About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, August 13, 2013

ஆயிரம் நிலவே வா ! ... ... ... ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!

By
வை. கோபாலகிருஷ்ணன்


மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி

நம் அன்புக்கும், 
மரியாதைக்கும் உரிய

தெய்வீகப்பதிவர்
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

தனது வெற்றிகரமான 
ஆயிரமாவது [1000th POST] பதிவினை 
இன்று செவ்வாய்க்கிழமை
இந்திய நேரம் காலை 5 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

 


2
ஸ்ரீராமஜயம்


 
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள்

[விளக்கேற்றி வைத்து, வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது 
ஆதிசங்கரர் அருளிய இந்த வெகு அழகான 
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தைச் 
சொல்லி வந்தால் ஸர்வ மங்களமும் கிட்டுவது நிச்சயம்]


 
1

அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !
ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

2

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !
கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!3

அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !
வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
4

அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!
சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!5

அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !
மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!6

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா
காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !
ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
7

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !
யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!
அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்
அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !
அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!   


வாராய் என் தோழி வாராயோ ! 
மகத்தான வெற்றி விழாப்பந்தல் 
காண வாராயோ!!
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு 
என் அன்பான பாராட்டுக்கள்மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்


மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள் 
எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் 
பல்வேறு வெற்றிகளைப்பெற்று 
புகழின் உச்சியினை அடைய 
உளமாற வாழ்த்துகிறேன்.


செளபாக்யவதி 
இராஜராஜேஸ்வரி
அவர்களே !

A L W A Y S  


வெற்றி விழாவுக்கான அழைப்பிதழ்இந்த என் பதிவினைப்படிக்கும் அனைவரும் 
தயவுசெய்து  இங்கும் ஆஜர் கொடுத்துவிட்டு 
மறக்காமல் 
திருமதி இராஜராஜேஸ்வரி 
அவர்களின் வலைத்தளத்திற்குச்சென்று 
வாழ்த்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விழா நடக்குமிடம் செல்லப்பாதை இதோ:
http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_13.html


I request all my Friends and Followers 
to kindly offer your Valuable Comments 
not only here in my post but also in 
Mrs. Rajarajeswari Madam's post 
with your kind Greetings 
for Her Very Successful 
1000th Post 
Released Today. 

Link to Reach Her Post : 

http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_13.html


வெற்றி விழாவினை வாழ்த்தச்செல்லும் முன் 
தயவுசெய்து விருந்து சாப்பிட்டு விட்டுச்செல்லுங்கள்.


 


 


தங்கள் அனைவரின் கவனத்திற்காக

செளபாக்யவதி: இராஜராஜேஸ்வரி அவர்கள் 
பற்றிய ஒரு சிறுகுறிப்பு

ஞானத்தில் சரஸ்வதி தேவி;செல்வச்செழிப்பினில் மஹாலக்ஷ்மி; ஆற்றலில் ஆதி பராசக்தி என முப்பெரும் தேவிகளின் தெய்வாம்சங்களையும் ஒருங்கே கொண்டவர்கள் தான் இந்த செளபாக்யவதி இராஜராஜேஸ்வரி அவர்கள்.

இவர்கள் வலையுலகில் புகுந்து முதல் பதிவு 

வெளியிட்ட தேதி:    21.01.2011 

இன்றைய தேதி:       13.08.2013 

இடைப்பட்ட நாட்களோ  936 மட்டுமே !  

936 நாட்களில் 1000 பதிவுகள் கொடுத்து மிகப்பெரிய சரித்திர சாதனை புரிந்துள்ளார்கள், இந்த பதிவுலக சாதனைப் பெண்மணி.

இவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஏனோ தானோ பதிவுகள் அல்ல.

ஒவ்வொரு பதிவும் உலகத்தரம் வாய்ந்த படங்கள் நிறைந்தவை..

இவர்கள் தரும் தலைப்புகள் மிகவும் அழகானவை.

உள்ளே தந்திடும் செய்திகளோ விளக்கங்களோ ஏராளமானவை மட்டுமல்ல, தாராளமான நீளம், அகலம், ஆழம் நிறைந்தவை.

ஆயிரம் பதிவுகளுமே, ஆயிரம் பெளர்ணமி நிலவாக ஜொலிப்பவை. 

படிப்போர் மனதுக்கு எப்போதுமே குளுமை தரக்கூடியவை.

அதனால் தான் நான் இந்த என் பதிவின்  தலைப்பினை 

“ஆயிரம் நிலவே வா .... 
ஓர் .... ஆயிரம் நிலவே வா” 

என்று கொடுத்துள்ளேன்.

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளில் 90% ஆன்மிக விஷயங்களே நிரம்பி உள்ளதாகக் கூறப்படுவது உண்மையாயினும், ஆன்மிகக்  கலப்பு அதிகம்  இல்லாமலும் இவர்கள் பல பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். 

அவற்றில் என்னை, மிகவும் கவர்ந்து, என் மனதைக்கொள்ளை கொண்ட பதிவுகளாக கீழ்க்கண்ட 35 பதிவுகளை அடையாளம் காட்டிட விரும்புகிறேன். 

இவற்றில் ஏதாவது ஒரு பதிவினைத் திறந்து  படித்துப்பார்த்தால் உங்களுக்கே இவர்களின் தனித்திறமை என்னவென்று புரியக்கூடும்.1] யானை விளையாட்டு

2] மிடுக்காய் கடுக்காய்

3] பஞ்சவர்ணக்கிளிப்பூ

4] கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்

5] வியத்தகு விமான நிலையங்கள்.

6] கை வண்ணம் கலை வண்ணம்

7] கண்ணாடிப்பாலமும் தொட்டிப்பாலமும்

8] அன்பு நண்பனுக்கு ஆராதனை

9] ஆஹா, ஹாங்காங்

10] இரயில் பயணங்களில்

11] புதுமை புதுமை கொண்டாட்டம்

12] வானில் வண்ணக்கோலங்கள்

13] பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்.

14] மிஞ்சிய பலன் தரும் இஞ்சி

15] பந்தாட்ட யானைகள்

16] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்.

17] லயிக்க வைக்கும் லங்காவி

18] பட்டையின் பராக்கிரமம்

19] ஹாங்காங் நோவாவின் கப்பல்

20] பூப்பூவாய்ப் பூத்த புதுப்பூக்கள்

21] மலர்களே மலர்களே

22] உல்லாச உலகம்

23] கருத்தான கருவேப்பிலை

24] தேன் மதுரத் தேன் சிட்டுக்கள்

25] உலக பொம்மலாட்ட தினம் 

26] நிஷாகந்தி - பூப்பூக்கும் ஓசை

27] பஞ்ச வர்ணக்குருவிகள்

28] செல்லப்பிராணிகள்

29] கடலுக்குள் கலாட்டா

30] சர்வ தேச யானைகள் திருவிழா

31] பட்டத்திருவிழா

32] பாசப்பறவைகள்.

33] பூமரங்கள் வீசும் சாமரங்கள்

34] பச்சைக்கிளிகள் பரவும் பக்த அனுமன் !

35] கடல் பசுக்கள்


நேரம் தவறாமை, அபார விஷய ஞானம், யானைபோன்ற ஞாபகசக்தி, தேனீ போன்ற சுறுசுறுப்பு, வாசிப்பதிலும் எழுதுவதிலும் அதீத ஆர்வம், ஆத்மார்த்தமான ஈடுபாடு, தனித்தன்மை, தனித்திறமை, பேராற்றல், அமைதியான ஸாத்வீகமான பெருந்தன்மை போன்ற எல்லா மென்மையான மேன்மையான நற்குணங்களும் ஒருங்கே அமைந்து, நிரம்பி வழியும் அதிபுத்திசாலியான இவர்களை என்னால் எப்போதும் ஓர் பிரத்யக்ஷ அம்பாளாகவே நினைத்து மகிழ முடிகிறது. 

இவர்களைப்பற்றியும் இவர்களுடைய வலைத்தளத்தினைப் பற்றியும் வலைச்சரத்தில் பல ஆசிரியர்கள், பலமுறை பாராட்டிப்பேசி கெளரவித்துள்ளனர். 

இவர்களே ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றிய போது, இதுவரை வலைச்சர ஆசிரியராக இருந்த யாருமே செய்யாத சரித்திர சாதனையாக, மிகப் பெரும்பாலான எண்ணிக்கையில் [200க்கும் மேற்பட்ட] பதிவர்களை, அடையாளம் காட்டி, அறிமுகம் செய்து அசத்தியுள்ளார்கள். 

வலையுலகிலும், வல்லமையிலும், மூன்றாம் கோணத்திலும், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையிலும் எழுதி, அந்தத்தளங்களில் அவர்களில் பலரால்  அவ்வப்போது நடத்தப்பட்ட பல [சிறுகதை + கட்டுரை + கவிதை] போட்டிகளில் பங்கேற்று பலமுறை, பாராட்டுக்களையும், பரிசினையும் வென்று குவித்துள்ளார்கள்.

நிறைய தொடர்பதிவுகளும் வித்யாசமான முறையில் அழகாக எழுதியுள்ளார்கள்.

இவர்கள் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள அனைத்து 1000 பதிவுகளிலும் என்னுடைய பின்னூட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பதில் என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 

அதுபோல நான் இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய அனைத்துப் பதிவுகளிலும் இவர்களின் பின்னூட்டங்கள் தவறாமல் இடம் பெற்று எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அளித்துள்ளன.

இதுபோன்றதொரு ஆச்சர்யமானவரும், அதிசயமானவரும், நல்ல மனதுக்காரரும், பெருந்தன்மையானவரும்,அதிபுத்திசாலியும், என் நலம் விரும்பியும் ஆன ஒரு பதிவரின் நட்பினை வலையுலகம் மூலம் எனக்கு அடையாளம் காட்டியுள்ள ஆண்டவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

செளபாக்யவதி இராஜராஜேஸ்வரி அவர்களின் புகழையும், தனித்திறமைகளையும் பற்றி, நான் மேலும் தொடர்ச்சியாக இங்கு சொல்ல ஆரம்பித்தால், அவற்றை முடிப்பதற்குள்  நீண்ட நேரம் ஆகி, இன்றைய பொழுதே போய் நாளைய பொழுது விடிந்து விடும். 

அப்புறம் 1000 என்ற சிறப்புப்பதிவு முடிந்து 1001 என்ற பதிவினை அவர்கள் வெளியிட்டு விடுவார்கள். 

அதனால் நாம் உடனே இப்போதே அவர்களின் பதிவுக்குச் செல்வோம் ... ஜூஸ் பருகிவிட்டு .... ஜில்லுன்னு ..... சீக்கரமா ...... கிளம்புங்கோ ! சொகுசுப்பேருந்துகள் இதோ 
உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கின்றன !வெற்றி விழாவுக்கான மொய்ப்பணத்தைத் 
தங்கள் சார்பில் மொத்தமாக 
நானே கொடுத்துவிடுகிறேன் !


தாங்கள் தயவுசெய்து அவர்களை வாழ்த்தி
அவர்களின் வலைத்தளத்தில் 
பின்னூட்டம்  கொடுத்தால் அதுவே போதும். ;)))))

இங்கு அன்புடன் வருகை தந்து 
கருத்துக்கூறிடும் அனைவருக்கும், 
என்னால் தனித்தனியாக 
நன்றி கூறி பதில் தரப்படும்.

மேலும் ஓர் முக்கிய அறிவிப்பு

வரும் 16.08.2013 
ஆடி வெள்ளிக்கிழமை
காலை 6 மணிக்கு

”அறுபதிலும் ஆசை வரும்!”

என்ற தலைப்பில் 
ஓர் சிறப்புப்பதிவு 
வெளியாக உள்ளது

அதையும் 
காணத் தவறாதீர்கள்.என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

13.08.2013 செவ்வாய்க்கிழமை226 comments:

 1. இதோ நானும் கிலம்பி விட்டேன் திருமதி ராஜராஜெஸ்வரியின் பதிவிற்கு. அவர்கலுடைய 1000வது பதிவைப் பற்றீ இவ்வலவு விளக்கமாக பதிவ்ட்டதற்கு நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam August 12, 2013 at 12:41 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இதோ நானும் கிளம்பி விட்டேன் திருமதி ராஜராஜேஸ்வரியின் பதிவிற்கு.//

   நீங்க எவ்வளவு அவசரமாகக் கிளம்புகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

   ’அவசரத்தில் அண்டாவும் கை கொள்ளாது’ என்று ஓர் பழமொழி உண்டு. அதுபோல அவசரத்தில் நிறைய எழுத்துப்பிழைகளை என்னால் காணமுடிந்தது. ;)

   //அவர்களுடைய 1000வது பதிவைப் பற்றி இவ்வளவு விளக்கமாக பதிவிட்டதற்கு நன்றி சார்.//

   தங்களின் அன்பான உடனடி முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
  2. தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
   மனம் நிறைந்த நன்றிகள்..!

   Delete
 2. நேரம் தவறாமை, அபார விஷய ஞானம், யானைபோன்ற ஞாபகசக்தி, தேனீ போன்ற சுறுசுறுப்பு, வாசிப்பதிலும் எழுதுவதிலும் அதீத ஆர்வம், ஆத்மார்த்தமான ஈடுபாடு, தனித்தன்மை, தனித்திறமை, பேராற்றல், அமைதியான ஸாத்வீகமான பெருந்தன்மை போன்ற எல்லா மென்மையான மேன்மையான நற்குணங்களும் ஒருங்கே அமைந்து, நிரம்பி வழியும் அதிபுத்திசாலியான இவர்களை என்னால் எப்போதும் ஓர் பிரத்யக்ஷ அம்பாளாகவே நினைத்து மகிழ முடிகிறது. //

  நானும் அப்படித்தான் நினைப்பேன் தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும். தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!

  அது மட்டும் அல்லாமல் எல்லோர் பதிவுகளை வாசித்து உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் சோர்வில்லாமல் தருபவர்.
  அவர்களுக்கு நீங்கள் சிறப்பு பதிவு தந்து வாழ்த்தியமைக்கு எங்கள் சார்பில் நன்றிகள் உங்களுக்கு.
  மிக சிறப்பான மகிழ்ச்சியான பகிர்வு.
  வாழ்த்துக்கள் சார்.  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு August 12, 2013 at 1:06 PM

   வாங்கோ, வணக்கம்.

   ***** நேரம் தவறாமை ...... மகிழ முடிகிறது *****

   //நானும் அப்படித்தான் நினைப்பேன் தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும். தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே! அது மட்டும் அல்லாமல் எல்லோர் பதிவுகளை வாசித்து உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் சோர்வில்லாமல் தருபவர்.//

   ஆமாம். உண்மைதான் மேடம்.

   //அவர்களுக்கு நீங்கள் சிறப்பு பதிவு தந்து வாழ்த்தியமைக்கு எங்கள் சார்பில் நன்றிகள் உங்களுக்கு.//

   சந்தோஷம் மேடம். தங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள்.

   //மிக சிறப்பான மகிழ்ச்சியான பகிர்வு. வாழ்த்துக்கள் சார்.//

   ;))))) மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 3. மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள்
  எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும்
  பல்வேறு வெற்றிகளைப்பெற்று
  புகழின் உச்சியினை அடைய
  உளமாற வாழ்த்துகிறேன்.//

  உங்களை போலவே நானும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு August 12, 2013 at 1:16 PM

   *****மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள் எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளைப்பெற்று புகழின் உச்சியினை அடைய உளமாற வாழ்த்துகிறேன்.*****

   //உங்களை போலவே நானும் வாழ்த்துகிறேன்.//

   ஆஹா, சந்தோஷம். அன்பான தங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

   Delete
 4. சுவையான இனிப்புகளுடன் நீங்கள் செய்த அடை, துனுக்கும் கொடுத்தற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு August 12, 2013 at 1:18 PM

   //சுவையான இனிப்புகளுடன் நீங்கள் செய்த அடை + குணுக்குகளும் கொடுத்தற்கு நன்றி.//

   அடடா, நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு. கூர்ந்து கவனித்துக் கண்டுபிடித்துள்ளீர்களே ! ;)))))

   சந்தோஷம், மேடம்.

   Delete
  2. தங்கள் அருமையான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பான நன்றிகள்..!

   Delete
 5. 1000 வைரங்களை படைத்த ராஜேஸ்வரி அக்காவுக்கு அன்பான வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Cherub Crafts August 12, 2013 at 1:45 PM

   வாங்கோ நிர்மலா, வணக்கம்.

   “ஓடியாங்கோ ..... ஓடியாங்கோ .... அவசரம் அவசியம், உடனே ஓடியாங்கோ” என்று நான் சொன்னதும், உடனே ஓடிவருவீர்கள் என நான் எதிர் பார்க்கவே இல்லை. ;)))))

   //1000 வைரங்களை படைத்த ராஜேஸ்வரி அக்காவுக்கு அன்பான வாழ்த்துக்கள்//

   தங்கள் அக்காவை வைரமாக ..... அதுவும் 1000 வைரமாக சிறப்பித்து வாழ்த்தியதற்கு என் அன்பு நன்றிகள், நிர்மலா.

   Delete
 6. அக்கா மெய்யாகவே தெய்வீக பதிவர்தான் ..அவரது பதிவுகள் அனைத்துமே AWESOME!!!!!
  ஒவ்வொன்றும் தகவல் களஞ்சியம் ..

  ReplyDelete
  Replies
  1. Cherub Crafts August 12, 2013 at 1:49 PM

   //அக்கா மெய்யாகவே தெய்வீக பதிவர்தான் ..அவரது பதிவுகள் அனைத்துமே AWESOME!!!!! ஒவ்வொன்றும் தகவல் களஞ்சியம் ..//

   மிகச்சரியாகவே சொல்லிட்டீங்கோ, நிர்மலா. மிக்க மகிழ்ச்சி.;)))))

   Delete
 7. ராஜேஸ்வரி அக்காஇன்னும் நிறைய பதிவுகளை தரணும் மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள்
  எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும்
  பல்வேறு வெற்றிகளைப்பெற்று
  புகழின் உச்சியினை அடைய
  உளமாற வாழ்த்துகிறேன்//நானும்

  இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. Cherub Crafts August 12, 2013 at 1:54 PM

   //ராஜேஸ்வரி அக்கா இன்னும் நிறைய பதிவுகளை தரணும். //

   தருவார்கள் என நம்புவோம், நிர்மலா.

   *****மேலும் மேலும் தொடர்ந்து நீங்கள் எழுத்துலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளைப்பெற்று புகழின் உச்சியினை அடைய உளமாற வாழ்த்துகிறேன்.*****

   //நானும் இறைவனை வேண்டுகிறேன்.//

   நம் இருவரின் கூட்டுப்பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலன் இருக்கும். மிக்க நன்றி நிர்மலா.

   Delete
  2. வருகைக்கும் வாழ்த்துரைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..

   Delete
 8. இப்போ பின்னூட்டம் அண்ணாவுக்கு ...அண்ணா !!!!! இவ்வளவு ஸ்நாக்ஸ் /அறுசுவை உணவுடன் மொய்யும் தந்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட்டீங்க ...உங்கள் விருந்தோம்பல கிரேட் கிரேட் !!!

  ReplyDelete
  Replies
  1. Cherub Crafts August 12, 2013 at 1:58 PM

   இப்போ பின்னூட்டம் அண்ணாவுக்கு ...

   //அண்ணா !!!!! இவ்வளவு ஸ்நாக்ஸ் /அறுசுவை உணவுடன் மொய்யும் தந்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட்டீங்க ....... உங்கள் விருந்தோம்பல கிரேட் கிரேட் !!!//

   ஏதோ இந்த ஏழை எளிய அண்ணனால் முடிந்தது.

   ”எத்கிஞ்சது” என்பார்கள், அதுபோலத்தான் நிர்மலா.

   Delete
 9. வெறும் வார்த்தையில் பதிவுலக பின்னூட்டத்தில் நன்றி, சிறப்பு என்று வாழ்த்த மனசு இல்லை அம்மாவின் பதிவின் மூலம் நான் சில தலத்தினை தரிசித்தேன் அம்மா இன்னும் நலமுடன் பல பகிர்வு பதியவேண்டும் என்று என் சாஸ்தாவிடம் பாதம் பணிகின்றேன் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. தனிமரம் August 12, 2013 at 1:59 PM

   வாருங்கள் .... வணக்கம்.

   //வெறும் வார்த்தையில் பதிவுலக பின்னூட்டத்தில் நன்றி, சிறப்பு என்று வாழ்த்த மனசு இல்லை அம்மாவின் பதிவின் மூலம் நான் சில தலத்தினை தரிசித்தேன் அம்மா இன்னும் நலமுடன் பல பகிர்வு பதியவேண்டும் என்று என் சாஸ்தாவிடம் பாதம் பணிகின்றேன் ஐயா!//

   மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான அதிசயமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அம்மாவுக்காக சாஸ்தாவிடம் தாங்கள் செய்யும் பாதம் பணிந்த பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
  2. சிறப்பான கருத்துரைகளுக்கும் சாஸ்தாவிடம் தாங்கள் செய்யும் பாதம் பணிந்த பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்,

   Delete
 10. அன்பின் வை.கோ - இன்னும் 4 மணி நேரம் இருக்கிறது - சென்று பார்க்கிறேன். இத்தளத்தில் தங்களின் பாராட்டும் வாழ்த்தும் நன்று. எத்தனை எத்த்னை படங்கள் - எவ்வளவு விளக்கங்க்ள் - நீண்ட பதிவு - வரவேற்பு - வான வேடிக்கை - நாதஸ்வரம் - எத்தனை எத்த்னாஇ பலகாரங்கள் - - சாப்பாடு - பழங்கள் - காபி - மொய்ப்பணம் நன்றி அறிவிப்பு பேருந்து ஐஸ்கிரீம் - ஆன்மீகப் பதிவில்லாத 36 பதிவுகள் - அவற்றின் சுட்டிகள் - அடேங்கப்பா - எவ்வளவு பொறுமைசாலி தாங்கள் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) August 12, 2013 at 2:19 PM

   வாருங்கள் அன்பின் திரு சீனா ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்பின் வை.கோ - இன்னும் 4 மணி நேரம் இருக்கிறது - சென்று பார்க்கிறேன்.//

   நள்ளிரவில் இங்கு தங்களின் தரிஸனம் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. தாங்கள் தற்சமயம் வெளிநாட்டுச் சுற்றுலாவில் இருப்பதில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய இலாபம் இது தான்.;)))))

   //இத்தளத்தில் தங்களின் பாராட்டும் வாழ்த்தும் நன்று. எத்தனை எத்தனைப் படங்கள் - எவ்வளவு விளக்கங்க்ள் - நீண்ட பதிவு - வரவேற்பு - வான வேடிக்கை - நாதஸ்வரம் - எத்தனை எத்தனை பலகாரங்கள் - - சாப்பாடு - பழங்கள் - காபி - மொய்ப்பணம் நன்றி அறிவிப்பு - பேருந்து - ஐஸ்கிரீம் - ஆன்மீகப் பதிவில்லாத 35 பதிவுகள் - அவற்றின் சுட்டிகள் - அடேங்கப்பா - எவ்வளவு பொறுமைசாலி தாங்கள் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா//

   அழகாக அனைத்தையும் ரஸித்து, ருசித்து, ஒவ்வொன்றையும் பாராட்டியுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிய கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

   Delete
  2. பெரியவர்கள் வாழ்த்துரைகளுக்கு
   மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..

   Delete
 11. பிந்தடமறிய இம்மறுமொழி

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) August 12, 2013 at 2:20 PM
   பிந்தடமறிய இம்மறுமொழி

   OK OK ;)

   Delete
 12. சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! 1000 பதிவுகள் என்பது சாதாரண இலக்கு அல்ல! மீண்டும் வாழ்த்துக்கள் அவருக்கு!!

  வாழ்த்துப் பதிவினை அழகுற வெளியிட்ட கோபால் சார் உங்களுக்கும் நன்றிகள்!!!!

  ReplyDelete
  Replies
  1. பிரபல எழுத்தாளர் மணி மணி August 12, 2013 at 2:58 PM

   வாருங்கள், வணக்கம். பிரபல எழுத்தாளர் ’டபுள் மணி’ அவர்களே இங்கு வ்ந்து வாழ்த்தியுள்ளது, என் வியப்பினை டபுள் மடங்காக ஆக்கிவிட்டது. சந்தோஷம்.

   இருப்பினும் என்னுடைய நியாயமான நீண்ட நாள் கோரிக்கையை இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை.

   ”ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி”யாக http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
   http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html ஆகிய முதல் இரு பகுதிகளுக்கும் வருகை தந்து அசத்தலான பின்னூட்டங்கள் கொடுத்த நீங்கள், அதன் பிறகு அடுத்த் இரு பகுதிகளான http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html மற்றும்
   http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4_26.html க்கு வருகை தராமல் என்னை மிகவும் அப்செட் செய்துவிட்டீர்கள்.

   அந்த இரு பகுதிகளுக்கு ஓ.வ.நாராயணனாகவே தாங்கள் மீண்டும் உடனடியாக வருகை தரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   //சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! 1000 பதிவுகள் என்பது சாதாரண இலக்கு அல்ல! மீண்டும் வாழ்த்துக்கள் அவருக்கு!!//

   தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   //வாழ்த்துப் பதிவினை அழகுற வெளியிட்ட கோபால் சார் உங்களுக்கும் நன்றிகள்!!!!//

   நன்றிகளுக்கு என் நன்றிகள். ;))))))

   Delete
 13. மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி August 12, 2013 at 3:08 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //மனமார்ந்த பாராட்டுகள்.//

   தங்கள் அன்பான வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் என் இனிய நன்றிகள் ஐயா.

   Delete
 14. அறிவுக்கு விருந்தாகும் திருக்குறள்
  கண்ணுக்கு விருந்தாகும் உங்கள்
  பதிவுக் கதம்பம்

  பேராசையை
  தூண்டுகிறீர் நாவால் சுவைக்க
  வேண்டிய பல காரங்களை
  கண் முன்னே வைத்து.
  மனதை மகிழ வைக்கும்
  செய்திகளோடு நெஞ்சை
  நெகிழ வைக்கும் நினைவுகளையும்
  அள்ளி தருகிறீர்கள்.

  மனம் திறந்து பாராட்ட
  மனம் வேண்டும்
  பாராட்ட பல காரணங்கள் வேண்டும்
  அதை பட்டியலிட்டு தந்துள்ளீர்.
  ஜகமணி வலைதள பதிவரின்
  ஆயிரமாம் பதிவு வண்ணம் கலந்து
  உயர்ந்த எண்ணங்களை விதைக்கும்
  கருவூலம் ,நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

  அவருக்கு வாழ்த்துக்கள்
  பல்லாண்டு வளமுடன் வாழ
  அவரின் பெருமைகளை
  பட்டியலிட்டு காட்டிய VGK
  வாழ்க .

  உங்கள் அஞ்சலகத்தில் பதிவைபோட்டால்
  அது அவர்களிடம் போய் சேர்ந்திடும்.

  ReplyDelete
  Replies
  1. Pattabi Raman August 12, 2013 at 5:04 PM

   வாங்கோ அண்ணா, வணக்கம் / நமஸ்காரங்கள் அண்ணா.

   //அறிவுக்கு விருந்தாகும் திருக்குறள் கண்ணுக்கு விருந்தாகும் உங்கள் பதிவுக் கதம்பம் //

   அடடா! எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கே இதைக்கேட்க.

   //பேராசையை தூண்டுகிறீர் நாவால் சுவைக்க வேண்டிய பல காரங்களை கண் முன்னே வைத்து. மனதை மகிழ வைக்கும்
   செய்திகளோடு நெஞ்சை நெகிழ வைக்கும் நினைவுகளையும்
   அள்ளி தருகிறீர்கள். //

   மிகவும் சந்தோஷம், அண்ணா.

   //மனம் திறந்து பாராட்ட மனம் வேண்டும் பாராட்ட பல காரணங்கள் வேண்டும் அதை பட்டியலிட்டு தந்துள்ளீர்.//

   மனம் நிறையவே என்னிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது அண்ணா.

   காரணங்கள் என்று ஏதும் குறிப்பாகக் கிடையாது, அண்ணா.

   என்னையும் அறியாமல் ஏதோ ஒரு ஈடுபாடு / பிரேம பக்தி..

   கோபியர்கள் கோபாலகிருஷ்ணனிடம் கொண்டிருந்த ப்ரேம பக்தி போலவே தான் இதுவும்.

   //ஜகமணி வலைதள பதிவரின் ஆயிரமாம் பதிவு வண்ணம் கலந்து உயர்ந்த எண்ணங்களை விதைக்கும் கருவூலம் ,நான் பலமுறை கண்டிருக்கிறேன்.//

   அண்ணா சொன்னால் எதுவுமே அசத்தலாக கரெக்டாகவே இருக்கும். ’கருவூலமே தான்’. ;)))))

   நான் கருவூலத்தைக் கட்டிக்காக்கும் அதிகாரியாக இருந்தவன், ஒரு காலத்தில். இப்போது பணி ஓய்வு பெற்று விட்டேன். இன்று முதல் முழு ஓய்வு பெற்றுவிடலாமா என்ற ஓர் ஆழ்ந்த யோசனையில் உள்ளேன்.

   //அவருக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு வளமுடன் வாழ //

   அவர்களை வாழ்த்தியதற்கு என் தனிப்பட்ட நன்றிகள் அண்ணா.

   //அவரின் பெருமைகளை பட்டியலிட்டு காட்டிய VGK வாழ்க .//

   மகிழ்கிறேன் அண்ணா, தாங்களாவது ’VGK வாழ்க’ என்று சொன்னதற்கு.

   //உங்கள் அஞ்சலகத்தில் பதிவைபோட்டால் அது அவர்களிடம் போய் சேர்ந்திடும்.//

   இதுபோலத்தான் எல்லோருமே நினைத்துக்கொண்டுள்ளார்கள். அது உண்மையா என எனக்கு ஏதும் தெரியாது, அண்ணா.

   என் பணி பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதோடு சரி. வேறொன்றும் அறியேன் பராபரமே !

   தங்களின் அன்பான வருகைக்கும், மனமார்ந்த பல கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும். என் இனிய நன்றிகள் அண்ணா.

   அன்புடன் கோபு

   Delete
  2. //ஜகமணி வலைதள பதிவரின் ஆயிரமாம் பதிவு வண்ணம் கலந்து உயர்ந்த எண்ணங்களை விதைக்கும் கருவூலம் ,நான் பலமுறை கண்டிருக்கிறேன்.//

   பொக்கிஷமான கருத்துரைகள் தந்து மிளிரவைத்த அன்பு கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

   Delete
 15. வார்த்தைகளே வரவில்லை.. அப்படியே திக்குமுக்காடிப் போகிறேன் நானே.. என்ன ஒரு அன்பு பாசம்..நட்பு..
  அய்யா வை கோ அவர்களே முதலில் உங்கள் பொன்னான திருவடிகளுக்கு ஒரு நமஸ்காரம்.

  இதோ கிள்ம்பிட்டேன் 1000 வது பதிவைக் கண்டு களிக்க !

  ReplyDelete
  Replies
  1. ரிஷபன் August 12, 2013 at 5:08 PM

   வாங்கோ என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களே, வணக்கம். தங்களின் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   //வார்த்தைகளே வரவில்லை.. அப்படியே திக்குமுக்காடிப் போகிறேன் நானே.. என்ன ஒரு அன்பு பாசம்..நட்பு..//

   தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி, சார்.

   //அய்யா வை கோ அவர்களே முதலில் உங்கள் பொன்னான திருவடிகளுக்கு ஒரு நமஸ்காரம்.//

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பொன்னான திருவடிகளுக்கு உங்கள் நமஸ்காரங்களைச் சேர்ப்பித்து, நானும் நமஸ்கரித்து, அதன் பின் என் மனமார்ந்த ஆசீர்வாதங்களை தங்களுக்கு வழங்குகிறேன்.

   செளக்யமாக க்ஷேமமாக சந்தோஷமாக எப்போதும் இருக்கவும்.

   //இதோ கிள்ம்பிட்டேன் 1000 வது பதிவைக் கண்டு களிக்க !//

   மிக்க நன்றி.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள் வாழ்க ! வளர்க !!

   Delete
  2. வார்த்தைகளே வரவில்லை.. அப்படியே திக்குமுக்காடிப் போகிறேன் நானே.. என்ன ஒரு அன்பு பாசம்..நட்பு..
   அய்யா வை கோ அவர்களே முதலில் உங்கள் பொன்னான திருவடிகளுக்கு ஒரு நமஸ்காரம்.

   நானும் நமஸ்கரித்துக்கொள்கிறேன் ..
   குருவையும் அருமை சிஷ்யரையுரையும் ..!

   Delete
 16. மிகச் சிறப்பாகத் தங்களின் வாழ்த்துரையைத் தேர்வு செய்துள்ளீர்கள்
  ஐயா ...!!!! நான் ஏற்க்கனவே என் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டேன் .
  இங்கும் மனம் மகிழ்ந்து உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை தோழி
  இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைச்
  சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன் .

  பொன்னும் பொருளும் மறைந்த பொழுதிலும்
  எண்ணும் எழுத்தும் மறையாதுலகினில்
  கண்ணும் கருத்துமாய் நீ வடித்த காவியம்
  மின்னும் உலகினில் மிளிர் கொன்றை நிலவெனவே

  வாழ்த்துக்கள் தோழி .
  மிக்க நன்றி ஐயா அழைப்பிற்கும் ,அழகிய படைப்பிற்கும் !

  ReplyDelete
  Replies
  1. Ambal adiyal August 12, 2013 at 5:22 PM

   வாருங்கள், வணக்கம்.

   //மிகச் சிறப்பாகத் தங்களின் வாழ்த்துரையைத் தேர்வு செய்துள்ளீர்கள் ஐயா ...!!!!//

   மிக்க மகிழ்ச்சி.

   //நான் ஏற்க்கனவே என் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டேன் .
   இங்கும் மனம் மகிழ்ந்து உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை தோழி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன் //

   சந்தோஷம் .... ஸ்பெஷல் நன்றிகள்..

   //பொன்னும் பொருளும் மறைந்த பொழுதிலும்
   எண்ணும் எழுத்தும் மறையாதுலகினில்
   கண்ணும் கருத்துமாய் நீ வடித்த காவியம்
   மின்னும் உலகினில் மிளிர் கொன்றை நிலவெனவே

   வாழ்த்துக்கள் தோழி .//

   அழகான பொருத்தமான பாடல் வரிகள் தந்து சிறப்பித்துள்ளீர்கள்.
   சந்தோஷம்.

   /மிக்க நன்றி ஐயா அழைப்பிற்கும், அழகிய படைப்பிற்கும் !//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள் வாழ்க ! வளர்க !!

   Delete
  2. மின்னிடும் கருத்துரைகளுடன் தனிப்பதிவிலும் பாராட்டி மகிழ்வித்தமைக்கு மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்..!

   Delete
 17. மேடத்துக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு மிக நன்றாகப் பொருந்தும். பிரமிக்கத்தக்க பதிவர்.

  படத்திலிருக்கும், மலரத்துடிக்கும் ரோஜா மொட்டு ஒவ்வொரு முறை மாறும்போதும் இதோ மலரத் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது!

  விருந்து படங்களில் காஃபி மட்டும் எடுத்துக் கொண்டேன்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். August 12, 2013 at 5:25 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //மேடத்துக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு மிக நன்றாகப் பொருந்தும். பிரமிக்கத்தக்க பதிவர்.//

   இதைக்கேட்கவே சந்தோஷமாக உள்ளது, ஸ்ரீராம்.

   //படத்திலிருக்கும், மலரத்துடிக்கும் ரோஜா மொட்டு ஒவ்வொரு முறை மாறும்போதும் இதோ மலரத் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது!//

   இந்தப்படம் எனக்குக்கிடைத்ததும் அந்த அம்பாளின் உபயம் தான்.

   அது ரோஜா அல்ல .... நிஷாகந்தி என்று சொல்லியிருந்தார்கள்.

   //விருந்து படங்களில் காஃபி மட்டும் எடுத்துக் கொண்டேன்!//

   நீங்களும் என்னைப்போலவே ஒரு காஃபி பிரியர் என்பதைப் புரிந்து கொண்டேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
  2. நிஷாகந்தி ம்லர்ந்த பதிவில் அளித்திருந்த
   அந்தமலரும் மலர் ரோஜாதான் ..!


   அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும்,
   மனமார்ந்த இனிய நன்றிகள்

   Delete
 18. இன்று காலை நான் பார்த்த முதல் பதிவே சகோதரியாரின் பதிவுதான். வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துவிட்டேன் ஐயா. தங்களின் பதிவு அருமை ஐயா. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கரந்தை ஜெயக்குமார் August 12, 2013 at 5:33 PM

   வாருங்கள். வணக்கம்.

   //இன்று காலை நான் பார்த்த முதல் பதிவே சகோதரியாரின் பதிவுதான்.//

   மிக்க மகிழ்ச்சி. தினமும் அதுபோலவே செய்யுங்கள். நல்லது.

   //வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துவிட்டேன் //

   சந்தோஷம்.

   //ஐயா. தங்களின் பதிவு அருமை ஐயா. நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்

   Delete
  2. தங்களின் முதல் தரிசனத்திற்கும்
   அருமையான கருத்துரைகளுக்கும்
   மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

   Delete
 19. தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை சிறப்பாக ஆய்வு செய்து விட்டீர்கள் .
  யானை விளையாட்டை வலைசர ஆசிரியராக இருந்தபோது குறிப்பிட்டிருக்கிறேன்.
  இராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பதிவுகள் படைக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. T.N.MURALIDHARAN August 12, 2013 at 6:18 PM

   வாருங்கள், வணக்கம்.

   //தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை சிறப்பாக ஆய்வு செய்து விட்டீர்கள் . //

   அப்படியா? சந்தோஷம். ;))))

   //யானை விளையாட்டை வலைசர ஆசிரியராக இருந்தபோது குறிப்பிட்டிருக்கிறேன். //

   அதற்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள். ;)

   //இராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். //

   அவகளை மனம் நிறைந்து வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகளை நானும் தெரிவித்துக்கொள்கிறேன்.

   //இன்னும் பல ஆயிரம் பதிவுகள் படைக்கட்டும்//

   ஆஹா, படைப்பார்கள். படைக்கட்டும். மகிழ்ச்சியே.

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்

   Delete
  2. இனிய கருத்துரைகளுக்கும்
   வாழ்த்துரைகளுக்குமினிய நன்றிகள்..~

   Delete
 20. காலையில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்ததும் உங்களின் நற்செய்தி! அப்புறம் எனது வலைப்பதிவின் முகப்புப் பலகையில் ( Dashboard ) சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆயிரமாவது பதிவு மின்னியது. அவரது பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

  தீபாவளிக்கு முதல்நாள், கொண்டாட்டத்தை எதிர்பார்த்து எப்பொழுது பொழுது விடியும் என்று இருந்த குழந்தையின் மனதுபோல் உங்கள் பதிவு இருக்கிறது. திறந்த மனதோடு பாராட்டி இருக்கிறீர்கள்.

  சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  மீண்டும் வருவேன்!

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ August 12, 2013 at 6:32 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //காலையில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்ததும் உங்களின் நற்செய்தி! //

   என்னுடைய பல பதிவுகள்: ஏனோ டேஷ்போர்டில் தெரிவது இல்லை. அதுபோலவே இந்த சிறப்புப்பதிவும் டேஷ்போர்டில் தெரியவில்லை. மிகவும் சோதனையாகத்தான் உள்ளது.

   அதுபோல என் டேஷ் போர்டைத்திறந்தால் எனக்குப் பிறர் பதிவுகளும், பெரும்பாலான நேரங்களில் சுத்தமாக தெரிவது இல்லை. சில சமயம் மட்டுமே அவைகள் தெரிகின்றன. என்ன பிரச்சனைகளோ! ;(

   அதனால் மட்டுமே தனியாக மின்னஞ்சல் மூலம் பலருக்கும் தகவல் கொடுத்திருந்தேன்.

   //அப்புறம் எனது வலைப்பதிவின் முகப்புப் பலகையில் ( Dashboard ) சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆயிரமாவது பதிவு மின்னியது. //

   எனக்கு என் டேஷ்போர்டில் அதுபோல எதுவும் மின்னவில்லை, ஐயா ;(

   //அவரது பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.//

   மகிழ்ச்சியுடன் போய்ப் படியுங்கள் ஐயா. சந்தோஷம்.

   //தீபாவளிக்கு முதல்நாள், கொண்டாட்டத்தை எதிர்பார்த்து எப்பொழுது பொழுது விடியும் என்று இருந்த குழந்தையின் மனதுபோல் உங்கள் பதிவு இருக்கிறது.//

   மிகச்சரியாக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா. அதே அதே !

   தீபாவளிக்கு முதல் நாள் போல மட்டும் அல்ல. கடந்த 100 நாட்களாகவே என் மனதில் பலவிதமான எண்ணங்கள், திட்டங்கள், கற்பனைகள்.

   மெருகூட்டி, மெருகூட்டி, மேலும் மேலும் மெருகூட்டி, கடைசியாக பலவற்றைச் சுருக்கிக் கத்தரித்து பல இரவுகள் தூங்காமல் வடிவமைத்த தீபாவளிக் கொண்டாட்டம் தான் இது.

   //திறந்த மனதோடு பாராட்டி இருக்கிறீர்கள். //

   பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில், மிகச்சரியாகப் பாராட்டத்துடிக்கும் தான் என் மனது.
   நேரம் காலம் மற்ற சூழ்நிலைகள் ஒத்து வந்தால் என் மனம் ஆட்டோமேடிக் ஆக, மிகஅகலமாகவே திறந்து கொள்ளும்..

   //சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

   அவர்களை வாழ்த்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே. என் ஸ்பெஷல் நன்றிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

   //மீண்டும் வருவேன்!//

   மிக்க மகிழ்ச்சி. எப்போது வேண்டுமானாலும், மீண்டும் மீண்டும் நிங்கள் வரலாம். ALWAYS WELCOME ! Sir.

   Delete
  2. கொண்டாட்டங்களில் பங்கேற்று சிறப்பித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

   Delete
 21. மனம் திறந்த பாராட்டுகள்.....

  அப்பப்பா எத்தனை இணைப்புகள், படங்கள் என அசத்தி விட்டீர்கள்.....

  தொடரட்டும் உங்களது வலைப்பகிர்வுகள்...

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் August 12, 2013 at 6:41 PM

   வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

   //மனம் திறந்த பாராட்டுகள்.....//

   சந்தோஷம்.

   //அப்பப்பா எத்தனை இணைப்புகள், படங்கள் என அசத்தி விட்டீர்கள்..... //

   மிக்க மகிழ்ச்சி.

   //தொடரட்டும் உங்களது வலைப்பகிர்வுகள்...//

   OK வெங்கட்ஜி.

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜி.

   Delete
 22. asathal post sir. You always keep good track of the happenings and is a regular visitor to any blog. Thanks for bringing the milestone to our notice. Mela thalam, sweet vagayarakal jore-aana post! sirappu kondata padhivu. Moipanamum engalukaga neengale kuduthutele! bale bale!

  Proceeding to the blog page of smt. rajarajeswarima

  ReplyDelete
  Replies
  1. Mira August 12, 2013 at 7:06 PM

   வாங்கோ மீரா, வணக்கம்

   //asathal post sir. அசத்தலான போஸ்ட் சார்//

   சந்தோஷம்.

   //You always keep good track of the happenings and is a regular visitor to any blog.//

   Thank you MIRA ;)))))

   //Thanks for bringing the milestone to our notice. சாதனைமிக்க முக்கியமான மைல்கல்லினை எங்கள் கவனத்திற்குக்கொண்டு வந்ததற்கு நன்றிகள்//

   மகிழ்ச்சி. ஏதோ என்னால் முடிந்தது, மீரா.

   //Mela thalam, sweet vagayarakal jore-aana post! sirappu kondata padhivu. Moipanamum engalukaga neengale kuduthutele! bale bale!

   மேளதாளம், ஸ்வீட் வகையறாக்கள் ஜோரான போஸ்ட்! சிறப்பான கொண்டாட்டப்பதிவு. மொய்ப்பணமும் நீங்களே எங்களுக்காகக் கொடுத்துட்டேளே ! பலே பலே !! //

   ;))))) சந்தோஷம் மீரா.

   //Proceeding to the blog page of smt. rajarajeswarima
   ஸ்ரீமதி இராஜராஜேஸ்வரியின் பதிவு நோக்கி ஓடத்தொடங்கி விட்டேன்//

   மிக்க மகிழ்ச்சி, செய்யுங்கோ, மீரா.

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா

   அன்புடன் கோபு

   Delete

   Delete
  2. அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 23. வாழ்த்திய உங்களுக்கும் வாழ்த்தப் பட்ட ஸ்ரீமதி ராஜராஜேஸ்வரிக்கும் மிக மிக மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் நீண்ட நல்ல பதிவுகள் இட்டு எங்களை எப்போதும் மகிழ்விக்கவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வல்லிசிம்ஹன் August 12, 2013 at 7:20 PM

   வாங்கோ நமஸ்காரம் / வணக்கம்.

   //வாழ்த்திய உங்களுக்கும் வாழ்த்தப் பட்ட ஸ்ரீமதி ராஜராஜேஸ்வரிக்கும் மிக மிக மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் நீண்ட நல்ல பதிவுகள் இட்டு எங்களை எப்போதும் மகிழ்விக்கவேண்டும்.//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் எங்களின் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
  2. மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

   Delete
 24. ஆயிரமாவது [1000th POST] பதிவினை
  வெற்றி விழாக் கோலாகலமான பதிவாக்கிப்
  பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரிAugust 12, 2013 at 7:23 PM

   வாருங்கள் என் அன்புக்குரிய அம்பாளே!

   தங்களுக்கு என் வந்தனங்கள்.

   //ஆயிரமாவது [1000th POST] பதிவினை வெற்றி விழாக் கோலாகலமான பதிவாக்கிப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..! //

   மிகவும் சந்தோஷம்.

   தங்களின் தீவிர பக்தனாகிய நான் அன்புடன் தயாரித்து அளித்த இந்த மிகச்சிறிய எளிய பிரஸாதத்தையும் கூட, மிகப்பெரிய மனதுடன், ஸ்வீகரித்துக்க்கொண்டு, மனதார அருள் மழை பொழிந்துள்ள அம்பாளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   >>>>>

   Delete
  2. நான் மிகவும் சர்ப்ரைஸ் ஆக வெளியிட்ட இந்த சிறப்புப்பதிவினை, முதல் முதலாகத் தாங்கள் படித்த அந்த க்ஷணத்தில், என்ன FEELINGS உங்களுக்கு ஏற்பட்டது என அறிந்துகொள்ள, நான் அன்று மிகவும் ஆவலாக இருந்தேன்.

   Delete
 25. பாராட்டத்தக்க சாதனையாளரை பாராட்டத்தக்கவர் பாராட்டினால் எத்தனை சிறப்பாக இருக்கும் என்பதற்கு இப்பதிவே சாட்சி ஒரு பிரமாண்டமான பாராட்டு நிகழ்வில் கலந்து கொணட திருப்தி பதிவைப் படித்து முடித்ததும் இருந்து வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S August 12, 2013 at 7:25 PM

   வாருங்கள் திரு. ரமணி சார், வணக்கம்.

   //பாராட்டத்தக்க சாதனையாளரை பாராட்டத்தக்கவர் பாராட்டினால் எத்தனை சிறப்பாக இருக்கும் என்பதற்கு இப்பதிவே சாட்சி//

   ஆஹா, இப்படியொரு பாராட்டினை தங்களைத் தவிர வேறு யாரால் தந்திட முடியும்?.

   மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஸ்பெஷல் நன்றிகள்.

   //ஒரு பிரமாண்டமான பாராட்டு நிகழ்வில் கலந்து கொணட திருப்தி பதிவைப் படித்து முடித்ததும் இருந்து வாழ்த்துக்கள்.//

   அதே ... அதே ... அதே தான் .... நான் எதிர்பார்த்ததும்.

   இதைத் தங்கள் வாயால் கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   Delete
  2. ஒரு பிரமாண்டமான பாராட்டு நிகழ்வில் கலந்து கொணட திருப்தியுடன் சிறப்பித்த வாழ்த்துரைகளுக்கு மனம் கனிந்த இனிய நன்றிகள் ஐயா..!

   Delete
 26. ஐயா, இந்தப் பேரன்பை, பண்பைப் பெற உங்கள் நட்பு வட்டமும், குறிப்பாக பதிவு நாயகியும் கொடுத்து வைத்தவர்கள்!!

  ReplyDelete
  Replies
  1. middleclassmadhavi August 12, 2013 at 7:27 PM

   வாங்கோ திருமதி MCM Madam, வணக்கம்.

   //ஐயா, இந்தப் பேரன்பை, பண்பைப் பெற உங்கள் நட்பு வட்டமும், குறிப்பாக பதிவு நாயகியும் கொடுத்து வைத்தவர்கள்!!//

   மனதுக்குப்பிடித்தமான, பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில், மிகச்சரியாகப் பாராட்ட வேண்டியது தானே நம் அன்பாகவும் பண்பாகவும் இருக்க முடியும்.

   கடவுள் அருளால், இன்று இந்தக் குறிப்பிட்டப் பதிவு நாயகியைப் ஏதோ கொஞ்சம் பாராட்டி மகிழ்ந்து சிறப்பித்து, கெளரவிக்க, நானும் ஏதோ கொஞ்சமாவது கொடுத்து வைத்துள்ளதாகவே நினைத்து மகிழ்கிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான இனிமையான என் மனதுக்குப்பிடித்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 27. தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் August 12, 2013 at 7:50 PM

   வாருங்கள் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே,. வணக்கம்.

   //தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....//

   தெய்வீகப்பதிவர் அவர்களை இங்கு வந்து வாழ்த்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 28. ஆயிரம் பதிவுகளிலும் அவரது அயராத உழைப்பு ஜொலிக்கின்றது எனில் தங்களது இந்தப் பதிவில் மேலான நேசமும் பாசமும் மின்னுகின்றன..வாழ்க!.. வளர்க!..எல்லாரிடத்தும் ஈசன் அருள் நிறைக!..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ August 12, 2013 at 7:55 PM

   வாருங்கள் திரு. துரை செல்வராஜூ அவர்களே, வணக்கம்.

   //ஆயிரம் பதிவுகளிலும் அவரது அயராத உழைப்பு ஜொலிக்கின்றது எனில் தங்களது இந்தப் பதிவில் மேலான நேசமும் பாசமும் மின்னுகின்றன..வாழ்க!.. வளர்க!..//

   அப்படியா? இதைக்கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

   //எல்லாரிடத்தும் ஈசன் அருள் நிறைக!..//

   சரியாக மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

   Delete
  2. //ஆயிரம் பதிவுகளிலும் அவரது அயராத உழைப்பு ஜொலிக்கின்றது எனில் தங்களது இந்தப் பதிவில் மேலான நேசமும் பாசமும் மின்னுகின்றன..வாழ்க!.. வளர்க!..//

   ஈசன் அருளோடு நிறைவான பாராட்டுகளுக்கும்
   மேலான நேசமும் பாசமும் மின்னுகின்ற வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

   Delete
 29. அழைப்புக்கு நன்றி. அவரை வாழ்த்தி விட்டுதான் இந்த விழாவுக்கு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ராமலக்ஷ்மி August 12, 2013 at 8:01 PM

   வாங்கோ திருமதி ராமலக்ஷ்மி மேடம் அவர்களே, வணக்கம்.

   //அழைப்புக்கு நன்றி. //

   அழைப்பினை ஏற்று வருகை அளித்துள்ளதற்கு நன்றி + மிக்க மகிழ்ச்சி.

   //அவரை வாழ்த்தி விட்டுதான் இந்த விழாவுக்கு வருகிறேன்.//

   அது போதும். அது தான் என் எதிர்பார்ப்பும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 30. ஒரு பதிவு எழுதுவதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆயிரம் பதிவுகளை எப்படித்தான் வெளியிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
  மேலும் தனது வலைப்பதிவைத் தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கும் விடாது கருத்துரைகள் த்ருவதிலும் உங்களைப் போலவே சலிப்படைவதில்லை. கைகள் ஆயிரம் உடையவள் காளி என்று படித்து இருக்கிறேன். அந்த காளியின் அருள் பெற்ற கவி காளிதாஸைப் போல சகோதரிக்கு புகழ் உண்டாகட்டும்!

  அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள். இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது.

  வரும் ஆடி வெள்ளிக்கிழமை 16.08.2013 அன்று எங்களைத் தேடிவரும் ”அறுபதிலும் ஆசை வரும்!” என்ற சிறப்புப்பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ August 12, 2013 at 8:05 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //ஒரு பதிவு எழுதுவதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆயிரம் பதிவுகளை எப்படித்தான் வெளியிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.//

   சாதனையாளர்கள் சிலரின் சில நடவடிக்கைகள் இதுபோலத்தான் நமக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கும், ஐயா.

   நம்மால் அவற்றிற்கு என்றுமே விடை காணவே முடியாது.

   அவர்களாகவே எப்போதாவது ஏதாவது வாயைத்திறந்து நம்மிடம் சொன்னால் தான் உண்டு. ஆனால் சொல்லவே மாட்டார்கள் ஐயா. அதெல்லாம் தேவ ரகசியங்கள் ஐயா.STRICTLY CONFIDENTIAL MATTERS ! ;)

   //மேலும் தனது வலைப்பதிவைத் தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கும் விடாது கருத்துரைகள் த்ருவதிலும் உங்களைப் போலவே சலிப்படைவதில்லை. //

   என்னைப்போலவே என்று சொல்லாதீர்கள் ஐயா. நான் சலிப்படைந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. அவர்கள் அப்படி இல்லை.

   இன்றும் ..... என்றும் பேரெழுச்சியோ எழுச்சியுடன், பட்டாம் பூச்சியாக அனைத்து பூக்களுக்கும் [வலைப்பூக்களுக்கும்] சென்று கருத்தளித்து வருகிறார்கள்.

   //கைகள் ஆயிரம் உடையவள் காளி என்று படித்து இருக்கிறேன். அந்த காளியின் அருள் பெற்ற கவி காளிதாஸைப் போல சகோதரிக்கு புகழ் உண்டாகட்டும்!//

   ஆஹா, சந்தோஷம். அப்படியே ஆகட்டும், ஐயா. புகழின் உச்சிக்கே போய் கொடிகட்டிப்பறக்கட்டும்

   //அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள்.//

   அப்படியா ஐயா, நான் விரும்பிப்படித்துவரும் ஒருசில தளங்களில் மிகவும் முக்கியமான, மறக்க முடியாததோர் தளமாயிற்றே, ஐயா !

   //இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது. //

   வண்ணப்படங்கள் கொடுக்காவிட்டால், யார் ஐயா, வெறும் வெற்றுப்பதிவினைப் படிக்க முன் வருவார்கள்? ;)))))

   எனக்கு இயற்கையாகவே படங்கள் என்றால் பிடிக்கும். அதுவும் அசையும் படங்கள் [Animation] என்றால் மிகவும் பிடிக்கும்.

   முன்பெல்லாம் அதுபோல எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில படங்களை மட்டும் இவர்களின் பதிவுகளிலிருந்து அவ்வப்போது ஓர் உரிமையுடன் திருடி தனியே சேமித்து வைத்துக்கொள்வது உண்டு. அப்போதெல்லாம் Copy & Paste செய்வது எளிமையாக இருந்தது.

   இப்போது அதுபோலெல்லாம் செய்ய முடியாமல், தடை போட்டுள்ளார்கள். தடை எனக்காகப் போட்டது அல்ல. வேறு ஏதோ சில காரணங்களுக்காக. எல்லாம் நன்மைக்கே.

   //வரும் ஆடி வெள்ளிக்கிழமை 16.08.2013 அன்று எங்களைத் தேடிவரும் ”அறுபதிலும் ஆசை வரும்!” என்ற சிறப்புப்பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். //

   மிகவும் சந்தோஷம் ஐயா. கட்டாயமாக வெளியிடுவேன் ஐயா. ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றிகள், ஐயா.

   அன்புடன் VGK

   Delete
  2. அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள். இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது. /

   இதுதான் வியக்கவைக்கும் அசாதாரண சாதனை ..!

   என் எளிய முயற்சியை பெரியவர்கள் ஊக்குவித்து உற்சாகம் அளித்து மெருகூட்டி ,பட்டைதீட்டி சிகரத்தில் ஏற்றி பாராட்டி தனிப்பதிவாக வெளியிட்டுபெருமைப்படுத்தியதற்கு மனம் நெகிழ்ந்த இனிய நன்றிகள் ஐயா..!

   Delete
  3. இராஜராஜேஸ்வரி August 26, 2013 at 6:20 AM

   வாங்கோ, வணக்கம், வந்தனங்கள்.

   /அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள். இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது. /

   இதுதான் வியக்கவைக்கும் அசாதாரண சாதனை ..!

   ஆஹா, நிறை குடம் என்றும் தளும்பாது.

   அந்த நிறைகுடமே என் அன்புக்குரிய அம்பாள்.

   ‘குறை குடம் கூத்தாடும்’ என்பதற்கு நானே நல்ல உதாரணம்.

   இருப்பினும் குறை குடமாய் கூத்தாடியுள்ள இந்த என் மிகச்சிறிய செயலைப்போய் ”இதுதான் வியக்கவைக்கும் அசாதாரண சாதனை” என்று ஓர் மிகப்பெரிய சாதனையாளர் சொல்லியிருப்பது, அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எனக்கு அவர்மேல் மேலும் மேலும் பாசத்தையும் ஊட்டுகிறது.

   //என் எளிய முயற்சியை பெரியவர்கள் ஊக்குவித்து உற்சாகம் அளித்து மெருகூட்டி ,பட்டைதீட்டி சிகரத்தில் ஏற்றி பாராட்டி தனிப்பதிவாக வெளியிட்டுபெருமைப்படுத்தியதற்கு மனம் நெகிழ்ந்த இனிய நன்றிகள் ஐயா..!//

   அசராமல் தினமும் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளாகக் கொடுத்து அசத்திய ’மணம் நிறைந்த புஷ்ப மாலை’யைத் தாங்கிடும் / தொடுத்திடும் நாராக நானும் இருந்துள்ளேன் என்பது மட்டுமே இதில் எனக்குள்ள ஓர் மிகச்சிறிய கெளரவம்.

   YOU ARE WELL DESERVED, MADAM ! ;)

   Delete
 31. நிச்சயமாக இது ஒரு பெரும் சாதனை. இதை நிகழ்த்திய திருமதி.இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், அதை சிறப்பித்துப் பெருமைப்படுத்திய தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பார்வதி இராமச்சந்திரன். August 12, 2013 at 8:27 PM

   வாங்கோ திருமதி பார்வதி இராமச்சந்திரன்.அவர்களே, வணக்கம்.

   //நிச்சயமாக இது ஒரு பெரும் சாதனை. இதை நிகழ்த்திய திருமதி.இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், அதை சிறப்பித்துப் பெருமைப்படுத்திய தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.//

   தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 32. Replies
  1. வேடந்தாங்கல் - கருண் August 12, 2013 at 8:49 PM

   //வாழ்த்துக்கள்...//

   தங்களின் அன்பு வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நண்பரே.

   Delete
 33. கோலாகலமாக ஆயிரமாவது பதிவைக் கொண்டாடி விட்டீர்கள். உங்கள் அன்பினால் திருமது ராஜராஜேஸ்வரி திக்குமுக்காடிப் போயிருப்பார். ஏனெனின் எனக்கும் அதே நிலைமை தான். உங்கள் அன்புள்ளத்தைக் கண்டு வியந்து போனேன். முதலில் உங்களுக்குப் பாராட்டுகள். ராஜராஜேஸ்வரியின் தளத்திற்கும் சென்று அவர்களையும் பாராட்டிவிட்டுப் பின்னர் மறுபடி வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam August 12, 2013 at 8:52 PM

   வாங்கோ திருமதி. கீதா மாமி. நமஸ்காரங்கள் / வணக்கங்கள்,

   //கோலாகலமாக ஆயிரமாவது பதிவைக் கொண்டாடி விட்டீர்கள். //

   ஏதோ இந்த ஏழை எளிய அந்தணனால் முடிந்தது. ’எத்கிஞ்சது’ ’ஏழைக்குத்தகுந்த எள்ளுருண்டை.’

   //உங்கள் அன்பினால் திருமது ராஜராஜேஸ்வரி திக்குமுக்காடிப் போயிருப்பார்.//

   இல்லை மாமி. அதுபோலெல்லாம் இல்லை. எதற்கும் திக்குமுக்காடவே மாட்டார்கள்.

   உதாரணமாக கோயிலில் உள்ள அம்பாளுக்கு நாம் குடம் குடமாகப் பாலாபிஷேகம் செய்து, பட்டுப்புடவை + ஆபரணங்கள் அணிவித்து, பார்த்து மகிழ்வோம். பரவஸம் ஆவோம். ஆனால் அந்த அம்பாள் வாயைத்திறந்து ஏதாவது நம்முடன் பேசுமா?

   அதே போலத்தான் இந்த அம்பாளும்.

   //ஏனெனில் எனக்கும் அதே நிலைமை தான்.//

   தாங்களும் ஆயிரக்கணக்கில் பதிவுகள் கொடுத்துள்ளதாக் நேற்று தான் உங்கள் மூலமும் நம் அன்பின் சீனா ஐயாவின் பதில்கள் மூலமும் [அவர்களின் பதிவினில்] தெரிந்து கொண்டேன்.

   உத்தவன் குளக்கரையில் ஹிடும்பையைப் பார்த்தது போல நானும் வியந்து ஆடிப்போனேன். ;)))))

   மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

   //உங்கள் அன்புள்ளத்தைக் கண்டு வியந்து போனேன். முதலில் உங்களுக்குப் பாராட்டுகள்.//

   அப்படியா? சந்தோஷம்.

   //ராஜராஜேஸ்வரியின் தளத்திற்கும் சென்று அவர்களையும் பாராட்டிவிட்டுப் பின்னர் மறுபடி வருகிறேன்.//

   ஆஹா, அதைச்செய்யுங்கோ, முதலில் அதுதான் என் இந்தப்பதிவின் எதிர்பார்ப்பும் கூட.

   மறுபடியும் வாங்கோ, சந்தோஷமே ! ;).

   Delete
  2. மகிழ்ச்சியான கருத்துரைகள் வழங்கி பாராட்டிய அன்பு உள்ளத்திற்கு இனிய நன்றிகள்..

   நான் தங்கள் அத்தனை பதிவுகளையும் படித்து வியந்திருக்கிறேன்..
   பல தளங்களில் தங்கள் உழைப்பு பிரமிக்கவைக்கிறது..
   தங்கள் வாழ்த்துகள் உற்சாகம் தருகின்றன..
   மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   Delete
 34. தொடர்ந்து கருத்துகளையும் பதிவுகளையும் சிறப்பாக கொடுக்கும் தோழிக்கு வாழ்த்து

  மேலும் சக பதிவரை மிகசிறப்பாக பதிவு செய்து இத்தனை சிறப்பான விருந்துடன் வாழ்த்திய உங்களுக்கு இரட்டிப்பு வாழ்த்து ..........விருந்து அருமை .......தாம்பூலம் மட்டுமே குறை

  ReplyDelete
  Replies
  1. கோவை மு சரளா August 12, 2013 at 8:54 PM

   வாருங்கள் கவிதாயினி அவர்களே,

   வணக்கம்.

   //தொடர்ந்து கருத்துகளையும் பதிவுகளையும் சிறப்பாக கொடுக்கும் தோழிக்கு வாழ்த்து //

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   [ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லவா நீங்கள் இருவரும் ;))))) மேலும் மகிழ்ச்சி எனக்கு]

   //மேலும் சக பதிவரை மிகசிறப்பாக பதிவு செய்து இத்தனை சிறப்பான விருந்துடன் வாழ்த்திய உங்களுக்கு இரட்டிப்பு வாழ்த்து ..........விருந்து அருமை ....... //

   மிகவும் சந்தோஷம். இரட்டிப்பு சந்தோஷம் தான் எனக்கும்.

   //தாம்பூலம் மட்டுமே குறை//

   தங்களுக்காகவே குறையை இப்போது நிறை[வு] செய்து விட்டேன்.

   நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

   அன்புடன்
   VGK

   Delete
 35. அசத்தலான பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்து தோழி.ராஜராஜேஸ்வரியை மட்டும் அல்ல எங்களையும் திகைப்பில் ஆழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எண்ணிக்கை கொள்ளமுடியாத அளவு எண்ணற்ற பதிவுகள் தொடரட்டும்... யாருக்கும் கிடைத்திருக்க முடியாதபடி ஒரு பாராட்டுவிழா...தங்களைப்போன்றவர்களின் ஆசியும் வாழ்த்தும், தோழமைகளாகிய எங்களின் அன்பும் தோழியை மென்மேலும் பதிவுகள் பல படைக்க வழிவகுக்கட்டும். மற்றவர்களை மனதாரப்பாராட்டும் தங்கள் நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன். தோழி


  ReplyDelete
  Replies
  1. கவிக்காயத்ரி August 12, 2013 at 9:34 PM

   வாருங்கள், வணக்கம். என் தளத்திற்குத் தங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். மகிழ்ச்சி.

   //அசத்தலான பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்து தோழி.ராஜராஜேஸ்வரியை மட்டும் அல்ல எங்களையும் திகைப்பில் ஆழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..//

   மிக்க மகிழ்ச்சி.

   //தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   நல்லது. மிக்க நன்றி.

   //எண்ணிக்கை கொள்ளமுடியாத அளவு எண்ணற்ற பதிவுகள் தொடரட்டும்... //

   ஆம் தொடரட்டும்.

   //யாருக்கும் கிடைத்திருக்க முடியாதபடி ஒரு பாராட்டுவிழா...//

   அப்படியா !!!!!!! சந்தோஷம். ஸ்பெஷல் நன்றிகள்.

   //தங்களைப்போன்றவர்களின் ஆசியும் வாழ்த்தும், தோழமைகளாகிய எங்களின் அன்பும் தோழியை மென்மேலும் பதிவுகள் பல படைக்க வழிவகுக்கட்டும். //

   ஆஹா, நிச்சயமாக அப்படியே நடக்கட்டும். ததாஸ்து.

   //மற்றவர்களை மனதாரப்பாராட்டும் தாங்கள் நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன். தோழி//

   தங்களின் வேண்டுதலுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

   தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.   Delete
  2. //மற்றவர்களை மனதாரப்பாராட்டும் தாங்கள் நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன். //

   ஆத்மார்த்தமான கருத்துரைகள் வழங்கி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

   Delete
 36. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  மிகவும் சிறப்பான முறையில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு எழுதியுள்ளீர்கள் வை.கோ சார். சந்தோஷமாக இருக்கிறது.தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. RAMVI August 12, 2013 at 9:50 PM

   வாங்கோ. வணக்கம். தங்களின் அபூர்வ வருகையில் என் மனம் தனியானதோர் மகிழ்ச்சி அடைந்தது.

   நீங்க எங்க வரப்போறீங்க என்ற அவநம்பிக்கையுடன் தான் நள்ளிரவில் மெயில் அனுப்பியிருந்தேன்.

   வருகை தந்து ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். அதற்கு முதலில் என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

   அவர்களை இங்கு வாழ்த்தியுள்ளதற்கு என் நன்றிகள்.

   //மிகவும் சிறப்பான முறையில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு எழுதியுள்ளீர்கள் வை.கோ சார். சந்தோஷமாக இருக்கிறது. //

   அப்படியா ???? நிஜமாவா ???? ;)))))

   //தங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   சந்தோஷம்மா.

   தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 37. Replies
  1. அப்பாதுரை August 12, 2013 at 9:55 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //adengappa! அடேங்கப்பா !
   nalla manam vaazhga. நல்ல மனம் [ பூ மணம் ;))))) ] வாழ்க !!//

   நல்ல மனத்துடன் வருகை தந்து நறுமணம் வீசும் கருத்தாக ’வாழ்க’ எனச் சொல்லி வாழ்த்தியுள்ள்து என்னையும் ‘அடேங்கப்பா’ என வியப்படையச்செய்து விட்டது. மிக்க நன்றி, சார்.


   Delete
 38. ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நேரடியாக அவர்களது வலைத்தளத்திலேயே பதிவு செய்துவிட்டேன்.
  இங்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கும் நன்றி.

  உங்கள் விருந்தில் படைத்துள்ள எல்லாவற்றையும் பீடா உட்பட ரசித்து சுவைத்தேன். நன்றி வெற்றிவிழா மிக மிகப் பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. Viya Pathy August 12, 2013 at 10:02 PM

   வாருங்கள், வணக்கம்.

   //ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நேரடியாக அவர்களது வலைத்தளத்திலேயே பதிவு செய்துவிட்டேன்.//

   மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

   //இங்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கும் நன்றி.//

   மிகவும் சந்தோஷம் + நன்றிகள்.

   //உங்கள் விருந்தில் படைத்துள்ள எல்லாவற்றையும் பீடா உட்பட ரசித்து சுவைத்தேன். நன்றி வெற்றிவிழா மிக மிகப் பிரமாதம்.//

   ஆஹா, ரசித்து, ருசித்து, சுவைத்து மகிழ்ந்தது கேட்க சந்தோஷமாக உள்ளது.

   என் தளத்தில் இதுதான் தங்களின் முதல் வருகை என நினைக்கிறேன்.

   அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் நன்றியோ நன்றிகள். வாழ்க !

   Delete
 39. ஓடி வந்துவிட்டேன்! முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தில் countdown பண்ணி பண்ணி பின்னூட்டம் போடுவதை ரசித்துக் கொண்டேதான் இருந்தேன்.

  அந்த நல்ல நாளும் இன்று வந்ததே!

  சகபதிவர்களை மனம் விட்டுப் பாராட்டும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
  அடடே! நேரம் ஆகிவிட்டதே! சொகுசுப் பேருந்து புறப்பட்டு விடப்போகிறது! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களைப் பாராட்ட போய்விட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Ranjani Narayanan August 12, 2013 at 10:29 PM

   வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம். வணக்கம்.

   //ஓடி வந்துவிட்டேன்! //

   அடடா, நான் ஒரு பேச்சுக்கு “ஓடிவாங்கோ .... ஓடி வாங்கோ ... உடனே ஓடி வாங்கோ .... அவசரம் ..... அவசியம்’ ன்னு மெயில் கொடுத்தால் இப்படி நீங்க நிஜமாகவே ஓடி வரலாமா?

   மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதே ..... பாவம் உங்களுக்கும், என்னைப்போலவே.

   அமைதியா உட்காருங்கோ. கொஞ்சம் தீர்த்தம் [குவார்ட்டர் இல்லை] சாப்பிடுங்கோ.

   //முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தில் countdown பண்ணி பண்ணி பின்னூட்டம் போடுவதை ரசித்துக் கொண்டேதான் இருந்தேன். //

   ஆஹா, அந்த இரகசியம் எங்கள் இருவரையும் தவிர, உங்களுக்கும் தெரிந்து விட்டதா? போச்சுடா !

   யாரிடமும் இதை சொல்லிடாதீங்கோ, ப்ளீஸ்.

   //அந்த நல்ல நாளும் இன்று வந்ததே!//

   ஆமாம். மேடம் இந்த நாள் இனிய நாளாக வந்தே விட்டது.

   //சகபதிவர்களை மனம் விட்டுப் பாராட்டும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//

   இன்று மிகப் பிரபல பதிவராகத் திகழ்ந்துவரும் தங்களின் பாராட்டுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //அடடே! நேரம் ஆகிவிட்டதே! சொகுசுப் பேருந்து புறப்பட்டு விடப்போகிறது! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களைப் பாராட்ட போய்விட்டு வருகிறேன்.//

   ஆமாம். பஸ்ஸை விட்டுட்டாப்போச்சு. மீண்டும் உடம்பைத்தூக்கிண்டு மூச்சுவாங்க தலை தெரிக்க ஓட வேண்டியிருக்கும்.

   அதுபோல ஆனால் என்னிடம் சொல்லுங்கோ தனியே மிகப்பெரிய ஏ.ஸி.கார் ஏற்பாடு செய்கிறேன்.;)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
  2. //சகபதிவர்களை மனம் விட்டுப் பாராட்டும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//

   நீங்கள் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தில் countdown பண்ணி பண்ணி பின்னூட்டம் போடுவதை ரசித்துக் கொண்டேதான் இருந்தேன்.

   அந்த நல்ல நாளும் இன்று வந்ததே!/

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் ,பாராட்டுரைகளுக்கும் இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete

 40. நம் பெரியவர்கள் பெயர் சூட்டும்போது ஆண்டவன் நாமத்தை வைப்பார்கள். இவர்களைக் கூப்பிடும்போதாவது ஆண்டவன் பெயரை உச்சரிக்கட்டுமே என்று. ஆனால் நீங்கள் ராஜராஜேஸ்வரி அஷ்டகமே சொல்ல வைத்து விட்டீர்கள். பாராட்டுவதிலும் உங்கள் பெருய மனசு தெரிகிறது. வஞ்சனையில்லாமல் போற்றுகிறீர்கள். அந்த நல்ல மனதுக்கு ஒரு பெரிய ” ஓ ஓ ஓ” நல்ல மனம் வாழ்க . நாடு போற்ற வாழ்க.!

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam August 12, 2013 at 11:15 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம்.

   //நம் பெரியவர்கள் பெயர் சூட்டும்போது ஆண்டவன் நாமத்தை வைப்பார்கள். இவர்களைக் கூப்பிடும்போதாவது ஆண்டவன் பெயரை உச்சரிக்கட்டுமே என்று. ஆனால் நீங்கள் ராஜராஜேஸ்வரி அஷ்டகமே சொல்ல வைத்து விட்டீர்கள்.//

   ஏதோ தோன்றியது. இவர்கள் பெயரும் அதுவாக இருப்பதால், பொருத்தமாக இருக்குமே என சேர்த்து வைத்தேன்.

   இந்த அஷ்டகத்தை ஏற்கனவே நான் ஒரு தனிப்பதிவாகக் கொடுத்துள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2012/02/blog-post.html

   01.02.2012 அன்று, அதாவது அந்த மாத முதல் தேதியில் இந்தப்பதிவினைக் கொடுத்து ஆரம்பித்ததும் அந்த மாதம் என்னாலும் தினம் ஒரு பதிவுக்கு மேல் கொடுக்க முடிந்தது.

   அந்த மாத மொத்த நாட்களான 29 நாட்களில் 34 பதிவுகள் கொடுக்க முடிந்தது. சந்தோஷமாக இருந்தது. அவர்கள் பெயர் ராசி அப்படி.

   என் மூன்றவது மருமகள் மாசமாக இருக்கிறாள். 2014 மார்ச் வாக்கில் டெலிவரி இருக்கும். பேத்தி பிறக்கணும் என ஆசைப் படுகிறேன். பேத்தி பிறந்தால் அவளுக்கு “இராஜராஜேஸ்வரி” என்றே பெயர் வைப்பதாக இருக்கிறேன். அந்த என் மருமகளும் நேற்று அங்கு போய் ஓர் பின்னூட்டம் கொடுத்து வாழ்த்தி இருக்கிறாள்.

   // பாராட்டுவதிலும் உங்கள் பெரிய மனசு தெரிகிறது. வஞ்சனையில்லாமல் போற்றுகிறீர்கள். அந்த நல்ல மனதுக்கு ஒரு பெரிய ” ஓ ஓ ஓ” நல்ல மனம் வாழ்க . நாடு போற்ற வாழ்க.!//

   மனதுக்குப் பிடித்தமானவர்களாகவும் இருந்து, சாதனைகளும் செய்து முடித்துள்ள பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில், மிகச்சரியாகப் பாராட்டத்துடிக்கும் தான் எப்போதும் என் மனது.

   நேரம் காலம் மற்ற சூழ்நிலைகள் மட்டும் ஒத்து வந்தால் போதும். மனதாரப்பாராட்டித் தீர்த்து விடுவேன்.

   இது ஒன்று தானே நம்மால் சுலபமாகச் செய்யமுடியக்கூடிய காரியம். அதில் கஞ்சத்தனமே கூடாது, ஐயா.

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.


   Delete
  2. என் மூன்றவது மருமகள் மாசமாக இருக்கிறாள். 2014 மார்ச் வாக்கில் டெலிவரி இருக்கும். பேத்தி பிறக்கணும் என ஆசைப் படுகிறேன். பேத்தி பிறந்தால் அவளுக்கு “இராஜராஜேஸ்வரி” என்றே பெயர் வைப்பதாக இருக்கிறேன்/

   தங்கள் மனம் போல் சிறப்பாக அமைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..

   Delete
  3. இராஜராஜேஸ்வரி August 26, 2013 at 5:55 AM

   வாங்கோ, வணக்கம், வந்தனங்கள்.

   *****என் மூன்றாவது மருமகள் மாசமாக இருக்கிறாள். 2014 மார்ச் வாக்கில் டெலிவரி இருக்கும். பேத்தி பிறக்கணும் என ஆசைப் படுகிறேன். பேத்தி பிறந்தால் அவளுக்கு “இராஜராஜேஸ்வரி” என்றே பெயர் வைப்பதாக இருக்கிறேன்.*****

   //தங்கள் மனம் போல் சிறப்பாக அமைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..//

   ;))))))))))))))))))))))) மிக்க ந்ன்றி ;)))))))))))))))))))))))

   இப்போதே கற்பனையில் என் பேத்தி இராஜராஜேஸ்வரியைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டேன். ;)))))))))))))))))))))))

   Delete
 41. அட்டகாசமான பாராட்டுகள்... இதனைவிட ஒருவரை பாராட்டுவது கடினம்... சிறப்பாக செய்துள்ளீர்கள்... அவருக்கும், உங்களுக்கும் பாராட்டுகள்...

  ReplyDelete
  Replies
  1. இரவின் புன்னகை August 12, 2013 at 11:20 PM

   வாருங்கள், வணக்கம்.

   //அட்டகாசமான பாராட்டுகள்... இதனைவிட ஒருவரை பாராட்டுவது கடினம்... சிறப்பாக செய்துள்ளீர்கள்... //

   அப்படியா சொல்கிறீர்கள். எனக்கென்னவோ இன்னும் நிறையவே பாராட்டி இருக்கணுமோ எனத்தோன்றியது.

   எதுவுமே சுருக்கமாக எழுத வேண்டும், பிறர் மனதில் அது ’சுருக்’ என்று தைக்க வேண்டும் என என் மானஸீக குருநாதர் அவர்கள் அடிக்கடிச் சொல்லுவார்.

   அதனால் நானும் சுருக்கோ சுருக்கென்று சுருக்கி இந்தப்பதிவினைக் இப்படிக் கொடுத்துள்ளேன்.

   எனக்கென்னவோ முழுதிருப்தி ஆகவில்லை. ‘இரவின் புன்னகை’யே இப்படிச்சொல்லிப்பாராட்டியிருப்பதால் எனக்கு இப்போ பகலில் புன்னகை ஏற்பட்டு, மகிழ்ச்சியுடன் இதனை டைப் அடித்துக்கொண்டு இருக்கிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நண்பரே.

   //அவருக்கும், உங்களுக்கும் பாராட்டுகள்...//

   இருவரையும் சேர்த்துப்பாராட்டியுள்ளதற்கு மிக்க நன்றி, நண்பரே.

   Delete
 42. உங்கள் மகிழ்ச்சி என்னையும் தொற்றி கொண்டுவிட்டது. ரொம்ப சந்தோஷமாயிருக்கு...! வயிறு முட்ட விருந்து வேற.. இருந்தாலும் சந்தோஷமா ஓடி போய் வாழ்த்துக்களை சொல்லிடறேன்.. ஒரே கலர்புல் திருவிழாவா இருக்கு இன்னிக்கு..!
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு August 12, 2013 at 11:21 PM

   வாங்கோ டீச்சர், வணக்கம்.

   //உங்கள் மகிழ்ச்சி என்னையும் தொற்றி கொண்டுவிட்டது. ரொம்ப சந்தோஷமாயிருக்கு...! //

   இருக்காதா பின்னே ! எல்லாமே உங்களால் வந்த வினை தானே.

   [மகிழ்ச்சி என்பது ஒரு தொற்று நோய் போலத்தான். நம்மைப் போன்ற ஒரே எண்ணம் உள்ள எழுத்தாளர்களைச் சுலபமாகத் தொற்றிக்கொள்ளும். ;))))) ]

   -=-=-=-

   உங்கள் நினைவுகளுக்காக :

   http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html

   வலைச்சரத்தில் தாங்கள் ஆசிரியராக இருந்தபோது 25.12.2012 அன்று, இவர்களின் பதிவுகளை முதல் நாள் முதல் அறிமுகமாகக் கொண்டுவந்து, அதனுடன் இலவச இணைப்பாக என் பெயரையும் இழுத்துப் போட்டு, ’பின்னூட்டப்புயல்’ என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டீர்களே, அதனால் வந்த விளைவுகள் தான் இவையெல்லமே.

   1) இராஜராஜேஸ்வரி

   வலைத்தளம்: “மணிராஜ்” தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல்
   மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

   இவரின் பெரும்பாலான பதிவுகளில் நம் பதிவுலகின் பின்னூட்டப்புயலான வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் ஏராளமான கருத்துக்களை தாராளமாகக் காணமுடிகிறது.

   ஏற்கனவே தங்கமாக ஜொலிக்கும் இந்தப் பதிவரின் பதிவுகள், வை.கோ. ஐயாவின் பல்வேறு கருத்துக்களால் வைரமாக ஜொலிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

   1] அன்பென்ற மழையிலே
   2] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்


   ”ஓய்ந்திருந்த புயலை உசுப்பிவிட்ட உஷா” டீச்சர் வாழ்க!

   -=-=-=-=-

   //வயிறு முட்ட விருந்து வேற.. இருந்தாலும் சந்தோஷமா ஓடி போய் வாழ்த்துக்களை சொல்லிடறேன்.. //

   வயிறு முட்டச்சாப்பிட்டு விட்டு எப்படி ஓடமுடியும்? பேசாமல் சொகுசு பஸ்ஸில் ஏறிப்போங்கோ. உங்களுக்காக ஸ்பெஷல் ட்ரிப் அடிக்கச்சொல்லியிருக்கிறேன்.

   -=-=-

   நேற்று முந்தினம் இரவு வேலூர் கோட்டை பூராவும் சுற்றி உங்களைத்தேடிக் கண்டுபிடிக்க நான் பட்டபாடு நாய் படாது.

   ஒருவரைக்கேட்டால், ”அந்த அம்மா எழுத்தாளர் இந்துமதியைச் சிறப்புப்பேட்டி எடுக்கப் போயிருக்காங்கோ” என்கிறார்.

   மற்றொருவரைக்கேட்டால் “அவங்க ரொம்ப பிஸி, ’நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போயிருக்காங்க” என்கிறார்.

   மொத்தத்தில் அன்று இரவு நீங்க என் தொடர்பு எல்லைக்கு அப்பால் மட்டுமே இருந்தீர்கள். பிறகு ஒருவழியா உங்களை ஒரே அமுக்கா அமுக்கிப்பிடிச்சுட்டேன் இல்ல ..... விடுவோமா பின்ன ! ;)

   -=-=-

   //ஒரே கலர்புல் திருவிழாவா இருக்கு இன்னிக்கு..! நன்றி!//

   ;))))) மகிழ்ச்சியோ மகிழ்ச்சி டீச்சர். உங்கள் பழைய மாணவன் கோபாலகிருஷ்ணனை மதித்து வருகை தந்து மகிழ்வித்ததற்கு.

   அன்புடன் கோபு

   Delete
  2. தினமலர் விழாவில் இந்த இரண்டு நாட்களும் செலவிட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் இந்துமதி அம்மாவிடம் கலந்துரையாடியது இனிய தருணங்கள்...! அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி!

   Delete
  3. உஷா அன்பரசு August 16, 2013 at 3:02 AM

   வாங்கோ டீச்சர், தங்களின் மீண்டும் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

   //தினமலர் விழாவில் இந்த இரண்டு நாட்களும் செலவிட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் இந்துமதி அம்மாவிடம் கலந்துரையாடியது இனிய தருணங்கள்...! அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி!//

   எல்லாமே கேள்விப்பட்டேன். உங்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். தினமலர் பெண்கள் மலரிலும் அறிவிப்பினைப் பார்த்தேன். வாழ்த்துகள்.

   பொறுமையாகப் பகிர்ந்து விட்டு, தகவல் கொடுங்கோ, நான் கட்டாயம் வந்து படிக்கிறேன். அன்புடன் கோபு

   Delete
  4. மிக அசாதாரணமான கலர்ஃபுல் திருவிழாவை நடத்திக்காட்டி தங்கமாய் வைரமாய் ஜொலிக்கும் ஐயாவின் சிரத்தை மிகு உழைப்பிற்கு மனம் நிறைந்த நன்றிகள்..!

   Delete
  5. இராஜராஜேஸ்வரி August 26, 2013 at 6:00 AM

   வாங்கோ, வணக்கம், வந்தனங்கள்.

   //மிக அசாதாரணமான கலர்ஃபுல் திருவிழாவை நடத்திக்காட்டி தங்கமாய் வைரமாய் ஜொலிக்கும் ஐயாவின் சிரத்தை மிகு உழைப்பிற்கு மனம் நிறைந்த நன்றிகள்..!//

   ஏதோ நீண்ட நாட்களாகவே [உங்களின் 900வது பதிவுக்குப்பிறகு] திட்டமிட்டு செதுக்கியது இந்த வைரம்.

   மேலும் மேலும் தங்கத்தையும் வைரத்தையும் இதில் சேர்த்து ஜொலிக்கச்செய்து கொண்டே தான் இருந்தேன்.

   முழுத்திருப்தி ஏற்படும்வரை அதை மெருகூட்டி, மெருகூட்டி, பிறகு திருஷ்டாகிவிடுமோ ]MISFIRE ஆகி MISUNDERSTANDING ஏற்பட்டுவிடுமோ] என்ற மனக் கவலையில் அவற்றைச்சுருக்கிச் சுருக்கி தினமும் பல்வேறு வடிவங்களில் மாற்றி வடிவமைத்து, இந்த இறுதி வடிவத்தை என்னால் [என் மனதுக்கு முழு திருப்தி இல்லாமலேயே] ஏதோ ஒரு மாதிரி எட்டிட முடிந்தது.

   தங்களிடம் முன்கூட்டியே சொல்லி, இதை வெளியிட ஒப்புதல் வாங்க வேண்டும் என என் மனம் துடியாய்த்துடித்தது என்பது என்னவோ உண்மைதான்.

   இருப்பினும் ஒரு SUSPENSE ஆக இருக்கட்டுமே என்று என் மற்றொரு மனது நினைத்ததாலும், இந்த இறுதி வடிவம் கொடுத்ததில் ஏதும் யாரும் தவறாக நினைக்கவே இடமில்லை என்று என் உள்மனது சொன்னதாலும், தங்களுக்கு நான் ஏதும் முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை.

   தங்களின் மனம் நிறைந்த சந்தோஷங்களுக்கும், என் இந்த கலர்ஃபுல் திருவிழாவினை பெரிய மனதுடன் தாங்களும் ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 43. lதிருமதி இராஜராஜேச்வரியால் இவ்வளவு அழகாக அருமையாக, தொடர்ச்சியாக எழுதமுடிகிரது என்ற வியப்பு என்னுள்ளே எப்போதும்
  இருந்து கொண்டே இருக்கிரது. அதிலும், ஆன்மீகக் கட்டுரகளாகவே.

  1000,கட்டுரைகள், மெய்க் கட்டுரைகள்,பாராட்ட வார்த்தைகள் போதாது.
  அவரைக் கௌரவித்த, உங்களுக்கும், அவருக்கும் என் அன்புப் பாராட்டுகள், எனக்கு வயதிருப்பதால் மனமார்ந்த என் ஆசீர்வாதங்களும் திருமதி இராஜராஜேஸ்வரிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும். உங்கள்,குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும்
  அளிக்கிறேன்.
  பஸ் வசதி கொடுத்திருப்பதால் , முதலாவதாக நான் தயாராகி
  இடமும் பிடித்துவிட்டேன்.
  எல்லோரையும் ஊக்குவித்து பாராட்டும் நீங்கள் ,அவருக்கு ஆயிரத்திற்கும்,பின்னூட்டம், கொடுத்ததும், அவரும் உங்களுடைய
  எல்லா பதிவிலும் முன் நிற்பதும் ஒரு ஸாதாரண காரியமில்லை.
  முன்மாதிரியாகத் திகழுகிறீர்கள்.
  சாதனைத் திலகங்கள். நான் நினைக்கிறேன். அன்புடனும், ஆசிகளுடனும்.
  வாருங்கள் யாவரும் சேர்ந்து பாராட்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. Kamatchi August 12, 2013 at 11:31 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //திருமதி இராஜராஜேச்வரியால் இவ்வளவு அழகாக அருமையாக, தொடர்ச்சியாக எழுதமுடிகிறது என்ற வியப்பு என்னுள்ளே எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும், ஆன்மீகக் கட்டுரைகளாகவே. 1000,கட்டுரைகள், மெய்க் கட்டுரைகள்,பாராட்ட வார்த்தைகள் போதாது.//

   ஆமாம் மாமி, அவர்கள் ஒரு தெய்வீகப்பிறவி தான். சமத்தோ சமத்து. அழுந்தச் சமத்து. அதே சமயம் அதிபுத்திசாலி. எனக்கே மிகவும் வியப்பாகத்தான் உள்ளது. ;)

   //அவரைக் கௌரவித்த, உங்களுக்கும், அவருக்கும் என் அன்புப் பாராட்டுக்கள். எனக்கு வயதிருப்பதால் மனமார்ந்த என் ஆசீர்வாதங்களும் திருமதி இராஜராஜேஸ்வரிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும். உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் அளிக்கிறேன். //

   எங்கள் இருவர் குடும்பங்களையும் ஒரே குடும்பமாக்கி இங்கு நீங்கள் ஆசீர்வதித்துள்ளதற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமி.

   அந்த உங்கள் நாட்டு [நேபாளம்] பசுபதிநாதரே நேரில் வந்து வாழ்த்தி, அருளாசி வழங்கியது போல மகிழ்கிறேன்.

   //பஸ் வசதி கொடுத்திருப்பதால் , முதலாவதாக நான் தயாராகி
   இடமும் பிடித்துவிட்டேன்.//

   அடடா, உங்களுக்குத்தான் முதல் இடம். முன்பக்கம் டிரைவருக்கு அருகிலேயே. பின்னால் அமர்ந்தால் தூக்கித்தூக்கிப்போடக்கூடும். அதனால் உங்களுக்கான இடத்தை வசதியாக முன்கூட்டியே ரிஸர்வ் செய்து கர்சீப் போட்டு காமாக்ஷி மாமி என எழுதி வைத்து விட்டேன்

   //எல்லோரையும் ஊக்குவித்து பாராட்டும் நீங்கள், அவருக்கு ஆயிரத்திற்கும் பின்னூட்டம் கொடுத்ததும், அவரும் உங்களுடைய
   எல்லா பதிவிலும் முன் நிற்பதும் ஒரு ஸாதாரண காரியமில்லை.
   முன்மாதிரியாகத் திகழுகிறீர்கள். சாதனைத் திலகங்கள் என நான் நினைக்கிறேன்.//

   எல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்கள் செய்த ஆசீர்வாதம் மாமி. நினைத்துப்பார்த்தால் மிகப்பெரிய சாதனையாகத்தான் தோன்றுகிறது. எங்கள் இருவருக்கும் “சாதனைத்திலகங்கள்” என்ற பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது, ரொம்ப சந்தோஷமாக இருக்கு மாமி.

   //அன்புடனும், ஆசிகளுடனும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் [எங்களின்] மனமார்ந்த இனிய நன்றிகள், மாமி.

   Delete
  2. தங்களைப்போல் நல்லமனம் படைத்தவர்கள் ஆசிகளுக்கு தலைவணங்கிய நிறைவான நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!

   Delete
 44. பிரமாதமான பதிவு. கலக்கி விட்டீர்கள்.
  விருந்தையும் சுவைத்தேன். மொய்யையும் வைத்து விட்டேன். இதோ கிளம்பி விட்டேன். அவர்களின் இருப்பிடத்திற்கு...

  ReplyDelete
  Replies
  1. கோவை2தில்லி August 12, 2013 at 11:51 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //பிரமாதமான பதிவு. கலக்கி விட்டீர்கள்.//

   அப்படியா? நிஜம்மாவா?

   //விருந்தையும் சுவைத்தேன். மொய்யையும் வைத்து விட்டேன்.//

   விருந்து சுவைத்தீர்கள் OK. மொய்யையும் வைத்து விட்டீர்களா? ஏன்? எதற்கு? எங்கே?

   ஓஹோ, திரும்ப உங்க ஹேண்ட் பேக்கிலேயே வைத்து விட்டீர்களா ! அதானே பார்த்தேன். சரி, சரி OK OK சந்தோஷம்.

   //இதோ கிளம்பி விட்டேன். அவர்களின் இருப்பிடத்திற்கு...//

   நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரல்லவா [கொங்கு நாட்டுக்கோவை] அவர்களின் இருப்பிடம். அதனால் தான் இந்த அவசரமோ ;)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   Delete
 45. சாமீ ! விர்சுவல் விழாக்கோலம்,! என்ன ஒரு ஆராய்ச்சி,எங்கள ஹெல்ப் கூட கூப்பிடாம தனியாளா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்து அசத்திட்டீங்க சார்.அந்த பூனை என்ன வேல பாக்குது பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. thirumathi bs sridhar August 13, 2013 at 12:13 AM

   வாங்கோ ஆச்சி, வணக்கம். நல்லா இருக்கீங்களாம்மா?

   //சாமீ ! விர்சுவல் விழாக்கோலம்,! என்ன ஒரு ஆராய்ச்சி//

   நிஜம்மாவா ஆச்சி? நல்லா இருக்கா ?
   விபரமாக மெயில் கொடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   // எங்கள ஹெல்ப் கூட கூப்பிடாம தனியாளா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்து அசத்திட்டீங்க சார். //

   நண்டும் சிண்டும் நார்த்தங்கா வண்டுமா இரண்டு குழந்தைகளும் உங்களைப் படுத்துமேம்மா. பிறகு எப்படி ஹெல்ப்புக்குக் கூப்பிட முடியும்?

   தனியாளா எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்தால் தானே FULL CREDIT உம் எனக்கே கிடைக்கும். ;)

   அப்படியும் இதுவரை ஒண்ணும் கிடைக்கக்காணும். உங்களை மாதிரி நல்லவங்க சிலபேரு மட்டும் பாராட்டியிருக்கீங்க. அதுவரை சந்தோஷமே.

   //அந்த பூனை என்ன வேல பாக்குது பாருங்க.//

   அடடா, அது அமைதியாகத்தான் நின்னுக்கிட்டு இருந்துச்சு.

   சும்மா இருந்த அதை நீங்க என்ன பண்ணினீங்க ஆச்சி?

   இப்போ நீங்க சொன்னபிறகு தான் அதை உற்றுப்பார்த்தேன்.

   அடடா என்னைப்போல சமத்தா இருந்திச்சே அது.

   அதைப்போய் இப்படி என்னவெல்லாமோ வேலை பண்ண வெச்சுட்டீங்களே !

   போங்க ...... நீங்க ரொம்ப மோசம் ஆச்சி ;)))))

   எல்லாவற்றையும் விட்டுவிட்டு பூனையைச் சுட்டிக்காட்டிப் பின்னூட்டம் கொடுத்துட்டீங்கோ. பேசிக்கிறேன். ;)

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஆச்சி.

   அன்புடன் கோபு

   Delete
 46. indru sevvai kizhamai rajarajeshwari astagam padikka vaithamaikku nandrigal.

  ReplyDelete
  Replies
  1. girijasridhar August 13, 2013 at 12:19 AM

   வா .... கிரிஜா, செளக்யமா? அநிருத் எப்படி இருக்கிறான்? இன்று அதிசயமாக இங்கு வந்திருக்கிறாய். ஆச்சர்யமாக உள்ளது. அங்கு வேறு போய் அவர்கள் பதிவிலும் பின்னூட்டம் கொடுத்து அசத்தி இருக்கிறாய். சந்தோஷம்.

   //indru sevvai kizhamai rajarajeshwari astagam padikka vaithamaikku nandrigal.//

   அந்த ஸ்லோகம் நல்லா இருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் அம்பாளின் சின்னச்சின்ன நாமாவளிகளே. பிரித்துப்பிரித்துச் சொல்லலாம். அடிக்கடி சொல்லு. நொற்று ஆகி விடும். கடைசி வரி மட்டும் Common - Repeat ஆகும்.

   உனக்குப் பிறக்க இருக்கும் குழந்தைக்கு அதே பெயர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி என்றே வைத்து விடுவோம். [எனக்குப் பேத்தி தான் வேண்டும் - சொல்லிட்டேன், சொல்லிட்டேன். ;))))) ]

   அன்புள்ள அப்பா

   Delete
  2. hahaha!!!! nandri..mama..kandipaga antha slogathai sollikondu varukiren....