என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

சந்தித்த வேளையில் ....... பகுதி 3 of 6தொடரும் பதிவர் சந்திப்பு   

பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:11.06.2013

பவித்ராலயா

 

manjusampath.blogspot.com/ 


‘கதம்ப உணர்வுகள்’ 

வலைப்பதிவர்

திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள் 

அன்புடன் வருகை தந்தார்கள்.

மஞ்சுவின் பேரன்புக்கு எடுத்துக்காட்டான பதிவுகள்:

                            http://gopu1949.blogspot.in/2015/01/part-83-of-16-412-special.html


இவரை என் இல்லத்திற்கு 
அழைத்து வந்தவர் 
திரு. ரிஷபன் அவர்கள்.

இனிய சந்திப்பினைப்பற்றிய விபரங்களுக்கு


29.07.2015
பவித்ராலயா
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 
அன்பின் மஞ்சுவின் 
மீண்டும் வருகை

 


மஞ்சுவை என் இல்லத்துக்கு அழைத்து வந்தவர்கள்
திருமதி + திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் தம்பதியினர்12.06.2013 

தாஜ் திருமண மஹால், திருச்சி-2
’கைகள் அள்ளிய நீர்’ 
sundargprakash.blogspot.com/

திரு. 
சுந்தர்ஜி 
அவர்களை நான் திருச்சியில் 
மேற்படி திருமண மண்டபத்தில் சந்தித்து மகிழ்ந்தேன்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அன்று
என்னால் சந்திக்க முடிந்த பிற பதிவர்கள்

திரு. ரிஷபன் அவர்கள் [BHEL]
rishaban57.blogspot.com/

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் [BHEL]
aaranyanivasrramamurthy.blogspot.com/

திரு. எல்லென் [லக்ஷ்மி நாராயணன்] அவர்கள் 

திரு. கிருஷ்ணா என்கிற பாஸ்கர் அவர்கள் [BHEL]

வசந்தமுல்லை ரவி அவர்கள் [BHEL]
http://vasanthamullairravi.blogspot.in/

திருச்சி கவிதாயினி 
திருமதி. தனலக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள் 
https://plus.google.com/102434930011958266467/posts

மேலும் விபரங்களுக்கு:
http://gopu1949.blogspot.in/2013/06/9.html


16.06.2013

பவித்ராலயா

 

http://minnalvarigal.blogspot.com/
http://www.horsethought.blogspot.com/


                  

’மின்னல் வரிகள்’

’மேய்ச்சல் மைதானம்’


                           வலைப்பதிவர்                            


திரு. பால கணேஷ் அவர்கள்

 வருகை தந்திருந்தார்.

இவரை என் இல்லத்திற்கு அழைத்து வந்தவர் 
திரு. ரிஷபன் அவர்கள்

 


02.07.2013

பவித்ராலயா

 

  
அன்புத்தம்பி 
திரு.
 அஜீம்பாஷா 
அவர்கள்
 [ அஜீமும் அற்புதவிளக்கும் ]

அன்புடன் வருகை தந்தார்கள்.

இவர் பணி நிமித்தமாக செளதியில் தற்சமயம் இருப்பினும், திருச்சியிலேயே படித்து வளர்ந்தவராதலால் மிகச்சுலபமாக என் வீட்டை அடையாளம் கண்டுபிடித்து, தனியாகவே திடீர் விஜயம் செய்து விட்டார். 

அன்புத்தம்பி அஜீம்பாஷா பிரியத்துடன் என்னிடம் திணித்துச்சென்ற சில பொருட்கள் .... அவர் புறப்பட்டுச்சென்ற பிறகும், வெகு நாட்கள் நீங்கா நினைவாக என் இல்லத்தில் மணம் பரப்பிக்கொண்டிருந்தன.
ooooo- 725 -ooooo
தொடரும்

இதன் தொடர்ச்சி பகுதி-4
14.02.2015 சனிக்கிழமை 
வெளியிடப்படும்

71 கருத்துகள்:

 1. அஹா அழகு சார் ரசனையோடு நீங்கள் ஒவ்வொருவரின் சந்திப்பையும் பகிர்வது தித்திக்கிறது. நட்பு வாழ்க. :)

  கணேஷ் சகோக்கு பொன்னாடை போர்த்தி இருக்கீங்க. சரிதாயணத்துக்காகவா :)

  மஞ்சு சம்பத் புகைப்படத்தில் இருக்கும் இருவரில் யார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai LakshmananFebruary 12, 2015 at 2:38 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆஹா, அழகு சார், ரசனையோடு நீங்கள் ஒவ்வொருவரின் சந்திப்பையும் பகிர்வது தித்திக்கிறது. நட்பு வாழ்க. :) //

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   //கணேஷ் சகோக்கு பொன்னாடை போர்த்தி இருக்கீங்க.
   சரிதாயணத்துக்காகவா :)//

   இல்லை. அதுபோல அதற்காக இல்லவே இல்லை.

   வீடு தேடி திடீரென சொல்லாமல் கொள்ளாமல்
   வந்ததோர் பதிவருக்கு ஏதோ அன்று என்னால் ஆன ஓர்
   மிகச்சிறிய மரியாதைக்காக மட்டுமே.

   ’சரிதாயணம்’ : அதை நான் இதுவரை பார்க்கவும் இல்லை.
   படிக்கவும் இல்லை. அவரும் அதனைக் கொண்டுவர
   மறந்துவிட்டதாகவும், சீக்கரமாக எனக்கு அனுப்பி
   வைப்பதாகவும் சொன்னார். ஆனால் இதுவரை, இன்றுவரை அனுப்பி வைக்கவும் இல்லை.

   ஒருவேளை அவர் சொன்னபடி அனுப்பி வைத்திருந்தாலும்கூட, எனக்கு இப்போதெல்லாம்
   எதையும் படிக்கவே நேரமும் இருப்பதில்லை.

   படிக்க வேண்டிய நூல்களே கைவசம் நிறைய சேர்ந்து போய் விட்டன. நானும் சோர்ந்துபோய் விட்டேன். :)

   //மஞ்சு சம்பத் புகைப்படத்தில் இருக்கும் இருவரில் யார்?//

   கிண்டலா :)

   இருவரில் யார் இளமையாக இருக்கிறாரோ அவரே தான்,
   மஞ்சு.

   என் அன்புத்தங்கை மஞ்சு மதியம் 3 மணிக்கு வருவதாகச்
   என்னிடம் போனில் சொல்லிவிட்டு, வேண்டுமென்றே திடீரென்று மதியம் 12 மணிக்கே என் இல்லத்திற்கு [அவளின் பிறந்த வீட்டுக்கு] வருகை தந்து விட்டாள்.

   அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கு தருவதற்கான சீர் செனத்தியெல்லாம் ஒருவாரம் முன்பே தயார் செய்து
   ரெடியாக வைத்து விட்டேன். ஷேவிங் செய்துகொண்டு,
   குளித்துவிட்டு நான் அவர்களை வரவேற்க ரெடியாவதற்கு முன்பே என் இல்லத்திற்குள் நுழைந்து விட்டாள்.

   அதில் தான் எனக்கு ஓர் அதிர்ச்சி. கேட்டால் அன்பு
   அண்ணாவை மேக்-அப் ஏதும் இல்லாமல் இயற்கையாக
   சந்திக்க நினைத்தேன் .. அதனால் திடீரென்று சொன்ன
   நேரத்திற்கு முன்பே வந்தேன் என்று சொல்லிச் சிரித்தாள்.

   -=-=-=-=-

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நியாயமான :) கேள்விகளுக்கும் என்
   மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 2. பதில்கள்
  1. Thenammai Lakshmanan February 12, 2015 at 2:46 AM

   // 374 :) //

   இந்த எண்ணை Ms. CHITRASUNDAR என்பவர்கள் ஏற்கனவே பிடித்துள்ளார்கள். எனவே தாங்கள் 375 ஐப் பிடிக்க முயற்சி செய்யுங்கோ. :)

   அன்புடன் VGK

   நீக்கு
  2. Thenammai Lakshmanan February 14, 2015 at 6:08 AM

   வாங்கோ, வணக்கம்.

   தேன் சிந்திடும் :) சிரித்த முகத்துடன் ;) இப்போது மிகச்சிறப்பாகக் காட்சியளிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
  3. தாங்கள் சொன்னதுபோலவே, இப்போது :) 374 :) உங்களுக்கே எனத்தெரிய வருகிறது. மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 3. நேரில் பார்த்த உணர்வு சகோதரி மஞ்சுவை. அவர்களின் பின்னூட்டங்களும் சம்திங் ஸ்பெஷல். சுந்தர்ஜியின் பதிவுகளில் அவர் வேறொரு புகைப்படம் இட்டிருப்பார். பேஸ்புக்கிலும் இவர் என்னை நண்பராய் ஏற்றுக் கொண்டிருக்கிறார். பால கணேஷை நானும் நேரில் சந்திக்கிறேன். அஜீம் பாஷா புதியவர்.

  :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். February 12, 2015 at 6:19 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நேரில் பார்த்த உணர்வு சகோதரி மஞ்சுவை. அவர்களின் பின்னூட்டங்களும் சம்திங் ஸ்பெஷல். //

   ஆமாம். மஞ்சுவின் மிக நீண்ட ஆத்மார்த்தமான அழகிய பின்னூட்டங்களில் மயங்கிப்போனவனே தான் நானும்.

   திருஷ்டி போல ஆகிவிட்டது இப்போது மஞ்சுவுக்கு.

   உடல்நலம் சரியில்லை. கணினியில் விரல்கள் டைப் அடிக்கவே மறுக்கின்றன எனச்சொல்லி வருத்தப்பட்டாள்.

   2 நாட்கள் முன்புகூட நாங்கள் இருவரும் கைபேசியில் நீண்ட நேரம் பேசினோம். மஞ்சுவின் அன்பும் சம்திங் ஸ்பெஷல் மட்டுமே.

   அன்பின் மஞ்சு விரைவில் குணமடைய நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   அன்புடன் VGK


   நீக்கு
  2. VGK >>>>> SRIRAM [2]

   //சுந்தர்ஜியின் பதிவுகளில் அவர் வேறொரு புகைப்படம் இட்டிருப்பார்.//

   உருவத்திலும், எழுத்திலும், எண்ணங்களிலும், அனைத்திலும், மிக உயர்ந்த மனிதரான திரு. சுந்தர்ஜி அவர்களின் முழு உருவப்படம் [நானே என் கேமராவில் எடுத்தது] இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் வெளியாக உள்ளது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   >>>>>

   நீக்கு
  3. VGK >>>>> SRIRAM [3]

   //அஜீம் பாஷா புதியவர்.//

   இவர் தங்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்குமே புதியவர்தான். ஏனெனில் இவர் இதுவரை பதிவுகள் ஏதும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. எனக்கு ஒரு காலகட்டத்தில் நிறைய பின்னூட்டங்கள் அளித்துள்ளார்.

   அவைகளில் சிலவற்றை சாம்பிளாக இதோ இந்தப்பதிவினில் காட்டியுள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2013/07/19.html

   இவர் எனக்கு எழுதியுள்ள மற்ற பல பின்னூட்டங்களை திரு. அப்பாத்துரை அவர்களுக்காக நான் எழுதி இருந்த மிகச்சிறிய தொடர் ஒன்றினில் ஆங்காங்கே காணலாம்.

   இணைப்புகள்:

   http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
   http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
   http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html

   தலைப்பு:

   ‘என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்’

   அன்புடன் VGK

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   நீக்கு
 4. வாத்தியாருடன் இன்னொரு வாத்தியார்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் February 12, 2015 at 7:28 AM

   //அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

   மிக்க நன்றி.- VGK

   நீக்கு
 5. அருமை சார்..
  அற்புதமான அறிமுகம்....
  வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
   February 12, 2015 at 8:22 AM

   வாங்கோ ஸ்வாமி !

   //அருமை சார்.. அற்புதமான அறிமுகம்.... வாழ்த்துகள்.....//

   மிக்க நன்றி.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 6. ஓ !மஞ்சுவும் வந்திருந்தாரா?
  அருமையான சந்திப்புகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAMVI February 12, 2015 at 10:52 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஓ ! மஞ்சுவும் வந்திருந்தாரா? //

   மஞ்சுவின் இனிஷியல் ‘ஓ’ அல்ல :))))))

   //அருமையான சந்திப்புகள்.//

   மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
 7. ஒவ்வொரு பதிவருடனான தங்களின் சந்திப்பும் தனித்துவமாக இருக்கிறது. தொடருங்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha Balu February 12, 2015 at 12:04 PM

   வாங்கோ ராதாபாலு மேடம், வணக்கம்.

   //ஒவ்வொரு பதிவருடனான தங்களின் சந்திப்பும் தனித்துவமாக இருக்கிறது.//

   தனித்துவம் வாய்ந்த தங்களை சமீபத்தில் நான் சந்தித்த பிறகே, எனக்கு .... என் மன ஊஞ்சலில் .... இதுபோல ஒரு தொடர் எழுதவேண்டும் என்ற உற்சாக எண்ணமே ஊஞ்சலாடி மகிழ்வித்தது. தங்களுக்கு என் நன்றிகள்.

   //தொடருங்கள்....//

   ஆகட்டும் தாயே .... அதுபோல .... நாம நினைச்சது நடக்கும் மனம் போலே !!

   தொடர்கிறேன் :)))))

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 8. அன்பில் கலந்த நெஞ்சங்கள் சந்தித்திருந்த தருணங்களை அழகிய படங்களுடன் இனிமையாக நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்..

  வாழ்க நலம் என்றென்றும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செல்வராஜூ February 12, 2015 at 12:50 PM

   வாங்கோ .... வணக்கம்.

   //அன்பில் கலந்த நெஞ்சங்கள் சந்தித்திருந்த தருணங்களை அழகிய படங்களுடன் இனிமையாக நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்..

   வாழ்க நலம் என்றென்றும்!..//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 9. எழுத்துக்களின் மூலம் ஏற்படும் நட்பு எத்தனையோ நாள் பழகிய உணர்வைக் கொடுக்கிறது. முதல் தடவை பார்க்கும்போது கூட ஒரு அந்நிய உணர்வு தோன்றுவதில்லை.
  மஞ்சு பெங்களூர் வந்திருந்தபோது என்னால் போய்ப் பார்க்க முடியவில்லை. அவர்களாலும் வர முடியவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பதிவர்கள் யாரையும் இன்னும் சந்திக்கவில்லை.
  இனிய சந்திப்புகள், நினைவுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ranjani Narayanan February 12, 2015 at 1:41 PM

   வாங்கோ, வணக்கம்.

   //எழுத்துக்களின் மூலம் ஏற்படும் நட்பு எத்தனையோ நாள் பழகிய உணர்வைக் கொடுக்கிறது. முதல் தடவை பார்க்கும்போது கூட ஒரு அந்நிய உணர்வு தோன்றுவதில்லை.//

   மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். சந்திப்பினால் நட்பும் அன்னியோன்யமும் மேலும் அதிகரிக்கவும் கூடும்.

   ஆனால் எல்லோருடைய விஷயத்திலும் அப்படி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

   சிலரை சந்திக்காமலேயே இருந்தும்கூட நாளுக்கு நாள் நட்பு மேலும் மேலும் மலர்ந்து வளர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றது.

   ஒருவேளை நேரில் சந்திக்க நேர்ந்தால், அது மாறிவிடுமோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது. இதுவும் என் சொந்தக்கருத்து மட்டுமே. :)

   //மஞ்சு பெங்களூர் வந்திருந்தபோது என்னால் போய்ப் பார்க்க முடியவில்லை. அவர்களாலும் வர முடியவில்லை.//

   நான் இரண்டு நாட்கள் முழுவதும் ஒரு மிகப்பெரிய AC Car ஐ வாடகைக்கு எடுத்துக்கொண்டு, பெங்களூரைச் சுற்றிச்சுற்றி வந்தேன். நான் வந்த வேலை 1-1/2 நாட்களிலேயே முடிந்து விட்டது. தங்களை சந்திக்க விரும்பினேன். ஃபோன் செய்தேன். தாங்கள் சென்னை போய் இருப்பதாகச் சொல்லி விட்டீர்கள்.

   சில நேரங்களில் நமக்கு விருப்பமும், முயற்சிகளும், வசதி வாய்ப்புகளும் இருந்தும்கூட நமக்குச் சந்திக்கப் பிராப்தம் இல்லாமல் போய்விடுவதும் உண்டுதான்.

   //நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பதிவர்கள் யாரையும் இன்னும் சந்திக்கவில்லை. இனிய சந்திப்புகள், நினைவுகள்!//

   இந்தவார வலைச்சர ஆசிரியர் பணிகளுக்கு இடையேயும் நேரம் ஒதுக்கி இங்கு அன்புடன் வருகை தந்து அழகாகக் கருத்தளித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 10. ஒவ்வொரு நிகழ்வையும் படிக்கும்போது வந்து போன நினைவுகள் மீண்டும் மனசில்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிஷபன் February 12, 2015 at 5:47 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒவ்வொரு நிகழ்வையும் படிக்கும்போது வந்து போன நினைவுகள் மீண்டும் மனசில்..//

   மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலான பதிவர் சந்திப்புக்களில், என் இல்லத்தில் தங்களை மீண்டும் ஒருமுறை காண முடிந்ததில் எனக்கு மேலும் மேலும் அதிக சந்தோஷமாக இருந்தது.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள், ஸார்.

   அன்புள்ள
   வீ..........ஜீ :)   நீக்கு
 11. இன்று தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் எல்லாருமே எனக்குப் புதியவர்கள் தாம். அவர்களுடனான சந்திப்புகளை இனிமையாகவும் சுவையாகவும் எடுத்தியம்பும் தங்களுக்குப் பாராட்டுக்கள்! என்றென்றும் இவர்களுடனான நட்பு தொடர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G February 12, 2015 at 6:49 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்று தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் எல்லாருமே எனக்குப் புதியவர்கள் தாம். அவர்களுடனான சந்திப்புகளை இனிமையாகவும் சுவையாகவும் எடுத்தியம்பும் தங்களுக்குப் பாராட்டுக்கள்! என்றென்றும் இவர்களுடனான நட்பு தொடர வாழ்த்துக்கள்! //

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 12. சந்தித்த வேளையில்...என்கிற உங்கள் பதிவின் மூலம் நாங்களும்...உங்கள் எல்லோரையும் சந்தித்தது போல் இருக்கிறது.

  உற்சாகமும், அன்பும் தொடரட்டும் ஐயா. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri February 12, 2015 at 7:44 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சந்தித்த வேளையில்...என்கிற உங்கள் பதிவின் மூலம் நாங்களும்...உங்கள் எல்லோரையும் சந்தித்தது போல் இருக்கிறது. உற்சாகமும், அன்பும் தொடரட்டும் ஐயா. நன்றி//

   தங்களின் அன்பான வருகைக்கும் ’அரிசி உப்புமா’ போன்ற ருசியான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 13. கணேஷ் சார் எங்கள் இல்லத்துக்கும் வந்திருந்தார்....:)

  சந்திப்புகளையும், நினைவுகளையும் அசை போடுவதில் ஒரு அலாதி இன்பம் தான். தொடர்கிறேன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ADHI VENKAT February 12, 2015 at 8:31 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கணேஷ் சார் எங்கள் இல்லத்துக்கும் வந்திருந்தார்....:)//
   அப்படியா ! சந்தோஷம்.

   //சந்திப்புகளையும், நினைவுகளையும் அசை போடுவதில் ஒரு அலாதி இன்பம் தான்.//

   ஆம். சந்திப்புகளையும், நினைவுகளையும் அசை போடுவது தாங்கள் பதிவிட்டுள்ள ‘சந்தேஷ் ஸ்வீட்’ டை அசை போடுவதுபோல ஒரு அலாதி இன்பமே தான்.

   // தொடர்கிறேன் சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், தங்களின் ’சந்தேஷ் ஸ்வீட்’ போன்ற ருசியான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 14. வணக்கம்
  ஐயா.
  மறக்க முடியாத நினைவுகள் ஐயா. தங்களின் பெருந்தன்மையை நினைத்து மகிழ்கிறேன்...நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. பரிவை சே.குமார் February 13, 2015 at 12:05 AM

   வாங்கோ .... வணக்கம்

   //நல்ல பகிர்வு ஐயா... வாழ்த்துக்கள்.//

   மிக்க நன்றி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. பழனி. கந்தசாமி February 13, 2015 at 4:32 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ரசித்தேன். தொடருங்கள்.//

   தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 17. அருமையான பதிவர்களின் சந்திப்பை பதிவு செய்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அன்பு மழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு February 13, 2015 at 7:34 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான பதிவர்களின் சந்திப்பை பதிவு செய்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அன்பு மழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 18. anaivaraiyum paarthathil makiltchi.....ganesh sir m ningalum potti pottu T SHIRT il kaatchiyalikiringalaaa.....

  (manju sistu ku niinga annaavaaa.....ithai kekka yaarumilayaaaa....)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. thirumathi bs sridhar February 13, 2015 at 10:26 AM

   வாங்கோ ஆச்சி, வணக்கம். செளக்யமா சந்தோஷமா நல்லா இருக்கீங்களா ! குழந்தைகள் இருவரும் செளக்யமா !!

   //anaivaraiyum paarthathil makiltchi..... அனைவரையும்
   பார்த்ததில் மகிழ்ச்சி.//

   அனைவரையும் அபூர்வமாக ஆச்சியே பார்த்ததில்
   எனக்கும் மகிழ்ச்சியே. :)

   //ganesh sir m ningalum potti pottu T SHIRT il kaatchiyalikiringalaaa.....

   கணேஷ் சாரும் நீங்களும் போட்டி போட்டு ’டி ஷர்டில்’
   காட்சியளிக்கிறீங்களா..... //

   நானாக விரும்பி ‘டி ஷர்ட்’ இதுவரை வாங்கியதே இல்லை,
   ஆச்சி. என் மகன்கள் போட்டி போட்டுக்கொண்டு [என்னை
   இளமையாக ஆக்கவோ என்னவோ] அடிக்கடி XXL-T Shirts
   வாங்கிக்கொடுத்துக்கொண்டே உள்ளார்கள். வேண்டாம்
   என்று மறுத்தாலும் கேட்பதே இல்லை.

   சமீபத்தில் துபாய் சென்றபோது நான்கு என சேர்ந்து, ஆக
   மொத்தம் வீட்டில் ஒரு இருபது டி-ஷர்டுகள் ஆகிவிட்டன.

   அவற்றை நான் எப்போது தான் போட்டுக்கொள்வது சொல்லுங்கோ, ஆச்சி.

   பொதுவாக நான் வீட்டில் இருக்கும்போது, சட்டையோ,
   பனியனோ, டி.ஷர்டோ எதுவுமே மேலாடையாக
   அணியாமல் காத்தாட ஜாலியாகத்தான் இருப்பேன். :)))))

   யாராவது வருகை தந்தால் அல்லது வருகை தருவதாக மிரட்டல் விடுத்தால் மட்டுமே மிகவும் டென்ஷன் ஆகி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து அணிந்துகொள்வது என் வழக்கம்.

   அன்றும் இதுபோலத் தான் ஏதோ நடந்திருக்கும்.

   //manju sistu ku niinga annaavaaa.....ithai kekka yaarumilayaaaa....
   மஞ்சு சிஸ்டருக்கு நீங்க அண்ணாவா! ... இதைக்கேட்க
   யாருமே இல்லையா //

   ஏன் ஆச்சி, இதில் என்ன உங்களுக்கு திடீர் சந்தேகம் வந்துள்ளது ?

   என் பெரிய அண்ணா என்னைவிட 20 வயதுகள் பெரியவர்
   ஆச்சி. சரி அதை விடுங்கோ. அது பழைய கதை. அந்தக்காலக் கதை.

   சமீபத்தில் தாங்கள் என் பெரிய அக்காவையும் அவளின்
   கடைசிபெண்ணையும் [சிங்கப்பூர்க்காரி] என் வீட்டில்
   சந்தித்தீர்களே, ஆச்சி. அந்த சிங்கப்பூர் பெண்ணுக்கும்
   அவளின் மூத்த அண்ணனுக்கும் 22 வயதுகள் வித்யாசம்
   ஆச்சி. என் பெரிய அக்காவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள்.

   தாங்கள் அன்று சந்தித்த சிங்கப்பூர் பெண் என் பெரிய
   அக்காவின் 8வது குழந்தையாகும்.

   இதெல்லாம் இவ்வாறு இருக்க, என்னைவிட சுமார் 15-16 வயதுகள் மட்டுமே சிறியவளான + என் மீது மிகவும் பிரியமுள்ள மஞ்சு, என்னை அன்புடன் அண்ணா என்று அழைப்பதில் என்ன தவறு உள்ளது, ஆச்சி?

   என் அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவுற்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூத்த பிள்ளைக்கே 24-25 வயது இருக்கும் .... தெரியுமா ஆச்சி !!!!!

   எதையாவது சொல்லி, என்னைக் கிளறிவிட்டு, என் கைவிரல்கள் வலிக்க வலிக்க பதில் கொடுக்கும்படிச் செய்வதே .... ஆச்சிக்கு வழக்கமாப் போயிடுச்சு.

   ஆண்டவா! ஆச்சியிடமிருந்து என்னைக் காப்பாத்துடாப்பா ! :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 19. ”ALL ROADS LEADS TO ROME” – என்று சொல்லுவார்கள். அதுபோல, எல்லா பதிவர்களும் உங்கள் இல்லம் தேடி வருகின்றனர்.

  சகோதரி மஞ்சுபாஷிணி அவர்கள் நல்ல எழுத்தாளர்; சிறந்த வலைப்பதிவர். அவரது வலைத்தளம் உங்களது வலைத்தளம் வழியே அறிமுகம்.

  ஆரண்யநிவாஸ் அவர்களது நூல் ஒன்றினை, அதனை வெளியிட்டவர்களிடம் விலைக்கு வாங்க, தஞ்சைக்கு சென்று இருந்தபோது, ”கைகள் அள்ளிய நீர்” – திரு சுந்தர்ஜி அவர்களை சந்தித்து இருக்கிறேன். நல்ல எழுத்தாளர். சமீப காலமாக இவர் ஏனோ அதிகம் வலைப் பக்கம் எழுதுவதில்லை.

  ”மின்னல் வரிகள்” பாலகணேஷ் அவர்களை சென்ற ஆண்டு மதுரையில் நடைபெற்ற, வலைப்பதிவர் சந்திப்பினில் பார்த்ததுதான். நல்ல நகைச்சுவை எழுத்தாளர். இவரும் ஏனோ வலைப்பக்கம் அதிகம் வருவதில்லை. எல்லோரும், பேஸ்புக் பக்கம் போய்விட்டார்கள் போலிருக்கிறது.

  நம்ப திருச்சி சகோதரர் அஜீம்பாஷா அவர்கள் தங்கள் பதிவொன்றில், உங்கள் உடல்நலம் விசாரிக்கப் போக, நான் உங்களை அவசரம் அவசரமாக (முதன் முதலாக) உங்கள் இல்லம் வந்து உங்களை சந்தித்தது தனிக் கதை.

  (கருத்துரை சுருக்கமாக இல்லாமல் நீண்டு விட்டது. மன்னிக்கவும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ February 13, 2015 at 3:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //”ALL ROADS LEADS TO ROME” – என்று சொல்லுவார்கள். அதுபோல, எல்லா பதிவர்களும் உங்கள் இல்லம் தேடி வருகின்றனர்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 20. மிக அழகான சந்திப்புகள். பாராட்டுகள் கோபு சார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் எனக்குதான் தங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையாதுபோய்விட்டது. அடுத்தமுறை அவசியம் சந்திக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி February 14, 2015 at 4:57 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மிக அழகான சந்திப்புகள். பாராட்டுகள் கோபு சார்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் எனக்குதான் தங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையாது போய்விட்டது. //

   கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதில் .... நம் சந்திப்பினை அன்று நாம் இருவருமே பரஸ்பரம் பேசி நாமே தவிர்த்துக்கொண்டதில் .... தங்களைப்போலவே எனக்கும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.

   அவ்வாறான தவிர்த்தலில் என் பங்கும் அன்று உங்களைவிட மிக மிக அதிகம் தான்.

   இருவருமே மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் அன்று இருந்துள்ளோம்.

   என் வீட்டிலும் என் மூத்த மகன், மருமகள், பேரன், பேத்தி முதலியோர் துபாயிலிருந்து வருகை தந்திருந்ததாலும், அவர்களைப்பார்க்க வேண்டி இங்குள்ள மற்ற உறவினர்கள் + நண்பர்களும் அடிக்கடி வந்துபோய்க்கொண்டே இருந்ததாலும், எங்கள் வீடே ஒரே அமர்க்களமாக இருந்தது. வருகை தந்துள்ள துபாய் கோஷ்டியுடன் அடிக்கடி எங்காவது நான் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தங்களும் எனக்கு இருந்ததால், என்னால் சரியானபடி, சந்திப்புக்கான இடமும் நேரமும் முன்கூட்டியே குறிப்பிட்டுச் சொல்ல இயலாததோர் இக்கட்டான நிலமையில் நான் இருந்தேன்.

   மேலும் நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளும் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டம் [செப்டம்பர் 2014] அது.

   தாங்கள் திருச்சியில் இருந்ததோ ஒரே ஒரு நாளின் சிலமணி நேரங்கள் மட்டுமே. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பெற்றோரைக்காண வந்துள்ளீர்கள். பிரிந்தவர் கூடிடும் .... தாய்+சேய் அன்புக்கிடையே குறுக்கிட நானும் அன்று விரும்பவில்லை.

   இல்லாவிட்டால் நானாவது, என் வீட்டிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் மட்டுமே தள்ளியுள்ள, தங்கள் இல்லத்தில் தங்களைக்காண அங்கு வர முயற்சித்திருப்பேன்.

   //அடுத்தமுறை அவசியம் சந்திக்கவேண்டும்.//

   பிராப்தம் இருந்தால் அவசியமாக சந்திப்போம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> கீதமஞ்சரி [2]

   IN FACT, நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள் முடிந்ததும் அதில் கலந்துகொண்ட அனைவரையும், அல்லது பரிசுகள் பெற்ற அனைவரையும் அல்லது குறைந்த பட்சம், முதலிடம் பெற்ற மூவரையும், நடுவர் அவர்களுடன் சேர்த்து திருச்சிக்கு அழைத்து ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங் ஹால் ஒன்றை புக் செய்து, ஆசைதீர மனம் விட்டுப் பேசி மகிழ்ந்து, தடபுடலான விருந்து வைத்துக் கொண்டாட வேண்டும் என என் மனதில் ஓர் ஆசை இருந்தது என்னவோ உண்மையே. :)

   உள்ளூருக்குள் உள்ள இருவரே நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சந்திக்க இயலாமல் சூழ்நிலைகள் அமைந்து பல்வேறு சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன.

   ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களையும்,

   கோவை >>>>> ஆஸ்திரேலியா >>>>> கோவை என மாறி மாறி பறந்து கொண்டிருந்த மற்றொருவரையும்,

   பாண்டிச்சேரியிலிருக்கும் மூன்றாவது நபரையும்,

   சென்னை >>>>> அமெரிக்கா >>>>> சென்னை என பயணத்தில் இருந்த நடுவர் அவர்களையும் நான் எங்கு எங்கள் ஊராம் திருச்சியில் ஒன்றாகக்கூட்டி சந்திக்க வைப்பது?

   மேலும் நானும் போட்டி முடிவுகளை முற்றிலுமாக அறிவித்துவிட்டு, பரிசுத்தொகைகளை உடனடியாகப் பட்டுவாடா செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் சரிவரச் செய்துவிட்டு, சொன்ன தேதியில் [10.11.2014] சொன்னபடி அனைவருக்கும் பணப் பட்டுவாடா நிகழ்ந்து விட்டதா என்பதை உறுதி செய்துகொண்டு, 15.11.2014 அன்று விமானம் ஏறி துபாய்க்குப் புறப்பட்டுச் செல்லும்படியானதோர் நெருக்கடியாகிவிட்டது.

   ’நினைப்பதெல்லாம் ..... நடந்து விட்டால் ......’ என்ற சினிமாப் பாட்டு மட்டுமே பாட முடிகிறது. :)

   எழுத்துலக நட்பாவது இன்றுபோல என்றும் நம்மிடையே நீடித்திருந்தால் மகிழ்ச்சியே. :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
  3. அன்புள்ள கோபு சார், அன்றைய சூழலில் நம்மிருவராலும் சந்திப்புக்கு நேரமொதுக்க இயலாத சூழலை இருவருமே பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். தங்களுடைய சூழல் எனக்கு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. தாங்களும் என் சூழலை புரிந்துகொண்டீர்கள். அதனால் வருத்தமேதுமில்லை. வாய்ப்பு அமைந்தும் சந்திக்கமுடியாமல் போயிருந்தால்தான் மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். எங்கே போய்விடப்போகிறோம்? திருச்சிதானே? அடுத்தமுறை சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். தங்களுடைய இந்த விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி சார்.

   நீக்கு
  4. கீத மஞ்சரி February 15, 2015 at 5:38 AM

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் மீண்டும் வருகையே நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியை எனக்கு அளிக்கிறது. :)

   //அன்புள்ள கோபு சார், அன்றைய சூழலில் நம்மிருவராலும் சந்திப்புக்கு நேரமொதுக்க இயலாத சூழலை இருவருமே பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். தங்களுடைய சூழல் எனக்கு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. தாங்களும் என் சூழலை புரிந்துகொண்டீர்கள். அதனால் வருத்தமேதுமில்லை.//

   நியாயமான நல்லதொரு புரிதல் .... இருவருக்குமே .... மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   //வாய்ப்பு அமைந்தும் சந்திக்கமுடியாமல் போயிருந்தால்தான் மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும்.//

   YOU ARE CORRECT !

   //எங்கே போய்விடப்போகிறோம்? திருச்சிதானே? அடுத்தமுறை சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.//

   நல்லதொரு நம்பிக்கை ! வாழ்த்துகள். :) மிக்க மகிழ்ச்சி.

   //தங்களுடைய இந்த விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி சார்.//

   மிக்க நன்றி! நன்றி!! நன்றி !!!

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 21. அன்பின் திரு வை.கோ அவர்களே !

  திருச்சியில் பதிவர் சந்திப்பு நடத்திக் கொண்டு வருகிற சக பதிவர்களை வரவேற்று அளவளாவி மகிழ்ந்து - அவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும் தங்களது செயல் பாராட்டுக்குரியது. நல்வாழத்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) February 14, 2015 at 5:42 AM

   அன்பின் திரு வை.கோ அவர்களே !

   வாங்கோ என் அன்பின் சீனா ஐயா, வணக்கம் ஐயா.

   //திருச்சியில் பதிவர் சந்திப்பு நடத்திக் கொண்டு வருகிற சக பதிவர்களை வரவேற்று அளவளாவி மகிழ்ந்து - அவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும் தங்களது செயல் பாராட்டுக்குரியது. நல்வாழத்துகள் - நட்புடன் சீனா//

   நம் ஊருக்கும், ஏதோ நம்மை நாடி, நம் வீட்டுக்கும் வருகை தருவோர்களை வரவேற்று, அளவளாவி நாம் மகிழ்வது, அவர்களை மகிழ்விக்க வேண்டியது நம் கடமை அல்லவா !

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 22. அன்பின் திரு வை.கோ அவர்களே !

  திருச்சியில் பதிவர் சந்திப்பு நடத்திக் கொண்டு வருகிற சக பதிவர்களை வரவேற்று அளவளாவி மகிழ்ந்து - அவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும் தங்களது செயல் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

   நம் இருவரின் இனிய சந்திப்பு பற்றி இன்று பதிவு வெளியிட்டுள்ளேன் ஐயா. இதோ இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html

   நேரமிருந்தால் வருகை தாருங்கள் ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 23. சார் இப்பிடி வருது ஆனா ஆட் ஆகலை ஏன்னு தெரில. :(

  Settings for VAI. GOPALAKRISHNAN Stop following this site
  You are following publicly

  பதிலளிநீக்கு
 24. Thenammai Lakshmanan February 14, 2015 at 6:08 AM

  வாங்கோ, வணக்கம்.

  தேன் சிந்திடும் :) சிரித்த முகத்துடன் ;) இப்போது மிகச்சிறப்பாகக் காட்சியளிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 25. அனைவரது வருகைகள், அதனைப்பற்றிய விபரங்கள், அவர்களோடு நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அசத்தலாக உள்ள‌ன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனோ சாமிநாதன் February 14, 2015 at 11:03 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அனைவரது வருகைகள், அதனைப்பற்றிய விபரங்கள், அவர்களோடு நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அசத்தலாக உள்ள‌ன!//

   ஆஹா, அப்படியா ! மிக்க மகிழ்ச்சி. :)

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான + அசத்தலான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 26. கோபு அண்ணா

  உங்க வீட்டுக்குள்ள நுழைந்த போது புதிதாக ஒரு வீட்டிற்குள் நுழையும் எண்ணமோ, சங்கோஜமோ எதுவும் எனக்கு துளிக்கூட ஏற்படவே இல்லை. மற்ற பதிவர்களுடன் நீங்கள் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களை சந்தித்த எல்லாருக்குமே அப்படித்தான் இருக்கும் போல இருக்கு.

  உங்களுக்கு இன்னும் ஒரு வேலை இருக்கு. இந்த அழகான வீடியோக்கள் ANIMATED படங்கள் இதையெல்லாம் எப்படிப் போடுவது என்று ஒரு CLASS எடுங்களேன்.

  புகைப்படங்கள் எல்லாமே ஒரு கை தேர்ந்த புகைப் படக்காரரால் எடுக்கப் பட்டது போல் இருக்கிறது.

  திருப்பித் திருப்பி என்ன சொல்ல? நான் ஆட்டக்கே இல்ல. அவுட் ஆயிட்டேன்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya February 17, 2015 at 3:35 PM
   கோபு அண்ணா//

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //உங்க வீட்டுக்குள்ள நுழைந்த போது புதிதாக ஒரு வீட்டிற்குள் நுழையும் எண்ணமோ, சங்கோஜமோ எதுவும் எனக்கு துளிக்கூட ஏற்படவே இல்லை. //

   அப்படியா ஜெ, மிகவும் சந்தோஷம்மா. இது என்னாலும் அன்று மிக நன்றாகவே உணரப்பட்டது ஜெயா.

   புதிதாகக் கல்யாணம் ஆகி 4 நாட்கள் கூட ஆகாத தங்களின் பெண்ணையும், புதுமாப்பிள்ளையையும், சம்பந்தி மாமா + மாமியையும், தங்கள் ஆத்துக்காரரையும் கூட்டிக்கொண்டு நம் ஆத்துக்கு ஆசையுடனும் ஆவலுடனும் ஜெயா வந்தது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், என் மீது ஜெயா வைத்துள்ள ஆழமான அன்பினை நன்கு புரிந்துகொள்ளும் விதமாகவும் இருந்தது.

   நாங்களும் அன்று மூன்று தம்பதியினரையும் ஹாரத்தி சுற்றி வரவேற்கும் பாக்யம் பெற்றோமே !

   உங்காத்து அந்த இரு கல்யாண வைபவங்களுக்குமே [தங்கள் இருவரின் சஷ்டியப்தபூர்த்தி + பெண் சந்தியா கல்யாணம்] நேரில் சென்னைக்கு வர முடியாமல் இருந்த எனக்கு தாங்கள் செய்த இந்தச்செயல் ரொம்பவும் சந்தோஷம் அளித்தது.

   அன்பான வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெயந்தி.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 27. இனிமையான சந்திப்புகள்.....

  இந்த சந்தித்தவர்களில் தொகுப்பில் பால கணேஷ், சுந்தர்ஜி....... மிக்க மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 28. இன்று 29.07.2015 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு நம் அன்புச் சகோதரி மஞ்சுபாஷிணி அவர்கள் என் இல்லத்துக்கு திடீர் வருகை புரிந்து சுமார் ஒரு மணி நேரம் ஜாலியாகப் பேசி மகிழ்வித்துச் சென்றார்கள்.

  திருமதி. and திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களும், தம்பதி ஸமேதராய், மஞ்சுவுடன் கூடவே என் இல்லத்துக்கு இன்று எழுந்தருளியிருந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

  அவர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 29. இன்று 29.07.2015 என் இல்லத்திற்கு திடீர் வருகை தந்த திருமதி. மஞ்சுபாஷிணி அவர்களின் புகைப்படம் இந்தப்பதிவினில் இன்று புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 30. நட்புகளின் சந்திப்பு அமர்க்களம். படங்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 31. பின்னூட்டம் இருமுறை அளித்தேன்.. கிடைத்ததா எனத்தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:32 AM

   //பின்னூட்டம் இருமுறை அளித்தேன்.. கிடைத்ததா எனத்தெரியவில்லை...//

   கிடைக்கவில்லை மேடம். நம்புங்கோ. அதனால் என்ன மீண்டும் மீண்டும் அனுப்புங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

   நீக்கு
 32. சிறகடிக்கும் மகிழ்ச்சியுடன்
  சிறப்பான பதிவர் சந்திப்புகள்..வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 3:52 PM

   வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //சிறகடிக்கும் மகிழ்ச்சியுடன் சிறப்பான பதிவர் சந்திப்புகள்..வாழ்த்துகள்..!//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

   [ அனுப்பியதாகச் சொன்ன இரண்டுக்கு ஒன்றாவது மீண்டும் புதையல் போலக் கிடைத்ததே ... நல்லவேளை. ]

   நீக்கு
 33. ஒங்கூட்டு மூலேல ஒரு பீரோ இருக்குதுல் அதுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு நானும் அல்லா பதிவர்களயும் சந்திச்சி போட்டேனே. நீங்க தா என்ன கண்டுகிடவேல்ல.

  பதிலளிநீக்கு
 34. சிறப்பான பதிவர் சந்திப்புகள் தொடரட்டும் எல்லாரையும் அறிந்து கொள்ளமுடியும் நல்ல வாய்ப்பு.

  பதிலளிநீக்கு
 35. உங்கள் கதைகளைப்போல...உங்களின் அன்பு வட்டத்தில் இருப்பவர்களும் வெரைட்டியானவர்கள்தான்...!! ரசித்-தேன்.

  பதிலளிநீக்கு
 36. உயர்ந்த உள்ளம் உங்கள் எண்ணத்தில் வெளிப்படுகிரது!

  பதிலளிநீக்கு