என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 16 டிசம்பர், 2019

மீண்டும் ’ஜெ’ ! வெற்றிடம் இல்லை !! ஆளுமை உண்டு !!!


தினமும் இரவு என் மனைவி, சயனம் செய்ய 
உபயோகிக்கும் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து,  
வெற்றிடத்தை நிரப்பிய ‘ஜெ’


இடது கையை ஓங்கி தன் ஆத்துக்காரரிடம் திருப்பி
தன் ஆளுமையை நிரூபிக்கும் ‘ஜெ’


ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்பு தன் அன்பினால் 
எங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்
மீண்டும் ஆட்சி புரிய வந்த ‘ஜெ’ !


எங்கள் இல்லத்தில் அமரச் செய்து எடுத்த புகைப்படம்
ஜே ஜே .... ’ஜெயந்தி ரமணி’ தம்பதி

^’ஜெ’ கூட்டணியில் 
நாங்களும் சேர்ந்தோம்^


^ஜெயந்தி ரமணி தம்பதியினர்
எங்களை நமஸ்கரித்து அன்புடன் அளித்துள்ள
புடவை, ரவிக்கைத்துணி, வேஷ்டி, டி ஷர்ட்
மற்றும்  அமெரிக்கா சாக்லேட்ஸ்^

கங்கைச் சொம்பு + இரு பாதங்கள்

நேபாளம் பசுபதிநாதர் கோயிலில் வாங்கப்பட்டுள்ள
^தட்டுடன் கூடிய இரு பாதுகைகள்^
எனக்கே .... எனக்காக !


எனது அன்றாட பூஜையில் வைக்கப்பட்டுள்ள 
^’ஜெ’ கொடுத்த மேற்படி பாதுகைகள்^ 
  

  
^பிரியத்துடன் ‘ஜெ’ கொடுத்த டி ஷர்ட்டை
14.12.2019 கார்த்திகை புனர்பூச நக்ஷத்திரப் பிறந்த நாளில்
அணிந்து மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட படங்கள்^
{என் தொந்தி சற்றே பெரிதாகத் தெரிகிறதோ?}

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html
’உனக்கே உனக்காக !’


சுமார் ஐந்து-ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது அன்புக்குரிய பதிவர், திருமதி. ஜெயந்தி ஜெயா 06.12.2019 வெள்ளிக்கிழமையன்று, தன் கணவருடன், இரண்டாம் முறையாக என் இல்லத்திற்கு, திடீர் வருகை தந்து மகிழ்வித்திருந்தாள்.  இரவு சுமார் 7 மணிமுதல் 9 மணி வரை எங்கள் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

”மணம் (மனம்) வீசும்” பதிவர்  'ஜெ’
http://manammanamviisum.blogspot.in/

எங்களின் முதல் சந்திப்பு (25.02.2014) பற்றிய படங்கள் ஏற்கனவே ’பனை (பண) விசிறி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதற்கான இணைப்பு இதோ:  http://gopu1949.blogspot.com/2014/03/blog-post_29.html  

  

எங்களுடைய நெருங்கிய நட்புக்கு உதாரணமான மேலும் சில பதிவுகள்:
அறுபதிலும் ஆசை வரும் !

பூம்..பூம்...பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி !

நேயர் கடிதம் - 9 திருமதி. ஜெயந்தி ரமணி 


சாதனையாளர் விருது - ஜெயந்தி ரமணி


http://manammanamveesum.blogspot.com/2014/07/blog-post.html
அண்ணா வீடு எங்கே, .... இன்னும் கொஞ்சம் தூரம்

https://manammanamveesum.blogspot.com/2019/12/blog-post.html
வாழ்த்துகள்

http://manammanamveesum.blogspot.com/2015/11/1.html
பிறந்த வீட்டு சீதனம் 



எனது பாசத்திற்குரிய பதிவுலக தோழி, திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்திலிருந்து எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த ‘காமதேனு பெரியவா’ படத்தைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டாள் ‘ஜெ’ 

ஜெயஸ்ரீ

 


எனது அன்புக்குரிய பதிவுலக தோழி,  திருமதி. ஆச்சி, ஹரியானாவிலிருந்து எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்த கலைநயம் மிக்க பீங்கான் கோப்பையை எடுத்து ஆசையுடன் தொட்டுத் தடவிப்பார்த்து மகிழ்ந்தாள் ‘ஜெ’

                               
தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் எங்கட ஆச்சி

 

 


எனது சந்திப்புக்குப்பின்
’கொடநாடு எஸ்டேட் பங்களா’விலிருந்து
’சென்னை கோட்டை’க்குத் திரும்பிய ‘ஜெ’ -
கார்த்திகை தீபத் திருநாள் (10.12.19) 
அன்று அன்புடன் அனுப்பியுள்ள படங்கள்


லயா - ஜெயா - தியா
தன் (பிள்ளை வழிப்) பேத்திகளான 
லயா-தியாவுடன் எங்கட ஜெயா !

^’ஜெ’ யின் (பெண் வழி) ஒரே அருமைப் பேரன்^
[10.12.2019 அமெரிக்காவில் எடுத்த புகைப்படம்]
[DOB : 27.07.2019 - BORN AT USA]



அபூர்வப் பேரனின் பிரஸவத்திற்காக
அமெரிக்கா சென்று வெற்றிகரமாகத் 
திரும்பியுள்ள ‘ஜெ’




‘ஜெ’

ஜெய ஜெய ஜெய ஜெயா !
  

வஸுதேவஸுதம் தேவம், கம்ஸசாணூர மர்தனம்,
தேவகீ பரமானந்தம், க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]



40 கருத்துகள்:

  1. அற்புதமாகத் தொகுத்துக் கொடுத்த விதம் பிரமிக்க வைக்கிறது...இந்தத் தொகுப்பில் இடம் பிடிப்பவர்கள் எல்லாம் நிச்சயம் பாக்கியசாலிகளே..பாக்கியசாலிகளும் பாக்கியசாலிகளாக்கிய பதிவுலக பிதாமகருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. ( தற்சமயம் சிங்கப்பூரில் இருப்பதால் பதிவுகளை எல்லாம் படித்து இரசித்து பின்னூட்டமிடமுடியவில்லையே என்கிற ஆதங்கத்துடன்..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:36AM

      வாங்கோ மை டியர் ரமணி சார், வணக்கம்.

      //அற்புதமாகத் தொகுத்துக் கொடுத்த விதம் பிரமிக்க வைக்கிறது...//

      மிகவும் சந்தோஷம். இந்தப்பதிவுக்கான தங்களின் முதல் வருகை என்னையும் பிரமிக்க வைக்கிறது. மிக்க நன்றி, சார்.

      //இந்தத் தொகுப்பில் இடம் பிடிப்பவர்கள் எல்லாம் நிச்சயம் பாக்கியசாலிகளே..பாக்கியசாலிகளும் பாக்கியசாலிகளாக்கிய பதிவுலக பிதாமகருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..//

      ஆஹா, ஒருசில வார்த்தைகள் மட்டுமே சொன்னாலும், மிகவும் அருமையாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.......

      1) http://gopu1949.blogspot.com/2014/11/part-1-of-4.html ”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]

      2) http://gopu1949.blogspot.com/2014/01/vgk-01-01-03.html முதல் ஜாங்கிரி

      3) http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

      4) http://gopu1949.blogspot.com/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html

      5) http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html தாங்கள் பெற்றிருந்த தொடர்ச்சியானப் பரிசுகள். :)))))

      //( தற்சமயம் சிங்கப்பூரில் இருப்பதால் பதிவுகளை எல்லாம் படித்து இரசித்து பின்னூட்டமிட முடியவில்லையே என்கிற ஆதங்கத்துடன்..)//

      அதனால் பரவாயில்லை, சார். தாங்கள் மட்டுமல்ல, என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகி வந்த நூற்றுக்கணக்கான தோழிகளும், தோழர்களும் இப்போது காணாமல் போய் உள்ளனர். :(( நான் இப்போதெல்லாம் வலைப்பக்கம் பதிவிடவோ, பின்னூட்டமிடவோ வருவதில்லை என்பதே இதற்கான முக்கியமான காரணமாக இருக்க வேண்டும்.

      பின்னூட்டங்களுக்காகப் பதிவிடுவதை நானும் இப்போதெல்லாம் நிறுத்திக்கொண்டு விட்டேன். நூல் அறிமுகம், பதிவர் சந்திப்பு போன்ற, ஒரு சில முக்கிய நிகழ்வுகளை மட்டும், என் பதிவினில் ஏற்றிக்கொண்டால், எனக்கே பிற்காலத்தில், அவை ஓர் Back Reference க்கு உபயோகப்படலாம் என்பதால் மட்டுமே பதிவிட்டுக்கொண்டு வருகிறேன்.

      அப்படியும் என்னை மறக்காமல், இப்போதும் என் பதிவுகளுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டு வரும் தங்களைப் போன்ற ஒருசிலரை தலைவணங்கிப் பாராட்டி, நன்றி சொல்ல விரும்புகிறேன்.

      என்றும் அன்புடன் கோபு

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      You are the correct person to ask. Is sharing in Google not available now. If it is available, please tell how to share.

      நீக்கு
    2. //இடது கையை ஓங்கி தன் ஆத்துக்காரரிடம் திருப்பி
      தன் ஆளுமையை நிரூபிக்கும் ‘ஜெ’//

      அப்பாவி அண்ணா.

      நீங்கள் சொல்வது நிஜமாகாதா என்று 36 வருடங்கள், 7 மாதங்கள், 16 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன், அது நிஜமாகாது என்று தெரிந்திருந்தும்.

      நீக்கு
    3. //ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்பு தன் அன்பினால்
      எங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்
      மீண்டும் ஆட்சி புரிய வந்த ‘ஜெ’ !//

      அது எங்கள் பாக்கியம்.

      நீக்கு
    4. //எங்கள் இல்லத்தில் அமரச் செய்து எடுத்த புகைப்படம்
      ஜே ஜே .... ’ஜெயந்தி ரமணி’ தம்பதி//

      எனக்கு ரொம்ப பிடித்த எங்கள் புகைப்படம். நன்றி, நன்றி, நன்றி.

      நீக்கு
    5. //^’ஜெ’ கூட்டணியில்
      நாங்களும் சேர்ந்தோம்^//

      யாருக்கும் தொல்லை தராத ஒரு நல்ல கூட்டணி.

      நீக்கு
    6. //^ஜெயந்தி ரமணி தம்பதியினர்
      எங்களை நமஸ்கரித்து அன்புடன் அளித்துள்ள
      புடவை, ரவிக்கைத்துணி, வேஷ்டி, டி ஷர்ட்
      மற்றும் அமெரிக்கா சாக்லேட்ஸ்^//

      ரொம்ப சாதாரணமான பரிசுகள். உங்களுக்கு 70 வது பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்திருந்தால் இன்னும் அசத்தி இருப்போம்.

      நீக்கு
    7. ^ஜெயந்தி ரமணி தம்பதியினர்
      எங்களை நமஸ்கரித்து அன்புடன் அளித்துள்ள
      புடவை, ரவிக்கைத்துணி, வேஷ்டி, டி ஷர்ட்
      மற்றும் அமெரிக்கா சாக்லேட்ஸ்^//


      ரொம்ப சாதாரணமான பரிசுகள். உங்களுக்கு 70 வது பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்திருந்தால் இன்னும் அசத்தி இருப்போம்.

      நீக்கு
    8. //கங்கைச் சொம்பு + இரு பாதங்கள்//

      2014 ஆம் வருடம் காசிக்குச் சென்ற போது வாங்கியவை. கோபு அண்ணாவிற்கென்று பத்திரமாக எடுத்து வைத்திருந்தேன்.

      நீக்கு
    9. //நேபாளம் பசுபதிநாதர் கோயிலில் வாங்கப்பட்டுள்ள
      ^தட்டுடன் கூடிய இரு பாதுகைகள்^
      எனக்கே .... எனக்காக !//

      உங்களுக்காகவே தான். 2017 ஆம் ஆண்டு நேபாளம் சென்றிருந்த போது வாங்கியது.

      நீக்கு
    10. //எனது அன்றாட பூஜையில் வைக்கப்பட்டுள்ள
      ^’ஜெ’ கொடுத்த மேற்படி பாதுகைகள்^ //

      தன்யனானேன்.

      நீக்கு
    11. //^பிரியத்துடன் ‘ஜெ’ கொடுத்த டி ஷர்ட்டை
      14.12.2019 கார்த்திகை புனர்பூச நக்ஷத்திரப் பிறந்த நாளில்
      அணிந்து மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட படங்கள்^


      {என் தொந்தி சற்றே பெரிதாகத் தெரிகிறதோ?}//


      தொந்தி உள்ளவாளுக்கு தெரியத்தானே செய்யும்.

      நீக்கு
    12. திண்டுக்கல் தனபாலன் December 16, 2019 at 8:44 AM

      வாங்கோ மை டியர் DD Sir, வணக்கம்.

      //மகிழ்ச்சி... வாழ்த்துகள்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  3. //அற்புதமாகத் தொகுத்துக் கொடுத்த விதம் பிரமிக்க வைக்கிறது...இந்தத் தொகுப்பில் இடம் பிடிப்பவர்கள் எல்லாம் நிச்சயம் பாக்கியசாலிகளே..//

    முற்றிலும் உண்மை.

    பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பது போல் கோபு அண்ணாவின் பதிவில் இடம் பிடிப்பவர்கள் எல்லோரும் மிகுந்த பாக்கியசாலிகளே.

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. Dr B Jambulingam

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //சந்திப்புக்கள் அருமை.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  5. அன்பும், பாசமும் நிறைந்த பதிவர் சந்திப்பு.
    வாழ்த்துக்கள். நட்பு வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு December 16, 2019 at 3:37 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அன்பும், பாசமும் நிறைந்த பதிவர் சந்திப்பு.
      வாழ்த்துக்கள். நட்பு வாழ்க வளமுடன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  6. தலைப்பைப் பார்த்து, கோபு அண்ணன் ஏதோ அரசியலில் குதிச்சிட்டார் எனத் திறக்காமல் இருந்தேன் போஸ்ட்டை... பின்பு வாறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வருகை தந்து பின்னூட்டம் இடும் அதிராவைக் காணோமே என்று நினைத்தேன்.

      நீக்கு
    2. தியாகத்திலகம் அதிரா:) December 16, 2019 at 5:45 PM


      //தலைப்பைப் பார்த்து, கோபு அண்ணன் ஏதோ அரசியலில் குதிச்சிட்டார் எனத் திறக்காமல் இருந்தேன் போஸ்ட்டை... பின்பு வாறேன்.//

      இதுபோலச் சொல்லிச் சென்று பிறகு வருவதே இல்லை.
      கடந்த 4-5 பதிவுகளாக ஆளையே காணும். கர்ர்ர்ர்ர்ர்ர் !

      http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html

      இந்த மேற்படி தொடர் பதிவுகளின் அடியில், அடியேன் அள்ளி அள்ளி அதிராவுக்குத்தந்த பரிசுகள் யாவும் சுத்த வேஸ்ட் ஆகி விட்டன. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

      நீக்கு
  7. அனைவரையும் சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்தமைக்கு பாராட்டுகள்! தங்கள் பேரில் உள்ள அன்பாலும் மரியாதையாலும் பரிசுப்பொருட்களையும் பூஜைப்பொருட்களையும் வழங்கி உங்கள் இல்லத்திலும் இதயத்திலும் ஆட்சியுரிய வந்த திருமதி ஜெயா அவர்கட்கு பாராட்டுகள். அவர் தந்த புதிய சட்டையுடன் மிடுக்காக தெரியும்போது தொந்தி இருப்பது தெரியவில்லை. சந்திப்பை சுவையாய் வழங்கியமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சந்திப்பை சுவையாய் வழங்கியமைக்கு பாராட்டுகள்!//

      அது அவருக்கே உரிய கலை அல்லவா?

      நீக்கு
    2. //எனது சந்திப்புக்குப்பின்
      ’கொடநாடு எஸ்டேட் பங்களா’விலிருந்து
      ’சென்னை கோட்டை’க்குத் திரும்பிய ‘ஜெ’ -
      கார்த்திகை தீபத் திருநாள் (10.12.19)
      அன்று அன்புடன் அனுப்பியுள்ள படங்கள்//

      அந்த பங்களாவை காம்பவுண்டு சுவருக்கு வெளியே நின்றுதான் பார்த்திருக்கேன். உள்ளே விட மாட்டங்களே.

      நீக்கு
    3. வே.நடனசபாபதி December 17, 2019 at 12:13 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைவரையும் சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்தமைக்கு பாராட்டுகள்!//

      ஆஹா, சந்தோஷம். அப்படியும் பெரிதாக யாரும் இங்கு வந்து கருத்தளிக்கக்காணும். இருப்பினும் பதிவுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காட்டியுள்ளதில், ஏதோவொரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

      //தங்கள் பேரில் உள்ள அன்பாலும் மரியாதையாலும் பரிசுப்பொருட்களையும் பூஜைப்பொருட்களையும் வழங்கி உங்கள் இல்லத்திலும் இதயத்திலும் ஆட்சியுரிய வந்த திருமதி ஜெயா அவர்கட்கு பாராட்டுகள்.//

      நேரில் வருகை தந்து, மிக அதிகமாக அன்பு செலுத்துபவர்களைக் கண்டால், நான் கொஞ்சம் அச்சப்படுவதும், கூச்சப்படுவது உண்டு. முடிந்தவரை சந்திப்புக்களை தவிர்த்துவிடவும் முயற்சிப்பது உண்டு. ஆனால் இந்த ஜெயா விஷயத்தில் அப்படி இல்லை. மிகவும் ஸ்வாதீனமான, நெருங்கிய உறவுக்காரி போல நடந்துகொள்ளும் தனி டைப்பாக அவள் இருக்கிறாள். ஏதோ பூர்வ ஜென்ம உறவு, இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது என நினைத்து மகிழ்கிறேன்.

      //அவர் தந்த புதிய சட்டையுடன் மிடுக்காக தெரியும்போது தொந்தி இருப்பது தெரியவில்லை.//

      அப்படியா ! .... மிக்க நன்றி. என்னதான் நாம் மேக்-அப் செய்து, கொஞ்சம் மறைத்துக் கொண்டாலும், நம்மிடம் இயற்கையாக இருப்பது எல்லாம் அப்படியே புகைப்படத்தில் பளிச்சென்று விழத்தான் விழும். முழுப் பூசணிக்கா (போன்ற தொந்தியை) யை சோற்றில் (புகைப்படத்தில்) மறைக்க முடியாது. :)

      //சந்திப்பை சுவையாய் வழங்கியமைக்கு பாராட்டுகள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  8. சந்திப்பை சுவாரஷ்யாமாக படங்களுடன் தந்திருக்கின்றீர்கள். உங்கள் ஆழமான அன்பு இவ்வரிகளில் காணுகின்றேன். அன்பளிப்புக்கள் வழங்கியது மட்டுமல்லாமல் உங்களின் வீட்டிர்க்கு வந்து இன்பம் அனுபவித்த திருமதி ஜெ அவர்களுக்கும் வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kowsy  December 19, 2019 at 12:09 AMவாங்கோ, வணக்கம். 

      //சந்திப்பை சுவாரஷ்யமாக படங்களுடன் தந்திருக்கின்றீர்கள்.//

      தங்களின் சமீபத்திய http://www.gowsy.com/2019/12/1.html பதிவை விடவா, இதில் அதிக சுவாரஸ்யம் உள்ளது? :))))) 

      //உங்கள் ஆழமான அன்பு இவ்வரிகளில் காணுகின்றேன்.//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி. ஏதோ எனக்குத் தோன்றியவற்றை, அவசரமாக அள்ளித்தெளித்து ஓர் பதிவாக வெளியிட்டுள்ளேன். அதையே தாங்கள் இங்கு ’ஆழமான அன்பு’ என்று சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

      //அன்பளிப்புக்கள் வழங்கியது மட்டுமல்லாமல், உங்களின் வீட்டிற்க்கு வந்து இன்பம் அனுபவித்த திருமதி ஜெ அவர்களுக்கும் வாழ்த்துகள்.//

      உண்மையில், இன்பம் அனுபவித்தாளா அல்லது துன்பம் அனுபவித்தாளா என்பதை, அவளின் உள் மனதில் புகுந்து போய் ஆராய்ந்தால் மட்டுமே நம்மால் கண்டுபிடிக்க இயலும். :)) 

      எனினும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  9. ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களையும் கூடவே சகோதரி திருமதி.ஜெயந்தி ரமணி அவர்களையும் புகைப்படத்தில் பார்த்த போது மனதுக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது. இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் December 19, 2019 at 7:25 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களையும் கூடவே சகோதரி திருமதி.ஜெயந்தி ரமணி அவர்களையும் புகைப்படத்தில் பார்த்த போது மனதுக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது. இனிய வாழ்த்துக்கள்!!//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நாம், இதுவரை, இருமுறை சந்தித்துள்ளோம். அவைகளையும் நினைத்துப் பார்த்து, எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

      1)  http://gopu1949.blogspot.com/2015/02/1-of-6.html சந்தித்த வேளையில் .... பகுதி 1 of 6 :)

      2) http://gopu1949.blogspot.com/2016/09/blog-post.html மீண்டும் ஓர் இனிய சந்திப்பு ! :)

      நீக்கு
  10. சாக்கலேட்டை மட்டும் எனக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதமன் December 24, 2019 at 10:34 AM

      வாங்கோ கெளதமன், வணக்கம்.

      //சாக்கலேட்டை மட்டும் எனக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்!//

      TOO LATE. எனினும் கவலைப்பட வேண்டாம். நான் மீண்டும் எங்கட ஜெயாவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து, ஒஸத்தியான சாக்லேட்ஸ் நிறைய வாங்கி வரச்சொல்லி, சென்னையில் உள்ள தங்களிடம் டோர் டெலிவெரி செய்யச் சொல்கிறேன். ஜெயாவும் சென்னையில் இருப்பதால் இதில் பிரச்சனை எதுவும் இருக்கப்போவது இல்லை. :)

      நீக்கு
  11. COMMENTS RECEIVED FROM Mrs. PADMA SURESH MADAM ON 02.01.2020 IN WHATS-APP:

    -=-=-=-=-

    Excellent..... Your writing brings people across the country at your doorstep with lots of gifts as an evidence of their love for your writing skills.   

    -=-=-=-=-

    THANKS A LOT, MDMT   
    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  12. சந்திப்பும் வழக்கம்போல தங்கள் சுவாரசியமான வர்ணிப்பும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி January 16, 2020 at 4:04 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சந்திப்பும் வழக்கம்போல தங்கள் சுவாரசியமான வர்ணிப்பும் பிரமாதம்.//

      ஆஹா, தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நமது அபூர்வமான சந்திப்பை நினைத்து, எனக்குள் மிகவும் மகிழ்ந்து கொண்டேன்.

      http://gopu1949.blogspot.com/2018/02/blog-post_23.html
      ’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் !

      நீக்கு
  13. Dear Sir, A sad news. Retd TNAU Prof. P. Kandaswamy had passed away as per the TNAU Alumini Association Facebook page post dated Jan 17, 2020. May his soul rest in peace.

    பதிலளிநீக்கு
  14. Dear Sir, A sad news. Retd TNAU Prof. P. Kandaswamy had passed away as per the TNAU Alumini Association Facebook page post dated Jan 17, 2020. May his soul rest in peace.

    பதிலளிநீக்கு