என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

41] வா என்றால் ஓடி வருபவனே இறைவன் !

2
ஸ்ரீராமஜயம்




எங்கும் இருக்கும் இறைவன் நாம் இருக்கச் சொல்லும் இடத்தில் கல், மண், செம்பு முதலிய எந்த உருவத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான்.

அப்படிப்பட்ட யோக்யதையும் கருணைவும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட இறைவன் நமக்கு வேண்டவே வேண்டாம். 

பிற மதத்தினர் என்றவுடனேயே எதிர்ப்புணர்ச்சியோடுதான் வாதிடுவது என்றில்லாமல் நேயத்துடனேயே அணுகி, தங்களுக்குள்ள நியாயமான உரிமைகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப்பார்ப்பது என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


oooooOooooo


மற்றும் ஓர் சம்பவம்


இதெல்லாம் என்ன ஞாபகசக்தி?
ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார்.தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!…… இன்னும் இருக்கோ?….”

“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்…. இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காய்க்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”

“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!…. அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..போல ஆயிருந்துதே!..”

“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”

“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”



“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா….. இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு… நல்ல வம்சம்….”

“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”

“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”

“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”

“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”

“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”

“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”

“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! 


பாட்டி சொன்னாள்…. ”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க கிராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் ….. ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!… பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”


பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..  “ஆமா…… இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” 


ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!


குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். 


நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.


[Thanks to Mr. M.J.Raman of Manakkal, Now at Mumbai]  






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

25.08.2013 ஞாயிறு

48 கருத்துகள்:

  1. யோக்யதையும் கருணைவும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட இறைவன் நமக்கு வேண்டவே வேண்டாம்.

    தகுதியில்லாதவன் தலைவனாகக்கூட ஏற்கமுடியாதே..

    இறைவனின் தகுதிகளை தகுதியானவர் சொல்லியவிதம் அருமை..!

    பதிலளிநீக்கு
  2. குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள்.

    ரஸிக்கவைக்கிறது ..!

    பதிலளிநீக்கு
  3. பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்…….. “ஆமா…… இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…”

    ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

    சுட்டெரிக்கும் வாக்கு ..!

    பதிலளிநீக்கு
  4. பிற மதத்தினர் என்றவுடனேயே எதிர்ப்புணர்ச்சியோடுதான் வாதிடுவது என்றில்லாமல் நேயத்துடனேயே அணுகி, தங்களுக்குள்ள நியாயமான உரிமைகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப்பார்ப்பது என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    பாசிட்டிவ் அணுகுமுறை அல்லவா
    பாசத்தை வளர்க்கும் ..!

    பதிலளிநீக்கு
  5. நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.

    பூதக்கண்ணாடி வைத்தாவது குறைகண்டுபிடித்து
    குதறி எடுத்து தண்டோரா போடுவோமே..!

    பதிலளிநீக்கு
  6. “ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”


    “அது ஆறு கன்னு போட்டுது பெரியவா….. இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு… நல்ல வம்சம்….”

    பசுமாடு , அதன் வண்ணம் எல்லாம் நினைவில் வைத்திருப்பது சாதரண விஷயமா என்ன !!

    போட்டோ - வீடியோ எடுத்தமாதிரி ஒரே கண்வீச்சில் அத்தனையும் விசாரித்திருக்கிறாரே அந்த நட்மாடும் தெய்வம் .. ஆச்சரியம்தான் ..!

    பதிலளிநீக்கு
  7. தெய்வதரிசனம் நிறைவளித்தது ..
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
    படித்து ரசித்து பகிர்ந்துகொண்டதற்கு..!

    பதிலளிநீக்கு
  8. ஞாபக சக்தி என்று நாம் நினைப்பதற்கும், மஹா பெரியவாளின் நினைப்பிற்கும் எத்தனை வித்தியாசம்!
    அதனால் தான் அவர் அப்படிப்பட்ட உயர் நிலையில் இருக்கிறார். நாம் இப்படி சம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.
    அனுக்ரஹ அமுதம் தொடர்ந்து வர்ஷிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  9. Sir I have always had a very strong affinity towards Kanji periyav,but now I am so glad tbhat my faith is growing day by day reading your divine posts

    பதிலளிநீக்கு
  10. உண்மை தான். பெரியவாளுக்கே ஈச்வரன் ஞாபகம் எப்போவும் இருக்கிறதில்லை என வருந்துகையில் நாமெல்லாம் எந்த மூலை! அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஆமாம், நமக்கெல்லாம் மத்தவங்களைக் குத்தம் சொல்றதும், குத்தல் சொல்லறதும் தான் முக்கியமாப் படும். :(

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வை.கோ - அருமையான பதிவு - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் நினைவாற்றல் அருமை - நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதை எல்லாம் அவர் நினைவில் வத்திருந்து நம்மைக் கேட்கிறார். அவரதான் மகாப் பெரியவர்.

    இறைவன் இருக்குமிடம் பற்றீய முன்னுரை அருமை.

    எல்லாவற்றிலும் அருமை - இதுவரை வந்திருந்த கலர்ப்படங்களீலேயே மனதைக் கவரும் படம் இதுதான். அப்படிஏ பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் உள்ளது. மறக்க இயலாத படம்.

    நன்று நன்று - நல்வாழ்த்துஆல் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

  13. எங்கோ எதிலோ படித்து ரசித்ததை நினைவு வைத்துக் கொண்டு பதிவிட்டதற்கு பாராட்டுக்கள். பெரியவர்களும் ஞானியரும் கடவுள் பற்றி சரியாகத்தான் தெளிவாக இருந்திருக்கிறார்கள். நாம்தான் உணர வேண்டியதை உணராமல் தவறான கருத்துக்களுக்கு காஸ்மெடிக் முலாம் பூசுகிறோம். மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  14. பெரியவா பெரியவா தான். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  15. குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள்.


    நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.//

    இது போன்ற மஹான்கள் சொல்வதை படிக்கும் போது யாரையும் குறை சொல்லக் கூடாது, என்ற எண்ணம் வரும். பிற்ரை குறை கூறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது என்றாலும் சில் வேளைகளில் வந்து விடுகிறது.
    தன் குறை நிறைகளை ஒத்துக் கொள்ள நல்ல மனம் வேண்டும்.

    தொடர்ந்து அமுத மழை பொழியட்டும்!
    நனைய காத்து இருக்கிறோம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. //நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.// - அதென்னமோ சரிதான்! யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருந்தாத்தான் நாட்ல நிறைய பேருக்கு பொழுதே போகுது....
    நிறைய எழுதுகிறீர்கள்... நன்றி!

    பதிலளிநீக்கு
  17. எத்தனை வித்தியாசம்...!

    அருமையான பதிவு....!

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான பதிவு!.. மகாபெரியவர்களைப் பற்றிப் பேசுவதும் புண்ணியமே!..

    பதிலளிநீக்கு
  19. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


    ++++++














    எவ்வளவு ஞாபகசக்தி.ஈசுவரன் ஞாபகம் எப்போதும் வரமாட்டேங்கரதே
    யாருக்கு, நமக்குதான். ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. “ஆமா…… இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…”

    அருமை...

    பெரியவரின் ஞாபக சக்தி அருமை...

    பதிலளிநீக்கு
  21. //ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!// !!!!! :-)))

    பதிலளிநீக்கு
  22. //ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!// !!!!! :-)))

    பதிலளிநீக்கு


  23. குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள்.


    நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.//

    ஹா..ஹா..ஹா.. இது சூப்பர்.. கீப் இட் மேல கோபு அண்ணன்:).

    பதிலளிநீக்கு
  24. வா என்றால் வருபவரே இறைவன்..////

    நானும் கூப்பிடுகிறேன் வருகிறார் இல்லை:)).

    பதிலளிநீக்கு
  25. மகா பெரியவரின் ஞாபக சக்தி வியக்க வைக்கும் ஒன்று.
    பக்தி மனம் கமழும் பதிவு.

    பதிலளிநீக்கு
  26. பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்…….. “ஆமா…… இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…”

    /மஹாபெரியவாளின் ஞாபகசக்தி வியக்கவைத்தது! எங்கோ படித்ததை நினைவில் நிறுத்தி எங்களுடன் பகிர்ந்த உங்களின் திறமையும் அற்புதம்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  27. ஆமா…… இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…”

    அப்படியே அறையறாப்ல.. ஹிதமா.. வலிக்காம.

    பதிலளிநீக்கு
  28. ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

    இதை விட அழகாய் பொருத்தமாய் சொல்லி விட முடியாது.

    பதிலளிநீக்கு
  29. சிறப்பான பதிவு, நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  30. பெரியவரின் அபார ஞாபகசக்தி வியக்கத்தக்க விஷயம்.

    பதிலளிநீக்கு
  31. அபார ஞாபக சக்தி.....

    அவரது அமுத மொழிகள் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  32. Sir,
    குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள்.





    நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.Let me learn a lesson from this.
    Let me change my me..
    viji

    பதிலளிநீக்கு
  33. ஞாபகம் +சக்தி =ஞாபக சக்தி

    ஞா- ஞாலத்தை
    ப -படைத்த
    க- கடவுள்
    ம் -ம்ரித்துயுஞ்சனை (காலனை வென்றவனை ,காலகாலனை, கருவினிலும் ,கண்ணயர்ந்து உறங்கும்போதும் நம்மை காப்பானை,)

    சக்தி-நமக்கு சக்தி தருபவளை, சங்கடங்கள் தீர்ப்பவளை கோர சம்சார கடலில் மூழ்காமல் காப்பவளை,சகல சௌ பாக்கியங்களை தருபவளை)

    கண்டவற்றையெல்லாம் ஞாபகத்தில் கொள்ளாமல் மேலே கண்டுள்ள அனைத்தும் தந்தருளும் தெய்வங்களை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. நிறைவான தெய்வ தரிசனம்,மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  35. மன்னிக்கவும் ஐயா,உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தங்கள் மெயிலுக்கு பதில் அளிக்க முடியவில்லை..

    சங்கடஹர சதுர்த்தி பதிவிற்க்கு மிக்க மகிழ்ச்சி..

    தாங்கள் கொடுத்த லிங்கினை படித்தேன்,பதில் போட முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  36. கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்...தங்களுக்கு பட்சணங்கள் வந்துக் கொண்டேயிருக்கிறது,மகிழ்ச்சி ஐயா,தங்கள் அன்புக்கு!!

    பதிலளிநீக்கு
  37. // இறைவன் நாம் இருக்கச் சொல்லும் இடத்தில் கல், மண், செம்பு முதலிய எந்த உருவத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான்.//

    நம்பிக்கை தானே எல்லாம்.....

    நிறைவான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  38. Wonderful memory, and lovely post....
    Thank you very much sir for sharing...

    பதிலளிநீக்கு
  39. \\குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள்.

    நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.\\

    எங்கோ எப்போதோ படித்ததையும் நினைவில் வைத்திருந்து நெகிழ்விக்கும் வண்ணம் படைத்தமைக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  40. பெரியவரின் அபார ஞாபகசக்தி வியக்க வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
  41. //பிற மதத்தினர் என்றவுடனேயே எதிர்ப்புணர்ச்சியோடுதான் வாதிடுவது என்றில்லாமல் நேயத்துடனேயே அணுகி, தங்களுக்குள்ள நியாயமான உரிமைகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப்பார்ப்பது என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.//

    அதானே. மற்ற மதத்தினருடன் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டாம். நட்புறவுடன் பழகலாமே.

    தினமும் காலை 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரு சுவாமிநாதன் என்பவர் மகா பெரியவாளின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறார். இந்த இழையில் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தை சமீபத்தில்தான் விவரித்தார்.

    எவ்வளவு முறை கேட்டாலும், படித்தாலும் அலுக்காதவை மகா பெரியவருடன் அன்பர்களுக்குக் கிடைத்த அனுபவங்கள்.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  42. எல்லாத்தையும் தீர்க்கமா கவனிச்சு நினைவில இருத்தறது ஒரு பெரிய சாதனை.

    பதிலளிநீக்கு
  43. ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லியாம் ஹா ஹா என்ன ஒரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  44. எப்பத்தியோ எங்கனியோ நடக்குர வெசயம்ஸா புட்புட்டு வச்சிடறாங்களே. அபுரூவ சக்திதான்

    பதிலளிநீக்கு
  45. எல்லாத்தையும் தீர்க்கமா கவனிக்கற்து மட்டுமில்ல எத்தனை வருஷமானாலும் நினைவில் வைத்திருக்காளே..

    பதிலளிநீக்கு
  46. குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள்.


    நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.// பல இடங்களில் அப்படித்தானே நடக்கிறது...இந்த வயதிலும் இவ்வளவு ஞாபகசக்தியா என வியப்பு மேலிடுகிறது..

    பதிலளிநீக்கு
  47. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (17.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=415970178905682

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு