என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

40] பொய், பொறாமை, அழுக்கு, சிரங்கு !

2
ஸ்ரீராமஜயம்



அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல் மூடி மூடி வைத்தால் அது சிரங்காகி விடும். 

அது மாதிரி தப்பை மூடி மறைத்தால், அது பொய் என சிரங்காகி விடுகிறது. 

உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.

இன்னொரு பெரிய அழுக்கு, குழந்தைகளிடத்தில் சுலபத்தில் சேர்கிற அழுக்கு, பொறாமைக்குணம். இவ்வழுக்குக்கான எண்ணங்களாலேயே அறிவு, உடம்பு இரண்டையும் பாழாக்கிக்கொள்கிறோம். 

நம்மை நாமே கெடுத்துக் கொள்வதைத்தவிர, பொறாமையால் வேறு எந்த விதப்பயனும் இல்லை.

oooooOooooo



கோவிந்தா ! கோபாலா!!

பெரியவாளிடம் ரொம்ப ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு தம்பதியினர்.

பெரியவா அனுக்ரஹத்தால் அவர்களுக்கு ரெட்டை குழந்தைகள் பிறந்தன. 

பெரியவாளே அக்குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்பது அவர்களின் தீராத ஆவல். 

இருப்பதோ ஆந்திராவில் எங்கோ வடகோடியில் ! அந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகளை அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து, இதோ, பெரியவாளின் திருவடி முன் போட்டாயிற்று. 



மாச வரும்படியோ ரொம்ப சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 

ஆனால், பெரியவாளிடம் இருந்த நம்பிக்கை, பக்தி, ப்ரேமை கடலளவு சொல்லவே முடியாதபடி இருந்தது. பெரியவாளிடம் பெயர் வைக்கச் சொல்லி, எப்படிக் கேட்பது? என்ற தயக்கம் வேறு/

பாதங்களின் கீழே குஞ்சுக்கைகளையும், கால்களையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருந்த ரெட்டையை பார்த்தா பெரியவா, “என்ன பேரு?” என்றார்கள்.





மெய் சிலிர்த்தது தம்பதிக்கு! நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வந்துவிட்டார்களே !

“இன்னும் வெக்கலை, பெரியவாதான் எங்களுக்கு எல்லாமே! கர்காச்சார்யார் கிருஷ்ண பலராமனுக்கு பேர் வெச்ச மாதிரி, பெரியவாதான் எங்களோட குரு, அதுனால பெரியவாளே பேர் வெக்கணும்னு ரொம்ப நம்பிக்கையோட, ஆசையோட வந்திருக்கோம்”. 




“அந்த பழக்கமெல்லாம் நின்னு போய் ரொம்ப நாளாறதே.” சிரித்தார்.

நின்றுபோன சம்பிரதாயத்தை திரும்ப துவக்கினால், அது தொந்தரவாகவும் ஆகலாம். ஆனால், பாவம் அவ்வளவு தூரத்திலிருந்து இவ்வளவு நம்பிக்கையோடு வந்தவர்களை நிர்தாட்சிண்யமாக திருப்பி அனுப்பவும் மனஸ் ஒப்பவில்லை. பெரியவா கர்கரோ இல்லையோ, ஆனால் அமுக்கமாக அழகாக நாடகம் நடத்தி, பக்தர்களை குதூகலப்படுத்துவதில் நிச்சயம் கிருஷ்ணன்தான் ! அவருடைய சங்கல்பத்தால் உடனே அங்கே ஒரு நாடகமேடை தயாராகியது.

ஒரு பக்தர் ஸ்ரீமடத்துக்கு காணிக்கையாக ஒரு பசுமாட்டை கொண்டு வந்தார். 

பெரியவா சைகை பண்ணியதும், வித்யார்த்தி நாராயண சாஸ்த்ரி அந்தப் பசுவை பெரியவா எதிரில் நிறுத்தி, “இதுதான், காணிக்கையா சமர்பிக்கப்பட்ட பசு” என்ற அர்த்தம் தொனிக்க, ஒரே வார்த்தையில் “கோ” [பசு] என்றார். 

அதே வினாடி, ஒரு அம்மா கூஜாவில் பால் கொண்டு வந்திருந்தார். “கூஜாவில் பால் இருக்கு” என்று அர்த்தம் தொனிக்க “பால்” என்று விண்ணப்பித்தார். 

பெரியவா சிரித்துக் கொண்டே சிஷ்யரிடம் “ஏண்டா, சாஸ்த்ரிகளும், அந்த அம்மாவும் சொன்ன வார்த்தை ரெண்டையும் சேத்து சொல்லு” என்றார். 

“கோ………பால்….. கோபால்” “ஆஹா! ஒரு குழந்தைக்கு பேர் கெடச்சாச்சு! 

சரி……..ஏண்டா, பஜனை சம்ப்ரதாயத்ல கோபாலனோட சேத்து என்ன நாமம் சொல்லுவா?” 

சிஷ்யர் மெல்லிய குரலில் ஒரு நாமாவளி போட்டார். “கோபாலா .... கோவிந்தா.” 

“சபாஷ் ! கோவிந்தன் ! 

கோபாலன், கோவிந்தன். ரெண்டு கொழந்தைகளுக்கும் பேர் ! 

என்ன இப்போ த்ருப்தியா ? 

சந்தோஷமா போயிட்டு வாங்கோ. க்ஷேமமா இருங்கோ” 

ஆசிர்வதித்தார். 

இனி வேறென்ன வேண்டும்?

இந்த குழந்தைகளும் கருவிலே திருவுடையவர்கள். 

ஆம். பிறந்து ஒரு பயனும் இல்லாமல், சத்சங்கம் இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைந்துவிட்டு, கடைசி மூச்சு இழுக்கும் போது ஏதோ பூர்வ புண்ய பலன் இருந்து, பகவந்நாமம் சொல்லவோ, கேட்கவோ கிடைக்கப் பெற்றவர்களை பார்க்கும்போது, இந்தக் குழந்தைகள் பிறந்ததுமே, பெரியவாளுடைய பாதங்களை தஞ்சம் அடைந்து, அவராலேயே பெயர் சூட்டப்பெற்றது அவர்களுடைய பரம பாக்யம்! 



இதனால்தான் குழந்தைகளை மஹான்களின் சன்னதிக்கு அடிக்கடி அழைத்துக் கொண்டு போகவேண்டும். அங்கே போனால், அது அழும், படுத்தும் என்று சாக்கு சொல்லாமல், குழந்தைகளின் யோகக்ஷேமத்துக்காக அழைத்துப் போகவேண்டும். 

வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். சின்ன சின்ன வேலைகளை சொல்லி அவர்கள் மனஸில் நம்பிக்கையை, பக்தியை ஊட்ட வேண்டும்.



oooooOooooo


http://sashiga.blogspot.in/


நம் தளத்தில் தொடர்வருகை தந்துவரும் பாசம் மிகுந்த மேனகாவின் அன்பான  அவசரமான வேண்டுகோளுக்கிணங்க நேற்று இரவு முழுவதும் கண்விழித்து தகவல்கள் சேகரித்து இதனை இன்று வெளியிட்டுள்ளேன்.  





 ஸங்கடஹர சதுர்த்தி


ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்திக்கு [பெளர்ணமிக்குப் 


பிறகு வரும் நான்காவது திதி] ’ஸங்கடஹர சதுர்த்தி’ என்று பெயர்.




கணபதியின் முக்கியமான 32 திரு உருவங்களில் ’ஸங்கடஹர கணபதி’ 

என்பவரும் ஒருவர்.





இன்று பகல் முழுவதும் உபவாஸம் இருந்து, மாலையில் சந்திரன் 

உதயமானதும், ஸங்கடஹர கணபதியை அபிஷேகம், அர்ச்சனை, 

ஸ்தோத்ர பாராயணம் மூலம் உபாஸித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 21 

முறை சொல்லி ப்ரார்த்தனை செய்வதால் அனைத்து ஸங்கடங்களும் 

[இன்னல்களும்] விலகும். 


க3ணாதி4 பஸ்த்வம் தே3வேஸ!

சதுர்த்2யாம் பூஜிதோமயா

ஷ்டாந் மாம் மோசயேஸாந!

ஸர்வமிஷ்டம் ச தே3ஹிமே 



இதுவரை கொடுத்துள்ள தகவல்கள் என்னுடைய பழைய பதிவு ஒன்றில் 

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இணைப்பு:

 http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_30.html



oooooOooooo




இதோ ஒருசில புதிய தகவல்கள்



24.08.2013 சனிக்கிழமை -

 மஹா ஸங்கடஹர சதுர்த்தி



சிராவண மாத கிருஷ்ணபக்ஷ [தேய்பிறை] சதுர்த்திக்கு மட்டும் 

மஹா ஸங்கடஹர சதுர்த்தீ என்று பெயர்.  


ஒவ்வொரு மாதமும் ஸங்கடஹர சதுர்தி விரதம் இருக்க நினைப்பவர்கள்,  இன்று 

[24.08.2013 சனிக்கிழமை] ஆரம்பித்து தொடர்ந்து ஒரு வருஷம் முழுவதும் ஒவ்வொரு 

மாதமும் ஸங்கடஹர சதிர்தீயன்று [தம்பதியினராக] இந்த விரதத்தை அனுஷ்டிக்க 

வேண்டும். 


ச்ராவணே ப3ஹுளே பக்ஷே

சதுர்த்2யாம் து விது4த3யே,

க3ணேசம் பூஜயித்வா து

சந்த்3ராயார்க்4யம் ப்ரதா3 பயேத்



என்பதாக இன்று பகல் முழுவதும் உபவாஸம் இருந்து மாலையில் ஸ்ரீ கணபதி 

விக்ரஹத்தை அல்லது படத்தை வைத்து, 


மம வித்3யா-த4ன-புத்ர-பெளத்ராதி3 ஸுக2 ப்ராப்த்யர்த்த2ம் ஸர்வ ஸங்கஷ்ட 

நிராஹரணார்த்த2ம் ஸங்கடஹர கணபதீ பூஜாம் கரிஷ்யே 

என்று ஸங்கல்ப்பம் செய்துகொண்டு,


அஸ்மின் படே2 க3ஜாஸ்யாய நம: ஆவாஹயாமி [ஸ்வாமியை வரவேற்றல்]

விக்4னராஜாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி [ஸ்வாமிக்கு இருக்கை அளித்தல்]

வக்ரதுண்டா3ய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி

ஹேரம்பா3ய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி [சுத்த ஜலத்தால் அபிஷேக்ம்/ப்ரோக்ஷணம்]

சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி [ஆடை அணிவித்தல்]

குப்3ஜாய நம: யக்3ஞோபவீதம் ஸமர்ப்பயாமி [பூணூல் அணிவித்தல்]

கெள3ரீ புத்ராய க3ணேஸ்வராய நம: க3ந்த4ம் ஸமர்ப்பயாமி [சந்தனம் இடுதல்]


உமாபுத்ராய நமஅக்ஷதான் ஸமர்ப்பயாமி 

[முனை உடையாத மஞ்சள்பொடி கலந்த முழுப்பச்சரிசியால் அர்சித்தல்]


சிவஸூநவே நம: மாலிகாம் ஸமர்ப்பயாமி [புஷ்ப மாலைகள்]

விக்4னநாசினே நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி [உதிரிப்பூக்கள்]

விகடாய நம: தூ4பம் ஆக்4ராபயாமி [ஊதுபத்தி, சாம்பிராணி]

வாமனாய நம: தீ3பம் த3ர்சயாமி [விளக்கு காட்டுதல்]

ஸர்வாய நம: நைவேத்3யம் நிவேத3யாமி 


[ 21 மோதகம் - கொழுக்கட்டைகள் - நிவேதனம் செய்ய வேண்டும்]


  



ஸர்வார்த்தி நாஸினே நம:  ப2லம் ஸமர்ப்பயாமி [பழங்கள்]



 


[மாதுளம்பழம் + கொய்யப்பழம் நிவேதனம் செய்வது நல்லது]


விக்4னஹர்த்தே நம: தாம்பூ3லம் ஸமர்ப்பயாமி [வெற்றிலை+பாக்கு] 

ஸர்வேஸ்வராய நம: த3க்ஷிணாம் ஸமர்ப்பயாமி [COINS]

விக்4ன நாசினே நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி 

[சூடம் ஏற்றிக்காட்டுதல்]


என்பதாகச் சொல்லி அனைத்து உபசாரங்களுடன் பூஜையை முடித்து விட்டு, பசும்பால் 

அல்லது சந்தனம் கலந்த ஜலத்தால் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி ஸ்ரீ கணபதியின் 

முன்பாக கிண்ணத்தில் அர்க்யத்தை விடவும்.


1] க்ஷீர ஸாக3ர ஸம்பூ4த ! ஸுதா4 ரூப ! நிஸாகர !

    க்2ருஹாணார்க்4யம் மயா த3த்தம் க3ணேச ப்ரீதி வர்த்த4ன!

    ரோஹிணீ ஸஹித சந்த்3ரமஸே நம: 

    இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். 


2] க3ணேசாய நமஸ்துப்4யம் ஸர்வஸித்தி4 ப்ரதா3யக!

    ஸங்கஷ்டம் ஹர மே தே3வ ! க்3ருஹாணார்க்4யம் 

     நமோஸ்து தே,     க3ணேசாய நம: 

    இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். 


3]  க்ருஷ்ண பக்ஷே சதுர்த்2யாம் து பூஜிதஸ் த்வம் விதூ4த3யே

    க்ஷிப்ரம் ப்ரஹாதி3தோ தே3வ ! க்3ருஹாணார்க்4யம் 

    நமோஸ்துதே     ஸங்கஷ்ட ஹர க3ணேசாய நம: 

    இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். 



4]  திதீ2நா முத்தமே தே3வி ! க3ணேச ப்ரிய வல்லபே4 !

     ஸர்வ ஸங்கஷ்ட நாசாய சதுர்த்2யர்க்4யம் நமோஸ்துதே - 

     சதுர்த்2யை நம:

     இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம். . 


இவ்வாறு அர்க்யம் தந்துவிட்டு. ஸ்ரீ கணபதியின் ஸன்னதியில் தம்பதிகளாக 

அமர்ந்து கொண்டு


நமோ ஹேரம்ப3 மத3மோதி3த 

மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய 

நிவாரய ஹும் ப2ட் ஸ்வாஹா


என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 முறை ஜபிக்கவும்.


பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 மோதகத்தில் [கொழுக்கட்டையில்] 

ஐந்து கொழுக்கட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு தந்து 

சாப்பிடச் செய்ய வேண்டும்.



பாக்கியை பிரஸாதமாக கணவனும் மனைவியும் மற்றவர்களும் சாப்பிடலாம். 


பிறகு கணபதியைப் பிரார்த்தித்துக்கொண்டு, சந்திரனை தரிஸித்து விட்டு இரவு 

உணவு சாப்பிடலாம்.


இவ்வாறு பூஜை செய்ய இயலாதவர்கள் அர்க்யம் மட்டுமாவது தந்து, சந்திரனை 

தரிஸனம் செய்யலாம்,


இதனால் அனைத்து ஸங்கடங்களும் [இன்னல்களும்] விலகும் என்கிறது 

கணேச புராணம்.


சுபம்






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

23.08.2013 வெள்ளிக்கிழமை

63 கருத்துகள்:

  1. குழந்தை படம் பார்த்ததும் ஏதோ குழந்தைகளை பற்றிய பகிர்வு என்று நினைத்தேன் குழந்தைகளை எப்படி பழக்கவேண்டும் என்று பெற்றவர்களுக்கு சொன்ன பகிர்வு சிறப்புங்க ஐயா.
    கணேச புராணம் பற்றிய ஸ்லோகங்களும் அதற்கு தகுந்த விளக்கமும் தெரிந்து கொண்டேன். கொடுக்கட்டை படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. Divine post Sir.It is really very delightful and feels good to read about Kanji Periyva.Happy that I found your blog so I can get continuous blessed feelings.As you rightly said we should definitely cultivate the habit of praying in children from a very young age.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வை.கோ - வந்து விட்டேன் - பார்க்கிறேன் - படிக்கிறேன் - மகிழ்கிறேன் - மறுமொழியும் இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. அந்த இரட்டைக் குழந்தைகள் இருவரும் மகா பாக்கியசாலிகள். சங்கட ஹர சதுர்த்தி பற்றி எல்லா தகவல்களையும் சொல்லியிருக்கிறீர்கள். பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. அறிவோடு ஆன்மீகமும்
    அதோடு ஆண்டவன் வழிபாடும்
    அருள் மணக்கும் பிரசாதங்களும்
    ஒருங்கே தரும் அருமை பதிவு
    பாராட்டுக்கள் VGK

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ - இட்ட மறுமொழியினப் பாதியில் வெள்ளைக் காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டது.

    மறுபடி மறுமொழி :

    பொய் பொறாமை அழுக்கு சிரங்கு - தலைப்பு அருமை - இவைநான்கினைப் பற்றிய விளக்கங்களும் அருமை.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைத் தரிசிக்க நீண்ட் தூரத்திலிருந்து ஒரு தம்பதி அவர்களது இரட்டைக் குழந்தைகளுடன் வந்திருந்தன்ர். இரு மழலைகளுக்கும் பெயர் வைக்க பெரியவாளிடம் வேண்டினர்.

    ஆனால் அவரோ அச்சம்பிரதாயத்தை நிறுத்தி நீண்ட நாட்களாகி விட்டதெ எனக் கூறி - அதனைத் தொடர்வது நன்றாய் இருக்காதென்பதால் சற்றே சிந்தித்தார்.

    அச்சமயம் காணிக்கையாக ஒருபசுவினை அளிக்க வந்த ஒரு பக்தர் “கோ" என்றார். மற்றொரு பக்தை பால் கொண்டுவந்தவர் "பால்" என்றார். இன்னொரு பக்தர் இரண்டினையும் சேர்த்து கோபால் என்றார் -மற்றொருவரோ கோபாலா கோவிந்தா என்றார் -

    அவ்வளவுதான் - வந்திருந்த தம்பதிகளின் கோரிக்கை நிறைவேறியது - இரட்டைக் குழந்தைகளுக்கும் பெயர் சூட்டியாயிற்று.

    இதுதான் பெரியவாளின் கறுனை.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வை.கோ - சங்கடகர சதுர்த்தி பற்றைய நீண்ட விளக்கமான பதிவு அருமை - பயனுள்ள தகவல்கள்.

    நாளை 24.08.2013 சனிக்கிழமை மஹா சங்கடகர சதுர்த்தி. தகவல்களை அள்ளித் தருகிறார்.

    சங்கடகர சதுர்த்து எப்படிக் கடைப் பிடிக்க வேண்டுமென்றும் - ஸ்லோகங்கள் அனைத்தும் தந்தும் - நெய்வேத்திய பிரசாதங்கள் அனைத்தைப் பற்றிய தகவல்கள் தந்தும் - பூசை முடித்த வுடன் கூற வேண்டிய ஸ்லோகங்கள் மந்திரங்கள் அனைததையும் இபொபதிவில் எழுதி - தூள் கெளபீட்டார் போங்கோ.

    நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா



    பதிலளிநீக்கு
  8. இரண்டு குழந்தைகளும் மகா பாக்கியசாலிகள்...

    எனக்காக சங்கடஹர சதுர்த்தி பதிவை போட்டதற்க்கு மிக்க நன்றி ஐயா,மந்திரங்களை குறிந்த்துக் கொண்டேன்...

    அனைவருக்கும் பயன்படும் விதத்தில் எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சி,இந்த பதிவினை நிஜமாவே நான் எதிர்பார்க்கவில்லை..மீண்டும் மிக்க நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள மேனகா,

      வணக்கம்.

      மஹா சங்கடஹர சதுர்த்தி பற்றி மேலும் முழு விபரங்கள் அறிய இந்த கீழ்க்கண்ட இணைப்புக்குச் செல்லுங்கள்:

      http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_24.html#comment-form

      என்றும் அன்புடன்

      கோபு

      நீக்கு
  9. கடவுளின் கருணையும் மகானிய்ம் அருளும் பார்த்தீர்களா...

    நான் எப்போழுதும் தங்களுக்கு 2 அல்லது 3 பதிவிற்க்கு சேர்த்து கருத்து தெரிவிப்பேன்,இன்று தற்செயலாக உங்கள் பதிவினை பார்த்ததில் அளவுகடந்த மகிழ்ச்சி.கருத்தும் அளித்தாயிற்று..இதான் விநாயகரின் கருணை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள மேனகா,

      வணக்கம்.

      சங்கடஹர சதுர்த்தி பற்றி மேலும் முழு விபரங்கள் அறிய இந்த கீழ்க்கண்ட இணைப்புக்குச் செல்லுங்கள்:

      http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_24.html

      என்றும் அன்புடன்,

      கோபு

      நீக்கு
  10. அழுக்கும்,பொய்யும் மூடி மறைத்தால் சிரங்காகி விடுகிரது. எவ்வளவு ஸுலபமாக மனதில் ஆழமாகப் பதியும் உபமானங்கள்.
    கோபாலா,கோவிந்தா பெயர் சூட்டிய புதிய பாணி.
    பெரியவருக்கு நிகர் பெரியவாளேதான்.
    சங்கடஹர சதுர்த்தி நினைத்தால் ,செய்தால் பயன் தரும் விரதம்.
    மிகவும் உபயோகமான பதிவு. படித்து மனதிலிருத்தவேண்டிய விஷயங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல் மூடி மூடி வைத்தால் அது சிரங்காகி விடும். //

    ஆமாம். ‘பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்’ என்பது பழமொழி.

    உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.//

    பொய் சொல்ல அதீத ஞாபக சக்தி தேவை. ஏன்னா சொன்ன பொய்யை ஞாபகம் வெச்சுக்கணுமே. உண்மை ஒன்று தானே இருக்க முடியும். அதனால் பொய் சொல்லாமல் இருப்பதே உத்தமம்.

    சங்கட ஹர சதுர்த்தி பற்றிய விளக்கங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  12. வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். சின்ன சின்ன வேலைகளை சொல்லி அவர்கள் மனஸில் நம்பிக்கையை, பக்தியை ஊட்ட வேண்டும்.//

    உண்மைதான். சிறு வயதிலேயே பழக்கினால் தான் அது வழக்கமாய் மாறும்.


    குழந்தைகளுக்கு பெயர் வைத்த காட்சி கண்முன்னே அப்படியே விரிந்து காட்சி அளித்தது. கோபாலா, கோவிந்தா என்ற பெய்ர்கள் மிக அருமை. எப்போதும் பகவத்நாமம், குருசிந்தனையுடன் வளர்க்க பட்ட குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்.

    //குழந்தைகளை மஹான்களின் சன்னதிக்கு அடிக்கடி அழைத்துக் கொண்டு போகவேண்டும். //

    பெரியவர்கள், மஹான்களின் ஆசி நல்ல பழக்க வழக்கங்களுடன் நல்ல குழந்தைகளாய் இந்த சமுதாயத்தில் வாழ வழி வகுக்கும் என்பது உண்மைதான்.

    கோபாலன், கோவிந்தனுக்குபெரியவா அவர்களின் ஆசியும் வெகு சிறப்பாய் சேர்ந்து கொண்டது.அவர்கள் நல்ல குழந்தைகளாய் வாழ்வார்கள் என்பது உண்மை.

    சங்கடசதுர்த்திப்பற்றிய அழகான விரிவான விளக்கம் அருமை. பிரசாதங்கள் படங்கள்,குழந்தை, கணபதி படம் எல்லாம் அழகு.
    சங்கடங்களை போக்கி இன்னல்களை அகற்றும் விரதமகிமை தந்தமைக்கு நன்றி.

    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு

  13. பொய் பொறாமை இவற்றை மூடி மறைத்தால் சிரங்கு ஆகிவிடும். எளிய வார்த்தைகளில் உபதேசங்கள். பகிர்வுக்கு பாராட்டுக்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  14. //நம்மை நாமே கெடுத்துக் கொள்வதைத்தவிர, பொறாமையால் வேறு எந்த விதப்பயனும் இல்லை.//

    அமுதமொழி இனிக்கிறது.

    கோபாலனும் கோவிந்தனும் புண்ணியசாலிகள்..

    பதிலளிநீக்கு
  15. அனைத்து ஸங்கடங்களும் [இன்னல்களும்] விலகும் நாளைய
    மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் ஒரு வருடம்
    சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுசரித்த பலன் கிடைக்கச்செய்ய்யும்
    மஹா பாக்யமான நாள் நாளைக்கு வருகிறது ..

    பதிலளிநீக்கு
  16. கோபாலனும் கோவிந்தனும் குழந்தைகள் பிறந்ததுமே, பெரியவாளுடைய பாதங்களை தஞ்சம் அடைந்து, அவராலேயே பெயர் சூட்டப்பெற்றது அவர்களுடைய பரம பாக்யம்!
    அஹோபாக்யம் ..அஹோபாக்யம் ..!

    பதிலளிநீக்கு
  17. கோபாலன், கோவிந்தன். ரெண்டு கொழந்தைகளுக்கும் பேர் !
    க்ஷேமமா இருங்கோ”

    மஹா பெரியவா ஆசிர்வதித்த இரு குழந்தைகளும் கருவிலே திருவுடையவர்கள்..
    அனுக்ரஹ அமுத மழையில் நனைந்த புண்ணிய சாலிகள்..!

    பதிலளிநீக்கு
  18. /// நம்மை நாமே கெடுத்துக் கொள்வதைத்தவிர, பொறாமையால் வேறு எந்த விதப்பயனும் இல்லை./// உண்மை....

    பதிலளிநீக்கு
  19. மனம் சிலிர்க்கிறது! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  20. அந்தக்காலத்திலே குழந்தைகளுக்கு பகவன் நாமாவை பெயராக
    வைப்பதற்கே அந்த பகவன் நாமாவை திரும்ப திரும்ப சொல்ல
    வாய்ப்பு கிடைக்குமே ..

    கோவிந்தா. கோபாலா...
    நாராயணா...
    வெங்கடேசா.

    இன்னிக்கு பகவன் நாமாவை இறைஞ்சு சொல்ல
    முடிஞ்சது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  21. அமுதமொழி அருமை.

    குழந்தைகளுக்கு பெயர் வைத்த விதம் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  22. தப்பை மூடி மறைத்தால், அது பொய் என சிரங்காகி விடுகிறது.
    உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.//
    உண்மை!இரட்டைக் குழந்தைகள் பாக்கியசாலிகள்!ஆன்மிகத் தகவல்கள் அனைத்தும் அருமை!
    பகிர்விற்கு நன்றி ஐயா!


    பதிலளிநீக்கு
  23. மஹா பெரியவர் பிள்ளைக்கு பெயர்
    சூட்டிய விதமும் அதைத் தாங்கள்
    சொல்லிப் போனவிதம்
    மனம் கவர்ந்தது,மிக்க நன்றி

    சங்கட ஹர சதுர்த்திக் குறித்து
    அறியாதன எல்லாம் அறிந்தேன்
    விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  24. பொய் பொறாமை இவற்றை மூடி மறைத்தால் சிரங்கு ஆகிவிடும். எளிய வார்த்தைகளில் உபதேசங்கள்.நன்றி

    பதிலளிநீக்கு
  25. தப்பை மூடி மறைத்தால், அது பொய் என சிரங்காகி விடுகிறது.
    உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.

    Nijamthaan.

    Amuthamazhai thodarattum! Naangal santhoshamaaga nanaigirom!

    பதிலளிநீக்கு
  26. கோபாலன் கோவிந்தன் இருவரும் அதிர்ஷ்டம் வாய்த்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

    சங்கடஹர சதுர்த்தசி பற்றிய தெரியாத விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  27. பெரியவரின் அருளுரைகளோடு சங்கடஹர சதுர்த்தி பற்றிய தகவல்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  28. சங்கடஹர சதுர்த்தியன்று அதைப் பற்றிப்படித்து நிறைய தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி வை.கோ.சார்.

    குழந்தைகளுக்குப் பெயர்வைக்க பெரியவர் கையாண்ட டெக்னிக் வியக்கவைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. //உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.//

    அதுதான் நானும் சின்ன வயதில் படித்த ஒரு கதை மனதில் பதிந்துபோனது.. “களவெடுத்தாலும் பொய் சொல்லாதே”.. என்று ஒரு கதை.

    பதிலளிநீக்கு
  30. எனக்கொரு சந்தேகம் கோபு அண்ணன்.. ஏன் மோதகம் , கொழுக்கட்டை எனப் பெயர் வந்தது.. அதை இரண்டையுமே ஏன் பிள்ளையாருக்கு கொடுக்க வேண்டும்?. இரண்டுகும் வடிவம் தானே மாறுபடுது, மற்றபடி வெளி, உளுடன் எல்லாமே ஒன்றுதானே?.. இதுக்கு நீங்க பதிலளித்தே ஆகோணும் இங்கின.. இல்லையெனில் வேதாளம் பழையபடி முருங்கில் ஏறிடும்..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira August 24, 2013 at 2:32 PM

      அன்புள்ள அதிரா,

      வாங்கோ, வணக்கம்.

      //எனக்கொரு சந்தேகம் கோபு அண்ணன்.. ஏன் மோதகம் , கொழுக்கட்டை எனப் பெயர் வந்தது.. அதை இரண்டையுமே ஏன் பிள்ளையாருக்கு கொடுக்க வேண்டும்?. இரண்டுகும் வடிவம் தானே மாறுபடுது, மற்றபடி வெளி, உள்ளுடன் எல்லாமே ஒன்றுதானே?.. இதுக்கு நீங்க பதிலளித்தே ஆகோணும் இங்கின.. இல்லையெனில் வேதாளம் பழையபடி முருங்கில் ஏறிடும்..:)//

      மோதகம் என்றாலும் கொழுக்கட்டை என்றாலும் இரண்டுமே ஒன்று தான், அதிரா. ‘மோதகம்’ என்பது சம்ஸ்கிருதச் [Sanskrit] சொல். கொழுக்கட்டை என்பது தமிழ்ச்சொல். அவ்வளவு தான் இதில் உள்ள வேறுபாடுகள்.

      இந்த ‘மோதகம்’ அல்லது கொழுக்கட்டையில் இரண்டு விதங்கள் உண்டு. அவற்றையும் நான் இங்கு விளக்கி விடுகிறேன்.

      நான் 2011 மார்ச்சில் எழுதிய சிறுகதைத்தொடர் ஒன்று உள்ளது. அதில் மொத்தம் எட்டு பகுதிகள். முழுநீள நகைச்சுவைக்கதை. அதிராவைப்போன்ற அறிவாளிகளால் மட்டுமே நன்கு ரஸிக்க முடியும். உங்கள் தோழியும் என் கதைகளின் பரம ரஸிகையும் ஆன அஞ்சு, படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்த கதை.

      முதல் பகுதியைப்படிக்க ஆரம்பித்தால் கதையை முழுவதும் படிக்காமல் எழுந்திருக்கவே வாய்ப்பு இல்லை.

      அந்தக்கதையின் பகுதி-5 இல் இந்தக்கொழுக்கட்டை முக்கிய இடம் பெறுகிறது. அதற்கான இணைப்பு இதோ:

      அதை மட்டுமாவது படிச்சுட்டு கருத்துச்சொல்லுங்கோ.

      http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html

      முடிந்தால் 8 பகுதிகளையும் படிச்சுட்டு கமெண்ட் கொடுங்கோ.


      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> அதிரா [2]

      இந்த ‘மோதகம்’ அல்லது கொழுக்கட்டையில் இரண்டு விதங்கள் உண்டு. அவற்றையும் நான் இங்கு விளக்கி விடுகிறேன்.

      1. சாதாரண அரிசி மாவில் செய்யப்படும் மோதகம் அல்லது கொழுக்கட்டை. இது இடதுபுற படத்தில் காட்டியுள்ளது போல இருக்கும். இது, செய்யப்பட்ட அதே நாளில் அல்லது அடுத்த நாளாவது தின்று தீர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஊசிப்போய்விடும். வீணாகிவிடும்.

      2. கோதுமை மாவில் செய்து, நல்ல புதிய ஒரிஜினல் நெய்யில், பொறித்து எடுக்கப்படுபவை. நெய் மோதகம் அல்லது நெய்க்கொழுக்கட்டை என்று பெயர். இது ஒரு வாரம் ஆனாலும் கெடாது. சாப்பிடவும் மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும்.

      க்ருஹப்ப்ரவேசம் என்று சொல்லப்படும் ’புது மனைப்புகு விழா’வில், விடியற்கால வேளைகளில் செய்யப்படும், கணபதி ஹோமத்திற்கு, நைவேத்யமாக, முதல் நாள் சாயங்காலமே தலைமுழுகிக் குளித்துவிட்டு, சுத்தமாக, மடி ஆச்சாரமாக செய்து [யாரும் சாம்பிள் டேஸ்ட் பார்க்காமல்] தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்வது இந்த நெய்மோதகம் என்ற நெய்க்கொழுக்கட்டை மட்டுமே.

      குறைந்த பக்ஷமாக 21 எண்ணிக்கையும், அதிக பக்ஷமாக 108, 1008, 10008 என்ற எண்ணிக்கைகளிலும் இதை, அவரவர்கள் வசதிக்கு ஏற்ப வேண்டிக்கொண்டு, செய்வது உண்டு.

      உள்ளே வைக்கப்படும் முக்கிய சமாச்சாரமான தேங்காய்ப் பூர்ணம் என்பது இரண்டிலும் ஒன்று தான்.

      அதாவது நல்ல முற்றிய தேங்காய்த்துருவல் + நல்ல தித்திப்பான மண்டை வெல்லம் [பாகு வெல்லம்] + ஏலக்காய்ப் பொடி கலந்து வேக வைத்துக்கொள்வதே கொழுக்கட்டைக்கான பூரணம் என்பதாகும். அதிகமாக தண்ணீர் விடாமல் பாகு பதமாக கமர்கட் போல இழுத்த இழுப்புக்கு வருவது போல மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும், இதை.

      பச்சரிசி மாவை பதமாக வேகவைத்து எடுத்து, அதை உள்ளங்கை அளவுக்கு சின்னச்ச்சின்ன வட்டமாக மெலிதாக ஆக்குவார்கள். இதை கொழுக்கட்டைக்கு ’சொப்பு செய்தல்’ என்பார்கள்.

      அந்த சொப்புக்குள் இந்த்ப்பூர்ணத்தில் ஒர் ஸ்பூன் அளவு உள்ளே வைத்து, சுற்றிவர மாவால் மூடி, மூக்கு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு அதுபோல செய்தவற்றை இட்லி வேகவைக்கும் தட்டில் வைத்து, மீண்டும் வேக வைக்க வேண்டும். வெந்து முடிந்ததும் மாவு கொழுக்கட்டை ரெடி.

      இப்படித்தான் பெரும்பாலோனோர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி அன்று செய்வர்கள். மதியம் பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்து சாப்பிடுவார்கள்.

      இதே போல கோதுமைமாவில் சொப்பு செய்து, அதில் பூரணத்தை வைத்து, அழகாக மூக்கு வைத்து மூடியபின், நல்ல நெய்யில் பொறித்து எடுப்பது தான், நெய் கொழுக்கட்டை அல்லது நெய் மோதகம் என்பது.

      -=-=-=-

      ஊசிக்குறிப்பு:

      கொழுக்கட்டை பற்றி மேலும் ஓர் சிறுகதை வேடிக்கையாகச் சொல்வார்கள். “அத்ரிபட்சா கொழுக்கட்டை” என்பது அதன் தலைப்பு.

      அதையும் நேரம் இருந்தால் இங்கு எழுதி விடுகிறேன். ;)))))

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. கோபு >>>>> அதிரா [3]

      ”ஐ த் த ரி பச்சா” [கொழுக்கட்டைக்கதை]
      --------------------------------------------------------------

      இது நடந்து ஒரு 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

      இன்றுபோல போக்குவரத்து வ்சதிகளோ, தகவல் தொடர்பு வச்திகளோ இல்லாத வ்ழுவட்டையான காலம் அது.

      ஒரு கிராமத்தில் உள்ளவர் அடுத்துள்ள ஒரு கிராமத்திற்குச் செல்ல பெரும்பாலும் நடந்தே தான் செல்ல வேண்டியிருந்தது.

      பேருந்து வசதியோ கையில் பணப்புழக்கமோ யாரிடமும் கிடையாது.

      கிராமத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் ஓரிருவர் மட்டுமே, மாட்டு வண்டியோ அல்லது சைக்கிளோ வைத்திருப்பார்கள்.

      அது சமய்ம் ஒரு மாப்பிள்ளை, தன் கிராமத்திலிருந்து நெடுந்தூரம் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு தனியாக பல மைல்கள் நடந்தே செல்கிறார். மனைவி அவருடன் செல்லவில்லை.

      அபூர்வமாக வந்து நிற்கும் மாப்பிள்ளைக்கு, மாமியார் ஆசையுடன் கொழுக்கட்டை செய்து பரிமாறுகிறாள்.

      முதன்முதலாக மிகவும் ருசியான கொழுக்கட்டை சாப்பிட்ட அந்த மாப்பிள்ளைக்கு மிகவும் குஷியாகி விடுகிறது.

      மாப்பிள்ளை சற்றே ஞாபக மறதியுள்ளவர்.

      அதனால் மாமியார் வீட்டிலிருந்து தன் வீட்டுக்கு திரும்ப நடந்தே வரும் சமயம், தான் சாப்பிட்ட பலகாரத்தின் பெயரை மாமியாரிடம் கேட்டு தெரிந்து கொண்டு, ”கொழுக்கட்டை, கொழுக்கட்டை, கொழுக்கட்டை, கொழுக்கட்டை” என ஜபம் போலவாய்விட்டுச் சொல்லிக்கொண்டே தன் வீடு நோக்கி வருகிறார்.

      இடையில் ஓர் சிறிய வாய்க்கால் குறுக்கிடுகிறது.

      அதில் இறங்கி அதைத்தாண்டி அக்கரையிலிருந்து இக்கரைக்கு நடந்து வரும்போது, சிறுவர்கள் சிலர் ஒவ்வொருவராக “ஐத்தரிசி பச்சா” எனச்சொல்லிக்கொண்டே வாய்க்காலில் குளிக்க குதிக்கிறார்கள்..

      அதைக்கேட்ட இந்த மறதி மாப்பிள்ளை ’கொழுக்கட்டை’ என்று தான் இதுவரை சொல்லிக்கொண்டு வந்ததை சுத்தமாக மறந்துவிட்டு, ஐத்தரி பச்சா, ஐத்தரி பச்சா, ஐத்தரி பச்சா என மனனம் செய்துகொண்டே தன் வீட்டுக்கு வந்துவிடடார்.

      நேராக தன் மனைவியிடம் போய், “இன்று நம் வீட்டில் நீ “ஐத்தரி பச்சா” செய்ய வேண்டும், உடனே செய், சாப்பிட ஆசையாக உள்ளது” என்று வற்புருத்தினார்.

      அவர் மனைவிக்கு இந்த ஆள் என்ன சொல்கிறார் என்றே எதுவும் புரியவில்லை.

      திரும்பத்திரும்ப ’ஐத்தரி பச்சா’ என்பதையே கேட்டு, சலித்துப்போன அவள், தனக்கு அதைச்செய்யத்தெரியாதுங்க, என மறுத்து விடுகிறாள்.

      இதைக்கேட்டு கோபமடைந்த கணவன், உங்க அம்மா செய்து கொடுத்த ‘ஐத்தரி பச்சா’வை உன்னால் செய்ய முடியாதா? எனச்சொல்லி, நன்றாக அவளை அடித்து நொறுக்கி விடுகிறான்.

      முகமெல்லாம் நெற்றியெல்லாம் வீங்கி அவளுக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு விட்டன.

      அவளின் அலறலைக்கேட்டு பக்கத்து வீட்டுப்பாட்டி, ஓடி வந்தாள்.

      “என்ன ஆச்சுடி? உன் நெற்றியெல்லாம் கொழுக்கட்டை போல இப்படி வீங்கியுள்ளதே!” என்றாள்.

      இதைக்கேட்ட கணவனும்

      “அதே அதே, ’கொழுக்கட்டை’ தான் செய்துகொடுக்கச்சொன்னேன். இவள் தெரியாது, முடியாது என்று சொன்னதால் கோபத்தில் அடித்துவிட்டேன்”, என்றான்.

      எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. இப்படியாக ‘ஐத்தரிசி பச்சா” கொழுக்கட்டைக்கதை முடிகிறதூஊஊஊ.

      இந்தக் கதை அதிரடி அதிராவுக்காக மட்டுமே. முருங்கை மரத்தில் ஏறாதீங்கோ, அதிரா.

      அன்புடன் கோபு

      [ஊசிக்குறிப்பு: இந்தக்கதைக்கு தனியாக அதிரா கமெண்ட் எழுதணும். ஜொள்ளிட்டேன், ஜொள்ளிட்டேன்.... ;))))) ]

      நீக்கு
    4. அதிரா,

      இந்த ”ஐத்தரிபச்சா - கொழுக்கட்டை” கதையை நம் அஞ்சுவையும் தயவுசெய்து படிக்கச்சொல்லுங்கோ.

      VGK

      நீக்கு
    5. ஆவ்வ்வ்வ்வ்வ் இவ்ளோ பொறுமையா பதிலளித்தமைக்கு மியாவும் மியாவும் நன்றி கோபு அண்ணன்... அஞ்சுவுக்கு லெட்டர் எழுதி எங்க வீட்டு கேட்டுக்குப் பக்கத்தில இருக்கும் போஸ்ட் பொக்ஸில் போட்டுவிட்டேன்ன்.. அது எத்தனை நாளாகுமோ அஞ்சுவின் கைக்குக் கிடைக்க:))..

      நீக்கு
    6. வந்தேன் ..ஞாயிற்றுக்கிழமை கூட எங்க வீட்டுக்கு மட்டும் ஸ்பெஷல் போஸ்ட் இங்க்லன்ட்ல வந்தது அதிரா ஸ்டாம்ப் ஒட்டாம போஸ்ட் பண்ணிட்டாங்க அண்ணா .:)போஸ்ட்மான் எங்கிட்ட டபிள் தி அமவுண்ட் சார்ஜ் பண்ணிட்டார் :)))

      நீக்கு
    7. கொழுக்கட்டை கதை மற்றும் பெயர் விளக்கம் அருமை :))ஆனாலும் மறதில இப்படியா அடிப்பார் கணவர் :)) ..


      நீக்கு
    8. இந்தக் கதை அதிரடி அதிராவுக்காக மட்டுமே. முருங்கை மரத்தில் ஏறாதீங்கோ, அதிரா.///

      ஆஹா சூப்பர் கதை.. ரைம் ஒதுக்கி எழுதிட்டீங்க... இது கொஞ்சம் ஃபேமசான கதைதானே? அதனால் நானும் கேள்விப்பட்டதுண்டு..

      கொழுக்கட்டை செய்யும் முறைகள் அழகாக சொல்லியிருக்கிறீங்க.. நானாக எப்பவும் செய்ததில்லை, அம்மா செய்யும்போது, கோயிலில், நமது நேர்த்திக்காக எல்லாம் செய்து கொடுக்கும்போது நானும் கூடவே இருந்து கொழுக்கட்டை பின்னியிருக்கிறேன்:)).. எங்கள் ஊரில் அந்த வெளிக்கோதை கையில் வைத்து விரல்களால் கடகடவென சுற்றி எடுப்பதை பினுவது எனச் சொல்வது வழக்கம்.

      ஆனா இதைப் படிச்சதும் எனக்கும் செய்யோணும்போல ஆசையா இருக்கு, பார்ப்போம் முடிந்தால் நாளைக்கு தேங்காய் வாங்கினால் செய்யப்போகிறேன். என்னிடம் இப்போ இருப்பது டெசிகேட்டட் கோக்கனட்:)).

      அனைத்துக்கும் மிக்க நன்றி. நான் பழைய பின்னூட்டமே போடாமல் திண்டாடுறேன்ன்.. அதை முடிச்சுத்தான்.. இனி புதுசில கால் வைப்பனாக்கும்:).

      நீக்கு
    9. அது ஏதோ நினைவில ஒட்ட மறந்துட்டேன்ன்:)) அது டப்பா?:))..எவ்ளோ வந்தது அஞ்சு?:)) சொன்னால்... கோபு அண்ணன் அதை செட்டில் பண்ணிடுவார்ர்...:)) .

      நீக்கு
    10. athira August 25, 2013 at 7:43 AM

      அஞ்சுவை இங்கு அஞ்சாமல் [அதுவும் அஞ்சல் தலையே ஒட்டாமல்] அழைத்து வந்ததற்கு மிக்க நன்றி, அதிரா.

      அஞ்சுவை இங்கு மீண்டும் பார்த்ததில் அகம் மகிழ்ந்து போனேன்.

      //அது ஏதோ நினைவில ஒட்ட மறந்துட்டேன்ன்:)) அது டப்பா?:))..எவ்ளோ வந்தது அஞ்சு?:)) சொன்னால்... கோபு அண்ணன் அதை செட்டில் பண்ணிடுவார்ர்...:)) .//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! இதென்ன பிரமாதம்.
      அஞ்சுவும் அதிராவும் என் இரு கண்கள் போலல்லவா ! ;) ஒருவழியாக செட்டில் பண்ணக்கூடாது. ஜவ்வு மிட்டாய் போன்று நம் கொடுக்கல் வாங்கல் நீடிக்கோணுமாக்கும். ;)))))

      நீக்கு
    11. athira August 25, 2013 at 7:39 AM

      *****இந்தக் கதை அதிரடி அதிராவுக்காக மட்டுமே. முருங்கை மரத்தில் ஏறாதீங்கோ, அதிரா.*****

      //ஆஹா சூப்பர் கதை.. ரைம் ஒதுக்கி எழுதிட்டீங்க...//

      மிக்க நன்றி, அதிரா.

      //அம்மா செய்யும்போது, கோயிலில், நமது நேர்த்திக்காக எல்லாம் செய்து கொடுக்கும்போது நானும் கூடவே இருந்து கொழுக்கட்டை பின்னியிருக்கிறேன்:)).. //

      அதிராவை விட்டால், அந்தக்கொழுக்கட்டையை மட்டுமல்லாமல் அந்தத்தொந்திப் பிள்ளையாரையே பின்னிப்பெடல் எடுத்து விடுவாளாக்கும். ;)))))

      //அனைத்துக்கும் மிக்க நன்றி. நான் பழைய பின்னூட்டமே போடாமல் திண்டாடுறேன்ன்.. அதை முடிச்சுத்தான்.. இனி புதுசில கால் வைப்பனாக்கும்:).//

      அதிரா 1 to 32 & 37 onwards வந்து கருத்துச்சொல்லிடீங்கோ.

      இன்னும் நடுவில் நாலே நாலு தான் பாக்கி அதிரா.

      பகுதி-33, 34, 35 + 36 மட்டுமே பாக்கியுள்ளன.

      4*5 = 20 நிமிடங்கள் உடனே ஒதுக்குங்கோ போதும்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  31. பொய்யும் பொறாமையும் உள்ளத்தை கெடுத்துவிடும்.

    சங்கடஹர சதுர்த்தி பற்றி நல்லவிளக்கம் கொடுத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. பெரியவா கர்கரோ இல்லையோ, ஆனால் அமுக்கமாக அழகாக நாடகம் நடத்தி, பக்தர்களை குதூகலப்படுத்துவதில் நிச்சயம் கிருஷ்ணன்தான் ! அவருடைய சங்கல்பத்தால் உடனே அங்கே ஒரு நாடகமேடை தயாராகியது.


    ரசமான நாடகம்.. பக்திக் கனி பழுத்து கையில் விழுந்தது !

    பதிலளிநீக்கு
  33. Aha!!!!!!
    Periyavas karunai....
    Very nice write about sankata charurthi pooja..
    Ayooooo!!!!!!
    seriyana atharipacha kolakattai kadai.....
    Thanks...
    I enjoyed the story well....
    viji

    பதிலளிநீக்கு
  34. அத்திரி பச்சா! கொழுக்கட்டைக் கதை இன்னொண்ணும் உண்டே! அம்மா அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி! னு! :)))

    குழந்தைகளைப் பழக்குவது குறித்துச் சொன்னவை அனைத்தும் சரியானவையே! நல்லதொரு பகிர்வு. இந்தப் பெயர் வைக்கும் பதிவை ஏற்கெனவே படிச்சிருக்கேன்.:))

    மஹாபெரியவாள் இதே போல் என் இனிய நண்பர் ஒருத்தருக்கும் பெயர் வைச்சிருக்கார். கருவிலேயே இருக்கையில்! அவர் சொன்னதுக்கேற்ப என் நண்பர் பிறந்ததும், அவருக்குச் சந்திரமெளலி என்று பெயர் வைக்கப்பட்டது. மதுரையம்பதி என்னும் பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். இப்போது ஓரிரண்டு வருடங்களாக எழுதுவதில்லை. :))))

    பதிலளிநீக்கு
  35. //http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0704gs_pillaiyar.php//

    பிள்ளையார் குறித்த அனைத்துத் தகவல்களையும் மேற்கண்ட சுட்டியில் காணலாம். :)) சின்ன விளம்பரந்தேன்! :))))

    பதிலளிநீக்கு
  36. //வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். சின்ன சின்ன வேலைகளை சொல்லி அவர்கள் மனஸில் நம்பிக்கையை, பக்தியை ஊட்ட வேண்டும்.

    //
    - விநாயகர் சதுர்த்தி அன்று எங்க அச்சு குட்டிதான் பிள்ளையாரை அழகா டெகரேஷன் பண்ணும்...

    பதிலளிநீக்கு
  37. குழந்தை வளர்ப்பு பற்றி அருமையான விளக்கம் ..கோபாலும் கோவிந்தும் ஆசிர்வதிக்கப்பட்ட பிள்ளைகள் ..பகிர்வுக்கு நன்றியண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Cherub Crafts August 25, 2013 at 7:29 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம். செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? பாவம் உங்களை டிஸ்டர்ப் செய்து, எனக்காக அதிரா அழைச்சுட்டு வந்துட்டாங்கோ. ஸாரி ..... நிர்மலா.

      //குழந்தை வளர்ப்பு பற்றி அருமையான விளக்கம் ..கோபாலும் கோவிந்தும் ஆசிர்வதிக்கப்பட்ட பிள்ளைகள் ..பகிர்வுக்கு நன்றியண்ணா//

      சந்தோஷம் நிர்மலா.

      Cherub Crafts August 25, 2013 at 7:32 AM

      //கொழுக்கட்டை கதை மற்றும் பெயர் விளக்கம் அருமை :))ஆனாலும் மறதில இப்படியா அடிப்பார் கணவர் :)) .//

      இது, நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. இப்போது அடித்தால் அந்த ஆள் காலி ..... ;)

      “அழகுப்பெண்களின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்”ன்னு அந்தக்கணவன் பாட்டுப்பாடிக் கொண்டே அடி வாங்கிக்கொள்ள வேண்டும், பூரிக்கட்டையால். ;)

      Cherub Crafts August 25, 2013 at 7:27 AM

      //வந்தேன் .. ஞாயிற்றுக்கிழமை கூட எங்க வீட்டுக்கு மட்டும் ஸ்பெஷல் போஸ்ட் இங்க்லன்ட்ல வந்தது அதிரா ஸ்டாம்ப் ஒட்டாம போஸ்ட் பண்ணிட்டாங்க அண்ணா .:)போஸ்ட்மான் எங்கிட்ட டபிள் தி அமவுண்ட் சார்ஜ் பண்ணிட்டார் :)))//

      ;))))))
      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், நிர்மலா.

      நீக்கு
  38. Information about sankadahara chathurthi is very nice and excellent. Thank you very much for sharing it with us sir...

    பதிலளிநீக்கு
  39. //உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.//

    பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த இவ்வுலகில் இது தேவையான அமுத வாக்கு.....

    சங்கட ஹர சதுர்த்தி பற்றிய தகவல்கள் நன்று. தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  40. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதிலும் ஒரு லீலையா?

    பதிலளிநீக்கு
  41. கோபாலா கோவிந்தா பெயர் வைத்த விதம் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  42. ஐத்தரி பச்சா கத ஒரே சிரிப்பாணி பொத்துகிச்சி. கோவிந்தா கோபால பேரு வச்ச விதம் நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  43. அந்தக்குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். பெரியவா வாயால பேர் கிடைப்பதுன்னா சும்மவா.கொழுக்கட்டை கதை ஏற்கனவே கேள்விபட்டதுதான். எப்ப கேட்டாலும் சிரிக்க வைக்கும் கதை.

    பதிலளிநீக்கு
  44. நம்மை நாமே கெடுத்துக் கொள்வதைத்தவிர, பொறாமையால் வேறு எந்த விதப்பயனும் இல்லை./// முற்றிலும் சரி...நடைமுறையிலும் கண்கூடுதான்...

    பதிலளிநீக்கு
  45. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (16.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=415269278975772

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு