பூர்வாஸ்ரமத்தில்
’ஆங்கரை பெரியவா’ என்று அழைக்கப்பட்ட,
சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த,
ஸ்ரீ. A.V. கல்யாணராம சாஸ்திரிகள் [பாகவதர்].
திருச்சி, பழூர் கிராமத்தில் அதிஷ்டானம் அமைந்துள்ள
’ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்’
^பழூர் அதிஷ்டானத்தில்
அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள
அபூர்வமானதொரு படம்^
^^ஸ்வாமிகள் பல்லாண்டுகள் பூஜித்து வந்த
ஸ்ரீ குருவாயூரப்பன் விக்ரஹம்^^
^அதிஷ்டானத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை^
அன்புடையீர்,
அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்.
'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில் யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டவர்களின் பேட்டிகள் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.
இதுவிஷயம், நம் அன்புக்குரிய வலைப்பதிவர் ’ஆச்சி ஆச்சி’ மூலம் அடியேன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், அடியேனும் ஒரு பேட்டி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம், கடந்த ஓராண்டாக, ஆச்சி அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
அதேபோல பேட்டி எடுக்கும் இரு தோழர்களையும் மாற்றிமாற்றி ஆச்சியே தொடர்புகொண்டு, அடியேனை நேரில் சென்று, பேட்டி காணவேண்டும் என தனது நீண்ட நாள் ஆவலை அவர்களிடம், நிர்பந்தப் ப...டு...த்...தி, கேட்டுக்கொண்டிருப்பார்கள் போலிருக்குது.
’ஆச்சி’ பற்றி மேலும் அறிய இதோ சில இணைப்புகள்:
அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது!
அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]
சந்தித்த வேளையில் ..... பகுதி 5 of 6
ஆச்சியின் கொடுக்குகள்:-
^20.06.2014^
^DECEMBER, 2018^
[’கொடுக்கு’ என்பது தெலுங்கு வார்த்தை.
இதற்கு தமிழில் ’பிள்ளை’ அல்லது ‘வாரிசு’ என்பது பொருள்]
’ஆச்சி’ போட்ட அதிரடி + அவசர உத்தரவால் அரண்டுபோன, பேட்டி காண்போர், திருச்சிக்கு வருகை தந்து என்னை நேரில் சந்தித்து, நேரடியாகப் பேட்டி காண, கால-நேர-சூழ்நிலைகள் ஒத்து வராததால், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆடியோவாக பேசி பதிவு செய்து அனுப்பி வைத்துவிடுமாறு, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள்.
அதன்படி அடியேன் 12.12.2018 புதன்கிழமை, நல்ல முஹூர்த்த நாளில், திருச்சியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்கோயில் கும்பாபிஷேகத்தன்று, திருவானைக்கோயில் சங்கர மடத்திற்கு வருகை தந்து சிறப்பித்திருந்த, ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தின் தற்போதைய பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் மூன்று கால பூஜைகளையும் திவ்ய தரிஸனம் செய்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்துவிட்டு, அவர்களின் திருக்கரங்களால் அனுக்கிரஹிக்கப்பட்ட பிரஸாதங்களும் கிடைக்கப்பெற்று, அவர்களின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன், மூன்று தனித்தனிப் பதிவுகளாகப் பேசி அனுப்பியுள்ள செய்தித் தொகுப்புக்களின், மூன்றாம் பாகத்தை யூ-ட்யூப்பில் 20.12.2018 அன்று வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.
ஆடியோ வெளியீட்டாளர்
திரு. பரத் சுப்ரமணியன் அவர்களுக்கும்,
அன்புக்குரிய ஆச்சி அவர்களுக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரையிலான ஆடியோ வெளியீடுகள்:
நினைத்துப்பார்க்கிறேன்
[ http://gopu1949.blogspot.com/ 2011/07/3.htmlஜாம்ஷெட்பூரில் 03.02.2007 அன்று நடந்த நிகழ்ச்சியொன்றில், அகில இந்திய அளவில் முதல் பரிசும், தேசிய விருதும் (National Award with Gold Medal and First Prize in an All India Level Competition) அடியேன் பெற்றபோது, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் என்னை நேரிடையாக பேட்டி கண்டு, ரேடியோவில் ஒலிபரப்பு செய்தது, மலரும் நினைவுகளாக இப்போதும் என்னை மகிழ்விக்கிறது. இந்த You-Tube Audio Recording எனது இரண்டாவது மகன் சிரஞ்ஜீவி. G. SHANKAR அவர்களால், MOBILE SMART PHONE இல் பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ]
குருர் ப்ரஹ்மா, குருர் விஷ்ணு: குருதேவோ மஹேஸ்வர: !
குருஸ் ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம: !!
என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]
ஆவ்வ்வ்வ்வ் மீயேதான் 1ஸ்டூஊஊஊஊஊஊ:). பூஸோ கொக்கோ...
பதிலளிநீக்குஇம்முறையும் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட பதிவு.. எவ்ளோ பொறுமை வேணும் இதை எழுதுபவருக்கும்.. என்னைப்போல படிப்பவருக்கும்:)..
அப்பாவி:) அதிரா January 7, 2019 at 12:55 AM
நீக்கு//ஆவ்வ்வ்வ்வ் மீயேதான் 1ஸ்டூஊஊஊஊஊஊ:). பூஸோ கொக்கோ...//
தங்களின் முதலாவது வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி.
http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html
இந்த மேற்படி பதிவினில் 3-வது கமெண்ட் ஆக, தங்களுக்கான SPECIAL CERTIFICATE என்னால் கொடுத்து சிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் படியுங்கோ. மீண்டும் மீண்டும் சிரியுங்கோ. :)))))
ஆங்கரைப் பெரியவாவின் தரிசனம் பெற்றுக் கொண்டேன்... பலன் தரும் மந்திரங்கள் அருமை, பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. இது 2 வது கொமெண்ட்.. இங்கு முதலாவதும் மீயேதான்.. ஆனா அது சுத்துத்து சுத்துது உலகம் சுத்துது என சுற்றிக் கொண்டே நின்று யோசிச்சுப் போட்டு போனமையால்.. சேர்ந்த்டுதோ சேரல்லியோ தெரியல்லியே.. அதனால சொல்ல வேண்டியது யானின்:) கடமை ஆச்சே:))..
பதிலளிநீக்கு
நீக்குஅப்பாவி:) அதிராJanuary 7, 2019 at 1:02 AM
//அதனால சொல்ல வேண்டியது யானின்:) கடமை ஆச்சே:))..//
கடமையில் கண்ணாயிரம் ஆச்சே .... நீங்க !
https://gopu1949.blogspot.com/2013/09/45-2-6.html
இதோ இந்த மேற்படி பதிவினில் தங்களுக்கு ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததைப் பற்றி நான் எழுதியிருந்த பதிவினையும், அதற்காக நீங்களும் மற்றவர்களும் எழுதியிருந்த கமெண்ட்ஸ்களையும், மீண்டும் மீண்டும் படித்துச் சிரித்துக்கொண்டு இருக்கிறேன். :))))) அந்தக் குழந்தைகள் இருவரும் இப்போ எப்படி இருக்கிறார்கள். அவர்களின் லேட்டஸ்ட் போட்டோ அனுப்பி வைக்கவும்.
அன்புடன் கோபு அண்ணன்
ஆச்சியின் செல்லக் குட்டிகள் அழகு.. ஆச்சி என்னை மறந்து போய் இப்போ மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும்:).. அதிராவும் விசாரிச்சதாகச் சொல்லிடுங்கோ:).
பதிலளிநீக்குஅப்பாவி:) அதிரா January 7, 2019 at 1:03 AM
நீக்கு//ஆச்சியின் செல்லக் குட்டிகள் அழகு..//
oooooooo
மேலும் ....
“பத்து புள்ள தங்கச்சிக்குப் பொறக்கணும் ....... நான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும் ....... மாமான்னு அழைக்கணும் ......... மழலை எல்லாம் பேசணும் ....... ;)))))”
எனப்பாட்டுப்பாடி ஆசீர்வதிக்கிறோம்.
இம்முறை மீண்டும் வருவேன் எனச் சொல்லாமல், என் கிட்னியை ஊஸ் பண்ணி.. மேலே அந்த இரு மார்களும் எப்போ முட்டி மோதுகின்றனவோ அப்போதான் மீயும் திரும்பி வரக்கூடும்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :) கோபு அண்ணன் யூப்பர் மாட்டீஈஈஈஈஈ:).. இப்போ என்ன பண்ணுவீங்க?:)..
பதிலளிநீக்குமான்களும் என வந்திருக்கோணும்:)
நீக்கு(1)
நீக்குஅப்பாவி:) அதிரா January 7, 2019 at 1:04 AM
//மேலே அந்த இரு மார்களும் எப்போ முட்டி மோதுகின்றனவோ//
(2)
அப்பாவி:) அதிரா January 7, 2019 at 1:49 AM
//மான்களும் என வந்திருக்கோணும்:)//
-=-=-=-=-=-
(1) இரு மார்கள் (2) இரு மான்கள்
’மார்(பு)கள் / மான்கள்’ இவை இரண்டுமே கண்களுக்கு விருந்து அளிக்கக்கூடிய, மிக அழகான, அற்புதமான வஸ்துக்கள் மட்டுமே என்பதால், தங்களின் ’அப்பாவித்தனமான’ எழுத்துப்பிழையாகிய இதில், பெரிதாகப் பொருட்குற்றமோ, தவறோ இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
இருப்பினும் நம் நெ.த. போன்ற தமிழ் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று வெயிட் செய்து பார்ப்போம், அதிரா.
ஐயையோ ... நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
நீக்குஎனக்குத் தெரிந்ததெல்லாம், கழைக்கூத்தாடிகள், வித்தை காட்டறவங்க சொல்லும், “அம்மாமார்களே, அய்யாமார்களே, அக்காமார்களே, தங்கச்சிமார்களே எல்லாரும் ஓடியாங்கோ.. செய்யற வித்தையைப் பார்த்து காசு போடுங்கோ” என்று கத்துவதைச் சிறிய வயதில் கேட்ட நினைவுகள்தாம்.
சிறப்புமிகு நிகழ்வுகள். அருமையான இடங்கள். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 7, 2019 at 7:00 AM
நீக்குவாருங்கள் முனைவர் ஐயா, வணக்கம்.
//சிறப்புமிகு நிகழ்வுகள். அருமையான இடங்கள். மகிழ்ச்சி.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.
மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்கு//திண்டுக்கல் தனபாலன் January 7, 2019 at 9:07 AM//
நீக்குவாங்கோ DD Sir, வணக்கம்.
//மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
பெரியவா பற்றி அருமையான தொகுப்பு. ஆச்சி வருகை பற்றியும் பகிர்ந்தது சிறப்பு :)
பதிலளிநீக்குThenammai Lakshmanan January 7, 2019 at 12:02 PM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
//பெரியவா பற்றி அருமையான தொகுப்பு.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
//ஆச்சி வருகை பற்றியும் பகிர்ந்தது சிறப்பு :)//
இவங்க நம்ம செட்டிநாட்டு ஒரிஜினல் 'ஆச்சி' அல்ல ஹனி மேடம். நாகைப்பட்டினத்துக் காரங்க. ஏதோ செல்லப்பெயராக சிறு குழந்தையாக இருந்தது முதல் ’ஆச்சி’ என அழைக்கப்பட்டுள்ளார்கள். அவ்வளவுதான் :)
இந்த ஆச்சியின் ஒரிஜினல் பெயர்: S. பரமேஸ்வரி
அன்புடன் கோபு
அதிரடி உத்தரவு போட நான் யார் சார்.நானும் மிக மிக சாதரணமானவேளேயாக்கும்.உங்கள் சகோதர்தான் ஸ்ரீகண்டன் என்பது தெரியவந்தபோது இந்த ஏற்பாடு எளிதில் நடைபெற்றது.ஒரு சின்ன கருவியாக உங்களை இணைய உலகின் மற்றொரு பக்கத்திற்கு பிரதிபலிக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.பழூர் தாமோதர பெரியவர் பற்றின தகவல்கள் எங்களுக்கு முற்றிலும் புதிய தகவல்கள்.
பதிலளிநீக்குஅதிரா அவர்களை எப்படி மறக்க முடியும்.ஏஞ்சலின் அவர்களிடம் அவ்வப்போது விசாரிப்பதுண்டு.
நன்றி ஹனி மேம்
ஆச்சி ஸ்ரீதர் January 7, 2019 at 2:11 PM
நீக்குவாங்கோ ஆச்சி, வணக்கம்.
//அதிரடி உத்தரவு போட நான் யார் சார்.//
நீங்க அனைவரிடமும் இனிய சொல்லாட்சி (சொல் + ஆச்சி) செலுத்தக்கூடிய ஆச்சி அல்லவா !
//நானும் மிக மிக சாதாரணமானவளேயாக்கும்.//
அப்படியா? இது இதுவரை எனக்குத் தெரியாததோர் புதிய செய்தியாக்கும். நான் உங்களை மிகப்பெரிய ஆசாமி மற்றும் பலகோடிகளுக்கு அதிபதி என நினைத்துள்ளேன். நான் எது நினைத்தாலும் அது அப்படியே நிகழ்ந்துவிடுமாக்கும். நினைவிருக்கட்டும். உங்களுக்கு என்ன இருந்தாலும் இத்தனைத் தன்னடக்கம் கூடவே கூடாது. :)
//உங்கள் சகோதர்தான் ஸ்ரீகண்டன் என்பது தெரியவந்தபோது இந்த ஏற்பாடு எளிதில் நடைபெற்றது.//
வலையுலகில் அடியேன் சுற்றிக்கொண்டிருந்த கடந்த எட்டு ஆண்டுகளாக, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு, பல்லாண்டுகளாக கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீகண்டன் என்பவர் எனது சொந்த அண்ணாதான் என்று யாரிடமும் நான் சொல்லிக்கொள்ளாமல், விளம்பரம் தேட விருப்பமில்லாமல், அமைதியாகவே இருந்து வந்தேன். சமீபத்தில் ஒரு மாதம் முன்பு யாரோ எழுதிய ஏதோவொரு புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களுக்கு சந்தேகம் வந்து, என்னிடம் கேட்டீர்கள். நானும் நம் ஆச்சிதானே என்று உண்மையை மறைக்காமல் ஒத்துக்கொண்டேன். அது இவ்வளவு தூரம் இப்போது, இதுபோல விளம்பரம் ஆகும் என்பதை நானும் எதிர்பார்க்கவில்லை.
//ஒரு சின்ன கருவியாக உங்களை இணைய உலகின் மற்றொரு பக்கத்திற்கு பிரதிபலிக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.//
ஆஹா .... அதனால் என்ன, எனக்கும் இதில் ஒருபக்கம் மகிழ்ச்சியே.
//பழூர் தாமோதர பெரியவர் பற்றின தகவல்கள் எங்களுக்கு முற்றிலும் புதிய தகவல்கள்.//
ஆமாம். அவரும் விளம்பரம் தேடாமல் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஞானியாவார். அவரை குருவாக ஏற்று, அடியேன் அவரை பலமுறை சந்தித்து, பலவிஷயங்களை அவரிடமிருந்து அடியேன் அறிந்துள்ளேன்.
அவற்றில் மிக முக்கியமானது:- நம்மை நாமே பிறரிடம் விளம்பரப்படுத்திக்கொள்ளாமல், இறைவனிடம் மட்டும் டோட்டல் சரணாகதியாகி, நடப்பதெல்லாம் அந்த ‘நாராயணன் செயல்’ என்று நினைத்து மிகவும் சிம்பிள் லைஃப் ஆக வாழ முயற்சிப்பது.
அன்புடன் + நன்றியுடன் கோபு
நாங்கள்லாம் cid.
நீக்குஆச்சி ஸ்ரீதர் January 9, 2019 at 6:52 PM
நீக்கு//நாங்கள்லாம் cid.//
அதுவும் நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல், வெட்டிச் செலவுகள் செய்து, நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடசலாக அடுக்கி வைத்துக்கொண்டல்லவா CID ஆகியுள்ளீர்கள்! :(
மொத்தத்தில் நல்ல வசதியுள்ள கோடீஸ்வரி நீங்கள். இந்த ஏழை எளிய அந்தணனின் சொல் தங்களிடம் எடுபடாதுதான். ’மயிருள்ள சீமாட்டி ... வாரி முடிகிறாள்’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது உங்கள் விஷயத்தில் 100க்கு 100 உண்மையாக உள்ளது.
வாழ்த்துகள் ஆச்சி !
அன்புடன் கோபு
சார்.தெருக்கோடி தவிர வேறு எந்த கோடியும் இல்லை என்னிடம்.பெரியவரே இவருக்கு புரிய வைப்பா
நீக்குஆச்சி ஸ்ரீதர் January 10, 2019 at 2:29 PM
நீக்கு//சார். தெருக்கோடி தவிர வேறு எந்த கோடியும் இல்லை என்னிடம்.//
எதையுமே இல்லை இல்லை என நினைக்காதீங்கோ, ஆச்சி. பாஸிடிவ் ஆகவே நினையுங்கோ. நாம் எப்போதும் அடிக்கடி எதை நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ, அதுவாகவே விரைவில் ஆகி விடுவோம்.
கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமாகத் தங்களுக்குக் கிடைத்துள்ள தங்களின் இரு பெண் குழந்தைகளும் பலகோடி ரூபாய்கள் கொடுத்தாலும் பெற முடியாத வரப் பிரஸாதங்களாகும்.
அதனால் நீங்க ஒரு பத்து கோடிக்கோ அல்லது நூறு கோடிக்கோ அல்லது ஆயிரம் கோடிக்கோ அதிபதி என எப்போதும் நினைத்துக் கற்பனை செய்துகொள்ளுங்கோ. விரைவில் அப்படியே ஆகிவிடுவீர்கள். நமது கற்பனைகள் இதுபோல மிகவும் உயர்வாகவும் + உன்னதமாகவும், மிகப்பெரிய அளவிலும் மட்டுமே இருக்க வேண்டும்.
அபார்ட்மெண்டில் இரண்டாவது மாடியில் ஒரு ஓரமாக தெற்குக்கோடியில் எங்கள் வீடு அமைந்துள்ளதால், எங்களுக்கு பால், பூ, இதர காய்கறிகள் சப்ளை செய்யும் சிறுசிறு வியாபாரிகள், எங்க வீட்டுக்கார அம்மாவை ’கோடி வீட்டு அம்மா ... வாங்க’ என்றே குரல் கொடுத்து அழைப்பார்கள். நானும் எங்க வூட்டு அம்மா ஒரு கோடீஸ்வரி அம்மா என்றே எனக்குள் நினைத்து மகிழ்ந்து கொள்வது உண்டு.
//பெரியவரே இவருக்கு புரிய வைப்பா//
இதற்கும் பாருங்கோ ..... நமக்கெல்லாம் கோடி கோடியாக இன்பமும், அருளும், அனுக்கிரஹமும் அளித்து, இன்றும் வழிகாட்டி வரும், அந்தக் காம’கோடி’ பெரியவரையே தூது அனுப்பியுள்ளீர்கள். சபாஷ் ! :)))))
அன்புடன் கோபு
பதிவில் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குஆங்கரைப் பெரியவர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
கோமதி அரசு January 7, 2019 at 2:40 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//பதிவில் அனைத்தும் அருமை. ஆங்கரைப் பெரியவர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.//
மிகவும் சந்தோஷம் மேடம்.
உங்கள் மலரும் நினைவுகளும் அருமை.
பதிலளிநீக்குகோமதி அரசு January 7, 2019 at 2:41 PM
நீக்கு//உங்கள் மலரும் நினைவுகளும் அருமை.//
பதிவு முழுவதும் சாமி & சாமியார் என்றால் வருகை தருவோருக்கும் அலுப்புத் தட்டிவிடும் அல்லவா!
அதனால் மலரும் நினைவுகளாக ஆ..சாமி, ஆ..சாமியார் + அவர்களின் கொடுக்குகள் என கொஞ்சம் கலந்து விட்டுள்ளேன். :))
அருமை என்ற தங்களின் அருமையான கருத்துக்களுக்கு நன்றி, மேடம்.
பலன் தரும் மந்திரங்கள் பகிர்வு பலருக்கு உதவும்.
பதிலளிநீக்குநம்பிக்கைதானே வாழ்க்கை.
கோமதி அரசு January 7, 2019 at 2:43 PM
நீக்கு//பலன் தரும் மந்திரங்கள் பகிர்வு பலருக்கு உதவும்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.//
ஆமாம். நம்பிக்கைதான் வாழ்க்கை. அது சமீபத்தில் (29.12.2018) ஓர் ஆன்மீக மலரில் வெளிவந்துள்ள விளம்பரமாகும். யாரோ எனக்கு அதனை அனுப்பி வைத்திருந்தார்கள். அதில் ‘பலன் தரும் மந்திரங்கள்’ முழுமையாக தரப்படவில்லை என நினைக்கிறேன். ஒன்வொன்றுக்குமான ஆரம்ப வரிகள் மட்டும் காட்டப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் திருவடிகளுக்கு வணக்கம்.
பதிலளிநீக்குகோமதி அரசு January 7, 2019 at 2:45 PM
நீக்கு//ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் திருவடிகளுக்கு வணக்கம்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
அருமையான பதிவு. முதற் படமும், பெரியவாவுடன் உள்ள படமும் மிகவும் கவர்கிறது.
பதிலளிநீக்குஇணையத்திலேந்து, வாட்சப், இப்போ யூ டியூப் என்று கலக்குகிறீர்கள்.
பாராட்டுகள். தொடருங்கள் உங்கள் பதிவுகளை
அடுத்து செவ்வாய்க் கிரகம்தேன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)..
நீக்குஅதிரா... அவர் சின்ன வயசிலிருந்தே செவ்வாய் நினைப்புதான்... இதை அறிந்துகொண்டதால்தான் சின்ன வயசிலேயே (23-24) கோபு சாருக்கு அவர் அப்பா திருமணம் செய்துவிட்டார்.
நீக்குஇனி புதிதாக அவர் எதுக்கு இந்த வயசுல செவ்வாயைத் தேடிப் போகணும்?
நான் சின்ன வயசுல அப்படீலாம் இல்லை, சத்திய சந்தனாக்கும், படிப்பு, வீடு, வேலை என்று இருந்தேன்னு கோபு சார் ஹிப்போகிரேட்டா கதை விட மாட்டார்.
நீக்குஅவரோ கதைகள்ல, “சீக்கிரமே மாமனாராக ப்ராப்திரஸ்து” என நினைத்து அழகிய பெண்ணைப் பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்கியவராயிற்றே.
நெல்லைத் தமிழன் January 7, 2019 at 3:33 PM
நீக்குவாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.
//அருமையான பதிவு. முதற் படமும், பெரியவாவுடன் உள்ள படமும் மிகவும் கவர்கிறது.//
சந்தோஷம். கவரட்டும். பதிவுக்கான கமெண்ட் ஓக்கே.
மூன்று ஆடியோக்களையும் பொறுமையாகக் கேட்டு விட்டு, தங்கள் பாணியில் மிக விபரமாக, மிக விளக்கமாக, மெயில் மூலம் விமர்சனம் செய்வீர்கள் என எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
இன்று உப்புலியப்பன் கோயில் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலிருந்து வாட்ஸ்-அப் செய்தி கொடுத்துக் கொண்டே உள்ளீர்கள். மொத்தத்தில் உலகம் சுற்றும் வாலிபனாக உள்ளீர்கள். எப்படியோ ஜாலியாக இருங்கோ. அதுதான் எனக்கும் தேவை.
//இணையத்திலேந்து, வாட்சப், இப்போ யூ டியூப் என்று கலக்குகிறீர்கள்.//
அது ..... ஏதோ என் போதாத காலம் !
//பாராட்டுகள். தொடருங்கள் உங்கள் பதிவுகளை//
சென்ற ஆண்டு (2018) முழுவதுமாகச் சேர்த்தே எட்டே எட்டு பதிவுகள் தான் கொடுத்துள்ளேன். இந்த ஆண்டு ஆரம்பித்து முதல் 7 நாட்களுக்குள் நான்கு பதிவுகள் கொடுத்தாச்சு. திஸ் ஈஸ் டூ மச். அதனால் நான் இத்தோடு இப்போதைக்கு எஸ்கேப். :)
அன்புடன் கோபு
நெல்லைத் தமிழன் January 8, 2019 at 4:06 PM
நீக்கு//அவர் சின்ன வயசிலிருந்தே செவ்வாய் நினைப்புதான்...//
’செவ்வாய்’ என்றால் என்ன?
சிவந்த சிங்காரி ஒருத்தியின், செவத்த வாயோ?
//இதை அறிந்துகொண்டதால்தான் சின்ன வயசிலேயே (23-24) கோபு சாருக்கு அவர் அப்பா திருமணம் செய்துவிட்டார்.//
என் திருமணம் நடந்தது என்னுடைய 22+ வயதில் ஸ்வாமீ. அதாவது நான் பிறந்து 22 ஆண்டுகளும் 208 நாட்களும் முடிந்தவுடன், மறுநாள் எனக்குத் திருமணம் நிகழ்ந்தது. அதுவே மிகவும் தாமதமாகி விட்டதாக, அன்று நான் நினைத்தேன். :)
oooooOooooo
//இனி புதிதாக அவர் எதுக்கு இந்த வயசுல செவ்வாயைத் தேடிப் போகணும்?//
அதானே ! செவ்-வாயைத்தேடி செவ்வாய் கிரஹத்திற்கு எதற்குப் போகணும்? அங்கு தவித்த வாய்க்கு ஒரு வாய் தண்ணி கூடக் கொடுக்க ஆள் இருக்காதே ! :(
நாம் வாழும் இந்த பூமிதான் அழகோ அழகு ..... வெரி வெரி கலர்ஃபுல் ..... எத்தனை வயதானாலும், இந்தக் கலர்ஃபுல்லான நம் பூமியைவிட்டு நான் எங்கும் செல்ல விரும்பவில்லை என அதிராவிடம் அடித்துச் சொல்லிவிடுங்கோ, ஸ்வாமீ.
அவசியமாக இருந்தால் அவங்க (அதிரா) செவ்வாய் கிரஹத்துக்குப் போகட்டும். அதில் நமக்குக் கவலையோ அப்ஜக்ஷனோ ஏதும் இல்லை. :)
நெல்லைத் தமிழன் January 8, 2019 at 4:10 PM
நீக்கு//நான் சின்ன வயசுல அப்படீலாம் இல்லை, சத்திய சந்தனாக்கும், படிப்பு, வீடு, வேலை என்று இருந்தேன்னு கோபு சார் ஹிப்போகிரேட்டா கதை விட மாட்டார்.//
உண்மை அதுதானே. இதில் கதைவிட வேண்டிய அவசியமே எனக்கு ஏதும் இல்லையே.
இருந்தாலும் மனதில் தோன்றிய என் உள்ளுணர்வுகளை, அழகிய காதல் கதைகளாக, ஓர் சிற்பி சிலை வடிப்பது போல, கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு செதுக்கி அவ்வப்போது கொடுத்துள்ளேன்.
//அவரோ கதைகள்ல, “சீக்கிரமே மாமனாராக ப்ராப்திரஸ்து” என நினைத்து அழகிய பெண்ணைப் பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்கியவராயிற்றே.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ‘மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் கதையில் வரும் அந்த நிகழ்வினை உங்களால் இன்றும் மறக்க மனம் கூடுதில்லையாக ஆக்கியுள்ளதே. அதுவே எனக்கு + என் எழுத்துக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றிதான் என நினைத்து பூரித்துப் போய் மகிழ்கிறேன்.
அந்த என் ஸ்வீட்டான காதல் கதையைப் படிக்காதவர்கள் + படிக்க சந்தர்ப்பம் அமையாதவர்கள் ...... துரதிஷ்டசாலிகள் என்பதைத்தவிர ...... வேறென்ன சொல்ல?
அதற்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.com/2014/03/vgk-10.html
http://gopu1949.blogspot.com/2014/03/vgk-10.html
பதிலளிநீக்கு’மறக்க மனம் கூடுதில்லையே!’
மீள் பதிவில் என்னைக் கவர்ந்த சில பின்னூட்டங்கள்:
1)
இராஜராஜேஸ்வரிMarch 21, 2014 at 8:16 AM
**ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.**
என இருவரையுமே மறக்க மனம் கூடாமல் கதையாகி சுவாரஸ்யம் கூட்டுகிறது..பாராட்டுக்கள்..!
>>>>>
2)
பதிலளிநீக்குRamani SMarch 22, 2014 at 7:27 PM
"புரியாது புரியாது, வாழ்வின் ரகசியம் புரியாது " என்று ஒரு பாடல் ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் வரும். அந்தச் சூழலையும் உணர்வையும் கிளறச் செய்து போகும் அற்புதமான கதை. மீண்டும் படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
>>>>>
3)
பதிலளிநீக்குஎஸ் சம்பத்March 23, 2014 at 11:24 AM
மெல்லிய இழையோடும் காதல் உணர்வுகள், அவற்றைத் தாண்டி வேறுபட்டு நிற்கும் யதார்த்தம் - இரண்டையும் உரிய விகிதத்தில் கலந்து நெய்திருக்கிறார் கதாசிரியர். போட்டியில் கலந்து கொண்டுள்ளதால் விரிவான விமர்சனத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். உணர்வு, சிருங்காரம், மனிதம் கலந்த சிறப்பான கதை. பாராட்டுக்கள்.
>>>>>
4)
பதிலளிநீக்குகோமதி அரசுMarch 24, 2014 at 6:29 AM
கதை மிக நன்றாக இருக்கிறது. இளமை காதல், இளமையில் குடி இருந்த இடங்கள், இப்போது இருக்கும் நிலை, முன் காலத்தில் உள்ள சேலையின் பெயர், இளமையும், அழகும் உள்ள பெண்ணிடம் அப்போது ஏற்பட்ட ஈர்ப்பும், அந்த பெண் இப்போது உலகை மறந்த நிலையில் இருப்பதும் என்று கதையில் எத்தனை எத்தனை செய்திகள்! மறக்க முடியாத நிலைதான் கதை நாயகன் நிலை.
>>>>>
5)
பதிலளிநீக்குMail message from Mrs. Vijayalakshmi Krishnan on 26.03.2014
Respected Sir,
உங்கள் மறக்க மனம் கூடுதில்லையே... ஒரு பத்து தடவையாவது படித்திருப்பேன். கம்ப்யூட்டர் சரி இல்லாததால் எனக்கு தட்டச்சு விரைவாக வராததால் விமரிசனம் எழுத இயலவில்லை. பார்க்கலாம், என் மனதில் உள்ளதை யாராவது எழுதுகிறார்களா என்று.
இது உங்களுக்கு வெற்றி..... ஒரு கதையை பலமுறை படிக்க வைத்தது .... மனதில் எண்ண அலைகளைத் தருவித்தது ..... என நிஜமாகவே உங்களுக்குத்தான் வெற்றி.... பரிசு உங்களுக்குத் தான் கொடுக்க வேண்டும்.
-oOo-
அன்புள்ள விஜி, வாங்கோ, வணக்கம்.
தாங்கள் மனம் திறந்து என்னைப் பாராட்டி, இந்தக்கதையை பத்து தடவை திரும்பத்திரும்பப் படித்ததாகச் சொல்லியுள்ள இந்தப் பின்னூட்டமே எனக்குக்கிடைத்த, என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் ”ஆஸ்கார் விருது” போல எண்ணி மகிழ்கிறேன்.
தங்களின் வெளிப்படையான இந்தக்கருத்தினை விட மிகச்சிறந்த பொக்கிஷமோ, விருதுகளோ வேறு எதுவும் கிடையாதும்மா. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது விஜி. வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
பிரியமுள்ள கோபு.
>>>>>
6)
பதிலளிநீக்குMail message received today 31.03.2017 at 15.46 Hrs.
====================================================
அன்பின் கோபு ஸார்,
சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும்.
சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."
கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்
இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
பரம ரஸிகை
>>>>>
7)
பதிலளிநீக்குDurai AJune 8, 2017 at 3:11 PM
இந்தக் கதையை எப்படி படிக்கத் தவறினேன் தெரியவில்லையே?!
உங்களுக்கே உரித்தான நகைச்சுவை இழையூட மனதை வருடும் கதை. கொஞ்சம் மெலோடிராமா போல் தோன்றினாலும் யதார்த்தமும் மேலோங்கி இதயத்தைச் சற்றே கனமாக்கும் நடையும் எழுத்தும் கதையை மறக்க முடியாது செய்கின்றன. மிகவும் ரசித்துப் படிக்க வைத்ததுடன் நிற்காமல் என் வாழ்வில் இப்படி வந்து போனவர்கள் பற்றி நினைக்க வைத்துவிட்டது. அருமை சார்.
>>>>>
8)
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன்February 6, 2018 at 12:24 PM
பாதி படித்துக்கொண்டிருக்கேன்.
** "அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” **
அடக்கமுடியாத சிரிப்பு.
>>>>>
9)
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன்February 6, 2018 at 12:46 PM
"மறக்க மனம் கூடுதில்லையே" - நிஜத்துக்குப் பக்கத்தில் கடைசிப் பகுதி மட்டும் வரவில்லையே தவிர, முழுக் கதையும் ஒருவர் வாழ்வில் நடந்த சொந்தக் கதையோ என்று நினைக்கும்படி இயல்பான நடை, இயல்பான வர்ணிப்புகள். மிகவும் ரசித்துப் படித்த கதை.
நீங்கள் குறிப்பிடும் ஸ்டோர் எப்படி இருந்திருக்கும் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் என் 10 வயதில், இதைப் போன்ற (ஆனால் மிகப் பெரிய கிரௌண்ட், அதைச் சுற்றி தொடர் வீடுகள், ஆனால் ஒவ்வொன்றும் பெரியவை, ஹால், கிச்சன், உள் ரூம், பெரிய திறந்தவெளி அறை, அதற்குப்பக்கத்தில் குளிக்கும் அறை கொண்டவை, ஒவ்வொரு வீட்டுக்கும் பொதுவான சுவர் அமைப்பு. அப்படிப்பட்ட வளாகத்தில் வசித்திருக்கிறேன். நடுவில் பெரிய கிணறு. அப்புறம் வளாகத்தில் ஒரு புறத்தில் பொது கழிவறை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது மிக சிறிய சைஸ் என்று புரிந்துகொள்ள முடிகிறது). அங்கு மின்னல் கீற்றாக பெண்களைப் பார்ப்பதைத் தவிர வேறு பேசுவதற்கு சந்தர்ப்பமே இருக்காதே.
இரவு வெகு நேரம் நண்பர்களோடு பேசிக்கொண்டு அகாலத்தில் வீடு திரும்பினான் என்று சொல்லியிருக்கிறீர்கள் (அது உங்கள் ஆசையா, அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்களுக்கு வாய்த்துள்ளதா? எனக்கு அந்தமாதிரி வாய்ப்பே கிடையாது)
தன்னை விரும்பிய பெண் - மனதில் சஞ்சலத்தை உருவாக்கிய கேரக்டர். அவளை நினைத்தால் மனதில் 'பாவம்' என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.
'தான் விரும்பிய பெண்'- கிளர்ச்சி, அவர்கள் வீட்டில் ரவா லட்டு வாங்கி சாப்பிட்டதையே காலா காலத்துக்கும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பது, இடையில் சந்தர்ப்பம் தராத வெடிச்சத்தத்தின்மேல் வெறுப்பு என்று மிக அருமையாக வர்ணனை செய்திருக்கிறீர்கள். பொதுவாக இளமையில் நாம் விரும்பிய பெண் என்றால், நாம், கொஞ்சம் கூடுதலாகவே அவளின் அழகை மனக்கண்ணில் கொண்டுவருவோம், ஸ்டோர் செய்துவைத்துக்கொள்வோம். அந்த அனுபவங்கள் ரசனையுடன் எழுதப்பட்டுள்ளன.
கடைசியில், அப்பா பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது, 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாட்டை நினைவுபடுத்தியது. பிற்காலத்தில் அதனை எண்ணி மகிழ்வதும் (அதாவது தந்தை தனக்கு சரியான துணையைத்தான் தேடித்தந்துள்ளார் என்பதை), 'எது நடந்தாலும் நன்மைக்கே' என்பதையும் மனதில் தோன்றச்செய்தது.
'தன்னை விரும்பிய பெண்' மீண்டும் சந்திக்க நேர்ந்ததும், அவள் நடந்துகொண்ட இயல்பான விதமும் மிகவும் ரசிக்கச் செய்தது. அந்தப் பகுதிதான் இந்தக் கதையின் ஹைலைட் என்று எனக்குப் படுகிறது. அவள் மீது பரிதாபமும், நன்றாக இருக்கட்டும் என்ற உணர்வும் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே' என்றும் தோன்றியது. எப்போதும் எளிதாகக் கிடைக்கும் பொருளின் அருமை தெரிவதில்லை.
கடைசிப் பகுதியில், 'தான் விரும்பிய பெண்'ணின் நிலையும், அவள் மகளையே தன் மகனுக்குப் பெண் பார்ப்பதும், நன்றாக இருந்தாலும், கொஞ்சம் 'அதீத'மாகவும் என் மனசுக்குத் தோன்றியது. அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கே (அபூர்வமா). அப்படி அந்தப் பெண்ணை வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவந்தாலும், எப்போதும் மனசு அவள் அம்மாவை நினைவுக்குக் கொண்டுவருமே (அதை வெளியிலும் சொல்லமுடியாதே).
கதையை மிகவும் ரசித்துப் படித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க.
>>>>>
10)
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன்February 6, 2018 at 12:48 PM
இந்தக் கதையைப் படிக்கும்போது, என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் மனதில் கொண்டுவந்துவிட்டது. எதுவுமே 'அவன்' போட்டுவைத்த திட்டப்படிதான் நடக்கிறது.
என்னை என் இளமைக்காலம், திருமண காலம் வரையிலான பகுதியை மீண்டும் நினைக்குமாறு வைத்துவிட்டீர்கள். அதுவே ஒரு கதாசிரியராக உங்களது வெற்றி. வாழ்த்துகள்.
>>>>>
11)
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன்February 6, 2018 at 6:08 PM
உங்கள் முழுமையான பின்னூட்ட மறுமொழிகள் மிகவும் திருப்தி தருவதாக இருந்தது. என்னால் இப்போது கதையை relate செய்ய முடிகிறது.
=====================
இதே கதையை 2011-ம் ஆண்டு நான்கு பகுதிகளாகப் பிரித்து, நான் முதன்முதலாக வெளியிட்டிருந்த போதும், ஏராளமானவர்கள், தாராளமாக பின்னூட்டம் கொடுத்திருந்தனர்.
பதிலளிநீக்குஅவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானவற்றையும் இங்கு வெளியிடலாம் என்று நினைக்கிறேன். அதனால் இது மேலும் தொடரும் என ஓர் எச்சரிக்கையாகச் சொல்லி வைக்கிறேன். :)
அன்புடன் கோபு
http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html
பதிலளிநீக்குhttp://gopu1949.blogspot.com/2011/06/2-of-4_20.html
http://gopu1949.blogspot.com/2011/06/3-of-4_22.html
http://gopu1949.blogspot.com/2011/06/4-of-4_26.html
’மறக்க மனம் கூடுதில்லையே’ கதையை 2011-இல் முதன் முறையாக, நான்கு சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது கிடைத்திருந்த ஏராளமான பின்னூட்டங்களில், என்னை மிகவும் கவர்ந்தவைகள் மட்டும் கீழே தொடர்கின்றன:
1)
பதிலளிநீக்குரிஷபன்June 19, 2011 at 3:36 PM
**இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது.**
நகைச்சுவை!
**ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.**
சஸ்பென்ஸ்!
**நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன்.**
அதிர்ச்சி!
பலதரப்பட்ட உணர்வுகளோடு விளையாடும் உங்கள் எழுத்துக் கப்பலில் நானும் ஏறியாச்சு..
>>>>>
2)
பதிலளிநீக்குசேட்டைக்காரன்June 27, 2011 at 7:13 AM
வாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)
**டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம்.**
பொற்காலம் என்று சொல்லுங்க! கிட்டத்தட்ட இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு தலைமுறையைப் பற்றிய கதை, அதுவும் காதல் கதை என்பது ஆவலைத் தூண்டுகிறது.
**நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு.**
அக்காலத்து ஸ்டோர் வாசம் குறித்து சற்றும் ஆயாசமில்லாமல், விபரமாக வர்ணித்து கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள்!
**ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.**
இதை விட நறுக்கென்று சொல்ல முடியுமா தெரியவில்லை. அனுபவஸ்தர்களின் எழுத்து என்பதை விடவும் அனுபவித்து எழுதியிருப்பது தெரிகிறது.
**மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும்.**
மற்றோரு சான்று! :-)
பிரமாதமாக துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்
அடுத்த பகுதியை பிறகு வாசித்து கருத்து எழுதுகிறேன்.
>>>>>
3)
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோJuly 23, 2012 at 5:47 PM
மின்விளக்கே அதிகம் இல்லாத, அந்தக்கால திருச்சி வடக்கு ஆண்டார் தெரு.அங்கிருந்த பெரிய அரசமரம், எதிரில் உள்ள ராமா கபே, அருகில் உள்ள மதுரா லாட்ஜ் தொடங்கி, கீழ ஆண்டார் தெரு முடிய, மலைக்கோட்டை பகுதியில் நிறைய குடியிருப்புக்கள். எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்தவை. அங்கிருந்த ஒண்டு குடித்தனங்களை நினைவில் வைத்து இந்தக் கதையை VGK எழுதியுள்ளார்.
**பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.**
நீங்கள் கதையில் சொல்லும் அந்த நாட்களை இப்போதும் என்னால் மறக்க முடியாது.
**நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.**
**அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு.**
அப்போதைய அங்கிருந்த நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள், (அப்போதைய காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு சுலபமாகப் பேசிவிட முடியாது) இவற்றை இயல்பாகச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.
**இன்று அந்தக்கலகலப்பான, நாட்டு ஓடுகள் வேய்ந்த, ஏழைகளின் குடியிருப்பையே அங்கு காணோம். அந்த மிகப்பெரிய கிணற்றையும் காணோம். அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறிவிட்டது. யார் யாரோ புதுமுகங்கள் பயத்துடன் கதவைச் சாத்திக்கொண்டு, இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர்.**
உண்மைதான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. செயற்கையான வாழ்க்கை, முகம் கொடுத்து பேசாத மனிதர்கள். நல்லவேளை மனிதர்களின் மனக்கோட்டை மாறினாலும், திருச்சி மலைக்கோட்டை இன்னும் மாறவில்லை
>>>>>
4)
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரிJune 21, 2011 at 9:36 AM
**கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.**
என்ன ரசனை. என்ன கவனிப்பு. அருமை. அருமை.
>>>>>
5)
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரிJune 21, 2011 at 9:38 AM
**பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும் புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது.**
கதையில் புகுந்து பார்த்த பரவசம் எங்களுக்கு. பாராட்டுக்கள்.
>>>>>
6)
பதிலளிநீக்குசாகம்பரிJune 21, 2011 at 11:29 AM
மிகவும் அருமையான நடை. கதையை விட்டு கொஞ்சமும் வெளிவர முடியாதபடி செய்துவிட்டது. நன்றி ஐயா
>>>>>
7)
பதிலளிநீக்குசுந்தர்ஜிJune 21, 2011 at 12:32 PM
என்னத்தப் புதுசா சொல்லப் போறேன் கோபு சார்?
உங்க விரல்ல சரஸ்வதி இஸ் ப்ளேயிங்.
பசி நேரத்துல ரவாலாடு-பலாச்சுளை-மிக்ஸர்-மாம்பழச் சொம்பு இதெல்லாம் சீக்கிரமா வீட்டுக்குக் கிளப்பி விட்டது.
அடுத்த பாகத்துல என்னென்ன தாக்குதலோ?
>>>>>
8)
பதிலளிநீக்குமனோ சாமிநாதன்June 21, 2011 at 4:12 PM
**"சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது."**
அட்டகாசமான வர்ணனை! பெண்கள்கூட இப்படி கண்டுபிடிப்பார்களா என்பது சந்தேகமே!
இளமையின் வசந்த கால நினைவலைகள் என்றுமே மனதுக்கு ரம்யமானவைதான்!!
>>>>>
9)
பதிலளிநீக்குangelinJune 21, 2011 at 6:11 PM
அருமையான வர்ணனை அய்யா !! படிக்கும்போது அப்படியே அந்த தீபாவளி நேரத்தில் /பட்டாசு / ரவா லாடு எல்லாம் அப்படியே live telecast பார்த்த மாதிரி இருக்கு, அந்த twinkle நைலக்ஸ் எங்கம்மா கூட ஆகாய வர்ணத்தில் வச்சிருந்தாங்க. எப்ப அடுத்த பார்ட் வரும்னு ஆவலா இருக்கு .
>>>>>
10)
பதிலளிநீக்குரிஷபன்June 21, 2011 at 8:18 PM
பேச்சே இல்லாமல் அப்படியே விவரங்களாய்க் கொண்டு போவது எத்தனை சிரமம்.. அதுவும் சுவை குன்றாமல் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல்.. கையைக் கொடுங்க.. கோபால்ஜி..
>>>>>
11) சேட்டைக்காரன்July 3, 2011 at 8:17 AM
பதிலளிநீக்குஅந்தப் பெண்ணைப் பற்றிய வர்ணனைகளை வாசிக்கும்போது, ஒரு வேளை அவளது புகைப்படத்தை எதிரில் வைத்துக்கொண்டு, பார்த்துப் பார்த்து எழுதியிருப்பீர்களோ என்று கூட தோன்றுகிறது. அவ்வளவு சிரத்தை தெரிகிறது.
பொதுவாக, வார்த்தைப் பரிமாற்றங்கள் கதையெழுதுபவர்களுக்குக் கைகொடுக்கும். அதுவுமின்றி, சுவாரசியமாகக் கொண்டுபோயிருப்பதிலிருந்து நீங்கள் எழுதுவதில் படா கில்லாடி என்று புரிகிறது. :-)
**அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது.**
எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது ஒரு அழகான பெண்ணின் அருகாமை? சூப்பர்! அடுத்த பகுதியை வாசிக்க அப்பாலிக்கா வர்றேன்.
>>>>>
12)
பதிலளிநீக்குரியாஸ் அஹமதுJune 23, 2011 at 10:37 AM
truth is stranger than fiction என்று சொல்வார்கள் ...அந்த மாதிரி நிஜத்தை வாசகர்களின் எண்ணங்களுக்கு கடத்தி மிக பெரிய சாதனை செய்து விட்டீர்கள் ஐயா, கண்ணியமான வாழ்க்கை கண்ணியமான எழுத்து ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
>>>>>
13)
பதிலளிநீக்குரியாஸ் அஹமதுJune 23, 2011 at 10:43 AM
**மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள்.**
for me the most touching part in this post.. அந்த பெண்ணின் கணவனும் பாக்கியசாலியே இந்த அன்பில் பத்து சதவிதம் கணவனிடம் பகிர்ந்தாலும் போதுமே ஐயா... அடுத்த முறை பார்த்தால் சொல்லுங்கள் ”நீ துரதிஷ்டசாலி இல்லை” என்று
>>>>>
14)
பதிலளிநீக்குசுந்தர்ஜிJune 23, 2011 at 4:08 PM
இதுவரை நீங்கள் எழுதிப் படித்தவற்றில் இந்த நாயகிக்குத் தனி இடம் என் மனதில்.
தன் மனதைச் சொல்வதில் வெளிப்படையான அணுகுமுறை- உரிமை கோரத் தயக்கம்- ஆனாலும் விடவும் மனமில்லாமல் அன்றைய நாளுக்கான சந்தோஷத்தை கேட்காமலேயே எடுத்துக்கொண்டது- இறுதியில் கொடுத்த உதவியை ஏற்க மறுத்த நாசூக்கு.
அந்த நாயகிக்கும் அவளைச் செதுக்கிய உங்களுக்கும் சபாஷ்.
>>>>>
15)
பதிலளிநீக்குசாகம்பரிJune 23, 2011 at 9:35 PM
இந்த பகுதி மிகவும் அருமையாக இருந்தது. என்னுடைய மனோதத்துவ சிந்தனைகள் நிறைய ஆச்சரியங்களை கிளப்பிவிட்டன. சில விசயங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடிகிறது. நன்றி சார்.
>>>>>
16)
பதிலளிநீக்குரிஷபன்June 24, 2011 at 6:27 PM
**ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.**
ஒரு கதையை உண்மை என்றே நம்ப வைக்கிற அழகான எழுத்து. சுந்தர்ஜி சொன்னது போல செதுக்கித்தான் வைத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இயல்பாகவே மனசு சொக்கிப் போகிறது.
>>>>>
17)
பதிலளிநீக்குJAYANTHI RAMANIJanuary 9, 2013 at 3:55 PM
**நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.**
அவள் உண்மையாகவே காதலித்திருக்கிறாள் என்பது தெரிகிறது.
வரிக்கு வரி அருமை. ஒரு நாடகம் நடப்பது போலும், அந்த நாடகத்தைக் கண்ணெதிரே ரசித்துப் பார்ப்பது போலும் தோன்றுகிறது எனக்கு.
>>>>>
18)
பதிலளிநீக்குசாகம்பரிJune 26, 2011 at 5:44 PM
இது போன்ற ஆச்சரியங்களை வாழ்க்கை என்னும் காலயந்திரம் ரகசியமாய் பொதிந்து வைத்துள்ளது. கதை போல அல்லாமல் உண்மை சம்பவங்களின் தொகுப்பு போல உள்ளது. நன்றி VGK சார்.
>>>>>
19)
பதிலளிநீக்குவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)June 26, 2011 at 7:33 PM
வாழ்க்கை தனக்குள் நிறைய புதிர்களை ஒளித்து வைத்திருந்து அவ்வப்போது விடுவிக்கும். அவற்றை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும்போது குழப்பங்கள் தீர்ந்து விடும். நல்ல கதை. தேவியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
>>>>>
20)
பதிலளிநீக்குசுந்தர்ஜிJune 27, 2011 at 4:45 PM
எல்லா விதமாகவும் உங்களால் எழுதமுடியும் என்பதை எல்லா நேரங்களிலும் நிரூபித்துவிடுகிறீர்கள்.
ஆனால் உங்களின் சௌஜன்யமான மனோநிலையில் உலகம் இல்லாதிருப்பதால் நீங்கள் அளிக்கும் முடிவு எல்லோருக்கும் ஒரு ஒத்தடம் போல அமைந்துவிடுகிறது.
>>>>>
21)
பதிலளிநீக்குVENKAT June 28, 2011 at 7:29 PM
ஈரோட்டுக்காரியின் சந்திப்பு வெகு சுவாரசியம்.இன்னும் அவள் கதாநாயகன் மீது அன்பாய் இருப்பது, நாயகன் தூரத்தை அனுசரிப்பதும் வெகு ஜோர். முதலிலும் முடிவிலும் ஒரே மாதிரி.
மெட்ராஸ்காரி மீது நாயகனின் அன்பை வெளிப்படுத்துதலையும் திறமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். வேறு எப்படி கதை போனலும் சிக்கலே.
கதையை ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ரசித்துப் படியுங்கள் என்று நீங்கள் உரிமையாக கடிந்து கொள்வீர்களோ??
ரசித்து ஆராய்கிறேன் சார்.
ருசிகரமான பதிவு. நன்றி.
>>>>>
22)
பதிலளிநீக்குஇளமதி September 5, 2012 at 4:30 AM
அருமையான கதை அண்ணா! எழுதியது மட்டுமல்ல அந்த கதாபாத்திரமாக நீங்களே அதில் இருந்தது போல் ஓர் உணர்வு. மனதை நெருடிய கதை. முடிவில் அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்ததை மறக்க மனம் கூடுதில்லையே :( சிறப்பான நல்ல படைப்பு. சோகத்தையும் நாம் ரசிக்கும்போது நன்றாக இருக்கு என்பது கொஞ்சம் அபத்தம்தான். மிக்க நன்றி!
>>>>>>
23)
பதிலளிநீக்குமோகன்ஜி June 26, 2011 at 4:26 PM
வை.கோ சார்! மிக அருமையாக இந்தக் கதையைக் கொண்டு போயிருக்கிறீர்கள். முடிவைக் கோர்த்த வரிகள் ஜீவனுடன் இருக்கின்றன. மெருகேறிக் கொண்டே வரும் உங்கள் படைப்புகள் படிக்க இதம். வாழ்த்துக்கள்!
>>>>>
24)
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரிJune 26, 2011 at 4:47 PM
உயிரோட்டமுள்ள கதையமைப்பும் காட்சி அமைப்பும் கதைக்கு மெருகூட்டுகின்றன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
>>>>>
25)
பதிலளிநீக்குJAYANTHI RAMANIJanuary 9, 2013 at 3:52 PM
என்னமோ தனக்கு நடந்தவற்றை ஒருவர் அனுபவித்து அழகாக, எழுதியது போலவே இருக்கிறது.
**சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது.**
நாங்கள்ளாம் பிச்சை வாங்கணும்.
>>>>>
26)
பதிலளிநீக்குபூந்தளிர் May 4, 2015 at 10:32 AM
என்ன அற்புதமான ரசனையான எழுத்து. படிக்கறவங்களை கவனம் சிதற விடாம கட்டிப் போடுறீங்க..
>>>>>
27)
பதிலளிநீக்குசரணாகதி.November 17, 2015 at 12:46 PM
அந்தக்கால கட்டுப்பாடுகளே நம்மை செம்மைப்படுத்திஉள்ளன. உண்மைதான். அதுவுமில்லாமல் இப்ப உள்ளது போல பொழுது போக்கு அம்சங்களோ ஃ பலவித ஃபோன் வசதிகளோ இல்லாத காலம். மனதில் ஆசைகள் இருந்தாலும் வெளியே சொல்ல இயலாத தயக்கம். வெளியே தான் சொல்லமுடியாது மனது நினைக்காமலா இருக்கும். அந்த மன உணர்வுகளை எழுத்தில் கொண்டுவருவது உங்களால் மட்டுமே முடியும். இப்ப பாருங்களேன். எதுமே எழுத தெரியாத என்னைப்போன்ற பலரையும் இப்படில்லாம் பின்னூட்டம் போடுமளவிற்கு எழுத வச்சுட்டீங்களே.
>>>>>
28)
பதிலளிநீக்குRAMVI June 23, 2011 at 10:19 AM
**என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.**
படித்து முடித்த உடன் மனதில் ஒரு கனமான உணர்வு தோன்றுகிறது. தலைப்பு சரியாக இருக்கிறது மறக்க முடியாத காவியம்.
>>>>>
29)
பதிலளிநீக்குஸ்ரீராம்.June 23, 2011 at 1:37 PM
நினைவுகள் அழிவதில்லை. முதல் காதலை யாரும் மறப்பதுமில்லை. இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். மூன்றாம் நிலையில் சரியெனப்படும் இது தன் நிலையில் எந்த மாதிரி உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் என்று அவ்வப்போது தோன்றும். ஆனாலும் அனுபவங்கள் பலவிதம். தோழைமை உணர்வு எப்போது காதலாய் மாறுகிறது, அது, அந்தக் காதல் உணர்வு மறுபடி தோழைமை மட்டும் என்ற கோட்டுக்குப் போக முடியுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. நல்லதொரு நினைவோடை. முடிவு என்ன ஆகிறது என்று பார்ப்போம். இந்த இருவரில் ஒருவரின் மகளைப் பார்த்து தானே நினைவுகள் பின்னோக்கிப் பயணித்திருக்கின்றன...!
>>>>>
30)
பதிலளிநீக்குஅப்பாவி தங்கமணிJune 23, 2011 at 8:40 PM
சம்பவங்களை ரெம்ப அழகா narrate பண்றீங்க சார்... அடுத்த எபிசோட் "ரவா லாடு" மேடம் பத்தியா...:))
>>>>>
31)
பதிலளிநீக்குதேனம்மை லெக்ஷ்மணன் June 23, 2011 at 8:49 PM
**ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.**
நிஜமாகவே என் கண்களும் கலங்கி விட்டன சார். அந்தப் பணம் அவளுக்கு அத்யாவசியத் தேவை. ஆனால் கம்பீரமாக மறுத்து சென்றாளே அதுதான் சுயகௌரவம்.. ரொம்ப பிடிச்சுருக்கு அவளை..:)
>>>>>
32)
பதிலளிநீக்குraji June 23, 2011 at 10:13 PM
முதல் இரண்டு பகுதிகளையும் சேர்த்து இந்த பகுதியுடனே படித்து விட்டேன். மூன்றாவது பகுதியில் மனம் சற்று கனக்கிறது. நான்காவதில் இன்னொரு நாயகி வருகை உண்டா?
>>>>>
33)
பதிலளிநீக்குஎன்றென்றும் உங்கள் எல்லென்...June 26, 2011 at 7:58 PM
எளிமையான நடையில் வலுவான ஒரு அற்புத கதை. ஒவ்வொருவர்க்கும் இது மாதிரியான ஒரு nostalgic நிகழ்வு இருக்கும். என் வரையில், ஒரு கிழிந்த/கிழிக்கப்பட்ட 2 ரூபாய் நோட்டு அவள் நினவைத் தாங்கியபடி இருபத்திரண்டு ஆண்டுகளாய் என்னோடு இருக்கிறது....பிரிய முடியாமல்.
>>>>>
34)
பதிலளிநீக்குRanjani NarayananDecember 15, 2012 at 2:38 PM
போன பாகத்தில் உங்களின் கற்பனை நாயகி. இந்தப் பகுதியில் உங்களை கற்பனைக் நாயகனாக்கி மகிழ்ந்தவளின் மனதை நெகிழ வைக்கும் கடந்த காலக் கதை. இப்போது கடற்கரையில் நீங்கள் பார்க்கும் பெண்மணி யார்? எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று ஆவலுடன் அடுத்த பாகத்தை படிக்க விரைகிறேன்.
>>>>>
35)
பதிலளிநீக்குபூந்தளிர் May 4, 2015 at 10:40 AM
நாம விரும்புகிறவர்களைவிட நம்மை விரும்பு கிறவர் வாழ்க்கைத்துணையாக அமைந்தால வாழ்க்கை சுவாரஸ்யமாக அமையுமாமே.. அப்படியா?
>>>>>
36)
பதிலளிநீக்குRamani June 26, 2011 at 4:23 PM
வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக இப்படித்தான் நாம் நம் சம்பத்தப்பட்டவர்களை சந்திக்க நேருகிறது. சிலர் ஜெயித்த நிலையிலும் சிலர் தோற்ற நிலையிலும் அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அது தெரிந்து என்ன ஆகப் போகிறது. இந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி காரணங்களை விளக்காமல் போனது அதிகம் பிடித்திருந்தது. கதையின் இறுதிப் பகுதி மனங்கனக்கச் செய்து போனாலும் நேர்மறையான சிந்தனையுடன் முடித்திருந்தது அருமை.
>>>>>
37)
பதிலளிநீக்குmiddleclassmadhavi June 21, 2011 at 8:00 PM
ரொம்ப சுவாரசியமாகப் போகிறது கதை! முன்னாளில் விரும்பிய பெண்ணை இப்போது பார்த்தபின் அவளை மணம் செய்து கொள்ளாதது எவ்வளவு நல்லது என்று தோன்றும்படி நடந்து கொண்டாளா?!!
>>>>>
38)
பதிலளிநீக்குmiddleclassmadhavi June 26, 2011 at 5:34 PM
பெரிய ஃபான்டில் பெரிய மனதைக் காண்பித்து விட்டீர்கள். முடிவு ஒரு திரைப்படத்தை நினைவூட்டினாலும், ஒரு பொயட்டிக் ஜஸ்டிஸ் இருக்கு! வாழ்த்துக்கள்!
=====o=====
தொகுப்பு அருமை
பதிலளிநீக்குMathu S January 14, 2019 at 8:51 AM
நீக்கு//தொகுப்பு அருமை//
வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி + நன்றி.
’Experience with Maha Periyava’ என்ற தலைப்பில் YouTube இல் அடிக்கடி ’வீடியோ / ஆடியோ’ பதிவுகள் வெளியிட்டு வரும் Mr. Bharath Subramanian அவர்கள் என் இல்லத்திற்கு சமீபத்தில் (24.03.2019 ஞாயிறு) அன்புடன் வருகை தந்து மகிழ்வித்திருந்தார்கள்.
பதிலளிநீக்குஅவர்களின் புகைப்படம் இந்தப் பதிவின் இறுதி என்னால் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு