என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! நிறைவுப்பகுதி-7

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html
GENERAL MESSAGE ABOUT OUR MEETING

பகுதி-2 க்கான இணைப்பு:
IMPORTANCE TO RUKMANI SESHASAYEE MADAM

பகுதி-3 க்கான இணைப்பு:
IMPORTANCE TO OUR RADHABALU

பகுதி-4 க்கான இணைப்பு:
IMPORTANCE TO ALL GROUP MEMBERS

பகுதி-5 க்கான இணைப்பு:
IMPORTANCE TO OUR RANJANI MADAM

பகுதி-6 க்கான இணைப்பு:
IMPORTANCE TO OUR GEETHA MAMI


22.02.2015 ஞாயிறு 
பதிவர் சந்திப்பு
ஸ்ரீரங்கம்,  திருச்சி.
நிறைவுப்பகுதி-7
Importance to all Participants in General
and
To our 'Aranya Nivas' in particular

கோபு + திரு. நாராயணன் +  
ஆரண்யநிவாஸ் + திரு. மஹாலிங்கம்
திருமதி. கீதா மாமி + திருமதி. ஆதி வெங்கட் +
அஷ்டாவதானி திரு. மஹாலிங்கம் + திரு. தி. தமிழ் இளங்கோ 
திருமதிகள்:
ராதாபாலு + ரஞ்ஜனி + ருக்மணி + கீதா + ஆதி 

திருமதிகள்:
ராதாபாலு + ரஞ்ஜனி + ருக்மணி + கீதா + 
ருக்மணி மாமி அவர்களின் உதவியாளர் + 
ஆதி + செல்வி: ரோஷ்ணி
சிற்றுண்டி உண்ணும்
திரு. நாராயணன் + திருமதி. ரஞ்ஜனி +
திருமதி. ராதாபாலு. 
திருமதி. ருக்மணி அவர்களின் 
அன்பான நேரடி மேற்பார்வையில் விருந்து உபசாரம்.

ஸ்வீட்ஸ் மற்றும் பழங்கள் மட்டும் 
உண்ட களைப்பில் திரு. ராமமூர்த்தி +
 சிற்றுண்டி உண்ணும்
செல்வி: ரோஷ்ணி +
திருமதி. ஆதி வெங்கட் +
திருமதி. ரஞ்ஜனி தம்பதியினர். 

சிற்றுண்டி உண்ணும் அடியேன் VGK + 
திரு. மஹாலிங்கம் அவர்கள்.



சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த கையோடு
சூடான சுவையான காஃபி, 
காகிதக்கோப்பைகளில்,
[காஃபி சாப்பிடும் வழக்கமே இல்லாத
திருமதி. ஆதி வெங்கட் அவர்களால்]
ஒரு டிரேயில் வைத்தபடி,
அனைவருக்கும் அழகாக அளிக்கப்பட்டது. 

என் வழக்கப்படி ஒரு அரை கப் மட்டும் 
கூடுதலாகவே கேட்டு வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தேன்.


இவ்வாறாக பதிவர் சந்திப்பு விழா 
இனிதே நடைபெற்று முடிந்தது.




முன்னதாகவே சரியான நேரத்தில் 
வருகை தந்திருந்த 
திரு. தமிழ் இளங்கோ போன்ற 
ஒருசிலர் மட்டும் ஏதேதோ கொஞ்சம் 
பதிவுகள் சம்பந்தமான சில பொதுவான 
விஷயங்களைத் தங்களுக்குள் மட்டும்
பேசிக்கொண்டிருந்தார்கள்.




இந்த இனிய சந்திப்பு பற்றி 
விழாவினில் கலந்துகொண்ட
மற்ற பதிவர்களும் அவரவர்கள் பாணியில் 
அவரவர்களின் வலைத்தளத்தினில் 
பதிவுகள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளனர். 

அவற்றிற்கான இணைப்புகள்:





இந்தத்தொடர் இப்போதைக்கு 
இத்துடன் மிகச்சுருக்கமாக :) 
நிறைவடைகிறது. 


ஏற்கனவே  http://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html இந்த இணைப்பின் இறுதியில் என்னால் தெரிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் திருமதி. ரஞ்ஜனி அவர்களின் பெயரும் இப்போது சேர்ந்து, நான் இதுவரை சந்திக்க நேர்ந்துள்ள பதிவர்கள் + எழுத்தாளர்கள் எண்ணிக்கை: 38+1=39 என ஆகியுள்ளதில் மகிழ்ச்சியே. 


NUMBER : 39


 


முப்பெரும் விழா பற்றி

சந்திப்பின் இறுதியில் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அதாவது வரும் மார்ச் மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் அவர்களின் ‘ஆரண்யநிவாஸ்’ தோட்டத்தில் ஓர் முப்பெரும் விழா கொண்டாட இருப்பதாகவும் அதற்கு அனைவரும் அன்புடன் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

முப்பெரும் விழா பற்றிய விபரங்கள்:



1] சாதனைகள் நிகழ்த்திக் காட்ட நினைக்கும் சுமார் 70 வயது அஷ்டாவதானியான திரு. மஹாலிங்கம் [மாலி] அவர்களின் திறமைகளை நாம் எல்லோரும் நேரில் கண்டு களிப்பது, பாராட்டுவது, கெளரவிப்பது. 




2] தன் மாமனார் + மைத்துனர்களுக்குச் சொந்தமானதும், மிகப்பிரபலமானதுமான, திருச்சி .... ஆதிகுடி ஹோட்டலின் ருசிகரமான பல்வேறு பதார்த்தங்களை ஆரண்ய நிவாஸுக்கே வரவழைத்து, வருகை தரும் அனைவருக்கும் தடபுடலாக விருந்தளித்து மகிழ்விப்பது.




  







3] ஏற்கனவே ஏராளமாகப் பூப்பெய்தியுள்ள நிலையினில் இருக்கும் ’ஆரண்ய நிவாஸ்’ தோட்டத்தின், மாமரங்களில் காய்க்க உள்ள மாவடுக்களை, வருகை தரும் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோவுக்குக்குறையாமல் அளிப்பது. :)





சிலர் ’வாய் புளிச்சுதா ..... மாங்கா புளிச்சுதா’ ன்னு ஏதாவது பயனில்லாத பேச்சினை மட்டுமே பேசுவார்கள். நம் ராமமூர்த்தி அப்படியெல்லாம் பேச மாட்டார். ’சொல்வதைச் செய்வார். செய்வதை மட்டுமே சொல்வார்’ என நம்புவோமாக ! 

சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன் மரங்களில் போதுமான அளவு காய்கள் தேறாவிட்டாலும் கூட, வெளி மார்க்கெட்டிலிருந்தாவது வாங்கி எப்படியும் அளித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 



என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கவாவது மீண்டும் ஒரு முறை ஆரண்ய நிவாஸ் செல்ல ஆயத்தமாகவே உள்ளேன். 


 

புத்தம் புதிய முரட்டு ரக A/C கார் சமீபத்தில் அவர் வாங்கியிருப்பதால் என்னை ஒரு அடிகூட நடக்கவிட அவர் விரும்பவே மாட்டார். போகவர எப்படியும் எனக்குப் பிரச்சனை இருக்காது என்ற நம்பிக்கையும் எனக்கு மிக அதிகமாகவே உள்ளது. 



இருப்பினும் நான் மட்டும் தனியாகவா வருவேன்? வழக்கம்போல நம் அன்புக்குரிய ராதாபாலு, அவரின் கணவர், நம் அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ ஆகியோருடன் மட்டும்தான் அந்த முரட்டு ரக A/C காரில் என் பயணம் அன்று இருக்கும். :)  

ஒருவேளை என் மேலிடம் கூட என்னுடன் வருகை தந்தாலும் ஆச்சர்யம் ஏதும் இல்லைதான். இதனால் எங்கள் இருவருக்குமாக 5+5=10Kg. வடுமாங்காய் கிடைத்தாலும் கிடைக்கலாம் அல்லவா ! ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !! :)

அந்த நாளும் வந்திடாதோ என்ற ஆவலுடன் .... 


735 



என்றும் அன்புடன் தங்கள்
 

[வை.கோபாலகிருஷ்ணன்]

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-6

திருமதி. ருக்மணி சேஷசாயி என்றாலே
குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்து 
பல்வேறு நீதிக்கதைகளை குழந்தைகளுக்குச் சொல்பவர்
என நம் எல்லோருக்குமே மிக நன்றாகத் தெரியும்

இங்கு பாருங்கோ .... குழந்தை ரோஷ்ணிக்கு 
அதேபோல நேரிலேயே வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்!

{ ”நேராகப் போய் Right இல் திரும்பு .. 
Wash Basin வரும் ” என்று :) }

’எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு’
சிறுகதைத்தொகுப்பு நூல் திருமதி. கீதா சாம்பசிவம்
அவர்களுக்கு நான் அளித்தபோது.

{நின்ற நிலையில் சிரித்தமுகத்துடன் கைதட்டுபவர் நம் ராதாபாலு 
அருகில் அமர்ந்திருப்பவர்: ருக்மணி மாமி}


நம் கீதா மாமியை ஏற்கனவே 06.10.2013 அன்று இரவு  
 10 நிமிடங்கள் மட்டுமே நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

அப்போது நவராத்திரி சீஸன் ஆனதால் மாமி 
பட்டுப்புடவையுடனும், நகை நட்டுக்களுடனும்
பலர் வீடுகளுக்கு சுண்டல் கலெக்‌ஷனுக்காகச் சென்றுவந்து 
சுண்டல் சாப்பிட்ட மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தார்கள். 
ஜகத்ஜோதியாகவும் காட்சியளித்தார்கள்.
அன்று நானே என் கேமராவில் எடுத்த புகைப்படம் இதோ:


 

இப்போது ஆளே அடையாளம் தெரியாமல்
கறுத்துப் போய் மிகவும் இளைத்தும் விட்டார்கள்.

இதனால், இவர்கள் தான் கீதா மாமி என நம் ராதாபாலுவிடம்
அடித்துச் சொல்ல முடியாமல் நான் மிகவும் தடுமாறிப் போனேன்.

”சற்றே கறுத்துப்போய் 
மிகவும் இளைத்துத்தான் போய் விட்டாள்”
என்பதைத் திரு. சாம்பசிவம் மாமா அவர்களும் என்னிடம்
 மிகுந்த வருத்தத்துடன் ஒத்துக்கொண்டார். :)

திரு. சாம்பசிவம் மாமா அவர்கள் ஏனோ 
மேலே நடக்கும் பதிவர் சந்திப்பினில்
கலந்துகொள்ள வராமல் மாமியை மட்டும் வண்டியிலிருந்து
கீழே இறக்கிவிட்டு விட்டு என்னுடன் மட்டும் 
ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு
ஜாலியாக பேரெழுச்சியுடன் கம்பி நீட்டிவிட்டார்.

கோபு + திரு.நாராயணன் + 
ஆரண்யநிவாஸ் + திரு. தமிழ் இளங்கோ

பின்புறம் இடதுபுறமாக நிற்பவர்: 
மணக்கும் மல்லிகைப் 
பூச்சரத்தினை வந்திருக்கும் 
அனைத்துப் பெண்மணிகளுக்கும் 
பிரித்தளிக்க ஆயத்தமாகிவரும் 
திருமதி ஆதிவெங்கட் அவர்கள்.


பெண்கள் அனைவரும் பூச்சூடி மகிழும்போது

நாம் ஆணாகப் பிறந்துவிட்டோமே என 
ஆண்களாகிய நாங்கள் நினைப்பதுண்டு.
ஆனால் அதனை வெளியே சொல்லிக்கொள்வது இல்லை.

சொன்னால் எங்களுக்கெல்லாம்
’காதிலே பூ’ 
வைத்து விடுவார்களே
இந்தத்தாய்க்குலம் ! :)




என் ஒருசில சொந்தக்கருத்துக்கள்:




அன்று நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டபடி அனைத்துப்பதிவர்களும் [100%] சந்தித்துக்கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை இதனால் அன்று இரவு மழை கொட்டோகொட்டென கொட்டிவிடுமோ என நான் சற்றே பயந்தேன். இருப்பினும் அன்பென்னும் மழையில் மட்டுமே நாங்கள் அனைவரும் அன்று நனைந்தோம்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், பதிவர் செல்வி. மாதங்கி மாலி அவர்கள் சார்பில் அவர்களின் அன்புத்தந்தை திரு. மஹாலிங்கம் [அஷ்டாவதானி] அவர்களும் வருகை தந்திருந்தது எனக்கு மேலும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கும் தகவல் அளித்து வரவழைத்துள்ள நம் அன்புக்குரிய திரு.ரிஷபன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

திரு. ரிஷபன் அவர்கள் என்னிடம் சொல்லியிருந்தபடி தன் துணைவியாரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வருவார் என நான் எதிர்பார்த்தேன். அவர்களை நீண்ட நாட்களுக்குப்பின் தம்பதி ஸமேதராய் பார்த்து மகிழலாம் என்ற ஆவலுடன் வந்திருந்த எனக்கு, சற்றே ஏமாற்றம் ஏற்பட்டது.

இவ்வளவு தூரம் நாம் படித்துப்படித்துச் சொல்லியும், நாம் எல்லோருமே மிகச்சரியாக 4.40க்குள் அங்கு கூடியிருந்தும், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களும், சந்திப்பின் முக்கிய நாயகர்களான திருமதி. ரஞ்ஜனி தம்பதியினரும் மிகவும் தாமதமாக வருகை தந்தது என்னால் ஏனோ ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் இருவரும் நம்மைப்போலவே மிகச் சரியான நேரத்தில் வருகை தந்திருந்தால், நாம் இந்த இனிய சந்திப்பினை மேலும் இனிமையாகக் கொண்டாடி இருக்கலாம்.

எல்லோரையும் அழகாக ஒன்றுகூட்டி, திரு. ரிஷபன் அவர்களை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆக்கி, அவரைவிட்டே ஓர் அறிமுக உரையாற்றச்சொல்லி, அதன்பிறகு ஒவ்வொரு பதிவரும் அவரவர்களைப் பற்றி ஓர் 5 அல்லது 10 நிமிடங்களாவது பேசச்சொல்லி, அனைவரும் அனைவரின் பேச்சினையும், குரலையும், தனித்திறமைகளையும், விருப்பு வெறுப்புக்களையும் கேட்டு மகிழ்ந்திருக்கலாம். இவர்கள் இருவரின் மிகத்தாமதமான வருகையால் அதுபோலெல்லாம் செய்ய இயலாமல் மிகவும் நேர நெருக்கடியாகிவிட்டது.

அதுபோல தனக்கு ஏதோ தலைபோகிற அவசர வேலைகள் இருப்பதாகச் சொல்லி ஸ்ரீரங்கத்திலேயே குடியிருக்கும் கீதா மாமி முதல்பந்தியில், அதுவும் தனிப்பந்தியாக, சுடச்சுட அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு சென்றது ஏன் என்பது பிறகுதான் நம் அனைவருக்குமே புரியவந்தது. இந்த சந்திப்பு நிகழ்ச்சி முற்றிலும் முடிந்த அன்று இரவு 7.30க்குள், இந்த நம் சந்திப்பு பற்றி ஓர் பதிவே எழுதி வெளியிட்டு அசத்திவிட்டார்கள். அதுதான் அவர்கள் சொல்லிச்சென்ற அந்த தலைபோகிற அவசர வேலையாக இருக்கக்கூடும் என்பது என் எண்ணம். 

எனினும் அங்கிருந்த சோஃபா செட்டை சற்றே முன்னால் இழுத்துப்போட்டு, உட்கார்ந்த நிலையில் சிலரும், பின்புறம் நின்ற நிலையில் சிலருமாக க்ரூப் போட்டோவாவது எடுத்துக்கொள்ள நமக்குத் தோன்றியதே .... அதில் எனக்குச் சற்றே மகிழ்ச்சி. IN FACT அதில் மட்டும் தான் நாம் அனைவரும் கூட்டமாகக் கூடி மகிழ்ந்துள்ளோம். அது என்றும் நம் பசுமையான நினைவுகளில் நிற்கக்கூடும்.

திருமதி. ரஞ்ஜனி அவர்கள் வந்ததும், ஓர் சின்ன வரவேற்பு, ஸ்வீட் விநியோகம்,  சின்னச்சின்ன அவசர அறிமுகங்கள், அதன்பின் அவர்களின் புத்தக விநியோகம் ... அதன்பின் நம் பிரதான எதிர்பார்ப்பான சாப்பாடுக்கடை ... என ஒருவித அவசரத்தில் எல்லாமே கிடுகிடுவென முடிந்துவிட்டது போன்றதோர் FEELING / ஆதங்கம் எனக்கு. 


அனைவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து, அமர்க்களமாக எல்லாம் நடைபெற்றதில், ருக்மணி மாமி முகத்தில் ஓர் தனி சந்தோஷத்தினை என்னால் காணமுடிந்தது.

மேலும் ஒருசில படங்களுடன், இதன் அடுத்தபகுதி, இந்த பதிவர் சந்திப்புத்தொடரின் நிறைவுப்பகுதியாக இருக்கும்.

தொடரும் 

என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]



வியாழன், 26 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-5

நாங்கள் எல்லோருமே மாலை மிகச்சரியாக 4.45 மணிக்குள் கூடி காத்திருக்க திருமதி. ரஞ்ஜனி மேடமும் அவர்களின் கணவரும் சேர்ந்து சற்றே தாமதமாக [6 மணி சுமாருக்கு] வருகை தந்தார்கள்.

அவர்கள் உள்ளே நுழையும் போது எடுக்கப்பட்ட படங்கள்:

 


ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். ரஞ்ஜனி மேடம் ராதாபாலுவை அப்படியே மகிழ்ச்சியில் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். நான் என் கேமராவை ரெடி செய்வதற்குள் அவர்களின் ’கட்டிப்பிடி வைத்தியம்’ முடிந்துவிட்டது. அதனால் அந்தக் காட்சியை என்னால் உடனடியாகப் புகைப்படம் எடுக்க முடியாமல் போய் விட்டது. :(


என் சிறுகதைத் தொகுப்பு நூல்
‘எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு’
என்னால் திருமதி. ரஞ்ஜனிக்கு அளிக்கப்பட்டது. 


ஒரேயொரு எண்ணிக்கை கூடுதலால்
{ அதுவும் ஓர் அரை டிக்கெட் :) }  
சந்திப்பினில் கலந்துகொண்ட பெண் பதிவர்கள்
மெஜாரிட்டியாகி விட்டனர்.

அவர்கள் ஆறு + நாங்கள் ஐந்து
ஆறையும் ஐந்தையும் சேர்த்தால்
ஆரஞ்சு ஜூஸ் தானே! 
 

இனிமையாகத்தான் இருந்தது ஜூஸ்


மிக்க மகிழ்ச்சியே !

கலந்துகொண்ட அனைத்துப் பெண் பதிவர்களுடனும்
நானும் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்களும்

 திருமதி. ரஞ்ஜனி எனக்கு அளித்த நூல்
 ’விவேகானந்தர்’ 
 திருமதி. ரஞ்ஜனி எனக்கு அளித்த மற்றொரு நூல்
 ’மலாலா - ஆயுத எழுத்து’ 


வலையுலகில் திருமதி. ரஞ்ஜனி அவர்களின் எழுத்துக்களுடன் ஒருகாலத்தில் [2011-2013] எனக்கு மிகவும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அந்தக்காலக்கட்டங்களில் இவர்களின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நான் ஏராளமாகவும் தாராளமாகவும் பின்னூட்டங்கள் அளித்துள்ளேன்.  

2011ம் ஆண்டு இவர்களின் வலைத்தளத்தினில் மிக அதிகமான எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் கொடுத்திருந்தது நான் தான் என WORDPRESS புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன. அதையும் இவர்கள் தன் பதிவினில் பெருமையுடன் வெளியிட்டிருந்தார்கள்.  

அதன் இணைப்பினை இங்கு என்னால் இப்போது காட்டமுடியவில்லை.  ஏனெனில் WORDPRESS SYSTEM அதுபோன்று மிகவும் வழுவட்டையானது. 

ஏனோ BLOGSPOT இல் இல்லாமல் WORDPRESS இல் எழுதுவோருக்கு பின்னூட்டங்கள் இட எனக்குப்பிடிப்பது இல்லை.  அதில் பின்னூட்டம் இட்டாலும் ஒழுங்காக அவை போய்ச்சேராது.

ஒருநாள் (என்னிடம் நான் சேமித்து வைத்துக் கொள்ளாமல்) விடியவிடிய  நான் இவர்களின் பதிவு ஒன்றுக்கு எழுதியனுப்பிய என் பின்னூட்டங்கள் அத்தனையும் இவர்களாலும் வெளியிடப்படாமல் எங்கோ மாயமாக மறைந்து போய் விட்டன. 

அதனால், அதன்பிறகு இவர்களின் WORDPRESS பதிவுகள் பக்கமே நான் ஆர்வத்துடன் செல்வதை அடியோடு நிறுத்திக்கொண்டு விட்டேன். எப்போதாவது அபூர்வமாகச் செல்வது உண்டு. அதேபோல அவர்களும் பிறகு என் வலைத்தளப்பக்கம் அபூர்வமாக மட்டுமே வருவது என வழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள்.

2014ம் ஆண்டு இவர்கள் தன் புத்தக வெளியீடுகளில் தீவிரமாக இருக்க நேர்ந்து விட்டதால் என் பதிவுகள் பக்கம், சுத்தமாக வரவே இல்லை.

என் நிர்பந்தத்திற்காகவே BLOGSPOT இல் ’திருவரங்கத்திலிருந்து’ என ஓர் தனிவலைத்தளப்பதிவு துவங்கினார்கள். ஏனோ அதிலும் இவர்கள் அதிகமாகப் பதிவுகள் தொடர்ந்து எழுதக்காணோம்.  

மிகவும் வழுவட்டையான WORDPRESS என்பதிலேயே மூன்று தளங்கள் வைத்துக் கொண்டுள்ளார்கள். இவர்களின் எழுத்துத் திறமைக்கு மூன்று என்ன முப்பது கூட வைத்துக்கொள்ளலாம் தான். :)

{ ’வழுவட்டை’ என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உடனே செல்ல வேண்டிய பதிவு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html  காணத்தவறாதீர்கள் ! }

மற்றபடி பதிவுலகம் தாண்டி, எங்களுக்குள் இன்றும் நல்லதொரு நட்பு உண்டு. இவர்கள் எப்போதுமே, இன்றும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே உள்ளார்கள். 

இவர்கள் பெங்களூர் விஜயநகரில் உள்ள ’இந்திரப்பிரஸ்தா’ என்ற ஹோட்டலின் மாடியில் உள்ள A/C அறையில், ஏற்கனவே ஒத்துக்கொண்டுள்ளபடி, ஒரு மிகப்பெரிய TREAT எனக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. அது இன்னும் PENDING ஆகவே உள்ளது. ஏனோ அதனை மறந்தாற்போலவே இருக்கிறார்கள். நானும் அதனை இந்த இனிய சந்திப்பினில் நினைவூட்டி அவர்களை தர்மசங்கடப்படுத்த விரும்பவில்லை. :)  


இந்த இனிய சந்திப்பு பற்றிய மேலும் சில செய்திகள் + படங்கள் என் அடுத்த பகுதியினில் கொடுக்க உள்ளேன்.

தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]