என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 25 செப்டம்பர், 2013

55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்

2
ஸ்ரீராமஜயம்
வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய்ய வேண்டிய பெரிய சீர்திருத்தம்.

கலப்பு மணம், காதல் கல்யாணம் பண்ணிக்கொள்வது மாதிரியான சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்து பெருமைப்படுவதற்கு பதில், சாஸ்திரோத்தமான இந்தச் வரதக்ஷிணை ஒழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம் செய்தால் இதுவே பெரிய சீர்திருத்தமாயிருக்கும். 

எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம். ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” ”யார்க்கும் இடுமின்,அவர் இவர் என்னன்மின்” என்றே திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறது.

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாளும், ஒரு பசுவிற்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்.


oooooOooooo

{ To increase the size of the Letters, 
Please press 'control and + [Plus]' simultaneously 
in the key-board  }


கனக தாரா காமாக்ஷிக்கு 


காமாக்ஷி அம்மனுக்கு மேலே ஒரு காலத்தில் பொன்மயமாக இருந்த விமானம், தங்க ரேக்கெல்லாம் அழிந்து வெறும் செம்பாக இருந்தது.

அந்த கால கட்டத்தில் மடத்துக்கு வசதி போதாது. அன்பர்களும், பக்தர்களும் கொடுப்பதைவைத்து மடம் நடந்து கொண்டிருந்தது. 


பல நாட்கள் பிக்ஷா வந்தனத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது கூட உண்டு. சந்நியாஸ தர்மப்படி அந்த பிக்ஷாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிக்ஷையே நடக்கும்.ஒருநாள் "விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் ஏன் வெறும் செம்பாக வைத்திருக்கிறீர்கள்?" என்று பெரியவா மானேஜரைக் கேட்ட போது, "பண வசதி போதாது" என்று அவர் தெரிவித்து விட்டார்.

பெரியவா ஆசாரியை வரவழைத்து ”எவ்வளவு பவுன் ஆகும்” என்று கேட்டார். 


விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது. பார்த்துவிட்டு, ஆசாரி பல பவுன்கள் வேண்டும் என்றார்.

"அதற்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில்.

பெரியவாளோ, "பண்ண ஆசையிருக்கு, எப்படி என்றுதான் தெரியலை?" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.


அந்த சமயம் மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர், பெரியவாளை தரிசனம் பண்ண உள்ளே வந்தார். பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார்.

பெரியவா அவரிடம், "எனக்கு காமாக்ஷி அம்மனின் விமானத்தை தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக இருக்கிறது. 


இவர்களெல்லாம் அது முடியாத காரியம் ...... பவுனுக்கு எங்கே போவது என்கிறார்கள். பெரிய குறையாக இருக்கிறது.  ஆனால், உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது.

உனக்குக் கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமோ?" என்று கேட்டார்.

"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர். 

அங்கே வந்திருந்த பெண்மணிகளில் சிலர், "எனக்குத் தெரியும்" என்று முன் வந்தனர். 

எல்லோரும் சேர்ந்து கனகதாரா ஸ்தோத்திரத்தை முழக்கினார்கள்.

அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ ஒரு அதிசயம் நடந்தது.

அங்கேயிருந்த ஒரு தட்டில் அத்தனை பெண்களும் தங்கள் நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர்."ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழிகிறதே" என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார்.  அதை அப்படியே ஆசாரியிடம் அள்ளிக் கொடுத்து ”ஐந்து நாட்களுக்குள் தங்க விமானம் பண்ணி எடுத்து வா” என்றார்.

அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.

சர்வ வல்லமை படைத்த மஹானான பெரியவா ஒன்று நினைத்தால் அது நடக்காமல் போய்விடுமா என்ன? ஆறே நாளில் தங்க விமானம் வந்து, கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது.

ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள், அன்று பொன்மழை பொழிந்தாள்

இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு, அம்பாளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் அந்த நிகழ்ச்சி அமைந்தது.


[ Thanks to Mr. RISHABAN Srinivasan Sir for sharing this incident ] 


oooooOooooo

அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம். 

28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் முதல் ஐம்பது பகுதிகள் மட்டும் 15.09.2013 அன்று நிறைவடைந்துள்ளது.


இந்தத்தொடருக்கு பலரும் அவ்வப்போது வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகம் தந்துள்ளனர்.  

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.


இதன் தொடர்ச்சி 
[பகுதி-55/2/2 ஆக]  
இப்போதே தனிப்பதிவாக 
வெளியிடப்பட்டுள்ளது


52 கருத்துகள்:

 1. சீர்திருத்த கருத்து மிகவும் அருமை... அனைவரும் உணர வேண்டும்...

  சர்வ வல்லமை உள்ள பெரியவா நினைத்தது நடந்தது... வியப்பை தவிர வேறு ஒன்றுமில்லை...

  நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. பெரியவாளின் அறிவுரைகள் இந்த காலத்திற்கும் பொருந்தி வருவது சிறப்பு! கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க விமானம் பொருத்திய நிகழ்வு சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. தங்களின் பார்வைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

  பதிலளிநீக்கு
 4. அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.
  // விந்தை என்பது வெறும்பார்வை! அம்மனின் ஆச்சார்யாளின் அருள் என்பது பக்தி பார்வை!

  பதிலளிநீக்கு
 5. இப்போதெல்லாம் வரதட்சிணை குறைந்துவிட்டது என்றே நினைக்கிறேன்..அதற்கு பதில் நிறைய படித்து மாதந்தோறும் அதிகமாக சம்பாதிக்கும் பெண்களுக்குத்தான் இப்போது முதலிடம்.

  பதிலளிநீக்கு
 6. சீர்திருத்த கருத்து மிகவும் அருமை.

  //ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள், அன்று பொன்மழை பொழிந்தாள்

  இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு, அம்பாளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் அந்த நிகழ்ச்சி அமைந்தது.//

  எப்போதும் அம்பாளின் நினைவாய் இருப்பவருக்கு அம்பாளுக்கு பொன் விமானம்செய்ய வேண்டும் என்று நினைத்தவுடன் அம்பாள் வடிவ பெண்கள் பொன்கொடுத்தது அற்புதம்.
  கனகதாரா ஸ்லோகத்தை படிப்பவர்களை வறுமை துன்பத்திலிருந்து காப்பாள் அம்பாள்.
  உங்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 7. பெரியவர் சொல்லி இருக்கிறார் என்பது தெரிந்தும் , கல்யாணப் பத்திரிக்கையில் பெரியவர் அனுக்கிரகத்துடன் என்றும் போட்டு வரும் திருமண நிகழ்ச்சிகளில் வரதட்ஷிணை வாங்கப் படுவதும் , பட்டைப் பகிஷ்கரியுங்கள் என்பது பெரியவர் வாக்கானாலும் பட்டில் ஜொலித்தபடி திருமணங்களுக்குப் போவதும் உடுத்துவதும் காணும்போதும் மனசில் நெருடல் தோன்றுகிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை
  Why parents duty to not ask dowry. We are proud parents and my son is good son too.
  Aha Deiveeka kariyathukku pon malai..
  Periyava anugragam...
  Namaskaram to Periyava.
  viji

  பதிலளிநீக்கு
 9. //எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம். ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” ”யார்க்கும் இடுமின்,அவர் இவர் என்னன்மின்” என்றே திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறது.//
  நன்றாய் சொன்னீர்கள்!

  பதிலளிநீக்கு
 10. பெரியவா பற்றிய தங்கள் தொடர்ந்த இடுகைகளால் எம் போன்றோர் அறிவது ஏராளம்!

  பதிலளிநீக்கு
 11. எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம். ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” ”யார்க்கும் இடுமின்,அவர் இவர் என்னன்மின்” என்றே திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறது.

  அன்னதானத்தைப்பற்றி அருமையான பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 12. "ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழிகிறதே" என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார்.

  என்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கும்
  மஹான்களின் மந்திர வரிகள்..!

  பதிலளிநீக்கு
 13. ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள், அன்று பொன்மழை பொழிந்தாள்

  இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு, அம்பாளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் அந்த நிகழ்ச்சி அமைந்தது.

  பொன்மழைதான் பொழிந்திருக்கிறது..!

  பதிலளிநீக்கு
 14. அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.

  அத்சயமான வடிவுடையாள் நிகழ்த்திய அதிசயம்..!

  பதிலளிநீக்கு
 15. Such a blessful read Sir.I completely agree with your thoughts on dowry n inter caste marriage,well written

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Harini MSeptember 25, 2013 at 8:11 AM

   WELCOME Madam.

   //I completely agree with your thoughts on dowry n inter caste marriage//

   இந்தத்தொடரின், ஒவ்வொரு பகுதிகளிலும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா படத்திற்குக்கீழ், மிகச்சிறிய பகுதியாக கொடுக்கப்படும் எதுவும் என் சொந்தக்கருத்துகளோ, எண்ணங்களோ கிடையாது.

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவ்வப்போது அருளியுள்ள பொன்மொழிகளைப்பற்றி, பலரும் பல புத்தகங்களில், பலவாறு எழுதியுள்ள தொகுப்புக்களிலிருந்து, அடியேனால் திரட்டிக் கொடுப்பவை மட்டுமே, என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வாசிப்புக்கும், அவ்வப்போது கருத்தளித்து மகிழ்விப்பதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   நீக்கு
 16. நடத்திக் கொடுப்பவர் அவர்.. மற்றவர்கள் கருவிகள்..

  பதிலளிநீக்கு
 17. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.....

  வரதட்சணை வாங்குவது தவறு .....

  இரண்டுமே நல்ல மொழிகள்..... கடைபிடித்தால் நல்லது...

  பதிலளிநீக்கு
 18. தங்கம் சீர் திருத்தம் அருமையான பதிவு. இறை பக்தியை மேலும் பெருக்கும் பதிவு.
  இறையருள் நிறையட்டும்.
  சிறந்த பதிவிற்கு நன்றி ஐயா.
  வேதா. இhலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 19. பெரியவாளின் பொன்மொழிகள் ஒருபுறம்
  காமாட்சி தேவியின் கோயில் விமானத்திற்கு
  வெளியில் யாரையும் கேட்காமல் இருந்த இடத்தில இருந்தபடியே அங்கு வந்தவர்களை அவர்களே மனமுவந்து பொன் நகைகளை அளிக்க வைத்த
  செயல் ஒரு அற்புதம்.

  பொன்மொழிகளை மட்டும் பெண்மணிகள் அன்றும் கேட்கவில்லை.இன்றும் அப்படிதான்.
  நன்றி VGK

  பதிலளிநீக்கு
 20. // வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இதுதான் இப்போது இளைஞர்களால் செய்ய வேண்டிய பெரிய சீர்திருத்தம்.//

  இப்போது எல்லா சமூகத்திலும் வரதட்சிணை கேட்பதை பையன்களே விரும்புவதில்லை. பெண்ணைப் பெற்றவர்களும் பெண்ணை கட்டின துணியோடு அனுப்பி விடுவதில்லை. பெண் வீட்டாராகப் பார்த்து தன் பெண்ணுக்காகாக செய்வதுதான் அதிகம். பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 21. அன்னதானத்தைப் பற்றிய தகவல் அருமை. பொன்மாரி பொழியச் செய்யும் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பற்றிய தகவலும் சிறப்பு. நல்லபதிவினை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 22. அன்பின் சகோ. வை.கோ.

  அருமை! வரதட்சணைக் கொடுமை, அன்னதானம் என மனிதம் மலரச் செய்த அற்புதம்! வாழ்த்துகள். நிறைய புதிய விசயங்கள் கற்றுக்கொண்டேன். நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 23. கனகதாரா ஸ்தோத்திரத்தின் மகிமையை
  அனைவரும் அறிவதற்காக சுவாமிகள்
  செய்த லீலையை தங்கள் பதிவின் மூலம் அறிய
  மனம் மிக மகிழ்வு கொண்டது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 24. இப்போல்லாம் வரதக்ஷிணை என்றெல்லாம் வாங்குவது இல்லை. அவரவர் செலவு அவரவருக்கு எனச்செய்தாலும் மாப்பிள்ளைக்கு வைர மோதிரம், ராசிக்கல் மோதிரம், சங்கிலி, ப்ரேஸ்லெட் எனக் கொடுக்கிறார்கள். ரொம்ப வசதி உள்ளவர்கள் கூடுதலாக கார், பைக் என்றும் வாங்கிக் கொடுக்கிறாங்க.

  பதிலளிநீக்கு
 25. உஷா அன்பரசு சொல்வது போல நிறையச் சம்பாதிக்கும் அதிலும் ஐடியில் வேலை செய்யும் பெண்களுக்கே இப்போது அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதோடு பிள்ளையைப் பெற்றவர்கள் எல்லாம் கவலைப்படும்படியாகப் பெண் கிடைப்பதும் குதிரைக்கொம்பாக இருக்கிறது. :))))

  பதிலளிநீக்கு
 26. கனகதாரா ஸ்தோத்திரம் தெரியுமே தவிர ஶ்ரீமடத்தில் நடந்த இந்தத் தகவல் முற்றிலும் புதியது. :)

  பதிலளிநீக்கு
 27. மஹா பெரியவா மனதில் ஒன்று நினைத்து அது நடக்காமல் போல அந்த காமாக்ஷி அம்பாள் எப்படி விடுவாள்? இவரிடம் கேட்டால் நடக்கும் என்பது அந்த அம்பாளுக்கும் தெரிந்ததுதானே!
  வரதட்சணை, அன்னதானம் முதலியவற்றைப் பற்றிப் பெரியவா சொல்வதை யார் கேட்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 28. கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் அப்பொழுதே கனகம் வேண்டிய அளவு பெண்களால் கொடுக்கப் பட்டது. எவ்வளவு ஆச்சரியப் படுத்தும் நிகழ்வு. இந்த ஸம்பவம் மெய் சிலிர்க்க வைக்கிரது. பெரியவர்களால்
  நிச்சயிக்கப் படும் கல்யாணங்கள் தவிர, காதல் விவாகங்களின் மூலம், கலப்புத் திருமணங்கள், வரதக்ஷிணை வாங்காதது எல்லாம் பெரும்பாலும் நடந்து கொண்டுதான் இருக்கிரது. படித்து உத்தியோகம் செய்யும் பெண்களாகத் தேடும் போது, வரதக்ஷிணை என்ற பேச்சுகளில்லை.
  ஜாதகப் பரிமாற்றம் செய்யும் போதே பெண் வீட்டினர் இவ்வளவு
  செய்வோம்,அவ்வளவு செய்வோம் என்ற மார்க்கெட்டிங் செய்வது குறைந்திருக்கிறதா? அதையும் எல்லோரும் யோசிக்க
  வேண்டும். பெண்களென்றால் சீதனம் கொடுக்க எல்லா பெற்றோர்களுமே விருப்பமுடன்தான் இருக்கிரார்கள்.
  ஆடம்பரம் குறைந்து, எளியமுறைக் கலியாணம் என்று பாராட்டும்படியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
  சிந்தித்து செயல் படுத்த வேண்டும். இப்படி என் எண்ணங்கள் போகிறது.
  நல்ல எளிய அருமையான விஶயங்களை உங்கள் பதிவுகளின் மூலம் அறிய முடிவதில் ஸந்தோஶம்.
  அன்பளிப்பாக, கணினி. புதிய hpகணினிதான் இதை எழுதியிருக்கிறது. மிகவும் நன்றி.
  உங்களிடம்,அன்பளிப்புகள் பெற்ற யாவருக்கும்,மற்றும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 29. விமானத்தை தங்கமாக்கிய அந்த சம்பவம்,
  மனதை பனிபோல் குளிரச் செய்துவிட்டது
  வைகோ சார்.
  ரிஷபன்ஜிக்கு என் அன்பு என்ரென்றும்.
  Shared in my FB too.

  பதிலளிநீக்கு
 30. அன்பின் வைகோ - அருமையான பதிவு - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளால் முடியாதது என்று ஒன்றுமில்லை. = கனகதாரா ஸ்தோத்த்ரம் - பொன்மழை பெய்தது - தங்க விமானம் தயார் - கும்பாபிஷேகம் - அட அட - என்ன நினைக்கிறாரோ அது நிறைவேறுகிறது - அவர்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 31. அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.

  சர்வ வல்லமை படைத்த மஹானான பெரியவா ஒன்று நினைத்தால் அது நடக்காமல் போய்விடுமா என்ன?//
  அதிசய நிகழ்வுதான்! பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 32. படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. 'கனக தாரா ஸ்தோத்ர மஹிமை' அளவிட முடியாதது..

  பதிலளிநீக்கு
 33. கடந்த 25 வருஷமா பெரியவர் கட்டளைப்படி எங்க வீட்டில் பட்டு கிடையாது, வரதட்சணையும் கிடையாது. எங்க தாத்தா, சுப்பராமன் பெரியவரிடம் மஹா பக்தி கொண்டவர். அவர் கேட்டுக்கொண்ட படிதான் இப்போதும் என் தம்பிக்கு பெண் தேடுகிறோம். பட்டு வேண்டாம் என சொல்லும் மனம் இல்லை பலருக்கு. :(

  பெரியவர் அருளாசியில் சீக்கிரம் தம்பிக்கு நல்ல வரன் அமையும் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 34. மஹா பெரியவா நினைத்து நடக்காமல் போய் விடுமா என்ன?
  கனக தாரா சுலோகத்திற்கு எவ்வளவு மகிமை. நினைத்தாலே சிலிர்க்கிறது.

  அருமையான பதிவு
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 35. அன்னதான மகிமையும் பெரியவர் ஆசையைப் பூர்த்திசெய்யும் வண்ணம் அற்புதமாய் மனங்கள் ஒருமித்து பொன்மழை பொழிந்த நிகழ்வும் மனம் கொள்ளை கொண்டன. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 36. What a Powerfull shlokam. Nice pathivu. I am writing in Handy. I will come back. Thanks Sir

  பதிலளிநீக்கு
 37. வரதட்சிணை ஒழிப்பு சீர்த்திருத்தம் சிறப்பானது.

  கனகதாரா ஸ்தோத்திரத்தால் பொன்மழை பொழிந்து விமானம் தயாரானது அருமை.

  பதிலளிநீக்கு
 38. சீர்திருத்தக் கருத்து மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 39. Very very true and important information which must be followed, no one should accept dowry and should never give as well. Thanks alot for sharing sir...

  பதிலளிநீக்கு
 40. கனகதாரா ஸ்தோத்திரத்தின் மகிமையை இந்த பகிர்வின் மூலம் அறிந்துக் கொண்டேன் ஐயா!!

  பதிலளிநீக்கு
 41. கனகதாரா ஸ்தோத்திரத்தின் பெருமையை தெரியாத பலருக்கும் புரியவைத்த மஹாபெரியவாளுக்கு நமஸ்காரம் அம்பாளின் தங்க விமானம் செய்த பலனை எல்லோருக்கும் கிடைக்க செய்ய திரு உள்ளம் கொண்ட மஹானின் லீலை விடாமல்சொல்லிவந்தால் தங்கனெல்லிக்கனிகள் விழாவிட்டாலும் தரித்திரம் அண்டாது அருமையானபகிர்வு நன்றி

  பதிலளிநீக்கு
 42. கலியுகத்திலும் அம்பாள் மனது வைத்தால் நடக்காதது ஒன்று உண்டோ?

  பதிலளிநீக்கு
 43. பெரியவா மகிமைகள் உங்க மூலமாக நாங்க தெரிஞ்சுக்கணும்னு இருக்கு. எங்களுக்கும் அதில் சந்தோஷம்தான்

  பதிலளிநீக்கு
 44. // எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம். ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” ”யார்க்கும் இடுமின்,அவர் இவர் என்னன்மின்” என்றே திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறது.//

  தானத்தில் சிறந்தது அன்னதானம்.

  மகா பெரியவாளின் ஆசைக்கு அந்த காஞ்சி காமாட்சி செவி சாய்க்காமல் இருப்பாளா? கனகதாரா ஸ்தோத்திரம் சொல்ல வைத்து அருள் பாலித்துவிட்டாளே.

  பதிலளிநீக்கு
 45. நல்ல வெசயம்தா... நல்லாஇருக்குது

  பதிலளிநீக்கு
 46. பெரியவா மூலமாக தன் தேவையை நிறைவேற்றிக்கொண்டுவிட்டாள் அந்த அம்பாள்

  பதிலளிநீக்கு