Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில்
3.1 ஷாஜியின் அரசாட்சி,
3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும்,
3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்கிறார்,
3.4 ஸ்ரீதர வெங்கடேசரின் கடைசி நாட்கள்,
3.5 அபிராமி பட்டருடன் சரபோஜியின் சந்திப்பு,
3.6 தாயுமான ஸ்வாமியும் ராணி மீனாக்ஷியும்,
3.7 நாயக்க ராஜ்யத்தின் முடிவு.
இதன் கொசுறுப் பகுதி: ’வெங்கட்ராமனும் நானும்’.

நூலின் நான்காம் பாகத்தில்
4.1 ஆற்காடு ஹைதராபாத் அரியணைகள்,
4.2 தொண்டைமானும் இரண்டு மகான்களும்,
4.3 சதாசிவர் சம்பந்தப்பட்ட கோயில்கள்,
4.4 விட்டுப்போன மகான்கள்,
4.5 சாஸ்திரியின் குழப்பமும் முடிவும்,
4.6 அக்காலத்திய இசை மேதைகள்,
4.7 அக்காலத்திய இலக்கிய வளர்ச்சி.
இதன் கொசுறுப் பகுதி: சாஸ்திரியின் அதிஷ்டானம் (சமாதி) புதுப்பிக்கப்பட்டது.

நூலின் ஐந்தாம் பாகத்தில்
5.1 சதாசிவ பிரம்மேந்திரரின் மகா சமாதி,
5.2 சாஸ்திரியின் புதிய அவதாரம்,
5.3 மைசூரின் எழுச்சி,
5.4 திருவாங்கூர் ஒரு புதிய அரசின் உதயம்,
5.5 ஆங்கிலேயர் ஆட்சியின் நன்மைகளும் தீமைகளும்,
5.6 சாப்தீக சிந்தாமணி எனும் புதிய மஹா பாஷ்யம்,
5.7 சாஸ்திரியின் மகா சமாதி.
இதன் கொசுறுப் பகுதி ‘பழைய படைப்புகள் - புதிய வாழ்க்கை’
’5.2 சாஸ்திரியின் புதிய அவதாரம்’ என்ற பகுதியில் புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்கள், மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்களை, தனது ராஜகுருவாக ஏற்று, மிகவும் வற்புறுத்தி, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு வரவழைத்துக்கொள்கிறார். இதற்கு மூல காரணமாக இருந்தது, ’சதாசிவ பிரம்மேந்திராள்’ அவர்கள் அந்த அரசருக்கு, தன்னுடன் படித்த மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்களின் அருமை பெருமைகள் மற்றும் பாண்டித்யம் பற்றி எடுத்துச் சொன்ன அறிவுரைகள் மட்டுமே ஆகும்.
ஒரு மஹானின் பாண்டித்யம் + சிறப்புகள், ஒரு நல்ல மன்னரால், எவ்வாறெல்லாம் சிறப்பித்து கெளரவிக்கப்பட்டன என்பதை Dr. VGK அவர்களின் இந்த நூலில் படிக்கும்போதே, மிகவும் சந்தோஷமாக உணர முடிகிறது.

Dr. VGK அவர்கள், அவரின் இந்த நூலில், தன் முடிவுரையாக எழுதியுள்ளதை அப்படியே முழுவதுமாக இங்கு கொடுக்க நினைக்கிறேன்.
வரலாற்றுக்கென்றும் முடிவில்லை. ஆனால் வரலாற்று நூலுக்கு ஒரு முடிவு தேவை. கோபாலகிருஷ்ண சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன், ஸ்ரீதர வெங்கடேசன் ஆகியோரின் பிறப்புடன் துவங்கிய இந்நூலை அவர்களின் இறப்புடன் முடிப்பது ஒரு வகையில் பொருத்தமே. ஆனால் இந்நூலை முடிப்பதற்கு முன் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.
(உதாரணம்) ”தமிழ்நாடு இந்த மன்னர்களையும், மகான்களையும் இன்னும் நினைவில் வைத்திருக்கிறதா, அல்லது எப்போதோ மறந்து விட்டதா? தமிழ்நாட்டின் வரலாற்று நூல்களில் இவர்களுக்கு ஒரு முக்கிய நிரந்தர இடம் உண்டா?”
இதற்கு தெளிவான பதில் ... “இல்லை, இல்லை” என்பதுதான். நமது வரலாற்று நூல்களில் கிளைவ் போன்ற சில வெளிநாட்டுப் போக்கிரிகளுக்குக் கிடைக்கும் கவனம், பல உள்நாட்டு அரசர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், மகான்கள் ஆகியோருக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு வருந்தத்தக்க உண்மை. ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.
பள்ளி மாணவர்கள் பயிலும் வரலாற்று நூல்களில், இன்னமும் சந்தாசாகிப், முகமது அலி, ராபர்ட் க்ளைவ், டூப்ளே ஆகியோர் பற்றிய விபரங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் ஷாஜி, சொக்கநாத நாயக்கர், ராணி மீனாக்ஷி ஆகியோர் பற்றிய விபரங்களைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்.
கட்டபொம்மனுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது. அவரைப் பிடித்துக்கொடுத்த தொண்டைமான் துரோகியாகக் காட்டப்படுகிறார். ஆனால் சந்தாசாகிப் ராணி மீனாக்ஷிக்கு செய்த கொடுமை பற்றி பேசுவார் இல்லை. அரசர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படும்போது, அவர்களின் கீழ் பணிபுரிந்த ஸ்ரீதரன், தாயுமானவர், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு வரலாற்றில் இடம் ஏது?
சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மகான்களைப்பற்றி மதசார்பற்ற நாட்டின் நூல்களில் குறிப்பிட முடியாது. குறைந்தது திருவிசைநல்லூர் திட்டம் பற்றி ஏதாவது சொல்லலாம். ஆனால் அதுவும் புறக்கணிக்கப்பட்ட ஒன்று. நம்முடைய மகான்களை நாம் ஏன் இன்னும் புறக்கணிக்கிறோம்? நம்மை இன்னும் விடாத அடிமை வாழ்வின் தாக்கமா அல்லது இந்து மதம் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையா?
கடந்த கால மன்னர்களையும் மகான்களையும் பற்றி பொதுமக்களுக்கு எப்படி நினைவுறுத்தலாம்? தஞ்சாவூர் அரண்மனை, செஞ்சிக்கோட்டை போன்ற சில வரலாற்றுச் சின்னங்கள் நம் கடந்த காலத்தின் அடையாளங்கள். அவை இன்னும் அப்படியே உள்ளன. எனினும் அவைகள் தமிழ்நாட்டின் தலை சிறந்த சுற்றுலா ஸ்தலங்கள் வரிசையில் வருவதில்லை. அதாவது அதிக மக்கள் அவைகளைச் சென்று பார்ப்பதில்லை.
மகான்களைப் பொறுத்தவரை அவர்களது சமாதிகளே, மக்களுக்கு அவர்களை நினைவூட்டுகின்றன. நெரூரில் உள்ள சதாசிவர் சமாதி, கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரர் சமாதி, நமண சமுத்திரத்தில் உள்ள கோபாலகிருஷ்ணர் சமாதி, ராமநாதபுரத்தில் உள்ள தாயுமானவர் சமாதி, திருப்பூந்துருத்தியில் உள்ள நாராயண தீர்த்தர் சமாதி ஆகியன இன்னும் பக்தர்களை ஈர்க்கின்றன. திருவிசை நல்லூரில் உள்ள ஸ்ரீதரனின் வீடும், பாஸ்கர ராயர் கட்டியுள்ள கோயில்களும் இநத வரிசையில் சேரும்.
இந்தப்பட்டியலில் அபிராமி பட்டர் மட்டுமே இல்லை. இறக்கும் வரை அவர் இல்லறத்தில் இருந்தபடியால், அவரது உடல் தீயிலிடப்பட்டு விட்டது. ஒரு சமாதியில் அடக்கம் செய்யப்படவில்லை. கோயில்களையோ அல்லது நினைவுச் சின்னங்களையோ கட்டும் அளவுக்கு அவர் பணக்காரரும் இல்லை. இருப்பினும் திருக்கடையூர் கோயிலும், அபிராமி அந்தாதியும் அவரை நமக்கு என்றும் நினைவுப் படுத்துகின்றன.
தாயுமானவரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனி இடத்தை வகிக்கின்றன. மற்றவர்களின் படைப்புகள் சமஸ்கிருதத்தில் உள்ளதால் அவற்றை சிலரால் மட்டுமே படிக்க முடிகிறது.
சில காலமாக மேலை நாட்டுக் கல்வியாளர்களின் கவனத்தை பாணினி கவர்ந்துள்ளார். ஆனால் அந்தக் கவனம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி வரை வரவில்லை. நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) போன்ற இன்றைய மொழியியலாளர்கள் (Linguists), ஆக்கவியல் இலக்கணத்திற்குப் (Generative Grammer) பாணினியே தந்தை எனக் கருதுகிறார்கள். கணினி அறிவியலுக்கு (Computer Science) அது மிகவும் தேவையான ஒன்று. ஆனால் நோம் சோம்ஸ்கி சொல்லித்தான் பாணினியின் பெருமை நமக்குத் தெரிய வேண்டி இருப்பது நம் தலைவிதி. இந்தியாவில் சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்குக் கணினி பற்றித் தெரியாது. கணினி அறிவியலாளர்களுக்குச் சமஸ்கிருதம் தெரியாது.
பாணினி, “மறுசுழற்சி” (Recursion), "உருவ மாற்றம்” (Transformation), "மெட்டா விதிகள்” (Meta Rules) உள்ளிட்ட பல "முறைசார் நுட்பங்களை" (Formal Techniques), தனது நூலில் பயன் படுத்தியுள்ளார். ஒரு புதிய கண்டுபிடிப்பிற்குப் “பாணினியின் தேற்றம்” (Panini's Theorem) என்று மேலை நாட்டவர் பெயரிட்டுள்ளனர்.
பிற மொழிகளுக்கான பாணினி வகை இலக்கணங்களை உருவாக்கும் முயற்சிகளும் நடைமுறையில் உள்ளன. கணினி அறிவியலைச் சேர்ந்த “ஃபார்மல் லாங்குவேஜஸ் அண்ட் ஆட்டோமேடா” (Formal Languages and Automata) என்ற துறையிலும் "செயற்கை அறிவு" (Artificial Intelligence) என்ற துறையின் கீழ்வரும் “உருவமைப்பு” (Knowledge Representation) என்ற துறையிலும், பாணினியின் பங்களிப்புகள் ஏராளம். “கணினி அறிவியலுக்கு உபயோகமான பல அரிய கருத்துகள் அஷ்டாத்யாயியில் புதைந்து கிடக்கின்றன என்கிறார் பேராசிரியர் ஃபியூரியோ ஹோன்செல் (Prof. Furio Honsell). கணினி அறிவியலின் நவீன கம்பைலகர்கள் (Compilers) பாணினி சொன்ன யுக்திகளை ஒட்டி உள்ளன.
”அஷ்டாத்யாயி”யை இந்தியர்கள் ஆழ்ந்து படித்து, அதன் பொக்கிஷங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்குமுன், பட்டோஜி தீக்ஷிதரும், கோபாலகிருஷ்ண சாஸ்திரியும் எழுதிய அதன் உரைகளை, ஒரு மறு ஆய்வு செய்வது அவசியமாகும். அஷ்டாத்யாயின் சில சூத்திரங்களில் மட்டுமே தங்கள் கவனத்தை இவர்கள் ஏன் செலுத்தினர் என்பது இன்றுவரை விளக்கப்படாத புதிராக உள்ளது. ஒருவேளை, மீதமுள்ள சூத்திரங்களைவிட அவை “ஃபார்மல் லாங்குவேஜஸ்” படிப்பிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்குமோ? நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும்.
எனவே பட்டோஜி தீக்ஷிதரும், கோபாலகிருஷ்ண சாஸ்திரியும் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.
[இதற்கு அடுத்த பகுதியான பகுதி-8 உடன் எனது இந்த சிறிய தொடர் நிறைவடைய உள்ளது]

oooooooooOooooooooo
தொடரும் ...
படைப்பாளரின் நிறைவுரை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நம் மதத்தைப் பற்றி நாமே தாழ்வாக என்னும் போக்கு வருந்தத்தக்கது.
பதிலளிநீக்குஸ்ரீராம். December 13, 2019 at 5:52 AM
நீக்குவாங்கோ, ’ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்!’ வணக்கம்.
//படைப்பாளரின் நிறைவுரை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
//நம் மதத்தைப் பற்றி நாமே தாழ்வாக என்னும் போக்கு வருந்தத்தக்கது.//
ஆம். மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நம் மதத்தின் அருமை, பெருமை, தொன்மை, அதில் உள்ள மிகச் சிறந்த கருத்துக்கள், வாழ்க்கைக்கான மிகச் சரியான வழிகாட்டுதல்கள் போன்றவைகளை நம்மில் பலரே சரிவரத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் அறியாமையே இதற்கு முக்கியமான காரணமாகும். :(
வற்புறுத்தி - புருத்தினு தட்டச்சில் வந்திருக்கு
பதிலளிநீக்குநக்கீரருக்கு நன்றி ! :)
நீக்குஇந்த நூலின் முடிவுரை நன்றாக இருக்கிறது.அவர் நம்பிக்கை பலிகட்டும் இறையருளால்.
பதிலளிநீக்குகோமதி அரசு December 13, 2019 at 10:16 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த நூலின் முடிவுரை நன்றாக இருக்கிறது. அவர் நம்பிக்கை பலிகட்டும் இறையருளால்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
முடிவுரை அருமை...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, Mr. DD Sir.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசிறப்பான முடிவுரை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முனைவர் ஐயா.
நீக்குபரவலாகத் தெரியாத விஷயங்கள் பலவற்றைத் தெரியப்படுத்துகிற நூலாகத் தெரிகிறது. வாங்கி வாசிக்க வேண்டும். பொக்கிஷம் போலவான நூலின் அறிமுகத்திற்கு நன்றி, வை.கோ. சார்.
பதிலளிநீக்குஜீவி December 14, 2019 at 8:32 AM
நீக்குவாங்கோ, வணக்கம். நமஸ்காரங்கள்.
//பரவலாகத் தெரியாத விஷயங்கள் பலவற்றைத் தெரியப்படுத்துகிற நூலாகத் தெரிகிறது. வாங்கி வாசிக்க வேண்டும். பொக்கிஷம் போலவான நூலின் அறிமுகத்திற்கு நன்றி, வை.கோ. சார்.//
’வஸிஷ்டர் வாயால் .... பிரும்ம ரிஷி’
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.
COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,
பதிலளிநீக்கு-=-=-=-=-=-
Ananthasayanam Thiruvenkatachary
கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.
அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.
இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.
ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.
இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.
-=-=-=-=-=-
//கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.//
நீக்குஆஹா, கோடி கோடியாய் இன்பம் தரும் கோலாகல வரிகள் இவை.
//ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.//
அடாடா ..... மனித மனங்களை அறிவுபூர்வமாக உணர்ந்து, மனப்பூர்வமாக எழுத்தில் வடித்து அசத்தியுள்ளீர்கள்.
//அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.//
இங்கு திருச்சியில் அடிக்கும் வெயிலுக்கு, எங்கள் இருவரையுமே ஜில்லென்று குளிர வைத்து அசத்திவிட்டீர்கள்.
//இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள். ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.//
நகைச்சுவைக்காக மட்டுமே தாங்கள் சொன்னது என்றாலும், எதையும் சொல்லுவோர் சொன்னால் அதில் ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. அதனால் நாங்களும் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டியுள்ளது. :)
//இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்...அடியேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆழமான, விரிவான, விசித்திரமான, வித்யாசமான, விலாவரியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள், ஆசிகள் மற்றும் நன்றிகள். ALL THE BEST, Sir ! :))))
‘நமது வரலாற்று நூல்களில் கிளைவ் போன்ற சில வெளிநாட்டுப் போக்கிரிகளுக்குக் கிடைக்கும் கவனம், பல உள்நாட்டு அரசர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், மகான்கள் ஆகியோருக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு வருந்தத்தக்க உண்மை. ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.’
பதிலளிநீக்குஎன்ற நூலாசிரியரின் கருத்து சரியே. மிக சரியாக சொல்லியிருக்கிறார்.
வே.நடனசபாபதி December 15, 2019 at 12:10 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
‘நமது வரலாற்று நூல்களில் கிளைவ் போன்ற சில வெளிநாட்டுப் போக்கிரிகளுக்குக் கிடைக்கும் கவனம், பல உள்நாட்டு அரசர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், மகான்கள் ஆகியோருக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு வருந்தத்தக்க உண்மை. ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.’
என்ற நூலாசிரியரின் கருத்து சரியே. மிக சரியாக சொல்லியிருக்கிறார்.//
ஆஹா, தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.