என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

GOOD MORNING ! + HAVE A NICE DAY !!

இனிய காலை வணக்கங்கள்!

GOOD MORNING TO ALL OF YOU!

















HAVE A VERY NICE DAY !

இந்த நாள் உங்களுக்கு
இனிய நாளாக
அமையட்டும்!!

அன்புடன்
VGK



[Thanks to Mrs. VIJI of BHEL [HRM] for sharing these pictures]

வியாழன், 11 அக்டோபர், 2012

ம ஞ் சூ [உண்மைக்கதை]


 ம ஞ் சூ


[சமோஸா வியாபாரி 
பற்றிய உண்மைக்கதை]

By 

வை. கோபாலகிருஷ்ணன்

இன்று இந்தியாவில் உள்ள சிறுசிறு வியாபாரிகளின் எண்ணிக்கைக் கணக்கில் அடங்காமல் தான் உள்ளது. சிலவிஷயங்கள் நம்மால் நம்ப முடியாமலும், ஜீரணிக்க முடியாமலும் தான் உள்ளன. ஆனால் அவைகளிலும்  சில மிகவும் சுவாரஸ்யமானவைகளாகவே உள்ளன. அதில் ஒன்றை இப்போது பார்ப்போம்.

தினமும் என் அலுவலக வேலைகள்  முடிந்ததும் சென்னை பரனூரில் ரயில் ஏறி வீடு திரும்புவது வழக்கம். அன்றும் அது போல மாலை 6.50 மணிக்கு ரயிலில் ஏறி அமர்ந்தேன். 




கூடுவாஞ்சேரி ஸ்டேஷனை விட்டு ரயில் கிளம்ப இருந்த நிலையில், அந்த சமோஸா வியாபாரி தன் காலிக்கூடையுடன் என் அருகில் வந்து அமர்ந்தார்.  

அந்த ரயிலில் பயணிகளின் கூட்டம் சற்றே அதிகம் இருந்ததாலும், நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர இன்னும் நிறைய நேரம் இருந்ததாலும், சமோஸா வியாபாரியுடன் பேச்சுக்கொடுத்தேன். பேட்டி எடுத்தேன் எனவும் வைத்துக்கொள்ளலாம். 

நான்: ”உன் பெயர் என்னப்பா?  எல்லா சமோஸாக்ககளை விற்றுத்தீர்த்து விட்டாய், போலிருக்குதே!”

வியாபாரி: [புன்னகையுடன்] ”என் பெயர் மஞ்சுநாதன். எல்லோரும் மஞ்சூ மஞ்சூ ன்னு தான் என்னைச் செல்லமாகக் கூப்பிடுறாங்க; 

ஆமாம் சார்,  கடவுள் கிருபையால் எல்லா சமோஸாவுமே இன்று விற்றுத்தீர்ந்து விட்டது.”

நான்:  ”உங்களைப்போன்றவர்களைப்பார்த்து நான் மிகவும் பரிதாபபடுவது உண்டு. தினமும் நாள் முழுவதும் ஓய்வு ஏதும் இன்றி இப்படி உழைக்கிறீங்களே;  உங்களுக்கெல்லாம் சோர்வு ஏதும் ஏற்படுவது இல்லையா? ”

மஞ்சூ:  “என்ன சார் செய்வது? இதுபோல தினமும் கஷ்டப்பட்டு உழைத்து சமோஸா விற்றால் தான், எங்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு சமோஸாவுக்கு 75 பைசா வீதம் கமிஷன் கிடைக்கும்”.  

நான்: ”ஓ .... அப்படியாப்பா! தினமும் எவ்வளவு சமோஸா நீ விற்பாய்?”

மஞ்சூ: ”வியாபாரம் ஜரூரான நாட்களில் தினம் 3000 முதல் 3500 வரை நாங்கள் ஒவ்வொருவரும் விற்க முடியும்.  வியாபாரம் டல்லடிக்கும் நாட்களில் 1000 சமோஸாக்களை நாங்கள் ஒவ்வொருவரும் விற்றாலே அது மிகப்பெரிய விஷயம். சராசரியாக ஒவ்வொருநாளும் எங்களைப் போன்ற ஒவ்வொருவரும் 2000 சமோஸா வீதம் மிகச்சுலபமாக விற்கமுடியும், சார்.”





அடுத்த சில நொடிகளுக்கு நான் வாயடைத்துப்போனேன்.   மனதுக்குள் கணக்குப்போட்டேன். 

தினமும் 2000 சமோஸாக்கள், ஒரு சமோஸாவுக்கு 75 பைசா கமிஷன் என்றால் தினமும் இவன் வருமானம் ரூபாய் 1500. 

அப்படியானால் மாத வருமானம் 45000 ரூபாய். 

மாதம் ஒன்றுக்கு இந்த சமோஸா வியாபாரி மஞ்சூக்கு மட்டும் ரூபாய் 45000 வீதம் வருமானம். 

இப்போது நான் என்பேட்டியை ஒரு பொழுதுபோக்குக்கு மட்டும் ஏனோ தானோ என நினைக்காமல் மிகவும் படு சீரியஸ் ஆக ஆர்வத்துடன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். 

நான்: ”நீங்களே சொந்தமாக சமோஸா தயாரிக்கிறீர்களா?” 

மஞ்சூ: ”இல்லீங்க சார்; எங்க முதலாளி சமோஸா தயாரிக்கும் ஃபாக்டரியிலிருந்து மொத்தமாக வாங்கி எங்களிடம் தந்து விடுவார். நாங்கள் அதை விற்பதோடு சரி; 

விற்ற பணத்தை அவரிடம் அன்றாடம் அப்படியே ஒப்படைத்து விடுவோம். அவர் நாங்கள் விற்பனை செய்த எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சமோஸாவுக்கு 75 பைசா வீதம் எங்களுக்கு தந்து விடுவார்”.  

என்னால் மேற்கொண்டு அவரிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல்,  நான் ஸ்தம்பித்துப்போன போது அவரே தொடர்ந்து பேசலானார். 

மஞ்சூ: ”ஆனா ஒண்ணு சார்; நாங்கள் இதுபோல உழைச்சு சம்பாதிக்கிறதுலே பெரும்பகுதி தினமும் நாங்க சாப்பிட்டு உயிர் வாழவே சரியாப்போயிடுது சார். மீதி சேமிக்குற சொற்பத் தொகையிலேயே தான் எங்களின் மத்த பிஸிநெஸ்ஸை நாங்க கவனிக்க வேண்டியதாக உள்ளது, சார்”.  

நான்: ”மத்த பிஸிநெஸ்ஸா? என்னப்பா அது? ”

மஞ்சூ: ”அது தான் சாரே, ரியல் எஸ்டேட்டுன்னு சொல்றாங்களே, அதாவது நிலத்தை வாங்குவது விற்பது போன்றவைகள் சார்; 

2007 இல் விருப்பாக்கம் என்ற இடத்திலே ஒரு ஒண்ணரை ஏக்கர் மூணு லட்சம் ரூபாய்க்கு வாங்கிப்போட்டேன் சார்;  

ஒரு மாஸம் முன்னாடி அதை பதினைந்து லட்சத்திற்கு வித்துப்போட்டேன் சார்;  

இப்போ உத்தமமேரூரிலே ஒரு அஞ்சு லட்சம் போட்டு ஒரு நிலம் வாங்கியிருக்கேன், சார்”.  

நான்: ”மீதிப்பணத்தை என்ன பண்ணினீங்க?”

மஞ்சூ: ”மீதிப்பணத்திலே ஒரு ஆறு லட்சத்தை என் மகள் கல்யாணத்துக்குன்னு ஒதிக்கி வச்சுப்புட்டேன் சார்.  மீதி நாலு லட்சத்தை பேங்கில டெபாஸிட்டா போட்டுட்டேன் சார்.”

நான்: ”நீ எவ்வளவுப்பா ....... படிச்சிருக்கே?”

மஞ்சூ: ” நானு மூணாம் கிளாஸ் வரைதானுங்க ஐயா படிச்சிருக்கேன். நாலாவது போகும் போது என் படிப்பை நானே நிறுத்திப்புட்டேன், சார்; 

ஆனாக்க எனக்கு நல்லா எழுதப்படிக்கத் தெரியும் சார்;  


சார், உங்களைப் போலவே நிறைய பேரு நல்லா டிப்-டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு, கழுத்திலே ஜோரா ‘டை’ கட்டிக்கிட்டு,  ஜம்முனு ஷூ போட்டுக்கிட்டு, சரமாரியா அழகா இங்கிலீஷ் பேசிக்கிட்டு, ஏ.ஸி. ரூமிலே வேலை பார்க்கிறீங்க;.  


ஆனாக்க அழுக்கு ஆடையை அணிந்து கிட்டு, வெயிலிலே வேர்த்து வழிய சமோஸா விற்கும் எங்கள் அளவுக்குக்கூட படிச்ச நீங்க ஒண்ணும் பெரிசா சம்பாதிப்பதாக எனக்குத் தெரியவில்லை சார்; 


மாதக்கடைசியானாக்க, உங்களைப்போல உத்யோகஸ்தர்கள் என்னிடம் சமோஸாவைக் கடன் சொல்லி வாங்கிட்டுப்போறாங்க, சார்.  ரொம்பப் பழக்கமான சில பேரு என்கிட்டே, கைமாத்தாக பணம் கூட கடனாகக் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க, சார். 


இந்த மஞ்சூவின் இப்படிப்பட்டப் பேச்சுக்கு நான் என்ன பதில் சொல்வது என்றே எனக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை.

நான் மிகப்பெரியதொரு கோடீஸ்வரரான தொழிலதிபரைத் தான் இவ்வளவு நேரம் பேட்டி கண்டுள்ளேன் என்பதை மட்டும் உணர முடிந்தது. 

நாங்கள் சேர்ந்து பயணம் செய்த ரயில் இப்போது குரோம்பேட்டை என்ற ஸ்டேஷனை நெருங்க ஆரம்பித்தது. சமோஸா வியாபாரி மஞ்சூ தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டார். 




மஞ்சூ:  ”சார், நானு இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்திடுச்சு. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். நான் போயிட்டு வாரேன், சார்” 

நான்: ”நல்லதுங்க மஞ்சூ, போய் வாருங்கள்” 

[நான் வேறென்ன சொல்ல முடியும் அவரிட்ம்?] 

எனக்கும் மாதம் 60000 ரூபாய் சம்பளம் வருகிறது. வீட்டு லோன், கார் லோன், அந்த லோன், இந்த லோன்னு போட்டாச்சு. வருமானவரிப் பிடித்தமெல்லாம் போக கையில் வாங்குவதோ ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி”  ன்னு இருக்கு. 

கார் லோன் போட்டு ஆசையாகக் கார் வாங்கினேன்.  பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதை ஓட்டாமல் வீட்டு வாசலில் போத்தி வைத்துவிட்டு, ரயிலிலேயே பயணம் செய்கிறேன். 

கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப்போய்த்தான் கழட்டணும். என்னடா வாழ்க்கை இதுன்னு வெறுத்துப்போய் உள்ளேன். 

என்னைவிட பள்ளிப் படிப்பே படிக்காத அந்த அழுக்கு வேட்டி அழுக்குச்சட்டையுடன் சமோஸா விற்கும் வியாபாரி மஞ்சூ நல்ல அதிர்ஷ்டக்காரர் என்றும் அவர் வாழ்க்கைத்தரம் என் வாழ்க்கைத்தரத்தை விட மிகவும் சிறப்பாகவே உள்ளது, எனவும் நான் நினைத்துக்கொண்டேன்..




oooooooo
முற்றும்
oooooooo


பின் குறிப்பு: 

இது யாரோ ஒருவருக்கு சமீபத்தில் இரயிலில் ஏற்பட்ட அனுபவம். 

இதைப்பற்றி தனக்கு ஆங்கிலத்தில் வந்திருந்த மின்னஞ்சலை, இன்று மாலை, என்னுடைய BHEL தோழி ஒருவர் எனக்கு டெல்லியிலிருந்து FORWARD செய்திருந்தார்கள்.  

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உண்மைச் சம்பவம் பற்றிப்படித்ததும், வழக்கம் போல அதில்  சற்றே நகைச்சுவை கலந்து என் பாணியில் தமிழில் மொழிபெயர்த்து எழுதி, எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. 

அதனால் இந்தப்பதிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.


என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்