About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, September 5, 2014

VGK 34 - ப ஜ் ஜீ ன் னா .... ப ஜ் ஜி தா ன் !இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 11.09.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 

valambal@gmail.com 

[ V A L A M B A L @ G M A I L . C O M ]


REFERENCE NUMBER:  VGK 34

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 ’பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான்’ சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-அந்த ஐம்பது அடி அகலக் கிழக்கு மேற்கு சாலையின் நடுவே, தென்புறமாக ஒரு இருபது அடி அகலத்தில் ஒரு குறுக்குச்சந்து சந்திக்கும் ஒரு முச்சந்தி அது. அந்தசந்தில் நுழைந்து சென்றால் ஒரு நூறடி தூரத்தில் தான் அந்த பிரபல கோவிலின் கிழக்கு நுழைவாயில் அமைந்துள்ளது. கோவிலைத்தாண்டி ஏதோ பத்துப்பதினைந்து ஓட்டு வீடுகள், கோவில் சிப்பந்திகள் தங்குவதற்கு. பிறகு சந்தில் மேற்கொண்டு செல்லமுடியாதபடி பெரிய மதில் சுவர் தடுப்பு வந்துவிடும். 

இதனால் இந்த சந்தில் போக்குவரத்து நெரிசல் ஏதும் கிடையாது. ஆங்காங்கே ஒருசில வாகனங்கள் மட்டும் பார்க் செய்யப்பட்டிருக்கும். முச்சந்தி அருகே, சந்தின் ஆரம்பத்தில், மேற்கு நோக்கி ஒருவர் தன் இஸ்திரிப்பெட்டி தேய்க்கும் உபகரணங்களுடன் ஒரு தள்ளுவண்டியை நிறுத்தியிருப்பார். 

இந்த இஸ்திரிக்காரருக்கு எதிர்புறம், அந்த சந்தின் ரோட்டின்மேல் ஒரு ராட்சஸ பம்ப் ஸ்டெளவ் பற்றவிடப்பட்டு, எப்போதும் பரபரவென்ற ஒரு பெரிய சப்தத்துடன் எரிந்து கொண்டிருக்கும்.  அந்த ஸ்டெளவின் மேல் மிகப்பிரும்மாண்டமான ஒரு இலுப்பச்சட்டியில் (இரும்புச்சட்டியில்), எப்போதும் எண்ணெய் கொதித்துக்கொண்டிருக்கும். 

அதன் அருகே ஒருவர் 

பம்ப் ஸ்டெளவ்வுக்கு அவ்வப்போது காற்று அடித்துக்கொண்டும்; 

உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், பெரிய வெங்காயம், குண்டு குடமிளாகாய் போன்ற காய்கறிகளை, மிகவும் மெல்லிசாக வறுவலுக்கு சீவுவது போல சீவிப்போட்டுக்கொண்டும்; 

சீவியதை ரெடியாகக் கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் ஒரு முக்கு முக்கியும்; 

முக்கியெடுத்த பஜ்ஜி மாவுடன் கூடிய காய்கறித்துண்டுகளை கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போட்டும்;

கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டு தத்தளித்து மிதக்கும் பஜ்ஜிகளை, ஓட்டைகள் நிறைந்த மிகப்பெரிய கரண்டியால், ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி சண்டை சச்சரவு செய்து கொள்ளாமல் தடுத்தும்;

அவை அந்தக்கொதிக்கும் எண்ணெயில் தனித்தனியே நீச்சல் அடிக்க உதவியும்;

சரியான பக்குவத்தில் அவை வெந்ததும் அதே ஓட்டைக்கரண்டியால் ஒரே அள்ளாக அள்ளியும்;

அள்ளிய அவைகளை இரும்புச்சட்டிக்கு சற்றே மேலே தூக்கிப்பிடித்தும்;

சூடு தாங்காமல் அவை சிந்தும், கொதிக்கும் எண்ணெய்க்கண்ணீரை,   இரும்புச்சட்டியிலேயே வடியவிட்டும்;

எண்ணெயை வடிகட்டிய பஜ்ஜிகளை அவ்விடம் ரெடியாக உள்ள ஒரு வாய் அகன்ற அலுமினியப்பாத்திரத்தில் வீசியும், 

என அடுத்தடுத்த பல்வேறு காரியங்களை அந்த ஒருவரே மின்னல் வேகத்தில், தொடர்ச்சியாக செய்து கொண்டே இருப்பார். 
இயந்திரம் போல மிகவும் சுறுசுறுப்பாகவும், அஷ்டாவதானிபோல ஒரே நேரத்தில் எட்டுவிதமான காரியங்களில் ஈடுபட்டு, பாடுபட்டு, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, ஃபர்னஸ் போன்ற அனல் அடிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்கு முன் நின்று, உழைக்கும் இந்த மனிதரை தினமும் அடிக்கடி நான் பார்ப்பதுண்டு.  

இவர் இவ்வாறு படாதபாடு படுவதைப்பார்க்கும் எனக்கு, என் அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், அமைதியான சூழலில் நான் பார்க்கும் வேலைகளுக்கு, எனக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மிகவும் அதிகமோ என்று என் மனசாட்சி என்னை அடிக்கடி உறுத்துவதும் உண்டு.    

அவரவர் தலைவிதிப்படி, அவரவர் விருப்பப்படி,  அவரவருக்கு ஏதோ ஒரு உத்யோகம் அமைகிறது. நாம் அதில் முழு ஈடுபாட்டுடன், உண்மையாக உழைத்து, திறமையை வளர்த்துக்கொண்டால், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடிகிறது.

அவரவர் வேலைகள் பழக்க தோஷத்தினால், அவரவருக்கு சுலபமானதாகவும், மற்றவர்கள் பார்வைக்கு அதே வேலை மிகக் கடினமானதாகவும் நினைக்கத் தோன்றுகிறது. 

அது போகட்டும். சூடு ஆறும் முன்பு, பஜ்ஜி வியாபாரத்திற்குத் திரும்பி விடுவோம்.

முதலாமவர் இவ்வாறு சுடச்சுட பஜ்ஜிகளை அலுமனிய அண்டா போன்ற வாய் அகன்ற அந்தப் பாத்திரத்தில் போடப்போட, அதை உடனுக்குடன் ஒரு பஜ்ஜி மூன்று ரூபாய் என்றும், ஏழு பஜ்ஜிகளாக வாங்கினால் இருபது ரூபாய் மட்டுமே என்றும் மார்க்கெட்டிங் செய்ய தனியாக மற்றொருவர். அவரே இந்தக்கடைக்கு முதலாளியுமாவார்.

அளவாகக்கிழித்த செய்தித்தாள்களில் அப்படியே வைத்தோ அல்லது பேப்பர் பைகளில் போட்டோ, ஏற்கனவே பணம் கொடுத்துவிட்டு க்யூவில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட எடுத்துத் தருவார். இவ்வாறு எடுத்து பேப்பரிலோ அல்லது பேப்பர் பையிலோ போடும்போதே, சூடு பொறுக்காமல் தன் கையை அடிக்கடி உதறிக்கொள்வார். பஜ்ஜியை எடுத்துக்கொடுப்பது முதல், அடுத்த லாட்டுக்கு பணத்தை கொடுப்பவர்களிடம் காசை வாங்கி கல்லாப்பெட்டியில் போடுவது வரை இந்த மார்க்கெட்டிங் மேனேஜரின் [முதலாளியின்] வேலை. 

இது தவிர அடிக்கடி அந்த பஜ்ஜி ஃபேக்டரிக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களான, எரிபொருள், பஜ்ஜி மாவு, பஜ்ஜிபோடத்தேவைப்படும் எண்ணெய், காய்கறிகள் எனத் தீரத்தீர மார்க்கெட் டிமாண்டுக்குத் தகுந்தபடி, அந்தத் தள்ளுவண்டியின் அடியே அமைந்துள்ள ஸ்டோர் ரூமுக்குள், தன் தலையை மட்டும் நுழைத்துக் குனிந்து எடுத்துத் தருவதும், இந்த மார்க்கெட்டிங் மேனேஜரின் அடிஷனல் ஃபோர்ட்ஃபோலியோவாகும்.

ஸ்ட்ரீட் லைட் எரியாமல் இருந்தாலோ, அணைந்து அணைந்து எரிந்து மக்கர் செய்தாலோ, மழை வந்தாலோ, பெரும் சுழலாகக்காற்று அடித்தாலோ போச்சு. தெருவில் நடைபெறும் இவர்கள் வியாபாரம் அம்போ தான். 

முக்கியப்புள்ளிகள், அரசியல்வாதிகள், மந்திரிகள் என யாராவது அந்தப்பகுதிப்பக்கம் வந்தாலோ, மேடைப்பேச்சுகள், மாநாடு என்று ஏதாவது நடத்தினாலோ, காவல்துறையின் கைத்தடிகள் இவர்களை நோக்கியும் சுழலக்கூடும்.  மாமூலாக நாங்கள் நின்று வியாபாரம் செய்யும் இடம் இது என்ற மாமூல் பேச்சுகளெல்லாம், அந்த நேரங்களில் எதுவும் எடுபடாது.

சுடச்சுட பஜ்ஜிக்காக ஆர்டர் கொடுத்து, பணமும் கொடுத்துவிட்டு, காத்திருக்கும் கஸ்டமர்கள் ஏராளமாக வண்டியைச்சுற்றி நின்று கொண்டிருப்பது வழக்கம். சிலர் கொதிக்கும் பஜ்ஜியை விட சூடான தங்கள் கோபத்தை முகத்தில் காட்டியவாறு “அர்ஜெண்டாப்போகணும் சீக்கரம் தாங்க”, எனச்சொல்லி, அனலில் வெந்து கொண்டிருப்பவர்களை அவசரப்படுத்துவதும் உண்டு. 

மதியம் சுமார் ஒரு மணிக்குத்துவங்கும் இந்த சுறுசுறுப்பான பஜ்ஜி வியாபாரம் இரவு பத்து மணி வரை ஜே ஜே என்று நடைபெற்று வரும். 

அங்கேயே வாங்கி அங்கேயே நின்ற நிலையில் சுடச்சுட (நெருப்புக்கோழி போல) சாப்பிடுபவர்களும் உண்டு. டூ வீலரில் அமர்ந்தவாறே ஒய்யாரமாகச் சாப்பிடுபவர்களும் உண்டு. பார்சல் வாங்கிக்கொண்டு உடனே அவசரமாக இடத்தைக்காலி செய்பவர்களும் உண்டு.

மலிவான விலையில் தரமான ருசியான பஜ்ஜிகள் என்பதால் இந்தக்குறிப்பிட்ட கடையில் எப்போதும் கூட்டமான கூட்டம்.  இந்த பஜ்ஜிக்கடைக்கு சற்று தூரத்திலேயே வைக்கப்பட்டுள்ள முனிசிபாலிடியின் மிகப்பெரிய குப்பைத்தொட்டியும், அதில் அன்றாடம் நிரம்பி வழியும் குப்பைகளும், வழியும் அந்தக்குப்பைகளில் மேயும் ஆடு மாடுகளும் அவற்றின் கழிவுகளும், இந்த ஆடு மாடுகளுக்குப்போட்டியாக அடிக்கடி வந்து, தங்கள் பின்னங்கால்களை மட்டும் சற்றே தூக்கியவாறு, குப்பைத்தொட்டியை உரசிச்செல்லும் ஆத்திரஅவசர நாய்களும், அங்கிங்கனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் ஈக்களும் கொசுக்களும், அந்த பஜ்ஜிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை, சற்றே முகம் சுழிக்க வைக்கும். 
ஆனால் இவ்வாறு சுற்றுச்சூழல் சரியில்லாமல் இருப்பதும் கூட, இந்தக்கடை பஜ்ஜியின் மனதை மயக்கும் மணத்திற்கும், சுண்டியிழுக்கும் சுவைக்கும் முன்னால் அடிபட்டுப்போகும். 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா! அதுபோலத்தான் இதுவும்.


  

வ்வளவு தான் முயன்று பார்த்தாலும், என் வீட்டில் எப்போதாவது செய்யப்படும் பஜ்ஜி, இந்தக்கடை பஜ்ஜி போல உப்பலாகவும், பெருங்காய மணத்துடனும், முரட்டு சைஸாகவும், வாய்க்கு ருசியாகவும், வயிறு நிரம்புவதாகவும், உடனடியாக சுடச்சுட தேவைப்படும் நேரத்தில் தேவாமிர்தமாகக் கிடைப்பதாகவும் இல்லை.

நான் பணியாற்றும் வங்கிக்கு மிக அருகிலேயே இந்த பஜ்ஜிக்கடை அமைந்துள்ளதால், எங்கள் அலுவலக அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு மதியம் மூன்று மணிக்கு மேல் ஆபீஸ் வேலை எதுவுமே ஓடாது. 

பஜ்ஜிக்கடைக்குக் கிளம்பும் அவரிடம் நாங்கள் எல்லோரும் எங்களுடைய தேவைகளையும் சொல்லி மொத்தமாக வாங்கிவரச்செய்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம். 

சுடச்சுட அவர் வாங்கிவரும் பஜ்ஜிகள் எங்கள் ஏ.ஸீ. ரூமுக்கு வந்ததும் நாக்கு சுடாமல் சாப்பிடும் பதமாக மாறிவிடும். அலுவலக வேலைகளில் மூழ்கி, வாங்கி வந்த பஜ்ஜிகளை நாங்கள் கவனிக்காமல் கொஞ்ச நேரம் விட்டால் போதும்; அவைகளுக்கு மிகுந்த கோபம் வந்து விடும். ஏ.ஸி. ஜில்லாப்பு ஒத்துக்கொள்ளாமல், அவை ஆறி அவலாகிப்போய், தொஞ்ச-பஜ்ஜியாகி தூக்கியெறிய வேண்டியதாகத் தங்களை மாற்றிக்கொண்டு விடும்.

சிறு தொழில் புரிவோருக்கு வங்கி மூலம் கடன்கொடுத்து உதவும் பதவியை நான் வகித்ததால், அட்டெண்டர் ஆறுமுகத்தை அனுப்பி அந்த பஜ்ஜி வியாபாரம் செய்யும் பெரியவரை வரவழைத்து, அவருக்கு ஏதாவது ஒரு வகையில் பண உதவி செய்து, அவர் செய்யும் வியாபாரத்தைப் பெருக்கிடலாம், முன்னேறச் செய்யலாம் என்று நினைத்தேன். அவருக்காகவே அன்று மாலை என் அலுவலகப்பணிகள் முடிந்த பின்பும், இரவு 7 மணி வரை. என் அலுவலகத்திலேயே காத்திருந்தேன்.

அவரை அழைத்துவரச்சென்ற ஆறுமுகம் மட்டும் தனியே 

திரும்பி வந்தான்.


“அந்தப்பெரியவரை அழைத்துவரவில்லையா” என்றேன்.


”அவரின் பஜ்ஜி வியாபாரம் உச்சக்கட்டத்தை எட்டும் 

நேரமாம் இரவு எட்டுமணி வரை. அதனால் அவரால் 

தற்சமயம் தங்களை வந்து பார்க்க செளகர்யப்படாதாம்; 

மன்னிக்கச்சொன்னார்; மேலும் இந்த நாலு பஜ்ஜிகளை 

தங்களுக்கு சூடாக சாப்பிடக்கொடுக்கச் சொன்னார்” 

என்றான் பொட்டலம் ஒன்றை என் மேஜை மீது 

வைத்தவாறே.“வலுவில் போனால் ஜாதிக்கு இளப்பம்” என்பார்களே, 

அந்தப்பழமொழி என் நினைவுக்கு வந்தது. என்னிடம் 

லோன் கேட்டு விண்ணப்பித்துக் காத்திருக்கும் 

நூற்றுக்கணக்கான பேர்களின் மத்தியில், இப்படியொரு 

பிழைக்கத்தெரியாத பஜ்ஜிக்காரர் ! நான் வியந்து 

போனேன்.மறுநாள் காலை நேரம். என் வீட்டு ஈஸிச்சேரில் பனியன் துண்டுடன் 

வாசல் சிட்டவுட்டில் நான் நியூஸ் பேப்பர் படித்தபடி அமர்ந்திருந்தேன். 

வாசல் இரும்புகேட் திறக்கப்படும் சப்தம் கேட்டு, வாசலை நோக்கினேன்.


அதே பஜ்ஜிக்கடைப் பெரியவர். நெற்றியில் விபூதிப்பட்டையுடன் 

சிவப்பழமாக என்னை நோக்கி கைகூப்பியபடி வந்தார்.  


அவர் என்னருகில் உட்கார ஒரு நாற்காலியைக் காட்டினேன்.  

பட்டும்படாததுமாக அமர்ந்து கொண்டார்.


“ஏதோ நீங்கள் என்னைக்கூட்டி வரச்சொன்னதாக உங்க ஆபீஸ் 

ஆறுமுகம் சொன்னாரு; நேற்றைக்கே என்னால் உடனடியாக போட்டது 

போட்டபடி கடையை விட்டுட்டு, கஸ்டமர்களை விட்டுட்டு 

வரமுடியவில்லை” என்றார்.


“அதனால் பரவாயில்லை; உங்களுக்கு ஏதாவது பண உதவி 

தேவைப்படுமா? அதாவது பேங்க் லோன் ஏதாவது ..... தங்கள் தொழிலை 

ஏதாவது விரிவாக்கவோ, அபிவிருத்தி செய்யவோ, தனியாக ஒரு 

கட்டடத்தில் சிறிய ஹோட்டல் நடத்தவோ, பஜ்ஜி மட்டுமில்லாமல் 

பலவித பலகாரங்கள், சட்னி சாம்பாருடன் தயாரித்து பொதுமக்களுக்கு 

சேவை செய்யவோ ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கோ. 

நான் இந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பர் ஆவதற்குள்  

உங்களுக்கு என்னால் ஆன உதவிகள் 

செய்து விட்டுப்போகிறேன்” என்றேன்.
” ஒரு 50-60 வருடங்களுக்கு முன்பு .... அந்தக்காலத்தில் .... ஒரு பஜ்ஜி 

காலணாவுக்கு விற்றோம். ஒரு அணாக்கு 4 பஜ்ஜிகள். ஒரு ரூபாய்க்கு 16 

அணாக்கள். ஒரு ரூபாய்க்கு 64 பஜ்ஜிகள்.  3 ரூபாய்க்கு 192 

பஜ்ஜிகள். இப்போ ஒரு பஜ்ஜியே மூன்று ரூபாய்க்கு விற்கிறோம். 
அதுவே மலிவு என்று சொல்லி வாங்கிப்போகிறார்கள். என்ன செய்வது 

அகவிலையெல்லாமே ஒரேயடியாய் ஏறிப்போய் விட்டது;  இப்போது 

விற்கும் விலைவாசியில் வேளாவேளைக்குச் சாப்பாட்டுக்கே 

கஷ்டப்படும், சாதாரண கைவண்டியிழுக்கும் தொழிலாளிகள், 

மூட்டை தூக்கிப்பிழைப்போர்,  சைக்கிள் 

ரிக்‌ஷாக்காரர்கள், சலவைத்தொழிலாளிகள், முடிவெட்டும் 

தொழிலாளிகள், ரோட்டோர சிறுசிறு வியாபாரிகள் என சமுதாயத்தின் 

அடித்தட்டு மக்கள் முதல், வசதியாக வாழ்ந்து காரில் வந்து இறங்கும் 

பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவு அவர்கள் 

நாக்குக்கு ருசியாகவும், வயிற்றுக்கு நிறைவாகவும் ஓரளவு பசியாற்றிட, 

இந்த நான் செய்யும் பஜ்ஜி வியாபாரத்தால் முடிகிறது; 


“இந்தக் கைவண்டியில் சூடாக பஜ்ஜி போட்டு விற்பது, எங்கள் 

குலத்தொழில். எங்க அப்பா, தாத்தா எல்லோருமே செய்த தொழில். 

ஏதோ கடுமையான உழைப்புக்குத் தகுந்தாற்போல, குறைந்த 

முதலீட்டில் நிறைந்த லாபம் கிடைத்து வருகிறது. நல்ல இடமாகவும் 

கோயில் அருகில் அமைந்துள்ளது. ஜனங்களும் என் கடையை 

விரும்பி வந்து பஜ்ஜிகள் வாங்கி எனக்குத் தொடர்ந்து 

ஆதரவு தருகிறார்கள்;  நான் பார்க்கும் இந்தத்தொழில் எனக்கு ஒரு முழுத்திருப்தியாக 

அமைந்துள்ளது. மேலும் பலவித டிபன்கள், சட்னி சாம்பாருடன் 

கிடைக்கத்தான் ஏகப்பட்ட ஹோட்டல்கள் ஆங்காங்கே 

உள்ளனவே; இந்தப் பஜ்ஜி வியாபரம் 

தான் எனக்குப்பழகிப்போய் உள்ளது. புதிதாக ஏதாவது தெரியாத தொழிலில் ஆழம் தெரியாமல் காலை விட 

எனக்கு இஷ்டமில்லை, என்னை தயவுசெய்து மன்னிக்கணும்;இந்த வியாபாரம் இனியும் தொடர்ந்து செய்து தான் நான் என் குடும்பம் 

நடத்தணும், குழந்தைகுட்டிகளைக் காப்பாற்றணும் என்று கடவுள் 

என்னை வைக்கவில்லை.   ஒரு குறைவும் இல்லாத நிறைவான 

வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறேன். ஓரளவு பணம் காசும் 

சேர்த்தாச்சு. குடியிருக்க ஒரு சுமாரான வீடும் வாங்கியாச்சு. 

ஏதோ சொச்ச காலம் உடம்பில் தெம்பு இருக்கும்வரை, இதுவரை 

என்னைக்காப்பாற்றி வந்துள்ள, இந்த பஜ்ஜித்தொழிலையே 

இப்போதுபோலவே செய்து விட்டுப்போகலாம் என்று நினைக்கிறேன்;

  

நீங்கள் எனக்குக் கொடுப்பதாகச்சொல்லும் லோன் 

பணம், உண்மையிலேயே கஷ்டப்படும், வேறு யாருக்காவது ஒருவேளை 

அவசியமாகத் தேவைப்படலாம். அதுபோல யாருக்காவது உதவி 

செய்தீர்களானால், அவா குடும்பமும் பிழைக்கும், உங்களுக்கும் ஒரு 

புண்ணியமாப்போகும்; இன்று மதியம் வியாபாரம் செய்ய காய்கறி, மளிகை சாமான்கள் 

வாங்கிவர, அவசரமாக மார்க்கெட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்; 

நான் இப்போது உங்களிடமிருந்து உத்தரவு 

வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஒரு பெரிய கும்பிடு 

போட்டுவிட்டுக் கிளம்பிப்போய் விட்டார், அந்தப்பெரியவர்.   என்னவொரு பக்குவமான, அனுபவபூர்வமான, தெளிவான, அழகானப் 

பேச்சு இவருடையது என்று நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.ஏதோ வந்தோமாம்; ஒருவருக்கொருவர் உதவியாக இருவர் மட்டும் 

சின்ன அளவில் ரோட்டோரமாக வியாபாரம் செய்தோமாம்; அன்றாடம் 

ஏதோ லாபம் பார்தோமாம் என்று 

போக நினைக்கும், இந்தப்பஜ்ஜிக்கடைப் பெரியவரின் பேச்சில் இருந்த 

நியாயத்தை என்னால் உணர முடிந்தது.வாழ்க்கையை மிகவும் உஷாராக திட்டமிட்டு, நம் வருமானம் என்ன, நம் 

தேவைகள் என்ன, வரவுக்குள் எப்படியாவது செலவை அடக்கணும், 

முடிந்தால் கொஞ்சமாவது சேமிக்கணும், கடனே வாங்கக்கூடாது என்று 

ஒரு சில கொள்கைகளோடு வாழ்பவர்கள் உண்டு. 
வேறு சிலரின் கொள்கைகளோ இதற்கு நேர் மாறாக இருக்கும். கடன் 

வாங்குவதை இவர்கள் ஒரு பெருமையான விஷயமாகக் 

கருதுவதுண்டு.  கிடைக்குமிடத்திலெல்லாம், 

கிடைக்கும் வழிகளிலெல்லாம் கடன் வாங்குவார்கள். 

வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு 

உபயோகப்பொருட்கள் வாங்கக்கடன் 

என்று எதற்கும் அஞ்சாமல் எல்லா வழிகளிலும் கடன் வாங்கி, மிகவும் 

நாகரீகமாக சமூக அந்தஸ்துடன் சொத்து 

சுகங்களைப்பெருக்கிக்கொண்டு வாழ்வார்கள். 


அவர்களும் திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்வார்கள். பெரும்பாலும் 

இவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். 

தைர்யமாகக்கடன் வாங்குவார்கள்; அதனை சாமர்த்தியமாக 

அடைப்பார்கள். பணத்தை எப்படி எப்படியெல்லாமோ 

புரட்டியெடுத்து, ஆட்டைத்தூக்கி மாட்டில் 

போட்டு, மாட்டைத்தூக்கி ஆட்டில் போட்டு, மொத்தத்தில் 

அதிர்ஷ்டமும் கைகொடுத்தால், நல்ல செழிப்பான நிலமைக்கும் 

வந்து விடுவார்கள்.
திட்டமிடாமல் நெடுகக்கடன் வாங்கி, அவற்றை ஏதேதோ  வழிகளில் 

செலவுகள் செய்து, கடனிலிருந்து மீண்டு வரவும் வழி தெரியாமல், ஒரு 

சிலரின் எல்லாத்திட்டங்களும் தோல்வியடைந்து கடைசியில் மிகவும் 

கஷ்டத்திற்கு ஆளாவதும் உண்டு. உலகம் பலவிதம்.  எவ்வளவு தான் நான் படித்திருந்தாலும், நல்ல உயர்ந்த உத்யோகத்தில் 

கெளரவமாக வாழ்ந்து வந்தாலும் பேராசை பிடித்து உழைக்காமலேயே 

சீக்கரமே கோடீஸ்வரன் ஆக வேண்டும் என 

நினைத்து, பங்குச்சந்தையில் நுழைந்து பொறுமையே சற்றுமில்லாமல் 

’தினமும் இண்ட்ரா டிரேடு செய்கிறேன்’; ’விட்டதைப்பிடிக்கிறேன்’; 

’நஷ்டத்தைக்குறைக்க மேலும் மேலும் மலிவாக வாங்கி ஆவரேஜ் 

செய்கிறேன்’ என்று நான் இதுவரை இழந்த பணம் சுமார் 

ஐம்பது லட்சங்களுக்குக்குறையாது.  ஆபீஸில் அனைத்து விதமான லோன்களும் வாங்கி, 

P.F. சேமிப்புகளையும் திரும்பத்திரும்ப லோன் வாங்கி, 

அதுவும் போதாமல் மாதம் மூன்று ரூபாய் வட்டிக்கு 

எவ்வளவோ பேர்களிடம் கடன் வாங்கி இந்த பாழாய்ப்போன ஷேர் 

மார்கெட்டில் சூதாட்டம் போல பணத்தையெல்லாம் போட்டுப்போட்டு, 

மார்க்கெட்  சரிவினால் எவ்வளவோ நஷ்டங்கள் பட்டு 

எவ்வளவோ அடிகள் வாங்கியிருந்த எனக்கு,  நானே வலுவில் 

இறங்கி வந்து குறைந்த வட்டிக்கு பேங்க் லோன் சாங்ஷன் செய்கிறேன் 

உங்களுக்கு என்று சொல்லியும், “அது எனக்குத் 

தேவையில்லை” என்பதற்கான காரணமாகச்சொன்ன 

இந்தப்பெரியவரின் ஒவ்வொரு சொல்லும் என்னை மிகவும் சிந்திக்க 

வைத்தது.“சிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்”  “போதுமென்ற மனமே பொன் 

செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் 

பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.என்னதான் இருந்தாலும் கடும் உழைப்பும், கொள்கைப்பிடிப்பும் 

கொண்டு, வாழ்க்கையில் நாணயமாக, நேர்மையாக வாழ்ந்து, தன் 

கடும் உழைப்பினால் மட்டுமே வெற்றிபெற்றுள்ள 


இவரின் கைப்பட செய்துதரும் 


“பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் ..... 


அதன் ருசியே தனி தான்” என்று புரிந்து கொண்டேன்.  
oooooOooooo [ என் சொந்தக்கருத்துக்களுடன் மிகவும் விஸ்தாரமாக முன்பு எழுதப்பட்ட இந்தக்கதை தற்போது விமர்சனப்போட்டிக்காக சற்றே சுருக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பழைய இணைப்புகள்:      
 
நினைவூட்டுகிறோம் !


இதுவே தங்களுக்கான


இறுதி வாய்ப்பு 

சிறுகதை விமர்சனப்போட்டியின்


நடுவர் யார் ?


VGK-31 To VGK-34 ஆகிய நான்கு கதைகளில்

ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் 

எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே 

இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.


மிகச்சுலபமான இந்தப் போட்டியில் 
கலந்து கொள்ள மறவாதீர்கள்.

இந்தப் போட்டிக்குள் போட்டியில் 
கலந்துகொள்ள இதுவே 
தங்களுக்கு இறுதி வாய்ப்பு
என்பதையும் மறவாதீர்கள்.
மேற்படி போட்டியின் மிகச்சுலபமான

  நிபந்தனைகள் காண இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html

வரும் வியாழக்கிழமை 11.09.2014 

இரவு 8 மணிக்கு மேல்

நடுவர் யார் என்பது பற்றிய பலவிஷயங்கள்

நடுவர் அவர்களின் புகைப்படத்துடன் 

சிறப்புப்பதிவாக வெளியிடப்பட உள்ளது.

காணத்தவறாதீர்கள் !     
 

VGK-32 - சகுனம்

சிறுகதைக்கான விமர்சனப்போட்டி முடிவுகள்

வழக்கம்போல் நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்

முற்றிலும் வெளியிடப்படும்.
காணத்தவறாதீர்கள்.

என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

    

24 comments:

 1. பஜ்ஜியை மையமாக வைத்து
  உலகஞானத்தை சுவையாக சூடாக
  அள்ளித்தந்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. பஜ்ஜியை மையமாக வைத்து
  உலகஞானத்தை சுவையாக சூடாக
  அள்ளித்தந்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. விமரிசையாக நடக்கும் விமரிசனப் போட்டிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. போதும் என்ற மனம் இருந்தாலே வாழ்வு சுகம் பெறும் என்ற நல்ல பாடத்தைக் கற்றிருக்கும் பெரியவருக்கு நல் வாழ்த்துகள். பஜ்ஜிகளின் படங்கள் சூப்பர்.

  ReplyDelete
 5. நல்ல நோக்குடன் வியாபாரம் செய்யும் பெரியவருக்கு, கடன் எதுவும் அவசியமில்லை. அவருடையபதிலே நல்ல கைதேர்ந்த அனுபவசாலியின் சொற்பொழிவு மாதிரி தோன்றுகிறது.
  போதும் என்ற மனம் வேண்டும். நல்ல புனைவு. அன்புடன்

  ReplyDelete
 6. புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்களும் கடனைப் பற்றி சொல்லும் போது

  கடன்படௌடன்படேல்1 என்ற பாடலில் இப்படி சொல்கிறார்:-

  உள்ளம் கடன் வாங்குகையில் உவப்புறும்
  கொடுத்தவன் வட்டியோடு கேட்கையில் கொலைபடும்
  ஆதலின் அருமைத் தமிழரே கேட்பீர்,
  கடன்படும் நிலைக்கு உடன்பட வேண்டாம்.

  நீங்களும் இந்த கதை மூலம் கடன் வாங்காமல் வாழவும், கடன் பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள், போதுமென்ற மனம் எவ்வளவு நல்லது என்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் சார்.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சார்.

  தேவைக்க்கு மேல் ஆசை படுவது, தகுதிக்கு மேல் ஆசை படுவது எல்லாம் எவ்வளவு கஷ்டம் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.இளைய சமுதாயத்திற்கு உங்கள் இந்த கதை மிகவும் பயனுள்ளது.

  ReplyDelete
 7. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

  இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-34.html

  போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  VGK

  ReplyDelete
 8. சார் ஒரு பஜ்ஜியில...வாழ்க்கையின் தத்துவத்தை அடக்கி விட்டீர்கள். நல்ல கொள்கையோடு வாழுத்தல் ஒரு கம்பீரம் தரும்.
  பஜ்ஜிக்காரரை நோக்கும் போது அப்படித்தான் எனக்கு தோன்றியது.

  நல்ல கதை.....உங்கள் எழுத்து நடை சுவாரஸ்யமாக ...எங்களை இழுத்துச் செல்கிறது

  வலைச்சர பணிச் சுமையால் உடனடியாக வரமுடியவில்லை.
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri February 8, 2015 at 12:28 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சார் ஒரு பஜ்ஜியில...வாழ்க்கையின் தத்துவத்தை அடக்கி விட்டீர்கள். நல்ல கொள்கையோடு வாழ்தல் ஒரு கம்பீரம் தரும். பஜ்ஜிக்காரரை நோக்கும் போது அப்படித்தான் எனக்கு தோன்றியது.//

   மகிழ்ச்சி.

   //நல்ல கதை.....உங்கள் எழுத்து நடை சுவாரஸ்யமாக ...எங்களை இழுத்துச் செல்கிறது //

   சந்தோஷம். மிக்க நன்றி :)

   //வலைச்சர பணிச் சுமையால் உடனடியாக வரமுடியவில்லை. //

   அதனால் பரவாயில்லை, மேடம். No problem. Thanks for your kind visit & comments.

   //நன்றி ஐயா//

   அன்புடன் VGK

   Delete
 9. சூடான பஜ்ஜியின் ருசியே தனிதான்.

  ReplyDelete
 10. சூடான பஜ்ஜியைப்போலவே கதையும் சூடாகவும் சுவையாகவும் இருக்கு.

  ReplyDelete
 11. எப்ப பஜ்ஜி சாப்பிட்டாலும் இந்த கதை ஞாபகத்துக்கு வந்தே ஆகணுமே.

  ReplyDelete
 12. பஜ்ஜி படங்களும் பதிவும் சூடான சுவையான பஜ்ஜி திங்குது போல இருந்திச்சி. எப்பூடி பஜ்ஜி சுடுறாங்கன்னும் வெவரமா சொல்லினீங்க.

  ReplyDelete
 13. பஜ்ஜி எண்ணைப்பண்டம்னு ஒதுக்குகிறவங்க கூட இந்தக்கதைபடிச்சா கொஞ்சமாகவாவது டேஸ்ட் பண்ணி பாத்துடலாமேன்னு நினைப்பாங்க. அவ்வளவு விவரங்கள். கடைக்காரரும் அதிக பணத்துக்கு ஆசைப்படாதவராக இருக்கார்.

  ReplyDelete
 14. // பம்ப் ஸ்டெளவ்வுக்கு அவ்வப்போது காற்று அடித்துக்கொண்டும்;

  உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், பெரிய வெங்காயம், குண்டு குடமிளாகாய் போன்ற காய்கறிகளை, மிகவும் மெல்லிசாக வறுவலுக்கு சீவுவது போல சீவிப்போட்டுக்கொண்டும்;

  சீவியதை ரெடியாகக் கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் ஒரு முக்கு முக்கியும்;

  முக்கியெடுத்த பஜ்ஜி மாவுடன் கூடிய காய்கறித்துண்டுகளை கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போட்டும்;

  கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டு தத்தளித்து மிதக்கும் பஜ்ஜிகளை, ஓட்டைகள் நிறைந்த மிகப்பெரிய கரண்டியால், ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி சண்டை சச்சரவு செய்து கொள்ளாமல் தடுத்தும்;

  அவை அந்தக்கொதிக்கும் எண்ணெயில் தனித்தனியே நீச்சல் அடிக்க உதவியும்;

  சரியான பக்குவத்தில் அவை வெந்ததும் அதே ஓட்டைக்கரண்டியால் ஒரே அள்ளாக அள்ளியும்;

  அள்ளிய அவைகளை இரும்புச்சட்டிக்கு சற்றே மேலே தூக்கிப்பிடித்தும்;

  சூடு தாங்காமல் அவை சிந்தும், கொதிக்கும் எண்ணெய்க்கண்ணீரை, இரும்புச்சட்டியிலேயே வடியவிட்டும்;

  எண்ணெயை வடிகட்டிய பஜ்ஜிகளை அவ்விடம் ரெடியாக உள்ள ஒரு வாய் அகன்ற அலுமினியப்பாத்திரத்தில் வீசியும்,

  என அடுத்தடுத்த பல்வேறு காரியங்களை அந்த ஒருவரே மின்னல் வேகத்தில், தொடர்ச்சியாக செய்து கொண்டே இருப்பார். // இவ்வளவு டீப்பா கவனிச்சு சூடான பஜ்ஜியப்போல சுவைபட எழுதமுடியுமா?? அருமை..
  // என்னதான் இருந்தாலும் கடும் உழைப்பும், கொள்கைப்பிடிப்பும்

  கொண்டு, வாழ்க்கையில் நாணயமாக, நேர்மையாக வாழ்ந்து, தன்

  கடும் உழைப்பினால் மட்டுமே வெற்றிபெற்றுள்ள


  இவரின் கைப்பட செய்துதரும்


  “பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் .....


  அதன் ருசியே தனி தான்” என்று புரிந்து கொண்டேன்.// இந்தக் கதையைப்போலத்தான்!!!

  ReplyDelete

 15. “தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
  அம்மா பெரிதென் றகமகிழ்க” என்கிறார் குமரகுருபரர்.

  இக்கருத்தை எவ்வளவு அழகாகத் தன் பாத்திரப் படைப்புகளில் வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார் கதாசிரியர்.
  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

   தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 16. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 51 + 54 = 105

  அதற்கான இணைப்புகள் (பகுதி-1 + பகுதி-2):

  http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html

  http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html

  ReplyDelete
 17. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 18. சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களும், ’நடுவர் யார் யூகியுங்கள் போட்டி’யில் வெற்றி கிட்டி பரிசுக்குத் தேர்வானவர்கள் யார்-யார் என்பது பற்றியும் அறிய இதோ இணைப்பு:

  https://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html

  ReplyDelete
 19. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

  விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு
  18.09.2018

  ReplyDelete

 20. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 26.06.2021

  பஜ்ஜின்னா....பஜ்ஜிதான், நல்ல ருசியான பஜ்ஜி சுடச்சுட சுவைப்பது தனிருசி ரசித்து சுவைக்க திருச்சி பஜ்ஜி மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்.பஜ்ஜி போடும் மனிதரின் மனமும் இதமான சுவைக்க வேண்டிய குணம்,கடனில்லாத வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என்பதை அருமையாக உணர்த்தியுள்ளார். அனைவருமே கடைபிடிக்க வேண்டிய கொள்கை. கட்சி நடத்துபவர்களே கொள்கை இல்லாத இந்த காலத்துல பஜ்ஜி கடைகாரரின் கொள்கை பாராட்ட மட்டுமல்ல பின்பற்ற வேண்டிய ஒன்று.
  துரை. மணிவண்ணன்.

  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS.
  - VGK

  ReplyDelete
 21. WHATS-APP COMMENTS FROM Mrs. LATHA SEKAR Madam, 944438029976, ON 27.06.2021


  nice to see the photo of vadai making mama whose vadai and bajji tastes so well.

  -=-=-=-=-

  WELCOME MADAM. THANKS FOR YOUR READING OF THE STORY & FOR THE OFFERING OF VALUABLE COMMENTS - ANBUDAN GOPU 

  ReplyDelete