என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 15 ஜூன், 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-8 of 8

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-5 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-6 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-7 க்கான இணைப்பு:நூலாசிரியர் மோகன் ஜி அவர்கள்
http://vanavilmanithan.blogspot.in/

 
 
நூல் மதிப்புரையின் 

நிறைவுப் பகுதி

சிறுகதைகள் பற்றிய மோகன்ஜி யின் ‘என்னுரை’ என்ற முன்னுரை சிந்திக்க வைப்பதாக உள்ளது. அதிலிருந்து சில வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ......

சிறுகதை என்பது இலக்கியத்தின் முக்கிய வகையா? அல்லது 
சிறுகதை, இலக்கியத்தின் ஆறாம் விரலா? 
வடிவக்குறுக்கத்தால்தான் ஒரு படைப்பு சிறுகதை ஆகிறதா?
இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

படைப்பாளியின் மனம் உள்வாங்கிய ஒரு கணத்தின் நிகழ்வை, தன் புனைவின் மூலம் காட்சிப்படுத்து, சிறுகதையாய் வாசகனுக்கு படைத்தளிக்கிறான். அவன் சொன்னதை விடவும் சொல்லாமல் விட்டவை தன் புரிதலுக்கு ஏற்ப சிறுகதையாய் வாசகன் மனதில் எழுதிக்கொள்கிறான். 

ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் வாசகர்கள் மனத்துள் பற்பல சிறுகதைகளாய் எழுதிக்கொள்ளப்படுகிறது என்பதே என் துணிபு. ஆக சிறுகதை நிகழ்வது வாசகன் மனமுற்றத்தில்தான்.

மிகச்சிறந்த சிறுகதையோ, ஒரு வாசகனுக்குள்ளேயே படிக்குந்தோறும் பலவாறாய் உருக்கொள்கிறது. புதிய வாசல்கள் திறக்கின்றன. தேடல் மிக்க வாசகர் ரசனை, எதிலும் எளிதில் திருப்தியுறாமல் அந்த உச்ச படைப்புக்காய் தேடியபடியே இருக்கிறது. அவனுக்கான அந்த சிறுகதை இனிமேல்தான் எழுதப்பட வேண்டும்.

இன்றைய வாசகனுக்கு நேரமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் கொறிப்பும் நேரத்தைத் தின்றபின், வாசிப்புக்கு மிச்சம் ஏது? வரும் நாட்களில் தொழில்நுட்ப தாக்கம் இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடக் கூடும். இன்று இயல், இசை, நாடகம் என்பது சினிமாவாகி, குறும்படமாகி,  யூடியூபின் இரு நிமிடச் சலனமாய் மாறியபடி .... எல்லாமும் மாற்றத்துக்கு உட்பட்டவையே என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இலக்கிய வாசிப்பின் அதிகபக்ஷ இருப்பாய் சிறுகதை வடிவம் உருப்பெறுமோ? (இன்றைய நாவலின் இடம் போல) காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எப்படியோ ... சிறுகதை தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். 

சிறுகதையை ‘ஒரு பக்கக்கதை’ என்று மூளி செய்வோமோ? நாலுவரி ’நச்’ கதை என்று நறுக்கி வைப்போமோ? நான் அறியேன்...

ஐந்து நாள் கிரிக்கெட் அரை நாளில் ‘காட்டடி மாட்டடி’ என்று மாறியதைப்போல ரசனைகள் மாறலாம். அதிலும்கூட சிறந்த படைப்புகள் சாத்தியமாகலாம். 
19) ஒரு ஊதாப்பூ நிறம் மாறுகிறது

அதீதம் இணைய இதழின் 2011 தீபாவளிச் சிறப்பிதழில் வெளியான கதை இது.

அண்ணாச்சியின் டீக்கடையில் கூடும் நான்கு ஐந்து சிநேகிதர்கள். அவர்களில் ஒருத்தனைத்தவிர எல்லோருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உண்டு. கையில் சில்லறை இருந்தால் சேர்ந்து சினிமாவுக்கும் செல்வார்கள். 

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போக்கு. ஒவ்வொருவரின் குடும்ப சூழலும் ஒவ்வொரு விதம். திடீரென்று ஒருநாள் ஒருவனின் பருவ வயது தங்கச்சியைக் காணோம். நண்பர்களிலும் ஒருசிலரைக்காணோம். 

பெண்ணைப் பெற்றவர்கள் வயிறு பற்றி எரிகிறது. பாசமுள்ள அண்ணனின் இரத்தம் கொதிக்கிறது. அந்தப்பெண் என்ன ஆனாள்? எங்கே போனாள்? 

சுவாரஸ்யமான இந்தக் கதைத் தொகுப்பினில் அந்த முடிவினைத் தெரிந்துகொள்ளுங்கள்.


20) காமச்சேறு

பெண்ணாசை + காமம் என்ற சேற்றினில் சிக்கிய ஒருவனை எப்படி அவனின் சொந்த சகோதரியே திருந்தச்செய்தாள் என்பதையும், பிறகு எப்படி அவனை இறைவன் தடுத்தாட்கொண்டான் என்பதையும் தனக்கே உரிய தனி நடையினில் அழகாகச் சொல்லியிருக்கிறார், இந்த நூலாசிரியர்.


21) என்னைக் காட்டிக்கொடுத்து விட்டாயே??

இன்று வங்கிகளில் திருட எத்தனித்தால் அடிக்கிறதே அபாய மணி [Burglar Alarm] இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்? என்பதைப்பற்றியதோர் அருமையான ஆராய்ச்சிக் கதை. 

மிகவும் நூதனமான முறையில் ஒரு திருட்டு ஒரு வீட்டினில் நடக்கிறது. மெயின் திருடர்களும், திருட்டுக்கூட்டத் தலைவனும் தப்பினார்களா அல்லது பிடிபட்டார்களா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக துப்பறியும் கதை போலச் சொல்லப்பட்டுள்ளது. 

கதையின் முடிவினில், திருடர்களை காட்டிக்கொடுத்துவிட்ட கூட்டாளிகளில் அப்ரூவரான ஒருவன் சொல்லும் விஷயம், கொள்ளைக்கூட்டத் தலைவனாலேயே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதுதான் இதிலுள்ள சுவாரஸ்யமே. 

அவன் சொல்வதில் ஒரு தர்ம, நியாயமும் இருப்பதாக வாசிக்கும் நமக்கும் தெரிவதால்,  இந்தக் கதை மிகவும் அருமைதான். 

’பொன் வீதி’
நூல் மதிப்புரை இத்துடன் 
இனிதே நிறைவுற்றது
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன்
இந்த நூல் ஆசிரியர் மோகன்ஜி 
2016-ம் ஆண்டு மும்பையில்பதிவர்கள்: 
மோகன்ஜி / அப்பாதுரை / சுந்தர்ஜிதன்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூலின் 
ஒரு பிரதியினை அன்புடன் அடியேனுக்கு 
அன்பளிப்பாக அனுப்பி வைத்து
நான் அதனைப் படித்து நூல் மதிப்புரை செய்ய
வாய்ப்பளித்துள்ள இனிய நண்பர் 
திரு. மோகன்ஜி அவர்களுக்கு 
என் மனமார்ந்த இனிய அன்பு 
நன்றிகளைக் கூறிக்கொண்டு
விடைபெறுகிறேன்.இந்த நூலினை வாங்கி முழுமையாக 
வாசிக்க விரும்புவோர்
நூல் ஆசிரியர் அவர்களை மின்னஞ்சல் மூலம் 
நேரிடையாகத் தொடர்பு கொள்ளலாம்
இந்தத் தொடரின் 
பகுதி-7 இல் பின்னூட்டமிடுவதில் 
முதலிடம் பெற்றுள்ள 
திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு 
 பூங்கொத்து  + மேங்கோ ஷேக்  இதோ:

 


முதல் வருகைக்கும், பெறவிருக்கும் பரிசுகளுக்கும் வாழ்த்துகள் மனோ மேடம். அடுக்கடுக்காய் புத்தகங்களையும், மலை மேல் ஒரு வீட்டையும் பரிசாக பரிந்துரை செய்கிறேன்.

[தங்களின் மேற்படி பரிந்துரை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது]

 
இந்தத்தொடரின்  
பகுதி-1 முதல் பகுதி-7 வரை
அதிரடியாக
மிக அதிகமான 
எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் இட்டு 
சிறப்பித்துள்ள நம் 
‘அதிரா’வுக்கு 
மேலும் சில பரிசுகள்
அளித்து கெளரவிக்கப்படுகிறது.1) மேலும் மூன்று நெக்லஸ்


அதனால கோபு அண்ணன்.. 
நீங்க எனக்கு விதம் விதமா டயமண்ட் நெக்லெஸ் ல 
ஒரு டஜனோ கூடவோ குறையவோ தாங்கோ:).. அது போதும்.
(இத்துடன் 3+3+4+3=13 நெக்லஸ் ஆச்சோ)


2) கீழ்க்கண்ட ஆறு மாடல்களில் 
வெள்ளி கொலுசுகள்
இதுவரை தான் பெற்றுள்ள 
ஏராளமான பரிசுகளையெல்லாம்
கணக்குப்போட்டுப் பார்க்கும் பூனையார் !

பூனையாருக்குத் தங்கத்தில் 
கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. **^மிகவும் அகலமான இந்த ஒட்டியாணமே^
நம் அதிராவின் இடுப்புக்குப் பத்துமோ பத்தாதோ!** - கோபு

நீங்க அதைப்பற்றிக் கவலைப்படாதீங்கோ:) நான் இதுக்கெல்லாம் கூச்சப்பட மாட்டேன்ன்:) பத்தாட்டி இன்னும் ஒரு 5 பவுன் எக்ஸ்ட்ராவாக் கேட்பேன், தரமாட்டேன் எனச் சொல்லவா போறீங்க:).. எப்படியாவது என் லாக்கர் முட்டினால் சரிதான்:). -- அதிரா


அன்புள்ள
......அதிஸய
.........அதிரஸ
............அல்டாப்
...............அழும்பு
..................அழுத்த
.....................அயோக்ய
........................அந்தர்பல்டி
...........................அ தி ர டி
..............................அ தி ரா ! 

நீங்க எக்ஸ்ட்ராவாக என்னிடம் கேட்டதோ
வெறும் 5 பவுன் அதாவது 5*8=40 கிராம் மட்டுமே !

இந்தாங்கோ 40 கிலோ தங்கம்
*GOLD BISCUITS and GOLD BAR*
சாப்பிடுங்கோ !

சந்தோஷமா இருங்கோ!!

இனிய நல்வாழ்த்துகள் அதிரா!!!

இந்தத்தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

அனைத்துப் பகுதிகளுக்கும் 
அன்புடன் வருகை தந்து
பின்னூட்டம் அளித்துள்ளவர்கள் பற்றிய 
புள்ளி விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]