என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 டிசம்பர், 2019

பாசப்பறவைகள் 2019



  


திருச்சி BHEL எழுத்தாள நண்பர்கள் கூட்டம், 22.12.2019 ஞாயிறு மாலை 3 மணி முதல் 6 மணிவரை Dr. VGK [Dr. V.GOPALAKRISHNAN, Former EXECUTIVE DIRECTOR, BHEL] அவர்கள் தலைமையில், திருச்சி ரஸிக ரஞ்சன ஸபா வளாகத்தில், இனிதே நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பலரும் பணிஓய்வு பெற்றவர்களாகவே இருந்ததால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததும், அவரவர்கள் பற்றிய அறிமுகங்கள் + அனுபவங்களை கருத்துக்களாகப் பகிர்ந்துகொண்டதும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தன.


YOU-TUBE FRIENDS OF 2019






'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில், யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வரும், திரு. பரத் சுப்ரமணியன், பெங்களூர் அவர்கள், அடியேனின் குரலில் மேற்படி மூன்று ஆடியோக்களை You Tube இல் வெளியிட்டுச் சிறப்பித்திருந்தார்கள். இதன் மூலம் இந்த ஆண்டில் [2019] மட்டும், இதுவரை 186 புதிய நண்பர்கள் என்னுடைய மின்னஞ்சல் தொடர்பில் வந்துள்ளனர். அதில் சுமார் 10 நபர்கள் தினமும் எனது வாட்ஸ்-அப் வட்டத்தில் உள்ளனர். அவர்களில் இரு பெண்மணிகள், என் இல்லத்திற்கே நேரில் வருகை தந்து, இப்போது நெருங்கிய குடும்ப நண்பர்களாகவே ஆகி விட்டனர். 

(1) திருச்சியைச் சேர்ந்த திருமதி. பத்மா சுரேஷ் அவர்கள், தன் கணவர் மற்றும் மாமனார் அவர்களுடன் முதன் முறையாக, என்னை சந்தித்த நாள்: 03.01.2019. மாதாமாதம் எங்கள் குடும்பத்தில் நடைபெற்றுவரும் அனுஷ பூஜைக்கு ஆர்வத்துடன் வருகை தந்து பங்கெடுத்து வருகிறார்கள்.

  


 

கணித மேதை இராமானுஜம் அவர்களின் மறுபிறவியோ இவர்கள் என நான் பலமுறை வியந்ததுண்டு. அந்த அளவுக்குக் கணிதத்தில் புலியாக இருக்கும் இவர்களிடம், எனக்கு ஓர் தனிப் பிரியமும், பாசமும் ஏற்பட்டுள்ளதில் வியப்பு ஏதும் இல்லை. கணிதம் மட்டுமா .. இவர்களின் ஆங்கில அறிவு அதற்கும் மேலாக. மொத்தத்தில் MASTER OF ALL SUBJECTS  இவர்கள்! தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் என பலமொழிப் புலமை வாய்ந்தவர்களும்கூட.  சுறுசுறுப்பிலும், அடுத்தடுத்துப் புனிதப் பயணங்கள் மேற்கொள்வதிலும்  ஓர் சிட்டுக்குருவி போலவும் திகழ்பவர்கள். 


உலக மஹா சோம்பேறியான நான் இவர்களைப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொள்வதும் உண்டு. :)  

 

oooooOooooo

2) பெங்களூரைச் சேர்ந்த திருமதி. சந்தியா என்கிற மந்தாகினி ஜானகிராமன் R. எங்களின் முதல் சந்திப்பு: 28.10.2019  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் தீவிர பக்தையான இவள், எங்கள் குடும்பத்தில் உள்ள பொக்கிஷமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாதுகைகளை தன் குடும்பத்தாருடன் 28.10.2019 அன்று தரிஸித்துக்கொண்டாள். 

கலையுணர்வுகள் கொண்ட அவள், தன் கைப்பட எனக்காகவே செய்துகொண்டு வந்த மிகச்சிறிய, ஜொலிக்கும் வெல்வெட் பாதுகைகள் ஒரு ஜோடி  இதோ:

 


29.10.2019 அன்று, எனது வழிகாட்டுதல்களின் படி, திருச்சி திருவானைக்கோயில் சங்கரமடத்தில் முகாமிட்டிருந்த ஸ்ரீ பாலபெரியவா அவர்களை, தன் வாழ்நாளில் முதன்முறையாக, நன்கு திவ்ய தரிஸனம் செய்துகொண்டு, அவர்களின் திருக்கரங்களால், நேரிடையாக பிரஸாதம் கிடைக்கும் பாக்யம் பெற்றாள். 



30.10.2019 ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அவளின் ஒன்றுவிட்ட சகோதரரின் திருமண நிகழ்ச்சிக்கு எங்களையும் கட்டாயப்படுத்தி வரச்சொல்லி அழைத்து, தன் அப்பா, அம்மா, மாமியார், நாத்தனார்கள் போன்ற அனைத்து உறவினர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்து பூரிப்படைந்து மகிழ்ந்தாள். அவளின் குழந்தைத்தனம், கிளி கொஞ்சும் பேச்சு, எப்போதுமே சிரித்த முகம் ஆகியவை எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தின. 
  
  

   

 


 


 

 


பாசமுள்ள பெற்றோருக்கு ஒரே வாரிசான மகள்

 



2014-ம் ஆண்டு டிஸம்பர் மாதம் அடியேன் ’துபாய்’க்கு சுற்றுலா சென்றிருந்த போது என் மூத்த பிள்ளை எனக்கு ஓர் புத்தம்புதிய SAMSUNG MOBILE PHONE வாங்கிக்கொடுத்திருந்தார். 


அதைப்பற்றிகூட படங்களுடன் எனது பதிவினில் வெளியிட்டிருந்தேன்.   http://gopu1949.blogspot.com/2014/12/blog-post.html 

மிகச் சரியாக ஐந்து ஆண்டுகள் நன்கு உழைத்த அது, சற்றே தளர்ந்து, பணிஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அதை யாரிடம் கொடுத்து எப்படி பழுதுபார்ப்பது என நினைத்துக்கொண்டிருந்த என்னிடம், நானே சற்றும் எதிர்பாராத நிலையில், 24.12.2019 அன்று திருச்சிக்கு நேரில் வருகை புரிந்த என் மூத்த மகனால் வேறொரு புத்தம்புதிய SAMSUNG MOBILE SET எனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.   

 

  

TIMELY SUPPLY !


 

1980 வரை நான் குடியிருந்த பகுதியில், என் அண்டைவீட்டில், எனக்குத்தெரிந்து, 1963-இல் பிறந்து வளர்ந்த பொடியன் G. கண்ணன், இன்று ஓர் மிகப்பெரிய, மிடுக்கான, காவல் துறை அதிகாரியாக என் கண்முன் காட்சியளித்து, என்னை மகிழ்வித்த நாள்: 29.12.2019

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின், மலரும் நினைவுகளாக இந்த சந்திப்பு, அகஸ்மாத்தாக நிகழ்ந்தது என்னை மிகவும் மகிழ்வித்தது.





அனைவருக்கும் 
2020
ஆங்கிலப் புத்தாண்டு 
மற்றும் 
பொங்கல் நல்வாழ்த்துகள்.




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

41 கருத்துகள்:

  1. இனிய நினைவுகள் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் December 31, 2019 at 1:31 PM

      வாங்கோ Mr. DD Sir. வணக்கம். நம் ’அதிரடி அதிரா’ வையும் முந்திக்கொண்டு, இந்தப் பதிவுக்கு முதல் வருகை தந்துள்ளீர்கள். என்ன நடக்குமோ .. எனக்கு நினைத்தாலே அடிவயிற்றில் புளியைக் கரைக்குது. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      //இனிய நினைவுகள் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துகள்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yaathoramani.blogspot.com December 31, 2019 at 2:49 PM

      வாங்கோ மை டியர் ரமணி, ஸார். வணக்கம்.

      //தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  3. கதம்பமான நினைவுகள் கோபு சார்..

    முதலில் உங்கள் தளத்தில் சாம்சங் போன் வந்து 5 வருடங்களாகிவிட்டது என்று நீங்கள் எழுதி, அதைப் படித்துவிட்டு உங்கள் மகன் புது போன் வாங்கிக்கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் வந்தது. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:00 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம். இதற்கு முந்தியப் பதிவினில் உங்களையும் காணும், அதிராவையும் காணும். அதிராதான் உங்களை எங்கேயேனும் கடத்திச்சென்று ஒளித்து வைத்திருப்பாள் [கர்ர்ர்ர்ர்ர்ர் !] என நினைத்துக் கவலைகொண்டேன்.

      //கதம்பமான நினைவுகள் கோபு சார்..//

      தஞ்சாவூர் கதம்பத்தை முழம்போட்டு வாங்கி....
      தலைமேலே வெச்சுண்டு நின்னேனே ஏங்கி......
      https://www.youtube.com/watch?v=8gAbBAfTmj0
      வாங்கோண்ணா .... அட வாங்கோண்ணா .....

      அருமையான அந்தப்பாடல் நினைவுக்கு வந்து மூடு அவுட் ஆகிவிட்டது.

      //முதலில் உங்கள் தளத்தில் சாம்சங் போன் வந்து 5 வருடங்களாகிவிட்டது என்று நீங்கள் எழுதி, அதைப் படித்துவிட்டு உங்கள் மகன் புது போன் வாங்கிக்கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் வந்தது. ஹா ஹா//

      புதிய போன் ஒன்று அதுவாகவே என்னைத் தேடி இப்படி வந்து சேரும் என நான் நினைக்கவே இல்லை. :))))))

      நீக்கு
  4. என்ன நீங்க.. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று சொல்லி நிறுத்திட்டீங்க...

    இணையம் பக்கம் இப்போதைக்கு வர்றதில்லைனு தீர்மானிச்சுட்டீங்க. அப்படியே,

    தமிழ்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி வாழ்த்துக்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டுவிட வேண்டியதுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க இனிமேல் கோபு அண்ணனோடு கூட்டுச் சேராதீங்க நெல்லைத்தமிழன்:)).. பாருங்கோ அவருடன் சேர்ந்தமையாலதான்.. ஒருக்காலும் இல்லமல் இம்முறை காணாமல் போய் வந்தீங்க:), இனியும் காணாமல் போயிடுவேன் எனவும் மிரட்டுறீங்க கர்ர்:))..

      கோபு அண்ணன், பொங்கலுக்கும் வாழ்த்துப் போடுங்கோ நாங்க வெயிட்டிங்....

      நீக்கு
    2. அதிரா... நான் பயணத்தில், பில்கிரிமேஜ் இருந்தேன். கோபு சார் சொகுசாக ஓய்வு எடுக்கிறார். அவருக்கு புதிதாக கற்பனை ஊற்றெடுக்கலையா இல்லை சோம்பேறித்தனமான்னு தெரியலை. ஹா ஹா

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:01 PM

      //என்ன நீங்க.. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று சொல்லி நிறுத்திட்டீங்க...

      இணையம் பக்கம் இப்போதைக்கு வர்றதில்லைனு தீர்மானிச்சுட்டீங்க. அப்படியே,

      தமிழ்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி வாழ்த்துக்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டுவிட வேண்டியதுதானே//

      ஆண்டு அனுபவித்து, பழம் தின்று கொட்டை போட்டு விட்ட எமக்கு, எல்லா நாட்களும் ஒரே நாள் மட்டுமே. மொத்தத்தில் எல்லா நாட்களுமே வழுவட்டை மட்டுமே. அவை ஒவ்வொன்றும், வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும், தானே வரும் .... தானே சமத்தாகப் போய் விடும்.

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

      நீக்கு
  5. எழுத்தாளர்கள் கூட்டம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நிறையபேரைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்திருப்பீர்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் December 31, 2019 at 3:02 PM

      //எழுத்தாளர்கள் கூட்டம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நிறையபேரைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்திருப்பீர்கள். வாழ்த்துகள்.//

      ஆமாம். மகிழ்ச்சியாகவே இருந்தது. மொத்தம் அன்று கலந்து கொண்ட சுமார் 17 நபர்களில், 13 நபர்கள் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்கள் மட்டுமே.

      நீக்கு
  6. ஆஆஆஆஆஆஆ இது எப்போ இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது... பாசப்பறவைகள் குரூப் போட்டோவில ஒரு பெண் பாசப்பறவைகூட இல்லாமல் போச்சேஎ:)).. இது என்ன கோபு அண்ணனுக்கு வந்த சோதனை:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. வருகிறேன் மிகுதிக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 3:42 PM

      வாங்கோ அதிரா, வாங்கோ .. வணக்கம்.

      //ஆஆஆஆஆஆஆ இது எப்போ இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது... பாசப்பறவைகள் குரூப் போட்டோவில ஒரு பெண் பாசப்பறவைகூட இல்லாமல் போச்சேஎ:)).. இது என்ன கோபு அண்ணனுக்கு வந்த சோதனை:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. வருகிறேன் மிகுதிக்கு..//

      ஆமாம் அதிரா. தாங்கள் சொல்வதும் நியாயம்தான். ஒருசில பெண் எழுத்தாளர்கள் BHEL இல் இருந்தனர் என்பதை நானே அறிவேன். இப்போது அநேகமாக அவர்கள் அனைவரும் பணிஓய்வு பெற்றிருக்கலாம்.
      வருகை தந்துள்ளவர்களால் அவர்கள் ஏன் அழைக்கப்படவில்லை அல்லது அழைத்து வரப்படவில்லை என எனக்குத் தெரியவில்லை.

      கூட்டத்தில் பேசிய ஒருவர்கூட, அத்தகைய பெண் எழுத்தாளர்களில் ஒருவரை, மிகவும் நினைவுகூர்ந்து பாராட்டிப் பேசினார்.

      மேலும் இது மிக அவசரமாக, குறுகிய கால அறிவிப்புடன் கூட்டப்பட்ட முதல் Informal Meeting ஆகும். ஒருவேளை அடுத்து வரும் கூட்டங்களின் க்ரூப் போட்டோக்களில் அவர்களும் (மகளிர் அணியும்) இடம்பெறலாம். அதுவா இப்போ முக்கியம்? இருந்தாலும் உங்களுக்கு ஊர் வம்ப்ஸ் மிகவும் ஜாஸ்திதான். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நீக்கு
  7. பாசப்பறவைகளின் சந்திப்பையும் தங்களின் நினைவலைகளையும் ஒருங்கே கொண்டு வந்து சிறப்பித்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

    தங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகளும். தமிழர் திருநாள் நல் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி December 31, 2019 at 4:36 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பாசப்பறவைகளின் சந்திப்பையும் தங்களின் நினைவலைகளையும் ஒருங்கே கொண்டு வந்து சிறப்பித்துவிட்டீர்கள். பாராட்டுகள்!//

      ஆமாம். ஒருசில குறிப்பிட்ட நிகழ்வுகளையும், ஒருசிலரின் நேரடி சந்திப்புக்களையும் என் வலைத்தளத்தில் பதிவு செய்துகொள்வதில் எனக்குவொரு தனி விருப்பம் உண்டு. இவை பொழுதுபோகாத நேரங்களில், மீண்டும் மீண்டும் கண்டுமகிழ, எனக்கே ஒரு வரலாற்று ஆவணமாக பயன்பட்டு வருகின்றன.

      //தங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகளும். தமிழர் திருநாள் நல் வாழ்த்துகளும்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் December 31, 2019 at 5:09 PM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //இனிய சந்திப்புகள்! மகிழ்வான தருணங்கள்!!//

      ஆம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  9. //இதுவரை 186 புதிய நண்பர்கள் என்னுடைய மின்னஞ்சல் தொடர்பில் வந்துள்ளனர். அதில் சுமார் 10 நபர்கள் தினமும் எனது வாட்ஸ்-அப் வட்டத்தில் உள்ளனர்//

    ஓ மை கடவுளே.. இப்போ புரியுது நீங்கள் ஏன் புளொக் எழுதுவதில்லை எனும் சூட்சும ரகசியம்:)).. நெல்லைத்தமிழன் கொஞ்சம் வாங்கோ.. அந்த 180 இல எத்தனை பெண்கள்? எத்தனை ஆண்கள்? என ஒரு கணகெடுப்பு நடாத்தாவிடில் எனக்கு புதுவருசப்பிறப்பன்று:) அதாவது இன்ரிரவு நித்திரை வராமல் எல்லோரையும் தொந்தரவு பண்ணுவேன்ன்:).. புளொக்குக்குள்ளாலதான் .. என்பதனை கோபு அண்ணன் போர்த்திய அந்த சிவப்புப்பொன்னாடை மீது அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... 180 பேருல் நீன் ஒருத்தன் (மட்டும்னு தோணுது) ஆண். கோபு சாருக்கு அவர் பெயர் மட்டும்தான் நினைவிருக்கிறதே தவிர வயது நினைவில்லை. அதனால் கிருஷ்ணன் போல் வாட்சப்பில் மூழ்கிவிட்டார் ஹாஹாஹா

      நீக்கு
    2. அமைதிச் சிகரம் அதிரா:) December 31, 2019 at 5:17 PM

      //ஓ மை கடவுளே.. இப்போ புரியுது நீங்கள் ஏன் புளொக் எழுதுவதில்லை எனும் சூட்சும ரகசியம்:))..//

      அதிராவுக்கு நல்ல கற்பூரபுத்தி .. அதனால் அந்த சூட்சும இரகசியத்தை டக்குன்னு புரிந்துகொண்டு விட்டீர்கள்.

      ஒருநாள் வாட்ஸ்-அப் இல்லாவிட்டால் இன்று உலகமே ஸ்தம்பித்துப் போய்விடுமாக்கும்.

      நான் தினமும், ஒவ்வொரு வேளையும், என் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ்ஸில் போடும் பலவற்றை விரும்பிப் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. இதுவிஷயம் நம் நெ-த ஸ்வாமிக்கும் தெரியும்.

      சந்தேகமானால் நீங்களும் என் வாட்ஸ்-அப்பில் தங்களை இணைத்துக்கொண்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என் ஸ்டேடஸ் பக்கத்தைப் பார்வையிட்டு மகிழலாம்.

      பிறகு நீங்களும் BLOG எழுதுவதையே விட்டு விடுவீர்கள். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      நீக்கு
  10. பல மலரும் நினைவுகளோடு இவ்வாண்டு விடைபெறப்போகிறது.. புதிய பல நினைவுகளைப் புதிய ஆண்டு கொண்டு வரட்டும், உங்களுக்கும் ஆன்ரிக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கோபு அண்ணன், என்றும் இப்படி மகிழ்வோடு இருங்கோ.. அதுக்காக அதிரா பழைய சில போஸ்ட்டுக்களுக்கு வந்து கொமெண்ட்ஸ் இடவில்லை என லிங் எல்லாம் போட்டு ஊருக்குச் சொல்லப்பிடாது ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா:)).

    இனிய இனிய அந்த அல்வா போன்ற புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச் சிகரம் அதிரா:)   December 31, 2019 at 5:20 PM

      //பல மலரும் நினைவுகளோடு இவ்வாண்டு விடைபெறப்போகிறது..//

      அது விடைபெற்றுச் சென்று இரண்டு நாட்கள் ஓடிவிட்டன.

      //புதிய பல நினைவுகளைப் புதிய ஆண்டு கொண்டு வரட்டும்,//

      கொண்டு வரட்டும். கொண்டு வந்து கொட்டட்டும். 

      //உங்களுக்கும் ஆன்ரிக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கோபு அண்ணன்,//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

      //என்றும் இப்படி மகிழ்வோடு இருங்கோ..//

      நிச்சயமாக .... முயற்சிக்கிறேன். அதே அதே சபாபதே ! அதிரபதே !!

      //அதுக்காக அதிரா பழைய சில போஸ்ட்டுக்களுக்கு வந்து கொமெண்ட்ஸ் இடவில்லை என லிங் எல்லாம் போட்டு ஊருக்குச் சொல்லப்பிடாது ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா:)).//

      சேச்சே ... அப்படியெல்லாம் எந்த எதிர்பார்ப்புகளும், இப்போதெல்லாம் நான் வைத்துக்கொள்வது இல்லை. என்னையும், என் இன்றைய சூழ்நிலைகளையும் புரிந்துகொண்டு, என்னிடம் இன்னமும் தனிப்பிரியம் வைத்துள்ளவர்கள், அவர்களாக விரும்பினால் என் பதிவுப்பக்கம் வருகை தந்து பின்னூட்டம் தரலாம். பின்னூட்டங்களை எதிர்பார்த்து நான் பதிவுகள் வெளியிட்டு பல வருடங்களுக்கு மேல் ஆச்சு, என்பதை மட்டும் இரகசியமாக, நம் அதிராவுக்கு மட்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன். இது பரம இரகசியமாக இருப்பதால், இதனைப் படித்ததும், வேறு யாருக்கும் தெரியாமல் கிழித்து தேம்ஸ் நதியில் போட்டுவிடவும். :) 

      //இனிய இனிய அந்த அல்வா போன்ற புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

      ஓஹோ ..... எனக்கே அல்வா....வா ! :)) எனினும் மிகவும் சந்தோஷம் அதிரா. :))

      நீக்கு
  11. பாசப்பறவைகள் சந்திப்பு மனது மகிழ்ச்சி தரும் விஷயம்.
    அனைத்து நட்புகளையும் அறிமுகபடுத்தியது உங்கள் மகிழ்ச்சியை காட்டுது.
    உங்களுக்கும் உங்கள் அன்பு குடுமத்தினர்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு December 31, 2019 at 5:21 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பாசப்பறவைகள் சந்திப்பு மனது மகிழ்ச்சி தரும் விஷயம்.//

      ஆமாம். மேடம்.

      //அனைத்து நட்புகளையும் அறிமுகபடுத்தியது உங்கள் மகிழ்ச்சியை காட்டுது.//

      நேரில் சந்திக்க நேர்ந்தவர்களை மட்டும் காட்டியுள்ளேன். அதிலும் கடைசியாக எடுக்கப்பட்ட க்ரூப் போட்டோவில் சிக்காமல் சிலர், சற்று முன்பாகவே புறப்பட்டுச் சென்று விட்டனர். BHEL எழுத்தாளர்களில் பலரை வீடியோ கவரேஜ் செய்திருந்தேன். அது என்னவோ இங்கு பதிவில் வெளியிடும்போது தலைகீழாகவே வந்துகொண்டுள்ளது. அதனால் அந்த வீடியோக்களை நானே இந்தப்பதிவிலிருந்து நீக்கி விட்டேன்.

      //உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  12. என்ன சார்! ஏதோ எழுத்தாள நண்பர்கள் கூட்டம் என்று போட்டு விட்டு... எனக்குத் தெரிந்த முகங்களை வேறு க்ரூப் போட்டோவில் பார்த்து விட்டேனா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி December 31, 2019 at 6:59 PM

      வாங்கோ ஸார். நமஸ்காரம்.

      //என்ன சார்! ஏதோ எழுத்தாள நண்பர்கள் கூட்டம் என்று போட்டு விட்டு... எனக்குத் தெரிந்த முகங்களை வேறு க்ரூப் போட்டோவில் பார்த்து விட்டேனா?..//

      நேரில் சந்தித்திருக்காவிட்டாலும், பதிவுலகிலும் உள்ள (என்னையும் சேர்த்து) மூவரைத் தாங்கள், இதுவரை நான் வெளியிட்டுள்ள பதிவுகளின் மூலமும் படங்களின் மூலமும் நன்கு அறிந்திருக்கக்கூடும்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வைகோ ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். January 1, 2020 at 6:22 AM

      வாங்கோ மை டியர் ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’! வணக்கம்.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வைகோ ஸார்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  14. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் January 1, 2020 at 12:36 PM

      வாங்கோ மேடம், வணக்கம். :)

      //வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  15. இனிய நினைவுகள்.

    2020 வருடமும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் January 1, 2020 at 8:21 PM

      வாங்கோ, வெங்கட் ஜி :)

      //இனிய நினைவுகள்.//

      ஆம், வெங்கட் .... நம் சந்திப்புகள் போலவே !

      //2020 வருடமும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட் ஜி.

      நீக்கு
  16. அருமையான சந்திப்புகள். அதனைப் பகிர்ந்தவிதம் அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 2, 2020 at 10:11 AM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //அருமையான சந்திப்புகள். அதனைப் பகிர்ந்தவிதம் அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      BHEL எழுத்தாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் (நிற்பவர்களில் வலதுபுற ஓரம் கடைசியாக இருப்பவர் - Left to Right 7th man in Standing Row) தமிழ் விக்கிபீடியாவில், எழுதுவதில் மிகவும் ஆர்வம் காட்டுபவராக இருந்தார். அவரிடம் நான் உங்களைப்பற்றிப் பேசி மகிழ்ந்தேன். :)

      நீக்கு
  17. வீடே தெய்வீக மணம் கமழ்கிறதே. ஆன்மீகப் பதிவு. மனதை நெகிழ்த்தியது. பிசியா இருக்கீங்க. அதேதான் வேண்டிக்கொள்வதும் . இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வை கோ சார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan January 6, 2020 at 6:30 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம். செளக்யமா நல்லா இருக்கீங்களா?

      //வீடே தெய்வீக மணம் கமழ்கிறதே. ஆன்மீகப் பதிவு. மனதை நெகிழ்த்தியது.//

      ஆஹா, அப்படியா ? மிக்க மகிழ்ச்சி. :)

      //பிசியா இருக்கீங்க. அதேதான் வேண்டிக்கொள்வதும்.//

      அடியேன் உங்களுக்காகத் தேன்கூடு கட்டி, தேன் துளிகள் எடுத்த

      http://gopu1949.blogspot.com/2016/09/1.html  

      http://gopu1949.blogspot.com/2016/09/2.html 

      http://gopu1949.blogspot.com/2016/09/3.html

      http://gopu1949.blogspot.com/2016/09/4.html 

      http://gopu1949.blogspot.com/2016/09/5.html 

      http://gopu1949.blogspot.com/2016/09/6.html

      http://gopu1949.blogspot.com/2015/10/blog-post_31.html  

      அந்த நாட்கள் போல அப்படியொன்றும் நான் இப்போது BUSY அல்ல.  In fact,  LAZY மட்டுமே எனக்கூடச் சொல்லலாம். 

      //இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வை கோ சார் :)//

      நீண்ட நாட்களுக்குப்பின், என் வலைத்தளப்பக்கம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபால் 

      நீக்கு
  18. Wish you and your family a very very happy new year. Just as you received a surprise gift from your son, I wish you get more surprises and happiness in the year ahead.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Padma Suresh January 8, 2020 at 8:12 PM

      ஆஹா, வாங்கோ மேடம், வணக்கம். கனவா நனவா என எனக்கு ஒரே ஆச்சர்யமாக உள்ளது. 2013 அக்டோபர் மாதமே வலைப் பதிவராகத் தங்களைத் தாங்கள் பதிவு செய்து வைத்துள்ளீர்கள். மிகச்சரியாக ஆறேகால் ஆண்டுக்குப் பிறகு, இதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். மிகவும் சந்தோஷம். :)

      //Wish you and your family a very very happy new year.//

      தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //Just as you received a surprise gift from your son, I wish you get more surprises and happiness in the year ahead.//

      எனது வலைத்தளப்பக்கம், தங்களின் இந்த அன்பான முதல் வருகையும், அழகான கருத்துக்களுமே எனக்கு அடுத்ததாக கிடைத்துள்ள, இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய SURPRISE GIFT ஆக நினைத்து மகிழ்கின்றேன். It gives me more & more Happiness also.

      With kind regards,

      அன்புடன் கோபு _/\_ _/\_

      நீக்கு