என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 5 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-3



04.11.1970 முதல் 24.02.2009 வரை, சுமார் 38 வருடங்களுக்கும் மேலாக, திருச்சியில் உள்ள மிகப்பெரிய ’நவரத்னா / மஹாரத்னா’ பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு பணி நிலைகளில், பல்வேறு இலாகாக்களில் பணியாற்றிடும்  வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பட்டதாலும், அதிலும் 10.02.1981 முதல் 24.02.2009 வரை சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேல், நிதித்துறையின் மிக முக்கியமான, காசாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்று பணியாற்றிடும் வாய்ப்புக் கிட்டியமையாலும், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், இளநிலை அதிகாரிகள் மற்றும் Dr. VGK போன்ற மிக உயர்ந்த மேலதிகாரிகளுடன், ஓரளவுக்கு நெருங்கிப் பழகிடும் வாய்ப்புகள் அடியேனுக்கு அதுவாகவே அமைந்தது.
     
அலுவலக வேலைகளில் எங்களுக்குள் அன்றாடம் நேரடித் தொடர்புகள் இல்லாது போனாலும், BHEL என்ற மிகப்பெரிய இமயமலையின் எவரஸ்ட் சிகரமாக விளங்கிய Dr. VGK அவர்களுக்கும், எங்கோ ஒரு மூலையில், அதே இமயமலையின் அடிவாரத்தில் மிகச்சிறிய புல் போன்று முளைத்து விளங்கி வந்த மிகச் சாதாரணமானவனான எனக்கும், எப்படியோ ஒருசில பந்தங்கள் ஏற்பட்டு, ஒருவர் மேல் ஒருவர் மனதில் அன்புடனும், வாத்ஸல்யத்துடனும் பழகி வருவதற்கான சந்தர்ப்பங்கள், அபூர்வமாகவும்,  தெய்வாதீனமாகவும் சில சமயங்களில் ஏற்பட்டுள்ளன.

அடியேன் A2/304F என்ற கதவு எண் உடைய BHEL Township குடியிருப்பில் வசித்து வந்தபோது, Dr. VGK அவர்கள், நானே சற்றும் எதிர்பாராத ஒருநாள், என் இல்லத்திற்கே நேரில் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள். 

என்னுடைய மூத்த பிள்ளை + மூன்றாம் பிள்ளை கல்யாணத்திற்கு (1998 மற்றும் 2009) எனது அழைப்பை ஏற்று, நேரில் வருகை தந்து சிறப்பித்துத் தந்தார்கள்.  


01.07.2009 at Sringeri Kalyana Mandapam, Srirangam

அவருக்கான கோயில் பிரார்த்தனை வேண்டுதல் ஒன்று (சிவன் கோயில் ஒன்றுக்கு 108 அகல் விளக்குகளில் எண்ணெய் + திரி போட்டு ஏற்றுதல்), அவர் சார்பில் என் மூலம் நிறைவேற்றித்தரும் சந்தர்ப்பம் Mr. G.JAYARAMAN என்பவரால் எனக்கு அளிக்கப்பட்டது. 

2006-ம் ஆண்டு, நான் என் வாழ்க்கையில் முதன் முதலாக (கடைசியாக என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்) டெல்லிக்குச் சென்றபோது, நான் தங்கியிருந்த BHEL GUEST HOUSE இல், வேறொரு தனி VIP அறையில், Dr. VGK அவர்களும் தங்கியிருந்ததால், அங்கும் ஒருசில நிமிடங்கள் அவரை சந்தித்துப் பேச வாய்ப்புக்கிடைத்தது.  Dr. VGK அவர்களுடனான இதுபோன்ற பல்வேறு பசுமையான + சந்தோஷமான நினைவலைகளை அவ்வப்போது எனக்குள் நினைத்து நான் மகிழ்வதுண்டு. 

நான் அறிந்த வரையில் Dr. VGK அவர்கள் திருச்சி BHEL 2 and 4 BLDG. இல், இரண்டாவது தளத்தில் முழுவதுமாக வியாபித்திருந்த ENGINEERING DESIGNS DEPARTMENT இல் பல்வேறு நிலைகளில் பல்லாண்டுகள், அனைவராலும் விரும்பப்பட்ட பொறுப்பான அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருந்தவர். (இதே இலாகாவில் 1971-1975 காலக்கட்டத்தில் திரு. இராமபிரஸாத் என்பவர் HOD யாக இருந்தார். அவர் எங்கள் சங்க்ருதி கோத்திர, ஆபஸ்தம்ப சூத்ரக்காரர். எங்கள் இருவருக்கும் திருச்சி-லால்குடி மார்க்கத்தில் உள்ள ஆங்கரை கிராமத்திற்கு ஒரு கிலோமீட்டர் முன்பே அமைந்துள்ள, மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் ஸ்வாமியும், அங்கே காவல் தெய்வமாக உள்ள கருப்பருமே குலதெய்வமாகும்)   

பிறகு Dr. VGK அவர்கள் GENERAL MANAGER ஆக பதவி உயர்வு பெற்றபின் சிலகாலம் புதுடெல்லியில் உள்ள BHEL CORPORATE OFFICE க்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்கள்.

அபாரமான பாண்டித்யமும், மிகச்சிறந்த அறிவாற்றலும், தலைமைப் பண்புகளும், மனிதாபிமானமும், VERY QUICK AND CORRECT DECISION MAKING செய்வதில் வல்லமையும் மிக்க, மிகவும் நேர்மையாளரான Dr. VGK அவர்கள் BHEL திருச்சி குழுமத்தின் மிக உயர்ந்த பதவிப்பொறுப்பை [UNIT HEAD OF ’BHEL’ - TIRUCHI AS 'EXECUTIVE DIRECTOR'] ஏற்க வந்தநாளில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.` எனது பெயரும் எனது இனிஷியலும் உள்ள ஒருவர் மிக உயர்ந்த பதவியில் பொறுப்பேற்றுக்கொள்ள வரப்போகிறார் என்பதை அறிந்தவுடன் எனக்கு மேலும் ஓர் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது என்றும்கூடச் சொல்லலாம்.

Dr. VGK அவர்களின் பதவி ஏற்புக்கு முதல் நாள் (2005) காலை சுமார் 10 மணிக்கு, திருச்சி BHEL TOWNSHIP KAILASH GUEST HOUSE இல் தங்கியிருந்த அவர்கள், காரில் ஏறி ஊரகத்திலிருந்து, தஞ்சை-திருச்சி மெயின் ரோட்டுக்குச் செல்கிறார்.  TOWNSHIP ENTRANCE இல் உள்ள SECURITY OFFICIALS மிகவும் ALERT ஆக உள்ளனர். ஏதோவொரு அலுவலக வேலையாகச் சென்ற நான் அங்கு, எதற்கோ யாருக்காகவோ எதிர் திசையில் உள்ள ஓர் கடை வாசலில் (சந்துரு கடை வாசலில்) காத்து, நின்றுகொண்டு இருக்கிறேன். 


 


என்னைத்தாண்டிச் சென்ற ஓர் புத்தம்புதிய, A/C CAR WITH COOLING GLASS COVERED, SUDDEN BREAK போடப்பட்டு REVERSE இல் என்னை நோக்கி மெதுவாக வருகிறது. அந்தக் காரிலிருந்து இறங்கிய Dr. VGK அவர்கள், நேராக என்னை நோக்கி வந்து, கை குலுக்கிவிட்டு,  க்ஷேமநலம் விஜாரிக்கிறார். எதிர்புற பாதுகாப்பு அலுவலகத்தில் அப்போது பணியில் இருந்த அனைத்து SECURITY OFFICIALS களும், என்னவோ ஏதோ என்று பதறி அடித்து ஓடி வந்து, எங்களை சூழ்ந்து நின்று கொள்கிறார்கள்.  

”நாளைக்கு இங்கு ED யாக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறேன், தெரியுமா?” என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்க,  நான் அப்படியே  ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். “நன்றாகத் தெரியும் ஸார்” என்று மகிழ்ச்சி பொங்க அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். பிறகு சிரித்த முகத்துடன் ”நாம் இனி அடிக்கடி சந்திக்கலாம்” எனச் சொல்லிவிட்டு, அவர் தனது காரில் ஏறி புறப்பட்டு விட்டார். அங்கிருந்த ஒருசில செக்யூரிட்டி அதிகாரிகள், அந்தக் காருக்கும், எனக்குமாகச் சேர்த்து ஓர் ராயல் சல்யூட் அடித்து விட்டு, நகர்ந்து சென்றார்கள்.  

மறுநாள் அந்தக்காரை ஓட்டிவந்த ஓட்டுனர் என்னை நேரில் வந்து எனது அலுவலகத்தில் சந்தித்தார். நான் அங்கே அந்தக்கடை வாசலில் நிற்கும் போது, என்னைத் தாண்டிச் சென்ற காரை சற்றே நிறுத்தச் சொன்னாராம். ”அங்கே அந்தக் கடை வாசலில் நிற்பது நம் கேஷ் ஆபீஸ் கோபாலகிருஷ்ணன் தானே?”, என அவரிடம் Dr. VGK விஜாரித்தாராம். அவர் ”ஆம்” என்று சொன்னதும் காரை கொஞ்சம் ரிவர்ஸில் எடுக்கச் சொன்னாராம்.  நீண்ட நாட்கள், ஊரை விட்டு ஊர், நாங்கள் இருவரும் பிரிந்திருந்தும், எத்தனை ஒரு ஞாபக சக்தியுடன், இந்த மிகவும் சாமானியனான என்னை, இன்னும் அவர் தனது நினைவில் வைத்துக்கொண்டுள்ளார் என்பதை நினைத்துப் பூரித்துப் போனேன். 

தனது அழுக்கு வஸ்திரத்தில் ஒரு பிடி அவல் மட்டும் எடுத்துக்கொண்டு, ஊருக்கே ராஜாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை தரிஸிக்கச் சென்ற ’சுதாமா’ என்ற குசேலரின் நிலையும் என் நிலையும் அன்று ஒன்றாகவே இருந்தது என எனக்குள் நினைத்துக்கொண்டேன். 


 

BHEL என்ற மிகப்பெரிய ஆலமரம் போன்ற நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும், இலாபகரமான + உலகத்தரம் வாய்ந்த உற்பத்திக்கும், ஆணி வேர்களாக இருந்து, அந்தக்காலத்தில் பணியாற்றிய உன்னதமான உயர் அதிகாரிகளின் ஒப்பற்ற வரிசையில் Dr. VGK அவர்களுக்கும் ஓர் தனியான சிறப்பிடம் உண்டு என்றால் அது மிகையாகாது.


  

இந்த நூலுக்கான தனது அணிந்துரையில் Mr. R. Padmanabhan, Present Executive Director, BHEL Tiruchi Complex அவர்கள் கூறியுள்ள கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்துள்ளவை:-

-=-=-=-=-=-=-

நூலாசிரியர் ”சுவாராஸ்யமான காலக்கட்டத்தில்” வாழ்ந்த மக்களின் அனுபவத்தைத் தான் உணர்ந்ததோடு, பிறருக்கும் உணர்த்தும் பணியை மிகவும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார். நூலின் நடை, அத்தனை இயல்பாக வந்திருக்கிறது. அவருடைய பன்முகத் தன்மையே அதற்குக் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

திரு. VGK ஒரு பொறியாளர் மட்டுமல்ல. மேலாண்மை நிபுணர், கணிப்பொறி தொழில்நுட்ப வித்தகர்,  ஆன்மீகச் செறிவு மிக்கவர், தொலை நோக்காளர். எழுத்தாளர், பேச்சாளர், உன்னதமான தலைவர், இயல்பாகவே இலக்கியம், சிற்பம், இசை, தத்துவம் என்னும் பலகலைகளிலும் ஈடுபாடுகொண்டவர். நுட்பங்களை உற்று நோக்கி பாராட்டும் உள்ளமும், உயர் சிந்தனையும் கொண்டவர். அனைத்துக்கும் மேலாக மனித மனங்களைப் படித்து, மனிதநேயம் மிக்கவராகத் திகழ்பவர். இத்தகைய பெருந்தன்மைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் படிப்போரின் மனதை ஈர்த்துத் தக்க வைத்துக்கொள்ளும், உண்மை பொதிந்த ஒரு களஞ்சியமாக இங்கே, இப்போது, இந்நூல் வடிவில் வெளிப்பட்டிருக்கிறது. 

-=-=-=-=-=-=-

 

தொடரும்...


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

   

35 கருத்துகள்:

  1. அவருடனான உங்கள் அனுபவங்கள் நெகிழ்ச்சியுற வைக்கின்றன.   பெருந்தன்மையான மனிதர் என்று தெரிகிறது.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். December 5, 2019 at 5:58 AM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //அவருடனான உங்கள் அனுபவங்கள் நெகிழ்ச்சியுற வைக்கின்றன. பெருந்தன்மையான மனிதர் என்று தெரிகிறது.//

      மிக்க மகிழ்ச்சி. ஆம். அவர் வியட்நாம் வீடு படத்தில் வரும் PRESTIGE PADMANABHAN போன்றவர். :)

      நீக்கு
  2. நமஸ்காரம்

    நான் இந்த தொடரின் முதல் பகுதி வெளி வந்த தினம் அன்று ஒரு பின்னூட்டம் இட்டேன். அது சரியாக பதிவாகவில்லை போல் இருக்கிறது.

    இந்த புஸ்தகம் வாங்க தங்களுடைய வங்கி விவரங்கள் கொடுத்தால் நான் தொகையை அனுப்பி பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

    இது போல பல விதங்களில் திறமை பெற்ற வல்லுநர்கள் பெல் நிறுவனத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றி மேலும் மேலும் அறிய மகிழ்ச்சி.

    நன்றி
    ஆ கி பாலசுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ கி பாலசுப்ரமணியன் December 5, 2019 at 10:07 AM

      வாங்கோ பாலு, செளக்யமா?

      //நமஸ்காரம்//

      அநேக ஆசீர்வாதங்கள்.

      //நான் இந்த தொடரின் முதல் பகுதி வெளி வந்த தினம் அன்று ஒரு பின்னூட்டம் இட்டேன். அது சரியாக பதிவாகவில்லை போல் இருக்கிறது.//

      இருக்கலாம். எனக்கு அது இன்னும் வந்து சேரவில்லை. என்னிடம் உள்ள Awaiting Moderation / Spam போன்ற இடங்களிலும் Check-up செய்துவிட்டேன். அங்கும் அந்தப் பின்னூட்டம் காணவில்லை.

      //இந்த புஸ்தகம் வாங்க தங்களுடைய வங்கி விவரங்கள் கொடுத்தால் நான் தொகையை அனுப்பி பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.//

      இந்த என் தொடரின் நிறைவுப் பகுதியான பகுதி-8 இல் வரும் 15.12.2019 அன்று விரிவாகவும் தெளிவாகவும் வெளியிட நினைத்திருந்தேன். இருப்பினும் தங்களின் ஆர்வத்தைப் பாராட்டி, இங்கேயே கீழே அடுத்த பின்னூட்டத்திற்கு என் பதிலாக எழுதியுள்ளேன். தயவுசெய்து குறித்துக் கொள்ளவும்.

      //இது போல பல விதங்களில் திறமை பெற்ற வல்லுநர்கள் பெல் நிறுவனத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றி மேலும் மேலும் அறிய மகிழ்ச்சி.//

      தாங்கள்கூட திறமை பெற்ற வல்லுநர்தான். தாங்கள் C.A., படிக்கும்போது ஓரிரு ஆண்டுகள் இங்கு திருச்சி BHEL இல் பயிற்சியாளராக இருந்துள்ளீர்கள். அது முடிந்து இங்கேயே பணியில் தொடர்ந்திருந்தால் இந்நேரம் GENERAL MANAGER / FINANCE ஆக ஆகியிருப்பீர்கள். இதனை நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொள்வது உண்டு.

      நன்றி
      ஆ கி பாலசுப்ரமணியன்//

      அன்புடன் கோபு சித்தப்பா

      நீக்கு
  3. நமஸ்காரம்

    நான் இந்த தொடரின் முதல் பகுதி வெளி வந்த தினம் அன்று ஒரு பின்னூட்டம் இட்டேன். அது சரியாக பதிவாகவில்லை போல் இருக்கிறது.

    இந்த புஸ்தகம் வாங்க தங்களுடைய வங்கி விவரங்கள் கொடுத்தால் நான் தொகையை அனுப்பி பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

    இது போல பல விதங்களில் திறமை பெற்ற வல்லுநர்கள் பெல் நிறுவனத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றி மேலும் மேலும் அறிய மகிழ்ச்சி.

    நன்றி
    ஆ கி பாலசுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Balu, WELCOME

      இந்த நூலை, இந்தியாவுக்குள், பதிவுத்தபால் மூலம், பெற விருப்பமுள்ளவர்கள், பிரதி ஒன்றுக்கு ரூ. 250 வீதம் கணக்கிட்டு கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

      NAME OF ACCOUNT HOLDER: R. LALITHA

      ACCOUNT NUMBER: 8 3 0 6 0 3 5 8 3

      NAME OF BANK : INDIAN BANK

      BRANCH NAME: THILLAINAGAR, TIRUCHIRAPALLI

      IFS CODE: I D I B 0 0 0 T 0 1 7

      Remarks: GOPU-BLOG

      பணம் அனுப்பியபின் மின்னஞ்சல் மூலம் கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

      AMOUNT SENT Rs. ______

      DATE OF REMITTANCE: _____________

      NAME in CAPITAL letters: _____________________

      COMPLETE POSTAL ADDRESS (WITHIN INDIA) WITH PIN CODE NUMBER:

      MOBILE NUMBER:

      NUMBER OF TAMIL BOOKS REQUIRED: ______

      NUMBER OF ENGLISH BOOKS REQUIRED: ______

      To
      Mr. VIVEKANANDAN - Mobile: 98424 83034
      MAIL ID : vivekbanu@gmail.com

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
      Copy of mail may please be forwarded to
      1) gopalakrishnan.vgk@gmail.com
      2) valambal@gmail.com
      also for follow-up and quick dispatch
      [The books will be dispatched by “Registered Book Parcel”. The postal charges will be borne by the publisher for Indian buyers.]
      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      நீக்கு
  4. நூல் அறிமுகத்துக்குள் இன்னும் நுழையலையா?

    நூல் எழுதின ஆசிரியர் புராணமாகவே ஒரு இடுகை ஆகிவிட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இதைத்தான் நானும் கேட்டேன்:)... இது இன்னும் பல பகுதிகள் தாண்டும்போல இருக்கே:))

      நீக்கு
    2. அதான்...15ம் தேதி சுபம் போடறதாச் சொல்லியிருக்காரே..

      அதுக்குள்ள புத்தகத்துல என்ன இருக்குன்னு சொல்வாரா? ஹா ஹா

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //நூல் அறிமுகத்துக்குள் இன்னும் நுழையலையா?//

      எதிலும் அவசரப்பட்டு நாம் நுழைந்து (நுழைத்து) விடக்கூடாது. அதில் எந்தவொரு சுவாரஸ்யம் இருக்காது. பொறுமையாக Step-by-step ஆக சில்மிஷம் செய்தபடியே, மெயினான பாய்ண்ட்க்குப் போகணும். அதைத்தான் எதிராளி அதாவது பார்ட்னர் அதாவது பயனாளி அதாவது நம் வாசகர்கள் விரும்புவார்கள்.

      எதையும் திட்டமிட்டு, மிக அழகாக வெளிப்படுத்தணும். The way of Presentation is much more important than the matter. மொத்தம் இதனை எத்தனைப் பகுதிகளாகப் பிரித்துத் தரலாம் என்பதையே, ஆரம்பத்தில் என்னால் அனுமானிக்க முடியாமல் இருந்தது. மேலும் நான் அந்த நூலை முற்றிலுமாக மனதில் வாங்கிக்கொண்டு படித்து முடிக்க வேண்டும். :)

      வெளிநாட்டுப் பேரன் பேத்தி வருகையால், நான் இந்தத் தொடரை 15-ம் தேதிக்குள் எப்படியும் முடித்து விடவும் வேண்டும். ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் 48 மணி நேர இடைவெளியாவது நான் கொடுத்தாக வேண்டும். இதற்காக இரவுநேர + பகல்நேர நித்திரையை நான் தியாகம் செய்ய வேண்டியும் உள்ளது.

      உங்களுக்கென்ன, நாம் கொடுத்த பின்னூட்டத்திற்கு இன்னும் இவர் பதில் கொடுக்கவே இல்லையே என்ற ஒரே எதிர்பார்ப்பு மட்டுமே. :)

      //நூல் எழுதின ஆசிரியர் புராணமாகவே ஒரு இடுகை ஆகிவிட்டதே.//

      ஆம். இந்த நூல் ஆசிரியர் பற்றியே ஒன்றுமே தெரியாத உங்களுக்கு இதையும் நான் தெரிவித்தாக வேண்டியதும் என் கடமையாகும். அதனால் இதுவும் மிகவும் முக்கியம்.

      மேலும் இந்த நூல் ஆசிரியரே, இதனை ஒருவேளை படிக்க நேர்ந்தால், அவரே அசந்து வியந்து போக வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும். ஆஹ்ஹாஹ்ஹா ! :)

      நீக்கு
  5. புதிய பதவிக்கு வந்தபோதும் சக பணியாளர்களை மறக்காத முனைவர் வி.ஜி.கே அவர்களின் குணம் பாராட்டத்தக்கது.

    குணத்தில் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் வாழ்க்கையிலும் முன்னேறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் December 5, 2019 at 11:22 AM

      //புதிய பதவிக்கு வந்தபோதும் சக பணியாளர்களை மறக்காத முனைவர் வி.ஜி.கே அவர்களின் குணம் பாராட்டத்தக்கது.//

      மிகவும் நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நேர்மையாளர். எளிமையானவர்.

      //குணத்தில் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் வாழ்க்கையிலும் முன்னேறுகிறார்கள்.//

      நிச்சயமாக !

      நீக்கு
  6. நூல் ஆசிரியரின் நல்ல குணங்கள், அவர் வகித்த பதவி, அவரின் பொறுப்புகள் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.
    நல்ல மனம் வேண்டும் அடுத்த்வரை பாராட்டவும், உங்களிடம் அது நிறையவே இருக்கிறது.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு December 5, 2019 at 12:38 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நூல் ஆசிரியரின் நல்ல குணங்கள், அவர் வகித்த பதவி, அவரின் பொறுப்புகள் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //நல்ல மனம் வேண்டும் அடுத்தவரை பாராட்டவும், உங்களிடம் அது நிறையவே இருக்கிறது.//

      மிகவும் போற்றுதலுக்கு உரிய நல்லவர் + வல்லவர் அவர். அதனால் என்னையறியாமலேயே அவரின் நற்குணங்களைப் பாராட்டத் தோன்றியது எனக்கு.

      //இருவருக்கும் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      நீக்கு
  7. ஆஆஆ பகுதி 3 வரை படிச்சிட்டாரோ கோபு அண்ணன்... என்னா ஸ்பீட்டூஊ... பின்பு வாறேன் ப2 க்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ அதிரா .... வணக்கம். அன்னக்கிளி அதிராவின் வரவை அன்புடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.

      நீக்கு
  8. Dr VGK அவர்களுடனான தங்கள் அறிமுகமும் அனுபவங்களும் நெகிழ்த்துகின்றன. உயர்ந்த நிலையிலும் பணிவும் பெருந்தன்மையும் மிக்க அன்னாரையும் அவரை அத்தனை வாஞ்சையோடும் பெருமையோடும் விவரிக்கும் தங்களையும் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி December 5, 2019 at 4:50 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //Dr VGK அவர்களுடனான தங்கள் அறிமுகமும் அனுபவங்களும் நெகிழ்த்துகின்றன. உயர்ந்த நிலையிலும் பணிவும் பெருந்தன்மையும் மிக்க அன்னாரையும் அவரை அத்தனை வாஞ்சையோடும் பெருமையோடும் விவரிக்கும் தங்களையும் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.//

      Dr. VGK அவர்கள் மிகவும் போற்றுதலுக்கும், பாராட்டுகளுக்கும் உரிய சாதனையாளர் (தங்களைப் போலவே) :)

      http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html
      ”கீதா விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் !
      [ Part-3 of 4 ]

      நீக்கு
  9. அப்போ இன்னும் புத்தகம் பற்றி எழுதவே ஆரம்பிக்கவில்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:))..

    நவரத்தினா என்றதும் நினைவுக்கு வருது எனக்கு.. இதுவேற நவரத்தினா:)..
    ஒயில் வாங்கிப் போட்டுப்பார்த்தேன், தலைமயிரின் நிறத்தை பிறவுண் ஆக்குகிறது கர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்போ இன்னும் புத்தகம் பற்றி எழுதவே ஆரம்பிக்கவில்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:))..//

      :)))))) இதற்கான பதில் மேலே நெல்லைத்தமிழன் ஸ்வாமீக்கும் உங்களுக்குமாக சேர்த்துக் கொடுத்துள்ளேன்.

      //நவரத்தினா என்றதும் நினைவுக்கு வருது எனக்கு.. இதுவேற நவரத்தினா:).. ஓசியில் வாங்கிப் போட்டுப்பார்த்தேன், தலைமயிரின் நிறத்தை பிரவுன் ஆக்குகிறது கர்ர்:))//

      அப்போ போட்டுப்பார்ப்பதற்கு முன்பு, கூந்தல் தலைமுடி கருகருன்னு ஜோராக நீண்டு இருந்ததோ? நம்பவே முடியலே, அதிராஆஆஆஆஆஆஆ :))

      நீக்கு
  10. அழகிய நினைவலைகள்...

    அதுசரி எதுக்கு கடசி என்கிறீங்க .. வாற வருடம் கார்த்திகை மாதம்[தமிழுக்கு] நான் டெல்லி வர இருக்கிறேன்:) நீங்களும் அங்கு வாங்கோ கோபு அண்ணன்.. ஜந்திக்கலாம்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அழகிய நினைவலைகள்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //அதுசரி எதுக்கு கடைசி என்கிறீங்க .. வாற வருடம் கார்த்திகை மாதம் [தமிழுக்கு] நான் டெல்லி வர இருக்கிறேன்:) நீங்களும் அங்கு வாங்கோ கோபு அண்ணன்.. ஜந்திக்கலாம்:))..//

      டெல்லியில் மூச்சுவிடும் காற்றிலேயே மாசு கலந்துள்ளதாம். எல்லோரும் மூக்கைச்சுற்றி ஏதோ முகமூடி அணிந்து செல்கிறார்கள். டி.வி. நியூஸில் காட்டினார்கள். அடுத்த கார்த்திகை தானே ... சரி பார்ப்போம். ஜிந்தித்தபின் ஜந்திக்கலாம். :)

      நீக்கு
  11. தங்களுக்கும் நூலாசிரியருக்குமான நட்பை குசேலர் கிருஷ்ணரை தரிசிக்கசென்றதோடு ஒப்பிடுவதிலிருந்தே அவருக்கும் தங்களுக்கும் உள்ள ஆத்மார்ந்த நட்பை புரிந்துகொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி December 10, 2019 at 4:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களுக்கும் நூலாசிரியருக்குமான நட்பை குசேலர் கிருஷ்ணரை தரிசிக்கசென்றதோடு ஒப்பிடுவதிலிருந்தே அவருக்கும் தங்களுக்கும் உள்ள ஆத்மார்ந்த நட்பை புரிந்துகொள்ள முடிகிறது.//

      ஆமாம். பதவி நிலைகளிலும், அன்றாட அலுவலக விஷயங்களிலும் எங்கள் இருவருக்குமான இடைவெளி மிகப்பெரியதாக இருந்திருப்பினும், நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் அவரை நான் மிகச்சுலபமாக சந்தித்துப் பேச முடியும் என்ற உள் உணர்வு மட்டும் எனக்கு இருந்து வந்தது. அதுவே என் மனதுக்கு ஓர் மிகப்பெரிய ஆறுதலை அளித்து வந்தது.

      நீக்கு
  12. பதில்கள்
    1. VGK meets VGK... இதுவும் நல்லாதான் இருக்கு(து)!!!

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பரே !

      நீக்கு
  13. COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE  https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,
    -=-=-=-=-=-

    Ananthasayanam Thiruvenkatachary 

    கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.

    அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.

    இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.

    ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.

    இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.

    -=-=-=-=-=-  

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையான எளிமையான மனிதர் திரு VGK. தங்கள் அனுபவம் அதற்கு வலு சேர்க்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் December 13, 2019 at 10:55 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிக அருமையான எளிமையான மனிதர் திரு VGK. தங்கள் அனுபவம் அதற்கு வலு சேர்க்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. இன்று காலையில் கூட அவர் தொலைபேசியில் என்னை அழைத்தபோது, தங்களைப்பற்றியும் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. :)

      நீக்கு
  15. குசேலர் உதாரணம் உங்கள் அடக்கத்தின் வெளிப்பாடாக உணரவைத்தது..ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:59 AM

      வாங்கோ, ரமணி சார், வணக்கம்.

      //குசேலர் உதாரணம் உங்கள் அடக்கத்தின் வெளிப்பாடாக உணரவைத்தது..//

      ஏழை எளிய குசேலர் ஓர் ஆத்ம ஞானி. அவர் தனக்காக எதுவுமே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்டது இல்லை. புராணக்கதைகளில், கிடைத்தது போதும் என்ற மனோபாவத்துடன் வாழ்ந்து வந்த தூய பக்தரான, இந்தக் குசேலர் என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

      //ஆவலுடன் தொடர்கிறேன்...//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  16. மிகமிஎளிமையான அவருடன் உங்களுக்கு கிடைத்த நட்பு அற்புதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kowsy December 19, 2019 at 5:33 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மிக எளிமையான அவருடன் உங்களுக்கு கிடைத்த நட்பு அற்புதம்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு