என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கத்தி (ப் ) பேசினால் [TRIAL] சோதனை வெளியீடு

கத்தி (ப் ) பேசினால்:
=========================

காய்கறி பழங்களை நறுக்கும் பொழுது
என் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்
தின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் !

கவனக்குறைவாக இருக்கும் பொழுது
இவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு !!

ஆக்கபூர்வமாகவும் செயல் படுவேன் !
அதே சமயம் அழிக்கவும் பயன் படுவேன் !!

என்னைக் கையாள்பவர் செயல்படியே தான்
எப்போதும் என் இயக்கமும் !

சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து
கொம்பு சீவி விடுகிறார்கள் !!

பல நேரம் வாய் ஓயாமல்
கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
மௌனமாக இருக்கும் எனக்கு
வைத்துள்ள பெயரோ "கத்தி" !!