S W E E T S I X T E E N
[இனிப்பான பதினாறு]
பதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான
எண்ணாகச் சொல்லப்படுகிறது.
இளமையைக் குறிக்க
‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’
‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’
என்கிறார்கள்.
அது ஒரு அறிந்தும் அறியாத
புரிந்தும் புரியாத
அற்புதமான பருவமே.
குட்டியூண்டு நொங்கு,
வழுக்கையான இளநீர்
போன்ற மிகவும் டேஸ்ட் ஆன
பக்குவமான பதமான
ஓர் அரிய பருவம்.
வழுக்கையான இளநீர்
போன்ற மிகவும் டேஸ்ட் ஆன
பக்குவமான பதமான
ஓர் அரிய பருவம்.
போனால் திரும்ப
வரவே வராத வயது.
வரவே வராத வயது.
உடல் அளவில் முதிர்ச்சி
ஏற்பட்டிருந்தாலும்
ஏற்பட்டிருந்தாலும்
18 வயது ஆனாலே
சட்டப்படி மேஜர்
சட்டப்படி மேஜர்
என்று சொல்லுகிறார்கள்.
’ஸ்வீட்ஸ்’ களிலும்
அதுபோல பலவிதமானவை உண்டு.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதமான ருசிதான்.
அதுபோல பலவிதமானவை உண்டு.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதமான ருசிதான்.
அதிலும் மில்க் ஸ்வீட் எனப்படுபவை
மிகவும் ருசியோ ருசிதான்.
இதோ இந்தாங்கோ
’ஸ்வீட் சிக்ஸ்டீன்’
’ஸ்வீட் சிக்ஸ்டீன்’
உங்களுக்குப்பிடிச்சதை
நீங்களே எடுத்துக்கோங்கோ.
அதன் பிறகு
இந்தப்பதிவினில்
சொல்லவந்த
முக்கியமான சமாசாரத்தை
நான் சொல்லி விடுகிறேன்.
அவற்றில் மில்க் ஸ்வீட் தானே மிகவும் ருசியாக இருந்திச்சு!
இந்த மில்க் [அதாங்க ... பால்] நமக்கு எங்கேயிருந்து கிடைக்குதுன்னு நாம் யோசிப்போமா?.
பொதுவாக நாம் பெரும்பாலும் மாட்டுப் பாலைத்தான் உபயோகிக்கிறோம்.
அந்த மாடுகளிலும், நமக்கு பால் தருவனவற்றில் பசு மாடு, எருமை மாடுன்னு இரண்டு இனங்கள் உள்ளன.
ஒரு பேருந்து ஓட்டுனர் ஹாரன் அடிச்சுக்கிட்டே இருந்தார். நம்மாளு ஒருத்தர் நடு ரோட்டிலே போகிறவர் கொஞ்சமும் நகருவதாகவோ ஒதுங்கிப்போவதாகவோ தெரியவில்லை. கோபம் வந்த ஓட்டுனர் “சுத்த எருமைமாடா இருக்கானே” எனப் புலம்பினாரு.
அந்த நம்மாளுக்கு காது ஒரு வேளை சுத்தமா கேட்கவில்லையோ அல்லது தினமும் எருமைப்பாலையே, குடிப்பதால் இதுபோல நகராமல் எருமை போலவே சண்டித்தனம் செய்கிறாரோ என்னவோ? பாவம் என நான் என் மனதில் நினைத்துக்கொண்டேன்.
எருமைப்பாலைவிட பசும்பால் மிகவும் ஒஸத்திதாங்க. அது தாய்ப்பால் மாதிரி புனிதமானதுன்னு கூட சொல்லுவாங்க. பசுவே புனிதமான பிராணி தானே!
சரிங்க இப்போ நான் இந்தப்பதிவிலே சொல்லவந்த விஷயத்துக்கு சட்டுபுட்டுன்னு வந்துடறேனுங்க! கோச்சுக்காதீங்க.
சத்தியம் நீயே! தர்ம தாயே!!
குழந்தை வடிவே! தெய்வ மகளே!!
கோமாதா எங்கள் குலமாதா !
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்
11.11.2012 ஞாயிறு
கோ வத்ஸ துவாதஸி
ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதஸிக்கு [தேய்பிறை 12 ஆம் நாள்] கோவத்ஸ துவாதஸி என்று பெயர். பிரும்மா, விஷ்ணு, சிவன், அம்பாள் முதலான அனைத்து தேவர்களும் பசுமாட்டின் உடலில் வாஸம் செய்கிறார்கள்.
இன்று [அதாவது 11.11.2012 ஞாயிறு அன்று] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய்ய வேண்டும்.
”கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி” என்று சொன்னாலே நம் மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக உள்ளது பாருங்கோ. நமக்குப் பிரியமானவர்களை நாம் இப்படித்தானே அழைப்போம்!
பசுவைக்குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்களால் அலங்கரிக்கச்செய்து வைக்கோல், புல், அரிசி களைந்த நீர், கடலைப்புண்ணாக்கு, பருத்திக்கொட்டை முதலியவற்றை அதற்கு ஆகாரமாகத் தந்து, விரிவாக பூஜிக்க வேண்டும்.
குறிப்பாக “கன்னுக்குட்டி என் செல்லக் கன்னுக்குட்டி” யை தன் இஷ்டப்படி பசுவிடம் பால் குடிக்குமாறு செய்ய வேண்டும்.
11.11.2012 ஞாயிறு ஒரு நாள் மட்டும், நாம் நம் உபயோகத்திற்காகவோ, பிறரிடம் வியாபாரம் செய்யவோ பசும்பால் கறப்பதை தவிர்த்தல் நல்லது..
கோ3க்ஷீரம் கோ3க்4ருதம் சைவ த3தி4 தக்ரம் ச வர்ஜயேத்
[நிர்ணய - 147]
என்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆகவே இன்று ஒருநாள் மட்டும்
பசும்பால், பசுநெய், பசுந்தயிர், பசுமோர்
சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
இன்று பசுவை பூஜை செய்து கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுமாட்டுக்கு புற்கள், மற்றும் அஹத்திக்கீரைக்கட்டு
தருவது மிகவும் விசேஷமாகும்..
ஸுரபி4 த்வம் ஜக3ந்மாதர் தே3வி விஷ்ணுபதே3 ஸ்தி2தா !
ஸர்வ தே3வ மயே க்3ராஸம் மயாத3த்த மிமம் க்3ரஸ !!
கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுவை வேண்டிக்கொள்ள வேண்டும்.
ஸர்வதே3வ மயே! தே3வி! ஸர்வ தே3வைஸ்ச ஸத்க்ருதா !
மாதர் ! மமா[அ]பி4லஷிதம் ஸப2லம் குரு நந்தி3னி !!
பிறகு முடிந்தால் பசுமாட்டின்
கழுத்துப்பகுதியை
சொறிந்து கொடுக்கலாம்.
”கோகண்டூயனம்”
என்னும் இந்தச்செயல் மஹாபாவத்தையும் போக்கக்கூடியது. மிகப்பெரும் புண்ணியத்தைத்தரக்கூடியது.
11.11.2012 அன்று பசுவை நாம் நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் அழியாச்செல்வமும், மங்களமும் உண்டாகும்.
கோமாதா எங்கள் குலமாதா !
அதுபோலவே பசுவை வழிபட
21.11.2012 புதன் கிழமையன்று
கோபாஷ்டமீ [அல்லது] கோஷ்டாஷ்டமி
எனப்படும் விசேஷமான திருநாளாகும்.
கார்த்திகே யாஷ்டமீ சுக்லா க்ஞேயா கோ3பாஷ்டமீ பு3தை4:!
தத்ர குர்யாத் க3வாம் பூஜாம் கோ3க்3ராஸம் கோ3ப்ரதக்ஷிணம்!!
என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமி திதிக்கு
[வளர்பிறை 8 ஆம் நாள்]
”கோபாஷ்டமி”
அல்லது
“கோஷ்டாஷ்டமீ”
எனப்பெயர்.
இந்த நாளில் [21.11.2012 புதன்கிழமை] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுமாட்டை பூஜை செய்து அஹத்திக்கீரை, புல் முதலியவற்றை சாப்பிடக் கொடுத்து, ஜலமும் குடிக்கச்செய்து, பக்தியுடன் பசுவை 16 முறை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.
இதனால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டும்.
பாபங்களும் விலகும் என்கிறது மாத்ஸ்ய புராணம்.
பெரும்பாலும் நகர்புறப்பகுதிகளில்
அதுவும் அடுக்குமாடிக்குடியிருப்புகளில்
இன்று வாழும் நமக்கு
கன்றுடன் கூடிய பசுவைப்பார்ப்பது
என்பதே மிகவும் அரிதானதோர் செயலாகும்.
என்பதே மிகவும் அரிதானதோர் செயலாகும்.
அந்தக்குறையைப் போக்கவே
இங்கு நிறைய பசுக்களும் கன்றுகளுமாகப்
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்
என்றும் அன்புடன் தங்கள்
VGK