என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 7 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-4


நூலைப்பற்றியதோர் சுருக்கமான அறிமுகம்:

மன்னர் ஷாஜி-II, கும்பகோணம் அருகிலுள்ள திருவிசை நல்லூரில், 1693-இல், சாஸ்திரங்கள் படிக்க ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். 

கோபாலகிருஷ்ண சாஸ்திரி (பின்னர் ஒரு சமஸ்கிருத இலக்கண கர்த்தா ஆனவர்), சதாசிவ பிரம்மேந்திரர் (பின்னர் ஒரு யோகியாக பெயர் பெற்றவர்) இருவரும் அங்கு மாணவர்களாகச் சேர்ந்து நண்பர்களானார்கள். கெளண்டின்ய கோத்ரத்தைச் சேர்ந்த யக்ஞராம தீக்ஷிதரின் மகனும், கண்டர மாணிக்க பிரஹசரணக்காரருமான, ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர் மேற்படி இருவரின் குருவாக இருந்தார். 

கண்டர மாணிக்கம் என்ற இந்த ஊர் குடவாசலுக்கு அருகில் உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவிலும் இதே ’கண்டர மாணிக்கம்’ என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது.  

ரிக் வேத பண்டிதரான ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர் ஒரு மிகப்பெரிய சமஸ்கிருத அறிஞர் மட்டுமல்ல. அதில் அவர் பல நூல்களை எழுதியுள்ளவர். வேதப் படிப்பு முடிந்தபின் வேதாந்தம், இலக்கியம், தர்க்கம் முதலிய பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர்.  திருமலை நாயக்கரிடம் அமைச்சராக இருந்த நீலகண்ட தீக்ஷிதரின் சீடரும் ஆவார். 

ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதரால் இயற்றப்பட்டுள்ள 20 நூல்களில் மிக உயர்ந்து நிற்கும் மூன்று நூல்களைப்பற்றி, Dr. VGK அவர்கள், தனது நூலில் மிகவும் சிலாகித்துச் சொல்லியுள்ளார். மன்னர் ஷாஜியின் விருப்பத்தை, திவான் ஸ்ரீதர வெங்கடேசர் இவரிடம் தெரிவிக்க, இவரும் அதனை ஏற்றுக்கொண்டு, திருவிசை நல்லூருக்கே குடிபெயர்ந்து வந்து விடுகிறார். மேலும் பல ஆச்சர்யமான செய்திகள் Dr. VGK அவர்களின் நூலில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன.

^மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியின் 
அதிஷ்டானம், நமணசமுத்திரம்^
[புதுக்கோட்டையிலிருந்து 10 கிலோ மீட்டர்]
புதுக்கோட்டை-திருமயம் சாலையின் இடையே
சாலையை ஒட்டியுள்ள ஒரு மிகப்பெரிய வறண்ட ஏரிக்கு அப்பால்
தேக்காட்டூர் நோக்கிச் செல்லும் பாதைக்கு முன்பு பிரியும் 
ஓர் மண் சாலையில் அமைந்துள்ளது.
மேலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


^சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர்^

மிகச் சிறந்த சிவ பக்தரான ‘ஸ்ரீதர வெங்கடேசர்’ அரசனின் திவானாக பொறுப்பில் இருந்துகொண்டு, அதே திருவிசை நல்லூரில் வாழ்ந்து வந்தார்.


 


^தன் தபோ வலிமையால், ’கங்காஷ்டகம்’ இயற்றி, கங்கையை தன் வீட்டுக் கிணற்றில் பொங்கி வரச் செய்த, திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயர்வாள் அவர்கள், மக்கள் நன்மைகளுக்காக மட்டுமே மன்னரிடம் திவானாக பணியில் இருந்தவர்.^


போதேந்திர சரஸ்வதி, பரம சிவேந்திர சரஸ்வதி போன்ற துறவிகளின் மடங்கள் அருகில் இருந்தன. தாயுமானவர், அபிராமி பட்டர், நாராயண தீர்த்தர், பாஸ்கர ராயர் போன்ற சில மகான்களும் அதே காலத்தில் அதே பகுதியில் வாழ்ந்தவர்கள். அது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது அதற்கு ஒரு பின்னணி அல்லது நோக்கம் இருந்ததா என்பது ஒரு தந்திரமான கேள்வி.
 

^ஸ்ரீ பகவன்நாம போதேந்திராள் அதிஷ்டான கோபுரம்
கோவிந்தபுரம் - கும்பகோணம்.^

^தாயுமானவர் சமாதியில் அவரது திரு உருவம்^

^அமாவாசையில் தோன்றிய முழு  நிலவு - அபிராமி அம்மை^
^வரஹூர் செல்லும் நாராயண் தீர்த்தரும், வெண் பன்றியும்^


இசை, இலக்கியம், மதம், தத்துவம் ஆகிய துறைகளில் மறுமலர்ச்சி ஏற்பட்ட அதே சமயத்தில், அரசியல் குழப்பங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் ஆகியவைகளும் பெரிய அளவில் நிலவின. அப்போதிருந்த குறுநில மன்னர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்டும், கட்சி மாறிக்கொண்டும் இருந்தனர். ஆங்கில பிரஞ்சு வர்த்தகர்கள், நாடு பிடிக்கும் ஆசையில், இந்தச் சண்டைகளில் தங்கள் மூக்கை நுழைத்தனர்.  இறுதியில் ஆங்கிலேயர் வென்று, தமிழ்நாட்டில் காலூன்றினர். பின்னர் அவர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்றினர்.

மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியின் பரம்பரையில் வந்த இந்நூலின் ஆசிரியர் Dr. VGK அவர்கள், தனது மூதாதையரைப்பற்றியும், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் அறிய முற்பட்டபோது கிடைத்த பல அரிய சுவாரஸ்யமான தகவல்களைத் திரட்டி, அவற்றை ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.  அப்போது வாழ்ந்த மகான்கள், மன்னர்களின் வாழ்க்கைகளின் மூலம், அக்காலக் கட்டத்தைப் பற்றிய ஒரு அழகிய, பரந்த காட்சியை இந்நூல் நம் கண்களுக்குக் காட்டுகிறது.

தொடரும்...


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

41 கருத்துகள்:

 1. //தன் தபோ வலிமையால், ’கங்காஷ்டகம்’ இயற்றி, கங்கையை தன் வீட்டுக் கிணற்றில் பொங்கி வரச் செய்த, திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயர்வாள் அவர்கள்,//

  கார்த்திகை அமாவாசையன்று கிணற்றில் கங்கை நீர் பொங்கி வரும். அன்று அங்கு போய் நீராடி இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கார்த்திகை அமாவாசையன்று கிணற்றில் கங்கை நீர் பொங்கி வரும். அன்று அங்கு போய் நீராடி இருக்கிறோம்.//

   மிகவும் சந்தோஷம். நான் இதைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டுள்ளேன். Dr VGK அவர்களும் இதுபற்றி விரிவாக நிறையவே எழுதியுள்ளார்கள்.

   இதில் தனக்கு ஒருமுறை ஏற்பட்ட அனுபவத்தை சற்றே நகைச்சுவை கலந்து குறிப்பிட்டுள்ளார்கள். :)

   நீக்கு
 2. ஸ்ரீ பகவன்நாம போதேந்திராள் அதிஷ்டானம் அமைந்துள்ள
  கோவிந்தபுரம் போய் இருக்கிறோம்.
  இப்போது நம் பதிவர் அப்பாதுரை அவர்கள் அம்மா கோவிந்தபுரத்தில் வசிப்பது நினைவுக்கு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு December 7, 2019 at 10:41 AM

   //ஸ்ரீ பகவன்நாம போதேந்திராள் அதிஷ்டானம் அமைந்துள்ள கோவிந்தபுரம் போய் இருக்கிறோம்.//

   நானும் இந்த அதிஷ்டானத்திற்கு சென்று வந்துள்ளேன். இதற்குப் போகும் வழியில் தான், சற்று முன்பாக, இப்போது சுமார் 20 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ள மிகவும் பிரும்மாண்டமான ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் உள்ளது. அங்கு சென்றுவரும் பாக்யம் கிடைத்தது.

   //இப்போது நம் பதிவர் அப்பாதுரை அவர்கள் அம்மா கோவிந்தபுரத்தில் வசிப்பது நினைவுக்கு வரும்.//

   ஆமாம். என்னை நேரில் சந்திக்க என் இல்லத்திற்கு 04.01.2013 அன்று வருகை தந்த பதிவர் அப்பாதுரை, தன் அம்மா அங்கு கோவிந்தபுரத்தில் இருப்பதாக என்னிடம் சொன்னார். http://gopu1949.blogspot.com/2015/02/2-of-6.html

   நீக்கு
 3. மகான்களின் வாழ்க்கை வரலாறை படிக்க தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு December 7, 2019 at 10:42 AM

   //மகான்களின் வாழ்க்கை வரலாறை படிக்க தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 4. நிறைய மகான்களின் வாழ்க்கை, அதிஷ்டானம் இவைகளைப்பற்றி எல்லாம் குறிப்புகள் இருக்கிறதா? இண்டெரெஸ்டிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:45 AM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //நிறைய மகான்களின் வாழ்க்கை, அதிஷ்டானம் இவைகளைப்பற்றி எல்லாம் குறிப்புகள் இருக்கிறதா? இண்டெரெஸ்டிங்.//

   அதெல்லாம் நிறையவே உள்ளன. இண்டெரெஸ்டிங் ஆகவும் உள்ளன.

   நீக்கு
 5. புத்தகத்திலிருந்து நீங்கள் படங்களை நன்றாக எடுத்துப் போடவில்லை. மச மசவென இருக்கின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:46 AM

   //புத்தகத்திலிருந்து நீங்கள் படங்களை நன்றாக எடுத்துப் போடவில்லை. மச மசவென இருக்கின்றன.//

   மசமசப்பான ஆசாமியான நான், ஏதோ எனக்குத் தெரிந்தவரை, முடிந்தவரை முக்கியப் படங்களைப் பிடித்துப் போட்டுள்ளேன். 304 பக்கங்கள் கொண்ட புத்தம்புதிய குண்டு புத்தகமாக இருப்பதால் அதனை நன்கு அகட்டி, போட்டோ பிடிப்பது கஷ்டமாக இருந்தது எனக்கு. ஓரளவுக்கு மேல் அகட்டினால் புத்தகத்தின் தையல் பிரிந்து போய்விடும் ஆபத்தும் உள்ளதே, ஸ்வாமீ.

   நீக்கு
 6. நீங்களும் நிறைய படங்கள் (ஏதோ புத்தக அறிமுக விழா போல் தெரிகிறது) போட்டிருக்கீங்க, யார், எவர் என்றெல்லாம் குறிப்புகள் கொடுக்காமல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழன் December 7, 2019 at 10:47 AM

   //நீங்களும் நிறைய படங்கள் (ஏதோ புத்தக அறிமுக விழா போல் தெரிகிறது) போட்டிருக்கீங்க, யார், எவர் என்றெல்லாம் குறிப்புகள் கொடுக்காமல்.//

   நான் அந்த விழாவுக்கு நேரில் செல்லவில்லை. மேலும் அதில் காட்சியளிப்போரில் 25% நபர்களை மட்டுமே எனக்குத் தெரியும். இப்படியிருக்கும்போது யார், எவர் என்று எவ்வாறு என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்?

   நீக்கு
 7. தொடரின் தலைப்பை மாற்றலாம். இது என் எண்ணம் மட்டுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி December 7, 2019 at 12:17 PM

   வாங்கோ, நமஸ்காரங்கள்.

   //தொடரின் தலைப்பை மாற்றலாம். இது என் எண்ணம் மட்டுமே.//

   ஒரே மிகச் சிறிய தொடரின் தொடர்ச்சியான 8 பகுதிகள் மட்டுமே என்பதால் இடையே தலைப்பை மாற்ற நான் விரும்பவில்லை. தலைப்பு உள்பட அனைத்தையும் விரிவாக யோசிக்க நேரமும் இல்லை. சூழ்நிலைகளும் இடம் கொடுக்கவில்லை.

   நீக்கு
 8. நல்லதொரு தொகுப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். December 7, 2019 at 6:03 PM

   //நல்லதொரு தொகுப்பாக இருக்கும் என்று தெரிகிறது.//

   ஆம். வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! நன்றி.

   நீக்கு
 9. சுவாரசியமான தகவல்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ravichandran M December 7, 2019 at 7:18 PM

   //சுவாரசியமான தகவல்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன அய்யா!//

   வாங்கோ, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 10. புத்தக அறிமுக விழா அருமையாக நடைபெற்றிருப்பது தெரிகிறது.. நீங்களும் போஈங்கதானே கோபு அண்ணன்? படத்தில் எங்கும் தேடிப்பார்த்தேன் உங்களைக் காணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகத்திலகம் அதிரா:) December 8, 2019 at 5:55 PM

   வாங்கோ அதிரா, வணக்கம். தினமும் ஒரு பெயர் மாற்றமா? அதுவும் நல்லா புதுமையாகத் தான் உள்ளது.

   //புத்தக அறிமுக விழா அருமையாக நடைபெற்றிருப்பது தெரிகிறது.. நீங்களும் போஈங்கதானே கோபு அண்ணன்? படத்தில் எங்கும் தேடிப்பார்த்தேன் உங்களைக் காணம்.//

   நான் மிகவும் உடல் இளைத்து, மெலிந்துபோய், ஸ்வீட் 16 வயதுப் பையன் போல, மாறி இருப்பதனால், உங்களால் என்னை படத்தில் அடையாளம் கண்டுபிடித்திருக்க முடியாது, அதிரா. :))))))

   நீக்கு
 11. புத்தக ஆரம்பமே எனக்கு தலை சுத்துது, என் சக்திக்கு மேற்பட்டதுபோல இருக்குது, வாயில் நுழையாத பெயர்களாக எழுதியிருக்கிறீங்க.. பார்ப்போம் போகப்போக எனக்கு ஏதும் புரிகிறதோ என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாயில் நுழையும் பேர்கள் உள்ள (வந்தியத் தேவன், குந்தவை, அருண்மொழி.......) புத்தகமே தலையணைக்குக் கீழே தூங்குது. இதுல 'வாயில் நுழையாத பெயர்கள்' என்று சொல்லிட்டீங்க. இதை எங்க படிக்கப்போறீங்க அதிரா?

   நீக்கு
  2. //இதுல 'வாயில் நுழையாத பெயர்கள்' என்று சொல்லிட்டீங்க. இதை எங்க படிக்கப்போறீங்க அதிரா?//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எப்போ சொன்னேன் படிப்பேன் எண்டு:))

   நீக்கு
  3. தியாகத்திலகம் அதிரா:) December 8, 2019 at 5:57 PM

   //புத்தக ஆரம்பமே எனக்கு தலை சுத்துது//

   Heartiest Congratulations. சந்தேகமே இல்லை, இது அந்த மயக்கமே தான். மஸக்கையேதான். உடனடியாக நல்ல லேடி டாக்டராகப் போய்ப் பாருங்கோ.

   கடைசியாக இரட்டைக்குழந்தை பிறந்து ஆறு வருஷங்களுக்கு மேல் ஆச்சே, அதிரா. மறந்துட்டீங்களா.

   இந்தாங்கோ இணைப்பு:
   http://gopu1949.blogspot.com/2013/09/45-2-6.html

   நீக்கு
 12. //அமாவாசையில் தோன்றிய முழு நிலவு - அபிராமி அம்மை^//

  ஓ அறிஞ்ச கதையின் படம்...

  புத்தகத்தைப் படமெடுக்கும்ப்போது, எதிலாவது சாத்தி நிறுத்தி வைத்துவிட்டு எடுங்கொ, சுவரில் அப்படி, அப்போ படம் தெளிவாக வரலாம், புத்தகத்தை கட்டிலில் நிலத்தில் விரித்து வைத்து எடுத்தால் கொஞ்சம் நேராக எடுப்பது கஸ்டமாக இருக்கும்.

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. ’இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 08.12.2019’ என்ற தலைப்பில் மேற்படி ’தியாகத்திலகம் அதிரா’ ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு: https://gokisha.blogspot.com/2019/12/blog-post_7.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FNKzNf+%28%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  ’அதிரா’வுக்கு என் அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://gokisha.blogspot.com/2019/12/blog-post_7.html?showComment=1575836334557#c3457512242624762091

   இதுதானே லிங்.. நீங்க ஏதோ பெரிசாக் குடுத்திருக்கிறீங்க:)

   நீக்கு
  2. To தியாகத்திலகம் அதிரா:)

   //இதுதானே லிங்.. நீங்க ஏதோ பெரிசாக் குடுத்திருக்கிறீங்க:)//

   நான் எது கொடுத்தாலும், மிக நீண்டதாக, மிகப்பெரிசாக, மிக அழகாக, மிக நிறைவாக, மிகவும் தாராளமாக, அள்ளி அள்ளிக் கொடுப்பதுதான் என் வழக்கம். அதற்கு ஓர் மிகச்சிறிய உதாரணமாக இதோ இந்தத் தொடர்களின் கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படங்களை மீண்டும் பார்த்து மகிழவும். :)
    
   http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html 

   http://gopu1949.blogspot.com/2017/06/7-of-8.html 

   எனது பெருந்தன்மைக்கு மேலும் சில உதாரணங்கள்:
   http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

   http://gopu1949.blogspot.com/2015/12/100-2015.html 
    

   நீக்கு
 14. சுவாரஸ்யமான தகவல்களை அறிய காத்திருக்கிறேன். திரு ஜீவி அவர்கள் சொல்லியுள்ளதுபோல் பதிவின் தலைப்பை மாற்றலாம் என்பது என் கருத்தும் கூட.

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. வாங்கோ பிரதர். வணக்கம்.

   //சுருக்கமான அறிமுகமே விரிவாக இருந்தது!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   ’நிரம்பி வழியும் காலிக் கோப்பை’ போலவா ?

   நீக்கு
 16. COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE  https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,
  -=-=-=-=-=-

  Ananthasayanam Thiruvenkatachary 

  கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

  ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.

  அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.

  இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.

  ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.

  இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.

  -=-=-=-=-=-  

  பதிலளிநீக்கு
 17. வாசிக்க ஆனந்தமாய். திரு VGK அவர்களின் அன்பிற்கு நானும் பாத்திரமாய் இருந்தேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிஷபன் December 17, 2019 at 11:35 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வாசிக்க ஆனந்தமாய். திரு VGK அவர்களின் அன்பிற்கு நானும் பாத்திரமாய் இருந்தேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி//

   Dr. VGK அவர்களின் அன்புக்கு, மிகச் சாதாரணமான நானே, எப்படியோ பாத்திரமாயிருக்கும் போது, மிகப்பிரபல எழுத்தாளராகிய தங்களை அவர் விட்டு விடுவாரா என்ன. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 18. Vignesh December 7, 2019 at 3:57 PM

  //.I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…//

  I do not understand who you are & What you say. OK...Bye.

  பதிலளிநீக்கு
 19. Dr.VGK அவர்களின் மூதாதையர் மற்றும் முன்வாழ்ந்த மகான்கள் குறித்த ஆய்வுகள் இந்நூலை எழுதத் தூண்டியிருக்கின்றன என்று அறிகிறேன். அவற்றைத் தாங்கள் விளக்கும் பாங்கும் சுவையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதமஞ்சரி January 16, 2020 at 3:04 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //Dr.VGK அவர்களின் மூதாதையர் மற்றும் முன்வாழ்ந்த மகான்கள் குறித்த ஆய்வுகள் இந்நூலை எழுதத் தூண்டியிருக்கின்றன என்று அறிகிறேன்.//

   ஆமாம். அதே, அதே!

   //அவற்றைத் தாங்கள் விளக்கும் பாங்கும் சுவையாக உள்ளது.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு