என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 8 ஏப்ரல், 2013

7] அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்



”பொக்கிஷம்”

தொடர்பதிவு 
By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


என் தந்தை தினமும் மிகவும் சிரத்தையாக சிவபூஜை செய்து வந்தவர். 

பஞ்சாயதன பூஜை என்று அதற்குப்பெயர். இந்தப் பஞ்சாயதன பூஜையை எவ்வாறு சுலபமாகச் செய்யலாம் என்பதுபற்றி பிறகு ஒரு நாள் தனிப்பதிவு தந்து விளக்கலாம் என நினைத்துள்ளேன்.

1] ரக்த வர்ணத்தில் பிள்ளையார், 
  
2] லிங்க ரூபத்தில் சிவன்,

3] பஞ்சலோக வடிவத்தில் அம்பாள்,

4] ஸ்படிக ரூபத்தில் சூர்யன்,

5] ஸாலிக்கிராம வடிவத்தில் 
சந்தான கோபாலகிருஷ்ண ஸ்வாமி
 [மஹாவிஷ்ணு] 

இவை ஐந்துக்கும் செய்யப்படும் பூஜை தான் 
பஞ்சாயதன பூஜை எனப்படும்.


என் தந்தை பறங்கிப்பழம் போல சிவப்பாக தொந்தியும் தொப்பையுமாக நல்ல உயரமாக குண்டாக இருப்பார். மொத்தத்தில் சிவப்பழமாக இருப்பார். 

உருவத்தில் மட்டும் சிவப்பழம் அல்ல. அவருக்கு அடிக்கடி சிவனைப்போலவே ருத்ர கோபமும் வருவதுண்டு. அவர் ருத்ர தாண்டவம் ஆடிவிடப்போகிறாரே என, அவர் தன் பூஜை முடிந்து, சாப்பிடும் வரை, நாங்கள் அனைவரும் பெட்டிப்பாம்பாக அடங்கியே இருப்போம். 

ஸ்நானம் செய்து விட்டு, மடியாக சந்தனக்கல்லில் சந்தனக்கட்டையால், சிவபூஜைக்கு சந்தனம் அரைத்துத்தருவது மட்டும், அதுவும் பள்ளிக்கூட லீவு நாட்களில் மட்டும்,  என் வேலையாக வைத்துக்கொள்வேன்.



என் தந்தை காலமான போது எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள், அவரின் சிவபூஜைப்பெட்டியும், சந்தனக்கல் கட்டையும்,அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையும் மட்டுமே. 






என் தந்தை காலமான பிறகு, வெகு நாட்களுக்கு சிவபூஜை, அபிஷேகம் போன்ற ஏதும் செய்யாமல், பூஜைப் பெட்டியைத்திறந்து வெறும் நைவேத்யம் மட்டும் எங்கள் வீட்டில் செய்து வந்தோம்.   

ருத்ராக்ஷமாலையில் இருந்த செப்புக் கம்பிகள் நாளடைவில் அறுந்து விட்டன. பிறகு நான் புதிதாக வெள்ளிக்கம்பிகள் வைத்துக்கட்டி, கீழே தொங்கும் சற்றே பெரிய ருத்ராக்ஷத்திற்கு மட்டும் தங்கத்தில் குப்பிகள் வைத்துக் கட்டிக்கொண்டேன். 

அதை இன்றும் ஒரு பொக்கிஷமாக நினைத்து, நான் அவ்வப்போது செய்யும் பூஜைகளின் போதும், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணங்கள் செய்யும் போது அணிந்து வருகிறேன். 

-oooooo-


இன்று என் அன்றாடத் 
தேவைகளுக்கு பயன்படுபவை 


தினமும் மூன்று வேளைகள் 
சந்தியாவந்தனம் செய்ய
உபயோகிக்கும் தீர்த்த பாத்திரம்.



[என் பெரிய அக்காவின் கணவர் எனக்கு 
05.12.2009 இல் கொடுத்த அன்பளிப்புப் 
பொக்கிஷம் இந்த வெள்ளிக் கிண்டி.
சதாபிஷேகம் முடிந்த அவரின் வயது இன்று 84 ]

இதில் உள்ள மிகச்சிறிய துவாரத்திலிருந்து 
தேவையான அளவு மட்டும் நீர் பெற முடிவதால்
தண்ணீர் வீணாகாமல் தவிர்க்கப்படுகிறது.

அளவில் மிகச்சிறியதாகவும் 
எடை அதிகம் இல்லாமலும் இருப்பதால்
பயணங்களின் போது எடுத்துச்செல்ல
மிகவும் செளகர்யமாக  உள்ளது.


பக்தி செலுத்தும் நேரங்களில் நான் கழுத்தில் 
அணியும் ருத்ராக்ஷ மாலை

என் தந்தை விட்டுச்சென்ற பொக்கிஷமான்  
ருத்ராக்ஷம் + ஸ்படிகம் சேர்ந்தமாலை.

சமீபத்தில் வெள்ளிக்கம்பி + தங்கக்குப்பிகளால் 
புதுப்பித்துக்கொண்டேன்.


மனநிம்மதிக்காக தினமும் வாசிக்கும் 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண புத்தகம்
[பெரிய எழுத்துக்களில்]

oooOooo

அந்தக்காலத்தில் ஒருசில பணக்காரர்கள் மட்டுமே தங்கள் கை விரலில் மோதிரம் அணிவது வழக்கம்.  புதிதாக மோதிரம் அணிந்தவர் அதை பிறருக்குத் தெரிவிக்க வேண்டி, ஆற்றில் குளித்து விட்டு வரும்போது, ஆற்றில் இன்று கழுத்தளவு ஜலமாக்கும் என்று சொல்லி, தன் மோதிரம் அணிந்த கைவிரல்களை தன் கழுத்தருகே கொண்டு சென்று காட்டுவது வழக்கமாம். 

இப்போது ஆறுகளில் ஜலமும் இல்லை. மோதிரம் அணிவது என்பது ஒன்றும் அதிசயமான விஷயமும் இல்லை என்று ஆகிவிட்டது.

இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)

’குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்படணும்’ என்று ஒரு பழமொழியும் உண்டு. 

ஒருவேளை குட்டுப்படுபவர் தலையில் குட்டியவரின் மோதிரம் நழுவி விழுந்து விடலாமோ என்னவோ! அதுவரை குட்டுப்பட்டவருக்கும் ஒரு லாபம் தானே! என்றும் கூட நான் என் கற்பனையில் நினைத்து மகிழ்வதும் உண்டு. 



மேலே உள்ள தங்க மோதிரம் 
தலை தீபாவளிக்கு எனக்கு போடப்பட்டது.

1972 இல் அதன் எடை 6 கிராம் [முக்கால் பவுன்]. 
தங்கம் ஒரு கிராம் வெறும் 25 ரூபாய் விற்ற காலம் அது. 

செய்கூலி சேதாரம் உள்பட ரூ. 180 மட்டுமே 
அந்த மோதிரத்தின் மொத்த விலை. 

வேத பர்வதமான என் தந்தை காலமானபோது 
இதே மோதிரத்தினால் தான் அவரின் கைதுடைத்து 
’பிரும்மவேத சமஸ்காரம் ’
என்ற மிகச்சிறப்பான சடங்குகள்
நூற்றுக்கணக்கான வேதவித்துக்களால்
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் 
செய்யப்பட்டன.

அந்த மோதிரம் இன்று மிகவும் தேய்ந்து போய்விட்டது.
இருப்பினும் பொக்கிஷமாகவே வைத்துள்ளேன்.




இங்கு காட்டியுள்ள T.V. SHAPE மோதிரம் 
"VG" என்று பொறித்துள்ளது.

இதை என் மனைவியின் வற்புருத்தலால்
பிறகு ஒருநாள் நானே நகைக்கடைக்குச்சென்று
ஆர்டர் கொடுத்து செய்து 
தற்சமயம் அணிந்து வருகிறேன்.

வலது கை விரலில் மோதிரம் அணிந்து கொண்டு 
சாப்பிடுவதால் கொஞ்சம் தங்கச்சத்து 
உடலுக்குப்போவதாகச் சொல்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை, 
அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ள, மோதிரம் 
மிகவும் உபயோகப்படுவதாகத் தோன்றுகிறது. 

நகத்தால் சொறிந்து கொண்டால் ஆபத்து. 

நகக்கீறல் ஏற்பட்டு செப்டிக் ஆகிவிடும்.

மோதிர விரலை மடித்துக்கொண்டு, 

உடம்பில் பிடில் வாசித்தால் 
கொசுக்கடிக்கு மிகவும் இதமாக இருக்கிறது. 

இப்படிச் சொறிவதால் கூட 
தங்கச்சத்து நம் உடலில் சேரலாம் தானே!



அதனால் தான் ஒருவேளை 
நான் இன்று ஜொலிக்கிறேனோ?
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !  ;)))))



சொறியச் சொறியச் 
சொர்க்க லோகம் !
பிறகு
எரிய எரிய எமலோகம் !!

கொஞ்சம் சொறிந்து தான் பாருங்களேன்
பாஸ்போர்ட் விசா ஏதும் இல்லாமல் 
இரண்டு லோகத்திற்கும் சென்று வரலாமே !!!



தொடரும்



இந்த ‘பொக்கிஷம்’ 
தொடரின் அடுத்தபகுதி  
13.04.2013 சனிக்கிழமை
வெளியிடப்படும்.

குருவருள் நிரம்பிய இதன் 
அடுத்த மூன்று பகுதிகளில்
உண்மையான பொக்கிஷத்தை 
நாம் நிச்சயமாக உணர முடியும்.

குருவருளால் மட்டுமே நாம் 
இறைவன் என்ற மாபெரும் பொக்கிஷத்தைச் 
சுலபமாக இந்தத்தொடரின்  
இறுதிப்பகுதியில் அடையமுடியும்.

எனவே அடுத்துவரும் 
நான்கு பகுதிகளையும் காணத்தவறாதீர்கள்.







என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

126 கருத்துகள்:

  1. தந்தை பயன்படுத்திய பொருட்கள், அதுவும் சிவபூஜை செய்யப் பயன்படும் பொருட்கள் தெய்வீக பொக்கிசங்கள்...

    பொக்கிஷ தங்க மோதிரம் அருமை... இப்போதுள்ள விலையை நினைத்தால்...?

    VG மோதிரத்தின் பயன்கள் ரசிக்க வைத்தது...! ஹிஹி...

    விரைவில் பஞ்சாயதன பூஜையைப் பற்றிய பகிர்வை எதிர்ப்பார்க்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் April 8, 2013 at 4:09 AM

      வாருங்கள், வணக்கம்.

      //தந்தை பயன்படுத்திய பொருட்கள், அதுவும் சிவபூஜை செய்யப் பயன்படும் பொருட்கள் தெய்வீக பொக்கிசங்கள்...//

      அப்படியா, சந்தோஷம்.

      //பொக்கிஷ தங்க மோதிரம் அருமை... இப்போதுள்ள விலையை நினைத்தால்...?//

      நினைத்தால் .... அப்போது வாங்கிய்து கொள்ளைமலிவாகத் தோன்றும்.

      //VG மோதிரத்தின் பயன்கள் ரசிக்க வைத்தது...! ஹிஹி...//

      ரசித்தல் மகிழ்வளிக்கிறது.

      //விரைவில் பஞ்சாயதன பூஜையைப் பற்றிய பகிர்வை எதிர்ப்பார்க்கிறேன்...//

      ஆகட்டும். முயற்சிக்கிறேன்.

      // நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...//

      இந்தப்பகுதிக்கு தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு

  2. பக்தி செலுத்தும் நேரங்களில் நான் கழுத்தில்
    அணியும் ருத்ராக்ஷ மாலை

    என் தந்தை விட்டுச்சென்ற பொக்கிஷமான்
    ருத்ராக்ஷம் + ஸ்படிகம் சேர்ந்தமாலை.

    புதுப்பித்த பொக்கிஷம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி April 8, 2013 at 4:09 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ ! என் அன்புக்குரிய அம்பாளுக்கு என் வந்தனங்கள்.

      *****பக்தி செலுத்தும் நேரங்களில் நான் கழுத்தில் அணியும் ருத்ராக்ஷ மாலை என் தந்தை விட்டுச்சென்ற பொக்கிஷமான் ருத்ராக்ஷம் + ஸ்படிகம் சேர்ந்தமாலை.*****

      //புதுப்பித்த பொக்கிஷம் அருமை...//

      தங்களின் அன்பான வருகைக்கும் புதுப்பித்த பொக்கிஷம் போன்ற அருமையான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  3. ஹா ஹா இந்த பதிவின் மூலம் உங்க நகைச்சுவையால் என்னை சிரிக்கவைத்துவிட்டீர்கள்..கடைசிவரிகளை படித்து இன்னும் சிரிக்கிறேன்.

    அனைத்தும் விலை உயர்ந்த பொக்கிஷங்கள்....

    // இந்தப் பஞ்சாயதன பூஜையை எவ்வாறு சுலபமாகச் செய்யலாம் என்பதுபற்றி பிறகு ஒரு நாள் தனிப்பதிவு தந்து விளக்கலாம் என நினைத்துள்ளேன்.//சீகிரம் இதனைப்பற்றி எழுதுங்கள்.தெரிந்துக்கொள்ள் ஆவல் ஐயா..

    அப்புறம் சின்ன வேண்டுகோள்,என்னை பெயர் சொல்லியே கூபிடுங்கள் உங்கள் மகள் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga April 8, 2013 at 4:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹா ஹா இந்த பதிவின் மூலம் உங்க நகைச்சுவையால் என்னை சிரிக்கவைத்துவிட்டீர்கள்..கடைசிவரிகளை படித்து இன்னும் சிரிக்கிறேன்.//

      தங்களின் சிரிப்பொலியை நான் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்.

      என்னுடைய பெரும்பாலான படைப்புகளில் நகைச்சுவை கலந்தே தான் இருக்கும்.

      மோதிரம் என்பது ஓர் சுவையான நகை அல்லவா! அதில் நகைச்சுவையை நான் நிச்சயமாகக்கலக்க வேண்டும் அல்லவா!!

      இந்த இணைப்பினை தயவுசெய்து SAVE செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      அதிலுள்ள இணைப்புகள் மூலம் என் பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள்.

      படித்தவற்றிற்கும், சிரிக்க வைத்த பகுதிகளுக்கும் மறக்காமல் கருத்து அளியுங்கள்.

      //அனைத்தும் விலை உயர்ந்த பொக்கிஷங்கள்....//

      ஆஹா, சந்தோஷம்.

      *****இந்தப் பஞ்சாயதன பூஜையை எவ்வாறு சுலபமாகச் செய்யலாம் என்பதுபற்றி பிறகு ஒரு நாள் தனிப்பதிவு தந்து விளக்கலாம் என நினைத்துள்ளேன்.*****

      //சீக்கரம் இதனைப்பற்றி எழுதுங்கள்.தெரிந்துக்கொள்ள் ஆவல் ஐயா..//

      முயற்சிக்கிறேன்ம்ம்மா.

      //அப்புறம் சின்ன வேண்டுகோள்,என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்கள் ..... உங்கள் மகள் போல...//

      ஆஹா, அப்படியே ஆகட்டும்மம்மா.

      அந்தக்காலத்தில் ஒரு பழமொழி உண்டு:

      ”ஐந்து பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்” என்று.

      எனக்கு உங்களையும் சேர்த்து, இதுவ்ரை இந்த வலையுலகில், பத்து மகள்கள் ஆச்சு.

      எனக்கென்று சொந்த மகள் பிறக்க பிராப்தம்/கொடுப்பினை இல்லாது போயினும், இதைக்கேட்க மிகவும் சந்தோஷமாகவே உள்ளதும்மா. மிக்க நன்றி மேனகா! ;))))

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  4. என் தந்தை காலமான போது எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள், அவரின் சிவபூஜைப்பெட்டியும், சந்தனக்கல் கட்டையும்,அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையும் விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் தான்

    பெற்றவரின் மூச்சுக்காற்றும் இழைந்ததாயிற்றே ...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி April 8, 2013 at 4:13 AM

      *****என் தந்தை காலமான போது எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள், அவரின் சிவபூஜைப்பெட்டியும், சந்தனக்கல் கட்டையும்,அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையும் மட்டுமே*****

      //விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் தான். பெற்றவரின் மூச்சுக்காற்றும் இழைந்ததாயிற்றே ...!!//

      அவரின் மூச்சு நின்றும், மூச்சுக்காற்று இவற்றில் இழைந்திருக்கும் என்கிறீர்கள்.

      ‘என்னவோ .......... சொல்லுங்கள் ............
      .................. ..................... .............. ............’‘

      நீங்க சொன்னா எதுவுமே எனக்கு வேதவாக்கு போலத்தான். ;)

      நீக்கு
  5. மாதா ,பிதா , குரு என்று வரிசைப்படுத்திய பாங்கு பொக்கிஷத்திற்கு மகுடம் சூட்டுகிறது .. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி April 8, 2013 at 4:15 AM

      //மாதா ,பிதா , குரு என்று வரிசைப்படுத்திய பாங்கு பொக்கிஷத்திற்கு மகுடம் சூட்டுகிறது .. //

      மிக்க மகிழ்ச்சி.

      மகுடம் சூட்டும் தலைக்கு ’கிக்’ ஏற்படுத்துகிறது.

      //வாழ்த்துகள்..//

      தங்கள் வாழ்த்துகள் உற்சாக பானம் போல் உள்ளது.

      நீக்கு
  6. தாய்க்கு முதல் மரியாதை செய்து விட்டீர்க‌ள்!
    இப்போது தந்தைக்கு பாத பூஜையா?

    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் April 8, 2013 at 4:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தாய்க்கு முதல் மரியாதை செய்து விட்டீர்க‌ள்!//

      ஆம், பெற்ற தாய் மட்டுமே முதல் மரியாதை செய்ய முற்றிலும் தகுதி வாய்ந்தவர்கள்.

      //இப்போது தந்தைக்கு பாத பூஜையா?//

      தந்தைக்கு பாத பூஜை அல்ல. அது பொதுவாக குருவுக்கு மட்டுமே செய்வோம்.

      ஆனால், உபநயனம் [பூணூல் கல்யாணம்] செய்து வைத்து, காயத்ரி மஹாமந்திரத்தை தன் மகனுக்கு உபதேசிக்கும் போது மட்டும், மகன் தன் தந்தையை குருவாகவே பாவித்து, அவருக்கு அன்று பாத பூஜை செய்வதுண்டு.

      தந்தை என்றால் எங்களுக்கெல்லாம் சிம்ஹ சொப்பணம். இப்போது நினைத்தாலும் கூட. [அது அந்தக்காலம். ]

      //அருமையான பதிவு!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.


      நீக்கு
  7. பிரும்மவேத சமஸ்காரம் ’
    என்ற மிகச்சிறப்பான சடங்குகள்
    நூற்றுக்கணக்கான வேதவித்துக்களால் வேத கோஷங்களை ஈர்த்துக்கொண்ட
    புனிதப்பொருள் தலை சிறப்ந்த பொக்கிஷமாக ஜ்வலிக்கிறது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி April 8, 2013 at 4:20 AM

      //’பிரும்மவேத சமஸ்காரம் ’ என்ற மிகச்சிறப்பான சடங்குகள் நூற்றுக்கணக்கான வேதவித்துக்களால் வேத கோஷங்களை ஈர்த்துக்கொண்ட புனிதப்பொருள் தலை சிறந்த பொக்கிஷமாக ஜ்வலிக்கிறது ..//

      ஆம். அவருடைய பேச்சு மூச்சு எல்லாமே வேதம், வேதம், வேதம் மட்டுமே. வேத பாராயணம் செய்வது என்றால் விடிய விடிய சோர்வு இல்லாமல் தங்கு தடையின்றி, சொல்லுவார். பிறருக்கும் போதிப்பார்.

      பணம் சம்பாதிப்பதிலோ, சொத்து சேர்ப்பதிலோ ஆர்வம் இல்லாதவர்.

      வேதம், சாஸ்திரம், தர்மம், நியாயம், நீதி, நேர்மை என்று பேசிப்பேசியே பழைய பஞ்சாங்கமாக வாழ்ந்தவர்கள்.

      அவர் காலமான அன்று திருச்சி ஜில்லாவில் மட்டுமல்ல அக்கம்பக்கத்து ஜில்லாக்களிலிருந்து ஏராளமான [நூற்றுக்கணக்கான] வேதவித்துக்கள் வந்து கலந்து கொண்டனர். யஜுர் வேத பர்வதமே இன்று இப்படி சாய்ந்து போய்விட்டதே எனச்சொல்லி வருந்தினர்.

      [HE WAS REALLY AN EXCELLENT SCHOLAR AND COMPETENT AUTHORITY FOR YAJUR VEDA.]

      காவிரிக்கரையில் ருத்ர பூமியில் சுமார் இரண்டு மணி நேரங்கள் இதே மோதிரத்தினால் வேத கோஷத்துடன் ஏதேதோ செய்தனர்.

      அவர் காலமானது 01.05.1975. எனக்கு அப்போது 25 வயது மட்டுமே.

      ’பிரும்மவேத சமஸ்காரம்’ என்றால் என்ன என்பதே எனக்கு அன்று தான் தெரிய வந்தது.

      அதனால் அந்த சற்றே தேய்ந்து போய் உள்ள மோதிரத்தை இன்றும் என்னிடம் புனிதமான பொக்கிஷமாக வைத்துக்கொண்டுள்ளேன்.

      நீக்கு
  8. Super post... Romba rasichi sirichite padichen :) Ennala innamum siripu adakka mudiyala...
    Intha line migavum unmai ***நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)****
    romba rasitha line itho ithu thaan sir :)
    ****மோதிர விரலை மடித்துக்கொண்டு,
    உடம்பில் பிடில் வாசித்தால்
    கொசுக்கடிக்கு மிகவும் இதமாக இருக்கிறது.***

    Keep Posting !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sangeetha Nambi April 8, 2013 at 4:20 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Super post... Romba rasichi sirichite padichen :) Ennala innamum siripu adakka mudiyala...சூப்பர் போஸ்ட். ரொம்பவும் ரசித்து சிரித்துப்படித்தேன். என்னால் இன்னமும் சிரிப்பை அடக்க முடியவில்லை//

      இதைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்களின் சிரிப்பொலியை நான் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்.

      என்னுடைய பெரும்பாலான படைப்புகளில் நகைச்சுவை கலந்தே தான் இருக்கும். இந்த இணைப்பினை தயவுசெய்து SAVE செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      அதிலுள்ள இணைப்புகள் மூலம் என் பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள்.

      படித்தவற்றிற்கும், சிரிக்க வைத்த பகுதிகளுக்கும் மறக்காமல் கருத்து அளியுங்கள்.

      //Intha line migavum unmai ***நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)****

      இந்த வரிகள் மிகவும் உண்மை.//

      சந்தோஷம்.

      //romba rasitha line itho ithu thaan sir :) ****மோதிர விரலை மடித்துக்கொண்டு, உடம்பில் பிடில் வாசித்தால்
      கொசுக்கடிக்கு மிகவும் இதமாக இருக்கிறது.***

      இதுதான் சார், நான் ரொம்பவும் ரசித்த வரிகள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //Keep Posting !!! தொடர்ந்து பதிவிடுங்கள்!!! //

      ஆகட்டும், முயற்சிக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  9. என் தந்தை காலமான போது எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள், அவரின் சிவபூஜைப்பெட்டியும், சந்தனக்கல் கட்டையும்,அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையும் மட்டுமே...//

    எத்தனை பேறு பெற்று இருந்தால் அது உங்களுக்கு கிடைத்து இருக்கும்!
    வெகு காலமாய் பூஜை செய்யப்பட்டது, ஆற்றல் நிரம்பி இருக்கும். உங்கள் குடும்பம் தழைத்தோங்கி வாழ்வதற்கு உங்கள் அப்பாவின் ”பஞ்சாயதன பூஜை’
    தான் காரணமாய் இருக்கும்.

    இன்று என் அன்றாடத்
    தேவைகளுக்கு பயன்படும் பொருட்களும் மிக நன்றாக இருக்கிறது.
    நித்திய பூஜைகளை தவறாமல் செய்வது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் சந்ததியை வளம்பெற செய்யும்.
    மோதிர வரலாறும், அதன் உபயோகமும் நல்ல நகைசுவையாக இருக்கிறது.

    குருவருள் நிறம்பிய இதன்
    அடுத்த மூன்று பகுதிகளில்
    உண்மையான பொக்கிஷத்தை
    நாம் நிச்சயமாக உணர முடியும்.//
    அடுத்தபதிவு படிக்க காத்து இருக்கிறேன்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு April 8, 2013 at 4:39 AM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      *****என் தந்தை காலமான போது எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள், அவரின் சிவபூஜைப்பெட்டியும், சந்தனக்கல் கட்டையும்,அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையும் மட்டுமே...*****

      //எத்தனை பேறு பெற்று இருந்தால் அது உங்களுக்கு கிடைத்து இருக்கும்! வெகு காலமாய் பூஜை செய்யப்பட்டது, ஆற்றல் நிரம்பி இருக்கும். உங்கள் குடும்பம் தழைத்தோங்கி வாழ்வதற்கு உங்கள் அப்பாவின் ”பஞ்சாயதன பூஜை’ தான் காரணமாய் இருக்கும். //

      இருக்கலாம் மேடம். ஏதோ இன்று இந்தளவுக்கு ஓரளவு நான் முன்னேறி இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கலாம். காலம் காலமாக, பரம்பரையாக இடைவிடாது செய்யப்பட்ட பூஜைபெட்டியும், விக்ரஹங்களும் தான் அவை..

      //இன்று என் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படும் பொருட்களும் மிக நன்றாக இருக்கிறது. //

      சந்தோஷம்.

      //நித்திய பூஜைகளை தவறாமல் செய்வது அறிந்து மகிழ்ச்சி.//

      அடுத்தடுத்த பகுதிகளில் இவை பற்றி மேலும் நான் பேச இருக்கிறேன். அவசரப்பட்டு ஒரேயடியாக மகிழ்ச்சியடைந்து விடாதீர்கள்.

      //உங்கள் சந்ததியை வளம்பெற செய்யும். //

      மிக்க மகிழ்ச்சி. அதுபோதும்.

      //மோதிர வரலாறும், அதன் உபயோகமும் நல்ல நகைசுவையாக இருக்கிறது.//

      மோதிரம் என்பதே ஒரு நகை தானே, அதில் ஓர் சுவை இருக்கட்டும் என்றே நகைச்சுவை கலந்து கொடுத்தேன். ;) தாங்கள் ரசித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

      *****குருவருள் நிரம்பிய இதன் அடுத்த மூன்று பகுதிகளில் உண்மையான பொக்கிஷத்தை நாம் நிச்சயமாக உணர முடியும்.*****

      //அடுத்தபதிவு படிக்க காத்து இருக்கிறேன்.//

      சந்தோஷம். மின்தடை + நெட் கிடைக்காமல் போவது போன்ற தொந்தரவுகளால் அதற்கு நான் இன்னும் இறுதி வடிவம் கொடுக்க முடியாமல் உள்ளது. எப்படியும் நாளைக்குள் முடித்து விடுவேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  10. மாதா, பிதா அடுத்தது குருவா?
    பொக்கிஷப் பதிவில் இவர்களைப் பற்றிப் படிப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது; நாங்களும் எங்கள் அம்மா, அப்பாவை பற்றி நினைக்கிறோம்.

    மிகவும் சீரியஸ் ஆகா எழுதினாலும் அங்கங்கே உங்களுக்கே உரிய நகைச்சுவை தூவல்கள் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan April 8, 2013 at 5:25 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மாதா, பிதா அடுத்தது குருவா? //

      ஆமாம், மேடம். ஏதோ மனதில் தேங்கியுள்ள பலவிஷயங்களில் சிலவற்றையாவது மட்டும், வெளிப்படுத்திக் கிறுக்க ஓர் சந்தர்ப்பமாக இதைப் பயன் படுத்திக்கொண்டுள்ளேன்.

      //பொக்கிஷப் பதிவில் இவர்களைப் பற்றிப் படிப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது//

      இதைக்கேட்க எனக்கு மனநிறைவாகவே உள்ளது.

      //நாங்களும் எங்கள் அம்மா, அப்பாவை பற்றி நினைக்கிறோம்.//

      சந்தோஷம்.

      //மிகவும் சீரியஸ் ஆக எழுதினாலும் அங்கங்கே உங்களுக்கே உரிய நகைச்சுவை தூவல்கள் பிரமாதம்.//

      மிக்க மகிழ்ச்சி. எவ்வளவோ மன வருத்தங்கள் இருப்பினும், நகைச்சுவை மட்டுமே நம் கவலைகளைக் கொஞ்சமாவது குறைத்துக்கொள்ள உதவுகிறது, இல்லையா மேடம்?

      நீக்கு
  11. ப்ரம்மவேத ஸம்ஸ்காரம், நான் பார்த்து இருக்கிறேன், தொடரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi April 8, 2013 at 5:33 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //ப்ரம்மவேத ஸம்ஸ்காரம், நான் பார்த்து இருக்கிறேன்,//

      சந்தோஷம்.

      //தொடரும்//

      ஆஹா இது அதைவிட சந்தோஷம். மீண்டும் சந்திப்போம்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  12. என் தந்தை விட்டுச்சென்ற பொக்கிஷமான்
    ருத்ராக்ஷம் + ஸ்படிகம் சேர்ந்தமாலை.//
    லட்சங்கள் கொடுத்தாலும் நிச்சயம் கிடைக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியாழி கண்ணதாசன் April 8, 2013 at 5:39 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      *****என் தந்தை விட்டுச்சென்ற பொக்கிஷமான்
      ருத்ராக்ஷம் + ஸ்படிகம் சேர்ந்தமாலை.*****

      //லட்சங்கள் கொடுத்தாலும் நிச்சயம் கிடைக்காது//

      அடேங்கப்பா! அப்படியா, ஆம், இருக்கலாம், இருக்கலாம்.

      [லட்சியமில்லாமல் லட்சங்கள் கொடுப்பவர்கள் தான் இல்லாமல் இருக்கலாம். ;))))) ]

      தங்களின் அன்பான வருகைக்கும், லட்சங்கள் கொடுத்தாலும் நிச்சயம் கிடைக்காத பொக்கிஷக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  13. Maatha, pitha, guru & deivam?!
    Arumaiyaana pokishangal, pokkishamaana ninaivukal!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. middleclassmadhavi April 8, 2013 at 6:30 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Maatha, pitha, guru & deivam?!
      Arumaiyaana pokishangal, pokkishamaana ninaivukal!
      மாதா, பிதா, குரு, தெய்வம் ?! அருமையான பொக்கிஷங்கள். பொக்கிஷமான நினைவுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  14. Mail Message Received from Mr. Pattabi Raman Sir

    with a Very Beautiful Flower Plot with Lot of Flowers in it.

    Pattabi Raman 17:26 (1 hour ago) to me

    //பொக்கிஷம் தொடர் அருமை.

    அதற்கு என் மலர்செண்டுகள் இதோ : x x x x x //

    Thank you very much Mr. Pattabi Raman Sir.

    Affectionately yours,
    VGK

    பதிலளிநீக்கு
  15. உன்ங்கள் பொக்கிஷப் பதிவு தந்தைக்கு அர்ப்பணிப்பா. சுவாரஸ்யமாக ,
    அங்கங்கே சின்ன சின்ன நகைச்சுவையோடு அருமையாக செல்கிரது
    உங்கள் தொடர். அதைத் தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்.

    நீங்கள் தந்தையின் மேல் வைத்திருக்கும் மரியாதையை பிரதிபலிக்கிறது இந்தப் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam April 8, 2013 at 6:48 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //உங்கள் பொக்கிஷப் பதிவு தந்தைக்கு அர்ப்பணிப்பா. //

      வைத்துக்கொள்ளலாம்.

      //சுவாரஸ்யமாக, அங்கங்கே சின்ன சின்ன நகைச்சுவையோடு அருமையாக செல்கிறது உங்கள் தொடர்.//

      மிகவும் சந்தோஷம்.

      // அதைத் தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன். //

      மிக்க மகிழ்ச்சி.

      //நீங்கள் தந்தையின் மேல் வைத்திருக்கும் மரியாதையை பிரதிபலிக்கிறது இந்தப் பதிவு//

      மரியாதையும் உண்டு. அதைவிட மிகவும் பயமும் உண்டு, நான் என் அம்மாச்செல்லம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  16. Mail message Received from Mrs. USHA ANBARASU Madam:

    Usha Anbarasu 17:14 (2 hours ago) to me

    //வணக்கம் சார் படித்துவிட்டேன். எதோ error ஆல் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் ஆகலை.//

    *****அந்தக்காலத்தில் ஒருசில பணக்காரர்கள் மட்டுமே தங்கள் கை விரலில் மோதிரம் அணிவது வழக்கம். புதிதாக மோதிரம் அணிந்தவர் அதை பிறருக்குத் தெரிவிக்க வேண்டி, ஆற்றில் குளித்து விட்டு வரும்போது, ஆற்றில் இன்று கழுத்தளவு ஜலமாக்கும் என்று சொல்லி, தன் மோதிரம் அணிந்த கைவிரல்களை தன் கழுத்தருகே கொண்டு சென்று காட்டுவது வழக்கமாம்.*****

    //ஓ இப்படி எல்லாம் வேறயா? ஹா..ஹா..! நல்லா போடறாங்க ஸீன்..!//

    ;))))) மகிழ்ச்சி, நன்றி. - VGK

    பதிலளிநீக்கு
  17. அப்பா விட்டுச் சென்ற ஆஸ்தி ..இதுவும் மிக அருமையான பொக்கிஷப் பகிர்வுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar April 8, 2013 at 7:06 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அப்பா விட்டுச் சென்ற ஆஸ்தி ..இதுவும் மிக அருமையான பொக்கிஷப் பகிர்வுதான்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  18. தந்தையின் நினைவாகப் போற்றி வரும் பொக்கிஷங்கள் குறித்து அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமலக்ஷ்மி April 8, 2013 at 7:22 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தந்தையின் நினைவாகப் போற்றி வரும் பொக்கிஷங்கள் குறித்து அறிந்து கொண்டோம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  19. மாதா, பிதா, குரு, தெய்வம் இந்தத் தொடரில் இப்போ பிதா.

    மிகமிகப் பெறுமதியான பொகிஷங்கள்தான்.
    காசு கொடுத்தா இப்பவும் இதைவிடவும் மேலானவை வாங்கீடலாம். ஆனா அவங்க உபயோகித்து விட்டுட்டுப்போன, அவங்க கைபட்ட மனசுபட்ட அற்புதமான பொக்கிஷங்களை எத்தனைவிலைகொடுத்தாலும் பெற்றுக்கொள்ள முடியாது.
    அவற்றில் இருக்கும் வைபரேஷன் - அதிர்வுகள் உணர்வால்தான் பெறமுடியும். சொல்லிடலங்காதவை அவை.

    அவர்களின் அன்புக்குப்பாத்திரமாக இவற்றைக் கிடைக்கப்பெற்றதும் உங்கள் பூர்வபுண்ணியபலன்தான். அரிய அருமையான பொக்கிஷங்கள்!

    நல்ல பதிவும் பகிர்வும். மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி April 8, 2013 at 8:21 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மாதா, பிதா, குரு, தெய்வம் இந்தத் தொடரில் இப்போ பிதா.//

      சபாஷ், கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்கோ ! ;)

      //மிகமிகப் பெறுமதியான பொக்கிஷங்கள்தான். //

      ’இளமதி’ வாயால் ’பெறுமதி’ என்ற அழகான சொல்லாடல். இது தான் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்தமான கவிதாயினியான உங்களின் கருத்துக்களே எனக்கு மிகமிகப் பெறுமதியான பொக்கிஷங்க்களாக்கும். ஹுக்க்க்கும்!

      //காசு கொடுத்தா இப்பவும் இதைவிடவும் மேலானவை வாங்கிடலாம்.//

      அது சரி. காசு கொடுத்தால் எதையுமே தான் வாங்கலாம். மிகச்சரியாகவே சொல்றீங்கோ.

      //ஆனா அவங்க உபயோகித்து விட்டுட்டுப்போன, அவங்க கைபட்ட மனசுபட்ட அற்புதமான பொக்கிஷங்களை எத்தனை விலை கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள முடியாது. அவற்றில் இருக்கும் வைபரேஷன் - அதிர்வுகள் உணர்வால்தான் பெறமுடியும். சொல்லிடலங்காதவை அவை. //

      @உணர்வால்தான் பெறமுடியும்.
      சொல்லிடலங்காதவை அவை.@

      @ நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லிட்டீங்க ! நன்றி !!

      //அவர்களின் அன்புக்குப்பாத்திரமாக இவற்றைக் கிடைக்கப்பெற்றதும் உங்கள் பூர்வபுண்ணியபலன்தான். அரிய அருமையான பொக்கிஷங்கள்! //

      என்னென்னவோ அழகாத்தான் சொல்றீங்கோ! பூர்வபுண்ணியபலன் முற்றிலும் கிடைத்தால் மகிழ்ச்சியே!!

      //நல்ல பதிவும் பகிர்வும். மிக்க நன்றி ஐயா!/

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி மேடம்.

      நீக்கு
  20. சந்தனக்கட்டை பார்த்ததும் எனக்கும் தாய் வீட்டு நினைவு வந்துவிட்டது பொக்கிஷமாக பத்திரப்படுத்த மறந்துவிட்டேன். நீங்கள் தந்தையின் நினைவாக அனைத்தும் பொக்கிஷமாக்கியது சிறப்பு. பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sasi Kala April 8, 2013 at 8:29 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சந்தனக்கட்டை பார்த்ததும் எனக்கும் தாய் வீட்டு நினைவு வந்துவிட்டது பொக்கிஷமாக பத்திரப்படுத்த மறந்துவிட்டேன். //

      அப்படியா? அடடா!

      //நீங்கள் தந்தையின் நினைவாக அனைத்தும் பொக்கிஷமாக்கியது சிறப்பு. பகிர்வுக்கு நன்றிங்க.//

      தங்களின் தென்றலான வருகைக்கும், சந்தனமணத்துடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், கவிதாயினி மேடம்.

      நீக்கு
  21. Aha what a divine......
    Really really pokishiyam no doubt.
    Thanks for sharing the divine photos.
    Done namaskarams from here.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji April 8, 2013 at 8:41 AM

      வாங்கோ விஜி மேடம், வணக்கம்.

      //Aha what a divine......
      Really really pokishiyam no doubt.
      Thanks for sharing the divine photos.
      Done namaskarams from here.
      viji

      ஆஹா, என்னவொரு தெய்வீகம்!
      உண்மையில் உண்மையில் பொக்கிஷமே,. சந்தேகமே இல்லை.
      தெய்வீகமான பொருட்களைப்படமாகக் காட்டியுள்ளதற்கு நன்றி.
      இங்கிருந்தே நமஸ்கரித்துக்கொண்டேன் - விஜி//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் + ஆசிகள், விஜி மேடம்.

      நீக்கு
  22. //
    அந்தக்காலத்தில் ஒருசில பணக்காரர்கள் மட்டுமே தங்கள் கை விரலில் மோதிரம் அணிவது வழக்கம். புதிதாக மோதிரம் அணிந்தவர் அதை பிறருக்குத் தெரிவிக்க வேண்டி, ஆற்றில் குளித்து விட்டு வரும்போது, ஆற்றில் இன்று கழுத்தளவு ஜலமாக்கும் என்று சொல்லி, தன் மோதிரம் அணிந்த கைவிரல்களை தன் கழுத்தருகே கொண்டு சென்று காட்டுவது வழக்கமாம். //


    - ஓ இப்படி எல்லாம் வேறயா? ஹா..ஹா..! நல்லா போடறாங்க ஸீன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு April 8, 2013 at 9:09 AM

      வாங்கோ, வணக்கம்.

      *****அந்தக்காலத்தில் ஒருசில பணக்காரர்கள் மட்டுமே தங்கள் கை விரலில் மோதிரம் அணிவது வழக்கம். புதிதாக மோதிரம் அணிந்தவர் அதை பிறருக்குத் தெரிவிக்க வேண்டி, ஆற்றில் குளித்து விட்டு வரும்போது, ஆற்றில் இன்று கழுத்தளவு ஜலமாக்கும் என்று சொல்லி, தன் மோதிரம் அணிந்த கைவிரல்களை தன் கழுத்தருகே கொண்டு சென்று காட்டுவது வழக்கமாம்.*****

      //- ஓ இப்படி எல்லாம் வேறயா? ஹா..ஹா..! நல்லா போடறாங்க ஸீன்..!//

      இதை வைத்தே ஒரு படைப்பு எழுதி விடலாமே, நீங்க. ;)))))

      சென்ற ஞாயிறு வாரமலரில் உங்கள் கவிதை படித்தேன். சூப்பர். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      [நேயர் கடிதமும் எழுதி அனுப்பியுள்ளேன். ]

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  23. இவ்வளவு பொக்கிஷங்கள் உங்களைப் போல் யாராவது வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

    மலைத்துப் போய் இருக்கிறேன்.

    புது மோதிரம் போட்டுண்டா, கையை ஆட்டி, ‘அப்பா சாப்பிட வாங்கோ, அப்பா சாப்பிட வாங்கோன்னு’ கூப்பிடுவான்னு கிண்டல் பண்ணுவா.

    மோதிர விரலை மடித்துக்கொண்டு,
    உடம்பில் பிடில் வாசித்தால்
    கொசுக்கடிக்கு மிகவும் இதமாக இருக்கிறது. //

    நல்ல ஐடியாவா இருக்கே.

    குருவருளும், இறைவனின் திருவருளும், தாய் தந்தையரின் பொக்கிஷங்களும் கிடைத்த உங்களை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI April 8, 2013 at 9:12 AM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம். ஊரில் தான் இருக்கீங்களா?
      நீங்க FOREIGN TOUR போயிருப்பதாகக் கனவு கண்டேன்.

      //இவ்வளவு பொக்கிஷங்கள் உங்களைப் போல் யாராவது வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.மலைத்துப் போய் இருக்கிறேன்.//

      அடடா, சும்மா ஏதாவது அள்ளித்தெளிக்காதீங்கோ. இதையெல்லாம் ஒரு பொக்கிஷம் என்று காட்டுவார்களா? என்னைப்போன்றவர்களிடம் எவ்வளவு பொக்கிஷங்கள், மிகவும் ரகஸியமாக இருக்கின்றன தெரியுமான்னு சொல்லுங்கோ, கேட்டுக்கறேன்.

      //புது மோதிரம் போட்டுண்டா, கையை ஆட்டி, ‘அப்பா சாப்பிட வாங்கோ, அப்பா சாப்பிட வாங்கோன்னு’ கூப்பிடுவான்னு கிண்டல் பண்ணுவா.//

      அப்படியா, இதுவும் நல்லாத்த்தான் இருக்கு. ஏதோ எனக்குத் தோன்றியதை நான் எழுதிப்புட்டேன்.

      *****மோதிர விரலை மடித்துக்கொண்டு, உடம்பில் பிடில் வாசித்தால் கொசுக்கடிக்கு மிகவும் இதமாக இருக்கிறது.*****/

      //நல்ல ஐடியாவா இருக்கே.//

      பிடில் வாசித்துப்பாருங்கோ தெரியும். கொசுக்களே உங்கள் வாசிப்பில் மயங்கிப்போய் விடும். கடிக்காது.

      //குருவருளும், இறைவனின் திருவருளும், தாய் தந்தையரின் பொக்கிஷங்களும் கிடைத்த உங்களை வணங்குகிறேன்.//

      ஹைய்யோ ..... இது ரொம்ப ஓவர். நீங்க நல்லா இருக்கணும் என வாழ்த்துகிறான் உங்கள் கோபு அண்ணா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  24. தந்தையாரின் பூஜை விசேஷங்களைப் பற்றி சிரத்தையாக எழுதியிருப்பது படிக்க சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... April 8, 2013 at 10:32 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //தந்தையாரின் பூஜை விசேஷங்களைப் பற்றி சிரத்தையாக எழுதியிருப்பது படிக்க சந்தோஷமாக இருக்கிறது.//

      தங்களின் அன்பு வருகை + சந்தோஷக்கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  25. சந்தனக்கட்டையையும் சாமிப்பெட்டியையும் கொண்டாடும் உங்கள் மனதைக் கொண்டாட வார்த்தைகள் வரவில்லை.
    அதனால் நடுநடுவே வரும் நகைச்சுவையைக் கொண்டாடி எழுதுகிறேன். பிரமாதம். எரிச்சலுக்கு எண்ணையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை April 8, 2013 at 10:58 AM

      வாங்கோ சார், வணக்கம்,.

      //சந்தனக்கட்டையையும் சாமிப்பெட்டியையும் கொண்டாடும் உங்கள் மனதைக் கொண்டாட வார்த்தைகள் வரவில்லை.//

      எனக்கே அவற்றைக் கொண்டாட மனம் வருவதில்லை. ;) ஏதோ நம்மை அறியாமல் ஒரு பயத்தில் வணங்கத்தோன்றுகிறது. அவ்வளவு தான்.

      //அதனால் நடுநடுவே வரும் நகைச்சுவையைக் கொண்டாடி எழுதுகிறேன். பிரமாதம்.//

      மிகவும் சந்தோஷம். மகிழ்ச்சி.

      //எரிச்சலுக்கு எண்ணையா?//

      கரெக்ட்டா கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்க. எங்கெங்கெல்லாம் எரிச்சலோ அங்கெங்கெல்லாம் எண்ணெய் தான் மிகவும் நல்லது.;)))))

      தங்களின் அன்பு வருகை + நகைச்சுவைக் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  26. Ungaludaiya pokkishangalai/ninaivugalai engaludan pakirndhu kondadharku migavum nandri.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Priya Anandakumar April 8, 2013 at 3:07 PM

      வாங்கோ, வணக்கம்.

      //Ungaludaiya pokkishangalai/ninaivugalai engaludan pakirndhu kondadharku migavum nandri. உங்களுடைய பொக்கிஷங்களை/நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  27. அருமையான பொக்கிஷ பதிவு சார்.இன்னும் நாலு பகுதி இருக்கா!!!.ஏகப்பட்ட பொக்கிஷவாதி சார் நீங்க.

    //இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)//

    ஹா ...ஹா .....நல்ல ஐடியா சார்,

    உங்கள் கை விரல் மோதிரம் அணிந்திருப்பதையும் போட்டோ பிடித்துள்ளதிளிருந்து நீங்க பெரிய கேமரா மேன் ஆகிட்டிங்க என்பதை நிருபிக்கின்றது.கொசுக்கடி வைத்தியத்திற்கு அந்த கையும் அந்த மோதிரமும் தான் வேணும்னு யாராவது கேட்டுடப்போறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar April 8, 2013 at 4:36 PM

      வாங்கோ வாங்கோ, வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      //அருமையான பொக்கிஷ பதிவு சார்.இன்னும் நாலு பகுதி இருக்கா!!!//

      மகிழ்ச்சி. ஆம் இன்னும் நாலே நாலு மட்டும் தான்.

      //ஏகப்பட்ட பொக்கிஷவாதி சார் நீங்க. //

      நாம் இருவரும் நம்மிடம் உள்ள பொக்கிஷங்களை EXCHANGE செய்துகொள்ளலாமா? அம்ருதாகுட்டியையும், யக்‌ஷயாஸ்ரீயையும் கட்டாயம் எனக்குக்கொடுத்துடணும், சொல்லிட்டேன். ;))))) போட்டோவில் பார்த்ததிலிருந்து எனக்கு வேலையே ஓடலையாக்கும்.

      *****இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)*****

      //ஹா ...ஹா .....நல்ல ஐடியா சார்,//

      ஐடியா நல்லாத்தான் இருக்கு; அது எப்படீங்க அங்கே போய் நாம் தலைகீழாக நிற்பது? ;) நீங்க என்னதான் என்னிடம் தலைகீழாக நின்னுப்பார்த்தாலும் என்னால் தலைகீழா நிற்கவே முடியாதுங்க. வெயிட் ஜாஸ்தி. பாலன்ஸ் இல்லாமல் விழுந்துடுவேன். ;)

      //உங்கள் கை விரல் மோதிரம் அணிந்திருப்பதையும் போட்டோ பிடித்துள்ளதிளிருந்து நீங்க பெரிய கேமரா மேன் ஆகிட்டிங்க என்பதை நிருபிக்கின்றது.//

      அதெல்லாம் ஒன்றும் கிடையாதுங்க. வலது கையைப்போட்டோ எடுக்க இடது கையிலே கேமராவை வைத்துக்கொண்டு கிளிக் பண்ண வேண்டியிருந்தது. கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

      //கொசுக்கடி வைத்தியத்திற்கு அந்த கையும் அந்த மோதிரமும் தான் வேணும்னு யாராவது கேட்டுடப்போறாங்க//

      இதுக்கு நான் உங்களுக்குத்தனியா பதில் கொடுத்துட்டேன். அதனாலே சும்மா இருங்கோ. இங்கே ஓபனா ஏதாவது சொல்லி மாட்டிவிடாதீங்க.

      ஒரு உதவின்னு கேட்டுட்டாங்கன்னா யாருக்குமே கைகொடுத்து உதவுவதுதானேங்க நல்லது. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், உரிமையுடன் கூடிய அழகான நகைச்சுவைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  28. உங்கள் அப்பாவைப்பற்றிய நினவலைகள் நகைசுவையுடன் கூடிய சுவாரஸ்ய பகிர்வு.

    //அவர் ருத்ர தாண்டவம் ஆடிவிடப்போகிறாரே என, அவர் தன் பூஜை முடிந்து, சாப்பிடும் வரை, நாங்கள் அனைவரும் பெட்டிப்பாம்பாக அடங்கியே இருப்போம்.
    //பேரன் பேத்திகள் என்று ஆகி விட்ட பிறகும் அப்பாவைப்பற்றிய பயத்தைஎழுதி புன்னகைக்க வைக்த்துவிட்டீர்கள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா April 8, 2013 at 6:46 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //உங்கள் அப்பாவைப்பற்றிய நினவலைகள் நகைசுவையுடன் கூடிய சுவாரஸ்ய பகிர்வு.//

      மிக்க மகிழ்ச்சி.

      *****அவர் ருத்ர தாண்டவம் ஆடிவிடப்போகிறாரே என, அவர் தன் பூஜை முடிந்து, சாப்பிடும் வரை, நாங்கள் அனைவரும் பெட்டிப்பாம்பாக அடங்கியே இருப்போம். *****

      //பேரன் பேத்திகள் என்று ஆகி விட்ட பிறகும் அப்பாவைப்பற்றிய பயத்தை எழுதி புன்னகைக்க வைக்த்துவிட்டீர்கள்:)//

      இப்போதும் எனக்கு என் அப்பாவை நினைத்துக்கொண்டாலே பயமாகவே தான் உள்ளது மேடம்.

      அப்போதெல்லாம் அப்படித்தான் வாழ்ந்தோம். அப்படித்தான் நாங்கள் வளர்க்கப்பட்டோம். பள்ளி ஆசிரியர்களிடமும் பயம் கலந்த மரியாதை உண்டு.

      இப்போது காலமே ரொம்பவும் மாறிப்போய் விட்டது. சிறியவர்களுக்கு பெரியவர்கள் நடுங்க வேண்டியதாகி விட்டது.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  29. மாதா , பிதா ,குரு , தெய்வம் என்று வரிசை படுத்தி வருகீறீர் கள் போல் மிக அருமையான பொக்கிஷங்கள் தங்க மோதிரத்தின் உதவியால் இரண்டு லோகமும் போய்வரலாம் எவ்வளவு ஈசி சுவராஸ்யம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. poovizi April 8, 2013 at 8:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசை படுத்தி வருகிறீர்கள் போல. மிக அருமையான பொக்கிஷங்கள் தங்க மோதிரத்தின் உதவியால் இரண்டு லோகமும் போய்வரலாம் எவ்வளவு ஈசி சுவராஸ்யம்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நகைச்சுவைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  30. ப்ரும்மவேத சம்ஸ்காரம் குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன். தந்தை அளித்த சொத்து விலை மதிக்க முடியாதது. சாளிக்ராமம் வீட்டில் இருந்தால் தினமும் மடி, ஆசாரம் பார்த்து மூன்று வேளை நிவேதனமும் செய்ய வேண்டும். எங்க புகுந்த வீட்டிலேயும் இந்தப் பஞ்சாயதன பூஜை செய்து வந்திருக்கின்றனர். சிவன் இல்லாத ரிஷபம் உள்ளது. நாங்க பத்ரிநாத்தில் வாங்கிய லிங்கத்தையும் மீனாக்ஷி விக்ரஹத்தையும் அதிலே வைத்திருக்கோம். :)))) மற்றபடி நல்லதொரு பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam April 8, 2013 at 9:58 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ப்ரும்மவேத சம்ஸ்காரம் குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன். //

      சந்தோஷம்.

      //தந்தை அளித்த சொத்து விலை மதிக்க முடியாதது.//

      ;) மகிழ்ச்சி.

      //சாளிக்ராமம் வீட்டில் இருந்தால் தினமும் மடி, ஆசாரம் பார்த்து மூன்று வேளை நிவேதனமும் செய்ய வேண்டும். //

      அதற்கெல்லாம் நான் ஒருசில மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளேன். அடுத்துவரும் பதிவுகளில் அவை பற்றியெல்லாம் சொல்ல இருக்கிறேன்.

      //எங்க புகுந்த வீட்டிலேயும் இந்தப் பஞ்சாயதன பூஜை செய்து வந்திருக்கின்றனர். சிவன் இல்லாத ரிஷபம் உள்ளது. நாங்க பத்ரிநாத்தில் வாங்கிய லிங்கத்தையும் மீனாக்ஷி விக்ரஹத்தையும் அதிலே வைத்திருக்கோம். :))))//

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      //மற்றபடி நல்லதொரு பகிர்வு. நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.


      நீக்கு
  31. மின்சாரமும், இணையமும் பாடாய்ப் படுத்துகின்றன. கமென்ட் போயிருக்கானு தெரியலை. பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam April 8, 2013 at 9:59 PM

      //மின்சாரமும், இணையமும் பாடாய்ப் படுத்துகின்றன.//

      இங்கும் அதே நிலைமைதான் மேடம்.

      //கமென்ட் போயிருக்கானு தெரியலை. பார்க்கிறேன்.//

      அது ஈஸ்வரோ ரக்ஷது தான்.

      நான் சிலவற்றிற்கும் மட்டும் COPY செய்துகொண்டு அனுப்புவது உண்டு. பெரிய கமெண்ட் ஆக எழுதாமல் சின்னச்சின்னதாக 4-5 கமெண்ட்கூட கொடுப்பது உண்டு. ஒன்று போகாவிட்டாலும் மற்றது போகுமே என்ற எண்ணத்தில் தான்.

      நீக்கு
  32. தாயாரைப் பற்றிய பதிவிற்குப் பின் தந்தையைப் பற்றி எழுதி "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என உணர்த்திய விதம் அருமை! பொக்கிஷங்களைப் பற்றிய பதிவும் ஒரு பொக்கிஷமாகவே உள்ளது! நகைச்சுவை ததும்ப நல்லதொரு படைப்பை அளிக்க தங்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். தொடருங்கள் ஐயா! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. April 9, 2013 at 12:17 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //தாயாரைப் பற்றிய பதிவிற்குப் பின் தந்தையைப் பற்றி எழுதி "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என உணர்த்திய விதம் அருமை! பொக்கிஷங்களைப் பற்றிய பதிவும் ஒரு பொக்கிஷமாகவே உள்ளது! //

      ரொம்ப சந்தோஷம், சார்.

      //நகைச்சுவை ததும்ப நல்லதொரு படைப்பை அளிக்க தங்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். தொடருங்கள் ஐயா! தொடர்கிறேன்! நன்றி!//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
  33. ஆஸ்திக்கு ஒரு பிள்ளை என்று இதைத்தான் குறிப்பிடுகிறார்களோ,!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி April 9, 2013 at 4:35 AM

      //ஆஸ்திக்கு ஒரு பிள்ளை என்று இதைத்தான் குறிப்பிடுகிறார்களோ,!//

      இருக்கலாம்.

      ஆனால் ஆஸ்தி அதிகமாக அதிகமாக, குஸ்திகளும் அடிதடி சண்டைகளுமே பிள்ளைகளுக்கும் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

      ஒரே பிள்ளை தான் என்றால் பிரச்சனையே இல்லை தான்.

      MONETARY VALUE உள்ள பொருட்களாக என் தந்தை ஏதும் சேர்த்து வைத்து விட்டுச்செல்லாததால், எங்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல், இன்றுவரை எங்களின் உழைப்பை மட்டுமே நம்பி, ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவே இருக்க முடிகிறது. அதுவரை சந்தோஷமே.

      நீக்கு
  34. //இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)

    ம்ம்ம்ம் உண்மை ஐயா .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban April 9, 2013 at 6:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      *****இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)*****

      //ம்ம்ம்ம் உண்மை ஐயா .....//

      ரஸித்தீர்களா? சந்தோஷம்.

      >>>>>

      நீக்கு
  35. ஐயா நீங்கள் இப்பொழுது எங்களுக்கு பதிவைக்கொடுத்துள்ளதுகூட ஒரு மிக பெரிய பொக்கிஷமே .....

    உண்மையிலே உங்களை மாதிரி யாராலும் பொக்கிஷமாக அனைத்தையும் வைத்திருக்க முடியாது .... வாழ்த்துக்கள் ஐயா...
    உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு .... நன்றி....

    நானும் எங்க தாத்தாவின் மோதிரத்தை என் அப்பாவிடம் பொக்கிஷமாக வைத்துக்கொள்ள சொல்லிருந்தேன் ..... இன்னும் நிறைய பொக்கிஷமாக்கி இருக்கலாம் என்று இப்பொழுது தங்கள் பதிவை பார்த்தவுடன் தெரிகிறது.... நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban April 9, 2013 at 6:52 AM

      மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஐயா நீங்கள் இப்பொழுது எங்களுக்கு பதிவைக்கொடுத்துள்ளதுகூட ஒரு மிக பெரிய பொக்கிஷமே .....//

      மிக்க மகிழ்ச்சி.

      //உண்மையிலே உங்களை மாதிரி யாராலும் பொக்கிஷமாக அனைத்தையும் வைத்திருக்க முடியாது .... வாழ்த்துக்கள் ஐயா...
      உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு .... நன்றி....//

      ரொம்பவும் சந்தோஷம்.

      //நானும் எங்க தாத்தாவின் மோதிரத்தை என் அப்பாவிடம் பொக்கிஷமாக வைத்துக்கொள்ள சொல்லிருந்தேன் ..... இன்னும் நிறைய பொக்கிஷமாக்கி இருக்கலாம் என்று இப்பொழுது தங்கள் பதிவை பார்த்தவுடன் தெரிகிறது.... நன்றி....//

      எது எது எவ்வளவு நாட்கள் நம்மிடம் இருக்க வேண்டும் என்று நமக்குக் கொடுப்பினை உள்ளதோ, அவ்வளவு நாட்கள் மட்டுமே நம்மால் அவற்றைப்பொக்கிஷமாக நினைத்து பாதுகாக்க முடியும்.
      அதனால் போனதைப்பற்றி எதுவும் கவலைப்படாதீங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  36. உங்கள் தந்தையாரின் பூ்ஜைப் பொக்கிசங்கள் அருமையோஅருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி April 9, 2013 at 8:23 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் தந்தையாரின் பூ்ஜைப் பொக்கிசங்கள் அருமையோஅருமை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  37. Innum naan siriththukkondirukkiren, modiraththin ubayogangalaip padiththu!

    Yen thaaththavaip patriyum solvaargal, migavum kobakkaarar yendru! Avarun niraiya poojai seibavar!

    Ungal poojai arai migavum azhagaaga irukkirathu!

    Nandri!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sandhya April 9, 2013 at 8:31 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Innum naan siriththukkondirukkiren, modiraththin ubayogangalaip padiththu!
      இன்னும் நான் சிரித்துக்கொண்டிருக்கிறேன், மோதிரத்தின் உபயோகங்களைப்படித்து//

      மிக்க மகிழ்ச்சி. உங்களின் நகைச்சுவை உணர்வுக்கு மிக்க நன்றி.

      என்னுடைய பெரும்பாலான படைப்புகளில் நகைச்சுவை கலந்தே தான் இருக்கும். இந்த இணைப்பினை தயவுசெய்து SAVE செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      அதிலுள்ள இணைப்புகள் மூலம் என் பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள்.

      படித்தவற்றிற்கும், சிரிக்க வைத்த பகுதிகளுக்கும் மறக்காமல் கருத்து அளியுங்கள்.

      //Yen thaaththavaip patriyum solvaargal, migavum kobakkaarar yendru! Avarun niraiya poojai seibavar! என் தாத்தாவைப்பற்றியும் சொல்லுவார்கள், மிகவும் கோபக்காரர் என்று. அவரும் நிறைய பூஜை செய்பவர்//

      அப்படியா? இந்த பூஜை புனஷ்காரங்கள் செய்பவர்களிடம் கோபம் அதிகமாகத்தான் இருக்கும் போலிருக்கு. என்ன நாம் பூஜை செய்தும் கடவுளைக்காண முடியவில்லையே என்ற கோபமாக இருக்குமோ! ;)

      //Ungal poojai arai migavum azhagaaga irukkirathu!உங்கள் பூஜை அறை மிகவும் அழகாக இருக்கிறது//

      அப்படியா, சந்தோஷம். நேரில் வந்து பார்த்தால் நிச்சயம் இப்படிச் சொல்லவே மாட்டீர்கள். ;)

      //Nandri! நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  38. எத்தனை பேருக்குக் கிடைக்கும் இத்தனை
    அரிய பொக்கிஷங்கள்
    வீட்டில் அனைவரும் கண்ணாரச் சேவித்து
    மகிழ்ந்தோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S April 9, 2013 at 8:32 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //எத்தனை பேருக்குக் கிடைக்கும் இத்தனை அரிய பொக்கிஷங்கள்
      வீட்டில் அனைவரும் கண்ணாரச் சேவித்து மகிழ்ந்தோம் தொடர வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
  39. ( நான் இன்று எழுதிய கீழே சொன்ன கருத்துரை தங்கள் வலைப்பதிவில் பதிவாகவில்லை. எனவே இதனை இரண்டாம் முறையாக அனுப்பியுள்ளேன் )

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    // 7. அப்பா விட்டுச் சென்ற ஆஸ்திகள் //

    ஏழாவது பொக்கிஷமும் உங்கள் பெற்றோர் மீது நீங்கள் வைத்த அன்பை காட்டுவதாக அமைந்துள்ளது..

    அன்னையும் தந்தையும் தானே பாரில்
    அன்னையும் தந்தையும் தானே பாரில்
    அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
    அன்னையும் தந்தையும் தானே

    (பாடல்: பாபநாசம் சிவன் படம்: (ஹரிதாஸ் 1944)
    பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்)

    ( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ April 9, 2013 at 10:58 AM

      //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //( நான் இன்று எழுதிய கீழே சொன்ன கருத்துரை தங்கள் வலைப்பதிவில் பதிவாகவில்லை. எனவே இதனை இரண்டாம் முறையாக அனுப்பியுள்ளேன் )//

      மிக்க நன்றி, ஐயா. எனக்கு இது மட்டுமே வந்தது ஐயா. அதுவும் SPAM இல் சிக்கி இருந்தது. பிறகு அதிலிருந்து PUBLISH கொடுத்தேன். வேறு ஏதும் வரவில்லையே ஐயா.

      ***** 7. அப்பா விட்டுச் சென்ற ஆஸ்திகள் *****

      //ஏழாவது பொக்கிஷமும் உங்கள் பெற்றோர் மீது நீங்கள் வைத்த அன்பை காட்டுவதாக அமைந்துள்ளது..//

      மிக்க மகிழ்ச்சி ஐயா.

      //அன்னையும் தந்தையும் தானே பாரில்
      அன்னையும் தந்தையும் தானே பாரில்
      அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
      அன்னையும் தந்தையும் தானே

      (பாடல்: பாபநாசம் சிவன் படம்: (ஹரிதாஸ் 1944)
      பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்)//

      நான் பிறப்பதற்கு 6 வருடங்கள் முன்பே வந்துள்ள படம். ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனில் [கொடைக்கானல் ஒளிபரப்பில்] ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி.யில் பார்த்த ஞாபகம் உள்ளது. “சக்குபாய்” என்ற வேறொரு மிகப்பழைய படம் கூட 1985 இல் ஒளிபரப்பினார்கள்.

      //( இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)//

      மிக்க நன்றி, ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  40. இவ்வளவு பொக்கிஷங்களை வைத்துக் கப்பாற்றி வரும் உங்களைப் பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் April 9, 2013 at 7:20 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இவ்வளவு பொக்கிஷங்களை வைத்துக் கப்பாற்றி வரும் உங்களைப் பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது.//

      அடடா ! அப்படியா சொல்றீங்க!! சந்தோஷம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.


      நீக்கு
  41. தங்கள் தந்தையின் நினைவாக தாங்கள் வைத்திருக்கும் பொருட்களோடு அவரைப் பற்றிய நினைவுகளும் பொக்கிஷமாய் மின்னுகின்றன. தந்தையாரைப் பற்றிய வர்ணனைகள் அவரை நேரில் பார்த்தாற்போன்ற பிரமையை உருவாக்குகின்றன. தாய் தந்தையரைப் போற்றும் அருமையானப் பிள்ளையைப் பெற்றமைக்காக அவர் பெரிதும் மகிழ்ந்திருப்பார்.

    பதிவினூடே தங்கள் நகைச்சுவை உணர்வையும் காட்டத்தவறவில்லை.

    \\இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)\\

    மிகவும் ரசித்தேன். மோதிரக்கையால் குட்டு வாங்க வேண்டும் என்பதற்கான தங்கள் கருத்து வியக்கவைப்பதோடு ஒருவேளை இப்படியும் இருக்கலாம் என்று ஒப்புக்கொள்ளவும் வைக்கிறது.


    \\’குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்படணும்’ என்று ஒரு பழமொழியும் உண்டு.


    ஒருவேளை குட்டுப்படுபவர் தலையில் குட்டியவரின் மோதிரம் நழுவி விழுந்து விடலாமோ என்னவோ! அதுவரை குட்டுப்பட்டவருக்கும் ஒரு லாபம் தானே! என்றும் கூட நான் என் கற்பனையில் நினைத்து மகிழ்வதும் உண்டு.\\

    பாராட்டுகள் வை.கோ.சார். தங்கள் அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி April 9, 2013 at 8:42 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தங்கள் தந்தையின் நினைவாக தாங்கள் வைத்திருக்கும் பொருட்களோடு அவரைப் பற்றிய நினைவுகளும் பொக்கிஷமாய் மின்னுகின்றன. தந்தையாரைப் பற்றிய வர்ணனைகள் அவரை நேரில் பார்த்தாற்போன்ற பிரமையை உருவாக்குகின்றன. தாய் தந்தையரைப் போற்றும் அருமையானப் பிள்ளையைப் பெற்றமைக்காக அவர் பெரிதும் மகிழ்ந்திருப்பார். //

      என் அருமை முழுவதுமாகத் தெரிவதற்குள் என் தந்தை காலமாகிவிட்டார். ஓரளவு மட்டுமே தெரிந்து கொண்டார்.

      என் தந்தை காலமானபின் 22 ஆண்டுகள் என் தாயார் என்னுடனேயே இருந்து, என் அருமை பெருமைகளை முழுவதுமாகத் தெரிந்து கொண்டார்கள். எல்லாம் என் அம்மாவின் ஆத்மார்த்தமான ஆசிர்வாதங்கள் மட்டுமே.

      //பதிவினூடே தங்கள் நகைச்சுவை உணர்வையும் காட்டத்தவறவில்லை. //

      தங்கள் ரசனைக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      *****இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)*****

      //மிகவும் ரசித்தேன். //

      மிகவும் சந்தோஷம்.

      *****’குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்படணும்’ என்று ஒரு பழமொழியும் உண்டு. ஒருவேளை குட்டுப்படுபவர் தலையில் குட்டியவரின் மோதிரம் நழுவி விழுந்து விடலாமோ என்னவோ! அதுவரை குட்டுப்பட்டவருக்கும் ஒரு லாபம் தானே! என்றும் கூட நான் என் கற்பனையில் நினைத்து மகிழ்வதும் உண்டு.*****

      //மோதிரக்கையால் குட்டு வாங்க வேண்டும் என்பதற்கான தங்கள் கருத்து வியக்கவைப்பதோடு ஒருவேளை இப்படியும் இருக்கலாம் என்று ஒப்புக்கொள்ளவும் வைக்கிறது. //

      நான் எல்லாப்பழமொழிகளையும் ஆராய்ந்து பார்த்து, கற்பனை செய்து, ஒரு சின்ன குட்டிக்கதை மனதில் தயார் செய்து விடுவேன்.

      என் மனைவியே என்னிடம், நிறைய பழமொழிகளைப்பற்றி அர்த்தம் கேட்பாள். அவளுக்கு இந்தக்கதைகளைச்சொல்லி விளக்குவேன்.

      //பாராட்டுகள் வை.கோ.சார். தங்கள் அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்கள்.//

      மிகவும் சந்தோஷம் மேடம்.

      இந்தத்தொடரின் மற்ற பகுதிகளுக்கான தங்களின் இன்றைய பின்னூட்டங்களுக்கும் நான் பொறுமையாக பதில் அளிப்பேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  42. இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)

    கண்ணதாசன் சொல்வார் ஆற்றில் நேராக நின்றால் தண்ணீர் மூக்குவரை ஓடிய காலம் போய் இப்போது தலைகீழாக நின்றால்தான் மூக்கு நுனிக்கு தண்ணீர் வருகிறது என்று ..!நினைவு வந்தது ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி April 9, 2013 at 11:59 PM

      வாங்கோ, தங்களின் மீண்டும் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியும் புத்துணர்வும் உற்சாகமும் அளிக்கிறது. ;)))))

      *****இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)*****

      //கண்ணதாசன் சொல்வார் ஆற்றில் நேராக நின்றால் தண்ணீர் மூக்குவரை ஓடிய காலம் போய் இப்போது தலைகீழாக நின்றால்தான் மூக்கு நுனிக்கு தண்ணீர் வருகிறது என்று ..!நினைவு வந்தது ..! //

      அப்படியா மேடம். இது கண்ணதாசன் சொன்னதா? இருக்கலாம். அது எனக்கு இதுவரை தெரியாது.

      ஏதோ நான் எழுதும்போது எனக்கு 11th hour இல் இது தோன்றியது. ஒரு நகைச்சுவையாக இருக்கட்டுமே என எழுதினேன். நான் இது என்னுடைய புதிய கண்டுபிடிப்போ என நினைத்துக் கொண்டிருந்தேன்.

      நல்லவேளையாகத் தெரிவித்துள்ளீர்கள். மிக்க நன்றி. சந்தோஷம்.
      இதுபோல எதுவாக இருந்தாலும் சொல்லுங்கோ, மேடம், ப்ளீஸ்.

      நீக்கு
  43. அருமையான தகவல்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rathnavel Natarajan April 10, 2013 at 12:42 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //அருமையான தகவல்கள். நன்றி ஐயா.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      நீக்கு
  44. மிகவும் நெகிழவைக்கும் உங்க தந்தையாரின் ஞாபகார்த்தமான பொருட்கள்.உங்களுக்கே உரிய நகைச்சுவையையும் சேர்த்து கொடுத்திருக்கிறீங்க. இத்தனை பொருட்களையும் எப்படி சேர்த்து அதைப்பற்றிய சம்பவங்களையும் மற‌க்காமல் எழுதுறீங்க.இது மெகாசீரியல்மாதிரி மெகாபொக்கிஷத்தொடர்போல் உள்ளது.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu April 10, 2013 at 5:34 AM

      வாங்கோ அம்முலு, வணக்கம்.

      //மிகவும் நெகிழவைக்கும் உங்க தந்தையாரின் ஞாபகார்த்தமான பொருட்கள்.உங்களுக்கே உரிய நகைச்சுவையையும் சேர்த்து கொடுத்திருக்கிறீங்க. இத்தனை பொருட்களையும் எப்படி சேர்த்து அதைப்பற்றிய சம்பவங்களையும் மற‌க்காமல் எழுதுறீங்க.இது மெகாசீரியல்மாதிரி மெகாபொக்கிஷத்தொடர்போல் உள்ளது.நன்றி.//

      ரொம்பவும் சந்தோஷம் அம்முலு,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  45. ****’குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்படணும்’ என்று ஒரு பழமொழியும் உண்டு. ஒருவேளை குட்டுப்படுபவர் தலையில் குட்டியவரின் மோதிரம் நழுவி விழுந்து விடலாமோ என்னவோ! அதுவரை குட்டுப்பட்டவருக்கும் ஒரு லாபம் தானே! என்றும் கூட நான் என் கற்பனையில் நினைத்து மகிழ்வதும் உண்டு.*****

    சட்டசபையில் முன்னால் அமைச்சர் ஒருவர் தாமரைக்கனி என்று நினைக்கிறேன் -மற்றொரு அமைச்சரை மெகா சைஸ் மோதிரம் அணிந்து தாக்கியது - தொலைக்காட்சியிலும் , பத்திரிகைகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது ஏனோ நினைவு வருகிறது .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிApril 10, 2013 at 10:45 PM

      வாங்கோ வாங்கோ, வந்தனங்கள்.

      ****’குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்படணும்’ என்று ஒரு பழமொழியும் உண்டு. ஒருவேளை குட்டுப்படுபவர் தலையில் குட்டியவரின் மோதிரம் நழுவி விழுந்து விடலாமோ என்னவோ! அதுவரை குட்டுப்பட்டவருக்கும் ஒரு லாபம் தானே! என்றும் கூட நான் என் கற்பனையில் நினைத்து மகிழ்வதும் உண்டு.*****

      //சட்டசபையில் முன்னால் அமைச்சர் ஒருவர் தாமரைக்கனி என்று நினைக்கிறேன் -மற்றொரு அமைச்சரை மெகா சைஸ் மோதிரம் அணிந்து தாக்கியது - தொலைக்காட்சியிலும் , பத்திரிகைகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது ஏனோ நினைவு வருகிறது .....//

      ஆமாம். ஆமாம். எனக்கும் இந்த நிகழ்வு மிக நன்றாக நினைவில் உள்ளது. அது மோதிரம் அல்ல ..... மோதிரம் போன்ற மிகப்பெரிய கேடயம் .... ஆயுதம் ..... முறம் போல தோற்றமளிக்கும். ;)

      என் VG போட்ட T.V.SHAPE மோதிரமே 2 பவுன் என்பதால், அது
      சுமார் 10 பவுனாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ;)))))

      தங்களின் மீண்டும் வருகைக்கும் நகைச்சுவையான நிகழ்ச்சியொன்றை நினைவூட்டி மகிழ வைத்ததற்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  46. இந்தப் பகுதியை எப்படி விட்டேன் என்று தெரியவில்லை. மூன்று வேலையும் சந்தியாவந்தனம் செய்கிறீர்கள் என்பது சிறப்பு.

    தந்தை கொடுத்துள்ள பொக்கிஷம் போற்றப் படவேண்டிய ஒன்று.

    தலைகீழாக நின்றால்தான் இந்நாட்களில் ஆறுகளில் கழுத்தளவு நீர் இருக்கும் என்று எழுதியிருப்பது சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  47. ஸ்ரீராம். April 13, 2013 at 1:28 AM

    வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

    //இந்தப் பகுதியை எப்படி விட்டேன் என்று தெரியவில்லை.//

    அதனால் பரவாயில்லை ஸ்ரீராம். எனக்கும் அது ஆச்சர்யமாகவே இருந்தது. .

    //மூன்று வேலையும் சந்தியாவந்தனம் செய்கிறீர்கள் என்பது சிறப்பு.//

    ஏதோ முடிந்தவரை விடாமல் செய்யணும் என்பதே ஆசை. உலக க்ஷேமத்திற்காக செய்வது அல்லவா! மனதுக்கும் குற்ற உணர்வு ஏதும் இல்லாமல் ஒருவித நிம்மதியைத்தருவதாக உள்ளது.

    அலுவலகம் சென்ற நாட்களில் மாத்யான்னிஹம் மட்டும் அடிக்கடி செய்யமுடியாமல் விட்டுப்போய் விடுவது உண்டு..

    //தந்தை கொடுத்துள்ள பொக்கிஷம் போற்றப் படவேண்டிய ஒன்று.//

    ;))))) சந்தோஷம்.

    //தலைகீழாக நின்றால்தான் இந்நாட்களில் ஆறுகளில் கழுத்தளவு நீர் இருக்கும் என்று எழுதியிருப்பது சிரிப்பு.//

    இதைப்பற்றி கவியரசு கண்ணதாசன் ஒருமுறை வேறு விதமாகச் சொல்லியிருக்கிறாராம். அதை மேலே எழுதியுள்ளார்கள். நானும் அதையே இங்கு கீழே கொடுத்துள்ளேன். இருப்பினும் இந்த செய்தி எனக்கு உண்மையிலேயே இதுவரை தெரியாது, ஸ்ரீராம்.

    -=-=-=-=-=-=-=\-=-=-=-=-=-
    இராஜராஜேஸ்வரிApril 9, 2013 at 11:59 PM

    *****இன்று சில ஆறுகளில் மட்டுமே கொஞ்சமாக ஜலம் உள்ளது. நாம் அங்கு போய் தலைகீழாக நின்றால் மட்டுமே, நம் கழுத்தளவு ஜலம் இருக்கும். ;)*****

    கண்ணதாசன் சொல்வார் ஆற்றில் நேராக நின்றால் தண்ணீர் மூக்குவரை ஓடிய காலம் போய் இப்போது தலைகீழாக நின்றால்தான் மூக்கு நுனிக்கு தண்ணீர் வருகிறது என்று ..!நினைவு வந்தது ..!
    -=-=-=-=-=-=-=-=-=-=-

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  48. தங்கள் தந்தையாரிடமிருந்து பெற்றுக்கொண்ட பூஜை பொருட்கள் சிறந்த பொக்கிஷங்கள் .
    அந்த சந்தன கல் எங்க வீட்டிலும் மிருந்தது ..,,சந்தனம் அரைத்து வெயில் காலங்களில் பூசுவோம் அரைத்த பின் எடுத்து வைக்க .மறந்துபோய் நடக்கும்போது பெரு ர விரல் நகம் உடைபட்ட அனுபவமும் உண்டு .அவ்ளோ ஸ்ட்ராங் கல் .
    அந்த வெள்ளி கிண்டி .அதில் கங்கா நீர் ஊற்றி வைப்பதற்க்கா .

    மோதிரத்தின் உதவியால் இரண்டு லோகத்துக்கும் பயணம் போகலாம் ....எதற்கும் முதலுதவி பெட்டி மட்டும் கொண்டு போங்க வேறு ஹான்ட் லக்கேஜ் வேண்டாம் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin April 15, 2013 at 3:27 AM

      வணக்கம் நிர்மலா, வாங்கோ.

      //தங்கள் தந்தையாரிடமிருந்து பெற்றுக்கொண்ட பூஜை பொருட்கள் சிறந்த பொக்கிஷங்கள்.//

      சந்தோஷம்ம்மா!

      //அந்த சந்தன கல் எங்க வீட்டிலும் மிருந்தது ..,, சந்தனம் அரைத்து வெயில் காலங்களில் பூசுவோம் //

      தங்களின் இந்தக்கருத்துக்கள் சந்தனம் போல கமகமவென்று நறுமணம் கமழ்கிறது. மிக்க மகிழ்ச்சி.

      //அரைத்த பின் எடுத்து வைக்க மறந்துபோய் நடக்கும்போது பெரும் விரல் நகம் உடைபட்ட அனுபவமும் உண்டு.//

      அடப்பாவமே! சந்தனக்கல் + கட்டை இரண்டையும், பூஜைக்கு சந்தனம் அரைத்த உடனேயே, அரைத்தவரே சுத்தமாக அலம்பி வைத்துவிட வேண்டுமாம்.

      அப்போதுதான் பூஜைக்கு சந்தனம் அரைத்த பலன் முழுவதும் அவருக்குக்கிடைக்குமாம்.

      இதை என் அப்பா அடிக்கடிச் சொல்லிச்சொல்லி, நானும் பயந்தபடி அதுபோலவே செய்துள்ளேன். இப்போதும் அவர் சொன்னதை நினைத்துக்கொண்டு அப்படியே செய்து வருகிறேன்.

      அதனால் இதுவரை நான் [உங்களைப்போல்] என் கால் நகத்தை இந்த விஷயத்தில் பெயர்த்துக்கொண்டதே இல்லை. ;)

      மேலும் ஒரு தகவல்.

      சந்தனக்கல்லின் மேல் எதையுமே வைக்கக் கூடாதாம். Even சந்தக்கட்டையைக் கூட வைக்கக்கூடாதாம். அது ஒரு சாஸ்திரமாம். சந்தனக்கல் என்பது சிவலிங்கம் போலவாம். அரைக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அதன் தலையில் எதையுமே வைக்கக்கூடாது என்கிறார்கள்.

      //அவ்ளோ ஸ்ட்ராங் கல்.//

      ஆமாம் அது ஸ்ட்ராங்கான கல் தான். IMMOVABLE PROPERTY. [அசையாச்சொத்து]

      சந்தனக்கட்டை மட்டுமே MOVABLE PROPERTY. ;) [அசையும் சொத்து.]

      //அந்த வெள்ளி கிண்டி .அதில் கங்கா நீர் ஊற்றி வைப்பதற்க்கா.//

      அப்படி அல்ல. கங்கை நீர் அடைத்து சீல் செய்த சொம்புகள் தனியாக உள்ளன.

      இந்த வெள்ளிக் கிண்டியில், நமக்குக் கிடைக்கும் சுத்தமான நல்ல நீரை ஊற்றி, தினமும் மூன்று வேளைகள், மந்திரம் சொல்லி, நவக்கிரஹங்களுக்கு நீர்க்கடன் செலுத்தி, காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடுவது உண்டு. இது உலக க்ஷேமத்திற்காகச் செய்யும் ஓர் உயர்ந்த வழிபாடாகும்.

      //மோதிரத்தின் உதவியால் இரண்டு லோகத்துக்கும் பயணம் போகலாம் .... எதற்கும் முதலுதவி பெட்டி மட்டும் கொண்டு போங்க வேறு ஹாண்ட் லக்கேஜ் வேண்டாம் :))//

      ஆஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! நல்ல ஐடியா! ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.

      நீக்கு
  49. அனைத்து பொக்கிஷ பதிவும் மிக மிக அருமையாக நினைவு வைத்து ஒன்று விடாமல் எழுதி இருக்கீறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal April 16, 2013 at 3:38 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைத்து பொக்கிஷ பதிவும் மிக மிக அருமையாக நினைவு வைத்து ஒன்று விடாமல் எழுதி இருக்கீறீர்கள்.//

      இதைக் கேட்கவே எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      ஏதோ என் நினைவில் நிற்பவற்றில் சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

      நீக்கு
  50. வெள்ளி கெண்டி பார்த்ததும் அம்மா அவங்க அப்பா வாங்கி கொடுத்தது என்று ரொம்ப நாட்களாக பத்திர படுத்தி வந்தாங்க

    அதே போல் ஓவல் ஷேப் வெள்ளி தட்டும் அப்பா கொடுத்தது என்று பத்திர படுத்தி கொண்டு இருக்கிறாரக்ள்

    இதை பார்த்ததும் அந்த ஞாபகம் வந்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal April 16, 2013 at 3:40 AM

      //வெள்ளி கெண்டி பார்த்ததும் அம்மா அவங்க அப்பா வாங்கி கொடுத்தது என்று ரொம்ப நாட்களாக பத்திர படுத்தி வந்தாங்க;
      அதே போல் ஓவல் ஷேப் வெள்ளி தட்டும் அப்பா கொடுத்தது என்று பத்திர படுத்தி கொண்டு இருக்கிறாரக்ள்.//

      அந்தக்காலத்தில் சின்னக் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வெள்ளிப் பாலாடை, வெள்ளிக்கெண்டி முதலியன பயன் படுத்துவார்கள். பாலாடையின் நுனி குழந்தை வாய் பகுதியைக் கீறி விடாதபடி கெட்டியாக மொக்கையாக இருக்க வேண்டும். SHARP ஆக இருக்கக்கூடாது. அதுபோலவே கெண்டியின் வாய்ப்பகுதியும். இதுபோன்ற குழந்தைகளுக்காக வாங்கப்படும் பாலாடை, கெண்டி, கொலுசு, வளையல், அரணா, செயின், குட்டி மோதிரம், கைக்காப்புகள், கால் தண்டைகள் முதலியன பொக்கிஷமாகப் பாதுகாத்து தனியே வைத்திருப்பார்கள். பிறகு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குப் போட்டு அழகு பார்ப்பார்கள்.

      ஓவல் ஷேப் வெள்ளித்தட்டு இன்றும் பலர் வீடுகளில் சாப்பிடப் பயன்படுத்தி வருகிறார்கள். நானும் அதில் தான் இன்று வரை சாப்பிட்டு வருகிறேன்.

      //இதை பார்த்ததும் அந்த ஞாபகம் வந்து விட்டது//

      மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  51. இந்த சந்தன கட்டை பார்த்ததும்
    என் அப்பா ஞாபகம் தான் வருகிறது.
    வெயில் காலம் வந்து விட்டால், வேர்குர் வராமல் இருக்க , சந்தனம் இழைப்பதற்கென்ற உள்ள பிரத்யேக கட்டையில் வைத்து இழைத்து எங்க எல்லாருக்கும் தேய்த்து கொள்ள கொடுபபர்கள்.
    அப்பாவை விட நம் மேல் அக்கறை கொள்வோர் யார் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal April 16, 2013 at 3:43 AM

      //இந்த சந்தன கட்டை பார்த்ததும் என் அப்பா ஞாபகம் தான் வருகிறது. வெயில் காலம் வந்து விட்டால், வேர்குர் வராமல் இருக்க, சந்தனம் இழைப்பதற்கென்ற உள்ள பிரத்யேக கட்டையில் வைத்து இழைத்து எங்க எல்லாருக்கும் தேய்த்து கொள்ள கொடுபபர்கள். அப்பாவை விட நம் மேல் அக்கறை கொள்வோர் யார் இருக்கிறார்கள்? //

      இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. அழகாக நினைவு கூர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். ;)

      ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த சந்தனம் என்பது. ;)))))

      ஒருமுறை நீதிபதி திரு. மு.மு. இஸ்மாயில் என்பவர் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளை சந்திக்கச் செல்கிறார். இருவரும் வெகுநேரம் பலவிஷயங்களைப்பற்றி பேசி மகிழ்கிறார்கள்.

      நீதிபதி கடைசியாக விடைபெறும் முன்பு, ஸ்ரீ மஹாஸ்வாமிகள், ஸ்ரீமடத்து சிப்பந்திகளிடம் ஏதோ சொல்ல, உடனே ஸ்ரீமடத்தின் அலுவலகத்திலிருந்து அரைத்த சந்தனம், ஒரு வெள்ளிச்சிமிழில் வரவழைக்கப்பட்டு, நீதிபதி அவர்களுக்கு, ஸ்ரீமடத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

      அதை நீதிபதி அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் பெற்று, பூசிச்சென்றார், என நான் ஒரு புத்தகத்தில் படித்து அறிந்தேன்.

      நீக்கு
  52. உங்கள் வயதில் நான் இவ்வளவு எழுதுவேனா என்று யோசிக்கிறேன்.
    உங்களுக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal April 16, 2013 at 3:45 AM

      தங்களின் கருத்துக்களும் என் பதில்களும் சேர்த்து பின்னூட்ட எண்ணிக்கை 100 எனக் காட்டி மகிழ்விக்கிறது. 100/100 மார்க் வாங்கியுள்ள அதிர்ஷ்டசாலி தான் நீங்களும். ;)))))

      மேலே சொல்ல மறந்து விட்டேன். சந்தனம் எங்கள் கோயில்களில் முக்கிய இடத்தைப்பெறுவது போலவே, தங்களின் தர்காக்களிலும் “சந்தனக்கூடு” என்ற விழாவில் மிக முக்கிய இடம் வகிக்கிறது, பாருங்கள். ;)

      //உங்கள் வயதில் நான் இவ்வளவு எழுதுவேனா என்று
      யோசிக்கிறேன்.உங்களுக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.//

      இதைவிட நிறையாவே எழுதுவீர்கள்.

      நான் இதிலிருந்தெல்லாம் கட்டாய ஓய்வு பெற வேண்டிய நிலைமைக்கு ஆளாகிக்கொண்டு வருகிறேன். ;(

      தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு, இந்தத்தொடர் பதிவினை சிறப்பித்துள்ளதற்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      இதுவரை நான் வெளியிட்டுள்ள இந்தத்தொடரின் அனைத்து 8 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ள இருபதாவது நபர் தாங்கள் என்ற சிறப்பிடத்தைப்பெற்றுள்ளீர்கள்.

      அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்களும், நன்றிகளும் கூறிக்கொள்கிறேன்..

      நீக்கு
  53. இது அநியாயம் அக்கிரமம்.. 100 ஆவது பின்னூட்டம் ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ...:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira April 16, 2013 at 11:08 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //இது அநியாயம் அக்கிரமம்.. 100 ஆவது பின்னூட்டம் ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ...:(//

      அடடா, அப்படியெல்லாம் நினைக்காதீங்கோ.

      100ஐ விட 101 மிகச்சிறந்த எண்ணாக்கும்.

      [மொய் பணம் 100 என்று தராமல் 101 என்று தருவார்கள் தெரியுமா! அதாவது 100 உடன் ரெளண்ட் ஆக நிற்கக்கூடாது, மேலும் வளரணும் என்பதால் மட்டுமே.]

      அது போல 108 என்பது அஷ்டோத்ரம் என்ற சிறப்பு வாய்ந்த எண்ணாகும். ஒரு தெய்வீகப்பதிவரின் வீட்டுக்கதவு எண் மிகச்சிறப்பான 108 என அமைந்துள்ளதாக்கும்.

      அதனால் 101 முதல் 110 வரை உங்களுக்கே அமைந்துள்ளது மிகச்சிறப்பு. எல்லாவற்றிலும் 1 வருகிறது பாருங்கோ. நீங்க தான் எல்லாவற்றிலும் 1ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டூஊஊஊ எனச் சொல்லாமல் சொல்கிறதூஊஊஊ.

      நீக்கு
  54. //என் தந்தை பறங்கிப்பழம் போல சிவப்பாக தொந்தியும் தொப்பையுமாக நல்ல உயரமாக குண்டாக இருப்பார். மொத்தத்தில் சிவப்பழமாக இருப்பார். ///

    அவர் இப்போ இல்லை எனும் தைரியத்திலதானே பறங்கிப்பழம் என்கிறீங்க:)).. பொறுங்கோ சொல்லிக்கொடுக்கிறேன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira April 16, 2013 at 11:09 AM

      *****என் தந்தை பறங்கிப்பழம் போல சிவப்பாக தொந்தியும் தொப்பையுமாக நல்ல உயரமாக குண்டாக இருப்பார். மொத்தத்தில் சிவப்பழமாக இருப்பார்.*****

      //அவர் இப்போ இல்லை எனும் தைரியத்திலதானே பறங்கிப்பழம் என்கிறீங்க:)).. பொறுங்கோ சொல்லிக்கொடுக்கிறேன்ன்:))//

      அப்படியில்லை அதிரா. பறங்கிக்காய் / பறங்கிப்பழம் ஆகியவற்றைப்பிளந்தால் அது ஒரு ஜொலிக்கும் கலராக சிவப்பாக இருக்கும் தெரியுமா? அதுபோல அவரும் கலராக இருப்பார். அதைத்தான் சொன்னேன்.

      எனக்கு மொத்தம் 8 அத்தைகள், ஒரு பெரியப்பா, ஒரு சித்தப்பா. ஆக மொத்தம் என் அப்பாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர்கள்.

      அதில் ஒரு அத்தை [அதாவது என் மனைவியின் அம்மாவின் அம்மா] பசுமஞ்சளைப்புட்டது போல பளிச்சுன்னு கலரா இருப்பார்களாம். இதை என் அப்பாவே என்னிடம் சொல்லி நான் கேட்டுள்ளேன்.

      ஆனாலும் நான் அந்த அத்தையைப் பார்த்தது இல்லை. பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை. நான் என் அப்பாவுக்கு கடைசியாகப்பிறந்தவன். நான் பிறப்பதற்கு முன்பே அந்த அத்தைக் காலமாகி விட்டார்கள். ;(

      நீக்கு
  55. பித்தளையில் நீங்கள் பாவிக்கும் பொருட்களாஇப் பார்க்க ஊர் நினைவு வருகிறது. எங்கள் ஊர் வீட்டிலும் பித்தளாஇ செம்பு, மூக்குப்பேணி, குடம், தாம்பாளம் என பல பொருட்கள் பொக்கிஷமாக இருக்கு, ஆனா பாவிப்பதில்லை, இப்போ எங்குமே சில்வர் மயமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira April 16, 2013 at 11:10 AM

      //பித்தளையில் நீங்கள் பாவிக்கும் பொருட்களைப் பார்க்க ஊர் நினைவு வருகிறது. எங்கள் ஊர் வீட்டிலும் பித்தளைச் செம்பு, மூக்குப்பேணி, குடம், தாம்பாளம் என பல பொருட்கள் பொக்கிஷமாக இருக்கு, ஆனா பாவிப்பதில்லை.//

      ’பாவிப்பது’ என்றால் ‘உபயோகப்படுத்துவது’ என்று அர்த்தமா அதிரா? அழகாக வேடிக்கையாக உள்ளது, நீங்கள் பாவிக்கும் [உபயோகிக்கும்] சொற்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ;)

      //இப்போ எங்குமே சில்வர் மயமாகிவிட்டது.//

      நோ, சில்வர் மயமல்ல. எவர்சில்வர் மயம் என்று சொல்லுங்கோ.

      சில்வர் என்றால் அது வெள்ளியைக்குறிக்கும் சொல்லாகும்.

      'EVER SILVER' IS NEVER SILVER.

      எவர்சில்வர் என்பது நன்கு பாலீஷ் செய்யப்பட்ட இரும்பு மட்டுமே. அது ஒருபோதும் சில்வர் ஆகாது.

      நீக்கு
  56. தலைத் தீபாவளிக்கு மோதிரம் கிடைச்சிருக்கு உங்களுக்கு... ஏன் அதைப் போடமாட்டீங்களோ?..

    //என்னைப்பொறுத்தவரை,
    அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ள, மோதிரம்
    மிகவும் உபயோகப்படுவதாகத் தோன்றுகிறது.
    // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):):).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira April 16, 2013 at 11:12 AM

      //தலைத் தீபாவளிக்கு மோதிரம் கிடைச்சிருக்கு உங்களுக்கு... ஏன் அதைப் போடமாட்டீங்களோ?..//

      அதையும் அவ்வப்போது போட்டுக்கொள்வது உண்டு. சைஸ் துவாரம் [Hole Dia.] இன்னும் விரலுக்குப்பொருத்தமாகவே உள்ளது. ஆனால் சற்றே தேய்ந்து போய் உள்ளது.

      *****என்னைப்பொறுத்தவரை, அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ள, மோதிரம் மிகவும் உபயோகப்படுவதாகத் தோன்றுகிறது.*****

      // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):):). //

      உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்கும் அது உண்மை என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொல்லிவிட்டீர்கள்.

      சாஸ்திரப்படி ஆண்கள் தனது வலதுகையில் சுண்டிவிரலுக்கு அடுத்த பவித்ர விரல் எனச்சொல்லப்படும், மோதிர விரலில் இதை அணிந்து கொண்டு, மந்திரம் சொல்லி அர்க்யம் தர வேண்டும். அர்க்யம் என்றால் நீர்கடன் என்று சொல்வார்களே அது தான்.

      அந்தக்காலத்தில் எல்லோராலும் மோதிரம் அணிய வசதி இருக்காது என்பதால், தர்ப்பையை [நாணல் புல்] மோதிரம் போலச் செய்து ’பவித்ரம்’ என்ற பெயரில், விசேஷ நாட்களில் பூஜை முதலியன செய்யும் போது அணியச்செய்வார்கள்.

      தர்ப்பை என்பது மிகவும் பவித்ரமான [PURITY ARTICLE] பொருளாகும்.

      தபஸ் [தவம்] செய்யும் முனிவர்களெல்லாம், தர்ப்பையிலேயே ஆசனம் செய்து அமர்வது உண்டு. அதற்கு தர்ப்பாஸனம் என்று பெயர். அதாவது தர்ப்பைப்புல்லினால் செய்யப்பட்ட ஆசனம் [இருக்கை] என்று பொருள்.

      நீக்கு
  57. ///அதனால் தான் ஒருவேளை
    நான் இன்று ஜொலிக்கிறேனோ?
    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))///

    இருக்கலாம் இருக்கலாம்ம்...:)) எல்லாம் ஆன்ரியின் மகிமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athiraApril 16, 2013 at 11:28 AM

      *****அதனால் தான் ஒருவேளை நான் இன்று ஜொலிக்கிறேனோ?
      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))*****

      //இருக்கலாம் இருக்கலாம்ம்...:)) எல்லாம் ஆன்ரியின் மகிமை..//

      அது யாரு ஆன்ரி?

      ஓஹோ ஓஹோ புரிந்து விட்டது, அதிரா.

      அதே அதே !!

      [எதையாவது நான் சொல்லி, வீண் குழப்பங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. என் மருமகளில் சிலர், சிலசமயம் இதையெல்லாம் படிக்கிறார்கள் எனவும் தெரிகிறது. ;) ]

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அதிரா.

      நீக்கு
  58. படங்களுடன் பகிர்ந்திருக்கும் பகிர்வு அருமை....

    பதிலளிநீக்கு
  59. சே. குமார்April 19, 2013 at 12:48 AM

    வாருங்கள், வணக்கம்.

    //படங்களுடன் பகிர்ந்திருக்கும் பகிர்வு அருமை....//

    தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமை’யென்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  60. தந்தைக்கு செலுத்திய மரியாதை... மனதை நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
  61. கோவை2தில்லி April 24, 2013 at 11:54 PM

    வாங்கோ, வணக்கம்.

    //தந்தைக்கு செலுத்திய மரியாதை... மனதை நெகிழ வைத்தது.//

    தங்களின் அன்பான வருகைக்கும், மனதை நெகிழ வைத்ததாகச் சொல்லியுள்ள இனிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  62. Enjoyed your nostalgic post Gopu Sir. The practice of showing a new ring.... hearing for the first time.

    Yeah as you said now water is scarce in rivers.

    I am now into my nostalgic childhood days..... miss my father very much :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mira April 28, 2013 at 6:00 AM

      WELCOME TO YOU MIRA. HOW ARE YOU? I AM VERY HAPPY TO SEE YOU HERE AFTER A VERY LONG TIME.

      //Enjoyed your nostalgic post Gopu Sir. The practice of showing a new ring.... hearing for the first time.//

      ;))))) VERY GLAD. YES IT WAS A PRACTICE ONCE UPON A TIME.

      //Yeah as you said now water is scarce in rivers.//

      NO WATER AT ALL IN OUR TIRUCHI CAUVERY RIVER. ;(((((

      //I am now into my nostalgic childhood days..... miss my father very much :-(//

      I AM VERY SORRY ம்மா. வருத்தப்படாதீங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மீரா.

      நீக்கு
  63. மோதிரத்திற்கு இவ்வளவு உபயோகங்கள் உண்டா? தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  64. தந்தலயின் பொக்கிஷமான சிவ பூஜை சாமான்கள் உங்களுக்கு கிடைத்தது அவரின் ஆசீர் வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்தது போலதானே. நீங்க சிவ பூஜைலாம் பண்றீங்களா? அந்த கால தங்கம் விலை நம்பவே முடியல மோதிரம் பற்றி சொல்லும் போது வழக்கமான உங்க நகைச்சுவை வந்துடுத்தே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 16, 2015 at 6:27 PM

      வாங்கோ ... வணக்கம்மா.

      //தந்தையின் பொக்கிஷமான சிவ பூஜை சாமான்கள் உங்களுக்கு கிடைத்தது அவரின் ஆசீர் வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்தது போலதானே.//

      ஆமாம். அதே அதே :)

      //நீங்க சிவ பூஜைலாம் பண்றீங்களா?//

      இல்லை. இப்போது நான் செய்வது இல்லை. அதைப்பற்றி தொடர்ந்து அடுத்த பதிவுகளில் வரும் பாருங்கோ.

      //அந்த கால தங்கம் விலை நம்பவே முடியல.//

      நம்பித்தான் ஆக வேண்டும். நான் அவற்றின் அன்றைய விலையைத்தான் மிகச்சரியாகக் குறிப்பிட்டுள்ளேன்.

      //மோதிரம் பற்றி சொல்லும் போது வழக்கமான உங்க நகைச்சுவை வந்துடுத்தே//

      :))))) ஆஹா, மோதிரம் என்பது ஓர் நகையல்லவா. அதனால் அதில் என் நகைச்சுவை பீரிட்டுக்கொண்டு வந்திருக்குமோ என்னவோ. நல்லா சிரிச்சீங்களா? சந்தோஷம் :)))))

      நீக்கு
  65. இன்னாமோ பூஜயில உபயோகிக்கற பொருளெல்லா போட்டிருக்கீக சொறிஞ்சிகிட தங்க மோதிரமோ சூப்பருதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 6:15 PM

      //இன்னாமோ பூஜயில உபயோகிக்கற பொருளெல்லா போட்டிருக்கீக. சொறிஞ்சிகிட தங்க மோதிரமோ சூப்பருதா//

      :))))))

      சொறியச் சொறியச்
      சொர்க்க லோகம் !
      பிறகு
      எரிய எரிய எமலோகம் !! :)

      நீக்கு
  66. அப்பாவினால் பிள்ளைக்கு பெருமையா பிள்ளையினால் அப்பாவுக்குப் பெருமையா. உங்க வீட்டு பொக்கிஷ ரூமுக்குள்ள ஒரு நாள் வந்து பார்க்கணும். இன்னும் என்னல்லாம் பொக்கிஷங்கள் இருக்குனு.

    பதிலளிநீக்கு
  67. என் தந்தை காலமான போது எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள், அவரின் சிவபூஜைப்பெட்டியும், சந்தனக்கல் கட்டையும்,அவர் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையும் மட்டுமே. // நீங்களும் சிவபழத் தோற்றம்தான்!!! எனது பாட்டியின் அம்மம்மாவின் ருத்ராக்க மாலையை நான் வைத்துள்ளேன்.!!! பண்டிகை நாட்களில் அணிவேன்!!!

    பதிலளிநீக்கு
  68. ஆழ்ந்து படித்தேன். இரண்டு கருத்துக்கள்தான் தோன்றின.

    1. உலகில் எந்தப் பொருளுக்கும் இதுதான் விலை என்று உலகியல் ரீதியாகச் சொல்வது சரியல்ல. அப்பா உபயோகப்படுத்திய வெறும் அட்டை கூட, அவர் மகன்'களில் மகள்களில் யாராவது ஒருவருக்காவது மிகுந்த பொக்கிஷமாகத் தெரியும். அவரும் வயதாகிவிட்டபோது, உடல் தளர்ந்தபோது, அவருடைய பையனோ அல்லது மறுமகளோ (மரு சரியில்லை என்று தோன்றுகிறது. வந்தவள் தனக்கு இன்னொரு மகள் என்பதுதான் அர்த்தம்), இது என்னத்துக்குக் குப்பை என்று தூரப்போடுவதுதான் பெரும்பாலும் நடக்கும். (அவர்களுக்குத் தெரியாது.. தூரப்போடும்போது உயிரோடு வயோதிகத்தில் இருப்பவரின் உணர்ச்சியையும் சேர்த்துத் தூக்கிப்போட்டுவிட்டோம் என்று) பெரும்பாலும், பெற்றவர் இறந்தபின், அவர் கையில் துடைத்து காசு தருவார்கள். அதையே யாரும் பத்திரப்படுத்துவதில்லை. எந்த பொக்கிஷமும், அவருக்கு அடுத்த தலைமுறைக்கு வெறும் பொருள்தான். அதன் பின்னுள்ள வரலாறு (கஷ்டம், எப்படி அந்தப் பொருள் வாங்கப்பட்டது, அதன் பின் உள்ள மனித உணர்ச்சி என்ன, என்பதெல்லாம்) அடுத்த தலைமுறை அறியாது, அறிந்தாலும் அற்பமாகத்தான் தோன்றும். இதுதான் இயற்கையின் (அல்லது கலியின்) நியதி.

    வேறு ஒரு பதிவில் எழுதியிருந்த 2 1/2 சவரன் தங்க மாலையை உங்கள் அம்மாவுக்காக வாங்கும்போது, அதன் பின்ணணியில், உங்கள் அப்போதைய கடினமான பொருளாதாரம், இருந்தும் சிலவற்றைத் தியாகம் செய்து அம்மாவுக்கு இதை வாங்கித் தந்துவிடவேண்டும் என்ற வைராக்யம், அதற்காகப் பாடுபட்டது, எவனேனும் எளிதில் விட்டுப்போயிடுமாறு செய்துதந்துவிடக்கூடாது என்று நன்றாக செக் செய்தது, அது தந்த மகிழ்ச்சி - இவை அனைத்தும், அடுத்த தலைமுறைக்கு ஒன்றுமே இல்லை. 2 1/2 பவுன் செயின். ரொம்ப அழுக்காயிடுத்து, பழசு மாடல். கொடுத்த செய்கூலி சேதாரம் போக 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். போட்டு ஒரு சின்ன செயின் குழந்தைக்கு வாங்கலாம் என்றுதான் அடுத்த தலைமுறைக்குத் தோன்றும். (அதுதான் நியதி)

    நீங்கள் அந்த ருத்திராக்ஷ மாலையை அணிந்துகொள்ளும்போது, தந்தையே தன்னை ஆசீர்வதித்துப் பார்த்துக்கொண்டிருப்பதாகத்தான் உங்கள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருக்கும். அந்த எண்ணம், பயபக்தி, ஆசை, அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக இருக்க வாய்ப்பு இல்லை.

    2. பக்தி புத்தகம் போடும் மஹானுபாவர்கள், சிறிய எழுத்துகளில்தான் போடுகிறார்கள். அவர்கள் நினைப்பது, சின்ன வயதில் புத்தகம் பார்த்துப் படிப்பார்கள். பெரிய வயதில் மனனமாகிவிடும், புத்தகம் தேவையிருக்காது என்று. அவர்களுக்குத் தெரியாதா.. வயோதிகம் மறதியைக் கொண்டுவரும். அத்துடன் கண் பார்வையையும் குறைத்துவிடும் என்று? முக்கியமான அதுவும் தினப்படி பாராயண ஸ்லோகங்களைப் பெரிய எழுத்தில் அச்சிடக்கூடாதா? தங்களிடம் விஷ்ணு சகஸ்ரனாமம் பெரிய எழுத்தில் இருப்பது நல்லது. இதேபோன்று மற்ற முக்கியமான புத்தகங்களும் பெரிய எழுத்தில் கிடைத்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 11:15 AM

      //ஆழ்ந்து படித்தேன். இரண்டு கருத்துக்கள்தான் தோன்றின.//

      வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி, ஸ்வாமீ.

      அன்புடன் VGK



      நீக்கு