என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 4 of 7 ]முன்கதை முடிந்த இடம்:


... அப்படியே மூக்குத்தி போட்டாலும், ஒரே ஒரு சிறியகல் வைத்தது போதும் என்கிறார்கள்.  எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு சொன்னதெல்லாம் அந்தக்காலம் ஐயா” என்றான்.   

----------------------------------------

மிகவும் கஷ்டப்பட்டு, இந்தக்கடையின் நாலாவது மாடிக்கு வந்துவிட்ட நான், வேறு கடைகளுக்குப்போய், வெயிட் உள்ள மூக்குத்தி இருக்குமா என விசாரிக்க விரும்பாமல், அங்கிருந்தவற்றிலேயே சற்று பெரியதாக உள்ள ஒரு மூக்குத்தியை எடுத்து எவ்வளவு விலையாகும் என்றேன். 

எடைபோட்டுப்பார்த்த அவன், ஒரு கிராமுக்கு சற்றே, ஒரு குந்துமணியளவு குறைவாக உள்ளதாகச்சொல்லி,  கூலி, சேதாரம், விற்பனை வரி, சேவை வரி என்று ஏதேதோ கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து, ரூபாய் 2022 ஆகும் என்றான். 

இதே பணத்துக்கு என் பொஞ்சாதிக்கு 10 பவுனில் இரட்டைவடம் சங்கிலி ஒன்று 1973 இல் வாங்கிய ஞாபகம் வந்தது. 

அப்போது ஒரு பவுன் அதாவது 8 கிராம் விலை ரூபாய் 200 க்குள் தான். ஒரு கிராம் தங்கம் வெறும் 25 ரூபாய்க்குள் தான்.  

38 வருடங்களில் 80 மடங்கு தங்கம் விலை ஏறியுள்ளது என்பதை என்னால் மனக்கணக்காகப் போடமுடிந்தது, கையிருப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். 

எந்தப்பொருள் தான் விலை ஏறாமல் உள்ளது? வருமானமும் ஏறுது! போட்டிபோட்டுக்கொண்டு விலைவாசியும் ஏறுது! 

அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் தான் சாண் ஏறினால் முழம் சறுக்குவதாக ஒருவித ஏக்கப்பெருமூச்சு ஏற்படுகிறது.

“பில் போட்டுவிடலாமா? வேறு ஏதாவது பார்க்கிறீங்களா?” கடைக்காரன் என்னிடம் கேட்டான். ரூபாய் ஐயாயிரம் ஆனாலும் உறுதியாக கெட்டியாக மூக்குத்தி அமையவில்லையே என்று ஒரு மனக்குறை இருப்பினும் வேறுவழியில்லாமல், ”பில் போட்டுவிடுப்பா” என்று சொல்லி பணம் எடுக்க என் மஞ்சள் பைக்குள் கையை விட்டேன். 

பட்டத்தின் வால் போன்ற ஏதோவொரு கம்ப்யூட்டர் பில்லை, கார்பன் பேப்பருடன் ஒரு மெஷினிலிருந்து எடுத்து, என் பெயரைக்கேட்டு அதில் அதை எழுதி, என் கையில் கொடுத்தான். நான் பணத்தை எடுத்து அவனிடம் நீட்டப்போனேன்.

”கீழே கிரவுண்ட் ப்ஃளோரில் உள்ள கேஷ் கவுண்டரில் போய், இந்த பில்லைக்காட்டி  பணத்தைக்கட்டுங்கள். உங்கள் மூக்குத்தியும் அங்கே வந்துவிடும். அங்கேயே நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்” என்றான். 

பத்திரமாக பணத்துடன் என் மஞ்சள் பையையும், குடையையும் எடுத்துக்கொண்டு, தட்டுத்தடுமாறி, லிஃப்டில் மீண்டும் ஏறி கீழ்த்தளத்திற்கு வந்தேன்.

புளியங்கொட்டைக்கலரில் முழுக்கைச்சட்டை அணிந்த ஒருவன் என் எதிரில் தென்பட்டான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். 

“யாரு தம்பி” என்றேன். 

“நம்ம ஊரு பக்கம் தான். நீங்க பஸ் ஏறிவரும்போதே பார்த்தேன்” என்றான்.

எனக்கு பஸ்ஸில் உட்கார இடம் கொடுத்து எழுந்து கொண்டான் ஒருவன், அவனாக இருக்குமோ? என்று நினைத்துக்கொண்டேன். சரியாக நினைவுக்கு வரவில்லை. பிறகு அவன் ஒருவித புன்சிரிப்பை உதிர்த்தவாறே என்னிடமிருந்து விடைபெற்றுச்சென்றான்.

கேஷ் கவுண்டரில் ஒரே கூட்டம் அலை மோதியது. நான் அங்கு பணம் கட்ட நின்ற 10 நிமிடங்களில் சுமார் எட்டு லட்சங்களுக்கு மேல் கல்லாவில் வசூலாகியதை கவனித்தேன்.

இதேபோல கணக்குப்போட்டால் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கோடி வரை வியாபாரம் இருக்கும் என்று கணக்கிட முடிந்தது என்னால்.  

பலகோடிகள் முதல்போட்டு, பல பேர்களுக்கு வேலை கொடுத்து, சுறுசுறுப்பாக இயங்கும் பெரியதொரு நிறுவனம் அல்லவா. இவ்வாறு தினம் ஐந்து கோடியாவது வியாபாரம் ஆனால்தான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும் என்றும் எனக்குத்தோன்றியது. 

ஒருவழியாக என் பில்லுக்கான பணத்தைச்செலுத்தினேன். பெரிய மனதுசெய்து ரூ. 2000 மட்டும் வாங்கிக்கொண்டு, ரூபாய் 22 ஐத்தள்ளுபடி செய்துவிட்டு, படபடவென்று ஏதேதோ ரப்பர் ஸ்டாம்புகள் குத்தி என் பெயரைச்சொல்லி பில்லை நீட்டினார், சிரித்த முகத்துடன், எல்லா விரல்களிலும் தங்கத்திலோ வைரத்திலோ மோதிரம் அணிந்திருந்த அந்தக்கடை முதலாளி . 

“நகை எங்கே?” என்று நான் அவரிடம் கேட்டேன்.  

”அதோ அந்தப்பக்கம் போய் பேக்கிங் செக்‌ஷனில் பில்லைக்காட்டுங்கள், நகையைத்தருவார்கள்” என்றார். 

அங்கு பார்த்தால் அங்கேயும் ஒரே கூட்டமாக ஜனங்கள்.     


தொடரும்


{இந்தச்சிறுகதையின் தொடர்ச்சி [பகுதி 5/7] நாளை ஞாயிற்றுக்கிழமை 29.05.2011 அன்று வெளியிடப்படும் }

37 கருத்துகள்:

 1. கதாபாத்திரங்களுக்குத் தகுந்தார்போல
  மிக கவனமாக அவர்களது எண்ணங்களைப்
  பதிவு செய்வதும்
  கதைமாந்தர்களின் நடை உடை பாவனைகள்
  மற்றும் கதை நடைபெரும் சூழலை
  மனதில் எளிதில் பதிந்து போகும்படியாக
  அதே சமயம் அதிகம் மெனெக்கெடாமல்
  சொல்லிப்போவதும் உங்கள் படைப்பின்
  சிறப்பாகக் கருதுகிறேன்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ஹ்ம்ம் இந்த கால கடைகள் வெளியாட்களுக்கு எவ்வளவு சிரமம் என்று அழகாக சொல்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 3. சிரித்த முகத்துடன், எல்லா விரல்களிலும் தங்கத்திலோ வைரத்திலோ மோதிரம் அணிந்திருந்த அந்தக்கடை முதலாளி .//
  Jewel stand??

  பதிலளிநீக்கு
 4. Romba naalukkapparam kadaikku pogiravarkal anubavaththai sariyaakach cholliyirukkeenga!

  பதிலளிநீக்கு
 5. அந்த 'நம்மூர்க்காரரால்' இவர் மூக்குத்திக்கு ஏதும் ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா... பக் பக் என்கிறது....

  பதிலளிநீக்கு
 6. புளியங்கொட்டை கலர் சட்டை போட்டவர் திடீரென பிரவேசம் செய்திருக்கிறார் கதையில்… அவர் தான் கதையில் திருப்புமுனையோ… படப்படப்போடு காத்திருக்கிறேன்….

  பதிலளிநீக்கு
 7. Comments Received through e-mail from Mr. RISHABAN Sir.

  இதே பணத்துக்கு என் பொஞ்சாதிக்கு 10 பவுனில் இரட்டைவடம் சங்கிலி ஒன்று 1973 இல் வாங்கிய ஞாபகம் வந்தது.
  இனிமேல் நகையைப் பார்க்கவே பணம் கேட்பார்கள்..
  சரளமான நடை அழகில் சொக்கிப் போகிறேன் ..

  பின்னுட்டம் போட இயலவில்லை
  கமென்ட் பாக்ஸ் ஓப்பன் ஆகவில்லை

  ரிஷபன்

  பதிலளிநீக்கு
 8. Comments Received thro' e-mail from Mr Rajagopalan Raghupathy Sir

  ஐயா உங்களின் வலைப்பூவில் பின்னூட்டமிட முயற்சித்தேன் முடியவில்லை , காரணமும் தெரியவில்லை .

  நீங்கள் கேஷ் டிப்பார்ட்மெண்டில் வேலை பார்த்த அனுபவம்
  தந்த கொடையா இது ??

  "கேஷ் கவுண்டரில் ஒரே கூட்டம் அலை மோதியது. நான் அங்கு பணம் கட்ட நின்ற 10 நிமிடங்களில் சுமார் எட்டு லட்சங்களுக்கு மேல் கல்லாவில் வசூலாகியதை கவனித்தேன்."

  நல்ல மனதை தொடும் தொடர் , காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த பகுதிக்கு.

  - இராஜகோபாலன்

  பதிலளிநீக்கு
 9. Comments Received thro' e-mail from Mr USSS VENKAT Sir

  பொதுவாக ஆங்கில நாவல்களில்தான் ஒரு நிகழ்வைத் தத்ரூபமாக விளக்கும் விதமாக கதையில் வரும் இடங்களைப் பற்றியும், அதனுடன் சம்பந்தப்பட்ட உண்மை நிலவரங்களும் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும்.

  1973 ல் தங்கம் விலை, ஒரு நகை கடையின் உத்தேசமாக நடக்கும் ஒரு நாள் வியாபாரம் போன்றவிபரங்கள் உங்களின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

  இந்தக் கதையிலிருந்து நல்ல பல விஷயங்களும் தெரிந்துகொள்ள முடிகிறது.

  அடுத்த கேரக்டர் தயார் என்று தோன்றுகிறது. தொடருங்கள், தொடர்கிறோம்.

  வெங்கட்.

  பதிலளிநீக்கு
 10. Comments Received thro' e-mail from Mr. G M Balasubramaniam Sir

  அன்புள்ள கோபு சாருக்கு, உங்கள் பதிவுகளை தவறாமல் படிக்கிறேன மோசில்லா ஃபைர் ஃபாக்ஸ் மூலமாகப் போனாலும் இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலம் பிரவேசித்தாலும் போஸ்ட் கமெண்ட் என்னும் இடத்தில் க்லிக்கினால் கருத்துரை இட பாக்ஸ் வருவதில்லை. எந்த மாற்றமும் காட்டுவதில்லை. ஆனால் ஏதாவதொரு செர்ச எஞ்சின் மூலம் எப்படியோ இதுவரை படிக்க முடிந்திருக்கிறது. தொடர்ந்து படிப்பேன்.

  G M Balasubramaniam

  பதிலளிநீக்கு
 11. இந்தப்பகுதிக்கு வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துச்சொல்லி, என்னைப்பாராட்டி உற்சாகம் கொடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. கையிருப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான்

  தங்கமான மூக்குத்தி பதிவு வைத்திருப்பதை விட மகிழ்ச்சியா என்ன??

  பதிலளிநீக்கு
 13. எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு இத்தனை பகுதியாக பிரித்து மூக்குத்தி பதிவைப்போட்டு இனிமையாக ஒளிரச்செய்ததற்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 14. இராஜராஜேஸ்வரி said...
  கையிருப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான்

  //தங்கமான மூக்குத்தி பதிவு வைத்திருப்பதை விட மகிழ்ச்சியா என்ன??//

  அதுசரி. தங்களின் தங்கமான கருத்துக்களுக்கு முன்னால், தங்கமாவது, மூக்குத்திப்பதிவாவது;

  தங்களின் ஒரு சின்ன கருத்து தங்கச்சுரங்கம் போலல்லவா எனக்கு.;)))))

  பதிலளிநீக்கு
 15. இராஜராஜேஸ்வரி said...

  //எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு இத்தனை பகுதியாக பிரித்து மூக்குத்தி பதிவைப்போட்டு இனிமையாக ஒளிரச்செய்ததற்குப் பாராட்டுக்கள்..//

  தங்களின் அன்பான வருகையும், அற்புதமான கருத்துக்களும், எடுப்பான எட்டுக்கல்லு பேஸ்திரியைப் போல்வே ஜொலிக்குதே.

  மிக்க நன்றிங்க மேடம்.

  பதிலளிநீக்கு
 16. //அப்போது ஒரு பவுன் அதாவது 8 கிராம் விலை ரூபாய் 200 க்குள் தான். ஒரு கிராம் தங்கம் வெறும் 25 ரூபாய்க்குள் தான்.
  38 வருடங்களில் 80 மடங்கு தங்கம் விலை ஏறியுள்ளது என்பதை என்னால் மனக்கணக்காகப் போடமுடிந்தது, கையிருப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். //

  நீங்கள் ACCONTS OFFICER ( CASH ) அல்லவா? அதுதான் உடனே கணக்கு போட்டு பார்த்து விட்டீர்கள். அப்போதைய 200 ரூபாய் இப்போதைய இருபதாயிரம் ரூபாய்க்கு சமம். கூட்டி கழித்துப் பார்த்தால் எல்லாம் ஒன்றுதான். விலைவாசி எங்கே ஏறியது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

   தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   // கூட்டி கழித்துப் பார்த்தால் எல்லாம் ஒன்றுதான். விலைவாசி எங்கே ஏறியது?//

   ஆம் ஐயா, ஒருவிதத்தில் இதுதான் உண்மை. யதார்த்தமும் கூட. ;)))))

   அன்புடன்
   vgk

   நீக்கு
 17. எனது கருத்துரையில் டைப் செய்யும் போது ACCONTS OFFICER ( CASH ) என்று வந்து விட்டது. அதில் உள்ள எழுத்துப் பிழையை நீக்கி ACCOUNTS OFFICER என்று வாசிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. OK Sir, No problem. I understood. It is only a typing error. Error is human. I also commit such mistakes & feel for it very much, later.

   நீக்கு
 18. //புளியங்கொட்டைக்கலரில் முழுக்கைச்சட்டை அணிந்த ஒருவன் என் எதிரில் தென்பட்டான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். //

  வில்லன் வந்து விட்டான் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

   தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   //வில்லன் வந்து விட்டான் என்று நினைக்கிறேன்.//

   ஆஹா! அவன் நல்லவனா வில்லனா என, இந்தக் கதையை உருவாக்கிய எனக்கே கடைசிவரை விளங்காத மர்மமாகவே இருந்தது. ;)

   அன்புடன்
   vgk

   நீக்கு
 19. ஒரு இம்மாந்துண்டு மூக்குத்தி வாங்க இவ்ளோ அலைச்சலோ?:) சூப்பராக நகருது கதை.

  பதிலளிநீக்கு
 20. athira October 22, 2012 1:32 PM
  ஒரு இம்மாந்துண்டு மூக்குத்தி வாங்க இவ்ளோ அலைச்சலோ?:)//

  என்னங்க ஒரேயடியா இப்படிச் சொல்லிட்டீங்க?

  இம்மாந்துண்டு மூக்குத்தியை அந்த இம்மாந்துண்டு துவாரத்திலே நுழைச்சுப் போட்டாகத்தானே சூப்பரா இருக்கு.

  அந்த ஜாலிக்காக அலைவதிலும், மனம் அலைபாய்வதிலும் என்னங்க தப்பு இருக்கு.

  உலகமே இப்படித்தாங்க தன்னைத்தானே சுத்திக்கிட்டு, சூரியனையும் சுத்தி வருது.

  //சூப்பராக நகருது கதை.//

  சூப்பராக நகருதுன்னு நீங்களே சொல்லிட்டீங்க பாருங்க .....
  அதை. ;)))))

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  பதிலளிநீக்கு
 21. Priya Anandakumar August 22, 2013 at 6:25 AM

  வாங்கோ, வணக்கம்.

  //Now nose stud is bought, lets see what happens next...//

  ஆமாம் மேடம், ஒரு வழியாக மூக்குத்திக்கு பணம் கட்டியாச்சு. கையில் மூக்குத்தியை வாங்கணும், பத்திரமாக வீட்டுக்கு எடுத்துப்போகணும். அதுதான் இனிமேல் வரப்போகும் கதையே. ;)

  பதிலளிநீக்கு
 22. இன்று நகை வாங்கும் பாணி மாறிப்போச்சு. நமக்கெல்லாம் பழக்கமில்லை.

  பதிலளிநீக்கு
 23. இதைப்படிக்கற நாங்களும் அந் த கடையில இருப்பது போலவே இருக்கு.

  பதிலளிநீக்கு
 24. நானே இப்ப அந்த நகைக்கடைக்குள் தான் இருக்கேன்.

  எங்கம்மா சின்ன வயசுல 13 ரூபா பவுன் அப்படீன்னு சொல்லுவா
  எங்க அக்கா கல்யாணத்தின் போது 400 ரூபாய் பவுன்.

  நான் 4000 ரூபாய்க்கு பவுன் வாங்கினேன். இப்ப 4000 ரூபாய்க்கு கால் பவுன்கூட கிடைக்காது.

  பசிச்சவன் பழங்கணக்கு பார்த்த கதைதான் இதுவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya June 2, 2015 at 10:46 PM

   //நானே இப்ப அந்த நகைக்கடைக்குள் தான் இருக்கேன். //

   வெரி குட் ! நிறைய வாங்கிக்கொள்ளுங்கோ. [மாமா பாவம்]

   //எங்கம்மா சின்ன வயசுல 13 ரூபா பவுன் அப்படீன்னு சொல்லுவா//

   ஆம் அவையெல்லாம் நம் அம்மாக் காலம்.

   //எங்க அக்கா கல்யாணத்தின் போது 400 ரூபாய் பவுன்.//

   1972 இல் 8 கிராம் வெறும் ரூ. 200 மட்டுமே. நானே வாங்கியுள்ளேன்.

   //நான் 4000 ரூபாய்க்கு பவுன் வாங்கினேன். இப்ப 4000 ரூபாய்க்கு கால் பவுன்கூட கிடைக்காது.//

   ஆமாம். நாளுக்கு நாள் விலையேற்றம். எதுதான் விலை ஏறவில்லை?

   //பசிச்சவன் பழங்கணக்கு பார்த்த கதைதான் இதுவும்.//

   கரெக்ட் ஜெயா. :)

   நீக்கு
 25. ஏ ஆத்தாடி நக செலக்ட்டு பண்ண ஒரு இடம் பில்லு போட வேர எடம் வாங்கிகிட்டு போக வேர இடமா. இன்னாதுக்கு இப்படிலா இளுத்தடிக்குராங்க

  பதிலளிநீக்கு
 26. வந்தோமா பிடித்த நகைய வாங்கினோமா போனோமான்னு இல்லாம அங்க போ இங்க போன்னு அலக்கழிகறாளே. ஓ. கே. இப்ப புளியங்கொட்டைகலர் சட்டை போட்ட ஹீரோ எண்ட்ரியா. வரட்டும் வரட்டும்

  பதிலளிநீக்கு
 27. இந்த பதிவுக்கு கொஞ்சம் பெரிய பின்னூட்டம் போட்டிருந்தேன் அது வந்ததா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரணாகதி. November 17, 2015 at 10:13 AM

   //இந்த பதிவுக்கு கொஞ்சம் பெரிய பின்னூட்டம் போட்டிருந்தேன் அது வந்ததா?//

   இல்லை. வரவில்லை. தயவுசெய்து மீண்டும் கட்டாயமாக அனுப்பி வைக்கவும்.

   பின்னூட்டங்களை அனுப்பும் முன்பு தங்களிடம் Word Doc. போன்ற ஏதாவது ஓரிடத்தில் சேமித்து வைத்துக்கொண்டு, பிறகு அனுப்புவது மிகவும் நல்லது. அதுபோலத்தான் நான் இப்போதெல்லாம் செய்துவருகிறேன்.

   நீக்கு
 28. //
  38 வருடங்களில் 80 மடங்கு தங்கம் விலை ஏறியுள்ளது என்பதை என்னால் மனக்கணக்காகப் போடமுடிந்தது, கையிருப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான்.// அடேங்கப்பா போடவக்குது விலையும் உங்களோட கால்குசேசனும்...வில்லன் என்ட்ரி மாதிரி தெரியுதே...

  பதிலளிநீக்கு
 29. நகைவாங்க ஓர் இடம் பில்போட்டு ஓர்இடம் நகையை பேக்பண்ணிதர ஓர் இடம்னு அலைக்கழிக்கறா.. பெரியவர் குழம்பி போவாரே.. இடையில் ஒரு புளியங்கொட்டை சட்டைக்காரன் எண்ட்ரி ஆயிருக்கானே.. பார்ப்போம். அவன் வில்லனாஹீரோவான்னு.

  பதிலளிநீக்கு