அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
என்னை மிகவும் மகிழ்வித்துச் சிரிக்கவும், சிந்திக்கவும்,
சொக்கவும் வைத்த இவர்களின் சில விமர்சனங்கள்:
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் பேரெழுச்சியுடன் கலந்துகொண்டு, 24 முறைகள் முதல் பரிசுகளையும், 7 முறைகள் இரண்டாம் பரிசுகளையும், ஒரேயொரு முறை மட்டும் மூன்றாம் பரிசினையும் வென்று, ஆக மொத்தம் 32 வெற்றிகளுடன், இறுதிச்சுற்று வரை முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டு, சாதனைகள் பல புரிந்து ’ஆட்ட நாயகி’ , ‘விமர்சன வித்தகி’ என்றெல்லாம் அனைவராலும் புகழப்பட்டவரும், தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான, ‘கீத மஞ்சரி’ வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களை, எங்கள் இருவரின் சொந்த ஊரான திருச்சியில் இன்று சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
வலைத்தளம்: கீத மஞ்சரி
VGK's சிறுகதை விமர்சனப்போட்டிகள் - 2014 இல்
இவர்களுடைய சாதனைகளைப் பற்றி அறிய
ஒருசில இணைப்புகள் இதோ:
ஒருசில இணைப்புகள் இதோ:
பரிசு மழை பற்றியதோர் ஒட்டு மொத்த அலசல்
‘கீதா விருது’ - புதிய விருதுகள் (பரிசுகள்) அறிமுகம்
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் எழுதியுள்ள ’நேயர் கடிதம்’
போட்டியின் இறுதிக்கதையான ‘மனசுக்குள் மத்தாப்பூ’ வுக்கு
இவர்கள் எழுதி ’முதல் பரிசு’ பெற்றுள்ள விமர்சனம்.
போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும்.
சொக்கவும் வைத்த இவர்களின் சில விமர்சனங்கள்:
’ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’
வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க’ உதயம்
மாமியார்
’கீத மஞ்சரி’அவர்கள் தமிழில் எழுதியுள்ள
‘என்றாவது ஒரு நாள்’
என்ற மொழி பெயர்ப்பு நூலுக்கு, அடியேன் கொடுத்துள்ள புகழுரைப்
பதிவுகளுக்கான இணைப்புகள் (படங்களுடன்)
கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்... By Mrs. Geetha
இன்றைய எங்கள் சந்திப்பு, உலகப்புகழ் பெற்ற ’திருச்சி சாரதாஸ்’ ஜவுளிக்கடல் அமைந்துள்ள, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோட்டின் [NSB Road] வட மேற்கு மூலையில், தெற்கு நோக்கியுள்ள ‘ஹோட்டல் ரகுநாத்’ தில் பகல் 10.50 மணி முதல் 11.20 மணி வரை நடைபெற்றது. இந்த இனிய சந்திப்பினில் எடுக்கப்பட்டுள்ள ஒரு சில புகைப்படங்கள் .... இதோ தங்களின் பார்வைக்காக:
^உலகப் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளருக்கு
பொன்னாடை அணிவித்து வரவேற்பு^
^14.04.2015 முதல் இவர்களுக்காகவே ஒதிக்கீடு செய்து, என்னிடம்
பாதுகாத்து வந்த, மூன்று நூல்களை நினைவுப்பரிசாகக் கொடுத்தல்^
^ஸ்வீட், காரம், காஃபி, பழங்களுடன் வேறு சில நினைவுப்பரிசுகள்^
^அவர்கள் எழுதி வெளியிட்டிருந்த நூலில்
இன்று மீண்டும் அன்புடன் கையொப்பமிட்டு
23.02.2018 என்ற தேதியும் போட்டுக்கொடுத்தார்கள்^
அடியேன் அவர்களுக்குக் கொடுத்திருந்த நினைவுப் பரிசுகளில்
ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் பெருமாளுமாக பொறிக்கப்பட்டிருந்த
தங்கக்கலர் சாவி வளையம் ஒன்றே ஒன்று மட்டுமே !
காமதேனுபோல அவர்கள் ஒன்றுக்குப் பத்தாக
எனக்களித்துள்ள பத்து சாவி வளையங்கள் இதோ:
ஆறு பூனைக்குட்டிகள்
இரண்டு கங்காருகள்
100% Metal Key Rings - 2 Numbers
Designed in Australia beautifully Etched
with 'Sydney Bridge' and 'Kangaroo'
^நிகழ்வுக்குப் பொருத்தமாக இன்றைய (23.02.2018)
தினமலர்-சிறுவர் மலர் அட்டைப்படம்^
இந்த மேற்படி படத்திற்கான இதிகாச-புராணக்கதையினை,
தினமலர் - சிறுவர் மலரில் எழுதியுள்ளவர்
நம் ஹனி மேடம் (தேனம்மை லெக்ஷ்மணன்) அவர்கள்.
அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
http://honeylaksh.blogspot. com/2018/02/7.html
இந்த மேற்படி படத்திற்கான இதிகாச-புராணக்கதையினை,
தினமலர் - சிறுவர் மலரில் எழுதியுள்ளவர்
நம் ஹனி மேடம் (தேனம்மை லெக்ஷ்மணன்) அவர்கள்.
அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
http://honeylaksh.blogspot.
கேட்டதும் கொடுப்பவனே .. கிருஷ்ணா - கிருஷ்ணா !
கேட்பதெல்லாம் கொடுப்பவளே .. காமதேனு !!
திருமதி. கீதா அவர்களை பத்திரமாக தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், இந்த இனிய எங்கள் சந்திப்பு நிகழவும், புகைப்படங்கள் எடுக்கவும் பெரிதும் உதவிசெய்த Er. J.SENTHIL KUMAR, Consulting Civil Engineer, SATHYAM Builders and Contractors, Trichy-11 [Brother of Mrs. Geetha Mathivanan] அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னையும் என் மனைவியையும் ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருமாறு அன்புடன் அழைப்பு விடுத்துவிட்டு அவசரமாகப் புறப்பட்டு விட்டார்கள், திருமதி. கீதா அவர்கள். என்னுடைய அடுத்த பதிவு, ஒருவேளை ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையாக இருக்குமோ என்னவோ ! :)
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள
43-வது பதிவராகும்.
என்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய
முழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய
இதோ சில இணைப்புகள்:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....
பகுதி-1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/20 15/02/1.html
http://gopu1949.blogspot.in/20
பகுதி-2 க்கான இணைப்பு:
^பகுதி-3 க்கான இணைப்பு:^
பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:
பகுதி-6 க்கான இணைப்பு:
பகுதி-7 க்கான இணைப்பு:
புதுக்கோட்டை via மலைக்கோட்டை
மீண்டும் ஓர் இனிய சந்திப்பு
யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... !
முனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு
சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்
2017 ......... 2018 வாழ்த்துகள்
40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6
42-ஆவது பதிவர் சந்திப்பு
ஹனிமூன் வந்துள்ள பதிவர்!
என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]