கதையின் தலைப்பு
VGK 06 - ” உடம்பெல்லாம் உப்புச்சீடை ”
இணைப்பு:
மேற்படி 'நெடுங்கதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
மூன்றாம் பரிசினை
வென்றுள்ளவர் :
திருமதி.
இராஜராஜேஸ்வரி
அவர்கள்
http://jaghamani.blogspot.com/
வலைத்தளம் : “மணிராஜ்”
http://rjaghamani.blogspot.in/
"krishna"
வலைத்தளம் : “மணிராஜ்”
http://rjaghamani.blogspot.in/
"krishna"
VGK 04, VGK 05 and VGK 06
ஆகிய மூன்று போட்டிகளிலும்
அடுத்தடுத்து தொடர்ச்சியாக
பரிசுக்குத் தேர்வாகியுள்ள
இவர்கள் இன்று
’ஹாட்-ட்ரிக்
வெற்றியாளர் ’
ஆக அறிவிக்கப்படுகிறார்கள்.
’ஹாட்-ட்ரிக்’
பரிசு பெறவும்
தகுதியாகியுள்ளார்கள்.
அதைப்பற்றிய மேலும் விபரங்கள்
கீழே தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி
மகளிர் அணியில் முதன்முதலாக
’இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டி’யில்
‘ஹாட்-ட்ரிக்’ பரிசுபெறும் வெற்றியினை
எட்டியுள்ளதைப் பாராட்டி,
திருமதி. இராஜராஜேஸ்வரி
அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.
மூன்றாம் பரிசினை வென்றுள்ள
’ஹாட்-ட்ரிக்’ வெற்றியாளர்
’ஹாட்-ட்ரிக்’ வெற்றியாளர்
திருமதி
இராஜராஜேஸ்வரி
இராஜராஜேஸ்வரி
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று அனைவருக்குமே தெரியும்தான்..
தெரியாத தர்மங்களா, நியாயங்களா, சாஸ்திரங்களா, பழமொழிகளா.. எல்லாமே கரைத்துதான் குடித்திருக்கிறோம்..
ஆனால் நமக்கென்று மனதுக்குப் பிடிக்காத சம்பவங்கள் நிகழும் பொழுது நடந்துகொள்ளும் முறை, அடுத்தவர்களை வார்த்தைகளாலும், பார்வைகளாலும் துன்புறுத்தும் போது நியாயமாகவே எண்ணிக்கொள்கிறோம்.. அதனால் பாதிக்கப்படுபவர் படும் மனவேதனைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை..
முதல் பார்வையில் கதையின் தலைப்பு 'உடம்பெல்லாம் உப்புசீடை' என்று கவனத்தைக் கவருகிறது.. அடுத்து பொருத்தமான ஓடும் ரயில்கள், அந்தந்த ரயில் நிலையங்களின் பெயர்களை மிகச்சரியாக அறிமுகப்படுத்தி நாம் அந்தந்த நிலையத்தில் இருப்பதான உணர்வை ஏற்படுத்தி, ரயில் நிலையத்தில் விற்பனைக்கடைகள் என்று காட்சிப்படுத்தி காசிக்கு - கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் உணர்வை வரவழைத்துவிடுகிறார் கதை ஆசிரியர்.
ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆசைப்படும் சிறுவன் ரவி, சிறுமி கமலா, விநோத உருவத்தைக்கண்டு நடுங்கும் 13 வயது சிறு பெண் விமலா, கணவனின் கோபத்துக்கு தூபம் போடும் மனைவி என்று மிகவும் கவனமாக பயணம் செய்யவேண்டிய பயணியாக, தந்தை இறந்து பதினைந்து நாள்தான் ஆன நிலையில், அந்த ’உடம்பெல்லாம் உப்புசீடை’ போன்ற தோற்றத்தில் விகார முக மனிதர் தன் குழந்தையுடன் சௌஜன்யமாக பழகுவதைப் பொறுக்கமுடியாத குடும்பத்தலைவர் பட்டாபி, ஐஸ்கிரீம் ஒன்றுக்கு இரண்டாக சாப்பிடும் மகனிடம், தன் மனதின் அனலைக்காட்டமுடியாத கோபத்தில் எரிந்து விழுவது, அவர் மனநிலையை நமக்குத் தெளிவாக்குகிறது..
நமக்குப் புரிகிறது.. பேச்சு வாங்கியவரிடம் நமக்கு பச்சாதாபமும் தோன்றுகிறது.. வயதான மூத்தகுடிமகனான உப்புச்சீடை மனிதர் தன் உரிமையான லோயர் பர்த்தை அந்த குடும்பத்திற்கு விட்டுக்கொடுத்துவிட்டு சிரமத்துடன் அப்பர் பர்த்துக்கு ஏறுவதும், அதை சற்றும் உணர மறுத்து அலட்சியப்படுத்தும் நன்றி மறந்த குடும்பம் - இதை எல்லாம் பார்க்கும் போதுதான் அந்த உப்புசீடை மனிதர் அஸ்தி கலசத்தை தக்க சமயத்தில் பட்டாபி குடும்பத்தினரிடம் சேர்க்க எடுத்துக்கொள்ளும் சிரத்தை உன்னத இடத்தைப்பிடிக்கிறது..
பச்சை வாழைப்பழங்கள் நிரம்பிய பை சிறுத்துப்போவதை சிரத்தையாக காட்சிப்படுத்தி சாப்பாட்டு நேரங்கள் வந்து போவதை உணர வைக்கிறார் கதை ஆசிரியர்..
கொத்துமல்லி துவையலை மோப்பம் பிடித்து சங்கர மடத்தில் அது அவருக்கு பிடித்த உணவு என்று சரியான இடத்தில் மணம் பரப்பவைக்கிறார் கதை ஆசிரியர்..
எந்த மனிதரின் முகத்தில் மற்றொரு முறை விழிக்க விரும்பாமல் லைட்டைக்கூட வேண்டுமென்றே போட மறுத்து நைட் லேம்ப் வெளிச்சத்தில் பெட்டிகளை சரிபார்த்து எடுத்து இறக்கினாரோ அதே காரணத்தால் அஸ்திகலசம் தவறிப்போனது கதையின் வலிமையான முடிச்சு.
அதே உப்புசீடை மனிதரின் உயர்ந்த உள்ளத்தையும் சாஸ்திர மேதைமையையும் உணர்ந்து மஹா பெரியவாளையே அவர் உருவத்தில் தரிசித்து வித்வத் சம்பாவனையும் அளிக்கத் தயாராகும் போது உன்னத இடத்திற்கு உப்புசீடை மனிதரை மறக்கமுடியாத சிகரத்தில் அமர்த்திவிடுவது நிஜம்...
கடைசிப்படத்தில் கீதாசாரியன் ஆன கண்ணனை ரயிலின் இறுதியில் பதித்திருப்பதைப் பார்க்கும்போது - கதை ஆசிரியர் தான் சொல்ல நினைத்த கருத்தை கீதையின் சாரத்தைப்போல் நச் என்று மனதில் பதித்திருப்பதை உணர்கிறோம்..
அந்த ரயிலுக்கு கையசைத்து நம்மையறியாது விடை தரும்போது கதையில் இவ்வளவு நேரம் கரைந்திருந்தது சட் என்று உறைப்புடன் உரைக்கிறது .. அதுதானே கதையின் வெற்றி முரசு..!
-oOo-
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்படும்.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
மீண்டும் ஓர் புதிய பரிசு
பற்றிய அறிவிப்பு
போட்டிக்கான நிபந்தனைகள் பற்றிய என் முதல் டும் .. டும் .. டும் .. டும் .. அறிவிப்புப் பதிவினில் அடியேன் தெரிவித்துள்ளது ’ஊக்கப்பரிசு’.
இது நான் என் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’க்காக வெளியிட நினைக்கும் 40 கதைகளில் ஏதாவது 30 கதைகளுக்காவது விமர்சனம் எழுதி அனுப்பி, போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கடைசிவரை, நடுவர் அவர்களால் ஒருமுறையேனும் பரிசுக்குத் தேர்வாகாத நபர்களுக்கு மட்டும், என்னால் தனியாகத் தரப்படப் போவது இந்த ”ஊக்கப்பரிசு”
இது நான் என் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’க்காக வெளியிட நினைக்கும் 40 கதைகளில் ஏதாவது 30 கதைகளுக்காவது விமர்சனம் எழுதி அனுப்பி, போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கடைசிவரை, நடுவர் அவர்களால் ஒருமுறையேனும் பரிசுக்குத் தேர்வாகாத நபர்களுக்கு மட்டும், என்னால் தனியாகத் தரப்படப் போவது இந்த ”ஊக்கப்பரிசு”
அதுபற்றிய விபரம் காண இணைப்பு:
-oOo-
அதன்பின் நான் அறிவித்துள்ளது ’போனஸ் பரிசு’ என்பதாகும்.
இது போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே என்னால் அளிக்கப்பட உள்ள ஓர் சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சிப் பரிசாகும். ஆனால் இந்தப்பரிசு, நான் என் மனதில் நினைத்துள்ள, ஒருசில குறிப்பிட்ட கதைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.
இந்த போனஸ் பரிசு என்பது, என் மனதில் நான் நினைத்துள்ள அந்தக் குறிப்பிட்ட ஒருசில கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே கூடுதலாகக் கிடைக்கும் ஒன்றாகும்.
நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வானவர்கள், தேர்வாகாதவர்கள் என அனைவருக்குமே கிடைக்கக்கூடியது இந்த ”போனஸ் பரிசு”
உதாரணம்: VGK 03 “சுடிதார் வாங்கப் போறேன்”
அதுபற்றிய விபரம் காண இணைப்புகள்:
இந்த போனஸ் பரிசினால் மேலே சொல்லியுள்ள ஊக்கப்பரிசு கிடைப்பது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்காது. இது வேறு, அது வேறு.
-oOo-
இப்போது மேலும் ஓர்
புதிய பரிசு பற்றிய அறிவிப்பு
இதன் பெயர் ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்பதாகும்.
இந்தப்புதிய ’ஹாட்-ட்ரிக்’ பரிசினை
இப்போது அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஹாட்-ட்ரிக் பரிசு பற்றிய விபரங்கள்:
முதல் பரிசோ,
இரண்டாம் பரிசோ
அல்லது மூன்றாம் பரிசோ
இரண்டாம் பரிசோ
அல்லது மூன்றாம் பரிசோ
எதுவாக இருந்தாலும்
தொடர்ச்சியாக அடுத்தடுத்து மும்முறை
’சிறுகதை விமர்சனப் போட்டி’யில்
பரிசு வென்றவர்களுக்கு மட்டும்
இந்த ’ஹாட்-ட்ரிக்’ பரிசு
கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
தொடர்ச்சியாக அடுத்ததடுத்து மூன்று முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 50] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, இரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 100] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஐந்து முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, முதல் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 150] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறு முறைகள் பரிசுக்குத் தேர்வானவர்களுக்கு, ஊக்கப் பரிசுக்குச் சமமான தொகை, [ரூபாய் 200] கூடுதலாக ’ஹாட்-ட்ரிக் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.
ஆறுமுறைகளுக்கு மேல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பரிசுக்குத் தேர்வாகி சாதனை படைப்பவர்களுக்கு மட்டும், ஒவ்வொரு ஆறுடனும் கணக்கினை முடித்துக்கொண்டு, அதற்கு மேலான வெற்றிகளை, புதிய சங்கலித் தொடராக 1 to 3, 1 to 4, 1 to 5, 1 to 6 என பாவித்து மேற்படி அட்டவணைப்படி மீண்டும் கணக்கிட்டு, மீண்டும் ‘ஹாட்-ட்ரிக்’ பரிசு கூடுதலாக வழங்கப்படும்.
ஆறுமுறைகளுக்கு மேல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பரிசுக்குத் தேர்வாகி சாதனை படைப்பவர்களுக்கு மட்டும், ஒவ்வொரு ஆறுடனும் கணக்கினை முடித்துக்கொண்டு, அதற்கு மேலான வெற்றிகளை, புதிய சங்கலித் தொடராக 1 to 3, 1 to 4, 1 to 5, 1 to 6 என பாவித்து மேற்படி அட்டவணைப்படி மீண்டும் கணக்கிட்டு, மீண்டும் ‘ஹாட்-ட்ரிக்’ பரிசு கூடுதலாக வழங்கப்படும்.
-oOo- -oOo- -oOo- -oOo-
இந்த புதிய அறிவிப்பின் படி
திரு. ரமணி அவர்களுக்கு,
இரண்டாம் பரிசுக்குச் சமமான தொகை
கூடுதலாக 'ஹாட்-ட்ரிக் பரிசு' என்ற பெயரில்
வழங்கப்பட உள்ளது.
இவரே மேலும் பலமுறை இதே
‘ஹாட்-ட்ரிக்’ பரிசினைப்பெறவும்
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
இந்த ’ஹாட்-ட்ரிக்’ பரிசினைப்பெற
முற்றிலும் தகுதியுள்ளவராக
இப்போது ஆகியுள்ளார்கள்
என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன்
[ அவர்களின் தொடர் வெற்றியினைப்பொறுத்து,
மேலே சொல்லியுள்ள அட்டவணைப்படி,
அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய
‘ஹாட்-ட்ரிக்’ பரிசுத்தொகை பிறகு நிர்ணயிக்கப்படும். ]
பெறப்போகும் இவர்கள் இருவருக்கும்
என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
-oOo-
இனி வரப்போகும் ஒவ்வொருவார
போட்டி முடிவுகளிலும்
நாம் எவ்வளவோ
“ஹாட்-ட்ரிக்”
வெற்றியாளர்களை
தொடர்ந்து பார்க்கத்தான் போகிறோம் !
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!
சிறுகதை விமர்சனதாரர்களா .....
கொ க் கா !!!
-oOo-
மகிழ்ச்சியான செய்திகள்
கண்ணன் பிறந்தான் எங்கள்
கண்ணன் பிறந்தான் ....
புதுக் கவிதைகள்
பிறந்ததம்மா ....
மன்னன் பிறந்தான் எங்கள்
மன்னன் பிறந்தான் ....
மனக் கவலைகள் மறந்ததம்மா !
09.03.2014 ஞாயிறு
அதிகாலை 2.47 மணிக்கு
இவரின் புதிய வருகையைச் சேர்த்து
‘VGK’ குடும்ப உறுப்பினர்கள்
‘VGK’ குடும்ப உறுப்பினர்கள்
எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
எனக் காண இதோ இணைப்பு
http://gopu1949.blogspot.in/
பிறந்த ஒரிரு மணி நேரத்திற்குள்
VGK யால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
-oOo-
நம் வேலூர் பதிவர் திருமதி. ’உஷா அன்பரசு’ அவர்கள் கேள்விகள் கேட்க என் அன்பு மனைவி விரிவாக பதிலளிக்க, அந்த சிறப்புப்பேட்டிச் செய்திகள், 08.03.2014 தினமலர் - பெண்கள் மலர் - பக்கம் 22 இல் பெட்டிச்செய்தி போல, மிகவும் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ளது, என்பதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தலைப்பு:
குடும்பத்தின் மகிழ்ச்சி .....
கூட்டுக்குடும்பமா ? தனிக்குடும்பமா ?
-oOo-
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குபரிசு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து பல ஹாட்ரிக் சாதனைகள் படைக்கட்டும் நம் நண்பர்கள்.
---------
பேரக்குழந்தை பிறந்தமைக்கு தங்களுக்கு இனிய வாழ்த்துகள். அழகாக உள்ளார். எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் துணைபுரிவார். மகிழ்ச்சி பொங்க இனிய செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
அ. பாண்டியன் March 10, 2014 at 12:20 AM
நீக்குவாருங்கள், வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
//வணக்கம் ஐயா
பரிசு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து பல ஹாட்ரிக் சாதனைகள் படைக்கட்டும் நம் நண்பர்கள்.
---------
பேரக்குழந்தை பிறந்தமைக்கு தங்களுக்கு இனிய வாழ்த்துகள். அழகாக உள்ளார். எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் துணைபுரிவார். மகிழ்ச்சி பொங்க இனிய செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK
புத்தம் புது வரவுக்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி March 10, 2014 at 12:21 AM
நீக்குவாங்கோ .... வணக்கம்.
//புத்தம் புது வரவுக்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள்..//
மிக்க நன்றி.
எமது விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசும் , ஹாட்ட்ரிக் பரிசும் அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
பதிலளிநீக்குநடுவர் அவர்களின் சீரிய பணிக்குப் பாராட்டுக்கள்..!
இராஜராஜேஸ்வரி March 10, 2014 at 12:23 AM
நீக்குவாங்கோ, மீண்டும் வணக்கம்.
//எமது விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசும், ஹாட்ட்ரிக் பரிசும் அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..//
ஏதோ அதுபோன்றதோர் பாக்யம் கிடைத்துள்ளது ..... பிராப்தம் அமைந்துள்ளது. மகிழ்ச்சி தங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தான். நன்றிக்கு நன்றிகள்.
//நடுவர் அவர்களின் சீரிய பணிக்குப் பாராட்டுக்கள்..!//
மிக்க நன்றி. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பில் தங்களுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
முதல் நான்கு கதைகளுக்கும் அடுத்தடுத்து, தொடர்ச்சியாகப் பரிசினை வென்றுள்ள ....
பதிலளிநீக்குவிமர்சன வித்தகர் -
விமர்சன சக்ரவர்த்தி திரு. ரமணி ஐயா அவர்களுக்கு,
மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!
சிறுகதை விமர்சனதாரர்களா .....
கொ க் கா !!!
அதுதானே ஆச்சரியம்..!
கொக்கே கொக்கே பரிசு கொண்டுவா என பாட வேண்டும்..
இராஜராஜேஸ்வரி March 10, 2014 at 12:41 AM
நீக்குவாங்கோ, மீண்டும் வணக்கம்.
*****ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!
சிறுகதை விமர்சனதாரர்களா .....
கொ க் கா !!!*****
//அதுதானே ஆச்சரியம்..! கொக்கே கொக்கே பரிசு கொண்டுவா என பாட வேண்டும்..//
பாடுங்கோ ..... பாடி வீடியோவாக ஒரு பதிவும் போடுங்கோ ..... எல்லோரும் கேட்டு மகிழ்வோம். ;)))))
தங்களின் அன்பான மீண்டும் மீண்டும் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் VGK
அன்பின் வை.கோ - வம்சம் வளர வாரிசுகள் பெருக நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா
பதிலளிநீக்குcheena (சீனா) March 10, 2014 at 4:26 AM
நீக்கு//அன்பின் வை.கோ - வம்சம் வளர வாரிசுகள் பெருக நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா//
வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா. பார்த்து ரொம்ப நாள் ஆச்சுதுங்க ஐயா. வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஐயா.
அன்புடன் VGK
அன்பின் வை.கோ - துணைவியாரின் பேட்டி தின மலரில் பிரசுரமானது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - எங்கள் சார்பில் தாங்களே பாராட்டுகளைத் தெரிவிக்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குcheena (சீனா) March 10, 2014 at 4:28 AM
நீக்கு//அன்பின் வை.கோ - துணைவியாரின் பேட்டி தின மலரில் பிரசுரமானது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - எங்கள் சார்பில் தாங்களே பாராட்டுகளைத் தெரிவிக்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
ஆஹா, தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து விடுகிறேன், ஐயா.
பிரசுரம் ஆன அது அவர்களுக்கே இன்னும் தெரியாது ஐயா.
நான் எடுத்துச்சொன்னாலும், பேரன் பிறந்த குஷியில், அதைக் காதில் வாங்கிக்கொள்வார்களோ மாட்டார்களோ, ஐயா. ;))))) - VGK
தொடர்ந்து வெற்றி பெறும் அருமை நண்பர்களூக்குப் பாராட்டுகளூம் நல்வாழ்த்துகளூம் - மேன் மேலும் வெற்றி மாலை சூடவும் வாழ்த்துகிறோம். - நட்புடன் சீனா
பதிலளிநீக்குபேரனுக்கு எங்கள் வாழ்த்துகள். உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஸார்.
பதிலளிநீக்குஸ்ரீராம். March 10, 2014 at 5:22 AM
நீக்குவாங்கோ ’ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் !’
//பேரனுக்கு எங்கள் வாழ்த்துகள். உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஸார்.//
மிக்க சந்தோஷம். நன்றி.
மிக்க சந்தோஷமான செய்திகளால்
பதிலளிநீக்குமகிழ்ச்சியில் அனைவரையும் திளைக்க வைத்தமைக்கு
மிக்க மகிழ்ச்சி
குறிப்பாக கண்ணனின் வரவு
எங்களையும் குடும்பத்தில் ஒருவராகக் கருதி
சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது
கூடுதல் மகிழ்ச்சி
இன்று போல் என்றும் நிறைந்த நலத்துடனும்
செல்வத்துடனும் செல்வாக்குடன் நீடூழி வாழ
அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்
Ramani S March 10, 2014 at 6:04 AM
நீக்குவாங்கோ, திரு. ரமணி, ஸார், வணக்கம், ஸார்.
மிக்க சந்தோஷமான செய்திகளால் மகிழ்ச்சியில் அனைவரையும் திளைக்க வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
குறிப்பாக கண்ணனின் வரவு எங்களையும் குடும்பத்தில் ஒருவராகக் கருதி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது
கூடுதல் மகிழ்ச்சி. இன்று போல் என்றும் நிறைந்த நலத்துடனும் செல்வத்துடனும் செல்வாக்குடன் நீடூழி வாழ அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸார்.
அன்புடன் VGK
ஹாட்-ட்ரிக் பரிசுகள், வாரிசுக்கு வாரிசு, சிறப்புப்பேட்டி என் இன்றைய பகிர்வு முழுவதும் சந்தோசம் நிறைந்துள்ளது - எங்களின் மனமும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் பல... நன்றி ஐயா...
திண்டுக்கல் தனபாலன் March 10, 2014 at 6:14 AM
நீக்குவாங்கோ திரு DD Sir. வணக்கம்.
//ஹாட்-ட்ரிக் பரிசுகள், வாரிசுக்கு வாரிசு, சிறப்புப்பேட்டி என் இன்றைய பகிர்வு முழுவதும் சந்தோசம் நிறைந்துள்ளது - எங்களின் மனமும்...
வாழ்த்துக்கள் பல... நன்றி ஐயா...//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸார்.
அன்புடன் VGK
தங்களுக்குப் பெயரக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன் ஐயா.
பதிலளிநீக்குகுழலினிது யாழினிது என்பர் மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர் என்பர் , அதிலும் பெயரக் குழந்தையைக் கொஞ்சுவதில் ஏற்படும் மகிழ்வே தனி.
வாழ்த்துக்கள் ஐயா
கரந்தை ஜெயக்குமார் March 10, 2014 at 6:23 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்களுக்குப் பெயரக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன் ஐயா.
குழலினிது யாழினிது என்பர் மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர் என்பர் , அதிலும் பெயரக் குழந்தையைக் கொஞ்சுவதில் ஏற்படும் மகிழ்வே தனி. வாழ்த்துக்கள் ஐயா//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK
பரிசு பெற்ற சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது குடும்பத்தின் புதிய வரவான பேரக் குழந்தை வாழ்வில் அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று வலமாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
இனிப்பான செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.
Tamizhmuhil Prakasam March 10, 2014 at 7:16 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பரிசு பெற்ற சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.
தங்களது குடும்பத்தின் புதிய வரவான பேரக் குழந்தை வாழ்வில் அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று வலமாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
இனிப்பான செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிப்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK
மூன்றாம் பரிசோடு ஹாட் ட்ரிக் பரிசும் வென்றுள்ள இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். நான்கு தொடர் வெற்றிகளைப் பெற்று ஊக்கப்பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் ரமணி சாருக்கு சிறப்புப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபுதிதாய் ஹாட் ட்ரிக் பரிசினை அறிமுகப்படுத்தி வாசகர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் தங்களுக்கு பெருமகிழ்வோடு நன்றிகள் பல. பேரன் பிறந்த வேளையிலே பாட்டனாரின் உளம் கொண்ட குதூகலத்தை வெளிப்படுத்துகின்றன உற்சாகப் பரிசறிவிப்புகள். குழந்தைக்கு எங்கள் அனைவரின் ஆசிகளும் நிறையட்டும்!
கீத மஞ்சரி March 10, 2014 at 7:29 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மூன்றாம் பரிசோடு ஹாட் ட்ரிக் பரிசும் வென்றுள்ள இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். நான்கு தொடர் வெற்றிகளைப் பெற்று ஊக்கப்பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் ரமணி சாருக்கு சிறப்புப் பாராட்டுகள்.
புதிதாய் ஹாட் ட்ரிக் பரிசினை அறிமுகப்படுத்தி வாசகர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் தங்களுக்கு பெருமகிழ்வோடு நன்றிகள் பல. பேரன் பிறந்த வேளையிலே பாட்டனாரின் உளம் கொண்ட குதூகலத்தை வெளிப்படுத்துகின்றன உற்சாகப் பரிசறிவிப்புகள்.
குழந்தைக்கு எங்கள் அனைவரின் ஆசிகளும் நிறையட்டும்!//
மிகவும் சந்தோஷம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிப்பான உற்சாகமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
- பிரியமுள்ள கோபு [VGK ]
Congrats on new addition!
பதிலளிநீக்குmiddleclassmadhavi March 10, 2014 at 7:33 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//Congrats on new addition!// Thanks a Lot, Madam.
பிரியமுள்ள கோபு [VGK]
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகே. பி. ஜனா... March 10, 2014 at 8:18 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!//
நன்றிகள், நன்றிகள்.
அன்புள்ள ஐயா.
பதிலளிநீக்குவணக்கம்.
உங்களுக்குப் பேரக்குழந்தை பிறந்துள்ளமை குறித்து எனது மனம்நிறை வாழ்ததுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விரைவில் தாத்தா நானும் எழுதுகிறேன் வலையில் என்று அந்த சின்ன பாரதியை வரவேற்கக் காத்திருக்கிறேன்.
அன்புள்ள ஐயா
பதிலளிநீக்குவணக்கம்.
தங்களுக்குப் பேரக்குழந்தை பிறந்திருப்பது குறித்து என் மனம்நிறை வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன். தாத்தா நானும் எழுதுகிறேன் என்று வலையில் எழுத அந்த சின்ன பாரதியின் வருகைக்குக் காத்திருக்கிறேன்.
ஹ ர ணி March 10, 2014 at 9:17 AM
நீக்குஹ ர ணி March 10, 2014 at 9:18 AM
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//அன்புள்ள ஐயா
வணக்கம்.
தங்களுக்குப் பேரக்குழந்தை பிறந்திருப்பது குறித்து என் மனம்நிறை வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன். தாத்தா நானும் எழுதுகிறேன் என்று வலையில் எழுத அந்த சின்ன பாரதியின் வருகைக்குக் காத்திருக்கிறேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிப்பான உற்சாகமான மாறுபட்ட ‘வலையில் எழுதப்போகும் சின்ன பாரதி’ என்ற கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா. மகிழ்ச்சி ஐயா.
அன்புடன் VGK
புத்தம் புது மலருக்கு முதலில் மனம் நிறைந்த ஆசிகள். சீரோடும், சிறப்போடும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்கும், திரு ரமணி அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
சிறுகதைப்போட்டியை ஜாம் ஜாம் என்று நடத்திவரும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!
Ranjani Narayanan March 10, 2014 at 10:01 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//புத்தம் புது மலருக்கு முதலில் மனம் நிறைந்த ஆசிகள். சீரோடும், சிறப்போடும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.//
மிக்க நன்றி, சந்தோஷம்.
ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்கும், திரு ரமணி அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
//சிறுகதைப்போட்டியை ஜாம் ஜாம் என்று நடத்திவரும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!//
இந்தப் போட்டிப் பக்கமே எட்டிப்பார்க்காத தங்களை என் பேரன் பாருங்கோ.... உடனே வரவழைத்து விட்டான். ;)
சந்தோஷம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிப்பான ’ஜாம் ஜாம்’ கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள்.
அன்புடன் கோபு
முதலில் போட்ட காமென்ட் வந்ததா, தெரியவில்லை. பப்ளிஷ் பட்டனைத் தட்டியவுடன், ஊப்ஸ் என்று ஒரு செய்தி!
பதிலளிநீக்குRanjani Narayanan March 10, 2014 at 10:02 AM
நீக்கு//முதலில் போட்ட காமென்ட் வந்ததா, தெரியவில்லை. பப்ளிஷ் பட்டனைத் தட்டியவுடன், ஊப்ஸ் என்று ஒரு செய்தி!//
’ஆஹா.......... வந்திடுச்சு ........... ஆசையில் ஓடி வந்தேன்’ ன்னு இனி பாட்டுப்பாடுங்கோ. ;)))))
ஐயா, கும்பகோணம் டிகிரி காப்பியை குடித்தது போல் ஒரு உற்சாகம் வருகிறது உங்களின் தளத்தை பார்த்தால். இந்த வயதில் இவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறீர்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. புதிதாக மலர்ந்துள்ள தங்களின் குடும்ப மொட்டுக்கு என் ஆசிகள். வாழ்த்துகள்
பதிலளிநீக்குபவித்ரா நந்தகுமார் March 10, 2014 at 10:31 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஐயா, கும்பகோணம் டிகிரி காப்பியை குடித்தது போல் ஒரு உற்சாகம் வருகிறது உங்களின் தளத்தை பார்த்தால். இந்த வயதில் இவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறீர்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.//
சந்தோஷம். நன்றிகள். இன்று இங்கு மழை பெய்தாலும் ஆச்சர்யமே இல்லை ..... தங்களின் அபூர்வ வருகையால்.
//புதிதாக மலர்ந்துள்ள தங்களின் குடும்ப மொட்டுக்கு என் ஆசிகள். வாழ்த்துகள்//
மிக்க நன்றி, சந்தோஷம். பேரன் அதிர்ஷ்டசாலிதான் போலிருக்கு. V.V.I.Ps யாரையெல்லாமோ என் பதிவுகள் பக்கம் வரவழைத்துள்ளான். ‘)))))
பிரியமுள்ள கோபு
vazhthukkal rajeswari
பதிலளிநீக்குromba romba romba magizhchi vgk sir.....
:) enjoy maadi
regards,
shakthi
vazhthukkal rajeswari ......
பதிலளிநீக்குromba romba romba magizhchi vgk sir........ congratulations. Enjoy maadi.
prayers for all of u
regards,
shakthi
Shakthiprabha March 10, 2014 at 11:27 AM
நீக்குவாங்கோ ஷக்தி, வணக்கம்.
vazhthukkal rajeswari ......
//romba romba romba magizhchi vgk sir........ congratulations. Enjoy maadi. prayers for all of u .... regards, shakthi//
அன்பு வருகைக்கும், பாராட்டுக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், ஷக்தி. வாழ்க !
பிரியமுள்ள கோபு
vazhthukkal ramaNi sir
பதிலளிநீக்குஅன்புள்ள கோபு சார்,
பதிலளிநீக்குநிறைய மகிழ்ச்சியான செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். .
தங்களுக்குப் பேரன் பிறந்திருப்பது எல்லா சந்தோஷங்களுக்கும் மகுடம் தரிக்கிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். ஆசிகள்.
ப்ரியமுடன்,
ஜீவி
ஜீவி March 10, 2014 at 11:38 AM
நீக்குஎன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ஜீவி ஸார் அவர்களே, வாங்கோ வாங்கோ, நமஸ்காரங்கள். வணக்கம்.
//அன்புள்ள கோபு சார்,
நிறைய மகிழ்ச்சியான செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். . //
ஆமாம் ஸார். ஒவ்வொரு சிறு நிகழ்வுகளிலும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, என் மனதினில்.
//தங்களுக்குப் பேரன் பிறந்திருப்பது எல்லா சந்தோஷங்களுக்கும் மகுடம் தரிக்கிறது.//
நிச்சயமாக ஸார். எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் மட்டுமே.
அடுத்தடுத்து மூன்று பிள்ளைகளைப்பெற்று ஏற்கனவே ஹாட்-ட்ரிக் போட்டுள்ள எனக்கு இப்போது பேரன்களிலும் ஹாட்-ட்ரிக் கிடைத்துள்ளது என்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
//பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். ஆசிகள்.//
தங்கள் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகள் + ஆசிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
//ப்ரியமுடன்,
ஜீவி//
பிரியமுள்ள கோபு [VGK]
முதலில் புதிய வாரிசு பிறந்திருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅடுத்து உங்கள் மனைவியின் பேட்டி வந்திருப்பதற்கும் என் வாழ்த்துகள். பெண்கள் மலரில் கவனிக்கவே இல்லை நான். இப்போப் போய் எடுத்துப் பார்க்கிறேன். படிச்சுட்டு யார்னு கவனிக்கலைனு நினைக்கிறேன். உஷா அன்பரசு அவர்கள் என்னையும் கேட்டிருந்தார். ஆனால் அவர் கேட்டதை என் மெயிலுக்கு அனுப்பாமல் பின்னூட்டமாகப் போட்டிருக்கவே நான் அதைக் கவனிக்கவே இல்லை. அந்தக் குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டங்கள் தாமாகவே வெளியாகும் வண்ணம் வைத்திருந்தேன். இப்போ மாத்தி இருக்கேன். :))))))
Geetha Sambasivam March 10, 2014 at 12:24 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//முதலில் புதிய வாரிசு பிறந்திருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். //
மிகவும் சந்தோஷம். வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
//அடுத்து உங்கள் மனைவியின் பேட்டி வந்திருப்பதற்கும் என் வாழ்த்துகள். பெண்கள் மலரில் கவனிக்கவே இல்லை நான். இப்போப் போய் எடுத்துப் பார்க்கிறேன். படிச்சுட்டு யார்னு கவனிக்கலைனு நினைக்கிறேன். உஷா அன்பரசு அவர்கள் என்னையும் கேட்டிருந்தார். //
தாங்கள் தங்கள் பேட்டியை அனுப்பாததும் நல்லது தான். எல்லாம் நன்மைக்கே. ஏனெனில் நாங்கள் அனுப்பிய பேட்டிச்செய்தி சற்றே விஸ்தாரமாக நகைச்சுவையாக அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் வெளியிட்டதோ மிக மிகக்குறைவு. இதனால் தான் நான் இப்போதெல்லாம் பத்திரிக்கைகள் பக்கம் தலைவைத்துப்படுப்பதே இல்லை. யாருக்கும் எதுவும் அனுப்புவதும் இல்லை.
என் அன்புக்குரிய உஷா டீச்சர் அவர்களின் அவசரமான அன்புக்கட்டளைக்காக மட்டுமே செவி சாய்த்தேன்.
நான் [நாங்கள்] எழுதியனுப்பிய பேட்டியை முழுவதுமாக கீழே தனியாக எழுதுகிறேன். தங்களுக்கு மட்டுமல்லாது பிறர் படிக்கவும் செளகர்யமாக இருக்கும். ;)))))
அன்புடன் கோபு [VGK]
1]
நீக்குதிருமதி உஷா அன்பரசு அவர்களால், தினமலர் - பெண்கள் மலர் சார்பில், என் மனைவியிடம் கேட்கப்பட்ட கேள்வியும், என் மனைவி சார்பில் அனுப்பப்பட்ட பதிலும் இதோ இங்கே ........
திருமதி உஷா அன்பரசு அவர்களின் கேள்வி:
குடும்பத்தின் மகிழ்ச்சி ......
கூட்டுக் குடும்பமா? தனிக்குடும்பமா?
-=-=-=-
2]
நீக்குஎன் மனைவியின் சார்பில் [நான்] கொடுத்த பதில்:
முதலில் குடும்பம் என்றால் என்ன?
கணவன், மனைவி, அவர்களின் குழந்தை / குழந்தைகள் மட்டுமா?
அல்லது இதில் கணவனின் தாய் தந்தையர், அண்ணன், தம்பிகள் அவர்களின் மனைவிகள், இன்னும் திருமணமாகாத கணவனின் தம்பி தங்கைகளும் அடக்கமா, என்பதை நாம் முதலில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
-=-=-=-
3]
நீக்குஅடுத்தது மகிழ்ச்சி என்றால் என்ன?
மகிழ்ச்சி என்பது மனதில் ஏற்படக்கூடியதோர் உணர்வு. சந்தோஷம். இந்த மகிழ்ச்சி என்பதை சமயத்தில் வார்த்தைகளில் கூடச்சொல்லி புரிய வைக்க இயலாது.
இந்த மகிழ்ச்சி என்பது எதனால் யாருக்கு எப்போது ஏற்படும் என்பதையும் திட்டவட்டமாக நாம் துல்லியமாக எடை போட்டுச்சொல்லிவிட முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். இது நபருக்கு நபர் வேறு படக்கூடியதோர் உணர்வாகும்.
ஒருவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் செயல் மற்றொருவருக்கு துக்கம் ஏற்படுத்துவதாகவும் அமையக்கூடும்.
-=-=-=-
4]
நீக்குஉதாரணமாக .............
தன் மருமகளைப் பாடாய்ப் படுத்தி பம்பரமாய் ஆட்டும் ஒரு பொல்லாத வயதான மாமியார், கால் வழுக்கி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டால், அந்த மருமகளுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.
அந்த மாமியார் அவர்கள் அப்போதே மண்டையைப் போட்டுவிட்டால் மருமகள் மேலும் அதிக மகிழ்ச்சி அடையலாம்.
அதே செயலுக்கு அந்த பாதிக்கப்பட்ட நபர் [மாமியார்] துக்கம் அடையலாம்.
பாதிக்கப்பட்டவரின் மகனும் கூட துக்கமோ அல்லது சந்தோஷமோ அடையலாம்.
[ஒருவர்பாடு திண்டாட்டம் என்றால், அதிலேயே மற்றொருவர் பாடு கொண்டாட்டம் ! ஆக அமைந்து விடுகிறது ]
-=-=-=-
5]
நீக்குஇதெல்லாம் அவரவர் இதுவரை காட்டிவந்த / நடந்துகொண்ட செயல்களின் அடைப்படையிலேயே ஏற்படக்கூடியதோர் உணர்வுகளாகும்.
{இதைப்பற்றி நான் ஏற்கனவே ஓர் நகைச்சுவைப் பதிவினில் சொல்லியுள்ளேன்:
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html
சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி] }
அது கூட்டுக்குடும்பமோ அல்லது தனிக்குடும்பமோ, பொருளாதாரப் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் இருந்தாலே, அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சி, தானே ஏற்படக்கூடும், என்பதும் மறுப்பதற்கு இல்லை.
-=-=-=-
6]
நீக்குபுதிதாகக் கல்யாணம் ஆனவர்கள், தனிக்குடுத்தனமாக இருந்தால் கொஞ்சம் நாட்களுக்காவது மகிழ்ச்சியாக உணர்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என நானும் நினைக்கிறேன்.
பிறகு குழந்தைப்பேறு ஏற்பட்டவுடன் குழந்தையை தினமும் குளிப்பாட்டி, சீராட்டி, பாராட்டி, அதன் உடல்நிலையை கண்காணித்து உதவிகள் செய்ய உறவினர்களில் யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என ஏங்குவதும் உண்டு. அந்த சமயங்களில் கூட்டுக்குடும்பமே மிகச்சிறந்தது, என்ற முடிவுக்கு வர, அவர்கள் சற்றே நினைக்கக்கூடும்.
ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் எப்போதும் உதவியாக அன்புள்ளத்துடன் இருப்பார்களேயானால், கூட்டுக்குடும்பம் என்பது பார்க்கவோ, நினைக்கவோ, கற்பனை செய்யவோ மிகவும் அழகாகத்தான், சொர்க்கம் போலத்தான் இருக்கும்.
-=-=-=-
7]
நீக்குஆனால் இன்றைய நவநாகரீக உலகத்தில், கணவன் மனைவி இருவருமே, வெளியே பணிக்குச்செல்ல வேண்டிய நிர்பந்தம் + சூழ்நிலைகளில், இவ்வாறான கூட்டுக்குடும்ப இல்லங்களில் அடைந்து கிடப்பவர்களின் பாடு மிகவும் திண்டாட்டமே.
ஒருவர் மேல் ஒருவருக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளூர ஓர் கடுப்பு ஏற்படுவதை மறைக்கவோ மறுக்கவோ வழியே இல்லை.
>>>>>
8]
நீக்குஇருப்பினும் கூட்டுக்குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு மட்டுமே, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி என்ற உறவுமுறைகள் விட்டுப்போகாமல் தெரியவரும்.
இதனால் பெரியவர்களின் அன்பும், ஆதரவும், ஆறுதலும் கிடைத்து, வாழ்க்கையில் பிறருடன் அன்புடனும், பண்புடனும், நல்ல குணங்களுடனும், ஒழுக்கத்துடனும் பழகி வளர குழந்தைகளுக்கு அரிய சந்தர்ப்பமாக இது அமையக்கூடும்.
மேலும் இதில் குழந்தைகளுக்கு எப்போதுமே ஒருவித பாதுகாப்பு உணர்வும் கிடைக்கக்கூடும். நல்ல ஒழுக்கங்களும் ஏற்படும். நல்லது கெட்டது என்ன என்பதை சிறுவர்கள் உரிய பருவங்களில் அறிய வீட்டிலுள்ள பெரியவர்கள் பெரிதும் உதவக்கூடும்.
-=-=-=-
9]
நீக்குநான் வாழ்க்கைப்பட்டு வந்த என்னவரின் குடும்பமும் சற்றே பெரிய குடும்பமே. என் மாமனாரும், மாமியாரும் அவர்களின் கடைசி காலம் வரை எங்களுடனேயே சேர்ந்து தான் இருந்தார்கள்.
என்னவர் வீட்டுக்குக் கடைசி பிள்ளை. அவருக்கு இரண்டு அண்ணன்களும் இரண்டு அக்காக்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் + அவர்களின் குழந்தைகளும் அவ்வப்போது எங்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள்.
ஏதாவது ஒரு விசேஷம் என்றால் எல்லோரும் ஒன்று பட்டுக் கூடி விடுவோம்.
எனக்கு 18 வயதில் திருமணம் ஆனது. என்னவருக்கு அப்போது 21 முடிந்து 22 வயது மட்டுமே.
ஆரம்பம் முதல் என் மாமியாருக்கும் எனக்கும் மிகவும் ஒத்துப்போய் விட்டது. எங்களுக்குள் சண்டை சச்சரவுகளே ஏதும் வந்தது இல்லை. என் மாமியாரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதும் ஏராளம்.
எனக்கு மூன்று பிள்ளைகள். பெண் குழந்தை ஏதும் பிறக்கவில்லை.
என் மாமியாரைப்போலவே, நானும் எனக்கு வந்துள்ள மூன்று மருமகள்களையும் சொந்த மகள்களாகவே பாவித்து வருகிறேன். அவர்களிடம் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கிறேன்.
யாரையும் எங்களுடன் சேர்ந்துதான் இருக்க வேண்டும் என நானும் வற்புருத்துவது இல்லை. இருப்பினும் ஒரு மகனும் ஒரு மருமகளும் எங்களுடனேயே எப்போதும் இருந்து வருகிறார்கள்.
மற்ற இரு மகன்களும் அவர்களின் உத்யோக விஷயமாக எங்களை விட்டு பிரிந்திருக்கும் படியாக ஆகியுள்ளது.
அடிக்கடி ஃபோனில், கம்ப்யூட்டரில் பேசுவார்கள். விடுமுறை நாட்களில் இங்கு எங்கள் இல்லத்திற்கு வந்து தங்கிச் செல்வார்கள்.
பெண் குழந்தை பிறக்க பாக்யம் கிடைக்காத நான், என் மூன்று மருமகள்களையும் என் சொந்தப் பெண்களாகவே நினைத்து பாசமும் அன்பும் காட்டி வருகிறேன். என் மருமகள்களாகிய அவர்கள் மூவருமே உத்யோகம் ஏதும் பார்க்காதவர்களாக [House Wife] அமைந்திருப்பினும், அவர்களுக்கு நான் முழுச்சுதந்திரம் கொடுத்துள்ளேன்.
அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம், சமைத்தால் சமைக்கலாம், சாப்பிடலாம். இல்லை .... உடம்பு ஏதும் சரியில்லை என்றால், இருக்கவே இருக்கு ... அருகிலேயே ஹோட்டல்கள். அனைவருக்குமாக வரவழைத்து ஆனந்தமாக உண்டு மகிழ்வோம்.
எனவே மகிழ்ச்சி என்பது நம் மனதிலும் செயல்களிலும் மட்டுமே, உள்ளது.
-=-=-=-
10]
நீக்குஆனால், இன்றைய சூழ்நிலையில், கூட்டுக்குடும்பம் என்பது, நினைத்தே பார்க்க முடியாததும், நடைமுறைக்கு ஒத்து வராததுமான ஒன்றாகவே உள்ளது, என்பதே உண்மை.
இயக்குனர் திரு. ’விசு’ அவர்களின் திரைப்படமான ‘சம்சாரம் அது மின்சாரம்’ கதையினில் வரும் இறுதிக் காட்சியில் ’லக்ஷ்மி’ பேசும் வசனம் தான் இதற்கு ஒரே பதிலாக அமைய முடியும்.
அதாவது, அவரவர்கள், தனித்தனியாக சுதந்திரமாக, அவரவர்கள், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு, ஏதோவொரு நாள், கிழமை, விழாக்களில் மட்டும் கூடிச் சேர்ந்து கும்மாளம் அடித்து, “நீ நல்லா இருக்கயா, நான் நல்லா இருக்கேன்” என்று சொல்லிவிட்டு, பாசத்தைப்பொழிவதுபோல பாசாங்கு செய்துவிட்டு, பிரிந்து செல்வது மட்டுமே, இன்றைய சூழ்நிலைக்கு ஒத்து வரக்கூடும் என்ற என் எண்ணத்தினை இங்கு பகிர்ந்து கொண்டு, அதையே என் பதிலாக பதிவு செய்து விடைபெற்றுக்கொள்கிறேன்.
வணக்கம்.
வாய்ப்பளித்த தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன்
திருமதி. வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன்
>>>>>
11]
நீக்குதினமலர் - பெண்கள் மலரில் வெளியிடப்பட்டுள்ளதோ, இதன் மிக மிகச்சிறிய, சுருக்கோ சுருக்கென்று சுருக்கிய ஏதோவொரு பகுதி மட்டுமே.
இதுபோல நம் எழுத்தை எடிட் செய்து வெளியிடும் பத்திரிக்கையில் எல்லாம் எழுதி புகழ்பெற்றதெல்லாம் போதும் போதும் என்று எனக்கு வெறுப்பாகிப்போய் 3-4 வருடங்கள் ஆகிவிட்டன.
நாம் நம் கருத்துக்களை தங்கு தடையின்றி மனம் திறந்து எடுத்துச்சொல்லத்தான், நமக்கு நம் சொந்த வலைத்தளம் இருக்கிறதே !
ஏன் இனி கவலை? ;)))))
அன்புடன் கோபு [VGK]
ooooooooooo
ஹாட் ட்ரிக் அடித்த, இன்னமும் அடிக்கப்போகும் திரு ரமணி அவர்களுக்கும், திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல ஹாட் ட்ரிக் அடிக்கவும் பிரார்த்தனைகள். இந்தப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற திருமதி ராஜராஜேஸ்வரிக்குச் சிறப்பு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபேரக்குழந்தை அழகா இருக்கு... மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்! அப்ப திருச்சிக்கு வந்தா ட்ரீட் இருக்கு..! திருச்சியில் பெரிய ஹோட்டல்ல விருந்து..
பதிலளிநீக்குஉஷா அன்பரசு March 10, 2014 at 12:59 PM
நீக்குவாங்கோ டீச்சர். வணக்கம் டீச்சர்.
//பேரக்குழந்தை அழகா இருக்கு... மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்! //
சந்தோஷம். மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.
//அப்ப திருச்சிக்கு வந்தா ட்ரீட் இருக்கு..! திருச்சியில் பெரிய ஹோட்டல்ல விருந்து..//
வந்தா ???????? நிச்சயம் உண்டு. இதென்ன பிரமாதம். ;)
பிரியமுள்ள கோபு
உங்கள் வீட்டுப் புது வாரிசு வருகைக்கு என் வாழ்த்துக்கள். உங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.
பதிலளிநீக்குபரிசு வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரிக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
rajalakshmi paramasivam March 10, 2014 at 1:17 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//உங்கள் வீட்டுப் புது வாரிசு வருகைக்கு என் வாழ்த்துக்கள். உங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.//
மிகவும் சந்தோஷம், மேடம். மிக்க நன்றி.
அன்புடன் கோபு
தங்கள் இல்லத்தின் புது வாரிசுக்கும், பெற்றோர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள். குழந்தை,எல்லா வளமும் நலமும் பெற்று, பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!.
பதிலளிநீக்குஹாட் ட்ரிக் சாதனையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
அற்புதமான போட்டியை நடத்தி, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தங்கள் சேவை போற்றத்தக்கது!!!!.
பார்வதி இராமச்சந்திரன். March 10, 2014 at 4:12 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்கள் இல்லத்தின் புது வாரிசுக்கும், பெற்றோர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள். குழந்தை,எல்லா வளமும் நலமும் பெற்று, பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!.//
சந்தோஷம். மிக்க நன்றி.
//ஹாட் ட்ரிக் சாதனையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
அற்புதமான போட்டியை நடத்தி, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தங்கள் சேவை போற்றத்தக்கது!!!!.//
மகிழ்ச்சி. தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு
ஹாட் ட்ரிக் சாதனையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குசரியான தகுதி உடையவர்க்கு தான் இப்பரிசு செறிந்துள்ளது.
அற்புதமான போட்டியை நடத்தி, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தங்கள் சேவை போற்றத்தக்கது.
புதுவரவுக்கு நல்வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
viji March 10, 2014 at 4:46 PM
நீக்குஅன்புள்ள விஜி, வாங்கோ, வணக்கம்.
//ஹாட் ட்ரிக் சாதனையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. சரியான தகுதி உடையவர்க்கு தான் இப்பரிசு சேர்[செறி]ந்துள்ளது.
அற்புதமான போட்டியை நடத்தி, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தங்கள் சேவை போற்றத்தக்கது.
புதுவரவுக்கு நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.//
தங்களின் அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியமுள்ள வீ.....ஜீ
படிச்சேன் பேட்டியை. நீங்கள் சொல்வது சரியே. பத்திரிகைகளில் வெளிவருவது எனில் அதற்கேற்ப நாம் வளைந்து கொடுக்க வேண்டி இருக்கும். வெட்டுவது, சுருக்குவது, சேர்ப்பது எல்லாமும் இருக்கும். :)))))
பதிலளிநீக்குஅழகான பேரன் பிறந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி (தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் எங்களுக்கும்). இறை அருளால், அனைத்து வளங்களும் பெற்று, நலமோடும் மன மகிழ்வோடும் வளர, சாதனைகள் பல கண்டிட எனது நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு==>>>
அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 10, 2014 at 8:52 PM
நீக்குவாருங்கள் நண்பரே, வாருங்கள். வணக்கம்.
//அழகான பேரன் பிறந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி (தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் எங்களுக்கும்). இறை அருளால், அனைத்து வளங்களும் பெற்று, நலமோடும் மன மகிழ்வோடும் வளர, சாதனைகள் பல கண்டிட எனது நல்வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகை + அருமையான கருத்துக்கள் + வாழ்த்துகள் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.
மிக்க நன்றி, ஐயா.
அன்புடன் கோபு [VGK]
ஹாட்-ட்ரிக் சாதனையாளர்கள் திரு. ரமணி சாருக்கும் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு===>>>
3-ஆம் பரிசினை வென்றுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் வீட்டு தங்கத்துக்கு என் வாழ்த்துக்கள், மிக அழகு,
பதிலளிநீக்குபரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Jaleela Kamal March 10, 2014 at 10:03 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//உங்கள் வீட்டு தங்கத்துக்கு என் வாழ்த்துக்கள், மிக அழகு,
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் கோபு
VGK சிறுகதை விமர்சன மூன்று போட்டிகளில்
பதிலளிநீக்குஅடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்றுமுறை தேர்வாகியுள்ள
’ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் ’ சகோதரி திருமதி. இராஜராஜேஸ்வரி
அவர்களுக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்! இதே போல் அவர் முதல் பரிசுகளையும் வெல்ல வேண்டும்!
கண்ணன் பிறந்தான் எங்கள்
பதிலளிநீக்குகண்ணன் பிறந்தான் ....
புதுக் கவிதைகள்
பிறந்ததம்மா .... - என்று பேரக் குழந்தையை கொஞ்சி மகிழும் தாத்தா VGK அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோ March 11, 2014 at 9:47 AM
நீக்குவாருங்கள், ஐயா, வணக்கம் ஐயா.
//கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் ....
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா .... - என்று பேரக் குழந்தையை கொஞ்சி மகிழும் தாத்தா VGK அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
பிரியமுள்ள VGK
பேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து வளர வாழ்த்துகிறேன். தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய பேரனுக்கும் எனது மனமார்ந்த ஆசிகள்.--
பதிலளிநீக்குபேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து வளர வாழ்த்துகிறேன். தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய பேரனுக்கும் எனது மனமார்ந்த ஆசிகள்.--
பதிலளிநீக்குRukmani Seshasayee March 11, 2014 at 10:19 AM
நீக்குவாங்கோ .... வாங்கோ .... நமஸ்காரங்கள்.
//பேரனுக்குப் பேரன் பிறந்து தங்கள் குடும்பம் தழைத்து வளர வாழ்த்துகிறேன். தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய பேரனுக்கும் எனது மனமார்ந்த ஆசிகள்.--//
ஆஹா, இதைக்கேட்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாக உள்ளது தெரியுமா ;)))))
தங்களின் அன்பான ஆசியால் எங்கள் குடும்பம் மிகப்பெரிய ஆல விருக்ஷமாகத் தழைத்தோங்கட்டும்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, மிக அழகான மனமார்ந்த ஆசிகளுக்கும் அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அநேக நமஸ்காரங்கள்.
பிரியமுள்ள கோபு [VGK]
அநேக ஆசிகள்.பேரன் பிறந்தது குறித்து மிக்க ஸந்தோஷம். இதையெல்லாம் விட வேறு ஸந்தோஷங்கள் ஈடு இல்லாதது வேறு ஒன்றுமில்லை. அனைவருக்கும் ஆசிகள்,நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎனக்கு மிக உடல்நலக்குறைவு. அப்படியும் எதேச்சையாக நல்ல ஸமாசாரம் கண்மில்பட்டது.
ஸந்தோஷமோ,ஸந்தோஷம். எல்லோரும் நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்.ஆசிகள் உங்கள் ஸந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.அன்புடன்
Kamatchi March 11, 2014 at 3:18 PM
நீக்குவாங்கோ மாமி ...... நமஸ்காரங்கள்.
//அநேக ஆசிகள்.பேரன் பிறந்தது குறித்து மிக்க ஸந்தோஷம். இதையெல்லாம் விட வேறு ஸந்தோஷங்கள் ஈடு இல்லாதது வேறு ஒன்றுமில்லை. அனைவருக்கும் ஆசிகள், நல் வாழ்த்துகள்//
மிகவும் சந்தோஷம் தான் மாமி. தங்கள் ஆசிகளுக்கு நன்றிகள்.
//எனக்கு மிக உடல்நலக்குறைவு. அப்படியும் எதேச்சையாக நல்ல ஸமாசாரம் கண்ணில் பட்டது.//
உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கோ. தங்களின் மனப்பூர்வமான ஆசிகள் கிடைக்கவே இது எதேச்சையாக தங்கள் கண்களில் பட்டுள்ளது. மகிழ்ச்சி.
//ஸந்தோஷமோ,ஸந்தோஷம். எல்லோரும் நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன். ஆசிகள் உங்கள் ஸந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.அன்புடன்//
நன்றி, மிக்க நன்றி.
பிரியமுள்ள கோபு
வணக்கம் ஐயா !
பதிலளிநீக்குபரிசு பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .அழகிய பேரக் குழந்தையை வரமாகப் பெற்ற தங்களுக்கும் பிறந்திருக்கும் அன்புச் செல்வம் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க வாழ்கவெனவும் வாழ்த்துகின்றேன் ஐயா .
அன்பு உள்ளம் March 12, 2014 at 4:00 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//வணக்கம் ஐயா !
பரிசு பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .அழகிய பேரக் குழந்தையை வரமாகப் பெற்ற தங்களுக்கும் பிறந்திருக்கும் அன்புச் செல்வம் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க வாழ்கவெனவும் வாழ்த்துகின்றேன் ஐயா .//
அன்பு உள்ளத்தின் வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். VGK
ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும் மற்றும் திரு ரமணி ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபேரக்குழந்தை பிறந்தமைக்கு இனிய வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி ஐயா.
வேல் March 14, 2014 at 6:01 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும் மற்றும் திரு ரமணி ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!//
சந்தோஷம்.
//பேரக்குழந்தை பிறந்தமைக்கு இனிய வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி ஐயா.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
big congrats sir! your grandson is so cute..may god bless him and his entire family..
பதிலளிநீக்குLeelagovind March 18, 2014 at 1:27 PM
நீக்குWELCOME TO YOU LEELA ! ;)))))
//big congrats sir! your grandson is so cute..may god bless him and his entire family..//
Thanks ....... Thanks a Lot ...... Leela.
I am so Happy to see you here after a very long time. All the Best !
Yours affectionately,
GOPU
இந்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் அவர்கள், தாங்கள் தொடர்ந்து மும்முறை பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
http://jaghamani.blogspot.com/2014/03/blog-post_16.html#comment-form
மணிராஜ் - திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
ஒரு நல்ல விமரிசனம் தந்த திருமதி ராஜேஸ்வரிக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஹப்பா எப்படில்லாம் சூப்பரா விமரிசனம் எழுதி பரிசை தட்டி செல்கிறார்கள். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்
நீக்குஹாட் ட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇன்னும் ஒரு பேரனைப் பெற்ற தாத்தா பாட்டிக்கும் வாழ்த்துக்கள்.
பேட்டி அருமையோ அருமை.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலியைக் கட்டியதும் (வாலாம்பா மன்னி) பூனையாகாது.
Jayanthi Jaya September 27, 2015 at 7:33 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு ரமணி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
//இன்னும் ஒரு பேரனைப் பெற்ற தாத்தா பாட்டிக்கும் வாழ்த்துக்கள்.//
சந்தோஷம்மா :)))))))))))))))))
//பேட்டி அருமையோ அருமை.//
மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)
//புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலியைக் கட்டியதும் (வாலாம்பா மன்னி) பூனையாகாது.//
புலி ..... புலி ..... எனச்சொல்லி என் வயிற்றில் புளியைக் கரைக்காதீங்கோ ..... எனக்கு பயமாக்கீதூஊஊஊஊ. :)
புது பேரக்குளந்தைக்கு நல் வரவு. பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஹாட் டரிக் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாத்யார் வீட்டிற்கு வருகை தந்துள்ள புதிய வாரிசு வரவிற்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு// முதல் பார்வையில் கதையின் தலைப்பு 'உடம்பெல்லாம் உப்புசீடை' என்று கவனத்தைக் கவருகிறது.. அடுத்து பொருத்தமான ஓடும் ரயில்கள், அந்தந்த ரயில் நிலையங்களின் பெயர்களை மிகச்சரியாக அறிமுகப்படுத்தி நாம் அந்தந்த நிலையத்தில் இருப்பதான உணர்வை ஏற்படுத்தி, ரயில் நிலையத்தில் விற்பனைக்கடைகள் என்று காட்சிப்படுத்தி காசிக்கு - கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் உணர்வை வரவழைத்துவிடுகிறார் கதை ஆசிரியர்.// இதே உணர்வினை நான் முந்தைய பதிவிலும் தெரிவித்தேன். முற்றிலும் சரி..ஹாட்ரிக் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்..
//புதுவரவிற்கு எங்களின் நல்லாசிகள்!ஹாட்ரிக் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்கு