Dr. VGK அவர்கள் வெளியிட்டுள்ள இந்த நூலில், அந்தக்காலக் கட்டத்தில் இங்கு தமிழ்நாட்டின் காவிரிக்கரையில் வாழ்ந்த பல்வேறு மகான்கள் பற்றியும், அவர்களை ஆதரித்து, ஆலோசகர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் பக்தி செலுத்தி, இறை நம்பிக்கையுடன், தர்ம சிந்தனைகளுடன், மிகவும் நல்லாட்சி புரிந்த ஒருசில மன்னர்கள் பற்றியும் நிறைய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மகான்களின் மதிப்புத் தெரியாமல், அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த பல்வேறு மன்னர்கள் / அரசிகள் பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளன.
மன்னர்களின் பலம், பலகீனம், அடிக்கடி இவர்களுக்குள் ஏற்பட்டு வந்த போர்கள், அதன் வெற்றிகள், தோல்விகள், மன்னர்கள் ஆண்டுவந்த காலக் கட்டம், அவர்களின் இல்வாழ்க்கை, வாரிசுகள், வாரிசுகள் இல்லாத மன்னர்கள், அவர்களில் பலருக்கும் ஏற்பட்ட இறுதி முடிவுகள் என பலவற்றையும், சுவைபட அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார் Dr. VGK.
பொதுவாக கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில், 1675 முதல் 1752 வரை, தமிழ் நாட்டின் காவிரிக்கரையோரம் வாழ்ந்துள்ள மன்னர்கள் மற்றும் மகான்கள் பற்றிய பல்வேறு செய்திகள் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
மகான்களில் குறிப்பாக (1) சதாசிவ பிரும்மேந்திராள் [1670-1752]; (2) மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி [1673-1762]; (3) ஸ்ரீதர வெங்கடேசர் அய்யர்வாள் [1635-1720]; (4) போதேந்திர சரஸ்வதி (1610-1692]; (5) நாராயண தீர்த்தர் (1675-1745]; (6) தாயுமானவர் (1707-1742]; (7) அபிராமி பட்டர் [1680-1750; (8) பாஸ்கர ராயர் [1690-1785] ஆகியோர் பற்றி, மிக விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
அதுபோல அப்போது ஆண்டுவந்த மன்னர்களில் மேற்படி மகான்கள் சிலருடன் தொடர்பில் இருந்த (1) சொக்கநாத நாயக்கர் (2) ராணி மீனாக்ஷி (3) மதுரை ராணி மங்கம்மாள், (4) ஷாஜி-2 (5) சரபோஜி, (6) விஜயரகுநாத தொண்டைமான் ஆகியோர் பற்றிய பல்வேறு செய்திகளை அறியமுடிகிறது.
மேற்படி மகான்களைத் தவிர குமரகுருபரர் போன்ற சைவ மட மகான்கள் பலரும், வைணவ, பெளத்த, சமணமதப் பண்டிதர்களும், வீரமா முனிவர் (கிறிஸ்தவர்), இரட்டை மஸ்தான் (இஸ்லாமியர்) போன்ற மகான்களும் அதே காலக்கட்டத்தில் இருந்திருக்கக்கூடும் என அறியப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதரவாளர்களாக பலரும் இருந்துள்ளனர். தமிழ்மொழி அப்போது பிரபந்த அளவிலேயே சிற்றிலக்கியமாக இருந்துள்ளது. கம்பர் அல்லது திருவள்ளுவரோடு ஒப்பிடும் அளவுக்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார் நம் நூல் ஆசிரியர் Dr, VGK.
ரகுநாத சேதுபதி-II என்னும் ’கிழவன் சேதுபதி’, மதுரை நாயக்கரின் கீழ், ராமனாதபுரத்தை ஆண்ட [1671-1710] ஒரு குறுநில மன்னன். மறவ மன்னர்களிலேயே சிறந்தவராக இவர் கருதப்படுகிறார். 1616-1682 வாழ்ந்த சொக்கநாத நாயக்கர் இவருக்கு ’பரராஜ கேசரி’ (அன்னிய அரசர்களுக்கு சிங்கம்போல விளங்குபவர்) என்ற பட்டத்தை வழங்கினார். ‘கிழவன் சேதுபதி’ 1707-இல் தன்னை ஒரு சுதந்திர மன்னனாக அறிவித்துக் கொண்டார். 1725-இல் மீண்டும் அது குறுநில நாடாக ஆக்கப்பட்டது. அதனால் சிவகங்கை ஓர் புதிய நாடாக அறிமுகமானது.
சிறந்த பக்திமானும், திருவாடனை, காளையார் கோயில் போன்றவற்றிற்கு நிறைய நிலங்களைக் கொடையாக அளித்தவரும், ராமநாதபுரத்தில் ஓர் கோட்டையையும், வைகையில் ஓர் அணையையும் கட்டியவரும், கிறிஸ்தவப் பாதிரிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான ‘கிழவன் சேதுபதி’க்கு மொத்தம் 45 மனைவிகள் இருந்ததாகவும், அதுதவிர ’கதலி’ என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகள் Dr. VGK அவர்களின் நூலின் மூலம் அறிய முடிகிறது. ’கதலி’யின் சகோதரரான ரகுநாதனை புதுக்கோட்டைக்கு மன்னராக்கி ‘தொண்டைமான்’ என்ற பட்டத்தையும் அளித்தார். இவ்வாறு ஒரு புதிய வம்சம் புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ளது.
’கிழவன் சேதுபதி’ இறந்தபோது அவருடைய 45 மனைவிகளும் உடன்கட்டை ஏறியுள்ளனர் என்கிறார் Dr. VGK. கிழவனின் தத்துப்பிள்ளையான விஜயரகுநாத சேதுபதி (1710-1723) அதன்பின் அரசராகியுள்ளார் என்கிறது இந்த நூல்.
இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பக்கம் பக்கமாக அள்ளித்தந்துள்ளார், Dr. VGK அவர்கள். இயல்பான பேச்சுத்தமிழில், ஆங்காங்கே சிற்சில நகைச்சுவை வரிகளையும் சேர்த்து, ஒரு வரலாற்று நூலைப்படிக்கிறோம் என்ற அலுப்பேதும் ஏற்படாத வண்ணம், அழகாக ஓர் கதை போலச் சொல்லிச் செல்வது, படித்து மகிழ பேரின்பம் தருவதாக உள்ளது.
தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சாம்பாருக்கு ‘சாம்பார்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பக்கம் எண்: 136 இன் இறுதியில் சுட்டிக் காட்டியுள்ளது, இந்த நூலை வாசிக்கும் வாசகர்களை புன்னகை புரிய வைப்பதாக உள்ளது.
பொதுவாக கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில், 1675 முதல் 1752 வரை, தமிழ் நாட்டின் காவிரிக்கரையோரம் வாழ்ந்துள்ள மன்னர்கள் மற்றும் மகான்கள் பற்றிய பல்வேறு செய்திகள் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
மகான்களில் குறிப்பாக (1) சதாசிவ பிரும்மேந்திராள் [1670-1752]; (2) மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி [1673-1762]; (3) ஸ்ரீதர வெங்கடேசர் அய்யர்வாள் [1635-1720]; (4) போதேந்திர சரஸ்வதி (1610-1692]; (5) நாராயண தீர்த்தர் (1675-1745]; (6) தாயுமானவர் (1707-1742]; (7) அபிராமி பட்டர் [1680-1750; (8) பாஸ்கர ராயர் [1690-1785] ஆகியோர் பற்றி, மிக விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
அதுபோல அப்போது ஆண்டுவந்த மன்னர்களில் மேற்படி மகான்கள் சிலருடன் தொடர்பில் இருந்த (1) சொக்கநாத நாயக்கர் (2) ராணி மீனாக்ஷி (3) மதுரை ராணி மங்கம்மாள், (4) ஷாஜி-2 (5) சரபோஜி, (6) விஜயரகுநாத தொண்டைமான் ஆகியோர் பற்றிய பல்வேறு செய்திகளை அறியமுடிகிறது.
^மதுரை ராணி மங்கம்மாள்^
^ஷாஜி-II தஞ்சாவூர்^
கெம்ப கெளடா-1
பெங்களூர்
தஞ்சை, திருச்சி, மதுரை, ஆற்காடு, செஞ்சி, பெங்களூர், புதுக்கோட்டை, ராமனாதபுரம், சிவகங்கை முதலிய பகுதிகளை ஆண்ட அரசர்களும், மராட்டியர், முகலாயர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் சக்திகளாக அப்போது இருந்துள்ளனர்.
மேற்படி மகான்களைத் தவிர குமரகுருபரர் போன்ற சைவ மட மகான்கள் பலரும், வைணவ, பெளத்த, சமணமதப் பண்டிதர்களும், வீரமா முனிவர் (கிறிஸ்தவர்), இரட்டை மஸ்தான் (இஸ்லாமியர்) போன்ற மகான்களும் அதே காலக்கட்டத்தில் இருந்திருக்கக்கூடும் என அறியப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதரவாளர்களாக பலரும் இருந்துள்ளனர். தமிழ்மொழி அப்போது பிரபந்த அளவிலேயே சிற்றிலக்கியமாக இருந்துள்ளது. கம்பர் அல்லது திருவள்ளுவரோடு ஒப்பிடும் அளவுக்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார் நம் நூல் ஆசிரியர் Dr, VGK.
ரகுநாத சேதுபதி-II என்னும் ’கிழவன் சேதுபதி’, மதுரை நாயக்கரின் கீழ், ராமனாதபுரத்தை ஆண்ட [1671-1710] ஒரு குறுநில மன்னன். மறவ மன்னர்களிலேயே சிறந்தவராக இவர் கருதப்படுகிறார். 1616-1682 வாழ்ந்த சொக்கநாத நாயக்கர் இவருக்கு ’பரராஜ கேசரி’ (அன்னிய அரசர்களுக்கு சிங்கம்போல விளங்குபவர்) என்ற பட்டத்தை வழங்கினார். ‘கிழவன் சேதுபதி’ 1707-இல் தன்னை ஒரு சுதந்திர மன்னனாக அறிவித்துக் கொண்டார். 1725-இல் மீண்டும் அது குறுநில நாடாக ஆக்கப்பட்டது. அதனால் சிவகங்கை ஓர் புதிய நாடாக அறிமுகமானது.
கிழவன் சேதுபதி
’கிழவன் சேதுபதி’ இறந்தபோது அவருடைய 45 மனைவிகளும் உடன்கட்டை ஏறியுள்ளனர் என்கிறார் Dr. VGK. கிழவனின் தத்துப்பிள்ளையான விஜயரகுநாத சேதுபதி (1710-1723) அதன்பின் அரசராகியுள்ளார் என்கிறது இந்த நூல்.
இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பக்கம் பக்கமாக அள்ளித்தந்துள்ளார், Dr. VGK அவர்கள். இயல்பான பேச்சுத்தமிழில், ஆங்காங்கே சிற்சில நகைச்சுவை வரிகளையும் சேர்த்து, ஒரு வரலாற்று நூலைப்படிக்கிறோம் என்ற அலுப்பேதும் ஏற்படாத வண்ணம், அழகாக ஓர் கதை போலச் சொல்லிச் செல்வது, படித்து மகிழ பேரின்பம் தருவதாக உள்ளது.
தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சாம்பாருக்கு ‘சாம்பார்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பக்கம் எண்: 136 இன் இறுதியில் சுட்டிக் காட்டியுள்ளது, இந்த நூலை வாசிக்கும் வாசகர்களை புன்னகை புரிய வைப்பதாக உள்ளது.
தொடரும் ....
ஆஆஆஆ இம்முறை மீதான் 1ஸ்டூஊஊஊஊ:).
பதிலளிநீக்குயெஸ்.... நீங்கதான் எப்போதும் எதிலும் ஃபர்ஸ்ட்டூஊஊ.
நீக்குஅழகாக விமர்சனம் எழுதுறீங்க கோபு அண்ணன் ஆனா எனக்கு இது கஸ்டமாக இருக்குது அதனால சைன் பண்ணிட்டுப் போகிறேன்.
பதிலளிநீக்கு///தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சாம்பாருக்கு ‘சாம்பார்’ என்ற பெயர் எப்படி வந்தது//
இதுக்காக மீயும் பொன்னகையோடு சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே புன்னகையோடு வெயிட்டிங்.
தியாகத்திலகம் அதிரா:) December 9, 2019 at 1:06 AM
நீக்குவாங்கோ அதிரா, வணக்கம்.
//அழகாக விமர்சனம் எழுதுறீங்க கோபு அண்ணன் ஆனா எனக்கு இது கஸ்டமாக இருக்குது அதனால சைன் பண்ணிட்டுப் போகிறேன்.//
அச்சச்சோ .... என்ன ஆச்சு? உடனே திரும்பி வந்திடுங்கோ .. இல்லாட்டி எனக்குக் கையும் ஓடாது .. லெக்கும் ஆடாது .. ஜொல்லிட்டேன். :)
சுவாரஸ்யமான விவரங்கள். கிழவன் சேதுபதி பற்றிய விவரங்கள் மிகவும் சுவாரஸ்யம். நாற்பத்தி ஐந்தே நாற்பத்தி ஐந்து மனைவிகள்தானா?!!
பதிலளிநீக்குஅதுபோக 46வதாக கதலி என்று சொல்லியிருக்கிறாரே.
நீக்குபடைபட்டாளம் அதிகம் என்பதால் சமையலறை வேலைகள் அதிகமல்லவா? அதனால் இருக்கும்
ஸ்ரீராம். December 9, 2019 at 6:26 AM
நீக்குவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//சுவாரஸ்யமான விவரங்கள். கிழவன் சேதுபதி பற்றிய விவரங்கள் மிகவும் சுவாரஸ்யம். நாற்பத்தி ஐந்தே நாற்பத்தி ஐந்து மனைவிகள்தானா?!! //
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கரெக்டா பாயிண்டை பிடிச்சுட்டீங்கோ. அதற்கு மேல் கதலி போன்ற காதலிகளும் உண்டாமே. கொடுத்து வெச்ச ஆளு ! :)
விமர்சனத்தில் நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
கோமதி அரசு December 9, 2019 at 7:39 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//விமர்சனத்தில் நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
ஓ... சமீபகால வரலாறா?
பதிலளிநீக்குவிவரங்கள் சுவாரசியமானதாக இருக்கிறது.
சிற்சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன்
நெல்லைத்தமிழன் December 9, 2019 at 10:15 AM
நீக்குவாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.
//ஓ... சமீபகால வரலாறா?//
ஆமாம். நம் தாத்தாவின் தாத்தா கால வரலாறுகள்.
//விவரங்கள் சுவாரசியமானதாக இருக்கிறது.//
மிக்க மகிழ்ச்சி.
//சிற்சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன்//
நல்லது. மொத்தத்தில் உமக்குத் தெரியாத விஷயங்களே கிடையாதே ! :)
45 பேரைத் தவிர கதலி என்ற காதலி.
பதிலளிநீக்குஅப்போ கதலி உடன்கட்டை ஏறலையா இல்லை அரசருக்கு முன்பே ஒண்ணு அவுட்டா?
நெல்லைத்தமிழன் December 9, 2019 at 10:19 AM
நீக்கு//45 பேரைத் தவிர கதலி என்ற காதலி.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நன்கு ஊன்றிப் படித்துள்ளீர். சபாஷ் !
//அப்போ கதலி உடன்கட்டை ஏறலையா இல்லை அரசருக்கு முன்பே ஒண்ணு அவுட்டா?//
நியாயமான சந்தேகம், உமக்கு. :)
தமிழ்மொழி பிரபந்த அளவில் சிற்றிலக்கியமாக இருந்துள்ளது// - இதன் அர்ந்தமும் அதற்கடுத்த வரியும் புரியலை.
பதிலளிநீக்குபெரிய புலவர்கள், அதாவது கவியரசு, கவிப்பேர்ரசு, கவிச்சிம்மம்... போன்னறவர்கள் அப்போ இல்லையா?
நெல்லைத்தமிழன் December 9, 2019 at 10:22 AM
நீக்கு**தமிழ்மொழி பிரபந்த அளவில் சிற்றிலக்கியமாக இருந்துள்ளது** - இதன் அர்ந்தமும் அதற்கடுத்த வரியும் புரியலை.//
உமக்கே புரியாதது, என்னையும் அதிராவையும் போன்றவர்களுக்கு எப்படிப் புரியப்போகிறது. :))
//பெரிய புலவர்கள், அதாவது கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சிம்மம்... போன்றவர்கள் அப்போ இல்லையா?//
இருந்திருக்கவோ, ஒருவேளை இருந்திருந்தாலும் அவர்கள் சோபிக்கவோ வாய்ப்பு இருந்திருக்காது. சினிமா, ரேடியோ, டி.வி. சேனல்கள், பத்திரிகைகள், செல்ஃபோன், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களும், தொழில்நுட்பங்களும் இல்லாத காலமாச்சே.
ஓலைச்சுவடிகளும், எழுத்தாணிகளும் மட்டுமே இருந்திருக்கும். இந்த அளவுக்குக் கலி முற்றாத காலம் அது.
நிறைய தகவல்கள் உள்ளன என்பது தெரிகிறது...
பதிலளிநீக்குஆம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, DD Sir.
நீக்குகிழவன் சேதுபதி பற்றி இதுவரை அறியாத அறிய தகவல்களை அறிய முடிந்தது. இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி December 10, 2019 at 4:24 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//கிழவன் சேதுபதி பற்றி இதுவரை அறியாத அறிய தகவல்களை அறிய முடிந்தது. இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என நினைக்கிறேன்.//
ஆம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
சாம்பாரைப் பற்றி சொல்லி
பதிலளிநீக்குசுவை கூட்டிவிட்டீர்கள்!!!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் December 11, 2019 at 10:54 PM
நீக்கு//சாம்பாரைப் பற்றி சொல்லி சுவை கூட்டிவிட்டீர்கள்!!!//
வாங்கோ பிரதர். பசி எடுத்து விட்டதா?
COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,
பதிலளிநீக்கு-=-=-=-=-=-
Ananthasayanam Thiruvenkatachary
கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.
அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.
இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.
ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.
இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.
-=-=-=-=-=-
ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள் அழகாய்த் தொகுத்து.
பதிலளிநீக்குரிஷபன் December 13, 2019 at 10:56 AM
நீக்கு//ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள் அழகாய்த் தொகுத்து.//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)
நூலில் வரலாற்றுத் தகவல்களும் இணைந்திருப்பது வாசிப்பை இன்னும் சுவாரசியமாக்க வல்லவை. மிகுந்த சிரத்தையுடன் தொகுத்தளிக்கும் தங்களுக்கு நன்றி கோபு சார்.
பதிலளிநீக்குகீதமஞ்சரி January 16, 2020 at 3:06 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//நூலில் வரலாற்றுத் தகவல்களும் இணைந்திருப்பது வாசிப்பை இன்னும் சுவாரசியமாக்க வல்லவை.//
தாங்கள் எழுதிய ‘என்றாவது ஒரு நாள்’ நூலைப்பற்றி அலசி ஆராய்ந்து, அடியேன் எழுதிய அந்த இனிய அனுபவம், எனக்கு இதிலும் கொஞ்சம் கை கொடுத்து உதவியது, மேடம்.
http://gopu1949.blogspot.com/2015/09/part-1-of-5.html
http://gopu1949.blogspot.com/2015/09/part-2-of-5.html
http://gopu1949.blogspot.com/2015/09/part-3-of-5.html
http://gopu1949.blogspot.com/2015/09/part-4-of-5.html
http://gopu1949.blogspot.com/2015/09/part-5-of-5.html
//மிகுந்த சிரத்தையுடன் தொகுத்தளிக்கும் தங்களுக்கு நன்றி கோபு சார்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.