என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 29 செப்டம்பர், 2014

VGK-35 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’பூபாலன்’


 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-35  


 ’ பூபாலன் ‘  


 





     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  





நடுவர் திரு. ஜீவி






நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து






இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






     







முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம் - 1

 




பூபாலன் என்ற துப்புரவுத் தொழிலாளி பாத்திரத்தைப் படைத்து அதன் மூலம் வாழ்வியல் தத்துவத்தை எளிய முறையில் விளக்கிச் செல்லும் ஆசிரியரின் படைப்புத்திறன் பாராட்டுக்குரியது.

கதையின் தொடக்கத்தில் விழாக்கோலம் பூண்ட ஒரு கிராமத்தைக் கண்முன் நிறுத்துகிறார் கதாசிரியர். ஒரு காலத்தில் அந்த ஊர்க்காரராக இருந்தவர் அமைச்சராகி, தன் சொந்த கிராமத்திற்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி வழங்க வருகிறார் என்றால் சும்மாவா? தடபுடலான வரவேற்பு இருக்கத்தானே செய்யும்.

அமைச்சர் “சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது எப்படி ?” என உரை நிகழ்த்த வரும்போது வரவேற்பு நிகழ்வுகளோ முரணாக அமைகின்றன. அதிகமான இரைச்சலுடன் காதுகளில் ரத்தம் வரவழைப்பது போல ஏதேதோ அர்த்தம் விளங்காத தற்கால சினிமாவில் வரும் புதுப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததும், சுவரொட்டிகள் சுவர்களை ஆக்ரமிப்பு செய்திருந்ததும்அமைச்சர் வந்தவுடன் வேட்டுச் சத்தங்களும், பத்தாயிரம் வாலா சரவெடிகளும் வெடிக்கப்பட்டு சுற்றுச் சூழல் காத்தவிதம் (?) யதார்த்தம்.

கற்ற கல்வி, பரம்பரையாய்ப் பெற்ற பணம், , அரசியல் செல்வாக்கு முதலியவற்றால் பட்டம் போல உயரே பறந்து ஒருவர் மாண்புமிகு மந்திரி ஆகிவிட்டார்.  பள்ளிப்படிப்போ, பணமோ, அரசியல் ஈடுபாடோ எதுவுமே இல்லாத பூபாலனோ பட்டம் பறக்க உபயோகப்படும் நூல்கண்டாக தரையில் தங்கிவிட்டதோடு, தரையைப்பெருக்கி சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பானதோர் எளிய வேலையில் இன்று உள்ளார். இரு பாத்திரங்களிடையேயான வேறுபாட்டை இதைவிட எப்படி அழகாக விளக்க முடியும்?

கடந்த நான்கு நாட்களாக ஊரைக் கூட்டிச் சுத்தம் செய்த தன் பால்ய சிநேகிதனின் பணியினை ஊர்கூடியிருக்கையில் பாராட்டி, அவன் சேவையின் அவசியத்தை வலியுறுத்தி, துப்புரவுப் பணியாளர்களும் நம்மைப் போல் மனிதர்களே! அவர்களிடம் அன்பு பாராட்டி ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பது அவருக்கு எளியோரிடம் உள்ள இரக்க சுபாவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் படைக்கப் பட்டுள்ளது.

பூபாலனுக்குப் பொன்னாடை போர்த்தி, தங்கமோதிரம் அணிவித்து, அவனைப் பாராட்டி, அவனைக் கட்டிப் பிடித்தபடி புகைப்படம் எடுக்க வைத்து, அடுத்தநாள் பத்திரிகையில் செய்தி வெளியாகச் செய்தது அவர் ஒரு அரசியல்வாதி என்பதையும் வெளிப்படுத்திவிடுகிறது.

எது எப்படியோ, நண்பனை மறவாமல், அவனது சேவையைப் பாராட்டி கெளரவித்த வகையில் அவர் ஒரு மாறுபட்ட அரசியல்வாதிதான். பூபாலன் மனதில் அது ஒரு மாற்றத்தை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. அது உள்ளதை வெளிப்படையாகக் கூறும் வாயுறை வாழ்த்தெனவும் கொள்ளலாம்.

உண்மையான புகழ் என்பது நாம் தேடிச் செல்வதேஅல்ல.. அது தானாகத் தான் தேடி வர வேண்டும்.. தன் பணியில் கண்ணும் கருத்துமாய், "செய்யும் தொழிலே தெய்வம்" எனக் கருதி பணியாற்றிய பூபாலனுக்கு உரிய நேரத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைத்ததாகக் காட்டியது பாராட்டுக்குரியது.

  
கதாசிரியரும் பூபாலன் பாத்திரத்தைப் படைத்து தன்னைப் புகழ்ந்து வந்துள்ள செய்திகளும், தன் படங்களைத் தாங்கி வந்துள்ள செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசக்கியும் கிழித்தெறிந்தும், என்றாவது ஒரு நாள் தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அவைகளையும் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்ததாகக் காண்பித்தது அருமை.

விழா முடிந்து, அந்த இடத்திலிருந்து வெளியேறுபவர்களைப் பார்த்து “இவர்களுக்கு ஆயிரம் வேலைகள்! எனக்கு இது ஒன்றுதான் வேலை” என மீண்டும் அங்கிருந்த குப்பைகளை அகற்ற முற்படும் பூபாலனின் குரல் நம் காதில் ஒலிப்பதுபோல் உள்ளது.

புகழுரைக்கு மயங்காமல் கருமமே கண்ணாயினார் என செயல்படும் பூபாலன் போன்றோர்கள் உண்மையிலேயே இந்தப் புவி காக்கும் பாலன்கள்.

எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அடித்தட்டு மக்களிடம் கருணையுடன் பழக வேண்டிய பண்பினை வலியுறுத்தும் விதத்திலும், சுற்றுச் சூழல் காக்க இந்த பூபாலன் போன்றோர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதத்திலும், புகழுரைக்கு மயங்காத நிலை எல்லோருக்கும் அவசியம் என்பதை உணர்த்தும் விதத்திலும் இக்கதையைப் படைத்த கதாசிரியர் நம் பாராட்டுக்குரியவர் என்பதில் ஐயமில்லை.

-காரஞ்சன்(சேஷ்)


 



இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

 


திரு. E.S. சேஷாத்ரி அவர்கள் 


வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்) 

esseshadri.blogspot.com




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      






 


முதல் பரிசினை  முத்தாக வென்றதுடன் 


மூன்றாம் முறையாகத் தான் பெற்ற   


 ஹாட்-ட்ரிக் வெற்றியினை ஐந்தாம் சுற்றிலும் 


தக்க வைத்துக்கொண்டுள்ளார்.


திரு. E.S. SESHADRI அவர்கள் 

 

VGK-31 TO VGK-35
  
   
 

  


மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


 [ Hat Trick Prize Amount will be fixed later according to his

further Continuous Success in VGK-36 ]



     




முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம் - 2

 



ஊரையே கூட்டி சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளன் பூபாலன் தன் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டிருப்பதில் ஆச்சர்யம் என்ன? 

இந்தக் கதையில் மந்திரியின் நிலை உயரப் பறக்கும் பட்டத்துடனும் பூபாலனின் நிலை பட்டம் பறக்க உதவும் நூல்கண்டுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. இதை ஒரு குறியீடாகவே நான் காண்கிறேன். மந்திரியின் நிலை உயர்வதற்கு பூபாலன் அப்படியொன்றும் உதவவில்லையே என்று தோன்றலாம்.

பட்டம் எவ்வளவுதான் உயரே பறந்தாலும் அதைப் பிணைத்திருக்கும் நூல்கண்டுடன் ஒரு பிடிப்பு இருக்கவேண்டும். 

உழைக்கும் வர்க்கம் இல்லாவிடில் உட்கார்ந்துண்ணும் வர்க்கம் ஏது? 

துப்புரவுப் பணியாளனான பூபாலனுக்கு படிப்பறிவு இல்லையென்றாலும் பட்டறிவுக்குப் பஞ்சமில்லை. “செய்யும் தொழிலே தெய்வம், அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று இயற்கையாகவே உணர்ந்திருந்த பூபாலன் என்ற வரிகள் நமக்கு பூபாலனின் குணவியல்பை கதையின் துவக்கத்திலேயே உணர்த்திவிடுகின்றன.

‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் உபதேசப்படி பூபாலன் தன் கடமையை செவ்வனே செய்கிறான். மந்திரி வருமுன்னும் செய்தான், மந்திரி போனபின்பும் செய்துகொண்டிருக்கிறான். மந்திரி தனக்குப் பரிசளித்து கௌரவிப்பார் என்றோ மேடையில் தன்னை நண்பனென்று அடையாளம் கண்டுகொண்டு குசலம் விசாரிப்பார் என்றோ பொன்னாடை போர்த்துவார் என்றோங்க மோதிரம் அணிவிப்பார் 
என்றோ எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல்தான் 
மேடையேறுகிறான்.

பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தபோது அது தன் 
கடின உழைப்புக்காக கிடைத்ததாக மகிழ்கிறான்
மந்திரியான பின்னும் தன்னை நண்பனென மறக்காமல் 
இருப்பதை அறிந்தபோதுஅதுதனது நட்புக்கான 
மரியாதையென எண்ணி மகிழ்கிறான்
அதற்குமேல் அவனுக்கு அந்த அரசியல்வாதியிடம் 
எந்த எதிர்பார்ப்பும் இல்லைஎந்தக் காரியமும் 
ஆகவேண்டியதில்லை. 

பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவனல்ல பூபாலன். அப்படி இருந்திருந்தால் அரசியல்வாதியின் சிநேகத்தைப் பற்றிக்கொள்ளும் இந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருப்பானா? 

பூபாலன் அப்படிப்பட்டவனாயிருந்திருந்தால் அந்த ஆடம்பரக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அவன் தன்னிலை மறந்து மந்திரியின் பின்னாலேயே சிபாரிசுக்காக அலைந்துகொண்டிருந்திருப்பான். துப்புரவுப் பணியிலிருந்து தன்னை அப்புறப்படுத்தி வேறொரு பணியில் நியமிக்குமாறு இறைஞ்சிக்கொண்டிருந்திருப்பான். ஆனால் இவனோ மறுநாள் பத்திரிகையில் அவன் மந்திரியுடன் இருக்கும் படம் வந்தது கூடத் தெரியாமல் அல்லது பொருட்படுத்தாமல் தன் கருமமே கண்ணாக ஊரை சுத்தம் செய்துகொண்டிருக்கிறான்.

முந்தைய நாள் அனுபவம், பூபாலன் தன் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத புதிய அனுபவம். மகிழ்வும் நெகிழ்வுமான அந்தத் தருணத்தை ஒரு ஞானியைப் போன்ற மனோபாவத்துடன் கடக்கமுடியுமானால் பூபாலனின் மனோதிடத்தை என்னவென்று சொல்வது? சாதாரணமானவன் என்று கதாசிரியர் குறிப்பிட்டாலும் அசாதாரணமானவனாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறான் பூபாலன்.

ஒருவன் செய்யும் தொழிலைக் கொண்டே சமூகத்தில் அவனுக்கான மதிப்பு கிடைக்கிறது என்பதை அறிவோம். இந்தக் கதையிலும் மந்திரியை அவர் இவர் என்று மரியாதைப் பன்மையில் குறிப்பிட்ட கதாசிரியர், அவருடன் சிறுவயதில் சேர்ந்து விளையாடிய பூபாலனைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் என்பதா அவன் என்பதா என்று கதையின் துவக்கத்தில் தடுமாறியிருப்பது தெரிகிறது. இந்த ஒரு நெருடலைத் தவிர பிற யாவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டுள்ளன. சரளமான எழுத்தோட்டத்துடன் சக மனிதர்கள் குறித்த ஒரு அற்புதமான எண்ணவோட்டம் கதையாகப் பரிமளித்தவிதம் மனந்தொட்டது.

 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

 திருமதி. 

கீதா மதிவாணன் 

அவர்கள்.


 
வலைத்தளம்: கீதமஞ்சரி
geethamanjari.blogspot.in

 

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


      

 




மிகக்கடினமான இந்த வேலையை 

சிரத்தையுடன் பரிசீலனை செய்து 

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள  

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.



நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 

முதல் பரிசுக்கான தொகை 

இவர்கள் இருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள 

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர  


இடைவெளிகளில் 


வெளியிடப்பட்டுள்ளன.



அதற்கான இணைப்புகள் இதோ:



http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-03-03-third-prize-winner.html


http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-02-03-second-prize-winners.html




காணத்தவறாதீர்கள் !



  


    


அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு:



VGK-37  


  ’எங்கெங்கும் ... 


எப்போதும் ... 


என்னோடு ... ‘  




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


02.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்