என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-1

அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம்.  நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இங்கு இந்த வலைத்தளத்தின் மூலம் தங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கும் பாக்யம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். 

சமீபத்தில் 18.11.2019 திங்கட்கிழமை மாலை வேளையில், திருச்சி, ’பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்’ டவுன்ஷிப் வளாகத்தில் உள்ள ’முத்தமிழ் மன்றத்தில்’ புதிய நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூல் ஆசிரியர்:- Dr. VGK  என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும், எங்கள் BHEL நிறுவனத்தின் முன்னாள் தலைவர் V.கோபாலகிருஷ்ணன் அவர்கள்:
Dr. V.GOPALAKRISHNAN
Former EXECUTUVE DIRECTOR of
BHARAT HEAVY ELECTRICALS LIMITED, 
TIRUCHIRAPPALLI 










 

மேற்படி விழா பற்றியும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள அவரின் இந்த அரிய பெரிய பொக்கிஷமான நூலின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் மேலும் சில பகுதிகளில் அடியேன் எழுத நினைத்துள்ளேன்.

தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]



60 கருத்துகள்:

  1. அப்பா... ஒரு வழியாக ஆறு மாத 'தூக்கம்' முடிந்துவிட்டதா?

    புதிய இடுகை வெளியிட்டிருக்கீங்களே... அதிலும் 'தொடரும்' என்பதோடு. தொடர்ந்து எழுதுவீங்களா கோபு சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும், வாங்கோ ஸ்வாமி... ஒலிக்கக் காணமே:)..

      நீக்கு
    2. நடக்காமலே..சும்மா வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், கிச்சனுக்குச் சென்று காஃபி போடக்கூட சோம்பேறித்தனமாக இருக்கும்.

      கோபு சார்..பிளாக்ஸ்பாட் பக்கமே வராம, அதிசயமா இடுகை போட்டுள்ளதால், அதற்கு பதில் எழுதுவதற்கும் சோம்பேறித்தனமாக இருக்கும்.

      நாமதான் கொஞ்சம் (நிறைய) காத்திருந்து பார்க்கணும்.

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் December 1, 2019 at 11:39 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //அப்பா... ஒரு வழியாக ஆறு மாத 'தூக்கம்' முடிந்துவிட்டதா?//

      நம்மில் யாராக இருப்பினும், எப்போதுமே ஜாக்ரத்-ஸ்பப்ன-ஸுஸுக்தி என்ற மூன்று அவஸ்தைகளில், ஏதேனும் ஒன்றுக்குள் மட்டுமே இருக்க இயலும் என்கிறது நமது வேதங்களும் சாஸ்திரங்களும். எனது தவப்பயனால் நான் இதில் அந்த மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்கத்தில் அடிக்கடி ஆழ்ந்து விடுவதால் இரவா பகலா என்பதே எனக்குத் தெரிவது இல்லை. அதனால், அடியேன்
      கடைசியாகப் பதிவிட்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் போலிருக்குது.

      //புதிய இடுகை வெளியிட்டிருக்கீங்களே... அதிலும் 'தொடரும்' என்பதோடு. தொடர்ந்து எழுதுவீங்களா கோபு சார்?//

      ‘தொடரும்’ என்று போட்டுவிட்டதால், இப்போது ஆரம்பித்துவிட்ட இந்த மிகச் சிறிய தொடரையாவது தொடர்ந்து நான் எழுதத்தான் வேண்டியிருக்கும்.

      நீக்கு
  2. புத்தகத் தலைப்பு சுவாரசியத்தை வரவழைக்கிறது.

    ஆற்றின் கரையில்தான் நாகரீகங்கள் தோன்றும். அங்குதான் கல்வியிற் சிறந்த மனிதர்களும் தோன்றுவார்கள்.

    சொந்த ஊர் பாசம் அதிகம் போல (புத்தக பின்பக்க அட்டையில் எழுதியுள்ளதைப் போல). அதனால் 'காவிரிக் கரையில் வாழ்ந்த மகான்களும் மன்னர்களும்' என்பது பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.

    சுவாரசியமாக இருக்கும் என்று புத்தகத்தின் தடிமன் தோன்றவைக்கிறது. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சொந்த ஊர் பாசம் அதிகம் போல//

      ஆம். குறிப்பாக அது எங்கள் திருச்சிக் காரர்களுக்கு மிகவும் அதிகம்தான், என்னைப்போலவே.

      //சுவாரசியமாக இருக்கும் என்று புத்தகத்தின் தடிமன் தோன்றவைக்கிறது.//

      தடிமனாக இருக்கும் ஆசாமிகளும், வஸ்துக்களும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது, என்னை நேரில் சந்தித்தபின், உங்களைத் தோன்றவைத்துள்ளது.
      http://gopu1949.blogspot.com/2018/11/blog-post.html

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம். இருக்கலாம்.

      நீக்கு
  3. இந்த 'கோபாலகிருஷ்ண சாஸ்திரி' என்பது கோபாலகிருஷ்ண பாரதியா? (சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்ற பாடலை எழுதிய)? அவர் மாயவரத்தில் வாழ்ந்து மறைந்தார் என்று உ.வெ.சு அவர்களின் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த 'கோபாலகிருஷ்ண சாஸ்திரி' என்பது கோபாலகிருஷ்ண பாரதியா?//

      இல்லை. இவர் வேறு. அவர் வேறு.

      இவர் (கோபாலகிருஷ்ண சாஸ்திரி) இல்லற வாழ்க்கை மேற்கொண்டு, 4 பிள்ளைகள் + 8 பெண்கள் ஆக 12 குழந்தைகளுக்குத் தகப்பனாராக இருந்து, கடைசிகாலத்தில் ஆபத் சந்நியாசம் வாங்கிக்கொண்டுள்ள மிகப்பெரிய சமஸ்கிருத அறிஞர் + மஹான்.

      இவரின் 68-வது வயதில் புதுக்கோட்டை மன்னரால், தனது ராஜகுருவாக நியமித்துக்கொள்ளப் பட்டவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டாகும்.

      தமிழ்ப் பாடலாசிரியரான கோபாலகிருஷ்ண பாரதி (1811 முதல் 1881 வரை, 70 ஆண்டுகள், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்). இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தவர். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தவர். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தவர்.

      நீக்கு
  4. பதிப்பித்திருக்கும் பக்கங்களிலேயே நிறைய எழுத்து/சொல் பிழைகளைக் காண்கிறேனே...

    வேலூர் (வெல்லூர் என்று உள்ளது), திருவானைக்கோயில் - திருவானைக்காவல் கோவில், பிக்‌ஷண்டர் கோவில் - பிக்‌ஷாண்டார் கோயில்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் பெயர்கள் மற்றும் ஆசாமிகள் பெயர்களை ஒவ்வொருவரும் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், உச்சரித்துக்கொள்ளலாம், அதுபோல எழுதியும் கொள்ளலாம். இதையெல்லாம் எழுத்துப்பிழை என்றோ, சொற்பிழை என்றோ நாம் கூறிவிட முடியாது.

      நீக்கு
  5. நூலின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிய ஆவல்.
    நலம் தானே நீங்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு December 1, 2019 at 2:55 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நூலின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிய ஆவல்.//

      மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து வருகை தாருங்கள், மேடம்.

      //நலம் தானே நீங்கள். வாழ்க வளமுடன்.//

      நான் ஏதோ இறைவன் அருளால் நலமாகவே உள்ளேன். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு பின்னூட்டம் மூலம் சந்தித்ததில் மகிழ்ச்சி. தங்களின் அன்புக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  6. வி கொபாலகிருஷ்ணன் பிஎச் இ எல் முன்னாள்தலைவரா புதிய செய்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ, வணக்கம்.

      //முன்னாள்தலைவரா புதிய செய்தி//

      ஆம். 1969 முதல் 2006 வரை, பெரும்பாலும் இவர் திருச்சியிலும், இடையே கொஞ்ச காலங்கள் மட்டும் சென்னை மற்றும் புதுடெல்லியிலும் இருந்துள்ளார்.

      நீக்கு
  7. ஒரு வேளைநன் வந்தபின் பதையில் இருந்தாரோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுபற்றி அடியேனுக்கு சரிவரத் தெரியவில்லை. வயதில் தங்களைவிட சுமார் 10 ஆண்டுகள் ஜூனியர் அவர்.

      நீக்கு
  8. பணி சிறக்க இறைவனின் பேரருளுடன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மகிழ்ச்சி. நூல் வெளியீட்டிற்கும், உங்களின் நீண்ட இடைவெளிக்குப் பின்னான பதிவிற்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் December 1, 2019 at 4:41 PM

      //மகிழ்ச்சி. நூல் வெளியீட்டிற்கும், உங்களின் நீண்ட இடைவெளிக்குப் பின்னான பதிவிற்கும்.//

      மிக்க மகிழ்ச்சி. அடியேனின் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தங்களின் அன்பு வருகைக்கு எனது அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  10. வரவேற்கின்றோம். பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vasudevan S December 1, 2019 at 4:42 PM

      //வரவேற்கின்றோம். பணி தொடரட்டும்.//

      வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி

      நீக்கு
  11. BHEL நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு V.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ‘காவிரிகரையில் வாழ்ந்த மன்னர்களும் மகான்களும்’ என்ற நூல் வெளியீட்டுவிழா தங்களை மீண்டும் வலையுலகத்திற்கு வர காரணமாக இருந்தது என அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    நூலின் தலைப்பே இதுவரை அறியப்படாத அறிய தகவல்களைத் தரும் களஞ்சியம் என் நினைக்கிறேன். நூல் வெளியீட்டு விழா பற்றியும், அவரின் இந்த அரிய நூலின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தாங்கள் எழுதவுள்ளதை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி December 1, 2019 at 4:46 PM

      வாங்கோ, வணக்கம்.

      //BHEL நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு V.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ‘காவிரிகரையில் வாழ்ந்த மன்னர்களும் மகான்களும்’ என்ற நூல் வெளியீட்டுவிழா தங்களை மீண்டும் வலையுலகத்திற்கு வர காரணமாக இருந்தது என அறிந்து மிக்க மகிழ்ச்சி.//

      மிகவும் சந்தோஷம்.

      //நூலின் தலைப்பே இதுவரை அறியப்படாத அறிய தகவல்களைத் தரும் களஞ்சியம் என் நினைக்கிறேன். நூல் வெளியீட்டு விழா பற்றியும், அவரின் இந்த அரிய நூலின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தாங்கள் எழுதவுள்ளதை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், என் எழுத்துக்களைப் படிக்கக் காத்திருக்கும் தங்கள் ஆர்வத்திற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. ஸ்ரீராம். December 1, 2019 at 5:01 PM

      வாங்கோ மை டியர் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !’ வணக்கம்.

      //வருக... வருக... தொடர்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். தொடர்ந்து வாங்கோ.

      நீக்கு
  13. தங்கள் வருகை எனக்கும் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வருவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராய செல்லப்பா December 1, 2019 at 5:05 PM

      ஆஹா, வாங்கோ ... வணக்கம். அத்திப்பூத்தது போன்ற
      தங்களின் இந்த அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //தங்கள் வருகை எனக்கும் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வருவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது... வாழ்த்துக்கள்!//

      வாங்கோ, வாங்கோ, கட்டாயமாக வாங்கோ. WELCOME !

      நாம் நேரில் சந்தித்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது. http://gopu1949.blogspot.com/2018/01/blog-post_8.html தலைப்பு: ’ஹனிமூன் வந்துள்ள பதிவர்.’

      நீக்கு
  14. பதில்கள்
    1. ப.கந்தசாமி December 1, 2019 at 5:48 PM

      அடடா, வாங்கோ ஸார், நமஸ்காரங்கள். நல்லா இருக்கீங்களா?

      //மிக்க மகிழ்ச்சி.//

      நம் மும்முறை (ஹாட்ரிக்) நேரடி சந்திப்புக்களை நினைத்து நானும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      http://gopu1949.blogspot.com/2017/03/15032017.html
      முனைவர் ஐயாவுடன் ஹாட்-ட்ரிக் சந்திப்பு - 15.03.2017

      http://gopu1949.blogspot.com/2017/03/81.html
      சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞர்

      நீக்கு
  15. ஆஆஆஆஆஆ கோபு அண்ணன் இங்கேயா இருக்கிறார், கோபு அண்ணன் பெயரிலேயே இன்னொருவரோ...

    தேடாத இடமெல்லாம் தேடி“னோம்”:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்த்திகைப்பிறை அதிரா! December 2, 2019 at 12:25 AM
      ஆஹா.... வாங்கோ அதிரா, வணக்கம். அது என்ன கார்த்திகைப் பிறை? ஓஓஓஓ நான் பிறந்த மாதம் கார்த்திகை ஆச்சே! அதனால் கோபு அண்ணன் நினைவாக ‘கார்த்திகைப்பிறை’ என பெயரை மாற்றிக்கொண்டு பின்னூட்டமிட வந்து விட்டீர்களோ? சபாஷ் ஸ்வீட் சிக்ஸ்டீன் ! :)

      //ஆஆஆஆஆஆ கோபு அண்ணன் இங்கேயா இருக்கிறார், கோபு அண்ணன் பெயரிலேயே இன்னொருவரோ...// ஆம். அதே அதே .... எப்படிக் கண்டுபிடித்’தேள்’?

      //தேடாத இடமெல்லாம் தேடி“னோம்”:).//

      ’இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கே அலைகின்றார் எங்கட ஞானத்தங்கம்’ அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ! :) !

      நீக்கு
  16. புத்தக அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள், தொடருங்கோ.. எதையாவது தொடர்ந்து, புளொக்குக்குள் , நம் கண்பார்வைக்கு எட்டிய தூரத்துள் இருங்கோ.. அதுவே நமக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் எத்தனை முறை நான் சொல்லியாச்சு. அவர் கேட்டால்தானே.

      அவங்க வீட்டுல, அவருடைய சொகுசு மெத்தையை வேறு யாருக்கேனும் அலாட் பண்ணினால்தான், கோபு சாருக்கு சுறுசுறுப்பு மீண்டும் வரலாம். இல்லைனா, மனிதர் சுகமாக படுத்துக்கொண்டே காலம் கழிக்கிறார் போலத் தெரிகிறது.

      நீக்கு
    2. நீங்க சொல்லி ஆரு கேய்க்கப்போறா நெ தமிழன்:) ஹா ஹா ஹா ஹையோ அவர் சுறுசுறுப்பாகிட்டால் பின்பு நாங்க இருந்த பாடில்லை:)... எதுக்கும் இன்னொரு பக்கெட் குண்டாவுடன் ஒருக்கால் போய்க் கோபு அண்ணனைப் பார்த்திட்டு வாங்கோ நெ தமிழன்:)... இன்னொரு போஸ்ட் வருமெல்லோ:)..

      நீக்கு
    3. கார்த்திகைப்பிறை அதிரா! December 2, 2019 at 12:26 AM

      //புத்தக அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்,//

      மிக்க மகிழ்ச்சி, அதிரா !

      //தொடருங்கோ.. எதையாவது தொடர்ந்து, புளொக்குக்குள், நம் கண்பார்வைக்கு எட்டிய தூரத்துள் இருங்கோ.. அதுவே நமக்கு மகிழ்ச்சி.//

      தங்களின் பிரியமான ஆலோசனைக்கு என் நன்றிகள், அதிரா.

      (ஸ்வீட் குண்டா மீண்டும் எப்போ வருமாம்? இரகசியமாகக் கேட்டுச் சொல்லுங்கோ) :))))

      எங்கட அதிரா எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணும் என்பதுதான் எனது ஆசையும்.

      நீக்கு
  17. அது உண்மையில் மாக்கோலமோ? ஏதோ கார்பெட் விரிச்சதைப்போல இருக்கு.

    வழமையாக பேனாவுடன் தானே போஸ் குடுப்பார்ர்.. இதென்ன இம்முறை கும்பிட்டுக்கொண்டு?:) புயுப்பயக்கம்?:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ரங்கோலி வகைக் கோலம்னு தோணுது. இதெல்லாம் கோபு சாருக்குத் தெரியுமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. ஹா ஹா ஹா

      //வழமையாக பேனாவுடன்// - அதாவது எப்போதும் இணையத்தில் இடுகைகள் போட்டால், அந்தப் படமே போதும். இதுவோ, தொகுதியில் காணாமல் போன சட்ட மன்ற உறுப்பினர், அடுத்த எலெக்‌ஷனுக்கு நிற்கும்போது கைகூப்பி போஸ் கொடுப்பது போல போஸ்டர் அடிச்சு, மக்களுக்கு 'நான் தான் காணாமல் போன எம்.எல்.ஏ' என்று சொல்வதைப் போல போஸ்டர் ஒட்டுவாங்க. அதைத்தான் கோபு சாரும் செய்கிறாரோ என்பது என் சந்தேகம்.

      அவர் 'இல்லை' என்று சொன்னால் அதை 'நம்பக்கூடாது' என்பது சரியாக இருக்கும். ஹா ஹா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா திருச்சி மலைக் கோட்டை எம் எல் ஏ ஆகிட்டாரோ?:)... கட்டிலில் இருந்துகொண்டே ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. கார்த்திகைப்பிறை அதிரா!December 2, 2019 at 12:27 AM//

      அது உண்மையில் மாக்கோலமோ? ஏதோ கார்பெட் விரிச்சதைப்போல இருக்கு.//

      ஆமாம். அது என்ன கோலமோ .. யார் போட்ட கோலமோ! ஆனால் பார்க்க சூப்பரா இருக்குது. தங்கள் ரஸனைக்கு நன்றி, அதிரா.

      //வழமையாக பேனாவுடன் தானே போஸ் குடுப்பார்ர்.. இதென்ன இம்முறை கும்பிட்டுக்கொண்டு?:) புயுப்பயக்கம்?:)) ஹா ஹா ஹா...//

      அது வந்து அதிரா ..... முன்பெல்லாம் நான் பதிவு கொடுத்தால், நூற்றுக்கணக்கான ரஸிகர்+ரஸிகைப் பட்டாளம் பின்னூட்டமிட, மிக நீண்ட க்யூ வரிசையில் வரும் என்பது தங்களுக்கே நன்கு தெரியும். நடுவில் ஆறு மாதங்களுக்கும் மேல் நானும் பதிவு கொடுக்காமல், பிறர் பதிவுகள் பக்கமும் எட்டிப்பார்க்காமல், கும்பகர்ணன் போலத் தூங்கிப்போய் விட்டேனா .... அதற்காகத்தான்  ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டுட்டேன். அப்படியும் எனது பதிவுக்கு ரெகுலராக வந்து கொண்டிருந்த ஒரு செட்-ஆஃப்-லேடீஸ் எங்கு போனார்களோ .. தெரியலை ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((((((  

      நீக்கு
  18. வாழ்த்துகள் ஐயா...

    தொடர வேண்டுகிறேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  19. லேபிள்ல, Dr VGK's நூல் அறிமுகம், என்று போட்டிருக்கிறீர்களே.. எப்போ நீங்க டாக்டரேட் வாங்கினீர்கள் என்று யோசித்தேன். இதனை, வி.ஜி.கே செய்யும் நூல் அறிமுகம் என்றும் புரிந்துகொள்ளலாம் இல்லையா? டாக்டர் வி.ஜி.கே எழுதிய நூலின் அறிமுகம் என்பதுதான் சரியான தமிழா இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் சந்தேகம் மிகவும் நியாயமானது. மிக்க நன்றி.
      இப்போது தங்களுக்கு சந்தேகம் ஏதும் ஏற்படாதபடி லேபிளில் அதனைக் கொஞ்சம் மாற்றிவிட்டேன். :)

      நீக்கு
  20. மகிழ்வுடன் ஆர்வமாய் தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yaathoramani.blogspot.com December 2, 2019 at 9:25 PM

      வாங்கோ Mr RAMANI Sir வணக்கம்.

      //மகிழ்வுடன் ஆர்வமாய் தொடர்கிறோம்...//

      மிகவும் சந்தோஷம். தொடர்ந்து வாங்கோ.

      நீக்கு
  21. எழுத்தோய்விலிருந்து தாங்கள் மீண்டெழுந்து பதிவுலகுக்கு வருகை தந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் பெயரிலேயே இன்னொருவர் என்பது பதிவை முழுவதும் வாசித்த பிறகுதான் புரிந்தது. நூல் குறித்த தங்கள் கருத்துகளை அறிய ஆவலோடு தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி December 3, 2019 at 8:20 AM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //எழுத்தோய்விலிருந்து தாங்கள் மீண்டெழுந்து பதிவுலகுக்கு வருகை தந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் பெயரிலேயே இன்னொருவர் என்பது பதிவை முழுவதும் வாசித்த பிறகுதான் புரிந்தது. நூல் குறித்த தங்கள் கருத்துகளை அறிய ஆவலோடு தொடர்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான விரிவான கருத்துக்களுக்கும், ஆவலுடன் தொடர நினைப்பதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      ’அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....’

      http://gopu1949.blogspot.com/2018/02/blog-post_23.html
      ’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் !

      பிரியத்துடன் கோபு

      நீக்கு
  22. கோபு அண்ணா
    ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் வலை உலகத்தை எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் போது முதலில் கண்ணில் பட்டது உங்கள் பதிவு.

    அடுத்தவங்கள பாராட்டறதிலயும், கௌரவிக்கறதிலயும் உங்களுக்கு நிகர் நீங்க மட்டுமே தான்.
    வாழ்த்துக்கள்.

    இன்னும் 2, 3 நாட்களில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீக மணம் வீசும் December 3, 2019 at 12:45 PM

      வாங்கோ மை டியர் ஜெயா, வணக்கம்மா.

      //கோபு அண்ணா, ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் வலை உலகத்தை எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் போது முதலில் கண்ணில் பட்டது உங்கள் பதிவு.//

      அடடா .... அப்படியா, ஆச்சர்யமாக உள்ளதும்மா.

      //அடுத்தவங்கள பாராட்டறதிலயும், கௌரவிக்கறதிலயும் உங்களுக்கு நிகர் நீங்க மட்டுமே தான். வாழ்த்துக்கள்.//

      ஆஹா ... ஏதேதோ இப்படிச் சொல்லுறீங்களே, ஜெயா. எனினும் சந்தோஷம்மா.

      //இன்னும் 2, 3 நாட்களில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு.//

      அது என்னவென்று தெரியாமல் எனக்கு என் தலையே வெடிச்சிரும் போலிருக்குதே ! :)))))

      http://gopu1949.blogspot.com/2019/12/blog-post.html
      மீண்டும் ’ஜெ’ !
      வெற்றிடம் இல்லை !!
      ஆளுமை உண்டு !!!

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  23. வணக்கம் கோபு சார்! நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நானும் ஓராண்டுக்கு மேலாக எதுவும் எழுதவில்லை. இப்போது தான் வலையுலகம் களை கட்டத் துவங்கியுள்ளது. இனி தான் நானும் துவங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy December 3, 2019 at 4:28 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வணக்கம் கோபு சார்! நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.//

      மிகவும் சந்தோஷம். 

      //நானும் ஓராண்டுக்கு மேலாக எதுவும் எழுதவில்லை.//

      ஆமாம். நானும் கவனித்தேன்.

      //இப்போது தான் வலையுலகம் களை கட்டத் துவங்கியுள்ளது.//

      ஆஹா ! :)))))) 

      //இனி தான் நானும் துவங்க வேண்டும்.//

      சீக்கரமாகத்துவங்கி நிறைய எழுதுங்கோ. வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      நினைவில் நிற்கும் பதிவு: 
      http://gopu1949.blogspot.com/2014/11/part-1-of-4.html   
      ”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  24. ம்...
    அடுத்தடுத்த பதிவுகளில்,
    விஷயங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  25. COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE  https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,
    -=-=-=-=-=-

    Ananthasayanam Thiruvenkatachary 

    கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.

    அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.

    இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.

    ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.

    இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.

    -=-=-=-=-=-  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.//

      ஆஹா, கோடி கோடியாய் இன்பம் தரும் கோலாகல வரிகள் இவை.

      //ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.//

      அடாடா ..... மனித மனங்களை அறிவுபூர்வமாக உணர்ந்து, மனப்பூர்வமாக எழுத்தில் வடித்து அசத்தியுள்ளீர்கள்.

      //அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.//

      இங்கு திருச்சியில் அடிக்கும் வெயிலுக்கு, எங்கள் இருவரையுமே ஜில்லென்று குளிர வைத்து அசத்திவிட்டீர்கள்.

      //இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள். ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.//

      நகைச்சுவைக்காக மட்டுமே சொன்னது என்றாலும், எதையும் சொல்லுவோர் சொன்னால் அதில் ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. அதனால் நாங்களும் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டியுள்ளது.

      //இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்...அடியேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆழமான, விரிவான, விசித்திரமான, வித்யாசமான, விலாவரியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள், ஆசிகள் மற்றும் நன்றிகள். ALL THE BEST, Sir ! 🙏😂🤣🍎🤣😂🙏

      Affectionately yours,
      V.Gopalakrishnan

      நீக்கு
  26. அற்புதமான பல்லவி..சீரிய.சரணங்களுக்காக ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:52 AM

      வாங்கோ Mr. RAMANI Sir,

      //அற்புதமான பல்லவி..சீரிய.சரணங்களுக்காக ஆவலுடன்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, Sir.

      நீக்கு