About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, February 1, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... நிறைவுப் பகுதி-16 [101-111]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் ....  THE WONDERFUL 101 101. கீதமஞ்சரி 

திருமதி. கீதா மதிவாணன்

அவர்கள் 

15.09.2014 

அனைவருக்கும் வணக்கம். 

கீதா மதிவாணன் என்னும் நான் கீதமஞ்சரி என்ற பெயரில் பதிவுலகில் அடியெடுத்துவைத்து மூன்றரை வருடங்களாகின்றன. சராசரியாக வாரமொரு பதிவு என்ற கணக்கில் இதுவரை 199 பதிவுகள் இட்டுள்ளேன். என்னுடைய இருநூறாவது பதிவை வலைச்சரத்தில் இடுவதை பெருமையாகக் கருதுகிறேன். இதற்கு முன் இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பணியில் இருந்துள்ளேன் என்பதால் என்னைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். 

முதன்முதலில் என்னை வலைச்சர ஆசிரியராகப் பரிந்துரை செய்த திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நியமித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் பணிவான நன்றியும் வணக்கமும்.

 

 


’விமர்சன வித்தகி’

’கீதமஞ்சரி’

திருமதி. கீதா மதிவாணன்
அவர்களின் சாதனைகள்.

-oOo-

VGK's சிறுகதை 
விமர்சனப் போட்டிகள் - 2014
2014 பொங்கல் முதல் 2014 தீபாவளி வரை 
தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு 
மிகச்சிறப்பாக நடைபெற்றன.

மொத்தம் 255 நபர்களுக்கு மேல் 
ரொக்கப்பரிசுகள் அளிக்கப்பட்டன. 
அதற்கான விபரங்கள் அறிய இதோ இணைப்பு: 

பெரும்பாலான போட்டிகளில் 
மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, 
வைரமாக ஜொலிக்கும் தனது எழுத்துத்திறமைகளை 
வெகு அழகாக வெளிக்கொணர்ந்து, 
போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்   
முதல் இடம்
பிடித்து மகத்தானதோர் சாதனை புரிந்துள்ளார்கள்.

ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் அறிவிப்புகளுக்கான இணைப்புகள்:

ஒட்டுமொத்த வெற்றியாளர்களில் முதல் இடம் பெற்றது மட்டுமின்றி 
‘சேஷ் விருது’ 
’கீதா விருது’ 
‘ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது’ 
ஆகிய சிறப்பு விருதுகளும் பெற்றுள்ளார்கள் என்பது 
மேலும் குறிப்பிடத்தக்கது. 

அதற்கான இணைப்புகள்:

எழுத்துலக + பதிவுலக 
சாதனை நாயகி, 
விமர்சன வித்தகி,
போட்டியின் ஆட்ட நாயகி 
‘கீதமஞ்சரி’ 
 திருமதி. கீதா மதிவாணன் 
அவர்களுக்கு நம் மனம் நிறைந்த 
இனிய பாராட்டுக்கள் + 
நல்வாழ்த்துகள். 

 

இத்தகைய பெருமைகள் வாய்ந்த 
கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன்
அவர்களால் வலைச்சரத்தில் 
என் 101வது அறிமுகம் நிகழ்ந்துள்ளது
மேலும் எனக்கு அதிக மகிழ்ச்சியளிக்கிறது.


 

 
இதே தொடர் போட்டிகளில் 
ஒட்டுமொத்த வெற்றிகளில் 
இரண்டாமிடத்தைப் பிடித்தவர்: 
‘மணிராஜ்’ வலைத்தளப்பதிவர் 
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் .

மேலும் இவர்கள் பெற்றுள்ள இதர விருதுகள்:

1) ஜீவீ+வீஜீ விருது


2) கீதா விருது


3) ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது

 
இதே தொடர் போட்டிகளில் 
ஒட்டுமொத்த வெற்றிகளில்
 மூன்றாமிடத்தைப் பிடித்தவர்: 
காரஞ்சன் (சேஷ்) வலைத்தளப்பதிவர் 
திரு. E S சேஷாத்ரி அவர்கள் 

மேலும் இவர் பெற்றுள்ள இதர விருதுகள்:

1) சேஷ் விருது


2) கீதா விருது


3) ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது

 VGK's சிறுகதை விமர்சனப் போட்டிகளில் 
ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்த 
அனைவருக்கும் மீண்டும் 
நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

 

 

 
102. கீத மஞ்சரி 

திருமதி கீதா மதிவாணன் 

அவர்கள்.

21.09.2014


நம் பதிவுலகின் சாதனைத் திலகம் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்கள் தளத்தில் வாராவாரம் சிறுகதை விமர்சனப்போட்டி நடைபெற்று வருவதை அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

இந்தவார சிறுகதை எலிஸபத் டவர்ஸ். எலியால் கிலிபிடித்து எலிபிடிக்க முயன்ற கதையை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார். 


  
 
 

அதற்கான விமர்சனம் எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள்  வரும் வியாழன் 25.09.2014 அன்றே ஆகும். இன்னும் ஐந்து வாய்ப்புகளே உள்ளன. இதுவரை பங்கேற்காதவர்களும் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகள்.

 
103.  Thulasidharan V Thillaiakathu 

26.09.2014


வெள்ளி: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கிள்சின் 5 ஆம் நாள்: பட்டறிவுதான் சிறந்த ஆசிரியன்! தமிழ்ச் சோலையின் ஒரு பகுதி!வை.கோபாலகிருஷ்ணன்

வைகோ என்று பிரபலம்.  எல்லோரும் இவரை அறிவார்கள். 

அருமையான கதைகள் எழுதுவது மட்டுமன்றி பல விமர்சனப் 

போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துபவர்! 

சிறந்த அனுபவம்! மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று!

மனதைத் தொட்ட அவரது சிறுகதை ஒன்றின் சுட்டி இதோ:


முதிர்ந்த பார்வை


                     

 


சுட்டி ஒன்று!  

உள்ளே செல்லுங்கள்.  

வாசிக்க நிறைய இருக்கின்றன!  

நூலகம் எனலாம்.


 

104. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
24.11.2014 
முதல் நாள் - மனம் கவர் பதிவர்கள்


ரிட்டையர் ஆகிவிட்டாலே அக்கடான்னு உட்கார்ந்துகிட்டு சீரியல் பார்க்கவும் கோயில்களுக்கு போகவும் அக்கம் பக்கத்து மனுஷா கிட்ட அரட்டை அடிக்கவும், இன்னும் ஒரு சிலருக்கோ என்ன செய்றது போர் அடிக்கறதேப்பா இந்த ரிட்டையர்மெண்ட் லைஃப் என்று அலுத்துக்கொள்வோர் மத்தியில் இதோ நிறைய போட்டிகள் வைத்து எல்லோர் எழுத்தையும் ஆக்டிவாக வைக்க இவர் வைத்த போட்டிகளே சாட்சி. அலுப்பே இல்லாமல் தொடரும் எழுத்துக்கு சொந்தக்காரர்.. 

 
போட்டிகளில் பரிசு பெற்றோர் மொத்த எண்ணிக்கை: 255 +
போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் 
புள்ளி விபரங்களும் படங்களுடன் காண

 

 
மிகவும் உருக்கமான நன்றி அறிவிப்பு:

 

ஒட்டுமொத்த வெற்றியாளர்கள்  பட்டியல் 
படங்களுடன்  காண

 


 
  
105. Dr. பழனி கந்தசாமி ஐயா 
அவர்கள்

01.12.2014

http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_2.html 

திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


பதிவின் தலைப்பு : VAI. GOPALAKRISHNAN

லிங்க்: http://gopu1949.blogspot.in/


இவர் பதிவையும் இவர் நடத்திய சிறுகதை விமரிசனப்போட்டியைப் பற்றியும் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவருடைய சிறுகதைகள் கலை நயம் மிக்கவை. வாழ்க்கையின் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுபவை. இவரின் கதை எழுதும் திறன் அபூர்வமானது.


பழகுவதற்கு அன்பான மனிதர். எனக்கு இனிய நண்பர். இவர் பதிவுலகில் ஒரு மைல் கல்லாக விளங்குகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவரின் உழைப்பைக் கண்டு நான் வியப்படைகிறேன்.


பதிவுலகில் யாரும் செய்யாத ஒரு போட்டியை உருவாக்கி, தன் சொந்தப் பணத்தை கணிசமாகச் செலவழித்து, பல பரிசுகள் பல பதிவர்களுக்கு கொடுத்திருப்பது ஒரு இமாலய சாதனை என்றுதான் சொல்லவேண்டும். சிறுகதைகளை யாரும் ஆழ்ந்து படிப்பதில்லை என்பது ஒரு உலகியல் உண்மை. ஆனால் சிறுகதைகளை ஆழ்ந்து படிக்கவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்த விமரிசனப் போட்டியை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கறார்.


இப்படி ஒரு போட்டி நடத்தும் அளவிற்கு இவர் அவ்வளவு சிறுகதைகள் எழுதியிருப்பது ஒரு வியப்பு. அந்தக் கதைகளுக்கு விமர்சனம் எழுத ஒரு போட்டி வைக்கலாம் என்பது இவர் மனதில் உதித்த ஒரு அபூர்வ எண்ணம். இதை ஒரு ஒழுங்கு முறையாக நடத்தி, அதை பரிசீலனை செய்ய ஒருவரைக் கண்டுபிடித்து அந்த விமரிசனங்களில் பல பரிசுக்குரியவைகளைத் தேர்ந்தெடுத்து, பரிசுகளை திட்டமிட்டபடி விநியோகித்த திறமை அவருடைய மேலாண்மைத் திறனுக்கு ஒரு சாட்சி.


இவரை அறிமுகப்படுத்திப் பாராட்டுவதில் 

பெருமை கொள்கிறேன்.

 


106. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்.


வை.கோ சார் அவர்களை பற்றி பதிவுலகில் அறியாதார் 

இல்லைஇவரின் சிறுகதை விமர்சனப் போட்டிகள் மிகவும் 

பிரபலமானதுதற்போது உலகைக் கவரும் உன்னதமான 

துபாய் பற்றியத் தொடரை படித்தீர்களா?


  
107. திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் 

25.01.2015


இனி பதிவர்கள் அறிமுகம்:

1. அடை செய்வது எப்படி என்று தேடினால் அதற்கான‌ குறிப்பு இன்று புத்தகங்களிலும் இணைய தளங்கிலும் 1000 கிடைக்கின்றது. அடை செய்வதில் பல திறமை வாய்ந்த பெண்மணிகள் இருக்கிறார்கள். நானும் பலவிதமாக அடை செய்பவள் தான். 

ஆனாலும் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் அடை செய்யும் குறிப்பை அடித்துக்கொள்ள‌ யாரும் கிடையாது. இத்தனை விள‌க்கமாக, சுவையாக, சுவாரசியமாக அடை செய்யும் குறிப்பை யாருமே எழுதியதில்லை என்று அடித்துச் சொல்வேன். 

அடையின் ருசி அதையும் விட பிரமாதம்! 


நேற்று கூட என் வீட்டில் இவரின் குறிப்பு தான் அடையாகியது!


 


வெற்றிகரமான 

108வது அறிமுகம். 

By 

திருமதி 

  ஞா. கலையரசி  

அவர்கள்.

[வலைத்தளம்: ஊஞ்சல்]
http://www.unjal.blogspot.com.au/

 

 26.01.2015

எல்லோருக்கும் வணக்கம்!மலர்ந்தும் மலராத பாதி மலர் போல 
வலையுலகுக்குத்
தெரிந்தும் தெரியாத பதிவர் நான்….

இருந்தும் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்புக்கு என்னைப் பரிந்துரை செய்த திரு. கோபு சாருக்கும், அதையேற்று நியமனம் செய்த திரு. சீனா சாருக்கும், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைப்பூ துவங்கிய புதிதில்,  விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்திய கீதமஞ்சரிக்கும், யுவராணி தமிழரசனுக்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

2011 ல் ஊஞ்சல் என்ற வலைப்பூ துவங்கினேனேயொழிய, தொடர்ந்து எழுதுவதிலும், மற்ற பதிவுகளை வாசித்துக் கருத்து சொல்வதிலும் இடையிடையே நீ…..ண்…….ட இடைவெளி!

கோபு சார் வலைச்சரத்துக்குப் பரிந்துரைத்த பிறகே, பெரும்பாலான பதிவுகளைப் படிக்கத் துவங்கினேன். ..........
   
.......... நான் சொல்லப்போகும்    பதிவுகளைப் பெரும்பாலோர் ஏற்கெனவே வாசித்திருப்பார்கள் என்றாலும், எனக்குப் பிடித்த பதிவுகள் என்ற வகையில் அவற்றை நாளை முதல் குறிப்பிட விரும்புகின்றேன்.

கீதமஞ்சரியின் கீதா மதிவாணன் எனக்குச் சில சுட்டிகளின் இணைப்புக்களைக் கொடுத்து உதவினார்.  அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. 
ஞா. கலையரசி


  
 


 திருமதி. ஞா. கலையரசி 

அவர்கள் பற்றிய சிறுகுறிப்பு 

என் வலைத்தளத்தினில் 2014ம் ஆண்டு பொங்கல் முதல் தீபாவளி வரை தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களில் அவ்வப்போது கலந்து கொண்டதன் மூலம் எனக்கு முதன் முதலாக இவர்களின் அறிமுகம் கிடைத்தது.

போட்டியின் ஆரம்ப கட்டத்தில் VGK-05, VGK-06, VGK-09 and VGK-10 ஆகியவற்றில் பரிசுகளும் பெற்றுள்ளார்கள். 

முதன் முதலாக தான் கலந்துகொண்ட  
'VGK-05 காதலாவது ... கத்திரிக்காயாவது  
என்ற சிறுகதைக்கான விமர்சனப் போட்டியிலேயே 
முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெருமைக்கும் உரியவர். 
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html

நடுவில் இவரால் தொடர்ச்சியாக நம் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டன. இருப்பினும் போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு VGK-37, VGK-38, VGK-39 and VGK-40 ஆகிய நான்கு போட்டிகளில் மட்டும் கலந்துகொண்டு அனைத்திலுமே பரிசுக்குத் தேர்வானதுடன், முதன்முதலாக VGK-37 to 40 தொடர் வெற்றிக்கான  ஹாட்-ட்ரிக் அடித்து சாதனை புரிந்துள்ளார்கள்.   

மேற்படி போட்டிகளுக்கான பரிசுகள் மட்டுமின்றி 
‘ஜீவீ + வீஜீ’ விருதும் http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html 
கீதா விருதும்  http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html  
பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தப் போட்டி நடத்திய எனக்கு, பக்கபலமாக இருந்து மிகவும் முக்கியமான பல உதவிகள் செய்துள்ளார்கள். பரிசு வென்றவர்களுக்கும் எனக்கும் இடையே மறைமுகமான ஓர் இணைப்புப்பாலமாக விளங்கி சுமுகமான உறவினை வலுப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு.

இத்தகைய பல பெருமைகள் வாய்ந்த கைராசிக்காரரான கலையரசி அவர்கள் மூலம் வலைச்சரத்தில் என்னுடைய 108 வது அறிமுகம்  நிகழ அரியதோர் நல்வாய்ப்பு அமைந்ததில், எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

’ஊஞ்சல்’ வலைத்தளப் பதிவர் 
திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு 
என் ஸ்பெஷல் நன்றிகள்.  109. திருமதி. ஞா. கலையரசி அவர்கள்27 01 2015 

பதிவுலகில் திரு வை.கோபாலகிருஷ்ணன் என்கிற கோபு சாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  வலைச்சரத்தில் முதல் தடவை ஆசிரியர் ஆனவர்களில் பெரும்பாலோர் (என்னையும் சேர்த்து), இவரது பரிந்துரையில் ஆனவர்களே! 

நகைச்சுவையாக எழுதுவது கடினம்.  ஆனால் கோபு சாருக்கோ, அது கை வந்த கலை.  இவரது பல கதைகளில் நகைச்சுவையும் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்  எடுத்துக்காட்டுக்கு ஒன்று:- .

"பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்

மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார் "

என்ற புதுக் குறளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க உதயம் என்ற கதை முழுக்க முழுக்க கிண்டலும் கேலியும் நிறைந்த நகைச்சுவைத் தொடர். நான் மிகவும் ரசித்து வாசித்த பதிவு இது.  

யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற உங்களுக்கு இக்கதையைச் சிபாரிசு செய்கிறேன்.

 

  

 


 110. திருமதி. ஞா. கலையரசி அவர்கள்


31.01.2015

http://www.blogintamil.blogspot.in/2015/01/blog-post_31.html- வை.கோபாலகிருஷ்ணன்

சுவையான பள்ளி நினைவலைகள் 

(பள்ளிக்கூடம் பற்றிய 

வரலாற்றுக்குதவும் பதிவு)  
111. திருமதி. ஞா. கலையரசி அவர்கள்


01.02.2015 


[ இன்றைய அறிமுகம் ]3. தாயுமானவள்  -  சிறுகதைகள்-  வானதி பதிப்பகம் சென்னை முதற்பதிப்பு:-ஆகஸ்டு 2009  விலை ரூ45/-

4.  வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்  -  சிறுகதைகள் -திருவரசு புத்தக நிலையம் சென்னை.  முதற்பதிப்பு ஆகஸ்டு 2009 விலை ரூ.35/-

5.  எங்கெங்கும் எப்போதும் என்னோடு  - சிறுகதைகள் - மணிமேகலைப் பிரசுரம்  முதற்பதிப்பு 2010  விலை ரூ.55/-

இவை மூன்றின் ஆசிரியர்:- வை.கோபாலகிருஷ்ணன்
  

பதிவுலகில் பிரபலமான இவர், நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்.   

கடந்த ஆண்டு பத்து மாதங்கள் வெற்றிகரமாகத் தொடர்ந்து இவர் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டி பதிவுலகில் பிரசித்தி பெற்றது. 

முதல் நூல் பழனியம்மாள் அரங்கநாதன் தமிழிலக்கிய அறக்கட்டளை, பாரதி தமிழ்ச்சங்கம் and திருக்குறள் பேரவையால் முதற்பரிசு பெற்றது.

  

இரண்டாவது நூல் திருச்சி மாவட்ட பொதுநலப்பணி நிதிக்குழுவால் மாவட்ட அளவில் 2009 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பரிசு பெற்றது.

 

விழாவில் பரிசளித்து கெளரவிப்பவர் அன்றைய
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். மூன்றாவது புத்தகமான 'எங்கெங்கும், எப்போது, என்னோடு' உரத்த சிந்தனை எனும் தன்னம்பிக்கையூட்டும் மாத இதழால் முதல் பரிசுக்குத் தேர்வானது.  பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இந்தப் பரிசை 15/05/2011 ல் சென்னையில் நடைபெற்ற விழாவில் கொடுத்தார்.  

இவ்விழா பற்றிய விபரங்கள் படங்களுடன் இங்கே:-


 


மிகச்சிறப்பு வாய்ந்த எண்ணிக்கையான 
111 என்ற எனது இன்றைய வலைச்சர அறிமுகமும்
நம் திருமதி. ஞா. கலையரசி அவர்களால்
நிகழ்ந்துள்ளதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது02.01.2011 முதல் இன்று 01.02.2015 வரை
கடந்த சுமார் நான்கு ஆண்டுகளில் 
[ அதாவது 52+52+52+52+4=212 வாரங்களில் ]
இதுவரை 111 முறை என் வலைத்தளத்தினை
வலைச்சரத்தில் அறிமுகம் செய்து பெருமைப்படுத்தியுள்ள
வலைச்சர ஆசிரியர்கள் அனைவருக்கும் 
மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
  

பல பதிவர்களுக்கு வலைச்சர ஆசிரியர்களாக வாய்ப்பளித்து, 
ஒவ்வொரு பதிவர் பற்றியும் மற்றவர்கள் அறியும் விதமாக
வலைச்சர நிர்வாகத்தைத் திறம்பட நடத்திவரும்
என் பேரன்புக்குரிய அருமை நண்பரும், 
வலைச்சர நிர்வாகக்குழுத் தலைவருமான
அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும்
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

 

 
 
  சுபம் 


என்றும் அன்புடன் தங்கள்

 [வை. கோபாலகிருஷ்ணன்]

41 comments:

 1. இவ்வளவு குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வலைச்சரத்தில் வேறு எந்தப் பதிவராவது குறிப்பிடப் பட்டிருப்பாரா என்பது சந்தேகமே. பாராட்டுகள் ஸார்.

  இந்தத் தொடர் எழுத ஆரம்பித்தநாள் முதல் இந்தப் பகுதி வெளியாகும் இந்நாள் வரையிலும் மறுபடி மறுபடி உங்கள் வலைத்தளம், உங்கள் பெயர் அங்கு இடம்பெறுவது ஒரு தனிச்சிறப்பு.

  ReplyDelete
 2. உங்கள் பதிவில் கருத்திட எனக்குத் தகுதியிருக்கிறதா என்று தெரியவில்லை கோபு சார். ஆனாலும் உங்கள் நண்பர் வட்டத்தில் நானுமிருப்பது எனக்குப் பெருமையாயிருக்கிறது. இதற்கு மேல் எழுத எனக்குத் தெரியவில்லை.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! மேலும் நீங்கள் எழுதி எங்களை எல்லாம் ஊக்குவிக்க வேண்டும் சார்!
  எங்களையும் சொன்னதற்கு மிக்க நன்றி சார்! தங்களது பழைய பதிவுகளை வாசிக்கின்றோம். அருமை!!!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  உங்களிடம் கற்க நிறைய இருக்கின்றன சார்! கற்கின்றோம்.

  பணிவன்புடன்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 4. FANTABULOUS ! !

  ஓரிருவரை நினைவு வைப்பதே கஷ்டம் ..நீங்க 111 வலைசர பதிவுகள நினைவு கூர்ந்துள்ளீர்கள் ..
  மிக அருமை அண்ணா

  ReplyDelete
 5. அன்பின் இனிய நண்பர் வை.கோ அவர்களே

  தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய 111 பதிவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களையும் இங்கு அறிமுகப் படுத்தும் வண்ணம் பல்வேறு பதிவுகளில் அவர்கள் எழுதிய அறிமுகப் பதிவுகளையும் இங்கு அறிமுகப் படுத்தியது நன்று.

  எவ்வளவு பெரிய பதிவு. எப்படித்தான் எழுதுகிறீர்களோ தெரியவில்லை.

  பொறுமையாகப் படித்து மகிழ வேண்டும்.

  அத்தனையும் அருமை முத்துகள்.

  தங்களின் கடும் பணிச்சுமை பிரமிக்க வைக்கிறது.

  பாராட்டுவதற்குச் சொற்களே இல்லை.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 6. அன்பின் இனிய நண்பர் வை.கோ அவர்களே

  தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய 111 பதிவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களையும் இங்கு அறிமுகப் படுத்தும் வண்ணம் பல்வேறு பதிவுகளில் அவர்கள் எழுதிய அறிமுகப் பதிவுகளையும் இங்கு அறிமுகப் படுத்தியது நன்று.

  எவ்வளவு பெரிய பதிவு. எப்படித்தான் எழுதுகிறீர்களோ தெரியவில்லை.

  பொறுமையாகப் படித்து மகிழ வேண்டும்.

  அத்தனையும் அருமை முத்துகள்.

  தங்களின் கடும் பணிச்சுமை பிரமிக்க வைக்கிறது.

  பாராட்டுவதற்குச் சொற்களே இல்லை.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 7. 111 பதிவர்களையும் மிக அருமையாக கூறி சிறப்பு செய்தது ஒரு சிறப்பு சாதனை.
  படங்கள் , செய்திகள் என்று பதிவு மிக மிக அருமை.
  வாழ்த்துக்கள். சாதனை தொடரட்டும்.
  பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 8. தொடர்ந்து நூற்றுக்கும் மேல் அறிமுகம் ஆன நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகம் செய்திருப்பதும் ஒரு சாதனையே. இத்தனை பதிவர்களையும் சிறப்பான அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மேலும் மேலும் பற்பல வலைச்சர ஆசிரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து சாதனை படைக்க வாழ்த்துகள். உங்கள் அறிமுக நாயக, நாயகியருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. என்னைப் பெருமைப்படுத்தும் விதமாக இங்குப் பதிவு வெளியிட்டிருப்பதறி்ந்து மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. இத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்து அதைத் தொடராக வெளியிட்டிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. மேலும் மேலும் வலைச்சரத்தில் உங்களது எழுத்து அறிமுகப்படுத்தப்பட்டு 111 என்ற எண் ஆயிரமாக உயர்ந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்! சாதனைக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 10. பிரமிக்க வைக்கிறது உங்கள் உழைப்பு.. இந்த விடா முயற்சி எனக்கு இருந்திருந்தால் எவ்வளவோ சாதித்திருப்பேன்.. அன்பின் வணக்கம் ஸார் !

  ReplyDelete
 11. எமது வாழ்த்துகளும் ஸார்.
  கில்லர்ஜி

  ReplyDelete
 12. உங்கள் முயற்சியையும் ஊக்கத்தையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  ReplyDelete
 13. பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா... வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 14. "ஒவ்வொரு இணைப்பையும், படங்களையும் ரசிக்கும் வகையில் பதிவில் இணைப்பது எப்படி...?" என்று பாடம் எடுக்கலாம் ஐயா...

  ReplyDelete
 15. 111 ....இவை அனைத்தயும் தொகுத்து, பாராட்டி அப்பப்பா...வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri February 3, 2015 at 10:41 AM

   வாங்கோ, வணக்கம்.

   //111 ....இவை அனைத்தையும் தொகுத்து, பாராட்டி அப்பப்பா...வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சார்.//

   111 என்ற சிறப்பு எண்ணுடன் இந்தத்தொடர் இன்று நிறைவு அடைந்துள்ளது.

   இருப்பினும் இதுபோன்ற தொடர் மேலும் என்னால் என்றாவது தொடர்ந்து வெளியிட நேர்ந்தால் அதில் முதலிடம் பெறப்போவது தாங்கள் மட்டுமே. :) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   என் 112வது அறிமுகம் தங்களால் வலைச்சரத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை நினைத்து மகிழ்கிறேன்.

   http://blogintamil.blogspot.com/2015/02/1.html dated 04.02.2015

   நன்றியுடன் VGK

   Delete
 16. மிகவும் அருமையான ...சிறப்பான தொகுப்பு ...உங்கள் சாதனையை நினைக்கும் பொழுதே புத்துணர்வு ஏற்படுகிறது ....வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 17. இவ்ளோ பெரிய பதிவு இவ்ளோ படங்கள் உங்கள் ஆர்வமும்,நிதானமும் ஆச்சர்யப்பட வைக்கின்றது சார் .இனி மேலும் பல கதைகள் பிரசவிக்க சற்று ஓய்வு எடுத்து வாருங்கள் ,விமர்சன வித்தகி பட்டம் பெற்ற சகோதரி கீதா அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கின்றேன் .

  ReplyDelete
 18. இத்தனை அழகாய் உங்களை வலைச்சரத்தில் அறிமுகபப்டுத்திய அத்தனை பதிவர்களைப்பற்றியும் மிக விளக்கமாகவும் பாராட்டியும் குறிப்பிட்டு எழுதியிருக்கும் உங்களின் திறமையையும் பொறுமையையும் பார்க்க வியப்பாக இருக்கிறது!
  என்னைப்பற்றி இங்கே குறிப்பிட்டிருப்பதற்கு மனம் கனிந்த‌ நன்றி!
  உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 19. தாங்கள் -
  மேலும் பற்பல சிறப்புகளை எய்திட வேண்டும்..
  என்றென்றும் அம்பாள் துணையிருப்பாளாக!..
  மனம் நிறைந்த பாராட்டுகள்..வாழ்க நலம்!..

  ReplyDelete
 20. பாராட்டுகள் சார். மூன்றாம் முறையாக தோட்டத்தில் நானும் இடம்பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  தாங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றால் அந்த வாரம் மிகச்சிறப்பாக இருக்கும் என்பது திண்ணம். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 21. வலையுலகில் எல்லாவற்றிலும் புதுமையைப் புகுத்திய தாங்கள், அடுத்து என்ன புதுமை (என்ன தலைப்பு) வைத்து இருக்கிறீர்கள் என்பதனை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ February 3, 2015 at 3:59 PM

   வாங்கோ, வணக்கம்.

   //வலையுலகில் எல்லாவற்றிலும் புதுமையைப் புகுத்திய
   தாங்கள், அடுத்து என்ன புதுமை (என்ன தலைப்பு) வைத்து
   இருக்கிறீர்கள் என்பதனை அறிய ஆவலாய் இருக்கிறேன்.//

   என் பேரன்புக்குரிய தங்களின் இந்த ஆவலுக்கு முதற்கண் என் நன்றிகள்.

   என்னை சமீபத்தில் 29.01.2015 அன்று சந்தித்துச்சென்ற ஓர்
   பிரபல பத்திரிகை எழுத்தாளர் + பதிவர் அவர்களுடனான
   என் இனிய சந்திப்பினை சற்றே புதுமையாக எழுத
   நினைத்துள்ளேன். அது அநேகமாக இந்தவாரமே வெளியாகும்.

   அதன்பின் நான் இதுவரை சந்திக்க வாய்ப்புக்கிடைத்த
   ஒருசில பதிவர்கள் பற்றியதோர் புதுமையான தொடர் கொடுக்க உள்ளேன். அது நான்கு சிறு பகுதிகளாகப்
   பிரித்து வெளியிடப்பட உள்ளது. அதற்கான புதுமையானதோர் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. யோசித்து வருகிறேன்.

   [1] சந்தித்த தேதி, [2] சந்தித்த இடம், [3] சந்திப்பினில் என்னுடன் கூடவே இருந்து இடம் பெற்றிருந்தவர்கள் பெயர்கள் [4] அந்த சந்திப்பைப் பற்றி நானோ அல்லது அவர்களில் சிலரோ வெளியிட்டுள்ள பதிவுகளின் இணைப்புகள் [5] சந்திப்பினில் எடுக்கப்பட்டுள்ள ஒருசில புகைப்படங்கள் என அனைத்தும் புதுமையாகவே வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

   இந்தத்தொடரின் நான்கு பகுதிகளும் அநேகமாக இந்த மாதம் பிப்ரவரிக்குள் வெளியாகும் என நினைக்கிறேன்.

   அதன்பின் 01 03 2015 முதல் என் வலைத்தளத்தில் புதிய
   பதிவேதும் தராமல் சற்றே நீண்ட இடைவெளி கொடுத்து
   முழு ஓய்வு எடுக்கலாம் என்பது என் உத்தேசம்.

   முடிந்தால் பிறர் பதிவுகளைப்படித்து கருத்தளிக்க மட்டும் முயற்சிப்பேன். இவையெல்லாம் தங்கள் தகவலுக்காக மட்டுமே.

   என்றும் அன்புடன் VGK   Delete
 22. நூற்றுக்கும் மேற்பட்டவலைச்சர அறிமுகங்கள் பெற்ற உங்களுக்கு ஒரு பெரிய “ஓ” போடுகிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. இனிமேலும் பொறுப்பேற்கும் வலைச்சர ஆசிரியர்கள் மூலம் மறுபடி மறுபடி வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்க வேண்டும் கோபு ஸார்! ஆயிரமாவது முறை நீங்கள் வலைச்சரத்தில் இடம்பெற வாழ்த்துக்கள்.
  இந்த வலைத்தள 'கின்னஸ்' சாதனையை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து (உங்கள் பேரனோ, பேத்தியோ??) வரவேண்டும்.
  கிரிக்கெட்டிற்கு சச்சின் என்றால் வலைத்தளங்களுக்கு ஒரு கோபு ஸார் என்று சொல்லலாம். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. அந்த 111 ல் நானும் ஒருத்தி என்று நினைக்கும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

  உங்கள் எழுத்துக்களை படித்த பிறகு இனியும் நான் எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது.

  ஒரு நாள் சுற்றுலா சென்றால் அதைப் பற்றி எழுதுவதற்கே ரொம்பவும் சிரமமாக இருக்கிறது. நீங்கள் என்னடாவென்றால் எப்பவோ நடந்ததெல்லாம் ஞாபகமாக, கோர்வையாக, அழகாக எழுதுகிறீர்கள்.

  யாராவது ஒருவர் கூட என்னை விட்டு விட்டீர்களே என்று கேட்க முடியாது அளவிற்கு உங்களை அறிமுகப்படுத்தியவர்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

  வலை உலகில் உங்களுக்கு இணையாக ஒரு எழுத்தாளரை கண்டிப்பாக குறிப்பிட்டுச் சொல்லவே முடியாது. உங்களுக்கு இணை நீங்களேதான்.

  வாழ்த்துக்களுடனும்,
  வணக்கத்துடனும்,
  நன்றியுடனும்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 25. அனைவரையும் வியக்கவைக்கும் மாமனிதர் தாங்கள்!

  தங்களால் கெளரவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 26. வாழ்த்துகள்.....

  உங்கள் உழைப்பின் முன் நாங்கள் பிரமித்துப் போய் நிற்கிறோம்....

  ReplyDelete
 27. தங்கள் அன்பின் ஆழமறிந்து வியந்து மகிழ்கிறேன். எவ்வளவு சிரத்தையாக பதிவுகளையும் படங்களையும் உரிய தகவல்களையும் தக்கமுறையில் பொருத்தி வெளியிட்டு ஒவ்வொரு பதிவரையும் அறிமுகப்படுத்துகிறீர்கள். நாற்பது வாரங்கள் தாங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டியின் மூலமே பலருக்கும் நான் பரிச்சயமானேன். இப்போது மீண்டுமொரு அழகிய அறிமுகம். மிக்க நன்றி கோபு சார். என்னோடு இப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. உழைப்பும் உறுதியும் பிரமிக்க வைக்கிறது ஐயா! உங்கள் படைப்புகள் மென்மேலும் தொடரட்டும்! வலைச்சரத்தில் தங்கள் அறிமுகமாய் நானும் இடம்பிடித்தது மகிழ்வளிக்கிறது! அருமையான படங்களுடன் அமைந்த அற்புதப் பதிவு! நன்றி ஐயா!

  ReplyDelete
 29. அத்தனை எழுத்துக்களும் எண்ணங்களும் அருமையான படைப்புகள்...ஆச்சரியங்கள்....அழகுகள் குவிந்து கிடக்கும் ஒரு வலைப்பூக்கூடை..!

  நன்றிகள், அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

  ReplyDelete
  Replies
  1. ஜெயஸ்ரீ ஷங்கர் July 2, 2015 at 1:08 PM

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //அத்தனை எழுத்துக்களும் எண்ணங்களும் அருமையான படைப்புகள்...ஆச்சரியங்கள்....அழகுகள் குவிந்து கிடக்கும் ஒரு வலைப்பூக்கூடை..!

   நன்றிகள், அன்புடன்
   ஜெயஸ்ரீ ஷங்கர்.//

   என் வலைத்தளத்திற்கு தங்களின் அன்பான முதல் வருகைக்கும், ஆச்சர்யத்துடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும், என் வலைப்பூவை ‘வலைப்பூக்கூடை’ என சிறப்பாகப் பாராட்டியுள்ளதற்கும், என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றி கலந்த அன்புடன் VGK

   Delete
 30. உங்க கடுமையான உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் கிடைத்த வெற்றி. பாராட்டுகள்

  ReplyDelete
 31. அன்புக்கரங்களால் தொடுக்கப்பட்ட வலைச்சர
  அறிமுகங்களுக்கு இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 10:56 AM

   //அன்புக்கரங்களால் தொடுக்கப்பட்ட வலைச்சர
   அறிமுகங்களுக்கு இனிய வாழ்த்துகள்..//

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 32. எம்பூட்டு அளகா ஒங்கள வலைச்சரத்துல அறிமுக படுத்தியவங்கள பெருமை படுத்தியிருக்கீக. நெறய பேருங்க வலைப்பதிவரு இருக்காங்க குதே ஒங்க பக்ம் ( ஒங்க பதிவு) வந்த பொறவாலதா வெளங்கி கிட ஏலுது. ஆனாகூடி ஆருக்குமே தோணாத ஐடியா அல்லா ஒங்களுக்கு மட்டும் தான தோணுச்சி. அதுதா நீங்க.

  ReplyDelete
 33. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். .

  ReplyDelete
 34. நிறைவுப்பகுதி...மனநிறைவுப்பகுதி...

  ReplyDelete