என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே !





அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். 

வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது.

புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango.blogspot.com/  வலைப்பதிவருமான திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை சந்திப்பதும், புத்தாண்டுக்கான நாட்குறிப்புப் புத்தகம் (DIARY) கொடுத்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை நினைக்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.  

25.12.2013 அன்று என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 2014-ம் ஆண்டுக்கான புதிய டைரியை முதன் முதலாகக் கொடுத்துச் சென்றார்.

25.12.2014 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2015-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/12/9.html



25.12.2015 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2016-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

 


அதே போல நேற்று 29.12.2016 வியாழக்கிழமை மாலை சுமார் 5.45 மணிக்கு திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்து, பிறக்கவுள்ள 2017-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய DIARY கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி  மகிழ்வித்திருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் இதோ தங்களின் பார்வைக்காக:






2014 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக, நேரில் வருகை தந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிப் புது வருட நாட்குறிப்புப் புத்தகமும் (DIARY) கொடுத்துச்செல்லும், அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய  ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.








என்றும் அன்புடன் தங்கள்


[ வை. கோபாலகிருஷ்ணன் ]


திங்கள், 5 டிசம்பர், 2016

எங்கள் ஊரில், எங்கள் தெருவில் NUMBER ONE பிள்ளை.....யார்?



திருச்சிராப்பள்ளி நகரின் மிகப் பிரபலமான 
உச்சிப்பிள்ளையார் கோயிலைச் சுற்றி
தேரோடும் வீதிகள் நான்கு உள்ளன.

அவற்றில் ஆங்காங்கே பல 
பிள்ளையார் கோயில்கள் உள்ளன.

அவை பற்றிய மேலும் விபரங்களை
‘ஏழைப் பிள்ளையார்’
என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள சுவையான 
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html
இந்தப் பதிவினில் படிக்கலாம்.

இவற்றில் உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து
பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் போது ஐந்தாவது
பிள்ளையாராகவும், வடக்கு ஆண்டார் தெருவின் 
ஆரம்பத்திலேயே முதல் பிள்ளையாராகவும்
வீற்றிருப்பவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர்.

மிகப்பெரிய அரசமரத்தின் அடியில் பல நூறு ஆண்டுகளாக
வீற்றிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் இவர்.

இந்தப் பிள்ளையாருக்கு 04.12.2016 ஞாயிறு காலை
9.30 to 10.30 மணிக்கு வெகு சிறப்பாக 
கும்பாபிஷேகம் நடைபெற்றது.



மேலும் கீழும் உள்ள இந்தப் படங்கள் 
என் பழைய பதிவிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.


கீழேயுள்ள படங்கள் 03.12.2016 சனிக்கிழமையன்று
[கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள்] 
பாலாலயம் செய்யப்பட்ட ஸ்வாமியை 
பிரதிஷ்டை செய்யும் முன்பு எடுக்கப்பட்டவை





கீழேயுள்ள படம், கும்பாபிஷேகத்திற்கான 
யாகசாலை பூஜைகள் நடக்குமிடம்
03.12.2016 சனிக்கிழமை எடுக்கப்பட்டது


04.12.2016 ஞாயிறு காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்
வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நறைபெற்றபோது
எடுக்கப்பட்டுள்ள படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



^தெற்கு பார்த்த மிகச்சிறிய கோயில் 
கோபுரத்தின் உச்சி^



^கோபுர உச்சியைக் 
கிழக்கு திசையில் மேற்கு நோக்கி நின்று 
எடுக்கப்பட்ட புகைப்படம்
EASTERN SIDE VIEW  ^




^யாகசாலை பூஜைகள் + ஹோமங்கள்^






^தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் மூலவர்
ஸ்ரீ வரசித்தி விநாயகர்^


^மேற்கு நோக்கி நின்ற நிலையில்
ஸ்ரீ ஆஞ்சநேயர்^

[இந்த மிகச்சிறிய கோயிலின், பிரக்ஷண பாதையில் 
கிழக்குச் சுவர்புறம்  ..... கிழக்கு நோக்கி 
ஸ்ரீ முருகனுக்கு ஓர் சந்நதியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.]







^ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு எதிரே
சமீபத்தில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற
வடக்கு நோக்கி அமைந்துள்ள ஸ்ரீ கருப்பர் கோயில்^



கும்பாபிஷேகத்திற்கு முன் இருந்த கருப்பர் கோயில்
என் பழைய பதிவிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 

-சுபம்-



என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]