என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 7 ஆகஸ்ட், 2013

37] ஏரி காக்கும் கரைகள் !

2
ஸ்ரீராமஜயம்
நமது மதத்தில் தனி மனிதனுக்கும் பலவித கட்டுப்பாடுகள், சமூகத்திற்கும் பலவிதக் கட்டுப்பாடுகள் உள்ளன.

கட்டுப்பாடு என்றால் கரை போடுவது என்று அர்த்தம். கரையில்லாமல் ஒரு ஏரி இருக்க முடியுமா?

கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே கரை ஏதும் சரியாகப் போடாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடைத்துக்கொண்டு, நீர் முழுவதும் பாழாகி, ஊரும் பாழாக வேண்டியது தான்.

’பழையது’ என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவில்லை. ஆனால் ‘பழையது’ என்பதாலேயே அதை உதவாதது என்று ஒதுக்கி விடவும் கூடாது. அதன் பயன் என்னவென்று தேர்ந்து பார்த்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தர்மங்களை எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.


oooooOooooo


எழுத்தாளர் ’ஸ்ரீதர்’ என்னும் 
’பரணிதரன்’ அவர்களுக்கு 
ஏற்பட்டதோர் அனுபவம்


Amazing experience – don’t miss. 

We all do this same mistake in different shape and form. 

I have read several similar incidents where Periyava asked 
“why did you go there?”

The real answer is nothing but our stupidity and lack of understanding that 
Periyava is Eswaran.

Once we have that engraved in our brain we will not go anywhere.அவராலே உன்னை 
என்னடா பண்ண முடியும்?

பகுதி-1 படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/08/36.html


பகுதி-1 இல் நிகழ்ச்சி முடிந்த இடம்:


" பெரியவா இருக்கா, பார்த்துப்பா’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லும் நீயே இப்படிப் பயந்துண்டிருக்கியே” என்று என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நண்பன், எனக்குத் தைரியம் சொன்னான்.

” தைரியமாக இருக்கும்படி பக்தி அறிவுறுத்துகிறது. ஆனால், நெஞ்சு குமுறித் துடிக்கிறது. நான் என்ன செய்ய? எனக்கு உடனே பெரியவாளைப் பார்த்து, எல்லாத்தையும் அவர்கிட்டே சொல்லியாகணும். நீ என்னோட வரணும்… நீதான் காரை ஓட்டணும்… உடனே புறப்படு…. இப்பவே போயாகணும்” என்று அவசரப்படுத்தினேன்.


தொடர்ச்சி [பகுதி 2 of 2] இதோ:

அப்போது பெரியவா காஞ்சீபுரத்தில் இல்லை. தமிழ்நாடு- ஆந்திரா எல்லைப் பகுதியில் யாத்திரை செய்து கொண்டிருப்பதை அறிந்து புறப்பட்டுச் சென்றோம்.

இரண்டு மூன்று இடங்களில் காரை நிறுத்திப் பெரியவா இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டே போனோம்.

இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும்… ஒரு சாலையில் வேகமாகப் போய்க்கொண்டிருந்தபோது “கிருஷ்ணா, அதோ சைக்கிள் கூண்டு வண்டி நிக்கறது, பெரியவா இங்கேதான் தங்கியிருப்பா…காரை நிறுத்து” என்றேன்.

கார் நின்றது. நாங்கள் இறங்கிச் சென்றோம். பாராக்காரர் சுப்பையா மற்றும் ஓரிருவர் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சாலையை ஒட்டினாற்போல் ஒரு பாழடைந்த சிறு மண்டபம். வாசலில் கண்ணன் உட்கார்ந்திருந்தார்.

(நான் எத்தனைதான் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் பெரியவா அப்போது தங்கியிருந்த இடத்தை, இப்போது என்னால் நினைவு கூற முடியவில்லை. கண்ணனாலும் தெளிவாகக் கூற முடியவில்லை.)

எங்களைக் கண்டதும், “எங்கேடா ரெண்டு பேரும் இந்த அர்த்தராத்திரியில் வந்தேள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் கண்ணன்.

“அதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். பெரியவாளை நான் உடனே தரிசனம் பண்ணணும். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று கூறினேன்.

“பெரியவா படுத்துண்டுட்டா…அதோ அந்த சாக்குத் திரைக்குப் பின்னாலேதான் படுத்துண்டிருக்கா… இத்தனை நேரம் தூங்கிப் போயிருப்பா… இங்கே இடமில்லே… கார்லேயே படுத்துக்கோங்கோ” என்று கண்ணன் கூறியது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

நாங்கள் காரை நோக்கிப் புறப்பட்ட நேரத்தில், “யார்ராது கண்ணா? ஸ்ரீதர் வந்திருக்கானா?” என்று திரைக்குப் பின்னாலிருந்து பெரியவாளின் அபயக் குரல் கேட்டது.

“ஆமாம்” என்றார் கண்ணன்.

“வரச் சொல்லு.”

கண்ணன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். சயனித்துக் கொண்டிருந்த ஆபத்பாந்தவன் எழுந்து உட்கார்ந்தார். கண்ணீர் பெருக, வந்தனம் செய்து எழுந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன்.

“என்னப்பா?”

வாத்சல்யமும் வாஞ்சையும் அன்பும் பரிவும் கலந்த அந்த அமுதக் கேள்வி, வான்மழையாகப் பொழிந்து, நெஞ்சைக் குளிர்வித்தது.

நடந்தவற்றை ஒரு விவரமும் விடாமல் விவரித்தேன். வெட்கமின்றி என் பயத்தை விளக்கினேன். பெரும் சஞ்சலத்திலிருந்து என்னை மீட்கும்படி வேண்டினேன்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவர், “நீ ஏன் அவரைப் பார்க்கப் போனே?” என வினவினார். 

கேள்வி என்னைச் சுருக்கென்று தைத்தது.

“அண்ணா வயிற்று வலியால் துடிச்சதை என்னால் தாங்க முடியலே. டாக்டர் குடுத்த மாத்திரைகள் வலியைக் குறைக்கலே. ஏதாவது அற்புதங்கள் செய்து, உடனடியாக வலியைக் குறைக்க மாட்டாரா என்ற ஆசையில் அவரிடம் போனேன். 

ஆபரேஷனுக்குப் பெரியவாளிடம் ஆசி வாங்கிக் கொண்ட பிறகு வேறொருவரிடம் சென்றது தப்புதான். அந்தப் பாவத்தை நான் ஒரு வாரமா அனுபவிச்சிண்டிருக்கிறதா தோன்றது. அவர் ஏதாவது பண்ணிவிடுவாரோன்னு பயமாயிருக்கு. பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும். அதான் ஓடி வந்தேன்” என்று நெஞ்சு படபடக்க, நா குழரக் கூறினேன்.

“ஏன் பயப்படறே? அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

நன்றிக் கண்ணீர் ஊற்றெனப் பெருகி வழிந்தது. நெஞ்சில் கனத்த சுமை சட்டென்று குறைந்தது.

“இது மாதிரி பண்றவா யார்கிட்டேயும் நீ இனிமே எதுக்கும் போகாதே.”

“சரி…”

“ஊருக்குப் போயிட்டு வா ....”

“பன்னண்டு மணிக்கு மேலே ஆயிடுத்து. ராத்திரி தங்கிட்டு, கார்த்தாலே போறேனே!” என்றேன் நான்.,

“ஒரு பயமும் இல்லே. நீ இப்பவே புறப்பட்டு போ…” என்று மீண்டும் உத்தரவு தந்தார் பெரியவா.

எழுந்து மீண்டும் வந்தனம் செய்துவிட்டுப் புறப்பட்டேன்.

பூர்ண நிலவொளியில், பூர்ண மன அமைதியுடன் நானும் நண்பனும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

“அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

நள்ளிரவில் தோன்றிய பயத்தை, நள்ளிரவிலேயே கிள்ளியெறிந்த கேள்வி இது.

கேள்வியிலேயே விடையும் அடங்கியிருந்த பெரியவாளின் இந்தக் கேள்வி ‘நான் இருக்க பயமேன்’ என்று என் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. எதிரொலித்தது.

இதுவே எனக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் தகர்க்க முடியாத அரணாகவும் அமைந்து விட்டது. இந்தக் கவசமும் அரணும் அச்சமேயற்ற பெரும் நிம்மதியைத் தந்தன. 

அந்த மன நிம்மதியில் ஆனந்தம் பிறந்தது. மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக் கொண்டே இரவோடு இரவாகச் சென்னையை அடைந்தோம்.

வீட்டுக்குள் நுழையும்போது இருள் விலகி, விடிந்து விட்டிருந்தது.

oooooOooooo


மற்றொரு சம்பவம்காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி

திருநெல்வேலிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தான் கே.வி.கே. சாஸ்திரியின் பூர்வீகம். அப்பா, தாத்தா என்று தலைமுறை தலைமுறையாக இருந்து, கஸ்டம்ஸ் உப்பளத்தில் சேர்ந்து, மரக்காணத்தில் பணியாற்றி ஓய்வுக்குப்பின் வளவனூரில் இருக்க நேரிட்டது. 

பெரியவாள் சொல்லிட்டா போதும், உடனே கேட்டு விடுவார். ஏன் என்ற மறு பேச்சே கிடையாது. 

ஒரு சமயம் பெரியவா, “ஏய், கிருஷ்ணஸ்வாமி, நான் ஒண்ணு சொல்றேன், நீ கேட்பாயா?”  என்று புதிர்போல் கேட்டார். 

“உத்தரவு இடுங்கள்” என்று பணிவோடு நின்றார் கே.வி.கே.

“நீ கிருஷ்ணாபுரம் போய், கோவிலுக்கு அருகே உள்ள ஏழாம் நம்பர் வீட்டிலே போய் ஒரு அம்பது ரூபாய் கொடுத்துட்டு வா. அவர் வாங்க மாட்டேன்னு சொல்லுவார். உன் அப்பா அவர் அப்பாகிட்ட கடன் வாங்கினது. திருப்பிக்கொடுக்கவேயில்லை. அதை நீ கொண்டு கொடுத்து அப்பா கடனை தீர்த்துடு. அப்போதான் நிம்மதியா தூக்கம் வரும்”ன்னு சொன்னார். 

கே.வி.கே க்கு இரவிலே தூக்கம் வராது – விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பார். காலையிலே தூங்கி விடுவார். இது எப்படி பெரியவாளுக்கு தெரியும் என்பதுதான் ஒரே கேள்விக்குறி [?] !!!!

சொன்னபடியே கே.வி.கே கிருஷ்ணாபுரம் சென்று பணத்தைக் கொடுக்க முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்களோ, பணத்தை வாங்கவே மறுத்தனர். 

”எங்கப்பா டைரி எழுதற பழக்கம் உண்டு, அதிலே இப்படி கடன் கொடுத்ததா இல்லை” என்று அவர்கள் கூற, கடைசியில் எப்படியோ பெரியவா சொன்னார்ன்னு சொல்ல அவர்களும் அதை வாங்கிக் கொண்டனர்.

வளவனூர் திரும்பி வந்து பெரியவாளிடம் நடந்த விபரத்தை கூறினார். 

பெரியவா சொன்னா, ”தலைமுறை கடந்து வந்ததாலே இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. எனக்கு மனதிலே பட்டுது .... சொன்னேன்” என்று கூறினார்.

கே.வி.கே க்கும் டைரி எழுதற பழக்கம் உண்டு. அவருடைய டைரியில் அப்பா கடன் திரு. சீதாராமய்யருக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பவோ எழுதியது ஞாபகம் வந்தது. அப்போதான் அந்த சீதாராமய்யர் குடும்ப வாரிசுகள் கிருஷ்ணாபுரத்தில் இருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வந்தது.

காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு என்பதில் சந்தேஹம் உண்டோ? கே.வி.கே. அன்று முதல், நல்ல தேக ஆரோக்யத்துடன் தூங்கினார்.

[ Thanks to Sage of Kanchi 13.06.2013 ]

oooooOooooo
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

08.08.2013 வியாழக்கிழமை

44 கருத்துகள்:

 1. /// தர்மங்களை எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது... ///

  100% உண்மை... தர்மம் மட்டுமல்லாமல் மற்றவைகளும்...

  இரண்டு சம்பவங்களும் அற்புதம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தர்மங்களை எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.
  பிறருக்குச் சொல்லியபடியே தாங்களும் வாழ்ந்து காட்டியவர்கள்தானே மகான்கள்.நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 3. அவராலே உன்னை
  என்னடா பண்ண முடியும்?

  ஒன்னும் பண்ண முடியாது
  என்று சொல்லத் தேவையில்லை.

  ஏனென்றால் அவருக்கு அந்த
  சக்தியை கொடுத்தவரே அவர்தான்.
  அதை கொடுத்தவரிடமே போய்
  சரணடைந்துவிட்டால் அப்புறம் பயம் இல்லை.

  உத்தம குருவை அடைய
  இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  அப்படி செய்தால் அவர்
  நம் கண்ணுக்கு மட்டும் அகப்படுவார்.

  அவர் தாள்களை பற்றிக்கொண்டால்போதும்
  ஞானத் தீ நம்மைப் பற்றிக்கொள்ளும்.
  நம் வினைகளை எல்லாம் எரித்து சாம்பலாகிவிடும்.
  அந்த சாம்பலை அவன் பேரை சொல்லிக்கொண்டே
  நெற்றியில் இட்டுக்கொண்டு
  ஆனந்தமாக இவ்வுலகில் வாழலாம்.

  நம்முடைய அகந்தை மண்ணோடு
  மண்ணாகிவிடும். அந்த மண்ணை
  குழைத்து நெற்றியில் இட்டுக்கொள்ளலாம்.

  இதை விடுத்து நாமாகவே குருவைத்
  தேடி சென்றால் அழிந்தோம்.

  பதிலளிநீக்கு
 4. ஏரி காக்கும் கரைகள் !

  ஏற்றம் மிகு பகிர்வுகள்...!

  பதிலளிநீக்கு
 5. பூர்ண நிலவொளியில், பூர்ண மன அமைதியுடன் நானும் நண்பனும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

  பூர்ணமாய் பரிமளிக்கும் அபூர்வ பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 6. வாத்சல்யமும் வாஞ்சையும் அன்பும் பரிவும் கலந்த அந்த அமுதக் கேள்வி, வான்மழையாகப் பொழிந்து, நெஞ்சைக் குளிர்வித்தது.

  அனுக்ரஹ அமுதமல்லவா பொழிந்திருக்கிறது ..!

  பதிலளிநீக்கு
 7. காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு என்பதில் சந்தேஹம் உண்டோ?

  உள்ளத்தை ஊடுருவி நிலைக்கும் வரிகள்..!

  பதிலளிநீக்கு
 8. வீட்டுக்குள் நுழையும்போது இருள் விலகி, விடிந்து விட்டிருந்தது.

  எத்தனையோ பெரிய பிரச்சினைக்கு விடிவு கிடைத்திருக்கிறதே..!

  பதிலளிநீக்கு
 9. //கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே கரை ஏதும் சரியாகப் போடாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடைத்துக்கொண்டு, நீர் முழுவதும் பாழாகி, ஊரும் பாழாக வேண்டியது தான்.//

  நல்ல அமுத மொழி.

  சொன்ன இரண்டு சம்பவங்களும் ஆச்சரியம்.....

  பதிலளிநீக்கு
 10. மகான்கள் அவதரித்து உலவிய புண்னிய பூமியில் நாமும் அவர்களின் அனுக்ரகத்துடன் வாழ்கின்றோம் என்பதே நாம் செய்த புண்னியம்!..ஸ்ரீ மஹாபெரியவர் அவர்கள் பற்றிய சிந்தனையே நம்மை நல்வழிப்படுத்தும். ஜயஜய சங்கர!.. ஹரஹர சங்கர!..

  பதிலளிநீக்கு
 11. ’பழையது’ என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவில்லை. ஆனால் ‘பழையது’ என்பதாலேயே அதை உதவாதது என்று ஒதுக்கி விடவும் கூடாது. அதன் பயன் என்னவென்று தேர்ந்து பார்த்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.
  very well said sir.

  வீட்டுக்குள் நுழையும்போது இருள் விலகி, விடிந்து விட்டிருந்தது.
  I am waiting for the great vidiyal........

  காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு என்பதில் சந்தேஹம் உண்டோ?
  eppadi varum santhegam?
  viji


  பதிலளிநீக்கு
 12. //தர்மங்களை எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.//

  அமுத மொழியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. //கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே கரை ஏதும் சரியாகப் போடாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடைத்துக்கொண்டு, நீர் முழுவதும் பாழாகி, ஊரும் பாழாக வேண்டியது தான்.// உண்மைதான்! இரண்டு சம்பவங்களும் வியப்பாக இருக்கிறது.
  //காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு //
  எங்களுக்கெல்லாம் பெரியவாளை நேரில் சந்தித்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் உங்கள் இந்த தொடர் மூலம் அவர் அருள் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 14. பதிவைப் படிக்க மயிர்க் கூச்செறிகிறது.
  நன்றி.
  இறையாசி பெருகட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 15. அந்த k.v.kசாஸ்திரி யார் தெரியுமா? எங்கம்மாவின் மாமா மருமகன் ஆவார். அவர் வளவனூரில் ஸ்ரீமடத்தின் முத்திராதிகாரியாகவும் இருந்தார். மிகவும் நல்ல மனிதர். அவரின் குடும்பத்தின் வாரிசுகளோடு
  இன்றும் உரவு முறை நீடிக்கிரது.
  நானிருக்கப் பயமேன் .அபயஹஸ்தம் பெரியவாளுடயது. பரணிதரன் அவர்களுக்குக் கிடைத்த பாக்கியம்.
  அவர் அறியாதது ஒன்றுமில்லை.எல்லாம் அனுக்ரஹ அமுதங்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 16. "Eri kaakum karaigal" karuthu podhindha thalaipu.

  //’பழையது’ என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவில்லை. ஆனால் ‘பழையது’ என்பதாலேயே அதை உதவாதது என்று ஒதுக்கி விடவும் கூடாது. அதன் பயன் என்னவென்று தேர்ந்து பார்த்தே எடுத்துக்கொள்ள வேண்டும்//

  very right Gopu sir


  //தர்மங்களை எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது// how true and periyava just showed us that

  Writer sridhar's description is very nice.  பதிலளிநீக்கு
 17. கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே கரை ஏதும் சரியாகப் போடாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடைத்துக்கொண்டு, நீர் முழுவதும் பாழாகி, ஊரும் பாழாக வேண்டியது தான்....

  Amudamozhi thodarattum, nandri.

  பதிலளிநீக்கு
 18. அருமையான சம்பவம். பரணீதரன் எவ்வளவு கவலைப்பட்டிருப்பார் என்பதும் பெரியவாளின் அனுகிரஹம் கிடைக்க எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 19. இரண்டு சம்பவங்களும் அருமை. அமுத மொழிகளும் புரிந்து ஏற்று கொள்ளும்படியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 20. ’பழையது’ என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவில்லை. ஆனால் ‘பழையது’ என்பதாலேயே அதை உதவாதது என்று ஒதுக்கி விடவும் கூடாது.

  அழகான கருத்து...

  மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் அருமை. அழகாக தொகுத்துள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 21. பெரியவாளின் அற்புதங்களை தொகுத்து வழங்கி வருதல் அருமை! தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 22. பெரியவாள் இருக்க பயம் ஏன் ? மனஅமைதி கொடுத்தது.

  அற்புதமான நிகழ்சிகள்.

  பதிலளிநீக்கு

 23. நினைத்துப்பார்க்க வைக்கும் நிகழ்வுகளும் சிந்திக்க வைக்கும் வரிகளும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 24. எழுத்தாளர் ’ஸ்ரீதர்’ என்னும் ’பரணிதரன்’ அவர்களுக்கு
  ஏற்பட்டதோர் அனுபவம் பற்றி தெரியச் செய்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 25. கோபு அண்ணன் நீங்கள் மற்றும் வீட்டில் அனைவரும் நலம்தானே? மீ வந்திட்டேனாக்கும்.. டும்..டும்..டும்....:).

  பெரியவாளின் தொடர் இன்னும் முடியவில்லைப்போலும், நான் முன்பே முடிந்துவிட்டதாக்கும் என நினைத்தேன்.

  இதை நீங்கள் ஒரு புத்தகமாக்கலாமே கோபு அண்ணன்?.

  நல்ல நல்ல குட்டிக் குட்டிச் சம்பவங்களோடு கதை கூறிச் செல்லும் விதம், படிக்க இன்றஸ்ட்டாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 26. வியப்பை மென்மேலும் பெருக்கும் அற்புத நிகழ்வுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 27. Beautiful incidents and a very lovely post. Thank you very much sir for sharing it with us...

  பதிலளிநீக்கு
 28. பழையது’ என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவில்லை. ஆனால் ‘பழையது’ என்பதாலேயே அதை உதவாதது என்று ஒதுக்கி விடவும் கூடாது. அதன் பயன் என்னவென்று தேர்ந்து பார்த்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.//

  உண்மை. அருமையான அமுதமொழி.கல்கியில் ’தெய்வத்தின் குரல்’ என்று முன்பு படித்த அமுதமொழிகளை மீண்டும் உங்கள் பதிவில் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நன்றி உங்களுக்கு.
  பரணீதரன் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை படிக்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 29. 2 சம்பவங்களும் மெய்சிலிர்க்கிறது ஐயா..பெரியவர் பற்றி இன்னும் மிகபிரமிப்பா இருக்கு...

  பதிலளிநீக்கு
 30. நீங்கள் சொல்லிவரும் ஒவ்வொரு சம்பவமும் சிலிர்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.
  பெரியவாளின் முக்காலமும் அறியும் சக்தியும், அனுக்ரஹமும் அதிசயிக்க வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 31. //கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே கரை ஏதும் சரியாகப் போடாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடைத்துக்கொண்டு, நீர் முழுவதும் பாழாகி, ஊரும் பாழாக வேண்டியது தான்.//

  உண்மைதான்! இரண்டு சம்பவங்களும் ஆச்சரியமளித்தன! பகிர்விற்கு நன்றீ ஐயா!

  பதிலளிநீக்கு
 32. //கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே கரை ஏதும் சரியாகப் போடாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடைத்துக்கொண்டு, நீர் முழுவதும் பாழாகி, ஊரும் பாழாக வேண்டியது தான்.//

  உண்மைதான்! இரண்டு சம்பவங்களும் ஆச்சரியமளித்தன! பகிர்விற்கு நன்றீ ஐயா!

  பதிலளிநீக்கு
 33. இரண்டு சம்பவங்களும் மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தன. ஒவ்வொரு சம்பவமும் படிக்கும் போதும் மஹா பெரியவரின் மேல் இருக்கும் பக்தி கூடிக் கொண்டே போகிறது.

  பதிலளிநீக்கு
 34. தர்மங்களை எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.//

  உண்மைதான். இன்றைய குழந்தைகளுக்கு இது போல் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுபவர்கள் குறைந்து விட்டார்கள்.


  வீட்டுக்குள் நுழையும்போது இருள் விலகி, விடிந்து விட்டிருந்தது.//


  மகா பெரியவாளின் நடத்திய இந்த சம்பவங்களைப் படிக்கும் போது யாருக்காக இருந்தாலும் விடிந்து தான் போகும்.

  அதிசயம் ஆனால் உண்மை.

  இந்தப் பதிவில்தான் கோபு அண்ணா சஸ்பென்ஸ் எதுவும் வைக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 35. அன்பின் வை.கோ - பகீரதனின் அனுபவங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துஆள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 36. "கடன் பட்டார் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கம்பர் அழகாகத்தான் சொல்லியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 37. காலங்களை மீறி ஊடுருவி பார்க்கும்சக்தி பெரியவாளிடம் இருந்திருக்கு.நடந்த இந்த சம்பவத்தால் நம்மாலும் உணர முடிகிறது

  பதிலளிநீக்கு
 38. இன்னா இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதா. நெறய பேத்துக்கு நெறயா நல்லது செய்யுராங்க.

  பதிலளிநீக்கு
 39. அவனால் உன்னை என்ன செய்துவிடமுடியும் யாமிருக்க பயமேன் இதுபோல அமுத வார்த்தைகளை பெரியவாளைத்தவிர யாரால் சொல்லி இருக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 40. கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே கரை ஏதும் சரியாகப் போடாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடைத்துக்கொண்டு, நீர் முழுவதும் பாழாகி, ஊரும் பாழாக வேண்டியது தான்.///இன்றைய மழைக்கு அன்றே எழுதியதோ?

  பதிலளிநீக்கு
 41. “அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?”// ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டத்தில் தமக்காகவே சொல்லப்பட்ட வரிகளாகத் தோன்றும்...

  பதிலளிநீக்கு
 42. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (13.06.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=412970599205640

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு