என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-8

நிறைவுப் பகுதி

^புதுப்பித்தலுக்குப் பிறகு
04.04.1997 அன்று கும்பாபிஷேக நடைபெற்ற, 
மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி 
அவர்களின் சமாதி
நமணசமுத்திரம் - புதுக்கோட்டை மாவட்டம்^ 



திருச்சி அரியமங்கலம் என்ற பகுதியில், மிகவும் புகழ்பெற்ற, பழமையான சேஷசாயீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்விக்கூடம் உள்ளது. அங்கு சமீபத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திரு. சுந்தரம், திரு அனந்த நரசிம்மாச்சார் போன்ற பேரறிஞர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும், முதல்வர்களாகவும் இருந்து வந்தனர். 

அதில் சுந்தரம் சற்றே வயதில் மூத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் திருச்சி மாவட்ட PRODUCTIVITY COUNCIL இல் உறுப்பினராகவும், தலைவராகவும்கூட இருந்தவர். 

இந்த சுந்தரம் என்பவரை, சில சமயங்களில், சில வகுப்புகள் எடுக்கவும், Special Lectures கொடுக்கவும், எங்கள் நிறுவனமான  BHEL Training Centre மூலம் அழைக்கப்படும் வழக்கம் உண்டு. 

ஒருதடவை 1985-86 என்று ஞாபகம் .... ’Production and Productivity’ பற்றி அவர் எடுத்த வகுப்புக்கு, நானும் என் இலாகா மூலம் அனுப்பப்பட்டிருந்தேன். அப்போது அவர் ’உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன்’ பற்றி விளக்கும்போது, ஓர் மிகச்சிறிய கதை சொன்னார். அதாவது, வீட்டில் வளர்க்கப்படும் ஓர் பசுமாடு, அதற்கான தீனிகளான வைக்கோல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, குடிநீர், அதனைத் தினமும் குளிப்பாட்டி நிழலில், காற்றோட்டமாகப் பராமரித்தல் + தேவைப்படும்போது அதற்கான  மருத்துவச் செலவுகள்  என தினமும் ரூ. 500 செலவாகிறது. அதன் மூலம் உற்பத்தியாகும் பால், சாணம் முதலியவற்றின் மூலம் தினசரி ரூ. 350 மட்டுமே, வருமானம் கிடைக்கிறது. அப்படியானால் இதில் உற்பத்தி என்பது உள்ளது; எனினும் உற்பத்தித்திறன் என்பது சுத்தமாக இல்லை என்றும்,  PRODUCTIVITY என்றால் MORE OUTPUT WITH LESS INPUT  என ஒரு பசுமாட்டை ஒப்பிட்டு அவர் அன்று சொல்லித்தந்த உதாரணம், இன்றும் என் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்துள்ளது.

அவர், அந்தத் தன் வகுப்பில், திடீரென்று எங்களையெல்லாம் பார்த்து, ”இந்த நிறுவனத்தில் Dr. VGK என்று ஓர் அதிகாரி உள்ளாரே, அவரை உங்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? தெரிந்தவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்” என்றார். அந்த வகுப்பில் நான் உள்பட பாதிபேர்கள் கையைத் தூக்கினோம். 

“பொதுவாக மனிதர்களாகிய நமக்கு தலையில் மட்டுமே ஓர் சிறுபகுதியில் மூளை என்று ஒன்று இருக்கிறது. ஆனால் உங்கள் நிறுவனத்தின் அந்த அதிகாரி Dr. VGK அவர்களுக்கு, எனக்குத் தெரிந்து உடம்பு பூராவுமே மூளை உள்ளது. அவர் மஹா கெட்டிக்காரர்” எனப் பாராட்டிப் பேசினார். அவர் சொன்ன அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

எனக்கிருந்த ஏதோவொரு தயக்கம் மற்றும் சங்கோஜத்தால், நான் இந்த சம்பவத்தை, அன்று Dr. VGK அவர்களிடம் போய் நேரில் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. இங்கு இந்தப் பதிவினில் எனக்கோர் வாய்ப்புக்கிடைத்துள்ளதால் இப்போது பகிர்ந்து கொண்டுள்ளேன். 

 

பக்கம் எண்: 269 to 277 இல் ’5.5 ஆங்கிலேயர் ஆட்சியின் நன்மைகளும் தீமைகளும்’  என்ற தலைப்பினில் Dr. VGK அவர்கள் தனது நூலில் எழுதியிருப்பவை சிந்திக்கத்தகுந்த மிகவும் சிறப்பானவைகளாக உள்ளன.

பக்கம் எண்: 278 to 301 இல் உள்ள மூன்று பகுதிகளும் படித்து முடிக்கும் போது என் கண்கள் கலங்கின. எப்பேர்ப்பட்டதொரு உயர்ந்த மஹானின் வழித்தோன்றலாக நம் Dr. VGK அவர்கள் இன்றும் திகழ்ந்து, மிகக் கடுமையாக உழைத்து வருகிறார் என்பதை நினைத்துப் பார்த்து வியந்து மகிழ்கிறேன். 

பன்னிரண்டு குழந்தைகள் பெற்று, அபார சம்சாரியாக வாழ்ந்து, பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என பலரையும் பார்த்து, சதாபிஷேகம் உள்பட செய்துகொண்டு மிகச்சிறப்பான இல்வாழ்க்கை வாழ்ந்துள்ள மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்கள்,  தன் இறப்புக்கு சில நாட்கள் முன்னதாக ஆபத்சந்நியாசம் வாங்கிக்கொண்டவர். அவர் தனது பிற்கால வாரிசுகளில் ’குலபூஷணம் கோபாலகிருஷ்ணன்’ என்று ஒருவன் மஹா அறிஞனானப் புகழ்பெற்றுத் திகழ்வான், எனச் சொல்லியுள்ளதும், அதன்படியே Dr. VGK அவர்கள் தோன்றி இந்த நூல் வெளியீடு உள்பட பல்வேறு சாதனைகள் செய்துவருவதும் பற்றி நினைக்க மிகவும் பெருமையாக உள்ளது.  

Dr. VGK அவர்களால் வெளியிடப்பட்டுள்ள  ‘காவிரிக்கரையில் வாழ்ந்த மகான்களும், மன்னர்களும்’  என்ற தலைப்பிலான இந்த நூல் ஒரு நூற்றாண்டைப்பற்றிய சரித்திரத்தைக்கூறும் மாபெரும் சமுத்திரமாக விளங்குகிறது.  வரலாற்று நூல் என்ற அலுப்பு ஏதும் வாசகர்களுக்கு எற்படாத வண்ணம், மிகவும் கவனமாக, ஓர் சிறுகதைத் தொகுப்பு நூல் போல அழகாக, சிறுசிறு பகுதிகளாக பிரித்து வெவ்வேறு தகவல்களைத் திரட்டி,  மிகவும் சுவையாக எழுதியுள்ளார்கள்

இந்த நூலை நான் முழுவதுமாக, ரஸித்து, ருசித்துப் படித்து முடித்து விட்டிருப்பினும், நான் தங்களுடன் இந்த நூலைப்பற்றி சிலாகித்துப் பகிர்ந்துகொண்டுள்ள விஷயங்கள் JUST ONE PERCENT க்கும் குறைவாக மட்டுமே இருக்கக்கூடும்.  இது Dr. VGK அவர்களால் வெளியிடப்பட்டுள்ள முதல் தமிழ் நூல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதற்காக அவரை அடியேன் மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன்.   


சற்றே கொஞ்சம் எழுத்துத் திறமை வாய்க்கப்பெற்ற ஓர் எழுத்தாளருக்கு, உடனே ஒரிரு நூல்கள் வெளியிட வேண்டும் என்ற ஒரு ஆவல், மனதில் ஏற்படுவது மிகவும் இயற்கையே. அவர் ஒருவேளை சும்மா இருந்தாலும்கூட, கூடவே உள்ள எழுத்தாளர்கள் அவரைத் தூண்டிவிட்டு, நூல் வெளியிட வைப்பதும் உண்டு. ’யாம் பெற்ற இன்பம் அல்லது துன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நல்லதொரு சிந்தனையே இதற்கான முக்கியமான காரணமாகும்.  :)

பொதுவாக, பெரும்பாலான எழுத்தாளர்கள், இந்தத் தங்கள், நூல் வெளியிடும் முயற்சியால், தங்கள் கைப்பணத்தில் பெருமளவு நஷ்டம் ஆகும் என நன்கு தெரிந்திருந்தும்கூட, ஏதோவொரு பெருமைக்காக, விடா முயற்சிகளுடன் தொடர்ந்து, இந்த நூல் வெளியீடுகளில் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே இலாபம் : ‘ஆத்ம திருப்தி’ என்பது மட்டுமே. சிலருக்கு ‘புத்திக்கொள்முதல்’ என்பதும் போனஸாகக் கிடைக்கக்கூடும். இவை யாவும் என்னுடைய சொந்தக்கருத்துக்கள் மட்டுமே.

Dr. VGK அவர்களும் தனது நூலில், இந்த நூல் வெளியீடுகளில் அவருக்கு இதுவரை ஏற்பட்டுள்ள சொந்த அனுபவங்களைத் துளியும் ஒளிக்காமல், மனம் திறந்து, வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். படித்ததும் நானே மிகவும் வியந்து போனேன். 

தன் வாழ்நாள் முடிவதற்குள், மேலும் ஒருசில ஸத்கார்யங்களையாவது செய்ய வேண்டி, தனக்குள் சங்கல்பித்துக்கொண்டுள்ளார்கள் Dr. VGK அவர்கள். அவைகள் யாவும் வெற்றிகரமாக நிகழ்ந்து, அவர் மேலும் பல்லாண்டுகள் இதே எழுச்சியுடனும், தேக ஆரோக்யத்துடனும், புகழுடனும் வாழ, எல்லாம்வல்ல  இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.
     


நூல் வாசிப்பு அனுபவமும், இதுபோன்ற மகான்கள் பற்றிய சரித்திரங்களில் ஆர்வமும், ருசியும் உள்ள அனைவரும், இந்தப் பொக்கிஷமான நூலை வாங்கிப் படித்து மகிழலாம். மிகவும் மலிவான சலுகை விலையில், நமக்கு மட்டுமே இப்போது கிடைக்க இருக்கும்,  இந்த விலைமதிப்பில்லாத நூலை, நாம் விலைக்கு வாங்கி பிறருக்கு அன்பளிப்பாகவும் வழங்கலாம்.     

இந்த நூலை, இந்தியாவுக்குள், பதிவுத்தபால் மூலம்,  பெற விருப்பமுள்ளவர்கள், பிரதி ஒன்றுக்கு ரூ. 250 வீதம் கணக்கிட்டு கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும். 

NAME OF ACCOUNT HOLDER:    R. LALITHA

ACCOUNT NUMBER:                        8 3 0 6 0 3 5 8 3

NAME OF BANK :                              INDIAN BANK

BRANCH NAME:                                 THILLAINAGAR, TIRUCHIRAPALLI

IFS CODE:                                            I D I B 0 0 0 T 0 1 7 

Remarks:                                                GOPU-BLOG

பணம் அனுப்பியபின், மின்னஞ்சல் மூலம் கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

AMOUNT SENT Rs. ______

DATE OF REMITTANCE: _____________

NAME in CAPITAL letters: _____________________

COMPLETE POSTAL ADDRESS (WITHIN INDIA)
WITH PIN CODE NUMBER:  

MOBILE NUMBER: 

NUMBER OF TAMIL BOOKS REQUIRED:      ______

NUMBER OF ENGLISH BOOKS REQUIRED: ______

To 
Mr. VIVEKANANDAN - Mobile: 98424 83034
MAIL ID :  vivekbanu@gmail.com

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
Copy of mail may please be forwarded to 
1) gopalakrishnan.vgk@gmail.com
2) valambal@gmail.com
also for follow-up and quick dispatch

[The books will be dispatched by “Registered Book Parcel”
The postal charges will be borne by the publisher for Indian buyers.]

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


வாசகர்களாகிய உங்கள் காட்டில் இனி நல்ல மழைதான்


  

இத்துடன் இந்தத் தொடர் இனிதே நிறைவடைகிறது.

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]



20 கருத்துகள்:

  1. அப்பப்பா... எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்... மயிலிறகால் வருடுவது என்பார்கள்... எனக்கென்னவோ அது கொஞ்சம் கூசுமோ அரிக்குமோ என்று தோன்றும்... ஆனால் அப்படி சொல்பவர்கள் மனதுக்கு ஆறுதலாகவும் பாஸிட்டிவ் ஆகவும் என்பதைக் குறிப்பிடத்தான் அப்படி சொல்கிறார்கள். அந்த மாதிரி எப்போதும் எதையும் நல்ல விதமாக எடுத்து சொல்வது உங்களுக்கு கைவந்த கலை. திளைக்கிறோம். அவரும் இன்னும் நிறைய எழுதவேண்டும். நடமாடும் பல்கலைக்கழகமல்லவா அவர்... அவர் பற்றியும் அவர் எழுத்து பற்றிய பின்னூட்டங்களும் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்... மேலும் மேலும் பல அறியப்படாத விஷயங்கள் உலகம் அறிவது தொடரவேண்டும். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ananthasayanam T  December 15, 2019 at 5:44 AM

      WELCOME To My Dear Respectable Sir, 
      எனது இந்த நிறைவுப்பகுதிக்கான, தங்களின் முதல் பின்னூட்டம், என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.

      //அப்பப்பா... எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்... மயிலிறகால் வருடுவது என்பார்கள்... எனக்கென்னவோ அது கொஞ்சம் கூசுமோ அரிக்குமோ என்று தோன்றும்... ஆனால் அப்படி சொல்பவர்கள் மனதுக்கு ஆறுதலாகவும் பாஸிட்டிவ் ஆகவும் என்பதைக் குறிப்பிடத்தான் அப்படி சொல்கிறார்கள். அந்த மாதிரி எப்போதும் எதையும் நல்ல விதமாக எடுத்து சொல்வது உங்களுக்கு கைவந்த கலை. திளைக்கிறோம்.//

      ஆஹா ...... தன்யனானேன்.//

      //அவரும் இன்னும் நிறைய எழுதவேண்டும். நடமாடும் பல்கலைக்கழகமல்லவா அவர்...//

      அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ள தாங்கள், மிக அழகாகவும், மிகச் சரியாகவும் சொல்லியுள்ளீர்கள். 

      //அவர் பற்றியும் அவர் எழுத்து பற்றிய பின்னூட்டங்களும் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்... மேலும் மேலும் பல அறியப்படாத விஷயங்கள் உலகம் அறிவது தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் அழகான, ஆறுதலான, அரிய பெரிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

      சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் சிறுகதை ஒன்றுக்குத் தாங்கள் அளித்துள்ள, ஒருசில பின்னூட்டங்களை நான் அடிக்கடி எனக்குள் படித்து மகிழ்வதுண்டு.  

      அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21.html

      தலைப்பு:  VGK 21 - மூ க் கு த் தி

      Yours affectionately,
      வை.கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  2. புத்தகத்திற்கு நல்லதொரு அறிமுகம். நல்ல புத்தகம் அனைவரையும் சென்று சேரணும்னு நினைக்கும் உங்கள் மனதிற்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் December 15, 2019 at 11:30 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //புத்தகத்திற்கு நல்லதொரு அறிமுகம். நல்ல புத்தகம் அனைவரையும் சென்று சேரணும்னு நினைக்கும் உங்கள் மனதிற்கும் பாராட்டுகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  3. நூலை அழகாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நூலில் உள்ள தகவல்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு சிலவே ஆயினும், அவைகளைப் படிக்கும்போது இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்ற எண்ணமே தோன்றுகிறது. . நூலாசிரியருக்கு வாழ்த்துகளும் நூலை அறிமுகப்படுத்திய தங்களுக்கு பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி December 15, 2019 at 12:17 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நூலை அழகாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நூலில் உள்ள தகவல்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு சிலவே ஆயினும், அவைகளைப் படிக்கும்போது இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்ற எண்ணமே தோன்றுகிறது. . நூலாசிரியருக்கு வாழ்த்துகளும் நூலை அறிமுகப்படுத்திய தங்களுக்கு பாராட்டுகளும்!//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ‘தகவல் களஞ்சியம்’ என்று சொல்லி நூலையும், நூல் ஆசிரியர் அவர்களையும், அடியேனையும் பாராட்டிப் பெருமைப்படுத்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  4. அரிய அறிமுகம். சீரிய பணி. ஆர்வமுள்ளவர்கள் நூலை வாங்கி வாசித்துப் பலனடையலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி December 15, 2019 at 12:26 PM

      வாங்கோ, வணக்கம். நமஸ்காரங்கள்.

      //அரிய அறிமுகம். சீரிய பணி. ஆர்வமுள்ளவர்கள் நூலை வாங்கி வாசித்துப் பலனடையலாம்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  5. நிறைய ஆச்சர்யமான தகவல்கள். கடைசி இரண்டு இடுகைகளும் புத்தகத்தை ஒட்டி இருந்தன.

    ஆனால் இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பயன் பெறுவர் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் December 15, 2019 at 5:34 PM

      //நிறைய ஆச்சர்யமான தகவல்கள். கடைசி இரண்டு இடுகைகளும் புத்தகத்தை ஒட்டி இருந்தன.//

      மிகவும் சந்தோஷம். சிற்சில விஷயங்களாவது புத்தகத்தை ஒட்டி இருக்க வேண்டுமே :)

      //ஆனால் இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பயன் பெறுவர் என்று தோன்றுகிறது.//

      இதுமட்டுமல்ல. எதற்குமே, அதில் ஓர் ஆர்வமும், ருசியும், தாகமும், தேடலும் இருந்தால் மட்டுமே, ஒருவரால் ஒன்றை வாங்கவோ, படிக்கவோ, பயன் பெறவோ முடியும். :)

      நீக்கு
  6. நூல் விமர்சனம், ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு December 15, 2019 at 6:20 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நூல் விமர்சனம், ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எல்லாம் மிக அருமை.//

      மிக்க மகிழ்ச்சி. தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  7. நல்லதொரு அறிமுகத்தை நயமுடனே முடித்திருக்கிறீர்கள்.  அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். December 16, 2019 at 5:08 AM

      வாங்கோ, ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ வணக்கம்.

      //நல்லதொரு அறிமுகத்தை நயமுடனே முடித்திருக்கிறீர்கள். அருமை.//

      மிக்க மகிழ்ச்சி. தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  8. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் December 16, 2019 at 8:39 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...//

      மிக்க மகிழ்ச்சி. தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, Mr. DD Sir.

      நீக்கு
  9. அருமையான நூலுக்கு அற்புதமான விமர்சனம்...வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:49 AM

      வாங்கோ மை டியர் ரமணி, சார். வணக்கம்.

      //அருமையான நூலுக்கு அற்புதமான விமர்சனம்...வாழ்த்துக்களுடன்...//

      மிக்க மகிழ்ச்சி. தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, Mr. RAMANI Sir.

      நீக்கு
  10. மிக அழகான தொகுப்பு.. அறிமுகம்.
    வாசிக்கக் கிடைத்தவர்கள் பாக்யசாலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் December 17, 2019 at 11:31 AM

      ஆஹா, எனது அன்புக்குரிய, எனது எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களின் தொடர் வருகை என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

      //மிக அழகான தொகுப்பு.. அறிமுகம்.//

      தன்யனானேன்.

      //வாசிக்கக் கிடைத்தவர்கள் பாக்யசாலிகள்.//

      மிக்க மகிழ்ச்சி. ஊக்கம் தரும் தங்கள் கருத்துக்களை இங்கு வாசிக்க நேர்ந்த நானே முதல் பாக்யசாலி.

      மிக்க நன்றி.

      நீக்கு