About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, June 1, 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-1 of 8

கவிதையே காதலாய்... 
கனவே வாழ்க்கையாய்... 
வானவில் மேல் கூடுகட்டி, 
கூவித்திரியும் குயில் நான்....

எனக்கூறிடும்

வானவில் மனிதன்
http://vanavilmanithan.blogspot.in/


 ’பொன் வீதி’ 
சிறுகதைத் தொகுப்பு நூல்

நூலாசிரியர் 
 மோகன்ஜி 
அவர்கள்

   
இந்த நூலாசிரியர் ’மோகன்ஜி’ பற்றி நாம் அறிவது:

கடலூரில் பிறந்தவர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில் 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். வங்கி அதிகாரிகள் கல்லூரியில் முதன்மைப் பயிற்சியாளராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர்.

தற்போது பல்கலைக் கழகங்களிலும், பல வங்கிகளின் கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் மனோவியல், மேலாண்மை, ஆளுமை பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார்.

வணிகவியல், மேலாண்மை, சட்டம் என பட்டங்கள் பல பெற்றவர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சிறப்புரை, தலைமையுரை என பலமுறை பங்கேற்றுள்ளவர். சமூக அக்கறையும், தமிழ்ப்பற்றும் மிக்கவர். இலக்கிய, ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளவர்.

’வானவில் மனிதன்’  என்னும் வலைப்பூவில் இவரின் கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வெளிவருகின்றன.  இவரின் வலைத்தள முகவரி:  http://vanavilmanithan.blogspot.in/

இளவயது முதலே கவிதை, கதை, நாடகம் என்று மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்ந்தவர். கல்லூரி நாட்கள் முதலே கவியரங்கங்களில் பங்கேற்று, நடுவராயும் ஈடுபட்டவர். அகில இந்திய வானொலியில் இலக்கிய உரைகள் நிகழ்த்தியவர். 

இவரின் படைப்புகள் தினமணி கதிர், அமுத சுரபி போன்ற பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட சில எழுத்தாளர்களுடன் சேர்ந்து இவரும் எழுதியுள்ள மொழியாக்க நூலான “வேங்கைச் சவாரி” என்னும் சிறுகதைத் தொகுப்பு வம்சி வெளியீடாக வந்துள்ளது.

’ஸ்ரீ சாஸ்தாம்ருதம்’ என்னும் ஆன்மீக நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இன்னும் ஒரு குறுநாவல் தொகுப்பும், இரு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியிட உள்ளார்.  மேலாண்மை பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகமும், ஆன்மீகம் சார்ந்து ஒரு புத்தகமும் (ஸ்வாமி ஐயப்பன் தியான ஸ்லோகங்களின் பாஷ்யம்) + அபிராமி அந்தாதி விளக்க உரையும் தற்போது எழுதி வருகிறார்.

அண்மையில் சாகித்ய அகாதமி, மொழி பெயர்ப்புக்கான பணியாற்ற இவரை அழைத்து வாய்ப்பளித்துள்ளது.


அடியேன் ஓர் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்த நாள்: 02.01.2011. அதே 2011-ம் ஆண்டின் இறுதி நாளான 31.12.2011 அன்று, அடியேன் என் வலைத்தளத்தினில் கொடுத்துள்ள மொத்த இடுகைகளின் எண்ணிக்கை: 200

அந்த 200 இடுகைகளில் ஏதோ சுமார் 10 இடுகைகளுக்கு மட்டுமே இந்த வானவில் மனிதனும் வருகை தந்து எனக்குக் கருத்தளித்துள்ளார். அதன்பின் இவர் எங்கு போனார்? என்ன ஆனார்? என எனக்குத் தெரியவில்லை. ’வானவில்’ போலவே இவரும் எப்போதாவது மட்டுமே மிகவும் அதிசயமாகக் காட்சியளிப்பார். அந்த அளவுக்கு மிகவும் பிஸியோ பிஸியான மனிதர் இவர். 

2011-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘மறக்க மனம் கூடுதில்லையே!’ என்ற தலைப்பில் நான், மூன்று கதாநாயகிகளுடன் கூடிய, ஒரு ஸ்வீட்டான காதல் சிறுகதையை நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தேன். உலக அதிசயமாக அந்த நான்கு பகுதிகளுக்கும் வருகை தந்து பின்னூட்டமிட்டுள்ளார் இந்த வானவில் மனிதன். 


  1. கதையின் களத்தின் நடுவே நீங்கள் அமர்ந்து கொண்டு, அத்தனை திசையிலும் உங்கள் பார்வை பதிகிறது.. அருமையான துவக்கம். சட்டுபுட்டுன்னு முடிக்காம ஒரு பெரிய இலையாய்ப் போடும் வை.கோ ஜி !


 1. ஆளை அப்பிடியே அடிச்சுப் போட்டுட்டீங்க வை.கோ சார்! இரண்டு பதிவுகளையும் ஒருசேரப் பார்த்து உங்கள் அனாயாசமான எழுத்தோட்டத்தில் சொக்கி நிற்கிறேன். எனக்கு உடனே ஒரு ரவாலாடு வேணும்!


 1. பாத்திரப் படைப்பை செதுக்கி வைத்தாற்போல் உருவாக்குகிறீர்கள்... சரளமான நடை.. சிறப்பான கதையோட்டம் .. தொடர்ந்து எழுதுங்கள்..


 1. வை.கோ சார்! மிக அருமையாக இந்தக் கதையைக் கொண்டு போயிருக்கிறீர்கள். முடிவைக் கோர்த்த வரிகள் ஜீவனுடன் இருக்கின்றன. மெருகேறிக் கொண்டே வரும் உங்கள் படைப்புகள் படிக்க இதம். வாழ்த்துக்கள்!
அதே கதையை தகுந்த படங்களுடன், ஒரே பகுதியாக, மீள் பதிவாக 2014-இல் வெளியிட்டுள்ளேன். அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

   


    
எனினும் 2012 முதல் 2017 வரை ஆண்டுக்கு ஓரிரு முறையாவது என் வலைப்பக்கம் இந்த வானவில் மனிதன் தோன்றி மகிழ்வித்துள்ளார் என்பதையும் என்னால் மறுப்பதற்கு இல்லை.

இவரின் வருகைக்கு என்னால் எப்படியும் 
25 Marks out of 855 
மட்டுமே கொடுக்க முடியும்.  ஆஹ்ஹாஹ்ஹா:)

சரி .... அ(த்)தை நாம் இப்போதைக்கு விட்டு விடுவோம்.

  

திரு. மோகன்ஜி அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘பொன் வீதி’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல், திருச்சியில் உள்ள என் பதிவுலக நண்பர் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்கள் மூலம் 26.05.2017 வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணிக்குக் கிடைக்கப் பெற்றேன்.   

அன்றைக்கே சாயங்காலம் 6.30 மணிக்கு திரு. மோகன்ஜி அவர்கள் மும்பையிலிருந்து என்னை என் மொபைலில் அழைத்து, முதன்முதலாக என்னுடன் அன்புடன் நீண்ட நேரம் பேசினார். 

நாங்கள் இருவரும் இன்னும் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்காது போனாலும், நீண்ட நாட்கள் பழகியவர்கள் போலவே மிகவும் குதூகலமாகப் பேசி மகிழ்ந்ததில், இருவருக்குமே மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். 

அவர் அன்புடன் அனுப்பி வைத்துள்ள ‘பொன் வீதி’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை மிகவும் ஆர்வமாக நான் ஐந்தே ஐந்து நாட்களில், முழுவதுமாக ரஸித்துப் படித்து முடித்து விட்டேன்.  மிகவும் அருமையான எளிய நடையில் அட்டகாசமாக எழுதியுள்ளார். 

அட்டைகள் நீங்கலாக மொத்தம் 160 பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு நூலில், சின்னச் சின்னதாக 21 கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் படிக்க மிகவும் விறுவிறுப்பான கதைகள் மட்டுமே.

இதோ அந்த நூலின் முன்/பின் அட்டைகள்:

 

பதிப்பாளர் + வெளியீட்டாளர்:

அக்ஷரா பிரசுரம், G1702, அபர்ணா சரோவர், 
நல்ல கண்ட்லா, ஹைதராபாத்-500 107 

விலை ரூ. 125/-

தொடர்புக்கு: mohanji.ab@gmail.com 


 

மேற்படி நூலின் மூன்றாம் பக்கத்தில் உள்ள முக்கியச் செய்தி:

என் இளமையை ஆக்கிரமித்து
என்னுள் கதையாடியபடியே இருந்த
த. ஜெயகாந்தன்
அவர்களுக்கு இந்த நூல் 
சமர்ப்பணம்

 

நான் மிகவும் ஆவலுடன் படித்து முடித்துள்ள இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 21 சிறுகதைகளையும் பற்றி மிகச்சுருக்கமாக இதன் அடுத்தடுத்த பகுதிகளில், உங்களுடன் சுடச்சுடப் பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்துள்ளேன்.  

இங்கு இந்தப்பதிவுக்கு வருகை தருவோர் எல்லோரும், இந்தத் தொடர் முடியும்வரை தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

48 மணி நேர 
இடைவெளிகளில் 
அடுத்தடுத்த 
பதிவுகள்
தொடர்ந்து
வெளியாகும்என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


92 comments:

 1. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:).. அப்படித்தான் நினைக்கிறேன்ன்:) இல்லையெனில் என்னபண்ணலாம்ம்ம்?:).

  ReplyDelete
  Replies
  1. அப்போ அந்த எண்ணெயில் முங்கின மூணு நாள் முந்தி சுட்ட பஜ்ஜியை அதிராவுக்கே கொடுங்க அண்ணா :)

   Delete
  2. ///அப்போ அந்த எண்ணெயில் முங்கின மூணு நாள் முந்தி சுட்ட பஜ்ஜியை அதிராவுக்கே கொடுங்க அண்ணா :)//
   அச்சச்சோஓஓ இவ எங்கின சாமி இங்கின வந்தா:) பிசியா இருப்பா சப்பாத்தி சூட்டிங்கில் என நம்பியெல்லோ இங்கு ஓடிவந்தேன்ன்:)

   http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

   Delete
  3. ஏஞ்சல் அதிரா ஏற்கனவே தேம்ஸ்ல உண்ணாவிரதம் நு சமைக்காம, ஏற்கனவே சமைச்ச சமோஷா, பிரியானிதான் சாப்பிடறாங்க ஸோ இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை....ஹஹ்ஹஹ்

   கீதா

   Delete
  4. asha bhosle athira June 1, 2017 at 12:27 AM

   வாங்கோ அதிராஆஆஆஆஆஆஆ, வாங்கோ, வணக்கம்.

   //மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:)..//

   ஓம் ..... ஆம். நீங்க மட்டும்தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ

   //அப்படித்தான் நினைக்கிறேன்ன்:)//

   நீங்கள் நினைப்பதை அப்படியே நானும்கூட நினைக்கிறேன். :)

   ’தங்கள் ஸித்தம் .... என் பாக்யம்’ என இங்கு சிலர் சொல்லிவினம்.

   //இல்லையெனில் என்னபண்ணலாம்ம்ம்? :) //

   நாம் இதில் ஒன்றும் பண்ண முடியாது. உங்களை முந்திக்கொண்டவர்களை உங்கள் மனதுக்குள் கண்டபடி திட்டித்தீர்க்கலாம். கற்பனையில் அவர்கள் முதுகில் நாலு சாத்தும் சாத்தலாம். :)

   Delete
 2. மோகன்ஜி அவர்களைப்பற்றி அருமையான அறிமுகம்..
  சமீபத்தில்தான் அவரது வலைப்பூவை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன் .
  25/855 ஹாஹா :)
  //இங்கு இந்தப்பதிவுக்கு வருகை தருவோர் எல்லோரும், இந்தத் தொடர் முடியும்வரை தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

  நிச்சயம் வருகிறேன்
  பொன்வீதியில் நடக்க ஆரம்பித்து இருப்பீர்கள் பயணத்தில் தொடர்கிறோம் :) மறக்காம காபி ஸ்நாக்ஸ் குறிப்பா நேந்திரம் சிப்ஸ் தயாராக வைக்கவும் எனக்கு மட்டும் :) அதிராவுக்கு cat treat போதும்

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் தெரிஞ்சேதான் வலையில் மாட்டியிருக்கா பிஸ்ஸூ:) ஹையோ ஹையோ:)

   Delete
  2. //அதிராவுக்கு cat treat போதும் //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் ஐடியாக் கேட்டாரா இவவிடம்:).. கோபு அண்ணனே வைர வளையல் தருகிறேன் எனச் சொன்னார்ர்.. இப்பூடிக் கெடுத்துப் போட்டீங்களே:)

   Delete
  3. நன்றி ஏஞ்சலின் ! தொடருங்கள் வானவில் மனிதனுக்கும் வாருங்கள்!

   Delete
  4. Angelin June 1, 2017 at 12:47 AM

   வாங்கோ அஞ்சூஊஊஊஊஊஊஊஊ, வாங்கோ, வணக்கம்.

   //மோகன்ஜி அவர்களைப்பற்றி அருமையான அறிமுகம்..//

   மிக்க மகிழ்ச்சி.

   //சமீபத்தில்தான் அவரது வலைப்பூவை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.//

   வெரி குட்.

   // 25/855 ஹாஹா :) //

   இதுவே அவருக்கு மிகவும் அதிகம். உத்தேசமாகச் சொல்லியுள்ளேன். சரியாகக் கணக்குப் பார்த்தால் இன்னும் ஒன்றிரண்டுகூட மார்க் குறையலாம். :) [Liberal Marks Granted by me to him :) ]

   **இங்கு இந்தப்பதிவுக்கு வருகை தருவோர் எல்லோரும், இந்தத் தொடர் முடியும்வரை தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.**

   //நிச்சயம் வருகிறேன்//

   பதிவுலகப் பழைய நட்புக்களின் உங்களைப்போன்ற ஓரிருவர் மட்டும்தான் என் பதிவுகள் பக்கம், அன்று முதல் இன்றுவரை (2011-2017) தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //பொன்வீதியில் நடக்க ஆரம்பித்து இருப்பீர்கள். பயணத்தில் தொடர்கிறோம் :) //

   பொன்வீதியில் நான் ஒருவழியாக நடந்து முடித்துவிட்டேன். அந்த பொன்னான வீதியின் அழகினை உங்களுக்கெல்லாம் சுருக்கமாகச் சொல்லி, உங்கள் எல்லோரையும் பொன்வீதியில் நடக்கவிட்டு அழகுபார்க்க நினைத்து, அதற்கான பொன்னான வேலைகளில் இப்போது ஈடுபட்டு என் பொன்னான நேரங்களைச் செலவழித்து வருகிறேன். :)

   //மறக்காம காபி ஸ்நாக்ஸ் குறிப்பா நேந்திரம் சிப்ஸ் தயாராக வைக்கவும் எனக்கு மட்டும் :) //

   OK ...... தங்களின் இந்த நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் அது தங்களை வந்தடைந்து, உங்களுக்கான நல்லிரவாக அதனை அது ஆக்கக்கூடும். :)

   //அதிராவுக்கு cat treat போதும்.//

   :) எங்கட / உங்கட அதிரா பாவம் இல்லையா?????

   சரி.....சரி, என் சார்பில் அந்த CAT TREAT என்பதை நீங்களே அவங்களுக்குக் கொடுத்துடுங்கோ.

   இதைப்படித்துவிட்டு, அதிராவுக்குத் தெரியாமல் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டுவிடவும். :)

   Delete
  5. asha bhosle athira June 1, 2017 at 12:59 AM

   **அதிராவுக்கு cat treat போதும். - Angelin**

   //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் ஐடியாக் கேட்டாரா இவவிடம்:)..//

   அதானே ..... பாருங்கோ. உங்கட எதிரி உங்கட நாட்டிலேயே, உங்கட ஊரிலேயே, உங்கட பக்கத்திலேயே இருக்காங்கோ. எதற்கும் உஷாராக இருங்கோ, அதிரா.

   //கோபு அண்ணனே வைர வளையல் தருகிறேன் எனச் சொன்னார்ர்.. இப்பூடிக் கெடுத்துப் போட்டீங்களே. :)//

   நான் சொன்னது சொன்னது தான். நான் எப்போதுமே சொன்ன சொல் தவறாதவனாக்கும். ஏற்கனவே வைர நெக்லஸ், வைரத்தோடுகள், வைர மூக்குத்தி, வைர மோதிரம், வைரத்தில் இடுப்புக்கு ஓர் மிகப்பெரிய சைஸ் ஒட்டியாணம் என அனைத்தும் வாங்கி அனுப்ப நினைத்து ....... டாராகக் கிழித்துவிட்டேன் ......................... என் செக் தாள் ஒன்றை ..... நகைக்கடைக்குக் கொடுக்கத்தான்.

   அன்று நான் பலமுறை கேட்டும், தாங்கள் தங்களின் ’சைஸ்’ என்னவென்றே சொல்லாமல் அடம் பிடித்து விட்டீர்கள். :(

   இப்போது நானே ஒரு உத்தேசமான சைஸுக்கு, ஒரு ஜோடி வைர வளையல்களை, சென்னை தி.நகர் (தீ-நகர்) உஸ்மான் ரோடு ’சென்னை சில்க்’ ஏழு மாடிக் கட்டடத்துக்கு அருகில் தரைத்தளத்தில் உள்ள ’ஸ்ரீ குமரன் தங்க மாளிகை’ கடைக்குப்போய் வாங்கி வந்துவிட்டேன்.

   அது நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தங்கள் பொற்கரங்களை வந்து அடையும். அதுதான் நல்ல முஹூர்த்த நேரம். முருங்கை மரத்திலிருந்து தொப்பென்று குதித்து கைகளில் அணிந்து பாருங்கோ.

   இது விஷயம் நம் அஞ்சுவுக்குத் தெரிய வேண்டாம். இதைப் படித்ததும் கிழித்து தேம்ஸ் நதியில் கரைத்து விடவும். :)

   Delete
 3. ///இங்கு இந்தப்பதிவுக்கு வருகை தருவோர் எல்லோரும், இந்தத் தொடர் முடியும்வரை தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

  அச்சச்சோ மேலே இருந்து படிச்சிட்டுக் கொமெண்ட் போட்டது தப்பாகிவிட்டதே... கீழே இருந்து மேல் நோக்கிப் படிக்கும் அஞ்சுவின் கண்ணில் கூட இது தெரியல்லப்போலும்:).. ஹையோ சாமி சூப்பரா அகப்பட்டு விட்டேனே நான்:)..

  வைரவா எனக்கு நல்ல வழி காட்டப்பாஆஆஆஆஆஅ:)

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 1, 2017 at 12:54 AM

   **இங்கு இந்தப்பதிவுக்கு வருகை தருவோர் எல்லோரும், இந்தத் தொடர் முடியும்வரை தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK**

   //அச்சச்சோ மேலே இருந்து படிச்சிட்டுக் கொமெண்ட் போட்டது தப்பாகிவிட்டதே...//

   இதன் அடுத்த பகுதியைக் கீழிருந்து மேலாகப் படியுங்கோ. அதில் உங்களுக்கு ஒரு தனி சுவாரஸ்யமே காத்திருக்கக்கூடும்.

   //கீழே இருந்து மேல் நோக்கிப் படிக்கும் அஞ்சுவின் கண்ணில் கூட இது தெரியல்லப்போலும்:)..//

   ஆ......ஊ...ன்னா அஞ்சுவை ஏன் அநாவஸ்யமாக வம்புக்கு இழுக்குறீங்கோ.

   ‘படுத்துக்கொண்டு போர்த்திக்கொண்டால் என்ன? போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டால் என்ன?’ என்று சொல்லுவினம்.

   அதுபோல மேலிருந்து கீழோ அல்லது கீழிருந்து மேலோ படங்களை மட்டும் நாம் பார்க்கலாம். மேலிருந்து கீழாகப் படித்துக்கொண்டு வந்தால் மட்டும்தான் அதில் ஓர் சுவாரஸ்யம் இருக்க முடியும்.

   //ஹையோ சாமி சூப்பரா அகப்பட்டு விட்டேனே நான்:).. வைரவா எனக்கு நல்ல வழி காட்டப்பாஆஆஆஆஆ :) //

   நல்லா மாட்டீஈஈஈஈஈ என நினைக்காதீங்கோ. இந்த என் சின்னத் தொடரின் ஒவ்வொரு பகுதியும் போகப்போகத்தான் நிறைய புதுப்புதுப் படங்களுடன், புதுப்புதுத் தகவல்களுடனும் சூப்பராக இருக்கும்.

   Delete
 4. நான் மிகவும் ஆவலுடன் படித்து முடித்துள்ள இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 21 சிறுகதைகளையும் பற்றி மிகச்சுருக்கமாக இதன் அடுத்தடுத்த பகுதிகளில், உங்களுடன் சுடச்சுடப் பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்துள்ளேன். ///

  ஓ மை கடவுளேஏஏஏஏஏஏஏ.. திருப்பதி வெங்கடேசா... வைரம் பதிச்ச பட்டுச் சாத்துவேன்.. கோபு அண்ணனின் மனதை மாற்றி.. என்னைக் காப்பாத்திப்போடுங்கோ:)..

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 1, 2017 at 12:58 AM

   **நான் மிகவும் ஆவலுடன் படித்து முடித்துள்ள இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 21 சிறுகதைகளையும் பற்றி மிகச்சுருக்கமாக இதன் அடுத்தடுத்த பகுதிகளில், உங்களுடன் சுடச்சுடப் பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்துள்ளேன். - VGK**

   //ஓ மை கடவுளேஏஏஏஏஏஏஏ.. திருப்பதி வெங்கடேசா... வைரம் பதிச்ச பட்டுச் சாத்துவேன்.. //

   உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார OMG சாமியான அவர், இதற்கெல்லாம்போய் மயங்குவாரா என்ன?

   //கோபு அண்ணனின் மனதை மாற்றி.. என்னைக் காப்பாத்திப்போடுங்கோ:)..//

   பேசாமல் வைரம் பதிச்ச பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டையை எனக்கே அனுப்பி வைத்தோ அல்லது அதற்கு சமமான ஒரு பெருந்தொகையை, உங்கள் பாஷையில் என் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தோ, என் மனதை மாற்ற நீங்க முயற்சிக்கலாம். :)

   Delete
 5. ஒரு பொன்வீதிக்கு.. இரண்டு ரிவியூக்களா? இதுதானே சகோ ஸ்ரீராமும் எழுதினார்... மோகன் ஜி கொடுத்து வைத்தவர்.. இப்படி எல்லோரும் ஆசையா ரிவியூ எழுத.

  அனைத்தும் அருமை.. உங்களுக்கும் மோகன் ஜீக்கும் வாழ்த்துக்கள்.

  ///48 மணி நேர
  இடைவெளிகளில்
  அடுத்தடுத்த
  பதிவுகள்
  தொடர்ந்து
  வெளியாகும்//
  ஏதும் துப்பறியும் தொடராக இருக்குமோ?:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்..

  ஊசிக்குறிப்பு:
  48 மணி நேர இடைவேளைகளில் அதிரா அந்தாட்டிக்கா போய் வர உள்ளேன்ன்.. ட்ரம்ப் அங்கிளோடு இரகசிய மீட்டிங்:)

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 1, 2017 at 1:18 AM

   //ஒரு பொன்வீதிக்கு.. இரண்டு ரிவியூக்களா? இதுதானே சகோ ஸ்ரீராமும் எழுதினார்...//

   அவர் அவர் பாணியில் எழுதியிருப்பாரோ என்னவோ. நான் என் பாணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். மேலும் சிலரும் அவரவர் பாணியில் ஒருவேளை ஏற்கனவே எழுதியுமிருக்கலாம் .... அல்லது இனிமேலும் ஒருவேளை எழுத நினைக்கலாம். நமக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? நான் வலையில் மேய்வதோ ஒருசில குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே.

   //மோகன்ஜி கொடுத்து வைத்தவர்..//

   என்னத்தக் கொடுத்து ..... என்னத்த வைத்து ..... (இதை ’நான்’ என்ற திரைப்படத்தில் வரும் ’என்னத்த கன்னையா’ குரலில் நான் சொல்வதாக பாவித்துப் படிக்கவும்.)

   //இப்படி எல்லோரும் ஆசையா ரிவியூ எழுத.//

   ரிவியூ எழுதுவோரெல்லாம் என்னைப்போலவும் உங்களைப்போலவும் உண்மையிலேயே ஆசையுடன் எழுதுவதாக நினைத்துக் கொண்டுள்ளீர்களா?

   அப்படியாயின் ஐயோ ...... பாவம் ...... நீங்கள்.

   //அனைத்தும் அருமை.. உங்களுக்கும் மோகன்ஜீக்கும் வாழ்த்துக்கள். //

   ’அனைத்தும் அருமை’ என்று அழகாகச் சொல்லியுள்ளதற்கும், தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   **48 மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த பதிவுகள்
   தொடர்ந்து வெளியாகும் - VGK**

   //ஏதும் துப்பறியும் தொடராக இருக்குமோ?:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்..//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :) சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு ‘எனக்கெதுக்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்’ எனக் கரெக்டாச் சொல்லிடுவீங்கோ. அது எனக்கும் பிடித்ததே.

   //ஊசிக்குறிப்பு: 48 மணி நேர இடைவேளைகளில் அதிரா அந்தாட்டிக்கா போய் வர உள்ளேன்ன்.. ட்ரம்ப் அங்கிளோடு இரகசிய மீட்டிங் :)//

   நிம்மதியாப்போச்சு. நல்லபடியாகப் போய் வாருங்கள். தங்களின் பயணம் இனிமையாக அமைய என் நல்வாழ்த்துகள். மேலிடத்துடனான இரகசிய மீட்டிங் பற்றி இப்படி எல்லோருக்கும் தெரிவதுபோலச் சொல்லலாமோ? என்னவோ போங்கோ.

   தங்கள் பாணியில் கொடுத்துள்ள கலகலப்பான கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி, அதிரா.

   Delete
 6. சொல்ல மறந்திட்டேன்ன்.. என் கீ போர்ட்டில் “புக் ரிவியூவால்ல்.. “வாழ்த்துக்கள்” எனும் பட்டினே தேய்ந்துவிட்டதைப்போல:)...

  இங்கின.. மேலே போட்ட அந்தக் கை தட்டும் படம் பார்த்துப் பார்த்து என் கண்ணே தேய்ந்து விட்டது.. அடுத்தும் அப்படம் போட்டீங்க.......................
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  ................ ஒண்ணும் பண்ண மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்:).

  https://media.giphy.com/media/ucI5kRLqH0WXu/giphy.gif

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira June 1, 2017 at 1:21 AM

   //சொல்ல மறந்திட்டேன்ன்.. என் கீ போர்ட்டில் “புக் ரிவியூவால்ல்.. “வாழ்த்துக்கள்” எனும் பட்டினே தேய்ந்துவிட்டதைப்போல:)...

   இங்கின.. மேலே போட்ட அந்தக் கை தட்டும் படம் பார்த்துப் பார்த்து என் கண்ணே தேய்ந்து விட்டது.. அடுத்தும் அப்படம் போட்டீங்க.......................
   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ................ ஒண்ணும் பண்ண மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்:).//

   :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   //https://media.giphy.com/media/ucI5kRLqH0WXu/giphy.gif //

   பின் இரண்டு காலில் நின்றுகொண்டு, முன் இரண்டு காலை கைகள் போல மார்பினில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும் அந்த வெள்ளைப்பூனையார், உங்களைப்போலவே அழகாக உள்ளார்.

   மிகப் பொருத்தமான படம்தான். :)))))

   Delete
 7. நல்லதொரு விஷயத்தை நயமுடன் பதிவில் வைக்கும் நுட்பம் தங்களுக்கே உரித்தான ஒன்று...

  தொடர்கின்றேன்... வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ June 1, 2017 at 3:55 AM

   வாங்கோ பிரதர், வணக்கம்.

   //நல்லதொரு விஷயத்தை நயமுடன் பதிவில் வைக்கும் நுட்பம் தங்களுக்கே உரித்தான ஒன்று... //

   ஆஹா, இதனை நல்லதொரு நயமுடன் நுட்பமாகச் சொல்லியுள்ளீர்கள். தன்யனானேன்.

   //தொடர்கின்றேன்... வாழ்க நலம்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர்.

   Delete
  2. துரை சார் தங்கள் வரவையும் கருத்துகளையும் நானும் எதிர்பார்த்திருக்கிறேன்

   Delete
 8. மூன்று கதாநயாகி கதைனா நான் கூடத்தான் தினம் வந்து ரெண்டு கமென்ட் போடுவேன்.. என்ன பெரிய விசேஷம்னேன்??

  ReplyDelete
  Replies
  1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!! நண்பனே!!!
   இந்த நாளும் அன்று போல் இன்பமாகவே உள்ளதே ஏன் ஏன் ஏன் நண்பனே!

   Delete
  2. Durai A June 1, 2017 at 4:00 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்தே பல வருஷங்கள் ஆச்சு, ஸார். இன்றைய தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஸார்.

   //மூன்று கதாநயாகி கதைனா நான் கூடத்தான் தினம் வந்து ரெண்டு கமென்ட் போடுவேன்.. என்ன பெரிய விசேஷம்னேன்??//

   அடடா, நீங்ககூட இன்னும் போடவே இல்லை ஸார் ... அந்த மூன்று கதாநாயகிகளும், நீங்க எப்போ வந்துப் போடப் போறீங்களோன்னு, இன்னும் உங்களுக்காகவே ஆவலுடன் காத்திருக்கிறார்கள், ஸார்.

   இப்போதுகூட வருகை தந்து போடலாம் ஸார் ....
   ஐ மீன் .... உங்கள் பின்னூட்டங்களை.

   அதற்கான இணைப்புகள் எல்லாம் மேலே கொடுத்திருக்கிறேன், ஸார்.

   முழுக்கதையும் இதில் உள்ளது ஸார்:
   http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

   தங்களின் அன்பான வருகைக்கு நன்றிகள், ஸார்.

   Delete
  3. @ Durai A

   ’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும், பிரபல எழுத்தாளர் + ‘கைகள் அள்ளிய நீர்’ பதிவர் சுந்தர்ஜி அவர்கள் கொடுத்துள்ள சில பின்னூட்டங்கள்:-
   -=-=-=-

   சுந்தர்ஜி June 19, 2011 at 4:21 PM
   கடந்த காலத்தில் ஒரு கால். இன்றில் ஒருகால் எனக் கால்பாவி நிற்கிறேன்.

   மோகன்ஜி ஆர்டர் கொடுத்தா மாதிரி துளிரா ஒரு பெரிய பந்தி பார்சல்.

   -=-=-=-

   சுந்தர்ஜி June 21, 2011 at 12:32 PM

   என்னத்தப் புதுசா சொல்லப் போறேன் கோபு சார்?

   உங்க விரல்ல சரஸ்வதி இஸ் ப்ளேயிங்.

   பசி நேரத்துல ரவாலாடு-பலாச்சுளை-மிக்ஸர்-மாம்பழச் சொம்பு இதெல்லாம் சீக்கிரமா வீட்டுக்குக் கிளப்பி விட்டது.

   அடுத்த பாகத்துல என்னென்ன தாக்குதலோ?

   -=-=-=-

   சுந்தர்ஜிJune 23, 2011 at 4:08 PM

   இதுவரை நீங்கள் எழுதிப் படித்தவற்றில் இந்த நாயகிக்குத் தனி இடம் என் மனதில்.

   தன் மனதைச் சொல்வதில் வெளிப்படையான அணுகுமுறை-உரிமை கோரத் தயக்கம்-ஆனாலும் விடவும் மனமில்லாமல் அன்றைய நாளுக்கான சந்தோஷத்தை கேட்காமலேயே எடுத்துக்கொண்டது-இறுதியில் கொடுத்த உதவியை ஏற்க மறுத்த நாசூக்கு.

   அந்த நாயகிக்கும் அவளைச் செதுக்கிய உங்களுக்கும் சபாஷ்.

   -=-=-=-

   சுந்தர்ஜி June 27, 2011 at 4:45 PM

   எல்லா விதமாகவும் உங்களால் எழுதமுடியும் என்பதை எல்லா நேரங்களிலும் நிரூபித்துவிடுகிறீர்கள்.

   ஆனால் உங்களின் சௌஜன்யமான மனோநிலையில் உலகம் இல்லாதிருப்பதால் நீங்கள் அளிக்கும் முடிவு எல்லோருக்கும் ஒரு ஒத்தடம் போல அமைந்துவிடுகிறது.

   -=-=-=-

   Delete
  4. @ Durai A

   ’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் என் எழுத்துலக மானஸீக குருநாதர் ‘ரிஷபன்’ அவர்கள் கொடுத்துள்ள சில பின்னூட்டங்கள்:-
   -=-=-=-

   ரிஷபன் June 19, 2011 at 3:36 PM

   இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது.

   - நகைச்சுவை!

   ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.

   - சஸ்பென்ஸ்!

   நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன்.

   - அதிர்ச்சி!

   பலதரப்பட்ட உணர்வுகளோடு விளையாடும் உங்கள் எழுத்துக் கப்பலில் நானும் ஏறியாச்சு..

   -=-=-=-

   ரிஷபன் June 21, 2011 at 8:18 PM

   பேச்சே இல்லாமல் அப்படியே விவரங்களாய்க் கொண்டு போவது எத்தனை சிரமம்.. அதுவும் சுவை குன்றாமல் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல்..
   கையைக் கொடுங்க.. கோபால்ஜி..

   -=-=-=-

   ரிஷபன் June 24, 2011 at 6:27 PM

   ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

   ஒரு கதையை உண்மை என்றே நம்ப வைக்கிற அழகான எழுத்து. சுந்தர்ஜி சொன்னது போல செதுக்கித்தான் வைத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இயல்பாகவே மனசு சொக்கிப் போகிறது.

   -=-=-=-

   ரிஷபன் June 26, 2011 at 5:33 PM

   மனம் கனக்க வைத்த முடிவு. ஆனாலும்
   சுபமான முடிவு தந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

   -=-=-=-

   Delete
  5. @ Durai A

   ’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் வேறு சிலர் கொடுத்துள்ள பின்னூட்டங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகள்:-
   -=-=-=-

   மனோ சாமிநாதன் June 19, 2011 at 4:23 PM

   **"கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன.இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ"** - VGK

   ஆரம்பமே இயற்கை அழகும் அன்புமாக அமர்க்களமாக தொடங்குகிறது! அதன் பின் கதை ஸ்டோர் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்டு ராஜபாட்டையில் பயணிக்கிறது! இளம் வயது வாலிபனின் உணர்வுகள், அவ‌னைச் சுற்றி தின‌ச‌ரி சுழ‌ன்ற‌ ய‌தார்த்த‌ நிக‌ழ்வுக‌ள் என்று ஒவ்வொரு வ‌ரியும் அனுப‌வித்து எழுதியிருக்கிறீர்க‌ள்!! ஒரு சின்ன‌ வ‌லியுட‌ன் தொட‌ரும் போட்டு விட்டீர்க‌ள்.. .. ... அடுத்த‌ ப‌குதியில் பார்க்க‌லாம்!!

   -=-=-=-

   மனோ சாமிநாதன் June 21, 2011 at 4:12 PM

   **"சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது."**-VGK

   அட்ட‌காச‌மான‌ வர்ண‌‌னை! பெண்கள்கூட இப்படி கண்டுபிடிப்பார்களா என்பது சந்தேகமே!

   இள‌மையின் வசந்த கால நினைவலைகள் என்றுமே மனதுக்கு ரம்யமானவைதான்!!

   -=-=-=-

   Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.
   ====================================================

   அன்பின் கோபு ஸார்,

   சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும். சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."

   கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்

   இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
   பரம ரஸிகை

   -=-=-=-

   Ramani June 26, 2011 at 4:23 PM

   வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக இப்படித்தான் நாம் நம் சம்பத்தப்பட்டவர்களை சந்திக்க நேருகிறது. சிலர் ஜெயித்த நிலையிலும் சிலர் தோற்ற நிலையிலும் அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அது தெரிந்து என்ன ஆகப் போகிறது. இந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி காரணங்களை விளக்காமல் போனது அதிகம் பிடித்திருந்தது.

   கதையின் இறுதிப் பகுதி மனங்கனக்கச் செய்து போனாலும் நேர்மறையான சிந்தனையுடன் முடித்திருந்தது அருமை

   -=-=-=-

   Delete
  6. @ Durai A

   ’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் வேறு சிலர் கொடுத்துள்ள பின்னூட்டங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகள்:-
   -=-=-=-

   VENKAT June 28, 2011 at 7:29 PM

   ஈரோட்டுக்காரியின் சந்திப்பு வெகு சுவாரசியம். இன்னும் அவள் கதாநாயகன் மீது அன்பாய் இருப்பது நாயகன் தூரத்தை அனுசரிப்பதும் வெகு ஜோர். முதலிலும் முடிவிலும் ஒரே மாதிரி.

   மெட்ராஸ்காரி மீது நாயகனின் அன்பை வெளிப்படுத்துதலையும் திறமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். வேறு எப்படி கதை போனலும் சிக்கலே.

   கதையை ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ரசித்துப் படியுங்கள் என்று நீங்கள் உரிமையாக கடிந்து கொள்வீர்களோ??

   ரசித்து ஆராய்கிறேன் சார்.

   ருசிகரமான பதிவு. நன்றி.

   -=-=-=-

   சாகம்பரி June 26, 2011 at 5:44 PM

   இது போன்ற ஆச்சரியங்களை வாழ்க்கை என்னும் காலயந்திரம் ரகசியமாய் பொதிந்து வைத்துள்ளது. கதை போல அல்லாமல் உண்மை சம்பவங்களின் தொகுப்பு போல உள்ளது. நன்றி VGK சார்.

   -=-=-=-

   வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
   June 26, 2011 at 7:33 PM

   வாழ்க்கை தனக்குள் நிறைய புதிர்களை ஒளித்து வைத்திருந்து அவ்வப்போது விடுவிக்கும். அவற்றை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும்போது குழப்பங்கள் தீர்ந்து விடும். நல்ல கதை. தேவியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

   -=-=-=-

   இளமதி September 5, 2012 at 4:30 AM

   அருமையான கதை அண்ணா! எழுதியது மட்டுமல்ல அந்த கதாபாத்திரமாக நீங்களே அதில் இருந்தது போல் ஓர் உணர்வு.

   மனதை நெருடிய கதை. முடிவில் அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்ததை மறக்க மனம் கூடுதில்லையே :(

   சிறப்பான நல்ல படைப்பு. சோகத்தையும் நாம் ரசிக்கும்போது நன்றாக இருக்கு என்பது கொஞ்சம் அபத்தம்தான். மிக்க நன்றி!

   -=-=-=-

   தி.தமிழ் இளங்கோ July 23, 2012 at 6:54 PM

   தன்னை விரும்பிய ஒரு பெண்ணை, இந்நாளில், தன் மகன் காதலிக்கும் பெண்ணின் அம்மாவாக, சந்திக்கும் சூழ்நிலையை ஒரு கதையாக்கிச் சொல்லும் போக்கில் VGK – இன் எழுத்தில் இன்னொரு ஸ்ரீதர் (டைரக்டர்) தெரிகிறார்.

   சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது .. எங்கே சென்றாலும் தேடி இணைக்கும். இனிய கதை இது. என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது.

   - பாடல்: கண்ணதாசன் (படம்: பிராப்தம்)

   -=-=-=-

   Delete
  7. இப்போதும் ஒருமுறை மீண்டும் படித்துவிட வேண்டும் எனும் ஆவல் மேலிடுகிறது

   Delete
 9. நல்ல தொடக்கம். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். June 1, 2017 at 6:36 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //நல்ல தொடக்கம். தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   Delete
 10. திரு.மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
  2. திண்டுக்கல் தனபாலன் June 1, 2017 at 7:25 AM

   //திரு.மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 11. நாங்கள் முன்பே மோஹன் ஜி அவர்களின் தளத்தைஅறிய நேர்ந்து வாசித்தோம்...இடையில் விடுபட்டுவிட்டது....இப்போது மீண்டும் தொடர்கிறோம்...பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும்...வழக்கம் போல் தொடக்கமே அசத்தல்....சார்....வாழ்த்துகள் மோஹன் ஜி அவர்களுக்கு!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜி.தொடருங்கள்..

   Delete
  2. Thulasidharan V Thillaiakathu June 1, 2017 at 8:41 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நாங்கள் முன்பே மோஹன் ஜி அவர்களின் தளத்தை அறிய நேர்ந்து வாசித்தோம்...//

   அப்படியா, மிக்க மகிழ்ச்சி.

   //இடையில் விடுபட்டுவிட்டது....//

   அதனால் பரவாயில்லை.

   //இப்போது மீண்டும் தொடர்கிறோம்...பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும்...//

   சந்தோஷம். வாசித்தால் போச்சு.

   //வழக்கம் போல் தொடக்கமே அசத்தல்....சார்.... வாழ்த்துகள் மோஹன் ஜி அவர்களுக்கு!!!//

   தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம்போல் அசத்தலான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 12. Read the review in engalblog! Would love to see your views-reviews!! :-))

  ReplyDelete
  Replies
  1. middleclassmadhavi June 1, 2017 at 9:33 AM

   WELCOME TO YOU .... Mrs. MCM Madam

   //Read the review in engalblog!//

   I see. Good.

   //Would love to see your views-reviews!! :-)) //

   Very Glad. Thank you, very much, Madam.

   Delete
 13. வை கோ சார்! ஆஹா... வாணவேடிக்கையோடு உங்கள் தொடர் விமரிசனம்... மிக்க வந்தனம் ஜி !
  உங்கள் பதிவுகளில் என் பின்னூட்டங்கள் குறைவு என்றுவேறு குட்டியிருக்கிறீர்கள். அவ்வளவு கம்மியாக மார்க் போட்டிருக்கிறீர்கள்... நீங்கள் சொன்னதுபோல் வலைமேய்தலில் நான் அவ்வப்போது மட்டம் போடுபவன் தான். எப்போது மீண்டு வந்தாலும் உங்கள் பதிவுகளை சேர்த்து வைத்தல்லவா பார்த்து வருகிறேன்...
  அதற்காகவாவது மதிப்பெண்களைக் கொஞ்சம் கூட்டிப் போடக்கூடாதா??

  ஆனால் எனது பெரும்பாலான பதிவுகளில் உங்கள் உற்சாகமூட்டும் கருத்துகளை விரிவாக இட்டே வந்திருக்கிறீர்கள். அதற்கு உங்கள் உயரிய மனவளமே காரணம். மீண்டும் நன்றி!

  உங்கள் வர்ணஜாலம் விரவிய விமரிசனப் பதிவுகளை நானும் ஆர்வத்தோடே எதிர்பார்த்திருக்கிறேன். இங்கு வாழ்த்து சொல்லும் நல்ல உள்ளங்களுக்கு என் அன்பும் நன்றியும்.

  ReplyDelete
  Replies
  1. மோகன்ஜி எங்கள் பதிவுகளுக்கும் எப்போதாவதுதான் வருவார். குறையாகச் சொல்லவில்லை. தகவலாகச் சொல்கிறேன்!

   Delete
  2. ஶ்ரீராம் ! உங்களுக்கு இன்னுமொரு தகவல். 'வானவில் மனிதனு'க்கும் அவ்வப்போது தான் வருகிறேன். பலவற்றிலும் ( என் மனைவி வார்த்தைகளில் 'உப்பு பெறாத பரோபகாரம்') நான் ஈடுபடுவதால் நேரப் பற்றாக்குறை தவிர்க்க இயலவில்லை. இதுவன்றி காரணம் வேறில்லை.

   Delete
  3. மோகன்ஜி June 1, 2017 at 10:34 AM

   //வை கோ சார்! ஆஹா... வாணவேடிக்கையோடு உங்கள் தொடர் விமரிசனம்... மிக்க வந்தனம் ஜி ! //

   வாங்கோ ஜி, வணக்கம்.

   //உங்கள் பதிவுகளில் என் பின்னூட்டங்கள் குறைவு என்று வேறு குட்டியிருக்கிறீர்கள். //

   குட்டவில்லை. ஜஸ்ட் ஒரு ஆதங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

   //அவ்வளவு கம்மியாக மார்க் போட்டிருக்கிறீர்கள்...//

   நானும் மெனக்கெட்டு தேடித் தேடிப் பார்த்து அசந்தே போனேன். இருப்பினும் எந்தப் பிரயோசனமும் இல்லை. பாஸ் மார்க்கூட என்னால் போட முடியவில்லை. என்ன செய்வது சொல்லுங்கோ?

   //நீங்கள் சொன்னதுபோல் வலைமேய்தலில் நான் அவ்வப்போது மட்டம் போடுபவன் தான். //

   தாங்கள் பலவேலைகளில் மூழ்கிப்போய் விடுபவர் என்பதை நானும் இப்போதுதான் அறிந்துகொண்டேன். அதனால் தங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்காதுதான்.

   //எப்போது மீண்டு வந்தாலும் உங்கள் பதிவுகளை சேர்த்து வைத்தல்லவா பார்த்து வருகிறேன்... அதற்காகவாவது மதிப்பெண்களைக் கொஞ்சம் கூட்டிப் போடக்கூடாதா??//

   அதற்கான அத்தாட்சிகள் (Documentary Evidences/Proof) என்னிடம் இல்லையே, ஸ்வாமீ.

   //ஆனால் எனது பெரும்பாலான பதிவுகளில் உங்கள் உற்சாகமூட்டும் கருத்துகளை விரிவாக இட்டே வந்திருக்கிறீர்கள். அதற்கு உங்கள் உயரிய மனவளமே காரணம். மீண்டும் நன்றி! //

   நேரம் கிடைக்கும்போதும், மகிழ்ச்சியான மனநிலை இருக்கும்போதும், பெரும்பாலும் ஓரளவு பிறரின் பதிவுகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வமுண்டு. படிக்க சுவாரஸ்யமாக இருப்பினும் தொடர்ந்து முழுவதுமாகப் படிப்பதும் உண்டு. மனதுக்குப் பிடித்திருந்தால் ஏதேனும் நான்கு வரிகள் வித்யாசமாக எழுதுவதும் உண்டு.

   இவ்வாறு நான் செல்லும் வலைத்தளங்களை இப்போதெல்லாம் மிகவும் நானே குறைத்துக்கொண்டு விட்டேன். ஏனோதானோவென படித்துவிட்டு, ஏனோதானோவென ‘அருமை’ போன்ற ஓரிரு வரிகளுடன் டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் நான் கொடுப்பதையோ, பிறர் எனக்குக் கொடுப்பதையோ, நான் அறவே விரும்புவது இல்லை.

   //உங்கள் வர்ணஜாலம் விரவிய விமரிசனப் பதிவுகளை நானும் ஆர்வத்தோடே எதிர்பார்த்திருக்கிறேன்.//

   மிகவும் சந்தோஷம்.

   //இங்கு வாழ்த்து சொல்லும் நல்ல உள்ளங்களுக்கு என் அன்பும் நன்றியும்.//

   மிக்க மகிழ்ச்சி, ஜி. ஒவ்வொருவரின் பின்னூட்டங்களுக்கும் தாங்களே தனித்தனியாக பதில் கொடுத்து வருவது மிகவும் ஆரோக்யமான நல்ல விஷயமாகும். இதனால் பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஓர் திருப்தி ஏற்படக்கூடும்.

   Delete
 14. 'அந்தக் காலத்தில் கதைகள் எழுதிப் புகழ் பெற்றவரும்' இந்தக் காலத்தில், நிறைய 'மதிப்புரைகள்' எழுதி மற்ற கதையாசிரியர்களின் படைப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கோபு சார் அவர்களே.. ஆரம்பமே அட்டஹாசமா இருக்கு. எழுதுங்கள். தொடர்கிறேன்.

  ஆனால், மெதுவாத்தான் வர இயலும். பயணிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நெல்லைத்தமிழன் சார்!

   Delete
  2. நெல்லைத் தமிழன் June 1, 2017 at 11:32 AM

   வாங்கோ, வணக்கம்.

   //'அந்தக் காலத்தில் கதைகள் எழுதிப் புகழ் பெற்றவரும்' இந்தக் காலத்தில், நிறைய 'மதிப்புரைகள்' எழுதி மற்ற கதையாசிரியர்களின் படைப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கோபு சார் அவர்களே.. //

   2011 முதல் 2015 வரை மட்டுமே கதைகள், கட்டுரைகள், பல்வேறு அனுபவங்கள் என பல தலைப்புகளில் நான் பதிவுகள் எழுதி வந்துள்ளேன்.

   01.01.2016 முதல், ஒருசில குறிப்பிட்ட காரணங்களால், புதிதாகப் பதிவுகள் எழுதுவதைப் பெரும்பாலும் நான் குறைத்துக்கொண்டே விட்டேன்.

   இருப்பினும் ஒருசில பதிவர் சந்திப்புகள் + எனக்குப் பிறரால் அன்புடன் அனுப்பி வைக்கப்படும் நூல்களை மதிப்புரை செய்தல் ஆகியவற்றை மட்டும், ஓர் நன்றிக்கடனாக நினைத்து, பதிவுகளாக வெளியிட்டு வருகிறேன்.

   //ஆரம்பமே அட்டஹாசமா இருக்கு. எழுதுங்கள். தொடர்கிறேன்.//

   ஆஹா, தாங்களும் அட்டஹாசமாக ஏதேதோ சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி ஸ்வாமீ.

   //ஆனால், மெதுவாத்தான் வர இயலும். பயணிக்கிறேன்.//

   மெதுவாகவே வாங்கோ. அவசரம் ஏதும் இல்லை. ஆனால் கட்டாயமாக வாங்கோ, ப்ளீஸ்

   Delete
 15. மோகன்ஜி .ஒரு வானவில் மனிதர்தான்

  அசத்தலான ஆரம்பம்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சென்னைப் பித்தன் சார்! அன்புக்கு நன்றி!

   Delete
  2. சென்னை பித்தன் June 1, 2017 at 1:35 PM

   வாங்கோ, ஸார், நமஸ்காரங்கள்.

   //மோகன்ஜி. ஒரு வானவில் மனிதர்தான்//

   அழகாகப் பொருத்தமாகச் சொல்லியுள்ளீர்கள்.

   //அசத்தலான ஆரம்பம்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
 16. அருமையான அறிமுகம்... அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜனா சார்

   Delete
  2. கே. பி. ஜனா... June 1, 2017 at 4:09 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான அறிமுகம்... அன்பான வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 17. திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள 21 சிறு கதைகளைப் பற்றிய தங்களின் பொன்னான திறனாய்வுக்கு காத்திருக்கிறேன். திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்! நான் சார்ந்த வங்கித் துறையைச் சேர்ந்தவர் என்பதாலும், மேலும் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு கூடுதல் சிறப்பு பாராட்டுகள்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நடனசபாபதி சார். நீங்களும் 'மல்லாட்ட' ஜில்லா தானா? தொண்டை நாடு சான்றோருடைத்து மட்டுமல்ல... மோகன்ஜி போன்றோரும் உடைத்து!

   Delete
  2. வே.நடனசபாபதி June 1, 2017 at 4:44 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //திரு. மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள 21 சிறு கதைகளைப் பற்றிய தங்களின் பொன்னான திறனாய்வுக்கு காத்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்! நான் சார்ந்த வங்கித் துறையைச் சேர்ந்தவர் என்பதாலும், மேலும் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு கூடுதல் சிறப்பு பாராட்டுகள்!!//

   ஆஹா, மிகவும் சந்தோஷம், ஸார்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + கூடுதல் சிறப்புப் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 18. மோககன்ஜி அவர்களைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக இருக்கிறது! அவருடைய சில பதிவுகள் மனதில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

  அடுத்த திறனாய்வு நம் வானவில் சகோதரரின் நூல் பற்றியா? அவசியம் படிக்கிறேன். வந்து கருத்தையும் சொல்கிறேன். நாளை மறுபடியும் எங்கள் ஊருக்குச் [ துபாய்] செல்வதால் வலைத்தளம் வருவதற்கு சற்று தாமதமாகும். ஆனாலும் வந்து விடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. மனோ மேடம் . நலம் தானா? வை.கோ சார் புண்ணியத்தில் உங்களுக்கு ஒரு 'Hai !'
   தொடருங்கள்...

   Delete
  2. மனோ சாமிநாதன் June 1, 2017 at 4:50 PM

   வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

   //மோகன்ஜி அவர்களைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக இருக்கிறது!//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //அவருடைய சில பதிவுகள் மனதில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.//

   ஆம். தாங்கள் சொல்வது போலவேதான் எனக்கும் நினைக்கத் தோன்றியது.

   //அடுத்த திறனாய்வு நம் வானவில் சகோதரரின் நூல் பற்றியா? அவசியம் படிக்கிறேன். வந்து கருத்தையும் சொல்கிறேன்.//

   ஆமாம் மேடம். மிக்க மகிழ்ச்சி மேடம்.

   //நாளை மறுபடியும் எங்கள் ஊருக்குச் [ துபாய்] செல்வதால் வலைத்தளம் வருவதற்கு சற்று தாமதமாகும். ஆனாலும் வந்து விடுவேன்.//

   தங்களின் பயணம் செளகர்யமாகவும், மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க என் இனிய நல்வாழ்த்துகள் மேடம். சற்றே தாமதமானாலும் இனிவரப்போகும் அனைத்து ஏழு பதிவுகளுக்கும் வாங்கோ, மேடம்.

   இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 19. அசத்தலான அறிமுகம். தொடர்ந்து மதிப்புரைக்காகக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் சார்! நலம் தானே? நன்றி ஐயா!

   Delete
  2. Dr B Jambulingam, Assistant Registrar (Retd),
   Tamil University June 1, 2017 at 5:43 PM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //அசத்தலான அறிமுகம். தொடர்ந்து மதிப்புரைக்காகக் காத்திருக்கிறோம்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.

   Delete
 20. மோகன்ஜி அவர்களைப்பற்றிய அறிமுகம் அருமை.
  அபிராமி அந்தாதியை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

  //அண்மையில் சாகித்ய அகாதமி, மொழி பெயர்ப்புக்கான பணியாற்ற இவரை அழைத்து வாய்ப்பளித்துள்ளது.//

  வாழ்த்துக்கள் மோகன்ஜி.

  //தற்போது பல்கலைக் கழகங்களிலும், பல வங்கிகளின் கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் மனோவியல், மேலாண்மை, ஆளுமை பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார்.//

  எவ்வளவு பணிகள்! இதனிடையே வலைத்தளம் வருவதே பெரிய விஷயம் போலவே!

  வாழ்த்துக்கள் மோகன்ஜி , வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணன் சார்.
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு மேடம். வைகோ சார் ஒரு உற்சாக டைனமோ! எனக்குள் பரிந்து சொன்ன உங்களுக்கு வந்தனம். தொடருங்கள்

   Delete
  2. கோமதி அரசு June 1, 2017 at 6:14 PM

   வாங்கோ மேடம். வணக்கம் மேடம்.

   //எவ்வளவு பணிகள்! இதனிடையே வலைத்தளம் வருவதே பெரிய விஷயம் போலவே!//

   ஆமாம், மேடம். பணி ஓய்வுக்குப்பின்னும் ஓய்வின்றி உழைக்கும் உத்தமராக இருக்கிறார். இதனிடையே வலைத்தளத்தினில் எட்டிப்பார்ப்பது ஓர் மிகப்பெரிய விஷயம் மட்டுமே.

   //வாழ்த்துக்கள் மோகன்ஜி, வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணன் சார். தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 21. மோகன் ஜி அவர்களின் வலைத்தளம்
  போய்ப் படித்ததுண்டு
  இத்தனைச் சிறப்புக்குச் சொந்தக்காரர்
  என தங்கள் அருமையான அறிமுகம்
  கண்டே தெரிந்து கொள்ள முடிந்தது
  விமர்சனப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து...
  வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார். நலமா?
   வைகோ சாரின் அறிமுகக் குறிப்புகள் என் பொறுப்பை அதிகமாக ஆக்குகிறது. தொடருங்கள் உங்கள் வளமான கருத்துக்களோடு.

   Delete
  2. Ramani S June 1, 2017 at 6:26 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம் ஸார்.

   //மோகன்ஜி அவர்களின் வலைத்தளம் போய்ப் படித்ததுண்டு.//

   தாங்கள் போகாத வலைத்தளங்கள் இருக்கவே ஏதும் வாய்ப்பே இல்லை என எனக்குத் தெரியும்.

   //இத்தனைச் சிறப்புக்குச் சொந்தக்காரர் என தங்கள் அருமையான அறிமுகம் கண்டே தெரிந்து கொள்ள முடிந்தது.//

   நானும் இதனை இப்போது இந்த நூலினைப் படித்த பிறகே தெரிந்துகொள்ள நேர்ந்தது.

   //விமர்சனப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து... வாழ்த்துக்களுடன்..//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புகளும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 22. நான் இதுவரை அறியாமலிருந்த மோகன் ஜி அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி .முடிந்தவரைக்கும் தொடர்வேன் .

  ReplyDelete
  Replies
  1. ஞான சம்பந்தன் சார், உங்கள் அறிமுகம் கிடைத்ததிற்கு வை.கோ அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். தொடருங்கள்ஜி

   Delete
  2. சொ.ஞானசம்பந்தன் June 1, 2017 at 9:03 PM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள் ஸார்.

   //நான் இதுவரை அறியாமலிருந்த மோகன்ஜி அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. முடிந்தவரைக்கும் தொடர்வேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
  3. மோகன்ஜி June 1, 2017 at 10:47 PM

   //ஞான சம்பந்தன் சார், உங்கள் அறிமுகம் கிடைத்ததிற்கு வை.கோ அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். தொடருங்கள் ஜி//

   மோகன்ஜி ஸார். 90+ வயதாகியுள்ள, பழுத்த அனுபவம் மிக்க, மிகவும் அறிவாளியான மூத்த வலைப்பதிவர்களில் இவரும் ஒருவர்.

   இவருடைய மகளும், மருமகளும் கூட இன்றைய மிகச்சிறப்பான + மிகப்பிரபலமான முன்னணிப் பதிவர்கள் ஆவார்கள்.

   மேலும் விபரங்களுக்கு இதோ இந்தப்பதிவினைப் பார்க்கவும்: http://gopu1949.blogspot.in/2017/03/blog-post_30.html

   ’ஊஞ்சல்’ வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் இவரின் புதல்வியாவார்.

   ‘கீத மஞ்சரி’ வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் இவரின் மருமகள் ஆவார்.

   Delete
  4. வை.கோ சார்!திரு ஞான சம்பந்தன் அவர்களை அறிமுகம் செயவித்தமைக்கு என் நன்றி. கீதா மதிவாணனின் மாமனார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. கீதா மேடம் எனது நெடுநாள் வாசகி. சாருக்கு என் வணக்கங்கள்.

   Delete
 23. your blog carries so much info !

  ReplyDelete
  Replies
  1. ashok June 1, 2017 at 10:45 PM

   WELCOME Mr. ASHOK Sir.

   //your blog carries so much info !//

   Thanks a Lot for your kind arrival here & for your valuable comments, Sir. - vgk

   Delete
 24. வானவில் மனிதரின் 'பொன்வீதி'க்கு நூல் மதிப்புரை...வானவில் என்றுமே எனது மனதுக்கு நெருக்கம்...வாத்தியார் திறப்பது ஒரு ராஜபாட்டை...எங்களுக்கோ கொழுத்த வாசிப்பு வேட்டை...காத்திருக்கிறோம்...உங்கள் எம்.ஜி.ஆர்.!!!

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI June 2, 2017 at 2:26 PM

   வாங்கோ சின்ன வாத்யாரே, வணக்கம்.

   //வானவில் மனிதரின் 'பொன்வீதி'க்கு நூல் மதிப்புரை... வானவில் என்றுமே எனது மனதுக்கு நெருக்கம்... வாத்தியார் திறப்பது ஒரு ராஜபாட்டை... எங்களுக்கோ கொழுத்த வாசிப்பு வேட்டை... காத்திருக்கிறோம்... உங்கள் எம்.ஜி.ஆர்.!!!//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தனித்தன்மை வாய்ந்த அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அடுத்த ஏழே ஏழு பதிவுகளுக்கும் 15.06.2017 வரை மட்டுமாவது தொடர்ந்து வாருங்கள் ஸ்வாமீ.

   அன்புடன் VGK

   Delete
  2. RAVIJI RAVI June 2, 2017 at 3:21 PM

   //I am waiting...//

   Good ..... My Dear. As usual you may watch my Posts in midnight at 00.15 Hrs. (IST) in between 2nd & 3rd, 4th & 5th, 6th & 7th, 8th & 9th, 10th & 11th, 12th & 13th, 14th & 15th of this month.

   Accordingly .... Tonight you may expect. :) - vgk

   Delete
  3. அன்பின் ராஜிவி சார்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.தொடருங்கள்.

   Delete
 25. அறிமுகம் அட்டகாசம். பலாப்பழத்தை நாடி ஈக்கள் வருவது போல் மோகன் ஜியின் கதைகளை நாடி வாசகர்கள் வருவது ஆச்சரியமே இல்லை! என்னை மிகவும் கவர்ந்த கதை அவர் வலைத்தளத்தில் வந்த "பாண்டு!" இதன் மூலம் தான் அவர் தளத்திற்கு முதல் முதல் சென்றேன் என நினைக்கிறேன். மற்றவற்றையும் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam June 3, 2017 at 6:36 PM

   //அறிமுகம் அட்டகாசம். பலாப்பழத்தை நாடி ஈக்கள் வருவது போல் மோகன் ஜியின் கதைகளை நாடி வாசகர்கள் வருவது ஆச்சரியமே இல்லை! என்னை மிகவும் கவர்ந்த கதை அவர் வலைத்தளத்தில் வந்த "பாண்டு!" இதன் மூலம் தான் அவர் தளத்திற்கு முதல் முதல் சென்றேன் என நினைக்கிறேன். மற்றவற்றையும் படிக்க வேண்டும்.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
  2. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அக்கா! புத்தகம் தான் அனுப்பியிருக்கிறேனே. படியுங்கள்.

   Delete
 26. //48 மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த பதிவுகள் தொடர்ந்து வெளியாகும்//

  நீங்க நடத்துங்க. பின்னூட்டம் போடவே நெரத்த காணும். இவரு பதிவா போட்டு தள்ளறாரு. வலைத்தள எழுத்தாளர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களால்.

  எழுத்தாளர் மோகன் ஜிக்கும்
  விமர்சக வித்தகர் கோபு அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya June 12, 2017 at 7:54 PM

   வாங்கோ ஜெயா, வணக்கங்கள். உங்களைக் காணுமேன்னு ஒரேயடியாகக் கண்கலங்கிப் போயிட்டேன். :(

   நல்லவேளையா வந்துட்டேள். :)

   **48 மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த பதிவுகள் தொடர்ந்து வெளியாகும்**

   //நீங்க நடத்துங்க. பின்னூட்டம் போடவே நேரத்தக் காணும். இவரு பதிவா போட்டு தள்ளறாரு.//

   அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும்ன்னு சொல்லுவாங்களே, ஜெயா.

   //வலைத்தள எழுத்தாளர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களால்.//

   ஏதோ இன்னும் நாலு நாட்களுக்கு மட்டுமே. பொறுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

   //எழுத்தாளர் மோகன் ஜிக்கும் விமர்சக வித்தகர் கோபு அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   Delete
  2. ஜெயந்தி ஜெயா மேடம்,
   உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
   //"விமர்சக வித்தகர் கோபு அண்ணா!"//
   ஆஹா! பொருத்தமான பட்டம் கோபு சாருக்கு!! சபாஷ்.
   இந்தப் பட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என்பதை தெரியப் படுத்துகிறேன்.

   Delete
 27. வானவில் எப்போதாவது தோன்றினாலும் ஏழு நிறங்களையும் கண் கொட்டாமல் ரசித்து மகிழ முடியுமே..... மோஹன்ஜியினை அறிமுகப்படுத்தி இருந்த விதம் அட்டகாசம்.. அதையும் விட. பின்னூட்டங்கள் ரிப்ளை பின்னூட்டங்கள் செம. ரகளை..

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... June 13, 2017 at 12:50 PM

   வாங்கோ .... வாங்கோ. வணக்கம். அமைதிப்புறாவினையும் அவரின் ஒருசில நண்பர்களையும் நீண்ட நாட்களாக நான் இங்கு பார்க்கவே முடியவில்லை. :(

   //வானவில் எப்போதாவது தோன்றினாலும் ஏழு நிறங்களையும் கண் கொட்டாமல் ரசித்து மகிழ முடியுமே..... மோஹன்ஜியினை அறிமுகப்படுத்தி இருந்த விதம் அட்டகாசம்.. அதையும் விட. பின்னூட்டங்கள் ரிப்ளை பின்னூட்டங்கள் செம. ரகளை..//

   ஏதோ நீங்க பார்த்துச் சொன்னால் சரி. முதல் பகுதிக்கு மட்டுமே வந்து எட்டிப்பார்த்துவிட்டு, பறந்துட்டால் எப்படி? வரிசையாக எட்டுப்பகுதிக்கும் எட்டிப்பாருங்கோ.

   Delete
  2. ஆல். ஈஸ் வெல் என்ற முற்போக்கான பெயர் அழகாயிருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி. ஏனைய பதிவுகளையும் பாருங்கள்.

   Delete
 28. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்துள்ளேன் கோபு சார்.. இனி தொடர்ந்து தங்கள் பதிவுகளை வாசித்துக் கருத்திடுவேன். முதலில் மோகன்ஜி குறித்த இப்பதிவுதான் வாசித்தேன். என்னவொரு அபாரமான மனிதர். அவரது பதிவுகளின் வழியே அவரை சிறிதளவே அறிந்திருந்த எனக்கு இங்கு தங்கள் அறிமுகம் வழியே பெரிதும் அறிந்துகொள்ள முடிந்தது. சில கதைகள் வாசித்திருக்கிறேன் என்றாலும் இங்கே தங்கள் விமர்சனம் வாயிலாக அவரது படைப்புகள் பற்றி அறிய ஆவல். தொடர்ந்து வருவேன். நன்றி கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி July 3, 2017 at 5:49 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்துள்ளேன் கோபு சார்..//

   தெரியும். நீண்ட நாட்களாகவே உங்களைக் காணுமே என நினைத்துக்கொண்டேன் ..... இதற்கு முன்பு எழுதி நான் வெளியிட்டுள்ள ஏழு பகுதிகள் கொண்ட மின்னூல்கள் பற்றிய ஒரு சின்னத் தொடருக்கும் தாங்கள் வரவில்லை என்பதால்.

   //இனி தொடர்ந்து தங்கள் பதிவுகளை வாசித்துக் கருத்திடுவேன்.//

   இனி தங்களுக்கு அதிகமாக அந்த சிரமம் என் மூலம் + என் பதிவுகள் மூலம் இருக்காது என நான் நினைக்கிறேன்.

   //முதலில் மோகன்ஜி குறித்த இப்பதிவுதான் வாசித்தேன். என்னவொரு அபாரமான மனிதர். அவரது பதிவுகளின் வழியே அவரை சிறிதளவே அறிந்திருந்த எனக்கு இங்கு தங்கள் அறிமுகம் வழியே பெரிதும் அறிந்துகொள்ள முடிந்தது. சில கதைகள் வாசித்திருக்கிறேன் என்றாலும் இங்கே தங்கள் விமர்சனம் வாயிலாக அவரது படைப்புகள் பற்றி அறிய ஆவல். தொடர்ந்து வருவேன். நன்றி கோபு சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆவலுடன் கூடிய இந்த ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
  2. கீதமஞ்சரி ! உங்கள் வருகை சந்தோஷம். உங்கள் கருத்து இல்லாமல் என் பதிவுகள் இருந்ததில்லை. ////அபாரமான மனிதர் .//
   நான் நல்ல மனிதனாக இருக்க முயன்று வரும் ஒரு சாதாரணன் மட்டுமே கீதா!

   Delete