திருச்சி BHEL எழுத்தாள நண்பர்கள் கூட்டம், 22.12.2019 ஞாயிறு மாலை 3 மணி முதல் 6 மணிவரை Dr. VGK [Dr. V.GOPALAKRISHNAN, Former EXECUTIVE DIRECTOR, BHEL] அவர்கள் தலைமையில், திருச்சி ரஸிக ரஞ்சன ஸபா வளாகத்தில், இனிதே நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பலரும் பணிஓய்வு பெற்றவர்களாகவே இருந்ததால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததும், அவரவர்கள் பற்றிய அறிமுகங்கள் + அனுபவங்களை கருத்துக்களாகப் பகிர்ந்துகொண்டதும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தன.
YOU-TUBE FRIENDS OF 2019
'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில், யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வரும், திரு. பரத் சுப்ரமணியன், பெங்களூர் அவர்கள், அடியேனின் குரலில் மேற்படி மூன்று ஆடியோக்களை You Tube இல் வெளியிட்டுச் சிறப்பித்திருந்தார்கள். இதன் மூலம் இந்த ஆண்டில் [2019] மட்டும், இதுவரை 186 புதிய நண்பர்கள் என்னுடைய மின்னஞ்சல் தொடர்பில் வந்துள்ளனர். அதில் சுமார் 10 நபர்கள் தினமும் எனது வாட்ஸ்-அப் வட்டத்தில் உள்ளனர். அவர்களில் இரு பெண்மணிகள், என் இல்லத்திற்கே நேரில் வருகை தந்து, இப்போது நெருங்கிய குடும்ப நண்பர்களாகவே ஆகி விட்டனர்.
(1) திருச்சியைச் சேர்ந்த திருமதி. பத்மா சுரேஷ் அவர்கள், தன் கணவர் மற்றும் மாமனார் அவர்களுடன் முதன் முறையாக, என்னை சந்தித்த நாள்: 03.01.2019. மாதாமாதம் எங்கள் குடும்பத்தில் நடைபெற்றுவரும் அனுஷ பூஜைக்கு ஆர்வத்துடன் வருகை தந்து பங்கெடுத்து வருகிறார்கள்.
கணித மேதை இராமானுஜம் அவர்களின் மறுபிறவியோ இவர்கள் என நான் பலமுறை வியந்ததுண்டு. அந்த அளவுக்குக் கணிதத்தில் புலியாக இருக்கும் இவர்களிடம், எனக்கு ஓர் தனிப் பிரியமும், பாசமும் ஏற்பட்டுள்ளதில் வியப்பு ஏதும் இல்லை. கணிதம் மட்டுமா .. இவர்களின் ஆங்கில அறிவு அதற்கும் மேலாக. மொத்தத்தில் MASTER OF ALL SUBJECTS இவர்கள்! தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் என பலமொழிப் புலமை வாய்ந்தவர்களும்கூட. சுறுசுறுப்பிலும், அடுத்தடுத்துப் புனிதப் பயணங்கள் மேற்கொள்வதிலும் ஓர் சிட்டுக்குருவி போலவும் திகழ்பவர்கள்.
உலக மஹா சோம்பேறியான நான் இவர்களைப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொள்வதும் உண்டு. :)
oooooOooooo
2) பெங்களூரைச் சேர்ந்த திருமதி. சந்தியா என்கிற மந்தாகினி ஜானகிராமன் R. எங்களின் முதல் சந்திப்பு: 28.10.2019 ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் தீவிர பக்தையான இவள், எங்கள் குடும்பத்தில் உள்ள பொக்கிஷமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாதுகைகளை தன் குடும்பத்தாருடன் 28.10.2019 அன்று தரிஸித்துக்கொண்டாள்.
கலையுணர்வுகள் கொண்ட அவள், தன் கைப்பட எனக்காகவே செய்துகொண்டு வந்த மிகச்சிறிய, ஜொலிக்கும் வெல்வெட் பாதுகைகள் ஒரு ஜோடி இதோ:
29.10.2019 அன்று, எனது வழிகாட்டுதல்களின் படி, திருச்சி திருவானைக்கோயில் சங்கரமடத்தில் முகாமிட்டிருந்த ஸ்ரீ பாலபெரியவா அவர்களை, தன் வாழ்நாளில் முதன்முறையாக, நன்கு திவ்ய தரிஸனம் செய்துகொண்டு, அவர்களின் திருக்கரங்களால், நேரிடையாக பிரஸாதம் கிடைக்கும் பாக்யம் பெற்றாள்.
30.10.2019 ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அவளின் ஒன்றுவிட்ட சகோதரரின் திருமண நிகழ்ச்சிக்கு எங்களையும் கட்டாயப்படுத்தி வரச்சொல்லி அழைத்து, தன் அப்பா, அம்மா, மாமியார், நாத்தனார்கள் போன்ற அனைத்து உறவினர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்து பூரிப்படைந்து மகிழ்ந்தாள். அவளின் குழந்தைத்தனம், கிளி கொஞ்சும் பேச்சு, எப்போதுமே சிரித்த முகம் ஆகியவை எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தின.
பாசமுள்ள பெற்றோருக்கு ஒரே வாரிசான மகள்
2014-ம் ஆண்டு டிஸம்பர் மாதம் அடியேன் ’துபாய்’க்கு சுற்றுலா சென்றிருந்த போது என் மூத்த பிள்ளை எனக்கு ஓர் புத்தம்புதிய SAMSUNG MOBILE PHONE வாங்கிக்கொடுத்திருந்தார்.
அதைப்பற்றிகூட படங்களுடன் எனது பதிவினில் வெளியிட்டிருந்தேன்.
http://gopu1949.blogspot.com/2014/12/blog-post.html
மிகச் சரியாக ஐந்து ஆண்டுகள் நன்கு உழைத்த அது, சற்றே தளர்ந்து, பணிஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அதை யாரிடம் கொடுத்து எப்படி பழுதுபார்ப்பது என நினைத்துக்கொண்டிருந்த என்னிடம், நானே சற்றும் எதிர்பாராத நிலையில், 24.12.2019 அன்று திருச்சிக்கு நேரில் வருகை புரிந்த என் மூத்த மகனால் வேறொரு புத்தம்புதிய SAMSUNG MOBILE SET எனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
TIMELY SUPPLY !
1980 வரை நான் குடியிருந்த பகுதியில், என் அண்டைவீட்டில், எனக்குத்தெரிந்து, 1963-இல் பிறந்து வளர்ந்த பொடியன் G. கண்ணன், இன்று ஓர் மிகப்பெரிய, மிடுக்கான, காவல் துறை அதிகாரியாக என் கண்முன் காட்சியளித்து, என்னை மகிழ்வித்த நாள்: 29.12.2019
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின், மலரும் நினைவுகளாக இந்த சந்திப்பு, அகஸ்மாத்தாக நிகழ்ந்தது என்னை மிகவும் மகிழ்வித்தது.
அனைவருக்கும்
2020
ஆங்கிலப் புத்தாண்டு
மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துகள்.