About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, May 31, 2011

மூ க் கு த் தி [ பகுதி 7 of 7 ] இறுதிப்பகுதிமுன்கதை முடிந்த இடம்:

அவனை நெருங்கி, “என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.  ஆமாம் என்பது போலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

----------------------------------------

“பஸ்ஸில் ஏறும் போதோ, பயணம் செய்யும்போதோ, இறங்கும் போதோ கும்பலில் என் மஞ்சள் பையிலும் எவனோ ப்ளேடு போட்டுக்கிழித்து என் நகைப்பெட்டியையும் திருடி விட்டானப்பா;  

ஆனால், ’இதுபோலெல்லாம் நடக்கலாம் ஜாக்கிரதை’ என்று நீ என்னை நல்லவேளையாக அந்தக்கடையிலேயே உஷார் படுத்தியிருந்ததால், ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; 

பஸ்ஸில் பிட்பாக்கெட் போனது என் மஞ்சள் பையிலிருந்த காலி மூக்குத்தி டப்பா மட்டும் தான்.  அந்தக்காலி நகைப்பெட்டி போனால் போகட்டும் என்று என் மனதை சமாதானம் செய்துகொண்டு விட்டேனப்பா; 

என்னைச் சரியான நேரத்தில் உஷார்ப்படுத்திய நீ இவ்வாறு நகையைத்தொலைத்து விட்டு வந்து நிற்கிறாயேயப்பா!”என்று என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.

பிறகு ஆதரவாக அவன் தோளைத் தட்டிக்கொடுத்து, “சரி ..... இப்போ என் வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அல்லது மோர் தண்ணியாவது குடித்துவிட்டுப்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிடு; உன் நல்ல குணத்திற்கு, உன் காணாமல் போன நகை நிச்சயம் கிடைத்துவிடும்” என்று ஆறுதல் சொல்லி என் வீட்டுக்கு அவனை அழைத்தேன். 

என் அழைப்பை ஏற்க மறுத்த அவன், கோபமாகவும், வருத்தமாகவும், என்னிடமிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.   

இந்தக்காலப் பயலுகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.நல்ல பயலுகளாகவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் இவன்களுக்கு பதட்டம் ஜாஸ்தியாக இருக்கே தவிர,  பாவம் .... கவனம் பத்தாது என்று நினைத்துக்கொண்டேன். 

பிறகு நானும் ஒரு வழியாக, வெய்யிலுக்கு குடையைப்பிடித்துக்கொண்டு, மேலத்தெருவின் நடுவில் இருந்த, என் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.  

புது மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்துப்பூட்டினேன். 

அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டைப் பையனையே நினைத்துக்கொண்டிருந்ததில், எனக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. மனதுக்கு மிகவும் வேதனையாகவே இருந்து வந்தது.

மாலை வேளையில் வழக்கம்போல மெயின் ரோட்டுப்பக்கம் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு, கையில் ஒரு முழுத்தேங்காயை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். 

அந்தப்பிள்ளையாரிடம், “இன்று காலையில் மட்டும் எனக்குப்பழக்கமாகி, நகை திருட்டுப்போகாமல் இருக்க என்னை சரியான நேரத்தில் உஷார்படுத்தி, வயதான எனக்கு அந்த கும்பலான பஸ்ஸில் உட்கார இடம் போட்டுக்கொடுத்து பலவழிகளில் உதவிசெய்த மனிதாபிமானமிக்க,  அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையனுக்கு, அவன் தொலைத்ததாகச் சொல்லும் நகைகள் திரும்பக்கிடைத்து, அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக்கொண்டேன். 

நான் வாங்கிவந்த புதிய மூக்குத்தி பத்திரமாக என் வீடு வந்து சேர்ந்ததற்கு, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் ரூபத்தில் வந்து உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதிர் தேங்காய் அடித்தேன்.

நான் உடைத்த அந்தத் தேங்காய் நன்கு தூள்தூளாக சிதறி உடைந்து விட்டதா என்று பார்க்க, அங்கிருந்த சதிர் தேங்காய் உடைக்கும் தொட்டியைக் குனிந்து நோக்கினேன்.  

அதில் நான் உடைத்த தேங்காய் சிதறல்கள் மட்டுமின்றி, எனக்கு அந்தக்கடையில் மூக்குத்தி போட்டுக்கொடுத்திருந்த அந்த மிகச்சிறிய நகைப்பெட்டியும் உடைந்திருக்கக்கண்டேன்.   கஷ்டப்பட்டு ப்ளேடு போட்டு தான் திருடிய நகைப்பெட்டியில் நகை ஏதும் இல்லையே என்ற கடுப்பில், அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையன் தான், இதை இங்கு போட்டு உடைத்திருப்பானோ என்ற ஒரு சிறு சந்தேகம் எனக்குள் இப்போது எழுந்தது.  

அந்த சிறிய நகைப்பெட்டிக்குள் மூக்குத்தி இல்லாததால் ஏமாற்றமடைந்த அவன், அந்த நகை எங்குதான் மறைந்து போயிருக்கும் என்று தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் தான் என் வருகைக்காக இந்தப்பிள்ளையார் கோயில் வாசலில், நின்று கொண்டிருந்திருப்பானோ? என நினைத்து, ஒன்றும் புரிபடாமல் குழம்பிய நான் அந்தப்பிள்ளையாரை நோக்கினேன்.


மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! திடீரென பலத்த இடி மின்னலுடன் பெரும் மழையொன்று பெய்யத்தொடங்கியது.


-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-o-o-


[ இந்தச்சிறுகதை 19.05.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியானது] 

90 comments:

 1. நீங்க தேவி புத்தகத்துக்கு மட்டும் தான் கதை எழுதுவீங்களா? ராணிக்கும் எழுதலாம்.

  ReplyDelete
 2. நினைத்த மாதிரிதான் முடிந்திருக்கு

  ReplyDelete
 3. அட நினைச்ச மாதிரி அந்தப் பையன் தான்! இப்பல்லாம் யாரையுமே நம்ப முடியறதில்லை என்பதற்கு உங்கள் கதை நாயகனை வைத்து அழகாய் சொல்லி இருக்கீங்க!

  ReplyDelete
 4. ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; //
  கிராமத்துக்காரரா கொக்கா?!
  அவரது உஷாரான நடவடிக்கைகளுக்கு சபாஷ்!சபாஷ்!!
  கதையை அருமையாக முடித்த உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. கதையை துவங்கிய விதமும் தொடர்ந்த விதமும்
  முடித்த விதமும் அருமை
  இறுதி ட்விஸ்ட் மிக மிக அருமை
  எதிர்பார்த்து இருந்தபடி பெரியவர் ஏமாந்திருந்தால்
  ரொம்ப சங்கடப்பட்டிருப்போம்
  நல்ல பதிவு அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து...

  ReplyDelete
 6. புளியங்கொட்டை கலர் சட்டைப் பையனுக்கு அனுபவம் போதாதோ? இன்னும் பயிற்சி வேண்டுமோ?
  ஒருபோதும் அவன் முயற்சிகள் வெற்றி பெறாமல் போகட்டும்.

  மனம் திருந்தி ஒழுங்காக வாழச் சொல்லுங்கள். வாழநினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்??!

  ReplyDelete
 7. கதையை அழகா கொண்டு வந்து முடிசிடீங்க. நன்று.

  ReplyDelete
 8. //மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை // காலம் எல்லாரையும் மாற்றுகிறது...!!

  ReplyDelete
 9. ஒரு வழியாய் உங்க தபால்பெட்டி திறந்துவிட்டது கோபு சார்.

  கதை உங்க ஸ்டைல்ல வழக்கம்போல சபாஷ்.

  பெரியவரையே சுத்தி வந்த பு.கொ.க.ச.பையனை முதலிலேயே படுவாப் பய என்று யூகிக்க முடிந்தது.ஆனாலும் முதல் அறிமுகத்திலேயே அவனுடைய பெயரைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.நீளமாக பு.கொ.க.ச.பையன் என்று எழுதிக் கஷ்டப்பட்டிருக்கவேண்டாம்.

  ஒருவேளை ஹாஸ்யத்துக்காக நீங்க மெனக்கெட்டு அப்படிப் பண்ணிய மாதிரியும் தெரிந்தது.

  நானும் பிள்ளையாருக்கு ஒரு சிதறுகாய் போட்டுவிட்டு வருகிறேன் உங்க தபால்பெட்டி கூகிள் புண்ணியத்துல திறந்து எழுதவழி விட்டதுக்கு.

  ReplyDelete
 10. மூக்குத்தியின் பளபளப்பு எல்லா இடத்திலேயும் ஒளி வீசுகிறது. நல்ல முடிவு.

  ReplyDelete
 11. கதையல்ல அறிவுரை. நம்மிடம் நேர்மையான மனம் இருந்தால் தீமை செய்பவன் சொல்வதுகூட நல்லதாகிவிடும். இதுபோல நிறைய பேர் சொல்வது ஒன்று நோக்கம் வேறாக திரிகின்றனர். நன்றி சார்.

  ReplyDelete
 12. எல்லோரையும் எப்போதும் நம்பும் அம்மாஞ்சியாக இல்லாமல் கூடவே இருந்து குழி பறிக்குமாட்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்...கதை சொல்லும் பாடம்.?

  ReplyDelete
 13. அப்பாடா.....நல்ல முடிவு. உஷாரான மனிதர்!

  ReplyDelete
 14. ஆகா, அந்த பையன் தான் விளையாடியதா !!!

  ReplyDelete
 15. நான் அப்பவே அந்த பையன் மேல சந்தேகப்பட்டேன் ஹுஹி ஹி சரியாபோச்சு ஹா ஹா ஹா...

  ReplyDelete
 16. எப்பிடியோ மூக்குத்தி தப்பிச்சது ஹா ஹா ஹா நல்ல கிளைமாக்ஸ்...

  ReplyDelete
 17. அந்தப்பிள்ளையாரிடம், “இன்று காலையில் மட்டும் எனக்குப்பழக்கமாகி, நகை திருட்டுப்போகாமல் இருக்க என்னை சரியான நேரத்தில் உஷார்படுத்தி, வயதான எனக்கு அந்த கும்பலான பஸ்ஸில் உட்கார இடம் போட்டுக்கொடுத்து பலவழிகளில் உதவிசெய்த மனிதாபிமானமிக்க, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையனுக்கு, அவன் தொலைத்ததாகச் சொல்லும் நகைகள் திரும்பக்கிடைத்து, அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக்கொண்டேன்.


  என்ன ஒரு நல்ல மனது அந்த முதியவருக்கு , இன்னமும் சொல்லுவேன் அந்த புளியங்கொட்டை கலர் சட்டை பையன் திருடன் அல்ல

  நல்ல கதை பல திருப்பங்களையும், வெள்ளேந்தியான மனிதர்களைபற்றியும் , நடப்பு உலக வியாபாரத்தை பற்றியும் சொன்ன விதம் அருமை ஐயா
  நன்றிகள்

  ReplyDelete
 18. சந்தேகப்பட்டவனே ஆப்பிட்டானே..

  ReplyDelete
 19. Indy said...
  //நீங்க தேவி புத்தகத்துக்கு மட்டும் தான் கதை எழுதுவீங்களா? ராணிக்கும் எழுதலாம்.//

  நான் தொடர்ந்து எப்போதும் விரும்பி வாசிக்கும் ஒரு சில வார இதழ்களில் தேவியும் ஒன்று. என் கதைகள் இதுவரை வெளியான பல பத்திரிகைகளில் தேவியும் ஒன்று.

  நீங்கள் யார் என்ற முழு விபரம் என்னால் அறிய முடியவில்லை.

  இருப்பினும் தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

  ReplyDelete
 20. எல் கே said...
  //நினைத்த மாதிரிதான் முடிந்திருக்கு//

  நன்றி, எல்.கே.

  ReplyDelete
 21. வெங்கட் நாகராஜ் said...
  //அட நினைச்ச மாதிரி அந்தப் பையன் தான்! இப்பல்லாம் யாரையுமே நம்ப முடியறதில்லை என்பதற்கு உங்கள் கதை நாயகனை வைத்து அழகாய் சொல்லி இருக்கீங்க!//

  ஆமாம். வெங்கட், எல்லோரையும் எல்லா நேரங்களிலும் நம்பவோ, நம்பாமல் இருக்கவோ முடியாமல் குழப்பமாகத்தான் உள்ளது.

  ReplyDelete
 22. இராஜராஜேஸ்வரி said...

  //கிராமத்துக்காரரா கொக்கா?!
  அவரது உஷாரான நடவடிக்கைகளுக்கு சபாஷ்!சபாஷ்!!

  கதையை அருமையாக முடித்த உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

  தெய்வீகப்பதிவரான தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எனக்கு அம்பாளின் அருள்வாக்கென மகிழ்வளிக்கிறது.

  மிக்க நன்றி. பிரியத்துடன் vgk

  ReplyDelete
 23. அருமையானமுடிவு ஐயா! நல்ல கதை! எல்லா சம்பவங்களும் அப்படியே மனசில் நிகின்றன!வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 24. Ramani said...
  //கதையை துவங்கிய விதமும் தொடர்ந்த விதமும்
  முடித்த விதமும் அருமை
  இறுதி ட்விஸ்ட் மிக மிக அருமை
  எதிர்பார்த்து இருந்தபடி பெரியவர் ஏமாந்திருந்தால்
  ரொம்ப சங்கடப்பட்டிருப்போம்
  நல்ல பதிவு //

  அன்புள்ள ரமணி சார்,
  தங்களின் இந்தப்பின்னூட்டம் எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளது.
  என் மனமார்ந்த நன்றிகள், சார்.

  ReplyDelete
 25. இராஜராஜேஸ்வரி said...
  //புளியங்கொட்டை கலர் சட்டைப் பையனுக்கு அனுபவம் போதாதோ? இன்னும் பயிற்சி வேண்டுமோ?
  ஒருபோதும் அவன் முயற்சிகள் வெற்றி பெறாமல் போகட்டும்.

  மனம் திருந்தி ஒழுங்காக வாழச் சொல்லுங்கள். வாழநினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்??!//

  அம்பாள் கிருபையிருந்தால் அனைவருமே மன்ம் திருந்தி ஒழுங்காக வாழலாம்.

  வாழ நல்ல வழிகாட்ட வேண்டும் தாயே! ஸ்ரீ இராஜராஜேஸ்வரி நீயே !!

  ReplyDelete
 26. Kousalya said...
  //கதையை அழகா கொண்டு வந்து முடிசிடீங்க. நன்று.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

  ReplyDelete
 27. middleclassmadhavi said...
  //மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை //

  /காலம் எல்லாரையும் மாற்றுகிறது...!!/

  ஆமாம். சரியாகச் சொன்னீர்கள்.
  காலம், நல்லவர்களை நல்லவர்களாக இருக்கவிடாமல் சமயத்தில் சோதனை தான் செய்துவிடுகிறது.

  ReplyDelete
 28. சுந்தர்ஜி said...
  //ஒரு வழியாய் உங்க தபால்பெட்டி திறந்துவிட்டது கோபு சார்.//

  ஆமாம், சார்; நம் எல்.கே. சார் ஒருசில ஆலோசனைகள் சொல்லி, தபால்பெட்டிக்கு திறப்பு விழா நடத்த உதவிசெய்தார்.

  //கதை உங்க ஸ்டைல்ல வழக்கம்போல சபாஷ்.//

  மிக்க நன்றி, சார்.

  //பெரியவரையே சுத்தி வந்த பு.கொ.க.ச.பையனை முதலிலேயே படுவாப் பய என்று யூகிக்க முடிந்தது.ஆனாலும் முதல் அறிமுகத்திலேயே அவனுடைய பெயரைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.நீளமாக பு.கொ.க.ச.பையன் என்று எழுதிக் கஷ்டப்பட்டிருக்கவேண்டாம்.

  ஒருவேளை ஹாஸ்யத்துக்காக நீங்க மெனக்கெட்டு அப்படிப் பண்ணிய மாதிரியும் தெரிந்தது.//

  வயதான கிராமத்து மனிதராக இருப்பதால் “புளியங்கொட்டைக்கலரில் முழுக்கைச்சட்டை போட்ட பையன்” என்று சொல்வதுபோல இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

  என் வீட்டில் புளியங்கொட்டைக்கலரில் பெயிண்ட் அடித்த அந்தக்கால தகரப்பெட்டி ஒன்று உள்ளது. அதை நான் புளியங்கொட்டைப்பெட்டி என்று தான் இன்றும் சொல்லி வருகிறேன். அப்படிச்சொன்னால் தான் வீட்டில் உள்ளவர்களுக்கும் உடனே புரிகிறது.

  //நானும் பிள்ளையாருக்கு ஒரு சிதறுகாய் போட்டுவிட்டு வருகிறேன் உங்க தபால்பெட்டி கூகிள் புண்ணியத்துல திறந்து எழுதவழி விட்டதுக்கு//

  நிச்சயம் செய்யுங்கோ சார். நான் அடிக்கடி சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் இதுபோல வேண்டிக்கொள்வேன்.

  பிள்ளையாருக்கு சதிர்தேங்காய் உடைத்தாலும், ஹனுமாருக்கு மார்பில் வெண்ணெய் சாத்தினாலும், எந்த ஒரு மனக்கஷ்டங்களும் உடனே விலகிவிடும். இது நான் கண்ட [கடைபிடித்துவரும்] அனுபவ பூர்வமான உண்மை.

  தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 29. கணேஷ் said...
  //மூக்குத்தியின் பளபளப்பு எல்லா இடத்திலேயும் ஒளி வீசுகிறது. நல்ல முடிவு.//

  கணேஷ், நீண்ட நாட்களுக்குப்பிறகு நீ வருகை தந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  மூக்குத்தியின் பளபளப்பு சவுதிஅரேபியா வரை வீசியுள்ளதால் தானோ என்னவோ நீயே வந்து பின்னூட்டம் கொடுத்திருகிறாய்.

  அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
  Yours affectionately, vgk

  ReplyDelete
 30. சாகம்பரி said...
  //கதையல்ல அறிவுரை. நம்மிடம் நேர்மையான மனம் இருந்தால் தீமை செய்பவன் சொல்வதுகூட நல்லதாகிவிடும்.//

  100% மிகச்சரியான கூற்று. இதைச்சொன்ன உங்களுக்கு என் அன்பான ஸ்பெஷல் தேங்க்ஸ்.

  //இதுபோல நிறைய பேர் சொல்வது ஒன்று நோக்கம் வேறாக திரிகின்றனர். நன்றி சார்.//

  பொதுவில் அனைவருமே நல்லவர்கள் தான். ஏதோ ஒருசிலர் ஆங்காங்கே இதுபோல, அறியாமை, படிப்பறிவு இன்மை, வறுமையின் கொடுமை போன்றவற்றால் பிழைப்புக்கு வழி தெரியாமல், வயிற்றுப்பசிக்காக தவறு இழைக்கிறார்கள். என்ன செய்ய!

  தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.

  ReplyDelete
 31. G.M Balasubramaniam said...
  //எல்லோரையும் எப்போதும் நம்பும் அம்மாஞ்சியாக இல்லாமல் கூடவே இருந்து குழி பறிக்குமாட்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்...கதை சொல்லும் பாடம்.?//

  ஐயா, தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும், நீங்கள் சொல்லுவதுபோல கவனமாகத்தான் இருக்க வேண்டியுள்ளது.

  ReplyDelete
 32. ஸ்ரீராம். said...
  //அப்பாடா.....நல்ல முடிவு. உஷாரான மனிதர்!//

  மிக்க நன்றி,
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்!

  ReplyDelete
 33. ரிஷபன் said...
  //நல்ல முடிவு//

  தங்களின் அன்பான வருகைக்கும், ’நல்ல முடிவு’ என்ற அருமையான தீர்ப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.

  ReplyDelete
 34. கந்தசாமி. said...
  //ஆகா, அந்த பையன் தான் விளையாடியதா !!!//

  ஆம், அவனின் திருவிளையாடல் தான்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 35. MANO நாஞ்சில் மனோ said...
  //நான் அப்பவே அந்த பையன் மேல சந்தேகப்பட்டேன் ஹுஹி ஹி சரியாபோச்சு ஹா ஹா ஹா...

  MANO நாஞ்சில் மனோ said...
  எப்பிடியோ மூக்குத்தி தப்பிச்சது ஹா ஹா ஹா நல்ல கிளைமாக்ஸ்..//


  தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 36. A.R.ராஜகோபாலன் said...
  //அந்தப்பிள்ளையாரிடம், “இன்று காலையில் மட்டும் எனக்குப்பழக்கமாகி, நகை திருட்டுப்போகாமல் இருக்க என்னை சரியான நேரத்தில் உஷார்படுத்தி, வயதான எனக்கு அந்த கும்பலான பஸ்ஸில் உட்கார இடம் போட்டுக்கொடுத்து பலவழிகளில் உதவிசெய்த மனிதாபிமானமிக்க, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையனுக்கு, அவன் தொலைத்ததாகச் சொல்லும் நகைகள் திரும்பக்கிடைத்து, அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக்கொண்டேன்.//


  /என்ன ஒரு நல்ல மனது அந்த முதியவருக்கு , இன்னமும் சொல்லுவேன் அந்த புளியங்கொட்டை கலர் சட்டை பையன் திருடன் அல்ல/

  ஆம், அந்த முதியவருக்கு நல்லதொரு மனது தான், தாங்கள் சொல்லுவது போலவே.

  அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்ட பையன் திருடிவிட்டான் என்று சொல்ல எனக்கும் மனம் இடம்தரவில்லை. அதனால் தான் இந்தக்கதையை, அந்த வயதானவருக்கு கடைசியில் அவ்வாறு
  ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டது என்று சொல்லி முடித்து விட்டேன்.

  //நல்ல கதை; பல திருப்பங்களையும், வெள்ளந்தியான மனிதர்களைபற்றியும், நடப்பு உலக வியாபாரத்தை பற்றியும் சொன்ன விதம் அருமை ஐயா
  நன்றிகள்//

  தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுகும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 37. மாதேவி said...
  //சந்தேகப்பட்டவனே ஆப்பிட்டானே..//

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 38. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  //அருமையானமுடிவு ஐயா! நல்ல கதை! எல்லா சம்பவங்களும் அப்படியே மனசில் நிற்கின்றன!வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!//

  தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமையான முடிவு’ என்ற தீர்ப்புக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.

  ReplyDelete
 39. இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 40. அந்தப் பெரியவரின் நூறு சதவிகத கவன சிதாறாமை அவருக்கு வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
  PRESENT MOMENT LIVING - என்ன என்பதை விளக்கும் நல்ல கதை.

  POSITIVE MENTAL ATTITUDE- என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.கடைசிவரை பெரியவர் அந்தப் பையனை சந்தேகப்படவில்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.

  இந்த இரண்டும் ஒரு சேர இருந்தால் எடுத்த காரியம் கைகூடும்.

  ReplyDelete
 41. பழைய கால மனிதர்களுக்கு எத்தனை முன் ஜாக்கிரதைத்தனமும் கவனமும் வெள்ளந்தியான மனசும் இருக்கிறது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ‘ கண்ணால் பார்ப்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரிப்பதே மெய் ‘ என்ற சத்திய வாக்கு இருக்கும்போது, எப்படி நமக்கு எதுவுமே தெரியாமல் ஒருத்தரை குற்றவாளியாக்க முடியும்? நல்லவன் என்று உறுதியாய் நம்பியிருந்த ஒருவனை வெறும் அனுமானத்தால் குற்றவாளியென நினைப்பதே தாங்க முடியாமல் அந்தப் பெரியவர் தவிக்கும் அந்த இடத்தில் கதையின் மொத்த அழகும் ஒரு மெல்லிய சோகத்துடன் குவிந்திருக்கிறது! நல்லதொரு கதை எழுதியதற்கு என் இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 42. கதையை அழகா கொண்டு வந்து முடிசிடீங்க. ரொம்ப நல்லா இருந்தது.

  ReplyDelete
 43. VENKAT said...
  அந்தப் பெரியவரின் நூறு சதவிகத கவன சிதாறாமை அவருக்கு வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
  PRESENT MOMENT LIVING - என்ன என்பதை விளக்கும் நல்ல கதை.

  POSITIVE MENTAL ATTITUDE- என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.கடைசிவரை பெரியவர் அந்தப் பையனை சந்தேகப்படவில்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.

  இந்த இரண்டும் ஒரு சேர இருந்தால் எடுத்த காரியம் கைகூடும்.//

  தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.

  உங்களின் விளக்கம் வாழ்வியலில் எடுத்த காரியம் கைகூட, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச்சுட்டிக்காட்டுவதாக உள்ளதால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நன்றி நன்றி நன்றி !!!

  ReplyDelete
 44. மனோ சாமிநாதன் said...
  //பழைய கால மனிதர்களுக்கு எத்தனை முன் ஜாக்கிரதைத்தனமும் கவனமும் வெள்ளந்தியான மனசும் இருக்கிறது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ‘ கண்ணால் பார்ப்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரிப்பதே மெய் ‘ என்ற சத்திய வாக்கு இருக்கும்போது, எப்படி நமக்கு எதுவுமே தெரியாமல் ஒருத்தரை குற்றவாளியாக்க முடியும்? நல்லவன் என்று உறுதியாய் நம்பியிருந்த ஒருவனை வெறும் அனுமானத்தால் குற்றவாளியென நினைப்பதே தாங்க முடியாமல் அந்தப் பெரியவர் தவிக்கும் அந்த இடத்தில் கதையின் மொத்த அழகும் ஒரு மெல்லிய சோகத்துடன் குவிந்திருக்கிறது! நல்லதொரு கதை எழுதியதற்கு என் இனிய வாழ்த்துக்கள்!!//

  என் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய, பிரபல எழுத்தாளராகிய தாங்களே வருகை தந்து, இந்தக்கதையை விமர்சனம் செய்து, பாராட்டியிருப்பதை என் பாக்யமாகக் கருதுகிறேன். தங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளது. மிக்க நன்றி, மேடம்.

  அன்புள்ள vgk

  ReplyDelete
 45. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //Well done Sir!//

  Thank you very much,
  My Dear Ramamoorthy Sir.

  ReplyDelete
 46. Lakshmi said...
  //கதையை அழகா கொண்டு வந்து முடிசிடீங்க. ரொம்ப நல்லா இருந்தது.//

  Respected Madam,
  நமஸ்காரங்கள். தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுச்சொற்களுக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 47. இந்தச்சிறுகதை 19.05.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியானது]//
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  கதை மிக அருமை.
  உசாரா இருக்கோனும்புள்ள இல்லாங்கட்டி இந்த ஒலகத்துல உருப்படிய வாழமுடியாதுபுள்ளன்னு எங்கோ கேட்ட குரல் காதில் ஒலிக்கிறது.

  இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 48. அன்புடன் மலிக்கா said...
  //இந்தச்சிறுகதை 19.05.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியானது]//
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  கதை மிக அருமை.
  உசாரா இருக்கோனும்புள்ள இல்லாங்கட்டி இந்த ஒலகத்துல உருப்படிய வாழமுடியாதுபுள்ளன்னு எங்கோ கேட்ட குரல் காதில் ஒலிக்கிறது.

  இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்..//

  தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.

  ReplyDelete
 49. நல்ல கதை! எல்லா சம்பவங்களும் அப்படியே மனசில் நிrகின்றன!

  ReplyDelete
 50. போளூர் தயாநிதி said...
  //நல்ல கதை! எல்லா சம்பவங்களும் அப்படியே மனசில் நிrகின்றன!//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், மிக்க நன்றி.

  ReplyDelete
 51. முடிவு நான் எதிர்பார்த்ததுதான்..
  முடிவு நான் எதிர்பார்த்ததுதான்..அதை கொண்டு போன விதம் அருமை.

  ReplyDelete
 52. கடைசியில வச்சீங்க பாருங்க ஒரு கொக்கி.. அருமை.. படிப்பவர்களுக்கு இதில் ஒரு படிப்பினையைக் காட்டியிருக்கிறீர்கள். பின்னூட்டம் போடமுடிந்ததிற்கு சந்தோஷமாய் இருக்கிறது. எப்பங்க அடுத்த கதை?

  ReplyDelete
 53. குணசேகரன்... said...
  //முடிவு நான் எதிர்பார்த்ததுதான்..
  முடிவு நான் எதிர்பார்த்ததுதான்..அதை கொண்டு போன விதம் அருமை.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 54. மோகன்ஜி said...
  //கடைசியில வச்சீங்க பாருங்க ஒரு கொக்கி.. அருமை.. படிப்பவர்களுக்கு இதில் ஒரு படிப்பினையைக் காட்டியிருக்கிறீர்கள். பின்னூட்டம் போடமுடிந்ததிற்கு சந்தோஷமாய் இருக்கிறது. எப்பங்க அடுத்த கதை?//

  ஆஹா, தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நம் இருவர் வலைப்பூவுமே, பின்னூட்டம் இடமுடியாமல் ஒரு கொக்கி மாட்டியிருந்தன, சில நாட்கள்.

  கொக்கியைக்கழட்டி கதையின் கடைசியில் வைத்துவிட்டதால் இப்போது பிரச்சனை சரியாகியுள்ளது.

  அடுத்த கதை பற்றிய யோசனையில் தான் உள்ளேன். சற்றே இடைவெளிக்குப்பின் வெளிவரும்.
  உங்களுக்குத்தான் மெயிலில் தகவல் வருமே.

  அன்புடன் vgk

  ReplyDelete
 55. கதை நல்லா முடிஞ்சிருக்கு சார். இப்போலாம் யாரையும் நம்ப முடியலை.

  ReplyDelete
 56. ஜிஜி said...
  //கதை நல்லா முடிஞ்சிருக்கு சார். இப்போலாம் யாரையும் நம்ப முடியலை.//

  வருகை+கருத்து+பாராட்டு மூன்றுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 57. கதை ரொம்ப நல்லா இருந்தது.அழ‌கா எழுதி இருக்கிங்க‌ சார்!

  ReplyDelete
 58. Priya said...
  //கதை ரொம்ப நல்லா இருந்தது.அழ‌கா எழுதி இருக்கிங்க‌ சார்!//

  WELCOME
  தங்கள் அன்பான முதல் வருகைக்கும், மேலான அரிய கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  ReplyDelete
 59. மூக்குத்தியின் நான்காம் பகுதியிலிருந்து இறுதிப் பகுதி வரை இன்று தான் ஒரே மூச்சாக படிக்க முடிந்தது. விறுவிறுப்பாக சென்றது சார். பெரியவர் ஏமாந்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். கடைசியில் கிராமத்துக்காரரான பெரியவர் உஷாராக இருந்ததுடன், வெள்ளந்தியான மனதுடன் அந்த பையனின் நகைகள் திரும்ப கிடைக்க பிள்ளையாருக்கு சதிர் தேங்காய் உடைக்க சென்றுள்ளார். ஆனால் பிள்ளையார் காட்டி கொடுத்து விட்டார். நல்ல முடிவு.

  தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும் சார்.

  ReplyDelete
 60. கோவை2தில்லி said...
  //மூக்குத்தியின் நான்காம் பகுதியிலிருந்து இறுதிப் பகுதி வரை இன்று தான் ஒரே மூச்சாக படிக்க முடிந்தது. தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும் சார்.//

  அதனால் என்ன மேடம். உங்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலை ஏதும் சரியாக இருந்திருக்காது என்பதை நானே உணர்ந்து, ஊகித்துக் கொண்டேன். நீங்கள் தாமதமாக வந்தேனும் ஏதாவது எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் வேண்டாமே!

  //விறுவிறுப்பாக சென்றது சார். பெரியவர் ஏமாந்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். கடைசியில் கிராமத்துக்காரரான பெரியவர் உஷாராக இருந்ததுடன், வெள்ளந்தியான மனதுடன் அந்த பையனின் நகைகள் திரும்ப கிடைக்க பிள்ளையாருக்கு சதிர் தேங்காய் உடைக்க சென்றுள்ளார். ஆனால் பிள்ளையார் காட்டி கொடுத்து விட்டார். நல்ல முடிவு.//

  தங்களின் வருகைக்கும், என் கதைகளில் தாங்கள் காட்டும் ஆர்வம்+ஈடுபாட்டுக்கும், அரிய கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும், நல்ல முடிவு என்ற தீர்ப்பு வழங்கியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 61. கதை மிகவும் தத்ரூபமாக உள்ளது. என்ன கஷ்டம் என்றால் இந்த வயதில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டியுள்ளது பாருங்கள்.

  ReplyDelete
 62. DrPKandaswamyPhD said...
  //கதை மிகவும் தத்ரூபமாக உள்ளது. என்ன கஷ்டம் என்றால் இந்த வயதில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டியுள்ளது பாருங்கள்.//


  Most Respected Sir,
  தாங்கள் அன்புடன் வருகை தந்து, இந்த என் சிறுகதை மிகவும் தத்ரூபமாக உள்ளது எனக்கருத்துக்கூறி, பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், உற்சாகம் ஊட்டுவதாகவும், பெரியதொரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் நினைக்க வைத்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மிக்க நன்றி Sir. நேர அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வருக வருக வருக என தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

  அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 63. அருமையான கதை சார்.ஆரம்பம் முதலே முடிவு என்னவாக இருக்கும் என்ற நினைப்பிலேயே படித்துக் கொண்டிருந்தேன்.

  என்ன இருந்தாலும் முதுமையின் அறிவோடும், அனுபவத்தோடும் இளமை போட்டி போட முடியாது என்பதை விளங்க வைத்த கதை.

  நன்றாக இருந்தது VGK சார்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள கெளரிலக்ஷ்மி [நுண்மதி],

   வாருங்கள், வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்?

   உங்களின் இந்தப் பின்னூட்டத்திற்கு சுமார் ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் என்னால் பதில் தர முடிந்துள்ளது.

   இருப்பினும் என்னை உங்களால் கோபித்துக்கொள்ளவே முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது.

   தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்துள்ளன.

   பார்ப்போம் ராணி.....

   என்றும் தங்கள் மேல் தனிப்பிரியமுள்ள,
   vgk

   Delete
 64. //கஷ்டப்பட்டு ப்ளேடு போட்டு தான் திருடிய நகைப்பெட்டியில் நகை ஏதும் இல்லையே என்ற கடுப்பில், அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையன் தான், இதை இங்கு போட்டு உடைத்திருப்பானோ என்ற ஒரு சிறு சந்தேகம் எனக்குள் இப்போது எழுந்தது. //
  நகைக் கடை வீதியில் இது போன்ற ஆசாமிகள் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பர்கள். தெரிந்தவர்கள் போல உதவ வருவார்கள். பேசுவார்கள். மஞ்சள் பை வைத்திருந்தாலே அவர்களுக்கு கொண்டாட்டம்தான். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் CASH – இல் அலர்ட்டாக இருந்தது போலவே உங்கள் ஊர்க்காரரும் கதையில் இருக்கிறார்.
  நகை வாங்கப் போகும் நமது நண்பர்கள் மீண்டும் ஒருமுறை இந்த கதையைப் படித்தால் நல்லது.

  ReplyDelete
 65. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

  தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

  //நீங்கள் உங்கள் அலுவலகத்தில் CASH – இல் அலர்ட்டாக இருந்தது போலவே உங்கள் ஊர்க்காரரும் கதையில் இருக்கிறார்.

  நகை வாங்கப் போகும் நமது நண்பர்கள் மீண்டும் ஒருமுறை இந்த கதையைப் படித்தால் நல்லது.//

  இதைத் தங்கள் வாயிலாகக் கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, ஐயா.

  THANKS A LOT FOR ALL YOUR DETAILED COMMENTS FOR EACH & EVERY PART OF THIS STORY.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  ReplyDelete
 66. //ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; //

  ஹா..ஹா..ஹா.. இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது, ஆனாலும்.. இனி வழியில் இதையும் பறிகொடுத்திடப்போறாரே எனும் பயம் மேலோங்கி இருந்துது...

  ReplyDelete
 67. ஆனா முடிவு அருமை.... எம்மை எல்ல்லாம் பயத்தில ஏங்க வைத்து, முடிவை நல்லபடி மாற்றியவிதம் அருமை... ஆனா அவரின் மனைவிக்கு மூகுத்தி பிடிச்சிருந்துதா என்பதைச் சொல்லாமல் விட்டது கொஞ்சம் கவலை.... :).

  மொத்தத்தில் சூப்பர் கற்பனை.

  ReplyDelete
 68. athira October 22, 2012 1:42 PM
  *****ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; *****

  //ஹா..ஹா..ஹா.. இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது, ஆனாலும்.. இனி வழியில் இதையும் பறிகொடுத்திடப்போறாரே எனும் பயம் மேலோங்கி இருந்துது...//

  அன்புள்ள அதிரா,

  இன்று ஒரே நாளில் இந்தக்கதையின் ஏழு பகுதிகளில் ஆறு பகுதிகளுக்கு வருகை தந்து, ஊன்றிப்படித்து, அழகாகப் பின்னூட்டமிட்டு பதிவினை மேலும் மெருகூட்டிச் சிறப்பித்து கலகலப்பாக்கி கொடுத்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பிரியமுள்ள
  கோபு அண்ணா


  ஊசிக்குறிப்பு:
  [ இந்தக்கதையின் முதல் பகுதி தங்களுக்கு மட்டும் ஓபன் ஆகாமல் இருப்பதாகச் சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது. எனக்கு சுலபமாக ஓப்பன் ஆகிறது. சரி.... பார்ப்போம் ;) ]

  ReplyDelete
 69. athira October 22, 2012 1:43 PM
  //ஆனா முடிவு அருமை.... எம்மை எல்ல்லாம் பயத்தில ஏங்க வைத்து, முடிவை நல்லபடி மாற்றியவிதம் அருமை...//

  அதிராவின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  //ஆனா அவரின் மனைவிக்கு மூகுத்தி பிடிச்சிருந்துதா என்பதைச் சொல்லாமல் விட்டது கொஞ்சம் கவலை.... :).//

  ஆஹா! ரொம்பத்தான் கவலை உங்களுக்கு. யாருக்குமே ஏற்படாத புதுக்கவலை.

  உங்களுக்குத்தான் வைர மூக்குத்தி, வைரத்தோடுகள், வைர நெக்ல்ஸ் முதலியன கிடைக்க உள்ளதே.

  சைஸ் மட்டும் அர்ஜெண்டா சொல்லுங்கோ ப்ளீஸ் ....
  நெ க் கு சைஸூஊஊஊஊஊஊ நே க் கு வேணும் ;)))))))

  //மொத்தத்தில் சூப்பர் கற்பனை.//

  நன்றியோ நன்றிகள்.

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  ReplyDelete
 70. When we think good for others, only good things will happen for us... nice story...
  Thanks a lot sir for sharing it with us...

  ReplyDelete
 71. Priya Anandakumar August 22, 2013 at 8:29 AM

  வாங்கோ, வணக்கம்.

  //When we think good for others, only good things will happen for us... nice story...
  Thanks a lot sir for sharing it with us...//

  ஆமாம் மேடம், நாம் பிறருக்கு நல்லது நினைத்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்பது தான் உண்மை. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

  இன்று ஒரே மூச்சில் இந்தக்கதையின் ஏழு பகுதிகளையும் படித்து விட்டு, சூட்டோடு சூடாக ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கமெண்ட்ஸ் எழுதி அனுப்பியுள்ளதில், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம். உங்களைப்படிக்க விட்ட உங்கள் குழந்தைகளுக்கும் என் நன்றிகள். இனி அவர்களை கவனியுங்கோ. அன்புடன் கோபு.

  நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி. ;)))))))

  ReplyDelete
 72. பழைய காலத்து ஆட்களிடம் இன்றைய நாகரிகத் திருடர்களின் ஜம்பம் சாயுமா என்ன?

  ReplyDelete
 73. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

  அன்புடையீர்,

  வணக்கம்.

  31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் + ஏப்ரில் + மே ஆகிய ஐந்து மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete
 74. கிராமத்து ஆள் ஆனை போதும் புத்தி சாலித் தனமா நடந்துகிட்டதால நகை தப்பிச்சது.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய ஐந்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 75. அந்தப் பெரியவரின் நல்ல மனதுக்குத் திருடனே ஜாக்கிரதை என்று எச்சரித்திருக்கிறான் பாருங்கள். அந்தக்கால மனுஷனா கொக்கா? நல்ல முடிவு.

  ஆனா அந்தப் பெரியவர் யாரோட அழகான மூக்குக்கு அந்த மூக்குத்திய வாங்கினார்ன்னு சொல்லவே இல்லயே.

  கோபு அண்ணா,
  ஒரு வேண்டுகோள்.

  இன்னும் உங்கள் கற்பனையில் உள்ள கதைகளுக்கு தயவு செய்து எழுத்து வடிவம் கொடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya June 2, 2015 at 11:20 PM

   //அந்தப் பெரியவரின் நல்ல மனதுக்குத் திருடனே ஜாக்கிரதை என்று எச்சரித்திருக்கிறான் பாருங்கள். அந்தக்கால மனுஷனா கொக்கா? நல்ல முடிவு. //

   சந்தோஷம், ஜெயா.

   //ஆனா அந்தப் பெரியவர் யாரோட அழகான மூக்குக்கு அந்த மூக்குத்திய வாங்கினார்ன்னு சொல்லவே இல்லயே.//

   வேறு யாருக்காக இருக்கும்! தங்களைப்போன்ற தங்கமான குணமுள்ள அழகான மகளுக்கோ அல்லது மருமகளுக்கோ
   மட்டுமே வாங்கி வந்திருப்பார். :)

   //கோபு அண்ணா, ஒரு வேண்டுகோள். இன்னும் உங்கள் கற்பனையில் உள்ள கதைகளுக்கு தயவு செய்து எழுத்து வடிவம் கொடுங்கள். //

   ஆகட்டும். பார்ப்போம் ஜெயா. ஏற்கனவே நான் எழுதி, இன்னும் வலைத்தளத்தினில் வெளியிடாத கதைகளே சில கைவசம் உள்ளன. எழுதும் ஹாப்பி மூடு வந்தால் மேலும் நிறையவே எழுதித்தள்ளிடுவேன். அது ஒன்றும் கஷ்டமே இல்லை, எனக்கு.

   Delete
  2. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

   அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 மே வரை முதல் ஐந்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 76. பெரியவரு வெவரமான ஆளுதான். முன் யோசனயோட நகய மாத்தி இடத்துல மாத்திப்பிட்டாரே. பாவம் புளியங்கொட்டை சட்டை.

  ReplyDelete
 77. திருடனுக்கு தேள் கொட்டின கதையா ஆயிடுத்தே. எப்படியோ அந்த கிராமத்து பெரியவர் உஷாரா இருந்தது நகை தப்பிச்சது

  ReplyDelete
 78. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் முடிய, என்னால் முதல் 5 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete

 79. மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! திடீரென பலத்த இடி மின்னலுடன் பெரும் மழையொன்று பெய்யத்தொடங்கியது.// சிக்கலான சூழ்நிலைகளில் மழை வந்து உதவுவது சகஜம்தான்...வெள்ளந்தி மனிதர்...வெவரமான மனிதர்


  ReplyDelete
 80. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் வரை, என்னால் முதல் 5 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 81. உழைத்துச் சேர்த்த பொருளன்றோ? முடிவு அருமை! மனதிற்குள் சந்தோஷ மழை!

  ReplyDelete
 82. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, 5 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 83. உண்மையிலேயே அந்த பெரியவரின் முன் யோசனை பாராட்டப்படவேண்டிய விஷயம்தான் எல்லாரையுமே நல்லவர்களாக நினைக்கும் வெள்ளந்தி மனதுக்காரர். புளியங்கொட்டை அவரை ஏமாற்ற நினைத்து அவனே ஏமாந்துபோனான்... ஏமாற்றாதே ஏமாறாதே......

  இன்று கொஞ்சம் ஃபரீ டயம் கிடைத்தது இந்த கதையின் எல்லா பகுதியையும் தொடர்ந்து படிக்க முடிந்தது. நல்லா இருந்திச்சு..

  ReplyDelete
 84. :)))))

  வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  ReplyDelete