என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜனவரி, 2018

கை மேல், கையோடு ஏறியதோர் .... பரிசு

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். 

2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் PUSTAKA DIGITAL MEDIA PRIVATE LIMITED நிறுவனத்தினர் பல்வேறு எழுத்தாளர்களையும்,  அவர்களின் எழுத்துக்களையும் மின்னூல் வடிவில் கொண்டுவந்து சிறப்பித்துக்கொண்டு இருந்தனர். 

நானும் என் சார்பில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்னூல்களை வெளியிட ஆர்வம் கொண்டு, எனது ஆக்கங்களைத் தொடர்ந்து, அசராமல் அனுப்பிக்கொண்டே இருந்தேன். 

மார்ச் 2017 ஒரே மாதத்தில், மின்னல் வேகத்தில் என்னுடைய  முதல் பத்து மின்னூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டிருந்தன. 

அதன்பிறகு நான் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்த என் சரக்குகளைக்கண்டு, அவர்கள் ஒருவேளை அசந்து போனார்களோ என்னவோ ..... கடந்த 10 மாதங்களாக அவர்களிடமிருந்து எனக்கு எந்தவொரு தகவல்களும் இல்லாமல் இருந்து வந்தது.

சரி ..... நம் பதிவுலக நெருங்கிய நட்புகளில் பலர், என்னை நாளடைவில் மறந்து விட்டது போலவே, இவர்களும் என்னை மறந்துவிட்டார்களோ என்னவோ என நினைத்து, என்னை நானே சமாதானம் செய்துகொண்டு, மின்னூல் வெளியீடுகள் பற்றிய, என் இன்பக் கனவுகளை நானும் மறந்தே போய் விட்டேன். :)

ஆனாலும் இன்று [13.01.2018 போகிப் பண்டிகையன்று] ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது! புஸ்தகா மின்னூல் நிறுவனத்திலிருந்து, அடியேனுக்கு ஓர் பதிவுத் தபால், சற்றே முண்டும் முடிச்சுமாக வந்திருந்தது. கையொப்பமிட்டு, வாங்கிப் பிரித்துப் பார்த்தால், 2018 புத்தாண்டுக்கு ஓர் கைகடிகாரத்தை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளனர்.

ஆஹா! இதுவும் அந்தக் ’காமதேனு’வின் http://gopu1949.blogspot.in/2018/01/blog-post.html  அருள் என நினைத்து, நான் வரவில் வைத்துக்கொண்டேன். :)






  
புத்தாண்டு பரிசு அனுப்பி வைத்து மகிழ்வித்துள்ள புஸ்தகா மின்னூல் நிறுவனத்திற்கும், இணைப்புக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ள, அருமை நண்பர்  திரு. R. பத்மனாபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


எனது மின்னூல்கள் சம்பந்தமாக நான் ஏற்கனவே
வெளியிட்டுள்ள என் பதிவு .... தங்களின் நினைவூட்டலுக்காக !      


மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள் !

மார்ச்-2017 இல் மட்டும், 
வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மின்னூல்கள்
மீண்டும் உங்கள் பார்வைக்காக

 

 

 

 

 
For more Details:









என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

திங்கள், 8 ஜனவரி, 2018

’ஹனிமூன்’ வந்துள்ள பதிவர்!

அன்புடையீர், 

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

திருச்சி ஹோட்டல் 
’அஜந்தா’வில் அகப்பட்ட 
‘ஹனிமூன்’ தம்பதியினர் :)




^பெருமாள் சந்நதியில் 
எங்களுக்குள் ஓர் கட்டிப்பிடி வைத்தியம் ! :)^


^அசந்துபோய் சற்றே அமர்ந்த நிலையில்^


^அங்குள்ள கல்வெட்டுச் செய்தி^
இதே நாளில் (05.12.1966) சம வயதினரான
நாங்கள் இருவரும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ ஆக
துள்ளித் திரிந்துகொண்டு இருந்திருப்போம். 



^அவர் அன்புடன் எனக்கு அளித்த சரக்குகள்!^
மேற்படி ’சைட் டிஷ்’ விபரங்கள் கீழே மிகத்தெளிவாக :)


  
^அடியேன் அவருக்கு அளித்த முக்கனிகள்^


அடியேன் அவருக்கு அளித்த 
‘எங்கெங்கும்.. எப்போதும்.. என்னோடு..!’
என்ற நூல் அன்பளிப்பு.

 


^சிற்றுண்டி சாலையில் 
சூடான, சுவையான தூள் பக்கோடா + 
ஸ்ட்ராங்க் ’காஃபி’க்காகக் காத்திருந்தபோது^

 

^ நான் ஆவலுடன் எதிர்பார்த்த அவை, ஒருவழியாக 
வந்து சேர்ந்து, எனக்கு ஓர் பேரெழுச்சி ஏற்பட்ட போது^

 

முத்தான மூவரில் 
முதலில் ஒருவர் மட்டும் சற்றே
சதைப் பத்தானவராகத் தெரிகிறாரோ? 


^அவர்களுக்குள் சரக்குகள் பரிமாறி 
’சியர்ஸ்’ சொல்லிக்கொண்டபோது^ 


மேற்படி இனிய பதிவர்கள் சந்திப்பு 

நிகழ்ந்த நாள் மற்றும் நேரம்: 
07.01.2018 ஞாயிறு
பிற்பகல் 5.30 முதல் 7 மணி வரை

நிகழ்ந்த இடம்:
’ஹோட்டல் அஜந்தா’
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே.

ஹனிமூன் வந்துள்ள இளம் பதிவர்:
திரு. ’இராய செல்லப்பா யக்ஞசாமி’ அவர்கள்

அவரின் வலைத்தளங்கள்:


இவர், இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள 
42-வது பதிவராகும்.

என்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய 
முழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய
இதோ சில இணைப்புகள்:

சந்தித்த வேளையில் .....


பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html

பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:


^பகுதி-3 க்கான இணைப்பு:^

பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:
பகுதி-6 க்கான இணைப்பு:
பகுதி-7 க்கான இணைப்பு:

புதுக்கோட்டை via மலைக்கோட்டை

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... !

முனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்

2017 >>>>> 2018 வாழ்த்துகள்

40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6


நேற்றைய சந்திப்பில் என்னுடன் கலந்துகொண்டு மகிழ்வித்த எனது அருமை நண்பர் + பிரபல பதிவர் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

நேற்றைய எங்களின் சந்திப்பு பற்றிய, மேலும் சூடான சுவையான விஷயங்களை, தகுந்த படங்களுடன், தனக்கே உரித்தான தனிப்பாணியில், நம் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் தனது வலைத்தளத்தின், விரைவில் வெளியிடுவார் என நம்புகிறேன்.




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


வியாழன், 4 ஜனவரி, 2018

’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.  

சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்கிழமையுடன் சேர்ந்த பிரதோஷம் என்றதொரு சிறப்பான நாளும் கூட. இதனை ’சனிப்பிரதோஷம்’ என்று சொல்லி பல்வேறு கோயில்களில், மிகச்சிறப்பாகக் கொண்டாடியும் வருகிறார்கள். இவ்வாறு பிரதோஷம் என்பது சனிக்கிழமைகளில் அவ்வப்போது வருவது சகஜம்  மட்டும்தானே ..... இதில் என்ன ஆச்சர்யம் என உங்களில் சிலர் கேட்கக் கூடும்.

என்னைப்பொறுத்தவரை இதே 30.12.2017 சனிப்பிரதோஷத்தன்று புதையல் போல, கிடைப்பதற்கு அரிய கீழ்க்கண்ட கலர்ஃபுல் காமதேனுவானது, எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவரால் அனுப்பப்பட்டு, என் கைகளுக்குக் கிடைத்த நன் நாளாகும். என் பார்வையில் ‘காமதேனு’வாகவே தெரியும் ஒருத்தரால் இந்த காமதேனு எனக்குக் கிடைத்தது மேலும் சிறப்பானதாகும்.

கற்பக விருக்ஷம், காமதேனு, அக்ஷயபாத்திரம் போன்றவை, அள்ள அள்ளக் குறையாமல், நாம் மனதில் நினைக்கும் எதையும், அடுத்த நொடியில் தந்தருளக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தவை எனச் சொல்லுவார்கள்.    

எனக்குக் காமதேனுவையும் பிடிக்கும். நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் அவர்களையும் மிகவும் பிடிக்கும். இதுபோல எனக்கு, என் மனதுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைக் குறிப்பறிந்து, இதுபோன்றதொரு கிடைப்பதற்கு அரிய, மிகப்பெரிய பொக்கிஷமான ‘காமதேனு-பெரியவா’ படத்தினை, எங்கோ கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்து, வாங்கி எனக்கு அனுப்பி வைத்துள்ள இவர்களையும் நான் ஒரு ‘காமதேனு’வாக நினைப்பதில் வியப்பில்லைதானே!

இந்த வண்ணப் படத்தின் 
நீளம்  = 45 Cms. [ஒன்றரை அடி]  
அகலம் = 30 Cms. [ஒரு அடி] 



இவ்வளவு பெரிய, கிடைப்பதற்கு அரிதான ஓர் அழகிய படத்தினை, மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கி, அதனை கசங்காமல், மடங்காமல், சர்வ ஜாக்கிரதையாக, இதை விட மிகப்பெரிய, 47 Cm. X 36 Cm. CLOTH LINED COVER இல் வைத்து, அதன் மேல் மிகமிக அழகான, மணிமணியான தன் கையெழுத்துக்களால் என்னுடைய To Address + அவர்களுடைய From Address, அலைபேசி எண்கள்  ஆகியவற்றை மிகத்தெளிவாக எழுதி, அந்தக் கவரில் இங்கும் அங்குமாக பல்வேறு PACKING GUM-TAPES ஒட்டி Desk To Desk Courier [DTDC] Service Registration No. H05760848 இன் மூலம், ஏராளமாக பணம் செலவழித்து, அவர்கள் தற்சமயம் வாழ்ந்துவரும் ஹைதராபாத்திலிருந்து ..... திருச்சியில் உள்ள எனக்கு அனுப்பி வைத்து என்னை பிரமிக்கச் செய்து மகிழ்வித்துள்ள ’காமதேனு’ அவர்கள் யார் தெரியுமா?

  திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள்



 


புத்தாண்டுப் பரிசு போல மிக அழகான ’காமதேனு-பெரியவா’ படத்தினை எனக்கு அனுப்பி வைத்த ‘காமதேனு-ஜெயஸ்ரீ’ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




ஜெயஸ்ரீ அவர்கள் பற்றி நான் என்னுடைய 
கீழ்க்கண்ட பதிவுகளில் 
ஏற்கனவே எழுதி சிறப்பித்துள்ளது
தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_29.html
புதிய மின்னூல் ஆசிரியர் அறிமுகம்

http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_30.html
’தணியாத தாகங்கள்’ - மின்னூல் மதிப்புரை

http://gopu1949.blogspot.in/2017/05/blog-post.html
’தொலைத்ததும்..கிடைத்ததும்’ - மின்னூல் மதிப்புரை

http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_7.html
’பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் மதிப்புரை

http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_10.html
‘காய்க்காத மரமும்....’ - மின்னூல் மதிப்புரை

http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_16.html
‘டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் மதிப்புரை

http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_21.html
’நாலடி கோபுரங்கள்’ - மின்னூல் மதிப்புரை

http://gopu1949.blogspot.in/2015/07/35.html
’நினைவில் நிற்போர்’ - 35-ஆம் நிறைவுத் திருநாள்

அடியேனும் இந்த ஜெயஸ்ரீ அவர்களும் எங்களுக்குள் நேரில் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் ஏதும் இதுவரை ஏற்படாமல் இருப்பினும், ஒருவருக்கொருவர் மிக நல்ல நட்புடன் கூடிய நலம் விரும்பிகளாகவும், ஆத்மார்த்தமான பிரியமுள்ளவர்களாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே அன்றாடத் தொடர்பு எல்லைக்குள் பழகி வருபவர்களாகவும், இருப்பதற்குக் காரணமே அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹம் மட்டுமே என நான் இங்கு  மிகவும் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் சொல்லி மகிழ்கிறேன்.

ஜெயஸ்ரீ அவர்கள் ............

01) ஓர் மிகச் சிறந்த சிறுகதை, நெடுங்கதை, தொடர்கதை எழுத்தாளர்  
02) பத்திரிகை எழுத்தாளர்
03) கருத்தாழம் கொண்ட கவிதைகள் படைக்கும் மிகச்சிறந்த கவிஞர்
04) சிறப்பான கட்டுரைகள் + ஹைகூ எழுதக்கூடியவர்
05) மிகச் சிறந்த ஓவியர்
06) மிக இனிய குரல் வளம் கொண்டவர்
07) மிகச் சிறந்த பாடகி
08) வலைப்பதிவர்
09) நன்கு படித்தவர்
10) அன்பானவர்
11) பண்பானவர்
12) நாகரீகமானவர்
13) மனித நேயம் கொண்டவர்
14) பக்தி சிரத்தையுடன் ஆன்ம விசாரங்களில் அடிக்கடி ஈடுபடுபவர்
15) இனிய இல்லத்தரசி
16) மிகவும் அறிவாளி
17) மென்மையானவர் 
18) மேன்மையானவர்
19) அமைதியானவர் 
20) அடக்கமானவர் 
21) விநயத்தில் சிறந்தவர்.

சாக்ஷாத் அந்தக் கலைவாணி சரஸ்வதிதேவி போல, அனைத்துத் தனித்தன்மைகளும், தனித்திறமைகளும் இவரிடம் ஒருங்கே அமைந்திருப்பினும், விநயத்தில் சிறந்து விளங்கும் இவர்கள், என்னை அடிக்கடி மிகவும் வியப்பளித்து வருகிறார்கள். 

ஜெயஸ்ரீ அவர்கள் தன் கைப்பட வரைந்துள்ளதோர் ஓவியம் என்னுடைய  http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_7.html பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.  



இன்று குருவாரம் (வியாழக்கிழமை) 
இந்த ஸ்பெஷல் பதிவினை வெளியிட நேர்ந்துள்ளது
எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]