என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;)

2
ஸ்ரீராமஜயம்



தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ, அப்படியே நம் மனதிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாகப் பிரகாசிக்க வேண்டும். 

தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப்படிக் குறைவாகச் செலவழித்து, எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.

மனிதப்பிறவி எடுத்த ஒருவர், மிருகம், பறவை போன்றவற்றை உண்பது உடன் பிறப்பை கொலை செய்வது போலத்தான். அசைவ உணவை ஆதரித்தால் ‘அனைத்துயிர் சகோதரத்வம்’ என்பதற்கே அர்த்தமில்லாமல் போகிறது.

மனோதத்துவப்படி, நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். 


oooooOooooo


ஓர் சம்பவம்



இது பல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். 

ஒருநாள் ஸ்ரீமடத்தில் பெரியவாளை தரிஸனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதியினர். 


அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர். 


"பெரியவா, நான் ஸர்வீஸிலிருந்து ரிடையர் ஆயிட்டேன். கொழந்தைகள்ன்னு யாரும் கெடையாது. அதனால, மடத்தில வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரஹம் பண்ணணும்." பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. 

” வாழ்றதுக்கு ஒனக்கு ‘பிடிப்பு’ எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?”


”ஆமாம், பெரியவா......”

”ஏதாவது கார்யம் குடுத்தா பண்ணுவியா?”

”உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டு இருக்கேன்.”


அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார், ஸ்வாமிகள்.


அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். 

"இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்."  

கையை உயர்த்தி ஆசி கூறினார், மஹாபெரியவா. 



பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். 


இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்னியே! இதோ, இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்." 


"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்." பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார். 

பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது.



”ஆமாம் ..... இவ என்னோட ரெண்டாவது சம்ஸாரம் தான். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளைக் கல்யாணம் பண்ணிண்டேன்”

பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவிரமான மாறுதல்! 


"சரி .... ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்ததே ! அது என்னாச்சு?” 


"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". 



[ பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?  ]

ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா. நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்." துக்கத்தால் குரல் அடைத்தது. 



"ம்ம்ம்ம் ... பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ. ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை." 

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 

ஆனால், இன்பமான அதிர்ச்சி!  

என்னது ....... இவ என் சொந்த மகளா ?

”இது சத்யம் .... சத்யம்!” பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! 


உண்மைதான்!

பல வருஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள். 


பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.


இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே "PRE PLANNED" என்பது. 

மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும். 

நம் வீடுகளில் மூக்குக்கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும், வீட்டார் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் கொடுப்பது போல், சர்வ சாதாரணமாக "COSMIC LEVEL" இல் விளையாடக்கூடியவர்கள் பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.


oooooOooooo


 



வானிலை அறிக்கை



தொடர்ந்து பொழிந்துவரும்
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’

சிறிய இடைவேளைக்குப்பிறகு


[அதாவது ஒரு வாரத்திற்குப்பிறகு]

தொடர்ந்து மீண்டும் பொழியும்.





இதைக்கேட்டதும் டக்குன்னு 
குடையை மடக்கிவிட்ட தங்களுக்கு

ஓர் முக்கிய அறிவிப்பு

வரும் 13.08.2013 
செவ்வாய்க்கிழமை 
காலை 6 மணிக்கு

”ஆயிரம்  நிலவே   வா ! 
ஓர் ... ஆயிரம் நிலவே வா !!”

என்ற தலைப்பில் 
ஓர் சிறப்புப்பதிவு 
வெளியாக உள்ளது

காணத் தவறாதீர்கள்.



மேலும் ஓர் முக்கிய அறிவிப்பு

வரும் 16.08.2013 
ஆடி வெள்ளிக்கிழமை
காலை 6 மணிக்கு

”அறுபதிலும் ஆசை வரும்!”

என்ற தலைப்பில் 
ஓர் சிறப்புப்பதிவு 
வெளியாக உள்ளது

அதையும் 
காணத் தவறாதீர்கள்.


இந்த இரண்டு சிறப்புப் பதிவுகளுக்கும்
அன்புடன் வருகை தந்து 
பின்னூட்டக் கருத்துக்கள் எழுதுவோர் அனைவருக்கும் 
அடியேனால் வழக்கம் போல் பதில் அளிக்கப்படும்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

10.08.2013 சனிக்கிழமை

47 கருத்துகள்:

  1. மஹா பெரியவரின் அற்புதங்கள் படிக்க படிக்க பக்தி அதிகமாகிறது.
    பயங்கர ஸஸ்பென்ஸ் வைத்து எழுதிவிட்டீர்கல். யாருக்கு சஷ்டியப்த பூர்த்தி அறிய ஆவல்......

    பதிலளிநீக்கு
  2. பிரிவென்பதே இல்லை
    பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் குறுக்கே
    ஒரு கோலைப் போட்டால் தண்ணீர்
    இரண்டு பகுதிகளில் உள்ளதுபோல் தோன்றும்.
    கோலை எடுத்துவிட்டால் இருப்பது ஒரே பகுதிதான் .

    அதைப்போல்தான் மனிதர்களிடையே
    உள்ள பிரிவுகளும் பேதங்களும்

    இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ஞானிகள்.

    அவர்கள் அதனால்தான் பேதம் பார்ப்பதில்லை.

    அவர்களுக்கு எல்லாம் ஒன்றே.
    நாமும் அந்த நிலையை அடைய
    அந்த மகானிடமே பிரார்த்திப்போம்.

    ஒரே கல்லில்
    இரண்டு மாங்காய் என்பார்கள்.

    அது இதுதானோ.
    இருவரின் மன பாரமும் இறங்கிவிட்டதே
    அவர்கள்மீது மகான் கொண்ட இரக்கத்தினால்.

    அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மகா பெரியவரின் அற்புதங்களை அறிய அறிய
    மனம் அதிக நெகிழ்ச்சி கொள்கிறது
    தங்கள் மூலம் அறியக் கிடைத்தது கூட
    எங்கள் பாக்கியமே
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  4. ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்”
    இத்தொடரின் பொருளினை இன்றுதான் அறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. காலங்களை அறிந்த கருணாமூர்த்தி!.. அத்தகைய மகானை சிந்திப்பதும் வந்திப்பதும் சுகமே!...

    பதிலளிநீக்கு
  6. போதுமென்ற மனம் இருப்பவன்தான் உலகிலேயே பெரிய பணக்காரன் என்று படித்ததன் நினைவு வருகிறது.

    பதிலளிநீக்கு
  7. தொடரும் அமுத மொழிகள் படித்து இன்புற்றேன்....

    அதிசயங்களும் மனதில் இடம் பிடித்தன.....

    உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. உடல் சிலிர்த்துக் கண்களில் கண்னிர் வந்து விட்டது!

    பதிலளிநீக்கு
  9. ஆயிரம் நிலவே வா. ஸதாபிஷேகமா? /யாரோ அந்த பெரியவர்கள்.
    தீப ஒளிமாதிரி எல்லோருக்கும் உபயோகமாக இருந்தால் மகத்தானபாக்கியம்தான். பெரியவாளின் அமுதமொழி படிக்கத் தெவிட்டாத விருந்து. அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. , சர்வ சாதாரணமாக "COSMIC LEVEL" இல் விளையாடக்கூடியவர்கள் பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  11. ”ஆயிரம் நிலவே வா !
    ஓர் ... ஆயிரம் நிலவே வா !!”

    என்ற தலைப்பில்
    ஓர் சிறப்புப்பதிவு
    வெளியாக உள்ளது


    வாழ்த்துகள்.. ஆயிரம் நிலவும் ஜொலிக்கட்டும் ..

    விண்மீன்கள் எல்லாம் நிலாவாய் பொழியும்
    வானம் அழகு பெறட்டும் ..!

    பதிலளிநீக்கு
  12. தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப்படிக் குறைவாகச் செலவழித்து, எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.

    வாழ்வில் மிஞ்சி நிற்கும் அருமையான
    வாக்கு..!

    பதிலளிநீக்கு
  13. எவ்வளவு பெரிய அதிர்ச்சி தரும் செய்தியை எவ்வளவு அநாயாசமாக சொல்லிவிட்டார் பெரியவர். பெற்றவர்களுக்கும் வளர்த்தவர்களுக்கும் ஒருசேரக் கிடைத்த ஆனந்தம் நாங்களும் உணர்ந்தோம். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  14. காணாமல் போனமகள் திரும்பவும் கிடைத்தது கடவுளின் பாக்கியம்.

    வானிலை அறிக்கை நல்லாத்தான் இருக்கு, உந்த மழை எப்போது நிக்கும்?:)

    பதிலளிநீக்கு
  15. //[அதாவது ஒரு வாரத்திற்குப்பிறகு]

    தொடர்ந்து மீண்டும் பொழியும்.
    //

    அப்பாடாஆஆஆஆ ஒரு வாரம் ஹொலிடே விட்டாச்சு:))..


    *ஆயிரம் நிலவே வா..
    * அறுபதிலும் ஆசை வரும்...
    தலைப்புக்கள் நன்றாகத்தான் இருக்கு...மீ வெயிட்டிங்...

    பதிலளிநீக்கு

  16. simple living.... high thinking...! வாழ்ந்து காட்டியவர் பெரியவர். சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் ஆச்சரியமளிப்பவை. . பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. தனக்கு மிஞ்சி தானம்! அருமையான விளக்கம்! மஹா பெரியவாளின் தவ சக்தி வியக்க வைக்கிறது! சிலிர்க்க வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  18. தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப்படிக் குறைவாகச் செலவழித்து, எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.//

    அருமையான அமுதமொழி.

    பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.//

    அற்புதம்.

    செவ்வாய், வெள்ளி பதிவுகளுக்கு காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. Very beautifully explained about "thanakku minji thaan dharmam", thanks a lot for the explanation sir. When I read about the break I thought your going out of town, but you are coming up with a bang. And the topics are very very interesting...
    Just waiting for them sir, Vaazthukkal...
    Thanks a lot sir...
    Keep blogging and keep rocking...

    பதிலளிநீக்கு
  20. பெரியவரின் மகிமை அறியச் செய்தீர்கள் ஐயா...
    பதிவு குறித்த முன்னோட்டம் .... பதிவை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
  21. போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து,பெரியவரின் அமுதமழை தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  22. //மனோதத்துவப்படி, நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம்.//

    அமுதம் இனிக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. //சர்வ சாதாரணமாக "COSMIC LEVEL" இல் விளையாடக்கூடியவர்கள் பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.// unmai

    waiting for special pathivugal...

    பதிலளிநீக்கு
  24. //தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப்படிக் குறைவாகச் செலவழித்து, எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.//
    'தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்ட பிறகு மற்றவர்கள்' என்றல்லவா எல்லோரும் நினைத்திருந்தோம் இத்தனை நாளும்?

    பிரிந்த மகளையும் தாய் தந்தையரையும் எத்தனை அழகாகச் சேர்த்து வைத்தார் பெரியவா!

    பதிலளிநீக்கு
  25. Ooooooooo
    enammoo irrukkupol irrukku
    Ayiram nilava vaa
    aruvathilum asai varum...
    mmmmmmmm
    sari sari poruerrunthu parkalam..
    viji

    பதிலளிநீக்கு
  26. அன்பு நிறை அண்ணா,

    தங்களை கணிணி தொடர் பகிர்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்...

    http://manjusampath.blogspot.com/2013/08/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  27. ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்”
    இத்தொடரின் பொருளினை அற்புதமாக உரைத்தீர்கள்!

    //சர்வ சாதாரணமாக "COSMIC LEVEL" இல் விளையாடக்கூடியவர்கள் பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.// நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  28. அறிவிப்புகள் அருமை. கட்டாயம் வருவோம்.
    தினந்தோறும் காலையில் விஜய் டிவியில் மகாபெரியவரின் அற்புதங்களை ஒருவர் சொல்லி வருகிறார்.கேட்பதற்கு இதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  29. சிறப்பு பகிர்வுகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  30. என்ன ஆச்சர்யங்கள் என்று பார்க்கத் தான் இது.

    பதிலளிநீக்கு
  31. // பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.//

    இரண்டு பக்கமும் சுபம்!

    பதிலளிநீக்கு
  32. ஆமாம், ஏற்கெனவே படிச்சப்போவே நினைச்சேன். எப்படி அவருக்குத் தெரியும்னு! மஹான் என்றால் அவரல்லவோ மஹான்! எப்படியோ கண்டு பிடிச்சிருக்காரே. அருமையான பதிவு. ஆயிரம்வாலாவும் படிச்சாச்சு. இனி அறுபதுக்கு அறுபதுக்கு வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  33. தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அப்படிக் குறைவாகச் செலவழித்து, எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.//

    எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அந்த மிச்சம் பிடித்த பணத்தை தர்மத்துக்கு செலவழிப்பது தான் ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.


    பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.

    இந்த சம்பவத்தைப் படித்ததும் என் மெய் சிலிர்த்தது. மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  34. தனக்கு மிஞ்சி - இத்தனை நாள் வேறு பொருள் கொண்டிருந்தேன்.

    உங்க teasers அட்டகாசமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  35. ”தனக்கு மிஞ்சித் தான தர்மம்” என்பது.// அருமையான விளக்கம்.

    அமுத மொழியில் நனைகின்றோம்.

    பதிலளிநீக்கு
  36. தொலைந்த தன் மகளை தக்க சமயத்தில் சந்திதது....என்ன ஒரு ஆச்சர்யம்.ப்ராப்தம் இருந்தால்தான் இப்படியும் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  37. அன்பின் வை.கோ - பதிவு அருமை - நன்று நன்று - பெற்றவர்களும் வளர்த்தவர்களூம் பெரியவா முன்னிலையில் சந்தித்து - பெற்ற பெண்ணை வளர்த்தவர்களிடம் இருந்து பெற்றவர்கள் அழைத்துக் கொண்டு திருமணம் செய்து வைப்பதற்கான செயல்களை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் விருப்பப் படி செய்யத் துவங்கியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  38. காணாமல் போன பெண் குழந்தை தந்தையிடமே வந்து சேர்ந்தது ஆச்சரியம்தான்! ஒவ்வொரு சம்பவங்களும் வியப்பில் ஆழ்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  39. //மனிதப்பிறவி எடுத்த ஒருவர், மிருகம், பறவை போன்றவற்றை உண்பது உடன் பிறப்பை கொலை செய்வது போலத்தான். அசைவ உணவை ஆதரித்தால் ‘அனைத்துயிர் சகோதரத்வம்’ என்பதற்கே அர்த்தமில்லாமல் போகிறது.//

    உண்மை......

    காணாமல் போன பெண் குழந்தை மீண்டும் தனது தந்தையிடமே சேர்ந்தது ஆச்சரியம்....

    பதிலளிநீக்கு
  40. அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  41. தொலைந்து போன குழந்தை இதுதான் என் று எப்படித்தான் தெரிஞ்சுண்டாளோ பெரியவா

    பதிலளிநீக்கு
  42. எப்பூடிலா இந்த குருசாமி ஜாலம்காட்டுராக. காணாம போன பொட்டபுள்ளனு அவகளுக்கே புரிய வச்சிட்டாகளே.

    பதிலளிநீக்கு
  43. பிடிப்பு வின் காணாமல் போன குழந்தையும் அதை வளர்த்து வருபவர்களும் அன்று தரிசனத்துக்கு வந்தது அதிசயமான நிகழ்வு. அனைத்தையும் பெரியவா அறிந்து கொண்டது அனைத்திலும் ஆச்சரியம்

    பதிலளிநீக்கு
  44. மனோதத்துவப்படி, நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். //மனதின் சக்தியை உணரச்செய்யும் உன்னத வரிகள்.

    பதிலளிநீக்கு
  45. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=413675565801810

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு