் அது சுவாரஸ்யமானதாக இருக்கவேண்டும்.//

   சுவாரஸ்யமானதொரு கதைதான். பெரும்பாலும் பலருக்கும் தெரிந்த கதை மட்டுமே. நான் அதில் எந்த க்ளூவும் கொடுக்காமல், என் போக்கில் கொஞ்சம் சுத்திவிட்டுக் குழப்பி விட்டுள்ளேன். :)

   //இந்த கதைகளை எழுதிய திரு மோகன்ஜி அவர்களுக்கும் அவரது கதைகளை திறம்பட திறனாய்வு செய்த தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய ஆர்வமான + விரிவான கருத்துக்களுக்கும், தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 27. //சிறுகதைகள் பற்றிய மோகன்ஜி யின் ‘என்னுரை’ என்ற முன்னுரை சிந்திக்க வைப்பதாக உள்ளது. அதிலிருந்து சில வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ......//

  சில வரிகளே அருமையாக இருக்கிறது. மொத்தத்தையும் படிக்க வேண்டும்.

  கோபு அண்ணா ஏன் இந்த 3 சிறுகதைகளில் இருந்து சில வரிகள் போடவில்லை.

  ’வானவில் மனிதனின்’ கதைகள் வானவில்லைப் போல் அழகாக இருக்கின்றன.

  வலைப்பதிவர்களின் வலைத்தளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கோபு அண்ணாவுக்கு ஜே ஜே

  ReplyDelete
  Replies
  1. ஜெயந்தி ஜெயா மேடம்!
   கதைகளை ரசித்து, கருத்துகளும் இட்டு ஊக்கமளித்தீர்கள். வானவில் மனிதன் வலைப்பூவுக்கு வாருங்கள்.

   Delete
  2. Jayanthi Jaya June 15, 2017 at 7:41 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.
   **சிறுகதைகள் பற்றிய மோகன்ஜி யின் ‘என்னுரை’ என்ற முன்னுரை சிந்திக்க வைப்பதாக உள்ளது. அதிலிருந்து சில வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ......**

   //சில வரிகளே அருமையாக இருக்கிறது. மொத்தத்தையும் படிக்க வேண்டும்.//

   முடிந்தால் படியுங்கோ.

   //கோபு அண்ணா ஏன் இந்த 3 சிறுகதைகளில் இருந்து சில வரிகள் போடவில்லை. //

   அவைகள் மூன்றில் இரண்டு மிகச் சிறிய கதைகள் மட்டுமே. அதிலுள்ள சில வரிகளை நானும் எடுத்துப் போட்டு விட்டால், ஓஹோ இந்தக் கதையா ..... இதுதான் எங்களுக்கே தெரியுமே ..... என்று சொல்லி விடுவீர்கள். அதனால் நானும் போடவில்லை.

   //’வானவில் மனிதனின்’ கதைகள் வானவில்லைப் போல் அழகாக இருக்கின்றன.//

   அப்படியா .... சந்தோஷம்.

   //வலைப்பதிவர்களின் வலைத்தளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கோபு அண்ணாவுக்கு ஜே ஜே..//

   அன்புத்தங்கச்சி ’ஜெ’ வாயால் எனக்கு ’ஜே ஜே’ மட்டும் தானா?

   நெய்யில் செய்த அந்த 108 சீர் அதிரஸங்கள் என்ன ஆச்சு? இப்படி அநியாயமாக மறந்து விட்டீர்களே, ஜெயா.

   http://gopu1949.blogspot.in/2014/10/9.html

   மூன்று வருஷங்கள் முடியப்போகுது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

   Delete
  3. ////மோகன்ஜிJune 15, 2017 at 10:55 PM
   ஜெயந்தி ஜெயா மேடம்!
   . வானவில் மனிதன் வலைப்பூவுக்கு வாருங்கள்.///

   நோஓஓஓஓஓஓஓஓ விடமாட்டேன்ன்ன் இதுக்கு காண்ட் கோர்ட் படி ஏறியே தீருவேன்ன்ன்ன்:).. நான் மட்டும் லண்டன் கரி எல்லாம் தேடி எடுத்து எழுதி.. முதலாவதா ஓடியாந்து[அது நான் 1500 மீட்டரில 2 வதா வந்தபடியால நல்லா ஓடுவன் அதை விடுங்கோ:)]... ஓடியாந்து கொமெண்ட் எல்லாம் போட்டு எவ்ளோ கஸ்டப்பட்டு ரசிகை ஆனேன் என்பது எனக்கும் அந்த வயலூர் முருகனுக்கும் மட்டும்தேன் தெரியும்:)..

   இது எப்படி இவ்ளோ ஈசியாக ஜே மாமியை ரசிகை ஆக்கிட்டார்ர்ர்ர் மோகன் ஜி????:)

   Delete
  4. asha bhosle athira June 17, 2017 at 9:52 PM

   அதானே ..... ஒரு மாமியை, ஒரு மாமா, ஈஸியாக ரசிகையாக ஏற்றுக்கொண்டு, ஒரு உலகப்பேரழகியான ஸ்வீட் சிக்ஸ்டீன் பொண்ணைப்போய் ரஸிகையாக ஏற்றுக்கொள்ள ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் + கரிக்கட்டையில் சத்தியப்பிரமாணம் + சர்டிஃபிகேட் என்றெல்லாம் பாடாய் படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விடாதீங்கோ அதிரா !

   எத்தனை கோடி செலவானாலும், உங்களுக்கு மேலும் எத்தனை 16 வயதுகள் ஆனாலும் வழக்குப்போடுங்கோ .... வெற்றியடையாமல் விடாதீங்கோ, அதிரா.

   Delete
  5. அதிரா!
   ஜெயந்தி ஜெயா மேடத்துக்கு ஈஸியாக ரசிகை ஆக்கிக் கொண்டதுக்கு காரணம் சொல்லத்தான் வேணுமா? சரி சொல்லிடறேன்.

   சில பெயர்களைக் கேட்டால் மரியாதை வரும்,
   சில பெயர்கள். கேட்டால் பயம் வரும்.
   சில பெயர்கள் கேட்டவுடன் கைகால்நடுங்கி தந்தி அடிக்கும்,
   'ஜெயந்தி' என்ற பெயர் கேட்டால் எனக்குள் அந்த மூன்றுமே நடக்கும். காரணம் அது என் வீட்டுக்காரம்மா பெயர்!!!!

   இப்போ புரியுதா ஏன் என்று?!

   Delete
 28. சிலரைப் படைப்பாளியாகவும், சிலரை ரசிகனாகவும் படைத்து விட்டார் கடவுள்.

  நான் ரசிகையாக நின்று ரசிக்கிறேன்.

  அருமையான படைப்பாளி மோகன் ஜிக்கும் வாசக ரசிகர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து நல்ல படைப்புகளை ரசிக்க வைத்து கோபு அண்ணாவுக்கு ஜே, ஜே

  ReplyDelete
  Replies
  1. என்னையும், கோபு சாரையும் தங்கள் இனிய சொற்களால் மகிழ்ச்சி அளித்தீர்கள். நன்றி மேடம்.

   Delete
  2. Jayanthi Jaya June 15, 2017 at 8:36 PM

   //சிலரைப் படைப்பாளியாகவும், சிலரை ரசிகனாகவும் படைத்து விட்டார் கடவுள். நான் ரசிகையாக நின்று ரசிக்கிறேன்.//

   ரசிகைகள் மட்டும் இல்லாவிட்டால் படைப்பாளியாவது வெங்காயமாவது :)

   //அருமையான படைப்பாளி மோகன் ஜிக்கும் வாசக ரசிகர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து நல்ல படைப்புகளை ரசிக்க வைத்த கோபு அண்ணாவுக்கு ஜே.... ஜே //

   அதிராவுக்கு அக்காவா எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டு போய்க்கிட்டே இருக்கீங்களே, ஜெ.

   எனினும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கோபு அண்ணா

   Delete
 29. இந்த தொடர் பதிவின் 2..3..4..5..6.. பதிவுகளிலும் நான் போட்ட கமெண்ட்ஸ் எல்லாமே சொதப்பிடிச்சி எரர் வந்திச்சி அதா ஒரே ஜம்ப் பண்ணி இங்க வந்தேன் நிறைவு பகுதின்னு போட்டிருக்கீங்க. மோஹன்ஜி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... June 16, 2017 at 10:47 AM

   வாங்கோ அமைதிப்புறாவே, வணக்கம்.

   //இந்த தொடர் பதிவின் 2..3..4..5..6.. பதிவுகளிலும் நான் போட்ட கமெண்ட்ஸ் எல்லாமே சொதப்பிடிச்சி எரர் வந்திச்சி அதா ஒரே ஜம்ப் பண்ணி இங்க வந்தேன்.//

   தங்களுக்கு என்ன ..... பறந்தே வந்திருப்பீர்கள். இறக்கைகள் உள்ளன அல்லவா !

   //நிறைவு பகுதின்னு போட்டிருக்கீங்க. மோஹன்ஜி வாழ்த்துகள்.//

   நிறைவுப்பகுதி நிறைவாக இருந்ததா?

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   102

   Delete
 30. ’பொன் வீதி’ நூல் மதிப்புரை
  பின்னூட்டப் புள்ளி விபரங்கள்

  Position As on 16-06-2017 ...... 4.30 PM (IST)

  பகுதி-1 to பகுதி-8 க்கு எனது + மோகன்ஜியின் பதில்கள் உள்பட கிடைத்துள்ள மொத்தப்
  பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 781

  [88+95+74+106+103+94+117+104=781]

  பின்னூட்டமிட்டுள்ள
  மொத்த நபர்கள்: 33

  ஆண்கள்: 23
  பெண்கள்: 10

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. Position As on 16-06-2017 ...... 4.30 PM (IST)

   பெண் வருகையாளர்கள்:-

   திருமதிகள்:

   01. அதிரா அவர்கள் 8 out of 8 **** ****
   02. ஏஞ்சலின் அவர்கள் 8 out of 8 **** ****
   03. கோமதி அரசு அவர்கள் 8 out of 8 **** ****
   04. ஜெயந்தி ஜெயா அவர்கள் 8 out of 8 **** ****

   05. கீதா சாம்பசிவம் அவர்கள் 6 out of 8

   06. மனோ சுவாமிநாதன் அவர்கள் 5 out of 8
   07. சித்ரா அவர்கள் 5 out of 8

   08. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள் 3 out of 8

   09. ஜெயஸ்ரீ அவர்கள் 1 out of 8
   10. ஷக்தி ப்ரபா அவர்கள் 1 out of 8

   அன்புடன் வருகை தந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   அன்புடன் கோபு

   >>>>>

   Delete
  2. Position As on 16-06-2017 ...... 4.30 PM (IST)

   ஆண் வருகையாளர்கள்:-

   திருவாளர்கள்:

   11. ரமணி அவர்கள் 8 out of 8 **** ****
   12. துரை செல்வராஜூ அவர்கள் 8 out of 8 **** ****
   13. நெல்லைத்தமிழன் அவர்கள் 8 out of 8 **** ****
   14. வே. நடன சபாபதி அவர்கள் 8 out of 8 **** ****
   15. மோகன் ஜி அவர்கள் 8 out of 8 **** ****

   16. துளசிதரன் தில்லையக்காது அவர்கள் 7 out of 8

   17. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்கள் 5 out of 8
   18. தனிமரம் அவர்கள் 5 out of 8

   19. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் 3 out of 8
   20. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் 3 out of 8
   21. ரிஷபன் அவர்கள் 3 out of 8

   22. அப்பாதுரை அவர்கள் 2 out of 8
   23. ஸ்ரீராம் அவர்கள் 2 out of 8
   24. சென்னை பித்தன் அவர்கள் 2 out of 8
   25. கே.பி.ஜனா அவர்கள் 2 out of 8
   26. அஷோக் அவர்கள் 2 out of 8
   27. ரவிஜி ரவி அவர்கள் 2 out of 8
   28. கில்லர்ஜி அவர்கள் 2 out of 8
   29. மாது அவர்கள் 2 out of 8
   30. ஆல் இஸ் வெல் அவர்கள் 2 out of 8

   31. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 1 out of 8
   32. முஹமது அல்தாஃப் அவர்கள் 1 out of 8
   33. முஹமது நிஜாமுத்தீன் அவர்கள் 1 out of 8

   அன்புடன் வருகை தந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   அன்புடன் கோபு

   >>>>>

   Delete
  3. அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக
   100% வருகை தந்துள்ள (**** ****)
   நான்கு தாய்க்குலத்திற்கும், ஐந்து ஆடவர்களுக்கும்
   என் கூடுதல் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

   அன்புடன் கோபு

   108

   Delete
  4. ////01. அதிரா அவர்கள் 8 out of 8 **** ****///

   நோஓஓஓஓஓஓஓஓஓஒ இது அலாப்பித்தனம்.. அழிச்சாட்டியம்ம்ம் இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன்ன் வழக்குப் போடுவேன்ன்ன்.. அதிரா.. 100 அவுட் ஒஃப் 100 இப்பூடித்தான் வந்திருக்கோணும் டொல்லிட்டேன்ன்ன்ன்ன்:).

   Delete
  5. Mathematics படி, 8 out of 8 என்பதே 100 out of 100 என்றுதான் அர்த்தமாகும்.

   மேலும் எட்டு பகுதிகளிலும் (தீவிரமாக பேன் பார்த்து) எண்ணினால் உங்களின் பின்னூட்டங்கள் மட்டுமே 100 க்கும் மேலேயே இருக்கும்.

   அதனால் வழக்கு ஏதும் போடாமல் இதனைச் சமத்தா ஒத்துக்கொண்டு இருங்கோ ப்ளீஸ் .... மழைவிட்டும் தூவானம் விடவில்லை எனச் சொல்லுவினம் ...... அதுபோல உள்ளது இதுவும். :)))))

   Delete
 31. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// உங்களது பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும், பகிர்ந்த விதமும் வழக்கமாக எங்களை ஈர்த்துவிடும். அந்த வகையில் இந்த மதிப்புரையின் தொடரையும் நான் உணர்கிறேன். ஒரு நூலாசிரியருக்குத் தரவேண்டிய மரியாதையை, அவருடைய எழுத்துக்குத் தர வேண்டிய மதிப்பை நீங்கள் பிசகின்றி தந்த விதம் பாராட்டிற்குரியது ஐயா. உங்களிடம் மதிப்புரை பெறுவதற்காகவே ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஓர் அவா என்னுள் எழுந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam,
   Assistant Registrar (Retd), Tamil University
   June 16, 2017 at 7:28 PM

   //கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.//

   மிக்க மகிழ்ச்சி, ஐயா. வாழ்த்துகள்.

   //உங்களது பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும், பகிர்ந்த விதமும் வழக்கமாக எங்களை ஈர்த்துவிடும். அந்த வகையில் இந்த மதிப்புரையின் தொடரையும் நான் உணர்கிறேன். ஒரு நூலாசிரியருக்குத் தரவேண்டிய மரியாதையை, அவருடைய எழுத்துக்குத் தர வேண்டிய மதிப்பை நீங்கள் பிசகின்றி தந்த விதம் பாராட்டிற்குரியது ஐயா.//

   தங்கள் வாயிலாக இவ்விதமான பாராட்டுகள் பெற்றதில் அடியேன் தன்யனானேன்.

   //உங்களிடம் மதிப்புரை பெறுவதற்காகவே ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஓர் அவா என்னுள் எழுந்துவிட்டது.//

   ஆஹா, தமிழில் மிகவும் புலமை வாய்ந்த, மிகப்பிரபலமான, மிகச்சிறந்த தமிழ் எழுத்துக்களில் நல்லதொரு பாண்டித்யம் உள்ள, சாதனைகள் பல படைத்துள்ள, முனைவர் ஐயாவாகிய தாங்கள் எழுதவிருக்கும் நூலினைப்போய், மிகச் சாதாரணமானவனாகிய என்னால் மதிப்புரை செய்யவும் இயலுமோ? எனினும் அதற்கான தகுதியை நான் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன், ஐயா.

   தங்களின் இந்த பேரன்புக்கு என் நன்றிகள், ஐயா.

   Delete
  2. முனைவர் ஜம்புலிங்கம் சார்!
   //எழுத வேண்டும் என்ற ஓர் அவா என்னுள் எழுந்துவிட்டது.//
   கோபு சாரின் விமரிசன நயத்துக்கு இதைவிட சிறப்பாய் பாராட்டுதல் இயலாது. நன்றி ஜி

   Delete
 32. சிறுகதை யக்ஞம் என்றே சொல்லலாம்..
  சப்தாகம் என்று ஏழு நாளில் பூர்த்தி செய்வார்கள்.
  இது அஷ்டாங்க யோகம்..
  ஒரு படைப்பாளிக்கு ஆகச் சிறந்த மரியாதை..

  மோகன் ஜியைப் பாராட்டுவதா..
  வைகோ ஸாரையா..

  திகட்டாத சிறுகதைகள் தந்த மோகன் ஜிக்கும்
  அலுக்காத விமர்சன மழைக்கும்

  பின்னூட்டங்களில் கலக்கிய நண்பர்களுக்கும்

  மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. ரிஷபன் June 16, 2017 at 8:23 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //சிறுகதை யக்ஞம் என்றே சொல்லலாம்.. சப்தாகம் என்று ஏழு நாளில் பூர்த்தி செய்வார்கள். இது அஷ்டாங்க யோகம்.. ஒரு படைப்பாளிக்கு ஆகச் சிறந்த மரியாதை..//

   ஆஹா .... ஆஹா .... கடந்த சில மாதங்களாகவே, பிரும்மஸ்ரீ நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களின், ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், தினமும் இரவு படுக்கும் முன்பு,
   தினமும் ஒரு பகுதி வீதம், சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் கேட்டு இன்புற்று வருகிறேன். அதில் ரிஷப யோகீஸ்வரர் கதை வரும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொள்வது உண்டு.

   சுகாச்சாரியார் பரீக்ஷித் மகாராஜாவுக்கு ஏழு நாட்களில் பாகவதக் கதைகள் சொன்னது போலவே, இங்கு இன்று தாங்கள் வந்து, இதனை இப்போது மிக இனிமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

   ஸ்ரீமத் பாகவத யக்ஞம் ஆரம்பத்திலும், நிறைவினிலும் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம ஜபம் செய்து முடித்தால் மட்டும்தான், யக்ஞத்தில் ஏற்பட்டுள்ள சிறுசிறு குறைகள் அத்தனையும் காணாமல் போகுமாம்.

   இதுபற்றி ஏற்கனவே என் பதிவு ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_5095.html

   ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.

   THROUGH THAT, EVERY PERFORMANCE BIDS FAIR TO BECOME FRUITFUL IN AS MUCH AS THERE IS NOTHING MORE EFFICACIOUS THAN THAT.

   அதற்கு தாங்கள் வருகை தந்து அளித்துள்ள பின்னூட்டம்:

   -=-=-=-=-
   ரிஷபன் February 26, 2012 at 9:40 PM

   **5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்.**

   ஸஹஸ்ர நாமம் என்று மொட்டையாய் சொன்னால் அது விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத்தான் சொல்லும்! ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் எழுத நினைத்து தம் சீடரை ‘ஸஹஸ்ரநாம சுவடியை எடுத்து வா’ என்று சொன்னபோது மூன்று முறையும் சீடர் விஷ்ணு ஸ.நா. கொண்டு வந்தாராம். தாம் அதற்கு பாஷ்யம் செய்வதே அம்பாளின் திருவுள்ளம் என்று பாஷ்யம் செய்தாராம்.

   -=-=-=-=-

   ’தெய்வம் மனுஷ்ய ரூபேனா’ எனச் சொல்லுவார்கள். ’ரிஷபன் - ஸ்ரீநிவாஸன்’ என்ற திருநாமம் கொண்ட தாங்களே சாக்ஷாத் மஹா விஷ்ணு ஸ்வரூபம் என எனக்குத் தெரியும்.

   ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லி ஸ்ரீமத் பாகவத யக்ஞத்தை பூர்த்தி செய்வது போல, தாங்கள் இங்கு வருகை தந்து சிலவற்றைச் சொல்லி பூர்த்தி செய்துக்கொடுத்துள்ளது, இந்த மதிப்புரை என்ற எட்டு நாள் அஷ்டாங்க யோகத்தினில் உள்ள சிறுசிறு குறைகளைக் களைந்தது போல மகிழ்ச்சியளிக்கிறது .... எனக்கு.

   //மோகன் ஜியைப் பாராட்டுவதா.. வைகோ ஸாரையா..//

   என் எல்லாப்புகழும், அடியேனின் எழுத்துலக மானஸீக குருநாதர் ஆகிய தங்களை மட்டுமே சாரும்.

   //திகட்டாத சிறுகதைகள் தந்த மோகன் ஜிக்கும், அலுக்காத விமர்சன மழைக்கும், பின்னூட்டங்களில் கலக்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், பாற்கடலைக் கடைந்தெடுத்து அந்த சாக்ஷாத் பகவான் தன்வந்தரி ரூபத்தில் கொண்டுவந்த, அலுக்காத, திகட்டாத அமிர்த கலசம் போன்ற கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த கோடானுகோடி நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

   பிரியமுள்ள

   வீ.......ஜீ

   Delete
  2. உங்கள் பாராட்டும் கோபுசார் பதிலும் , கடைசி பந்தில் ஓடியே நாலு ரன் எடுத்து ஜெயித்த பார்ட்னர்ஸின் ஆட்டம். நன்றி நண்பரே!

   Delete
  3. //////மோகன் ஜியைப் பாராட்டுவதா.. வைகோ ஸாரையா..//

   சே..சே..சே.. என்னைப் பாராட்டாமல் விட்டிட்டாரே.. விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்:)

   Delete
  4. @ அதிரா

   //சே..சே..சே.. என்னைப் பாராட்டாமல் விட்டிட்டாரே..//

   ”பின்னூட்டங்களில் கலக்கிய நண்பர்களுக்கும்
   மனமார்ந்த பாராட்டுகள்” எனச் சொல்லியிருக்கிறாரே.

   பின்னூட்டங்களில் கலக்கிய நண்பர்களில் நம்பர் ஒன் தாங்கள் அல்லவோ ! அதில் தாங்களும் அடக்கம் அல்லவோ !!

   //விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்:)//

   தேம்ஸ்க்கெல்லாம் தயவுசெய்து போகாதீங்கோ ...

   வழக்கம்போல ஆழம் ஜாஸ்தி எனத் திரும்பி வந்திடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)

   Delete
  5. அதிரா! அதிரா!! அதிரா !!!
   அதிரடிச்ச அதீரா!!
   எட்டு கூடை பாராட்டுகள்!
   உங்கள் உற்சாகம் மற்றவரையும் தொற்றிக் கொள்ளும் உற்சாகம். வாழ்க! வாழ்க!!

   Delete
  6. https://s-media-cache-ak0.pinimg.com/originals/f1/d4/09/f1d4094a0b02d06a12bf21716333c607.gif

   Delete
  7. asha bhosle athira June 23, 2017 at 8:20 PM

   // https://s-media-cache-ak0.pinimg.com/originals/f1/d4/09/f1d4094a0b02d06a12bf21716333c607.gif //

   A BIG THANK YOU ! சொல்லும் கண்ணடிக்கும் பூனையார் அய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்கு !! மிக்க நன்றி !!! என நான் சொல்ல மாட்டேன் ..... ஏனெண்டால் அதனை மோகன்ஜிதான் சொல்லணும். :)

   Delete
 33. //மிகச்சிறந்த சிறுகதையோ, ஒரு வாசகனுக்குள்ளேயே படிக்குந்தோறும் பலவாறாய் உருக்கொள்கிறது. புதிய வாசல்கள் திறக்கின்றன. தேடல் மிக்க வாசகர் ரசனை, எதிலும் எளிதில் திருப்தியுறாமல் அந்த உச்ச படைப்புக்காய் தேடியபடியே இருக்கிறது. அவனுக்கான அந்த சிறுகதை இனிமேல்தான் எழுதப்பட வேண்டும்.//
  மிகவும் யதார்த்தமான உண்மை வரிகள்...ஒரு எழுத்தாளனின் களம் நாவலோ,சிறுகதையோ, மரபுக்கவிதையோ, புதுக்கவிதையோ எதுவாயினும் இந்த உணர்வுகள் அப்பட்டமான உண்மை என்பதை மறுக்கமுடியாது! அருமை!!!
  வாத்யாரே எல்லாம் சரிதான்...புத்தக அடுக்கு ஒக்கே!!!அடுக்குமாடி வீடு...அடுக்கடுக்காக நகை...தங்கக்கட்டிவேறு...இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மென்ட் 'கண்'ணுல படப்போகுது!!! நேரம் ரொம்ப டைட் வாத்யாரே!! அதனால ரெண்டாம் தடவை ரிப்பீட்டோட நான் அப்பீட்!!! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்...

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI June 18, 2017 at 11:21 PM

   வாங்கோ சின்ன வாத்யாரே, வணக்கம்.

   //அடுக்கடுக்காக நகை... தங்கக்கட்டிவேறு... இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மென்ட் 'கண்'ணுல படப்போகுது!!!//

   அதெல்லாம் பரிசுபெற்ற அதிராவுக்காச்சு ... அந்த அதிகாரிகளுக்காச்சு. :)

   ரொம்ப டைட் ஆன நேரத்திலும் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
  2. ராஜீவி ரவி சார்! உங்கள் பாராட்டுகளுக்கு என் அன்பும் நன்றியும். தொடர்பில் இருப்போம்.

   Delete
 34. வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட படைப்புகளை எங்கள் முன் கொண்டுவரும் வை.கோ அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும். சில கதைகளின் முடிவுகளை மனம் தானே எழுதிக்கொண்டது. மோகன்ஜி அவர்களின் என்னுரை அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Shakthiprabha June 19, 2017 at 12:22 PM

   வாங்கோ ஷக்தி, வணக்கம்.

   //வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட படைப்புகளை எங்கள் முன் கொண்டுவரும் வை.கோ அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //சில கதைகளின் முடிவுகளை மனம் தானே எழுதிக்கொண்டது.//

   ஆமாம். தாங்கள் சொல்வது மிகவும் சரியே.

   //மோகன்ஜி அவர்களின் என்னுரை அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது.//

   ‘செதுக்கப்பட்டிருக்கிறது’ என்பதே மிகச்சரியான சொல்லாகும். இதனை இங்கு பிரயோகித்துள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
  2. சக்தி பிரபா மேடம்,
   ////வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட படைப்புகளை எங்கள் முன் கொண்டுவரும் வை.கோ அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.//
   வை . கோ சாரின் ரசனைக்கும் என் மீது அவர் கொண்டிருக்கும் சகோதர வாஞ்சைக்கும் உங்களுக்கான பதில் மூலம் மீண்டும் நன்றி பாராட்டுகிறேன்.
   உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. புத்தகத்தை அவசியம் படியுங்கள் .

   Delete
 35. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. mohamed althaf June 28, 2017 at 4:51 PM

   //வாழ்த்துக்கள்//

   மிக்க நன்றி.

   Delete
  2. நன்றி ஹத்தீப் சார்!

   Delete
 36. hahaha pathivum padangakLum super. asathalo asathal. suvarasiya koduthu irukeengka VGK sir.!

  Mohanjikku vaazththukaL. :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan July 1, 2017 at 7:47 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //hahaha pathivum padangakLum super. asathalo asathal. suvarasiya koduthu irukeengka VGK sir.! ஹாஹ்ஹாஹ்ஹா .. பதிவும் படங்களும் சூப்பர். அசத்தலோ அசத்தல். சுவாரஸ்யம் கொடுத்திருக்கீங்க வி.ஜி.கே. ஸார்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். சுவாரஸ்யம் கொடுத்துத்தான் பலரையும் இங்கு சுண்டி இழுத்துக் கொண்டுவர முடிகிறது. :)

   //Mohanjikku vaazththukaL. :) மோகன் ஜிக்கு வாழ்த்துகள். //

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

   Delete
  2. நன்றி தேனம்மை!

   Delete
 37. சிறுகதைகள் பற்றிய மோகன்ஜியின் பார்வை சிந்திக்கவைக்கிறது. எதையும் நின்று நிதானிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் யுகத்தில் நின்று வாசிக்கவைக்கும் வண்ணம் சிறுகதைகளைப் படைப்பதென்பது பெரும் சவால். அந்த சவாலை செவ்வனே செய்துகாட்டியிருக்கும் மோகன்ஜிக்குப் பாராட்டுகள். சிறுகதைத் தொகுப்பின் பெயரே மனத்துக்குள் ஆலோலம் பாடிக்கொண்டே இருக்கிறது.

  கதைச்சுருக்கங்களால் கதைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்து தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டும்வண்ணம் பதிவுகளாக்கித் தந்த கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி July 3, 2017 at 6:37 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கதைச்சுருக்கங்களால் கதைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்து தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டும்வண்ணம் பதிவுகளாக்கித் தந்த கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//

   நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும், ஒரே நாளில் இந்தத் தொடரின் எட்டுப் பகுதிகளுக்கும் மிகப்பொறுமையாக பின்னூட்டங்கள் கொடுத்து, சிறப்பித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் கோபு

   Delete
  2. கீதா ! உங்கள் பாராட்டுதலுக்கு என் நன்றி! எட்டு பதிவுகளிலும் உங்கள் கருத்துகளை வழக்கமான சிறப்போடு வழங்கியிருக்கிறீர்கள். உற்சாகமூட்டு தாய் இருக்கிறது கீதா! மிக்க மகிழ்ச்சி!!

   Delete
 38. //பொன் வீதி’ நூல் மதிப்புரை பின்னூட்டப் புள்ளி விபரங்கள்

  நீங்கள்தான் blog உலக அசல் data scientist.

  ReplyDelete
 39. கோபு அண்ணன் நலம்தானே?.. எங்கே இருக்கிறீங்க? உச்சிப்பிள்ளையார் தீர்த்தக் கிணற்றின் உள்ளேயோ?:) ஏனெனில் ஆளைக் காணல்ல ஆனா கொமெண்ட் மட்டும் போஸ்ட்டில அனுப்பியிருக்கிறீங்கபோல சகோ நெ.த வுக்கு:).. வெளில வாங்கோ..

  ReplyDelete
 40. அருமையான மதிப்புரை. மோகன் ஜிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete