என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

51] அறிவு வளர்ச்சி + ஆத்ம முன்னேற்றம்

2
ஸ்ரீராமஜயம்


பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும்.  

பிற உயிரைத் தன்னுயிர்போல மதிக்க வேண்டும். 

உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும். 

சமூக சச்சரவுகள், வகுப்புச் சசரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். எல்லோருமே நன்றாக வாழவேண்டும் என ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். 

ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும் ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். 

வெற்றிக்கெல்லாம் புத்தியும், சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். 

நீத்தார் காரியங்கள் செய்வதில் ஸ்ரத்தை வேண்டும். 

பக்தியோடு செய்வது யக்ஞம். 

சிரத்தையோடு செய்வது ஸ்ராத்தம்.


oooooOooooo

ஓர் சிறிய சம்பவம்ஒரு சமயம் மஹா பெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மஹானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண், தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராம்மணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். 

அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மஹான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்: ”நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்” என்றார்.

மஹானின் உத்தரவுக்கு மறுப்பேது ?

அதேபோல் அவர்கள் இரண்டுமாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், அங்கிருந்த மஹானிடம் நேரில் வந்து எல்லாமே சரியானதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

அப்போது அவர் அவர்களிடம் சொன்னார்:

“நீங்கள் எல்லாம் ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை விட்டதால் வந்த கோளாறு” என்று சொல்லியபின் ’காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது’ என்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்.

oooooOooooo

மற்றொரு  சம்பவம்

நாரங்க பலம் vs ஷட்பஞ்ச பலம் 
எண்ணூர் அருகே கார்வேட் நகர் என்று ஓரிடம். அங்கு நவராத்திரி பூஜை. அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர் போய் அங்கிருந்து போட்டில் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். தனிமையான இடம், ஒரு பெரிய வனாந்திரம் மாதிரி, இயற்கையின் எழில் கொஞ்சும். 

பெரியவா அந்த நவராத்திரியில் காஷ்ட மௌனமாயிருந்தார். அதாவது ஒன்பது நாளும் உபவாசம். கூடவே மௌனம். சைகையால் கூட விருப்பத்தை வெளியிடமாட்டார். நாங்கள் தரிசனத்துக்காக அங்கு சென்றிருந்தோம்.

அப்போது, பெரியவா ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டிருந்தா. அன்றுதான் ஒன்பது நாள் மௌன விரதத்தை கலைத்தார். எங்கள் அருகாமையில் ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா என்ற பிரவசனம் செய்பவர்களும், ஒரு வருமானவரி துறையில் உள்ள முக்கிய நபரும் அமர்ந்திருந்தார்கள்.

பெரியவா சிரிச்சுண்டே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவைப் பார்த்து ”உனக்கு மாதம் எவ்வளவு வருமானம் வரும்” என்று கேட்டார்.

“சுமார் ரூ 300/- வரை வரும்”.

“நீ கடன் வாங்குவியா?”  .

“அப்பப்போ ரூ 10, 20ன்னு வாங்குவேன்”

உடனே அருகிலிருந்த வருமானவரி ஆபிசரை நோக்கி, “உனக்கு எவ்வளவு சம்பளம்?” என்று கேட்டார்

“ரூ 10,000/- வரும். அதுவும் போராததால் அப்பப்போ ரூ 3000/- கடன் வாங்குவேன். குடும்பத்துலே இது சகஜம் தானே” என்றார்.

“எவ்வளவு  இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நம் தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோம். போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும்” என்று உபதேசித்தார்.

பேசிக்கொண்டே, கையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்தார். பெரியவா தோலை தன் கையிலேயே வைத்துக்கொண்டு பழத்தை வருமானவரி ஆபிஸரிடம் கொடுத்தார்.

கொடுத்ததோடு இல்லாமல், “அதில் எத்தனை சுளை இருக்கு?” என்று கேட்டார்.

அந்த ஆபிஸர் அந்த பழத்தை இரு பிளவாக செய்து “எண்ணி 6 + 5 மொத்தம் 11” என்று சொன்னார்.

பெரியவா கேட்டார், “இந்த பழத்தை ’ஷட் பஞ்ச பலம்’ (ஷட் = 6 , பஞ்ச = 5) என்று சொல்லலாம் இல்லியா? என்றார்.

உடனே ஸ்ரீ ராமமூர்த்தி சர்மாவும், வருமானவரி ஆபிஸரும் எழுந்து கீழே விழுந்து நமஸ்காரம் செய்தனர். எனக்கோ ஒன்னும் புரியவில்லை.

ஸ்ரீ ராமமூர்த்தி சர்மா தான், அந்த வருமானவரி ஆபிஸர் வீட்டுக்கு புரோஹிதம் செய்வது வழக்கம். ஒரு சமயம் அவசரத்தில்  ஆரஞ்சு பழத்துக்கு சமஸ்கிருதத்தில் நாரங்க பலம் என்பதற்கு பதிலாக ஷட்பஞ்ச பலம் என்று சொல்லி விட்டதால், அதிகாரியிடம் வசை வாங்கிக் கட்டிண்டார். 

அது வேதவாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார் என புரிந்தது. 

பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.

[Thanks to Sage of Kanchi 9.9.2013]


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

56 கருத்துகள்:

 1. ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும் ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும்.

  வெற்றிக்கெல்லாம் புத்தியும், சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

  நீத்தார் காரியங்கள் செய்வதில் ஸ்ரத்தை வேண்டும்.

  பக்தியோடு செய்வது யக்ஞம்.

  சிரத்தையோடு செய்வது ஸ்ரார்த்தம்.

  புத்தியும் சக்தியும் தரும் வழிமுறைகளை அருமையாக விளக்கிய பகிட்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 2. ’காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது’ என்பதை அருமையாக விளக்கிய சம்பவம் நிறைவளித்தது..!

  பதிலளிநீக்கு
 3. மஹாபெரியவாளின் அற்புதங்கள் தொடரட்டும். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 4. இந்த பழத்தை ’ஷட் பஞ்ச பலம்’ (ஷட் = 6 , பஞ்ச = 5) என்று சொல்லலாம் இல்லியா? என்றார்.

  அழகான விளக்கம் ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி
   September 17, 2013 at 3:19 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //இந்த பழத்தை ’ஷட் பஞ்ச பலம்’ (ஷட் = 6 , பஞ்ச = 5) என்று சொல்லலாம் இல்லியா? என்றார்.

   அழகான விளக்கம் ..!//

   பெரும்பாலும் சாத்துக்குடி, கமலாரஞ்சு போன்ற ஆரஞ்சுப்பழங்களில் 11 சுளைககளே உள்ளன.

   அதன் மேல் தோலை உரித்து விட்டு, பழத்தை இரண்டாகப்புட்டால், ஆறு சுளையும் ஐந்து சுளையுமாகவே பிரிந்து வருகிறது.

   இந்த ஆறும் + ஐந்தும் சேர்ந்து “ஆறு அஞ்சு” என்று இந்தப்பழம் தமிழில் சொல்லப்பட்டு, பிறகு அதுவே ஆரஞ்சு என்று நாளடைவில் பேச்சு வழக்கில் வந்திருக்கலாம் என என் ஆராய்ச்சியில் ஆச்சர்யப்பட்டு, இதை நான் பலரிடமும் சொல்லி மகிழ்வது உண்டு.

   இவ்விதமாக ஆரஞ்சு என்ற பெயர் முதன்முதலாகத் தமிழிலிருந்தே கிளம்பியிருக்கும். அதுவே தான் பிறகு ஆங்கிலத்தில் ORANGE ஆகியிருக்கும்.

   -=- இதே போல மற்றொன்று -=-

   ’அடியாத்தாமங்களம்’ என்று ஓர் ரெயில்வே ஸ்டேஷன் தமிழ்நாட்டில் உள்ளது.

   இந்தியாவில் வெள்ளைக்காரர்கள் ஒவ்வொரு ரெயில்வே ஸ்டேஷனுக்கும் அந்தந்த ஊர் பெயர்களை அங்குள்ள மக்களைக் கேட்டுக்கேட்டு வைத்தார்களாம்.

   அவ்வாறு அவர்கள் பெயரிட வரும்போது ஓர் கிராமத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள விவசாயக்கூலி வேலை செய்யும், படிப்பறிவு அதிகம் இல்லாத, பெண்களிடம் அந்த ஊரின் பெயர் என்ன என ஆங்கிலத்தில் கேட்டுள்ளனர்.

   அந்த வெள்ளைக்காரதுரைமார்கள் என்ன கேட்கிறார்கள் என்பதே அங்குள்ள பெண்களுக்குப் பாவம் புரியவில்லை.

   அந்தப்பெண்களில் சற்றே படித்த மங்களம் என்பவள் சற்று தள்ளி நடவு நட்டுக்கொண்டிருந்தாளாம்.

   அவளை உரத்த குரலில் ”அடி ஆத்தா மங்களம், இங்க கொஞ்சம் வாயேன், இவனுங்க ஏதோ கேட்கிறார்கள், ஒரு எழவும் புரியலேடி” என்று கத்தி, இங்குள்ள பெண்கள் அழைத்துள்ளனர்.

   உடனே வந்த வெள்ளைக்காரர்கள் ‘அடி ஆத்தா மங்களம்’ எனக்குறித்துக்கொண்டு சென்று விட்டனர்.

   அதுவே அந்த ஸ்டேஷனுக்கு பெயராகிப்போனது.

   பெயர் பலகையும் வைத்து விட்டார்கள்.

   இதுவும் என் ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது. ;)))))

   -oOo-

   நீக்கு
  2. ஹா..ஹா..ஹா... சூப்பர் பெயராக இருக்கே... வெள்ளைக்காரர் சொன்னால் வைப்பார்கள்.. நாம் சொன்னால்ல்.. சிலைதான்னாக்கும்:))

   நீக்கு
 5. வேதவாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார் என புரிந்தது.

  பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.

  அமுத மழையாய்
  அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 6. நன்நெறி உணர்த்தும் அற்புத படைப்பு ! வணகுகின்றேன் ஐயா .போதும் என்ற மனமே பொன் செய்த மனம் .பிறரைப் பழிப்பவர் தன்னை அறியாதவர் .அகத்தூய்மை ஒன்றே ஆண்டவனைக் காண வழி செய்யும் .இறைவனில்லை என்றார்க்கு இவ்வுலகம் இல்லை .அறநெறி தவறியவர்க்கோ எவ்வுலமுமில்லை !! தில்லைக் கூற்றன்
  திருவருளால் நீங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன் .

  பதிலளிநீக்கு
 7. தலைப்பும் அதற்கு ஈடான சம்பங்களையும் சொல்லிச்சென்ற விதம் சிறப்புங்க ஐயா.

  பதிலளிநீக்கு
 8. ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும் ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும்.

  வெற்றிக்கெல்லாம் புத்தியும், சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

  நீத்தார் காரியங்கள் செய்வதில் ஸ்ரத்தை வேண்டும்.

  பக்தியோடு செய்வது யக்ஞம்.

  சிரத்தையோடு செய்வது ஸ்ரார்த்தம்.//

  வாழ்வில் ஒவ்வொருவரும் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய நல்ல விஷயங்கள்.
  நன்றி.

  காயத்ரி மந்திரத்தின் சக்தி பற்றிய விளக்கம் அருமை.
  நம் கடமைகளை சரிவரச்செய்தால் நன்மையே நடக்கும் என்று எவ்வளவு அழகாய் சொல்லி விட்டார்!

  //எவ்வளவு இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நம் தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோம். போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும்” //

  குருவின் உபதேசம் மிக அருமை.

  // வேதவாக்கு பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை பெரியவா நடத்தியிருக்கிறார் என புரிந்தது.//

  நல்ல திருவிளையாடல்.

  ஆத்ம முன்னேற்றம் பெற நீங்கள் தொகுத்து அளித்த குருவின் அற்புதங்களுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. காயத்ரி மந்திரத்தின் பலன் நாங்களும் அறிந்தோம்.
  யார் மனதையும் புண்படுத்தாமல், தெரிவிக்க வேண்டியவர்களுக்கு சூக்ஷ்மமாக பெரியாவா தெரிவிக்கும் பாங்கே அலாதி!

  பதிலளிநீக்கு
 10. காயத்ரி மந்திரத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்திய - கருணைக் கடலின் திருவடிகள் போற்றி!..

  பதிலளிநீக்கு
 11. அருமையான கருத்துகள்...

  மஹாபெரியவாளின் அற்புதங்கள்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 12. படிக்கப் படிக்க சுவை கூடுகிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 13. காயத்ரியின் மஹிமை அளவிட முடியாதது. ஷட் பஞ்ச பலம் நிகழ்வு புதுசு. காயத்ரி நிகழ்வு பலமுறை படிச்சது. பகிர்வுக்கு நன்றி.

  ஒரு சின்ன விஷயம்

  ஸ்ரா"ர்"த்தம் தப்பு, ஸ்ராத்தம் தான் சரி. ஸ்ரத்தையோடு செய்வது ஸ்ராத்தம். சொன்னது தப்பானால் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam
   September 17, 2013 at 5:49 AM

   வாங்கோ வணக்கம்.

   //காயத்ரியின் மஹிமை அளவிட முடியாதது. ஷட் பஞ்ச பலம் நிகழ்வு புதுசு. காயத்ரி நிகழ்வு பலமுறை படிச்சது. பகிர்வுக்கு நன்றி.//

   சந்தோஷம். அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   //ஒரு சின்ன விஷயம்//

   சின்ன விஷயமே அல்ல.

   என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய விஷயம்.

   //ஸ்ரா"ர்"த்தம் தப்பு, ஸ்ராத்தம் தான் சரி. ஸ்ரத்தையோடு செய்வது ஸ்ராத்தம். //

   தாங்கள் சொல்வதுதான் சரி. நான் எழுதியது SPELLING தவறு தான். சுட்டிக்காட்டியதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   //சொன்னது தப்பானால் மன்னிக்கவும்.//

   அடடா, நீங்க என்னைவிட பெரியவா. நீங்க சொல்வது தான் சரி. இதில் தப்பேதும் கிடையாது. நீங்க தான் என்னை மன்னிக்கணும்.

   ஆனால் இந்த என் சிறிய எழுத்துப்பிழையினை நான் இன்று தான், முதன்முதலாக அதுவும் தங்கள் மூலம் புதிதாக கற்று உணர்ந்துள்ளேன். மிக்க மகிழ்ச்சி.

   இது சம்பந்தமாக ’வேத சாஸ்திரங்களைக் கற்றுள்ள’ COMPETENT AUTHORITIES களுடன் பேசி CONFIRM செய்து கொண்டுள்ளேன்.

   ”ஸ்ராத்தம்” என்பதே மிகச்சரி என்றும், ”ஸ்ரார்த்தம்” என்பது தவறு என்றும் சொல்லி விட்டார்கள்.

   கீதா மாமியோ கொக்கோ எனவும் நினைத்து மகிழ்ந்து கொண்டேன். ;)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 14. பதில்கள்
  1. Geetha Sambasivam
   September 17, 2013 at 5:49 AM

   பதிவிலும் ’சிரத்தையோடு செய்வது ஸ்ராத்தம்’ என என் எழுத்துப்பிழையை இப்போது சரி செய்துவிட்டேன்.

   இது தங்கள் தகவலுக்காக.

   நன்றியுடன் கோபு

   -=-=-=-

   [இதே போலத்தான் நிறைய பேர்கள்:

   ‘ஸ்ரீராமஜெயம்’ என எழுதுகிறார்கள். ’ஸ்ரீராமஜயம்’ என்று கொம்பு போடாமல் எழுதப்பட வேண்டுமாம்.

   அதுபோலவே ’வெங்கடாஜலபதி’ என சிலர் எழுதுகிறார்கள். அதுவும் தவறு தானாம்.

   ‘வேங்கடாசலபதி’ என்பதே சரியானது.

   ’வெ’ க்கு பதில் ’வே’ மற்றும் ‘ஜ’ க்குபதில் ’ச’ வரவேண்டும்.

   குணசீலம் பெருமாளை ‘ஸ்ரீ அலமேலுமங்கா ஸமேத ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி’ என்றே எழுத வேண்டும் / உச்சரிக்க வேண்டும்.

   ஆனால் குணசீலம் கோயில் தேவஸ்தானத்தில் விற்கப்படும் படங்களில்கூட தவறாக இதை ப்ரிண்ட் செய்துள்ளார்கள்.

   நாம் என்ன செய்ய ? ;(

   நீக்கு
 15. ஆணும் பெண்ணும்
  இணைந்த வடிவம்தான்
  மனித வடிவம்

  இதை குறிப்பிடுவதுதான் சிவபார்வதியின்
  அர்த்த நாரீஸ்வர வடிவம்.

  அதனால் இந்த உடலின் இடது பாகத்தில்
  சக்தியின் அம்சம் உள்ளது.

  அதுதான் நம் உடலின்
  அனைத்து இயக்கங்களையும்
  இயங்கவைக்கும் இதயம் உள்ளது.

  உடலில் உள்ள இந்த சக்திதான்
  காயத்ரீ என்றழைக்கப்படுகிறாள்.

  காயம் என்றால் உடல்
  ஸ்திரீ என்றால் இந்த உடலில் உள்ள சக்தி.

  மனிதர்களுக்கு உள்ளதுபோல்
  தெய்வங்களும் சக்தியின் உதவியால்தான் இயங்குகின்றன.

  அதனால்தான் சக்தியை
  உபாசனை செய்யவேண்டும்

  எதை செய்தாலும் ஈஸ்வரார்ப்பணமாக
  உலகநன்மை ஏற்ப்படும் பொருட்டு
  செய்யும் கடமை அந்தணர்களுக்கு விதிக்கப்பட்டது.

  அப்போது அவர்களுக்கு எந்த பாதிப்பும்
  வராமல் காக்க உதவுவது காயத்ரி மந்திரமே.

  அதனால்தான்
  தினமும் காயத்ரீ மந்திரத்தை உச்சரிக்கவேண்டும். என்று வலியுறுத்தப்படுகிறது.

  தினமும் காயத்ரி மந்திரத்தை
  ஜெபிப்பவர்களை எந்த
  தீய சக்திகளும் அணுகமுடியாது.

  எந்த நோயும் அணுகாது.
  ஆன்ம சக்தி பெருகும்.
  அஞ்ஞானம் நீங்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Pattabi Raman September 17, 2013 at 6:45 AM

   வாங்கோ அண்ணா, வாங்கோ. நமஸ்காரங்கள்.

   //ஆணும் பெண்ணும் இணைந்த வடிவம்தான் மனித வடிவம்

   இதை குறிப்பிடுவதுதான் சிவபார்வதியின் அர்த்த நாரீஸ்வர வடிவம்.

   அதனால் இந்த உடலின் இடது பாகத்தில் சக்தியின் அம்சம் உள்ளது.

   அதுதான் நம் உடலின் அனைத்து இயக்கங்களையும் இயங்கவைக்கும் இதயம் உள்ளது.

   உடலில் உள்ள இந்த சக்திதான் காயத்ரீ என்றழைக்கப்படுகிறாள்.

   காயம் என்றால் உடல் ஸ்திரீ என்றால் இந்த உடலில் உள்ள சக்தி.

   மனிதர்களுக்கு உள்ளதுபோல் தெய்வங்களும் சக்தியின் உதவியால்தான் இயங்குகின்றன.

   அதனால்தான் சக்தியை உபாசனை செய்யவேண்டும்

   எதை செய்தாலும் ஈஸ்வரார்ப்பணமாக உலகநன்மை ஏற்படும் ருட்டு செய்யும் கடமை அந்தணர்களுக்கு விதிக்கப்பட்டது.

   அப்போது அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்க உதவுவது காயத்ரி மந்திரமே.

   அதனால்தான் தினமும் காயத்ரீ மந்திரத்தை உச்சரிக்கவேண்டும். என்று வலியுறுத்தப்படுகிறது.

   தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பவர்களை எந்த தீய சக்திகளும் அணுகமுடியாது.

   எந்த நோயும் அணுகாது. ஆன்ம சக்தி பெருகும். அஞ்ஞானம் நீங்கும். //

   மிக அருமையான விளக்கம் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். மனம் நிறைந்த அன்பு நன்றிகள். சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.

   காயத்ரி மந்திரத்தின் மஹிமைகளைப்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா நிறைய சொல்லியிருக்கிறார்கள். பக்கம் பக்கமாகப் படித்துள்ளேன். அவற்றில் சிலவற்றை மட்டும் [கடல் அளவிலிருந்து ஒரு உத்தரணி அளவு மட்டும்] நான் கீழ்க்கண்ட பதிவின் பின்னூட்டப்பகுதியில் ஓரளவு எழுதியுள்ளேன். தயவுசெய்து படித்துப்பாருங்கோ அண்ணா.

   http://jaghamani.blogspot.com/2013/08/blog-post.html

   சும்மாச் சின்னச்சின்னதாக ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ மட்டுமே என் கமெண்ட்ஸ் இருக்கும். அதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்னதில் கொஞ்சம் இருக்கும்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
  2. காயத்ரி மந்திரத்தை
   வேதங்களின் தாய் என்பார்கள்.

   ஓர் அறையில் இருட்டாக உள்ளது.
   விளக்கை ஏற்றினால் இருள் அகன்றுவிடும் என்று அனைவர்க்கும் தெரியும்.

   விளக்கை ஏற்றினால்
   இருள் அகன்றுவிடும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில்
   எந்த பயனும் இல்லை.

   விளக்கை ஏற்றி இருளை நீக்க
   முயற்சி செய்வதுபோல்
   மந்திரத்தை ஜெபிப்பதுதான் முக்கியம்.

   நம் உடலில் உள்ள காஸ் சிலிண்டெர்
   எப்போது நம்மை காலை வாரிவிடும்
   என்று யாருக்கும் தெரியாது.

   இந்த கணத்திலிருந்தே
   காயத்ரி மந்திரத்தை சிந்தனை
   செய்வதுதான் உய்யும் வழி.

   நீக்கு
  3. Pattabi RamanSeptember 17, 2013 at 8:36 AM

   வாங்கோ, மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

   //நம் உடலில் உள்ள காஸ் சிலிண்டெர்
   எப்போது நம்மை காலை வாரிவிடும்
   என்று யாருக்கும் தெரியாது.//

   மிகவும் அழகான நல்லதொரு உதாரணம். மிக்க நன்றி, அண்ணா.

   //இந்த கணத்திலிருந்தே காயத்ரி மந்திரத்தை சிந்தனை செய்வதுதான் உய்யும் வழி.//

   ததாஸ்து. அதே அதே ! ;)

   நீக்கு
 16. Aha Nice post. The comments are also so nice.
  ‘ஸ்ரீராமஜெயம்’ என எழுதுகிறார்கள். ’ஸ்ரீராமஜயம்’ என்று கொம்பு போடாமல் எழுதப்பட வேண்டுமாம்
  I learnt it. Will follow.
  காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது’
  Its so so correct and real.
  viji

  பதிலளிநீக்கு
 17. ஷட்பஞ்ச பலம்.... :) என்னே ஒரு மொழிப்புலமை....

  அமுதமொழிகளையும் நிகழ்வுகளையும் படித்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 18. // பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.//
  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. அழகிய தத்துவங்கள்..

  ஒவ்வொரு தத்துவ வரிக்கும் .. எனக்கு ஒவ்வொரு பதில் வருது வாயில்..:) ஆனா கஸ்டப்பட்டு எழுதாமல் அடக்கிடுறேன்ன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira September 17, 2013 at 9:43 AM

   வாங்கோ அதிரா, வாங்கோ வணக்கம். 50ஆவது பதிவுக்கு நீங்க வரவே இல்லை என கிளி என்னிடம் புகார் அறிக்கை அளித்துள்ளது.

   அதனால் உடனே பகுதி-50க்கு வருகை தந்து ஏதேனும் அள்ளித்தெளியுங்கோ, ப்ளீஸ்.

   //அழகிய தத்துவங்கள்..

   ஒவ்வொரு தத்துவ வரிக்கும் .. எனக்கு ஒவ்வொரு பதில் வருது வாயில்..:) ஆனா கஸ்டப்பட்டு எழுதாமல் அடக்கிடுறேன்ன்...//

   எதையுமே அடக்கிக்கொள்ளக்கூடாது, அதிரா. அது மிகவும் ஆபத்து. எது வாயில் வருதோ அதை உடனே எழுதித் துப்பிடுங்கோ. வெளியிடக்கூடியதாக இருந்தால் வெளியிடுகிறேன். இல்லாவிட்டால் பொக்கிஷமாகத் தனியே சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

   இல்லாவிட்டால் மெயில் மூலமாவது விலாவரியாகச் சொல்லுங்கோ.

   என் மெயில் விலாசம்: valambal@gmail.com

   நீக்கு
  2. ஹா..ஹா..ஹா.. அப்படி எல்லாம் பரம ரகசியம் இல்லை:).. எனக்கு எப்பவும் நகைச்சுவையாக பதில்கள் வரும் மனதில்:).. ஆனா இது நமது சமயம் சார்ந்த பதிவென்பதால, எதையும் சொல்லி ஏடாகூடமாகி அடிவாங்கிடாமல் மெளனமாகி விடுகிறேன் பல நேரங்களில்:).

   நீக்கு
  3. சொல்ல மறந்திட்டேன்ன் அந்தக் கணக்குப் பார்த்த கிளியாருக்கு ஒரேஞ் யூஸ் அனுப்பியிருக்கிறேன்ன்:) குடிச்சிட்டு, பிழை விட்டிடாமல் கணக்கெடுக்கச் சொல்லிடுங்கோ:).

   நீக்கு
 20. // ’காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது’ என்பதை அவர்களுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக விளக்கினார்.///

  உண்மைதான் மனதில் சங்க்டம் வரும்போது காயத்ரி மந்திரத்தை ஒற்றை முறையாக(3,5,7,9..) உச்சரிக்க மனம் இலேசாகும்... நானும் உணர்ந்திருக்கிறேன் அதன் மகிமையை.

  பதிலளிநீக்கு
 21. அன்பின் வை.கோ - அருமையான பதிவு


  //பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும்.

  பிற உயிரைத் தன்னுயிர்போல மதிக்க வேண்டும்.

  உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும்.

  நீத்தார் காரியங்கள் செய்வதில் ஸ்ரத்தை வேண்டும். //

  கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள்

  //காயத்ரி மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது //

  //எவ்வளவு இருந்தாலும் போறாதுதான். ஏன்னா நம் தேவைகளை பெருக்கிக் கொண்டே போகிறோம். போதும் என்று எண்ணம் எப்போ வருதோ அப்போதான் நல்ல கார்யம் செய்ய முடியும் //

  நல்லதொரு பதிவு - படித்து மகிழ்ந்தேன் - அமுத மழை தொடர்ந்து பொழியட்டும்

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 22. காயத்ரி மந்திரத்தின் உயர்வுகளும் விளக்கங்களும் அருமை! இன்றைய பின்னூட்டங்களே அருமையானதொரு பதிவுபோல் உள்ளது! பெயர்க்காரண விளக்கங்கள் இரசித்தேன்!ஷட்பஞ்ச பழம் விளக்கம் அருமை! மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பதிவு! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 23. காயத்ரி மந்திரத்தின் மகிமைகளும் விளக்கமும் மிக அருமை! ஷட்பஞ்ச பலம்- விளக்கம் அருமை! மொத்தத்தில் இன்றைய பின்னூட்டங்களின் தொகுப்பே மற்றுமொரு அருமையான பதிவானது போல் உள்ளது! பெயர்க்காரணங்கள் மிகவும் இரசிக்கும்படி இருந்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 24. காயத்ரி மந்திரப் பெருமையறிந்தேன்.
  மிக்க நன்றி.
  இறையருள் கூடட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 25. \\பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும்.

  பிற உயிரைத் தன்னுயிர்போல மதிக்க வேண்டும்.

  உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும்.\\

  இவற்றையெல்லாம் தவறாமல் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் உலகில் பிரச்சனைகள் எழ வழியே இல்லை. அற்புதமான பதிவு. ஒருவர் செய்த தவறை நேரடியாய் சுட்டாமல் மறைமுகமாய் சுட்டிப் புரியவைத்த மகானின் குணம் மகத்தானது. சிறப்பான பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 26. அமுதமொழிகளும், ஷட்பஞ்ச பலமும் அருமை...

  பதிலளிநீக்கு
 27. ஷட்- பஞ்ச பலம்! அருமையான விளக்கம்! பெரியவாளின் தீர்க்க தரிசனம் தக்க நேரத்தில் புத்தி புகட்டும் விதம் வியக்க வைக்கிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
 28. மனைவி அல்லா மாதர்களை மாதாவாய் எண்ணுவதே அன்னையை துதிப்பதற்கு அடையாளம். ஶட் பஞ்சபலம் விவரம் அருமையாக உள்ளது. என் அப்பா அடிக்கடி சொல்லுவார். காயத்ரி மந்திரம் இங்கே
  எங்கள் வீட்டில் உடம்பு ஸரியில்லாதவரைச் சொல்லச்சொல்லி 2 வருடங்களாக அதேதான் மருந்தாக இருக்கிறது. உதவிக்கு இருப்பவர்கள் கூட நன்றாகச் சொல்கிறார்கள். புதுக் கணினி. ஸ ஸவாக இருக்கு. புட்பம் இரண்டாவது வடமொழி எழுத்துஶ என்றுதான் வருகிரது.
  ஸ்ராத்தம் முன் நாட்களில் எவ்வளவு சிரத்தையாக செய்யப்படும். பாக்கு வாங்குவதிலிருந்து ஒவ்வொரு விஶயமும் ச்ரத்தையாகச் செய்யப்படும்.
  தக்ஷிணைக்காக வெள்ளி ரூபாய்க் காயின்களாக,காய்கறி, பழங்கள்
  நெய் ஒவ்வொன்றும் மிக்க சிரத்தையாகச் சேகரித்து, நல்லபடி ச்ரார்தம் முடியும் வரை எவ்வளவு அக்கரை? அதெல்லாம் அவ்வளவாக தற்காலம் அமைவதில்லை.
  இப்படி எவ்வளவோ எண்ணங்கள் உருவாகிறது. பெரியவா எவ்வளவு
  சூஶ்மமாக விஶயங்களை உணர்த்துகிறார்.
  அழகாக விஶயங்களைப் பகிர்வு செய்கிறீர்கள். படிக்க ஸந்தோஶமாக இருக்கிரது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 29. காயத்ரி மந்திரத்தின் மகிமை அளவிடமுடியாதது என நானும் கேள்விப்பட்டுள்ளேன்...

  தங்களுக்கு தெரிந்தால் அடுத்த பதிவில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா!!

  பதிலளிநீக்கு
 30. பெரியவரின் மகிமை படிக்க படிக்க இனிமையாக இருக்கிறது...தொடருங்கள் ஐயா!!

  பதிலளிநீக்கு
 31. Writing about sri rama jayam the right way is really nice, I knew it only today. Excellent post about Gayathri manthiram... thank you very much sir for sharing it with us...

  பதிலளிநீக்கு
 32. //பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.// /அவருடைய அறிவிற்கும் ஆசிகளுக்கும் அளவே இல்லை!!

  பதிலளிநீக்கு
 33. காயத்ரி மந்திரத்தின் மகிமை உணர்ந்தேன். ஆரஞ்சின் பெயர்க் காரணமும், மகா பெரியவரின் ஷட்ப்ஞ்சபலம் என்று சொல்லி வருமான வரித்துறை அதிகாரிக்கு உணர்த்தியது மிகவும் உன்னதமானது .
  நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 34. அமுதமொழிகள் அருமை.

  காயத்ரிமந்திரம் நம்மை எல்லாம் காக்கும் மந்திரம்.  பதிலளிநீக்கு
 35. எல்லா மந்திரஙகளிலும் முதன்மையானது எனவே காயத்ரி மஹாமந்த்ரம் முறைப்படி செய்தால் எந்த தீங்கும் நம்மை அண்டாது பரிபாஷை புரிந்தால் பேசுவதற்கு இனிமையாக இருக்கும் வைதீக விஷயங்களில் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் நன்றி

  பதிலளிநீக்கு
 36. ஷட்-பஞ்ச பலம் விளக்கம் அருமை. இடப்பொருத்தம் அதை விட அருமை.

  பதிலளிநீக்கு
 37. காயத்ரி மந்திரத்தின் சக்தியே அபாரமானதுதான் இந்த பதிவின் மூலமும் நன்கு புரியவச்சுட்டீங்க.

  பதிலளிநீக்கு
 38. காயத்ரி மந்திரத்தின் பெருமை அளவிட முடியாது. சொல்லச் சொல்ல முகத்தின் தேஜஸ் அதிகரிக்கும்.

  ஷட் பஞ்ச பலம் - விளக்கம் அருமையோ அருமை.

  அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இருந்ததே நமக்குப் பெருமை.

  பதிலளிநீக்கு
 39. ஆரஞ்சுபழ வெவரம் அடியாத்தாமங்களம்பேரு வெவரம் நல்லாதா சொல்லினிங்க.

  பதிலளிநீக்கு
 40. பக்தியோடு செய்வது யக்ஞம் சிரத்தையுடன் செய்வது ஸ்ரார்த்தம். எவ்வளவு தெளிவான விளக்கம்.காயத்ரி மந்திரத்தின் சிறப்பு சொல்லி முடியாது சொல்லில் அடங்காது.

  பதிலளிநீக்கு
 41. // பெரியவா சூக்ஷ்மமா சொல்லுவா – நாம்தான் புரிஞ்சுக்கணும்.// ஆரஞ்சு பழத்துலயும் இத்தனை விஷயமா??? விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
 42. இந்த பதிவின் ஒருசில பகுதிகள் மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (26.06.2018) பகிரப்பட்டுள்ளன.

  அதற்கான இணைப்புகள்:-

  https://www.facebook.com/groups/396189224217111/?ref=bookmarks

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=424785448024155

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு