About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, March 9, 2011

பெயர் காரணம் [வை.கோபாலகிருஷ்ணன்]

நம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

மிகவும் போற்றுதலுக்குரிய என் பெற்றோர்களுக்கு நான் கட்டக்கடைசியாகப் பிறந்த பிள்ளை.    எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்க எனக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.

தோசைக்கு மாவு அரைத்து, தோசைகள் முழுவதும் முறுகலாக வார்க்கப்பட்டதும், கடைசியில் பாத்திரத்தில் மிஞ்சிய மாவை ஒட்ட வழித்து சற்றே கனமாக ஊத்தப்பம் போல கெட்டியாக வார்த்து விடுவார்களே, அதே போலத்தான் ஆகி விட்டது போலிருக்கு என் பிறப்பும்.  அன்று முதல் இன்று வரை நான் ஆள் கெட்டி தான். எல்லாவற்றிலுமே கெட்டிதான், கெட்டிக்காரன்தான்னு அவசரப்பட்டு தப்பா ஏதும் நினைச்சுடாதீங்க.    நாளுக்கு நாள் உடம்பு வெயிட் ஏறுமுகமாகவே இருக்கு, அதைத்தான் கெட்டி என்று சொன்னேன்.


என் பெற்றோர்கள் செய்த *தவத்தின்* பயனாக எனக்கு முன்பாக அவர்களுக்கு நிறைய மக்கட்செல்வங்கள் பிறந்துள்ளன. 

[அந்தக் காலகட்டத்தில் அதாவது 1920 முதல் 1950 வரை, என் பெற்றோர்களின் இளமைப் பருவத்தில், தங்கள் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, வேறு எந்த பொழுது போக்கு அம்சங்களும் இல்லாத காலமாகையால், தங்கள் *தவத்தின்* வலிமையை வீணாக்காமல், மக்கட் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே, முழுமையாகப் பயன் படுத்திக் கொண்டிருப்பார்கள் என்பது, நான் பிற்காலத்தில்  செய்த ஆராய்ச்சிகளின் முடிவாகும்.   


’கு.க.’ என்றால் என்னவென்றே அப்போது அரசாங்கத்திற்கும் தெரியாது; பொது மக்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.   நான் பிறந்த பிறகே எங்கும் எதிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் போலிருக்கு.   நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு பிறந்தவனல்லவா நான்!  அது தான் காரணம். சுதந்திரத்திற்குப்பிறகு தான் மக்கள் (கணவன் மனைவியாகவே இருப்பினும்) சுதந்திரமாக ஜாலியாக எதையும் ஒரு கட்டுப்பாடு இன்றி அனுபவிக்க முடியவில்லையோ என்னவோ!] 

எனக்கு 2 அண்ணன்கள், 2 அக்காக்கள் தான்.  அண்ணன்கள் இருவருமே சமீபத்தில், என் பெற்றோர்களைக் காண வேண்டும் என்ற ஆசையிலோ என்னவோ என்னை மட்டும் இப்பூவுலகிலேயே அம்போவென்று விட்டுவிட்டு மேலுலகம் சென்று விட்டனர். இருப்பினும் என் 2 அக்காக்களும் என்னிடம் பிரியமாகவே இன்றும் இருந்து வருவதில் என் உடன்பிறப்புக்களுடனான மகிழ்ச்சி ஏதோ கொஞ்சம் நீடித்து வருகிறது.

நிறைய அரைப்பிரஸவம் குறைப்பிரஸவம் என்று என் தாயார் மிகவும் கஷ்டப்பட்டு விட்டதாகவும், எனக்கு முன்னால் பிறந்த ஒரு ஆண் குழந்தை 3 வயதாகும் போது வயிற்றில் கட்டியோ ஏதோ வந்து தவறிப்போனதாகவும், என் பெரிய அக்கா வருத்தத்துடன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது போல பீரியாடிகல் செக்-அப்போ, ஸ்கேன் வசதிகளோ, பிற மருத்துவ வசதிகளோ அவ்வளவாக இல்லாத காலம் அது. பெரும்பாலும் பிரஸவங்கள் வீட்டிலேயே தான் நடைபெறும்.   தாயும் சேயும் சேதாரமின்றி உயிர்பிழைப்பது, புனர்ஜன்மம் என்று தான் சொல்ல வேண்டும்.

என் பெற்றோர்கள் இருவருமே திருச்சியைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், நான் பிறந்தது மட்டும், காரைக்குடிக்கும் குன்னக்குடிக்கும் இடையே, காரைக்குடி பேருந்து நிலயத்திலிருந்து 2-3 KMs க்குள் உள்ள கோவிலூர் என்ற கிராமத்தில், பெரியதொரு அரண்மனை போன்ற வேத பாடசாலையுடன் கூடிய வீட்டில்.


உற்றார் உறவினர் சொத்து சுகம் என்று எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத அந்த நான் பிறந்த கோவிலூரை சும்மாவாவது ஒருமுறை பார்த்துவிட்டு வருவோமே  என்று எண்ணி சமீபத்தில் [20.02.1999] என் பெரிய அக்காவுடன் அங்கு சென்று வந்தேன். எல்லா இடங்களையும் சுற்றிச்சுற்றிப் பார்த்துவிட்டு, புகைப்படங்களெல்லாம் எடுத்து வந்தேன். நான் பிறந்த போது அவளுக்கு வயது 9 மட்டுமே.  இன்னும் எவ்வளவு ஞாபகம் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் அழகாக எடுத்துச் சொன்னார்கள் தெரியுமா!   நான் பிறந்த அன்று 9 வயதுக்குழந்தையான அவளுக்கு இன்று வயது 70 ஆகிறது.


இன்றும் அந்த அரண்மனை போன்ற வீடும் அதன் அருகில் உள்ள மிகவும் பிரும்மாண்டமான சிவன் கோவிலும், குளமும் உள்ளன. அந்தக் குளத்துக்கு என் மீது இன்றும் கூட எவ்வளவு பாசம் பொங்கி வந்தது தெரியுமா? நான் முதல்படியில் காலை வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் எனக்கு பிறந்த இடம் மட்டுமல்லாமல் அதுவே என்னை ஆட்கொண்ட இடமாகவும் ஆகியிருக்கும்.


நம் ராஜிக்காக என்றாவது ஒருநாள் இந்தப் பதிவு ஒன்று போட வேண்டியிருக்கும் என்று நினைத்துத்தானோ என்னவோ அன்று என்னை தன் பாசவலையிலிருந்து விடுவித்து விட்டது, அந்தக்குளம்.


அந்தக் கோவிலூர் என்ற கிராமத்தில், கிராமத்தையே அடைத்துக் கொண்டுள்ள அவ்வளவு ஒரு மிகப்பெரிய கலை நுணுக்கங்களுடன் கூடிய கோவிலை யார் கட்டினார்கள், எந்தக் காலத்தில் கட்டப்பட்டது, அதன் சிறப்புகள், மகத்துவம் முதலியன பற்றி இதைப்படிக்கும் யாராவது தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.  அந்த சிவன் கோவிலில் உள்ள அம்பாள் பெயர்: ஸ்ரீ சாடிவாலீஸ்வரியம்மன், ஸ்வாமி பெயர்: ஸ்ரீ ராஜகட்க பரமேஸ்வரர்.  தற்சமயம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஊர் இது (பழைய இராமநாதபுரம் மாவட்டம்).


மிகவும் வசதி படைத்த நகரத்தார்களால் மட்டுமே அந்தக் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.   பஸ்ஸை விட்டு கீழே இறங்கும் போதே ஊரின் நுழைவாயிலாக இருபுறமும் மிகப்பெரிய விட்டமுள்ள தூண்களால் ஆன வளைவு.  அந்தத் தூண்களை அழகிய மிகப்பெரிய தேர்கள் போல வடிவமைத்துக் கட்டியுள்ளார்கள்.  ஒவ்வொரு தூண் போன்ற தேர்களுக்கும் அடிபாகத்தில், நல்ல மழை பெய்தாலும் நனையாமல் 10 பேர்களுக்கு மேல் படுத்துக்கொள்ளலாம்.  அவ்வளவு ஒரு பிரும்மாண்டம் அந்த தூண் போன்ற தேர்கள்.  அந்தக் கோவிலும் அதுபோலவே மிகவும் பிரும்மாண்டமானது.  


திருச்சி மாவட்ட அம்மாவின் பூர்வீக கிராமம் வாளாடிக்கும், அப்பாவின் பூர்வீக கிராமம் ஆங்கரைக்கும் இடைப்பட்ட கிராமம் மாந்துறை தான் என் குலதெய்வம். அங்குள்ள ஸ்ரீ வாலாம்பிகா (அல்லது) ஸ்ரீ பாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவணேஸ்வர் கோவிலுள்ள அம்மன் தனி அழகு.   அதே அழகுடன் விளங்குவது தான் நான் பிறந்த இந்தக் கோவிலூரில் உள்ள ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மனும்.   காணக் கண் கோடி வேண்டும். அப்படியொரு அழகோ அழகுடன் கூடிய அம்மன்.   பார்த்து வந்ததில் எனக்கு பரம திருப்தி.

ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மன்
[உணவு தானியங்களுக்கு அதிபதியான அம்பாள் என்று பொருள்]
இது 20.02.1999 அன்று என்னால் என் கேமராவில் எடுக்கப்பட்டப் படம்


[ 1949--1950 களில் மட்டும் என் பெற்றோர்கள் அங்கு வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு மறக்காமல் என்னையும் தூக்கிக்கொண்டு பழையபடி திருச்சிக்கே வந்து விட்டனர்.] 

நான் பிறந்த தேதி: 08.12.1949  குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை, சாயங்காலம் சுமார் 4.30 மணிக்கு.  ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி அவதரித்த அதே “புனர்பூச” நக்ஷத்திரம், மிதுன ராசி.  அன்றுதான் பிறந்துள்ள குட்டிக்குழந்தையாகிய எனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம் என்கிறீர்களா! நான் பொய் சொல்லவில்லை.  கைவசம் ஆதாரம் உள்ளது. இந்தத் தகவல் எல்லாம் என் அப்பா அவர் கைப்பட எழுதி வைத்துள்ள ஜாதகத்தில் உள்ளனவே!
  
அந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எவ்வளவு ஜோஸ்யர்களிடம் எவ்வளவு தடவை நானும் அலைந்திருப்பேன்.  பல கைரேகை ஜோஸ்யர்கள், பல ஊர் நாடி ஜோஸ்யர்கள்,  ஜாதகம் பார்த்து பலன் சொல்லும் பல பிரபல ஜோஸ்யர்கள், குறி சொல்பவர்கள், உடுக்கடிப்பவர்கள், அம்பாள் உபாசகர், காளி உபாசகர் என நானும் பலவகையினரைப் பார்த்து விட்டேனே! எவ்வளவோ ஆயிரங்கள் பணமும் செலவழித்து விட்டேனே!  


அப்படியென்ன ஒரு கஷ்டம் என்கிறீர்களா? அதெல்லாம் நல்ல வேளையாக தாங்க முடியாததாக ஒன்றும் இல்லை தான்.  இருப்பினும் அவ்வப்போது என் மனைவி மக்களைத் திருப்திப் படுத்த மட்டுமே நான் இவ்வாறெல்லாம் அலைந்ததுண்டு. ஜோஸியத்தில் முழுதாக எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும்,  என்ன தான் சொல்லுகிறார் பார்ப்போமே, என்று கதை கேட்கவும், கேட்ட அந்தக்கதையை அப்படியே உடனுக்குடன் ஒரு நோட்டில் பதிவு செய்யவும் எனக்கு ஓர் ஆர்வம் மட்டும் உண்டு.

இவ்வளவு பணமும், பொன்னான நேரங்களும் செலவழித்ததிலும், ஒரு சில முக்கியமான விஷயங்கள் நான் புதிதாகக் கற்றுக்கொண்டதில், எனக்கும் மகிழ்ச்சி தான்.

அதாவது எந்த ஒரு ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம்.   

சரி, இப்போது என் பெயர் காரண விஷயத்திற்கு சீக்கரமாக வந்து விடுவோம். 

பிரஸவ வலியால் துடிக்கும் போது, என் தாயாருக்கு உதவி செய்ய, மிகவும் அனுபவசாலியான என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) திருச்சியிலிருந்து கோவிலூருக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.    என் அம்மா படும் வேதனையைப் பார்த்து,  ”அங்கிச்சி (பெயர் வேறு இருப்பினும் இப்படித்தான் அழைப்பார்கள்), உனக்கு இந்தக் கஷ்டம் இத்தோடு போதும்; இனி வேண்டவே வேண்டாம்; பிள்ளைக்குழந்தையாய் இருந்தா நம்ம அப்பா பெயரும், பெண் குழந்தையாய் இருந்தால் நம் அம்மா பெயரும் வெச்சுடு.  பொறந்தாத்துப் (பிறந்த வீட்டு) பெயரை குழந்தைக்கு வெச்சுப்புட்டா அத்தோட கடைசியாகிவிடும்” என்று அடிச்சுச் சொல்லிப்புட்டாளாம். 

என் அம்மாவோட அப்பாவின் பெயர் கோபாலகிருஷ்ணன்.  வாளாடி (திருச்சியிலிருந்து லால்குடி போகும் வழியில் இடையே இடது புறமாக உள்ள) கிராமத்தின் கணக்குப்பிள்ளையாக இருந்தவர். (Village Administrative Officer). மஹா கெட்டிக்காரராம் - கறார் பேர்வழியாம். நான் பார்த்ததில்லை, என் அம்மா தான் சொல்லுவாங்க.   அந்த என் அம்மா வழித்தாத்தா பெயரையே எனக்கு வெச்சுட்டாங்களாம், என் பெரியம்மா உத்தரவுப்படியே..

”கோபாலகிருஷ்ணன் என்ற பெயரிலே எவன் என்னை அழைக்கிறான், எல்லோருமே சப்பாணின்னு தானே அழைக்கிறான்....மயிலு” என்று அழாக்குறையாக கமல் ஸ்ரீதேவியிடம் (மயிலிடம்) சொல்லுவாரே 16 வயதினிலே படத்தில் --- அதே போல என் பெயர் ரயில் வண்டி போல நீளமாக இருப்பதால் “கோபு” என்று செல்லமாக யாரோ அழைக்கப்போய், “குஷ்பு” என்பது போல இந்த “கோபு” என்பதும் மிகவும் பிரபலமாகி,இன்று வரை, குடும்பத்திற்குள் புழக்கத்தில் ”கோபு” வும் இருந்து தான் வருகிறது.

ஆபீஸ் ரிகார்டுகளில் என் பெயர் V. GOPALAKRISHNAN தான்.  ஒரு சில மிகவும் பிரியமான தோழர்கள் + தோழிகள் அலுவலகத்தில் என்னை வீ............ஜீ (VG) என்று சற்றே ஒரு ராகம் கொடுத்து செல்லமாக அழைப்பதும் உண்டு. அழுக்கு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு, புத்தம் புதிய சலவைக்கட்டுகளாக வாங்கிப் போக அடிக்கடி என்னை நாடி வருவார்கள். அது போன்ற சமயங்களில் மட்டுமே, சீரியஸ் ஆக இருக்கும் என்னை தாஜா செய்து கூலாக்க இந்த செல்லமான ராகத்துடன் கூடிய வீ............ஜீ என்றொரு அழைப்பு எனக்கு அடிக்கடி வருவதுண்டு.


ஆபீஸில் எப்போதுமே எனக்கு இந்த ”லக்ஷ்மி” என்பவளோடு ரொம்பத் தொடர்புண்டு.   30 ஆண்டுகளுக்கும் மேலாக அவளுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு.   கோடிக்கணக்கில் இன்பங்கள் பல தந்தவள் அவள்.   பணி ஓய்வு பெறும் வரை நான் தினமுமே இந்த லக்ஷ்மியுடன் கொஞ்சிக்குலாவி கோடீஸ்வரனாகவே இருந்தவன், என்பதை இப்போது நினைத்தாலும் மனதினில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியே.  அவள் என்ன சாதாரண லக்ஷ்மியா தனலக்ஷ்மி ஆயிற்றே!


அதனால் தானோ என்னவோ செய்தித்தாள்களில் பல கோடிக்கணக்கில் ஊழல் என்று செய்திகள் வந்தாலும், நான் அதிர்ச்சியடைவதே இல்லை. நான் பார்க்காத கோடிகளா என்ன !   பிஸாத்து,   என்று தான் நினைப்பேன்.


என் அப்பா பெயர் வைத்தியநாதன் என்பதால், முதன் முதலாக ஒரு சிறுகதைப்போட்டிக்கு கதை எழுதி அனுப்பும் போது, தமிழில் என் பெயரை வை.கோபாலகிருஷ்ணன் என்று நானாகவே வைத்துக்கொண்டேன்.   அந்த முதன் முதலாக எழுதி அனுப்பிய சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத் தேர்வானது 2005 ஆம் ஆண்டு.  அந்தச்சிறுகதை என் புகைப்படத்துடனும், சுய விபரக்குறிப்புகளுடனும், வை.கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் தினமலர்-வாரமலரில் வெளியாகி, என் நிறுவனத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான நபர்களின் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.


அது முதல், எழுத்துலகில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பலவித பரிசுகள் பெறுவதற்கு, இந்த ”வை.கோபாலகிருஷ்ணன்” என்ற என் பெயரே எனக்கு ராசியாக அமைந்தது.    அதுவே என்னை இப்போது இந்த வலைப்பூவில் உங்களிடமும், குறிப்பாக திருமதி ராஜி அவர்களிடமும் சிக்க வைத்துள்ளது.


ஏதோ எனக்குத்தோன்றியதை எழுதி முடித்து விட்டேன்.   இத்துடன் ESCAPE ஆகிவிடுறேன்.   Bye.


-o-o-o-o-o-o-o-


நான் பிறந்த ஊரான கோவிலூர் என்ற கிராமம் + அங்குள்ள மிகவும் பிரும்மாண்டமான கோயில் + குளம் முதலியன பற்றிய செய்திகள் சிலரால் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.


இதில் மொத்தம் மிக அழகான 8 படங்கள் உள்ளன. அவற்றில் மூன்றினை மட்டும் இங்கு காட்டியுள்ளேன்:




இணைப்பு-2 : http://www.kovilur.com/temple.htm

The Koviloor temple of "Sri Kotravaleeswarar" was initially 
built by one Pandiya King "Veerasekara Pandiyan" approximately 
thousand years ago. At that time Koviloor was known as Saliwadi (Land 
of Rice) and Kalani Vasal (Land of Agriculture). It had been a 
laterite construction.

Later during the 18th century, His Holiness Shri la Sri Mukthiramalinga Gnana Desika Swamigal had started reconstruction work. Simultaneously he had established our Vedanta Mutt, when it came to be known as Koviloor.

Once Pandiya King Veerasekaran went for hunting near Saliwadi village and lost his sword and later recovered. He ordered the construction of the temple and named the deity as Kotravaleeswarar or Raja Katka Parameshwar (God who saved King's sword, valour and there by citizens)

A legend explains how merciful and considerate has been the Goddess towards the truthful devotees. In ancient times there was a devotee by name Sivagupthan, living at Saliwadi with his wife Sudanmai and daughter Aradhanavalli. One day Sudanmai asked her daughter to go to their farm to protect the rice grains from birds. At noon, the mother went to the farm and fed her child with curd rice. The child relished the food and happily ate it.

But to the surprise of Sudanami, after some time Aradhavalli came running and requested for lunch. On enquiry it was explained that she had not gone to the farm at all, instead gone to play with her friends. Immediately Sivagupthan and Sudanmai realised that Mother Universe had come down to save their rice grains. They rushed to the temple and saw the Mother sitting with a smile and remains of curd rice on her lips. From that day onwards She came to be known as "Thirunellai Amman" (Goddess who saved rice grain).


Description of Temple

Koviloor, at present, is a small village, 2 kilometres away from Karaikudi, an educational and commercial centre. The main features of Koviloor are our temple and the mutt.

On the main road, two magnificent chariots constructed with concrete, on both sides of entrance, welcome us to Koviloor Mutt and Temple and from that point a well laid road, leads us to the southern tower of the temple.

The temple is surrounded by four broad Mada Streets. In front of the temple, on the eastern side is the tank "Madhu Puskarani" with a mandapam in the centre of the tank. Surprisingly, by the grace of the lord, the tank is always full with water even during hot summer months. On the southern side, our mutt stands like a palace with
granite structure. Northern and western side of the temple, residential quarters for the temple and mutt employees are built. The main temple tower, Rajagopuram, is built with seven tiers according to 'Agama' tradition. It is full of beautiful sculptures.


இதில் உள்ள அனைத்துப்படங்களும், ஆங்கிலத்தில் எழுதியுள்ள செய்திகளும் என்னால் இந்தப்பதிவினில் இன்று [29.03.2015] புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது அனைவரின் தகவலுக்காகவும் மட்டுமே. - VGK

124 comments:

  1. பழத்தை வைத்து பிரச்சனையை துவக்குகிறாய் என
    சிவபெருமான் சொன்னதைப்போல
    பெயரை வைத்து துவக்கப்பட்ட இந்தத்தொடர்
    மிகச் சிறப்பாகத்தான் போகிறது
    இதன் மூலம் பெயர் மட்டும் அல்ல
    ஊர் தாய் தந்தையர் பணிவிவரம் அனைத்தையும்
    மிகத் தெளிவாக சொல்லிப்போவதால்
    பதிவர்களைப்பற்றி மிகச் சரியாக
    புரிந்துகொள்ளமுடிகிறது
    வழக்கம்போல தங்கள் பாணியில்
    நகைச்சுவை உணர்வுடன் தங்கள்
    பெயர்காரணம் சொல்லிப்போனது
    ரசிக்கும்படியாக இருந்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அப்ப இனி உங்களை பதிவுலக வை கோ என்று அழைக்கலாமா ??

    ReplyDelete
  3. பெயர்க் காரணத்தை ஜாதக குறிப்புகளோடு விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. vaaramaalar sirukathai muulam entha peyar maarralum illaamal ithu varai athe peyaril thotarvatharkku vaalththukkal. antha thana lakshmi kitta ippa kaathal illaiiyaa... panam valkkaikku eppoothum mukkiyam sir sorry vg. vaalththukkal. thanks for sharing.

    ReplyDelete
  6. திருமதி ராஜி அவர்களே!
    தங்கள் ஆலோசனைப்படி அந்த ஒருசில வரிகளை நீக்கி விட்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  7. என் அப்பா பெயர் வைத்தியநாதன் என்பதால், முதன் முதலாக ஒரு சிறுகதைப்போட்டிக்கு கதை எழுதி அனுப்பும் போது .தமிழில் என் பெயரை வை.கோபாலகிருஷ்ணன் என்று நானாகவே வைத்துக்கொண்டேன், அந்த முதன் முதலாக எழுதி அனுப்பிய சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத் தேர்வானது 2005 ஆம் ஆண்டு. அந்தச்சிறுகதை என் புகைப்படத்துடனும், சுய விபரக்குறிப்புகளுடனும், வை.கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் தினமல்ர்-வாரமலரில் வெளியாகி, என் நிறுவனத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான நபர்களின் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.


    அது முதல், எழுத்துலகில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பலவித பரிசுகள் பெறுவதற்கு, இந்த ”வை.கோபாலகிருஷ்ணன்” என்ற என் பெயரே எனக்கு ராசியாக அமைந்தது.


    ..... How sweet!

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! அருமையாக பதிவில், உங்களை பற்றிய தகவல்களை தொகுத்துத் தந்து இருக்கீங்க.

    ReplyDelete
  8. மீண்டும் பிழைகள்:

    //நனையாமல் 10 பேர்கள்களுக்கு//
    பேர்களுக்கு

    //தினமல்ர்-வாரமலரில்//
    தினமலர்



    பிழை திருத்தவும். பிழை தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். பதிவுலகில்தான் எத்தனை பிழைகள். புதிய மற்றும் இளம் பதிவர்கள் பக்கம் நான் இன்னும் பரவலாக செல்லவில்லை. படித்த, பொறுப்புள்ள, நாகரீகம் தெரிந்த பதிவர்களின் தளங்களில்தான் பெரும்பாலும் பிழை திருத்த முயற்சி செய்து வருகிறேன். முதலில் நான் சொல்கையில் அதை ஏற்று பிழை திருத்திய அனைவருக்கும் நன்றி. சரி செய்து விடுகிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அடுத்த பதிவிலேயே மீண்டும் பிழை வருகையில் மனம் நொந்து போகிறேன்.

    சில பதிவர்கள் என் எழுத்தின் மேல் பிழை கண்டு பிடிக்க எத்தனிக்கின்றனர். அதுவும் சரியே. ஆனால் நான் பதிவன் அல்ல. பதிவு போடும் எண்ணமும் தற்போது இல்லை. பிழை திருத்தி மட்டுமே. என் எழுத்தை படிப்பதை விட தங்களைப்போன்றவர்களின் எழுத்தை படிப்பவர்களே அதிகம். எழுத்துப்பிழைகளே இத்தனை உள்ளன.

    இது போக, பொருட்பிழை, பிறமொழி கலப்பு, தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல் போன்ற பிழைகளை எடுத்து சொன்னால் அவ்வளவுதான். அந்த பிழைகளை தமிழ் ஆர்வம் உள்ள பதிவர்கள் களைவது என்பதே நடைமுறை சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. பிறகு எப்படி புதியவர்களை/இளைய பதிவர்களை திருத்த இயலும்.

    தாங்கள் 'ஸ' எனும் வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறீர்கள். உதாரணம்: பிறஸவம். அதற்கு பதில் பிரசவம் என எழுதலாம்.

    "அடுத்த முறை சரியாக எழுதுகிறேன்" என்று வழக்கமான பதில் தரப்போகிறீர்களா? காத்திருக்கிறேன்.

    - தமிழ் ஈட்டி .....தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

    ReplyDelete
  9. பிறந்த வீட்டு பெரியவர்கள் பெயர் வைத்தால் அதன் பிறகு குழந்தை பிறக்காது என்பது சுவாரஸ்யமான தகவல்! (எந்த அளவு அது உண்மை என்று தெரியவில்லை). மிக சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. கோவிலூரின் கோவில் வர்ணனைகளும் பெயர்க்காரணமும் அருமை

    ReplyDelete
  11. பெயர்க் காரணத்திலும் தங்கள் நகைச்சுவை உணர்வு குறையவில்லை.குளத்தின் பாசிப் படியில் வழுக்கி விழுந்ததை என்னா சுவாரசியமா சொல்லியிருக்கீங்க,பிறகு ஜோசியங்கள் பாத்து நீங்க ஒரு முடிவுக்கு வந்ததும் சூப்பர்.

    ReplyDelete
  12. பெயர்க்காரணம் பற்றிய தகவல்களை வழக்கம் போல் தங்களின் நகைச்சுவை உணர்வில் அழகாக வெளிபடுத்தி உள்ளீர்கள்.

    ReplyDelete
  13. நான் பார்க்காத கோடிகளா என்ன ! //
    கோவிலூரில் பிறந்து
    கோபாலகிருஷ்ணன் பெயரை ஏற்று
    கோடிகளில் புழங்கி
    கோடிகோடியாய் என்றும் வாழ்க!!

    ReplyDelete
  14. ஸ்வாமி!ஊரச் சொன்னாலும் பேரச் சொல்லக் கூடாதும்பா. நீங்க ஊரையும் பேரையும் சேத்துச் சொல்லிப்டேளே? எந்த விக்னமும் வராமக் காப்பாத்துடீயம்மான்னு ஸ்ரீவாலாம்பிகாவுக்கு எசஞ்சு முடிஞ்சுண்டுடுங்கோன்னா.

    மொத்தத்துல பிரிச்சு மேஞ்சுட்டேள். வேறென்ன சொல்றதுன்னு நேக்குத் தெரியல.

    ReplyDelete
  15. /பொறந்தாத்துப் (பிறந்த வீட்டு) பெயரை குழந்தைக்கு வெச்சுப்புட்டா அத்தோட கடைசியாகிவிடும்” என்று அடிச்சுச் சொல்லிப்புட்டாளாம்./
    இது ஒரு புதிய‌ த‌க‌வ‌ல்.

    /ஆபீஸில் எப்போதுமே எனக்கு இந்த ”லக்ஷ்மி” என்பவளோடு ரொம்பத் தொடர்புண்டு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவளுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு. கோடிக்கணக்கில் இன்பங்கள் பல தந்தவள் அவள்./
    அப்போ ஆத்துல‌ சாத்துப்ப‌டி தானா?

    /அதனால் தானோ என்னவோ செய்தித்தாள்களில் பல கோடிக்கணக்கில் ஊழல் என்று செய்திகள் வந்தாலும், நான் அதிர்ச்சியடைவதே இல்லை. நான் பார்க்காத கோடிகளா என்ன ! பிஸாத்து, என்று தான் நினைப்பேன்./
    நீங்க‌ பார்த்த‌து, அவ‌ங்க‌ பதுக்கின‌து, அது தான் அதிர்ச்சி, அய‌ர்ச்சி.

    /சீரியஸ் ஆக இருக்கும் என்னை தாஜா செய்து கூலாக்க இந்த செல்லமான ராகத்துடன் கூடிய வீஜீ என்றொரு அழைப்பு எனக்கு அடிக்கடி வருவதுண்டு./

    நீங்க‌ சீரிய‌ஸான ஆளா? அப்ப‌டித் தெரிய‌லையே!! எழுத்துல ந‌கைச்சுவை தூக்க‌லான ஆளா இருக்கிங்க‌!!

    ReplyDelete
  16. \\ஒரு சில மிகவும் பிரியமான தோழர்கள் + தோழிகள் \\

    தோழியர் நினைவு இன்னமும் இருக்கிறது:-)

    ReplyDelete
  17. மின் தடையால் முன்பே வர முடியவில்லை. பெயர் காரணம் எழுதத் தொடங்கி சுய சரிதைக்கு அடிக்கோல் நட்டு விட்டீர்கள் எல்லாம் நலத்திற்கே.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. Ramani said...
    //பழத்தை வைத்து பிரச்சனையை துவக்குகிறாய் என சிவபெருமான் சொன்னதைப்போல பெயரை வைத்து துவக்கப்பட்ட இந்தத்தொடர் மிகச் சிறப்பாகத்தான் போகிறது. இதன் மூலம் பெயர் மட்டும் அல்ல
    ஊர் தாய் தந்தையர் பணிவிவரம் அனைத்தையும்
    மிகத் தெளிவாக சொல்லிப்போவதால்
    பதிவர்களைப்பற்றி மிகச் சரியாக புரிந்துகொள்ளமுடிகிறது.
    வழக்கம்போல தங்கள் பாணியில் நகைச்சுவை உணர்வுடன் தங்கள் பெயர்காரணம் சொல்லிப்போனது
    ரசிக்கும்படியாக இருந்தது வாழ்த்துக்கள்//

    தங்களின் விரிவான தெளிவான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  19. எல் கே said...
    //அப்ப இனி உங்களை பதிவுலக வை கோ என்று அழைக்கலாமா ??//

    அது உங்கள் விருப்பம். எதற்கும் அம்மையாரை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  20. middleclassmadhavi said...
    //பெயர்க் காரணத்தை ஜாதக குறிப்புகளோடு விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! - வாழ்த்துக்கள்//

    இப்போது என் ஜாதகமே உங்கள் கையிலா! சற்று விசாரமாகவே உள்ளது. பெண் எதுவும் பார்த்து என்னை மேலும் சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.

    ReplyDelete
  21. மதுரை சரவணன் said...
    //vaaramaalar sirukathai muulam entha peyar maarralum illaamal ithu varai athe peyaril thotarvatharkku vaalththukkal.//

    எந்தப் பெயர்மாற்றமும் இல்லாமல் என் வண்டி இதுவரை ஓடுவதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    //antha thana lakshmi kitta ippa kaathal illaiiyaa... panam valkkaikku eppoothum mukkiyam sir sorry vg. vaalththukkal. thanks for sharing.//

    வாழ்க்கைக்கு முக்கியமான அந்த தனலக்ஷ்மியுடன் எனக்கு அன்றும், இன்றும், என்றும் காதல் உண்டு. ஆனால் கோடிக்கணக்காக தினமும் எனக்கு இன்பம் தந்துவந்த அவள் தான் 60 வயதாகிவிட்டது என்ற ஒரே காரணத்தால் என்னைக்கழட்டி விட்டுவிட்டாள். அறுபதிலும் ஆசை வரும் என்று ஏனோ அவளுக்குத் தெரியவில்லை.

    வருகைக்கும் மாறுபட்ட கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  22. Chitra said...
    //..... How sweet!
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! அருமையாக பதிவில், உங்களை பற்றிய தகவல்களை தொகுத்துத் தந்து இருக்கீங்க.//

    HOW SWEET YOUR COMMENTS TOO. THANKS A LOT, MADAM.

    ReplyDelete
  23. bandhu said...
    //பிறந்த வீட்டு பெரியவர்கள் பெயர் வைத்தால் அதன் பிறகு குழந்தை பிறக்காது என்பது சுவாரஸ்யமான தகவல்! (எந்த அளவு அது உண்மை என்று தெரியவில்லை). மிக சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.//

    ஆமாம் எங்கள் குடும்பத்தில்/ஊரில் அது போலத்தான் சொல்லுவார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கும் தெரியவில்லை. தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தான் சொல்லித் தவறினாலும் பரவாயில்லை. ஆனால் சொன்னது நம் அக்கா (நம் பிறந்த வீடு) அதனால், அந்தப் பெயரைக் காப்பாற்றவேண்டும் என்று பெண்கள் நினைப்பது இயல்புதானே.

      Delete
  24. raji said...
    //கோவிலூரின் கோவில் வர்ணனைகளும் பெயர்க்காரணமும் அருமை//

    கோவிலூரில் என் அன்னையால் ஏற்றப்பட்ட மிகச்சிறிய அகல் விளக்காகிய என்னை, தங்களின் அளவற்ற அன்பினால், அவ்வப்போது திரியைத் தூண்டிவிட்டு, உரிமையுடன் ஆலோசனைகள் என்ற எண்ணையைத் தொடர்ந்து ஊற்றி, இன்றும் பிரகாசமாக எரியச்செய்யும் புண்ணியம் உங்களை மட்டும் தானே சேரும். அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். (ஆனந்தக் கண்ணீருடன்)

    ReplyDelete
  25. வேடந்தாங்கல் - கருன் said...
    //வாழ்த்துக்கள் ..//

    தங்கள் வாழ்த்துக்களுக்கு என் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  26. thirumathi bs sridhar said...
    //பெயர்க் காரணத்திலும் தங்கள் நகைச்சுவை உணர்வு குறையவில்லை.குளத்தின் பாசிப் படியில் வழுக்கி விழுந்ததை என்னா சுவாரசியமா சொல்லியிருக்கீங்க,பிறகு ஜோசியங்கள் பாத்து நீங்க ஒரு முடிவுக்கு வந்ததும் சூப்பர்.//

    மிகவும் ஊன்றிப்படித்து உன்னதமாக பாராட்டியுள்ளீர்கள் சகோதரியே. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    தாங்களும் எனக்கு ’காலத்தினால் செய்த உதவி’
    [Timely Help]என்னால் என்றுமே மறக்க முடியாதது.

    ReplyDelete
  27. கோவை2தில்லி said...
    //பெயர்க்காரணம் பற்றிய தகவல்களை வழக்கம் போல் தங்களின் நகைச்சுவை உணர்வில் அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.//

    உங்கள் பெயர்க்காரணமும் அழகாகவே வெளியிடப்பட்டிருந்தது, மேடம்.
    தங்கள் கருத்துக்கு என் நன்றிகள், உங்களுக்கு.

    ReplyDelete
  28. இராஜராஜேஸ்வரி said...
    //நான் பார்க்காத கோடிகளா என்ன ! //
    கோவிலூரில் பிறந்து
    கோபாலகிருஷ்ணன் பெயரை ஏற்று
    கோடிகளில் புழங்கி
    கோடிகோடியாய் என்றும் வாழ்க!!//

    ஒரே
    ’கோ’ மயமாக எழுதித்தள்ளி விட்டீர்கள்.தங்கள் ‘கோ’பம் தணிந்து விட்டது என்பது புரிகிறது. இனி
    ‘கோ’லாட்டம் தான். கொண்டாட்டம் தான்.

    ReplyDelete
  29. சுந்தர்ஜி said...
    //ஸ்வாமி!ஊரச் சொன்னாலும் பேரச் சொல்லக் கூடாதும்பா. நீங்க ஊரையும் பேரையும் சேத்துச் சொல்லிப்டேளே? எந்த விக்னமும் வராமக் காப்பாத்துடீயம்மான்னு ஸ்ரீவாலாம்பிகாவுக்கு எசஞ்சு முடிஞ்சுண்டுடுங்கோன்னா.

    மொத்தத்துல பிரிச்சு மேஞ்சுட்டேள். வேறென்ன சொல்றதுன்னு நேக்குத் தெரியல.//

    ஸ்ரீ வாலாம்பிகா அம்பாளுக்கு எசஞ்சு முடிஞ்சு வைத்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  30. vasan said...

    1)தகவல் உங்களுக்கு புதியது. எங்கள் பக்கமெல்லாம் இப்படித்தான் சொல்லுவார்கள்.

    2) ஆபீஸுக்குப் போனால் அவள், ஆத்துக்கு வந்தால் இவள். இவளுக்காக அவளையும், அவளுக்காக இவளையும் கட்டி மேய்க்க வேண்டியதாகி விட்டது. இப்போது நிம்மதி, ஒருத்தி மட்டுமே. ஆனாலும் பசுமையான நினைவுகளில் பலர்.

    3) //நீங்க‌ பார்த்த‌து, அவ‌ங்க‌ பதுக்கின‌து, அது தான் அதிர்ச்சி, அய‌ர்ச்சி.//

    அரசியல் வாடை தூக்கலாக உள்ளது. எனவே நோ கமெண்ட்ஸ்.

    4)//நீங்க‌ சீரிய‌ஸான ஆளா? அப்ப‌டித் தெரிய‌லையே!! எழுத்துல ந‌கைச்சுவை தூக்க‌லான ஆளா இருக்கிங்க‌!!//

    பணம் என்னும் நாகலக்ஷ்மியின் பாதுகாவலனாக இருந்ததால் எப்போதுமே அலெர்ட் ஆக மிகவும் சீரியஸ் ஆக இருந்து வரும்படியான ஒரு மாபெரும் பொறுப்பு. யாரையும் சுலபமாக என்னை அண்ட விட மாட்டேன்.

    உருவத்தில் நான் ஒரு பாறை. ஆனாலும் உள்ளத்தில் நான் ஒரு பன்ருட்டி பலாச்சுளை. நன்கு பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த இரகசியம். இப்போது உங்களுக்கும் தெரிந்து விட்டது.அச்சச்சோ !

    ReplyDelete
    Replies
    1. "எப்போதுமே அலெர்ட் ஆக மிகவும் சீரியஸ் ஆக இருந்து வரும்படியான" - உண்மை கோபு சார். அரசியல் தலைவர்கள் மீட்டிங்க்ல பார்த்தால், தலைவருக்கான கறுப்பு பூனைப் படைகள் எதிலும் கவனம் வைக்காமல், கூட்டத்தையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். மேடையில் என்ன நடக்குது என்றும் அவர்கள் பார்க்கமாட்டார்கள் (அதுக்கு வேறு ஒரு பூனைப்படை ஆள் இருப்பார்).

      பணத்துக்குப் பங்கம் வந்தால், பெயர் மட்டுமல்ல, சம்பளத்துக்கும் பங்கம் வந்துடுமே.

      Delete
    2. நெல்லைத் தமிழன் December 28, 2017 at 3:42 PM

      வாங்கோ, ஸ்வாமீ .... வணக்கம். மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது. ஏற்கனவே இதில் உள்ள கடைசி கமெண்ட்ஸ் உங்களுடையதே.

      //"எப்போதுமே அலெர்ட் ஆக மிகவும் சீரியஸ் ஆக இருந்து வரும்படியான" - உண்மை கோபு சார்.//

      ஆமாம், ஸார். நான் பணியில் இருந்தபோது என் வீட்டிலிருந்து எனக்கு பெர்சனல் போன் வருவதை கூட நான் விரும்புவது இல்லை. அந்த அளவுக்கு என் கடமைகளில் நான் கண் கொத்திப் பாம்பு போலத்தான், மிகவும் உஷாராகவே இருந்து வந்தேன்

      //அரசியல் தலைவர்கள் மீட்டிங்க்ல பார்த்தால், தலைவருக்கான கறுப்பு பூனைப் படைகள் எதிலும் கவனம் வைக்காமல், கூட்டத்தையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். மேடையில் என்ன நடக்குது என்றும் அவர்கள் பார்க்கமாட்டார்கள் (அதுக்கு வேறு ஒரு பூனைப்படை ஆள் இருப்பார்).//

      ஆமாம். தெரியும். அதே.....தான்.

      //பணத்துக்குப் பங்கம் வந்தால், பெயர் மட்டுமல்ல, சம்பளத்துக்கும் பங்கம் வந்துடுமே.//

      நாம் சமூகத்தில் நல்லபெயர் எடுக்க பல நாட்கள் ஆகும். ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நாள் + ஒருசில வினாடிகள் போதும்.

      அன்புடன் கோபு

      Delete
  31. Gopi Ramamoorthy said...
    //ஒரு சில மிகவும் பிரியமான தோழர்கள்+தோழிகள்//

    தோழியர் நினைவு இன்னமும் இருக்கிறது:-)

    ”மறக்க மனம் கூடுதில்லையே” இஞ்சி இடுப்பழகி ஸ்டைலில் இதைப்படிக்கவும்.

    நான் மறந்தாலும் அவர்கள் மறக்காமல் அவ்வப்போது இன்னமும் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள்.
    அந்தளவுக்கு ஒரு அன்பு ஐயா, அன்பு. நம் இருவரின் பெயர் ராசியும் அப்படி. (கோபியர் கொஞ்சும் ரமணா ........ அல்லவா, கோபி)

    ReplyDelete
  32. G.M Balasubramaniam said...
    //மின் தடையால் முன்பே வர முடியவில்லை.//

    இங்கு, எனக்கும், அதே பிரச்சனைகள்தான் ஐயா!

    //பெயர் காரணம் எழுதத் தொடங்கி சுய சரிதைக்கு அடிக்கோல் நட்டு விட்டீர்கள் எல்லாம் நலத்திற்கே.வாழ்த்துக்கள்.//

    எல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள் ஐயா. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு, அடியேனின் மனமார்ந்த நனறிகள், ஐயா.

    ReplyDelete
  33. தமிழ் ஈட்டி! said...
    // மீண்டும் பிழைகள்:

    /நனையாமல் 10 பேர்கள்களுக்கு/ பேர்களுக்கு

    /தினமல்ர்-வாரமலரில்/ தினமலர் //

    பிழைகள் சுட்டிக்காட்டியதற்கு என் நன்றிகள். உடனடியாக திருத்திக்கொண்டேன்.

    ReplyDelete
  34. அன்புள்ள வை.கோ சார்! பணிச்சுமைகாரணமாக தாமதம் ஆகி விட்டது. அற்புதமாய் நகைச்சுவை இழையோட பதிவிட்டிருக்கிறீர்கள். மிக ரசித்தேன்.நம் தொடர்பு ஆரம்பித்த நாள்முதலே உங்களை வை.கோ என்றே அழைத்து வருகின்றேன். உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றே நினைக்கிறேன்.
    உங்கள் நகைச்சுவை விருந்தை மேலும்மேலும் தாருங்கள்.

    ReplyDelete
  35. மோகன்ஜி said...
    //அன்புள்ள வை.கோ சார்! பணிச்சுமைகாரணமாக தாமதம் ஆகி விட்டது. அற்புதமாய் நகைச்சுவை இழையோட பதிவிட்டிருக்கிறீர்கள். மிக ரசித்தேன்.நம் தொடர்பு ஆரம்பித்த நாள்முதலே உங்களை வை.கோ என்றே அழைத்து வருகின்றேன். உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றே நினைக்கிறேன்.
    உங்கள் நகைச்சுவை விருந்தை மேலும்மேலும் தாருங்கள்.//

    நீங்கள் அன்பினால் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து வாருங்கள். நன்றி.

    ReplyDelete
  36. //பொறந்தாத்துப் (பிறந்த வீட்டு) பெயரை குழந்தைக்கு வெச்சுப்புட்டா அத்தோட கடைசியாகிவிடும//

    எங்க வீட்டுல அப்படி பெயர் வைத்ததுக்கு அப்புறந்தான் குடும்பமும் வம்சமும் தழை தழை என்று தழைத்தது.

    ReplyDelete
  37. Easwaran said...
    //பொறந்தாத்துப் (பிறந்த வீட்டு) பெயரை குழந்தைக்கு வெச்சுப்புட்டா அத்தோட கடைசியாகிவிடும.//

    எங்க வீட்டுல அப்படி பெயர் வைத்ததுக்கு அப்புறந்தான் குடும்பமும் வம்சமும் தழை தழை என்று தழைத்தது.//

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி. தங்களில் குடும்பமும், வம்சமும் தழைதழையென தழைத்ததைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வாங்க. WELCOME.

    ReplyDelete
  38. அந்த பாய்க் கதையை சொல்லலியே, நீங்க?

    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  39. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //அந்த பாய்க் கதையை சொல்லலியே, நீங்க?

    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.//

    நான் சொன்ன ஒரு சில நிகழ்வுகளை மறக்காமல் மனதில் வைத்திருந்து நினைவூட்டியதற்கு நன்றிகள், சார்.

    அவையெல்லாம் நம் நட்புக்கு மட்டும் அடையாளமாக இருந்து விட்டுப்போகட்டும்.

    ReplyDelete
  40. இப்படி பல சுவாரசியமான தகவல்களை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை..
    கலக்கறீங்க.. நகைச்சுவை தேவியும் உங்களிடம்தான் குடித்தனம் நடத்துகிறாள்..

    ReplyDelete
  41. சுவாரசியம் சற்றும் குறையாமல் எழுதி அசத்தி இருக்கீங்க வை.கோ. சார். பணிச்சுமை காரணமாக நடுவே சில பதிவுகள் படிக்க விட்டுப்போயிற்று! அதான் இன்று உட்கார்ந்து எல்லா பதிவுகளையும் படித்துக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  42. பெயர்க்காரணம் சுவாரஸ்யமாகச் சென்றது...

    ReplyDelete
  43. goma said...
    //பெயர்க்காரணம் சுவாரஸ்யமாகச் சென்றது...//


    என் வலைப்பூவுக்கு நீங்கள் முதன் முதலாக வருகை தந்து, “பெயர்க்காரணம்” படித்து, பின்னூட்டம் கொடுத்திருந்ததை இன்று இப்போது தான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும். தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  44. வெங்கட் நாகராஜ் said...
    //சுவாரசியம் சற்றும் குறையாமல் எழுதி அசத்தி இருக்கீங்க வை.கோ. சார். பணிச்சுமை காரணமாக நடுவே சில பதிவுகள் படிக்க விட்டுப்போயிற்று! அதான் இன்று உட்கார்ந்து எல்லா பதிவுகளையும் படித்துக்கொண்டு இருக்கிறேன்.//

    மிக்க மகிழ்ச்சி, வெங்கட். தாமதமானாலும், என் படைப்புக்களை, மெதுவாக ஒழிந்தபோது படித்து, இதுபோல 4 வரிகள் எழுதி விடுங்கோ! நானும் எனக்கு ஒழிந்தபோது தேடிதேடி அவற்றைக் கண்டுபிடித்துப் படித்து பதில் அளிக்கிறேன்.

    ReplyDelete
  45. ரிஷபன் said...
    //இப்படி பல சுவாரசியமான தகவல்களை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை..
    கலக்கறீங்க.. நகைச்சுவை தேவியும் உங்களிடம்தான் குடித்தனம் நடத்துகிறாள்..//

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார். வீ...ஜீ...என்று ஒரு ராகத்துடன் முதன் முதலாக அழைக்க ஆரம்பித்தது, உங்கள் ஸ்ரீரங்கத்து ராணி தான். ACCOUNTS-53AD-79AD-SSTP என்று நெடுக பணிமாற்றம் செய்யப்பட்டவங்க. ’கலா’ ரசிகனான எனக்கும் அவங்க என்னை அப்படி அழைப்பதும் பிடிக்கும் அந்த நாட்களில். இப்போது நான் அவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்.

    ReplyDelete
  46. சார் இன்று தான் உங்கள் ப்ளாக் பார்க்க பெற்றேன். அருமை. மிக மகிழ்ச்சி. நான் தஞ்சையை சேர்ந்தவன். திருச்சியில் படித்தேன். அப்போது BHEL அருகே தங்கியிருந்தேன். என் அக்கா மருத்துவராக இன்னும் கணேச புரத்தில் தான் உள்ளார். தங்கள் ஓய்வு காலத்தில் பதிவுகள் மூலம் தங்கள் அனுபவங்களை நகைச்சுவை உடன் பகிர்வது மிக மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com

    ReplyDelete
  47. சுவாரஸ்யமான பெயர்க்காரண இடுகை :-))

    ஊரையும் கோவில், குளத்தையும் வர்ணிக்கச்சே கண்முன்னால் நிறுத்திட்டீங்க..

    அசத்தல் :-))

    ReplyDelete
  48. மோகன் குமார் said...
    //சார் இன்று தான் உங்கள் ப்ளாக் பார்க்க பெற்றேன். அருமை. மிக மகிழ்ச்சி. நான் தஞ்சையை சேர்ந்தவன். திருச்சியில் படித்தேன். அப்போது BHEL அருகே தங்கியிருந்தேன். என் அக்கா மருத்துவராக இன்னும் கணேச புரத்தில் தான் உள்ளார். தங்கள் ஓய்வு காலத்தில் பதிவுகள் மூலம் தங்கள் அனுபவங்களை நகைச்சுவை உடன் பகிர்வது மிக மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com//

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராடுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், நண்பரே.

    தாங்கள் BHEL பக்கம் தங்கியிருந்ததாகவும், தங்கள் சகோதரி அங்கே கணேசபுரத்தில் இப்போதும் மருத்துவராக உள்ளதாகச் சொல்வதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    நான் பணிஓய்வு பெற்றபிறகு BHEL பக்கம் கடந்த 2 வருடங்களாக அதிகம் செல்வதில்லை. திருச்சி டவுனில் ஒரு அடுக்குமாடி வளாகத்தில் வாழ்ந்து வருகிறேன். ஏதோ கொஞ்ச நாட்களாக ஒரு பொழுது போக்கிற்காகவும், ஆத்ம திருப்திக்காகவும், ஏதோ கொஞ்சம் எழுதி வருகிறேன்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் அளித்துச் செல்லுங்கள்.

    உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்/ஆசிகள்.

    ReplyDelete
  49. அமைதிச்சாரல் said...
    //சுவாரஸ்யமான பெயர்க்காரண இடுகை :-))

    ஊரையும் கோவில், குளத்தையும் வர்ணிக்கச்சே கண்முன்னால் நிறுத்திட்டீங்க..

    அசத்தல் :-))//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.

    நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் வாங்க.
    அன்புடன், வை கோபாலகிருஷ்ணன் 22/03/2011

    ReplyDelete
  50. //அந்தக் குளத்துக்கு என் மீது இன்றும் கூட எவ்வளவு பாசம் பொங்கி வந்தது தெரியுமா? நான் முதல்படியில் காலை வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது.//
    ஐயா நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன் ..... ஏன் தெரியுமா நீங்கள் சொல்லியுள்ள கதை அப்படி.... கொஞ்சநேரம் என்னால் படிக்க முடியவில்லை....ஹிஹிஹிஹிஹிஹிஹி....

    ReplyDelete
    Replies
    1. அடடா, நான் வழுக்கி விழுந்ததில்,
      உங்களுக்கு இப்படி ஒரே சிரிப்பா? ;)))))

      தாங்களும் என் மீது [அந்தக்குளம் போலவே] நிறையத்தான் பாசம் வைத்துள்ளீர்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

      Delete
    2. ஐயா நீங்கள் வழுக்கி விழுந்ததற்கு நான் சிரிக்க வில்லை...... உங்களின் எழுத்து வடிவம் என்னை சிரிக்க வைத்தது... மறுபடியும் உங்கள் கருத்தை படித்தவுடனும் எனக்கு சிரிப்புதான் வருகிற ஐயா...// அடடா, நான் வழுக்கி விழுந்ததில்,
      உங்களுக்கு இப்படி ஒரே சிரிப்பா? ;))))) //

      //தாங்களும் என் மீது [அந்தக்குளம் போலவே] நிறையத்தான் பாசம் வைத்துள்ளீர்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.//
      என்னை புகழ்ந்ததிர்க்கு மிக்க நன்றிகள் ஐயா...

      Delete
    3. நானும் சும்மா ஒரு ஜாலிக்காகத்தான் அப்படி எழுதினேன்.

      நான் வழுக்கி விழுந்ததற்கு தாங்கள் சிரிக்கவில்லை என்பதும், வழுக்கி விழுந்ததைப்பற்றி நான் நகைச்சுவையாக எழுதினதைப்பார்த்தே தாங்கள் சிரித்துள்ளீர்கள் என்பதும் தான் உள்ளங்கை நெல்லிக்கனி போல [தங்களின் ருசியான நெல்லிக்காய் மோர்க்குழம்பு போல] எனக்குத் தெரிகிறதே.;)

      அந்தக்குளத்தைப் போலவே தாங்களும் என்னிடம் மிகவும் பாசம் வைத்துள்ளீர்கள் என்ற உண்மையைத்தான் [புகழ்ந்து] சொன்னேன்.

      என் மீதும் என் எழுத்துகள் மீதும் கொஞ்சூண்டாவது பாசம் இல்லாமலா எனக்கு அன்புடன் AWESOME BLOGGER AWARD என்ற ஒன்றைக்கொடுத்தீர்கள்.

      http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html

      அதுவும் தங்களுக்கு முதன் முதலாகக் கிடைத்த விருது.

      அதுவும் என் பிரியத்திற்கும், மிகுந்த மரியாதைக்கும் உரிய மாபெரும் பன்முகத் திறமையாளரான திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விருது.

      தங்களின் அந்த முதல் விருது தான் [பாசமுள்ள குளத்தின் முதல் படி போல].

      அதை எனக்குத் தாங்கள் பாசத்துடன் அளித்த போது, அதை நானும் பாசத்துடன் வாங்கிக்கொண்ட போது, அது எனக்கு எட்டாவது விருதாக அமைந்து விட்டது

      [அதாவது குளத்தின் எட்டாவது படி வரை என்னை தங்களின் பாசத்தினால் இழுத்துச்சென்று விட்டது].

      என்றும் பாசத்துடன் தங்கள்,
      vgk

      [If you are releasing any new post, in your blog, please send me the link of your post to me through
      e-mail to my ID : valambal@gmail.com

      I will be watching my Mail Income very often & I will go to the Dash Board very rarely, only. More over, In my Dash Board, many of the posts are not appearing.]

      Delete
  51. //தோசைக்கு மாவு அரைத்து, தோசைகள் முழுவதும் முறுகலாக வார்க்கப்பட்டதும், கடைசியில் பாத்திரத்தில் மிஞ்சிய மாவை ஒட்ட வழித்து சற்றே கனமாக ஊத்தப்பம் போல கெட்டியாக வார்த்து விடுவார்களே, அதே போலத்தான் ஆகி விட்டது போலிருக்கு என் பிறப்பும். அன்று முதல் இன்று வரை நான் ஆள் கெட்டி தான். எல்லாவற்றிலுமே கெட்டிதான், கெட்டிக்காரன்தான்னு அவசரப்பட்டு தப்பா ஏதும் நினைச்சுடாதீஙக. நாளுக்கு நாள் உடம்பு வெயிட் ஏறுமுகமாகவே இருக்கு, அதைத்தான் கெட்டி என்று சொன்னேன். //
    நீங்கள் கூறியிருக்கும் உவமைகள் எல்லாம் படிக்க நகைசுவை கலந்த சுவாரஷ்யமாக இருக்கிறது.....

    ReplyDelete
    Replies
    1. நான் கூறியுள்ள நகைச்சுவை கலந்த உவமைகளை சுவாரஸ்யமாகப் படித்து, ரஸித்து அதை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

      அதுவே நான் மிகவும் ரஸிக்கும் தங்களின் ஸ்பெஷாலிடி!

      [ரஸித்துப் படிப்பதில் தங்களுக்குள்ள ஓர் தனித்தன்மைக்கு என் பாராட்டுக்கள்] ;))))) vgk

      Delete
  52. //நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் எனக்கு பிறந்த இடம் மட்டுமல்லாமல் அதுவே என்னை ஆட்கொண்ட இடமாகவும் ஆகியிருக்கும்.//
    என்னால் முடியவில்லை ஐயா......சிரிப்பு .......ஹிஹிஹிஹிஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! இவ்வாறெல்லாம் என் எழுத்துக்களைப் புகழ்ந்து கூறி, என் பரம ரஸிகையும் ஆகி, என்னை இப்படி [அந்தக் குளத்திற்கு பதிலாக தாங்கள்] ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டீர்களே! மிகவும் சந்தோஷம். ஹிஹிஹிஹி ;)))))

      அன்புடன் vgk

      Delete
  53. ஐயா நீங்கள் கூறியுள்ள கோயிலின் பெருமை பற்றியும் அந்த ஊர் பற்றியும் செய்திகள் அனைத்தும் நேரில் கண்டதற்கு சமமாகிறது...
    உங்களின் பெயர்காரணத்திற்க்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கமும் அதன் நகைசுவையும் அருமை ஐயா.... உங்கள் தாத்தாவின் பெயர்தான் உங்களுக்கு வைக்க பட்டுள்ளது என்றும் தெரிந்து கொண்டேன்..... நல்ல அருமையான பெயர்காரண கதை.....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும், நான்கு முறைகள் திரும்பத்திரும்ப வந்து அழகழகாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், Mrs. VijiParthiban, Madam.

      Thanks a Lot. All the Best. vgk

      Delete
    2. Unknown October 27, 2018 at 8:12 PM

      //Super mama .. ramram//

      ஹலோ ரமேஷ் .... உன்னுடைய முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      சுந்தர், கணேஷ் அல்லது சந்தானம் ஆகியவர்களிடம் கேட்டால் உன் பெயரிலேயே எப்படி பின்னூட்டம் கொடுப்பது என உனக்குச் சொல்லித் தருவார்கள்.

      அதுவரை இதுபோல 'Unknown' ஆக பின்னூட்டம் கொடுக்கும்போது ‘Super .. ramram' க்கு பிறகு கடைசியில் G.RAMESH என்று டைப் அடித்து விடவும்.

      அன்புடன் கோபு மாமா

      Delete
  54. நீங்கள் பிறந்த கதையை வழக்கம் போல நகைச்சுவையாகவே கனமான ஊத்தாப்பத்தில் தொடங்கி நாக்கை சப்பு கொட்ட வைத்து விட்டீர் (திருச்சி, ஆண்டார் தெருவில் இருக்கும் பழைய ராமா கபேயில் போட்ட வெங்காய ஊத்தாப்பம், முறுகலான ரவா தோசை போன்று இப்போது போடுவதில்லை )

    // அந்தக் காலகட்டத்தில் அதாவது 1920 முதல் 1950 வரை, என் பெற்றோர்களின் இளமைப் பருவத்தில், தங்கள் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, வேறு எந்த பொழுது போக்கு அம்சங்களும் இல்லாத காலமாகையால், தங்கள் *தவத்தின்* வலிமையை வீணாக்காமல், மக்கட் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே, முழுமையாகப் பயன் படுத்திக் கொண்டிருப்பார்கள் என்பது, நான் பிற்காலத்தில் செய்த ஆராய்ச்சிகளின் முடிவாகும். //

    ஆண்டார்தெரு ஸ்டோர் பக்கம் குடியிருந்த எனது அலுவலக நண்பர் ஒருவர் சொன்னது. ” இந்த ஒண்டு குடித்தனத்தில், பிள்ளை குட்டிகள், வயதான பெரிசுகள் என்று, ஆட்கள் கச கசவென்று எப்போதும் இருக்கும் இடத்தில் இவர்கள் எப்போது சந்தித்துக் கொண்டார்கள் சந்தோசமாக இருந்தார்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாகவே இருக்கிறது ”


    //’கு.க.’ என்றால் என்னவென்றே அப்போது அரசாங்கத்திற்கும் தெரியாது; பொது மக்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். நான் பிறந்த பிறகே எங்கும் எதிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் போலிருக்கு. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு பிறந்தவனல்லவா நான்! அது தான் காரணம். //
    ஆனாலும் அவ்வளவு பிள்ளைகளையும் அந்த காலத்து பெற்றோர்கள் வளர்த்தார்கள். அன்பு காட்டினார்கள். படிக்க வைத்து ஆளாக்கினார்கள் என்னும் போது மலைப்பாகவே இருக்கிறது.

    உங்கள் தாய் பெற்றெடுத்த அந்த ஊர் கோயிலுக்குச் சென்று குளத்தில் விழப் போனதையும் தப்பித்ததையும் சொன்ன விதம் அருமை.

    //என் அம்மா வழித்தாத்தா பெயரையே எனக்கு வெச்சுட்டாங்களாம், என் பெரியம்மா உத்தரவுப்படியே..//

    சாதாரணமாக அப்பா வழித் தாத்தா பெயரைத்தான் வைப்பார்கள் என்று சொல்வார்கள். நீங்கள்தான் வித்தியாசமானவர் ஆயிற்றே!
    அம்மா வழித் தாத்தா பெயரும் அருமை. அதிர்ஷ்டமான பெயர்தான்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

      என் கனமான பிறப்பு என்னும் ஊத்தப்பக்கதையில் ஆரம்பித்து

      ராமா கஃபே வெங்காய ஊத்தப்பம், முறுகலான ஸ்பெஷல் ரவா முதலியன வழியாக வலம் வந்து ....

      ஸ்டோர் வாழ்க்கை, ஒட்டிக்குடுத்தனம், பிள்ளை குட்டிகள், வயதான பெருசுகள், இதனூடே சந்திப்பு, உல்லாசம், சல்லாபம், சந்தோஷம், ஆச்சர்யம் ஆனால் உண்மை தான் என்பதையும் உணர்ந்து கொண்டு, தங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது என் பதிவு என்பதில் எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

      //அவ்வளவு பிள்ளைகளையும் அந்த காலத்து பெற்றோர்கள் வளர்த்தார்கள். அன்பு காட்டினார்கள். படிக்க வைத்து ஆளாக்கினார்கள் என்னும் போது மலைப்பாகவே இருக்கிறது.//

      நிச்சயமாக கோயில் கட்டிக் கும்பிட வேண்டிய பொறுமையின் பொறுப்பின் மறு உருவங்களான தெய்வங்கள் தான் அவர்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

      //உங்கள் தாய் பெற்றெடுத்த அந்த ஊர் கோயிலுக்குச் சென்று குளத்தில் விழப் போனதையும் தப்பித்ததையும் சொன்ன விதம் அருமை.//

      உண்மை நிகழ்ச்சி அது. அதனால் உணர்ந்து என்னால் எழுதப்பட்டது. அதனால் அந்த வழுக்கல் தங்களுக்கு அருமையானதாகவே தான் இருந்திருக்கும்.

      //அம்மா வழித் தாத்தா பெயரும் அருமை. அதிர்ஷ்டமான பெயர்தான்.///

      அப்படியா? மிக்க நன்றி. ஏதோ ஒரு பெயர். நம் அதிர்ஷ்டம் தான் நமக்குத் தெரியுமே!

      தங்களின் அன்பான வருகைக்கும், அனைத்துக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      அன்புடன்
      vgk

      Delete
  55. அன்பின் வை.கோ - பெயர்க்காரணம் அருமை- தாய் வழித் தாத்தாவின் ( தாயின் தகப்பனார் ) பெயரைச் சூடிக்கொண்டு - ( கோ ) தந்தையின் முதலெழுத்தை முகவரியகாகக் கொண்டு ( வை ) - லஷ்மியின் கருணையால் கோடிகளில் புரண்டு மகிழ்ந்து - எதையுமே யதார்த்தமாய் எடுத்துக் கொள்ளும் தங்களின் குணம் பாராட்டத் தக்கது.

    எனக்கும் தாயின் தந்தை பெயர் தான் வைத்திருக்கின்றனர். சிதம்பரம் என அழகான பெயர். பிறந்த ஊர் தஞ்சை எனினும் சொந்த ஊர் காரைக்குடியினை அடுத்த ஆத்தங்குடி. கோவிலூர் மடத்திற்குச் செல்லும் பழக்கமும் இருந்தது. சிதம்பரம் என்ற பெயருடன் தந்தையின் முதலெழுத்து ( காசிவிஸ்வநாதன் ) முகவரியாக ( கா. சிதம்பரம் ) என் அமைந்தது.

    சிதம்பரம் என்னும் பெயரினைப் பொதுவாக எங்கள் பக்கம் சீனா தானா என் அழைப்பார்கள். நான் அதனையும் சுருக்கி சீனா என வைத்துக் கொண்டேன்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  56. அன்புள்ள சீனா ஐயா, வாருங்கள். என் வணக்கங்கள்.

    காரைக்குடி + பேராவூரணி பக்கமெல்லாம் சமீபத்தில் சிலமுறை நானும் சென்று வந்ததுண்டு.

    ’சீனா தானா’ என்று அங்கு சிலரை, பலரும் அழைக்கக் கேட்டு மகிழ்ந்ததும் உண்டு.

    தங்களுக்கும் தாய் வழித்தந்தை பெயரே சூட்டப்பட்டுள்ளது என்பது நமக்குள் உள்ள ஒருசில ஒற்றுமைகளுக்கு மேலும் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளதே! ;))))) ஆச்சர்யம் தான்.

    நான் பிறந்த கோவிலூருக்கு தாங்களும் சென்று வந்துள்ளதாகச் சொல்வது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  57. பெயர் காரணம் பதிவு நகைச்சுவையுடன் ஐயோ என பதைக்கவைக்கும் உணர்வும் கலந்த நல்ல கலவை.
    நகைச்சுவைக்கு நடிகர் நாகேஷ் என்பதுபோல உங்களின் நகைச்சுவை கலந்த ரசனையோடு கூடிய நல்ல எழுத்துநடை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ரசிக்க சிரிக்க வைக்கின்றது.

    பெயர் வைக்க ஒவ்வோர் குடும்பங்களிலும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். உங்கள் பெயருக்குரிய காரணம் இதுவரை நான் அறிந்திராத ஒன்று.

    // அந்தக் குளத்துக்கு என் மீது இன்றும் கூட எவ்வளவு பாசம் பொங்கி வந்தது தெரியுமா? நான் முதல்படியில் காலை வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது.//

    இலகுவாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். ஆனால் உண்மையில் இதை வாசிக்கும்போது ஐயோ! என மனம் ஒரு கணம் பதைத்துவிட்டது. சில பல சம்பவங்களால் இத்தகைய நிகழ்வுகளை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை. அது யாருக்கு என்றாலும் யாராய் இருந்தாலும் மனதை அதிர வைக்கிறது.
    நல்லவேளை உங்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

    // ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம். //
    இதில் எனக்கும் 100 வீதம் உங்களுடன் ஒத்த கருத்தே:))

    பகிர்தலுக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் இளமதி,

      வாருங்கள். நலமா? காலை வணக்கங்கள்.

      //நகைச்சுவைக்கு நடிகர் நாகேஷ் என்பதுபோல உங்களின் நகைச்சுவை கலந்த ரசனையோடு கூடிய நல்ல எழுத்துநடை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ரசிக்க சிரிக்க வைக்கின்றது.//

      என் எழுத்து நடை தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகச் சொல்கிறீர்கள். இதைக்கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த நல்லதொரு அன்புப்பரிசாக எண்ணி மகிழ்கிறேன், இளமதி.

      தொடரும்.....

      Delete
    2. 2]

      VGK to இளமதி .....

      ****அந்தக் குளத்துக்கு என் மீது இன்றும் கூட எவ்வளவு பாசம் பொங்கி வந்தது தெரியுமா? நான் முதல்படியில் காலை வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது.****

      //இலகுவாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். ஆனால் உண்மையில் இதை வாசிக்கும்போது ஐயோ! என மனம் ஒரு கணம் பதைத்துவிட்டது.//

      அடடா! உங்கள் உள்ளம் ஓர் கருணையுடன் கூடிய அம்பாளின் உள்ளம் போலல்லவா உள்ளது. அது தான் பெண்களுக்கே உரித்தான தாயுள்ளம். அதற்கு நான் தலை வணங்குகிறேன்.

      //சில பல சம்பவங்களால் இத்தகைய நிகழ்வுகளை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை. அது யாருக்கு என்றாலும் யாராய் இருந்தாலும் மனதை அதிர வைக்கிறது.//

      ஆமாம், இளமதி. யாருக்கும் எங்கும் எதிலும் இதுபோல திடீரென ஆபத்துக்கள் வரவே கூடாது என்பதே என் எண்ணமும் கூட. புரிந்துகொண்டேன்.

      //நல்லவேளை உங்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை.//

      ஆம், அன்று ஏதோ,

      நல்லவேளை நா....ன் பிழைத்துக்கொண்டேன்.

      தொடரும்.....

      Delete
    3. 3]

      VGK to இளமதி...


      ****ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம்.****

      இதில் எனக்கும் 100 வீதம் உங்களுடன் ஒத்த கருத்தே:))

      ஒருவரின் கருத்துக்கள் மற்றவருக்கு ஒத்துப்போக வேண்டுமென்றால், அவரவர்களின் அனுபவங்கள் அதுபோல ஒத்துப்போய் படாதபாடு பட வைத்திருக்க வேண்டும். ஒத்த கருத்துகளுக்கும் என் நன்றிகள்.

      //பகிர்தலுக்கு மிக்க நன்றி!!!//

      இளமதியின் அன்பான வருகையும், Young Moon போன்ற குளுமையான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்தன. என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள,
      VGK

      Delete
    4. மிகவும் போற்றுதலுக்குரிய என் பெற்றோர்களுக்கு நான் கட்டக்கடைசியாகப் பிறந்த பிள்ளை. எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்க எனக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.//

      அன்றே அந்த இறைவனுக்குத் தெரியும், இந்தக் குழந்தை எழுத்துலகில் எண்ணில்லா தம்பி, தங்கைகளை ஊக்குவித்து உருவாக்கப்போகிறது என்று.

      நான் முதன் முதலில் உங்கள் பெயரைப் பார்த்ததுமே வை.கோ என்று சொல்லலாமா என்றுநினைத்தேன். எனக்கு அரசியலில் நாட்டமில்லாததால் அந்தப் பெயர் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

      உங்கள் எழுத்து நுனி முதல் அடிவரை இனிக்கும் கரும்பு. எதைச் சொல்ல எதை விட.

      படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை சுவாரசியம். படிப்பவரை எழுத்தாற்றலால் கட்டிப்போடும் லாவகம்.

      வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

      Delete
    5. JAYANTHI RAMANIDecember 26, 2012 3:08 AM

      வாருங்கள் என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி, ஜயந்தி ரமணி அவர்களே, வணக்கம்.

      //அன்றே அந்த இறைவனுக்குத் தெரியும், இந்தக் குழந்தை எழுத்துலகில் எண்ணில்லா தம்பி, தங்கைகளை ஊக்குவித்து உருவாக்கப்போகிறது என்று.//

      அடடா, என்ன அழகாகச் சொல்லி விட்டீர்கள். மகிழ்ச்சி.

      //நான் முதன் முதலில் உங்கள் பெயரைப் பார்த்ததுமே வை.கோ என்று சொல்லலாமா என்றுநினைத்தேன். எனக்கு அரசியலில் நாட்டமில்லாததால் அந்தப் பெயர் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.//

      எனக்கும் அரசியலில் அதிக நாட்டம் கிடையாது. நான் எழுதும் எந்த இடத்திலும் இவ்வாறு சுருக்கமாக தமிழில் என் பெயரை உபயோகிப்பதும் கிடையாது.

      பிற பதிவர்கள் சிலரால் இவ்வாறு நான் அழைக்கப்படுகிறேன். அவ்வளவு தான்.

      >>>>>>>

      Delete
    6. VGK To Mrs. Jayanthi Ramani [2]

      //உங்கள் எழுத்து நுனி முதல் அடிவரை இனிக்கும் கரும்பு. எதைச் சொல்ல எதை விட.//

      கரும்புச்சாறாய் இனிக்கும் இந்தத் தங்களின் கருத்துகளுக்கு மிகவும் சந்தோஷம். ;)

      //படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை சுவாரசியம். படிப்பவரை எழுத்தாற்றலால் கட்டிப்போடும் லாவகம்.//

      ஆஹா, ஏதேதோ சொல்லுகிறீர்கள். மனதுக்கு ஜில்லென்று தான் உள்ளது. இருப்பினும் நான் சாதாரணமானவன் தான்.

      //வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.//

      தங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள், நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      Delete
  58. படித்துப்பாருங்கள் ஐயா...........

    http://kovillormadam.blogspot.in/


    http://www.ammandharsanam.com/magazine/February2012unicode/page016.php

    http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_ucattanam.htm

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 7, 2013 at 7:38 AM

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்

      //படித்துப்பாருங்கள் ஐயா...........
      http://kovillormadam.blogspot.in/
      http://www.ammandharsanam.com/magazine/February2012unicode/page016.php
      http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_ucattanam.htm//

      இதிலுள்ள கோயிலூர்/கோவிலூர் க்கும் நான் பிறந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனினும் தகவலுக்கு நன்றி.

      >>>>>

      Delete
  59. http://viruntu.blogspot.in/2011/05/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி April 7, 2013 at 7:41 AM

      //http://viruntu.blogspot.in/2011/05/blog-post_09.html//

      இந்த இணைப்பு மிகவும் பயனுள்ளது. ஆனால் அதில் காட்டியுள்ள் முதல் இரண்டு படங்கள் மட்டுமே நான் பிறந்த கோவிலூரின் படங்களுடன் ஒத்துப்போகின்றன.

      அதாவது:

      [1] மிகப்பெரிய நுழைவாயில் இருபுறமும் தேர்வடிவில் தூண்கள்.
      {கண்ணைப்பறிக்கும் வானத்தின் நீலம் என எழுதப்பட்டுள்ளது}

      [2] கோயிலைச்சேர்ந்த குளம் {அமைதியான வடிவம்}
      முதல் படியில் காலைவைத்த என்னை மிகுந்த பாசத்துடன் பத்தாம்படிவரை இழுத்து அணைத்த திருக்குள்ம் இது தான்.

      இதில் அவர் காட்டியுள்ள கொற்றவாளீஸ்வரர் கோயில் என்பதெல்லாம் நான் பிறந்த கோவிலூருக்கு அருகே இருப்பதாகச் சொல்லப்படவில்லை. அடுத்த முறை என் பெரிய அக்காவை அழைத்துக்கொண்டு மீண்டும் செல்லும் போது சூப்பர் காமெராவுடன் போய் அனைத்தையும் படமெடுத்துக் கொண்டுவர நினைத்துள்ளேன்.

      மேலும் நான் பிறந்த கோவிலூர் அம்பாள் பெயர் :

      ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மன் என்பதாகும். மிக அழகிய அம்பாள். அந்த போட்டோ நான் எடுத்து வந்தது என்னிடம் உள்ளது.

      அதுபோல சிவன் பெயர்: ஸ்ரீ ராஜகட்க பரமேஸ்வரர் என்பதாகும்.

      மிகப்பெரிய நுழைவாயிலும், தேர்வடிவில் இருபுறமும் உள்ள மிகப்பெரிய தூண்களும், கோயிலின் திருக்குளமும் மட்டும் ஓரளவு இவர் காட்டியுள்ளது TALLY ஆவதாகத் தோன்றுகிறது.

      தங்களின் ஆர்வத்திற்கும், தகவலுக்கும் மிக்க நன்றி.

      இந்தக்கோயிலின் வரலாறு Net மூலம் தேடி எடுத்து விட்டேன். பிறகு உங்களுக்கு அதை அனுப்புகிறேன். அதில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யாரோ ஒரு ராஜாவால் கட்டப்பட்ட கோயில் என்று போட்டுள்ளது. அதில் நான் சொல்லும் சாடிவாலீஸ்வரி + ராஜகட்க பரமேஸ்வரர் என மிகச்சரியாகவே போடப்பட்டுள்ளது.

      அன்புடன் VGK

      Delete
    2. இராஜராஜேஸ்வரி April 7, 2013 at 8:11 PM

      அன்புடையீர், வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      http://www.kovilur.com/temple.htm

      இந்த மேற்படி பதிவினில் கீழ்க்கண்டவாறு வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன:

      //Once Pandiya King Veerasekaran went for hunting near Saliwadi village and lost his sword and later recovered. He ordered the construction of the temple and named the deity as Kotravaleeswarar or Raja Katka Parameshwar (God who saved King's sword, valour and there by citizens)//

      இதிலிருந்து ஸ்ரீ கொற்றவாலீஸ்வரர் என்பதும் ஸ்ரீ ராஜ கட்க பரமேஸ்வரர் என்பதும் ஒருவரே என்பதை நம்மால் அறிய முடிகிறது.

      அதுபோலவே அங்கு நுழைவாயிலில் குறிப்பிட்டுள்ள திருநெல்லை அம்மனும், ஸ்ரீ சாடிவாலீஸ்வரியும் ஒரே அம்பாளாகத்தான் இருக்கக் கூடும்.

      வடமொழிப்பெயர்களைத் தமிழாக்கம் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

      எங்கள் ஊர் திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் ’தாயுமானவர்’ ஆகவும், ஸ்ரீ சுகந்தி குந்தளாம்பாள் ’மட்டுவர் குழலம்மை’யாகவும் ஆகியுள்ளார்களே, அதே போலத்தான் இருக்கும். - VGK

      Delete
  60. உங்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வு வற்றவே இல்லை என்பதே வரப்பிரசாதம் கோபால் சார். நான் கூப்பிடுவதைக் குறிப்பிடவே இல்லையே. :)

    அருமையான அவ்வப்போது பொங்கிச் சிரிக்க வைத்த பதிவு இது . வாழ்த்துகள் கோபால் சார்.

    ReplyDelete
  61. Thenammai LakshmananMay 13, 2014 at 9:31 AM

    வாங்கோ .... வணக்கம்.

    //உங்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வு வற்றவே இல்லை என்பதே வரப்பிரசாதம் கோபால் சார். //

    மிகவும் சந்தோஷம். அது வற்றாத ஜீவ நதியாகவே இருக்கட்டும்.

    //நான் கூப்பிடுவதைக் குறிப்பிடவே இல்லையே. :)//

    என்னை ‘கோபால் சார்’ எனக்கூப்பிடுவது தாங்களும் என் பெரிய சம்பந்தி திரு. பாலசுப்ரமணியன் அவர்களும் மட்டுமே. மற்ற என் உறவினர்கள் எல்லோரும் என்னை ’கோபு’ என்றே தான் பாசத்துடன் அழைத்து வருகிறார்கள். ஆபீஸில் பலர் மட்டும் ’வீ.... ஜீ ....’ என்ற ராகத்துடன் அழைத்து வந்தனர். தாங்கள் அழைக்கும் போதெல்லாம் எனக்கு சம்பந்தி ஞாபகமே வருகிறது. இதன் மூலம் தாங்களும் எனக்கு சம்பந்தி ஆகி விட்டீர்கள்.

    //அருமையான அவ்வப்போது பொங்கிச் சிரிக்க வைத்த பதிவு இது . வாழ்த்துகள் கோபால் சார்.//

    மிக்க நன்றி, மேடம். கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  62. நகைச்சுவை மிளிரும் அருமையான ezhuththu...படிக்கவே ரொம்ப சுவாரசியமாக இருக்கு!

    அந்த ஊத்தப்பம் மேட்டர்...சூப்பர்! புது ரூபாய் நோட்டுக்கு 'வீஜீ' என்ற செல்ல அழைப்பு...! நல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு!

    ReplyDelete
  63. Radha Balu May 23, 2014 at 3:59 PM

    வாங்கோ, வணக்கம்.

    //நகைச்சுவை மிளிரும் அருமையான ezhuththu...படிக்கவே ரொம்ப சுவாரசியமாக இருக்கு!//

    சந்தோஷம். தாங்கள் இதைப்படிக்க நேர்ந்ததே எனக்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு. ;)

    //அந்த ஊத்தப்பம் மேட்டர்...சூப்பர்!//

    ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    இன்று ஊத்தப்பத்தின் வெயிட் 95 கிலோவுக்கு மேல் எகிறிப்போய் விட்டதே ! ;(

    //புது ரூபாய் நோட்டுக்கு 'வீஜீ' என்ற செல்ல அழைப்பு...! நல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு!//

    வீ......................ஜீ என்று ராகம் போட்டு முதன்முதலாக செல்லமாக அழைத்தது, நம் அதிரடி அதிரா போன்ற ஒருத்தி மட்டுமே .... அதன் பிறகு அதையே பிறரும் Follow செய்து அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  64. / ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம். //

    தெளிந்தமனதிலிருந்து வந்த உண்மையான , சத்யமான வார்த்தைகள்.

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார். வீ...ஜீ...என்று ஒரு ராகத்துடன் முதன் முதலாக அழைக்க ஆரம்பித்தது, உங்கள் ஸ்ரீரங்கத்து ராணி தான். ACCOUNTS-53AD-79AD-SSTP என்று நெடுக பணிமாற்றம் செய்யப்பட்டவங்க. ’கலா’ ரசிகனான எனக்கும் அவங்க என்னை அப்படி அழைப்பதும் பிடிக்கும் அந்த நாட்களில். இப்போது நான் அவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்.//

    ரிஷபன் சாருக்கு சொன்ன பதிலை படித்தேன்.

    எவ்வளவு நினைவுகள் அதை மறக்காமல் பதிவு செய்யும் விதம் அருமை.
    பெயர் காரணம் சிரிப்பை வரவழைத்தது.
    பிறந்த வீட்டு பெயரை வைத்தால் அத்துடன் குழந்தை நின்று விடும் என்று அந்த காலத்துபெரியவர்கள் சொன்னது.

    எனக்கு அம்மாவின் அம்மா பேர் எனக்கு அப்புறம் தம்பி, தங்கைகள்.

    நீங்கள் சொல்வது நம் கையில் ஒன்றும் இல்லை பகவான் தீர்மானிக்கிறார் நம் பிறப்பை. எங்கே எவ்வளவு காலம் எல்லாம்.

    ReplyDelete
  65. நீங்கள் சொல்வது போல் எதுவும் நம் கையில் இல்லை


    ReplyDelete
  66. கோமதி அரசு October 3, 2014 at 3:19 PM

    வாங்கோ, வணக்கம்,.

    //தெளிந்தமனதிலிருந்து வந்த உண்மையான , சத்யமான வார்த்தைகள்.//

    சந்தோஷம். :)

    //ரிஷபன் சாருக்கு சொன்ன பதிலை படித்தேன்.//

    நன்றி, மகிழ்ச்சி. அது யார் அந்த ராணி என்பது அவருக்கு மட்டுமே புரியும். :)

    //எவ்வளவு நினைவுகள் அதை மறக்காமல் பதிவு செய்யும் விதம் அருமை. பெயர் காரணம் சிரிப்பை வரவழைத்தது.//

    நான் பதிவுலகில் நுழைந்த 3ம் மாதத்தில் ’கற்றலும் கேட்டலும்’ திருமதி. ராஜி அவர்களின் தொடர் பதிவு அழைப்புக்காக இதை அன்று எழுதினேன். இப்போதுபோல எனக்கு அப்போது படங்களையெல்லாம் என் பதிவுகளில் இணைக்கத்தெரியாது.

    //நீங்கள் சொல்வது போல நம் கையில் ஒன்றும் இல்லை பகவான் தீர்மானிக்கிறார் நம் பிறப்பை. எங்கே எவ்வளவு காலம் எல்லாம்.//

    கரெக்ட். வெகு அழகாகவே சொல்லிட்டீங்க. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  67. மிகவும் நகைச்சுவையாக....எழுதி இருக்கிறீர்கள். பிறந்த கோவிலூர் பற்றியும், பாசமான குளம் பற்றியும், ஆர்வத்துடன் அக்கா துணையோடு பிரந்த இடத்தைகண்டுவந்ததும் அருமை.

    ஜாதகம் பார்த்து நீங்கள் அறிந்து கொண்ட விஷயம் முற்றிலும் 100 / 100 உண்மை தான்.

    பெயர் காரணமும், அவரவர் அழைக்கும் விதமும், தாங்கள் 2005
    பரிசு வாங்கியதும் அருமை ஐயா அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri February 3, 2015 at 1:14 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மிகவும் நகைச்சுவையாக....எழுதி இருக்கிறீர்கள். பிறந்த கோவிலூர் பற்றியும், பாசமான குளம் பற்றியும், ஆர்வத்துடன் அக்கா துணையோடு பி ற ந் த இடத்தைக் கண்டுவந்ததும் அருமை.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      //ஜாதகம் பார்த்து நீங்கள் அறிந்து கொண்ட விஷயம் முற்றிலும் 100 / 100 உண்மை தான்.//

      ஆஹா ! அப்படியா !! ஜோஸியம் பார்க்கப்போன பலருக்கும் கடைசியில் இதே அனுபவங்கள்தான் கிடைத்திருக்கும் எனவும், இதே முடிவுக்குத்தான் வந்திருப்பார்கள் எனவும் தெரிந்துகொள்ள முடிகிறது. :)

      //பெயர் காரணமும், அவரவர் அழைக்கும் விதமும், தாங்கள் 2005 பரிசு வாங்கியதும் அருமை ஐயா அருமை. வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  68. உங்கள் எழுத்துக்கள் ஒருவிதமான உற்சாகத்தை தொற்றிக் கொள்ள வைக்கிறது ஐயா நன்றி

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri February 3, 2015 at 1:15 PM

      வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்வளிக்கிறது.

      //உங்கள் எழுத்துக்கள் ஒருவிதமான உற்சாகத்தை தொற்றிக் கொள்ள வைக்கிறது ஐயா நன்றி.//

      ஹைய்ய்ய்யோ! அச்சா ..... பஹூத் அச்சா .....

      என் பதிவுக்கான தங்களின் பின்னூட்டங்களும் எனக்கு அதே ஒருவிதமான உற்சாகத்தைத் தொற்றிக் கொள்ள வைக்கிறது. மிக்க நன்றீங்க !

      Delete
  69. வணக்கம் ஐயா. இப்பதான் இந்தப் பதிவை பார்த்தேன். நடை சூப்பரா அப்படியே 'வழுக்கிக்கொண்டு' போகிறது!


    ஊரையும் கோவிலையும் விட அந்த தேர்த்தூண்கள் பார்க்கத்தான் ஆசையா இருக்கு. இதுக்காகவே அந்தப் பக்கம் பயணம் போகணும்.

    இந்தக் கோவிலூர் அந்த 'திருக்கோவிலூரா?' இருக்காதுதானே?

    திருக்கோவிலூர் பயணம் ஒன்று எனக்கு பாக்கி இருக்கிறது.

    எங்க வீட்டிலும் ஒரு கோபாலகிருஷ்ணன் இருந்தான். செல்லமாக கோகி என்று கூப்பிடுவார் நம்ம இலவசக் கொத்தனார்.

    ReplyDelete
    Replies
    1. துளசி கோபால் March 28, 2015 at 2:21 AM

      //வணக்கம் ஐயா. இப்பதான் இந்தப் பதிவை பார்த்தேன்.//

      வாங்கோ, வணக்கம். மிகவும் சந்தோஷம்.

      //நடை சூப்பரா அப்படியே 'வழுக்கிக்கொண்டு' போகிறது!//

      அப்படியா! என் மீது பாசம் கொண்ட அந்தக்குளம் போலவே என் (எழுத்து) நடையும் சூப்பராக அப்படியே வழிக்கிக்கொண்டு போகிறதா ? :) மிக்க மகிழ்ச்சி

      //ஊரையும் கோவிலையும் விட அந்த தேர்த்தூண்கள் பார்க்கத்தான் ஆசையா இருக்கு. இதுக்காகவே அந்தப் பக்கம் பயணம் போகணும்.//

      சந்தோஷம். முடிந்தால் போய்விட்டு வாங்கோ.

      //இந்தக் கோவிலூர் அந்த 'திருக்கோவிலூரா?' இருக்காதுதானே? //

      இல்லை. [நான் இங்கு சொல்லியுள்ள கோவிலூர்] இது வேறு ... அது [தாங்கள் கூறிடும் திருக்கோவிலூர்] வேறு.

      அப்போது நான் எடுத்த ஒருசில புகைப்படங்களைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். முடிந்தால் அவற்றை இந்தப்பதிவினில் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் பதிவிட ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் வெளியிட்டுள்ள சுமார் 100 பதிவுகளில் படங்களே எதுவுமே இருக்காது.

      படங்களை எப்படிப் பதிவினில் ஏற்ற வேண்டும் என்பதே எனக்கு அப்போதெல்லாம் தெரியாமல் இருந்தது என்பதே உண்மை.

      //திருக்கோவிலூர் பயணம் ஒன்று எனக்கு பாக்கி இருக்கிறது.//

      ஓஹோ ! அப்படியா !! நல்லது.

      நான் சொல்லியுள்ள இந்த ’கோவிலூர்’ காரைக்குடி பேருந்து நிலயத்திற்கு மிக அருகில் (Within 2-3 KMs) காரைக்குடி--குன்னக்குடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

      //எங்க வீட்டிலும் ஒரு கோபாலகிருஷ்ணன் இருந்தான். செல்லமாக கோகி என்று கூப்பிடுவார் நம்ம இலவசக் கொத்தனார்.//

      என்னையும் நம் பதிவுலக நட்புக்களில், வெளிநாட்டில் வாழும் ஒரே ஒரு பெண்மணி மட்டும், ’கோகி’ என்று செல்லமாகவே அழைத்து வருகிறார்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
    2. To
      Mrs. துளசி கோபால் Madam,

      இன்று இந்தப்பதிவினில் தங்களுக்காகவே சில புகைப்படங்களும், புதிய இணைப்புகளும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில ஆச்சர்யமான ஆங்கிலச் செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

      இது Just தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் VGK

      Delete
  70. இந்தப்பதிவினில் உள்ள அனைத்துப்படங்களும், இறுதியில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில செய்திகளும் என்னால் இந்தப்பதிவினில் இன்று [29.03.2015] புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

    இது அனைவரின் தகவலுக்காகவும் மட்டுமே. - VGK

    ReplyDelete
  71. மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    தேரைப் பார்த்ததும்தான் மனசுக்கு நிம்மதி ஆச்சு. கோவில் குளம் படு சுத்தம்! அந்தப் பக்கங்களில் கோவிலையும் குளத்தையும் நன்றாகவே பராமரிக்கின்றனர். பிள்ளையார்பட்டி போய் வந்துள்ளோம்.
    கட்டாயம் ஒருமுறை போய் தரிசிக்க அவன் அருள்வேண்டி நிற்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. துளசி கோபால் March 29, 2015 at 7:19 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.//

      தங்களுக்காக மட்டுமல்லாமல் எனக்காகவும்கூட, நான் 20.02.1999 அன்று எடுத்துவந்த அந்த அம்பாளின் புகைப்படத்தினை என் வீட்டில் பல புகைப்படங்கள் வைத்துள்ள அடசல் பெட்டியைக் கீழே இறக்கி ஒருவழியாகத் தேடிக்கண்டுபிடித்து வெளியிட முடிந்துள்ளது. இதில் தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி.

      //தேரைப் பார்த்ததும்தான் மனசுக்கு நிம்மதி ஆச்சு. கோவில் குளம் படு சுத்தம்! அந்தப் பக்கங்களில் கோவிலையும் குளத்தையும் நன்றாகவே பராமரிக்கின்றனர்.//

      ஆமாம். மிகவும் சுத்தமாகவே பராமரித்து வருகிறார்கள். நகரத்தார்களில் பலரும் (செட்டியார்கள்) வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல .... தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் உள்ளனர் என்பதில் மகிழ்ச்சியே.

      சுமார் 50-60 வருடங்களுக்கு முன்பு செட்டிநாட்டின் பல பகுதிகளில், பல வேத பாடசாலைகளை நிர்வகித்து, வேதம் தழைக்க இவர்கள் பாடுபட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

      //பிள்ளையார்பட்டி போய் வந்துள்ளோம்.
      கட்டாயம் ஒருமுறை போய் தரிசிக்க அவன் அருள்வேண்டி நிற்கின்றேன்.//

      காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி, குன்னக்குடி போன்ற ஸ்தலங்களுக்குப் போகும் பாதையில் தான்
      இந்தக் கோவிலூர் என்ற கோயிலும் வருகிறது. பஸ் கோவிலூர் வழியாகச் செல்லுமா என விசாரித்துக்கொண்டு ஏறி, ஓட்டினர் இருக்கைக்குப் பின்புறமாக, ஜன்னல் பக்கமாக அமர்ந்து கொண்டுவிட்டால், பேருந்தில் அமர்ந்தவாறே, ரோட்டின் மேல் உள்ள இந்த ஆர்ச் + தேர்களை நாம் மிகச் சுலபமாக தரிஸித்து விடலாம்.

      காரைக்குடியிலிருந்து பஸ் கிளம்பியதும் 2 KMs க்குள் 10-15 நிமிடங்களுக்குள் ரோட்டின் வலதுபுறமாக, ரோட்டின் மேலேயே மிகவும் பிரும்மாண்டமாகத் தென்படும்.

      நான் அங்கு பஸ்ஸில் போய்வந்து 15-16 ஆண்டுகள் ஆனபடியால் .... போகும் சாலைகளில் இப்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவோ ?

      அதனால் தாங்கள் போகும் முன்பு தீர விசாரித்துக் கொண்டு செல்லவும்.

      காரில் செல்ல நினைத்தால் எப்படியும் இதில் பிரச்சனை ஏதும் இருக்காதுதான். வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      Delete
  72. //மறக்காமல் என்னையும் தூக்கிக்கொண்டு// மறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எங்களுக்கு வைகோ கிடைக்காமல் போயிருப்பார்.

    ReplyDelete
  73. பெயர் காரணம் தெரிஞசிகிட்டோம். எல்லாருக்குமே இப்படி பெய்க் காரணங்கள் இருக்கும். அதை சுவை பட சொல்ல உங்களால மட்டுமே முடிகிறது.

    ReplyDelete
  74. //மக்கட் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே, முழுமையாகப் பயன் படுத்திக் கொண்டிருப்பார்கள் என்பது, நான் பிற்காலத்தில் செய்த ஆராய்ச்சிகளின் முடிவாகும். //

    நல்ல ஆராய்ச்சி அண்ணா. இதை படிக்கும் போது என் மாமியார் வீட்டில் நடந்தது நினைவுக்கு வருகிறது. என் மாமியாருக்கு 8 குழந்தைகள், 8 குறைப் பிரசவம். என் மாமியாரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து செலவு செய்ததும் ஒரு சின்ன பலப்பக் குச்சி குடுத்தால் சிமெண்ட் தரையிலேயே கணக்கெழுதி
    TALLY யும் செய்து விடுவார்கள். என் ஐந்தாவது மைத்துனர் என் மாமியாரிடம் ‘அம்மா, இந்தக் கணக்கெல்லாம் நன்னாதான் போடற. ஆனா இந்த பிள்ளைகள் பெத்துக்கொண்ட கணக்கில் மட்டும் கோட்டை விட்டு விட்டாயே’ என்று கிண்டல் செய்வார்.

    //அதனால் தானோ என்னவோ செய்தித்தாள்களில் பல கோடிக்கணக்கில் ஊழல் என்று செய்திகள் வந்தாலும், நான் அதிர்ச்சியடைவதே இல்லை. நான் பார்க்காத கோடிகளா என்ன ! பிஸாத்து, என்று தான் நினைப்பேன்.//

    இப்படி ஒப்பிடவே கூடாது. ஏன்னா நீங்க பார்த்த கோடிகள் நல்ல பணம். செய்தித்தாளில் வருவதெல்லாம் கள்ளப் பணம்.


    //இந்த “கோபு” என்பதும் மிகவும் பிரபலமாகி,இன்று வரை, குடும்பத்திற்குள் புழக்கத்தில் ”கோபு” வும் இருந்து தான்
    வருகிறது.//

    எப்படிக் கூப்பிட்டா என்ன? A ROSE IS A ROSE IS A ROSE IS A ROSE அப்படின்னு சொல்லறா மாதிரி கோபு அண்ணாவுக்கு நிகர் அவரே தான்.

    படிப்பவர்களின் ஆவலைத் தூண்டுவதுடன் இந்தப் பதிவுடன் இலவச இணைப்பாக கோவிலூரைப் பார்க்கும் ஆசையையும் தூண்டி விட்டு விட்டீர்கள்.

    வாழ்க கோவாலு
    வை கோபாலகிருஷ்ணன் அவர்கள்

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி



    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya May 16, 2015 at 6:43 PM

      வாங்கோ ஜயா, வரிக்கு வரி நன்னா ரசித்து ருசித்துப் படிச்சிருக்கேள் ! :) உங்க மாமனார் + மாமியாரும் இது விஷயத்தில் கில்லாடிகள் போலிருக்குது. கேட்கவே சந்தோஷமாக உள்ளது; கொஞ்சம் பொறமையாகவும் உள்ளதாக்கும். :)

      //எப்படிக் கூப்பிட்டா என்ன? A ROSE IS A ROSE IS A ROSE IS A ROSE அப்படின்னு சொல்லறா மாதிரி கோபு அண்ணாவுக்கு நிகர் அவரே தான். //

      ஹைய்யோ ! :)

      //படிப்பவர்களின் ஆவலைத் தூண்டுவதுடன் இந்தப் பதிவுடன் இலவச இணைப்பாக கோவிலூரைப் பார்க்கும் ஆசையையும் தூண்டி விட்டு விட்டீர்கள். //

      :))))))

      //வாழ்க கோவாலு//

      கோ(பாலகிருஷ்ணன்) + வாலாம்பாள் = கோவாலு !
      சூப்பர் ஜயா ! இதுகூட நல்லவே இருக்குது ஜயா :))))))))

      Thank you .... Jaya !

      Delete
  75. பெயர் காரணம் வெளங்கி கிட்டேன். அதக் கூட இவுவள அளகா சொல்லினிங்க.

    ReplyDelete
  76. பெயர்காரணம் சொல்வதில் கூட இவ்வளவு நகைச்சுவையை சேர்க்க முடியுமா. முடியும்னு காட்டி இருக்கேளே. அந்த கால மனுஷா ரொம்ப நிறயாவே ( தவம்) செய்திருப்பாங்க போல. இதுல வேடிக்கை என்னான்னா அப்பல்லாம் மேக்சிமமா கூட்டு குடும்ப வாழ்க்கை முறைகள்தான் நடைமுறையில் இருந்திருக்கு. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசக்கூட அக்கம் பக்கம் யாராவது கவனிக்கிறாங்களோன்னு ஜாக்கிரதை உணர்வோடயே இருப்பா. அப்புரமா தனிமைக்கும் சந்தோஷங்களுக்கும் ஏது இடம். இவங்களும் தடைகள் எல்லாம் தாண்டி நல்ல விதமாக ( தவம்) பண்ணி 7, 8. குழந்தைகளை பெற்று வளர்த்து நல்ல படியாக ஆளாக்கி இருக்காளே.

    ReplyDelete
  77. சொந்த ஊருக்கு போனாலே வயசு குறஞ்சுடும்...சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப்போல வருமா...???

    ReplyDelete
  78. //எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம். //
    உண்மைதான் ஐயா!

    ReplyDelete
  79. சித்தப்பா.. உங்கள் தாயாருக்கு யோசனை கூறியதாக இங்கு குறிப்பிட்டு இருப்பது என்னுடைய பாட்டி (மீனாக்ஷி )தான் என நினைக்கிறேன்.... மிகவும் சந்தோஷமாக இருக்கிறது .... நீங்கள் மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கும் நடையையும் சேர்த்து சொல்கிறேன் ... ஏனோ 5 வருட கால தாமதத்திற்கு பின் படிக்க இன்றுதான் வாய்ப்பு கிட்டியது. 2012இல் என் அப்பாவை காசிக்கு கூட்டி சென்ற போது அவர் கோபாலகிருஷ்ணன் , சுப்ரமணியன், கோபாலகிருஷ்ணன் என அவருடைய தாயார் வழி பெரியோர்களுக்கு தர்ப்பணம் செய்த போது தான் எனக்கு புரிபட்டது ... அதற்கு முன் அந்த விஷயங்களை சரியாக கவனித்தது இல்லை

    ReplyDelete
  80. சித்தப்பா.. உங்கள் தாயாருக்கு யோசனை கூறியதாக இங்கு குறிப்பிட்டு இருப்பது என்னுடைய பாட்டி (மீனாக்ஷி )தான் என நினைக்கிறேன்.... மிகவும் சந்தோஷமாக இருக்கிறது .... நீங்கள் மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கும் நடையையும் சேர்த்து சொல்கிறேன் ... ஏனோ 5 வருட கால தாமதத்திற்கு பின் படிக்க இன்றுதான் வாய்ப்பு கிட்டியது. 2012இல் என் அப்பாவை காசிக்கு கூட்டி சென்ற போது அவர் கோபாலகிருஷ்ணன் , சுப்ரமணியன், கோபாலகிருஷ்ணன் என அவருடைய தாயார் வழி பெரியோர்களுக்கு தர்ப்பணம் செய்த போது தான் எனக்கு புரிபட்டது ... அதற்கு முன் அந்த விஷயங்களை சரியாக கவனித்தது இல்லை

    ReplyDelete
    Replies
    1. My Dear Balu,

      My mail ID : Valambal@gmail.com

      This is just for your information & records - VGK

      Delete
    2. Bala AK April 28, 2016 at 7:00 PM

      வாங்கோ மை டியர் பாலு, செளக்யமா? இப்போ எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

      //சித்தப்பா.. உங்கள் தாயாருக்கு யோசனை கூறியதாக இங்கு குறிப்பிட்டு இருப்பது என்னுடைய பாட்டி (மீனாக்ஷி )தான் என நினைக்கிறேன்....//

      சாக்ஷாத் உங்களின் அப்பா Mr. AVK அவர்களின் தாயாரே தான் என் சொந்தப் பெரியம்மா (அம்மாவின் அக்காள்) மீனாக்ஷி அவர்கள். பெரியப்பா பெயர்: பிரும்மஸ்ரீ. வெங்கட்ராம சாஸ்திரிகள், அந்தக்காலத்தில் 5/18, பெரிய நாராயண ஐயர் ஸ்டோர், 5, வடக்கு ஆண்டார் தெரு, திருச்சி-2 இல் குடியிருந்தவர்கள். எனக்கு அவர்கள் இருவரையும் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

      //மிகவும் சந்தோஷமாக இருக்கிறது .... நீங்கள் மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கும் நடையையும் சேர்த்து சொல்கிறேன் ...//

      மிக்க மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷம்.

      //ஏனோ 5 வருட கால தாமதத்திற்கு பின் படிக்க இன்றுதான் வாய்ப்பு கிட்டியது.//

      அதனால் பரவாயில்லை. ரஸித்துப் படித்ததோடு மட்டும் இல்லாமல், பின்னூட்டமிட்டுள்ளதும், அதுவும் தமிழில் எழுதியுள்ளதும், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் மணக்கால் பர்வதம் அத்தை பிள்ளை குஞ்சாலி என்கிற Mr M J Raman அவர்கள் அடிக்கடி என் பதிவுகள் பலவற்றை விரும்பிப் படிப்பார். Manakkal என்ற பெயரிலேயே பின்னூட்டமும் அளிப்பார். உதாரணாமாக அவர் கருத்துச்சொல்லியுள்ள ஓருசில பதிவுகளுக்கான இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2012/03/7.html

      http://gopu1949.blogspot.in/2012/03/5.html

      http://gopu1949.blogspot.in/2012/03/6.html

      //2012இல் என் அப்பாவை காசிக்கு கூட்டி சென்ற போது அவர் கோபாலகிருஷ்ணன், சுப்ரமணியன், கோபாலகிருஷ்ணன் என அவருடைய தாயார் வழி பெரியோர்களுக்கு தர்ப்பணம் செய்த போது தான் எனக்கு புரிபட்டது ... //

      ஆமாம். எனக்கும், உங்கள் அப்பா Mr. AVK அவர்களுக்கும் அம்மா வழி கோத்ரம் மிகவும் ஒஸத்தியாகச் சொல்லப்படும் ஆத்ரேய கோத்ரம் ஆகும்.

      அம்மா வழி முன்னோர்கள்:

      கோபாலகிருஷ்ண ஸர்மா (அம்மாவின் தந்தை)

      சுப்ரமணிய ஸர்மா (அம்மாவின் தந்தையின் அப்பா)

      மீண்டும் கோபாலகிருஷ்ண ஸர்மா (அம்மாவின் தந்தையின் அப்பாவின் அப்பா)

      அது போல மேற்படி முன்னோர்களின் மனைவிகள் பெயர்கள் முறையே தைலம்மா, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்பதாகும்.

      மேலும் சில அபூர்வச் செய்திகள்:
      ====================================

      என் அம்மாவும், உங்கள் அப்பாவின் அம்மாவும் (சொந்த அக்கா-தங்கை இருவரும்) ஒரே கோத்ரக்காரர்களுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள். அதாவது நமது சங்கிருதி கோத்ரத்தில் மட்டுமே வாழ்க்கைப்பட்டவர்கள். இது ஒரு அபூர்வ நிகழ்ச்சியாகும்.

      அதனால் சங்கிருதி கோத்ரக்காரர்களாகிய நாம் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் தாயாதியும் கூட ஆகிவிட்டோம். நாம் ஒருவருக்கு ஒருவர் சிராத்த சேஷங்களைக்கூட தயங்காமல் உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிட முடியும்.

      பிறந்த வீட்டில் உங்களின் அப்பாவின் அம்மாவான பாட்டிக்கு மீனாக்ஷி என்று பெயர். அங்கு அங்கிச்சி என்ற செல்லப்பெயருடன் சுபலக்ஷ்மி அல்லது சுப்புலக்ஷ்மி என்று அழைக்கப்பட்ட என் தாயாருக்கு, புகுந்த வீட்டில் வைத்துள்ளபெயரும் மீனாக்ஷி என்பதே ஆகும். இதுவும் ஒரு வேடிக்கையான விஷயமாகவே உள்ளது.

      //அதற்கு முன் அந்த விஷயங்களை சரியாக கவனித்தது இல்லை//

      அப்பா உயிருடன் இருக்கும்வரை இதைப்பற்றியெல்லாம் நாம் கவனிக்கவோ கவலைப்படவோ தெரிந்துகொள்ளவோ தேவையே இல்லைதான். அவர்கள் காலத்திற்குப்பின் இவையெல்லாம் அவசியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக உள்ளது. தர்பணங்கள் செய்ய அப்பா வழியிலும், அம்மா வழியிலும் மூன்று தலைமுறை ஆண் + பெண் பெயர்கள் அவசியமாகத் தெரிய வேண்டுமே.

      என் பதிவு ஒன்றுக்கு இன்று தங்களின் அன்பான அபூர்வ முதல் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

      அன்புடன் கோபு சித்தப்பா

      Delete
  81. பெயர் காரணம் என்ன சுவாரசியம்..... அன்று... குளத்து பாசி... உங்கமேல.. பாசம் வச்சதுபோல..... இப்ப..... எவ்வளவு......" குளங்கள்".... ( ரசிகர்கள்).......உங்க மேல பாசம் வச்சிருக்கோம்...... ஆனா... இந்த குளங்கள்..... உங்களை வழுக்கி விடாம... தூக்கி... நிறுத்துற பாசக்கார குளங்கள்..))))))). இணைத்திருக்கும்... படங்கள்... ரொம்ப நல்லா இருக்கு.... இப்பவும்.......
    அந்த " லஷ்மி"....உங்க கூட ஒட்டி... உறவாடிகிட்டு... இருக்காங்களா....பின்னூட்டங்கள்.... ரிப்ளை பின்னூட்டங்கள்... செம... சுவாரசியம்& செம நகைச்சுவை......

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... May 4, 2016 at 10:03 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பெயர் காரணம் என்ன சுவாரசியம்..... அன்று... குளத்து பாசி... உங்கமேல.. பாசம் வச்சதுபோல..... இப்ப..... எவ்வளவு......" குளங்கள்".... (ரசிகர்கள்) ....... உங்க மேல பாசம் வச்சிருக்கோம்...... ஆனா... இந்த குளங்கள்..... உங்களை வழுக்கி விடாம... தூக்கி... நிறுத்துற பாசக்கார குளங்கள்..))))))).//

      இதையெல்லாம் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மைதான். பாசக்கார குளங்களில் (ரசிகர்களில்) தாங்கள் ஒருவர் மட்டுமே, இன்றும் என் பழைய பதிவுகளை ஒவ்வொன்றாகப் படித்து, கருத்தளித்து வருகிறீர்கள். நான் இப்போது புதிய பதிவுகள் ஏதும் தராமல் இருப்பதால் மற்றவர்களையெல்லாம் என்னால் பார்க்கவே முடியவில்லை ... எனக்கும் இதில் கொஞ்சம் வருத்தம்தான். என்ன செய்ய?

      ஆரம்பம் முதல் தொடர்ந்து வருகைதந்து எனக்கு அவ்வப்போது ஊக்கமும் உற்சாகமும் அள்ளித்தந்து கொண்டிருந்த ஒரு தேவதை (அம்பாள்) இனி வரவே போவது இல்லை என்பதை நினைத்தால் .... என்னால் புதுப்பதிவுகள் ஏதும் கொடுக்கத் தோன்றவே இல்லை .... அது மட்டுமே என் இன்றைய துக்கத்திற்கும், பதிவுலகிலிருந்து நான் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வெளியேறியுள்ளதற்கும் மூல காரணமாகும்.

      // இணைத்திருக்கும்... படங்கள்... ரொம்ப நல்லா இருக்கு....//

      மிக்க மகிழ்ச்சி. நான் பிறகு ஒருநாள் அந்தப் படங்களைத்தேடி, இந்த என் பதிவினில் புதிதாக இணைத்துள்ளதற்கும் அந்த தேவதையின் (அம்பாளின்) தூண்டுகோல் மட்டுமே காரணமாகும்.

      //இப்பவும்....... அந்த " லஷ்மி"....உங்க கூட ஒட்டி... உறவாடிகிட்டு... இருக்காங்களா....//

      இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ”அறுபது வயதானதால் அவளுடன் உன்னால் இனி ஈடுகொடுக்க முடியாது” என்று சொல்லி என்னையும் அவளையும் பிரித்துவிட்டார்கள் படுபாவிகள்.

      எனினும் அவள் அன்று கோடிக்கணக்கில் எனக்கு இன்பம் தந்தவள் என்பதை என்னால் மறுப்பதற்கு இல்லை.

      எனக்கு இன்று பென்ஷன்கூட கிடையாது.

      ஏதோ அவளிடம் அன்று நான் ஒருவித மரியாதையுடனும், பய பக்தியுடனும் நடந்து கொண்டதாலும், என் நேர்மையான + கடுமையான உழைப்பு + கிடைத்த நியாயமான வருமானத்தை திட்டமிட்டு சொல்பமாக செலவழித்து சாமர்த்தியமாக சேமித்து வைத்துக்கொண்டே வந்ததாலும், எதோ கோடிக்கணக்காக அல்லது லக்ஷக்கணக்காக இல்லாது போனாலும், ஆயிரக்கணக்கிலாவது என் பணத்தை எடுத்து இன்றும் செலவழித்து கெளரவமாக வாழ்ந்துவர, இன்றுவரை என்னால் ஏதோ முடிகிறது.

      எல்லாம் கடவுள் செயல் + என் தேவதை (அம்பாள்) அனுக்கிரஹம் மட்டுமே காரணமாகும்.

      //பின்னூட்டங்கள்.... ரிப்ளை பின்னூட்டங்கள்... செம... சுவாரசியம் & செம நகைச்சுவை......//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

      Delete
  82. கோபு ஸார் நீங்க மறுபடியும் பதிவு எழுத ஆரம்பித்தால் எல்லா பாசக்கார குளங்களும் உங்களைத்தேடி வந்துவிடுமே.. "...அம்பாளின்"...... இழப்பு உங்களை பெருமளவில் பாதித்து இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது... நீங்க எழுதுவதை நிறுத்தினால் மட்டும்... போனவர்களை திரும்ப கொண்டு வந்துவிட முடியமா?????? அவர்களுடன் உங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களை ( சொல்லமுடிந்தவைகளை மட்டும்) சொல்லி உங்க மனதை டைவர்ட் பண்ணிக்கலாமே...... உங்க எழுத்தை சுவாசிக்கும் பல ரசிகரகளை ஏமாற்றலாமா?????

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... May 5, 2016 at 9:52 AM

      //கோபு ஸார் நீங்க மறுபடியும் பதிவு எழுத ஆரம்பித்தால் எல்லா பாசக்கார குளங்களும் உங்களைத்தேடி வந்துவிடுமே..//

      என்னைத் தேடி எல்லோரும் வரலாம்தான். எனினும்......

      //"...அம்பாளின்"...... இழப்பு உங்களை பெருமளவில் பாதித்து இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது... நீங்க எழுதுவதை நிறுத்தினால் மட்டும்... போனவர்களை திரும்ப கொண்டு வந்துவிட முடியமா?????? //

      நான் அவர்களை ஓர் தேவதையாக நினைத்திருந்ததால், ஒருவேளை மீண்டும் எனக்கு மட்டுமாவது பின்னூட்டமிட வந்து விடுவார்களோ என நானும் பைத்தியம் போல நினைத்துக்கொண்டேதான், ஏற்கனவே ட்ராஃப்ட் ஆக என்னிடம் தயாராக இருந்த ஜீவி சாரின் நூல் அறிமுகப்பதிவுகளைத் தொடர்ச்சியாக 20 பகுதிகளாக வெளியிட்டுக் கொண்டிருந்தேன், அவர்களின் அந்தத் தாமரைப்படத்துடன். :(

      //அவர்களுடன் உங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களை ( சொல்லமுடிந்தவைகளை மட்டும்) சொல்லி உங்க மனதை டைவர்ட் பண்ணிக்கலாமே......//

      நான் மறையும் வரை அவர்களின் நினைவு என்னைவிட்டு மறையவே மறையாது. இருப்பினும் அதையெல்லாம் தனியாகப் பதிவிடும் எண்ணம் எனக்கு ஏதும் இல்லை.

      நான் ஏற்கனவே என் பதிவுகள் பலவற்றில், அவர்கள் உயிருடன் இருந்தபோதே, அவர்களின் புகழினைப் பாடியுள்ளேன். அதனைப் படித்துவிட்டு, அவர்களும் பின்னூட்டமிட்டுள்ளார்கள். அந்த ஒரு மிகப்பெரிய சந்தோஷமே எனக்குப் போதும் என நினைக்கிறேன்.

      //உங்க எழுத்தை சுவாசிக்கும் பல ரசிகரகளை ஏமாற்றலாமா?????//

      யாரையும் ஏமாற்றனும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் நான் அவர்களுக்காக துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறேன். இந்த துக்கம் எனக்குக் கொஞ்சமாவது குறைய, மேலும் பலநாட்கள் / பல மாதங்கள் ஆகலாம். பிறகு இதுபற்றி யோசிப்போம்.

      Delete
  83. இந்த பதிவை ஒரு அவசரத்தில் படிச்சாச்சு. ஆச்சரியமான ஒத்துமைதான். கமெண்டெல்லாம் பதிவையும் நிதானமாக படிக்க இன்னொருநாள் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. happy August 16, 2016 at 6:16 PM

      //இந்த பதிவை ஒரு அவசரத்தில் படிச்சாச்சு. ஆச்சரியமான ஒத்துமைதான்.//

      ஆம். எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. :)))))

      //கமெண்டெல்லாம் பதிவையும் நிதானமாக படிக்க இன்னொருநாள் வருவேன்.//

      ஆஹா, ஓக்கே .... அந்த நாளும் வந்திடாதோ !

      Delete
  84. கட்டுரையின் தரத்தை உயர்த்துவது, interestingஆகச் செய்வது இயல்பாகக் கொடுத்துள்ள நகைச்சுவை. நான் கீழ்க்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன்.

    1. கடைசியில் பாத்திரத்தில் மிஞ்சிய மாவை ஒட்ட வழித்து சற்றே கனமாக ஊத்தப்பம் போல கெட்டியாக வார்த்து விடுவார்களே

    2. உடம்பு வெயிட் ஏறுமுகமாகவே இருக்கு - அதுக்குக் காரணம் உங்க பெயர் ராசி. சும்மா பாலும் தயிரும் வெண்ணெயுமாச் சாப்பிட்டு வளர்ந்த கோபலனல்லவா உங்கள் பெயரில் ஒளிந்துகொண்டு அவன் வேலையைக் காண்பிக்கிறான். அதுலவேற, இரண்டு பெயர். கோபாலன், கிருஷ்ணன். இரட்டிப்பு வெயிட்டுக்குக் கேட்கவா வேணும். (சும்மா எழுதியுள்ளேன். தவறாக நினைக்காதீர்கள். நானும் அப்படித்தான். தண்ணீரைக் குடித்தால்கூட உடம்பு வெயிட் போடுகிறது)

    3. முதல்படியில் காலை வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். .....எனக்கு பிறந்த இடம் மட்டுமல்லாமல் அதுவே என்னை ஆட்கொண்ட இடமாகவும் ஆகியிருக்கும். - ஒரே வரியில் இரண்டுவிதமாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்.

    4. மறக்காமல் என்னையும் தூக்கிக்கொண்டு

    5. ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் - உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ரொம்பவும் ரசித்தேன்.

    சார்.. அந்தக் காலத்துல, மக்களைச் செல்வங்களாகப் பார்த்தார்கள். பசங்களுக் தானா வளர்ந்ததுகள். (போட்டதைச் சாப்பிட்டு). குடும்ப வேலைகளுக்கோ அல்லது பொருத்தமான தொழிலோ செய்தார்கள். இப்போ, பெற்றோர்களும் Selfishஆ, சோம்பேறியாக ஆகிவிட்டார்கள். பசங்களும் ரொம்ப demandingஆக ஆகிவிட்டார்கள். நான் வளர்ந்தபோதெல்லாம், சனிக்கிழமை மட்டும்தான் பெரியவர்களுக்குப் பலகாரம் (அப்போ விழலுக்கு இரைத்த நீர்போல எங்களுக்கும் கொஞ்சம் உண்டு). இப்போ பசங்க, வேளைக்கு ஒண்ணுன்னு கேட்கறாங்களே.. 50 வயசுலயும் குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரணம். மக்களைச் செல்வமாக 'நினைத்தார்கள். இப்போ ?

    ReplyDelete
    Replies
    1. 'நெல்லைத் தமிழன் October 17, 2016 at 8:14 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கட்டுரையின் தரத்தை உயர்த்துவது, interestingஆகச் செய்வது இயல்பாகக் கொடுத்துள்ள நகைச்சுவை. நான் கீழ்க்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன்.//

      1 to 5 x x x x x

      :) மிக்க மகிழ்ச்சி, ஸார் :)

      தங்களின் பின்னூட்டத்தில் கடைசி பாரா மிகவும் அருமை. உண்மை.

      இப்போ காலம் மிகவும் மாறிப்போய் விட்டது. எல்லோருடைய இன்றைய ஆசைகளும், தேவைகளும் விசித்திரமாக மாறிப்போயும் விட்டன.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  85. என்ன அழகான நினைவலைகள்.. பிறந்த நிகழ்வை இவ்வளவு சுவாரசியத்துடன் ஆவணப்பதிவாக்கி அசத்திவிட்டடீர்கள். பின்னூட்டங்கள் எப்போதும் போல பதிவுக்குக் கூடுதல் பலம். அந்தக் கால வாழ்க்கைமுறையையும் பதிவினூடே நகைச்சுவை ததும்ப சொல்லியுள்ளீர்கள். ரசித்து வாசித்தேன்.

    25000+4+அநேக ஆயிரமாயிரம் நாட்கள் இனிதே தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள் கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. geetha manjari May 23, 2018 at 6:36 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //என்ன அழகான நினைவலைகள்.. பிறந்த நிகழ்வை இவ்வளவு சுவாரசியத்துடன் ஆவணப்பதிவாக்கி அசத்திவிட்டடீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //பின்னூட்டங்கள் எப்போதும் போல பதிவுக்குக் கூடுதல் பலம்.//

      ஆம். பின்னூட்டங்கள் மட்டுமே எப்போதும் நமக்கும், நம் எழுத்துக்களுக்கும் யானை பலமாக அமைந்து விடுகின்றன.

      //அந்தக் கால வாழ்க்கைமுறையையும் பதிவினூடே நகைச்சுவை ததும்ப சொல்லியுள்ளீர்கள். ரசித்து வாசித்தேன்.//

      மிகவும் சந்தோஷம், மேடம். :)))))

      //25000+4+அநேக ஆயிரமாயிரம் நாட்கள் இனிதே தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள் கோபு சார்.//

      இந்தப் பதிவு வெளியிட்டு முழுமையாக ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும்கூட, தங்களின் இன்றைய அன்பான + அபூர்வமான வருகை என்னை ஆச்சர்யப்படுத்தி மகிழ்விக்கின்றது, மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் கோபு

      Delete
  86. WHATS-APP STATUS COMMENT ON 28.12.2018 FROM S.V RAMANI Sir:

    -=-=-=-=-

    மீண்டும் படிக்க புதியதைப் போலவே சுவாரஸ்யம்

    -=-=-=-=-

    இந்தப்பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டுள்ள தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    அன்புடன் VGK

    ReplyDelete
  87. Enrum pasumaiyana ninaivukal.mihuntha varuthangal akkaa maami innum vaalnthirukanum.manathai thetrikollungal

    ReplyDelete
    Replies
    1. அன்புக்குரிய என்  பெரிய அக்கா அம்மாளம் என்கிற சௌ. லக்ஷ்மி கெங்காதரர் பிறந்த நாள் : 06.02.1940

      எங்கள் அனைவரையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்த நாள்: 08.08.2021 

      அவள் படிக்காத மேதை. மிகச் சிறந்த  ஆளுமைமிக்க குடும்ப நிர்வாகி. எப்போதும் எல்லோரிடமும் அன்பு கலந்த கலகலப்பான பேச்சு + சிரித்த முகம். அனுபவ அறிவுமிக்க மிகச் சிறந்த குடும்ப ஆலோசகர்.  அம்பாள் போன்ற தேஜஸ்ஸுடன் கூடிய அழகான முகம். பூர்ணமான நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவள். 

      65 ஆண்டுகள் கணவருடன் இனிய இல்லறம் நடத்தி 6 பிள்ளைகள் + 2 பெண்களைப்  பெற்று,  தற்சமயம் 93 வயது நிறைந்து, கடந்த ஓராண்டாக மட்டும் உடல் நலம் குன்றியுள்ள தன் கணவரை விட்டுப்பிரிய எப்படித்தான் மனம் வந்ததோ ! 

      எதிலும் எல்லோரிடமும் ஆசை பாசம் என்று வாழ்ந்தவள், திடீரென்று  தீர்க்க சுமங்கலியாகப் புறப்பட்டு விட்டாள். என்ன செய்வது? நமக்குப் பிராப்தம் அவ்வளவுதான். 

      82 வயதான அக்காவின் மரணம், 28 வயது அகால மரணம் போல எங்களையெல்லாம் (குறிப்பாக என்னை) உலுக்கி விட்டது.

      ஆச்சி ... தாங்கள் என் இல்லத்திற்கு வந்தபோது எனது அக்காவைப் பார்த்து, பேசி, நமஸ்கரித்தும் உள்ளீர்கள். அதனால் உங்களுக்கு என் வருத்தங்கள் ஓரளவுக்குப் புரியக்கூடும். http://gopu1949.blogspot.com/2014/06/blog-post_3053.html

      மிகவும் வருத்தத்துடன் கோபு       

      Delete
  88. ஆமாம் சார்.மிகுந்த வருத்தங்கள்.அக்கா மாமியின் கணவருக்கு சிரமங்கள் இல்லாத வாழ்நாள் அமைய பிரார்த்திப்போம்

    ReplyDelete