என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 3 ஜூன், 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-2 of 8


இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:


நூலாசிரியர் திரு. மோகன் ஜி அவர்கள்
http://vanavilmanithan.blogspot.in/



1) பொன் வீதி



ஏழைப்பெண்ணொருத்தியின் மிகவும் அழகான, சின்னதொரு காதல் கதை. காதல் முழுவதுமாக நிறைவேறி கடைசியில் கல்யாணத்தில் முடியாமல் கதை முடிந்துவிட்ட போதிலும் .... காதல் உணர்வுகளும், உரையாடல்களும், சின்னச்சின்ன சேஷ்டைகளும், சுகானுபாவங்களாக என்னை எங்கேயோ என் இளமை காலத்திற்கே இட்டுச் சென்றுவிட்டது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள் மட்டுமே. 

அவன் திடீரென்று தன்னிடம்கூட சொல்லாமல் கொள்ளாமல் எங்குபோனானோ என்ற ஏக்கத்தில் அவனின் அக்காவிடமும், மாமாவிடமும் அவள் அவனைப்பற்றி, தூண்டித்துருவி கேட்பது .... அவர்களிடம் சரியான பதில் வராததால் கவலைப்பட்டு அவன் படிக்கும் பள்ளிக்கே இவள் இன்லண்ட் லெட்டர் எழுதிப் போட்டது .... இவற்றால் ஏற்பட்ட சில பிரச்சனைகள் என .... எதைச் சொல்வது, எதை விடுவது?

oooooOooooo

மாவுத்தூக்கின் மூடியை மெதுவாக மூடினாள். காசை வாங்கிக்கொண்டு தூக்கைக் கொடுத்தாள். அவள் விரலில் ஒட்டியிருந்த மாவை குறும்புப்பார்வையுடன் சிவாவின் புறங்கையில் பூசினாள்.

“வரட்டுமா”

“சரி, சட்டைக்கையை மடிச்சு விட்டுக்க வாண்டாம். ரெளடி மாதிரி இருக்கு”

“நான் ரெளடிதான்”

“போறும் ... ஒரு கடுதாசிக்கே ஜுரம் வந்துடுச்சு உனக்கு. ரெளடியாம் ரெளடி!” 

oooooOooooo

மிக எளிமையான எழுத்து நடையும், அந்தப்பெண்ணின் ஏக்கமான சில உணர்வுகளை கோர்வையாக நேரேட் செய்துள்ள விதமும் என்னை மிகவும் கவர்ந்தன. 

சபாஷ் மோகன் ஜி !



2) நாட்டி கார்னர்



இந்தக்கதை சமீபத்தில் அவரின் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டதுதான். அங்கேயே உங்களில் பலரும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். http://vanavilmanithan.blogspot.in/2017/03/blog-post_28.html

-=-=-=-=-

கதையில் வரும் ஒருசில உரையாடல்கள்: 

இவங்க செல்லம் இருக்கிற மிதப்புலதான் குட்டிபிசாசு ஆடுறாஇந்த ஒண்ணை 
பார்த்துக்கவே எனக்கு விட்டுப்போகுதுஒரு டீச்சராகமுப்பது நாப்பது 
பிள்ளைகளை எப்படித்தான் மேய்க்கறியோ?”
ஜெகாவின் சிரிப்பில் பெருமிதம் இருந்தது.
அது ஈஸி மதிஸ்கூல்னா புள்ளைங்களுக்கு ஒரு பயம் இருக்கும்
இப்போ புது டெக்னிக் ஒண்ணு 
சேர்த்திருக்கோம்சொல்ற பேச்சு கேக்காம விஷமம் செய்யிற 
புள்ளைங்களை தனியா ஒருமூலையில் நிக்கவைச்சிடுவோம்
அந்தமூலைக்கு ‘நாட்டிகார்னர்னு பேரு
அடி,திட்டு எதுவும் கிடையாது
அப்படி நிக்கறதுங்களிடம் மத்த பிள்ளைங்க பேசக்கூடாது
பார்க்கக்கூடாதுநாட்டி கார்னர்ல நிக்கிறது 
அவமானம்னுபிள்ளைகள் செய்யிற விஷமம் ரொம்ப குறைஞ்சு போச்சு
இது நல்லா இருக்கே!” மதிக்கு நாட்டிகார்னர் வைத்தியம் ரொம்பவே 
பிடித்து விட்டது

மேலும் மேலும் ஜெகாவிடம் அதைப் பற்றியே கேட்டபடி இருந்தாள்.
இதுக்குவலிக்காம இரண்டு அடியை முதுகில் போட்டுவிடலாமே
குழந்தைகள் கூனிக்குறுகிப் போகாதோ?” 
கண்ணம்மா எதிர்வாதம் வைத்தாள்அவள் கவலையெல்லாம், 
மதி நாட்டிகார்னரில் அம்புலுவை 
நிற்க வைத்துவிடப்போகிறாளே என்பது தான்
அம்புலு வேறு ரொம்ப ரோஷக்காரி ஆயிற்றே?!
அப்படி இல்லை ஆன்ட்டிசின்னதாக ஒரு சோசியல் பாய்காட் 
அதுங்களுக்கு ஒரு தயக்கத்தைத் தரும்.
பண்ணக்கூடாதுங்கறதை செய்ய யோசிப்பாங்க
இதுல ஒரு சைக்காலஜி இருக்கு
’என்ன டீச்சர் இவள்சைக்காலஜி இருக்காமே
நாசமாப் போன சைக்காலஜி?! குழந்தைகளை அதுங்களுக்கு
என்று விளிப்பவள் என்ன கற்றுத் தரப் போகிறாள்
நல்ல காலமாக என் அம்புலுஇந்த பிடாரி ஸ்கூலில் 
படிக்கவில்லை’ என்று கண்ணம்மா தனக்குள் பொருமினாள்.
-=-=-=-=-

இந்த முழுக்கதையைவிட இதில் இவர் எழுதியுள்ள கடைசி பத்தியான (Paragraph) இதனை நான் மிகவும் ரஸித்தேன். 

"நாட்டிகார்னர் சதுரத்தை மூடியபடி அதன்மேலாக அந்த மேஜை 
நகர்ந்ததுமேஜை மீன்தொட்டியை மீண்டும் சுமந்ததுபுதுஇடம் 
கண்ட மீன்கள்நாட்டிகார்னருக்குத் தள்ளப்பட்டது தெரியாமல்
சந்தோஷமாய் நீந்தித் திளைத்தன"






3) பச்ச மொழகா




உணவு மெஸ் வைத்துள்ள ஓர் ஏழை உழைப்பாளி  பற்றிய கண்களைக் கலங்க வைக்கும் கதை இது. ஏழ்மையுடன் கோபமும் சேரும்போது ஒரு மனிதனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரிவது இல்லை. 

கட்டிய மனைவியும் ஓர் உயிர் தானே .... அவளுக்கும் தேகத்திலும் மனதிலும் வலி இருக்கத்தானே இருக்கும் என்பதே மறந்துபோய் விடுகிறது அவனுக்கு. 

உழைப்பு மட்டும் இருந்தால் போதுமா? கொஞ்சமாவது, பொறுமையும் அதிர்ஷ்டமும் கூடி வரவேண்டுமே. 

உணர்வு பூர்வமான உன்னதமான எழுத்துக்கள் ..... இருப்பினும் சோகமான முடிவு படிக்கும் நம்மையும் கலங்கத்தான் வைக்கிறது. 

இந்தக்கதைக்கு நான் ஏற்கனவே, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (28.03.2011) அவரின் பதிவினில் எழுதியுள்ளதோர் பின்னூட்டத்தை இந்த நூலின் பத்தாம் பக்கத்தில் அப்படியே எடுத்து என் பெயருடன் ’ஹை-லைட்’ செய்து சிறப்பித்து எழுதியுள்ளார் இந்த நூலாசிரியர் மோகன்ஜி.


வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…  
மிகவும் அருமையானதொரு கதை. வெகு அழகாகவே கொண்டு சென்றுள்ளீர்கள். கதையில் வரும் ராஜாமணி என்றும் மறக்க முடியாததோர் கதாபாத்திரமாக எப்போதும் வெற்றிலை பாக்குப்புகையிலைக் குதப்பிக்கொண்டு நம் கண்முன் நிற்பவராக காட்சியளிக்க வைத்து விட்டீர்கள்.









//ரெண்டு நாளாத்தான் போட்டகாசு கையைக் கடிக்காம எடுக்குறேன் சார்!’ ராஜாமணியின் குரல் தழுதழுத்து கண்கள் குளம் கட்டின.//



படித்த என் கண்களே குளம் கட்டின. திறமைக்கும் வறுமைக்கும் எப்போதுமே இதுபோலப் போட்டி தான்.



பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.


அன்புடன் vgk




கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களுடன் 
நூலாசிரியர் மோகன்ஜி அவர்கள்



திரு. இறையன்பு I.A.S., அவர்களின் முதல் கவிதை நூலான 
‘பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்’ 
வெளியீட்டு விழா கடலூரில் 1993-இல் நடைபெற்றபோது 
எடுக்கப்பட்ட படம் இது.

சிறப்புரையாற்றுபவர்: கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள்.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரபாகர ராவ் அவர்களும்
திரு. இறையன்பு I.A.S., அவர்களும் அருகருகே அமர்ந்துள்ளனர்.

’கருப்புச் சட்டைக்காரர் காவலுக்குக் கெட்டிக்காரர்’ 
என்று 'பூட்டு'க்கான விடுகதையாக அந்தக்காலத்தில் சொல்வதுண்டு.
இங்கு இந்தப்படத்தில் கருப்புச்சட்டையுடன் உள்ளவர்: மோகன் ஜி


தொடரும்




 






இந்தத் தொடர் பதிவின், முதல் பகுதிக்கு, முதல் வருகை தந்து, முதல் பின்னூட்டம் அளித்துள்ள எங்கட ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ அதிரடி அதிராவுக்கு, அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டுள்ளபடி  http://gopu1949.blogspot.in/2017/06/1-of-8.html இரு ஜோடி வைர வளையல்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. அணிந்து மகிழும் அட்டகாச, அதிரஸ, அல்டி, அழும்புக்கார அதிராவுக்கு நம் அன்பான நல்வாழ்த்துகள். 



     



இரண்டாம் இடத்தினைப்பிடித்துள்ள, ’கோல்ட் ஃபிஷ்’ அஞ்சுவுக்கு அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டுள்ளபடி http://gopu1949.blogspot.in/2017/06/1-of-8.html சூடான சுவையான நேந்திரங்காய் சிப்ஸ் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சிப்ஸ் சுவைத்து மகிழப்போகும் அஞ்சுவுக்கு நம் அன்பான நல்வாழ்த்துகள்.

 

இருவருக்கும் பொதுவாக இங்கு என்னால்
’அல்வா’ 
கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா  :)


 

  

 

 

ஆஹா ! சரியான போட்டி !




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

100 கருத்துகள்:

  1. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவு தினத்தில் திரு. மோகன்ஜி அவர்களுடான புகைப்படம் மனதை கனக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி!அன்பு பாராட்டிய கவிக்கோவின் மரணம் மனதை மிகவும் துக்கிக்க வைக்கிறது. நேற்று என் முகநூலில் எழுதிய அஞ்சலியைப் பகிர்கிறேன்.

      கவிக்கோ அப்துல் ரஹ்மான்- ஒரு அஞ்சலி
      என் பிரிய கவிஞனே!
      நீயும் ஒருநாள் பிரிவாய் என்று
      எனக்கேன் தோன்றவேயில்லை??
      என்னை மெல்லத் திடமாக்கிக் கொண்டிருப்பேனே?
      இப்படியா இந்தநாள் விடியும்?
      உன் கவிமண்டலத்தின் 'பால்வீதி'யில்
      கைப்பிடித்து என்னை அழைத்துச் சென்றாய்.
      என் 'ஆலாபனை'யையும் சற்றே மாற்றி வைத்தாய் ஆசானே!
      இருபத்தைந்து வருடங்களுக்குமுன்,
      ஒருநாள் உன்னோடு இருக்க வாய்த்தது.
      கடலூரின் கடற்கரையும் நம்முடன் தனித்திருந்தது,
      கஜல் ரசிக்கும் முறைமையையும்
      ஹைக்கூவின் ஞானத் தெறிப்பையும்
      காதாறக் கேட்டு ஆர்ப்பரித்தது அலைகடல் .
      அருகிலே அமர்ந்து நீ புகைபிடித்த தருணம்,
      அகிற்புகை சூழ்வதாய் உணர்ந்தேன் ஆசானே!
      அன்றென் இல்லத்தில்,
      கவிதையில் யதார்த்தம் பற்றி பேசியபடி உண்டோம்.
      'இந்த கணத்து யதார்த்தம்
      இந்தத் தெளிவான ரசம் மட்டுமே' என்றாய்.
      உள்ளங்கையில் வாங்கிப் பருகி,
      என் மனைவிக்கு மகுடம் சூட்டினாய்.
      இரண்டாண்டுகளுக்கு முன்னர்
      புத்தகவிழாவில் சந்தித்தபோது அணைத்துக் கொண்டாய்.
      அரங்கத்தை என் கரம் பற்றிக் கடந்தாய்.
      'இன்னமும் சபரிமலை செல்கிறாயா?' என்று கேட்டாய்.
      இல்லத்துக்கு அழைத்தாய்.
      கவிதை நிறைந்த உன் மனத்தின் ஓர் ஓரத்தில் நானும் இருந்தேன்.
      அது போதும் எனக்கு.
      நீ செப்பனிட்ட என் கவிதா ரசனை என்னுடனே இருக்கிறது.
      அது போதும் எனக்கு.
      அலமாரியில் கொலுவிருக்கிறது உன் அமர படைப்புகள்.
      அது போதும் எனக்கு.
      போய்வா கவிராஜனே!
      நீ துய்த்த தமிழை நானும் துய்க்கிறேன்.
      அது போதும் எனக்கு.

      நீக்கு
    2. KILLERGEE Devakottai June 3, 2017 at 12:13 AM

      வாங்கோ, வணக்கம்.

      கனத்த மனத்துடன், இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்.

      நம் எல்லோர் மனமும் கனத்துத்தான் போய் விட்டது .... இந்த ஒரு துயரச் செய்தியினை இன்று கேட்க நேர்ந்து விட்டதால்.

      இந்தப்பதிவினை நான் Draft ஆக்கி Compose செய்துள்ள போது உயிருடன் இருந்துள்ளவர், இதை வெளியிடும் போது இல்லை. ’இன்று இருப்பார் நாளை இல்லை’ என்ற இதுதான் உலக யதார்த்தமாகவும் உள்ளது. என்ன செய்வது? :(

      நீக்கு
  2. இன்று இங்கின மீ த 1ஸ்ட் இல்லை.. ஆனா கில்லர்ஜி என்னமோ சொல்றாரே.. நேக்குப் பயம்மாக்கிடக்கூ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ இந்த எங்கட அஞ்சுவால என் நிலைமை கவலைக்கிடம்ம்ம்.. கர்ர்:) அஞ்சுவைப் பார்த்து நானும் கீழ இருந்து மேலெ போகலாம் என பூஸ் ஐயும் பிஸ் ஐயும் மட்டும் பார்த்திட்டு கொமெண்ட் போட வந்தேன்ன்.. அதனால கில்லர்ஜி என்ன சொல்லியிருக்கிறார் என்றே புரியவில்லை... இப்போதான் தெளிவானேன்ன்..

      ஓ உண்மைதான்... அவர் மறந்த நாளில் அவருடனான படம்.. மனதை கனக்க வைப்பதோடு, மோகன் ஜி யை நினைத்துப் பெருமைப்படவும் வைக்கிறது.

      நீக்கு
    2. asha bhosle athira June 3, 2017 at 1:02 AM

      //இன்று இங்கின மீ த 1ஸ்ட் இல்லை.. ஆனா கில்லர்ஜி என்னமோ சொல்றாரே.. நேக்குப் பயம்மாக்கிடக்கூ..//

      அவர் மேலே சொல்லியுள்ளது உண்மைதான்.

      கவிக்கோ அப்துல் ரஹ்மான் பிறந்த நாள்: 09.11.1937

      பூர்வீகம் + பிறந்த ஊர்: மதுரை

      முனைவர் பட்டம் பெற்றவர். 1999-இல் இவரின் ‘ஆலாபனை’ என்ற கவிதைத்தொகுப்பு நூலுக்கு ‘சாகித்ய அகாதமி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

      நேற்று 02.06.2017 அதிகாலை சென்னையில் பனையூர் என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில், தனது 80-வது வயதில், இறைவனடி சேர்ந்துள்ளார். இவரின் இறுதிச்சடங்குகள் நாளை 04.06.2017 ஞாயிறு, சென்னையில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

      அவரை நானும் எங்கள் BHEL மனமகிழ் மன்றத்தில் நடந்ததோர் இலக்கிய விழா மேடையில் நேரில் சந்தித்துள்ளேன். மிகச் சிறப்பானதோர் கவிஞரும் இலக்கியவாதியுமான இவரின் மறைவு எனக்கும் வருத்தமளிப்பதாகவே உள்ளது. :(

      நீக்கு
    3. கவிக்கோவின் மறைவு மிக வருத்தமளிக்கிறது. அபூர்வமான கவிஞர் அவர். அவரின் பவழ விழா சமயத்தில் அவர் குறித்து 'வானவில் மனிதனில்' நான் எழுதிய பதிவின் சுட்டியை கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.
      https://vanavilmanithan.blogspot.in/2015/10/blog-post_26.html?m=0

      நீக்கு
    4. கவிக்கோ அவர்கள் ‘திருக்குறள்’ என்ற தலைப்பினில் எழுதியுள்ள ஒரேயொரு வார்த்தையுடன் கூடிய ’குட்டியூண்டு கவிதை’யைத் தங்கள் மூலம் நேற்று கேள்விப்பட்டு நான் மகிழ்ந்தேன்.

      இன்னொரு கவிதையான .....

      பாடப் புத்தகங்களே !
      குழந்தைகளை
      கிழித்து விடாதீர்கள் !!

      என்பதன் மூலம் மாற்றி சிந்திப்பதே நல்ல கவிதையின் மகத்துவம் என்பதை நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளார். :)

      நீக்கு
    5. https://vanavilmanithan.blogspot.in/2015/10/blog-post_26.html?m=0

      மிக்க நன்றி போய்ப் படிக்கிறேன்.

      நீக்கு
  3. //பகுதி-2 of 8//

    ஓ மை கடவுளே!!!! அப்போ இன்னும் 6 இருக்கோ?:).. என் இப்படியான றியாக்‌ஷன் பார்த்து மோகன் ஜி கோபிக்கப்போறாரே...

    இல்லை அவரின் கதைகள் மிகவும் ரசித்துப் படிக்கும்படியாகவே இருக்கு... அதனால எத்தனை தொடரெனினும் மீயும் முடிஞ்சவரை டொரர்ந்து வந்து பரிசைத்தட்டிச் செல்வேன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதிரா! நீங்கள் உற்சாகமான பெண்ணம்மா.! உங்களை யார் கோபிப்பார்கள்?!

      தொடருங்கள். வை.கோ.சார் உங்களுக்குத் தான் பரிசுகளை அள்ளியள்ளித் தருகிறாரே? தொடருங்கள்.

      நீக்கு
    2. asha bhosle athira June 3, 2017 at 1:36 AM

      //அதனால எத்தனை தொடரெனினும் மீயும் முடிஞ்சவரை டொரர்ந்து வந்து பரிசைத்தட்டிச் செல்வேன்ன்:)..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி அதிரா.

      டொரர்ந்து :) வாருங்கோ, ப்ளீஸ்.

      நீங்கள் வந்தால் மட்டுமே இந்த பின்னூட்டப்பகுதி ஒரே கும்மியும் கோலாட்டமுமாக, ’ஜே-ஜே’ன்னு இருப்பதாக, நாட்டில் உள்ள விஷயாதிகளும், அறிவாளிகளும் தங்களுக்குள் பேசிக்கொள்ளுகிறார்கள். :)

      நீக்கு
    3. //மோகன்ஜிJune 3, 2017 at 8:46 AM
      ஆதிரா! நீங்கள் உற்சாகமான பெண்ணம்மா.! உங்களை யார் கோபிப்பார்கள்?!//

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      ///நீங்கள் வந்தால் மட்டுமே இந்த பின்னூட்டப்பகுதி ஒரே கும்மியும் கோலாட்டமுமாக, ’ஜே-ஜே’ன்னு இருப்பதாக, நாட்டில் உள்ள ...........அறிவாளிகளும் தங்களுக்குள் பேசிக்கொள்ளுகிறார்கள். :)..//

      ஹாஹ்ஹாஆஅ ஹா ஹா நன்றி.

      //விஷயாதிகளும், ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு உங்களை நீங்களே திட்டுறீங்க கோபு அண்ணன்:) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிபி ஏறிடும், ஏறினால் பின் என் அடுத்த பதிவுக்கு வராமல் விட்டிடப்போறீங்கோஓஓ ஹா ஹா ஹா:)

      நீக்கு
    4. asha bhosle athira June 4, 2017 at 12:36 AM

      **விஷயாதிகளும்,**
      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு உங்களை நீங்களே திட்டுறீங்க கோபு அண்ணன்:) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிபி ஏறிடும், ஏறினால் பின் என் அடுத்த பதிவுக்கு வராமல் விட்டிடப்போறீங்கோஓஓ ஹா ஹா ஹா:) //

      ’விஷயாதிகளும்’ என்றால் வாயில் விஷமுள்ளவர்களும், தேகத்தில் வியாதியுள்ளவர்களும் என்று அர்த்தம் இல்லை.

      விஷயம் அறிந்த விபரமானவர்களும், புத்திசாலிகளும், அறிவாளிகளும், சுயகாரியப் புலிகளும் என்று அர்த்தமாக்கும்.

      அதனால் அது என்னைப்பற்றி நானே சொன்னது அல்ல. நான் என்றும் எப்போதும் மிகச் சாதாரணமானவன் மட்டுமே. ஏழை எளிய அந்தணன் மட்டுமேவாக்கும்.

      மிகவும் ’விஷயாதி’யான உங்களுக்கு ஏனோ இது புரியாதது போல நீங்கள் நடிப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நீக்கு
  4. அந்த அடுப்பூதும் படம், ஒரிஜினல் பெயிண்டிங்காமே.. என்ன சூப்பராக இருக்கு.

    நாட்டி கோனர்///
    எனச்ச்சொல்லிக்கொண்டு.. மீன் படம் போட்டிருப்பது மிகவும் பொருத்தமாகவே இருக்குது:).. நான் அஞ்சுவைச் சொல்லல்ல.. பிறகு தேவையில்லாமல் என்னோடு சண்டைக்கு வருவா:).. சொல்லி வையுங்கோ கோபு அண்ணன்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 3, 2017 at 2:08 AM

      //அந்த அடுப்பூதும் படம், ஒரிஜினல் பெயிண்டிங்காமே.. என்ன சூப்பராக இருக்கு.//

      இந்தப்பெண்ணைப் பார்த்து, அவளின் ஒரிஜினல் அழகைப் பார்த்து, ”என்ன சூப்பராக இருக்கு”ன்னு, மேக்-அப் ராணி அதிராவே சொல்லும் போது, இவள் ஒருவேளை நம் அதிரடி அதிராவைவிட நல்ல இயற்கை அழகாகவே இருப்பாளோ என எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகமே வந்துவிட்டது ...... ஏனென்றால் நான் அதிராவை ஸ்வீட் சிக்ஸ்டீன் வயதில் பார்த்தது இல்லை அல்லவா !

      //நாட்டி கோனர்//

      என்னது ...... நாட்டி கோனாரா?

      ஓஹோ..... NAUGHTY CORNER என்பதன் தூய தமிழாக்கமோ?

      உங்களுடைய தூய தமிழ்ச் சொற்களையெல்லாம் புரிந்துகொள்ள நானும் ஒரு ‘கோனார் நோட்ஸ்’ தயாரித்து என்னிடம் வைத்துக்கொண்டு வருகிறேன்.

      //நாட்டி கோனர் எனச்சொல்லிக்கொண்டு.. மீன் படம் போட்டிருப்பது மிகவும் பொருத்தமாகவே இருக்குது:).. நான் அஞ்சுவைச் சொல்லல்ல..//

      சேச்சே .... நீங்க உங்க டியரெஸ்ட் ஃப்ரண்டைப்போய்ச் சொல்லுவீங்களா, என்ன?

      //பிறகு தேவையில்லாமல் என்னோடு சண்டைக்கு வருவா:)..//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! உங்கள் இருவரின் சண்டையில் எங்கள் மண்டையெல்லாம் உடையுது, தினமும். :)

      //சொல்லி வையுங்கோ கோபு அண்ணன்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:) //

      பொதுவாகப் பொண்ணுங்க எல்லோருமே மிகவும் நல்லவங்க மட்டுமே என்பது கோபு அண்ணனின் தனிப்பட்ட கருத்து.

      அதுவும் அதிராவும் அஞ்சுவும் பெண்கள் மட்டுமல்ல ..... கோபு அண்ணனின் கண்களாக்கும்.

      இதில் யாரு லெஃப்டு, யாரு ரைட் ன்னு கேட்காதீங்கோ.

      அப்புறம் நெற்றிக்கண்ணைத் திறக்கும்படியாக ஆகிவிடும். :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நீக்கு
    2. ///ஏனென்றால் நான் அதிராவை ஸ்வீட் சிக்ஸ்டீன் வயதில் பார்த்தது இல்லை அல்லவா ! ///

      விரைவில் பார்க்கத்தானே போறீங்க:)..

      ஹா ஹா ஹா அது என் பாஷை அல்ல.. என் பாஷையில் சொல்வதாயின் “நோட்டி கோனர்”.. இது நெல்லைத்தமிழன் சொல்லியிருக்கிறார் இப்பூடிப் பேசச்சொல்லி:) அதனால்தான் ஸ்டைலாப் பேசினேனாக்கும்:)...

      அதிரா எப்பூடித் தமிழ் பேசினாலும் விரட்டி விரட்டி அடிக்கினமே கர்:)

      நீக்கு
    3. asha bhosle athira June 4, 2017 at 12:39 AM

      //ஹா ஹா ஹா அது என் பாஷை அல்ல.. என் பாஷையில் சொல்வதாயின் “நோட்டி கோனர்”.. இது நெல்லைத்தமிழன் சொல்லியிருக்கிறார் இப்பூடிப் பேசச்சொல்லி:) அதனால்தான் ஸ்டைலாப் பேசினேனாக்கும்:)...//

      ஆஹா ..... ஸ்வாமீ .... என் அருமை நண்பர் நெல்லைத் தமிழரே !

      எங்கு போனீர்? என்ன ஆனீர்? உடனே ’இந்தப் பஞ்சாயத்துக்கு’ ஓடிவாரும்.

      அன்று எனக்கு மட்டுமே பரிச்சயமான உமக்கு, ஒருசில பதிவர்களைப் பற்றியெல்லாம் சொல்லி, அறிமுகப்படுத்தியிருந்தேன். அது எவ்வளவு பெரிய தப்பூஊஊஊஊ என எனக்கு இப்போதுதான் புரிய வருகிறது. ஏறி வந்த ஏணியை இப்படி எட்டி உதைத்து விட்டீரே .... அது நியாயமா? தர்மமா? சொல்லுங்கோ .... ஸ்வாமீ.

      யார் யாரோ உம்மை இன்று அவர்களின் பதிவினில் கொண்டாடி வருகிறார்கள்.

      அதிலும் இந்த உதைபட்டுக்கீழே கிடக்கும் ஏணிக்கு மிகவும் மகிழ்ச்சியே. :)))))

      அன்புடன் கோபு

      நீக்கு
  5. //பச்ச மொழகா/// ஹையோ ஹையோ ஹையோ அது மொ அல்ல மி ஆக்கும்:) ஹா ஹா ஹா:)..

    //வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது… /
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சைக்கிள் ஹப்ல பிளேன் ஓட்டிடுறீங்க:).. இப்போ புக்குக்கு ரிவியூவா?:) இல்ல உங்கட கொமெண்ட்க்கு ரிவியூவா?:) எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈ:)

    //கருப்புச் சட்டைக்காரர் காவலுக்குக் கெட்டிக்காரர்’ //

    ஓ அதுதான்.. கறுப்புப்பூனைப் படையையும் உருவாக்கினார்களோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 3, 2017 at 2:14 AM

      **பச்ச மொழகா**

      //ஹையோ ஹையோ ஹையோ அது மொ அல்ல மி ஆக்கும்:) ஹா ஹா ஹா:)..//

      கரெக்ட்டூஊஊஊஊஊ. நூலாசிரியர், அந்தக்கதைக்குக் கொடுத்திருந்த தலைப்பையே நானும் அப்படியே கொடுத்துவிட்டேன். அது ஒருவேளை தாங்கள் சொல்வது போல தப்பாகவும் இருக்கலாம்தான். :)

      **வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…**
      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சைக்கிள் ஹப்ல பிளேன் ஓட்டிடுறீங்க:).. இப்போ புக்குக்கு ரிவியூவா?:) இல்ல உங்கட கொமெண்ட்க்கு ரிவியூவா?:) எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈ:)//

      சந்து பொந்து கிடைத்தால் ப்ளேன் என்ன ராக்கெட்டே ஓட்டிவிடுவேன். புக் ரிவியூ மட்டுமே தான். அந்த புக்கின் 10-ம் பக்கத்தில் இந்த மேட்டர் பளிச்சென்று அச்சடிக்கப்பட்டு உள்ளதே. அதை நான் ரிவியூ செய்யாமல் அம்போவென விட்டுவிட முடியுமா? அப்புறம் நூலாசிரியர் வருத்தப்பட மாட்டாரா என்ன? அதனால் மட்டுமே அதையும் ரிவியூவில் கொண்டு வந்துள்ளேனாக்கும்.

      **கருப்புச் சட்டைக்காரர் காவலுக்குக் கெட்டிக்காரர்’**

      //ஓ அதுதான்.. கறுப்புப்பூனைப் படையையும் உருவாக்கினார்களோ?..//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம் .... இருக்கலாம். அதே ... அதே ... சபாபதே .... அதிர(ரா)பதே !!

      நீக்கு
    2. 'பச்ச மொழகா' என்ற வார்த்தைப் பிரயோகம் தவறுதலாக செய்யப் பட்டதல்ல. கும்பகோணம் ,மாயவரம் பக்கத்தில் சில பிராமண வீடுகளில் அவ்விதம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லே.

      நீக்கு
    3. பச்சக் குழந்தையான நம் அதிரா, இந்தப்
      பச்சை மிளகாய்களில், நான்கினையாவது,
      பச்சையாகவே கடித்து விழுங்கினால் மட்டுமே,
      ’பச்ச மொழகா’ என அவங்களால் ஒழுங்காக உச்சரிக்க முடியும். :)

      [இதைப்படிச்சதும் கிழிச்சுடுங்கோ மோகன்ஜி :)]

      நீக்கு
  6. ஆங்ங்ங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊ.. கோபு அண்ணன் உடனடியாகப் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு வரவும்.. வரும்போது மறக்காமல் அந்த வைர வளையல்களையும் எடுத்து வந்து தரவும்:)..

    கோர்ட்ஸ் ல எதிரிக் கூண்டில் நின்றாலும், நான் கோபிக்காமல் வாங்குவேன்ன் வளையலை:) நீங்க ஒண்ணும் கூச்சப்பட்டிட வாணாம்:)..

    ஹையோ எதுக்கு வழக்கு எனத்தானே ஓசிக்கிறீங்க? கொஞ்ச நாளாகவே எங்கட கிழக்கு வாசலில் இருந்து ஒரு பல்லி கிச்சுக் கிச்சு என சொல்லிக்கொண்டிருக்குது.. இப்போதானே அதன் பாசை புரிஞ்சுது.. என்பக்கம் பொருட்கள்/பூனைகள் களவுபோகுதெனச் சொல்லியிருக்குது அது.. இது புரியாமல் இருந்திட்டனே நான்:) கர்ர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 3, 2017 at 2:18 AM

      //ஆங்ங்ங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊ.. கோபு அண்ணன் உடனடியாகப் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு வரவும்.. வரும்போது மறக்காமல் அந்த வைர வளையல்களையும் எடுத்து வந்து தரவும்:).. கோர்ட்ஸ் ல எதிரிக் கூண்டில் நின்றாலும், நான் கோபிக்காமல் வாங்குவேன்ன் வளையலை:) நீங்க ஒண்ணும் கூச்சப்பட்டிட வாணாம்:)..//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே .....

      காரியத்தில் கண்ணாயிருக்காங்களே தாண்டவக்கோனே !!

      //ஹையோ எதுக்கு வழக்கு எனத்தானே ஓசிக்கிறீங்க? கொஞ்ச நாளாகவே எங்கட கிழக்கு வாசலில் இருந்து ஒரு பல்லி கிச்சுக் கிச்சு என சொல்லிக்கொண்டிருக்குது.. இப்போதானே அதன் பாசை புரிஞ்சுது.. என்பக்கம் பொருட்கள்/பூனைகள் களவுபோகுதெனச் சொல்லியிருக்குது அது.. இது புரியாமல் இருந்திட்டனே நான்:) கர்ர்ர்ர்ர்ர்:).//

      அந்தப் பல்லி ஆண் பல்லிதானே? முக்கியமா அந்தப் பொயிண்ட கவனிச்சீங்களா, அதிரா?

      அதன் ஜோடி பெண் பல்லி இங்கு எங்கட மேற்கு வாசலுக்கு வந்து என்ன சொல்லிச்சுத் தெரியுமா?

      ”அதிரா ரொம்ப நல்லவங்க. அவர்களின் ‘என் பக்கம்’ வலைப்பதிவு .... உன் பக்கம் மாதிரியே நினைச்சுக்கோடா கோபு. அங்கு வந்து நீ எதை வேண்டுமானாலும் களவாடிக்கொள்ளலாம். அவங்க அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்கோ. ரொம்பவும் பெருந்தன்மையானவங்க. ஆனாக்க அவங்களைப் பாராட்டி நீ நிறைய எழுதிக்கிட்டே இருக்கணும். அது மட்டுமே அவங்களுக்குத் திருப்தியாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் அவங்க எதிர்பார்ப்பது போலக் காட்டிக்கவே மாட்டாங்கோ. ரொம்பவும் ‘ஷை’ டைப்பு” என்றெல்லாம் சொல்லிட்டுப்போச்சு தெரியுமா? :)))))

      ஆஹ்ஹாஹ்ஹா எங்கிட்டயேவா ..... ! :)

      நீக்கு
  7. //இந்தத் தொடர் பதிவின், முதல் பகுதிக்கு, முதல் வருகை தந்து, முதல் பின்னூட்டம் அளித்துள்ள //
    ///இரு ஜோடி வைர வளையல்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. ///

    ஹா ஹா ஹா இதைப் பார்த்துத்தான் இம்முறை கில்லர்ஜி முதலாவதா வந்திருக்கிறார்ர்:).. ஆனா அவருக்கு தெரியாது.. இம்முறை 2 வதா வருபவருக்கே வைர செக்லெஸ் என நீங்க 2014 ம் ஆண்டில் அறிவிச்சது:)..

    அதேன்ன் மீ 2ண்ட்டா வந்தேன்ன்:)..

    //சூடான சுவையான நேந்திரங்காய் சிப்ஸ் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.///

    ஹையோ ஹையோ சாப்பாட்டு ராமி:) சாப்பிட்டுச் சாப்பிட்டு தேம்ஸ் கரையில என்னோடு போட்டிபோட்டு நடக்க முடியாமல் உருண்டுகொண்டு வருவா:).. ஹையோ படிச்சதும் கிழிச்சு.. உச்சிப்பிள்ளையார் முன் நந்தியின் கீழே ஒளிச்சிடுங்கோ பீஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 3, 2017 at 2:23 AM

      //ஹையோ படிச்சதும் கிழிச்சு.. உச்சிப்பிள்ளையார் முன் நந்தியின் கீழே ஒளிச்சிடுங்கோ பீஸ்ஸ்ஸ்:).//

      ஹையோ.... எவ்வளவு முயன்றும் என்னால் இதனை டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகக் கிழிக்கவே முடியலை அதிரா. வந்து ஹெல்ப் பண்ணுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ். :)

      நீக்கு
  8. //ஆஹா ! சரியான போட்டி !
    //

    ஹா ஹாஅ ஹா சரியான போட்டிதான்:).. அனைத்துப் படங்களும் ஜூப்பர்ர்ர்:).. போஸ்ட்டும் மிக நன்றாக இருக்கு.. ஒருவேளை பூஸ்படம் போட்டதால இருக்குமோ?:)..

    சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 3, 2017 at 2:25 AM

      **ஆஹா ! சரியான போட்டி !**

      //ஹா ஹாஅ ஹா சரியான போட்டிதான்:).. அனைத்துப் படங்களும் ஜூப்பர்ர்ர்:).. போஸ்ட்டும் மிக நன்றாக இருக்கு..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

      //ஒருவேளை பூஸ்படம் போட்டதால இருக்குமோ?:)..//

      அதே .... அதே .... கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்கோ. வெரி குட். சபாஷ்.

      நீக்கு
  9. அருமையான விமர்சனம் .நாட்டி கார்னர் சமீபத்தில் படித்தேன் அவர் பக்கம் ..மற்றவற்றையும் படிக்கணும் ..
    அந்த நேந்திரங்கா சிப்ஸுக்கு தாங்க்ஸ் :) அந்த நரசுஸ் காப்பிக்கும் தாங்க்ஸ் அந்த ஆரஞ்சு கலர் அல்வாவை வாயில் பல் இல்லாத பல்செட் மட்டும் (அதில ஸ்டைலுக்கு ஒரு தங்கப்பல்) போட்டு திரியும் அந்த பூஸாருக்கு கொடுத்திடுங்க :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சலின்! வலைப்பூவில் இந்தக் கதைக்கு நீங்கள் அழகான கருத்தையும் இட்டிருந்தீர்கள்.தொடருங்கள்.

      நீக்கு
    2. Angelin June 3, 2017 at 2:34 AM

      வாங்கோ அஞ்சூஊஊஊஊஊ, வாங்கோ, வணக்கம்.

      //அருமையான விமர்சனம்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நாட்டி கார்னர் சமீபத்தில் படித்தேன் அவர் பக்கம் ..//

      அப்படியா .... சந்தோஷம்.

      //மற்றவற்றையும் படிக்கணும் ..//

      ஆஹா, உங்கள் செளகர்யம்போல மெதுவாகப் படியுங்கோ. ஒன்றும் அவசரமே இல்லை. அதற்குள் எந்த ஒரு சுனாமியும் வந்துவிடப்போவதும் இல்லை. :)

      //அந்த நேந்திரங்கா சிப்ஸுக்கு தாங்க்ஸ் :) அந்த நரசுஸ் காப்பிக்கும் தாங்க்ஸ்.//

      ஆஹா ...... மிக்க மகிழ்ச்சி. நமக்குள் தாங்க்ஸ் எல்லாம் எதற்கு?

      //அந்த ஆரஞ்சு கலர் அல்வாவை வாயில் பல் இல்லாத பல்செட் மட்டும் (அதில ஸ்டைலுக்கு ஒரு தங்கப்பல்) போட்டு திரியும் அந்த பூஸாருக்கு கொடுத்திடுங்க :)) //

      ஓக்கே ..... ’தங்கள் ஸித்தம் என் பாக்யம்’ எனச் சொல்லுவார்கள். நானே அதையே இங்கு உங்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

      இருப்பினும் இந்த பூனை, நாய் போன்ற அனைத்து ஜந்துக்களையும் கண்டாலே எனக்கு மிகவும் அலர்ஜி உண்டு. இதில் உங்களின் உதவி எனக்கு மிகவும் தேவைப்படுகிறது. தாங்களும் என்னுடன் துணைக்குக் கட்டாயமாக வர வேண்டும்.

      ’பல் இல்லாதவர்களால் பக்கோடா சாப்பிடுவது கஷ்டம்’ என்றுதான் சொல்லுவார்கள். பல் பற்றி நான் எழுதியுள்ள பல்வேறு தகவல்கள் முழுநீள நகைச்சுவையாக, ஏராளமான அனிமேஷன் படங்களுடன் இதோ இந்தப் பதிவினில் உள்ளது. https://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html படித்ததும் சிரித்துச் சிரித்து, உங்களின் பற்கள் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

      பல் இல்லாதவர்களால் மட்டுமே அல்வா போன்றவற்றை முழுவதுமாக நன்கு அசைபோட்டு சுவைத்துச் சாப்பிட முடியும். அதனால் பல் செட்டை சப்ஜாடாகக் கழட்டி நம் கையில் எச்சில் படாமல் ஒரு பையில் போட்டுக்கொண்டு, அல்வாவை ஊட்டி விட்டுவிடுவோம். அவர்களின் அந்தப் பல்செட்டைத் திரும்பக்கொடுக்கும்போது அந்தத்தங்கப்பல்லை மட்டும் நாம் பெயர்த்து (அதாவது பல்லைத்தட்டி) களவாடிக்கொண்டு விடுவோம். ஒரு கிராம் தங்கம் விலை ரு. 3000 ஆச்சே ! :)

      பிரித்தானிய மஹாராணியாரின் இராஜ பரம்பரையைச் சேர்ந்த ஒரேயொரு வாரிசாகவும், ஸ்வீட் சிக்ஸ்டீனாகவும் இருப்பதால், இதையெல்லாம் மைண்ட் செய்யாமல் 32 பற்களையுமே தங்கத்திலோ வைரத்திலோ செய்து ஒரு பெருமைக்காகக்கூட புதிதாக அவர்கள் கட்டிக்கொள்ளலாம்.

      ’மயிருள்ள சீமாட்டி வாரி முடிகிறாள்’ என்று ஒரு பழமொழியும் சொல்லுவாங்கோ. :)

      நமக்கு எதற்கு அநாவஸ்யமான ஊர் வம்ப்ஸ்ஸ். :)

      நீக்கு
  10. http://www.mobilephun.com/wp-content/uploads/2009/10/Cat-In-Aquarium-Wallpaper.jpg


    haaa haa :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin June 3, 2017 at 2:35 AM

      //http://www.mobilephun.com/wp-content/uploads/2009/10/Cat-In-Aquarium-Wallpaper.jpg

      haaa haa :) //

      பூனையின் வாலைக் கவ்விப் பிடிக்கும் [கடிக்கும்] கோல்ட் பிஷ்ஷின் படம் அருமை. அதையும் இப்போது இந்தப் பதிவின் கடைசியில் சேர்த்துள்ளேன். :)

      நீக்கு
    2. /// அதையும் இப்போது இந்தப் பதிவின் கடைசியில் சேர்த்துள்ளேன். :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:).. அந்த ரைப் அடிக்கும் பூஸார்.. உந்த வேகத்தை மீன் பிடிப்பதில் காட்டினால் எவ்ளோ நல்லாயிருக்கும் என நினைச்சேன்ன்ன்ன் சிரிச்சேன்ன்ன்ன்:).

      நீக்கு
    3. மிக நன்றாக இருக்கிறது

      நீக்கு
    4. asha bhosle athira June 3, 2017 at 3:18 AM

      //ஹா ஹா ஹா கர்ர்ர்:).. அந்த ரைப் அடிக்கும் பூஸார்.. உந்த வேகத்தை மீன் பிடிப்பதில் காட்டினால் எவ்ளோ நல்லாயிருக்கும் என நினைச்சேன்ன்ன்ன் சிரிச்சேன்ன்ன்ன்:).//

      ஹைய்யோ ..... ஹைய்யோ ..... அந்த வேக வேகமாக டைப் அடிக்கும் பூனையார், அதே வேகத்தில் தன் வாலைச் சுழட்டி அடித்துத் தப்பித்து ஓடுவாரேயானால் ..... அந்த கோல்ட் பிஷ் எங்கேயோ ஒரு பத்து மைலுக்கு அப்பால் அல்லவா தரையில் விழுந்து தத்தளித்து உயிர்த்தியாகம் செய்ய நேரிடும்.

      எனவே வேண்டாம் .... வேண்டாம் .... தயவுசெய்து வேண்டாம்.

      அது ஏதோ, காலுக்கு பதிலாக வாலைப் பிடித்துக் கொண்டு சரணாகதி அடைந்துள்ளது என பாவித்துக்கொள்ளவும்.

      அதனால் அதனை மன்னித்து தண்ணீரிலேயே வாழவிட வேண்டுமாய், அன்புடன் அந்த முரட்டு குண்டுப் பூனையாரின் வாலைக் காலாக நினைத்துப் பிடித்துக்கொண்டு கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறோம். :)

      நீக்கு
  11. பொக்கிஷமான படம் காலம் சென்ற கவிக்கோ அப்துல் ரகுமானுடன் மோகன்ஜி அவர்கள் ..பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஏஞ்சலின். நான் பாதுகாக்க வேண்டிய நினைவின் முத்திரை.

      நீக்கு
    2. Angelin June 3, 2017 at 2:45 AM

      //பொக்கிஷமான படம் காலம் சென்ற கவிக்கோ அப்துல் ரகுமானுடன் மோகன்ஜி அவர்கள் .. பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      மோகன்ஜி யிடமிருந்து, இந்தத்தொடர் பதிவுக்காகவே நான் கேட்டு வாங்கிவைத்துக்கொண்டுள்ள பொக்கிஷமான படங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன.

      இதை ஏனோ இந்தப் பதிவினில் முதன்முதலாக வெளியிட வேண்டும் என என் உள்மனதுக்குத்தோன்றி, நான் ஏற்கனவே அகஸ்மாத்தாகத் தீர்மானித்து, என்னிடம் பதிவாக வெளியிடத் தயார் நிலையில் வைத்திருந்தேன். அவரின் அகால மரணச் செய்தி பிறகு தாமதமாகத்தான், எனக்கே தெரியவந்தது.

      This is really a very very surprising co-incident. நானே மிகவும் வியந்து அதிர்ச்சியாகிப் போனேன். !!!!

      நீக்கு
  12. மோகன்ஜி அவர்களுக்கு , வாழ்த்துக்கள்.

    தங்களுக்கு அன்பின் வணக்கங்கள், கோபு மாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்ரா! நலமா? எவ்வளவு காலம் ஆகிறது உங்கள் பின்னூட்ட கருத்தைப் பார்த்து! தொடருங்கள்.

      நீக்கு
    2. Chitra June 3, 2017 at 2:51 AM

      வாங்கோ சித்ரா, வணக்கம்.

      தங்களின் ’சித்ரா பெளர்ணமி நிலவு’ போன்ற அதிசய + அபூர்வ + பளீச்ச்ச்ச்ச் வருகையால் இந்தப் பதிவே சும்மா ஜொலிக்குது .... டால் அடிக்குது. :)

      //மோகன்ஜி அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்களுக்கு அன்பின் வணக்கங்கள், கோபு மாமா//

      என் மனமார்ந்த அன்பு ஆசீர்வாதங்கள், சித்ரா.

      அன்புடன் கோபு மாமா.

      நீக்கு
  13. கவிக்கோ அவர்களுடன் திரு. மோகன் ஜி... சமயோசிதமாகப் பதிவினில் பார்த்ததும் மனம் கனக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு சார் நேற்று இப்படத்தை அகஸ்மாத்தாக வெளியிட்டதாக சொன்னதும் கலங்கிப் போனேன் துறை சார்!.

      நீக்கு
    2. துரை சார்! நீங்கள் பல்துறையிலும் வித்தகர் என்பதாலோ என்னவோ,உங்கள் பெயரே 'துறை' என்று மேலே வந்து விட்டது!

      நீக்கு
    3. துரை செல்வராஜூ June 3, 2017 at 4:58 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //கவிக்கோ அவர்களுடன் திரு. மோகன் ஜி... சமயோசிதமாகப் பதிவினில் பார்த்ததும் மனம் கனக்கின்றது...//

      இதில் சமயோஜிதம் ஏதும் இல்லை. மிகவும் அகஸ்மாத்தாக இது நிகழ்ந்துள்ளது. எனக்கே இன்னும் மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

      மேலே திருமதி. ஏஞ்ஜலின் அவர்களுக்கான என் பதிலிலும் விரிவாகச் சொல்லியுள்ளேன், பாருங்கோ.

      நீக்கு
  14. தித்திக்கும் பலாச்சுளையை தேனுடன் தந்ததைப் போல தங்களது நடை.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிடும் நடை வை.கோ.சார் நடையைப் பற்றித்தானே? என் நடை பின்னிபின்னியல்லவா செல்லும்?!

      நீக்கு
    2. துரை செல்வராஜூ June 3, 2017 at 5:00 AM

      //தித்திக்கும் பலாச்சுளையை தேனுடன் தந்ததைப் போல தங்களது நடை.. வாழ்க நலம்..//

      ஆஹா, இதனை என் பிரியமுள்ள பிரதர் வாயால் கேட்க நானும் தன்யனானேன்.

      தங்கள் மூலம் இதனைக் கேட்டதும் ’இதயக்கனி’ படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசனின் சில பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன ...... பாடியவர்கள்: எங்கட பி. சுசிலா + TMS

      இன்பமே ..... உந்தன் பேர் வள்ளலோ .....
      சர்க்கரைப் பந்தல் நான் ... தேன் மழை சிந்த வா ...
      சர்க்கரைப் பந்தல் நான் ... தேன் மழை சிந்த வா ...

      ’நடை’யைப் பற்றி நினைக்கும்போது 'அன்னை இல்லம்’ என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் TMS பாடல் நினைவுக்கு வந்தது.

      நடையா ..... இது நடையா
      ஒரு நாடகமன்றோ நடக்குது
      இடையா ..... இது இடையா
      'அது' இல்லாதது போல் இருக்குது

      நடையா ..... இது நடையா
      ஒரு நாடகமன்றோ நடக்குது
      இடையா ..... இது இடையா
      'அது' இல்லாதது போல் இருக்குது

      தங்களின் ’பன்ருட்டி பலாச்சுளைகள்’ போன்ற பளீச் வருகைக்கும், கொம்புத் தேன் போன்ற சுவைமிக்க கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பிரதர்.

      நீக்கு
  15. மோகன்ஜி அவர்களின் கதைகள் இரண்டும் அருமை. நானும் அவர் பழைய பதிவுகளை படித்து இருக்கிறேன்.

    கவிக்கோ அவர்களுடன் அவருக்கிருந்த நட்பை அவரின் மறைவால் ஏற்பட்ட வருத்தத்தை அருமையான கவிதையில் வடித்து இருக்கிறார் வானவில் தளத்தில்.

    உங்கள் விமர்சனம், படங்கள் எல்லாம் அருமை.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். உங்கள் வாழ்த்தை அன்புடன் ஏற்கிறோம்

      நீக்கு
    2. கோமதி அரசு June 3, 2017 at 7:23 AM

      வாங்கோ, மேடம். வணக்கம்.

      //மோகன்ஜி அவர்களின் கதைகள் இரண்டும் அருமை.//

      தாங்கள் அருமை எனச் சொல்லியுள்ளவை, இங்கு நான் சொல்லியுள்ள மூன்றில் எந்த இரண்டோ??
      தெரியவில்லையே ! :))

      //நானும் அவர் பழைய பதிவுகளை படித்து இருக்கிறேன். //

      வெரி குட்.

      //கவிக்கோ அவர்களுடன் அவருக்கிருந்த நட்பை அவரின் மறைவால் ஏற்பட்ட வருத்தத்தை அருமையான கவிதையில் வடித்து இருக்கிறார் வானவில் தளத்தில்.//

      ஆம். நானும் பார்த்தேன்.

      //உங்கள் விமர்சனம், படங்கள் எல்லாம் அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  16. விமர்சனம் நன்றாக இருக்கிறது சார். படங்கள் நாளுக்கு ஏற்றதாக....அருமை...

    பூசார் படங்கள் அனைத்தும்...சூப்பர். அதுவும் டைப்பும் பூசார். ஹஹஹ

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu [துளசி, கீதா]
      June 3, 2017 at 10:42 AM

      வாங்கோ, தங்கள் இருவருக்கும் என் வணக்கங்கள்.

      //விமர்சனம் நன்றாக இருக்கிறது சார்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //படங்கள் நாளுக்கு ஏற்றதாக....அருமை...//

      அது ஏதோ அகஸ்மாத்தாக அமைந்து போய் விட்டது.

      //பூசார் படங்கள் அனைத்தும்... சூப்பர். அதுவும் டைப்பும் பூசார். ஹஹஹ//

      அவற்றில் 50% படங்கள், அதிரடி அதிராவின் ‘என் பக்கம்’ வலைத்தளத்திலிருந்து, என்னால் உரிமையுடன் களவாடப்பட்டவை மட்டுமே.

      அவர் எங்கிருந்து களவாடினாரோ .... அதுபற்றி எனக்கு விபரம் ஏதும் தெரியவில்லை. கூகுளாரிடம் இனிமேல்தான் நான் விஜாரிக்கணும்.

      ’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு அதிக மணம் உண்டு’ எனச் சொல்லுவார்கள். ‘திருட்டு மாங்காய்தான் அதிக ருசியாக இருக்கும்’ எனவும் சொல்லுவார்கள். :) :)

      அதனால் மட்டுமே அந்த பூசார் படங்கள் அனைத்தும் + டைப் அடிக்கும் பூசார் படமும் சூப்பராகத் தெரிகின்றன என நினைக்கிறேன்.

      ஏதோவொரு ’பல்லி’யோ, பாச்சையோ, கரப்பான் பூச்சியோ சொல்லிச்சு என, என் மீது வழக்குப்போட்டு உடனடியாகப் ’பிரித்தானியக் காண்ட் கோர்ட்’க்கு வருமாறு அழைத்து, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளார்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      அதனால் எனக்கு இப்போது கையும் ஓடலை ... லெக்கும் ஆடலை.

      ’பிரித்தானியா காண்ட் கோர்ட்டு’ என்பது நான் இதுவரை போகாததோர் புது இடமாகும். அதனால் பயத்தில் நான் அந்த டைப் அடிக்கும் பூசார் போலவே பதட்டத்தில், படு ஸ்பீடாக இதனை அடித்து உங்களுக்கு என் பதிலாக இப்போது அனுப்பியுள்ளேன். :)

      இதனைப் படித்ததும் பூசாருக்குத் தெரியாமல் உடனடியாகக் கிழிச்சுப்போட்டுடுங்கோ, ப்ளீஸ்ஸ்.

      நீக்கு
  17. திரு. மோகன் ஜி அவர்களின் "பொன்வீதி"க்கு வழி காட்டியதற்கு மிக்க நன்றி.
    ஒரு கிராமத்துக் காதல் என்றுமே சுவையாக இருக்கும். வசனங்களின் குறும்பு
    ரசிக்கும்படியாக உள்ளது.
    நாட்டி கார்னர்....மிகவும் அருமையான கதையாக இருக்க வேண்டும். குழந்தைகளின்
    மனோ பாவத்தை / மாற்றத்தை உண்டு பண்ணும் எழுத்துக்கள் நிறைய கிடைக்கலாம்.
    பொன்வீதியில் நடக்கும் பொழுது பார்த்த மூன்றாவது கடை...பச்ச மொழகா..
    காரம் இல்லையோ...தங்களது வழுவட்டை ....போல...! காரம் இல்லாத மிளகாய் பஜ்ஜி...
    சோகம் கூட நிதர்சனத்தில் சுகம் தான். என்றாவது பொன்வீதியைக் கண்டால்....அவசியம்
    அதனுள் உலா வருவேன்.
    உயிரோவிய அழகோவியம் அருமை. அனைத்துப் படங்களும் விறுவிறுப்பு.
    கவிக்கோ. அப்துல் ரஹ்மான் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    நூலாசிரியர்.திரு.மோகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அழகான படங்களுடன் சிறப்பாக 'பொன்வீதியை விமரித்து எழுதிய கோபு ஸார் தங்களுக்கு
    வாழ்த்துக்கள்.நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜெயஸ்ரீ சங்கர்,
      விமரிசனேமே புத்தகத்தைப் படிக்க தூண்டுவது தானே? அவசியம் புத்தகத்தைப் படியுங்கள்.
      உணர்வுகளின் சதிராட்டத்தை படம்பிடிக்கும் கதைகள் மிக்கதே இந்த புத்தகம். உங்கள் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி!

      நீக்கு
    2. ஜெயஸ்ரீ ஷங்கர் June 3, 2017 at 10:52 AM

      வாங்கோ ஸ்ரீ மேடம், வணக்கம். நல்லா இருக்கீங்களா? தங்கள் கண்கள் எப்படி உள்ளன? இப்போது தேவலாமா?

      உங்களைப் பார்த்தே பல யுகங்கள் ஆனதுபோல எனக்கு ஒரு ஃபீலிங் ஏற்பட்டுப்போச்சுது. என்னுடன் நிஜமாவே டூஊஊஊ விட்டுட்டீங்களோன்னும் பயந்தே போய்ட்டேன்.

      எனினும் “ஸ்ரீ” இன்று இங்கு அம்பாள் போலக் காட்சியளித்துள்ளது, என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. ஏதோ ஒரு மிக முக்கியமான + மிகவும் காஸ்ட்லியான தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைத்தது போல உள்ளது. அதற்கு என் முதற்கண் நன்றிகளை நான் பல்லாயிரம் தடவை சொன்னதாக, தயவுசெய்து நினைத்து ஏற்றுக்கொள்ளவும்.

      //திரு. மோகன்ஜி அவர்களின் "பொன்வீதி"க்கு வழி காட்டியதற்கு மிக்க நன்றி.//

      நான் உங்களுக்கு வழிகாட்டியா? நீங்கள் அல்லவோ எனக்கு சமீபகாலமாக மிகச்சிறந்த ஆன்மீக வழிகாட்டியாக உள்ளீர்கள். :)

      //ஒரு கிராமத்துக் காதல் என்றுமே சுவையாக இருக்கும். வசனங்களின் குறும்பு ரசிக்கும்படியாக உள்ளது. //

      ஓஹோ .... அப்படியா? மிக்க மகிழ்ச்சி. :) :)

      //நாட்டி கார்னர்....மிகவும் அருமையான கதையாக இருக்க வேண்டும். குழந்தைகளின் மனோ பாவத்தை / மாற்றத்தை உண்டு பண்ணும் எழுத்துக்கள் நிறைய கிடைக்கலாம்.//

      இருக்கலாம் ..... இருக்கலாம். ஒருவேளை அப்படியும்கூட இருக்கலாம்.

      //பொன்வீதியில் நடக்கும் பொழுது பார்த்த மூன்றாவது கடை... பச்ச மொழகா.. காரம் இல்லையோ... தங்களது வழுவட்டை ....போல...! காரம் இல்லாத மிளகாய் பஜ்ஜி...//

      நான் எழுதியுள்ள வழுவட்டையையும் https://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html பஜ்ஜியையும் https://gopu1949.blogspot.in/2014/09/vgk-34.html நன்கு நினைவில் வைத்துக்கொண்டுள்ளீர்கள், என்னையே நீங்கள் சுத்தமாக மறந்துட்டாலும் கூட. :)

      //சோகம் கூட நிதர்சனத்தில் சுகம் தான்.//

      சுகமானதோர் விஷயத்தை நிதர்சனத்தில் உணர்ந்து உங்கள் பாணியில் வெகு அழகாகவும், சோகமாகவும் சொல்லியுள்ளீர்களே ..... சபாஷ் மேடம் !

      //என்றாவது பொன்வீதியைக் கண்டால்.... அவசியம் அதனுள் உலா வருவேன். //

      சந்தோஷம்.

      //உயிரோவிய அழகோவியம் அருமை. அனைத்துப் படங்களும் விறுவிறுப்பு.//

      தங்களுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டியே, நான் சுறுசுறுப்பாகத் தேடித்தேடி சேர்த்த படங்களாச்சே. எனக்குப் பிடித்தமான மிகச் சிறந்த ஓவியரான தாங்கள் இவற்றை நன்கு ரசிப்பீர்கள் என எனக்கும் தெரியுமாக்கும். :)

      //கவிக்கோ. அப்துல் ரஹ்மான் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.//

      :( சரி....... சரி :(

      //நூலாசிரியர். திரு. மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

      சந்தோஷம்.

      //அழகான படங்களுடன் சிறப்பாக 'பொன்வீதியை விமரித்து எழுதிய கோபு ஸார் தங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள். //

      தங்களின் அன்பான வருகைக்கும், மிக அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீ மேடம்.

      பிரியத்துடன் கோபு

      நீக்கு
  18. திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலுக்கான தங்களின் திறனாய்வு படிப்போருக்கு மூல நூலை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

    ‘பொன் வீதி’ கதை பற்றி சொல்லும்போது “காதல் உணர்வுகளும், உரையாடல்களும், சின்னச்சின்ன சேஷ்டைகளும், சுகானுபாவங்களாக என்னை எங்கேயோ என் இளமை காலத்திற்கே இட்டுச் சென்றுவிட்டது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள் மட்டுமே “என்ற தங்களின் வரிகள் அந்த கதையை தாங்கள் எந்த அளவுக்கு இரசித்திருக்கிறீர்கள் என அறிய முடிகிறது.

    திரு மோகன்ஜி அவர்களின் எளிமையான எழுத்து நடையும், கதையில் வரும் பெண்ணின் ஏக்கமான சில உணர்வுகளை கோர்வையாக விவரித்த விதமும் தங்களை மிகவும் கவர்ந்தன என்று சிறுகதை மன்னரான தாங்கள் சொன்னபிறகு வேறு கருத்து இருக்கமுடியுமா என்ன?

    ‘நாட்டி கார்னர்’ கதையை ஏற்கனவே திரு மோகன்ஜி அவர்களின் வலைத்தளத்தில் படித்து’ இன்றைக்கும் சில பள்ளிகளில் இந்த ‘குறும்பு மூலை’த்தண்டனையை கொடுத்து குழந்தைகள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சுய இரக்கமும் சோகமும் பொங்கிவர காரணமாக உள்ள அந்த குறும்பு மூலையை பேராசிரியை கண்ணம்மா அடைத்தது சரியே. கதையை இரசித்தேன். பாராட்டுகள்! என பின்னூட்டம் இட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கதை இது.

    கதையின் முடிவில் கதாசிரியரின் முத்தாய்ப்பான வரிகளை நானும் இரசித்தேன்!

    ‘பச்ச மொழகா’ கதையின் தலைப்பைப் பார்த்து முடிவு காரமாயிருக்கும் என நினைத்தபோது, உணர்வு பூர்வமான உன்னதமான எழுத்துக்கள் ..... சோகமான முடிவு படிக்கும் நம்மையும் கலங்கத்தான் வைக்கிறது என்று குறிப்பிட்டு உழைப்பு மட்டும் இருந்தால் போதுமா? கொஞ்சமாவது, பொறுமையும் அதிர்ஷ்டமும் கூடி வரவேண்டுமே என சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது இந்த கதை நிச்சயம் கண்களை குளமாக்கும் என எண்ணுகிறேன்.

    மூன்று கதைகளையும் தங்கள் பாணியில் திறனாய்வு செய்து அவைகளை படிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி June 3, 2017 at 5:02 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலுக்கான தங்களின் திறனாய்வு படிப்போருக்கு மூல நூலை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. //

      மூல நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஒரு சிலருக்காவது தூண்டிவிடுவதே, என்னைப்போல ஒரு நூல் அறிமுகம் / மதிப்புரை / விமர்சனம் / புகழுரை என எழுதுவோரின் நோக்கமும் ஆகும்.

      இதனை என் ’திறனாய்வு’ எனத்தாங்கள் இங்கு கூறியுள்ளது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருப்பினும் THIS IS TOO MUCH ஓ என, எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

      ஒவ்வொன்றையும் படித்ததும் என் மனதுக்குப் பட்டதை நான் அப்படியே எழுதிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

      //‘பொன் வீதி’ கதை பற்றி சொல்லும்போது “காதல் உணர்வுகளும், உரையாடல்களும், சின்னச்சின்ன சேஷ்டைகளும், சுகானுபாவங்களாக என்னை எங்கேயோ என் இளமை காலத்திற்கே இட்டுச் சென்றுவிட்டது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள் மட்டுமே “என்ற தங்களின் வரிகள் அந்த கதையை தாங்கள் எந்த அளவுக்கு இரசித்திருக்கிறீர்கள் என அறிய முடிகிறது.//

      ஆமாம், ஸார். இந்தக்கதையை நான் மிகவும் ரஸித்தேன். இதுபோல, சின்னச்சின்ன மென்மையான சம்பவங்கள் அடங்கிய, பல உண்மையான கதைகள் என்னிடமே, என் வாழ்க்கை அனுபவத்திலேயே நிறைய உள்ளன. அவற்றை நான் எங்கெங்கெல்லாம் என் கதைகளில் (ஏதோ கற்பனை போலப்) புகுத்தியுள்ளேனோ, அவைகள் எல்லாம் எனக்கு மாபெரும் வெற்றியையும், பாராட்டுக்களையும் கொண்டுவந்து குவித்துள்ளன.

      //திரு மோகன்ஜி அவர்களின் எளிமையான எழுத்து நடையும், கதையில் வரும் பெண்ணின் ஏக்கமான சில உணர்வுகளை கோர்வையாக விவரித்த விதமும் தங்களை மிகவும் கவர்ந்தன என்று சிறுகதை மன்னரான தாங்கள் சொன்னபிறகு வேறு கருத்து இருக்கமுடியுமா என்ன? //

      சிறுகதை மன்னரா? நானா? ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். தங்களின் இந்த இனிய சொற்களால் தன்யனானேன். :) மிகவும் ‘ஷை’ ஆகிவிட்டது எனக்கு.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> வே. நடன சபாபதி (2)

      //‘நாட்டி கார்னர்’ கதையை ஏற்கனவே திரு மோகன்ஜி அவர்களின் வலைத்தளத்தில் படித்து’ இன்றைக்கும் சில பள்ளிகளில் இந்த ‘குறும்பு மூலை’த்தண்டனையை கொடுத்து குழந்தைகள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சுய இரக்கமும் சோகமும் பொங்கிவர காரணமாக உள்ள அந்த குறும்பு மூலையை பேராசிரியை கண்ணம்மா அடைத்தது சரியே. கதையை இரசித்தேன். பாராட்டுகள்! என பின்னூட்டம் இட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கதை இது. //

      வெரி குட், ஸார். நான் அவர் வலைத்தளத்தில் மேலோட்டமாக மட்டுமே படித்தேன். அதனால் நான் அங்கு பின்னூட்டம் ஏதும் கொடுக்கவில்லை.

      //கதையின் முடிவில் கதாசிரியரின் முத்தாய்ப்பான வரிகளை நானும் இரசித்தேன்! //

      கதையைவிட எனக்கு அந்த முடிவுரை மட்டுமே அதிகமாகப் பிடித்திருந்தது. :)

      //‘பச்ச மொழகா’ கதையின் தலைப்பைப் பார்த்து முடிவு காரமாயிருக்கும் என நினைத்தபோது, உணர்வு பூர்வமான உன்னதமான எழுத்துக்கள் ..... சோகமான முடிவு படிக்கும் நம்மையும் கலங்கத்தான் வைக்கிறது என்று குறிப்பிட்டு உழைப்பு மட்டும் இருந்தால் போதுமா? கொஞ்சமாவது, பொறுமையும் அதிர்ஷ்டமும் கூடி வரவேண்டுமே என சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது இந்த கதை நிச்சயம் கண்களை குளமாக்கும் என எண்ணுகிறேன். //

      நிறைய கதைகளில் இதுபோல சற்றே சோகமான முடிவுகளாகவே கொடுத்து முடித்துள்ளார். சிலவற்றில் உறுதியான முடிவேதும் கொடுக்காமல் நம் போக்கில் நாம் எப்படி வேண்டுமானாலும், யூகித்துக்கொள்ளட்டும் எனவும் விட்டுள்ளார். அதுதான் இன்றைய லேடஸ்ட் கதாசிரியர்களின் டெக்னிக் ஆக இருக்குமோ என்னவோ !

      //மூன்று கதைகளையும் தங்கள் பாணியில் திறனாய்வு செய்து அவைகளை படிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள். பாராட்டுகள்! //

      தங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவங்களுக்கும், ஊக்கமளிக்கும் உன்னதமான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    3. நடன சபாபதி சார்! உங்கள் விரிவான கருத்தும், வை.கோ சாரின் பதிலும் மகிழ்ச்சியளிக்கின்றன. உணர்வு நிலைகளின் ஆராட்டம் புனைவாக நெய்யப்படும் போது, அந்த உணர்வுகளின் முற்று பெறாமையும், எதிர்வினையும் சோகமாகப் படலாம்.
      உறுதியான முடிவுகளை புனைவுகள் தருதல் கூடாது என்பது என் கருத்து. புனைவாளன் சம்பவக் கோர்வையை நுணுக்கமாக பதிவு செய்தபின் யூகத்தை வாசிப்பவனுக்கே விடுதல் முறையான இலக்கிய உத்தி. வாசிப்பவர் தன் அனுபவத்தால் சொல்லாமல் விட்டதை இட்டு நிரப்புகிறார். பல சமயங்களில், எழுத்தாளன் மனவோட்டத்தைவிட வாசகன் பங்களிப்பு மேம்பட்டு இருப்பதும் உண்டல்லவா?இந்த இந்தப் புத்தகத்தில் என்னுரையென முதலில் சிறுகதைப் புனைவு பற்றிய என் பார்வையை பதிவு செய்திருக்கிறேன். அவசியம் படியுங்கள் நடனசபாபதி சார்.

      நீக்கு

  19. எழுத்தாளர் திரு மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள் சிறந்த கதைகளைப் படைத்தமைக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி June 3, 2017 at 5:04 PM

      //எழுத்தாளர் திரு மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள் சிறந்த கதைகளைப் படைத்தமைக்கு! //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  20. இன்று தான் புத்தகம் கிடைக்கப்பெற்றேன். இனிமேல் படிக்கணும்.

    வைகோ சார், உங்கள் விமரிசனமும் படங்கள் பகிர்வும் வழக்கம் போல் அசத்தல்! இந்தப் படங்களை மோகன் ஜி முகநூலிலும் பகிர்ந்திருந்தார். கவிக்கோவின் இரங்கல் கவிதை உட்பட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam June 3, 2017 at 6:32 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இன்று தான் புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.//

      அப்படியா! மிகவும் சந்தோஷம்.

      //இனிமேல் படிக்கணும்.//

      மெதுவாப் படியுங்கோ. FOREIGN RETURNED ஆன உங்களுக்கு ஒரு வேலையா இரண்டு வேலையா? தினமும் ஆத்து ROUTINE காரியங்கள் + தினமும் நிறைய தளங்களில் நிறைய பதிவிடுதல் + ஆங்காங்கே (என்னைத் தவிர) பலருக்கும் பின்னூட்டமிடுதல் + FACE BOOK + GOOGLE PLUS + TWITTER என எத்தனை எத்தனை இடங்கள் + எத்தனை எத்தனை வேலைகள். :) நினைத்தாலே எனக்கு ஒரே மயக்கமாக வருகிறது.

      //வைகோ சார், உங்கள் விமரிசனமும் படங்கள் பகிர்வும் வழக்கம் போல் அசத்தல்!//

      தங்களின் அசத்தலான இந்தக்கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      //இந்தப் படங்களை மோகன் ஜி முகநூலிலும் பகிர்ந்திருந்தார். கவிக்கோவின் இரங்கல் கவிதை உட்பட!//

      நானும் இதனைக் கேள்விப்பட்டேன். நான் பொதுவாக ஃபேஸ்-புக் பக்கம் செல்வதோ, யாருக்கும் LIKE or COMMENTS போடுவதோ இல்லை. என் பதிவுகளை விளம்பரப்படுத்த மட்டுமே அங்கெல்லாம் நான் செல்வது என் வழக்கமாகும். :)

      ஃபேஸ்-புக், கூகுள்+ போன்ற அவையெல்லாம் ஒரு பெரிய கடல் மாதிரி. அங்கு போய் மாட்டினால் அதிலிருந்து மீண்டு வருவதே, நீச்சல் தெரியாத எனக்கு மிகவும் கஷ்டமாகி விடுகிறது. அதனால் அங்கெல்லாம் நான் அநாவஸ்யமாகப் போய் மாட்டுவதே இல்லை. :)

      நீக்கு
    2. கீதா அக்கா. நீங்கள் சொல்வது போல் வை.கோ சாரின் விமரிசனம் அசத்தலானது.
      நான் முகநூலில் பதிவுகள் இட்டாலும், பிளாகில் புழங்குவது போல் ஒட்டுதல் வாய்ப்பதில்லை. இதில் வைகோ சாரின் பார்வையை அப்படியே ஏற்கிறேன்

      நீக்கு
  21. வழக்கம்போல் விமர்சனப் பதிவு
    அருமையிலும் அருமை

    ரேஸன் கடைக்கு கொஞ்சம் தாமதமாக
    நிக்கிற க்யூவைப்பார்த்து ஏற்படும் மலைப்பு
    கொஞ்சம் தாமதமாக
    உங்கள் பக்கம்வரவும் வருகிறது

    ஆனாலும் கொஞ்சம் தாமதமாக
    வருவதில் கொஞ்சம் நன்மையும் இருக்கிறது

    பதிவர்களின் பின்னூட்டமும்
    அதற்குத் தங்களின் அற்புதமான
    பதில்களும் போனஸாகக் கிடைக்கிறது

    ஒரு பதிவுக்குத் தாங்கள் எடுத்துக் கொள்ளும்
    உழைப்பும் மலைப்பை ஏற்படுத்துகிறது

    இந்த விஷயத்தில் மிகச் சரியாகச் சொன்னால்
    நானெல்லாம் சோப்ளாங்கி

    உங்களிடம் பதிவர்கள்
    கற்றுக் கொள்ள்ளும்படியான விஷயங்கள்
    நிறைய இருக்கிறது

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 3, 2017 at 8:02 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //வழக்கம்போல் விமர்சனப் பதிவு அருமையிலும் அருமை//

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //ரேஸன் கடைக்கு கொஞ்சம் தாமதமாக நிக்கிற க்யூவைப்பார்த்து ஏற்படும் மலைப்பு
      கொஞ்சம் தாமதமாக உங்கள் பக்கம் வரவும் வருகிறது.//

      ஒருவேளை என் சரக்குகளும் ரேஷன் கடை சரக்குகள் போல பாடாவதியாக இருக்குமோ என்னவோ ! :)))))

      //ஆனாலும் கொஞ்சம் தாமதமாக வருவதில் கொஞ்சம் நன்மையும் இருக்கிறது. பதிவர்களின் பின்னூட்டமும் அதற்குத் தங்களின் அற்புதமான பதில்களும் போனஸாகக் கிடைக்கிறது//

      ரேஷன் கடை சரக்குகள் போல எடை குறைவு என்பதே ஏதும் இல்லாமல், நிறைய எடையுடன் கிடைக்கும்தான். ’கழுதை _ _ _ கை நிறைய’ என்று ஏதோ சொல்லுவார்களே. அதுபோலவும் ஒருவேளை இது இருக்கலாம். :))))))

      //ஒரு பதிவுக்குத் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உழைப்பும் மலைப்பை ஏற்படுத்துகிறது//

      இது தெரியாமல் என் வீட்டுக்காரி இதெல்லாம், காலணாவுக்குப் பிரயோசனம் இல்லாத சுத்த வெட்டி வேலைகள் மட்டுமே ஸ்வாமீ .... என்று அடிக்கடி கோபித்துக்கொள்கிறார்கள், ஸார்.

      //இந்த விஷயத்தில் மிகச் சரியாகச் சொன்னால் நானெல்லாம் சோப்ளாங்கி//

      அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஸார். உங்களின் அன்றாடப் பதிவுகளும், மற்றவர்களுக்கான ஊக்கமளிக்க்கும் உங்களின் பின்னூட்டங்களும் தரத்தினில் என்றுமே தங்கம் மட்டுமே, ஸார்.

      //உங்களிடம் பதிவர்கள் கற்றுக் கொள்ளும்படியான விஷயங்கள் நிறைய இருக்கிறது//

      பின்னூட்டப்பகுதியில் வெட்டியாக ஏதேதோ சொல்லிக்கொண்டு போவதால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை மட்டுமே பிற பதிவர்கள் என் பதிவுகள் மூலம் கற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமே இங்குள்ள மிக முக்கியமான விஷயம் என நான் நினைக்கிறேன். :)))))

      //வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. மிக அழகாகச் சொன்னீர்கள் ரமணி சார்! ரசித்தேன்.

      நீக்கு
  22. நூலின் மதிப்பீடானது நூலாசிரியரின் திறமையை அருமையாக வெளிக்கொணரும் வகையில் உள்ளது. நூலாசிரியரைப் பற்றியும், பகிர்ந்த உங்களைப் பற்றியும் நாங்கள் அறிவோம். உங்கள் இருவருக்கும் எங்களது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd),
      Tamil UniversityJune 4, 2017 at 6:42 AM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //நூலின் மதிப்பீடானது நூலாசிரியரின் திறமையை அருமையாக வெளிக்கொணரும் வகையில் உள்ளது.//

      மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      //நூலாசிரியரைப் பற்றியும், பகிர்ந்த உங்களைப் பற்றியும் நாங்கள் அறிவோம். உங்கள் இருவருக்கும் எங்களது பாராட்டுகள்.//

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
    2. மிக்க நன்றி முனைவர் சார்!

      நீக்கு
  23. அன்பான வணக்கம். பதிவுலகில் தாங்கள் செய்துவரும் பணி வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... June 4, 2017 at 4:04 PM

      //அன்பான வணக்கம்.//

      வாங்கோ, அன்பான வணக்கங்கள்.

      //பதிவுலகில் தாங்கள் செய்துவரும் பணி வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் சார்.//

      தங்களின் அன்பான அபூர்வ வருகையும் என்னை வியக்க வைத்து, வாழ்த்துகளும் மகிழ்விக்கின்றன.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
    2. ஜனா சார்!
      வை.கோ சாரின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது!

      நீக்கு
  24. கியூவைச் சொல்ல நினைத்தேன்
    ரேஷன் கடை கியூதான் நினைவுக்கு
    வந்தது

    நான் நினைத்த ரேஷன்கடையில்
    பொருட்கள் தரமானதாகவும்
    அளவு குறையாமலும்
    மக்கள் அனைவரும் விரும்பிச் செல்லும்படியாகவும்
    உள்ளஅதிசயக்கடை

    எனவே அடக்கத்தின் பொருட்டு நீங்கள்
    சொன்ன உங்கள் பின்னூட்டத்தை
    மறுபரிசீலனை செய்யும்படி
    கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சாரை வழிமொழிகிறேன் .

      நீக்கு
    2. Ramani S June 4, 2017 at 6:38 PM

      வாங்கோ மை டியர் ரமணி ஸார்.

      //கியூவைச் சொல்ல நினைத்தேன் - ரேஷன் கடை கியூதான் நினைவுக்கு வந்தது//

      பொதுவாக க்யூ என்றாலே நமக்கு ரேஷன் கடைகள், சினிமாக்கொட்டகைகள், இரயில்-பஸ் நிலைய டிக்கெட் கெளண்டர்கள், இன்றைய தமிழக டாஸ்மாக் கடைகள், தீபாவளி நேர ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் முதலியன மட்டுமே நம் நினைவுக்கு வருவது சகஜமே.

      //நான் நினைத்த ரேஷன் கடையில் பொருட்கள் தரமானதாகவும் அளவு குறையாமலும் மக்கள் அனைவரும் விரும்பிச் செல்லும்படியாகவும் உள்ள அதிசயக்கடை//

      என் எண்ணமும், எதிர்பார்ப்பும் அதுவே தான். அரசாங்க மானியத்தில், ஏழை எளிய மக்களின் நன்மைக்காக அளிக்கப்படும், அனைத்து ரேஷன் கடை பொருட்களும், விலை மலிவாகவும், மிகத் தரமானதாகவும், மிகச்சரியான எடை அளவிலும், கும்பல் க்யூ ஏதும் இல்லாமல் எல்லோருக்கும் எல்லா நேரமும் இல்லையெனச் சொல்லாமல், சுலபமாக வழங்கப்பட வேண்டும் என்பதே.

      இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு மக்களின் வீடுகளுக்கும் போய் ரேஷன் பொருட்கள் அனைத்துமே DOOR DELIVERY செய்யப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

      ஆனால் இவையெல்லாம் ஒழுங்காக நடக்காமல், நடக்கவும் விடாமல், சில சமூக விரோதிகளால் இவற்றிலெல்லாம் அவ்வப்போது ஏதேதோ ஊழல்கள் நடந்துகொண்டே இருப்பதாக அறிவதால், ரேஷன் கடை க்யூ வரிசை என்றாலே ஏதோ நமக்கு ஓர் பீதியை உண்டாக்கி, தவறான அபிப்ராயத்தை நம் மனதில் ஏற்படுத்தி விடுவதாக அமைந்துவிட்டது என்பதும் மிகவும் துரதிஷ்டமானதே.

      //எனவே அடக்கத்தின் பொருட்டு நீங்கள் சொன்ன உங்கள் பின்னூட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.//

      அவையெல்லாம் ஒரு ஜாலிக்காக மட்டுமே, என்னை நானே தாழ்த்திக்கொண்டு, ஒருவித தன்னடகத்துடன் எழுதியவை மட்டுமே. தவறாக ஏதும் நினைக்காதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.

      உங்களை நான் நன்கு அறிவேன். என்னை நீங்கள் நன்கு அறிவீர்கள். நம்மை நாம் நன்கு அறிவோம். பிறகென்ன கவலை.

      Take it Easy Sir ! வாழ்த்துகள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  25. கோபு சார்... பயணத்தில் இருக்கிறேன். முழுசா படிச்சுட்டுதான் பின்னூட்டம் இடுவேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் June 5, 2017 at 6:04 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //கோபு சார்... பயணத்தில் இருக்கிறேன். முழுசா படிச்சுட்டுதான் பின்னூட்டம் இடுவேன். நன்றி.//

      ஓக்கே .... ஓக்கே .... பயணமெல்லாம் முடிந்து மெதுவாகவே வாங்கோ. மெதுவாகவே படியுங்கோ .... மெதுவாகவே பின்னூட்டம் இடுங்கோ.

      தகவலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  26. கோபு சார்..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி June 6, 2017

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      என்னை இன்னும் நீர் உம் மனதின் ஓர் ஓரத்திலாவது நினைவு வைத்துக்கொண்டுள்ளதே எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. :)

      //கோபு சார்..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?//

      நான் பேசுவது அனைத்துமே எப்போதும் உண்மையோ உண்மைதானே .. எழுத்தில் அது கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும்கூட.

      நீக்கு
    2. மூவார் உண்மை தெரிஞ்சாகணும்னு சொன்னாலே... ஏதோ இருக்கு.....

      நீக்கு
  27. இந்த சிறுகதைகளை எல்லாம் எழுதினது யார்..
    நீங்களா, இல்லை மோகன்ஜியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி June 6, 2017

      //இந்த சிறுகதைகளை எல்லாம் எழுதினது யார்..
      நீங்களா, இல்லை மோகன்ஜியா?//

      ஆஹா, குட் கொஸ்ட்சன் (QUESTION). எனக்கும் இதில் சந்தேகம் வந்ததென்னவோ உண்மையே.

      என்னைப்போலவே அவரும் எழுத ஆரம்பித்துள்ளாரோ என்னவோ என முதலில் நினைத்துக்கொண்டேன்.

      பிறகுதான் புரிந்தது .... அவரின் எழுத்துக்கள் வேறு. என் எழுத்துக்கள் வேறு என.

      எழுத்து நடையில் ஆங்காங்கே சில ஒற்றுமைகள் இருப்பதை நானும் பார்த்து வியந்து தப்புக்கணக்குப் போட்டுவிட்டேன்.

      அவர் எங்கோ ..... இமயமலை உச்சியில் ......

      நானோ நம்ம ஊர் திருச்சி மலைக்கோட்டையின் மலை அடிவாரத்தின் அடியில் மட்டுமே. :)

      வரவர படியேறி மேலே போய் அந்த உச்சிப்பிள்ளையாரை தரிஸித்து வரக்கூட முடியாமல் முட்டி வலியும் முழங்கால் வலியுமாக .....

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      நீக்கு
  28. பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி June 6, 2017

      //அடேங்கப்பா..என்ன ஒரு இலக்கிய திறனாய்வு?//

      ஆஹா! என்னை வைத்து ஏதோ காமெடி செய்கிறீர்கள் என எனக்கும் இப்போது நன்றாகவே புரிகிறது.

      இலக்கியத் திறனாய்வாவது ... வெங்காயமாவது !

      அதைப்பற்றியெல்லாம் ஏதும் தெரியாத சுத்த சூப்பர் வழுவட்டையல்லவா நான். :)

      சுத்த வழுவட்டை + சூப்பர் வழுவட்டை பற்றி அறிய இதோ இணைப்பு:

      https://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

      நீக்கு
    2. உங்களின் இந்தப் பதிவு உங்கள் பேர் சொல்லிக் கொண்டு கிடக்கும் கோபு சார்!

      நீக்கு
  29. ஜே ஜேன்னு ஓடிண்டு இருக்கறதை எப்படி நான் 'மிஸ்' பண்ணினேன்?
    தெரியலையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி June 6, 2017

      //ஜே ஜேன்னு ஓடிண்டு இருக்கறதை எப்படி நான் 'மிஸ்' பண்ணினேன்? தெரியலையே?//

      தாங்கள் இதுவரை ’மிஸ்’ பண்ணியுள்ள ‘மிஸ்கள்’ ஏராளமாக்கும். :)

      இருப்பினும் தங்களின் வருகைக்கும் நான் 100 மார்க்குகள் தர நினைக்கிறேன்.

      உடனே 100க்கு 100 மார்க்குகளோ என தப்புக்கணக்குப் போட்டுடாதீங்கோ ஸ்வாமீ.

      100 Marks Out of 858 Marks ONLY.

      இது நம் மோகன்ஜிக்கு நான் அளித்துள்ள மார்க்குகளைவிட நான்கு மடங்கு அதிகம்தானாக்கும்.

      மோகன்ஜி அனுப்பிவைத்துள்ள, இந்த நூல் தங்களின் அன்புக்கரங்களால் மட்டுமே தொட்டு, முத்தமிடப்பட்டு, எனக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதால் மட்டுமே அது ஜே ஜேன்னு ஓடிண்டு இருக்குதாக்கும்.

      எனக்காக இல்லாவிட்டாலும், உங்கட மோகன் ஜிக்காகவாவது இங்கு வருவீர்கள் என நானும் எதிர்பார்த்தேனாக்கும். :)

      தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும், கேள்வி கேட்டே வறுத்தெடுத்துள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. என்னது?? என்னை விட மூவாருக்கு நாலு மார்க் அதிகமா?
      செல்லாது... செல்லாது... ஊர்க்காரப் பாசம் இருக்கலாம். அதுக்காக இப்படியா? மறுபரிசீலனை செய்யுமாறு கோபுசாரிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
      /'உங்கட மோகன்ஜிக்காகவும்' /
      மூவாரின் மோகன்ஜியாக நான் இருப்பது உலகறிந்த உண்மை.

      இப்போ எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...... 'அப்போ நான் உங்கட மோகன்ஜி' இல்லையா கோபு சார்?!

      நீக்கு
  30. அருமையான சிறுகதைகள்

    //"நாட்டிகார்னர் சதுரத்தை மூடியபடி அதன்மேலாக அந்த மேஜை நகர்ந்தது. மேஜை மீன்தொட்டியை மீண்டும் சுமந்தது. புதுஇடம் கண்ட மீன்கள், நாட்டிகார்னருக்குத் தள்ளப்பட்டது தெரியாமல், சந்தோஷமாய் நீந்தித் திளைத்தன"//

    முழுக்கதையையும் புரிய வைத்த கடைசி வரிகள். அருமை.

    கோபு அண்ணா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 12, 2017 at 8:00 PM

      //அருமையான சிறுகதைகள். கோபு அண்ணா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.//

      வாங்கோ ஜெயா. வணக்கம். உங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெ.

      நீக்கு
    2. ஜெயந்தி ஜெயா மேடம் ! உங்கள். வாழ்த்துக்கு நன்றி !

      நீக்கு
  31. நிறைய எழுதனும் இயலாமை! இருவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் இராமாநுசம் June 30, 2017 at 1:29 PM

      வாங்கோ ஐயா, வணக்கம் + நமஸ்காரம்

      //நிறைய எழுதனும் இயலாமை! இருவருக்கும் வாழ்த்துகள்!//

      தங்களின் அன்பான, அபூர்வமான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  32. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கதைகளின் சிறு அறிமுகமே பெரும் ஆவலைத் தூண்டுகின்றன. நாட்டிகார்னர் குறித்த என் கவலை கவலையோடு நின்றுவிட்டது. மோகன்ஜி அழகான கதையாக்கி பலரையும் சிந்திக்கச் செய்துவிட்டார். பாராட்டுகள் மோகன்ஜி. பதிவுடன் இணைக்கப்பட்டிருக்கும் படங்களும் சிறப்பு. எப்படிதான் படங்களைத் திரட்டுகிறீர்களோ என்று வியப்பாக உள்ளது கோபு சார். மோகன்ஜியின் இலக்கியப் பரிமாணத்தை எடுத்துக் காட்டும் படங்களுக்காய் சிறப்பு நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி July 3, 2017 at 5:55 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கதைகளின் சிறு அறிமுகமே பெரும் ஆவலைத் தூண்டுகின்றன.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //பதிவுடன் இணைக்கப்பட்டிருக்கும் படங்களும் சிறப்பு. எப்படிதான் படங்களைத் திரட்டுகிறீர்களோ என்று வியப்பாக உள்ளது கோபு சார். மோகன்ஜியின் இலக்கியப் பரிமாணத்தை எடுத்துக் காட்டும் படங்களுக்காய் சிறப்பு நன்றி கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆழமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      珞

      நீக்கு
  33. அன்புக்கு நன்றி கீதா! இந்தப் பதிவுகளை கலாபூர்வமாக செதுக்கியிருக்கிறார் கோபு சார்! அவர் உழைப்பு பெரியது.

    பதிலளிநீக்கு