என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

84 ] வேதம் ரக்ஷிக்கப்படணும் !

2
ஸ்ரீராமஜயம்




ஆகாரத்தில் நியமமாக இருக்க வேண்டும். அசுத்தமான ஆகாரத்தைச் சாப்பிடக்கூடாது. 

வேதத்தை ரக்ஷிக்கிறவர்களின் தேகம், சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. 

வேதத்தை ரக்ஷிக்கப் பிறந்தவர்களுக்கு தாரித்ரியம் வேண்டியதுதான். 

தேசம் விட்டு தேசம் சென்று, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிட்டு சம்பாதிக்கிற ஐஸ்வர்யம் வேண்டவே வேண்டாம். 

மந்திர சக்தியை காப்பாற்றிக்கொண்டு, அவரவர்களின் தர்மத்தை அனுஷ்டிப்பதுதான் முதல் கடமை. பணம் சம்பாதிப்பது இரண்டாவது தான். 

தினமும் ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரிகளாவது தவறாமல் விடாமல் பண்ண வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமாவது ஆயிரம் காயத்ரி பண்ண வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும்.

வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு சாப்பாடு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.

oooooOooooo 


கீழேயுள்ள பகுதியின் எழுத்துக்களைப் பெரியதாக்கிப் படிக்க கீ-போர்டில் உள்ள ’கண்ட்ரோல்’ மற்றும் ’ப்ளஸ்’
[Ctrl and PLUS]  ஆகிய இரு பட்டன்களையும் 
ஒரே நேரத்தில் அழுத்தவும். 
மேலும் பெரிதாக்க மீண்டும் அதே போல 
இன்னொருமுறை அழுத்தவும்.


சுவையான நிகழ்ச்சிகள்

[ 1 ]

பல வருடங்களுக்கு முன், ஸ்ரீ காஞ்சி மடத்தில் மஹா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர் ஒரு இளம் வைதீகத் தம்பதி. அந்த இளம் வைதீகருக்கு சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 இருக்கலாம். 

வேறு ஒரு பக்தரிடம் உரையாடிக் கொண்டிருந்த ஆச்சார்யாள், அதை நிறுத்தி விட்டு அந்த தம்பதியை நிமிர்ந்து பார்த்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. 

பெரியவா உற்சாகத்துடன், "ஏண்டாப்பா, நீ மதுரை சேஷு கனபாடிகளோட புள்ளையாண்டான் ரகுநாதன் தானே ? ஆனா... இப்போ உன்னை நான் அப்டி கேக்கக் கூடாது. ஏன்னா... இப்போ நீ ரகுநாத சாஸ்த்ரிகள் ஆயிட்டே! மதுரை ப்ராந்தியத்துலே ஒங்கப்பா மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவனாகவும் ஆயிட்டே" என்று கேட்டு விட்டுத் தொடர்ந்தார். 

"இவ ஒன் ஆம்படையாள் (மனைவின்னு) தெரியறது. இவ திருச்சிராப்பள்ளி வைத்யநாத கனபாடிகளோட பேத்தி, சுப்ரமணிய வாத்தியாரின் ஏக புத்ரி. நான் சொல்லறது சரி தானே? போன வருஷம் ஒங்க கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துண்டு ஒங்க அப்பா கனபாடிகளும், மாமனார் சுப்ரமணிய வாத்தியாரும் மடத்து ஆசீர்வாதத்துக்காக வந்திருந்தாளே. அப்போ நீயும் வந்து நமஸ்காரம் பண்ணினே இல்லியா.. சரி..சரி! இப்போ தம்பதி ஒத்துமையோட சௌக்கியமா இருக்கேளோனோ ?" 
ஸ்வாமிகள் உரிமையோடு கேட்டு முடித்தார். 

உடனே ரகுநாத சாஸ்திரிகள், "ரொம்ப சௌக்கியமா இருக்கோம் பெரியவா, ஒங்க அனுக்ரஹத்திலே" என்று கை கூப்பிச் சொன்னார். 

பெரியவா விடவில்லை. "நீ சொல்லிப்டே. உன் ஆம்படையா வாயே திறக்கலையே” என்று சிரித்தார். 

உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக் கொண்டு, "எம் பேரு அலமேலு பெரியவா... சந்தோஷமாத் தான் இருக்கோம்...சந்தோஷமாத் தான் இருக்கோம்" என்று சொன்னாலும், அவள் குரலில் இழையோடிய வருத்தத்தை கண நேரத்தில் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள். 

"இல்லேம்மா, நீ ஏதோ மன வருத்ததோடு இருக்கேங்கறதை உன் குரல் சொல்லறதே? 
என்ன...சொல்லு...சொல்லு" என்று அன்பாக விசாரித்தார் ஸ்வாமிகள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா" சமாளித்தாள் அலமேலு. 

"இல்லே...இல்லே! உன் குரல் சொல்றதே... நீ ஏதோ வருத்தத்துலே இருக்கேங்கறதை. என்ன விஷயம் சொல்லு" கனிவுடன் கேட்டார் ஸ்வாமிகள். 

அலமேலு தயக்கியபடியே, "பெரியவா, நா ரொம்ப தெய்வ பக்தி உள்ளவள். பால்யத்தில் இருந்தே சாஸ்திர சம்பிரதாயங்கள்ளே பூரண நம்பிக்கை உண்டு. கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய க்ஷேத்ராடனம் எங்க குடும்பத்தோடும், வேண்டியவாளோடும் போயிருக்கேன். அது நேக்கு ரொம்பப் பிடிக்கும். 

இப்போ இவரோடு கல்யாணமாகி ஒரு வருஷமாறது. அதுக்கப்புறம் ஒரு இடம் போகலே பெரியவா. அது தான் வருத்தம்
என்று முடிப்பதற்குள், "ஏன்..ஏன் போக முடியலே ?" என்று இடை மறித்தார் ஸ்வாமிகள். 

அலமேலு தயங்கியபடியே, "விவாஹதுக்குப் பிறகு நான் தன்னிச்சையா தீர்த்த யாத்திரை போக முடியாதோலியோ பெரியவா! பர்த்தாவும் (கணவனும்) கூட வந்தாத் தானே யாத்ரா பலன் கிடைக்கும் ? ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன். வரமாட்டேன்கறார்" என்று விவரித்தவள், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள். 

விஷயத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள், "அழப்படாது.. அழப்படாது!" என்று சமாதானப் படுத்திவிட்டு, "என்ன ரகுநாத சாஸ்த்ரிகளே, ஆம்படயாளை இப்படி கண் கலங்க விடலாமோ ? நல்ல விஷயம் தானே சொல்லறா ? தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனம் கூப்பிட்டா போயிட்டு வர வேண்டியது தானே ? அதுல என்ன சிரமம் ?" என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார். 

இளைஞர் ரகுநாத சாஸ்திரிகள் மீண்டும் ஒரு தடவை பெரியவாளை நமஸ்கரித்து எழுந்து பவ்யமாகச் சொன்னார், "அவ சொல்லறதும் நியாயம் தான் பெரியவா. ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை... பத்து நாளுக்குக் குறையாம மத்தவாளோட சேர்ந்து வட தேச க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போயிட்டு வரணும்கறா. ஆகிற காரியமா அது பெரியவா? "

"ஏன் போயிட்டுத்தான் வாயேன். ஆம்படயா தானே அன்போட கூப்பிடறா” இது ஸ்வாமிகள். 

உடனே ரகுநாத சாஸ்திரிகள் குரல் தழுதழுக்க, "பெரியவாளுக்கு எல்லாம் தெரியும். நா வைதீகத்தை வ்ருதியா (தொழிலா) வெச்சுண்டுருக்கேன். அப்பாவுக்கும் ஒடம்பு முடியலே. அவர் பார்த்துடுண்டு இருந்ததை எல்லாம் இப்போ நா பாக்கறேன். வ்ருத்தியை விட்டுட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் பத்து பதினஞ்சு நாள் நான் எப்படி இவளோட யாத்திரை போக முடியும் பெரியவா ? நீங்களே சொல்லுங்கோ” என்று முடித்தார். 

சற்று நேரம் மௌனமாக இருந்த பெரியவா, பிறகு சிரித்துக் கொண்டே, "ஓஹோ! இந்த விஷயத்துலே என்னை சரியான மத்யஸ்தம் பண்ணி வெக்க சொல்லி கேக்க வந்தேளாக்கும் ?" என்று கூறி விட்டு தொடர்ந்தார், "அலமேலு சொல்லறதும் ஞாயம் தான். அவளுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்திரை போறத்லே ஒரு ருசி இருக்கு. கல்யாணம் ஆனப்புறம் பர்தாவுடன் (கணவனுடன்) போனத் தான் 'யாத்ரா பலன்' கிட்டும்கறதையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கா. ஆனா, நீ சொல்றதிலேயும் நியாயம் இருக்கு. நோக்கு வ்ருத்தி வைதீகம். மாசம் முப்பது நாளும் ஜோலி சரியா இருக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஆம்படயாளுடன் தீர்த்த யாத்திரை போறது ரொம்ப ரொம்ப சிரமம். என்ன பண்ணறது ?" 

”நீங்கதான் ஒரு மார்க்கம் சொல்லணும் பெரியவா..." இருவரும் கோரஸாக ஸ்வாமிகளைப் பிராத்தித்தனர். ஸ்வாமிகள் சற்று நேரம் யோசனை பண்ணியபடியே அமர்ந்திருந்தார். 

என்ன சொல்லப் போகிறாரோ என அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். 

ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார். 

"அலமேலு! ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் தீர்த்த யாத்ரா போகணும்க்கரதுலே நீ தீவிரமா இருக்கே. அதுலேயும், பர்த்தாவும் கூட வந்தாத் தான் யாத்ரா புண்ய பலன் கிடைக்கும்கற தர்ம சாஸ்திரத்தையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கே. வைதீகத்தை தொழிலா வச்சுண்டு இருக்கறதாலே, யாத்ரைக்கு உன் கூட அவர் வர்றது ரொம்ப சிரமம்ங்கறார். ஒரு காரியம் பண்ணுங்கோ...” ஆச்சார்யாள் முடிப்பதற்குள், "அனுக்ரகிக்கணும் பெரியவா" என்றனர் தம்பதி.

ஸ்வாமிகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, "ஒரு மார்க்கம் சொல்றேன். கேளு அலமேலு. நீ எப்ப தீர்த்த யாத்ரைக்குப் கிளம்பினாலும், பொறப்படறதுக்கு முன்னாடி, ஆத்துக்காரரை கிழக்கே பார்த்து நிக்கச் சொல்லி நமஸ்காரம் பண்ணி பிரார்த்தனை பண்ணு. 

நீ என்ன பண்ணறே ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்க வஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, "இது நா உன் கூட தீர்த்த யாத்திரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போயிட்டு வா"னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்... ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம் தானே ?" என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார். 

மஹா பெரியவாள் சொன்ன இந்த பதிலால் இளம் தம்பதிக்குப் பரம சந்தோஷம். பெரியவாளை நமஸ்கரித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். 
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பெரியவாளின் சமயோசிதமான இந்த அனுக்ரஹத்தை கேட்டு, வியந்து மகிழ்ந்தனர்.

[Thanks to Amritha Vahini 25.09.2013]

oooooOooooo

[ 2 ]


சிவசங்கரன் என்பவர் ஸ்ரீமடத்தின் நெடுநாளைய பக்தர். ஒரு முறை அவர் தரிஸனத்துக்கு வந்த போது, ஒர் அனுக்கத் தொண்டர், அவரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு விட்டார்.


சிவசங்கரனுக்கு எல்லையில்லாத வருத்தம். உடனே தான் பட்ட அவமானத்தை ஓடி சென்று பெரியவாளிடம் புகார் செய்கிற அநாகரீகர் இல்லை அவர்.



பெரியவாளிடம் தனித்துப் பேசக்கூடிய வாய்ப்பு வந்தது.



“மடத்துத் தொண்டர்களில் சில பேர்கள் துஷ்டர்களாக இருக்கிறார்கள். தவறு செய்கிறார்கள். பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவா இப்படிப் பட்டவர்களையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிதான் சமாளிக்க முடிகிறதோ…” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சொல்லி விட்டார்.



பெரியவாளுக்கு ஒரே சிரிப்பு. 



“நீ சொல்கிற தகவல் எனக்கு ஒன்றும் புதுசில்ல” என்று ஒரு பார்வை.



பின்னர் சொன்னார்:



”ஆயிரம் பேர் வேலை செய்கிற ஒரு பாக்டரியில் எல்லாத் தொழிலாளர்களும் திறமைசாலிகளாக, யோக்யர்களாக, ஸின்ஸியராக இருக்கிறார்களா? 

அரசாங்கத்தில் லட்சகணக்கான பேர் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒரே லெவலில் இருப்பதில்லை. நிறையப் பேர் வேலை சரியாகச் செய்வதில்லை; அல்லது, தப்பும் தவறுமாகச் செய்கிறார்கள். அவர்களை அப்படியே வீட்டுக்கு அனுப்ப முடியல்லே. அவர்களை வைத்துக் கொண்டே தான் ராஜாங்கம் நடக்கிறது. 


ஏனென்றால், அரசும் – அதற்கு ஒரு தலைமையும் – அவசியம்.


தலைமை சரியாக இருக்கான்னு பார்த்தாலே போதும். அவ்வளவுதான் முடியும்.

“ஸ்ரீமடம் ஒரு சமஸ்தானம். பல வகையான சிப்பந்திகள் இருக்கத் தான் செய்வார்கள்…” என்று சொல்லிவிட்டு, “உனக்கு பரமேசுவரனை தெரியுமோ?” என்று கேட்டார் நம் உம்மாச்சி தாத்தா.


சிவசங்கரனுக்கு ஐந்தாறு பரமேசுவரன்களைத் தெரியும். அவர்களில் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தார்.



”நான் கைலாசபதி பரமேஸ்வரனைச் சொன்னேன்… அவர் கழுத்தில் பாம்பு இருக்கு. கையில் அக்னி, காலின் கீழ் அவஸ்மாரம் இருக்கு. அவருடைய ருத்ரகணங்கள் எல்லாம் பிரேத, பைசாசங்கள் ! இத்தனையையும் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு தான் அவர் உலகம் பூரா சஞ்சரிக்கிறார். நடனமும் ஆடறார்.



“பாம்பைக் கீழே போட்டுவிட்டால் அது திரிந்து எல்லோரையும் பயமுறுத்தும், கடிக்கும். 



நெருப்பை கீழே போட்டால், வீடு - காடு எல்லாவற்றையும் அழிச்சிடும். 



அபஸ்மார தேவதையை போக விட்டால், கண்ட பேர்களையெல்லாம் தாக்கி மயக்கம் போடச் செய்யும். 



ப்ரேத – பைசாசங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். 



இப்படி துஷ்டர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது தான் பரமேசுவரனுடைய பெருமை!”



சிவசங்கரன் அசந்து போய் நின்றார். பெரியவா ஏதோ சமாதானம் சொல்லித் தன்னை அடக்குவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், என்ன தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதிலைக் கூறி விட்டார்.

உம்மாச்சி தாத்தா சாக்ஷாத் பரமேஸ்வரனே!!!

[நன்றி: அமிர்த வாஹிணி 11.11.2013]

oooooOooooo

[ 3 ]


"I shall be with you 

till your Attainment,

this is My promise!" 


- MAHAPERIYAVAA



There was a Bank Director in Paris, France. He was keen on having a darshan of Periyava, having heard about HIM. 

Dr. Raghavan used to receive frequent phone calls (from the Bank Director). He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan (who was a Sanskrit Professor in the Madras University) would inform Periyava about the request. 


Even though he had told, "He is very keen to have darshan of Periyava; he incessantly calls me", Periyavar did not give HIS consent. Some years passed in this way.



Suddenly one day Dr. Raghavan received tidings that said, 'I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Should please arrange for the darshan.'



At that time Acharyas were staying in Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan of Periyava. Periyava called him and inquired. When told about the Frechman's proposed visit to Chennai, Periyava looked at him intently for a moment then looked elsewhere at a distance as if talking to someone mentally and then said, "Alright, bring him."



Before Periyava sat for the upanyAsam after the pooja, He called one of the mutt-inmates and said, "If any European turns up, offer him a chair, as he would not be able to sit on the floor. I shall see him after the upanyAsam."



When the upanyAsam was over and Periyava was about to get inside, He asked, 



"Did anyone turn up?" 

"No one turned up", replied. 

At that time a man wearing a dhoti and towel came to the front and prostrated to Periyava four times. (The sampradaya is to always prostrate to sannyAsis four times.) 

Behind the man came Dr. Raghavan and SankaraNarayana Aiyer (professor of Philosophy at Mylai Vivekananda College). Since that European came in dhoti and towel the mutt-inmate was misled. 

Periyavar enquired the mutt-inmate, "Ask him how did he knew about prostrating four times?" 

The European said, "I did as everyone did here."

Periyavar  directed the mutt-inmate, "Bring only the Frenchman." 


The mutt-inmate said, "I wouldn't understand the English he speaks. It would be better if Dr. Raghavan or SankaraNarayana Aiyer is present."



"The English you know would suffice. You bring him," quipped Periyava. 



Dr. Raghavan and SankaraNarayana Aiyer stood outside the thatti (a coconut leaf weaved sheet of cover). 



The Frenchman who came inside and sat spoke: "I am studying Vedanta for sometime now. Suddenly, one day I felt that my entire body had gone numb, that I was residing outside the body, and my figure was extended from the earth to the sky. I also saw universes hanging from my body. It was very blissful at that time. There was no trace of sorrow. After this incident, nothing bothers my mind in my daily life. My wife deceased. My son too is dead. These occasions did not create any ripple in my mind, I felt that I am not connected with anyone of them. I was always blissful. Since, I am alien to all these, I request your guidance....



(He paused for a moment....)



Also, people in the Bank think I am insane, looking at this mental state of mine. So I have an inherent fear that one day they might put me behind the bars (of a hospital)."



Periyava uttered cryptically with love beaming in his face and a strange kind of admiration at the Whiteman, "What is inside? And what is outside? Isn't everything inside four walls?"

This question seemed to created a big change in the Frenchman. His eyes were seen brimming with tears as if he was one with the universe represented by the Pontiff.

There was a pregnant pause, not a leaf whispered...

Then he composed himself and requested Periyava, "YOU should be always with me." 

He also asked Periyava to proffer him some upadesham.

Periyava advised, "What you are doing now (meditation), you continue. 


I shall be with you till your 

attainment. This is my promise." 





HE then as a rare gesture of benediction, tore a piece of the worn out khadi spun-vastram HE was wearing then and gave it to the Frenchman with the words, "Keep this always with you as my prasAdam(holy sacrament)" 

Such was the bountiful heap of anugraha for the Frenchman that day that he was inebriated with joy as he left the mutt.

Coming outside, the Frenchman prostrated to Dr. Raghavan and said, "It was only because of you I got this much bhAgyaM (pronouncing the word Bhaagyam with great difficulty)."

Periyava went to bed after they were gone after some period of silence and rumination. HE shifted his glasses which HE rarely wore for sometime and placed it down and was preparing his small bedsheet to sleep.

After HE retired, the mutt-inmate asked about the incident and why this grace to a whiteman whether he was really worth as many of the westerners having euphoric feelings construe it as something great.

Without replying anything to him, Periyava lapsed into sleep. 

HE called him(the mutt-inmate) the next morning before HE started his one hour japam. 

HE asked, "Do you know how many Nayanmars(Top - most shivite siddhas respected for their high spiritual status and shiva-bhakthi in Tamizhnadu) are there?"

He replied,  "The Arupathu Moovar Utsavam is held every year)! So, only sixty-three. This is but obvious even a child in Tamizhnadu can answer this."

"Go to the Kapaleeswarar temple(near Mylapore Sanskrit Temple), count and come back," HE said.

When he did it, he counted sixty-seven to his consternation.

He told this to Periyava.(** In fact, after hearing this story, I (Author-Shreeram Balijepalli) too went to the temple and counted it, though hitherto, I had been offering Vilva patra(Bel leaves) to each Nayanmar but always used to assume like the mutt-inmate, it was 63 nayanmars)

"Who are those four people in excess?" HE asked the mutt-inmate.

He went back to the temple, inquired and came back. "One of them is the 'appAlum adi sarndharukku adiyAr!'" He said.

Periyavar  graced me with the knowledge, 

"AppAl is those who are beyond desam(country) and kAlam(time). Since the element of time is involved, it also refers to the adiyArs to be born in the hereafter (in the future). This man is beyond desam(France). He has just four janmas (the future birth when he would become a Nayanmar) left!"

This left the mutt-inmate speechless. 

The Frenchman was never to be seen again both in his country and in India.

{Thanks to Mr. M J Raman Sir 
[of MANAKKAL] 
now at Mumbai 
for sharing this with me on 20.11.2013}  




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

52 கருத்துகள்:

  1. வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு சாப்பாடு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.

    அன்னம் ஔஷதம் ...

    பதிலளிநீக்கு
  2. ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்க வஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, "இது நா உன் கூட தீர்த்த யாத்திரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போயிட்டு வா"னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்... ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம் தானே ?" என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார்.

    சமயோசிதமான அனுக்ரஹம் ..!

    பதிலளிநீக்கு
  3. என்ன தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதிலைக் கூறி விட்டார்.

    அமிர்தவாஹிணியாய் சமத்காரமான பதில்..!

    பதிலளிநீக்கு
  4. சுவையான இப் பகிர்வினை மீண்டும் சுவைக்க வருவேன் .தொடரட்டும் தங்கள் தெய்வீகப் பகிர்வுகள் மேலும் மேலும் .

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான பதிவுகள். படிக்கப் படிக்க பரவசம்; மஹாப்பெரியவாள் மீது உள்ள பக்தி மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது; அதுவும் ஒரு சந்தோஷம்தானே.

    பதிலளிநீக்கு
  6. படிக்க படிக்க பரவசம்..தொடரட்டும் அமுதமழை...

    பதிலளிநீக்கு
  7. உலகியலை ஒட்டி வாழ்வியலை சொல்வதுதான் பெரியோர்கள்..
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. கைலாஸபதி பரமேசுவரனைச் சொன்னேன். குடும்பங்களிலும்
    எல்லா குணமுமுள்ளோர் மத்தியில்தான் வசிக்கிறோம். எது தெரிந்து,எதைவிட்டு, எங்கு போக முடியும்?
    பதிவுகளில் காணப்படும் ஒவ்வொரு விஷயமும், நமக்காக எழுதப்பட்டதோ என்று நினைக்கும்படி, அர்த்தமுள்ளதாக இருக்கிரது.
    ஒவ்வொருத்தருக்கு , நடக்கக் கூடியதான பதில்கள். வியக்கும்படியான பரமாசாரியார் அவர்கள் இல்லையா?
    நல்ல நல்ல பதிவுகளைக் கண்டு நாமெல்லோரும் வியப்பதில்
    அர்த்தமுள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. "அவரவர்களின் தர்மத்தை அனுஷ்டிப்பதுதான் முதல் கடமை."

    அற்புத மழையில் நனைகின்றோம்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அய்யா, தம்பதியர்களுக்கு எவ்வளவு அற்புதமான ஒரு வழியைத் தன் கூர்திறன் அறிவால் அளித்து விட்டார். நல்லவர்களை மட்டும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உலகம் முழுதும் தேடினாலும் யார் கிடைப்பார்கள்! பெரியவா மிகச் சரியான வாழ்வியல் உண்மையை இறைவனை மேற்கோள்காட்டி இயம்பியது மிகப்பொருத்தம். அழகான பதிவு படிக்கப் படிக்க இன்பம் பகிர்வுக்கு நன்றி அய்யா. தொடருங்கள் உங்கள் ஆன்மீகப்பயணத்தை வாழ்த்துக்களும் நன்றிகளும் அய்யா..

    பதிலளிநீக்கு
  11. பசித்தபின் புசி
    என்றனர் நம் முன்னோர்.
    எவ்வளவு தெளிவானவர்கள் நம் முன்னோர்.
    வயிற்றிற்காக உண்ணாமல், நாக்கிற்காக அல்லவா
    உணவு உண்டு வருகிறோம்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  12. பெரியவா வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு பாடம் ஊட்டுபவையாக அறிவுரை தருபவையாக அருமையாக அமைந்துள்ளது! சிறப்பான பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ரசித்துப் படித்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் .பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. ரசித்தேன்... பெரியவரின் அற்புதமான பேச்சுத் திறமையை...

    பதிலளிநீக்கு
  15. கணவனுக்கும் அணுக்கமாக மனிவிக்கும் திருப்தியாக உபாயம் சொல்லியிருப்பது அருமை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று அழகாய் சொல்லி விட்டார் மஹா பெரியவர்.அவர் மேலிருக்கும் பக்தி இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
    தொடருங்கள்..... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வை.கோ - வேதம் ரட்ஷிக்கப்படணும் -பதிவு நன்று நன்று.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் படங்கள் அருமை.

    //ஆகாரத்தில் நியமமாக இருக்க வேண்டும். அசுத்தமான ஆகாரத்தைச் சாப்பிடக்கூடாது. //

    //வேதத்தை ரக்ஷிக்கிறவர்களின் தேகம், சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. //

    //தேசம் விட்டு தேசம் சென்று, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிட்டு சம்பாதிக்கிற ஐஸ்வர்யம் வேண்டவே வேண்டாம். //

    // பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல. //

    இளம் தம்பதிகளின் பிரச்னையை அன்பாக ஆறுதல்கூறி - அருமையான வழியும் கூறித் தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் பேச்சுத்திறமை அருமை.

    நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. முதலிரு கதைகளும் வாசித்தேன் நல்ல பாடங்கள்.ஆங்கிலமு வாசிக்க நிறைய நேரம் வேண்டும்....தமிழ் போல சரளமாக ஓடமுடியாது.
    எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே புதிய விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வேதம் ரக்ஷிக்கப்படவேண்டும் பணம் சம்பாதிப்பதற்க்காக அன்னியதேசம் செல்லதேவையில்லை காயத்ரிஜபம் விடாமல் செய்து மந்த்ரசக்தியைதக்கவைத்துக்கொள்ளவேண்டும் பசிக்குத்தான் சாப்பாடு நல்ல அருமையான உபதேசங்கள்.இளம் தம்பதியற்க்கு தீர்வு சிவசங்கரன் அவர்களுக்குவிளக்கங்கள் 63நாயன்மார்களென்றுதான் இது நாள்வரை தெரியும் மேலும் [அப்பாலும்]நால்வருண்டு புதியசெய்தி

    பதிலளிநீக்கு
  20. அறியாதன அறிந்தேன்
    தங்கள் இந்த அற்புதமானத் தொடரைப் படிப்பவர்கள்
    நிச்சயம் குழப்பங்களிருந்து விடுதலை பெறுவார்கள்
    தெளிவு பெறுவார்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  21. // ”நான் கைலாசபதி பரமேஸ்வரனைச் சொன்னேன்… அவர் கழுத்தில் பாம்பு இருக்கு. கையில் அக்னி, காலின் கீழ் அவஸ்மாரம் இருக்கு. அவருடைய ருத்ரகணங்கள் எல்லாம் பிரேத, பைசாசங்கள் ! இத்தனையையும் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு தான் அவர் உலகம் பூரா சஞ்சரிக்கிறார். நடனமும் ஆடறார். //

    பெரியவரின் நல்ல உதாரணம்.

    சென்ற பதிவில்
    // பின்னால் குரல் கேட்டது.
    “டேய் பாலாஜி !உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !” //
    என்று சஸ்பென்ஸ் வைத்து எழுதி இருந்தீர்கள். இந்த பதிவில்
    சிவசங்கரன் பாகீரதி தம்பதியருக்கு காணாமல் போன அவர்களது மகன் கிடைத்தானா? இல்லையா என்பது பற்றி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். விடை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ November 23, 2013 at 7:07 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //சென்ற பதிவில் பின்னால் குரல் கேட்டது.
      **“டேய் பாலாஜி ! உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !” **
      என்று சஸ்பென்ஸ் வைத்து எழுதி இருந்தீர்கள். //

      ஐயா, அந்தக்கதை நான் எழுதியது அல்ல. அது நான் ’படித்ததில் பிடித்தது’ மட்டுமே.

      //இந்த பதிவில் சிவசங்கரன் பாகீரதி தம்பதியருக்கு காணாமல் போன அவர்களது மகன் கிடைத்தானா? இல்லையா என்பது பற்றி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். விடை இல்லை.//

      நான் படித்ததிலும் அதற்கு விளக்கமான விடை இல்லை தான், ஐயா.

      அந்த தம்பதிகள் உலக நாடுகள் பலவற்றிலும் தேடியதாகச் சொல்லும் தங்களின் ’காணாமல் போன மகனை’ இங்கு ஸ்ரீ மஹாபெரியவாளிடம் உருக்கமாக அந்த அம்மா பாகீரதி வேண்டிக்கொண்டு, அவரின் அருள் பார்வையும் ஆசிகளும் பரிபூரணமாக கிடைத்து விட்டதால், ஒருவேளை அவர்களின் மகன் அங்கு ஸ்ரீ சங்கர மடத்திலேயே கிடைத்திருக்கலாம் என்று நாமாக யூகிக்க மட்டுமே முடிகிறது.

      அப்படித்தான் நடந்திருக்கும் என நாமும் நேர்மறையாக எடுத்துக்கொள்வோம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  22. "I shall be with you




    till your Attainment,





    this is My promise!"

    இது போதும் எனக்கு
    விஜி

    பதிலளிநீக்கு
  23. அஜீமும்அற்புதவிளக்கும் has left a new comment on your post "84 ] வேதம் ரக்ஷிக்கப்படணும் !":

    கோபாலகிருஷ்ணன் சார் ,உங்கள் பெரியவா தொடர்பாக நீங்கள் இடும் பதிவுகள் நிச்சயமாக இளையதலைமுறைக்கு ஓர் வரப் பிரசாதமாக இருக்கும்.

    இன்றைய அவசர கால கட்டத்தில் நம் இளைய தலைமுறை அடங்குவது இணையத்துக்கு முன் தான்.

    எப்போதாவது அவர்களுக்கு மடத்துப்பெரியவர்களை பற்றி படிக்க விரும்பினால் நிச்சயமாக இதை படிக்க வாய்ப்பு கிடைக்கும் .

    தொடரட்டும் உங்கள் சேவை .

    பதிலளிநீக்கு
  24. //ஆகாரத்தில் நியமமாக இருக்க வேண்டும். அசுத்தமான ஆகாரத்தைச் சாப்பிடக்கூடாது. //

    ஏனெனில் அன்னம் அமிர்தம்!..

    பதிலளிநீக்கு
  25. படிக்கப் படிக்க எவ்வளவு புத்திசாயாகவும் தீர்க்க தரிசியாகவும் இந்த மஹான் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது! பகிர்வுக்கும் இந்த சேவைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இந்தப் பதிவின் படங்கள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
  27. அமுத மொழிகள் அருமை! மஹாபெரியவாளின் விளக்கம் எளிமையாகவும் ஆழமான கருத்துகளுடன்- வியப்பளித்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  28. // வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு சாப்பாடு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.//

    பசிக்கு சாப்பிட வேண்டுமே தவிர ருசிக்கு அல்ல! என அருமையாகச் சொன்ன அமுத மொழி!

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  29. Very interesting and informative sir, thanks a lot for sharing it with us...

    பதிலளிநீக்கு
  30. வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு சாப்பாடு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.//

    அமிர்தமானஅமுத மொழி.

    இளம் தம்பதிகளுக்கு அருமையான அறிவுரை சொல்லி இருக்கிறார்.
    நீங்கள் பகிர்ந்த செய்திகள் யாவும் பயனுள்ளவை.. வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. சிறப்பான அனுபவங்கள். அமுத மொழிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
  32. ரகுநாத சாஸ்திரிகளுக்கும் அவர் மனைவி அலமேலுவுக்கும் இடையிலான மனத்தாபத்தை அழகாக தீர்த்துவைத்தமையாகட்டும், சிவசங்கரனின் மன உளைச்சலுக்கு, உலகியலை ஒட்டிய பதிலை அவர்மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் எடுத்தியம்பிய விதமாகட்டும் வியக்கவைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  33. பசித்துதான் புசிக்கவேண்டும் .
    ருசித்துதான் உண்ணவேண்டும்
    தவறில்லை .

    ஆனால் ருசிக்காக மட்டும் உண்ணக்கூடாது .
    உண்டால் உடல் குண்டாகிவிடுவோம்
    குண்டானால் உடலில் நோய்கள் வெடிக்கும் .

    வேதம் படித்தவர்கள் உலக நன்மைக்காக
    அதை தினமும் ஓதவேண்டும். அவர்களுக்கு விதிக்கப்பட அனுஷ்டானங்களை விடாமல் செய்ய வேண்டும்

    அவர்கள் அடுத்த தலைமுறைக்கு வேதத்தை கற்றுத் தர வேண்டும்

    அதனால்தான் அவர்களை வேத வித்து என்று அழைத்தனர்.

    ஆனால் இன்று சிலர் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    வேதம் அழிந்தால் நம்முடைய கலாசாரமே அழிந்துவிடும். அதன் வேர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. யாரும் அதை ஒன்றும் செய்யமுடியாது. மழை பெய்தவுடன் பயிர் பச்சைகள் முளைத்து துளிர் விடுவதுபோல் தகுந்த சூழ்நிலைகள் தோன்றியவுடன் வேதம் தழைத்து தளிர் விட தொடங்கிவிடும்.

    அதனால்தான் பெரியவா வேத சம்ரக்ஷ்ணனதிர்க்கு மிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார்
    அவர் ஒரு யுக புருஷன் ஆவார்.

    பதிலளிநீக்கு
  34. //தினமும் ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரிகளாவது தவறாமல் விடாமல் பண்ண வேண்டும்.//

    எவ்வளவு relaxation கொடுத்திருக்கா.....

    பதிலளிநீக்கு
  35. /// பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.... ///

    இதை ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டும்...

    தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதில் மிகவும் அருமை ஐயா...

    நீங்கள் மட்டும் தகவல் அனுப்பியிருக்காமல் இருந்தால் இந்த சிறப்பான பகிர்வை வாசிக்க முடியாமல் இருந்திருக்கும்.... மிக்க மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  36. உங்களை விரைவில் சந்திக்க வேண்டும் எனும் ஆவல் தான் கூடுகிறது...

    பதிலளிநீக்கு
  37. அந்த வெளிநாட்டுக்காரர் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்.
    கணவனுக்கும், மனைவிக்கும் திருப்தி ஆவதுபோல மஹா பெரியவா பிரச்னையை தீர்த்தது ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. படிக்கப் படிக்க ஆனந்தமே!

    பதிலளிநீக்கு
  38. அனைத்து சம்பவங்களும் படிக்கப் படிக்க சுவாரஸ்யம். என்னால் அதிகம் பின்னூட்டம் போட முடியாமல் இருக்கிறது கோபு அண்ணன்.. அதனால உங்கட கிளியாரிடம் சொல்லி விடுங்கோ.. அதிரா கணக்கில ஒன்று, ஆஷா கணக்கில ஒன்று, போஸ்லே கணக்கில ஒன்றுமாக ... மீ ஒன்று போட்டால் 3 என கணக்கெடுக்கச் சொல்லி:)).. இல்லையெனில்.. .....................................................ஒண்ணும் பண்ண மாட்டேன் எனச் சொல்ல வந்தனாக்கும்:).

    பதிலளிநீக்கு
  39. மனிதர்கள் பலவிதம். அவர்களை அனுசரித்துத்தான் போகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  40. மனிதர்கள் எல்லாரும் ஒன்னு போலவா இருப்பா. பலவிதம்தானே.

    பதிலளிநீக்கு
  41. // வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு சாப்பாடு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.//

    உண்டி சுருங்கல் பெண்டிற்கு மட்டும் அல்ல, எல்லாருக்குமேதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //உண்டி சுருங்கல் பெண்டிற்கு மட்டும் அல்ல, எல்லாருக்குமேதான்.//

      ஆஹா, நம் ஜெயாபோல உண்டிச் சுருங்க வேண்டுமென எனக்கும் மிகவும் ஆசைதான். ஆசையிருக்கு .......... பண்ண, ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு ..................................... :)

      உண்டு உண்டு ...... என்னால் ’குண்டு’ ஆக மட்டும்தான் முடிகிறது. என்ன செய்ய?

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
      ’உனக்கே உனக்காக’

      மீண்டும் ஒருமுறை போய்ப் படித்துக்கொள்ளவும். :)))))

      >>>>>

      நீக்கு
  42. // நீ என்ன பண்ணறே ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்க வஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, "இது நா உன் கூட தீர்த்த யாத்திரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போயிட்டு வா"னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்... ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம் தானே ?" என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார். //

    அறிவுக்குப் புரிந்தாலும் மனதுக்குப் புரிவதில்லையே. அவரை விட்டுவிட்டு எங்கும் யாத்திரை செல்ல முடியவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறிவுக்குப் புரிந்தாலும் மனதுக்குப் புரிவதில்லையே. அவரை விட்டுவிட்டு எங்கும் யாத்திரை செல்ல முடியவில்லையே.//

      வேண்டாம் ஜெயா. வேண்டவே வேண்டாம். எங்கு சென்றாலும் அவருடன் சேர்ந்தே ஜாலியாகப் போய் வாருங்கள். அப்போதுதான் அவருக்கும் ஓர் யானைபலம் கிடைத்துள்ளதுபோல தைர்யமாக இருக்கும்.

      >>>>>

      நீக்கு
  43. பிரெஞ்சு நாட்டவருக்கு அருளிய விதம் அருமையோ அருமை.

    நான்கூட 63 நாயன்மார்கள் என்றுதான் நினைத்தேன். அடுத்த முறை திருமயிலை சென்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

    //"AppAl is those who are beyond desam(country) and kAlam(time). Since the element of time is involved, it also refers to the adiyArs to be born in the hereafter (in the future). This man is beyond desam(France). He has just four janmas (the future birth when he would become a Nayanmar) left!"//

    இந்த வரிகளைப் படித்ததும் மெய் சிலிர்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த வரிகளைப் படித்ததும் மெய் சிலிர்த்தேன்.//

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும், முத்தான முக்கனிச்சாறு போன்ற அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  44. பலவிஷயங்கள் படிக்க படிக்க பிரமிப்பா இருக்கு. மறுபடி ஒவ்வோரு பதிவையும் நிதானமாக படிக்க வருவேன். அமுது இருக்கிற இடம் தெரிந்து விட்டது. வேண்டும்போதெல்லாம் அள்ளி அள்ளி பருக வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  45. பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆகாரமே தவிர, ருசியைத் தீர்த்துக் கொள்ள அல்ல.// மனமும் கட்டுக்குள் இருக்கும்..

    பதிலளிநீக்கு