18.11.2019 திங்கட்கிழமை
Dr. VGK
அவர்களால் வெளியிடப்பட்ட
தமிழ் நூலின் தலைப்பு:
காவிரிக்கரையில் வாழ்ந்த
ஆங்கில நூலின் தலைப்பு:
Saints and Kings from the
Kaveri Belt of Tamilnadu ...
விழாவுக்கான அழைப்பிதழ்:
நூல் வெளியீட்டு விழாவில் நேரில் கலந்துகொண்டு, நூலின் தமிழ் பிரதி ஒன்றினை Dr. VGK அவர்களின் கையொப்பத்துடன் வாங்கி வந்து எனக்கு அன்பளிப்பாக அளித்துள்ளவர்: G.SRIDHAR, MANAGER / FINANCE, BHEL, திருச்சி அவர்கள். அவருக்கு அடியேனின் நன்றிகளை இங்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விலை மதிப்பற்ற இந்த புத்தகத்தின் விலை ரூ. 301-00 என பதிப்பாளர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நமது வலைத்தள வாசகர்களுக்காக மட்டும், பதிவுத் தபால் செலவு உள்பட, விசேஷ தள்ளுபடி விலையான ரூ. 250 க்கு இந்த நூலை நாம், உடனடியாக வரவழைத்துக்கொள்ள முடியும். அதற்கான வழி முறைகளை இனிவரும் அடுத்த பகுதிகளில் விரிவாகச் சொல்ல நினைக்கிறேன்.
மேற்படி நூலுக்கு கீழ்க்கண்ட மூவர் வெகு அழகாக அணிந்துரை அளித்து சிறப்பித்துள்ளனர்.
1) திரு. ஆர். பத்மநாபன் அவர்கள். இன்றைய ’செயலாண்மை இயக்குனர்’, பாரத மிகு மின் நிறுவனம், திருச்சி குழுமம், திருச்சி-14
2) பேராசிரியர் திரு. என். ராஜேந்திரன், துணை வேந்தர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.
3) முனைவர் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாற்றாசிரியர் + தொல்பொருள் ஆராய்ச்சியாளர், தஞ்சாவூர்.
மஹான்களைப் பற்றிய செய்திகளுடன் கூடிய மேற்படி நூல் எனது கைகளுக்குக் கிடைத்த தினம்: 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பிரதோஷம் + சுப முஹூர்த்த தினம்.
மஹான்களைப் பற்றிய செய்திகளுடன் கூடிய மேற்படி நூல் எனது கைகளுக்குக் கிடைத்த தினம்: 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பிரதோஷம் + சுப முஹூர்த்த தினம்.
Dr. VGK அவர்களின் அறிமுகத்துடன் தொடங்கும், 304 பக்கங்கள் கொண்ட, மிகச் சுவையான இந்தத் தமிழ் நூலின் முதல் 170 பக்கங்களை, இதுவரை மனதில் வாங்கிக்கொண்டு, ரஸித்து, ருசித்து அசை போட்டு படித்து முடித்துள்ளேன். மிகவும் பொக்கிஷமான இந்த நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவங்களை மேலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லுவேன்.
நூலை வாங்கித் தங்களுக்கு அளித்தவர் தங்கள் மகன் என்று நினைக்கிறேன். நூலை ரசித்து வாசித்திருப்பதை தங்கள் பதிவு வாயிலாக உணரமுடிகிறது. மேலும் அறிந்துகொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகீதமஞ்சரி December 3, 2019 at 8:22 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//நூலை வாங்கித் தங்களுக்கு அளித்தவர் தங்கள் மகன் என்று நினைக்கிறேன்.//
ஆமாம் மேடம். மிகச்சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டீர்கள். அவர்தான் என் மூன்று மகன்களில் கடைக்குட்டி. கைக்குழந்தை. His DOB: 28.04.1982 :)
‘வெற்றித் திருமகன்’ http://gopu1949.blogspot.com/2013/12/100-2-2.html
//நூலை ரசித்து வாசித்திருப்பதை தங்கள் பதிவு வாயிலாக உணரமுடிகிறது. மேலும் அறிந்துகொள்ள தொடர்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா...
வாங்கோ Mr. DD Sir. மிக்க நன்றி.
நீக்கு'இந்தத் தமிழ் நூலின் முதல் 170 பக்கங்களை, இதுவரை மனதில் வாங்கிக்கொண்டு,... '
பதிலளிநீக்குமனதில் வாங்கிக் கொண்டு என்று சொல்லியிருக்கிறீர்களே, எனக்கு மிகவும் பிடித்துப் போன வாக்கியம் அது. இதைப் பற்றித் தான் இப்பொழுது மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மனத்தில் வாங்கிக் கொள்வதில் பிறப்பவை தான் -- நீங்கள் சொல்லியிருக்கிற ரசித்து, ருசித்து, அசை போட்டு எல்லாம்!
மனதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றால் இதெல்லாம் முடிந்திருக்காது!..
ஜீவி December 3, 2019 at 1:53 PM
நீக்குவாங்கோ ஸார். நமஸ்காரங்கள் ஸார். தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது.
**'இந்தத் தமிழ் நூலின் முதல் 170 பக்கங்களை, இதுவரை மனதில் வாங்கிக்கொண்டு,... '**
//மனதில் வாங்கிக் கொண்டு என்று சொல்லியிருக்கிறீர்களே, எனக்கு மிகவும் பிடித்துப் போன வாக்கியம் அது. இதைப் பற்றித் தான் இப்பொழுது மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். மனத்தில் வாங்கிக் கொள்வதில் பிறப்பவை தான் -- நீங்கள் சொல்லியிருக்கிற ரசித்து, ருசித்து, அசை போட்டு எல்லாம்! மனதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றால் இதெல்லாம் முடிந்திருக்காது!..//
மிகச்சரியாக, வெகு அழகாக இதனை இங்கு விளக்கிச் சொல்லியுள்ளீர்கள்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறது .....
http://gopu1949.blogspot.com/2014/11/blog-post_7.html
சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழா - நன்றி அறிவிப்பு
உங்க பையன் நூலை உங்களுக்காக அவரிடமிருந்து வாங்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் அச்சடிக்கும் பக்கத்தின் எண்ணிக்கை, புத்தகத்தின் விலை ஆகிவிட்டது.
நெல்லைத்தமிழன் December 3, 2019 at 1:55 PM
நீக்குவாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.
//உங்க பையன் நூலை உங்களுக்காக அவரிடமிருந்து வாங்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.//
தங்கள் யூகம் மிகச் சரியானதுதான்.
//இப்போதெல்லாம் அச்சடிக்கும் பக்கத்தின் எண்ணிக்கை, புத்தகத்தின் விலை ஆகிவிட்டது.//
ஆமாம். கிட்டத்தட்ட அப்படியேதான்.
இந்த மாதிரி புத்தகங்கள் அச்சடித்து வெளியிடுவது நல்லதா இல்லை பிடிஎஃபில் பிறருக்கு, பணம் வாங்கிக்கொண்டு (அதாவது 30-40% பணம்) அனுப்புவது நல்லதா?
பதிலளிநீக்குபி.டி.எஃப் நிறைய பேரைப் போய்ச்சேருமே..
நெல்லைத்தமிழன் December 3, 2019 at 1:56 PM
நீக்கு//இந்த மாதிரி புத்தகங்கள் அச்சடித்து வெளியிடுவது நல்லதா இல்லை பிடிஎஃபில் பிறருக்கு, பணம் வாங்கிக்கொண்டு (அதாவது 30-40% பணம்) அனுப்புவது நல்லதா?//
எனக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை ஸ்வாமீ. வியாபார நோக்குடன் நூல் வெளியிடுவோரைக் கேட்டால் மட்டுமே தெரியவரும். நான் இதுவரை வெளியிட்டுள்ள மூன்று சிறுகதைத்தொகுப்பு நூல்களுமே, ஒவ்வொன்றிலும் 300 பிரதிகள் வீதம், நானே காசு போட்டு வாங்கி, எங்கள் வீட்டில் நிகழ்ந்த விழாக்களில் கலந்துகொண்ட நண்பர்கள் + உறவினர்களுக்கு, அன்பளிப்பாக மட்டுமே கொடுக்கப்பட்டவையாகும். இதோ அதற்கான ஒரு சாம்பிள் பதிவின் இணைப்பு (படங்களுடன்):
http://gopu1949.blogspot.com/2015/02/2-of-6.html
சந்தித்த வேளையில் ....... பகுதி 2 of 6
//பி.டி.எஃப் நிறைய பேரைப் போய்ச்சேருமே..//
Please refer:
http://gopu1949.blogspot.com/2017/03/blog-post_30.html
மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் !
அனுபவித்துப் படித்துத் தொடங்கி இருக்கிறீர்கள். நீங்கள் ரசித்ததை நானும் றைக்கக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//றைக்கக்//
நீக்குரசிக்க!
வாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ வணக்கம். மிக்க நன்றி. தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.
நீக்குமஹான்களைப் பற்றிய செய்திகளை படிப்பதே நல்லவேளைதான்.
பதிலளிநீக்குநீங்கள் படித்தவைகளை பகிரும் போது படிக்க வருகிறேன்.
கோமதி அரசு December 3, 2019 at 3:26 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//மஹான்களைப் பற்றிய செய்திகளை படிப்பதே நல்லவேளைதான்.//
ஆமாம். சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
//நீங்கள் படித்தவைகளை பகிரும் போது படிக்க வருகிறேன்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
உங்கள் வாசிப்பு அனுபவங்களை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம். தொடருங்கள்.
பதிலளிநீக்குKalayarassy December 3, 2019 at 4:31 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//உங்கள் வாசிப்பு அனுபவங்களை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம். தொடருங்கள்.//
இந்தத்தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் வருகையை ஆவலுடன் நானும் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து வாருங்கள் மேடம்.
நன்றியுடன் கோபு
பல நாட்களுக்குப்பின் வலையுலகிற்கு வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி!
பதிலளிநீக்குநூலின் சாராம்சம் தங்களின் எழுத்து மூலம் மேலும் மெருகேறி எங்களுக்கு வாசிக்கக் கிடைக்குமென்று நம்புகிறேன்!
மனோ சாமிநாதன் December 3, 2019 at 11:49 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//பல நாட்களுக்குப்பின் வலையுலகிற்கு வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி!//
தங்களை இங்கு பின்னூட்டம் வாயிலாக சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
//நூலின் சாராம்சம் தங்களின் எழுத்து மூலம் மேலும் மெருகேறி எங்களுக்கு வாசிக்கக் கிடைக்குமென்று நம்புகிறேன்!//
மிகவும் சந்தோஷம். தங்களின் நம்பிக்கை வீண் போகாது என நானும் நம்புகிறேன். மிக்க நன்றி, மேடம்.
தங்களின் வாசிப்பு அனுபவங்களை அறிய காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி December 4, 2019 at 5:06 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்களின் வாசிப்பு அனுபவங்களை அறிய காத்திருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
Sooooper gopala
பதிலளிநீக்குUnknown December 11, 2019 at 5:05 PM
நீக்குவாங்கோ குருமூர்த்தி, வணக்கம். ‘கோபாலா’ என்று எழுதியுள்ளதால் நம் குருமூர்த்தியாகத்தான் இருக்கும் என யூகித்து விட்டேன்.
//Sooooper gopala//
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. :)
சுவையான
பதிலளிநீக்குமுன்னேற்பாடுகள்!!!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் December 11,2019 at 10:35 PM
நீக்குவாங்கோ பிரதர், வணக்கம்.
//சுவையான முன்னேற்பாடுகள்!!!//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,
பதிலளிநீக்கு-=-=-=-=-=-
Ananthasayanam Thiruvenkatachary
கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.
அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.
இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.
ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.
இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.
-=-=-=-=-=-
எனக்கும் புத்தகம் கிடைத்து விட்டது.. வாங்கி விட்டேன். வாசிப்பில் இப்போது
பதிலளிநீக்குரிஷபன் December 13, 2019 at 10:53 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//எனக்கும் புத்தகம் கிடைத்து விட்டது.. வாங்கி விட்டேன்.//
ஆஹா, மிகவும் அதிர்ஷ்டசாலியான அந்த புத்தகம், மிகச் சரியான ஒரு நபரின் கைகளில் தவழுகிறது என்பதைக் கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//வாசிப்பில் இப்போது//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. நடக்கட்டும். :)
ஆவலுடன் தொடர்கிறோம்..வாழ்த்துக்களுடன்...
பதிலளிநீக்குYaathoramani.blogspot.com December 16, 2019 at 8:54 AM
நீக்குவாங்கோ மை டியர் ரமணி, ஸார். வணக்கம்.
//ஆவலுடன் தொடர்கிறோம்..வாழ்த்துக்களுடன்...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.