About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, December 14, 2012

*அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!*


அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!

சமையல் குறிப்பு

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
இன்றுள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் விஷயமாக, தன் குடும்பத்தைப்பிரிந்து  உலகின் பல்வேறு பாகங்களில் தனித்துத்தங்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதில் பலருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பிட முடிவதில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது மிகவும் சகஜமாக உள்ளது.  அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தன் வீட்டில் சைவ சாப்பாடு மட்டுமே வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப்பழகியவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகவே இருக்கும்.

மெஸ் போன்ற உணவு விடுதிகளிலோ, ஹோட்டல்களிலோ தினமும் சாப்பிடுவது என்பது நாளடைவில் 

1] மிகவும் அலுத்துப்போய் விடக்கூடும். 
2] அதிக பணச்செலவினை ஏற்படுத்தும்.
3] சிலர் உடம்புக்கு ஒத்து வராது
4] மன நிறைவு ஏற்படாமல் போகும்
5] ருசியில்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிட வேண்டிய 
    கட்டாயத்தினை  ஏற்படுத்தும்.

அவரவருக்கு வேண்டிய உணவினை அவரவர்களே தயாரித்து உண்ண பழகிக்கொண்டால் அதில் பல்வேறு நன்மைகள் உண்டு. இது சொல்வது மிகவும் சுலபம் தான்; ஆனால் இவ்வாறு செய்வதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளும் சிக்கல்களும் உண்டு தான்.

இந்த சமையல் கலை என்பது ஆரம்பத்தில் பழகும்  வரை சற்று கஷ்டமாக இருக்குமே தவிர, ஓரளவு பழகி விட்டால், பிறகு அதனால் ஏற்படும் பயன்களும், மன திருப்தியும் மிகவும் அதிகமே.

ஒரு காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு, சாதம் வடிக்க ஒரு பிரஷர் குக்கர், ஒரு மிக்ஸி, ஒரு குளிர்சாதனப்பெட்டி, ஒருசில அத்யாவஸ்ய பாத்திரங்கள்,  தேவையான மளிகை சாமான்கள் முதலியன மட்டும் வாங்கி வைத்துக்கொண்டால் போதும். 

குக்கரில் சாதம் வடித்துக்கொள்வது மிகவும் எளிது. தயிர் + ஊறுகாய் போன்றவைகளை அவ்வப்போது ஃப்ரெஷ் ஆகக் கடையில் வாங்கி வைத்துக்கொண்டு விடலாம். வெறும் தயிர் / மோர் சாதம் மட்டும் சாப்பிட்டால் அதுவும் அலுத்துப்போகும் அல்லவா! 

தினமும் சாம்பார், ரஸம், அவியல், பொரியல் என செய்வதற்கெல்லாம் நிறைய பொறுமையும் நேரமும் தேவைப்படும். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நிறைய பாத்திரம் பண்டங்களைத் தேய்ப்பதும் மிகவும் கஷ்டமான வேலையாகிவிடும்.

அதனால் அதற்கு மாற்றாக “அடை” மாவு மிக்ஸியில் அரைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் நல்லது, இது ஆண்களுக்கு மிகவும் சுலபமானது.  காரசாரமான “அடை” தயாரிப்பது எப்படி? என விளக்க நினைக்கிறேன். இது ஆண்களுக்கு மிகவும் பயன்படக்கூடும். 

ஒவ்வொரு வேளையும் கனமான ஓரிரு அடைகளும், தயிர் சாதமும் சாப்பிட்டால் வயிறு கம்முனு இருக்கும். தயிர் சாதம் அல்லது மோர் சாதத்திற்கு, இந்த அடையையே தொட்டுக்கொண்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

அடை வார்ப்பதற்கு என்றே  கனமான அடைக்கல் என்று ஒன்று விற்கப்படுகிறது.     மெல்லிய தோசைக்கல்லோ, நான் ஸ்டிக் ஐட்டமோ இந்த அடை வார்க்க சரிப்பட்டு வராது. 

[கனமான அடைக்கல் வாங்க இங்கு திருச்சி பெரிய மார்க்கெட் மணிக்கூண்டுக்கு அருகே உள்ள இரும்புக் கடைக்கு வாங்க!] 

இப்போ “அடை” தயாரிப்புக்கான பொருட்கள் மற்றும் செய்முறைக்குப் போவோமா?

நல்ல கனமான 30 அடைகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன்: 

1] நல்ல நயம் புழுங்கல் அரிசி*  : ஒரு கிலோ

    [*இட்லி அரிசி போதும்; சாப்பாட்டு அரிசி வேண்டாம் ]     

2] நல்ல நயம் துவரம் பருப்பு    : 625  கிராம்  

3] நல்ல நயம் கடலைப்பருப்பு :  250 கிராம்  

மேலே 1 முதல் 3 வரை கூறியுள்ள பொருட்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்து ஒரே பாத்திரத்திலோ நல்ல நீரில் ஊறப்போட்டு மூடி வைக்கவும். குறைந்த பக்ஷம் 3 மணி நேரமாவது ஊறணும். அதிகபக்ஷம்  5 மணி நேரம் கூட ஊறலாம். அதன் பிறகு தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் புதிய தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். பிறகு அந்த நீரையும் வடித்து எடுத்து விடவும். 

4] கட்டிப்பெருங்காயம் : ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அதை  ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் நல்ல தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு மூடி வைக்கவும்.  பெருங்காயம் முற்றிலும் கரைய நீண்ட நேரம் ஆகும். அதனால் அதை முன்கூட்டியே சுமார் 12 மணி நேரம் முன்பாகவே ஊறப்போட்டு விடவும். அப்போது தான் அடியில் கட்டியாகத்தங்காமல் கரையக்கூடும்.  

நடுவில் முடிந்தால் பெருங்காயம் கரைந்த ஜலத்தை தனியாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் விட்டு, பிசுக்கு போல அடியில் தேங்கியுள்ள பெருங்காயத்தை கை விரல்களால், பிசைந்து கலக்கி விடவும். 

இந்தக்கட்டிப் பெருங்காய ஜலத்துடன் அரைக்கும் அடைமாவு, ஜம்முனு வாசனையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போதும், அடை வார்க்கும் போதும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக்கூட சுண்டி இழுத்து அழைத்து வரும் குணமும் மணமும் இந்தக் கட்டிப் பெருங்காய ஜலத்துக்கு மட்டுமே உண்டு.

5] நம் கைவிரல் அளவு நீளமுள்ள நல்ல சிவப்பு மிளகாய் வற்றல் [புதியதாக 40] நாற்பது எண்ணிக்கை நன்கு கழுவி விட்டு காம்புகளை மட்டும் நீக்கி வைத்துக்கொள்ளவும்.  

6] நன்கு கழுவிய நீண்ட பச்சை மிளகாய் [வாசனைக்காக] 5 எண்ணிக்கை
    காம்புகளை நீக்கி வைத்துக்கொள்ளவும்.

7] இஞ்சியின் மேல் தோலை நன்கு சீவி நீக்கிவிட்டு, உள்பக்க சதை பாகத்தை மட்டும் கத்தியால் சீவி வைத்துக்கொள்ளவும. சற்றே பெரிய ஒரு துண்டு இஞ்சி சீவலே போதுமானது.

8] டேபிள் சால்ட் [உப்பு] மொத்தமே ஆறு சிறிய ஸ்பூன் அளவு போதும்.  உப்பு இன்னும் கூட குறைவாகவே எடுத்துக்கொள்ளலாம். மாவு அரைத்து டேஸ்ட் பார்த்து விட்டு தேவைப்பட்டால் பிறகு உபரியாக சேர்த்துக்கொள்ளலாம். அதிகமாக உப்பைப் போட்டுவிட்டால் கரித்துக்கொட்டும். அதை எடுக்க முடியாமல் கஷ்டமாகப்போய்விடும். 

அதனால் உப்பு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. அரிசி+பருப்புகள் மேலே நான் சொன்ன அளவில் மொத்தமாக 2 கிலோ போட்டால் மட்டுமே ஆறு சிறிய ஸ்பூன்கள் உப்புத்தூள் சேர்க்கலாம்.

9] கருவேப்பிலை 2-3 ஆர்க் நன்கு கழுவி இலைகளைத்தனியே பிரித்து வைத்துக்கொள்ளவும்.

10] முருங்கை இலை கிடைத்தால் அவற்றையும் பறித்து கழுவி ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்.  முருங்கை இலையுடன் அடை வார்த்தால் அதன் டேஸ்ட் தனியாக இருக்கும்.  உடம்புக்கும் நல்லது.

11] வெங்காய அடை விரும்புவோர் அடை வார்க்கும் சமயத்தில் மட்டும் அதனை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கியபிறகு நீண்ட நேரம் உபயோகிக்காமல் வைக்கக் கூடாது.அதனால் அவ்வப்போது தேவைப்பட்டால்  நறுக்கி, அடைக்கல்லில்  அடை வார்க்கும் போது,  அதன் மேல் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

12] சிலருக்கு எந்த உணவிலும் தேங்காய் சேர்த்தால் தான் பிடித்தமாக இருக்கக்கூடும். அவர்கள் தேங்காயைத்துருவலாகவோ, அல்லது சிறிய பற்கள் வடிவிலோ வெட்டி தயாராக வைத்துக்கொள்ளலாம். 

13] அடை வார்க்க எண்ணெயோ, நெய்யோ அவரவர் விருப்பம் போல நிச்சயம் வேண்டும்.

14] அடைக்குத்தொட்டுக்கொள்ள வெல்லப்பொடியோ, ஜீனியோ, நெய்யோ  அவரவர் விருப்பம் போல ருசிக்காக சேர்த்துக்கொள்ளலாம். 

சிலர் அடைக்கு அவியல் தான் வேண்டும் என அடம் பிடிப்பார்கள். எனக்கு இந்த அவியல் என்பதே ஏனோ பிடிப்பதில்லை. சிலர் சாம்பார், சட்னி, தோசை மிளகாய்ப்பொடி, மோர்க்குழம்பு என்று ஏதேதோ கூட கேட்பார்கள்.  

காரசாரமான நல்ல தரமான அடைக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம். சூடான காரசாரமான அடைக்கு, சீவிய மண்டை வெல்லப்பொடி + உருக்கிய நெய் நல்லதொரு காம்பினேஷன் என்பது என் அபிப்ராயம். 

அடைக்கு அரைப்பதற்கான  முன்னேற்பாடுகள்:
===============================================

மின் இணைப்பினைத் துண்டித்து விட்டு, மிக்ஸியை நன்றாக ஈரத்துணியால் புழுதி போகத்துடையுங்கள். அப்படியே மிக்ஸி கனெக்‌ஷன் ஒயரின் வெளிப்பக்கத்தையும்  துடையுங்கள். பிறகு காய்ந்த துணியால் ஒருமுறை துடையுங்கள்.

பெரிய சைஸ் மிக்ஸி ஜார் + ப்ளேடு நன்றாக கழுவிக்கொண்டு வாருங்கள்.

மின்சார சப்ளை அடுத்த அரை மணி நேரத்திற்காவது இருக்குமா என உறுதி செய்து கொள்ளுங்கள்.

அரைத்த மாவை ஊற்றி பத்திரப்படுத்த ஒரு சுத்தமான பாத்திரத்தை நன்கு அலம்பி, மிக்ஸி அருகே  தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

சுத்தமான தண்ணீர் ஒரு பாத்திரத்தில் மிக்ஸி அருகே வைத்துக்கொள்ளுங்கள். ஓரிரு கரண்டிகள் + ஸ்பூன்களும் இருக்கட்டும்.

நீர் வடிகட்டப்பட்ட ஊறிய அரிசி + பருப்புகளையும், பெருங்காயம் ஊறிய ஜலம் போன்ற Sl. Nos: 1 to 9 அனைத்தையும்,   மிக்ஸி அருகில் கொண்டு வந்து வரிசையாக அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அடைக்கு அரைத்தல்:
===============================

ஸ்விட்சை ஆஃப் [SWITCH OFF} செய்து விட்டு மிக்ஸியின் PLUG குக்கு மெயின் மின்இணைப்பு இப்போது கொடுக்கவும். மிக்ஸியில் உள்ள கண்ட்ரோல் ஸ்விட்ச் ஆஃப் இல் உள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு, மெயின் ஸ்விட்ச்சை இப்போது ”ON” செய்துகொள்ளவும்.

முதலில் Sl. Nos. 5 to 9 இல் உள்ள அனைத்துப்பொருட்களையும் [காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் + காம்பு நீக்கிய பச்சைமிளகாய் + சீவி வைத்துள்ள இஞ்சி + கருவேப்பிலை + உப்புத்தூள்] மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியை மெதுவாக ஓட விடுங்கள்.

நன்றாக சுண்டிய வற்றல் குழம்பு போல ஆகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு நன்றாக ஓட விட்டு, பிறகு அந்தக்குழம்பினை [விழுதினை] தனியாக ஓர் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

ஊறிய புழுங்கல் அரிசி + பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து மிக்ஸி பாத்திரத்தில் பாதி அளவுக்கு மட்டும் போடுங்கள். அத்துடன் மேலே உள்ள குழம்புக்கரைசலில் கொஞ்சம் ஊற்றி, பெருங்காய ஜலத்தையும் சிறிதளவு ஊற்றி, Just ஒரு கரண்டி அளவு நல்ல தண்ணீரும் விட்டு, மிக்ஸியை 2-3 நிமிடங்களுக்கு ஓட விடுங்கள்.   

நடுவே மிக்ஸியை ஆஃப் செய்துவிட்டு,  மிக்ஸி ஜாரைத்திறந்து ஸ்பூன் உதவியால்  கிளறி விடுங்கோ.  மாவு ஓரளவு கெட்டியாகவே இருப்பது நல்லது. அதிகமாக ஜலம் விடக்கூடாது.  அதுபோல மையாக அரைபட வேண்டும் என்ற தேவை இல்லை. கைக்கு நரநரப்பாகவே இருக்கட்டும். அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் ஓரளவுக்கு அரை பட்டுவிட்டால், அந்த விழுதினை தனியாக வைத்துள்ள பாத்திரத்தில் வழித்து ஊற்றிக்கொள்ளவும்.

இதே போல மீண்டும் மீண்டும் அரிசி+பருப்பு கலவை + காரக்குழம்பு கலவை + பெருங்காய ஜலம் இவற்றை, சற்றே ஜலம் விட்டு மிக்ஸி ஜாரில் பாதி அளவுக்குப்போட்டு 2-3 நிமிடங்களுக்கு ஓடவிட்டு, அரைத்த மாவை பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். இது போல ஒரு ஏழெட்டு முறை அதிகம் போனால் 10 முறை ஓட்டினால் ஊற வைத்த அரிசி+பருப்பு + காரக்குழம்பு விழுது + பெருங்காய ஜலம் முதலியன சுத்தமாக முழுவதும் தீர்ந்து, அரைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு விடும்.

கடைசியாக மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டியுள்ள மாவை நன்கு வழித்து, ஒரு டம்ளர் ஜலம் விட்டு ஓடவிட்டு, அந்தக்கரைசலை தனியாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும். ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கெட்டிமாவில் அதை இப்போது ஊற்ற வேண்டாம்.  

பிறகு அவ்வப்போது கொஞ்சமாக மாவை எடுத்து அடை வார்க்கும் போது அந்த கெட்டி மாவை சற்றே நீர்க்க வைக்க இந்தக்கடைசியாக அரைத்துவைத்த கரைசலை பயன் படுத்திக்கொள்ளலாம்.

காலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும்.  அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.


மிக்ஸியின் மின் இணைப்பினை துண்டிக்கவும். மிக்ஸி + மிக்ஸியின் இணைப்பு ஒயரின் மேல் சிந்திச்சிதறியுள்ள அடைமாவினை நன்றாக ஓர் ஈரத்துணியினால் துடைத்து விடுங்கள். 

அன்புள்ள அறிவுள்ள ஆண்களே! 

உங்களுக்கு இந்த இடத்தில் ஓர் எச்சரிக்கை. மிக்ஸியின் ஜார் + ப்ளேடு, மற்றும் மற்ற காலியான பாத்திரங்களை மட்டுமே தண்ணீர் ஊற்றி ஊறப்போட வேண்டும். 

எக்காரணம் கொண்டும் மிக்ஸியையோ, அதன் இணைப்பு ஒயரையோ தண்ணீர் ஊற்றி ஊறப்போடக்கூடாது.

அதுபோல செய்தீர்களானால் பிறகு அதை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பழுது பார்க்க நேரிடும். அல்லது புது மிக்ஸி ஒன்றை உடனடியாக ஓடிப்போய் வாங்கி வர நேரிடும். 

அதானால் ஜாக்கிரதை!! 

வரும்முன் காத்துக்கொள்ளுங்கள்.இது போல கஷ்டப்பட்டு அரைத்து வைத்துள்ள மாவை நன்கு கரண்டியால் கிளறி விட்டு, மூடி வைத்து விடவும். ஒரு கால் மணி நேரம் சென்ற பிறகு, சற்றே அரைத்த சூடு சற்றே அடங்கியபிறகு, அடை வார்க்கலாம். 

ஒரு ஸ்பூன் அடை மாவு பேஸ்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்துப் பாருங்கோ, காரசாரமாக ஜோராக பெருங்காய மணத்துடன் இருக்கும். உப்பு போதாவிட்டால் அவ்வப்போது, அடை வார்க்கும் போது கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம்.

உடனடியாக அடை வார்ப்பதற்கு மாவு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீதி அதிக அளவு மாவை ஃப்ரிட்ஜில் மூடி வைத்து பாதுகாக்கவும். ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும். 

நாளாக நாளாக அடைமாவு சற்றே புளிக்கும். அந்த புளித்தமாவு அடை மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும். இந்த புளித்தமாவு அடைக்கு தொட்டுக்கொள்ள,எண்ணெயில் குழைத்த காரசாரமான தோசைமிளகாய்ப்பொடி மிகவும் ஜோராக இருக்கும்.

இப்போது அடை வார்ப்பதற்கான  முன் ஏற்பாடுகள்:
====================================================

காஸ் அடுப்பு பர்னர் முதலியவைகளை  நன்றாகத் துடைக்கவும்.

காஸ் சிலிண்டரில் காஸ் இருக்குமா என உறுதி செய்து கொள்ளவும்.

அடைக்கல்லை நன்றாக தேய்த்து அலம்பித் துடைத்து விட்டு அடுப்பின் மீது வைக்கவும்.

கெட்டியான தோசைத்திருப்பி, கிடுக்கி, எண்ணெய் அல்லது நெய் முதலியவற்றை சமையல் மேடையின் அருகே வைத்துக்கொள்ளவும்.

மேலே சொன்ன Sl. Nos. 10 + 11 + 12 அதாவது நன்கு கழுவி ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகள் + நறுக்கிய வெங்காயத்தூள்கள் + தேங்காய்த்துருவல் அல்லது தேங்காய் பற்கள் முதலியனவற்றில் அவரவர் விருப்பம்போல வார்க்க வேண்டிய அடையில் தூவி அர்ச்சிக்க தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். இந்த அர்ச்சனை ஒன்றும் அவசியமான தேவை அல்ல. விரும்புவோர் மட்டும், அவரவர்கள் விருப்பம் + வேண்டுதல்படி செய்தால் போதும். இவை [Sl. Nos: 10 to 12] ஏதும் இல்லாமலேயேகூட அடை சூப்பராகத்தான்  இருக்கும்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

ஆண்களுக்கான ஸ்பெஷல் எச்சரிக்கை:
=======================================

சட்டை பனியன் ஏதும் அணியாமல் வெறும் தொந்தியுடன், தயவுசெய்து அடை வார்க்கச் செல்லாதீர்கள். இதில் எனக்கு ஏற்பட்டதோர் அனுபவத்தை நகைச்சுவையாக ஏற்கனவே சொல்லியுள்ளேன். 

பதிவின் தலைப்பு: ”உணவே வா .... உயிரே போ”

இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html    

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

காஸ் அடுப்பை பெரிதாகப்பற்ற விடுங்கள். ஓர் ஐந்து நிமிடங்கள் அடைக்கல் நன்றாக சூடேறட்டும்

லேசாக அடைக்கல் மீது தண்ணீரைத் தெளித்தால் சொர்ரென்று ஓர் சப்தம் வர வேண்டும். அந்த நாம் தெளித்த நீர் உடனே ஆவியாகிப்போக வேண்டும். அப்போது தான் அடைக்கல் நன்கு சூடாகியுள்ளது என்று அர்த்தம்.  

இப்போது முதல் அடை வார்ப்பதற்கு முன்பு மட்டும், ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை காலியான சூடான அடைக்கல்லில் ஊற்றி தோசைத்திருப்பியால் நன்கு பரவலாகத் தேய்த்து விடவும்.  அப்போது தான் எண்ணெய்ப்பசை ஏற்படும். அப்போது தான்  அடி ஒட்டாமல் முதல் அடையை அடைக்கல்லிலிருந்து எடுக்க வரும்.

கெட்டியாக உள்ள அடைமாவில் கொஞ்சூண்டு தண்ணீர் கலந்து கரண்டியால் கலக்கிக்கொள்ளவும். ஏற்கனவே மிக்ஸியில் கடைசியாக ஓடவிட்டு, நாம் எடுத்து வைத்துள்ள காரசார கரைசலையும் தண்ணீருக்கு பதில் இப்போது கலந்து கொள்ளலாம். 

அடைக்கல்லில் நாம் ஊற்றும்  மாவு சற்றே இலகுவாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒரேயடியாக ஓடஓட தோசைமாவு போலவும் இருக்கக்கூடாது.

சூடான அந்த அடைக்கல்லில் அடை மாவை அழகாகக் கரண்டியால் ஊற்றி வட்டமாக தேய்த்து விட்டு கோலம் போடுங்கள். கெட்டியாக 2 அல்லது 3 கரண்டி அடை மாவை ஊற்றினால் போதும். அந்த வட்டத்தின் நடுவே அழகாக தொப்புள் போல ஒரு கீறல் [ஓட்டை] தோசை திருப்பியின் விளிம்பினால் கொடுக்க வேண்டும். 

உடனே 2-3 ஸ்பூன் எண்ணெயோ அல்லது நெய்யோ, சுற்றிலும் பிரதக்ஷணமாக ஊற்ற வேண்டும். நடுவில் நாம் போட்டுள்ள ஓட்டையிலும் ஊற்ற வேண்டும். சொர்ரென்ற சப்தத்துடன் அடை ஆனந்தமாக வேக ஆரம்பிக்கும். தேவைப்பட்டால் அவ்வப்போது அடுப்பை ’சிம்ரன்’ இல் வைக்கலாம். [அதாவது அடுப்பை சிம்மில் ரன் செய்வதே “சிம்ரனில்” எனக்கூறப்பட்டுளளது]

இப்போது முருங்கை இலையையோ அல்லது வெங்காயத்தூள்களையோ அல்லது தேங்காய் துருவலையோ தேங்காய் பற்களையோ அடைக்கல்லில் உள்ள வட்டவடிவ அடைமாவின் மீது அர்ச்சிக்க விரும்புவோர் அர்ச்சிக்கலாம்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அடையின் அடிப்பகுதி நல்ல சூடாகி இருக்கும். இப்போது தோசைத்திருப்பியால் அடையை சுற்றிலும் லேசாக நெம்பிவிட வேண்டும். பிறகு தோசைத்திருப்பியை அடையின் ஏதாவது ஒரு பகுதியில் நடு ஓட்டை வரை ஒரே சொருகாகச் சொருகி, அப்படியே எடுத்து குப்புறக் கவிழ்த்துப்போட வேண்டும்.  

அடுப்பை சிம்ரனில் வைத்து, நம் இடது கையில் கிடுக்கியால் அடைக்கல்லை நன்கு கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, வலது கையில் தோசைத்திருப்பியை வைத்துக்கொண்டு கவனமாகச் செய்ய வேண்டிய வேலை இது.  அதாவது இந்த அடையை குப்புற படுக்கப்போடும் வேலை. 

இதில் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கவனம் சிதறினால் சூடான அந்த அடைக்கல் நம் கையைச்சுட்டு விடும். அடைக்கல்லே நழுவி நம் கால் விரல்களில் விழுந்து விடக்கூடிய அபாயமும் உண்டு. அதிக எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருந்தால் நம் கைகள் மீதும், ஆடை அணியாத நம் வயிற்றுப்பகுதியிலும் அது சுடச்சுட தெளித்து விடவும் கூடும்.


திருப்பிப்போட்ட அடையைச்சுற்றிலும் + நடுவே உள்ள ஓட்டையிலும் கொஞ்சமாக எண்ணெயோ அல்லது நெய்யோ [ஒரு ஸ்பூன் அளவு மட்டும்]  ஊற்றவும்.

இப்போது சிம்ரனிலேயே அடையின் மறுபக்கமும் ஓரிரு நிமிடங்களில் நன்றாக பதமாக வெந்து போய் விடும்.  அதிகம் போனால் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. அதை அப்படியே தோசைத்திருப்பியால் அலாக்காத் தூக்கி அருகே வைத்திருக்கும் ஒரு தட்டில் போட்டு விட்டு, அடுத்த அடைக்கு அடைக்கல்லில் மாவு ஊற்றி வட்டவடிவமாக்கி, ந்டுவில் துளை இட்டு, வழக்கப்படி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விட வேண்டும்.

முதலில் வார்க்கப்பட்ட அடையில் ஒரு துண்டு எடுத்து வாயில் புட்டுப் போட்டுக்கொண்டால், நன்றாக வெந்து விட்டதா? காரசாரம், உப்பு உரைப்பு போன்றவை சரியாக உள்ளதா? எனத் தெரியவரும். உப்பு குறைவாக இருந்தால் மேலும் சில சிட்டிகைகள், அடைமாவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

அவ்வளவு தாங்க! இதுபோல அடிக்கடி பர்னரை சின்னதாகவும் பெரிதாகவும் எரியவிட்டு, எவ்வளவு அடைகள் தேவையோ அவ்வளவு அடைகள் ஒருவர் வார்த்து வார்த்துப்போடப்போட மற்றவர்கள், எடுத்துப் போய் சூடாக சாப்பிட்டு மகிழலாம். 

கடைசியாக வார்க்கும் அடையை குப்புறப்படுக்கப்போடும் முன்பே காஸ் அடுப்பை சுத்தமாக அணைத்து விடலாம்.  அடைக்கல்லில் உள்ள சூட்டிலேயே அந்த அடை வெந்து போகும். இதனால் எரிபொருள் கொஞ்சம் மிச்சமாகும். 

குளிர் காலத்தில் இந்த அடையை சூடாக சாப்பிட்டால், குளிருக்கு இதமாக இருக்கும். 

இந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம். 

அலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.  

தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த  அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம். 

கணவன் தன் மனைவிமேல் கொண்ட அன்பை வெளிக்காட்ட இதெல்லாம் ஓர் உபாயம் தானே !  நீங்களும் செய்வீர்கள் தானே!!என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


பின் குறிப்பு [1]: 

2-3 நாட்கள் தொடர்ச்சியாக அடையையே சாப்பிட்டால் அதுவும் கொஞ்சம் அலுத்துப்போகும் அல்லவா! 

அப்போது அதே அடை மாவில் கொஞ்சம் வெங்காயம் கலந்து, கொதிக்கும் எண்ணெயில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிப்போட்டுப் பாருங்கள். 

பக்கோடா போல வரும். அதன் பெயர் ”கு ணு க் கு” என்பதாகும்.  வெங்காய மசால் வடை போல சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். அதே சமயம் சாப்பிட வாய்க்கு மிகவும் மிருதுவாக இருக்கும்,

மழைகாலத்தில் இந்த குணுக்கு போட்டு சூடாகச் சாப்பிட்டுப்பார்க்க வேண்டும்.  சொர்க்க லோகத்திற்கே சென்று ஆனந்தமாக மிதப்பது போல ருசியோ ருசியாக இருக்கும்.  எங்க அம்மா இருந்தவரை அடிக்கடி எனக்கு இதை செய்து தந்துள்ளார்கள். 

[என் அம்மா இப்போது சுவர்க்கத்தில்;அதனால் நான் இப்போது நரகத்தில்]

சூடான சுவையான குணுக்கை நினைத்தாலே வாயில் நீர் சுரக்கிறது எனக்கு. ;)))))

-oooooOooooo-


பின் குறிப்பு [2]: 


அனுபவம் இல்லாமல் முதன் முதலாக இந்த அடையை தயாரிக்க விரும்புவோர், குறைந்த அளவில் மேற்படி பொருட்களை எடுத்துக்கொண்டு. செய்து பார்ப்பதே நல்லது.

நல்ல கனமாக 6 அடைகளோ அல்லது சற்றே மெல்லிசாக 10 அடைகளோ தயாரிக்க மேற்படி பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டால் போதும்.

அதாவது 

நயம் இட்லி புழுங்கல் அரிசி -  200 கிராம்
நயம் துவரம் பருப்பு                -  125 கிராம்
நயம் கடலைப்பருப்பு              -   50 கிராம்
LG பெருங்காய்ப்பொடி            -  1 சிறிய ஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்ற்ல்       -   8 எண்ணிக்கை
பச்சை மிளகாய்                        -   1 அல்லது 2 
தோல் நீக்கிய் இஞ்சி               -   1 சிறிய துண்டு
கருவேப்பிலை                         -   1 ஆர்க் [10-15 இலைகள்]
உப்பு                                             -   1 அல்லது 2 சிறிய ஸ்பூன்

புழுங்கல் அரிசி + பருப்புகள் மட்டும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு, மற்ற எல்லாப்பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே தடவையாகவோ அல்லது பிரித்து வைத்து இரண்டு தடவையாகவோ அரைத்துக்கொள்ளலாம். அதிகமாக ஓடஓடத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே அரைக்கணும். ஊறிய அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் அரைபட்டால் போதும். இட்லி தோசை மாவு போல மையாக அரைபட தேவையில்லை. 

ooooooooooooooooo


அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!


அன்புடன்
VGK

-ooooooooooOoooooooooo-

"புதுசாக்கல்யாணம் ஆனவன் தான் 
தன் பொண்டாட்டியுடன் 
விடிய விடியப்பேசிக்கிட்டே இருப்பான்.

ஆனால் கல்யாணமே ஆகாதவன் 
யாரிடம் பேசுவான்?

அதனாலேயே அவனை பேச்சிலர் 

[”பேச்சு இலர்” 
அதாவது 
பேச்சு இல்லாதவர்]

என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள்”
[ B A C H E L O R]

இதை அப்படியே தனக்கே உரிய நகைச்சுவையுடன் 
தன் சொற்பொழிவில் கூறியவர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்
அதை கேட்டு ரஸித்து மகிழ்ந்தவன் நான்.


இதை எதற்கு நான் இங்கு இப்போது 
கூற வேண்டும் என்று கேட்கிறீர்களா?
நியாயம் தான். 
ஆனால் அதற்கான காரணம் உள்ளது.

http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html
என்ற என்னுடைய பதிவுக்கு  
ஓர் பின்னூட்டம் வந்துள்ளது.
அது இதோ இங்கே 
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/
my-first-event-bachelors-feast.html

நேரம் இருந்தால் வந்து பாருங்கள்
இது யார்? புதிதாக நமக்கு ஓர் அழைப்பு 

விடுத்துள்ளர்களே என்று நான் உட்புகுந்து 

பார்த்தால் ”சமையல் அட்டகாசங்கள்” 

பதிவர் Mrs. JALEELA KAMAL 

அவர்கள் தான் இந்த 

அழைப்பினை விடுத்துள்ளார்கள்.


BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் 

குறிப்புகள் கேட்டுள்ளார்கள். 

ஏதோ ஒரு போட்டியாம். அதற்குப் பரிசும் உண்டாம். 


பதிவை எழுதி நம் வலைத்தளத்தில்

வெளியிட்டுவிட்டு அதில் ஏதேதோ 

இணைப்புகள் கொடுத்து அவர்களுக்குத் 

தகவல் தர வேண்டுமாம்.LINKY TOOL குறிப்புகளை இணைப்பது


எப்படி?  என்றெல்லாம் ஏதேதோ

சொல்லியிருக்கிறார்கள்.எனக்கு அதெல்லாம் ஒன்றுமே


சுத்தமாகப் புரியவில்லை.
மேலும் அதையெல்லாம் 


செய்து கொண்டிருந்தால்


இங்கு நம் சூடான அடை 


ஆறிவிடும் அல்லவா! அதனால் அதையெல்லாம் அப்படியே


அம்போ என நான் விட்டுவிட்டேன்.அவர்களின் அறிவிப்பில் இந்த ”பேச்சிலர்” 

என்ற வார்த்தையினைப்பார்த்ததும் எனக்கு 

மேற்படி திருமுருக கிருபானந்த வாரியார் 

அவர்கள் தன் சொற்பொழிவில் ”பேச்சிலர்” 

பற்றி நகைச்சுவையாகச் சொன்னது தான், 

உடனே என் நினைவுக்கு வந்தது.


அதனால் அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து 

கொண்டேன். சரி, எனக்கு நேரம் ஆச்சு! 


நான் இப்போ சூடாக அடை சாப்பிடணும்!!


அப்போ வரட்டுமா!!! 

Bye for now ........

oooooOooooo

வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!
அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!


அன்புடன் 

VGK  


...

297 comments:

 1. அண்ணா :))) நீங்க சகல கலா வல்லவர்தான்

  அடை மொரு மொறுன்னு ..பசி கிள்ளுது ..


  எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க ..தேங்காய் சிறு பல்லுகலாக வெட்டி போட்டு
  நல்லெண்ணெய் ஊற்றி ...........

  நீங்க ஜலீலா அவர்களின் இவேண்டில் கலந்துக்க போறீங்களா
  அப்பா நான் விலகி கொள்கிறேன் ..உங்களுக்கு தான் கண்டிப்பா பரிசு
  இவ்ளோ அழகா ஸ்டெப் பை ஸ்டெப் ,குறிப்பு எல்லாமே சூப்பர் .

  ReplyDelete
  Replies
  1. angelin December 14, 2012 12:23 PM

   வாங்கோ நிர்மலா! வணக்கம்,

   //அண்ணா :))) நீங்க சகல கலா வல்லவர்தான் //

   அடடா, நான் மிகச்சாதாரணமானவன் தான், நிர்மலா.

   //அடை மொறுமொறுன்னு ..பசி கிள்ளுது ..//

   அடையை எடுத்துக்கோங்கோ நிர்மலா. முதல் அடையே [எனக்கு அன்புடன் அதிரஸம் செய்து கொடுத்த] நம் நிர்மலாவுக்குத்தான் என்பதில் சந்தோஷம் ஏற்படுகிறது.

   //எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க ..தேங்காய் சிறு பல்லுகலாக வெட்டி போட்டு .. நல்லெண்ணெய் ஊற்றி ........... //

   அப்படியாம்மா, சந்தோஷம் நிர்மலா. நான் இப்போது அம்மாவை நினைவு படுத்திட்டேனா! ஸாரிம்மா.

   தேங்காய் சிறு பல்லாக வெட்டிப்போட்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அதை ருசிக்க பல் இல்லாத பஞ்சாமிகளின் பாடு கஷ்டமாகிப்போய் விடும். துருவல் என்றால் எல்லோருக்கும் நல்லது, நிர்மலா.

   //நீங்க ஜலீலா அவர்களின் இவேண்டில் கலந்துக்க போறீங்களா ? அப்போ நான் விலகி கொள்கிறேன் .. உங்களுக்கு தான் கண்டிப்பா பரிசு.//

   நீங்க விலக வேண்டாம் நிர்மலா. உங்களுக்கும் நிச்சயமாகப் பரிசு உண்டு.

   //இவ்ளோ அழகா ஸ்டெப் பை ஸ்டெப், குறிப்பு எல்லாமே சூப்பர் .....//

   ரொம்ப சந்தோஷம் நிர்மலா. அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
 2. அடடா,இப்படி ஒரு அட்டகாசமான குறிப்பை கொடுத்து அசத்திட்டீங்க. பின் குறிப்பின் படி செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சார்,அந்த கடைசி படம் பார்த்து இப்பவே அடைக்கு ஊறப் போடுன்னு வயிறு கத்துது.பரிசு நிச்சயம்.

  ReplyDelete
  Replies
  1. Asiya Omar December 14, 2012 12:29 PM
   //அடடா, இப்படி ஒரு அட்டகாசமான குறிப்பை கொடுத்து அசத்திட்டீங்க. பின் குறிப்பின் படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சார்,அந்த கடைசி படம் பார்த்து இப்பவே அடைக்கு ஊறப் போடுன்னு வயிறு கத்துது.
   பரிசு நிச்சயம்.//

   அடடா, நீங்களே ஒரு “சமைத்து அசத்தலாம்” அல்லவா!

   உங்களின் அன்பான வருகையும் அசத்தலான கருத்துக்களுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.

   அன்புடன் VGK

   Delete
 3. அன்பின் வை.கோ - சமையல் கலையில் விற்பன்னர் - நள மகராஜா - நூனுக்கமான சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் பொறுமையாகக் கூறுவது நன்று. இரசித்துச் சாப்பிடுவது எளிது - இரசித்துச் செய்வது கடினம் - செய்முறை இவ்வளவு விளக்கமாக எழுதுவது மிகவும் கடினம். அருமையாகப் பதிவிட்டமை நன்று. ஆவணப்படுத்துவதில் கெட்டிக் காரர். ஒரு நாள் அடை விருந்து தாருங்களேன் - இதற்காகவே திருச்சி வருகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா)December 14, 2012 2:57 PM
   //அன்பின் வை.கோ - சமையல் கலையில் விற்பன்னர் - நள மகராஜா - நுனுக்கமான சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் பொறுமையாகக் கூறுவது நன்று. இரசித்துச் சாப்பிடுவது எளிது - இரசித்துச் செய்வது கடினம் - செய்முறை இவ்வளவு விளக்கமாக எழுதுவது மிகவும் கடினம். அருமையாகப் பதிவிட்டமை நன்று. ஆவணப்படுத்துவதில் கெட்டிக் காரர்.//

   அன்பின் சீனா ஐயா, வணக்கம். வாங்கோ, வாங்கோ.
   தங்கள் வருகையும் கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

   //ஒரு நாள் அடை விருந்து தாருங்களேன் - இதற்காகவே திருச்சி வருகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   கட்டாயம் வாருங்கள் ஐயா. நானே செய்து தருகிறேன். அப்படியே கற்றுக்கொண்டு போய் உங்கள் வீட்டுக்கார அம்மாவையும் அசத்துங்கள் ஐயா.

   அன்புடன் VGK

   Delete
 4. பின் தொடர்வதற்காக இம்மறுமொழி

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா)December 14, 2012 2:58 PM
   //பின் தொடர்வதற்காக இம்மறுமொழி//

   நீங்கள் போய்!!!!! யாரைப் பின்தொடர்வதாக இருக்கிறீர்கள்?
   வேண்டாம் ஐயா, இது விபரீத ஆசை, இந்த வயதில் நமக்கு இதெல்லாம் வேண்டாம் ஐயா. எனக்கு பயமாக உள்ளது.;)

   VGK

   Delete
 5. ஐயா...அருமையான அடைக்குறிப்பு + இலவச இணைப்பான குணுக்குக் குறிப்பும்.

  பிரமாதமாக இருக்கிறதே...உண்மையாகவே இது நீங்களே எழுதியதுதானா..இல்லை... உங்க ஆத்தில, உங்க சகதர்ம பத்தினி சொல்லி எழுதிதந்தாங்களோ....:)))

  இல்லைய்ய்..அத்துப்படியான சமையல்காரருக்கே அங்கங்கே விடுபட்டு போயிடும் குறிப்பு....:) அதனால் கேட்டேன்..:)
  அருமை, இத்தனை பொறுமையா ரசிச்சு எழுதி செய்து சாப்பிடணும்னு ஆவலை தந்துள்ளீர்கள்.

  மிக மிக சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்!!!

  குணுக்கு தான் செய்து பார்க்க ஆவலைத்தூண்டுகிறது எனக்கு.
  பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. இளமதி December 14, 2012 3:42 PM

   வாங்கோ ய்ங் மூன் ! வாங்கோ!! வாங்கோ வணக்கம்.
   எப்படி இருக்கீங்கோ? நலம் தானே!

   நலமில்லாமலா இளய நிலாவில் அதற்குள் நாலாவது பதிவு கொடுத்துள்ளேன் ... என்கிறீர்களா! அதுவும் சரிதான். OK OK. VERY GOOD !

   //ஐயா...அருமையான அடைக்குறிப்பு + இலவச இணைப்பான குணுக்குக் குறிப்பும்.//

   ரொம்பவும் சந்தோஷம்ம்மா !!

   >>>>>> தொடரும் >>>>>>

   Delete
  2. //பிரமாதமாக இருக்கிறதே... உண்மையாகவே இது நீங்களே எழுதியதுதானா.. இல்லை... உங்க ஆத்தில, உங்க சகதர்ம பத்தினி சொல்லி எழுதிதந்தாங்களோ ....:)))//

   இந்த லொள்ளு தான் வேண்டாம் என்கிறேன்.

   என்னால் மட்டுமே இதுபோலெல்லாம் எழுத முடியும்.

   என் சகதர்ம பத்தினியால் சமையல் + அடை முதலியன சூப்பராகச் செய்ய மட்டும் தான் முடியும்.

   அதற்கான செய்முறைகளைக்கூட பொறுமையாகச் சொல்லத்தெரியாதூஊஊஊ. அவங்க ரொம்ப நல்லவங்க.
   செய்பவர்களுக்கு சொல்லத்தெரியாது. சொல்பவர்களுக்கு செய்யத்தெரியாது. இது உங்களுக்குத் தெரியாதூஊஊஊ.

   //இல்லைய்ய்.. அத்துப்படியான சமையல்காரருக்கே அங்கங்கே விடுபட்டு போயிடும் குறிப்பு....:) அதனால் கேட்டேன்..:)//

   எதையாவது சொல்லிவிட்டு, ஏதாவது ஒரு சமாளிப்பு வேறு!

   //அருமை, இத்தனை பொறுமையா ரசிச்சு எழுதி செய்து சாப்பிடணும்னு ஆவலை தந்துள்ளீர்கள்.//

   உடனே செய்து சாப்பிடுங்கோ.

   //மிக மிக சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்!!!//

   மிக்க நன்றி, இளமதி.

   //குணுக்கு தான் செய்து பார்க்க ஆவலைத்தூண்டுகிறது எனக்கு. பகிர்வுக்கு மிக்க நன்றி!!!//

   செய்யும் போது சொல்லுங்கோ, பாஸ்போர்ட் ரெடியா இருக்கு. விசா மட்டும் ஏற்பாடு செய்யுங்கோ. குணுக்கு சாப்பிட மட்டுமே, ஜெர்மனிக்கு வருவேனாக்கும். ;)))))

   அன்புடன் VGK

   Delete
 6. இந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம்.

  அலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.

  தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம்.//

  இது தான் பதிவின் மிக சிறந்த பகுதி.

  எவ்வளவு குறிப்புகள். முதன் முதலில் சமையல் செய்ய போகும் (அடுப்பங்கரை போகும் ஆண் , பெண்ணுக்கு ) ஒருவருக்கு கூட புரியும் படி நல்ல விளக்கமாய் நகைச்சுவையுடன் அருமையான சமையல் குறிப்பு.
  அடை சூடாய் இருக்கும் போதே சாப்பிடுங்கள்.

  நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு December 14, 2012 4:47 PM

   *****இந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம்.

   அலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.

   தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம்.*****

   //இது தான் பதிவின் மிக சிறந்த பகுதி.

   எவ்வளவு குறிப்புகள். முதன் முதலில் சமையல் செய்ய போகும் (அடுப்பங்கரை போகும் ஆண், பெண்ணுக்கு) ஒருவருக்கு கூட புரியும் படி நல்ல விளக்கமாய் நகைச்சுவையுடன் அருமையான சமையல் குறிப்பு.

   அடை சூடாய் இருக்கும் போதே சாப்பிடுங்கள்.

   நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

   வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகையும், அழகாகச் சுட்டிக்காட்டியுள்ள இடமும், பாராட்டுக்களும், வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன. நன்றி.

   அன்புடன்
   VGK

   Delete
 7. அடை அழகா! உங்கள் உரை நடை அழகா! சொல் அழகா! சுவை அழகா! அடடா! அடையும் குணுக்கும் நினைவில் நின்றன! நானும் விரும்பி சாப்பிட்ட/சாப்பிடும் உணவு வகைகள்தான்! அருமையான அடை விளக்கப் பதிவிற்கு நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. December 14, 2012 6:05 PM
   //அடை அழகா! உங்கள் உரை நடை அழகா! சொல் அழகா! சுவை அழகா! அடடா! அடையும் குணுக்கும் நினைவில் நின்றன! நானும் விரும்பி சாப்பிட்ட/சாப்பிடும் உணவு வகைகள்தான்! அருமையான அடை விளக்கப் பதிவிற்கு நன்றி ஐயா!//

   வாருங்கள் நண்பரே!

   அடடா! பின்னூட்டத்தையே அழகாக கவிதை நடையில் எழுதி தாங்கள் ஓர் மிகச்சிறந்த கவிஞர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். மிக்க நன்றி.

   நாளை முதல் தாங்கள் வலைச்சர ஆசிரியர் ஆவது போல ஓர் கனா கண்டேன், இன்று விடியற்காலம்.

   விடியற்காலம் கண்ட கனவு பலிக்கும் என்பார்கள். அது உண்மையா என இன்று இரவே தெரிந்து விடும். அவ்வாறு இருந்தால் என் அன்பான இனிய அட்வான்ஸ் வாழ்த்துகள்.

   அன்புடன்
   VGK

   Delete
  2. http://blogintamil.blogspot.in/2012/12/nks.html

   //முகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |
   SUNDAY, DECEMBER 16, 2012

   N.K.S. ஹாஜா மைதீன் காரஞ்சன்( சேஷ்) என்ற சேஷாத்ரியிடம் பொறுப்பினை ஓப்படைக்கிறார்.//

   ஆஹா, நான் இன்று அதிகாலை கண்ட என் கனவு பலித்து விட்டது. சந்தோஷமாக உள்ளது.

   பாராட்டுக்கள் Mr. E S SESHADRI Sir.

   VGK

   Delete
 8. அடடா..... என்ன அழகு, எத்தனை அழகு எனப் பாடத் தோன்றுகிறது.

  சூடான அடையும் கொஞ்சம் வெல்லமும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் அலாதியான இன்பம் தான்.....

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் December 14, 2012 7:35 PM
   //அடடா..... என்ன அழகு, எத்தனை அழகு எனப் பாடத் தோன்றுகிறது.

   சூடான அடையும் கொஞ்சம் வெல்லமும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் அலாதியான இன்பம் தான்.....

   போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் ஜி!//

   அன்பான வருகை + அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், வெங்கட்ஜி.

   Delete
 9. Very detailed instructions and super photos!
  Sappitta thripti! Thanks.

  ReplyDelete
  Replies
  1. middleclassmadhavi December 14, 2012 7:37 PM
   //Very detailed instructions and super photos!
   Sappitta thripti! Thanks.//

   வாங்கோ மேடம், வணக்கம், செளக்யம் தானே?

   அன்பான வருகைக்கும் சாப்பிட்டது போல திருப்தியாக இருப்பதாகச் சொன்ன கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மேடம்.

   அன்புடன் VGK

   Delete
 10. Thanks for the superb presentation! Vetrikku vaazhththukkal.

  ReplyDelete
  Replies
  1. middleclassmadhavi December 14, 2012 7:39 PM
   Thanks for the superb presentation! Vetrikku vaazhththukkal.

   மீண்டும் வருகைக்கும், சூப்பர் பிரஸண்டேஷன் என்று சொல்லி வெற்றிக்கு வாழ்த்தியுள்ளதற்கு மிக்க நன்றிகள் மேடம்

   Delete
 11. சார். சமையல்லயும் அசத்தறிங்க. ஒரு பார்சல் அனுப்ப கூடாதா?
  கிச்சன்ல நான் பார்டர் மார்க்தான். அதான் நல்லா சமைக்கறவங்களை பார்த்தா ரொம்ப பாராட்டுவேன்.

  // அடுப்பை சிம்ரனில் வைத்து,// - சமையல் குறிப்பை கூட குறும்பாய்..நகைச்சுவையாய் சொல்லி சுவாரஸ்யமாக படிக்க வைத்து விடுகிறீர்கள்.

  நன்றி சார். உங்க சமையல் குறிப்புக்கு 50 மார்க் சாப்பிட கொடுத்திங்கன்னா மீதி 50 மார்க் தந்துடறேன்.

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு December 14, 2012 8:53 PM

   வாருங்கள் திருமதி உஷா அன்பரசு மேடம்.

   //சார். சமையல்லயும் அசத்தறிங்க.//

   மிக்க நன்றி மேடம். இது தான் என் முதல் சமையல் பதிவு.

   ஏற்கனவே நான் வெளியிட்டுள்ள “உணவே வா ... உயிரே போ” என்பது என் தாயாரைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும், என் மருமகள்களைபற்றியும், அவர்களின் டேஸ்ட் ஆன சமையல் பற்றியும் நான் எழுதியது.

   //ஒரு பார்சல் அனுப்ப கூடாதா? //

   அனுப்பலாம் தான். [1] உங்கள் விலாசம் தெரியவில்லை
   [2] விலாசம் கண்டுபிடித்து அனுப்புவது ஒன்றும் எனக்குக் கஷ்டமே இல்லை, ரொம்ப ரொம்ப சுலபம் தான் [3] அடை உங்களை அடையும் போது அது ஆறிப்போய்விடுமே என்று தான் யோசிக்கிறேன்.

   //கிச்சன்ல நான் பார்டர் மார்க்தான்.//

   பாஸ் மார்க் வாங்கிட்டாப்போதுங்க! கொஞ்சம் கொஞ்சமாக FULL MARK வாங்கிவிடலாம்.

   பிரபலமான எழுத்தாளராகிய உங்களுக்கு ஒரு வேலையா இருவேலையா?

   குடும்பத்தையும் கவனிக்கணும், மாமியார் போன்ற வயசானவங்களையும், கணவரையும் கவனிக்கணும், ஆபீஸுக்கும் போய் வரணும், சமூக சேவைகளும் செய்யணும், தினமலர் பெண்கள் மலர், பாக்யா போன்ற பத்திரிகைகளிலும் உங்கள் பெயர் அடிக்கடி வரணும், வலைப்பதிவில் வாரம் நான்கு பதிவாவது தரணும், தோழிகள் / விருந்தினர் போன்றவர்களையும் கவனிக்கணும். அடடா, தினம் 24 மணி நேரமே போதாமல் சுறுசுறுப்பாக இருக்கின்றீர்கள். சந்தோஷமாக உள்ளது.

   //அதான் நல்லா சமைக்கறவங்களை பார்த்தா ரொம்ப பாராட்டுவேன்.//

   மேற்படி வேலைகள் தவிர பிற பதிவர்களின் பதிவுகளுக்குச்சென்று அவர்கள் படைப்புகளையும் படித்து விட்டுப் பாராட்டணும். அப்பப்பா ... உங்களைப்பார்த்தா எனக்கு மிகவும் பொறாமையா இருக்குதுங்க.

   //***அடுப்பை சிம்ரனில் வைத்து*** - சமையல் குறிப்பை கூட குறும்பாய்.. நகைச்சுவையாய் சொல்லி சுவாரஸ்யமாக படிக்க வைத்து விடுகிறீர்கள்.//

   அடுப்பை ’சிம்’ மில் வைத்து ’ரன்’ செய்வதை ஒரே வார்த்தையாக சிம்ரனில் என்று சொல்லியிருக்கிறேன். ;)
   சினிமா நடிகை சிம்ரனுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லைங்கோ. யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம், ப்ளீஸ்.

   குறும்புகளை + நகைசுவையை + அனைத்தையும் கூர்ந்து கவனித்துள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //நன்றி சார். உங்க சமையல் குறிப்புக்கு 50 மார்க் சாப்பிட கொடுத்திங்கன்னா மீதி 50 மார்க் தந்துடறேன்.//

   இப்போது கொடுத்துள்ள 50 மார்க்குக்கு என் நன்றிகள்.

   தாங்கள் திருச்சியில் என்னை என்றாவது சந்திக்கும் போது உங்களுக்கு ஸ்பெஷல் அடை வார்த்து சாப்பிடக்கொடுத்து மீதி 50 மார்க்குகளை நான் மறக்காமல் வாங்கிக்கொள்வேன்.

   அன்புடன்
   VGK

   Delete
 12. முதலில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கோபு சாருக்கு மிக்க நன்றி
  அடை வெல்லம் என்றால் முன்று வேளையும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

  அடை எனக்கு பிடித்த டிபன் அயிட்டத்தில் அடைக்கு தான் முதலிடம்.
  உங்களை போல் தான் என் அப்பாவுக்கும், கடலை பருப்பு அடை ரொம்ப பிடிக்கும்.அதையும் ஒரு நாள் போஸ்ட் பண்றேன்.

  விளக்கமான பதிவு, மிக அருமை வாழ்த்துக்கள்


  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal December 14, 2012 9:09 PM

   வாருங்கள் திருமதி ஜலீலா கமால் மேடம். வணக்கம்.

   //முதலில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கோபு சாருக்கு மிக்க நன்றி//

   "சென்னை ப்ளாஸா" என்ற பெயரில் எனக்கு என் பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில், தாங்கள் Special அழைப்புக் கொடுத்திருந்தீங்க. அது கூட வேறு யாரோ என்னவோ என்று தான் முதலில் நான் நினைத்தேன். உட்புகுந்து பார்த்த பிறகு தான் தாங்கள் என்று நான் தெரிந்து கொண்டேன்.

   மிக்க நன்றி, மேடம்.

   //அடை வெல்லம் என்றால் முன்று வேளையும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவேன்.//

   அடடா, என்னைப்போலவே நீங்களுமா? ஆச்சர்யம் தான். ;)
   மூன்று வேளையும் என்றால் கஷ்டமாக இருக்கும், மேடம்.

   //எனக்கு பிடித்த டிபன் அயிட்டத்தில் அடைக்கு தான் முதலிடம்.//

   எங்கள் வீட்டிலும் எல்லோருக்குமே அப்படித்தான். மாதம் இரண்டு முறை கட்டாயம் அரைப்போம். 3+3=6 நாட்களாவது அடையுடன் உற்வாடி மகிழ்வோம்.

   //உங்களை போல் தான் என் அப்பாவுக்கும், கடலை பருப்பு அடை ரொம்ப பிடிக்கும்.//

   அப்படியா, சந்தோஷம். கடலைப்பருப்பு 1 பங்கு மட்டும், அதுபோல 2-1/2 பங்கு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு போல நான்கு பங்கு புழுங்கல் அரிசி.

   1 : 2.5 : 4 அவ்வளவு தாங்க அளவு விகிதாசாரம்.

   //அதையும் ஒரு நாள் போஸ்ட் பண்றேன்.//

   ஆஹா, பேஷா போஸ்ட் பண்ணுங்கோ.

   //விளக்கமான பதிவு, மிக அருமை வாழ்த்துக்கள்//

   த்ங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   அன்புடன்
   VGK

   Delete
 13. கடைசியாக என் ஈவண்ட் பற்றி குறீப்பிட்டு இருந்தீங்க ஆனால் அதற்கும் கீழ் மெயில் பிச்சர் இருந்ததை கவனிக்கல,
  ஆகையால் முதல் படத்தை இணைத்து விட்டேன். பரவாயில்லை, பிறகு பதிவில் சொல்லும்போது போடுகீறேன்.

  ReplyDelete
  Replies
  1. Jaleela Kamal December 14, 2012 9:10 PM
   //கடைசியாக என் ஈவண்ட் பற்றி குறீப்பிட்டு இருந்தீங்க.
   ஆனால் அதற்கும் கீழ் மெயில் பிச்சர் இருந்ததை கவனிக்கல; ஆகையால் முதல் படத்தை இணைத்து விட்டேன். பரவாயில்லை, பிறகு பதிவில் சொல்லும்போது போடுகீறேன்.//

   பதிவை எழுத ஆரம்பித்த அன்று என் வீட்டில் ஏதோ ஒரு விருந்தினருக்காக, அவர்களின் வேண்டுகோள்படி, காரம் கொஞ்சம் குறைவாகப்போட்டு அடை செய்தார்கள். அன்றைய படங்களை எடுத்து இணைத்து இந்தப்பதிவை முதலில் எழுத ஆரம்பித்தேன்.

   இந்தப்பதிவை தங்களின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் மெயிலில் அனுப்பி வைத்த பிறகு, 14.12.2012 நள்ளிரவு வெளியிடுவதாக இருந்தேன். 14th இரவும் என் வீட்டில் வழக்கம்போல காரசாரமான அடை செய்திருந்தார்கள்.

   அதையும் வெல்லப்பொடியுடன் ஓர் புகைப்படம் எடுத்து கடைசியாக பதிவு வெளியிடும் போது சேர்க்க நேர்ந்தது.

   தங்களுக்கு அனுப்பி வைத்த மெயிலில் இல்லாமலும், தங்களிடம் தெரிவிக்காமலும், நான் இதுபோல ஒரு படத்தினை கடைசியில் சேர்த்து விட்டதால் ஏற்படுள்ள சிறிய குழப்பம் தான் மேடம். அதனால் பரவாயில்லை மேடம்.

   தாங்கள் போட்டி நிபந்தனைகளில் சொல்லியுள்ளபடி என் பதிவினை என்னால் இணைக்க முடியாமல் இருந்தும், தாங்களாகவே எனக்காக இணைத்து, போட்டியின் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   அன்புடன்
   VGK


   Delete
 14. அடையைப் பற்றிய ஒவ்வொரு வரியும் அட அட என வியத்தகு வண்ணம் உள்ளது.

  //காலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும். அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.//

  அடை மொழியுடன் கூடிய வர்ணனை தங்களிடம் அடைக்கலம் ஆகி விட்டது .

  அடைப் புளித்தால் ருசி.உங்கள் எழுத்து புளிக்காமலேயே தனி ருசி.

  மிளகாய் பொடியுடன் கூடிய படம் ஒன்று இணைக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் December 14, 2012 10:03 PM

   அன்புள்ள கணேஷ், வாப்பா, செளக்யமா?

   நீண்ட நாட்களுக்குப்பின் உன் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   //அடையைப் பற்றிய ஒவ்வொரு வரியும் அட அட என வியத்தகு வண்ணம் உள்ளது.//

   மிகவும் சந்தோஷம் .. கணேஷ்.

   ***காலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும். அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.***

   //அடை மொழியுடன் கூடிய வர்ணனை தங்களிடம் அடைக்கலம் ஆகி விட்டது.//

   அருமையான கூற்று. என்ன சொல்வதென்றே சொல்லத் தெரியாமல் என் வாயை இப்படி ’அடை’த்து விட்டாயே! ;)

   //அடைப் புளித்தால் ருசி. உங்கள் எழுத்து புளிக்காமலேயே தனி ருசி.//

   புளிச்சமா அடையை சிறிய இரும்பு இலுப்பச்சட்டியில் கூட செய்து தருவார்களே உன் பாட்டியும் என் அம்மாவும். நினைவுள்ளதா கணேஷ்?

   //மிளகாய் பொடியுடன் கூடிய படம் ஒன்று இணைக்கவும்.//

   நம் ஆத்து தோசை மிளகாய்ப்பொடிக்கான செய்முறையை விளக்க வேண்டி நிறைய பேர் விரும்பிக் கேட்டுள்ளார்கள்.
   அப்போது இணைத்து விடுகிறேன், கணேஷ்.

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி, கணேஷ்.

   பிரியமுள்ள கோபு மாமா.

   Delete
 15. அன்புள்ள வைகோ ஸார்,
  உங்கள் நளபாகம் - அடை செய்யும் விதம் குறிப்புப் படித்தேன். பண்ணி சாப்பிட்டத் திருப்தி ஏற்பட்டது!

  கனமான அடைக்கல் தேடிக் கொண்டிருந்தேன். அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது திருச்சிக்கு வந்து வாங்கி விடுகிறேன்.

  அளவுகளும், ஒவ்வொன்றையும் தயார் செய்யும் விதமும் (நிறைய நகைச்சுவையுடன்) பக்காவாக எழுதி உள்ளீர்கள்.


  ஒரு சின்ன சந்தேகம்:5௦ கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦ ஆகிவிட்டதோ?

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Ranjani Narayanan December 14, 2012 11:07 PM

   அன்புள்ள ரஞ்ஜூ மேடம், வாங்கோ, வணக்கம்.

   //ஒரு சின்ன சந்தேகம்:5௦ கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦ ஆகிவிட்டதோ?//

   தாங்கள் கேட்டுள்ள கேள்வியிலேயே சிறு தவறு உள்ளது.

   அந்தக்கேள்வி இப்படி இருக்க வேண்டும்:

   ***ஒரு சின்ன சந்தேகம்: 5௦0 கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦0 ஆகிவிட்டதோ?***

   நீங்க திருச்சிக்கு அடைக்கல் வாங்க வரும்போது, திருச்சி தெப்பக்குளம் அருகே, நந்திகோயில் தெருவில் உள்ள, ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிர்புறம் சற்றே தள்ளி ’லக்ஷ்மி மளிகை’ என்று ஒரு மளிகைக்கடை உள்ளது.

   அங்கே LG பெருங்காயப்பவுடர் டப்பாவைத்தவிர, கட்டிப்பெருங்காயம் என்று LOOSE ஆக விற்கிறார்கள்.

   மெழுகு போல, ஜவ்வு மிட்டாய் போல, வாசனையாக அது ஜோராக இருக்கும்.

   அதையும் நீங்கள் வாங்கிண்டு போய், கையாலேயே சிறுசிறு உருண்டைகளாக [பவழம் போல] உருட்டி அஞ்சறைப்பெட்டியில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

   புதிதாக வாங்கி வரும் போது, நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் [ஜவ்வு போன்று] இந்தக்கடையில் விற்கும் மெழுகு போன்ற கட்டிப்பெருங்காயம் வரும்.

   இந்தச் சின்னச்சின்ன பவழம் போன்று உருட்டிப்போட்டவை தினப்படி சமையல்/ரஸம் போன்றவைகளுக்கு தாங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.

   காய்கறி விற்பவர்கள் ஒரு தராசு வைத்திருப்பார்கள் தெரியுமா?

   இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவை நாம் வாங்கும் போது 50 கிராம் 100 கிராம் என நிறுத்துக்கொடுக்க எடைக்கற்கள் இருக்கும் தெரியுமா?

   அதிலும் 50 கிராம் என்ற எடைக்கல் மட்டுமே பித்தளையில் இருக்கும் தெரியுமா? மீதி 100 கிராம் 200 கிராம் எடைக் கற்களெல்லாம் இரும்பில் இருக்கும். இந்த 50 கிராம் எடைக்கல் மட்டுமே பித்தளையில் இருக்கும். பார்த்திருக்கிறீர்களா?

   அந்த பித்தளை 50 கிராம் எடைக்கல் போன்ற கட்டிப்பெருங்காயத்தை முழுவதும் ஊற வைத்து, அந்த ஊறிய ஜலம் முழுவதையுமே, மேற்படி அடைமாவில் கலந்தால் தான் நல்ல வாசனையாக இருக்கும் மேடம்.

   அதுவும் நான் சொன்ன “லக்ஷ்மி மளிகை” யில் மெழுகு போல் உள்ள கட்டிப்பெருங்காயத்தை 50 கிராமாகவே வாங்கி வந்து அப்படியே ஊறப்போட்டு விட்டால் ரொம்பவும் செளகர்யமாக இருக்கும்.

   அரிசி பருப்பு எல்லாம் சேர்த்து சுமார் இரண்டு கிலோ அளவுக்கு நாம் போட்டு கனமான 30 அடைகள் தயாரிக்கும் போது 50 கிராம் [பித்தளை எடைக்கல் போன்ற] அளவு கட்டிப் பெருங்காய ஜலத்தை அதன் தலையில் விட்டால் தான் நல்லா கும்முனு வாசனையாக இருக்கும், என்பது என் அனுபவம்.

   நீங்கள் சொல்லும் வெறும் ஐந்து கிராம் அதுவும் LG பெருங்காய்ப்பவுடர் என்றால் சமுத்திரத்தில் பெருங்காயம் கரைத்தால் போல ஆகிவிடும்.

   நீங்கள் வேண்டுமானால் உங்கள் தேவைக்குத் தகுந்தபடி பெருங்காயத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கோ.
   NO PROBLEM AT ALL.

   நீங்கள் சொல்லும் LG பெருங்காயப்பொடிக்கும், நான் சொல்லும் கட்டிப்பெருங்காய ஜலத்துக்கும் வித்யாசம் உண்டு.

   அன்புடன்,
   VGK

   Delete
 16. அடடடா! எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க சார். ஸ்டெப் பை ஸ்டெப் பிரமாதம்... சமையலே தெரியாதவங்களும் ஈசியா செய்யலாம்...

  நேற்று தான் எங்கள் வீட்டில் அடை...வெல்லமும் , நெய்யோடு தான்...:)

  இந்த குணுக்கும் நான் செய்வது உண்டு.

  ReplyDelete
  Replies
  1. கோவை2தில்லி December 14, 2012 11:16 PM
   //அடடடா! எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க சார். ஸ்டெப் பை ஸ்டெப் பிரமாதம்... சமையலே தெரியாதவங்களும் ஈசியா செய்யலாம்...//

   தாங்களே இவ்வாறு சொல்லியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

   //நேற்று தான் எங்கள் வீட்டில் அடை...வெல்லமும் , நெய்யோடு தான்...:)//

   எங்கள் ஆத்தில் 14th அன்று செய்தார்கள்.

   //இந்த குணுக்கும் நான் செய்வது உண்டு.//

   குணுக்கு எவ்வளவு டேஸ்ட் ஆக இருக்கும், மேடம். ;)

   அன்பான வருகை + கருத்து + பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன்
   VGK

   Delete
 17. செய்முறை, தொட்டுக்கொள்ளக் கொடுத்திருக்கும் டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. ஆனால் அரிசி, பருப்பின் அளவு தான் கண்களை உறுத்துகிறது. எங்க புகுந்த வீட்டில் ஒரு வேளைக்குப் பத்துப் பேர் சாப்பிடும் நாளில் கூட அடைக்கு இத்தனை ஊறப் போட்டதில்லை. :))))))) ரஞ்சனி பெருங்காயத்தை மட்டும் கேட்டிருக்கார்.

  //ஒரு சின்ன சந்தேகம்:5௦ கிராம் பெருங்காயம் அதிகம் (எல்ஜி பொடிப் பெருங்காய டப்பாவில் இருப்பது இந்த அளவு) என்று தோன்றுகிறது. 5 என்பது 5௦ ஆகிவிட்டதோ?//

  ஹிஹிஹி, ரஞ்சனி, பெருங்காயம் 50 கிராம் எனத் தான் போட்டிருக்கார். அரிசி எவ்வளவுனு பாருங்க, ஒரு கிலோ. ஒரு கிலோ அரிசியில் அரைக் கிலோவுக்கும் மேல் து.ப. கால்கிலோ க.பருப்புப் போட்டு அடை பண்ணினால் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் வரும். அதோடு 50 கிராம் பெருங்காயம் ஒரு மாசத்துக்கும் மேல் முழுச் சமையலுக்கும் வரக் கூடிய ஒன்று. அடைக்குப் போடச் சும்மா ஒரு சின்ன அரை இஞ்ச் துண்டு இருந்தால் போதுமானது. 200கிராம் புழுங்கலரிசி, 200 கிராம் பச்சரிசி, மற்றும் மேல் சாமான்கள் போட்டாலே அந்த மாவு இரண்டு பேர் கொண்ட குடும்பத்துக்கு நான்கு நாட்களும், நான்கு பேருக்கு இரண்டு நாட்களும் வரும். ஆகவே இவ்வளவெல்லாம் போட்டு அரைச்சுட்டுப் புதுசாப் பண்ணறவங்க முழிக்கப் போறாங்க. :))))))

  முதல் முறை வந்துட்டு பதிவிலே குத்தம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். முதல்லே செய்து பார்க்கும்போது சாமான்களின் அளவு கொஞ்சமாக இருத்தலே நல்லது. அப்புறமா வேணும்னா கூடப்போட்டுக்கலாம். மற்றபடி நீங்க கொடுத்திருக்கும் சமையல் குறிப்பு அட்டகாசம் .

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam December 14, 2012 11:56 PM

   வாங்கோ மேடம். சந்தோஷம்.
   வணக்கம். வருகைக்கு நன்றிகள்.

   //செய்முறை, தொட்டுக்கொள்ளக் கொடுத்திருக்கும் டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு.//

   மிக்க நன்றி, மேடம்.

   //ஆனால் அரிசி, பருப்பின் அளவு தான் கண்களை உறுத்துகிறது. எங்க புகுந்த வீட்டில் ஒரு வேளைக்குப் பத்துப் பேர் சாப்பிடும் நாளில் கூட அடைக்கு இத்தனை ஊறப் போட்டதில்லை. :)))))))//

   எங்கள் ஆத்தில் [வீட்டில்] தற்சமயம் மொத்தம் நான்கு பெரிய டிக்கெட்கள் [நபர்கள்] உள்ளோம்.

   வெளியூரில் உள்ள பிள்ளைகள், மருமகள்கள், பேரன்கள், பேத்தி அனைவரும் கூடும் போது எட்டு முழு டிக்கெட்களும், இரண்டு அரை டிக்கெட்களும், ஒரு கால் டிக்கெட்டுமாக ஆக மொத்தம் பதினோரு பேர்கள் ஆகும்.

   அடை என்றால் எங்கள் வீட்டில் எல்லோருக்குமே குஷி தான்.

   மேலும் அடை வார்த்தால் எல்லோரும் பலகாரம் போல அடை மட்டுமே சாப்பிடுவார்கள். சாதம் காய்கறி முதலியன அன்று செலவாகாது.

   அதனால் அனைவரும் 8+2+1=11 Tickets கூடும் அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நான் சொன்னபடி கனமான முப்பது அடைகளுக்கு திட்டமிட்டால், தினமும் ஒரு வேளை வீதம் இரண்டே நாட்களில் மாவு காலியாகிவிடும்.

   நாங்கள் நான்கு பேர்கள் மட்டும் இருக்கும் போது, அதே மாவு தினமும் ஒரு வேளை வீதம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே வரும்.

   தொடரும்>>>>>>>>

   Delete
  2. VGK to Mrs. Geetha Sambasivam Madam .....

   //50 கிராம் பெருங்காயம்//

   ஏற்கனவே திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன்.

   துல்லியமாக 50 கிராம் எடை இல்லாவிட்டாலும்,
   50 கிராம் எடைக்கல் அளவு உள்ள ஒரு பெரிய கட்டிப் பெருங்காயத்தை கட்டாயமாக ஊற வைத்து, அது முழுவதும் கரைந்த கெட்டியான ஜலத்தை பயன்படுத்தினால் தான், அடை மாவு நல்ல மணமாக இருக்கும் என்பது என் அனுபவம்.

   //200 கிராம் புழுங்கலரிசி, 200 கிராம் பச்சரிசி, மற்றும் மேல் சாமான்கள் போட்டாலே//

   எங்கள் வீட்டில் அடைக்கு பச்சரிசி போடுவது கிடையாது.
   புழுங்கல் அரிசி + துவரம்பருப்பு + கடலைப்பருப்பு மட்டுமே.
   பச்சரிசி போட்டால் அடை விரைத்துக்கொள்ளும்.

   கார்த்திகை தீபத்தன்று ஒரு நாள் மட்டும், பச்சரிசி மட்டும் போட்டு, ஓரிரு அடைகள் அதுவும் ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதற்காக மட்டும் செய்வதுண்டு. மற்றபடி அடைக்கு அரைக்க பச்சரிசி பக்கமே போகமாட்டோம்.

   //ஆகவே இவ்வளவெல்லாம் போட்டு அரைச்சுட்டுப் புதுசாப் பண்ணறவங்க முழிக்கப் போறாங்க. :)))))) //

   அவரவர் தேவைக்கும் ருசிக்கும் தகுந்தபடி அளவினை கூட்டிக்குறைத்துக்கொள்ள வேண்டியது தான்.

   புதுசாப்பண்ணறவங்க முழிக்க வேண்டாம் என்பதனால் தான்
   பின் குறிப்பு [2]: .... என்பதில் அளவுகளை ஐந்தில் ஒரு பாகமாகக் குறைத்துக்கொடுத்துள்ளேனே!

   தாங்கள் ஒருவேளை அதை கவனிக்கவில்லையோ, என்னவோ!

   தொடரும் >>>>>>>>

   Delete
  3. VGK to Mrs. Geetha Sambasivam Madam ..... [3]

   //முதல் முறை வந்துட்டு பதிவிலே குத்தம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம்.//

   நான் அதுபோலெல்லாம் நினைக்கக்கூடியவனே அல்ல.

   ஒருபோதும் அதுபோலெல்லாம் நினைக்கவே மாட்டேன்.

   குற்றத்தை சுட்டிக்காட்டுபவர்களை நான் மிகவும் மதிப்பேன்.
   வரவேற்பேன்.

   அது போன்றவர்களால் மட்டுமே, நம் தவறுகளை நாம் திருத்திக்கொள்ள முடியும், நம் எழுத்துக்களை நாம் மேலும் மெருகூட்டிக்கொள்ள முடியும் என மனதார நினைப்பேன்.

   சொல்லப்போனால் தங்களின் முதல் வருகை எனக்கு அளவிடமுடியாத சந்தோஷத்தையே அளித்துள்ளது.

   //முதல்லே செய்து பார்க்கும்போது சாமான்களின் அளவு கொஞ்சமாக இருத்தலே நல்லது. அப்புறமா வேணும்னா கூடப்போட்டுக்கலாம்.//

   அதையே தான் நான் என் பின்குறிப்பு [2] இல் மிகவும் விளக்கமாக வலியுறுத்திச் சொல்லியுள்ளேன்.

   //மற்றபடி நீங்க கொடுத்திருக்கும் சமையல் குறிப்பு அட்டகாசம்.//

   தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான பல கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

   இந்த பதிவு வெளியீடுபற்றி, டேஷ் போர்டில் ஏனோ காட்டப்படவில்லை. இருப்பினும் தாங்கள் எப்படியோ இங்கு வருகை தந்து கருத்துக் கூறியிருப்பது, எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

   நன்றியோ நன்றிகள்.

   அன்புடன்
   VGK

   Delete
 18. Replies
  1. Geetha Sambasivam December 14, 2012 11:56 PM
   //தொடர//

   தொடர நினைக்கிறீர்களோ ... தாராளமாகத் தொடருங்கோ! ;)

   Delete
 19. நீங்க சொல்வது பால் பெருங்காயம். அதுவும் இங்கே ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. கோபால ஐயங்கார் கடையில். அது தான் வாங்கறேன். அடைக்கு ஒரு சின்ன உருண்டை போதும். ஒரு கிலோ போட்டால் கூடப் பத்து கிராம் அளவுக்குள் போதுமானது. அதிகம் போனால் கசக்கும். :)))))))

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam December 14, 2012 11:58 PM
   //நீங்க சொல்வது பால் பெருங்காயம்.//

   இருக்கலாம். அதுபோலவும் சொல்லுவார்கள்.

   //அதுவும் இங்கே ஸ்ரீரங்கத்தில் கிடைக்கிறது. கோபால ஐயங்கார் கடையில். அது தான் வாங்கறேன்.//

   அப்படியா, சந்தோஷம்.

   //அடைக்கு ஒரு சின்ன உருண்டை போதும். ஒரு கிலோ போட்டால் கூடப் பத்து கிராம் அளவுக்குள் போதுமானது. அதிகம் போனால் கசக்கும். :)))))))//

   அரைக்கும் போது அப்படியே கட்டியாகப்போட்டு அரைத்தால் மட்டுமே கசக்கிறது மேடம்.

   பெருங்காயக்கட்டி கரைந்த கெட்டியான பால் போன்ற ஜலத்தினை மட்டும் நாம் ஊற்றுவதால் அதிகம் கசப்பதில்லை.

   எனினும் தாங்கள் சொல்வதுபோல அரிசி+பருப்பு இரண்டு கிலோ என்றால் 10+10=20 கிராம் பெருங்காயக் கட்டியாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.

   நான் ஊறப் போடச் சொன்னது தராசில் போடும் 50 கிராம் பித்தளை எடைக்கல் போன்ற சைஸுக்கு ஒரு பெருங்காயக்கட்டி என்பது தான்.

   அந்த அளவுப் பெருங்காயக்கட்டியின் எடை 20 கிராமாகவே கூட இருக்கலாம் தான்.

   தங்களின் மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றியோ நன்றிகள்.

   அன்புடன்
   VGK

   Delete
 20. Ada! So detailed description! A budding competitor for Meenakshi Ammal? Just a joke! Anyway, 'adai' was my favorite food some years ago - still so, but after my bypass surgery, later followed by an angioplasty, I had to drastically cut my taste buds. For adai to be really tasty, I guess that a copious amount of oil or ghee is required, and that is one of the culprits for the possible onset of heart disease. By the way, in my younger days when my parents were away, I, along with my village friend, tried to make adai, and the result was a cross like something between 'kanji' and "uppuma"! I therefore made a quick retreat and depended on my safe bet "thair sadham"!

  ReplyDelete
  Replies
  1. D. ChandramouliDecember 15, 2012 1:21 AM
   //Ada! So detailed description! A budding competitor for Meenakshi Ammal? Just a joke!//

   ;))))) மிக்க நன்றி, சார்.

   //Anyway, 'adai' was my favorite food some years ago - still so, but after my bypass surgery, later followed by an angioplasty, I had to drastically cut my taste buds. For adai to be really tasty, I guess that a copious amount of oil or ghee is required, and that is one of the culprits for the possible onset of heart disease.//

   ஆமாம் சார். அடை என்பது ஓரளவு தாராளமாக எண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றித்தான் செய்ய வேண்டியுள்ளது. வயதாக வயதாக நாம் ஆகாரத்திலும், இந்த எண்ணெய்ப்பதார்த்தங்களிலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நிறைய கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளன. SUNDROP என்ற எண்ணெய் தான் நாங்கள் எல்லாவற்றிற்கும் உபயோகப்படுத்தி வருகிறோம். மற்ற எண்ணெய்களில் செய்யப்பட்ட பஜ்ஜி முதலியவற்றை ஓர் ஆசையில் வெளியில் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டாலும் அவை தொண்டையை ஏதோ செய்ய ஆரம்பித்து விடுகின்றது. தாங்கள் சொல்வது மிகவும் நியாயமே. பைபாஸ் சர்ஜரி நடந்துள்ளதால் அடை போன்ற HARD ITEMS தவிர்ப்பதே நல்லது, சார். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கோ சார்.

   //By the way, in my younger days when my parents were away, I, along with my village friend, tried to make adai, and the result was a cross like something between 'kanji' and "uppuma"!//

   அடடா, தங்களின் சிறு வயதில், பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தாங்கள் அடை செய்யப்போய் அது அடையாக அமையாமல், கஞ்சிக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று போல ஆகிவிட்டதாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல நகைச்சுவை தான்.

   கிட்டத்தட்ட ’மோர்க்கிளி’ போல இருந்திருக்குமோ?
   இந்த மோர்க்கிளி என்பதை சூப்பராகச் செய்தால் அதுவும் தேவாமிர்தமாக இருக்கும். தனிப்பதிவே கூட போடலாம் எனத்தோன்றுகிறது. அதை வக்கணையாகச் செய்தால் சூப்பராக இருக்குமே சார். நிச்சயமாக அதுபற்றியும் அதன் சுவை பற்றியும் உங்களுக்குக் கட்டாயமாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

   //I therefore made a quick retreat and depended on my safe bet "thair sadham"!//

   ஆஹா! தயிர் சாதம் “தச்சி மம்மு” சார். அது தான் எல்லோருக்கும் எல்லா நேரத்திற்கும் ஏற்றது. வயிற்றுக்கும் நல்லது.

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

   அன்புடன்
   VGK

   Delete
 21. வை கோபாலக்ருஷ்ணன் சார்
  அடடா போட வைக்கும் அடை சமையல் குறிப்பு பிரமாதம்.
  ஆனால் இப்ப எல்லாம் பாட்டி, அம்மா வார்த்துப் போட்ட மாதிரி அடை சாப்பிட முடியறதில்ல. அதனால நான் கொஞ்சம் தண்ணி சேர்த்து அடை தோசையாக்கிடறேன்.
  அப்புறம் தொட்டுக்க இன்னொரு ஐட்டம், கெட்டி வெண்ணை.

  ஸ்ரீரங்கத்திலிருந்து நல்ல பெரிய தோசைக்கல் வாங்கி வைத்திருக்கிறேன். மொறு, மொறு மசால்தோசை, அடை எல்லாம் அதில்தான்.

  நீங்க சொல்வது போல் ஆத்துக்காரர் அடை வார்த்துப்போட்டால் ஆஹா நினைக்கவே சூப்பர்தான். என்ன இருந்தாலும் நாங்களே செஞ்சு சாப்பிடும்போது என்னிக்காவது யாராவது செய்து கொடுத்தால் சூப்பரோ சூப்பர்தான்.

  தொடரட்டும் உங்கள் நளபாகம்

  ReplyDelete
  Replies
  1. JAYANTHI RAMANI December 15, 2012 2:22 AM

   வாங்கோ Mrs JAYANTHI RAMANI Madam. வணக்கம்.

   //வை கோபாலகிருஷ்ணன் சார்
   அடடா போட வைக்கும் அடை சமையல் குறிப்பு பிரமாதம்.//

   ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம்.

   //ஆனால் இப்ப எல்லாம் பாட்டி, அம்மா வார்த்துப் போட்ட மாதிரி அடை சாப்பிட முடியறதில்ல.//

   ஆமாம். அவர்கள் கைப்பக்குவமெல்லாம் தனிதான்.

   //அதனால நான் கொஞ்சம் தண்ணி சேர்த்து அடை தோசையாக்கிடறேன்.//

   அதனால் பரவாயில்லை. கனமான பட்டுப் புடவைகளுக்கு பதில், இப்போதெல்லாம் மெல்லிசாக உடம்போடு ஒட்டியதாக
   சில்க் காட்டன் என்றெல்லாம் புடவைகள் வந்து விட்டனவே! அதே போலத்தான் இந்த உங்களின் “அடதோசை”யும்.

   //அப்புறம் தொட்டுக்க இன்னொரு ஐட்டம், கெட்டி வெண்ணை.//

   சூடான அடையில் கெட்டி வெண்ணெயைப் போட்டால் அப்படியே உருகிப்போய் வெண்ணெய் நெய்யாகி விடுமோ?
   நல்ல பொருத்தமான ஐட்டம் ஆகத்தான் இருக்கக்கூடும். தகவலுக்கு நன்றி.

   //ஸ்ரீரங்கத்திலிருந்து நல்ல பெரிய தோசைக்கல் வாங்கி வைத்திருக்கிறேன். மொறு, மொறு மசால்தோசை, அடை எல்லாம் அதில்தான்.//

   அடடா, சொல்லும்போதே ஜோராக உள்ளது. இப்போதே மசால் தோசை சாப்பிடணும் போல ஆசை ஏற்படுகிறது.

   //நீங்க சொல்வது போல் ஆத்துக்காரர் அடை வார்த்துப்போட்டால் ஆஹா நினைக்கவே சூப்பர்தான்.//

   கற்பனை செய்து நினைத்தாவது மகிழுங்கோ. அதுவே சூப்பராகத்தான் இருக்கும்.

   //என்ன இருந்தாலும் நாங்களே செஞ்சு சாப்பிடும்போது என்னிக்காவது யாராவது செய்து கொடுத்தால் சூப்பரோ சூப்பர்தான்.//

   வாஸ்தவம் தான். தினமும் நாமே சமைத்து நாமே சாப்பிடுவதும் என்பதும் மிகவும் கஷ்டமாகத்தான் - அலுப்பாகத்தான் இருக்கும். உட்கார்ந்து சாப்பிடப்பிடிக்காமல் போகும். ஏதோ நின்றவாகில் பிரட்டிப் போட்டுக்கொள்வோம். எல்லவற்றையும் கொஞ்சமாக மாதிரி பார்ப்போம். அத்தோடு சரி. பெண்கள்பாடு மிகவும் சிரமம் தான்.

   //தொடரட்டும் உங்கள் நளபாகம்//

   ஆஹா, சமையல் சம்பந்தமாக இதுவே என் முதல் பதிவு.

   இந்த அடை என்பதை மட்டும் எப்போதாவது நானே ஊற வைத்து, மாவாக அரைத்துக் கொடுப்பதும் உண்டு தான்.

   அதுபோல தினமும் காய்கறிகள் வாங்கி வருவதும் அவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கித்தருவதும் என் வேலையாக வைத்துக்கொண்டுள்ளேன்.

   ஏதோ நம் வீட்டுப்பெண்களுக்கு நம்மால் ஆன ஒரு சின்ன உதவி தானே.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   அன்புடன்
   VGK

   Delete
 22. அச்சச்சோ.. நோஓஓஓஓஒ இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. தீக்குளிப்பேன்ன்:)).. ஜல் அக்கா வெளில வாங்கோ.. எதுக்கு கோபு அண்ணனையும் அழைச்சீங்க:))).. இப்போ எனக்கு பரிசு கிடைக்காமல் போகப்போகுதே:))))...

  ஒரு குறிப்பை தொண்ணூறு வரியில சொல்லி.. விளங்கோ விளங்கென விளங்கப் படுத்தி.... பரிசைத்தட்டிச் செல்லப்போகிறாரே:))..

  இது ஆரம்பம்தான்.. இன்னும் இருக்கு சொல்ல.. பின்பு வாறேன்ன் இப்போ ..நோ ரைம்:))

  ReplyDelete
  Replies
  1. athira December 15, 2012 3:39 AM

   அன்புள்ள அதிரா, வாங்கோ .. வாங்கோ, வணக்கம்.

   //அச்சச்சோ.. நோஓஓஓஓஒ இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்.. தீக்குளிப்பேன்ன்:))..//

   அமைதி அதிரா! அமைதியாய் இருங்கோ ப்ளீஸ். இதுக்கெல்லாம் தீக்குளிப்பாங்களா?

   வாங்கோ ...... நான் கொடுக்கும் அடையை முதலில் சாப்பிடுங்கோ! மொறுமொறுன்னு ருசியா இருக்கான்னு சொல்லுங்கோ.

   //ஜல் அக்கா வெளில வாங்கோ.. எதுக்கு கோபு அண்ணனையும் அழைச்சீங்க:)))..//

   அது யாரு ஜல் அக்கா? புய்சுபுய்சாப்பேரு வைக்கிறீங்களே, அதிரா. திருமதி ஜலீலா கமால் மேடமா? அவங்களிடம் கோபப்படாதீங்கோ. அவங்க உங்க கோபு அண்ணனை மட்டும் அழைக்கலை. எல்லோரையுமே அழைச்சிருக்காங்கோ. இதுவரை ஒரு 200 பேர்கள் ஏதேதோ பதிவுகள் கொடுத்து அசத்திருக்காங்கோ.

   // இப்போ எனக்கு பரிசு கிடைக்காமல் போகப்போகுதே:))))...//

   அப்படியெல்லாம் நெகடிவ் ஆக நினைக்காதீங்கோ, அதிரா! அப்புறம் உங்க கோபு அண்ணனுக்கு அழுகை அழுகையா வந்துடும். உங்களுக்குத்தான் முதல் பரிசு கட்டாயம் கிடைக்கும்ன்னு எல்லோரும் பேசிக்கிறாங்கோ.

   //ஒரு குறிப்பை தொண்ணூறு வரியில சொல்லி.. விளங்கோ விளங்கென விளங்கப் படுத்தி.... பரிசைத்தட்டிச் செல்லப்போகிறாரே:))..//

   நான் யாருக்குக்கிடைக்கும் பரிசையும் தட்டிச்செல்ல மாட்டேன் அதிரா. அவர்கள் தவறிப்போய் எனக்கு பரிசு கொடுத்தாலும், அதை நான் என் அன்புத்தங்கை அதிராவுக்குக் கொடுத்து விடுவேன். குழந்தை ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா அடம் செய்து அழுதால் என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாதூஊஊஊஊ.

   //இது ஆரம்பம்தான்.. இன்னும் இருக்கு சொல்ல.. பின்பு வாறேன்ன் இப்போ ..நோ ரைம்:))//

   ஐயோ ஆரம்பமே பெரிய ரம்பமாக இருக்கே ஜாமீஈஈஈஈஈ;)
   இன்னும் வேறு இருக்காமே ஜாமீஈஈஈஈ. இப்போ நோ டைமாமே. மொத்தத்தில் நமக்கு டைம் சரியில்லை! ;(

   அன்புடன்
   கோபு அண்ணன்

   Delete
 23. அஹா ...அடை to குணுக்கு...சான்சே இல்லை...அருமையான சமையல் குறிப்பு ...வயிறு வலிக்கிரதி ...ஆடை சாபிட்டு இல்லை...
  சிரித்து......

  By the way ,Simran எங்கிருந்து நடுவில் வந்தார் ??????

  ReplyDelete
  Replies
  1. Usha SrikumarDecember 15, 2012 3:58 AM

   வாங்கோ மேடம். வணக்கம், ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

   //ஆஹா ... அடை to குணுக்கு... சான்சே இல்லை... அருமையான சமையல் குறிப்பு ... வயிறு வலிக்கிறது ... அடை சாப்பிட்டு இல்லை... சிரித்து......//

   தங்களின் சிரிப்பொலியை கற்பனை செய்து பார்த்தேன்.

   தாங்கள் செய்து பார்க்காத, பதிவிடாதா சமையல் ஐட்டங்களா? ஏதோ என்னால் கொஞ்சம் உங்களை சிரிக்க வைக்கவாவது முடிந்ததே, அதற்கு மட்டுமே நானும் சற்றே மகிழ்ச்சியடைகிறேன்.

   //By the way , Simran எங்கிருந்து நடுவில் வந்தார் ??????//

   சினிமா சூட்டிங்கிலிருந்து நடுவில் சிம்ரனும் நிச்சயமாக அடை சாப்பிடத்தான் வந்திருப்பார். ;)))))

   அடுப்பை ’சிம்’ மில் வைத்து ’ரன்’ செய்வதை ஒரே வார்த்தையாக சிம்ரனில் என்று சொல்லியிருக்கிறேன். ;)

   சினிமா நடிகை சிம்ரனுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை மேடம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள
   VGK

   Delete
 24. அடை பற்றிய அருமையான பதிவு.
  திரு சுஜாதா அவர்களுக்கு பிடித்தமான பதார்த்தம் "அடை"
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன்.

  ReplyDelete
  Replies
  1. Rathnavel Natarajan December 15, 2012 5:26 AM
   //அடை பற்றிய அருமையான பதிவு.
   திரு சுஜாதா அவர்களுக்கு பிடித்தமான பதார்த்தம் "அடை"
   எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
   நன்றி ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன்.//

   வாருங்கள் ஐயா, வணக்கம். அன்பான வருகைக்கும், அனைத்துத்தகவல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   Delete
 25. அடை சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது !

  அருமையான செயல் முறை விளக்கம்..

  ReplyDelete
  Replies
  1. ரிஷபன் December 15, 2012 6:52 AM
   //அடை சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது !

   அருமையான செயல் முறை விளக்கம்..//

   வாங்கோ சார், வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

   அன்புடன்,
   வீ.....ஜீ
   vgk

   Delete
 26. அடடா ஒரு குட்டியூண்டு அடைக்கு.. இவ்ளோ பெரிய விளக்கமோ?:).. இதைவிட வேறு எவராலுமே அடைக்கு விளக்கம் சொல்லவே முடியாது:)).. அவ்ளோ அருமையாக சொல்லியிருக்கிறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்... பரிசும் கிடைக்க வாழ்த்துக்கள்:))(நிஜமாத்தான்:))

  ReplyDelete
  Replies
  1. athira December 15, 2012 7:53 AM
   //அடடா ஒரு குட்டியூண்டு அடைக்கு.. இவ்ளோ பெரிய விளக்கமோ?:).. இதைவிட வேறு எவராலுமே அடைக்கு விளக்கம் சொல்லவே முடியாது:)).. அவ்ளோ அருமையாக சொல்லியிருக்கிறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்... //

   அதிரா, பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   //பரிசும் கிடைக்க வாழ்த்துக்கள்:))(நிஜமாத்தான்:))//

   அதிரா மிகவும் நல்ல பொண்ணு, சமத்தோ சமத்து. கட