2
ஸ்ரீராமஜயம்
சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை ‘செக்யூலரிஸம்’ என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது.
இந்த ‘செக்யூலரிஸம்’ என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
இது சரியான கருத்தல்ல என்று எடுத்துக்காட்டி, ‘செக்யூலரிஸம்’ என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது.
தற்போது எண்ணுவதுபோல, அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து இல்லாமல், அதாவது மதத்தொடர்பே அற்று இருப்பதால், இதைச் சொல்ல வேண்டியுள்ளது.
மாறாக ’செக்யூலரிஸம்’ என்பது, ’அதாவது அரசாங்கமானது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே’ என்பது தான் சரியான பொருள்.
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி, சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘செக்யூலரிஸம்’ ஆகும்.
oooooOooooo
பெரியவாளும் ஆங்கிலமும்
மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.
அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது. நூறு வருடத்துக்கு முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக ஆங்கிலத்தில் உரையாடுவார்.
ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம் சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங் செக்ஷன் வந்தது.
அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப் பிரயத்தனப் பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை. ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே என்று நினைத்தார்.
அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப் பிரயத்தனப் பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை. ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே என்று நினைத்தார்.
"ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!" என்று பெரியவர் சொல்ல... பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.
'இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே.. இவருக்கு போய் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேனே!' என்று வெட்கினார்.
இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.
"இப்போ எதில் இருக்கே?" என்று கேட்கிறார் பெரியவர்.
அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு, "அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!" என்றார்.
"Computer Stationery -தானே நீ சொன்னது?" என்று பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.
எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழம் கண்டவராயிற்றே!
[Thanks to Amritha Vahini]
oooooOooooo
பெரியவாளின் ஞாபகசக்தி
தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மஹான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.
இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மஹான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது ஓய்வு நேரத்தில், மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மஹானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிறார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?
.........
சில தினங்களில் மஹான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார்.
இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மஹான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபாலகிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்தபின், இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்தபின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.
தீர்த்தம் கொடுக்கும் முன், மஹான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுருக்கி இவரைப் பார்த்தார்.
எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகாரி, “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க, மஹான் புன்முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து, “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.
இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்துவிட்டது என்றாலும், அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கைதூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால், ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
[Thanks to Amritha Vahini 26 09 2013]
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்