என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 2 ஜூலை, 2011

மலரும் நினைவுகள் - பகுதி 1 [ நல்லதொரு குடும்பம் ]
2
=
ஸ்ரீராமஜயம்
-o-o-O-o-o-


மலரும் நினைவுகள்
====================
நல்லதொரு குடும்பம்நாளை ஜூலை 3 
எங்கள் திருமண நாள்

Bye Bye to 39th Year
and
Welcome to 40th Year 
of our Happy Married Life.இனிய நினைவுகளை ஈட்டுத்தரும் 
ஒருசில புகைப்படங்கள்
 நான் வளர்ந்து, படித்து, உத்யோகம் பார்த்து, பணி ஓய்வு பெற்று, பதிவுகள் எழுதி மனநிம்மதியுடன் வாழ்ந்துவரும் எனக்குப்பிடித்தமான 


எங்கள் ஊர்: திருச்சிராப்பள்ளி


புண்ணிய நதியாம் காவிரியுடன் 
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் தரிஸனம்.

-o-o-o-o-o-o-


எங்கள் திருமண நாள் : 03.07.1972 
-o-o-o-o-o-


03.07.1972 எடுக்கப்பட்ட மேலேயுள்ள கருப்பு வெள்ளைப்புகைப்படம் 
பிறகு கலர் ப்ரிண்ட்டிங் செய்யப்பட்டது.

-o-o-o-o-o-

05.12.2009 சஷ்டியப்தபூர்த்தி நடைபெற்றது.
[விரோதி வருஷம் கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திரம்]

-o-o-o-o-o-

மூத்த பிள்ளையும் மருமகளும் 02.05.1998 - 03.05.1998

-o-o-o-o-o-


இரண்டாவது பிள்ளையும் மருமகளும் 30.10.2002  - 31.10.2002

-o-o-o-o-o-


மூன்றாவது பிள்ளையும் மருமகளும் 30.06.2009 - 01-07.2009

-o-o-o-o-o-


05.12.2009 அன்று எடுக்கப்பட்ட குடும்ப க்ரூப் போட்டோ

-o-o-o-o-o-


 அருமைப் பேத்தி + பேரனுடன்,  04.12.2009 அன்று

-o-o-o-o-o-


பிரபல எழுத்தாள நண்பர்களான திருவாளர்கள்: ரிஷபன், கிருஷ்ணா மற்றும் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தியுடன் 04.12.2009 அன்று.

-o-o-o-o-o-


04.12.2009 அன்று நடைபெற்ற சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா 


அன்றைய விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த 
ஒவ்வொருவருக்கும் (சுமார் 200 பேர்கள்) என்னுடைய 
முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்பு நூல்களும் அன்பளிப்பாகவே வழங்கப்பட்டன

-o-o-o-o-o-


05.12.2009 அன்று நடைபெற்ற சஷ்டியப்த பூர்த்தி விழா நிகழ்ச்சியில்

-o-o-o-o-o-


05.12.2009 சஷ்டியப்தபூர்த்தி விழாவில் ஹோமம் நடைபெறுகிறது

-o-o-o-o-o-


05.12.2009 ஜபம் செய்யப்பட்ட புனித ஜலத்தால் ஸ்நானம் செய்விக்கப்படுகிறது 

-o-o-o-o-o-05.12.2009 சஷ்டியப்த பூர்த்தியன்று, 
வாரிசுகளால் மலர்க்ரீடங்கள் வைக்கப்பட்டன

-o-o-o-o-o-
==================================================================================
8 வயதே நிறைந்துள்ள அருமைப்பேரனுக்கு 01.04.2010 அன்று உபநயனம் நடைபெற்றது.

-o-o-o-o-o-


பேரனின் சமீபத்திய சிங்கப்பூர் சுற்றுலாப் பயணத்தின் போது

-o-o-o-o-o-சமீபத்திய சிங்கப்பூர் சுற்றுலாவில் 
பஞ்சவர்ணக்கிளிகளுடன் எங்கள் வாரிசுக்கிளிகளும்

-o-o-o-o-o-


சமீபத்தில் 24.04.2011 அன்று பிறந்துள்ள 
குட்டிப்பேரன் “அநிருத்” என்கிற நாராயணனின்
புதிய வரவு குடும்பத்திலுள்ளவர்களைக் குதூகலப்படுத்தியுள்ளது.

-o-o-o-o-o-


குட்டிப்பயல் ”அநிருத்”குட்டியூண்டு பயலை தாத்தா குதூகுலத்துடன் தூக்கி மகிழ்ந்தபோது

-ooooo============================================================================ooooo-


சுபம்


மேலேயுள்ள இந்தப்படத்தினை வடிவமைத்து மின்னஞ்சம் மூலம் 
12.05.2013 அக்ஷய திருதியை யன்று அனுப்பியுள்ளவர்: 
திரு. பட்டாபி ராமன் அவர்கள்
vijayakoti33@gmail.com

அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த இனிய நன்றிகள்.

 
97 கருத்துகள்:

 1. படங்கள் பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது
  தங்கள் குடும்ப விழாவினையும் குடும்ப அங்கத்தினர்களையும்
  பதிவுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது மிக்க மகிழ்சியளிக்கிறது
  தங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இதே
  மகிழ்வுடனும் பதிவுலத் தொடர்புடனும் தொடர்ந்து வாழ
  எல்லாம் வல்ல இறைவனை மனமாற வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். அதன் அறிமுகப்படல்த்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. சிங்கப்பூரில் வாரிசுக்கிளிகளுடன் போட்டியிட முடியாத பஞ்சவர்ணக்கிளிகள்...

  படத்திற்குப் பாராட்டுக்கள். வாரிசுக்கிளிகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஒரு வரலாறு புகைப்படத்தில் பிரிதிபலிக்கிறது...

  தாங்களும் தங்களுடைய குடும்பமும் இன்னும் பல்வேறு செல்வங்களும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி ஆண்டவனை வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 5. கடமைகளைச் சிறப்புற நிறைவேற்றிய பெருமித் தந்தையாக அருமையான குடும்பத்தலைவரும்,
  ஏர்பிடித்த்வன் என்ன செய்வான்? பானைபிடித்தவள் பாக்கியசாலி என்று கரம்பிடித்த அதிர்ஷ்ட தேவதையும் நலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வாரிசுகளால் மலர்க்ரீடங்கள் வைக்கப்பட்டன//

  வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. தாங்களும், தங்களின் வாரிசுகளும் இனிமையாக வாழ அந்த பரம்பொருளை வேண்டிக் கொள்ளும் உங்கள் நண்பன்..

  பதிலளிநீக்கு
 8. மனம் நிறைந்தது
  பார்க்க பார்க்க மனதில் ஒரு
  சொல்லமுடியாத திருப்தி
  வாழ்வை முழுதாய்
  இனிமையாய்
  இசையாய்
  இசைவாய்
  இயல்பாய்
  இன்பமாய்
  வாழ்ந்த
  விதமும்
  வகையும் தெரிகின்றது
  என்னில் பெரியாரை வணங்குகிறேன் வாழ்த்துபெற
  என்னில் சிறியோரை வாழ்த்துகிறேன் வளர்ச்சி பெற

  ஆசிர்வதியுங்கள் ஐயா
  இந்த இனிய நாளில்

  பதிலளிநீக்கு
 9. உங்கள் பேரப் பிள்ளைகளை பற்றி எழுதும் போதும்
  கையில் எடுத்து கொஞ்சும் போதும்
  முழு தாத்தாவாக மிளிர்கிறீர்கள் ஐயா

  குட்டி நாராயணன் அழகோ அழகு
  சுற்றி போடச்சொல்லுங்கோ

  பதிலளிநீக்கு
 10. ம‌கிழ்வான‌ திரும‌ண‌நாள் ந‌ல்வாழ்த்துக‌ள்! நாங்க‌ எல்லாம் சின்ன‌வ‌ங்க‌ இல்லையா... த‌ங்க‌ள் ஆசீர்வாத‌ம் வேண்டி வ‌ண‌ங்குகிறோம்.ந‌ல‌மும் வ‌ள‌மும் நிலைபெற்று வாழ‌ எல்லாம் வ‌ல்ல‌ ரெங்க‌னை பிரார்த்திக்கிறோம்.

  ம‌ன‌சுக்கு நிறைவா இருக்கு ஐயா... ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும். திருஷ்டி க‌ழித்துக் கொள்ளுங்க‌ள் எல்லோரும். எங்க‌ க‌ண்ணெல்லாம் நிறைய‌ ப‌ட்டுடுத்து. பேர‌ப்பிள்ளைக‌ள் அப்ப‌டியே வாரியெடுத்துக்க‌ சொல்லும் வ‌டிவு.

  பதிலளிநீக்கு
 11. உங்கள் பேரப் பிள்ளைகளை பற்றி எழுதும் போதும்
  கையில் எடுத்து கொஞ்சும் போதும்
  முழு தாத்தாவாக மிளிர்கிறீர்கள் ஐயா

  குட்டி நாராயணன் அழகோ அழகு
  சுற்றி போடச்சொல்லுங்கோ

  பதிலளிநீக்கு
 12. பகிர்வுக்கு நன்றி. வாழ்க பல்லாண்டு

  பதிலளிநீக்கு
 13. இனிய மணநாள் வாழ்த்துக்கள். குடும்ப அறிமுகப் புகைப்படங்களும் தங்கள் மனத்தைப் போலவே நிறைவாக இருந்தன. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. நல்லதொரு குடும்பம் - புகைப்படங்களுடன் இனிய இனிய கெட் டூ கேதர். Thank you sir.

  பதிலளிநீக்கு
 15. திருச்சிதானே. அடுத்த வாட்டி கும்பகோணம் வரும்போது சந்திக்க நிச்சயம் முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. படங்கள் வாழ்வின் பாடங்கள்.

  ரிஷபன் படத்தையும் ஆர்.ஆர்.ஆர். படத்தையும் ப்ளாகில் எழுதுபவர்களுக்கு அறிமுகமானவர்கள் என்கிற அளவில் பார்க்கப் பெருமை.

  அநிருத் தாத்தா போல அசப்பில்.

  சதாபிஷேகப் படங்களையும் 18 வருஷத்தில் சீக்கிரமாகப் போடவும்.

  பதிலளிநீக்கு
 17. இனிய திருமண நாள் வாழ்த்துகள். படங்களைப் போட்டு அசத்தி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படத்திலும், இன்னும் முக நூலில் ஓரிரு படங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேன்.

   உங்கள் ஊர்க்காரர்...
   உங்கள் அலுவலகத்துக்காரர்..
   உங்கள் மனதுக்கினியவர்..
   உங்களுக்கு அப்புறம்தானே வைகோ ஸார் நாங்கள் எல்லாம்...!​

   நீக்கு

  2. வாங்கோ ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ !

   //இந்தப் படத்திலும், இன்னும் முக நூலில் ஓரிரு படங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேன்.//

   ஆஹா .... அவரை நீங்களும் பார்த்து விட்டீர்களா?

   ஆமாம் .... எவரை? ஓஹோ .. அவரையா .. சரி, சரி. :) எனக்குப் புரிந்து விட்டது.

   //உங்களுக்கு அப்புறம்தானே வைகோ ஸார் நாங்கள் எல்லாம்...!​//

   அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவரை நானே இப்போதெல்லாம் ‘எங்கள் ப்ளாக்’கில் மட்டுமே பார்க்க முடிகிறது. :)))))

   ஒரேயடியாகக் குத்தகைக்கு எடுத்து விட்டீர்கள் போலிருக்குது. எனினும் மிக்க மகிழ்ச்சியே. :)

   அன்புடன் கோபு

   நீக்கு
 18. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"

  அனுபவ பாடங்கள் நிறைந்த குடும்ப வாழ்வு
  குதூகலமானதும் கூட.தாங்கள் என்னை வாழ்த்த வணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 19. அது எப்படி.. இத்தனை இனிப்பும் கொஞ்சங்கூட திகட்டவில்லை..
  உங்கள் நினைவுகளைத்தான் சொல்கிறேன்..

  பதிலளிநீக்கு
 20. உங்கள் குடும்பத்தினர்களைக் கண்டுகொண்டோம் மகிழ்ச்சி.

  குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. சுவையான நினைவுகள்…. அட உங்கள் கல்யாணத்திற்கு ஆறு நாட்கள் முன் தான் நானும் ஜனித்தேன்…. படங்கள் எல்லாம் பார்க்கப் பார்க்க ஆனந்தம். படத்திற்கான உங்கள் விவரமும் அருமை…. குட்டி நாராயணன் க்யூட்….

  பதிலளிநீக்கு
 22. அன்பின் வை.கோ - அழகான படங்கள் - மலரும் நினைவுகளாய் - தங்கள் திரும்ணத்தில் இருந்து - புது வரவான அநிருத் வரை - பதிவாகப் போடும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும். நல்லதோர் குடும்பம் ஓர் பல்கலைக் கழகம் என்பதற்கு தங்கள் குடும்பமே சான்று. நன்று நன்று - நல்வாழ்த்துகள் தங்களுக்கும் - குடும்பத்தில் உள்ள அனைவருக்கும். நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சீனா ஐயா, வாருங்கள். வணக்கம்.

   தாமதமான பதிலுக்கு முதலில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

   இது என் 101 ஆவது பதிவு என்று ஞாபகம். இதற்கு முன்பு வெளியிட்டுள்ள என் 100 பதிவுகளிலும், எந்தப்படமுமே என்னால் இணைக்கப்பட்டிருக்காது, ஐயா. ஏனென்றால் எனக்கு படங்களை எப்படி இணைக்க வேண்டும் என்றே தெரியாமல் தான் 2011 ஜூன் மாதம் வரை இருந்து வந்தேன். பிறகு என் கைக்குழந்தை [வயது இப்போது 30] அவற்றை எவ்வாறு இணைக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து விட்டுப்போனது. ஆசையில் நானும் ஏராளமான படங்களை இணைத்து விட்டேன். பிறகு வெளியிடும் போது அவை வெளியாக மறுத்து விட்டன.

   பிறகு அந்த “மலரும் நினைவுகள்” என்ற ஒரே பதிவினை பகுதி 1 முதல் 6 வரை பிரித்து வெளியிட நேர்ந்தது. இதன்பிறகு அடுத்தடுத்து 6 பகுதிகள், அன்று ஒரே நாளில் பல்வேறு படங்களுடன் வெளியிட்டு இருப்பேன் பாருங்கோ.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   [இதுபோன்று கணினியுடன் எனக்கு அன்று ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்பப் பிரச்சனைகளாலும், என் அறியாமையினாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிவினிலும் என்னால் பதில் அளிக்க முடியாமல் போய் விட்டது என்பதே உண்மை, ஐயா. தயவுசெய்து அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.]

   நீக்கு
 23. "பல்கலைக்கழகத்தின்" நல்லதொரு குடும்பம். காணும்போதே நெஞ்சம் நெகிழ்கிறது VGK சார்...!

  பதிலளிநீக்கு
 24. iam delighted to see the snaps of your family..thank you for sending the links..may God bless you and your entire family..

  பதிலளிநீக்கு
 25. Leelagovind said...
  //iam delighted to see the snaps of your family..thank you for sending the links..may God bless you and your entire family..//

  Madam, Thanks for your kind visit to this post & for your valuable comments also.

  Thanks a Lot, Madam.

  vgk

  பதிலளிநீக்கு
 26. அன்புள்ள வை.கோ., ஸார்,
  இன்னிக்குதான் இந்த இணைப்பைப் பார்த்தேன். உங்கள் குடும்பத்தவரின் அறிமுகம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்.'நல்லதொரு குடும்பம்' என்று அழகாக பெயர் இட்டிருக்கிறீர்கள். பொறுத்தமான பெயர் தான்.
  திருமணத்தில் இருந்து ஆரம்பித்து இன்று வரை புகைப்படங்களைப் பார்த்ததில் உங்கள் மலரும் நினைவுகள் அழகாக மணம் வீசிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் மேலும் இதேபோல் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் வாழ்வில் வந்துகொண்டே இருக்கட்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
  அன்புடன்
  ரஞ்ஜனி

  பதிலளிநீக்கு
 27. அன்புள்ள திருமதி. ranjaninarayanan Madam,

  WELCOME TO YOU!

  வாங்க ... வணக்கம்.

  தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் என்னை மகிழ்விக்கின்றன.

  தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 28. ஐயா நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு எடுத்துக்காட்டு தங்கள் குடும்பம் .....

  பதிலளிநீக்கு
 29. ஐயா உங்களுடைய திருமண நாள் ஜூலை 3 வணங்குகிறேன் ....தாமதத்திற்கு வருந்துகிறேன்... இந்த பதிவை எனக்கு கொஞ்சம் முதலில் அனுப்பி இருந்தால் நான் மிகுந்த சந்தோஷம் கொண்டுஇருப்பேன் .....
  ஆமாம் ஐயா என்னுடைய திருமண நாள் ஜூலை 6 நானும் உங்களிடம் ஆசிர்வாதம் பெற்றிருக்கலாம் .....

  பதிலளிநீக்கு
 30. நல்ல அழகான குடும்பம் .... அன்பான மனைவி... பாசமான பிள்ளைகள் ...அதற்கும் மேலாக பெயர் சொல்லும் வாரிசுகள் .....அனைவரும் வாழ்க வாழ்க என நான் ஆண்டவனை வேண்டுகிறேன் ...

  பதிலளிநீக்கு
 31. ஐயா உங்கள் கும்பத்தைப் பார்த்து என்கண்ணுபட்டு விட்டது.... அம்மாவிடம் சொல்லி சுற்றிபோடுங்கள்.... ம்ம்மம்மம்ம்ம்ம் ஹிஹிஹிஹிஹி...........
  குழந்தைகள் மூன்றுபேரும் அழகாக இருக்கின்றனர் .... வாழ்க வளமுடன் என்று சொல்ல வயதில்லை என்றாலும் வணங்குகிறேன் ஐயா....

  அருமையான தங்கள் மலரும் நினைவுகளை எனக்கு அனுப்பியதற்கு மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 32. அன்புள்ளம் கொண்ட Mrs. VijiParthiban Madam,

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக நான்கு முறைகள் வந்து கருத்துக்கள் கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ஜூலை 6 தங்களின் இனிய திருமண நாள் என்பதையும் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. மனதார வாழ்த்துகிறோம். தங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று மிகச்சிறப்பாக நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 33. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா...மிக்க மகிழ்ச்சி எனக்கு....

  பதிலளிநீக்கு
 34. புகைப்படங்கள் பேசுமா???

  பேசுகிறதே.. மகிழ்வை, நினைவுகளை, சந்தோஷங்களை, கொண்டாட்டங்களை சொல்லி சொல்லிமகிழ்கிறதே.... உச்சிப்பிள்ளையார் கோயிலில் தொடங்கி......நீண்ட பயணம் உங்க வீட்டுக்கு வருமுன் தங்கள் பணி செய்த இடமும், பணியில் இருந்து ஓய்வு ????? பெற்றதையும் பதிவுலகத்தின் பிரவேசமும்....

  அப்படியே கொஞ்ச வருடங்களுக்கு முன் போனால்... ஆஹா என்னது இது அழகிய அமைதி ததும்பும் களையான மஹாலஷ்மியாக அண்ணியும் அட யாரது இது அண்ணாவா இது??என்ன ஒரு கம்பீரம் மிடுக்கு....

  நிறைவான 40 வருடங்கள் அன்பு துளியும் குறையாத வாழ்க்கையை இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தம்பதியரின் முகத்தில் முதுமையின் சாயல் வந்தாலும்..... உடல் தளர்ந்தாலும்..... மனம் தளராமல்...அட மழலைகளின் சிரிப்பை முகத்தில் தேக்கிக்கொண்டு....

  பிரம்மாண்டமாக சஷ்டியப்த பூர்த்தி.....சீதா கல்யாண வைபோகமே... ராமா கல்யாண வைபோகமே... மூன்று மக்களைப்பெற்று வளர்த்து நல்ல கல்வி தந்து ஒழுக்கத்தை போதித்து அவர்களுக்கு திருமணம் செய்வித்து குழந்தைகள் சூழ குடும்பம் அமைத்துக்கொடுத்த பெருமிதமும் மனநிறைவும் முழுதாய் காண முடிகிறது ஸ்வீட் தம்பதிகளே...

  பிள்ளைகளும் மருமகப்பிள்ளைகளுடனும் பேரன் பேத்திகளுடனும் லேட்டஸ்ட் வரவான அநிருத் என்கிற நாராயணன் வரைக்கும் ஆஹா ஆஹா... பார்த்துக்கொண்டே இருக்கிறேனே கண் திருஷ்டி பட்டுவிடுமோ என்று பயமாக வேறு இருக்கிறது....

  திருஷ்டி சுற்றி போடச்சொல்லுங்கோ அண்ணா அண்ணியிடம் சொல்லி....

  பஞ்சவர்ணகிளிகளுடன் வாரிசுகிளிகளைப்பற்றி பஞ்ச் அடிக்கும் அண்ணாக்கிளியின் சொல்லாடலை பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை....

  அட ரிஷபன், கிருஷ்ணா ஆரண்யநிவாஸ் சார் இவர்களும் உங்களுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டதை பார்க்கும்போது அடடா நாமளும் அங்கே இருந்திருந்தால் சஷ்டியப்த பூர்த்திக்கு வந்து இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி இருந்திருக்கலாமேன்னு தோன்றது அண்ணா....

  சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நூல் விழாவில் பங்கேற்ற 200 பேருக்கும் புத்தகம் அன்பளிப்பாகவே வழங்கப்பட்டது உங்க அன்பு மனதை தான் காட்டுகிறது அண்ணா.. அன்பு வாழ்த்துகள் அண்ணா...

  ஹோமம், புனிதஜல ஸ்நானம், மலர்க்ரீடம் ஆஹா திவ்யம் திவ்யம்.... பார்க்க பார்க்க கண்ணும் மனமும் நிறைகிறது.... ஆசீர்வதிங்கோ எங்களை ரெண்டு பேரும்....

  பேரனின் உபநயனத்தில் பேரனை தூக்கி வெச்சுண்டேளே என்ன ஒரு வாத்ஸல்யம்....

  சிங்கப்பூர் பயணத்தில் எடுத்த போட்டோவில் பேரனை மட்டுமா பார்த்தோம் கப்பலையும் சேர்த்தே பார்த்தோம்.. பேரன் செம்ம சூப்பரா போட்டிருக்கும் கூலிங் க்ளாசையும் பார்த்தோமே.. என் ஆசிகள் என்றென்றும் பேரப்பிள்ளைகளுக்கு அநிருத் என்கிற நாராயணன் உள்பட....

  உங்க வாழ்க்கை பயணத்தின் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கும் அற்புத நினைவுகளை பொக்கிஷமாக காப்பதோடு எங்களோடும் பகிர்ந்துக்கொள்ள தோணித்தே... நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.... அருமை அருமை.... என்றும் நீங்களும் அண்ணியும் குடும்பத்தில் இருக்கும் அத்தனை அன்பு உறவுகளும் இதே அன்புடன் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ இறையிடம் அன்பு பிரார்த்தனைகள்....

  அன்பு நன்றிகள் அண்ணா உங்க சந்தோஷங்களை எங்களோட பகிர்ந்துக்கொண்டதற்கு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி மஞ்சு அவர்களே! வாருங்கள். வணக்கம்.

   தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும், மகிழ்ச்சி பொங்கும் எண்ணங்களும் தங்களின் இந்த மிகப்பெரிய பின்னூட்டத்திலேயே பிரதிபலிக்கின்றன.

   ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷங்கள்.

   தங்களுக்கு மட்டுமல்ல இந்த பகுதிக்கு வருகை தந்து கருத்துக்கள் கூறியுள்ள அனைத்து தோழர்கள்/தோழிகள் எல்லோருக்குமே, எங்கள் இருவரின் மனமார்ந்த ஆசிகள்.

   என்றும் அனைவர் மீதும் அளவற்ற பிரியமுள்ள,
   Mrs. VGK & VGK

   நீக்கு
 35. அன்பின் வை.கோ

  நமக்குள் பல ஒற்றுமைகள் உள்ளன - அனைத்து நிகழ்வுகளூம் ஒராண்டு பின்னால் எனக்கும் நிகழ்ந்த்திருக்கிறது. நான் ஓராண்டு இளையவன்.

  பிறந்த தேதி : 16.10.1950
  திருமணம் : 02.09.1973
  60 ஆண்டு நிறைவு மணி விழா : 19.11.2010
  39வது திருமண நாள் விழா : 02.09.2012

  ஆமாம் - 20 ஜூலை 2011 - நான் போட்ட மறுமொழிக்கு ஏன் நீங்கள் பதில் மொழி போட வில்லை ? ( உரிமையுடன் கேட்கிறேன் ).

  இரண்டிற்கும் சேர்த்து பதில் போடுங்கள்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சீனா ஐயா அவர்களே!

   வாருங்கள், வணக்கம் பல. நலம் நலமறிய ஆவல்.

   //நமக்குள் பல ஒற்றுமைகள் உள்ளன - அனைத்து நிகழ்வுகளூம் ஒராண்டு பின்னால் எனக்கும் நிகழ்ந்த்திருக்கிறது.//

   மிக்க மகிழ்ச்சி, ஐயா.

   //நான் ஓராண்டு இளையவன்//

   ஓராண்டு என்பது மிகவும் அதிகம். தாங்கள் 322 நாட்கள் மட்டுமே என்னைவிட இளையவர். ஆனாலும் உங்களுக்கு அதிகமாகவே “இளமை ஊஞ்சல் ஆடுகிறது” ;)))))

   நான் பிறந்த நாள்: 08.12.1949 என் பெயர் காரணம் என்ற பதிவினில் கூட இதைப்பற்றி மிகவும் நகைச்சுவையாகவே எழுதியுள்ளேன்.

   ஏற்கனவே படிக்காமல் இருந்தாலோ, படித்திருந்தாலோ கூட மீண்டும் படியுங்கள், ஐயா.

   இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html


   //ஆமாம் - 20 ஜூலை 2011 - நான் போட்ட மறுமொழிக்கு ஏன் நீங்கள் பதில் மொழி போட வில்லை ? ( உரிமையுடன் கேட்கிறேன் ).

   இரண்டிற்கும் சேர்த்து பதில் போடுங்கள்//

   என்னைக் கேள்விகள் கேட்க, உங்களுக்கு எப்போதுமே சகலவிதமான உரிமைகளும் உண்டு ஐயா. மகிழ்ச்சி.
   இப்போது தாமதமாகவேனும் அதற்கும் சேர்த்து பதில் அளித்து விட்டேன்.

   அதற்கான உண்மைக் காரணம் [என் அறியாமை] நகைச்சுவையாக இந்தப்பதிவினில் உள்ளது ஐயா.

   இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   என்றும் தங்கள் மீது தனிப்பிரியமுள்ள,
   VGK


   நீக்கு
 36. நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டிநிற்கும்
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 37. நல்லதொரு குடும்ப விழாக்களையும் குடும்பத்தினரையும் அறிமுகபடுத்திய விதம் அழகு.
  உங்கள் மலரும் இனிய நினைவுகளை நாங்களும் கண்டு களித்தோம்.
  மஞ்சுபாஷிணிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. அன்புள்ள கோமதி அரசு மேடம், வாருங்கள், வணக்கம்.

  //நல்லதொரு குடும்ப விழாக்களையும் குடும்பத்தினரையும் அறிமுகபடுத்திய விதம் அழகு.

  உங்கள் மலரும் இனிய நினைவுகளை நாங்களும் கண்டு களித்தோம்.//

  மிகவும் சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது. நன்றி.

  //மஞ்சுபாஷிணிக்கு நன்றி.//

  எல்லோரையும் என்னுடைய பழைய பதிவுகள் பக்கம் வரவழைத்துள்ள இந்த வார [01-07/10/2012] வலைச்சர ஆசிரியர், அன்புத்தங்கை மஞ்சுவுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் இதன் மூலம் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன் தங்கள்,
  VGK

  பதிலளிநீக்கு
 39. வை.கோ. சூப்பர் பகிர்வு சார்.வலைச்சரத்தில் மஞ்சு பாஷிணிக்கு நன்றி.பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Asiya Omar October 2, 2012 11:38 AM
   வை.கோ. சூப்பர் பகிர்வு சார்.வலைச்சரத்தில் மஞ்சு பாஷிணிக்கு நன்றி.பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ்க!//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், இந்த வார [1-7/10/12]வலைச்சர ஆசிரியரும் என் அன்புத்தங்கையுமான மஞ்சுவுக்கு நன்றி கூறியுள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.

   அன்புடன் தங்கள்,
   VGK

   நீக்கு
 40. வை.கோ ஸார்.சூப்பரான பதிவு. நான் லேட்டாக வந்து பார்க்க சான்ஸ் கிடைத்தது. பல்லாண்டு நலமுடன் வாழ்க.நல்லதொரு குடும்பம். நான் எல்லா லிங்கையும் மெல்ல மெல்ல பார்த்து பதிவு போடுகிறேன். எதையும் மிஸ் செய்யாமல் பார்க்க விரும்புகிறேன். அடுத்த முறை இந்தியா வரும் போது நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இறைவன் நினைத்தால் நடக்கும்.

  பதிலளிநீக்கு
 41. Vijiskitchencreations November 2, 2012 7:31 AM
  //வை.கோ ஸார்.சூப்பரான பதிவு. நான் லேட்டாக வந்து பார்க்க சான்ஸ் கிடைத்தது. பல்லாண்டு நலமுடன் வாழ்க.நல்லதொரு குடும்பம். நான் எல்லா லிங்கையும் மெல்ல மெல்ல பார்த்து பதிவு போடுகிறேன். எதையும் மிஸ் செய்யாமல் பார்க்க விரும்புகிறேன்.//

  வாருங்கள், மேடம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

  இந்த கீழ்க்கண்ட பதிவினை மட்டும் தனியாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455

  இதில் என் அன்புத்தங்கை “மஞ்சு” [திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள்]01.10.2012 முதல் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது, என்னைப்பற்றியும் என் படைப்புகள் பலவற்றைப் பற்றியும், அருமையாகத் தேர்ந்தெடுத்து, தலைப்பு வாரியாக அழகாக இணைப்புடன் கொடுத்துள்ளார்கள். அது தங்களுக்கு என் படைப்புகளை எளிதில் அடையாளம் கண்டு படிக்க மிகவும் வசதியாக இருக்கும்.

  //அடுத்த முறை இந்தியா வரும் போது நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இறைவன் நினைத்தால் நடக்கும்.//

  மிகவும் சந்தோஷம். ப்ராப்தமும் இறை அருளும் இருந்தால் சந்திக்கலாம்.

  அன்புடன்,
  VGK

  பதிலளிநீக்கு
 42. அருமையான நிறைவான குடும்பம் சார்! தங்களது திருமணமான நாள் முதல் இன்று உங்களது குட்டிப்பேரன் வரை தாங்கள் பதிவிட்டுள்ள அனைத்து படங்களும் அழகு சார் ஏதோ சொல்லி மிளிர்வதாய்! வாழ்த்துக்கள் சார்!

  பதிலளிநீக்கு
 43. யுவராணி தமிழரசன் November 25, 2012 9:44 PM
  //அருமையான நிறைவான குடும்பம் சார்! தங்களது திருமணமான நாள் முதல் இன்று உங்களது குட்டிப்பேரன் வரை தாங்கள் பதிவிட்டுள்ள அனைத்து படங்களும் அழகு சார் ஏதோ சொல்லி மிளிர்வதாய்! வாழ்த்துக்கள் சார்!//

  வாங்கோ யுவராணி, வணக்கம்.

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 44. மலரும் நினைவுகள் முதல் பகுதியில் இணைத்துள்ள படங்கள் மூலம் உங்க குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துவிட்டேன்.மகன், மருமகள் , பேரக்குழந்தைகள் என்று ஆலமர விழுதுகள்தான்.பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் January 15, 2013 at 5:43 AM
   மலரும் நினைவுகள் முதல் பகுதியில் இணைத்துள்ள படங்கள் மூலம் உங்க குடும்பத்தினர் அனைவரையும் பார்த்து விட்டேன். மகன், மருமகள் , பேரக்குழந்தைகள் என்று ஆலமர விழுதுகள் தான். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கிறது.//

   வாங்கோ Ms. பூந்தளிர் Madam, வணக்கம்.

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 45. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

  நம்மைவிட பெரியவங்கள ஏன் வாழ்த்தக்கூடாது.
  உலகில் எல்லாவற்றையும் விட பெரிய இறைவனை வாழ்த்தவில்லையா நாம்.

  அதனால நான் உங்கள வாழ்த்தறேன். இன்னும் பலகாலம் இது போல் இன்னும் பல வயசான (உங்களுடை + உங்கள் குடும்பத்தார் புகைப்படங்களை நாங்கள் கண்டு களிக்கணும்ன்னு வாழ்த்தறேன்.

  இந்தப் புகைப்படங்களைப் பார்த்தது, உங்க பக்கத்து வீட்டுல குடியிருந்து எல்லா விசேஷங்களிலும் கலந்து கொண்டா மாதிரி இருக்கு.

  சிவாஜி கணேசனோட படம் பார்த்த மாதிரியும் இருக்கு.

  பதிலளிநீக்கு
 46. JAYANTHI RAMANI February 12, 2013 at 3:44 AM

  வாங்கோ, மேடம். வணக்கம்.. உங்களை இங்கு பார்த்தலில் எனக்கு ஒரு 20 வயது குறைந்தாற்போல உள்ளது.’)))))

  //நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

  நம்மைவிட பெரியவங்கள ஏன் வாழ்த்தக்கூடாது.?

  உலகில் எல்லாவற்றையும் விட பெரிய இறைவனை வாழ்த்தவில்லையா நாம்!!.

  அதனால நான் உங்களை வாழ்த்துகிறேன். //

  தாராளமாக யாரும் யாரையும் வாழ்த்தலாம் தான். தங்களது வாழ்த்துகள் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

  //இன்னும் பலகாலம் இது போல் இன்னும் பல வயசான உங்களுடைய + உங்கள் குடும்பத்தார் புகைப்படங்களை நாங்கள் கண்டு களிக்கணும்ன்னு வாழ்த்தறேன்.//

  மிகவும் சந்தோஷம். பிராப்தம் இருந்தால் எதுவும் நடக்கும் தான்.

  //இந்தப் புகைப்படங்களைப் பார்த்தது, உங்க பக்கத்து வீட்டுல குடியிருந்து எல்லா விசேஷங்களிலும் கலந்து கொண்டா மாதிரி இருக்கு. //

  ஹைய்யோஓஓஓஓஓ ! நீங்க எது சொன்னாலும் அது தீர்க்கமா பளீச்ச்சுன்னு தேங்காய் உடைத்தது போலவே இருக்கூஊஊஊ.

  //சிவாஜி கணேசனோட படம் பார்த்த மாதிரியும் இருக்கு.//

  வியட்நாம் வீடா? எனக்கு மிகவும் பிடித்த படம். நொடிக்கு நூறு தடவை ஏய் .... சாவித்ரி ... சாவித்ரி ... சாவித்ரி ... ன்னு, சொல்லிண்டே இருப்பார் சிவாஜி.

  நான் அந்தக்கால தீவிர சிவாஜி ரஸிகன். ஒவ்வொரு படத்தையும் 10 தடவைகளுக்கு மேல் பார்த்துடுவேன்..

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 47. படம் அம்சமாக அமைந்துவிட்டது.
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 48. Pattabi Raman May 12, 2013 at 6:59 AM

  வாங்கோ, அண்ணா, நமஸ்காரங்கள்.

  //படம் அம்சமாக அமைந்துவிட்டது. பாராட்டுக்கள்.//

  ரொம்ப சந்தோஷம்.

  இன்று 12.05.2013 அக்ஷய திருதியை புண்யதினத்தில் இதைத் தாங்கள் எனக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  தங்களின் அன்புக்கட்டளையை ஏற்று அதை இந்தப்பதிவிலேயே காட்சிப்படுத்தியுள்ளேன். மிக்க நன்றி அண்ணா.

  பிரியமுள்ள கோபு

  பதிலளிநீக்கு
 49. குருவருளும் திருவருளும்
  கொண்ட மனிதர் நீங்கள்.
  உங்களை போன்றோரை
  காண்பதேகோடி புண்ணியம்.

  வள்ளுவன் வாக்கிற்கு ஏற்றாற்போல்
  அமைந்துள்ளது உங்கள் வாழ்வு

  தொடரட்டும் இன்னும்
  மகிழ்வோடு பல்லாண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Pattabi Raman May 13, 2013 at 5:55 AM

   வாங்கோ அண்ணா, வணக்கம்.

   //குருவருளும் திருவருளும் கொண்ட மனிதர் நீங்கள். உங்களை போன்றோரை காண்பதேகோடி புண்ணியம்.//

   இது பொதுவாக என்னை தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் சொல்லும் பொதுவான கருத்து தான். மகிழ்ச்சியே. தூரத்துப்பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி என்று சொல்லுவார்கள்.

   //வள்ளுவன் வாக்கிற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது உங்கள் வாழ்வு//

   தெரிந்தோ தெரியாமலோ நீங்களாகவே எங்களை மாலையும் கழுத்துமாக என் இஷ்ட தெய்வமான தொந்திப்பிள்ளையாரின் காலடியில் கொண்டு போய் சேர்த்து விட்டீர்கள்.

   அதில் எனக்கு மிகவும் சந்தோஷமே.

   அதனால் மட்டுமே இதை நானும் ஏற்றுக்கொண்டு, தங்கள் விருப்பப்படி இந்தப்பதிவிலும் ஏற்றி விட்டேன்.

   தாமரை இலைத்தண்ணீர் போல குடும்பத்தில் பட்டும் படாமலும் ஏனோ தானோ என்று இருந்து வரும் எங்களின் ஒரே எதிர்பார்ப்பும் அதுவே.

   அதாவது நல்லபடியாக கஷ்டப்படாமல், இருவரும் சேர்ந்தே ஒரு நாள் இறைவனடி சேர்த்தல் மட்டுமே. வேறு எந்த பெரிய எதிர்பார்ப்புகளும் எங்கள் இருவருக்குமே இல்லை.

   //தொடரட்டும் இன்னும் மகிழ்வோடு பல்லாண்டு //

   ’சொந்தம் எப்போதும் தொடர்கதை தான். முடிவே இல்லாதது.’ மகிழ்வோடு என்றால் OK. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, அண்ணா.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
  2. இந்த உலகில் நாம் நம் மீது பொறாமைபடுபவர்களை கண்டுகொள்ளாமலும்,

   நம்மை சினமூட்டுபவர்களிடம்
   பொறுமையாக இருந்து நம் அகந்தையை விட்டுவிட்டு அவர்கள் சொல்வதற்கு ஆமாம் போடுதலும்,

   அந்த நேரத்தில் நம்முடைய BP எகிறாமல் பார்த்துகொள்வதும்

   நம்மை அதிகாரம் செய்பவர்களிடமிருந்து விலகி நிற்றலும்.

   யாரிடமும் எதற்கும் எதிர்பாராது நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதலும்,

   அனாவசியமாக பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும்.,

   நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வதும்
   செய்தபின் அவர்களிடம் நன்றி எதிர்பாராமல் இருப்பதும்.

   தவளைபோல் தேவையில்லாமல் வாயை திறந்து ஆலோசனை சொல்ல போய் வம்பில்மாட்டிகொள்ளாமல் இருப்பதும்.

   எல்லோருக்கும் ஐஸ் வைப்பதும்,

   எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே நினைத்துகொண்டு எல்லாம் அவன் செயல் என்று இருப்பதும்

   நமக்கு வரும் துன்பங்களை குறைக்கும்.

   நீக்கு
 50. Pattabi Raman May 14, 2013 at 11:47 PM

  வாங்கோ அண்ணா, நமஸ்காரம். வணக்கம்.

  //இந்த உலகில் நாம் நம் மீது பொறாமைபடுபவர்களை கண்டுகொள்ளாமலும், நம்மை சினமூட்டுபவர்களிடம்
  பொறுமையாக இருந்து நம் அகந்தையை விட்டுவிட்டு அவர்கள் சொல்வதற்கு ஆமாம் போடுதலும், அந்த நேரத்தில் நம்முடைய BP எகிறாமல் பார்த்துகொள்வதும், நம்மை அதிகாரம் செய்பவர்களிடமிருந்து விலகி நிற்றலும்.யாரிடமும் எதற்கும் எதிர்பாராது நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதலும், அனாவசியமாக பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும், நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வதும் செய்தபின் அவர்களிடம் நன்றி எதிர்பாராமல் இருப்பதும், தவளைபோல் தேவையில்லாமல் வாயை திறந்து ஆலோசனை சொல்ல போய் வம்பில்மாட்டிகொள்ளாமல் இருப்பதும். எல்லோருக்கும் ஐஸ் வைப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே நினைத்துகொண்டு எல்லாம் அவன் செயல் என்று இருப்பதும் நமக்கு வரும் துன்பங்களை குறைக்கும்.//

  அனைத்தையும் மிகவும் தெளிவாகபும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள். இவற்றில் பெரும்பாலானவற்றை நானும் இதுவரை அப்படியே தான் பின்பற்றி வருகிறேன். ஆத்மார்த்தமான ஆலோசனைகளுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், அண்ணா.

  பதிலளிநீக்கு
 51. How I missed the post? I dont know. But happy viewing now.
  Really lucky to have such a nice family.
  Let Periyavas anugragam be with you and your family Sir.
  viji

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. viji July 4, 2013 at 12:36 AM

   //How I missed the post? I dont know. But happy viewing now. Really lucky to have such a nice family. Let Periyavas anugragam be with you and your family Sir.
   viji//

   வாங்கோ திருமதி விஜி மேடம், சந்தோஷம். மிக்க நன்றி.

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹம் நம் எல்லோரையும் எப்போதும் காப்பாற்றும். கவலை வேண்டாம். வாழ்க! வாழ்த்துகள்.

   நீக்கு
 52. Very very nice pictures, I felt as though I was present during the occasion, three sons, lovely grand son and grand daughter... very very beautiful family. I love the cute anirudh baby photo. Beautiful, beautiful clicks... flower kireedam vah reh vah...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Priya Anandakumar August 15, 2013 at 2:14 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //Very very nice pictures, I felt as though I was present during the occasion, three sons, lovely grand son and grand daughter... very very beautiful family. I love the cute anirudh baby photo. Beautiful, beautiful clicks... flower kireedam vah reh vah...//

   தங்களின் அன்பான வருகைக்கும், மிக அழகான ரசனைக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் கோபு

   நீக்கு
 53. இன்று நானும் உங்களின் குடும்பப் படங்களையும்... 40 ம் கல்யாணவிழாவையும் பார்த்துவிட்டேனாக்கும்... எல்லாமே நன்று,, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira October 4, 2013 at 11:23 AM

   வாங்கோ அதிரா .... வணக்கம்.

   //இன்று நானும் உங்களின் குடும்பப் படங்களையும்... 40 ம் கல்யாணவிழாவையும் பார்த்துவிட்டேனாக்கும்... எல்லாமே நன்று,, வாழ்த்துக்கள்.//

   மிகவும் சந்தோஷம் அதிரா. இதன் தொடர்ச்சியாக இன்னும் 5 பதிவுகள் உள்ளன அதிரா. எல்லாமே ஒரே படங்கள் மட்டுமே. முடிந்தால் பாருங்கோ அதிரா.

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.;)

   நீக்கு
 54. உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை படித்தேன்:பார்த்தேன்:ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha Balu March 3, 2014 at 10:09 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை படித்தேன்:பார்த்தேன்:ரசித்தேன்!//

   மிக்க மகிழ்ச்சி. வரிசையாக 6 பகுதிகளாகத் தொடருமே. அனைத்தையும் பார்த்தீர்களா? ;)))))

   மிக்க நன்றி. அன்புடன் VGK

   நீக்கு
 55. நல்லதொரு குடும்பம்! உங்க மணவிழா, மணிவிழா புகைப்படங்களை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது... ஒரு மகளாய் என்னை ஆசிர்வதியுங்கள்..!

  பதிலளிநீக்கு
 56. உஷா அன்பரசு March 10, 2014 at 1:08 PM

  வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.

  //நல்லதொரு குடும்பம்! உங்க மணவிழா, மணிவிழா புகைப்படங்களை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது... //

  மிக்க நன்றி. மிகவும் சந்தோஷங்கள், டீச்சர்.

  //ஒரு மகளாய் என்னை ஆசிர்வதியுங்கள்..!//

  அன்பு மகளுக்கு என் மனம் நிறைந்த இனிய ஆசிகள். நன்னா இருங்கோ. சந்தோஷமா செளக்யமாக இருங்கோ.

  என்றும் அன்புடன் கோபு [தங்கள் மாணவன்]

  பதிலளிநீக்கு
 57. திருமணத்திலிருந்து சஷ்டியப்த பூர்த்தி வரை கண்டு களித்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி April 22, 2015 at 4:48 PM

   வாங்கோ, வணக்கம்.

   //திருமணத்திலிருந்து சஷ்டியப்த பூர்த்தி வரை கண்டு களித்தோம்.//

   மிக்க மகிழ்ச்சி. எல்லாம் தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் மட்டுமே. மிக்க நன்றி.

   நீக்கு
 58. குட்டிப் பேரன்கள் தாத்தாவைப் போலவே இருக்கின்றார்கள் அருமை அருமை. :)

  எனக்கும் உங்கள் சஷ்டியப்தபூர்த்தியில் கலந்துகொண்டதுபோல ஒரு மகிழ்வு .

  அப்புறம் மலர்க் க்ரீடம் அட்டகாசம் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். :)

  சாப்பாடு ஃபோட்டோ எதுவுமே இல்லையே. ஹாஹா பசிக்குது பால் பாயாசம் ஸ்பெஷல் என்று நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan April 23, 2015 at 3:10 PM

   வாங்கோ, வணக்கம்.

   //குட்டிப் பேரன்கள் தாத்தாவைப் போலவே இருக்கின்றார்கள் அருமை அருமை. :)//

   மிகவும் சந்தோஷம்.

   //எனக்கும் உங்கள் சஷ்டியப்தபூர்த்தியில் கலந்துகொண்டதுபோல ஒரு மகிழ்வு . //

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //அப்புறம் மலர்க் க்ரீடம் அட்டகாசம் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். :)//

   ஆகட்டும். அவை படத்தில் பார்க்க ஜோராகவே உள்ளன. ஆனால் அவற்றை அணிந்து நாங்கள் பட்ட கஷ்டம் ........ தனிப்பதிவே போடலாம். :))))) DRAFT கூட நகைச்சுவையாக எழுதி தயாராக வைத்துள்ளேன், அன்றைக்கே. :))))) என் பிள்ளைகளிடம் நிச்சயமாகச் சொல்கிறேன்.

   //சாப்பாடு ஃபோட்டோ எதுவுமே இல்லையே. ஹாஹா பசிக்குது பால் பாயாசம் ஸ்பெஷல் என்று நினைக்கிறேன் :)//

   நேரில் நாம் சந்திக்க நேர்ந்தால் பால் பாயஸத்துடன் படா கானா விருந்தே வைத்து ஜமாய்த்து விடுகிறேன். :) கவலையை விடுங்கோ.

   அன்புடன் கோபு

   நீக்கு
 59. கோபு அண்ணா, மன்னி உங்க திருமண புகைப்படத்துல பார்த்ததை விட இப்ப ரொம்ப அழகா இருக்கா. இப்படி ஒரு அருமையான மனிதர் (உங்களைத்தான் சொல்றேன்) பக்கத்தில் இருப்பது தான் அவங்க அழகின் ரகசியமோ?

  பதிலளிநீக்கு
 60. போட்டோ படம்லா சூப்பரு. உங்கூட்ல அல்லாரயும் பாத்துபிட்டேனே.

  பதிலளிநீக்கு
 61. முதல் படத்தில் தலைநிறைய கருகரு முடி கூடவே அடர்த்தியா ஸைடுபர்ன்ஸ்..அழகோ அழகு. இவ்வளவு நாட்களாகபடங்களே இணைகலைனு இப்ப சேத்துவச்சு படங்களா போட்டீங்களா. குடும்ப உறுப்பினர்களை தெரிந்து கொண்டோம். எல்லா படமும் நன்றாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 62. ஆஹா...அருமையான ஃப்ளாஷ் பாக்...படங்கள் அழகு...

  பதிலளிநீக்கு
 63. இன்று நெட் வெரி ஸ்லோ. எல்லா படமும் சரியா ஓபனாகல. மீண்டும் வந்து பார்க்கிறேன். முதல் ப்ளாக்&ஒயிட் போட்டோவும் அடுத்த கலர் போட்டோ மட்டுமே வரது நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ Happy !

   வாங்கோம்மா, வணக்கம்மா.

   அடடா, தலையோடு கால் மீண்டும் அனைத்தையும் சரியாப் பாருங்கோ, ப்ளீஸ்.

   நீக்கு
 64. இன்னிக்கும் மறுபடி வந்துட்டேன். எல்லா போட்டோவும் பாக்க முடிந்தது...உங்காத்து மனுஷா எல்லாரையும் பாத்துட்டேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் படத்துல கருகரு முடியோட இருக்கேள். ஷஷ்டி அப்த பூர்த்தி படத்துல. முடியெல்லாம் கொட்டிபோயி பவுர்ணமி நிலா டாலடிக்குது...)))) உங்காத்து மாமி முகத்துல அதிகம் சேஞ்ச் இல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ Happy !

   //இன்னிக்கும் மறுபடி வந்துட்டேன். எல்லா போட்டோவும் பாக்க முடிந்தது...உங்காத்து மனுஷா எல்லாரையும் பாத்துட்டேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.//

   அப்பாடா .... மிகவும் நிம்மதியாப்போச்சு. எனக்கும் இப்போதுதான் சந்தோஷமாக உள்ளது.

   //முதல் படத்துல கருகரு முடியோட இருக்கேள்.//

   ஆமாம். 1 வயது முதல் 50 வயது வரை, எனக்கு ஒரு முடி முளைக்க வேண்டிய இடத்தில் ஒன்பது முடிகள் வளர்ந்து, தலைமுடி மிகவும் அடர்த்தியாகவே இருந்து வந்தது.

   //ஷஷ்டி அப்த பூர்த்தி படத்துல முடியெல்லாம் கொட்டிபோயி பவுர்ணமி நிலா டாலடிக்குது...))))//

   ”அடடா, தலையோடு கால் மீண்டும் அனைத்தையும் சரியாப் பாருங்கோ, ப்ளீஸ்” ன்னு சொன்னது தப்பாப்போச்சே. என் தலையை மட்டும் பார்த்துட்டு இப்படி டாலடிக்கும் கருத்தினைச் சொல்லி கலாய்க்கிறீங்களே :))))

   //உங்காத்து மாமி முகத்துல அதிகம் சேஞ்ச் இல்ல.//

   ஓஹோ .... அங்கு மட்டும் இளமை ஊஞ்சல் ஆடுதாக்கும்.

   தங்களின் மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்கோ.

   நீக்கு
 65. மலரும் நினைவுகளை படங்களுடன் பகிர்ந்து கொண்டது ....நம்ம தோள்மேல கையை போட்டுக்கொண்டு அன்னியோன்னியமாக சொல்வது போல உணற முடியுது.ரியலி சூப்பர்& ஒண்டர்ஃபுல்...வயசாகிடுச்சேன்னு ஒடுங்கி போகாம உங்களை ரீசார்ஜ் பண்ணிகிட இதுபோல பதிவுலகில் ஆர்வம் காட்டுவது ரொம்ப நல்ல விஷயம்..வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... October 28, 2016 at 10:40 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மலரும் நினைவுகளை படங்களுடன் பகிர்ந்து கொண்டது .... நம்ம தோள்மேல கையை போட்டுக்கொண்டு அன்னியோன்னியமாக சொல்வது போல உணற முடியுது. ரியலி சூப்பர் & ஒண்டர்ஃபுல்...//

   இதனை உங்களின் தனிப்பாணியில் மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். கேட்டதில் ஓர் தனி இன்பமாக உள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //வயசாகிடுச்சேன்னு ஒடுங்கி போகாம உங்களை ரீசார்ஜ் பண்ணிகிட இதுபோல பதிவுலகில் ஆர்வம் காட்டுவது ரொம்ப நல்ல விஷயம்..வாழ்க வளமுடன்...//

   ’ரீசார்ஜ்’ அருமையான, உண்மையான, அழகான, அற்புதமான, மிகச்சிறப்பானதோர் வார்த்தை. :)

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 66. Muthuswamy MN தங்களின் ஓவிய கலை தெரியும். இன்றுதான் தங்களின் கதை எழுதும் ஆற்றல் பற்றி அறிந்தேன். நமஸ்காரம்.

  - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980 - Now he is at Mumbai)

  Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

  பதிலளிநீக்கு
 67. Super photography, I also participated in ur shashtiabdapoorthi function and I stood near rudrahomam photo
  . Old sweet memories, thanks, vaithilingam raman,07.11.2018.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ வைத்தி ஸார். நமஸ்காரங்கள்.

   ஆமாம், தாங்கள் மேற்படி விழாவுக்கு அன்புடன் வருகை தந்து ஆசீர்வதித்து இருந்தீர்கள்.

   வேத வித்துக்கள் ரெளண்டாக அமர்ந்து ஹோமம் செய்யும் படத்தில் ஸாமவேத சாம்ராஜ்யம் ப்ரும்மஸ்ரீ கெங்காதர சிரெளதிகளுக்குப் பின்புறம், தங்கள் தோளில் வழக்கமான ஜோல்னா பை சஹிதம், கைகட்டிக்கொண்டு சிரத்தையாக ஜப ஹோமங்களை ரஸித்து கவனித்துக் கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி. அன்புடன் கோபு

   நீக்கு
 68. இது 2019 இல் போடும் கொமெண்ட்:)... அத்தனை படங்களும் சூப்பர்... பொக்கிஸங்கள்...

  பதிலளிநீக்கு