என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 30 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 6 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

வயிறு பசிப்பதுபோல இருந்தது. காலையில் நீராகாரம் மட்டும் குடித்துவிட்டு கிராமத்திலிருந்து, வீட்டைவிட்டுப்புறப்பட்டது.  மதியம் இப்போது பன்னிரெண்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்புறம் இருந்த ஓட்டலுக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து, வயிற்றுக்கு சாப்பிட ஏதோ ஆர்டர் கொடுத்தேன்.

---------------------------------

அந்த ஓட்டலில் எனக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் என்னைப்பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே,  ஓட்டலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.  

வயசுப்பையன் பாவம், அவனுக்கு என்னைப்போலவே பசி எடுத்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொண்டேன்.

ஓட்டலுக்கான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். 

அடிக்கும் வெய்யில் என் தலையைத்தாக்காமல் இருக்க, குடையை விரித்தபடி, பொடிநடையாக நடந்து, பேருந்து நிலையம் வந்து விட்டேன்.  அங்கும் ஒரே கும்பல். எங்கள் ஊர் பக்கம் செல்லும், ஒரு பஸ் உட்கார இடமில்லாமல் நிறை மாத கர்ப்பிணி போல, நிரம்பி வழிந்து, மிகவும் தள்ளாடியவாறு புறப்படத்தயார் ஆனது. 

நான் அடுத்த பஸ்ஸில் செல்லத்தீர்மானித்து, கும்பலோடு கும்பலாக நிற்கும் போதே, அடுத்த பஸ்ஸும் வந்துவிட்டது. 

டவுனில் வெய்யில் அடிக்கும் போதே மழையும், [கோடைமழை] படபடவென்று பெரும் தூரலாய்ப்போட்டது.

புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென என்முன் தோன்றி, என் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த என்னை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்தான்.

அவனுக்கு வேறு ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், அடுத்த பஸ்ஸில் வருவதாகவும் சொல்லியவன், நான் குடை வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டேனா என்று உறுதி செய்துகொண்ட பிறகே புறப்பட்டான்.

அந்த பஸ் ஸ்டாண்டு கும்பலில் அவன் மறையும் வரை, நன்றியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, என் அருகில் அமரவந்த ஒரு இரட்டைநாடி மனிதரின் “குடையை மடக்கி நேராக வைத்து நகர்ந்து உட்காருஙக” என்ற குரல் திரும்பச்செய்தது.

பஸ் எங்கள் கிராமத்தை நெருங்குவதற்கு சற்று முன்னர் நான் எழுந்து படிக்கட்டுப்பக்கம் போய் இறங்குவதற்கு வசதியாக நின்று கொண்டேன். 

எங்கள் கிராமத்தில் மட்டும் மழைபெய்த அடையாளமே எதுவும் தெரியாமல், சுள்ளென்று வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கிய நான், எங்கள் ஊர் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நின்று கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையனை மீண்டும் கண்டேன். 

எனக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கினேன்.

“என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.  

ஆமாம் என்பதுபோலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.


தொடரும்




{ நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தச்சிறுகதையின் இறுதிப்பகுதி [பகுதி 7 / 7] நாளை செவ்வாய்க்கிழமை 31.05.2011 அன்று வெளியிடப்படும் }

37 கருத்துகள்:

  1. அந்தப் பையன் யார்.? மூக்குத்தி பத்திரமா,?ஆவல் அதிகரிக்கிறது. கோபு சார் நன்றி. உங்கள் மூலம் எல். கே. அவர்களுக்கும் நன்றி. நீங்கள் கூறிய செயல் முறையில் என் கமெண்ட் பாக்ஸ் -ம் திறந்து விட்டது. என் பதிவினை தொடர்பவர்கள் பற்றிய டீடைல்ஸ் வருவதில்லை. யாராவது உதவுவார்களா.?

    பதிலளிநீக்கு
  2. தொலைத்தது பெரியவரா, இல்லை அந்த புளியங்கொட்டை கலர் சட்டை அணிந்தவரா... என்ன நடந்தது... சஸ்பென்ஸ் அதிகரித்து விட்டதே...

    கடைசி பகுதிக்காய் வெயிட்டிங்...

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் குழப்பிவிட்டீர்கள்
    எதையும் அனுமானிக்க இயலவில்லை
    செவ்வாய் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. @புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையனை மீண்டும் கண்டேன். /

    அந்தப்பையன் மேல் சந்தேகம் வருகிறதே.அவன் நல்லவனா? கெட்டவனா??....

    பதிலளிநீக்கு
  5. ரொம்பக் குழப்பறீங்க சாரே. அவன் நல்லவனா கெட்டவனா ??

    பதிலளிநீக்கு
  6. இப்போது இச்சிறுகதை ஒரு மர்மக்கதை போல வந்துவிட்டது! ரொம்ப ஆவலா இருக்கு! வெயிட்டிங் ஃபார் டுமாரோ

    பதிலளிநீக்கு
  7. //நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தச்சிறுகதையின் இறுதிப்பகுதி [பகுதி 7 / 7] நாளை செவ்வாய்க்கிழமை 31.05.2011 அன்று வெளியிடப்படும் // எங்கள் நாடி உங்கள் கையில்...!!

    பதிலளிநீக்கு
  8. எனக்கென்னவோ இந்த கதை rightல சிக்னல் கொடுத்து leftல திரும்புகின்ற மாதிரி முடிவு சொல்லப்போகுது என்று தோன்றுகிறது சார்.

    பதிலளிநீக்கு
  9. ஐயோ ஐயோ கிளைமாக்ஸ் சொல்லுங்கய்யா...!!

    பதிலளிநீக்கு
  10. கண்டிப்பா நகையை பரி கொடுத்தது அந்த பையனில்லை ஹி ஹி நீங்கதான்...!

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா30 மே, 2011 அன்று PM 2:10

    என்ன நடந்திருக்கும்! ஆவலை அதிகரிக்க செய்துவிட்டீர்களே ஐயா !!!

    பதிலளிநீக்கு
  12. புளியங்கொட்டை கலர் சட்டை
    மர்மமாய் நகருகிறது ஆயினுமஎனக்கு அவன் மேல் சந்தேகம் இல்லை

    பதிலளிநீக்கு
  13. அந்தப்பையன் மேல் சந்தேகம் வருகிறதே.அவன் நல்லவனா? கெட்டவனா??....

    பதிலளிநீக்கு
  14. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்களை அழகாகக் கூறி, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பான உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. பையனில் சந்தேகம்வருவதுபோல்தான் கதைபோகிறது...

    அவன் நல்லவனாகத்தான் முடிவு இருக்கும்போல் தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியில் தெரிந்துவிடும். அதுவரை சற்றே பொறுமை.

      நீக்கு
  16. என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.

    திருடனுக்குத் தேள் கொட்டியது போல !

    பதிலளிநீக்கு
  17. இராஜராஜேஸ்வரி said...
    என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.

    //திருடனுக்குத் தேள் கொட்டியது போல !//

    மீண்டும் அன்புடன் வருகை தந்து கருத்துக்கூறியுள்ளதற்கு மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  18. எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.


    தொடரும் பரிதாபம்

    பதிலளிநீக்கு
  19. இராஜராஜேஸ்வரி said...
    எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.


    //தொடரும் பரிதாபம்//

    யார் யார்ருக்கோ பரிதாபப்படும் நல்ல தங்கமான குணம் உங்களுக்கும், அந்த மூக்குத்தி வாங்கிய பெரியவர் போலவே.

    தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. // எனக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? //

    அதானே! அவன், அவர் ஊர் கிடையாதே. உங்கள் கதையின் சஸ்பென்சே புது மாதிரிதான்.

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    // உங்கள் கதையின் சஸ்பென்சே புது மாதிரிதான்.//

    ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  22. ஆஹா... எனக்கு கை கால் எல்லாம் நடுங்குதே... என்னாகப் போகுதோ. மூக்குத்திக்கு கடவுளே...

    பதிலளிநீக்கு
  23. athira October 22, 2012 1:38 PM
    ஆஹா... எனக்கு கை கால் எல்லாம் நடுங்குதே... என்னாகப் போகுதோ. மூக்குத்திக்கு கடவுளே...//

    கைகால் எல்லாம் நடுங்காமல் ஸ்டெடியாக வாருங்கள். ஒண்ணும் ஆகாது.... பயப்படாமல் வாருங்கோ.

    மூக்குத்தி தொந்தரவாக இருந்தால் அதைக்கழட்டி கிணத்துல போட்டுடலாம். இதற்காக கடவுளைக் கூப்பிடாதீங்கோ.

    அவருக்கு [கடவுளுக்கு] ஆயிரம் வேலைகள் இருக்கும். [சுட்டுவிட்டேன் .. உங்களை அல்ல, உங்களின் இந்த வரிகளை மட்டுமே ;)))))]

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  24. I thought the boy was going to steel, let me read the following post...
    nice sir , thanks for the story...
    My kids are not letting me read...

    பதிலளிநீக்கு
  25. Priya Anandakumar August 22, 2013 at 8:23 AM

    வாங்கோ, வணக்கம்.

    //I thought the boy was going to steel, let me read the following post... nice sir , thanks for the story...//

    எல்லோருக்குமே அதுபோன்றதோர் சந்தேகம் தான் உள்ளது. பாராட்டுக்கு நன்றிகள்.

    //My kids are not letting me read...//

    அடடா, முதலில் குழந்தைகளை கவனியுங்கோ. அது தான் முக்கியம்.

    கதையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக நாளைக்குக்கூட படிக்கலாம். ஆனால் கதை விறுவிறுப்பாக இருந்தால், மேலும் தொடர்ந்து படித்து முடித்து முடிவைத்தெரிந்து கொண்டு விடவேண்டும் என்ற ஆர்வம் தான் ஏற்படும். அதையும் நான் மறுப்பதற்கு இல்லை. வாசிப்பவரின் ஆர்வத்தைப்பொறுத்தது, இது. மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  26. உலகத்தில் கூட்டத்தில் உதவுபவர்கள் உண்டோ?

    பதிலளிநீக்கு
  27. அடுத்து எனும் கேள்வி எதிர் பார்பு எகிருதே.

    பதிலளிநீக்கு
  28. புளியங்கொட்டை கலர் சட்டைப் பையன் உதவினதிலும் ஏதோ உள் நோக்கம் இருக்குமோ? இவரோட மூக்குத்தியை ஆட்டையைப் போடத்தான் பின்னாடியே சுத்தி, சுத்தி வரானோ?

    அடுத்த பகுதிக்குப் போய் பார்த்தா விஷயம் தெரிஞ்சிடும். பெரிய ராணுவ ரகசியமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 2, 2015 at 10:51 PM

      //புளியங்கொட்டை கலர் சட்டைப் பையன் உதவினதிலும் ஏதோ உள் நோக்கம் இருக்குமோ? இவரோட மூக்குத்தியை ஆட்டையைப் போடத்தான் பின்னாடியே சுத்தி, சுத்தி வரானோ?//

      தெரியலையே ஜெயா ! :)

      //அடுத்த பகுதிக்குப் போய் பார்த்தா விஷயம் தெரிஞ்சிடும். பெரிய ராணுவ ரகசியமா என்ன?//

      அதானே :)

      நீக்கு
  29. அடடா அந்தப்பையர திருட்னுன்னு லா நெனச்சுப்போட்டேன்.

    பதிலளிநீக்கு
  30. அந்த புளியங்கொட்டை கலர் வலிய வந்து உதவிபண்றானே. ஓ..... ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுறதோ.

    பதிலளிநீக்கு

  31. “என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.

    ஆமாம் என்பதுபோலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.//அவன் எங்கே இங்கே...என்னாத்துக்கு டல்லடிக்குறான்...டுவிஸ்ட்???


    பதிலளிநீக்கு
  32. //
    “என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.






    ஆமாம் என்பதுபோலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.// திருப்பம் அருமை!

    பதிலளிநீக்கு
  33. கிராமத்து பஸ் ஸ்டாண்ட் கூட்டநெரிசல் எல்லாமே கண்ணு முன்னால வருது. இங்கயும் வந்துட்டானே புளியங்கொட்டை.

    பதிலளிநீக்கு